ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 37 -அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ --பதிவு 44
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே பதிவு 44 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள் என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அடிக்கடி வருகிறது .. அதை இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம் இன்று சிந்தூ அருண விக்ரஹாம் இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியான ஸ்லோகத்தில் வருகிறது என்று முன்பே பார்த்தோம் . சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம். இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான். அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள். ஏன் உருவத்தோடு தோன்றினாள். அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்பட...