ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 38.-ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா -பதிவு 45

 **38* . रत्नकिङ्किणिकारम्यरशनादामभूषिता - ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா -





நமது பெண்கள் அக்காலத்தில் ஒட்டியாணம் என்று ஒரு பட்டை யான தங்க ஆபரணம் அணிவார்கள். பயமுறுத்துவார்கள். 

அம்பாள் அணியும் விதமே வேறு. 

மெல்லிய நூல் மாதிரி மெலிந்த பொன் கயிறு அவள் இடுப்பை அலங்கரிக்கும். 

அதில் சுநாதம் எழுப்பும் சிறிய மணிகள் அசைந்து அழகும் ஒளியும் ஒலியும் சேர்க்கும்.

*ரத்ன* = ரத்தினங்கள் பதிந்த 

 *கிண்கிணிகா* = 
சிறு மணிகள் 

 *ரம்யா* = ரம்யமாக - இதமாக 

 *ரஷனா* = ஒட்டியானம் - 

அதை அணியும் *இடை தாம* = மாலை - சங்கிலி 

 *பூஷிதா* = அணிந்திருத்தல் - அலங்கரித்திருத்தல் 

 *38 ரத்ன கிண்கிணிக ரம்ய ரஷனா தாம பூஷிதா; =* 

சிற்றிடையில் சிறுமணி கிண்கிணிக்கும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியானத்தை அலங்காரமாக அணிதிருப்பவள் ...

Comments

ravi said…
ஸச்சிஷ்ய போதாய”

“நல்ல சிஷ்யனுக்கு உபதேசிப்பதற்காக” என்று அர்த்தம்.

ஞானி எப்பேர்ப்பட்ட நிலையிலிருக்கிறான் என்று ஸத்தான சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்து. அதனாலேயே அவர்களும் அதற்கான ப்ரயாஸை எடுக்க உத்ஸாஹப்படுத்தும் பொருட்டே, ஸ்வயமாக எதனாலும் எந்தப் பயனையும் பெறுவதற்கில்லாத ஞானி, தன்னுடைய உசந்த மௌன ஸ்திதியைவிட்டு வர்ணிப்பில் இறங்குகிறாராம்! எல்லா உணர்ச்சியும் மரத்துப்போனவிட்டும், ஸத்சிஷ்யர்களாகக் கூடிய ஜீவ குலத்தின் பொருட்டாக அவரிடம் ப்ரேமை யுணர்ச்சியும் தியாகவுணர்ச்சியும் மாத்திரம் இருக்கும்படி ஈச்வரன் வைத்திருக்கிறானென்று தெரிகிறது. தாய் தந்தையர் போலவே ப்ரேமையும் தியாகமும் குருவிடம் இருப்பது தெரிகிறது.

“ஸச்சிஷ்ய போதாய ஸத்யம் ஸம்ஸ்ருதவான்” என்று சொல்லியிருக்கிறார். போதனை, உபதேசம் – வாயால் பண்ணுவது. அதற்கு முந்தி அவர் அநுபூதி நிலையை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும் – அதாவது – ‘ஸம்ஸ்மரணம்’ செய்யவேண்டும். ஏனென்றால் இவர் வாய் மட்டும் அடைத்துப்போன மௌனி இல்லை; மனஸும் மௌனமாகிவிட்டவர்; ஒன்றையும் எண்ணாதவர்; எண்ணத்தை உற்பத்தி செய்வதும், ஞாபகம் என்று முன்பு நடந்தவைகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்வதுமான மனஸு என்பது இவரிடம் செயலற்றுப்போய்விட்டது. அப்படிப்பட்ட அதீத நிலையிலுள்ளவர் முதலில் எண்ண லோகத்திற்கு வந்து தனக்கும் ஒரு நிலை இருந்ததென்றும் வைத்துக் கொண்டு அதில் ஸாக்ஷாத்காரத்தை உரசிக் கொண்டு மனஸ் அடியோடு அடைத்துப் போகிறதற்கு just முந்தி எப்படியெப்படியெல்லாம் feel பண்ணினோம் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளவேண்டும்.

நினைவுகளை விடுவது நமக்கு எவ்வளவு கஷ்டமோ, அத்தனை கஷ்டம் ஞானிக்கு நினைப்பூட்டிக் கொள்வது! கஷ்டப்பட்டாவது நாம் நினைவுகளை விட்டால் மஹத்தான லாபம் பெறுகிறோம்; ஆகையால் கஷ்டப்படலாம்தான். ஆனால் ஞானி கஷ்டப்பட்டு நினைப்பூட்டிக் கொள்வதாலோ அவனுக்கு எந்த லாபமுமில்லை. ஆனாலும் அப்படிச் செய்கிறான் எதற்காக? ஸச்சிஷ்ய போதாய!

முதலில் மனஸை வேலை செய்யவிட்டு, ஸத்ய ஸாக்ஷாத்கார ஸ்திதியை ஸ்மரிக்கக்கூடிய அளவுக்கு நன்றாக ஸ்மரிப்பது, அதாவது நினைவூட்டிக்கொள்வது. அப்புறம் இன்னம் ஒரு படி இறங்கி வாயையும் வேலை செய்யவிட்டு ஸத்சிஷ்யனுக்கு அதை எடுத்துச் சொல்லி போதிப்பது, உபதேசிப்பது.

தான் கண்டுகொண்டது போதாது, சிஷ்யனையும் கண்டு கொள்ளச் செய்யவேண்டும் என்ற பரம கருணை வாய்ந்தவராக இருப்பதாலேயே எதுவும் வேண்டாத ஞானி இப்படி உபதேசத்தில் இறங்கி தேசிகராகிறார்.
ravi said…
ஹரே கிருஷ்ணா🙏 *மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி.* கேள்விகளுக்கான சரியான விடைகளை கீழே பகிர்ந்து உள்ளோம்.

1. “ *ஜீவேர ஸ்வரூப ஹய கிருஷ்னேர நித்ய தாஸ்* ” இதன் பொருள் என்ன ?
a. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று
b.பரமாத்மா ஜீவாத்மாவின் நிரந்தர சேவகன்
c. ஜீவாத்மா பரமாத்மாவின் நிரந்தர சேவகன்

*Ans. c. ஜீவாத்மா பரமாத்மாவின் நிரந்தர சேவகன்*

2. *மூவகை துன்பங்கள்* யாவை?
*அத்யாத்மிக*_ நமது ஐம்புலன்கள் மற்றும் மனம் புத்தி அகங்காரத்தினால் நேரும் துன்பங்கள் .
*அதிபௌதீக*_ மற்றவர்களாலும், சுற்றத்தாலும் ஏற்படும் துன்பங்கள்.
*அதிதெய்விக* - மழை, வெள்ளம், கடும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் துன்பங்கள்.

3. நமது பௌதீக உடலில் உள்ள *துன்பத்தின் வாயில்கள்* எத்தனை?
a. 2
b. 5
c. 9
d. 7
*Ans. C.9*

4. நமது அறியாமையைப் போக்கும் *"உண்மையான ஞானம்* "எது?
ஆத்மா- பரமாத்மா உறவை உணர்ந்து செயல்படுவது.


ஹரே கிருஷ்ணா🙏
ravi said…
[23/02, 20:57] Jayaraman Ravilumar: *வஸுர்‌* வஸுமனாஸ்: ஸத்யஸ்:

ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[23/02, 20:57] Jayaraman Ravilumar: *105. வஸவே நமஹ (Vasave namaha)*
[23/02, 20:59] Jayaraman Ravilumar: திகைத்துப் போன அந்த பக்தர், அடுத்த நாள் காலை சாளக்கிராமத்தை எடுத்துக் கொண்டு அரையரிடம் சென்றார்.

“என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி உங்களிடம் இருந்து பெருமாளைக் காப்பாற்றுவதாக எண்ணி நான் கொண்டு சென்றேன்.

ஆனால், பெருமாள் உங்களிடம் இருக்கவே விரும்புகிறார்!” என்று சொல்லி அவரிடமே சாளக்கிராமத்தை ஒப்படைத்தார்.

இவ்வாறு, தன் அடியார்களிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும், தோஷங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்
அவர்களுடனேயே வசிக்க விரும்புகிறார் திருமால்.

‘வஸு:’ என்றால் வசிப்பவன் என்று பொருள்.

தன் அடியார்களுடன் மிகுந்த ஆசையுடன் வசிப்பதால் திருமால் ‘ *வஸு* :’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 105-வது திருநாமம்.“ *வஸவே* *நமஹ* ” என்று தினமும் சொல்லி வரும்
அடியார்களுடன் எப்போதும் திருமால் எழுந்தருளியிருப்பார்.
ravi said…
[23/02, 20:54] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை*
[23/02, 20:54] Jayaraman Ravilumar: मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते

गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।

किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते

भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ||63||

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே

க³ண்டூ³ஷாம்பு³நிஷேசனம்ʼ புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே |

கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ʼஸஶேஷகப³லம்ʼ நவ்யோபஹாராயதே

ப⁴க்தி꞉ கிம்ʼ ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ʼஸாய
ravi said…
கடைசி ஏழு எட்டு ஸ்லோகங்களிலயும் பசுபதி, பசுபதி ன்னு சொல்றார்.

இந்த பசுக்களாக இருக்கற நமக்கு பதி அந்த பகவான் தான்.

அவர் தான் நமக்கு இந்த உலகத்தில இருக்கற பாசங்களை விலக்கி அவரிடத்தில ஒரு தெய்வ பாசம்….

அதுவும் கண்ணப்பன் போன்ற ஒரு பாசம் ஏற்படறதுக்கு அனுக்ரஹம் பண்ணணும்.

நமக்கு தெரிஞ்ச பக்தி வளர்க்கறதுக்கு போன ஸ்லோகத்துல சொன்னாரே அது மாதிரி பக்தியினுடைய அடையாளங்களாக விபூதி இட்டுக்கறது, ருத்ராக்ஷம் போட்டுக்கறது, பகவானுடைய கதையை பேசறது, பகவானுடைய கதையை கேட்கறது இதெல்லாம் பண்ணுவோம்…

கூடயே “உத்தம பக்தியை கொடுப்பா .. உன்னிடத்தில் நிஜமான பக்தியை கொடு” அப்டின்னு கூட கூட வேண்டிப்போம்.🙏🙏🙏
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 93 started on 6th nov

*பாடல் 29* ...💐💐💐

*பாடல் 29 ... இல்லே எனும்*

(அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ

பொல்லேன் அறியாமை பொறுத்திலையே

மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.🙌
ravi said…
நமக்கென்று சொந்தமான வீடு ஒன்றும் இல்லை. ஒன்று அறியாமை
காரணத்தால் மாயையின் வீட்டில் வாழவேண்டும். அல்லது
இறைவனுடன் பேரின்ப வீட்டில் வாழ வேண்டும். இதையே,

.. ஒரு பூதரும் அறியா தனி வீடு ..

... என்பார். நாம் செய்த வினை காரணமாக பிரபஞ்ச சேற்றில்
அழுந்தி இருக்கிறோம். வினைக்கு ஈடாக பயனைத் தரும்
இறைவனே அருள் செய்து நம்மை முத்தி வீட்டில் இருத்திவைக்க
வல்லவன்.

இது சாதாரண உரையாகவேதான் தோன்றும். கூர்ந்து கவனித்தால்
இந்த உரையில் ஒரு குறைபாடு தெரியும்.

பாட்டின் பின் பகுதியில்
என் பாமாலைகளை விரும்பி, வலிமையான தன்னுடைய பன்னிரு
தோள்களிலும் அணிந்திருக்கும் முருகன் என்று பெருமைப்படுகிறார்.

இப்படிப்பட்ட அருள் கிடைத்த பிறகும் அருணகிரியார் மாயையான
வீட்டில் உழன்று கொண்டிருக்கிறார் என்பது பொருந்தாது.

பொருத்திலையே என்கிற வார்த்தைக்கு சற்று மாறுபட்ட பொருளைக்
கொண்டால் வேறு ஒரு அழகிய உரை கிடைக்கிறது. பார்ப்போம் 🙏
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

யாரையும் பழிவாங்க நினைக்காதே...

உன்னை ஏமாற்றுபவர்கள்...
தன் கர்ம வினை அடைந்து தீருவர்.

நீ அதிர்ஷ்டசாலியாக இருந்தால்...
அவை உன் கண் முன்னே நிகழும்!

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
Oldest Older 401 – 408 of 408

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை