அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 30 பதிவு 26

           அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 30

                                               பதிவு 26



கேள்வி பதில் நேரம்

 பதிவு 26🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 *கேள்வி 30* 

 *நான்* : 

ஐயனே ... அன்னையின் தரிசனம் கிடைத்தபின்னும் கொஞ்சமும் கர்வமே இல்லாமல் தன்னடக்கத்துடன் தம்மையே இன்னும் தாழ்த்திக்கொண்டு எப்படி உங்களால் இருக்க முடிகிறது ... ??

கூட்டம் இல்லாமல் ஒருமுறை அம்பாளை கோயிலில் போய் பார்த்துவிட்டால் நாங்கள் அதையே கோடி தடவை சொல்லிக்கொள்வோம் ... அருமையான தரிசனம் இன்று ... 

என்னவோ மற்ற நாட்களில் அருமை இல்லாத மாதிரி .... 




 *பட்டர்*  சிரித்த வண்ணம் .... 

ரவி ... இறைவனை வணங்குவதில் மட்டும் த்ருப்தியே வரக்கூடாது .. 

பக்தி செய்வதிலும் நிறைவு வந்து விடக்கூடடாது ..

இதுவும் ஒரு வகையில் தலைக்கனம் தான் .... 

நீ ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து பல கேள்விகளை கேட்கிறாய் என்பதினால் மீண்டும் அதை ஒரு முறை படித்தேன் .. 

நான் பல பாடல்களில் சொல்ல வந்ததை முதல் மூன்று திருநாமங்கள் சொல்லி விடுகின்றன ... 

அந்தவகையில் என் பக்தி இன்னும் பக்குவப்படவில்லை முதிர்ச்சி அடைய வில்லை என்று தானே அர்த்தம் ... ?

நான் கர்வப்பட்டால் எனக்குத்தான் அழிவு 

*நான்* ... ஐயனே கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா ?




பட்டர் ... சொல்கிறேன் .. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முதல் மூன்று திருநாமங்கள் 

 ஸ்ரீ-மாதா;

அம்மா என்று ஆரம்பிக்கிறது லலிதா சஹஸ்ரநாமம் . கருணைக்கு மறு பெயர் தாய் , அன்னை .. எல்லா உயிர்களையும் அவள் தான் பிரசவிக்கிறாள் ... 

இது *படைத்தல்* எனும் முதல் வேலை 

 ஸ்ரீமஹாராஜ்நீ ;

பிறந்த குழந்தைக்கு  சௌபாக்கிய தாயினீயாக இருக்கிறாள் .. 

பொருள் செல்வம் ஞான செல்வம் தருகிறாள் ... 

வைகம் , துரகம் , மதகரி , மாமாகுடம் , சிவிகை , பெருவிலை ஆரம் பெய்யும் கனகம் எல்லாம் தரக்கூடிய ஒரு ராஜ்யத்தை (அண்ட சராசரங்களை) ஆளும் மகாராணியாய் இருந்தால் தான் அள்ளி அள்ளி இத்தனையையும் தரமுடியும் ... 

இங்கே *காக்கும்* தொழில் அடக்கம் 

 ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி;

சிம்மங்கள் சூழுந்த சபை அவளுடையது ... சிங்கம் தனை கண்டால் காடே நடு நடுங்கும் ... 

தவறு செய்பவர்களை தண்டித்தும் அழித்தும் வருகிறாள் ... 

இது *அழித்தல்* தொழில் ... 

நான் பல பாடல்களுக்கு பிறகுதான் முதல் மூவருக்கும் அன்னே என்று பாடினேன் ...  

இதனால் நான் கற்க வேண்டியது இன்னும் ஏராளமாய் இருக்கிறது .. 

நான் மமதை கொள்ளவோ கர்வப்படவோ என்னிடம் ஒன்றும் இல்லை ..

நான் ... ஐயனே .. அபிராமியின் அருள் பெற்றவர்கள் யாருக்குமே மமகாரம் அகந்தை வாராது என்பதற்கு  உங்கள் இன்றைய பதில் மிகவும் பொருத்தம் .... 🙏🙏🙏

சில கேள்விகள் .. நாளை கேட்கிறேன் ... 

சிரித்துக்கொண்டே சிங்காரியிடம் சேர்ந்தார் சீர் அபிராமி அந்தாயை ஈன்றவர் . 🙏🙏🙏




        👍👍👍👍👍👍👍👌👌👌👌👌💐💐

Comments

Moorti said…
அருமையான விளக்கம். "இறைவனை வணங்குவதில் திருப்தியே வரக்கூடாது".... 👌உண்மை...
இந்த பதிவானது - இளிமை, உண்மை, அருமை... 👏🏼👏🏼🌹🌺
Ramani said…
நாங்கள் ஆன்மீகத்தில் கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது அதை சக்தி குழும அபிராமி பட்டரின் வழிகாட்டலின்படி நிச்சயம் கற்போம்...

Savitha said…
🙏🙏🙏🙏🙏

லலிதா நாமம்
அற்புதம்
தினமும் படிக்க படிக்க
விளக்கவுரையுடன் அருமை🌷🌷🌷🌷🙏🏻
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 210🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
Tuesday Testimonial

How often do we want to 'Prove to others'? And, what are the results? Look at life differently, with self-driven energy... and the outcomes may turn out to be increased moments of happiness!

Have a turbo-charged Tuesday.
ravi said…
YMD called me to rush to BBSR and achieve financial closure . Honestly I was not knowing anything about Fclsr... I was thinking closing all ledgers on every quater end was called fin clsr ... Besides i did not any exposure in arranging debt , negotiating with lenders etc

Kishnani did not relieve me .. in the mean time i moved my family including my aging parents .. that was the time my father was losing his memory and my mother her vision in both the eyes ...

DPCL was kind enough in accommodating in a 3 star hotel for them till such time i found rental houses ..

In powai too i could stay for a longer time either in a guest house or at hotel . Requested RSR to permit me to extend my stay in hotel at powai . He reluctantly agreed and wrote a mail to help me out as per HR rules ... This was like saying sun rises in East ... 🌞
ravi said…
*"அடங்கிய வெள்ளமும், பெருகிய அன்னமும்!"*

ஒருமுறை சாதுர்மாஸ்ய விரதத்தை பெரியவா பண்டரீபுரத்தில் அநுஷ்டித்தார். சந்த்ரபாகா நதிதீரத்தின் அருகே மாட்டுக்கொட்டகை ஒன்றில் தங்கியிருந்தார்.

பண்டரிபுரம்-ஷோலாப்பூர் ரோடில் உள்ள வேதவ்யாஸர் கோவிலில், வ்யாஸபூஜை செய்தார். அன்று ஊரே திரண்டது, பெரியவா தர்ஶனத்துக்காக ! பெரிய அளவில் அன்னதானமும் நடைபெற்றது.

அதன் பிறகு வந்த தேவகிநந்தனின் அவதார தினத்தையும் வெகு விமர்ஸையாக கொண்டாடினார்கள்
ravi said…
அந்த ஸமயத்தில் பண்டரீபுரத்தில் மழையான மழையும் பெய்து கொண்டிருந்தது.

சந்த்ரபாகா நதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

பண்டரீபுரத்தில் பெரியவா தங்கியிருந்த மாட்டுக் கொட்டகைக்குள்ளும் வெள்ளம் புகுந்து ஒரே வெள்ளக்காடாக ஆனது! பெரியவா சற்று மேடான இடத்துக்கு சென்று அமர்ந்திருந்தார்.

இரவு முழுவதும் மழையும் நிற்கவில்லை; வெள்ளமும் வடியவில்லை!

விடியக்காலை மூன்று மணியளவில், கொட்டகைக்குள் முழங்கால் அளவுக்கு ஜலம்!

பெரியவா, அந்த முழங்காலளவு ஜலத்தில் இறங்கி நின்று கொண்டார்.

ஆஹா! தெய்வம் திருவாய் மலர்ந்து. சந்த்ரபாகாவுக்கு உத்தரவிட்டது!

"போய்டு! போய்டு!....."
ravi said…
சிறிது நேரத்தில் மளமளவென்று ஜலத்தின் அளவு குறைய ஆரம்பித்து விட்டது! வெள்ளம் வடிந்தது!

மதுரையில் மணிவாசகருக்காக வைகையில் வெள்ளத்தை பெருக்கெடுத்து ஓடவிட்ட சொக்கநாதன், இன்று சந்த்ரபாகாவில் வெள்ளத்தை வடிய வைத்து பண்டரீபுரத்தை ரக்ஷித்தான்.

ஆனால் அந்த வெள்ளத்தால், பாலம் மூழ்கிவிட, படகில் வந்து பக்தர்கள் பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்கள்.
ravi said…

மறுபடி யாத்ரையைத் தொடங்கினார். பண்டரீபுரத்துக்கு அருகில் விட்டலனுக்காக ஒரு சின்னக் கோவில் இருந்தது. அந்தக் கோவிலைத் தாண்டி, பச்சை வயல் வெளியில் ஒரு மரமும், பக்கத்தில் ஒரு கிணறும், பனை ஓலையால் வேயப்பட்ட ஒரு குடிஸையும் இருந்தது! மனஸை கொள்ளைகொள்ளும் எழில் கொஞ்சும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், பெரியவாளை மிகுந்த மர்யாதையுடன் வரவேற்று, அந்த பனையோலை குடிஸையில் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை பண்ணிக்கொடுத்தார்கள்.
ravi said…
பெரியவாளும் அவருடைய அருமையான பாரிஷதர்கள் சில பேரும் அங்கே தங்கினார்கள். ஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு பிக்ஷை பக்வம் செய்துவிட்டு, கூட இருக்கும் அஞ்சாறு பேருக்குமாக ஒரு பெரிய தவலையில் ஸாதம் வடித்து, பக்கத்து தோட்டத்திலிருந்து காய்கள் சிலவற்றை பறித்து வந்து குழம்பும், கறியும் பண்ணினார்.

பெரியவா பிக்ஷை ஆனதும், வெளியே பக்தர்களுக்கு தர்ஶனம் தந்து கொண்டிருந்தார். பாரிஷதர்கள் 6 பேரும் ஸாப்பிட்டு முடித்ததும், பெரியவா ஒரு பாரிஷதரை அழைத்தார்.
ravi said…
இவாளுக்கெல்லாம் ஸாப்பாடு போட்டுடு"..

உள்ளே ஸாப்பிட வந்தவர்களோ.. 10 பேர்!

அவர்கள் ஸாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே..... அடுத்து 15 பேர், பெரியவா அனுப்பி, உள்ளே ஸாப்பிட வந்தார்கள்!

இப்படியாக அடுத்தடுத்து batch batch-ஆக வந்தார்கள்...

ஒரே ஒரு தவலையில் 6 பேருக்காக வடிக்கப்பட்ட அன்னமும், குழம்பும், கறியும் பரமானுக்ரஹமாக, அன்று 45 பேருடைய வயிற்றை நிரம்பியிருக்கிறது!

"வேதபுரி.... இத்தன பேர் வந்திருந்தாளே? நீ.... திருப்பி ஸமைச்சியா?..."

மற்றொரு பாரிஷதர் அதிஸயத்தோடு கேட்டார்....

"இல்ல...! நம்ம உம்மாச்சி அன்னபூரணியோன்னோ? இன்னிக்கி உம்மாச்சியோட க்ருபை-னால இந்த தவலைதான் அக்ஷயபாத்ரம்! அள்ள அள்ள கொறையாம எல்லாருக்கும் வயறார போறித்து!.."

எல்லாரும் சென்றதும், பெரியவா பாரிஷதர்களிடம் கேட்டார்.

"ஏண்டா...நாம்பாட்டுக்கு.வந்தவாளை-ல்லாம் ஸாப்படறதுக்கு அனுப்பிண்டே இருந்தேனே! எல்லாருக்கும் போறித்தா? நன்னா ஸாப்ட்டாளா?....."
ravi said…
பெரியவா இருக்கறச்சே.... எல்லாமே அக்ஷயமாத்தானே இருக்கும்! எல்லாமே எடுக்க எடுக்க கொறையாம வந்துண்டே இருந்துது! எல்லாருமே நன்னா த்ருப்தியா ஸாப்ட்டா.... பெரியவா!.."

பாரிஷதர்கள் காஞ்சீ அன்னபூர்ணேஶ்வரியை அன்று ப்ரத்யக்ஷமாக கண்டனர்.
ravi said…
சங்கராம்ருதம் - 48

80களில் பல ஊர்களுக்கு வங்கி அலுவல் நிமித்தமாக பலஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை.சென்னை திரும்பியதும் திடிரென்று அலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது . சிறு அழுக்கு அல்லது சில காய்கள் பட்டாலோ தின்றாலோ உடம்பு முழுவதும் சிறு சிறு கொப்பளமாக கை கால் முகம் என்று வர ஆரம்பித்து அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை உடம்பு முழுவதும் அரிப்பு.எல்லா வைத்தியமும் பலனளிக்க வில்லை. கடைசியில் சரி இதோடுதான் இனி வாழ்க்கை என்று முடிவும் செய்து விட்டேன் .
ravi said…
ஒருநாள் என் நண்பர் திரு . சீதாராமன் ஆடிட்டர் கர்னூல் வரையா பெரியவா சாதூர் மாஸ்யம் விரதம் ஆரம்பிக்கபோரா தரிசனம் செய்து விட்டு வரலாம் என்றார். கரும்புதின்ன கூலியா என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன். மேலும் அவரிடம் நேரில் முறையிடலாம் என் நிலையைப் பற்றி என்று.
ரயலில் ஏகப்பட்ட சாமன்களோடு கர்னூல்போய் இறங்கி சைக்கிள் ரிக்ஷாவில் காய்கறி,அரிசி, மளிகை சாமான்களோடு பரமாச்சாரியார் இருக்கும் தேடி சென்றோம்.
ravi said…
ரிக்ஷாகாரர் ரேட்கூட பேசாமல் சந்தோஷமாக அழைத்துச் சென்றது இனிமையான நிகழ்வு.கருணாமூர்த்தி இருந்த இடமோ ஒரு ஜின்னிங் ஆலை. வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் அந்த ஆலை முதலாளி ஆச்சாரியாரிடம் இருந்த பக்தியின் காரணமாக 4 மதங்களுக்கு ஆலையை மூடிவைத்து இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
ravi said…
சாமன்களை இறக்கி வைத்து விட்டு நாங்கள் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல பாலு மாமாவிடம் சொன்னோம். அவரும் உள்ளே சென்று பரமசாரியரிடம் கணக்கர்கள் வந்த விஷயத்தை சொல்லி விட்டு வெளியே வந்தார்.
ravi said…
எங்கள் இருவரையும் பார்த்து பெரியவா அனுஷ்ட்டானதுக்கு நதிக்கரபோகப்போறளாம் உங்க இரண்டு பேரையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணீட்டு தரிசனத்துக்கு வரச்சொன்னா என்றார் .பாலு மாமா நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூமிலேயே குளிசுட்டோம்ன்னு சொன்னோம் . அதெல்லாம் தெரியாது அங்கேதான் வந்து குளிக்கச்சொல்லி உத்தரவு ஆயிருக்குன்னு கண்டிப்ப சொல்லிட்டார்.
ஏதன் மத்யே எனக்கு பஞ்சு ஆலையில் அழுக்கு பட்டு ஒவ்வாமை வந்து உடம்பு
எல்லாம் சிகப்பு கொப்பளங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கையில் செட்சைன் மாத்திரையும் இல்லை . பக்கத்தில் மருந்தகமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பெரியாவளை நம்பி வந்தாச்சு அவர் பாத்துக்கட்டும் என்றுஅவர் பேரில் பாரத்தை போட்டுவிட்டு அவருடன் அவர் பின்னாலேயே ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக்கொண்டு அவர் பின்னாலேயே சென்றோம்.வழி எல்லாம் எனக்கு வந்த வியாதியை போக்கச்சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டே சென்றேன்……..
ravi said…
நதிக்கரையை சென்றடைந்தோம். ஆற்றில் அப்படியொன்றும் நீர் பிரவாகமா ஓடவில்லை. வாய்கால் மாதிரி முன்று பிரிவாக ஜாலம் ஓடிக்கொண்டிருந்தது.பெரியவா ஆற்றில் இறங்கி நீராட ஆரம்பித்தார் . நானும் ஆற்றில் உடனே இறங்காமல் பெரியவா அனுஷ்டணம் முடித்த பின்பு ஸ்நானம் செய்யலாம் என்று காத்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெரியவா என்னைப் பார்த்துவிட்டு பாலு மாமாவிடம் ஏதோ சொன்னார். பாலுமாமா கரை ஏறிவந்து என்னிடம் உன்னையும் பெரியவா ஸ்நானம் செய்யச் சொல்லரா என்றார். எங்கே குளிப்பது நான் குளித்த ஜலம் பெரியவா பக்கம் போகக்கூடாதே என்றேன்.
ravi said…
அவர் உடனே பெரியவா ஸ்நானம் செய்ற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச் சொன்னா என்றார். நானும் ஆற்றில் இறங்கி அவர் சொன்ன இடத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தேன் .குளிக்கும் போதே உடம்பெல்லாம் சிகப்பாக தடிமன் உடம்பு பூராக இருந்தது.
ravi said…
ஓடும் தண்ணீர் மேலே பட்டு உடம்பு எரிய ஆரம்பித்து.அப்படியும் விடவில்லை நன்றாக முங்கிக்குளித்தேன். அப்பொழுதான் பொறிதட்டினாற்போல் ஒரு விஷயம் புலப்பட்டது.. நான் குளிக்கும் ஜலம் பெரியவா ஸ்நானம் பண்ணி அவர் மேல் பட்ட ஜலம்தான் என்மேலும் பட்டு ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான்.
ravi said…
பெரியவா அதற்குள் ஸ்நானத்தை முடித்து ஜபம் ஆரம்பிக்க கரை ஏறினார் .நானும் கரை ஏறினேன்.உடம்பில் இருந்த சிகப்பு தடிமன் கொஞ்சம் குறைந்து எரிச்சலும் மிகுதியாக இல்லை. கரையில் வந்து கொண்டுபோன உலர்ந்த வஸ்திரங்களை கட்டிக்கொண்டு மாத்யானீகம் பண்ண விபூதியை பூசிக்கொண்டேன் .
ravi said…
அப்போது பாலு மாமா கிட்டே வந்து பெரியவா பூசிக்கொண்டு மிச்சம் இருந்த விபூதியை கொடுத்து இதை முகம் , கை, மார்பு தோள் எல்லா வற்றிலும் தடவிக்கச் சொன்னா பெரியவா என்றார். அவர் சொன்னது மாதிரியே செய்தேன் . பிறகு எல்லோரும் பஞ்சாலைக்கு வந்து பூஜையில் கலந்துகொண்டோம்.
பின்பு பெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்தேன். அப்பொழுதான் கவனித்தேன் என் உடம்பில் ஒவ்வாமை துளி கூட இல்லாமல் அரிப்பும் இல்லாமல் இருந்தது.பெரியவா எனக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டே கேட்டார்கள் ” வந்த காரியம் முடிந்ததா” என்று.எனக்கு அப்போதுதான் உறைத்தது என் ஒவ்வாமை தீர்த்தது அவர்மேல் பட்டு என்மேல் பட்ட தண்ணீரும் அவர் கொடுத்த விபூதியும்தான் என்று .
இத்தனைக்கும் அவரிடம் என் வியாதியைப் பற்றி சொல்லவே இல்லை.என் இருகண்களிலும் கண்ணீர் அப்படியே சாஷ்டாங்கமாக அவரின் பாதகமலங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து. பெரியவா கருணையால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று கூறி விடை பெற்றுக்கொண்டு வந்தோம் .
நண்பர் சீதாராமனிடம் வரும்போது கேட்டேன் பெரியாகிட்டே நான் என் நிலையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே எப்படித் தெரியும் என் வியாதி. அவர் சொன்னார் ” தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் அவருக்குத்தான் முதல்லே தெரியும் நமக்கே அப்பறம்தான்.” என்றார் .அவளவுதான் அன்று போன ஒவ்வாமை வியாதி அப்படியே கர்னூல் ஆற்றில் போய் விட்டது.இன்றுவரை அழுக்கிலேயே இருந்தாலும் கத்திரிக்காய், கருணைக்கிழங்கு சாப்பிட்டாலும் வரவே இல்லை, இதை எண்ணிப்பாக்காமல் இருக்க முடியவில்லை.
நமோ நமஸ்தே குருபாதுகாப்யாம்.
ravi said…
*உனை அன்றி யார் உளரோ எனை காக்க* 🌷
ravi said…
*24 - குலச்சிறை நாயனார்*🌞🌞🌞
ravi said…
"பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்”

திருத்தொண்டத் தொகை
ravi said…
திருத்தொண்டிற் சிறந்த சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார்.

நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார்.

ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று இன்னமுது ஊட்டுவார்.

திருநீறும், ருத்திராட்சம் அணிந்தவரும் அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.🌷

பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தொடிருந்த பாண்டிமாதேவியாரோடு ஆலோசித்துப் பரிசனங்களை திருஞானசம்பந்தரிடம் சென்று சேதி சொல்வதற்கென அனுப்பி வைத்தார் பாண்டிய மன்னன்;

குலச்சிறை நாயனார் மனம் மகிழ்ந்து சம்பந்த பெருமானை காண புறப்பட்டார்.

கண்டார் சம்பந்தரை சுந்தரன் சீதையைக்கண்டது போல் ...

ஆடினார் பாடினார் குதித்தார் ... கண்ணீர் மல்க சம்பந்தரை தூக்கிக்கொண்டு தத் தரிகட தோம் என்றே ஆட , ஆடல் அரசனும் அணைத்துக்கொண்டன் தன் திருவடி தனில் 🌞🌞🌞
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம்.
ravi said…
இப்போது இருக்கும்படியான லோக வழியில் இதைப் பற்றி யோசிக்கச் சாவகாசம் இல்லை; மந்திரத் தியானமோ, ரூபத் தியானமோ பண்ணுவதற்கான பக்குவம் இல்லை. ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபிப்பது,
ravi said…
ஒரு உருவத்தைத் தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் முதலடி எடுத்து வைக்கத்தான் வேண்டும். நம் மனசுக்கு ஹிதமாக, ரஞ்சகமாக இருந்தால்தான் முதலடியே வைப்போம். அப்படி அத்யாத்ம மார்க்கத்தில் ஹிதமான ஒரு முதலடி இருக்கிறது. அதுவே அம்பிகையின் திருவடி. எவ்வித சிரமுமின்றி எவரும் தேவியினுடைய சரண கமலத்தைத் தியானிக்கத் தொடங்கலாம்.
ravi said…
அந்தச் சரணார விந்தத்தின் அழகையும் குளிர்ச்சியையும் நினைத்து விட்டால் அதில் தானாக மனசு நிலைத்து நிற்கப் பழகும். இப்படி எப்போதும் உபாஸித்தால் அவளுடைய கடாக்ஷத்தால் ஜனன நிவிருத்தி ஏற்படும்.
ravi said…
அல்லது முதலில் அவளது மகிமையைச் சொல்லும் துதிகளைப் படிக்கலாம். முதல்படி பாராயணம்; அதற்கப்புறம் ஜபம்; பின்பு தியானம் பண்ணுவது. அப்படி தியானம் பண்ணும் போது, ‘பராசக்தி! இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக்கொண்டு உன்னிடமே மீண்டும் சேர்ந்து விடும்படியாக அநுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொள்ளவேண்டும்.
ravi said…
இப்படி ஒவ்வொரு நாளும் அவளுடைய சரணாரவிந்தத்தைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், உயிர் போகும் தருணத்திலும் அவனுடைய கடாக்ஷத்தினால் அவளுடைய தியானம் வரும். இந்த உடல் போனபின் இன்னோர் உடல் வராமல் அவளிடம் இரண்டறக் கலந்து சம்ஸாரத்திலிருந்து விடுபட்டுப் பேரானந்த மயமாகி விடலாம்.
ravi said…
தேவியும் குருவும் ஒன்றே. எனவே இருவரது திருவடியும் ஒன்றே. குரு பாதுகையும் தேவி பாதுகையும் ஒன்றே. குரு பாதுகையை சந்திர மண்டலத்தில் தியானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். அமிருதம் சந்திரனிலிருந்தே பொழிவதாக சாஸ்திரம்.

ravi said…
சூரியன் சுயமான பிரகாசத்தை உடையவனாக இருக்கலாம். நமக்கு அவன் ஒளி கொடுக்கிறான். என்றாலும், அவனால் தாபம் உண்டாகிறது. வேர்க்கிறது; தாகம் எடுக்கிறது. அம்பாளுடைய பிரகாசம் நமக்கு ஒளியும் கொடுக்கிறது. தாபத்தையும் நீக்குகிறது. எனவே அது சந்திரிகையின் ஒளி போல் இருக்கிறது. தாபசாந்தி பண்ணுவது அமிருதம்; அமிருதமாக நமக்குத் தாபத்தை நீக்கி சாந்தியைக் கொடுத்துக் கொண்டு பிரகாசிக்கிறது அம்பிகையின் கடாக்ஷமும் சரணார விந்தமும்.

ravi said…
உஷ்ணப் பிராந்தியத்தில் (Tropics) உள்ள நமது தேசத்தில் இருக்கிறவர்களுக்கு குளிர்ச்சியில் ஒரு பிரீதி. ‘அவன் குளுமையாக இருக்கிறான். குளுமையாகப் பேசினான், இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது’ என்று சந்தோஷ விஷயங்களுக்குச் சொல்வோம். மேல் நாட்டவர்களுக்கு இது நேர் மாறாக இருக்கிறது. அவர்களுடைய பிரதேசம் ஒரே குளிர்ச்சியானதால் அவர்களுக்கு உஷ்ணம்தான் ( Warmth) இன்பம் அளிக்கும். அவர்களுக்கு கோல்டு (Cold) என்றால் நம்முடைய எண்ணத்திற்கு நேர் விபரீதமான அர்த்தம். சரியாக வரவேற்காவிட்டால் cold reception என்பார்கள். நிர்த்தாக்ஷண்யமானவனை cold-hearted என்பார்கள்.

ravi said…
நமக்குச் சந்திர கிரணம் மாதிரி தாபத்தை நீக்கிக் குளுமையைக் கொடுத்து ஆனந்தத்தை அளிப்பவள் அம்பிகை. அம்பிகை சந்திர மண்டலத்தில் வாஸம் செய்வதாகப் பல இடங்களில் சொல்லியிருக்கிறது. நமக்கு இன்பம் கொடுக்கிற பெருநிதி அவள்தான். அந்த சாக்ஷாத் பரதேவதையின் சரணத்தைத் தியானம் பண்ணிப் பண்ணி சுத்தமாகி நித்திய க்ஷேமத்தை, ஆனந்தத்தை அடைவோமாக.
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 9*☀️☀️🌞🌞🌞
ravi said…
பித்ரோ வஸவ: ஸாத்யா ஹ்யஷ்வினௌ மருதோ மனு: |

வாயுர்வஹ்னி ப்ரஜாப்ராண: ருது கர்த்தா ப்ரபாகர: || 9 ||
ravi said…
ஸூர்ய பகவானே பித்ரு, வசு, தனங்களை அளிப்பவர்,

தெய்வாம்ஸமுள்ள யோகிகள், தேவர்கள், தேவலோக வைத்தியர்கள், மனு, வாயு, அக்னி ஆவார். அவரே எல்லா பருவங்களையும் சீதோஷ்ணங்களையும் ஷ்ருஷ்டிக்கிறார்.

எல்லா உயிர்களையும் காக்கிறார்.

தனது ஒளியால் ஞானத்தை கொடுக்கிறார்.

உதயத்தை ஏற்படுத்துகிறார் 🌞🌞
ravi said…
படையாத தனம் இல்லை ... கடையாத விழி இல்லை .. தடையாகும் கொடை இல்லை ...

தவிப்போர்க்கு தாயாகிறான் ... தானே எல்லாம் என்றே குதிப்போர்க்கு எதிர் வினை ஆகிறான்

பாதங்கள் பணிவோர்க்கு பாசம் தீர்க்கிறான் ... 🌷🌷🌷
ravi said…
களந்தையென்னும் பதியிலே,

குறுநிலமன்னர் குலத்திலே,

கூற்றுவநாயனாரென்பவர் அவதரித்தனரே

அவர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரிப்பவரே.

சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்பவரே

அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்றாரே

தம் தோள்வலிமையாலே மாற்றார்க்குக் கூற்றுவன் போல ( யமன்) விளங்கினார்.

தம் வீர வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தனரே

அரசர் திருவில் முடி ஒன்று தவிர மற்றவைகளெல்லாவற்றையும் உடையராயினாரே

உலகத்தை ஆளுதற்குத் தமக்கு முடிசூட்டும் பொருட்டுத் தில்லைவாழந்தணர்களை வேண்ட;

அவர்கள் "நாங்கள் சோழகுலத்தாருக்கேயன்றி மற்றவர்களுக்கு முடிசூட்டோம்" என்று மறுத்து, தங்களுக்குள் ஒரு குடியை முடியைக் காத்துக்கொள்ளும்படி இருத்தி, இவராணைக்கு அஞ்சி சேரநாட்டிற்குச் தஞ்சம் சென்றுவிட்டனரே

கூற்றுவநாயனார் ஐயுறவினாலேவனந் தளர்ந்து, ஆடல்வல்லவனைப் பணிந்து அற்றைநாள் இரவிலே

"எம்பெருமானே! அடியேனுக்குத் திருவடியையே முடியாகத் தந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு நித்திரை செய்தனரே

ஆடல்வல்லவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினாரே

கூற்றுவநாயனார் அவைகளையே முடியாகச் சூடி, பூமி முழுதையும், பொதுநீக்கி ஆண்டார்.

தில்லைவாழந்தணர்கள் தவறை உணர்ந்தனரே

சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற முக்கிய ஸ்தலங்களெங்குஞ் சென்று வணங்கி, திருப்பணிகள் செய்து, சிவபதம் அடைந்தார் கூற்றுவ நாயனாரே.. 👍👍👍.
ravi said…
திருமுடி தலை முடியாய் விளங்க இருந்த கொஞ்ச முடியும் விழுந்து

அதுவே அவர் தலையில் கடம்பாவிடையிடை ஆனதே ..

காமாக்ஷி அதில் அமர்ந்து பெரியவாளின் பாதம் தொட பணிந்தாளே 👏👏👏
ravi said…
*25 கூற்றுவ நாயனார்*
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 211🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
There is no better exercise than reaching the heart and elevating people.

No anger inside means no enemy outside.

Focus more on your desire than on your doubt. The dream will take care of itself.

Judge a person by their questions rather than their answers.
ravi said…
After nearly 6m when my family shifted to BBSR i got relieved by RKK ... Satish Sangameswaran from EBG took over indirect taxation from me .

He was lucky ...He did not see tough bosses like GPK and PPM besides no much work as VAT was already in place ..

He left the company and joined PWC then started his own consultancy on GST ..

When I landed up in BBSR , one mr Venkatraman ex regional accountant joined dpcl had done all arrangements ...

He was used to go overboard . And he was facing some charges on scrap when he was L&T C regional office .

I was cautioned by YMD to keep an eye on him ...
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 117* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 24👍👍👍
ravi said…
*24. தேவியின் புருவ அமைப்பு*

*ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்*

ஜகத்ஸூதே தாதா ஹரி ரவதி ருத்ர: க்ஷபயதே

திரஸ்குர்வன் னேதத் ஸ்வமபி வபு ரீஶ

ஸ்திரயதி
ஸதா பூர்வ: ஸர்வம்

ததித மனுக்ருஹ்ணாதி ச ஶிவஸ்

தவாக்ஞா மாலம்ப்ய க்ஷண சலிதயோர் ப்ரூலதிகயோ: 24🦚🦚🦚
ravi said…
*தா(4)தா* - ப்ரம்மா;

*ஜகத்-ஸுதே* - உலகை படைக்கும்; ஹரி-ரவதி = ஹரி-அவதி - அதாவது ஹரி ரக்ஷிக்கும்;

*க்ஷபயதே* - அழிக்கும்; திரஸ்குர்வன்

*ஏதத்* - திரோதானத்தால் இவற்றை மறைக்கும் (மாஹேசன்);

*ஸதா பூர்வ: சர்வம் -* ஸதா என்னும் அடைமொழியினை கொண்ட சிவனான ஸதாசிவன்;

*க்ஷண-சலிதயோ:* - நொடி நேர அசைவினால்;

*ப்ரூலதிகயோ* - புருவங்கள் என்னும் கொடிகள் (ப்ரூ - அப்படின்னா புருவங்கள் ("ப்ரூவோர் மத்யே சகஸ்ராக்ஷி" அப்படிங்கறது தெரிந்திருக்கும்);

*லதை-லத்திகா* அப்படிங்கறதெல்லாம் கொடிங்கற அர்த்தத்தில் வரும்);

*ஆஜ்ஞாம்* - ஆணை;

*ஆலம்ப்ய* - அனுசரித்து;

*அனுக்ருஹ்ணாதி* - அனுக்கிரஹம்
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 117* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 31 -40*🏵️🏵️
ravi said…
*35 வது திருநாமம்* 🙏🙏🙏
ravi said…
*35* लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा -

லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |

இல்லையோ என்னும்படியாக ஓடிவது போல் இடை கொண்ட , கொடியிடையாள் லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர்,

கடலையே குடித்த பெரிய தொப்பைகாரர் அகஸ்தியரிடம். அவரும் தொப்பையை தடவிக்கொண்டே ஆமாம் என்கிறார்.💐💐💐
ravi said…
*லக்ஷய* = கண்ணுக்கு புலப்படும்

*ரோம* = முடி

*லதா* = கொடி

*தாரத* = புறப்படுதல்

*சமுன்னேய* = முடிவுக்கு வருதல்

*மத்யமா* = இடுப்புப் பகுதி - இடை

*35 லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா* = கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே, இடை இருப்பதை உணர்த்துபவள் 👍👍👍
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 10*☀️☀️🌞🌞🌞
ravi said…
ஆதித்ய ஸ்விதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான் |

சுவர்ண ஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர: || 10 ||
ravi said…
ஸூர்ய பகவான் அதிதியின் புதல்வன். அதிதி தேவி தேவர்களுக்கெல்லாம் தாய்.

அண்ட சராசரங்களையும் படைத்தவள். தங்கத்திற்கு நிகரான ஒளியைக் கொண்டவள்.

அவளே எல்லா உலகங்களுக்கும் வாழ்வாதாரம். அவளே விடியலின் தேவதை.
ravi said…
அதிதி பெற்றவனே ... அதிகம் தருபவனே

ஆதித்தன் எனும் பெயர் கொண்டவனே ... ஆர்ப்பாட்டம் இன்றி உதிப்பவனே

இசையால் அனைவரையும் ஈர்ப்பவனே ...

உலகை வெல்ல ஒரு உபாயம் சொல்வாயோ

ஊரெல்லாம் தேடி உன் போல் தெய்வம் வேறு இல்லை என அறிந்து கொண்டேன் ...

என் குறைகள் பனி போல் நீங்கும் மாயம் என்ன ? ஏற்றம் மிக்க வாழ்வு கேளாமல் கிடைப்பதின் மர்மம் என்ன ?

ஓசை ஓம்காரமே ... ஐயம் தீர உன்னையே சிக்கென பிடித்துக்கொண்டேன் . சிந்தாமல் சிதறாமல் காத்துடுவாய் எங்களையே 🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஜீவிக்கிறதற்கு basic-ஆக இருப்பது சாப்பாடு தானே? அதனால் இந்த ஸ்வயம்பாகத்துக்குத்தான் basic education-லேயே (அடிப்படைக் கல்விலேயே) முதலிடம் கொடுத்து ஆண், பெண் அனைவருக்கும் சமையல் அறிவைக் கொடுத்துவிட வேண்டும். ஆமாம் “சமய அறிவைக் கெடுக்கும்படியான இப்போதிருக்கிற ஸெக்யூலர் எஜுகேஷனை மாற்ற வேண்டும்” என்கிற நான்தான் இப்போது எல்லாவற்றுக்கும் “முந்தி சமையல் அறிவைக் கொடுக்கணும். எல்லாரையும் சாப்பாட்டு ராமன் ஆக்கணும்” என்கிறேன்.
ravi said…
ஆஹாரத்தைப் பொறுத்துத்தான் குணங்களும் மனப்பான்மையும் உண்டாகிறதால், சமய ஞானத்தில் பிடிப்பு உண்டாவதற்கே சமையல் ஞானத்தை உண்டாக்க வேண்டியாதாகிறது!

படிப்பிலே அடிப்படை Three R’s என்பார்கள். ‘ரீடிங்’ முதல் ‘ஆர்’, ‘ரைட்டிங்’ இரண்டாவது ‘ஆர்’, ‘ரித்மெடிக்’ (‘அரித்மெடிக்’என்பது பேச்சில் ‘ரித்மெடிக்’ என்றாகும்) மூன்றாவது ‘ஆர்’. நான் இதற்கெல்லாமும் அடிப்படையாக அடிப்படைக் கல்வியில் ஸ்வயம் பாகத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்கிறேன்.
ravi said…
நேரு “Kitchen religion” — “அடுப்பங்கரை மதம்”- என்று ஹிந்து மதத்தைப் பற்றி அடிக்கடி சொல்கிறார். அப்படிச் சொல்கிறபோது தாம் ஹிந்து மதத்தை ரொம்ப நன்றாகப் பரிஹாஸம் செய்கிறோம் என்று நினைக்கிறார். வாஸ்தவத்தில் அவர்தான் ஹிந்து மதத்தின் ஸாரத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஸர்ட்டிஃபிகேட் தருகிறார்! நம் மதம் Kitchen religion -தான்; அடுப்பங்கரை மதம்தான்!
ravi said…
வேதம்தான் நம் மதத்துக்கு ப்ராமண நூல். வேதத்துக்கும் சிரஸில் இருப்பது உபநிஷத். அதிலே ஒரு உபநிஷத்திலே, ஆத்மா, பிரம்மம் என்று நமக்குப் புரியாத தத்வங்களைச் சொல்கின்றனவே, அந்த உபநிஷத்துக்களில் ஒன்றிலேயே* நம் மதத்தை அடுப்பங்கரையாகத்தான் ஆக்கி வைத்திருக்கிறது.
ravi said…
நாரதர் ஸநத்குமாரரிடம் போய் ஆத்ம வித்தையை உபதேசிக்கச் சொல்கிறார். அப்போது ஸநத் குமாரர், “ஆஹார சுத்தௌ ஸத்வ சுத்தி சுத்தி:” என்றுதான் முடிக்கிறார். உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. “
ravi said…
தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மையாவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் ஸித்திக்கும்” என்று ஸநத் குமாரரே Kitchen religion-ல்தான் உபதேசத்தைக் கொண்டுபோய் முடிக்கிறார். அந்த முடிவுதான் — ஆஹார சுத்திதான் — ஸாதனைக்கு ஆரம்பம் அடிப்படை.
ravi said…
அதனால், அடிப்படைக் கல்வி, ஆதாரக் கல்வி என்று பெரிசாகச் சொல்லிக்கொண்டு இப்போது செய்வதில் ஜீவாதாரமாக, எல்லாப் பண்புகளுக்கும் ஆதாரமாக இருக்கிற ஸ்வயம்பாக போதனையைச் சேர்த்து விட வேண்டும் என்கிறேன். அரசியல் தலைவர்களாகவும் ஸமூஹத் தலைவர்களாகவும் இருக்கப்பட்டவர்களும் ஆதாரக் கல்வியில் சமையல் திட்டத்தைச் சேர்க்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் எல்லாப் பசங்களுமாகச் சேர்ந்து எல்லாப் பசங்களுக்குமாகச் சமையல் பண்ணி, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
ravi said…
இதிலே குணத்தின் அபிவிருத்திக்கு ஒன்றுமில்லை. ஒருவேளை கெடுதலே உண்டாகவும் இடமுண்டு என்பதால் நான் ஒவ்வொரு பையனும் தன் சாப்பாட்டைத் தானே பண்ணிச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்கிறேன். இது பெர்ஸனல் ப்யூரிடியால் ஸொஸைட்டியைக் காப்பாற்றுவதற்காகச் செய்ய வேண்டிய தர்மம்.
ravi said…
ஆதாரக் கல்வி மட்டுமில்லை, முதியோர் கல்வி என்று இன்னொரு பக்கம் நிறையச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அதிலும் சரி, ரொம்ப ஸிம்பளிஃபை பண்ணி பாக சாஸ்திரம் [சமையற்கலை] சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.
ravi said…
பிறர் உதவியின்றி அவரவர் கார்யத்தை அவரவர் செய்து கொள்ளும்படியாக் கல்வித் திட்டத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதானே ஸமூஹத் தலைவர்கள் சொல்கிறார்கள்? ஆதலால் வாழ்க்கைக்கு முதலில் வேண்டிய அன்னத்தை அவனவனும் தயாரித்துக்கொள்ளும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் சேர்த்து ஒரே சமையல், ஜாதி வித்யாஸமில்லாமல் சமைத்து, எல்லாரையும் சேர்த்து உட்காரவைத்துப் போடுவதுதான் சீர்திருத்தம் என்று இவர்கள் சொன்னால், அதைவிட அவசியமான, முக்யமான சீர்திருத்தம் ஒவ்வொருவனும் தன் உணவைத் தானே தயாரித்துக் கொள்வதுதான்.
ravi said…
இவர்கள் ஸமூஹச் சீர்திருத்தம் என்று எதையோ நினைத்துப் போகிறார்கள். அந்த ஸமூஹம் என்பது பல தனி மநுஷ்யர்கள் கொண்டதுதானே? எனவே இந்தத் தனி மநுஷ்யர்களின் குணம் சீர்திருந்துவதுதானே எல்லாவற்றுக்கும் basic – ஆதாரம்? அதனால் ஆதாரக் கல்விலேயே ஸ்வயம்பாகம் சொல்லிக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
ravi said…
ஆண்களில் முதியவர்களுக்கும் சமையல் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்கு சாஸ்திரமே ஆதரவாயிருக்கிறது. சாஸ்திர வாக்கியம் ஒன்று இருக்கிறது: “பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம் “. ‘பாணி பீடநம்’ என்றால் பாணிக்ரஹணம்; அதாவது கல்யாணம். ‘பஞ்சாசத்’ என்றால் ஐம்பது. ஐம்பது வயஸுக்கு மேலே கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். முதல் பெண்டாட்டி தவறி விட்டால் ஐம்பது வயஸுக்கு அப்புறம்கூட இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள், சமையலுக்கு ஆளில்லை என்ற காரணத்துக்காகவே அப்படிச் செய்வதுண்டு. ஸ்வயம்பாகம் தெரிந்து விட்டால் வானப்ரஸ்தத்துக்குத் போக வேண்டிய தசையில், சமையலை ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு, மறுபடி தாம்பத்தியத்துக்குத் திரும்புகிற ஆபாஸம் நடக்காமலிருக்கும். சாஸ்திரத்தை மீறின தோஷம் ஸம்பவிக்காமலிருக்கும்.
ravi said…
இப்படியேதான் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டுமென்று நினைக்கிறவர்களிலும் சிலபேர் ஓடி ஆடி அலைகிற மத்யம வயஸுவரை வீட்டில் அம்மா சமைத்துப் போட்டோ, ஹோட்டலிலோ சாப்பிட்டுக் கொண்டிருந்து விட்டு ஓய்ந்து உட்காருகிறபோது, ‘அம்மா போயிட்டாளே, இப்போ முன்மாதிரி ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கமாட்டேனென்கிறதே’ என்று சமையலுக்காகவே (‘ஸஹ தர்ம’ இல்லை; தர்மத்துக்காக இல்லை; வயிற்றுக்காக, நாக்குக்காக) பிரம்மசர்யத்தை விட்டு விட்டுப் பெண் தேடிப் போகிற அஸங்கியமும் ஸ்வயம்பாக அநுஷ்டானம் இருந்துவிட்டால் ஏற்படாது.
ravi said…
முன்னெப்போதையும்விட, இப்போது அவனவன் ஊரோடு கிராமத்தோடு வேலை என்றில்லாமல், பக்ஷிகள் மாதிரி பூலோகத்திலே எங்கெங்கே வேலை உண்டோ அங்கேயெல்லாம் போகிறதென்று ஆகியிருக்கும் நிலையில் ஸ்வயம்பாகம் அத்யாவசியமாகிறது. சுத்தத்துக்குச் சுத்தம், ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோடு வெந்ததும் வேகாததுமாக ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டுச் சின்ன வயஸிலேயே அல்ஸர், அது, இது என்று அவஸ்தைப் படாமலும் இருக்கலாம். பொங்கல், சின்னதாக ரொட்டி, இதைவிட லேசாக அடுப்புத் தணலிலே கோதுமை மாவுருண்டையைக் காய்ச்சி அதை அப்படியே வேகப் பண்ணுவது – என்று அவனவனும் பண்ணிக் கொண்டால் வியாதியே வராது. இப்போது கணக்கு வழக்கில்லாமல் வியாதிகள்தான் ஸர்வ வியாபகமாக இருக்கின்றன.
ravi said…
இன்று வணங்கப் போகும் வரிகள்

முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா

வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
ravi said…
அடுத்தபடியாக அம்பாளின் முகத்தைப் பற்றிய வர்ணனை. அவள் முகம் எப்படி இருக்கிறதாம்.முகம் பூர்ண சந்திரன் போல இருக்கும் உன் முகத்தில், எப்படி சந்திரனில் ஒரு சிறு களங்கம் தென்படுமோ அதுபோல உன்நெற்றியில் கஸ்தூரி மானிடமிருந்து பெற்றகஸ்தூரியால் திலகமிட்டு அழகாக ஜ்வலிக்கும் உன் முகம்.இதுதான் முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா

ravi said…
அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவ்னுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான்.அவன் மேல் உள்ள கருணையினால் அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும் தோரணம் இருக்க வேண்டும் அல்லவா? அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள்.அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழுகு படைத்தது புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம். இதுதான் வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா
ravi said…
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா

அடுத்தது கண்களைப் பற்றிய வர்ணனை
அவளுடைய முகத்திலிருந்து வரும் அழகு இருக்கிறதே அது அப்படியே பிரவாகமாகிய நதி போல அதுவும் ஒரு நதி அல்ல இரண்டு நதிகள் பெருக்கெடுத்து ஓடிவந்து இரு கண்களாக மாறி விடுகிறதாம்.
ravi said…
ஒரு நதியின் பெயர் தயா.நாம் எவ்வளவு தப்பு செய்தாலும் தாயினும் சாலப் பரிந்து நம்மை மன்னிக்கும் தயாநதி போன்ற கண்கள்.

மூககவி காமட்சி அம்மன் பேரில் 100 ஸ்லோகங்கள் தயா சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார்.

மற்றோரு நதி கருணா.பக்தர்கள் மீது எப்பொழுதும் கருணை கொண்டவள்.ஆக இரண்டு கண்களும் இரண்டு தடாகங்கள் என்றால் அதில் மீன்கள் இருக்க வேண்டாமா?

லலிதா தேவியினுடைய கருவிழியில் உள்ள கரு மணிகள்தான் மீன்கள். அது இரண்டும் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடிக்கொண்டே இருக்குமாம்.

இதைத்தான் ஆதி சங்கரர் அப்படியே எடுத்து"" வதன சௌந்தர்ய லஹரி"" என்கிறார் சௌந்தர்ய லஹரியில்.காளிதாஸரும் ""லலிதா கடக்ஷவீக்ஷ் ஐஸ்வர்ய அவ்யாஹ்த"" லலிதாவின் கடைக்கண்னின் ஒரு ரேகை பட்டாலும் கூடசெல்வம் கொழிக்குமாம்.

இதுதான் அர்த்தம் என்பதற்கு இந்த உவமைகள் எல்லாம் என் கற்பனையே ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.

வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
ravi said…
*02.02.2022* *( 033 )*

*நிம்மதியில் நுழைய வேண்டுமாயின் ...*
*எதிர்பார்ப்பில் இருந்து வெளியேற வேண்டும் ...*

*இனிய புதன் காலை வணக்கம்*
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

*===□■□===□■□===□■□===*

*என்னை தவிர, யாரும் எனக்கு நிரந்தரம் இல்லை ...*

*என்று உணர்வதற்குள் எத்தனை ஏமாற்றங்கள் ...*

*===□■□===□■□===□■□===*

சிலவற்றை *அடைந்தால் தான் நிம்மதி* என்று நினைக்காதீர்கள் ...

சிலவற்றை *இழந்தாலும் கூட நிம்மதி கிடைக்கும்* என்பதை மறவாதீர்கள் ...

*===□■□===□■□===□■□===*

*நினைவு* என்பது *கடவுள்* கொடுத்த *சாபம் ...*

*மறதி* என்பது *கடவுள்* கொடுத்த *வரம் ...*

*இந்த இரண்டும் கலந்தால் தான் வாழ்க்கை ...*

*===□■□===□■□===□■□===*

*உரிமை உண்டு என எண்ணினாலும் ,*

*நமக்கு மரியாதை இல்லையென தெரியும் போது , ஒதுங்கி இருப்பதே சிறந்தது ...*

*===□■□===□■□===□■□===*

*இன்றைய சிறப்பு*

○ *உலக ஈர நிலங்கள் தினம்* ○

○ *மு.கோவிந்தன்.*

*===□■□===□■□===□■□===*
ravi said…
*ஓய்வு* *Retirement* 🙏💐🙏
🌷 *ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு இறைவனுடைய கருணையினால் நமக்கு அளிக்கப்படும் நல்ல காலம் ஆகும்.*

🌷 *ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்திவிடுவார்கள்..*

. அப்படி இருந்தால் நம் துக்கம் ஒன்றுமில்லை என்று நமக்கு தெரியும்*

🌷 *தேவையான உடற்பயிற்சியினை இயன்றவரை செய்துவிடுங்கள், நேரத்துக்கு மருந்தை உட்கொள்ளுங்கள். நம் நண்பர்கள்,நம் உறவினர்கள் எங்கோ ஒருவர் இறப்பார்கள். அடுத்து நாம் தான் என்று ஒருபோதும் பயப்படாதீர்கள். அந்த வரிசை கடவுளிடம் மட்டுமே இருக்கிறது.*

🌷 *டாய்லெட் கதவுகளை பூட்டிக்கொள்ளாதீர்கள், தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச், சாவி வைத்துக்கொள்ளுங்கள்.*
🌷 *தெரியாதவர்களுக்கு கதவைத்திறக்காதீர்கள்.*
*சேர்த்துவைத்த பணத்திற்காகவோ, பென்ஷன் பணத்திற்காகவோ, ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவினர்கள் சொந்தம் கொண்டாடினால், காபி கொடுத்து அனுப்பிவிடுங்கள். இருக்கும் பணத்தை சாமர்த்தியமாய் போட்டு வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுங்கள்.*

🌷 *பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள்*. *உங்களை அவர்களுக்குள் பார்க்கலாம்.*

🌷 *வேலையை விட்டுத்தானே ஓய்வு பெற்றோம்? இறந்தா போய்விட்டோம் இல்லையே அப்புறம் ஏன் கவலைபடுகிறீர்கள்?*

🌷 *இவை அனைத்தும் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு மட்டும் அல்ல... அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து தான்..!*

🌷 *ஓய்வு பெற்ற தங்களது பெற்றோர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையையும், சுதந்திரத்தையும்... அவர்களின் ஓய்வில் எவ்வித மன உளைச்சலும் ஏற்படுத்ததாத வகையில்.., பெற்றோர்களின் உடல், மன நலன் கருதி பிள்ளைகளும் நடந்து கொள்வது அவர்களின் வாழ்க்கையில் ஈடற்ற மகிழ்வையும், ஆரோக்யத்தையும் அளிக்கும்.*

🌷 *வாழ்வியல் போராட்டத்திற்காக ஓடிய ஓட்டத்தில்... பணி ஓய்வு என்பது அடிபணிந்து, சகித்து, பொறுமை காத்து, அவமானப்பட்டு, குடும்பத்திற்காக ஒரு சுமை தாங்கியாக தங்களது வாழ்வை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை ரசிக்க இந்த சமூகம் நமக்களித்த வரம் இது...*

🌷 *இதையும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சுய நலத்திற்காக இழக்காதீர்கள்*.

🌷 *எப்போதும் இறைவழிபாடு செய்யுங்கள் நல்லது இனிதே நடக்கும். இறைவனிடம் உங்களை ஒப்படைத்து விட்டு உங்கள் பணியை செய்துகொண்டே இருங்கள் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியத்தை இறைவன் கொடுப்பான்*

*வாழ்க வளமுடன்*🙏🙏🙏🙏
ravi said…
🌷 *நாம் செய்த வேலையை எப்படி மனதார விரும்பி வாழ்ந்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை காதலித்து செலவு செய்ய வேண்டும். இல்லையா? பிடித்ததுபோல் நல்ல அழகாய் உடை அணியுங்கள்.*

🌷 *சில நண்பர்கள், ஓய்வு பெற்ற பிறகும் உடம்பில் சக்தி இருக்கும்வரை வேலைக்கு போகலாம் என்று,கையில் அதிகம் காசிருந்தும் மீண்டும் வேலையை எங்கோ தேடிக்கொண்டு தொடர்வதை மட்டும் பார்க்க முடிகிறது*

ravi said…
🌷 *அது ஏன் என்று மட்டும் புரிவதே இல்லை.மீண்டும் இந்த பணத்தை சேர்க்க யாருக்காக துரத்துகிறீர்கள்? மூப்பிலும் தினம் உழைத்தால்தான் சோறு என்ற வாழ்க்கை.. சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட, அல்லது சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம்*

🌷 *ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை, இருந்தாலும் அந்த பணத்தை நோக்கி துரத்தி கொண்டு ஓடுகிறார்கள் ஓய்வுக்கு பின் நமக்கானா வாழ்க்கையை இனியாவது வாழ்வோம் என்று கொஞ்சமும் இல்லாமல்*

🌷 *உங்களுக்கு பிடித்த, வேலையை சமயத்தில் செய்ய முடியாததை செய்யுங்கள். உங்களுக்கு குருவிகளுக்கு கூடு கட்டுதலோ, மரம் நடுதலோ ஆசையாக இருக்கலாம்.. உங்களுக்கு கதை கட்டுரை ஆன்மீகம் இப்படி எதையாவது செய்யலாம்.*

🌷 *இதுவரை ஓடிய நாட்களில் பார்க்கமுடியாத இடங்களை பாருங்கள். காலை உணவை நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு நேரத்துக்கு நன்றாக தேவையான செரிமான ஆகக்கூடிய உணவை சாப்பிடுங்கள்*

🌷. *கொஞ்சம் நம்முடைய பழைய நண்பர்கள், உறவுகளுடன் மனம் விட்டு பேசுங்கள்,இதில் அவர்கள் பேசவே செய்வதில்லை நாமே பேசுகிறோம் என்று ஈகோ பார்க்க வேண்டாம்.*

🌷 *அதிகாலையில் எழுந்திருங்கள் வாய் விட்டு நிறைய சிரியுங்கள். உங்கள் காலத்து நண்பர்களோ, பிடித்த, கூட வேலை செய்தவர்களோடு மாதம் ஒரு முறையாவது மறக்காமல் எல்லாவற்றையும் பேசுங்கள் அல்லது அவர்களை நேரில் சந்தியுங்கள் .*

🌷 *மிக மிக நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும் துக்கங்களையும் பகிருங்கள்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 132* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️

46வது திருநாமம்
ravi said…
*அப்ரமேயோ* ஹ்ருஷீகேச’:
பத்மநாபோ(அ)மரப்ரபு: |

விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6🙏🙏🙏
ravi said…
அந்தக் கண்ணனைத் தங்கள் ஊரிலேயே பிரதிஷ்டை செய்தால் நன்றாக இருக்கும் என அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், தன் அரண்மனைக்குக் கண்ணனைக் கொண்டு செல்ல நினைக்கும் மன்னரிடம் இதை யார் சொல்வது என்று அஞ்சினார்கள்.

அவ்வூரில் இருந்த ஒரு பண்டிதர் ஊர் மக்களிடம், “இந்தக் கண்ணனை நம்பாதீர்கள். இவன் தன்னை நம்புபவர்களை எல்லாம் ஏமாற்றி விடுவான்.
கோபிகைகளின் உள்ளத்தில் காதலை உண்டாக்கிய அவன், அவர்களை விட்டுவிட்டு ஆயர்பாடியில் இருந்து மதுராவுக்குச் சென்றுவிட்டான்.
ravi said…
அதற்குப்பின் கோபிகைகளை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதுபோல, விவசாயிகளான நம் உள்ளத்தைக் கவர்ந்து விட்டு,
நம்மோடு இல்லாமல் மன்னருடன் அரண்மனைக்குச் சென்றுவிடுவான்.

இவனை நம்பாதீர்கள்!” என்றார்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 118*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 17 & 18 ஸ்லோகம்

*பொருளுரை*
ravi said…
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்

फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो

प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।

कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां

निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥

ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴

ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।

கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்

நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥

ன்னு ஒருஸ்லோகம்
ravi said…
அதே மாதிரிதான் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளும் தன்னுடைய ஸ்ரமங்கள் எல்லாம் நினைக்காம பெரியவா ஆசைப்பட்ட பாகவத சப்தாகம் பண்ணார்.

சிவன் சார் ஒருவாட்டி பாகவத சப்தாகம் கேட்கணும்னு ஆசை பட்டாராம்.

அப்ப சுவாமிகளுக்கு நல்ல வயசாகி ரொம்ப உடம்பு முடியாம இருந்தது.

இருந்தாலும் பதினைந்து நாட்கள்ல இரண்டு இரண்டு மணி நேரமா சிவன் சார் கேட்கறதுக்கு பாகவத ப்ரவசனம் பண்ணார்.

அந்த மாதிரி குருவினுடைய இஷ்டம் என்னிஷ்டம்னு இருந்தார்.
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரை செறி குழலி ஓங்க, வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி."

அரியணையை அனுமன் ஏன் தாங்க வேண்டும்?

ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய ஆற்றல் பற்றி திருக்குறள் இறைமாட்சி அதிகாரத்தில் குறிப்பிடப்படும், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடமை இத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற அனுமன், இராமபிரானுடைய "இராம ராஜ்ய" ஆட்சிக்கு அச்சாணியாக இருக்கப் போகிறான் என்பதையே, அனுமன் அரியணையைத் தாங்குவதின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

வாலி இறக்கும் தருவாயில் அங்கதனை இராமபிரான் கையில் ஒப்படைத்து விட்டு, இவன் இனி உன் அடைக்கலம் என்கிறான்

அப்போது இராமன் தன் உடைவாளை அந்த அங்கதனிடம் கொடுக்கிறான்;

இராமன் முடி சூட்டும்போதும், பரதனோடு அங்கதனையும் இளவரசாக ஏற்றுக் கொண்ட அறிகுறியே அவன் உடைவாளை தாங்கும் காட்சி.

இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருந்தபோது, நாட்டை இராமனின் பெயரால் "ராமராஜ்யமாக" நடத்தி வந்தவன் பரதன்.

இப்போது அந்த ராமராஜ்யத்தின் வெண்கொற்ற குடை தரப்போகும் நல்லாட்சியை பரதனைவிட வேறு யாரால் தர முடியும்,

ஆகையால் அவன் இராமனுக்கு வெண்கொற்ற குடை பிடிக்கிறான்.

இலக்குவனும், சத்ருக்குனனும், தன் அண்ணன்மார்களுக்குச் சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் கவரி வீசுகிறார்கள்.

திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் போன்ற உணவளிக்கும் வள்ளல் பரம்பரையினரின் கையால் எடுத்துக் கொடுத்த மணிமுடியை குலகுருவான வசிஷ்டர் இராமன் முடியில் வைத்து ஆசீர்வதிக்க, இராம பட்டாபிஷேகம் இனிதே நடக்கிறது.

"வாழி ஜானகி, வாழி இராகவன்
வாழி நான்மறை, வாழிய அந்தணர்,
வாழி மாமறை யென்றென்று வாழ்த்தினான்
வாழி தோறும் உயர்ந்துயர் கீர்த்தியான்
ravi said…
சக்தி அன்பர்களுக்கு ... இரண்டு வருடத்திற்கும் மேலாக கம்ப ராமாயணம் பதிவுகளை போடக்கூடிய பொறுமையையும், சக்தியும் ஈடுபாடையும் அந்த வடுவூர் ராமன் எனக்கு கொடுத்த வரப்பிசாதமாக நினைக்கிறேன்

அதை விட சிறந்த வரம் போடும் பதிவுகள் இவ்வளவா என்று சொல்லி திரியை விட்டு விலகாமல் இருக்கும் உங்களை போன்ற தாசகர்கள் எனக்கு கிடைத்திருப்பது நான் முன் செய் புண்ணியம் ...

எல்லோருக்கும் சீதா சமேத ஜய ராமன் அருள் கிடைக்க பிராத்திக்கிறேன் .

*சுபம்*
Shivaji said…
Arumaiyana journey... We enjoyed and are blessed. Sri Rama Jeyam.🙏🙏🙏
Kousalya said…
2years ???? Really a very nice journey with Ram, Sita, Lakshman, Hanuman and all others ...we are blessed to have this...Thank you.. Jai Sita Ram parivar ki...Jai...🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹
Lakshmi mami said…
பூவோடு சேர்ந்த நாரும்
மணக்கும்.
ravi said…
ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம

*சங்கரரும் உடையவரும்*

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நஸ்கரிக்கிறேன்.

சுமார் 2000 வருடங்களுக்கும் முன்பாக (சுமாராக கி.மு 509) கேரளத்தில் காலடி என்னும் ஊரில், சிவகுரு-ஆர்யாம்பா தம்பதிக்கு நந்தன வருஷம் வைகாச சுக்ல பஞ்சமியில், புனர்வசு நக்ஷத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ சங்கரர்.

32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமாரி வரையில் அத்வைத சித்தாந்தத்தை பரப்பினார்.

அத்வைத தத்வத்தை தமிழகத்து அந்தணர்கள் ஒப்புக் கொள்ள மறுத்த சமயத்தில் திருவிடைமருதூர் மகா லிங்கமே அசரீரியாக ' *ஸத்யம் அத்வைதம்'* என்றதாக தெரிகிறது.

இவரது ப்ரம்ம சூத்திர பாஷ்யத்தை வியாசரே நேரில் வந்து அனுக்ரஹித்ததாக சொல்லப்படுகிறது.👍
ravi said…
கி.பி 1017ம் ஆண்டு வைகாச சுக்ல பக்ஷ பஞ்சமியில் குருவாரம், திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கேசவ ஸோமயாஜிக்கும்-காந்திமதி
அம்மாளுக்கும் புத்திரராக அவதரித்தவர் ராமானுஜர்.

இவர் 120 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

பல முயற்சிகளுக்குப் பின்னர் தனக்கு கிடைத்த திருமந்திர உபதேசத்த மற்றவர்களுக்கு தெரிவித்தால் நரகம் என்றல்லாம் மிரட்டிய போதும் தான் நரகம் சென்றாலும் கேட்ட அனைவரும் நன்மை அடையட்டுமென்று திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது ஏறி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உபதேசித்தவர்.

இவரே பின்னாளில் மணவாள மாமுனிகளாக அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
ravi said…
முதலில் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை பார்ப்போம் 🌷🌷🌷
ravi said…
முதலில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம்.

இருவரும் வைகாச சுக்ல பஞ்சமியில் பிறந்தவர்கள். அடுத்தடுத்த நக்ஷ்த்திரங்கள், ராமானுஜர் - திருவாதிரை, சங்கரர் - புனர்வசு.

இருவரும் ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் பண்ணினவர்கள்.

இருவரும் மூல-குருவாக வியாசரையே வைத்துக் கொண்டுள்ளனர்,

இன்றைய மடாதிபதிகள், சிம்மாசனாதிபதிகள் உள்பட.

ராமனுஜரும் முதலில் படித்தது அத்வைதமே.

யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் பயின்றாராம்.

பிற்காலத்தில் அவரே பின்னர் ராமானுஜருக்கு சிஷ்யரானதாக சொல்வர்.
ravi said…
ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆதிசேஷனின் அவதாரம் என்கிறார்கள்.

ஆதி சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதர் பதஞ்சலியின் அவதாரம்.

பதஞ்சலியோ ஆதி சேஷனின் அவதாரம்.

(நாராயணன் பைநாகப்பாயில் படுத்துக் கொண்டு நடராஜ ரூபத்தில் லயித்த சமயத்தில் ஆதிசேஷணுக்கு கனம் அதிகமானதாம். பெருமாளிடம் காரணம் கேட்க, அவரும் நடராஜ ரூபத்தைச் சொன்னதால், ஆசைப்பட்டு ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்தது புராணம்).

ஆகக் கூடி பார்த்தால் ஒருவரே ஆதிசங்கரருக்கு குருவாகி, பின்னர் சுமார் 1000 வருடங்கள் கழித்து ராமானுஜராக அவதரித்தார் போல.
ravi said…
*வித்தியாசங்கள்*
ravi said…
சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார், ஆனால் ராமானுஜர் எந்த மடங்களையும் ஸ்தாபிக்கவில்லை. 72 ஸிம்மாசனாதிபதிகள் என்பது சங்கரர் ஸ்தாபித்தது போல ஸந்நியாஸிகளின் தலைமையில் மட ஸ்தாபனம் பண்ணியது அல்ல.

இந்த ஸிம்மாசனாதிபதிகள் க்ருஹஸ்த பரம்பரைகளின் வழியே வருபவர்கள். க்ருஹஸ்த மார்க்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்கச் செய்த ஏற்பாடு.

ஆனால் சங்கர மடத்தை அலங்கரிப்பவர்கள் ப்ரம்மச்சார்யத்திலிருந்து நேரடியாக ஸந்நியாசத்திற்கு வருபவர்கள்.
ravi said…
அத்வைத ஆச்சார்யர்களுக்கு ஏகதண்டம், ஸ்ரீ வைஷ்ணவத்தில் த்ரிதண்டம்.

இவ்வாறாக பலவிதமான வேறுபட்ட வழிகளிலும் முயன்று நம்மைக் கடைத்தேறச் செய்யும் இந்த இரு ஆச்சார்யார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
ravi said…
அதெப்படி? இவ்வளவு வித்தியாசங்களை வைத்திருக்கும் இந்த இரு ஆச்சார்யார்களை ஒருங்கே வணங்குவது?.

ஸர்வ-வேதாந்த ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம் கோவிந்தம்
பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்மயஹம்

ஸத்குரும் கோவிந்தம் அஹம் ப்ரணதோஸ்மி - ஸ்த்குருவான கோவிந்தனை நான் நமஸ்காரம் செய்கிறேன்.

அதாவது ஸ்ரீவைஷ்ணவத்தின் முதாலாவது ஆச்சார்யாரான கோவிந்தன்/மஹா-விஷ்ணுவை நமஸ்காரம் செய்கிறேன் என்றும் சொல்லலாம், அதே போல சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை வணங்குகிறேன் என்றும் சொல்லலாம்.
HV Babu said…
கவிஞர் , உரை ஆசிரியர் என்னும் பட்டங்களை தொடர்ந்து
தத்துவஞானி என்ற பட்டமும் தங்களுக்கே
என முன்மொழிகிறேன்
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

லோகோபகாரமாகச் செய்யக்கூடிய அநேகப் பணிகளில் ஸத்பாத்ரத்துக்கு வித்யையை போதிப்பதற்கு ஸமமாக எதையும் சொல்ல முடியாது என்று நம் முன்னோர் அபிப்ராயப்பட்டனர். ‘வித்யாதானம்’, ‘வித்யாதானம்’ என்று இதை மிகவும் விசேஷித்துச் சொல்லியிருக்கிறது. ‘தானம்’ என்ற பதத்தைப் போட்டதாலேயே, கற்றுக் கொடுக்கிற ஆசார்யர் வித்யார்த்தியிடமிருந்து எந்த த்ரவ்ய லாபமும் எதிர்பார்க்கக்கூடாது என்று ஏற்படுகிறது.
ravi said…
மநு ஸ்ம்ருதியில் இதைப் பற்றிச் சொல்லும்போது, “தானங்களிலேயே சிறப்பு வாய்ந்தவற்றுக்கு அதிதானம் என்று பேர். கோதானம், பூதானம், வித்யாதானம் ஆகிய மூன்றும் அதிதானங்கள். அன்னதானமும் உயர்வானது.
ravi said…
வயிற்றுக்கு அன்னம் போடுவதைவிட அறிவுக்கு அன்னமாக வித்யாதானம் செய்வது சிறப்புடையது. வித்யைகளில் பல இருக்கின்றன. இவற்றில் எதை தானம் செய்வதுமே விசேஷந்தானென்றாலும், வித்யைகளுக்குள்ளேயே தலை சிறந்ததாக உள்ள ஆத்ம வித்யையான ப்ரஹ்ம வித்யையை தானம் செய்வதன் சிறப்பைச் சொல்லிமுடியாது.
ravi said…
ப்ரஹ்ம வித்யாதானம் செய்பவனுக்கு தேவலோகமான ஸ்வர்க்கம் மட்டுமின்றி, ஸம்ஸார பந்தமே தீர்ந்து பரமாத்மாவோடு ஐக்யப்பட்டிருப்பதான மோக்ஷமும் கிட்டிவிடுகிறது” என்றெல்லாம் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. இவ்வாறு ப்ராமணர்களுக்கும் போதிக்கக் கூடிய அளவுக்கு விஷயமறிந்த நாலாம் வர்ணத்தினர் இருந்திருக்கிறார்கள்,
ravi said…
“அவர்களிடம் போய் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்” என்று தர்ம சாஸ்த்ரங்களே குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்பதிலிருந்து இன்னொரு உண்மையும் தெரிகிறது.
ravi said…
தற்காலத்தில் நினைப்பதுபோல ப்ராமணர்கள் அவர்களை ஒரேயடியாக அறிவில் இருட்டு நிலையிலேயே ஒதுக்கி வைத்திருக்கவில்லை என்று தெரிகிறது. நேராக அவர்களுக்கு வேத பாடம் சொல்லித் தராவிட்டாலும், அவர்கள் தங்கள் தொழிலில் சாஸ்த்ரக் கல்வி பெறுவதற்காக வரும்போது,
ravi said…
அவர்களுக்கு ப்ராமணர்கள் தொழிற்கல்வியோடு நிறைய தர்மோபதேசமும், ஞானோபதேசமும் செய்திருக்கிறார்கள். முக்யமாகப் புராணங்களின் மூலமே இந்த உபதேசங்களைச் செய்திருக்கிறார்கள். இப்படியாக அவர்களில் நல்ல தார்மிக, ஆத்மிக வித்யா ஸம்பத்தைப் பெற்றுக் கொண்டவர்களாகப்
ravi said…
பல பேர் ஏற்பட்டதால்தான், அப்புறம் ப்ராமணர்களிலேயே அவ்வளவு அறிவு பெறாதவர்கள் அவர்களிடம் போய்க் கேட்டுக்கொள்ள இடமேற்பட்டிருக்கிறது.
இதிலே ரொம்பவும் ஆச்சரியப்படத்தக்க த்ருஷ்டாந்தம் முதல் முதலில் அந்தப் புராணங்கள் உபதேசமாகி ப்ரசாரம் செய்யப்பட்டதிலேயே இருக்கிறது. வேதங்களை ப்ராமண சிஷ்யர்கள் மூலம் ப்ரசாரம் செய்த வ்யாஸ பகவான் புராணங்களைச் செய்து அப்ராமணராகிய ரோமஹர்ஷண ஸூதர் என்பவருக்கே அவற்றை உபதேசித்து ப்ரசாரம் பண்ண அனுப்பினார். ஸத்பிராமணர்களாகிய நைமிசாரண்யத்து ரிஷிகள் அந்த ஸூதருக்கு ரொம்பவும் மரியாதை செய்து, அவரைப் பீடம்போட்டு உட்கார்த்தி வைத்து, அவரிடம் புராணங்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
ravi said…
*ஆதித்ய ஹ்ருதயம் 12*☀️☀️🌞🌞🌞
ravi said…
ஹிரண்ய கர்ப்ப ஷிஷிரஸ்தாபனோ பாஸ்கரோ ரவி: |

அக்னி கர்ப்போ திதே புத்ர: ஷன்க: ஷிஷிர நாஷன: || 12 ||
ravi said…
ஸூர்ய பகவான் சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர்.

கடுங்குளிரை அகற்றுபவர்.

நெருப்பே உருவானவர். தீய எண்ணங்களையும் தீமைகளையும் அகற்றுபவர்.🌞🌞🌞
ravi said…
அங்கியும் நீயே ஆதித்தனும் நீயே

அம்புலியும் நீயே அணையா ஜோதியும் நீயே

குபேரன் நீயே அமரர் தங்கோனும் நீயே

போதிற் பிரம்மன் நீயே முராரியும் நீயே புராரியும் நீயே

பொதிய முனி காதியும் நீயே பொருப்படை கந்தனும் நீயே

கணபதியும் நீயே காமனும் நீயே

சாதித்த புண்ணியர்களில் என்னையும் சேர்த்தாயே உன் கருணை என் சொல்வேன் 🌞🌞🌞
ravi said…
*27 கோச்செங்கட்சோழ நாயனார்*🌷🌷🌷
ravi said…
திருவானைக்கா தினம் நினைத்தால் அவர் தம் அகிலம் ஆளாரோ - பெரியவா
ravi said…
முன் பிறவி யில் சிலந்தி இப்பிறவியில் அவந்தியின் அருளால் ராஜ பதவி ..

யானைக்கு முக்தி .. கொல்ல நினைத்த சிலந்திக்கோ மறு பிறவி

ஒரு நாழி தாமதம் இந்த குழந்தை தனை உலகம் உய்ய வைக்கும் என்றே சொன்னான் ஜோதிடன்

வலியை விட குழந்தையின் வாழ்வே என் லட்சியம் என்று சொல்லி தனை தலைகீழ் தொங்க விடச்சொன்னாள் தாய்

ஒரு நாழி தாமதம் தாயின் உயிரைகுடிக்க தவம் போல் பிறந்தான் கோச்செங்கட் சோழன்

தான் இருந்த திருவானைக்கோயில் சீர் திருத்தியே மீண்டும் களிறு வராமல் மதிர் சுவர் பல எழுப்பினான்

மன்னனாய் வண்ணமாய் வாழ்ந்தவன் முடிவில் அண்ணல் அடி சேர்ந்தான் அருள் அமுதம் ஆனான் அடியார்களில் ஒருவராய் 👍👍👍
ravi said…
பெரியவாளும் சிலந்தியே ..

தன் வலை தனில் வீழாதோர் யார் .

விழுந்த அனைவரும் பாரில் மேலானோர் ஆனவரே 🌷🌷🌷
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 213🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*7th Assignment - Powai*
ravi said…
Bhubaneswar was green in many parts . It had not become a concrete jungle like in other metros . BBSR could not encash much of its karishma due to lack of foresight or planning ahead .

People only wanted to ensure their one square meal and not bothered who ruled their state ...

Naveen patnaik continues to rule as uncrowned king ...

Not much opposition and he was taking care of basic needs of people though maintaining their standard of living untouched ..

No big hue and cry . During my stint in bbsr never witnessed a single incident of unrest ..

I was really wondering how people were respecting a great legend biju patnaik family and not raising a slogan against the govt .

The simplicity of CM is a matter of pride to be emulated by rest of states

No so many cars on front and back ..No pilots no honking , no forceful gathering on the roads no red carpets no hoardings , no self bragging no political meetings at the cost of exchequer and tax payers money ...

He used to go via my office very frequently keeping his car 's front window down to enjoy natural air ... One or two would notice him and wave their hands and he would not forget to reciprocate it with same gestures .

He was a people man that is why everyone still like him ... He has no family of his own and no relatives were given any official posts .
SA said…
I too have some fond memories of Bhubneswar.This is summer of 1999 right after my CA foundation and first year university exams.My father was posted in one of the coastal towns near Kolkata.Me and my siblings along with my mother visited him.We spent a few weeks in Konthai and travelled to BBSR, Puri and the famous sun temple.
As you rightly pointed out we were shocked to see the easy going attitude of ppl in Kolkata followed by all these places.
SA said…
That was the time world cup cricket was going on and shops would shut down shutters hours before the match started to watch Saurav Ganguli play (khela hai, dukan band)😁😁

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை