அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 65 பதிவு 54

                அபிராமி   பட்டரும்   அடியேனும் 

  கேள்வி பதில் 65

                                         பதிவு 54👌👌👌


கேள்வி பதில் நேரம்

பதிவு 54🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் . 

பதில் சொல்பவன் ... அபிராமியை உணர்ந்தவன் அதாவது பட்டர். 

கேள்வி 65

நான்: 

ஐயனே .... ஒரு சின்ன சந்தேகம் ... 

சௌந்தர்ய லஹரியாகட்டும் உங்கள் அபிராமி அந்தாதி ஆகட்டும் அம்பாளின் பாதாதி கேசமாகத்தான் அம்பாள் வர்ணிக்கப்படுகிறாள் 

ஆனால் லலிதா சஹஸ்ரநாமம் மட்டும் 

கேசாதி பாதமாக முதலில் அவள் கிரீடத்தை, பிறகு அவள் அணிந்திருக்கும் பலவகை மலர்கள் , 

பாதி நிலவாக இருக்கும் அவள் நெற்றி மன்மதன் குடிகொண்டிருக்கும் அவள் முகத்தில் மதன் வீட்டு வாசல் தோரணம் போன்ற புருவங்கள் .

மீன்கள் போல அலைபாயும் கண்கள் 

அழகான நீண்ட நாசி , 

காதுகளில் நவரத்தினம் பதித்த தாடகங்கள் , அழகான பல் வரிசை , புன் முறுவல் , 

செவ்வாய் இதழ்கள் , கொடி யின் தண்டு போன்ற கழுத்து , 

மாணிக்கம் முத்துக்கள் கொண்ட மாலை , தனங்களை தாங்க முடியாத இடை , 

அதில் மூன்று மடிப்புக்கள் , 

நாபியில் இருந்து வரும் மெல்லிய ரோமம் , காமேஸ்வரன் விரும்பும் தொடைகள் ,  

அழகிய முழங்கால்கள் , அம்புரா வை கவிழ்த்து வைத்தது போல் கால்கள் அதில் நீண்டு வளர்ந்த நகங்கள்...மணம் வீசும் பாதங்கள் ... அழகிய குரல் ... இப்படி வர்ணிக்கிறதே 🙌🙌🙌

நான் ஏன் இந்த முரண்பாடு ?


பட்டர் ...

ரவி லலிதா சஹஸ்ரநாமத்திலேயே பதில் இருக்கே ... அவள் எப்படித்தோன்றினாள் என்று ...

சிதக்னி-குண்ட சம்பூதா = 'சித்' என்னும் அக்னி குண்டத்திலிருந்து வேளிப்பட்டவள். 

சுயம்புவாக தோன்றியவள். 

தேவர்கள் தங்களுக்கு பிரியமானவை என்று ஒன்றுமே வைத்துக்கொள்ளாமல் தங்கள் மனங்களையும் சேர்த்து அம்பாளுக்கு அவிர்பாகம் அளித்தனர் .. 

இதுதான் பூர்ண சரணாகதி .. 

உங்கள் மனம் உங்களிடமே இருக்கும் வரை அம்பாள் தோன்ற மாட்டாள் ... 

முதலில் அவள் கீரிடம் தோன்றியது பிறகு நீ விவரித்ததைப்போல .. வாக் தேவிகள் அவளை பார்க்கப் பார்க்க அப்படியே வர்ணித்தனர் 

அதனால் கேசாதி பாதமாக ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அமைந்தது 🙌🙌🙌



நான் 

ஒரு மடத்தனமான கேள்வி தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள் ... 

இங்கே அவள் தேவர்களுக்காக வந்தாள் என்பதை 

அடுத்த நாமம் சொல்கிறதே .. தேவகார்ய சமுத்யதா 

தேவர்களுக்கு உதவி செய்ய தோன்றினாள் என்று ... 

நமக்காக வரவில்லையா ? 

பட்டர் 

என் பாட்டில் மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடி கோமளமே என்றேன் ..

இந்த மனித பிறவி தேவர்களை காட்டிலும் உயர்ந்தது ... 

இந்த பூமியில் பார்ப்பவருக்கு எளிதாய் எங்கும் அவள் தன் தன்னொளியை தருகிறாள் .. தேவர்களுக்காக வருபவள் அவர்களை காட்டிலும் உயர்ந்த நமக்காக வரமாட்டாளா ? 

உண்மையில் தேவர்கள் என்று யாருமே இல்லை 

தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, நேர்மையான, நீதிக்குட்பட்ட காரியங்கள் செய்பவர்கள் அனைவருமே தேவர்கள் தான் 

அவர்களுக்கு  துணை நிற்பவள் என் அபிராமி ... 🙂🙂🙂



நான்

ஐயனே அருமையான விளக்கம் .. என் சந்தேகங்கள் தீர்ந்தன ...

 பட்டர்.. 

சந்தேகங்கள் தீரக்கூடாது .. சிந்திக்கும் திறமை நின்று போகும் . 

இன்னும் கேள்விகளை யோசித்து வை நாளை பார்ப்போம் ... 

பறந்தார் பட்டர் ... பரவசமானேன் நான் 🙏🙏🙏



      👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌💐



Comments

ravi said…
பாடல் எண் : 17

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.
பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை
குறிப்புரை :

`தொல் உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்` என்பதை முதலிற் கொள்க. ஆதி - முதல்; முதல்வன். முதலில் உள்ள `காண்பார்` என்பது, `உலகிற்கு முதல்வன் எவனும் இல்லை` என முரணிக் கூறுவாரை. அவர்க்குக் காணலாம் தன்மையாவது, அவரவர் `மெய்` எனக் கொண்ட பொருள்களாய் நின்று அவர்க்குப் பயன் தரும் தன்மை. `அவனின்றியாதும் இல்லை` என்பது கருத்து. பின்னர், `தொழுது காண்பார்` என்றதனால், முன்னர் `காண்பார்` என்றது,
ravi said…
தொழாதே காண்பாரையாயிற்று. கை தொழுது காண்பார், தெய்வம் உண்டு ` எனப் பொதுப்பட உணர்ந்து யாதேனும் ஓர் உருவத்தில் கண்டு வழிபடுவார். அவர்க்குக் காண்டல் கூடுவதாவது, அவரவர் வணங்கும் உருவத்தில் நின்று, அவர்க்குப் பயன்தருதல். காதலால் காண்பார், `உலகிற்கு முதல்வன் உளன்; அம்முதல்வனாம் தன்மையை உடையவன் `சிவனே` என உணர்ந்து, அதனானே அவன்பால் அன்பு மீதூரப் பெற்றுக் காண விரும்புவோர். `அவர்கட்குப் புறத்தும் அகத்தும் ஒளியாய் வெளிப்பட்டு நின்று அருளுவான்` என்க. `சிந்தையுளே` என்றே போயினாராயினும், `சோதியாய்` என்றதனால் `புறத்தும்` என்பதும் பெறப்பட்டது. `சுடர் விட்டுளன் எங்கள் சோதி`1 என்ற தற்கு, `ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பில் - ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்` 2 எனப்பொருள் கூறியமை காண்க. தோன்றும் - தோன்றுவான். ஏகாரம் தேற்றம். அரன் - பாசத்தை அரிப்பவன்.
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

பாடல் எண் : 23
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

பாடல் எண் : 45

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
🌹🌺 - *நம் நண்பர்கள் தோற்றால் நாம் தோற்றோம்... நம் நண்பர்களே நம் பலம்.. என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
---------------------------------------------------------------
🌺🌹ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும்*

நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான்.
ravi said…


🌺ஒருநாள் இருவருக்கும் சண்டை வந்தது; ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டனர். எனவே, எந்தவொரு விழாவுக்கும் இருவரும் சேர்ந்து இணைந்து செல்வதில்லை. ஒருவன் முன்னாலும், மற்றவன் பின்னாலும் செல்வர்.

🌺ஒரு விழாவில் பெட்ரோமாக்ஸ் காரன் முந்திக் கொண்டான். விழாக்குழுவினர், ""நாதஸ்வரக்காரன் எங்கே?'' என்று கேட்டனர்.

🌺அவர்களிடம், ""அதை ஏன் கேட்கிறீங்க? அவன் ஒரு விழாவுக்கு ஊதி விட்டு வெத்துக் குழலோடு வருவான். வேணுமுன்னா குழலை வாங்கிப் பாருங்க தெரியும்!'' என்று தூண்டிவிட்டான்.
ravi said…
🌺விழாக் கமிட்டியார் சோணங்கிகள்; விவரம் இல்லாதவர்கள். நேரம் ஆகிக் கொண்டேபோனது. அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நாதஸ்வரக்காரன் வரட்டும் என்று காத்திருந்தனர். கடைசியில் நாதஸ்வரக்காரன் வந்தான். அவனிடம் அவர்கள் ஊதுகுழலை வாங்கிப் பார்த்தனர்.

🌺உள்ளே ஒன்றும் இல்லாமல் இருந்தது. விரலை விட்டு நன்றாகத் தடவிப் பார்த்தனர். உள்ளே ஒன்றும் இல்லை. அவர்களின் கோபம் அதிகரித்தது. நாதஸ்வரக்காரனை நன்றாக உதைத்துவிட்டனர். எல்லாரும் சேர்ந்து செம்மையாக மொத்து மொத்து என்று மொத்தினர்.
ravi said…
🌺பாவம் நாதஸ்வரக்காரன். "என்ன ஏதென்று எதுவும் கேட்காமல் இப்படிப்போட்டு உதைக்கிறார்களே...' என்று அழுதான். இறுதியில் புரியவைத்தான் ஒருவன்.

🌺""ஏண்டா! எங்கேயோ போய் ஊதிட்டு இங்க வெத்துக் குழலைக் கொண்டு வாற!'' என்ற ஏசினான்.

🌺பெட்ரோமாக்ஸ்காரன் இவனைப்பார்த்துக் கள்ளமாகச் சிரித்தான். நாதஸ்வரக்காரனுக்கு பிறகுதான் புரிந்தது. இது பெட்ரோமாக்ஸ்காரன் வேலையென்று. மனசுக்குள் கறுவிக் கொண்டான், "இரு இரு உன்னை ஒருநாள் பழிவாங்கி விடுகிறேன்...' என்று.
ravi said…
.

🌺ஒருநாள் பழிவாங்கும் சந்தர்ப்பம் வந்தது. ஒரு விழாவில் இருவரும் ஏற்பாடாகி இருந்தனர். அந்த விழாவிற்கு பெட்ரோமாக்ஸ்காரன் பிந்தி வந்தான். ஊது குழல்காரன் முந்திக் கொண்டான். அவ்விழாக் கமிட்டியர் பெட்ரோமாக்ஸ்காரனைப் பற்றி விமர்சித்தனர். நாதஸ்வரக்காரனுக்கு மகிழ்ச்சி.

🌺பழிவாங்கும் ஆசையால், ""அதுவா அது ஏங்கேக்கிறீங்க? அவன் ஒரு ஏமாத்துக்காரன். அவன் பக்கத்தூரு விழாவுக்கு எல்லாத்தையும் எரிச்சுட்டு, வெத்து விளக்கை கொண்டு வருவான். வேணுமானா வந்ததும் பத்த வைக்கச் சொல்லுங்க அது புஸ்புஸ்ங்கும்!'' என்றான்.
ravi said…
🌺சிறிதுநேரஞ் சென்று பெட்ரோமாக்ஸ்காரன் வந்தான். விளக்கை பற்ற வைத்தான். புஸ்புஸ் என்றது. விழாக்கமிட்டியாருக்கு அவன் பிந்தி வந்ததால் வேறு கோபம் வந்தது. விளக்குக்காரனைப் பிடித்து நன்றாக உதைத்தனர். இவன் விஷயம் புரியாமல் விழித்தான். அடி பொறுக்காமல் அழுதான்.

🌺""எங்கேயோ கொண்டு போயி விளக்க எரிச்சுட்டு வெத்து விளக்கையா கொண்டு வார... ஏண்டா புஸ் புஸ்ங்குது?'' என்று மீண்டும் உதைத்தனர்.

நாதஸ்வரக்காரனின் நமட்டுச் சிரிப்பைக் கண்டதும்
பெட்ரோமாக்ஸ்காரனுக்கு விஷயம் புரிந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.
ravi said…

🌺உறவுகளில் மிகவும் உன்னதம் வாய்ந்தது நட்பே...ஸ்ரீ கிருஷ்ணனோ மன்னன் ஆனால் குசலனோ பரம ஏழை, இருவருக்கும் உள்ள நட்பு இன்றும் புகழப்படுகிறது.. நம் நண்பர்கள் தோற்றால் நாம் தோற்றோம்... நம் நண்பர்களே நம் பலம் என்பதை நாதஸ்வரக்காரனும், பெட்ரோமாக்ஸ்காரனும் புரிந்து வாழ்ந்தனர் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ஹேமலதா said…
Bhagawad Gita course complete பண்ண தோட பாதிப்பா?
நல்ல பதிவு🙏
ravi said…
அப்படி சொல்ல முடியாது ... பெரியவாளை எங்கும் எதிலும் இணைக்கும் ஆசை , ஆர்வம் ...
Hemalatha said…
நல்ல முயற்சி
ravi said…
மதுரை இம்மலையில் நன்மைதருவார் கோயில் மத்யபுரி அம்மன் ஸ்ரீசக்ரத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக கூறக் கேள்வி. அம்மன் முன் கண் மூடி நின்றால் மனம் ஒருமைப்படுவதை அனுபவித்துள்ளார். அதிர்வலைகளை உணர்ந்ததும் இது குறித்து விசாரித்ததில் இது பற்றி கூறினர்.
Kousalya said…
மிகவும் அருமையான விளக்கமும் பாடலும்...அற்புதம்..🙏🙏
ravi said…
பாட்டு பாட வா பூஜை செய்ய வா .. பூவைக்கொண்டு பூவை பூஜை செய்ய வா..

கலி யுகத்தில் பெரியவா என்றே பேர் எடுத்தானே அந்த பெரியாரும் இவன் இடத்தில் பாடம் கற்றானே

(பாட்டு பாட...)

உள்ளமெல்லாம் ஐந்தெழுதாய் ஆட்சி செய்தானே அங்கே இன்னும் ஒன்றை சேர்த்தே சுவாமி நாதன் ஆனானே

மூன்று எழுத்தில் ஒரு உருவாய் எழுந்து நின்றானே அந்த எட்டு எழுத்தில் திக்கெட்டும் பரவி நின்றானே

(பாட்டு பாட...)

ஆசை இன்றி பெண்கள் பேரை சொல்ல வைத்தானே அதில் காமாக்ஷி மீனாக்ஷி விசாலாட்சி யை காண வைத்தானே ...

(பாட்டு பாட...)

காமம் இன்றி ஆசை இன்றி துறவு கொண்டானே துள்ளி ஓடும் இளமை தனை கடலில் தூக்கி எறிந்தானே...

(பாட்டு பாட...)

தண்டம் தாங்கி அண்டம் ஓங்கி நடமாடி நடம் ஆடி எங்கும் சென்றானே.. தெய்வம் கூட பேசும் என்றே நம்ப வைத்தானே

(பாட்டு பாட)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Hemalatha said…
Semma sir
Vera level sir neenga
Quick creativity....creator👏👏👏👏
மூர்த்தி said…
அற்புதம் தேவகார்ய சமுத்யதா

கேள்வி. பதில். மிகவும். அருமை

விள்க்கவுரை.அற்புதம்



Shivaji said…
Kavi Divine knowledge excellent

You are q/a session

Expresses you great thought process and depth knowledge🌷🌷🌷🙏🏻

Savitha said…
அற்புதம்

திருவிளையாடல் episode

இங்கே இனைத்தது மிகவும் அருமை🙏🏻🙏🏻🙏🏻


'சித்' என்பது சேதன்மாகிய ஆன்மாவை குறிக்கும்.



This is not so easy

Thought process apt answers

You are only writing qa

So I m appreciating your divine knowledge



இரண்டு கேள்விகளும் அருமை..அதற்கான பதில்களோ அற்புதம்...

கேள்வியின் நாயகன் என்கிற தன் பரிமாணத்தை சக்தி குடும்பத்திற்கு தெரியப்படுத்தும்அசத்தல் தொடர் பதிவு...


புத்தியை தீட்டும் பதிவு...



🙏🙏🙏🙏🙏🙏



ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 39*🐒🐒🐒
ravi said…
ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |

காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை ||

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |

தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 3
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
*ஹாத்வஜ்ர ஔ த்வஜா விராஜை* |🐒

கையில் வஜ்ரம் போன்று இருக்கும் கதையை சுமந்து கொண்டிருக்கிறார் அனுமன் ..

அவரைத் தவிர வேறு எவராலும் அந்த கதையை அசைக்கக்கூட முடியாது 🐒

ஹௌ என்றால் அதுவும் ... என்று அர்த்தம்

கதையுடன் ஒரு கொடியையும் ஏந்தி இருக்கிறீர்கள்

காம்தே என்றால் வலிமை மிகுந்த தோள்கள் ..ஜனேவூ என்றால் பூணுல் ...

தோள்களை பூணுல் அலங்கரிக்கின்றது ... எப்படிப்பட்ட பூணுல் ...

வைதீக காரியங்கள் மூன்று விதமான பொருள்கள் உபயோகப்படும்

1. குசப்புல்

2. தர்ப்பை புல்

3. *மூம்ஜூ புல்*

அனுமன் அணிந்திருப்பது மூம்ஜூ புல் ..
ravi said…
ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |

*காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை ||*

அர்த்தம் மேலே பார்த்தோம் 🐒

*ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |* 🐒

இந்த வரிகள் மதுரம் தோய்ந்தவை ஆழமாக நாளை பார்ப்போம் 🥇🥇🥇
Kousakya said…
மிகவும் அருமை...👌👌🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம் சரீரத்தின் அம்மா எத்தனை அன்பாயிருந்தாலும், அவளுடையதோ, நம்முடையதோ யாருடைய சரீரம் முதலில் போனாலும் அதோடு அந்த ஸம்பந்தம் போய் விடுகிறது! வெவ்வேறு ஜன்மாவில் வெவ்வேறு அம்மா வருகிறாள். இத்தனை அம்மாக்களுக்கும் உள்ள அன்பின் மூலமான பரமாத்மா மட்டும் எப்போதும் சாச்வதமாகத் தொடர்ந்து வருகிறார். இதனால்தான் ”தொடர்ந்து வரும் தாயானை”6 என்கிறார்கள்.
ravi said…
அழிந்து போகிற உடம்புக்கு மட்டும் அம்மாவாக இல்லாமல் அழியாத உயிருக்கு அம்மாவாக இருந்து, இஹத்திலும் பரத்திலும் ரக்ஷிக்கிற பரம கருணை கொண்ட தாய் பரமாத்மாவே! ஒரு ஐந்து பேர், பத்துப் பேருக்குக் கொஞ்ச காலம் மட்டும் தாயாராக இல்லாமல், புழு பூச்சியிலிருந்து யானை, சிங்கம் வரை, மநுஷ்யர்களிலிருந்து தேவர்கள் வரை இத்தனை ஜீவராசிகளுக்கும் எத்தனை காலத்துக்கும் அம்மாவாக இருப்பது பரமாத்மாவே. ஒவ்வொன்றுக்கும் வேண்டிய ஆஹாராதிகளை, போக்ய வஸ்துக்களை லோகத்தில் பண்ணி வைப்பது அந்தப் பெரிய அம்மாதான். குழந்தைக்காகத் தாயாரிடம் பால் உண்டாகிறது;
ravi said…
வயிற்றிலிருக்கும்போதே தொப்புள் கொடி வழியாக அவளிடமிருந்து அதற்கு ஆஹாரம் போகிறது என்றால், இந்த ஏற்பாட்டை ஒவ்வொரு தாயாரும் தானாகவா செய்து கொண்டாள்? மஹாமாதாவாக ஒரு பராசக்தி இருந்து கொண்டுதான் இப்படியெல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
பரமாத்மா நம்முடைய உடலை மட்டுமின்றி உயிரையும் வளர்க்கிற அம்மா. அறிவை வளர்த்து ஆத்மாநுபவத்தைத் தருகிற அம்மா. வயிற்றுக்குப் பால் தருகிற மாதிரி ஞானப்பால் கொடுத்து, அம்மா பிள்ளை என்ற பேதமில்லாமல் ஒன்றாகச் செய்துகொள்கிற அம்மா.
ravi said…
ஆனதால் நம் மனஸுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமில்லாமல், இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபடவேண்டும் என்கிற நியாயத்தையொட்டி வாஸ்தவமாகவே எந்தெந்த ஜன்மத்துக்கும், ஜன்மாவே நீங்குவதற்கும், துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வணங்கத்தான் வேண்டும்.
எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. அப்படி ஸாக்ஷாத் பரப்பிரம்மமே தாயாகி, அம்பிகையாக இருந்து கொண்டு நமக்கு அநுக்ரஹம் செய்யவேண்டும் என்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வந்து அருள்புரிகிறது.
ravi said…
அரூபத்துக்கு ஏன் ரூபம் வேண்டுமென்றால், ரூபமுள்ள நாம் அனைவரும் அந்த மூலத்திலிருந்தே பிறந்து, அது நமக்குத் தாயாராகவும் நாம் அதற்குக் குழந்தைகளாகவும் இருப்பதால்தான். நமக்கும் ரூபமில்லை, நாமும் ஆத்மாதான் என்கிறது இருக்கட்டும் – இப்போது நமக்குத் தெரியாத கதை அது! இத்தனை ரூபங்கள் – பசு, பக்ஷி, மிருகம் என்று நானா விதம், ஒவ்வொரு ஜாதியும் ஒரே மாதிரி – இருந்து கொண்டிருப்பதால் இவற்றுக்கெல்லாம் ஒரு மூலம் உண்டு என்று மட்டும் இப்போதும் புத்திக்குத் தெரிகிறது. மூலம் – தாயார்; மூலத்திலிருந்து வந்த எல்லாம் குழந்தைகள்.
குழந்தை என்றால் அதற்கு அம்மாவைப் பார்த்தாக வேண்டும்.
ravi said…
அவள் பக்ஷணத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளேயிருந்தால் போதாது! குழந்தை பக்ஷணத்தைத் தொடாது. அவளே கண்ணுக்கு முன்னால் வந்து ஊட்டினால்தான் தின்னும். பக்ஷணமே வேண்டாம்; அவள் கண்ணுக்கு முன்னால் இருந்துவிட்டால் போதும்! உள்ளேயிருந்து, ”கண்ணே ராஜா!” என்று அவள் குரல் கொடுத்தால்கூடப் போதாது. அவளைப் பார்த்தேயாக வேண்டும்! அவள் தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும்! அவள் முகத்தைப் பார்த்தால்தான் அது ‘களுக்’ ‘களுக்’ என்று சிரிக்கும். நாமும் குழந்தைகள்தானே, பராசக்திக்கு? அதனால் அரூபமாக, தத்வமாக ஒரு பராசக்திதான் நம்மை ரக்ஷிக்கிறது என்று தெரிந்தால் போதமாட்டேன் என்கிறது
ravi said…
பரமாத்மாவைப் பரம கருணாமூர்த்தியாகப் பார்க்க வேண்டுமானால் அதற்கு அம்பாள் ரூபத்தைவிட வேறில்லை. குழந்தைக்குத் தாய், கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதாரவிந்தத்தில் நிறைந்த அன்பு இருந்துவிட்டால் வாழ்க்கையே நிறைந்து பரிபூர்ண ஆனந்தம் உண்டாகிவிடும். அம்மாவாக உபாஸிக்க ஆரம்பித்தால் இப்படிப்பட்ட நிறைந்த அன்பு வெள்ளம் இயல்பாக நம்மிடமிருந்து பெருக ஆரம்பித்து விடும்.
ravi said…
அம்பாளுடைய தியானம் இடைவிடாத தாரையாக நம்மிடமிருந்து பெருக ஆரம்பித்துவிட்டால் அதுவே ஸகல தாப சமனமான, ஸமஸ்த பாப நிவாரணமான புண்ய தீர்த்தமாகும். அன்புக்கெல்லாம் ஊற்றாக இருக்கிறது அதுதான்.
‘ஸஹோதர ஸஹோதரிகளே!’ என்று இப்போது நாம் வாய் வார்த்தையில் மட்டும் பிரஸிங்கிப்பதும், எழுதுவதும் நிஜ அநுபவமாவது, இத்தனை பேருக்கும் நிஜமாக ஒரே அம்மாவாக – ‘நமஸ்தே ஜகத் ஏக மாத:‘ என்று காளிதாஸன் [‘சியாமளா தண்டக’]த்தில் சொன்னதுபோல ஒரே அம்மாவாகப் – பரமாத்மா இருப்பதை உணரும் போதுதான். எல்லா ஜீவ ஜந்துக்களையும் நம் உடன் பிறப்புக்களாகத் தழுவுகிற அன்பானது இத்தனைக்கும் பொதுவாக இருக்கும் மாதாவை உணரும்போதுதான் ஸித்தியாகும்
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 24* 🌷🌷🌷🌷🌷
ravi said…
*ஈராறு செவியில் இலகு குண்டலமும்.*

பன்னிரண்டு திருச்செவிகளிலும் திகழ்கின்ற குண்டலங்களும்.

*ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து.*

வலிமையான பன்னிரண்டு தோள்களுடன் கூடிய அழகிய திருமார்பில் பலவகையான அணிகலன்களையும் பதக்கங்களையும் அணிந்து.

*நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்* .

நல்ல மாணிக்கங்களை உடைய நவரத்தின மாலையும் (அணிந்து).

*முப்புரி நூலும் முத்தணி மார்பும்.*

மூன்று பிரிவுகளை உடைய பூணூலும் முத்து மாலையும் அணியும் மார்பும்.

*செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்.*

தனியாக புகழும் படி அழகு கொண்டு விளங்கும் திருவயிறுகளும் திருவுந்திகளும்.
ravi said…
அனந்த சயனம் அதிலே ஆனந்தம் பாற்கடல் என பொங்கியதே..

தர்மம் வாழ வந்தவன் சற்றே கண் அயர்ந்தான் .. கமலங்கள் மூடிக்கொண்டதே

பரமனை தன்னுள் பார்த்தவன் அந்த பார்த்தனின் பாதம் அருகில் அமர்ந்தே மூன்றடி அளந்தவன் கண் விழிக்க காத்திருந்தான் ..🥇

கண்ணன் சிரம் அருகில் துரியோதனன் தவம் இருந்தான் ... 🐒

நடிக்கும் கண்ணன் நயந்து கேட்டான் அர்ஜுனனிடம் ..

முதல் பார்த்த உன்னிடம் முதல் இல்லாமல் கேட்கிறேன்

என்ன வேண்டும் விஜயா? என்றான்

நீதான் வேண்டும் .. வேறு எல்லாம் மாயை ... என்றான் குந்தி மைந்தன்

தந்தேன் என்னை .. இப்படி கேட்போர் யாரும் இல்லை இப்பூமி தனில்

மீண்டும் சுற்றி பார்வை இட்டான் .. துரியோதனன் தெரிய கேட்டான்

அடடே நீயும் வந்தாயோ போர் வேண்டாம் என்று சொல்லவே

வேண்டும் கண்ணா போர் வேண்டும்

பாண்டவர் குருதி வேண்டும் .

நான் மண்ணாள வேண்டும் இன்றும் என்றும்

சிரித்தான் கண்ணன் ..

தரம் இன்றி நிரந்தரம் என்றே வரம் கேட்க்கிறான்..

அழியும் உடலில் ஜவ்வாதை அள்ளி தெளிக்கிறான் ...

அங்கம் எல்லாம் மாயை தனை பூசிக்கொள்கிறான்

சரி என்ன வேண்டும் என்றே கேட்க நீ வேண்டாம் உன் படை வேண்டும் என்றான் ..

படை வந்தே உடம்பில் பார்ப்போர் இன்றி அழிந்தான் போர் முடிவில் துரியோதனன்

பக்கத்தில் இருக்கும் பரமன் அறியார் காஞ்சி மகானை பாராரோ ...

நடமாடும் தெய்வம் கண்ணனாய் கீதை சொல்வதை செவி குளிர கேளீரோ ..

விஜயனாய் வாழ்வோம் .. 🏹

மண் வேண்டாம் பொன் வேண்டாம்.. பொருள் வேண்டாம் ...

நான்கடி எடுக்க சொல்வோம் நாராயணனை ...

நான்காம் அடி அழுதட்டும் நம் சென்னிதனை ..

காஞ்சி அருளட்டும் கடம்பவன வாசினீயின் அருளால் 🥇🥇🌷
ravi said…
ராமா நாளை நீ பிறக்கின்றாய் ..

வில்லெடுத்து சொல் தொடுத்து கல் என நின்ற தசமுகன் தன் மேனி கொய்தாய் ...

பெண்ணை கல்லாய் ஆக்கிய முனிவருக்கும் முக்தி கொடுத்தாய் ...

மேதை நானே என்ற வாலிக்கும் வைகுண்டம் தந்தாய்

எரியும் இலங்கையில் ராமர் ஆட்சி தந்தாய் ...

எண்ணம் நிறைய உன் நாமம் சொல்வோர்க்கு

வேண்டும் பொருள் உண்டோ வேதனைகள் சாதனைகள் ஆகாதோ ...

வெண் மதியும் சொல் மதியும் ஒன்று கூடாதோ
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 40*🐒🐒🐒
ravi said…
ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |

தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 3
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
*ஸம்கர* ... ஸம் என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி , அருள் சௌபாக்கியம் சகல அந்தஸ்து .. *கர* என்றால் தருபவன், ஏற்படுத்துபவன் ...

சகல சௌபாக்கியத்தையும் அளவில்லாமல் தருபவன் ஏற்படுத்திக் கொடுப்பவன் பரமேஸ்வரன் ..

அதனால் அவன் திருநாமம் *சங்கர* என்றும் *ஸம்கர* என்றும் அழைக்கப்படுகிறது .

சந்தனு மகாராஜா பீஷ்மரின் தந்தை காயத்திரி சொல்பவர் மிகுந்த தவ வலிமை கொண்டவர் சம் ... *தனு* என்றால் உடல் ... ..

அவர் தன் கரங்களால் யாரை தொட்டாலும் அவர்கள் பிணி அகன்று விடுமாம் ...

பிணி அகற்றி சந்தோஷத்தை தருவதனால் அவர் பெயர்

சம் + தனு= சந்தனு வாயிற்று ... 🐒🐒🐒
ravi said…
*சுவன* என்றால் உற்பத்தி செய்வது அதாவது சிவனின் அம்சமாக உண்டானவர் அனுமன் ...

சூனு என்பது மகன் என்று குறிக்கும் வட மொழியில் .. இதுவே அவதி ஹிந்தியில் சுவன என்று மாறியது

*சூன்* என்ற வார்த்தை ஜெர்மனியில் *சோன்* என்று ஆனது

ஆங்கிலத்தில் அதுவே *son* என்று மாறுகிறது .

Name என்பது நாமா என்பதில் இருந்து வந்தது

சிவனின் மகன் என்றும் சிவனின் அம்சம் என்றும் சிவனே அவதாரம் செய்தார் என்றும் *ஸம்கர சுவன* என்ற நாமத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம் 🐒🐒🐒

ராமர் பல இடங்களில் அனுமனை ஸம்கர சுவனன் என்று தான் அழைக்கிறார் ... ஈசனுக்கு நன்றி காட்டும் வகையில்
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 188* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 44👍👍👍
ravi said…
*வகிட்டின் வர்ணனை*

*ஸர்வரோக நிவிருத்தி* 👌👌👌

தனோது க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்ய லஹரீ

பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:

வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர

த்வஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 44
ravi said…
அம்மா!, அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், உன் முக அழகானன் வெள்ளத்திற்கு கால்வாய் போன்றதான உனது கேசத்தின் வகிடானது எங்களுக்கு சகலவிதமான க்ஷேமங்களையும்/நன்மைகளையும் தரட்டும்.

பெண்கள் தமது கூந்தலை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளுதல் வழக்கம்.

அவ்வாறு பிரித்துக் கொள்ளும் போது நடுவில் கோடு மாதிரி வருவதை வகிடு என்போம். [கிராப் வைத்த ஆண்களுக்கும் இப்போது வகிடு இருக்கிறது]

இந்த வகிட்டினை ஸீமந்தம் என்பர் சம்ஸ்கிருதத்தில். சுமங்கலிகள் இவ்வாறு வகிட்டில் குங்குமம் தரிப்பது வழக்கம்.

பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசமானது லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் ஒன்று என்பர்.

இளஞ்சூரியனது கிரணங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

அது போன்ற நிறத்தில் அன்னை தனது அழகு வெள்ளத்திற்க்கான கால்வாய் போன்ற வகிட்டில் சிந்தூரம் வைத்திருக்கிறாளாம்.🌷🌷🌷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 188* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*61 வது திருநாமம்* 🙏🙏🙏
ravi said…
*61 *सुधासागरमध्यस्था -ஸுதாஸாகரமத்யஸ்தா -*
ravi said…
*ஸுதாஸாகரமத்யஸ்தா -*

ஸ்ரீ லலிதாம்பிகையின் இருப்பிடம் அம்ருத சமுத்திரத்தின் மத்தியில். ஸஹஸ்ராரத்தை குறிக்கிறது.

ஏற்கனவே மேலே சொல்லியிருக்கிறேனே அவளது க்ரஹத்தைப் பற்றி.

குண்டலினி சக்தி சோம சக்ரத்தை நெருங்கும்போது அதன் அளவு கடந்த உஷ்ணம் அப்போது உருகி ஓடுவது தான் அம்ருதம்.

இதை தான் *அம்ருதவர்ஷினி* என்பது.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த உஷ்ணம் உடலைக் கொல்லாது .

அதற்கு பதிலாக நீண்ட ஆயுளைத் தருவது.

ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், சித்தர்கள் அனுபவிக்கும் ஆனந்தாம்ருதம் இது தான்.

குண்டலினி உச்சிக்கமலத்தை அடையும் நேரம் இது பொழியும்.

அந்த அம்ருதத்தை பிந்து என்பதும் உண்டு.🥇🥇🥇🥇🥇
கௌசல்யா said…
அருமை அருமை...காத்திருக்கிறேன் நான்காம் அடிக்காக....சிரமேற்கொள்ள🙏🙏🙇‍♀️🙇‍♀️
ravi said…
🌺🌹Is it right for one to realize oneself without doing charity to the Lord? ... Simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹Nambilai's at Tiruvaimozhi Kalatsepam is very popular in Thiruvarangam.
To Thiruvarangam to hear Nampillai's explanations from various towns in Tamil Nadu
It is customary for servants to come.

🌺The meaning of the first ten second proverbs at a time
Nambilai was explaining. The fifth rhyme,

🌺“If there is no father, the best house is life
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே ”

🌺 Nampillai gave a very good explanation for this.

🌺Description - If you want to do charity by reaching the highest ambitious Lord's Thiruvatis,
அற்று இறை பற்றே - cling to the Lord as an atheist in other matters.

🌺The soul is the body to the Lord, realizing that the Lord is the soul within the soul
Take refuge in him. ” Thus, as Nambilai said, a pundit arose from the crowd.

🌺“Is salvation without any attachment? Then why should the Lord cling to Him and worship Him?

🌺We do not have this body, after realizing it as the soul,
Why should we be the body of someone called Lord?
Is it not enough for the soul to enjoy itself? ” He asked.

🌺 Looking at him and smiling, “Swami! Your claim is fine.
The soul is liberated as desires are released. No doubt about it. Name it ‘Craft’.

🌺It is the state in which the soul experiences itself in solitude. But that is not the highest ambition.
Because all living beings are the property of God. What happened to do charity for him.

🌺Is it right for one to realize oneself without doing charity to the Lord?

🌺Sitting in his office, not working for the payroll boss
It's like doing our own thing.

🌺The scripture says that everything from the ignorant to the intelligent beings is the body of the Lord.
So how does this body function according to the appointment of the soul?
In the same way the jivatma must act for his pleasure according to the appointment of the living paramatma.

🌺Those who want to get the position of Brahma will not even want the position of Indra.
He who desires self-experience will not even like the position of Brahma.

🌺As he who seeks to attain the Lord who is full of all marriage qualities without seeking self-experience
It means to be purposeful in the deeds of the Lord
That's the decent thing to do, and it should end there. " Explained as our child.

🌺Thus the position of Indra, the position of Brahma, the experience of the soul, as the highest ambition of all
Thirumal is called * ‘Vararoha:’ * because he is masculine.

🌺 * ‘to come’ * means superior. * ‘Aroha’ * means masculine.
* ‘Vararoha:’ * is the 122nd Tirunam of the Sahasranama.

🌺 "Vararohaya Nama:" * Thirumal will bless those who come daily saying that they will get the best promotions soon.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺 - We lost when our friends lost ... Our friends are our strength .. That is - a simple story that explains🌹🌺
--------------------------------------------------- -------------
🌺🌹A Nataswara and a Petromax *
Were friends. The two go together at certain ceremonies; Will come along. Someone who lights up the night with a Petromax lamp. Another will make the ceremony float in the Nathavellam by Nathaswaram.

🌺One day the two got into a fight; They plotted with each other. Therefore, the two do not go together for any ceremony. One will go ahead and the other behind.

🌺 Petromaxman overtakes at a ceremony. The festival committee asked, "Where is Nataswarakaran?"

🌺 To them, "" Why do you ask that? He would blow up a festival and come back with a pipe. I know you can buy a hose before you go! ''

🌺 Festival Committee Sonangi; Those without details. Time was running out. Anger came to them in public. They were waiting for Nataswara to come. At last Nataswarakaran came. They bought him a blowpipe.

🌺 There was nothing inside. They rubbed the finger well away. Nothing inside. Their anger increased. Nataswarakaran was well kicked. All together neatly summed up the total.

🌺Sin Nataswarakaran. "People are kicking me like this without asking me anything ..." he cried.

🌺 ""why Go somewhere and blow it and bring a pipe here! ''

🌺Petromaxcaran smiled falsely at him. It was only after Nataswarakaran that it was understood. This is the work of Petromaxcorn. He thought to himself, "I will take revenge on you one day ..."

🌺One day came the opportunity for revenge. The two were arranged for a ceremony. Petromaxcorn came later for the ceremony. The blowpipe was overtaken. The festival committee criticized Petromaxcar. Glad for Nataswara.

🌺 Desiring revenge, "" Is that where you are? He is a magician. He would light everything for the side festival and bring the wick lamp. Ask him out well if he is no longer absorbed in the connection.

🌺Slightly went and Petromaxcaron came. He lit the lamp. Puspus. The other got angry as he came after the celebrant. They grabbed the lamp and kicked it well. Ivan woke up not understanding the matter. The feet cried uncontrollably.

🌺 "" Take it somewhere and bring an incense burner lamp to explain ... Anda Puss Puss? " Seeing Nataswarakaran's smirk
Petromaxcorn understood the matter. He bowed his head.

🌺The most noble of relations is friendship ... Sri Krishna is the king but Kusalano is the poorest of the poor, the friendship between the two is still praised .. If our friends lose we lose ... Nataswara and Petromax lived to understand that our friends are our strength🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺Veda Guru ... Can you stop me from doing my duty by realizing everything yourself? "The poisonous serpent .... Simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹* A guru and a disciple were walking through a dense forest. *

🌺 * Decided to sleep under a tree near night and continue the morning walk, they chose a tree and slept under it. *

🌺* The next day dawned Guru and disciple bathed in the river and both worshiped the sun *

🌺* Then the sun lord appeared as Asiri *

🌺Vedic Guru! Hello I have accepted your salutation *

🌺 * Your disciple's life will be touched by a monarch and die before the sun sets today. Save your guru by force if you can *

🌺Guru bought the sun and looked at the demon anxiously *

🌺They plucked some fruits and after getting hungry they worshiped the Lord of the nearby temple *

🌺Then they crossed the town and walked through the forest. *
Exhausted, the two sat down under a tree and the Guru slept except for the blindfolded disciple. *

🌺 He was awake thinking that he had to save Sedan's life somehow. *

🌺Then a king came to kill him near the demon as he was filming. *

🌺Seeing this, Guru Rajanagam ordered him to stop. The kingdom also obeyed the word of the Guru. *

🌺The Guru looked at Rajanaka and said, "I know that you have come to take my disciple's life. It is the duty of a Guru to save the most pious disciple of the Guru.

🌺Now the kingdom spoke. * "The Vedic Guru ordered me to put my tongue on your disciple's neck and suck the blood. *

🌺"Veda Guru ... Can you stop me from doing my duty by realizing everything yourself?"

🌺* Immediately Guru "Then the command I gave you is to suck the blood of my disciple *

🌺* Well, wait a minute! I myself will feed you his blood. When you absorb it, you will reap the rewards of your duty. "

🌺 * The Guru took a small knife and placed it around the demon's neck and cut the knife to a depth of blood. *

🌺 * Sedan's eyes widened as he realized something was scratching his neck sharply. The Guru felt the knife scratch his neck and then the blindfold was about to move a little *

🌺* The Guru who took many drops of blood from the demon fed it to the kingdom *

🌺* Rajanagam also went the way of sucking blood with the joy that we have fulfilled our duty without succumbing to the Guru's curse *

🌺The Guru, with the relief of saving the demon's life, squeezed the green juice he had previously taken from his neck and stuck it in the demon's neck and went to sleep peacefully *

🌺The two sat up for a while after a good night's sleep on the beach. *

🌺Then the disciple touched the strap around his neck and left without asking the Guru anything *

🌺"Guru, can we continue the walk?" He asked *

🌺The Guru smiled, "Shit! What did you think when I shouted at your neck while you were sleeping just before? Were you not afraid at all?" He asked with a smile *

🌺Sedan said, "Guru, I felt something sticking in my neck. I woke up and saw you cutting my neck with a knife in hand. *

🌺But I know that my gurus will not do me any harm. So I slept peacefully *

🌺Now when I woke up I saw the herbal torch around my neck My devotion, life and soul are all dedicated to you my Guru. So, I have no worries about that. "

🌺The Guru embraced the demon and got up and walked with him. *

🌺 Friends! If we surrender to Him that God is responsible for everything that is good and bad that happens to us, the evil that will happen to us will happen for the good by the grace of God ... !!🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌺🌹- alveer ..... I am not one to blame anyone for this. - simple story to explain🌹🌺
--------------------------------------------------- -------------
🌹🌺Tondaradi Podiyalvar, who was singing happily on stage in Thirumalai, suddenly counted all his crimes. He also counted the pride of the arena.

🌺“There is no sense of freezing in the evening
கள்ளத்தே நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு

🌺 That the inward knows everything instantly
I went out and smiled at myself. "

🌺 Through the song “," Even the * worst * servant does not deserve to stand near such a high stage! " He tried to leave the temple of the arena.

🌺 Arangan stopped him. “* Deep *! Where are you going? ” He asked. “No! No! You are so high. Adieno is very, very humble.

🌺I came in front of you with a fake disguise * as your * volunteer * and tried to deceive you. Adien does not even have the * merit * * merit * to stand against you, considering all of my crimes.

🌺I'm leaving! ” Said the volunteer. Arangan said, “Alvir! I have risen threefold and measured the world! Do you know why? ” He asked.

🌺 "You are universal to receive the lost kingdom of the gods as a sacrifice from Mahabali and hand it back to them!" Said Alvar.

🌺 “I wish I had fought with Mahabali and easily defeated him! Or he would have beaten Mahabali with my chakra weapon and put Indra in his post!

🌺Why should I jump all over the world for this? ” Arangan asked. "* The magician * must explain your magic to yourself!" Alvar prayed that.

🌺Arangan replied, “I thought of imprinting my * Thiruvatis * on the * heads * of * all * living beings * in the world with the aim of developing * devotion *, * wisdom *, * zeal * for all living beings by my Thiruvadi touch.

🌺 Thus I used the Mahabali and the gods falsely to imprint Thiruvadi on everyone's heads.

🌺Then, I touched all the good-bad, man-beast, atheist-atheist, educated-uneducated, poor-rich, no matter what, by my thieves?

🌺 Understand that I am not one to blame anyone for this. I will not exclude you either. Don't leave me! ” Said. Realizing the Lordship of the arena, Alvar came back into the temple and worshiped him.

🌺 “Everything in the world is a beacon on the jump
Xavier you Allal Chicken Chengan Male
Aviye amuthe entan aruyir all entai
I am not a sinner, I am a sinner. ”

🌺 Sang the hymn. ‘* Moga *:’ means wasted. ‘* Amoka *:’ means not in vain. Any action that Thirumal can do is not in vain.

🌺 It is generally considered that he measured the world in order to obtain alms from Mahabali and to give the kingdom to the gods.

🌺But he had an important purpose in it that was to have a foothold in the heads of all living beings and accomplished it.

🌺Like this, any action done by Tirumala is not in vain as he has a lofty purpose within every action he does and fulfills that purpose properly.

🌺 Therefore he is called ‘Amoka:’. That is the 156th Tirunam of Vishnu Sahasranama. “* Amokaya * * Namaha *🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌺🌹“Thirumokur Perumal temple which is very Powerful Sudarsana Chakra .... Simple Story to Explain🌹🌺
--------------------------------------------------- --------
🌹🌺“Kalamekap Perumal
The Thirumokur Amendment is the 46th Divya Desam out of 108 Divya Desams. Here Kalamekap Perumal gives us a view of the standing thirukkolam.

🌺A drop of nectar fell into the pool of the temple while the nectar was flowing in the ocean ...

🌺 Hints about Temple ..
... Thirumokur Kalamekap Perumal ..& mohanavalli thayaar


🌺Kalamekaperumal crown, cone and wheel are made of white stones and decorated. Salagrama evening for Perumal ... dressed up. Salagramam is a sacred stone found in the Himalayas.

🌺 It is worshiped as a form of Lord Vishnu. Praying with the village at home will give the best blessings.

🌺The infinitely powerful Sudarsana Chakra .. is in this temple. Sri Yoga Narasimhar on one side and Sri Chakratahlvar on the other.

🌺In this temple .. special pujas and anointings are held for the chakratazhvar. Here is the wheelbarrow, with 16 hands and 16 types of weapons on display.

🌺Narasimhar gives the scene with the conical wheel. In the Chakradharvar Sanctuary, 154 letters, 48 ​​images of gods and 6 circles are engraved on a stone around the Chakradharvar.

🌺In the month of January, the birthday of Chakradharvar is celebrated in a very special way under the star of Chittirai ...

🌺This correction is a place where Navagraha defects can be removed. It has the name of Sri Mohana Kshetram. Thirumokur is the place of Rahu Ketu. Thirumokur is a place of reparation for the defects caused by Rahu Ketu.

🌺Temple location ..
Thirumokur is located at a distance of 10 km from Madurai on the Madurai-Melur route. ⁇🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺"I will come no matter who calls me in any name told by "Sri Krishna - The simple story that explains, 🌹🌺
--------------------------------------------------- -------------
🌺🌹 ”Radha looked at Sri Krishna.
Radha Krishna
Did you see? Who who
First Looked Like

🌺Hearts in one another
Place Favorite.
It was already divine
Relationship. Vaikuntha relationship. Vraja
Should not continue on earth?
Eye to eye mix
Celebrated own.
How many pages
Bars, spoke.

🌺All in all
Adinatham frame.
The feeling mixed together
And then there's the word
What work?

🌺In any genma
What were we.
What we talked about.
What an exchange
Did we ??

🌺 Everyone has that in mind
Of their pre-birth
Contacts wave by wave
Endless awakening
Radha also enjoyed it.
Kannan smiled
Interjected.
The mind spoke. Minds
I did not say that.
The two just come together
. The plural is singular.

🌺 "Radha, come to my house"

🌺 ”Where is your house
If you come without saying
How come? ”

🌺 “Everything is for you
I know that
Did not say. This
Nandagopan in Vrindavan
Whom to call home
Listen though .. straight
You're with me
They will bring. ”

🌺 “Are you such a great person?
what is your name ?

🌺 ”Krishnan Kannan, Mukundan,
In the name of something like that
Will call. I will come no matter who calls me ”

🌺 ”Oh OK”

🌺 ”That you know where you are Didn't you say Radha?
"I'm too far away"

🌺 ”‘ Your house is somewhere far away
You say there is.
Your hometown noise is here
Are you listening? ”
Said Krishna

🌺 ”listening, listening… You mind
Who somewhere
Someone talking, you
Calling is even here
That you ask
I know too ”.

🌺 “Will you come to my house?
Who is your father? His name
What’s up? ’

🌺 ”Virushabanu - In our town too
Everyone knows him. ”

🌺 ”Oh, so that’s it
You in the name of the great man
Promise me you will come to my house to see me ”

🌺 ”He swears by name
In your head without doing
I swear by the beat.
I am coming to your house,
Enough ’

🌺 ”should come in the morning as well.
Everyday and evening
Are you coming ”

🌺 ”That is
At noon
Shouldn’t Krishna come? ’

🌺Birds, animals, in the trees
The river Yamuna,
The wind, the flowers are everything
They shuddered and laughed.
Happiness abounds everywhere
Ran.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌺🌹“Let's learn to live better with what we have..is a simple story that explains🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹 “A small rat in a small house near a large house has sheep, cows, dogs, longing for it

🌺I mean all these animals are playing comfortably in the big house but only for us the house is so small without it

🌺It's so sad that there's no place to run and dance in our house, this little rat immediately asked his mother one day

🌺Mom ask why we only have a creation like this if we have a big house we can be just as happy as other animals?

🌺The mother rat quietly said that you will soon realize the reason for this, so a few days went by

🌺One day when the kitten was wandering outside, the cat that came through saw it and started chasing it, and immediately the kitten went to the garden of the big bungalow in fear for its life and did not leave the cat there either.

🌺Relentlessly chased again the little rat finally got into his little house.

🌺Now the cat was left bewildered by not being able to enter

🌺The mother rat who saw this said, do you understand the beauty of this little house now?

🌺Nothing should be looked down upon without understanding its awesomeness,

🌺 Tell that little rat that you would not be alive today without this little house.

🌺Realizing this the little mouse also reduced his desires and lived happily in the small house.

🌺So we too,
We seek something without knowing the specials that are in place and often criticize the Lord who created us

🌺We need to realize that if we get influence, money, fame as well as a life without peace.

🌺 Don't always worry about something that the Lord does not give us, maybe if we get something we ask for it may even endanger our lives.

🌺 (It can be anything like love, money, friends, property, possessions)

🌺We need to realize that the better life is where we are now

🌺Some people will say that I am alone and there is no one. Maybe from a lot of friends they do not respect you, what can you do if your life is ruined by them ??

🌺So please understand that sometimes it is good to be without some

🌺There may be a great cause for everything, behind the small pains we are experiencing now that Sri Krishna may even hide the huge pains we cannot bear.

🌺So we will learn to live better by accepting anything and realize that what we are in now is the best one ...

🌺 Nothing can happen without the will of Paranthaman Sri Krishna.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
Long But Super Incident about Tirumala Venkateswara Swamy & HathiRam Baba of Byragi Matam🙏🙏🙏
திருப்பதி திருமலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு அற்புத நிகழ்வு..!

அப்போது அரசர்கள் ஆண்ட காலம். திருமலைக்கு "பைராகி" என்ற பெருமாள் பக்தர் ஒருவர் வந்தார். சுவாமி தரிசனம் செய்ய கோயில் வாசலை அடைந்தபோது, காவலர்கள் தடுத்தார்கள். காரணம்.? உடல் முழுவதும் ஒரே புழுதி. இடுப்பில் கட்டிய வேட்டியோ அழுக்கு மயம். "போய் கோயில் திருக்குளத்தில் குளித்து முழுகி வந்தால் கோயில் உள்ளே அனுமதிக்கிறோம்" என்றனர் காவலர்கள்.
ravi said…
சரி’ என சொல்லி ஸ்நானம் செய்து வந்தவரைப் பார்த்தால், இன்னும் மோசம். உடல் சுத்தம், உடையும் பரவாயில்லை. ஆனால், தலையிலிருந்து கால் வரை தொங்கும் சடைமுடியிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. ஒருவித நாற்றம். மறுபடியும் காவலர்கள் கூறினார்கள். "தயவு செய்து, தலை, முகம் முழுவதுமாக மழித்துவிட்டு வாருங்கள். இந்த கோலத்தில் கோயில் உள்ளே அனுமதிக்க முடியாது".
ravi said…
பைராகி மறுத்தார். "என் நினைவு தெரிந்த நாள் முதல் நான் யாரையும் தொடுவதில்லை. என்னை மற்றவர் யாரும் தொடுவதையும் அனுமதிப்பதும் இல்லை. என்னால் முடி துறக்க முடியாது". காவலர்கள் கூறினார்கள், "அப்படியானால் எங்களாலும் உங்களை கோயில் உள்ளே அனுமதிக்க முடியாது.
ravi said…
மேலும் பேச்சு எதற்கு, என்ற நினைவுடன் பைராகி திரும்ப நடந்தார். மலை மீது ஏறி, தனியான ஒரு இடத்தில் அமர்ந்து கண்மூடி பகவானை பிரார்த்தித்தார். ‘நான் இதுவரை பல தலங்களுக்கும் கால்நடையாக சென்று இமயமலை முதல் ஆரம்பித்து, பல பிரதேசங்களில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறேன். திருமலைவாசா.! எனக்கு ஏன் இந்த சோதனை.? உன் தரிசனம் கிடைக்குமா?' ஒரு நாள் போயிற்று. மறுநாள் என கால நேரம் கடந்தது. அசையாது அமர்ந்திருந்தார்.
ravi said…
திருவேங்கடவன் பொறுப்பானா.? மனித உருவுடன் வந்து பக்தன் முன் நின்று, ‘அன்பனே! கண் திறந்து பார்’ என கூற, பைராகி பார்த்தார். தன் முன் ஒரு மனிதன் நிற்பதை. ஆனால் நல்ல களையான சிரித்த முகம். பளபளவென கருமையான சுருள் கேசம். தூய உடைகள். மெத்த படித்த மேதை, பண்டிதன் போல் கம்பீரமான தோற்றம்.
ravi said…
அந்த மனிதனை (பகவானை) பார்த்து "ஐயா! வணக்கம். நான் திருமலையப்பனை நினைத்து கண்மூடி தியானம் செய்து கொண்டிருக்கிறேன். மனித வாடை இல்லாத இடமாக, நான் தனித்து இருந்து தியானம் செய்கிறேன். இந்த இடம் எனக்கு நிம்மதி தருகிறது.
ravi said…
நீங்கள் தொந்தரவு செய்யாதீர்கள். தங்கள் கேசம் மிக அழகாக இருக்கிறது. உடையோ பளிச்சென மின்னுகிறது. உங்கள் முக வசீகரம் என்னை மயக்குகிறது. பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்களை கோயில் காவலர்கள் தடையில்லாமல் உள்ளே அனுமதிப்பார்கள். இப்போது நிம்மதியாக இன்று இரவு இங்கே ஓய்வெடுத்து விட்டு, காலையில் கோயில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வாருங்கள். என்னை தொந்திரவு செய்யாதீர்கள்."
ravi said…
பைராகி மறுபடியும் கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தார். பகவானும் மகிழ்ந்து, ‘அன்பனே!’ என மறுமுறை கூப்பிட, பைராகி "என்ன வேண்டும்? ஐயா!" என சலிப்படைந்தார். "காலையில் கோயிலுக்கு சென்று வாருங்கள், என சொன்னேனே. உங்களை தடையேதும் சொல்லாமல் அனுமதிப்பார்கள். போய் வாருங்கள்", படபடத்தார் பைராகி.
ravi said…
வந்த பகவானோ ‘கண்மூடி நீ என்னை கூப்பிடுகிறாய். உன் முன் வந்தால் ‘போ’ என விரட்டுகிறாயே. கண் மூடி என்னை கூப்பிடாமல் இருந்தால் நான் போய்விடுகிறேன்’, என சொல்லிவிட்டு மீண்டும் பகவான், பைராகி முன்னே வந்து நின்றார்.
ravi said…
பைராகி மூளை மட்டும் வேலை செய்தது. நான் கண் மூடி பகவானை கூப்பிடுகிறேன். என் முன் நிற்பது ஒரு மனிதர். மேலும் தொடர்ந்தார். "என் சடையையும் உடையையும் பார்த்து கோயில் காவாலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ஆனால் உங்களுடைய கம்பீரமான, தெய்வீகமான தோற்றத்தைப் பார்த்து, தடையேதும் சொல்லாமல் கோயில் உள்ளே அனுமதிப்பார்கள், என நினைத்து தான், உங்களை கோயிலுக்கு சென்று வாருங்கள் என கூறினேன். உங்களை இங்கிருந்து விரட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பகவானை தியானிக்க வேண்டும். என்னை மன்னியுங்கள்".
ravi said…
நான் மனிதனல்ல..நீ வணங்கும் திருமலை தெய்வம், என நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்’.

"பகவான் என்றால் நான்கு கைகள் இருக்க வேண்டும். சங்கு சக்கரம் வேண்டும், சுவர்ண கிரீடம் தரித்து, ஆபரணங்கள் மின்ன, பீதாம்பரதாரியாய் அல்லவோ காட்சி தர வேண்டும்". பைராகி படபடத்தார்.
ravi said…
என்னை வா! வா! என மனதுள் துதித்து, நேரில் வந்தவுடன் போ! போ! என வாயால் சொன்னால் எனக்கு உன் குறை என்னவென்று எப்படி தெரியும். பீதாம்பரதாரியாக காட்சி தர வேண்டும் அவ்வளவுதானே , இதோ இப்போதே பார் ", பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க உடன் சங்கு சக்கரதாரியாய், பீதாம்பரம் பளபளக்க காட்சியளிக்க, பைராகி அதிர்ந்து போய் மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்கி, தன் அறியாமையை மன்னிக்குமாறு வேண்டி நின்றார்.
ravi said…
அது போகட்டும். இப்போது என்ன வேண்டும். என்னால் முடிந்தால் செய்கிறேன்’. இது பகவானின் பேச்சு.

பைராகி இப்போது சிநேகபாவத்துடன் பேச ஆரம்பித்தார். "பகவானே! உன்னால் முடியாதது ஏதாவது உண்டா? ஏன் இப்படி நாடகம் ஆடுகிறாய்?"
ravi said…
"அன்பனே! உன்னிடம் உண்மையாகத்தான் பேசுகிறேன். உனக்கு பொய்யாமொழி புலவன், வள்ளுவன் குறள் ஒன்று சொல்லுகிறேன். கேள். ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’. பக்தனின் முயற்சிக்கு உழைப்புக்கு பலன் உண்டு. சிலசமயம் சிலவற்றை என்னாலும் (கர்மா) முடியாது என விட்டுவிடுவேன். அது பற்றி விவாதம் வேண்டாம், இப்போது ஏதாவது கேள். மறுபடியும் சொல்கிறேன். என்னால் முடிந்தால் செய்கிறேன்’.

பைராகிக்கு பகவானின் புதிர் புரியவில்லை.
ravi said…
பகவானே! உன் தரிசனம் கிடைத்தபிறகு எனக்கு வேறு ஏதும் தேவையில்லை. இந்த பிறவியின் பலன் கிடைத்துவிட்டது. மறுபடியும் நீங்கள் கேட்பதனால் ஒன்று கேட்கிறேன். இப்போது என்னை கோயிலுக்குள் அழைத்துச் செல். அங்கே உன் அர்ச்சாவதார அழகை காணவேண்டும். நிறைய பக்தர்கள் புடைசூழ உன் அழகை காண வேண்டும். இது உனக்கு சுலபமானது ஒன்றுதானே!’
ravi said…
பகவான் சிரித்தார். 'இப்போதுதானே சொன்னேன். என்னால் முடிந்தால் என்று. இப்போது கேட்டது என்னால் முடியாத ஒன்றுதான். இந்த இரவு நேரத்தில், கோயில் நடை சாத்தியபிறகு இல்லாத பக்தர்கள் கூட்டத்திற்கு என்ன செய்வது? சரி, நாளை காலை என்றாலும் யோசித்துப் பார். நான், உன் முன் சாதாரண மனிதனாய் தோன்றியபோது உடன் நீ நம்பவில்லை. சங்கு சக்கரதாரியாய் காட்சி அளித்ததும் நம்பிக்கை வந்தது. நான் சாதாரண மனிதனாய் கோயில் காவலாளிகளிடம் சென்றால், நிச்சயம் என்னை நம்ப மாட்டார்கள். சங்கு சக்கரத்துடன் சென்றாலும், அப்போதுகூட நாடக வேடத்துடன் வந்திருக்கும் நாடக மனிதன் என என்னை ஏசி விரட்டுவார்கள். ஏச்சும் பேச்சும் எனக்கு தேவையா? நான் இப்போது உனக்கு ஒரு வழி சொல்லுகிறேன். அது சம்மதமானால் அதன்படி நடக்கலாம்.'
ravi said…
பகவானே! சரி என சொல்வதைத் தவிர எனக்கு ஏதும் தோன்றவில்லை."

'சரி, இனி தினமும் இரவு பூஜை முடிந்தபிறகு, நடை சாத்திய பிறகு, இங்கு மலையில் நீ எங்கிருந்தாலும் அங்கு வந்துவிடுகிறேன். இரவு முழுவதும் உன்னுடன் இருக்க சம்மதிக்கிறேன். விடியற்காலை, நடை திறப்பதற்கு முன் நான் திரும்பிவிட வேண்டும். உன் சம்மதம் என்ன?'
ravi said…
பூரண சம்மதம். இந்த மலையை விட்டு நான் ஏன் இறங்க வேணும்."

மறுநாள் இரவு வந்தது. பகவானும் சங்கு சக்கரத்துடன், சுவர்ண கிரீடத்துடன் வந்தார். வரும்போதே ஒரு நாடகத்தை நடத்தும் முடிவுடன் வந்தார். (மாயவன்)
ravi said…
அன்பனே! நேற்று இரவு முழுவதும் என் முன்னால் அமர்ந்து, என்னைப் பார்த்து, மகிழ்ச்சியுடன் இருந்தாய்! இன்றும் அப்படி இருந்தால் எனக்கு சலிப்பாகவும், சுறுசுறுப்பு என்பதே இல்லாமல் போகும். நான் வரும்போதே இரவு காவலாளிகள், தூங்காமல் இருக்க, விழித்திருந்து விளையாட வைத்திருந்த சதுரங்க காய்களை எடுத்து வந்திருக்கிறேன். நாம் இருவரும் இந்த பெரிய பாறையில் அமர்ந்து விளையாடலாம்’ என கூறி பகவான் (மாய) நாடகத்தை ஆரம்பித்தார்.
ravi said…
பைராகியும் மகிழ்ச்சியுடன், "நான் இதுவரை காய் விளையாடியது இல்லை. ஆனாலும் பல கோயில் மண்டபங்களிலும், நதிக்கரை தங்குமிடங்களிலும் காய் விளையாடுவதைப் பார்த்து மனத்தளவில் பழகியிருக்கிறேன். பகவானே! வாருங்கள் விளையாடலாம். உங்கள் விருப்பமே என் பாக்கியம்."
ravi said…
சில நாழிகைகள் கடந்ததும், தான் நடத்த வந்த நாடகத்தின் அடுத்த பகுதியை ஆரம்பித்தார். ‘அன்பனே! உன் தலை சடைமுடி உனக்கு பாரமில்லை. ஆனால் என்னைப் பார், சொர்ண கிரீடம் என்றாலும் அதற்கும் ஒரு எடை உண்டல்லவா? அதன் சுமை தலையை அழுத்துகிறது. ஆபரணங்கள் சுமையும் கூடுகிறது. இவைகளை களைந்து, பக்கத்தில் வைத்திருந்து,
ravi said…
பிறகு காலையில் புறப்படும்போது, எடுத்துக் கொள்கிறேன்’, என கூறியவாறு மேல் அங்கவஸ்திரத்தை இரண்டாக மடித்துப் போட்டு, கிரீடம் முதல் எல்லா ஆபரணங்களையும் களைந்து வைக்க, பைராகியும் "இதை நானே சொல்லலாம் என நினைத்தேன். பகவானே! தாங்களே செய்துவிட்டீர்கள். தங்கள் விசாலமான முன்நெற்றியும், கருமையான கூந்தல் கற்றையும் கண்டு மகிழ வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், என்ற எண்ணம் வந்தது. கேட்டால், நீ மட்டும் உன்னுடைய முடியை சடையை களையமாட்டேன் எனக்கூறி, கோயில் வாசலிலிருந்து வந்து, வேகமாய் மலையேறினாயே, நான் மட்டும் ஏன் சுவர்ண கிரீடத்தை துறக்க வேண்டும் என நீங்கள், என்னை மடக்கி எதிர்க்கேள்வி கேட்டால் என்ன சொல்லுவது என பயந்தேன். இப்போது எனக்கு மிகவும் சந்தோஷம் தான் பகவானே
ravi said…
தான் நடத்தும் நாடகத்தில் பக்தனும் தன்னை மறந்து ஈடுபடுவதில் பகவானும் திருப்தி கொண்டு பொழுது புலரும் நேரம் வந்ததும், ‘ஆகா! நேரம் ஆகிவிட்டதே. கோயில் நடைதிறப்பதற்கு முன் போகவேண்டும்’ என எழுந்து நின்றவுடன் மறைந்து போனார்.
ravi said…
பைராகியும் அரைநொடி பிரமிப்புக்கு பிறகு, நிலைமையை உணர்ந்தார். கோயில் நடை திறந்ததும், பகவான் இடுப்பு வேட்டியுடன், எந்த ஆபரணமும், கிரீடமும் கூட இல்லாமல், ஏன் மேல் அங்கவஸ்திரம் கூட இல்லாமல் காட்சி தரும்போது. பெரிய குழப்பம் ஏற்படும், என உணர்ந்து, அவசர அவசரமாய் அந்த அங்கவஸ்திரத்திலேயே எல்லா ஆபரணங்களையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு, கீழே இறங்கி வேகமாக கோயில் வாசலை அடைய விரைந்தார்.
ravi said…
ஆனால் அதற்குள் கோயில் நடைதிறக்க, பெருமாள் கிரீடம், ஆபரணம் அனைத்தும் காணவில்லை. மேல் அங்கவஸ்திரம் கூட காணவில்லை. அதிலேயே அனைத்தையும் யாரோ கட்டி எடுத்துப் போயிருக்க வேண்டும். காவலர்களுக்கு ஒரே குழப்பம்.
ravi said…
அரச காவலாளிகள் பல திசையிலும் விரைந்தார்கள். முக்கியமான வீரர்கள் இருவர் குதிரையில் விரைந்து அரசரிடம் தெரிவிக்க பறந்தார்கள். பொதுமக்கள், பக்தர்கள் எவருக்கும் இந்த செய்தி தெரியாமல் இந்த தேடுதல் வேட்டையை தீவிரமாக்கினார்கள்.
ravi said…
கோயில் வாசலில் பெருமாள் வஸ்திர மூட்டையுடன் பைராகியை பார்த்ததும், காவலாளிகள் விரைந்து சூழ்ந்து கொண்டார்கள். கையும் களவுமாக பிடித்துவிட்டோம் என அவர்கள் சந்தோஷப்பட, பைராகியின் பாடு திண்டாட்டமாகி விட்டது. பெருமாள் அவசரத்தில் விட்டுவிட்டு வந்த ஆபரணங்களை கொண்டு வந்து கொடுக்க வந்தேன், என எல்லா விபரங்களையும் பைராகி சொல்ல, காது கொடுத்து கேட்க ஆளில்லை.
ravi said…
பெருமாளாவது நேரில் வருவதாவது. ஏதோ மாய மந்திரம் செய்து திருடிவிட்டு, அகப்பட்டுக் கொண்டவுடன் கதை சொல்லுகிறார். பெருமாள் தன் ஆபரணங்களை பத்திரமாக இவரிடம் கொடுத்தது போலும், இவர் காலையில் திரும்பக் கொடுக்க வந்தது போலவும் பேசுகிறாரே! பல பல கூக்குரல்கள் காவலாளிகள் மத்தியில். பைராகியின் வார்த்தையை கேட்க ஆளில்லை.
ravi said…
ஆபரணங்களை சரிபார்த்து, கோயில் உள்ளே சேர்த்த பிறகு, பைராகியை கோயில் முன் இருந்த பண்டார அறை ஒன்றை காலி செய்து சிறை வைத்தார்கள். இரவு வந்ததும், காவலாளிகள் இருவர் மட்டும் பைராகியின் வார்த்தைகளை கேட்டு, இவர் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். பல வருடங்கள் எல்லாவற்றையும் துறந்து, சடைமுடியுடன் திரியும் இவர் ஏன் திருடப்போகிறார்? இவரால் எப்படி பல காவல்களை மீறி, பூட்டிய கோயில் உள்ளே செல்ல முடியும்? அந்த இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பைராகி மீது அனுதாபம் ஏற்பட்ட பின் இரவில் பைராகியுடன் பேச்சுக் கொடுத்து, ‘பெரியவரே! நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். ஆனால், பல காவலாளிகள் உங்கள் கையில் இருந்த ஆபரண மூட்டையை பார்த்து, கையும் களவுமாக பிடித்ததாக சொல்லி வருகிறார்கள்
ravi said…
அரசர் நாளை வந்ததும், சந்தர்ப்ப சாட்சிகள் உங்களுக்கு பாதகமாக இருப்பதால், அரச தண்டனை, அநேகமாக மரண தண்டனையாகக் கூட இருக்கலாம். பெருமாள் நேரில் வந்து சாட்சி சொல்வாரா என தெரியாது. ஏதும் புரியவில்லை. நீங்கள் சொன்னது போல், இன்று இரவு நிச்சயம் உங்களை தேடி பெருமாள் விளையாட வருவார். ‘பெருமாள் வந்ததும் இதோ இருக்கும் இந்த மொத்த கட்டு கரும்புகளை சாப்பிடச் சொல்லுங்கள்.
ravi said…
பார்ப்போம், உங்கள் பெருமாள் சாப்பிடுகிறாரா’ என்று. கோபமாக சத்தமிட்டு சென்றாரே தலைமை காவலர், அவர் அதட்டலுக்காக, பெருமாள் ஏதும் செய்யப் போவதில்லை. ஆனால், நீங்கள் கேட்டுக் கொண்டால் ஏதும் நடக்கலாம். நாங்கள் இருவர் மட்டும்தான் இரவு காவல். பெருமாள் வரும்போது கட்டு கரும்புகளை சாப்பிடச் சொல்லுங்கள். நாங்கள் சாட்சி சொல்கிறோம். பெருமாள் எல்லோர் முன்பாக வருவார் என எதிர்பார்ப்பது சரியில்லை. புண்யபலன் இருந்தால் தரிசனம் கிடைக்கும். நீங்கள் ஆகாரம் ஏதும் வேண்டாம் என கூறிவிட்டீர்கள். நாங்கள் வாயிலில் காவல் தொடர்கிறோம்’. காவலர்கள் சென்றார்கள்
ravi said…
இரவு வந்தது. பைராகி முன் பெருமாள் பிரசன்னமானார். பைராகி வணங்கி வரவேற்றார். நடந்ததை முழுவதுமாக விபரித்துவிட்டு, "பகவானே! நான் இவர்களிடம் ஏதும் வாதம் செய்யப்போவது இல்லை. மரணத்தைப் பற்றி கவலை இல்லை. உன் தரிசனம் கிடைத்தபிறகு எனக்கு ஏதும் தேவையில்லை.
ravi said…
ஒரு வருத்தம் மட்டும் உண்டு. பகவான் பிரசன்னமாவார் என்பதை யாரும் நம்பவில்லை. கோயில் விக்ரகத்தில் மட்டும் தான் உன்னை காண முடியும் என்றும், மற்றபடி உன்னை உணர முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள். உன் தரிசனம் கிடைக்கப்பெற்ற எனக்கு ஏன் திருடன், பொய்யன் என பெயர் வருகிறது. மரண தண்டனை நிறைவேற்றினால் திருடன் என்ற பெயர் மட்டும் நிலைபெற்று விடும். என்ன தவறு செய்தேன் இந்த அவப்பெயர் வருவதற்கு?"
ravi said…
ஒரு வருத்தம் மட்டும் உண்டு. பகவான் பிரசன்னமாவார் என்பதை யாரும் நம்பவில்லை. கோயில் விக்ரகத்தில் மட்டும் தான் உன்னை காண முடியும் என்றும், மற்றபடி உன்னை உணர முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள்.
ravi said…
உன் தரிசனம் கிடைக்கப்பெற்ற எனக்கு ஏன் திருடன், பொய்யன் என பெயர் வருகிறது. மரண தண்டனை நிறைவேற்றினால் திருடன் என்ற பெயர் மட்டும் நிலைபெற்று விடும். என்ன தவறு செய்தேன் இந்த அவப்பெயர் வருவதற்கு?"
ravi said…
அன்பனே! அனாவசியமாக கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே. இப்போது, நேற்று போல் முதலில் சொக்கட்டான் விளையாடுவோம்.'

பைராகிக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஒரு ஈடுபாடும் இல்லாமல் காய்களை நகர்த்தினார். பெருமாள் நடுசாமத்தில் மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார். 'உனக்கு நான் ஏதாவது செய்யவேண்டுமானால் சொல். என்னால் முடிந்தால் செய்கிறேன்.'
ravi said…
பைராகி விரக்தியாய் சிரித்தார். "பகவானே! உன்னை தரிசித்த பிறகு எனக்கு ஏதும் வேண்டாம் என முன்பு சொன்னேன். ஏதாவது கேள் என சொல்லி, நான் கோயில் உள்ளே வந்து உன் அர்ச்சாவதார உருவை காண வேண்டும் என்றேன். அவர்களிடம் போய் நான் ஏதும் கேட்கமுடியாது என ஏதோ காரணங்களை கூறி மறுத்து விட்டாய். பிறகு நடந்ததெல்லாம் தெரிந்த விஷயம்தானே. நான் எதை கேட்பது? அது உன்னால் முடியும், முடியாது என எனக்கு ஏதும் தெரியாது. உன்னை மறுமுறையும் சங்கடத்தில் ஆழ்த்த என் மனம் சம்மதிக்கவில்லை."
ravi said…
கேட்பது உன் உரிமை. முடியும் முடியாது என்பதை தெரிவு செய்வது என் கடமை. உன் முயற்சியை ஏன் நிறுத்த வேண்டும். எது வேண்டுமோ அதை கேள்.'
ravi said…
காவலர்கள் சொன்னது ஞாபகம் வர, "இங்கு காவல் புரியும் இரண்டு காவலர்கள் மட்டும் உன்னையும், கூடவே என் வார்த்தைகளையும் நம்புகிறார்கள். இதோ அறைக்கு வெளியே இருக்கும் கட்டு கரும்புகளை பகவானை சாப்பிடச் சொல். நாங்கள் உனக்காக சாட்சி சொல்கிறோம், என்றார்கள். உனக்கு பக்குவமாக தோல் சீவி, சிறு துண்டுகளாக ஏதோ கொஞ்சம் கரும்பு கொடுத்தால், அது சரி. அதை விடுத்து மொத்த கட்டு கரும்பை சாப்பிடு என சொல்ல எனக்கு நா எழவில்லை. எனக்கு தண்டனை எது கிடைத்தாலும் பரவாயில்லை. உன்னை சிரமப்படுத்த எனக்கு துளியும் விருப்பம் இல்லை.
ravi said…
கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே’ எனச் சொன்ன உனக்கு எது சரியோ, அதுவே எனக்கும் சரி."
‘கட்டு கரும்பை சாப்பிட வேண்டும். இது சுலபமானதுதானே. மறுபடியும் சொல்கிறேன். கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே’. பொழுது புலரும் நேரம். அறைக்கு வெளியே வந்த பகவான் பெரிய யானை உருவம் எடுத்தார். கரும்பு கட்டுகளை லாவகமாக துதிக்கையால் அவிழ்த்து, கரும்புகளை முறித்து சாப்பிட ஆரம்பித்தார். பைராகி மெய்மறந்து, கைகூப்பி நின்றார். சிறிது நேரத்தில் கரும்பு கட்டுகள் காலி. சந்தோஷத்தில் யானை வேகமாய் பிளிறியது. காவலர்கள் எழுந்து பார்த்தார்கள். பூட்டிய கம்பிக்கதவுகளுக்கு உள்ளே யானை நிற்பதையும், கரும்பு கழிவுகள் சிதறியிருப்பதையும் பார்த்து, பகவான் தான் யானை உருவில் வந்து கரும்புகளை சாப்பிடுகிறார், என உணர்ந்து அப்படியே அதிர்ந்து அரை மயக்கத்தில், கீழே விழுந்து வணங்கினார்கள்.
ravi said…
அரசர் மலை ஏறி வரும் ஆரவாரம் தெரிந்தது, உடனே ஓடி, அரசரிடம், 'பிடித்து வைக்கப்பட்டவர் திருடர் இல்லை. பகவானின் பரம பக்தர். பகவான் அவர் வேண்டுகோளுக்கு இணங்க, யானை உருவம் எடுத்து கரும்பு கட்டுகளை சாப்பிடுகிறார். உடனே வாருங்கள்', என முழு விபரமும் தெரிவித்தனர்.
ravi said…
அரசரும் அவசரமாய் ஓடி வந்து பைராகி சிறை வைத்திருக்கும் இடம் வந்து பார்த்தார். அங்கு யானையைக் காணோம். ஆனால், கரும்பு கழிவுகளும், யானை லத்தியும் அங்கும் இங்கும் சிதறி கிடந்தன. எல்லாவற்றையும் நொடியில் புரிந்து கொண்டு பைராகியை பார்த்து, தன்னை மன்னிக்கும்படியும், தானே அவரை கோயில் உள்ளே பெருமாளை தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாய் கூறினார். பொழுது புலர்ந்த நேரத்தில், ராஜமரியாதையுடன் அரசர், அவர் பரிவாரம் சூழ பைராகி கோயில் வாசல் வந்ததும் அசரீரி ஒலித்தது.
ravi said…
மன்னனே! உன் காவலர்கள் இருவர் மட்டும் நான் நேரில் வருவேன் என நம்பி, என் பரம பக்தனின் வார்த்தைகளையும் நம்பினார்கள். அவர்களுக்கு யானை உருவில் தரிசனம் தந்தேன். மன்னனே! என் கட்டளைகள். முதலாவது, என் பக்தன் இனி காலை கோயில் நடை திறந்ததும், இரவு அர்த்தசாமம் வரையிலும் எப்போது வேண்டுமானாலும் தங்கு தடையில்லாமல் வந்து என்னை தரிசனம் செய்யலாம்.
ravi said…
அடுத்து, அரசு நைவேத்தியம் காலையில் முதலில் எனக்கு சமர்ப்பிக்கப் படுகிறது. அதற்கு முன் இந்த பக்தன் எது கொடுத்தாலும், அது காயோ, கிழங்கோ, பாலோ, பழமோ அதுதான் எனக்கு முதல் நிவேதனம். முடிவாக, என் சந்நிதி முன்பாக வலதுபுறம் இருக்கும் மேட்டில் இந்த பக்தன் தங்க வசதி உன்னால் செய்து தரப்பட வேண்டும்.'
ravi said…
மன்னன் பரவசத்துடன் , கூடியிருந்தவர்கள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் சொன்னான். ‘பகவானே! உன் தரிசனம் கிடைக்கவில்லை. வருத்தம்தான். ஆனாலும் உன் கட்டளைகளை காதால் கேட்டு நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததில் மிக மிக சந்தோஷம்’. உடனே பகவான் கட்டளையை நடைமுறைப்படுத்தினான், அரசன்.
ravi said…
இன்றும் ‘ஹாதிராம் பாபா மடம்’ என்ற பெயரில் பெரிய கட்டிடத்தை கோயிலின் வலது பக்க மேட்டில் காணலாம். பல பசுக்கள் அங்கு கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன. இன்றும் விடியற்காலை திருமலையப்பனுக்கு முதல் நிவேதனமாக அந்த மடத்திலிருந்து ‘பசுவெண்ணை’ தினமும் மேள, தீப (தீவட்டி) மரியாதையுடன், சமர்ப்பிக்கப்படுகிறது.

ஸ்ரீ கோவிந்தா..!
ஓம் நமோ நாராயணா..!
ravi said…
*திருமாலை*

*திவ்ய பிரபந்த தொடர்*
@mahavishnuinfo

விரும்பிநின்று ஏத்தமாட்டேன், விதி இலேன் மதி ஒன்று இல்லை* இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை-இறை உருகும்வண்ணம்* சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட* கரும்பினைக் கண்டுகொண்டு, என் கண்ணிணை களிக்குமாறே! 17

“பகவானைப் பற்றிச் சிந்திக்காமலும், அவனை வணங்காமலும் இரும்பு நெஞ்சம் கொண்டிருந்த என்னை மெது மெதுவாக உருக்கி அவனைத் துதிக்கும்படி செய்தான். வண்டுகள் அமரும் சோலைகளுள்ள அரங்கத்தில் கோவில் கொண்டிருக்கும் கரும்பு போன்ற அரங்கனைக் கண்டு என் கண்கள் களிப்பில் மூழ்கின” என்று ஆழ்வார் கூறுகிறார்.

*நாளை தொடரும் பாடல் 18*
ravi said…
“ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்”
ஹயகிரீவர் கல்வி மற்றும் ஞானத்தின் கடவுளாய் இருந்தாலும், சம்ப்ரதாயத்தில் “ஞானப்பிரான்“ என்றால் நம் வராகனே.
பன்றிஆழ்வானின் திருவடிவை வர்ணிக்கும் பொது அவன் திருவடியில் சாற்றிய கழல்வளையை பற்றி கூறியே ஆகவேண்டும்.
ravi said…
நல்ல ஒலிகளை எழுப்ப கழல்வளையில் கற்களை இடுவது வழக்கம். நம் பன்றிஆழ்வனின் கழல்வளையிலோ, கற்களுக்கு பதிலாக விந்த்யமலை, இமயமலை,மேருமலை போன்ற மலைகள் இருந்தனவாம். அப்படியென்றால் அவன் தன் திருவடிவை எண்ணிப்பாருங்கள்…
பெருமாள் சன்னதிகளில் உற்சவங்கள் தொடங்கும்போது செய்யப்படும் அங்குரார்பன கைங்கர்யத்தின் பொது ம்ரித்சங்கரணம் செய்யப்படும். பாலிகை வளர்க்க மற்றும் யாகசாலை நிர்மாணம் செய்ய ஊரின் வடகிழக்கு திசையில் இருந்து மண் எடுத்து வருவார்கள். அப்போது மண்ணில் பூ-சூக்தம் ஜெபித்து கிளைக்கொத்தில் வராகனையும் ஆவாகனம் செய்து, மண்ணை இடந்து வருவார்கள். இந்த நிகழ்வு நமக்கு இப்படித்தானே அன்றும் வராகன் பூமியை இடந்திருப்பான் என்று தோன்றும்…

திருமாலின் பத்து திருவவதரங்களில்,
“நான் கண்ட நல்லதுவே “
என்று நம்மாழ்வார் வராகனை புகழுகிறார்.
திருவரங்கத்தில், முகலாய படையெடுப்பின் பொது நம்பெருமாள் மண்டப திருவராதனதுக்காக பன்றிஆழ்வன் சன்னதில் வீற்றிருந்தார். பெருமாளுடன் “12000″ ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமி இருந்தனர். படையெடுப்பை அறிந்த பெரியோர்கள் நம்பெருமாளை பல்லக்கில் எழுந்த்ரருளப் பண்ணிக்கொண்டு போய்விட,
ravi said…
“12000″ ஸ்ரீவைஷ்ணவர்களோடு தன்னையும் அழித்துக்கொண்டு நம்பெருமாளை காத்துக்கொடுதான் நம் பன்றிஆழ்வான் .
“அகம் ஸ்மராமி…” என்று அவன் அளித்த சரமச்லோகம் நமகெல்லாம் பெரும் நம்பிக்கையை தருகிறது…..
Hemalatha said…
நன்றி சார்.எல்லா செயலிலும் தங்கள் பங்களிப்பு தனித்துவமானது.
ராம் ராம்🙏🙏🙏
Hemalatha said…
நீ உன் நண்பனை சொல்,உன்னை யாரென்று நான் சொல்கிறேன் அப்படினு சொல்லுவாங்க.we are all proudly say Ravi sir is our friend.🙏🙏
Hemalatha said…
நான் என் friends கிட்ட உங்களை பற்றி சொன்னேன். உங்கள் எழுத்து திறமையை பற்றி .பெருமையாக😊
Hemalatha said…
ஒருத்தி சொன்னால் கலியுகத்தில் இப்படியும் ஒரு நபர் உண்டா என்று.10லட்சம் பற்றி தெரிந்ததும்
ravi said…
Some people say that Lord Shiva is very difficult to please, others call him Bholenath. What is your opinion?
ravi said…
Bholenath is the most loved name of Shiva. The name specifies the Simplicity of Shiva who gets easily pleased by just offering a Bilva leaf and water pouring on Lingam.

शिवाया रूपम् अति ललितम्

Bhole means Simple, and Nath means king. Bholenath means the king of innocence and grace. Shiv is known as the greatest giver and benevolent.

Lord Shiva is the limitless, omniscient, greatest transformer Supreme Consciousness, Lord of Lords who is known by the name of Mahadev.
ravi said…
Following are the examples for his kindness: -

At the time of cosmic ocean crunching; everyone took the luxury item. Shiva was the only one who took poison for himself to protect the universe from the adverser effect of the cosmic poison Halahal. He drank it for protecting all of us; these qualities of Shiva can make you fall in love with him.
ravi said…
Learning and knowing those simple but effective qualities can fill anybody life with blissfulness. Worshipping Shiva is like surrendering to the auspiciousness and adapting all the grace of life.
ravi said…
Shaktipati Shiva is kind, emotional, innocent, Guiltless, supernatural, shapeless cosmic phenomena. The one who knows how to give equal respect to his consort, Goddess Parvati. Now, this makes sense why every unmarried girl wants a husband with virtues and qualities of Maheshwar Shiva.

Gyaneshwara, Shambhoo is the founder of various art skill and the transcendent teacher of Parashurama and SaptRishis. He is the biggest giver in all aspect.
ravi said…
He accepts everyone including venomous snakes to Ghost, demon, humans, nature. Ravana was one of greatest devotee of Shiva who created shiv tandav stotra in reverence of Shiva.

Ram Naam resides in the heart of Shiva and Shiva is kind for everyone and sees everyone on common bases without differentiating in their Karmas.

Shiva as Bholenath is a husband, a father, a Teacher, a friend you can connect with him in his any morph.

The problem of the east is that they know only one morph of Shiva which is The ultimate Hindu God of destruction whereas Shiva is much more than that.
ravi said…
In the epics of India, why is Lord Ram not worshipped during the time of Lord Krishna? Lord Ram existed long before Lord Krishna. When did Ram become Lord Ram? Did people start worshipping Ram in later years?
ravi said…
Okay, let me try to answer the three questions posed.

Answer One: As far as Shri Rama is concerned, he was indeed worshipped during the time of Lord Krishna. We have various Rishis explaining the avatar of the Supreme Raghunatha in many places of the Mahabharata.

Answer Two: YES, Lord Rama was an earlier avatar. He was always Lord Rama, even as early as the event after the thunderous breaking of Lord Shiva’s bow, Parashurama recognizes Dasharatha Rama as none other than the immutable Supreme Parabrahmana.

Answer Three: The Bhaktavatsala Raghunatha was and is always worshipped, during his stay on earth and after as well.

Please Remember: There is no greater God than Lord Rama and no greater mantra than Rama Nama.
ravi said…
Parameshwara Mahadeva was already worshipped since ages just like Supreme Lord Parameshwara Paramatma Narayana. All devas worshipped him during Samudra Manthan. Bhagwan Shri Parshuramji worshipped him for weapons and military arts. Many devas, Danavas, Danavas and Brahmarishishis like Vishwamitra worshipped Mahadeva for innumerable boons. Arjuna too worshipped Mahadeva for Pashupatastra. There are hundreds of such cases which can't be mentioned in a single answer….Parameshwara Shriman Narayana and Parameshwara Mahadeva are one and same.
ravi said…
ஒருத்தன் எனக்கு 1000 ரூபாய்க்கு 'செக்' குடுத்தான். வாங்கி பேங்க்ல போட்டேன்.

சரி.....

அது கையெழுத்து சரியில்லேன்னு ரிட்டர்ன் ஆகிப் போச்சு.

சரி....

பேங்க்லேருந்து மெசேஜ் குடுத்தான், 354 ரூபாய் பிடிச்சிக்கிட்டோம்னு. அதென்ன 354 ரூபாய்னு பேங்க்ல போய் கேட்டேன்.

என்ன சொன்னாங்க?

300 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜூ, 54 ரூபாய் GST ன்னான்.

அடப்பாவிகளா...
ravi said…
நீ டென்ஷனாயிடாமக் கேளு,
300 ரூபாயே பெரிய கொள்ளை.
அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்.

என்னாச்சு...

அவன் உடனே வந்து 1000 ரூபாய குடுத்துட்டான். குடுத்துட்டு அவன் சொன்னான். எனக்கு 472 ரூபாய பிடிச்சிட்டாங்க சார்னு.

எப்படி?

அவன் பேங்க்ல 400 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜாம். அதுக்கு 18% GST 72 ரூபாய். ஆக...472 ரூபாயாம்.

அட அநியாயமே,

1000 ரூபாய் வரவு, செலவுல ஒரு சிறு தவறுக்கு ரெண்டு பேருக்கும் அபராதம் 926 ரூபாய்.
ravi said…
ஒரே செக்குக்கு ரெண்டு இடத்தில் ஃபைன் வித் ரெண்டு GST. இதுக்கு பேரு டிஜிடல் தேசமாம், நாடு முழுதும் ஒரே வரியாம். நம்மள எவ்வளவு கூமுட்டை ஆக்குறாங்கன்னு நினைச்சு, நினைச்சு பிரஷ்ஷர் 190க்கு போயிருச்சு. அதான் ஆஸ்பத்திரிக்கு போயி செக் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்.

சரி.. சரி.. டென்ஷனாகாதீங்க, ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வந்துடறேன். லேட்டானா ரேட்டை ஏத்திப்புடுவானுங்க பாவிப் பசங்க.

இதைத்தான் அன்றே பிசிராந்தையார்
புறநானூறு பாடலிலே பாடியிருக்கிறார் போலும்.

அப்பாடலினை படித்து பார்த்தால் தான் அதன் அர்த்தம் விளங்கும்,
இதோ அப்பாடல்,
ravi said…
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பாடியவர்: பிசிராந்தையார்
– புறநானூறு_184
ravi said…
இதன் விளக்கம்:

மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து, உணவுக் கவளங்களாக்கி, யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும்.

ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதை விட, யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

ravi said…
அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து, மக்களிடமிருந்து வரி திரட்டினால், நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.

ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், அநியாயமாக வரியை திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போல, தானும் கெட்டு, தன் நாட்டையும் கெடுப்பான்.

இப்போது புரிகிறதா!!!!
நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசிகள் என்று,
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 25* 🌷🌷🌷🌷🌷
ravi said…
*துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்* .

அசையும் இடையில் சுடர்வீசும் ஒளிகொண்ட பட்டாடையும்.

*நவரத்னம் பதித்த நற்சீராவும்.*

நவரத்தினங்கள் பதித்த நல்ல கவசமும்.

*இருதொடை அழகும் இணை முழந்தாளும் திருவடி அதனில் சிலம்பொலி முழங்க.*

இரு அழகிய தொடைகளும் இணையாக இருக்கும் முழந்தாள்களும் (கொண்டு), திருவடிகளில் அணிந்த சிலம்பில் இருந்து எழும் ஒலி முழங்க.

*செககண செககண செககண செகண*

*மொகமொக மொகமொக மொகமொக மொகென*

*நகநக நகநக நகநக நகநக நகென*

*டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண*

*ரரரர ரரரர ரரரர ரரர*

*ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி**

*டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு*

*டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு*

சிலம்பொலி இப்படி எல்லாம் ஒலியெழுப்ப விரைந்து.

*விந்து விந்து மயிலோன் விந்து*

உலகங்களுக்கெல்லாம் வித்தாக இருக்கும் மயிலோன்.

*முந்து முந்து முருகவேள் முந்து.*

விரைந்து விரைந்து முருகவேள் (எனைக் காக்க) விரைந்து (வருக)👍👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 187*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 26

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.

कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं

गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।

समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-

नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६

கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்

க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।

ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-

நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
பரமேஸ்வரனுடைய திருவடியை சேவிக்கறதோட பேரின்பத்தை வர்ணிக்கறார்.

“‘ *ஹே கி³ரிஶ* ’ – மலையில் வசிப்பவரே!,

*‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ –*

உங்களை தர்சனம் பண்ணி… ‘ *தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ –*

உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்..

‘ *ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ –* கைகளால் பற்றிக்கொண்டு…

‘ *ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ –*

தலையிலயும், கண்கள்லயும், மார்புலயும் வெச்சுண்டு…

‘ *ஸமாஶ்லிஷ்ய’ –* இறுகக் கட்டிண்டு,

*‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய* ’ –

நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களுடைய வாசனையை முகர்ந்து,

‘ *ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’* – பிரம்மாதி தேவர்களுக்கும் கிடைக்காததான..

‘ *முத³ம்’* – இப்படி அந்த பாதத்தை அனுபவிக்கற அந்த சந்தோஷத்தை…

*‘கதா³ வா அநுப⁴விஷ்யாமி’ –*

நான் எப்ப அனுபவிக்கப் போறேன்?”

அப்படீன்னு சொல்றார்.👣👣👣👣
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 189* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ravi said…
ஆனால், நீ ஒரு லீலை செய்யத் திருவுள்ளம் பற்றியபின் அதை எங்களால் மாற்ற இயலாது.

எனவே நீ பாற்கடலில் ஓய்வெடுத்துக்கொள்.

உன்னருளால் நான் படைப்புத் தொழிலைச் செய்கிறேன்.

நாங்கள் துன்பப்படும் போதெல்லாம் உன்னை அண்டிப் பூமியில் பிறக்குமாறு பிரார்த்திக்கிறோம்!” என்று கூறினார்.

இவ்வரலாற்றைத் தர்மராஜனுக்குச் சொன்ன பீஷ்மர், “மனிதனைப் போலப் பிறந்து துன்பப்படவேண்டும் என்று
பிருகு தந்த சாபத்தை ஏற்று, பிரம்மாதி தேவர்கள் பாற்கடலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும் போதெல்லாம்
திருமால் பூமியில் அவதாரம் செய்கிறார்!” என்று சொல்லி முடித்தார்.
ravi said…
Mahadev

I know that iam not perfect , I know sometimes i forget to pray

I know I have questioned my faith , I know sometimes i lose my temper , but thank you for loving me unconditionally and giving me another day to start over again
ravi said…
மாதேவா ....மாதேவா
மாதேவா ....மாதேவா

மா தேவா ....மா தேவா

மா தேவா ....மா தேவா


சோஜூகாதா சூடும் மல்லியே
மகாதேவா ...உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

சோஜூகாதா சூடும் மல்லியே
மகாதேவா ...உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

பாலாயிரம் பூவின் வகைகளும்
தொடுத்தே ஒரு மாலை
துளசியும் தூய நறுமுகையும்

மகாதேவா ...உனக்கே


செந்தாமரை தாழும் சேர்த்து
செங்கமல மாலை அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு

மகாதேவா ...உனக்கே

சோஜூகாதா சூடும் மல்லியே
மகாதேவா ...உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே





ravi said…
ஆர்க்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சர்க்கரை நாரத்தை பறித்து

மாதேவா ...உனக்கே
அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
படைத்தேனே மாதப்பா
உன் நாமம் துதிக்க ஒன்றானோம்

மாதேவா ...உனக்கே

சோஜூகாதா சூடும் மல்லியே
மகாதேவா ...உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே





ravi said…
அர்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவ ...தேவா

ஆழ்க்கொண்ட சபலம் தீர எப்போதும் உன் நாமம் சொல்வேனே தூய பரம்பொருளே

மாதேவ ...தேவா

சோஜூகாதா சூடும் மல்லியே
மாதேவா ...உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
ravi said…
Maadeva..
Maadeva...
Maadeva..
Maadeva...
ravi said…
(Maadeva meaning Lord Shiva)
ravi said…


Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers


Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Andaavare mundaavare matte taavari pushpa

And then various types of Lotus flowers

Chandakki maale bilpatre maadeva nimge

And a beautiful garland of Vilva leaves, O Mahadeva

Chandakki maale bilpatre tulasi dalava

A beautiful garland of Vilva and Tulsi leaves

Maadappna poojege bandu maadeva nimma

O Mahadeva, I came to your worship

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Tappaale belagivnee tuppaava kaaisivni

I have washed and polished the vessel, with warm Ghee

Kittaale hanna tandivni maadeva nimge

I have brought oranges for you

Kittale hanna tandivni maadappa

Lord Shiva, I have brought oranges for you

Kittaadi baruva parasege maadeva nimma

To your festival where people flock

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Bett hatkondu hogorge hatti hambalavyaaka?

Why should those who climb the mountains aspire to have a house?

Bettad maadeva gatiyendu maadeva neeve, Maadeva Neeve...
Maadeva Neeve, Maa aaaa deva neeve...

Submitting to the lord of the mountain as their ultimate resort

Bettad maadeva gatiyendu avarinnu

Lord Shiva, Submitting the mountain as their ultimate resort

Hatti hambalava maretaaro maadeva nimma

Perhaps they will now forget their mundane aspirations

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Uchchellu hoovinhange hechchevo ninna paruse

We have flocked for your festival of the flowers

Hechchaalagaara maadayya, maadayya neene

O Lord Shiva, you are the greatest

Hechchaalagaara maadayya elumaleya

O Lord of seven hills, you are the greatest

Hecchevu koudalli kaniveli maadeva nimma

O Lord Shiva, we have flocked to the Koudalli valley for your festival

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head

Maadeva maadeva maadeva maadeva

Lord Shiva, Lord Shiva

Sojugaada sooju mallige

I offer various types of Jasmine flowers

Maadeva nimma mande myaale dundu mallige

Lord Shiva, I will place them upon your head
Show less
ravi said…
🌹🌺 *ஒருவன் இறைவனுக்குத் தொண்டு செய்யாமல் தன்னைத் தானே உணர்ந்துக் கொள்வது சரியாகுமா?... விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺திருவரங்கத்தில் நம்பிள்ளையின் திருவாய்மொழி காலட்சேபம் மிகவும் பிரசித்தியானது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் நம்பிள்ளையின் விளக்கங்களைக் கேட்பதற்காகத் திருவரங்கத்துக்கு
அடியார்கள் வருவது வழக்கம்
ravi said…
🌺ஒருசமயம் முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழியின் பொருளை
நம்பிள்ளை விளக்கிக் கொண்டிருந்தார். அதில் ஐந்தாவது பாசுரம்,

🌺“அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே”🌹

🌺என்பது. இதற்கான விளக்கத்தை வெகு சிறப்பாக நம்பிள்ளை அளித்தார்.

🌺 *விளக்கம்* – மிக உயர்ந்த லட்சியமான இறைவனின் திருவடிகளை அடைந்து தொண்டு செய்ய நினைத்தால்,
அற்று இறை பற்றே – இதர விஷயங்களில் பற்றற்றவனாக இறைவனைப் பற்றிக் கொள்.
ravi said…
🌺ஜீவாத்மா இறைவனுக்கு சரீரம், இறைவன் ஜீவாத்மாவுக்குள்ளும் ஆத்மாவாக உள்ளான் என உணர்ந்து
அவனைத் தஞ்சமாகப் பற்று.” இவ்வாறு நம்பிள்ளை கூறியவாறே, கூட்டத்திலிருந்து ஒரு பண்டிதர் எழுந்தார்.

🌺“எந்தப் பற்றும் இல்லாத நிலைதானே முக்தி? அப்புறம் ஏன் இறைவன் மேல் பற்றுக் கொண்டு அவனைத் தொழ வேண்டும்?

🌺நாம் இந்த உடல் இல்லை, ஆத்மா என உணர்ந்து கொண்டபின்,
நாம் ஏன் இறைவன் என்ற யாரோ ஒருவனுக்கு உடலாக இருக்க வேண்டும்?
ஜீவாத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டால் போதாதா?” என்று கேட்டார்.
ravi said…
🌺அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “சுவாமி! உங்கள் கூற்று நன்றாகத்தான் இருக்கிறது.
ஆசைகளை விடுத்தவாறே ஆத்மா முக்தியடையும். அதில் சந்தேகமில்லை. அதற்குக் ‘கைவல்யம்’ என்று பெயர்.

🌺தனிமையில் ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்ளும் நிலை அது. ஆனால் அது உயர்ந்த லட்சியமில்லை.
ஏனெனில் அனைத்து ஜீவாத்மாக்களும் இறைவனின் சொத்து. அவனுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவை.
ravi said…
🌺அவ்வாறிருக்க ஒருவன் இறைவனுக்குத் தொண்டு செய்யாமல் தன்னைத் தானே உணர்ந்துக் கொள்வது சரியாகுமா?

🌺ஊதியம் கொடுக்கும் முதலாளிக்காக உழைக்காமல், அவரது அலுவலகத்திலே அமர்ந்து கொண்டு
நமது சொந்த வேலையைச் செய்துகொள்வது போன்ற செயல் அது.

🌺அறிவற்ற பொருட்கள் தொடங்கி அறிவுள்ள ஜீவாத்மாக்கள் வரை அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்று வேதம் கூறுகிறது.
எனவே இந்த உடல் எப்படி ஜீவாத்மாவின் நியமனத்துக்கேற்ப நடக்கிறதோ,
அவ்வாறே ஜீவாத்மா தனக்கு உயிராக இருக்கும் பரமாத்மாவின் நியமனப்படி அவனுடைய ஆனந்தத்துக்காகச் செயல்பட வேண்டும்.
ravi said…

🌺பிரம்மாவின் பதவியைப் பெற விரும்புபவன் இந்திர பதவியைக்கூட விரும்ப மாட்டான்.
ஆத்மானுபவத்தை விரும்புபவன் பிரம்மாவின் பதவியைக் கூட விரும்பமாட்டான்.

🌺அதுபோல அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய இறைவனை அடைய நினைப்பவன் ஆத்மானுபவத்தையும் நாடாமல்
இறைவனின் திருவடிகளிலேயே நோக்குடையவனாக இருக்க வேண்டும் என்பதே
இப்பாசுரம் வலியுறுத்தும் கருத்து!” என விளக்கினார் நம்பிள்ளை.
ravi said…
🌺இவ்வாறு இந்திர பதவி, பிரம்மாவின் பதவி, ஆத்மானுபவம், இவை அனைத்தையும் விட உயர்ந்த லட்சியமாகத்
புருஷார்த்தமாகத் திருமால் திகழ்வதால் *‘வராரோஹ:’* என்றழைக்கப்படுகிறார்.

🌺*‘வர’* என்றால் உயர்ந்த என்று பொருள். *‘ஆரோஹ’* என்றால் புருஷார்த்தம்.
*‘வராரோஹ:’* என்பது ஸஹஸ்ரநாமத்தின் 122-வது திருநாமம்.

🌺*“வராரோஹாய நம:”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச் சிறந்த பதவி உயர்வுகள் விரைவில் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
ராமா ராமா சொல்லுவோம்....நாளும் இன்பம் அடைவோம்

'ராமா' என்னும் ஒரு மந்திரம் நமது வாழ்வை வளம் பெற செய்து,செல்வ செழிப்பை உண்டாகும். இம்மையிலும் மறுமையிலும் நமக்கு துணையாக இருக்கும் ராம நாமம். மனதில் அச்சத்தை போக்கி, தைரியத்தைக் கொடுக்கும். 'ராமா' என்ற இரண்டெழுத்து மந்திரம், நம் மனதில் மண்டியிருக்கும் ஆணவம், காமம், குரோதம் பேராசை என்ற தீமையை அழித்து, அன்பை விதைக்கும். அறிவைப் பெருக்கும்
ravi said…
ஒரு பெயருக்கே இத்தனை சக்தி என்றால் அந்த அற்புதமான பெயரை தாங்கி நிற்பவன் என்ன சாதாரணமானவனா? கடவுளாக இருந்தாலும்,பூமியில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாக இருந்தவன். சொல் ஒன்று செயல் ஒன்று என்று இல்லாமல், சொல்லே செயலாக வாழ்ந்து காட்டியவன். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில், ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு மேன்மை உண்டு. நோக்கம் உண்டு. ஆனால், ஒரு அவதாரத்திலேயே பல உத்தம நெறிகளை நமக்கு எடுத்து சொன்னது ராம அவதாரம். தாய் தந்தைக்கு ஏற்ற மகனாக, தம்பிகளுக்கு சிறந்த அண்ணனாக, குருவின் எண்ணம் அறிந்து செயலாற்றும் சீடனாக,வாழும் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகப்பத்தினி விரதனாக, பேதமில்லாத நல்ல தோழனாக, தனது மக்களின் குறையை தீர்த்து ராமராஜ்ஜியம் தந்த ஒப்பற்ற தலைவனாக , ராமர் மக்களுக்கு வகுத்துக் கொடுத்த நெறிமுறைகள் அநேகம்.
ravi said…
புராணங்களில்,சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றைய தினத்தில், ராமபிரானை விரதமிருந்து வழிபட வேண்டும். ராமரை மட்டும் தனியே வழிபட முடியுமா? அவரை பிரியாமல் அவருடன் காட்சி தரும் சீதா, லட்சுமணர், அனுமனையும் சேர்ந்தே நாம் வழிபடுவதால், அவர்களின் அனைவரின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.

ராமநவமி பூஜை - கடைப்பிடிக்கும் முறை
ravi said…
ராமநவமி அன்று பூஜையறையை தூய்மைப்படுத்தி, ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்திற்கு மாலையிட்டு அலங்கரிக்க வேண்டும். பூஜையில், ராமாயண புத்தகத்தை வைத்து வழிபட வேண்டும்.

வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யமாக வைக்க வேண்டும். ராம நவமியன்று விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது.மேலும் அன்றைய தினம்,” ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா” என்று 108 முறை சொல்லி வழிபடுவது கூடுதல் சிறப்பு. ராமநவமி நாளில் துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது பல நன்மைகளை நமக்குப் பெற்றுத் தரும்.

ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே |

ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே ||

இந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும். இல்லம்தோறும் ராமாயணம் படிப்பதை இன்றும் பலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ராமநாமத்தைச் சொல்லச் சொல்ல, நம்முடைய இல்லத்திலும் உள்ளத்திலும், அளவற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகுவதை நம்மால் உணர முடியும்.

ravi said…
ராமபிரானை வழிபடுவதால் துன்பம் வந்தபோது கலங்காமல் அதை எதிர்க்கொள்ளும், மனதைப் பெறலாம். சீதா ராமரைப் போல மனமொத்த தம்பதிகளாக விளங்கலாம். எடுத்த செயல்களில் வெற்றி பெறலாம்.

எல்லையற்ற ஆன்ம சக்கி தரக்கூடிய ராமநாமத்தை மனம்,மொழி,மெய்யால் தினமும் ஜெபித்திடுவோம், அந்த கல்யாண ராமனின்,கல்யாண குணங்களை நாமும் பெற்று மகிழ்வோம்.

ஸ்ரீராமஜெயம்
ravi said…
*ராம நவமி... நவமி திதியில் ராமர் பிறக்க காரணம் என்ன ?*

@mahavishnuinfo

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளை தான் ராம நவமி என்று கூறுகின்றோம். அந்த வகையில் *ராம நவமி 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது*.
ravi said…
ராமர் பிறந்த வரலாறு :*

🤱 அயோத்தியை ஆண்ட மன்னர் தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் வெற்றிக்கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

🤱 தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம்? என்ற ஆலோசனையை கேட்டார்.
ravi said…
🤱 முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் புத்ர காமேஷ்டி யாகத்தை நடத்த முடிவு செய்தார்.

🤱 யாகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார்.

🤱 அந்த குடுவையில் இருக்கும் பாயாசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டார் யக்னேஸ்வரர்.
ravi said…

🤱 அந்த குடுவையில் இருக்கும் பாயாசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டார் யக்னேஸ்வரர்.

🤱 தசரதனின் மனைவிகளும் பாயாசத்தை அருந்தினார்கள். அதன்பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ராமபிரானை பெற்றெடுத்தாள். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள்.
ravi said…
ராமரின் சிறப்புகள் :*

🤴 ராமர் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர்.

🤴 ராம பானத்திற்கு இணை வேறு ஏதும் இல்லை.

🤴 ராமர் வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர்.

🤴 இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான்.
ravi said…
ராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா?

🌟 பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன.
ravi said…
🌟 விஷ்ணுபகவான் அவைகளுக்கு ஆறுதல் அளித்தார். உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும், அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். இதன் படியே அஷ்டமி திதி அன்று எம்பெருமான் கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார்.

🌟 இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி, நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம்
ravi said…
ராம நாமம் என்னும் பாயசம்.

பாயசம். பால் பாயசம். இப்படி சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறும். அது சாதாரண மக்களாகிய நமக்கு.

புரந்தரதாசருக்கு?
ravi said…
வேதங்கள், புராண இதிகாசங்கள் அனைத்தையும் கற்றதோடு இல்லாமல், அவற்றின் சாரத்தை அனைவருக்கும் புரியும்வண்ணம் எளிய கன்னடத்தில், பல இடங்களில் நகைச்சுவையையும் சேர்த்துக் கொடுப்பவராயிற்றே. அவருக்கு இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறதாம்.

ராமா. கிருஷ்ணா. விட்டலா.

இந்தப் பெயர்களை அடிக்கடி சொன்னால், பால் பாயசத்தைக் குடித்தது போல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.

நாமும் சொல்லிப் பார்ப்போமா?

ராமா
கிருஷ்ணா
விட்டலா

இப்போ பாட்டு.
ravi said…
இந்தப் பாட்டில் பாயசம் செய்வதற்கான சமையல் குறிப்பைச் சொல்லி, அதே போல் இறைவனின் நாமங்களை உச்சரிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்குகிறார் தாசர்.

*ராம நாம பாயஸக்கே*

*கிருஷ்ண நாம சக்கரே*

*விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)*

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க,

கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;

விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள்,

சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) *(ராம)*
ravi said…
*ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி*

*சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ* ( *ராம* )

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து,

வைராக்யம் என்னும் கல்லில் போட்டு

அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக ( *ராம* )
ravi said…

*ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு*

*புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு*

*ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு*

*டேகு பந்தாக*
*ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன* *நெனெயிரோ (ராம)*

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு

புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு)

ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது

ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)
ravi said…

*சஜ்ஜிகே* - கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.

*ஷாவிகே* - சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

மேலே கூறிய பாட்டின் பொருளில் பாயசத்திற்கான குறிப்புகளை நீக்கிவிட்டுப் படித்தால் தாசர் கூறவரும் பக்தியின் தத்துவம்; ராம நாமத்தின் மகிமை ஆகியவை புரியும்.

அதாவது இப்படி:
ravi said…
கவனத்துடனும், வைராக்யத்துடனும் செய்ய வேண்டியது என்னவென்றால்;

இதயத்தில் (ராமா) என்கிற எண்ணத்தை விதைத்து;

புத்தியால் அதன் மகிமையை உணர்ந்து கொண்ட பிறகு, வரும் சந்தோஷத்தை / ஆனந்தத்தை எப்படி கொண்டாடுவது?

மறுபடி ராமா, ராமா என்கிற புரந்தர விட்டலனை நினைத்துதான்.

ராம ராம
ராம ராம
ராம ராம
ravi said…
🌹🌺 *ராம நாமாவை சொல்ல சொல்ல நம் ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்..... விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺'ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
ravi said…
🌺'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள ........கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமானவற்றை .... அழித்து .........ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)

🌺'அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".

🌺ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !
ravi said…

🌺எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.

🌺 நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
ravi said…
🌺 மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.

🌺 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும்.

🌺அது போல 'ராம நாமாவை சொல்ல சொல்ல நம் பிறவி நோயை, துக்க நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்
ravi said…
🌺'ராம நாமா' சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ' அந்த ஒன்றே !' காரணமாகிறது என்பதும் ...... எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !.......என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .

🌺ராம நாமா' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் ,

🌺🌹ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம .....🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
தேனில் சுவை சேர்த்தவனே பாலில் சொல் சேர்த்தவனே

புவியில் மதுரம் சொரிந்தவனே

பூவிலும் மென்மை கொண்டவனே

வன்மை வாய்மை வலிமை இனிமை பொறுமை எனும் ஐந்தெழுத்து கொண்டவனே ...

இரண்டு எழுத்தே போதும் என்றே அதில் மூன்றை கொஞ்சம் மறைத்தவனே ...

என்றும் மூவா முதல்வனே

மூன்றடி கேட்டு சிரம் தனில் வலிய வந்து பாதம் பதித்தவனே

கல்லிலும் பெண்மை கண்டவனே ...

காலிலும் பிரம்மன் கொண்டவனே ...

சபரிக்கும் ஜடாயுவிற்கும் வம்பனுக்கும் கொம்பனுக்கும் அருள் வாரி வாரி தருபவனே ...

வார்த்தை கொண்டே வர்ணிக்க முடியாத அழகை கொண்டவனே !!

வானரம் உன் சேனை என்றால்

என் மனம் எனும் வானரம் ஏன் அடங்கவில்லை ... 🐒

வழி எல்லாம் சிந்துவது உன் கருணை என்றால் விழியில் நீர் வடிவது ஏன் ? 💦

வருவாய் மீண்டும் நீ என்றே நவமி தனில் வேண்டுகிறோம் ..

காஞ்சியில் வந்தவன் காலடி கண்டவன் உன் நாமம் ஒன்று போதும் என்றான் ..

ரமே ராமே மனோருமே என்றான் தில்லைக்கூத்தன்

உன் நாமம் தினம் சொல்லியே தேனீக் கூடு கட்டுகின்றோம் ..

உள்ளே சிந்தும் தேன் கொண்டு உன் நாமம் ஜெபிக்கின்றோம் ..

வருவாய் நீ என்றே தினம் தினம் வாசல் வந்து நிற்கின்றோம் ...

வாராயோ ராமா எங்கள் வந்தனம் தனை தேனாக ஏற்பாயோ .
ravi said…
சீரடி நாதா செம்மலே சரணம்
சாய் நாதா சரணம் சரணம்
கூறிடும் மொழியில் வந்தவா சரணம்.
குறைகள் களைந்திடும் சாய் சரணம்..

ஷீரடி பூமியின் நாயக சரணம்
வேரடி மண்ணின் வித்தக சரணம்
பாரினில் வந்த மன்னவ சரணம்
பகவான் சாய் நாதா சரணம்..

நினைவில் நிற்கும் வீரா சரணம்
கனவிலும் களிப்புறும் காந்தா சரணம்.
உறவினில் வந்த உத்தம சரணம்
உண்மை நாதா சாய் சரணம்.

ராகம் இசைக்கும் நாயகன் நீயே
தாகம் தீர்க்கும் தலைமகன் நீயே
வேகம் கொடுத்திடும் விஜயனும் நீயே
சோகம் நீக்கிடும் ஜோதியும் நீயே...

நீயே தெய்வம்.. நீயே மனிதன்
நீயே எல்லாம்.. நீயே செயலாய்..
தாயாய் தயவாய் தமிழாய் நின்ற
தத்துவ நாயக சாய் சரணம்...

அங்கம் தந்தாய் பங்கம் களைவாய்
எங்கும் நீயாய் எழிலாய் நிறைந்தாய்
மங்கல நாயக மகிழ்வுறு தேவா
தங்கிடும் இன்ப சாய் நாதா..

வெற்றி தருவாய் வீரம் தருவாய்
சுற்றிடும் உறவில் சுகமே தருவாய்
பற்றிடும் உலகில் பாசம் வைத்து
முற்றிலும் என்னை முழுதாய் தருவாய்..

ஆசி தந்தாய்.. அனைத்தும் தந்தாய்
பேசிடும் மொழியில் பெருமை தந்தாய்
வீசிடும் காற்றில் விளங்கி நின்றாய்
நாசியில் மூச்சாய் நாதா சரணம்

முன்னவ சரணம் விண்ணவ சரணம்
முளைத்த பயிரில் உயிரே சரணம்.
கண்ணின் இமையென காத்து நின்றிடும்
காருண்ய வாசா சாயி சரணம்...

மலர்ந்திடும் பூவின் மனமே சரணம்
துலங்கிடும் வாழ்வின் தூயா சரணம்
வளர்ந்திடும் வாழ்வின் வரவே சரணம்
வசந்த நாதா சாயி சரணம்...

வாசம் வீசும் மலருமானாய்
நேசம் மிக்க நண்பனுமானாய்
பாசம் காட்டி பக்தியில் உறைந்த
பக்தரைக் காக்கும் உயிருமானாய்..

நீயே தெய்வம் நீயே மனிதன்
நீயே வானம் நீயே பூமி
நீயே தாகம் நீயே தண்ணீர்
நீயே எல்லாம் என்றே இருப்பாய்.

தாயும் நீயே தந்தையும் நீயே
சேயாய் வந்து சேவை செய்வாய்.
மாய மன்னன் மனமும் நீயே
மகிமை செய்யும் குணமும் நீயே

சாய் நாதன் பாதம் பணிய
சரித்திர வெற்றி தினமும் குவியும்
சாய் நாதன் பெயரைச் சொல்ல
சந்தோஷ வாழ்வு தினமும் பெருகும்..

சாய் நாதனை மனதில் ஜெபிக்க
கவலை மனதில் காணாது போகும்
சாய் நாதன் மனதில் இருக்க
சத்திய வாழ்வு தினமும் கிடைக்கும்..

வாழும் கடவுளாய் வந்த ஷீரடி
நாதன் மனதில் என்றும் நிற்பதால்
தரணியில் யாரும் தனியே இல்லை..
தந்திடுவானே தன்னையளித்து...

அவனில் தயவில் அவனடி பற்றி
தினமும் ஷீரடி பாதம் தொட்டு
மனதில் நாதன் நாமம் வைத்து
மண்ணில் என்றும் மகிழ்வுறுவோமே.

என்னின் சுவாசம் ஷீரடியாக
என்னின் நாமம் ஷீரடியாக
என்னின் இதயம் ஷீரடியாக
என்றும் இருக்கும் ஷீரடியானே.

கண்ணில் ஒளியாய் காட்சி தருவாய்
என்னில் இறங்கி எழுத்துத் தருவாய்
உன்னில் என்னை உள்ளே வைத்த
உயரிய கவசம் நீயே ஆவாய்...

கவசம் கவசம் ஷீரடீ கவசம்
கவசம் கவசம் சாய் கவசம்
கவசம் கவசம் காத்திடும் கவசம்
கவசம் கவசம் பாபா கவசம்

பாபா பாபா என்றே உரைக்க
பாவம் எல்லாம் போயே தீரும்
பாபா பாபா என்றே உரைக்க
வளமும் நலமும் நாளும் சேரும்

அழகிய அழகன் கள்ளழகன் அருகில்
பழகிய உறவாய் பாசம் உரைத்து
தெளிவது வாழ்வு தேவைகள் எல்லாம்
அளித்திடும் நாதன் சீரடியாகி..

நாளும் தினமும் நம்பிக்கையுடனே
பாபா கவசம் படித்து வந்தால்
வேண்டும் வரமதை தந்திடுவானே
வெற்றியின் வழியாய் விளங்கிடுவானே.

ஷீரடி நாதன் பாதம் பணிவோம்
சாய் நாதா என்றே சொல்வோம்
சீராய் சிறப்பாய் நாளும் மலர
சித்தம் அவனே என்றே கொள்வோம்.

வாழ்க. வாழ்க. ஷீரடி நாதன்
வாழ்க. வாழ்க. சாயி நாதன்
வாழ்க. வாழ்க. பாபா வாழ்க
வந்திடும் பரவசம் என்றும் வாழ்க.

ஐபரணி நாவில் நன்றாய் நின்று
பாபா கவசம் பாடச் செய்த
ஷீரடி நாதன் பாதம் பணிந்து
பயனில் விளைந்து நலமாய் வாழ.
ravi said…
Many more happy returns Sri Rama 👏👏🥇🥇👍👍💐💐🌸🌸🌺🌺🐒🐒💥💥👑👑🏹🏹👣👣🎂🎂
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 189* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*61 வது திருநாமம்* 🙏🙏🙏
ravi said…
*61 सुधासागरमध्यस्था -ஸுதாஸாகரமத்யஸ்தா -*
ravi said…
*61 சுதா சாகர மத்யஸ்தா =*

தேனாற்றின் நடுவில் வாசம் செய்பவள்

*சுதா* என்றால் தேன்
*ஸ்தா* என்றால் இருப்பவள்

அம்மா மதுரம் நீயே மாணிக்கமும் நீயே ..உயிர் நீயே இந்த உடலும் நீயே
உள்ளம் நீயே அதில் வசிக்கும் என் ஆத்மாவும் நீயே

அனைத்தும் நீயே என்றால் உனை வணங்காத நாள் பிறவாத நாள் அன்றோ 🙏🙏🙏
ravi said…
நவமியும் அஷ்டமியும் புண்ணியம் செய்த நாட்கள் ... நிரூபித்தவர்கள் ராமனும் கிருஷ்ணனுமே 🥇🥇🥇
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 189* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 44👍👍👍
ravi said…
*வகிட்டின் வர்ணனை*

*ஸர்வரோக நிவிருத்தி* 👌👌👌

தனோது க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்ய லஹரீ

பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:

வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர

த்வஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 44
ravi said…
அம்மா உன் கருணையை ஒருவனால் விவரிக்க முடியும் என்றால் அவனால் வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் கண்டு பிடிக்க முடியும் ... அவனால் தாரகைகளை எண்ணவும் மண்ணில் இருக்கும் கற்களை கணக்கிடவும் முடியும் ..

இருட்டு சூரியனால் தினம் தினம் கொல்லப்படும் அவலத்தை உணர்ந்து

அதை உன் கேசத்தில் பூசிக்கொண்டாயே ...

இருபக்கமும் பிறந்த பால சூரியனை அழுத்தி ஒரு சிறு கால்வாயாக உன் சீமந்த வகுடில் தவழ விட்டாயே ...

அம்மா!!

இந்த கருணை யாருக்கு வரும் ...?

என்றும் சம நிலையில் இருப்பவளே !!

உனை தாய் என்று நாங்கள் பெற பல பிறவிகள் புண்ணியம் செய்துள்ளோம் .. 🥇🥇🥇
ravi said…
அர்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே

ஆழ்க்கொண்ட சபலம் தீர எப்போதும் உன் நாமம் சொல்வேனே தூய பரம்பொருளே!!
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 41*🐒🐒🐒
ravi said…
ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |

தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 3
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
கேஸரீ நந்தன்.. கேஸரீ யார் ... ஒரு பக்கம் பவன சுதன என்கிறோம் இன்னொருபக்கம் சிவனின் அம்சம் என்கிறோம் ... ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா ..?

ஒரு குழப்பமும் இல்லை ... முதலில் யார் இந்த கேஸரீ என்று பார்ப்போம் .

அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்).

இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார்.

இவரே அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கேஸரீ இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரிய ராமாயணத்தை எழுதி விடலாம் ... சிறந்த சிவபக்தன் ... வானரத் தலைவன் ... வாலியும் சுக்கிரவனனும் இவரிடம் யுத்த கலைகளை கற்றுக்கொண்டனர் ... பல மடங்கு சக்தி கொண்டவர் ...

இவர் குரு வாயு ... வாயுவின் குரு பரமேஸ்வரன் .. இப்படி எல்லாமே தன்னுள் கொண்டு பரபிரம்மம் ஒரு உருவில் வந்தது என்றால் அதன் பெயர் தான் அனுமன் 🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
பூத்த சிவப்பு ரோஜா நிறமுடைய முக விலாஸம்.

கடைக்கண்களிலே எப்பொழுதுமே கருணை அமுத நீர்
ஊற்றெடுக்கும்.

நன்கு வாழ வைப்பவர். மனத்திற்கு இனிய
மஹிமை பொருந்தியவர்.

அஞ்ஜநாதேவியின் பாக்கியமே
உருவெடுத்தவர்.

அவரையே கொண்டாடுவோம்

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53