ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா- பதிவு 48
41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா காமதேவனின் அம்பறாத்தூணி போன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்.) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள். குறிப்பு () கூட = மறைக்கப்பட்ட குல்ஃபா = கணுக்கால்கள் இந்திரகோபம் ஒரு வகை பூச்சி. பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று *இந்திரகோபம்* . சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு. சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள். மின்மினிப் பூச்சிகளை வாரி இறைத்ததுபோல் மினுமினுக்கும் மன்மதனுடைய அம்புறாத்துணிகள் அன்னையின் முழங்கால்களாக உள்ளனவாம். சிறிது சிந்தித்தால், தங்கமயமாக சொலிக்கும் அன்னைக்கு, சோடனையாக அமைந்தனவா அவை?அல்ல! அல்ல! மன்மதனைத் தன்பணிக்குக் காமேசுவரியான அன்னை சேர்த்துக்கொண்ட தயை என்றே கொள்ளவேண்டுமன்றோ? மின்மினிகள் மேலாம்போ...