அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 29 பதிவு 25

             அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 29

                                                பதிவு 25




கேள்வி பதில் நேரம்

 *பதிவு 25* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 *கேள்வி 31* 

 *நான்* : 

 பட்டரே ... அன்னையை தரிசித்த பின் உங்கள் அனுபவத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா ? 



 *
பட்டர்*  

சொல்ல முடியாத அனுபவம் அது .. 

தேன் இனிக்கிறது சர்க்கரை தித்திக்கின்றது கற்கண்டு சுவைக்கின்றது இப்படி சொன்னால் அந்த சுவையை நீ அனுபவிக்க முடியுமா?  

நாம் உணரக்கூடியவை அனுபவிக்க வேண்டியவை  

சொல்லில் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது .. 

எத்தனை மொழிகள் ஆனாலும் எவ்வளவு வார்த்தைகள் ஆனாலும் என்னால் அதை விவரிக்கவே முடியாது ...

 *நான்*   நேரில் பார்த்த சௌந்தர்யத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் .. மீதி நாங்கள் புரிந்து கொள்கிறோம் 




பட்டர் கண்களை மூடிக்கொள்கிறார் ... 

கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரை யாய் கொட்டியது . 

அவரின் கொழுக்கடை  உடைந்தது ... 

கங்கை எல்லா தடைகளையும் உடைத்துக்கொண்டு அங்கே பிரவேசித்தாள் 🥇🥇🥇

குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் அபிராமியின்  பாத நகங்களாக இருக்கிறான்    

பாதங்களை தினமும் பூஜிப்பதால்  அவன் அவள் சிரசிலும் இருக்கிறான், 

மற்றும் அவள்  நெற்றியாகவும், கன்னங்களாகவும் தெரிகிறான். 🌝🌝🌝




அவளை நான் பார்க்கும் அருகதையை என் கண்களுக்கு அவள் தருகிறாள் ... 

தேவி சொற்திறன், அழியாத செல்வங்களோடு சகல மங்களங்களையும் அருள்கிறாள் .

வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிப்பு என்று கேட்பதைப் போலத்தான் சக்தி வழிபாட்டில் எந்த வழிபாடு உயர்ந்தது என்பதும்! 

அதாவது சக்தியை எந்த உருவில் எப்படி வழிபட்டாலும் அது உள்ளம் நெகிழச் செய்யும் அற்புத ஆராதனைதான். 

அதைத்தான் நான் அப்பொழுது செய்து கொண்டிருந்தேன் 🌝🌝🌝




அருணகிரண ஜாலங்கள் எனும் இளஞ்சூரியனின் நிறத்தைப் போன்ற தன் மேனியில் பேரொளியால் திக்குத் திசைகளையெல்லாம் செம்மை நிறப்படுத்துகிறாள். 

லலிதமான பேரழகுடைய பாலா தன் அதிரூப சௌந்தர்யத்தால் அழகாய்ப் பொலிந்து அருள்கிறாள்.

இவள் தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. 

இவள் மறு கரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. 

அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும் கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன. 




நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.

பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியை அணிந்திருக்கிறாள். 

இதை ‘ *தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரணபாஸுரா’* எனும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகிறது. 

மேலும் அது த்ரயக்ஷரீ, பாலா லீலா விநோதினீ என்று பல்வேறாக பாலாம்பிகையை போற்றுகிறது.

இத்தேவிக்கு நவாவரணம், ஸஹஸ்ர நாமம், கட்க மாலா போன்ற பல்வேறு பூஜை முறைகள் உண்டு. 

இருப்பினும் பேரன்பால் அவளை வழிபடுவதையே அவள் மிகவும் விரும்புவாள்.🙏🙏🙏



ரவி வார்த்தைகள் வரவில்லை . 

நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி

சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி

மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க

ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே

மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

விம்மி விம்மி அழுகிறார் பட்டர் ... 

அவருடன் நாமும் சேர்ந்து கற்பூரம் போல் கரைந்து போகிறோம் அவள் அருள் ஒளியில் 🔥🔥🔥


     👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐       👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐

Comments

மூர்த்தி said…
ஓர் அருமையான் கருத்து. எளிமையான் கருத்தை மிக சுருக்கமாக எல்லோராலும் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. அற்புதம் 👌👏🏼🙏🌹🙏
Ramani said…
[6/7/2021, 11:43 am] Ramani - Pune: எத்தனை மொழிகள் ஆனாலும் எவ்வளவு வார்த்தைகள் சேர்த்தாலும் அன்னையை தரிசித்த அனுபவத்தை சொல்ல முடியாது...அது ஒவ்வொருவரும் உணர வேண்டிய அனுபவம்....

என்ன தீர்க்கமான வார்த்தைகள்...

அருமை...

🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அவநம்பிக்கைச் சூழ்நிலை காந்தியும் மேவாததன் விளைவு
நன்னம்பிக்கை தோன்றாத சூழ்நிலையாகவே உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் தலைமை தாங்கி மஹாத்மா என்று பெயர் பெற்றவர் பாரத நாட்டிற்கேயான நாகரிகத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு அதனையேதான் எடுத்துக் கூறிபோதிலும், அவரைப் பின்பற்றுவோராகத் தெரிபவர்களிலேயே ஒரு சிலரைத் தவிர ஏனையே தலைவர்கள் வேறுவிதமாக அபிப்ராயப்படுபவர்களாகவே தெரிகின்றனர்.
ravi said…
சென்ற சில தலைமுறையாகவே அந்நிய வாழ்க்கைப் பாணி இங்கு வேரூன்றத் தொடங்கி விட்டதால், அது கப்பும் கிளையுமாக வளர்வதிலேயே மகிழ்ச்சி கொண்டவர்களாகத்தான் பொது ஜனங்களில் மிகப் பெரும்பாலோரும் உள்ளனர்.
ravi said…
எதிர்ப்பு நடவடிக்கைகளில் எப்போதுமே ஒருவித உற்சாகம் காட்டுவதுதான் மானுட இயற்கை. எனவே வெள்ளையரை எதிர்ப்பது என்ற அம்சத்தில் நமது மக்கட் சமுதாயம் முழுதும் மஹாத்மா எனும் பெரியவரைப் பின்பற்றியதும் (எதிர்ப்பில் உற்சாகம் கொள்கின்ற) அம்மனப்பான்மையில்தானென்று தோன்றுகிறது. சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளை அறியாது, நம்மைக் கட்டவிழ்த்து நம்மிஷ்டப்படிச் செய்ய தேச சுதந்திரம் உதவும் என்ற எண்ணத்திலேதான் பெரும்பாலோர் அவரைப் பின்பற்றியதெனத் தோன்றுகிறது. ஆனால், நமது வாழ்வு முறை நமது பிரத்தியேக நாகரிகத்திற்கு இசைந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு மக்கள் அவ்வளவாகச் செவி சாயக்கவில்லை.
ravi said…
எனவே இனி நடக்க வேண்டிய இலட்சியத்தில் கவனம் காட்டப்படுமோ என்று கவலையுறுமாறு உள்ளது.

நடக்கவேண்டியது, இன்று ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள தலைவர்கள் ஸெக்யூலரிஸத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அதைத் தீவிரமாகச் செயலாக்கி, மதவியலுக்குச் சிறப்பான போஷணை கொடுத்து, மக்களது உலகியல் பிணிக்கு மாற்று மருந்து காண்பதேயாகும்.
(இன்று காந்தி நினைவு தினம்)
ravi said…
👆🏿👆🏿மகாபாரதம் மானிடர்களுக்கு கிடைப்பதற்கரிய ஒரு அற்புத படைப்பு. முக்காலமும் உணர்ந்த பகவான் கண்ணன் மனிதராக அவதரித்தது அதைவிட சிறப்பு..! மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சி இது. பாண்டவர்களுக்குரிய பாகத்தைத் துரியோதனன் தர மறுத்தான்.
ravi said…
அதனால் பாண்டவர்கள் தங்களுக்கு சேர வேண்டிய பாதி ராஜ்யத்தைச் சண்டை சச்சரவு ஏதுமில்லாமல் அமைதியான முறையில் வாங்கித் தருமாறு கண்ணபிரானைத் துரியோதனன்பால் தூது அனுப்பினார்கள்.
ravi said…
பகவான் அஸ்தினாபுரம் சென்றார். சுற்றுமுற்றும் பார்த்தார். துரியோதனன் அரண்மனையிலிருந்து யாராவது வேவு பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டார்.

ஆமாம்.. அந்த வேலை ரகசியமாக நடந்து கொண்டிருந்தது! திருப்தியுடன் தலையை ஆட்டிக் கொண்டு விதுரன் மாளிகைக்குத் தங்குவதற்காகச் சென்று விட்டார். துரியோதனன் மாளிகைப் பக்கம் அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
ravi said…
விதுரன் மாளிகையினுள் நுழையும்போது கடைக்கண்ணால் அந்த மாளிகையின் அருகிலிருந்த சந்து ஒன்றிலிருந்து ஒருவன் நைஸாக நழுவி துரியோதனன் மாளிகைக்குச் செல்வதைக் கண்டு துளிக்கூட ஆச்சரியப்படவில்லை அவர். எல்லாம் தாம் எண்ணியது போலவே நடப்பது கண்டு புன்னகை பூத்துக் கொண்டார்.!
ravi said…
விதுரர் மாளிகைக்கு கண்ணபிரான் தங்குவதற்காகச் சென்றதில் விஷயம் உண்டு. விதுரன் தனது சிறந்த பக்தன் என்ற காரணம் மட்டுமில்லை. ஏன்... பீஷ்மரும் சிறந்த பக்தர்தான். அவருடைய மாளிகையிலும் தங்கலாமே... பீஷ்மரையும் துரியோதனனையும் தவிர்த்துவிட்டு விதுரர் மாளிகையை தேர்ந்தெடுத்ததில் ஒரு ராஜ தந்திரம் இருக்கிறது.
ravi said…
கண்ணபிரானைக் கண்டதும் விதுரர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். ஆமாம்! "தன் மாளிகையில் கண்ணபிரான் திருவடி பட, தான் எத்தனை ஜென்மமாய்ப் புண்ணியம் செய்தேனோ' என்று மகிழ்ந்து அவருக்குப் பற்பல உபசாரங்கள் செய்து புண்ணியம் தேடிக்கொண்டார் விதுரர்.

மறுநாள் ராஜசபையில் எல்லோரும் கூடியிருக்கையில் துரியோதனன் சினத்துடன் ஏதோ உறுமியபடி நின்று கொண்டிருந்தான்
ravi said…
பாண்டவர்களுக்காகத் தூது வந்திருந்த கண்ணபிரானும் அவருடன் விதுரரும் உள்ளே நுழைந்தபோது துரியோதனன் ஆவேசம் வந்தவன்போல் விதுரரை ஏக வசனத்தில் அழைத்துக் கண்டபடி திட்டினான். தனது சிறிய பிதாவாகிய (சிற்றப்பா) விதுரரை இப்படி ராஜ சபையில் பலர் முன்னிலையில் இப்படித் திட்டுகிறோமே என்று துளிக்கூடக் கவலைப்படவில்லை துரியோதனன். ஆத்திரம் அவன் அறிவை அப்படி மறைத்திருந்தது.
ravi said…
நமது ஜென்மப் பகைவர்களிடமிருந்து தூது வந்திருக்கும் ஓர் இடையனுக்கு (கண்ணபிரான்) நீ எப்படி விருந்து படைத்து உன் மாளிகையில் தங்க வைப்பாய்? என் வீட்டில் உணவு உண்டு வாழ்பவன் நீ... எனக்கே துரோகம் செய்கிறாயா?' என்று கண்டபடி திட்டி இறுதியில் விதுரனின் தாயின் கற்பையும் சந்தேகிக்கும்படியான வார்த்தையால் (வேசி மகன் என்று) திட்டி விட்டான் துரியோதனன்.

அதைக் கேட்டவுடனே விதுரர் கோபத்தில் வெடித்து கொதித்து எழுந்தார்.
ravi said…
அடே துரியோதனா.! அற்பப்பதரே.! இப்படி வசை பாடிய உன் நாவையும் தலையையும் ஒரு நொடியில் என் வாளில் சீவித் தள்ளிவிடுவேன். நீ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் குரு குலத்தில் ஒருவன் மகனைக் கொன்றான் என்று விண்ணவர் பழிப்பார்களே என்று உனக்கு உயிர்பிச்சை தருகிறேன்.
ravi said…
பிழைத்துத் தொலை மடையனே...! நாளை நடக்கின்ற யுத்தத்தில் தர்மம் நிச்சயம் வெல்லும். பாவம் தோற்கும். நீ அறவழி என்றால் என்ன என்பதே தெரியாத முழுமூடன். உன்னுடன் செஞ்சோற்றுக் கடனைக் கழிக்கவாவது நான் நின்று போரிட்டாலும் இறுதியில் பாண்டவரே வெல்வார்கள். .
ravi said…
ஆனாலும் நீ என்ன சொல்லுவாய்... நான் பட்சபாதத்துடன் போர் புரிந்ததாய் பழி கூறுவாய். ஆதலால் என்னுடைய இந்த மகத்தான வில்லை இதோ முறித்து எறிகிறேன். நீ உயிருடன் உள்ளவரை இந்த அஸ்தினாபுரத்திலேயே தங்கமாட்டேன். தீர்த்த யாத்திரை செல்வேன்'' என்று கூறி தனது மகிமை பொருந்திய வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டுவிட்டு சபையை விட்டு வெளியே சென்று விடுகிறார் விதுரர்
ravi said…
விதுரர் வைத்திருந்த வில் விஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து, விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.!
ravi said…
இதனை அறிந்திருந்த கண்ணபிரான், தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். ( தர்மம் வெல்ல மாயகண்ணனின் ராஜ தந்திரங்களில் இதுவும் ஒன்று ) இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!
ravi said…
சங்கர கீதை*

இப்படி ஒரு கீதை இருக்கிறதா என்று நம்மில் பலர் கேள்வி எழப்பக்கூடும் ...
இருக்கிறது.. வியாசர் மஹாபாரதத்தில் எழுதியுள்ள ஒரு பகுதி .. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எப்படியெல்லாம் உபதேசம் செய்தாரோ அதே மாதிரி பார்வதி ஈசனை கர்ம வினைகளைப் பற்றி கேள்வி கேட்க சளைக்காமல் நூறுக்கும் மேலான கேள்விகளுக்கு ஈசன் பொறுமையாய் பதில் சொல்கிறான் .. இதில் பல கேள்விகளும் பதிலும் இன்றைய நம் வாழ்கைக்கு ஒத்து போகின்றன ... சில கேள்விகள் உங்கள் பார்வைக்கு

1. ஏன் சிலர் திருநங்கையாய் பிறக்கின்றனர் ?

2. ஏன் சிலர் உடம்பில் குறைகளுடன் பிறக்கின்றனர் ?

3. ஏன் பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் இறைவன் படைப்பில்

4. ஏன் சிலர் அற்ப ஆயுஸில் மரணம் அடைகின்றனர்

5. எந்தெந்த பாவங்களுக்கு என்ன என்ன தண்டனைகள்

இப்படி பல கேள்விகள் .. பரமேஸ்வரன் எல்லாவற்றிக்கும் பொறுமையாய் பதில் சொல்கிறார் ... அவசியம் நாம் எல்லோரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ஸ்ரீ சங்கர கீதை ...
ravi said…
*23. குங்கிலியக்கலய நாயனார்*👏👏👏
ravi said…
கடவூரிற் *கலயன்* தன் அடியார்க்கும் அடியேன்"

திருத்தொண்டத் தொகை
ravi said…
அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்தே மெய்ப்புளம் அரும்பி ததும்பி ஆனந்தமாகி அபிராமியின் சமயம் நன்றே என்றே

விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தாரே

ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்றே அனைவரும் அழைத்தனரே

கலயனார் எனும் இயற்பெயரும் மறந்து போயினரே

சேர்த்த பணத்தை சிக்கனமாய் செலவு செய்ய பக்குவமாய் மனவியிடன் தராமல் குங்கிலியப் பொதியில் செலவு செய்தாரே ...

ஈசனுக்கு இல்லா பொருள் எனக்கு வேண்டாம் என்றே இருவரும் வாழ குபேரன் கண் அசைக்க குவிந்தது பொருள் கோபரமாய் .

சாய்ந்த லிங்கம் அதை சரி செய்ய போர் யானைகள் கட்டி இழுக்க முடியாமல் சாய்ந்தனவே ..

சாய்ந்த சிவம் அதை தான் கழுத்தில் கயிறு போட்டு ஓய்ந்த உடம்பில் சார்ந்த சிவநாமம் அதை சொல்லி சரி செய்ய ஈசனும் நேர் கோட்டில் வந்தான் .. உலகம் வியக்க ...

சாய்ந்து போனவர்களை இங்கே சிவம் ஒன்று சரி செய்யும் விந்தை அது பெரியவாள் எனும் பெயர் கொண்டே தினம் தினம் அருள் செய்கின்றதே என் அபிராமியைப் போல் 🙏🙏🙏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 209🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
He who wishes to secure the good of others has already secured his own.

Life is the main event and not a dress rehearsal, you don't get another chance.

One who learns and learns and doesn’t practice is like the one who ploughs and ploughs but doesn’t plant.
ravi said…
```The structure of a port``` 🚄🚄🚄
ravi said…
There are more than 200 minor and intermediary ports in India. These ports comprise:

bulk terminals;
liquid cargo terminals;
container terminals;
general cargo;
ferry and cruise; and
others.

The primary purpose of these ports is the connectivity and transportation of goods and passengers to and from the hinterland through the sea.

These ports are used for loading and unloading of goods, transhipment of goods and passengers, ferry services, etc.

These ports act as a major route for trading as more than 90 per cent of India’s trade happens through the sea.

Additionally, the ports also provide piloting, hauling, mooring, re-mooring, hooking, measuring of vessels and any other service in respect of vessels calling Indian ports.
ravi said…
During the post-1980s liberalisation regime in India, the Indian government liberalised investments in the Indian public sector.

The central government since then has been encouraging private sector participation in ports by awarding public-private partnership (PPP) concessions.

They have been mainly on a build-operate-transfer (BOT) basis with revenue sharing formulas, and include the construction of:

berths for cargo handling;
container terminals;
cargo handling equipment;
warehousing;
construction of dry docks and ship repair facilities; and
development and construction of new ports.
ravi said…
விடியலுக்கு முன் விளக்கேற்றி வழிபட்டு வாழ்வில் விடியலை பெறுவோம்.*

விளக்கை அடிக்கடி துடைக்கவோ, கழுவவோ கூடாது. வாரத்திற்கு ஒருமுறை கழுவினால் போதும். இடைப்பட்ட காலத்தில் விளக்கில் ஊற்றிய எண்ணெய் அல்லது நெய் தீர்ந்து திரி எரிந்து விளக்கில் கரி படித்துவிட்டால் கழுவலாம். நிலை வாசலில் கீழே இருந்து ஒரு அடி உயரத்துக்கு மஞ்சள் பூசி சந்தனம் குங்குமம் பொட்டு வைத்திருக்க வேண்டும்.
ravi said…
*
♥ விளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து, எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பின்னர் பஞ்சு திரி போடுங்கள். (இதுதான் சரியான முறை). இந்த வேலைகளை முந்தய நாளிலே செய்து, ஒரு திரி போட்ட காமாட்சி விளக்கும், காமாட்சி விளக்குக்கு இரு புறமும் வைக்க ஐந்து திரி போட்ட குத்துவிளக்கு இரண்டும் தயாராக வைத்திருங்கள்.
ravi said…
♥ அதி காலை எழுந்தது, பல் துலக்கி, முகம், கை, கால் போன்றவற்றை கழுவி விட்டு,
♥ பின்பு குளித்துவிட்டு (பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் பொழுது குளித்து இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சாதரணமாக எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை, கால் போன்றவற்றை கழுவி விட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றலாம். ஆனால் பெண்கள் மாதவிடாய் கால கட்டங்களில் கண்டிப்பாக விளக்கு ஏற்றக்கூடாது . அது போல் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு அருகில் படுத்து இருந்த நபர்களும், இல்லற உறவில் ஈடுபட்டு இருப்பவர்களும், இதர தீட்டு வீட்டுக்கு சென்று வந்தவர்களும் கண்டிப்பாக குளிக்காமல் விளக்கை ஏற்றக்கூடாது.),
ravi said…
♥ பின்பு வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து, வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் இட்டு (பச்சரிசி மாவினால் கோலம் இட்டால் சிறப்பு), அதி காலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் ப்ரம்ம முகூர்த்தத்தில் தலை வாசல் நிலைப்படியில் விளக்கு ஏற்றி பின்பு வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும்.
ravi said…

♥ பஞ்சு அல்லது தாமரை தண்டு திரி மட்டுமே வீட்டில் உபயோக படுத்த வேண்டும். பல எண்ணெய்களை கலந்தோ, நெய்யுடன் எண்ணெய் கலந்தோ, கலர் துணி திரி, நூல் திரி போட்டோ வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது; தேவைப்பட்டால் அப்படி கோவில்களில் மட்டுமே தீபம் ஏற்றலாம். கோவில்களிலும் எள்ளை எரிக்கக்கூடாது.

♥ முதலில் வீட்டு நிலை வாசலில் விளக்கை ஏற்றி விட்டு பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்ற வேண்டும்.
ravi said…
♥ முக்கோடி முப்பத்து தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும் பிரம்ம முகூர்த்தத்தில் பூமியில் உலா வருகிறார்கள். எனவே வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைத்தால் அவர்கள் நம் வீட்டிற்குள் வருவார்கள். அதன் பின்பு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி வைக்கலாம்.
ravi said…

♥ இதுபோல விளக்கு ஏற்றி ஏதாவது நெய்வேத்தியம் (சிறிது வெல்லம் வைத்தாலும் போதும்) படைத்து வழிபடும்போது, வீட்டுக்குள் வந்த முக்கோடி முப்பத்து தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும், உங்கள் பூஜை அறையில் நிரந்தரமாக இருக்கும் உங்கள் குலதெய்வங்களும், இதர விருப்ப தெய்வங்களும், உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே நடக்கட்டும் என்று ஆசீர்வதித்து வாழ்த்துவார்கள்.
ravi said…
♥ விளக்கேற்றி விளக்கு எரியும்போது தூங்கக்கூடாது.
♥ பெண்கள் விளக்கு ஏற்றுவதே மிகவும் சிறப்பான பலன்களை தரும். தவிர்க்க முடியாத நேரங்களில் ஆண்கள் விளக்கேற்றலாம். அதில் தவறில்லை.
♥ பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி வழிபட்டால் நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல்கள் எதுவாகினும் அது உடனே நிறைவேறும்.
ravi said…
_ஆத்மா_


பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்..

இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்....

அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்.....

நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன்.
ravi said…
அந்த இரண்டை கொண்டு,

*நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்*.

*இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்*..

*இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது*.

*உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்*

*நீ என்னை அழைத்தால் ஒழிய*.

*இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது*.
ravi said…
*ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை*
*உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்*.

*இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்*

*ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்*..

*ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு*

*எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம்.* .

*என்னை இனிமேல் பிறக்க வைக்காதே*. *எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம்*.
ravi said…
*அப்பொழுது “ஷடம்” என்னும் வாயு இறைவனை அழைக்கும்*

*ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்.*

*அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம்,*

*ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது.*
ravi said…
சிசு குழந்தையாக பிறந்து இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும் விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் இருந்து பிறந்து விடுகிறோம்.

உங்களுக்கு தெரியுமா?

*வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட "சடாரி" என்னும் பாதத்தை நம் தலையில் வைப்பார்கள்*.
ravi said…
அது ஏதற்கு என்றால் "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்*.

*மறதியை கொடுக்காமல் ஷடம் என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும் படி எனக்கு அருள்வாயாக* *என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்*.
ravi said…
நீங்கள் நினைப்பது என் காதுகளில் விழுகிறது.

இறைவன் எவ்வளவு கொடியவன் என்று.

நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு.

இந்த உண்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை பிறக்கையிலே வாழக்கூடிய இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் இறைவன்.

ஒன்று ஆத்மா மற்றொன்று மனசு.. .

நீங்கள் ஆத்மாவை ஆதரமாக கொண்டு வாழ்ந்தால் இறைவனை சென்றடையலாம்..
ravi said…
உங்கள் மனதை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தால் பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். முடிவு நம் கையில்.

ஒவ்வொரு ஜீவனுக்கும் ஜீவ ஸ்வாதந்த்ரியம் என்னும் ஜீவனுக்குண்டான சுதந்திரத்தை கொடுத்து தான் அனுப்புகிறான்.

ஆத்மா இறைவனுக்கும் நமக்கும் உண்டான பாலம்.

மனசு நமக்கும் இந்த பூலோகத்திற்கும் இருக்கும் பாலம்.

வாழும் வகை நம் கையில் தான் இருக்கிறது
ravi said…
எல்லாவற்றிற்கும் மேல் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறான்.

இதயத்தின் வலது பாகத்தில் ஒரு நெல்லின் நுனியை நூறு பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு சிறு பகுதி மிஞ்சுமே அந்த அளவில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருகிறான்.

இறைவனின் ஐந்து அவதாரங்களில் இந்த அந்தர்யாமி அவதாரமும் ஒன்று.

நாம் எல்லோருமே இறைவன் நமக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதை அனுபவித்து இருக்கலாம்.

நாம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும் தெரியுமா?.

அந்தக்குரலுக்கு சொந்தகாரர் இறைவனே..

இறைவன் ஒவ்வொரு பிறவியிலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்க இருக்க காரணம் என்ன தெரியுமா?
ravi said…
மனிதனுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது எந்த நொடியிலும் வரலாம்..

ஏதாவது ஒரு பிறவியில் இவன் திருந்தி ஆத்மாவை ஆதாரமாக கொண்டு வாழ ஆரம்பித்து இறைவனை அழைத்தால் அந்த நொடியே இவனை ஆட்கொண்டு வழி நடத்தி தன்னுடன் அழைத்துக்கொள்ளத்தான்..

ஏன் தெரியுமா? நாம் அனைவருமே இறைவனின் சொத்து.

இறைவன் அவன் சொத்தை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையும் கையாண்டு நம்மை அடைய முயற்சிக்கிறான்.

ஆனால் நாம் ஒவ்வொரு பிறவியிலும் இறைவனையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி கொள்கிறோம்.

திரும்பவும் நமக்கு ஞானம் வருவகற்கு அறுபது வருடமாகிறது. இது ஒரு தொடர்கதையாக ஆகி விட்டது.
ravi said…
*வேண்டத்தக்கது ....*
*அலசல் தொடர்கிறது 👍*
ravi said…
*வேண்டி நீயாதருள் செய்தாய்*
ravi said…
இறைவா ... நான் வேண்டி நீ அருள் செய்யாமல் நீ வேண்டி எனக்கு அருள் செய்தாய் ...

எந்தே உன் கருணை ...

எவ்வளவோ பேர்கள் உனை வேண்டி மாதவம் செய்கின்றனர்

ஆனால் நானோ ஒரு பாவி இழிவானவன் .

இந்த நாயேனையும் நயந்து இங்கு வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் ...

உன்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவும் தந்தாய்

என்ன பேறு பெற்றேன் ...

அடியார் போற்றும் குலக்குன்றே , அருட்கடலே , இமவான் தரும் பரிசுக்கு பொருத்தமானவனே ...

என் சொல்வேன் உன் கருணையை ??💐
ravi said…
*யானும் அதுவே வேண்டின் அல்லால்*
ravi said…
நானாக உன்னை வேண்டுவது என்று ஒன்றுமே இல்லை ... ஒரு பொம்மைக்கு சாவி கொடுத்து அது கை தட்டி இங்கும் அங்கும் ஓடும் அதுபோல் உன் அன்பு எனும் சாவி கொடுத்து என்னை இங்கேயும் அங்கேயும் ஓட விடுகிறாய் ...

நான் கை தட்டி உன் பெருமை பேசும் போது அதில் கரைந்து போகிறாய்
ravi said…
*வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன் விருப்பன்றே*👏👏👏
ravi said…
ஐயனே எனக்கு வேண்டும் ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதுவும் உன் விருப்பம் ஒன்று மட்டுமே ... நீயாக எதைக் கொடுத்தாலும் அது எனக்கு நன்மை ஒன்றையே தரும் ... என் விருப்பம் என்று ஒன்று தனியாக இல்லை ..

பெருங்கடலில் மிதந்து வரும் தூசியை போல் உன் கருணை வெள்ளத்தில் மிதந்து வருகிறேன் .. என்னை , என் கை பிடித்து அழைத்து செல்வது இனி உன் பொறுப்பு ... 🌷🌷🌷
ravi said…
இது தான் பரிபூரணமான சரணாகதி ... அவனிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள் .. உங்களால் எதையும் ஒரு துரும்பைக்கூட தனியாக அசைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார் மணி வாசகர்
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 8*☀️☀️🌞🌞🌞
ravi said…
ஏஷ ப்ரம்மாச விஷ்ணுச்ச ஷிவ ஸ்கந்த: ப்ரஜாபதி: |

மஹேந்த்ரோ தனத: காலோ யம: சோமோ ஹ்யபாம் பதி: || 8 ||👍👍👍
ravi said…
ஸூர்ய பகவான் தனது ஒளிமிக்க கிரணங்களால், தேவர்களும் அசுரர்களும் கூட அடங்கிய எல்லா உலகங்களையும் காப்பாற்றுகிறார்.

ஸூர்ய பகவானே ப்ரம்மன், விஷ்ணு, சிவன், ஸ்கந்தன், காலன், ப்ரஜாபதி, மஹா இந்த்ரன், யமன், சந்த்ரன், குபேரன் மற்றும் வருணன்.
ravi said…
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகம் எங்குமாய் நின்றாய் ..

அனைத்தனையும் நீங்கி நிற்பாய் என் நெஞ்சின் உள்ளே ...

பொன்றாது நின்று புரிகின்றவா

இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே...

உனை நினைக்க உள்ளம் உருக

வெப்பம் அது அமுதம் பொழியும் நிலவாய் மாற

கண்ட விந்தை என் சிந்தையில் என்றும் தித்திக்கின்றனவே 🌞🌞
ravi said…
இன்று தை அம்மாவாசை ... அபிராமி பட்டருக்கு அன்னை முழு நிலவாய் காட்சி கொடுத்த இனிய நாள் .. நமக்கும் அவ்வண்ணமே காட்சி தருவாள் ... 🙏🙏🙏
ravi said…
*சிறப்பு பதிவு*

இன்று தை அம்மாவாசை .. பித்துருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது... வர்மா சாஸ்திரிகள் வருமானத்திற்கு வழி தேடிக்கொண்டிருந்தார் ...
யாருமே இன்று அவரை கூப்பிடவில்லை .. அன்னையிடன் ஓடினார் ...
ravi said…
அம்மா ஏதோ வாய்க்கும் வயிற்றுக்கும் கொஞ்சம் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது

அதுவும் இன்று நடக்குமா தெரியவில்லை ..

2 பெண்கள் கரையேற்ற வேண்டும் ..

மூத்த மகன் கிட்டுவிற்கு college பணம் கட்ட வேண்டும் ..

மளிகை சாமான்கள் , பால் காரன் பாக்கி வளர் பிறை போல் வளர்ந்து கொண்டே வருகிறது ..

மாதம் ஒரு முறை வரும் அம்மாவாசை இந்த தொல்லைகளுக்கு வருவதில்லை ...

அம்மா நீ தான் அருள் செய்ய வேண்டும் ...
ravi said…
சம்பு சாஸ்திரிகள் எட்டிப்பார்த்தார் .. என்னவோய் தர்பையையும் புல்லையும் எங்கு எடுத்துக்கொண்டு போகிறீர்கள் ...

நம் கோபால் அண்ணா வீட்டுக்கு ...
தர்ப்பணம் செய்ய ...

என்னவோய் விஷயம் தெரியாதவராய் இருக்கிறீர் ..

அவர் மிக உயர்ந்த அபிராமி பக்தர் .. இன்று தை அம்மாவாசை...

இன்று தர்ப்பணம் பண்ண மாட்டார் ...

அம்பாள் தான் இன்றைய திதியை மாற்றி விட்டாளே ....
ravi said…
கண்ணில் நீர் பெறுக விழிக்கே அருள் உண்டு அபிராமி வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழி பட நெஞ்சு உண்டு .... பாடல் ஜம்மென்று ஒலித்தது ...

அம்மா ... இன்று நீ பௌர்ணமியாக வந்ததை கூட நினைக்காமல் என் வயிற்று பசிக்கு தீனி கிடைக்குமா என்று
ஏங்கிய பாவி நான் ....

வையம் துரகம்,மதகரி மாமகுடம் , பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் இவை அனைத்தும் உன் அடி பணிந்தோர்க்கு கிட்டும் போது என்னையும் மறந்து புலம்பி விட்டேனே ....

BMW car இல் இருந்து ஒரு நடுத்தர வயது அம்மாவும் செக்க செவேல் என்று இருக்கும் அவருடைய மகனும் இறங்கினர் ...
ravi said…
வர்மா சாஸ்திரங்களை இருவரும் வணங்கி விட்டு பட்டு வேஷ்ட்டியும் பட்டு புடவையும் , பூ கொத்து பழங்கள் மூன்று 500 ரூபாய் கட்டுக்குள் இவைகளை கொடுத்து வணங்கிய அந்த அம்மாள் தொடர்ந்தாள்..

என் பெயர் கனகம் .. இது என் இளைய பிள்ளை ..

மூத்தவன் திருமணம் செய்துகொள்ள விரும்ப வில்லை ..

இவன் இளையவன் .. உங்கள் மூத்த மகள் தேவ சேனாவை கோயிலில் பார்த்து இருக்கிறான் ..

அவளை விரும்புகிறான் .. உங்கள் விருப்பம் தெரிந்து கொள்ள வந்தேன் ..

எல்லா செலவும் எங்களுடையது ...

தனம் தரும் அதை தரக்கூடிய கல்வி தரும் ... நல்லதெல்லாம் தரும் ...

வர்மா சாஸ்திரிகள் வாயடைத்து போனார் ...

அந்த பெண்மணி பூர்ண நிலவாய் சிரித்தாள் ஒரு விஷம புன்னகையுடன் ... 🙏🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 115* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 24👍👍👍
ravi said…
*24. தேவியின் புருவ அமைப்பு*

*ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்*

ஜகத்ஸூதே தாதா ஹரி ரவதி ருத்ர: க்ஷபயதே

திரஸ்குர்வன் னேதத் ஸ்வமபி வபு ரீஶ

ஸ்திரயதி
ஸதா பூர்வ: ஸர்வம்

ததித மனுக்ருஹ்ணாதி ச ஶிவஸ்

தவாக்ஞா மாலம்ப்ய க்ஷண சலிதயோர் ப்ரூலதிகயோ: 24🦚🦚🦚
ravi said…
சிருஷ்டி, ஸ்திதி, ஸமாரம், திரோதானம், அனுக்கிரஹம் என்னும் ஐந்து தொழில்களையும் முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசான்ன், ஸதாசிவன் ஆகியோர்மூலம் தேவி நடத்துகிறாள்.

ஆகையால் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் தேவி ‘ *பஞ்ச க்ருத்ய பராயணா’* எனப்படுகிறாள்.

எல்லாத் தேவதைகளையும் தனித்தனியாகப் பூஜை செய்வது கூடாமையால் எந்த ஒரு தேவதையைப் பூஜித்தால் எல்லாத் தேவதைகளையும் பூஜித்ததாகுமோ அந்த மூலதேவதை அம்பிகை.

இதே கருத்து அடுத்த சுலோகத்திலும் கூறப்படுகிறது.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 115* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
இன்று 33 வது திருநாமம் 🙏🙏🙏
ravi said…
*33* *कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी -காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | -*
பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா என்று அறிந்து கொண்டாலே போதுமானது.

தாயை அதற்கு மேல் வர்ணிக்க நமக்கு உரிமையில்லை.
ravi said…
*காமேஷ்வர ப்ரேம* = காமேஷ்வரனின் அன்பு

- *ப்ரேமை ரதன-மணி* = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற

*ப்ரதிபண* = ப்ரதியாக - பரிமாற்றம்

*ஸ்தனி* = மார்பகம்

*33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி =*

காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள் 🌷🌷🌷
ravi said…
*மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ*

*ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்*
*வடுவூர் ஸ்ரீராமபிரான்.*
🙏🏼🙏🏻🙏🏼🙏🏻
ravi said…
கீழே படத்தில் நீங்கள் காண்பது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு

ஆகா இது நீங்கள் நினைப்பது போல் அரபுநாட்டு எண்ணை கிணறல்ல

வானமாமலை திவ்யதேச பகவானுக்கு தினமும் சாற்றுபடி (அபிஷேகம்) ஆகும் தைலகாப்பு ( நல்லெண்ணை அபிஷேகம்) தேக்கி வைக்கபடும் கிணறு போன்ற ஒன்று
ravi said…
அதாவது பகவான் ஶ்ரீவானமாமலை தெய்வநாயக பெருமாள் ஜீயர்ஊற்றில் (சேற்று தாமரை என்னும் குளத்தில் உள்ள ஒரு இடம்) ஸ்வமாயாக தோன்ற திருவுள்ளம் கொண்டு பகவானே கருடன் மூலம் காட்டி கொடுத்த (ஸ்வயம்வக்த சேத்ரம் மொத்தம் 8 அந்த எட்டில் முதன்மையான ஸ்தலம் நம் வானமாமலை) இடத்தை தோண்டும் போது தவறுதலாக தோண்ட உபயோகித்த ஆயுதம் பகவான் தலையில் பட்டு அதன் காரணமாக பகவான் தலையில் இருந்து வடிந்த திரவத்தை தடுக்க எண்ணி அவருக்கு சிறப்பு தைலம் சாற்ற
ravi said…
அன்றுமுதல் இன்றை வரை பகவானுக்கு தினமும் சாற்றுபடி ஆகும் தைலம் மற்றும் பால் இளநீர் போன்ற இதர அபிஷேக தீர்தங்கள் கோயில் கருவரை கோமுகி வழியாக உட்பிராகரத்தில் இருக்கும் ஶ்ரீராமர் சன்னதி அருகே வந்து சேரும் அந்த தைலத்தை தகர டப்பாக்களில் பிடித்து இந்த கிணற்றில் (கிணறு போன்ற இடத்தில்) கொட்டி வைத்து காலம் காலமாக பாதுகாக்க படுகிறது இதனையே இவ்வூரில் எண்ணைகிணறு என பழங்காலத்தில் இருந்தே அழைக்கின்றனர்
ravi said…
இந்த பகவானுக்கு அபிஷேகம் செய்து சேர்த்து வைக்கும் எண்ணை கிணற்றுக்கு சில வருடம் முன்பு வரை மேற்கூரை கிடையாது ஆகையால் வெயில் மழை என இதன் மேல் பட்டு பட்டு இந்த எண்ணை காலப்போக்கில் இயற்கையாகவே மேலும் மேலும் பக்குவமடைவதால் சிறந்த மருத்துவ தைலமாக மாறி விடுகிறது இதனை சஞ்சீவினி தைலம் ( எண்ணை) என்பர்
ravi said…
அதாவது இந்த எண்ணையை ஒருமண்டலம் உடலில் நன்கு தெப்ப தெப்ப தேய்த்து உடலை நன்கு ஊரவைத்து நீராடிவர உடலில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வியாதிகள் குணமாவதாக அதீத நம்பிக்கை மற்றும் பலரது அனுபவமும் கூட

இந்த தைலத்தை தினமும் ஒருசிறு அளவில் உள்ளுக்கு உட்கொண்டு வர உடலின் உள்ளே ஏற்பட்ட பல தீராத உடல் வியாதிகள் தீருகிறது என்பது நம்பிக்கை பலர் அனுபவத்திலும் கண்டு உள்ளனர்
ravi said…
கோயிலிலேயே இந்த தைலம் சிறு சிறு பாட்டிலில் கிடைக்கிறது (விலை ₹25/- என நினைக்கிறேன் முன்பு ₹15 ஆக இருந்து)

தற்போது இந்த எண்ணை கிணற்றுக்கு மேல் வெளிச்சம் படுமாறு வெள்ளை நிற கூரை வேய்ந்து உள்ளதால் மழைஜெலம் விழுவதில்லை சூரிய கதிரும் முன்புபோல் விழுவதில்லை

பகவான் அபிஷேக தைலம் கோமுகியில் இருந்து மோட்டார் மூலம் கிணற்றுக்கு செல்கிறது

ஆனாலும் இதன் மருத்துவகுணம் இன்றும் மாறவில்லை
ravi said…
பகவானுக்கு அனுதினமும் நடக்கும் (21/2 லிட்டர் தைலம் கொண்டு) தைல காப்போடு அன்றைய தினம் ஏதாவது அபிமானிகள் பக்தர்கள் தங்களது பிறந்தநாள் திருமணநாள் அல்லது உறவினர் நண்பர் மற்றும் தங்களது குழந்தைகளின் நட்சத்திரம் போன்ற வைபவத்துக்காக பிரார்தனை செய்து காணிக்கையாக தரும் எண்ணையை (கோவிலில் பணம் கட்டிவிட்டால் அவர்களே நல்ல செக்கில் உருவாக்கபட்ட நல்எண்ணையை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளனர் அதில் இருந்து தேவைக்கு எடுத்து கொள்வர்) கொண்டும் தைல காப்பு நடைபெறும்
ravi said…
இது போக வருடத்துக்கு தற்காலத்தில் சில வருடங்களாக 6 முறை ஒருகோட்டை (256 லிட்டர்) எண்ணையால் அபிஷேகம் நடைபெறும் இதனை ஒருகோட்டை எண்ணை காப்பு என்பர்
ravi said…
இந்த வருடம் இந்த தை மாதம் அமாவாசை (01/2/2022 திங்கட்கிழமை) அன்று இவ்வூர் அதாவது வானமாமலை திவ்யதேச அபிமானிகள் சிஷ்யர்களால் இன்றைக்கு சுமார் 43 ஆண்டுக்கு முன் வானமாமலை மடம் /திருவல்லிகேணி வானமாமலை மடம் ஆகிய இடங்களில் அப்போதைய ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி வழிகாட்டுதல் படி கூடி பேசி வானமாமலை வித்வான்கள் பெரியோர்கள் அன்றய இளைஞர்களால் ஏற்படுத்தபட்ட ஶ்ரீவானமாமலை ஶ்ரீவரமங்கை நாச்சியார் பக்த சபா மூலம் இவ்வருடம் தொடர்ச்சியான 43வது வருட ஒருகோட்டை எண்ணை காப்பு வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது
ravi said…
01/2/2022 திங்கட்கிழமை பல்வ வருட தைமாத ( சேஷம்)அமாவாசை திருவோண நட்சத்திரத்தில் அன்று காலை 8.45 மணி அளவில் வானமாமலை ஶ்ரீமடத்தின் வர்த்தமான ஜீயரான(31வது பட்டம்) ஶ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் முனலனிலையில் நடைபெற தொடங்கும் தைலகாப்பு சுமார் 9.15 மணி அளவில் நிறைவடையும் அதை தொடர்ந்து பால் இளநீர் சந்தனம் திருமஞ்சனதிரவியம் வெள்ளி தங்க குடதீர்தம் என அபிஷேகம் 9.45 வரை நடைபெறும் தொடர்ந்து பகவத்அலங்காரம் அர்ச்சனை தூபதீப ஆராதனை சேவகாலகோஷ்டி ஆசாரியர் மரியாதை ஆசாரியர் மற்றும் கோஷ்டி பகதர்கள் என முறையே தீர்தம் சடகோபம் திருத்துழாய் ஜீரான்னபிரசாத விநியோகம் என வரிசையாக சுமார் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்
ravi said…
அன்றய தினம் ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி தீர்தம் நாள் (ஸ்வாமி பரம்பதித்த திதி) எனவே அன்று ஶ்ரீமடத்தில் விசேஷ சேவகாலம் கோஷ்டி தீர்தம் சடகோபம் மற்றும் அபிமானிகள் பக்தர்களுக்கு விசேஷ ததியாராதனை {தினமும் ததியாராதனை உண்டு ( ஜீயர் மடத்தில் எழுந்தருளி உள்ள காலங்களில்)} என நடைபெறும் (ததியாராதனை அநேகமாக மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும்)
ravi said…
அன்றய தினம் வானமாமலை ஊரே கோலகாலமாக இருக்கும்

மாலை கோவிலில் ஶ்ரீமடத்தில் அல்லது முன் மண்டபத்தில் விசேஷ உபன்யாசம் மற்றும் ஆடல் பாடல் விசேஷ வாத்யம் மற்றும் இரவு ஶ்ரீதோதாத்ரி ஸ்வாமி கருடவாகனத்திலும் தாயார்கள் முறையே அன்னவாகனம் கிளிவாகனம் என விசேஷபுறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்

அனைத்து வைபவங்களும் முடிய மறுநாள் அதிகாலை 2.00 மணி ஆகிவிடும்

முடிந்தால் அன்பர்கள் வந்தருளி கண்டு பகவத் க்ருபைக்கும் ஆசாரியன் க்ருபைக்கும் ஒருமுறையாவது பாத்திரமாகும் படி கேட்டு கொள்கிறோம்

ஜய ஶ்ரீராம்!
ravi said…
ஸ்ரீ காஞ்சி பெரியவா" வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.
ravi said…
சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம்.

பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
ravi said…
பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது.

ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.
ravi said…
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது.

மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.
ravi said…
பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்…. போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
ravi said…
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.

இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
ravi said…
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.
ravi said…
அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர்.

இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.
ravi said…
இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
ravi said…
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

(ஆதாரம்: பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம், ஸ்ரீமத் மகாபாரதம் முதலிய நூல்கள்.)
ravi said…
👣🐚 *திருப்பாவையில் முப்பது தீர்த்தங்கள்* 🕉️

1️⃣ *மார்கழித் திங்கள்* -
*வ்ரஜா நதி - வைகுண்டம்*

2️⃣ *வையத்து வாழ்வீர்காள்* -
*சமுத்திர ராஜன் - திருப்பாற்கடல்*

3️⃣ *ஓங்கி உலகளந்த* -
*கங்கை - இமயமலை*

4️⃣ *ஆழி மழைக் கண்ணா* -
*வருண தேவன்*

5️⃣ *மாயனை மன்னு* -
*யமுனா - விருந்தாவனம்*

6️⃣ *புள்ளும் சிலம்பின காண்* -
*சரஸ்வதி - மானா, பத்ரிநாத்*

7️⃣ *கீசுகீசு என்று* -
*புண்டரீக புஷ்கரணி - மாமல்லபுரம்*

8️⃣ *கீழ்வானம்* -
*தக்ஷிண பிநாகினி (தென்பெண்ணை) - திருக்கோவலூர்*

9️⃣ *தூமணி மாடத்து* - *தாமிரபரணி - நெல்லை, தூத்துக்குடி*

1️⃣0️⃣ *நோற்றுச் சுவர்க்கம்* -
*பாலாறு - காஞ்சிபுரம்*

1️⃣1️⃣ *கற்றுக் கறவை* -
*பாரதபுழா - கேரளா*

1️⃣2️⃣ *கனைத்து இளம்* -
*வைகை - மதுரை*

1️⃣3️⃣ *புள்ளின் வாய்* -
*சந்திர புஷ்கரணி - ஸ்ரீரங்கம்*

1️⃣4️⃣ *உங்கள் புழக்கடை* -
*காவிரி - திருவரங்கம்*

1️⃣5️⃣ *எல்லே ! இளங்கிளியே* -
*நம்பி ஆறு - திருக்குறுங்குடி*

1️⃣6️⃣ *நாயகனாய் நின்ற* -
*ராதா குண்ட் , ஷியாம் குண்ட் - கோவர்தன்*

1️⃣7️⃣ *அம்பரமே தண்ணீரே* -
*யசோதா குண்ட் - நந்தகாவ்*

1️⃣8️⃣ *உந்துமத களிற்றன்* -
*அனந்த சரஸ் - காஞ்சிபுரம்*

1️⃣9️⃣ *குத்து விளக்கெரிய* -
*லலிதா குண்ட் - நிதிவனம், விருந்தாவனம்*

2️⃣0️⃣ *முப்பத்து மூவர்* -
*வேணுகூபம் - பண்டீரவனம்*

2️⃣1️⃣ *ஏற்ற கலங்கள்* - *இந்திரத்யும்ன சரோவர் - ஜகன்னாத் புரி*

2️⃣2️⃣ *அங்கண்மா ஞாலத்து* -
*பத்மதீர்த்தம் - திருவனந்தபுரம்*

2️⃣3️⃣ *மாரி மலை முழைஞ்சில்* -
*பாவநாசினி - அஹோபிலம்*

2️⃣4️⃣ *அன்று இவ்வுலகம்* -
*சந்திரபாகா - பண்டரிபுரம்*

2️⃣5️⃣ *ஒருத்தி மகனாய்* -
*கோமதி - துவாரகா*

2️⃣6️⃣ *மாலே ! மணிவண்ணா* -
*சரயு - அயோத்யா*

2️⃣7️⃣ *கூடாரை வெல்லும்* -
*ஸ்வாமி புஷ்கரணி - திருமலை திருப்பதி*

2️⃣8️⃣ *கறவைகள் பின்சென்று* -
*ஹரித்ரா நதி - மன்னார்குடி*

2️⃣9️⃣ *சிற்றம் சிறு காலே* -
*சக்ர தீர்த்தம், நைமிசாரண்யம்*

3️⃣0️⃣ *வங்கக்கடல் கடைந்த* -
திருமுக்குளம் - ஸ்ரீவில்லிபுத்தூர்*
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
அடியவர் விரும்பும் அனைத்தும் அருளும் திருவே!

யாரும் அறியா மறைப்பொருளை நான் உன் அருளால் அறிந்து கொண்டு உன் திருவடிக்கே சரணம் என அடைந்தேன்.

கருமப்பயனால் உன் அடியவர் பெருமையை அறியாத நரகத்தில் விழக் கூட்டம் கூட்டமாய் (ஆட்டு மந்தையைப் போல்) இருக்கும் மனிதர்களை நான் வெறுத்து விலகிவிட்டேன்.🙏🙏🙏
ravi said…
செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே!

உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன்.

உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது.

என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன.

நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே.

தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.🌷🌷🌷
ravi said…
இராமன் அனுமனை அழைத்து, நீ முன்னால் போய் நந்திகிராமம் சென்று பரதனிடம் நான் வரும் செய்தியை முன்னதாகச் சொல், இல்லையேல் அவன் நான் வாக்கு தவறிவிட்டதாக நினைத்து தீயில் இறங்கிவிடுவான் என்கிறான். அனுமனும் உடனே நந்திகிராமம் விரைகிறான்.

அங்கே, நந்தியம்பதியில் பரதன், இராமனை நினைத்துத் தவ வாழ்க்கை வாழ்கிறான்.

இராமன் என்று வருவான் என்று காத்திருக்க, சோதிடர்கள் இராமன் வரவேண்டிய நாள் இன்றுதான் என்கிறார்கள்.

குறித்த நாளில் இராமன் ஏன் வரவில்லை என்று பரதன் வருந்துகிறான்.

இராமன் வரானாயின், நான் தீப்புகுந்து உயிர் துறப்பேன் என்று சத்ருக்குனனை அழைத்து, தீயை மூட்டும்படி கேட்டுக் கொள்கிறான்.

சத்ருக்குனன் வருந்தி அண்ணனுக்கு ஆறுதல் கூறுகிறான்.

இந்த செய்தியறிந்து கோசலை, பரதனை தடுக்க முயல்கிறாள்.

பரதன் மறுத்து, சொன்ன வாக்குப்படி அண்ணன் இன்று வரானாயின் நான் தீப்புகுந்து இறப்பது உறுதி என்கிறான்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 115*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
இதை நாம எப்படி புரிஞ்சுக்கலாம்னா, மஹாபெரியவா அவதாரம் பண்ணி அவர் தரிசனம்கொடுத்தார்.

அப்போ நிறைய பேர் பெரியவாளை தரிசனம் பண்ணா.

வேண்டிய வரங்கள் எல்லாம் பெற்று ரொம்ப சுகமா இருக்கா.

இது நிறைய நாம கேள்விப்பட்டிருக்கோம்.

ஆனா உண்மையான பக்தர்கள்னு பார்த்தா சிவன்சார், நம்முடைய கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், மேட்டூர் ஸ்வாமிகள்,பொள்ளாச்சி ஜயம் பாட்டி, வீணை நீலா மாமின்னு இருந்தா.

இவாள்லாம் உன்னிஷ்டம் என்னிஷ்டம்னு பெரியவாகிட்ட இருந்தா.

எங்களுக்கு வேண்டியது மஹாபெரியவாளோட திருவடிதான்.

நீங்க என்ன சொல்றேளோ அப்படி, அப்படீன்னு இருந்தா.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 129* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

*45. தாதுருத்தமாய நம: (Dhaathuruthamaaya namaha)* 🪔🪔🪔
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
தாதா
விதாதா *தாது ருத்தம:* ||5
ravi said…
அதன்படியே அவன் செயல்பட,

அஹல்யாவைக் கல்லாகப் போகும்படி கௌதமர் சபித்தார்.

கல்லாக இருந்த அஹல்யாவின் மீது ராமபிரானுடைய திருவடித் துகள் பட்டபோதே அவள் மீண்டும் பெண் ஆனாள்.

அதைக் கம்பன்,

“கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கற வேறுபட்டு

உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப

பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான்”- என்கிறார்.

‘பண்டை வண்ணமாய் நின்றனள்’ என்றால் கௌதமர் திருமணம் செய்து கொள்ளும் போது எப்படிக் கற்புடைய
தூய இளம்பெண்ணாக இருந்தாளோ, அந்த இளமையை மீண்டும் பெற்றுத் தூய்மையானவளாக எழுந்து நின்றாள் என்று பொருள்.
ravi said…
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'
ravi said…
அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே !சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே!
ravi said…
தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான்.
ravi said…
ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள்.
ravi said…
அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம்.
ravi said…
அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ
ravi said…
எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.
ravi said…
அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.
ravi said…
சித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்பது அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.
ravi said…
கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். "சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம்,அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார்
ravi said…
அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.
தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன்
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 116* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 24👍👍👍
ravi said…
*24. தேவியின் புருவ அமைப்பு*

*ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்*

ஜகத்ஸூதே தாதா ஹரி ரவதி ருத்ர: க்ஷபயதே

திரஸ்குர்வன் னேதத் ஸ்வமபி வபு ரீஶ

ஸ்திரயதி
ஸதா பூர்வ: ஸர்வம்

ததித மனுக்ருஹ்ணாதி ச ஶிவஸ்

தவாக்ஞா மாலம்ப்ய க்ஷண சலிதயோர் ப்ரூலதிகயோ: 24🦚🦚🦚
ravi said…
இதன் ஆரம்பமே 'பஞ்ச க்ருத்ய பராயணா' என்னும் நாமம் தான்.

சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம் (மாயை/மறைத்தல்), அனுக்ரஹம் என்னும் ஐந்து தொழில்களை முறையே ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள்
அம்பாள்.

இதை இந்த ஸ்லோகத்தில் பின்வருமாறு சொல்கிறார் ஆச்சார்யார்.

ஹே பராசக்தி!, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களை செய்யும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் தன்னுள் மறைத்துக் கொண்டு தன்னையும் மறைத்துக்கொள்கிறான் ஈசானன். ஸதாசிவன் என்னும் பரபிரம்ஹமானது கொடி போன்ற உன் புருவ அசைவினை ஆதாரமாகக் கொண்டு ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரன், மஹேசன் ஆகியோரது செயல்கள் செய்விக்கிறான்.👏👏👏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 116* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*34* नाभ्यालवालरोमालिलताफलकुचद्वयी - *நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ --*
அற்புத பெண்ணுக்குரிய உடலமைப்பு கொண்டவள் அம்பாள்.

பெண்மை தாய்மை. அம்பாள் அழகிய சர்வலோக மாதா.💐💐💐
ravi said…
*நாப்யாலவால* = தொப்புள்கொடியிலிருந்து

*ரோமாலி* = முடி

*லதா* = கொடி ஃபல = கனிகள்

*குச த்வயீ* = இரு மார்பகங்கள்

*34 நாப்யாலவால ரோமாலி லதா ஃபல குசத்வயீ* =

தொப்புளியிலிருந்து தோன்றிய படர்கொடியினின்று விளைந்த இரு கனிகளென விளங்கும் மார்பகங்களைக் கொண்டவள் 👏👏👏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை