ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 40 *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* - பதிவு 47

 *40*  माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता -  *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* -




இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்பபெறுபவள் 


அம்பாளின் தேஹ லாவண்யம் எவ்வளவு நேர்த்தி என்று சொல்கிறது இந்த நாமம்.

ஜானு = முழங்கால் 

த்வய = இரண்டு , இருமை 

விராஜிதா = எழிலுடன் விளங்குதல் 
               ============================================================

Comments

ravi said…
காமாக்ஷி அம்பிகே,

ஆஹா எவ்வளவு அழகிய தாடங்கங்களை, செவியில் அணிந்து அழகுக்கு அழகூட்டுகிறாய்.

பச்சிளம்
குழந்தையாக, பாலையாக உன் திவ்ய சௌந்தர்யம் மனதை கொள்ளை கொள்கிறதம்மா.

குண்டலினி ஸ்வரூபியே, நீயல்லவோ, பூவுலகில் சகல தாவர ஜங்கம வஸ்துக்களும் உயிரினங்களும் தோன்ற காரணமானவள் .

அவற்றை ரக்ஷிப்பவள்.

புஜகநிபம் அத்யுஷ்டவலயம் என்று சொல்லும்படியான மூன்று சுற்றுகளைக் கொண்டு சுருண்டு நிற்கும்

ஸர்ப்பம் போன்ற குண்டலினி தேவி,

சண்டியாக பக்தர்களின் விரோதிகளை அழிப்பவளே,

சாமுண்டேஸ்வரி,

த்ரிகுணங்களையும் தன்னில் கொண்டவளே,

அஞ்ஞான இருள் போக்குபவளே ,

ஹ்ருதய குகையில் வாசம் செய்பவளே,

சகல தேவ தேவதைகளுக்கும் குருவே,

காஞ்சி காமாக்ஷி உன்னை தியானித்து வணங்குகிறேன் அம்மா.🪷🪷🪷🪷🪷
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 520* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*

*சக்தி ஆலயம்: அவனியாபுரம் ரேணுகாம்பாள்:*
ravi said…
ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார்.

பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்த நேரத்தில் ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர்.

அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் அருகே சென்று வாளை ஓங்கினான்.

ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது.

ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது.

துண்டான ஜமதக்னி மஹரிஷியின் தலையை கார்த்தவீரியன் புதல்வர்கள் எடுத்துப் போனார்கள்.

வெளியே இருந்து திரும்பிய பரசுராமன் விஷயம் அறிந்து நெருப்பாக கொதித்தார்.🪷🪷🪷
ravi said…
*ராமா*

உன் புன்னகையில் எந்நகையும் இன்னும் வெல்லவில்லை *ராமா*

உன் நாமம் சொரியும் மதுரம்
வண்டுகள் ருசி பார்த்ததில்லை *ராமா*

நீ நடந்த இடம் இல்லாம் செழிப்பு தவிர ஒன்றும் கண்டதில்லை *ராமா*

நீ பேசிய பேச்செல்லாம் நீ சொல்லா கீதை ஆனதே *ராமா*

நீ விடுத்த அம்பெல்லாம் இன்னும் அதர்மம் முழுசாய் தலை தூக்காமல் காக்கின்றதே *ராமா*

நீ பிறந்த நவமி புண்ணிய நாளாய் புவி காக்கின்றதே *ராமா*

நீ குளித்த சரயு நீக்குகின்றதே கொலை செய்தவன் பாவம் கூட *ராமா*

நீ கடந்த கங்கை பிறவிக்கடல் நீந்த உதவுகிறதே *ராமா*

நீயே எல்லாம் என்றபின் நீ வேறு நான் வேறு என்றே சொல்வது பித்தம் பிடித்தவன் சொல்லும் பிதற்றல் அன்றோ *ராமா* 🙏🙏🙏
ravi said…
( சுமார்1000-ஆண்டுகள் பழமையான, 150-படிகள் கொண்ட இந்த சிறு மலைக்குன்றின் மிகச்சிறிய ஆலயத்தின் கருவறையில்,
'எனை ஆளும் ஆண்டவன்' எம்பெருமான் முருகன்,
வேல்(தண்டம்)கொண்ட பாலகனாக அழகு அருட்காட்சியளிக்கிறார்.

(🙏🏻சிறப்புகள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

இந்த தபசுமலைக்குன்றில்
முற்காலத்தில், எம்பெருமான் முருகனை முனிவர்களும், சித்தர்களும்
வேலாகவும், பிற்காலத்தில்
சிற்ப வடிவமாகவும்
வழிபட்டதாக கூறப்படும்
இத்தலத்தில்,
சப்தரிஷிகள் தவமிருந்து இறைவனை தரிசனம் கண்டதால், இம்மலைக்கு
'தபசுமலை' எனும் பெயர் உண்டானதாகவும்
தலவரலாறு கூறுகிறது..

மலை அடிவாரத்தில், சப்தரிஷிகள் வழிபட்ட இடத்தில் சிறிய குடவறைக்கோயில் இருக்கிறது. உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற இங்கு கந்தக்கடவுளை எண்ணி தியானம் செய்வது வெகு விசேஷமாம்.

இங்கேயுள்ள தம்பதி சமேத ஶ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மிகுந்த சக்தி உள்ளவராம். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவில் தீர்த்து வைப்பதில் வல்லவர் என்கின்றனர் பக்தர்கள்.

இத்தலத்தில் தரப்படும்
மூலிகை கலந்த பிரசாதம், சர்க்கரை நோய், குடல்புண் மற்றும் நரம்பு தளர்ச்சியின் தாக்கத்தை
குணப்படுத்துகிறது என்பது தலச்சிறப்பு.

கந்தசஷ்டி, வைகாசி விழாக்கள் மற்றும்
கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், செவ்வாய் வழிபாடும், பவுர்ணமி கிரிவலமும் இப்பகுதியில் வெகுபிரசித்தம்).

🙏🏻ஓம் ஶ்ரீ தபசுமலை முருகனுக்கு,
அரோகரா!
அரோகரா!
அரோகரா!
ravi said…
புத்தா = ஞானம் - அறிவு

❖ *149 நித்யபுத்தா =* நிரந்தர ஞானி = அறிவாகி நிற்பவள்
ravi said…
*அம்மா* ...

கேட்போர் குறைவு என்றே கேளாமல் இருக்கிறாயோ *அம்மா*

வேண்டுவோர் எவரும் இல்லை என்றே வேள்வித் தீயில் உருகுகிறாயோ *அம்மா*

கேட்பவர் எல்லாம் பொருள் செல்வம் ஒன்றே நாட

உன் புன்னகை ஒன்றையே நாடும் என்னிடம் விளையாடுதல் தேவையோ *அம்மா*

ஞானம் கேட்கிறேன் வைராக்கியம் கேட்கிறேன்

பொருள் விரும்பா உளம் கேட்கிறேன் ..

உள்ளம் வெண்மை நிறமே என்றும் கொள்ள வேண்டுகிறேன்

இதை வேண்டுவோர் அதிகம் இல்லை எனில்

அள்ளித் தர ஏன் தயங்குகிறாய் *அம்மா* ..

அதிக இருப்பு உன் மின்னல் கொடி போன்ற உடம்பு தாங்குமோ *அம்மா* ?💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

106 –
என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என்
புன்மொழி கொள அருள் அருணாசலா (அ)
ravi said…
*Meaning*

Your ears that listen to the sweet words of those who melt in love for You, let them listen to my ill words too , *Arunachala*🙏
ravi said…
*சப்த விடகங்கள்*

*அருணாசலா*

நான் திருவாரூரில் பிறக்க வில்லை ..

*வீதி விடங்கர்* தரிசனம் கண்டதில்லை ...

திருமால் மூச்சுக்காற்றில் உன் *அஜபா* நடனம் காணப்பெற்றேன்
*அருணாசலா*

நகர விடங்கர் காண திரு நள்ளாறு வரவில்லை ...

*உன்மத்த* நடனம் கனவில் காணப்பெற்றேன்

பித்தானேன் உன் மீதே *அருணாசலா*

*சுந்தர விடங்கர்* தரிசனம் கிட்ட ஓடி வர நினைத்தேன் நாகைக்கு...

என் எதிரில் நீ வந்து கடல் அலைகள் எழும் *தரங்க* நடனம் புரியக்கண்டேன் *அருணாசலா*

திருக்காராயில் வந்தே *ஆதி விடங்கர்* உனை பார்க்க விழைந்தேன் ...

கோழிகள் ஆடும் *குக்குட* நடனம் இங்கே காணப்பெற்றேன் *அருணாசலா*

திருக்குவளை ஓடி வர நினைத்தேன் வண்டு மலருக்குள் குடைந்து குடைந்து ஆடுதல் போன்ற உன் *பிருங்க நடனம்* காணப் பெற்றேன்

அங்கே *அவனி விடங்கராய்* காட்சி தந்தாயே *அருணாசலா*

திருவாய்மூர் ஓடி வர நினைத்தேன் *நீல விடங்கர்* தரிசனம் பெறவே *அருணாசலா*

தாமரை மலர் அசைவது போன்றுள்ள *கமல*🪷 நடனம் கண் குளிர காணப் பெற்றேன் இருக்கும் இடத்திலே

வேதாரண்யம் வர வேதம் அழைக்க கண்டேன் *புவனிவிடங்கர்* காண *அருணாசலா*

அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போல்

உன் *ஹம்சபாத* நடனம் இங்கேயே காணப்பெற்றேன் *அருணாசலா*


நான் இருக்கும் இடத்தில் நீ தேடி வந்தே

உளி செதுக்கா உன் மரகத திருமேனி காண்பித்து

அஜபா ,
உன்மத்த,
தரங்க ,
குக்குட,
பிருங்க ,
கமல,
ஹம்சபாத நடனம் புரிந்தாயே *அருணாசலா* ...

என் சொல்வேன் உன் கருணா ரஸ ஸாகரம் தனை..

தன்னியன் ஆனேன் தமிழே!!

உன்னால் இன்று *அருணாசலா* 💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்தப் பெரிய பணியில் முதல் ஸ்டெப்பாகச் செய்யவேண்டியது தற்போது மிஞ்சியுள்ள சாஸ்திரக்ஞர்களையெல்லாம் குருகுலமோ, பாடசாலையோ எதுவா ஒன்றில் பிடித்துப்போட்டு போதிப்பதற்கு ஊக்கம் தரவேண்டும். அங்கே பழைய சாஸ்திரங்களின் ஸம்பந்தமான நூல்களை, சுவடிகளையெல்லாம் முடிந்தமட்டும் சேகரித்து வைக்கவேண்டும். இவற்றில் ரிஸர்ச்சுக்கும் தூண்டுதல் அளிக்க வேண்டும். முக்யமான நூல்களையாவது அச்சுப் போடுவதற்கு ஸஹாயம் செய்யவேண்டும் நன்றாகப் படித்தறிந்த ஒருத்தர் நாலு பேருக்காவது அதைப் படிப்பிக்காமல் போனார் என்று ஏற்படவே கூடாது.
ravi said…
நன்றாகக் கற்று வித்வானாகிற எவனும் அப்புறம் தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து ப்ரசாரம் செய்தேயாக வேண்டுமென்பது ஆன்றோர் விதித்த விதி. தன்மட்டில் கற்றவனாயிருந்து பயனில்லை. கற்பிப்பவனாயிருந்து கல்வியின் பயன் வருங்கால ஸமுதாயத்துக்கும் போகும்படி செய்யவேண்டும்.
மநுஷ்யனுடைய வாழ்க்கையில் ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸந்ந்யாஸம் என்று நாலு ஆச்ரமம் உள்ளது என்றால், கல்வி கற்பிப்பதிலும், நாலு ஸ்டேஜ்கள் உண்டு. அதீதி, போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று இந்த நாலுக்குப் பேர். அதீதி என்றால் படிப்பது. முதலில் நன்றாகப் படிக்கவேண்டும். அப்புறம் போதம், அதாவது படித்ததை நன்றாகப் புரிந்துகொண்டு அதிலே மேலும் புது அறிவு பெறுவது. மூன்றாவதாக ஆசரணை. முதலிரண்டும் இப்போதுங்கூடப் பல ஸப்ஜெக்ட்களில் நடந்துவிடுகின்றன. ஆனால் இந்த மூன்றாவது விஷயத்தில் தான் கோளாறாக இருக்கிறது. அது என்ன? ஆசரணை என்றால் அறிவிலே இறக்கிக் கொண்டதை நம்முடைய வாழ்க்கையிலே இழைத்து, நடைமுறையில் நடத்திக் காட்டுவது என்று அர்த்தம். கற்றபின் அதற்குத் தக நிற்பது ஆசரணை.
இந்த மூன்றோடு மட்டும் வித்வானின் லக்ஷணத்தை முடிக்காமல், முடிவாக ‘ப்ரசாரணை’ என்றும் ஒரு நாலாவது லக்ஷணம் சொல்லியிருக்கிறது. இதுதான் தான் கற்ற கல்வி தன்னோடு போகாமல் அதை நாலுபேருக்குக் கற்றுக் கொடுப்பது. ப்ரசாரம் செய்வது ப்ரசாரணை.
ஸ்ரீ ஹர்ஷர் இந்த விஷயத்தைக் கவி சாதுர்யத்தோடு சொல்லியிருக்கிறார். நளனுடைய கதையை “நைஷதம்” என்ற பெயரில் எழுதியிருப்பவர் அவர். நளன் நிஷத தேசத்து ராஜாவானதால் புஸ்தகத்துக்கு “நைஷதம்” என்று பெயர் வைத்தார். வித்வான்கள் விரும்பும்படியான காவ்யம் அது. “நைஷதம் வித்வத் ஒளஷதம்” – நைஷத காவ்யமானது வித்வான்களுக்கு லேஹ்யம் மாதிரி – என்று சொல்வார்கள். அதிலே அவர் நளன் சதுர்தச வித்யைகளைக் கற்றுத் தேர்ந்தான் என்று சொல்லும்போது இந்த ஸமாசாரம் சொல்லியிருக்கிறார். ‘சதுர்தச’ என்ற வார்த்தையில் சிலேடை செய்து சொல்லியிருக்கிறார்.
‘சதுர்தச’ என்ற வார்த்தை இரண்டுவிதமாக அர்த்தம் கொடுக்கும். பதிநாலு என்பது ஒரு அர்த்தம். தசம் – பத்து, சதுர்தசம் – நாலு ப்ளஸ் பத்து, அதாவது பதிநாலு நாலு வேதம், அதன் ஆறு அங்கம், நாலு உபாங்கம் என்பவை சேர்ந்து பதிநாலு வித்யைகள்.
‘சதுர்தச’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் நாலு தசை, நாலு விதமான ஸ்டேஜ்கள் என்பது.
சதுர்தச வித்யைகளைக் கற்று, அவற்றுக்கு அதீதம், போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று சதுர்தசைகளை நளன் கொடுத்தான் என்று (கவி ஸ்ரீஹர்ஷர்) வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்.
ravi said…
22.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 17)

Sanskrit Version:

अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम्।
विनाशमव्ययस्यास्य न कश्िचत् कर्तुमर्हति।।2.17।।

English Version:

avinaashi tu tadviddhi
yena sarvamidam tatam |
vinaashamavyayasyaasya
na kashchitkartumarhati ||


Shloka Meaning

O Arjuna! Know that the Atma pervades the whole universe. The Atma by nature is undestructable
and imperishable. That which does not perish cannot be destroyed.

Additional explanation:

The every moving and non moving objects of the world is pervaded by the Self, which is present
in the heart of every individual, one should consider every object as the manifestation of the self
and be full of love and kindness for all. He should not commit any sin, since Atma, the Lord,
is present every where. Since the Atma is ever present and can never be destroyed, one should
contemplate abd strive to live in the Atma without any kind of doubt or fear.

Jai Shri Krishna 🌺
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம்

ஹரிஹய நைர்ருதமாருத
ஹரிதாமந்தேஷ் வவஸ்திதம் தஸ்ய
விநும: ஸாநுத்ரிதயம் விதிஹரி கௌரீச விஷ்டபாதாரம் ||

அந்த மேருவின் கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு
திசைகளின் எல்லையில்
இருக்கின்றதாயும்
பிரும்ம விஷ்ணு ருத்திர லோகங்களுக்கு ஆதாரமானதுமான மூன்று தாழ்வரைகளையும் வணங்குகிறோம்.(3)
ravi said…
🌹🌺 "The desire of our mind is worldly
Less and less stuff
The inclination of the mind is towards Sri Krishnan Thiruvadi
It becomes more.. A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Whatever the mind desires
Its enchanted..
The mind is worldly things
Mind when attached
becomes contaminated.
When we cling to Lord Sri Krishna
Permanent pleasure
reaches

🌺 Our mind is the bond
It is also the reason for Moksha.
The mind is full of desires,
This mind is the whole body
Fill it with life
Enter and run
does.

🌺 As desires increase
Demands are increasing.
This is distressing.
Reduce requirements
Kondal peace of mind
becomes. Desires
Taming involves the mind.

🌺 The desire of our mind is worldly
Less and less stuff
The inclination of the mind is towards Sri Krishnan Thiruvadi
Increases .Mind is single-minded
Spiritual exercises while shooting
getting stronger/..

🌺 Giving fertilizer to life
If it's true, forever
durability,
This is called Sat.

🌺 Earthenware is different
However, the clay is the same.
There are many types of jewelry
But gold is the same.

“Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare - Say 2 times

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நம் மனதின் நாட்டம் உலக*
*பொருட்களில் குறைய குறைய*
*மனதின் நாட்டம் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி மீது*
*அதிகமாகிறது* .. *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺மனம் எதை விரும்புகிறதோ
அதன் மயமாகிறது..
மனம் உலக பொருட்களை
பற்றும்போது மனம்
அசுத்தமடைகிறது.
நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை பற்றும் போது
நிலைத்த இன்பத்தை
அடைகிறது.

🌺நம் மனம் தான் பந்தத்திற்கும்
மோக்ஷதிற்கும் காராணம்.
மனம் ஆசைகள் நிறைந்தது,
இந்த மனமே உடல் முழுவதும்
நிறைந்து அதற்கு உயிரை
கொடுத்து இயக்கவும்
செய்கிறது.

🌺ஆசைகள் அதிகரிப்பதால்
தேவைகள் அதிகமாகிறது.
இதனால் மனக்கஷ்டம்.
தேவைகளை குறைத்துக்
கொண்டால் மனம் நிம்மதி
யாகிறது.ஆசைகளை
அடக்கினால் மனம் அடங்கும்.

🌺நம் மனதின் நாட்டம் உலக
பொருட்களில் குறைய குறைய
மனதின் நாட்டம் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி மீது
அதிகமாகிறது .மனம் ஒருமுக
படும்போது ஆன்மீக பயிற்சிகள்
வலுவடைகிறது/..

🌺உயிருக்கு உரம் கொடுப்பது
உண்மை என்றால் என்றும்
நிலைத்திருக்கும் தன்மை ,
இதுவே சத் எனப்படும்.

🌺மண் பாண்டங்கள் வெவ்வேறாக
இருந்தாலும் களிமண் ஒன்றே .
நகைகள் பல விதம்
ஆனால் தங்கம் ஒன்றே.

🌺🌹“ ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே - 2 முறை சொல்ல வும்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
#சித்தமல்லிபெருமாள்

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தமல்லி கிராமம்.

இந்தத் தலத்தில் காவிரி நதியின் கிளை நதியான கொள்ளிடம் ஆறு உத்தரவாகினியாகப் பாய்வதால், காசிக்கு நிகரான புனிதம் பெறுகிறது. இந்தத் திருத்தலத்துக்கு காஞ்சி மஹாஸ்வாமிகள் விஜயம் செய்திருக்கிறார்.

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் இத்தலத்து பெருமாளையும், பிராட்டியையும் பூஜித்திருக்கிறார்.

இத்திருக்கோயிலின் கோபுரம் சிறியதுதான். கீர்த்தி மிகப்பெரிது. திருக்கோயிலின் உள் நுழைந்தவுடன் வலப்புறம் ஸ்ரீமகா கணபதியும், இடதுபுறம் ஸ்ரீ ஆஞ்சனேயரும் காட்சிதருகிறார்கள்.

அவர்களைத் தரிசித்து உள்ளே சென்றால் இடதுபுறம் செல்வத்திற்கதிபதியான ஸ்ரீ குபேரரை தரிசிக்கலாம். அதற்கடுத்து மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் அதற்கெதிரில் ஸ்ரீ சுப்ரமண்யரும் சன்னிதி கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் ஆசிபெற்று உள்ளே சென்றால் இடது புறம் ஸ்ரீவிட்டலர் ஸ்ரீ ருக்மாயியுடன் காட்சி தருகிறார். அவர்களுக்கருகில் பரமபத வாசல் அலங்காரமாகக் காட்சியளிக்கிறது.

கருவறையில் இத்தலத்தில் அருளாட்சி நடத்தி வரும் ஸ்ரீவேங்கடநாதன் ஸ்ரீ பத்மாவதி தாயாருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த பெருமானைத்தான் கும்பகோணத்தில் வசித்து வந்தபோது ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதித்திருக்கிறார். அவர்களுக்கெதிரில் கருடபகவான் காட்சி தருகிறார்.

பெருமாள் தன் இடது கரத்தில் ஏந்தியுள்ள சங்கில் ஸ்ரீ வலம்புரி விநாயகரும், அவரது வலது தோளில் முருகப்பெருமானின் வேலும் காட்சி தருகின்றனர். அவரின் நாபியில் உள்ள ஸ்ரீராகவேந்திரரின் உருவை, அபிஷேக்தின் போது மட்டுமே காணமுடியும்.

இறைவனின் அருளாடல்களை அதில் தோய்ந்து நினைக்கையில் வருவது பரமானந்தமல்லவா? அந்த ஆனந்தத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டாமா? வாருங்கள் சித்தமல்லிக்கு! பெருமாளின் அருளாடலுடன் மந்த்ராலய மகானையும் தரிசிக்கலாம்.

அதுமட்டுமல்ல. அந்த மகானின் அருளாசியுடன் விளங்கும் கோசாலையையும் காணலாம். கோசாலை அமைய அந்த மகான் புரிந்த லீலைகள் ஏராளம். எல்லாவற்றையும் இங்கு குறிப்பிட இயலவில்லை. கோசாலைக்கு உங்கள் உதவிக் கரத்தையையும் நீட்டலாம்!

ஓம் நமோ வெங்கடேசாய 🙏
ravi said…
[22/03, 20:32] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 112 started on 6th nov

*பாடல் 35 ...* *விதிகாணும்*

(நற் கதி காண அருள்வாய்)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?

மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.
[22/03, 20:35] Jayaraman Ravikumar: *மதி ..* . பிறைச் சந்தரனைப் போன்று,

*வாள் நுதல்* ... வளைந்து ஒளி பொருந்திய நெற்றியை உடைய,

*வள்ளியை* அல்லது ... வள்ளி பிராட்டியைத் தவிர,

*பின் துதியா விரதா* ... வேறு ஒருவரையும் துதிக்காத செயலை ஒரு
விரதமாகக் கொண்ட கந்தக் கடவுளே,

*சுர பூபதியே ...* விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே, அரசனே,

*விதி காணும்* ... பிரம தேவன் படைத்த,

*உடம்பை விடா வினையேன் ..* . இந்த தேகத்தை விட முடியாத
அடியேன்,

*கதி காண* ... நல்ல கதியை அடையும் பொருட்டு,

*மலர்க் கழல்* என்று அருள்வாய் ...

தாமரை மலர்கள் போன்ற
உனது திருவடிகளை அடியேனுக்கு என்று கொடுத்தருள்வீர்🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
[22/03, 20:28] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா *ஸம்மிதஸ்ஸம* : |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[22/03, 20:28] Jayaraman Ravikumar: *109. ஸம்மிதாய நமஹ (Sammithaaya namaha)*
[22/03, 20:30] Jayaraman Ravikumar: நரசிம்மரை நேரில் காணத் தவம் செய்யப் போவதாகச் சொன்னால் அந்த வேடனால் அதைப் புரிந்து கொள்ள முடியாது
என்று கருதிய பத்மபாதர்,

“அப்பா! நானும் ஒரு மிருகத்தைத் தேடித் தான் இக்காட்டுக்கு வந்துள்ளேன்!” என்று
அவனது மொழியிலேயே மறுமொழி கூறினார்.

ஆனால் வேடன் விடவில்லை. “என்ன மிருகம் அது?” என்று கேட்டான்.

“அது உனக்குத் தெரியாதப்பா!

கழுத்துக்கு மேல் சிங்கம் போலவும், கழுத்துக்குக் கீழே மனிதன் போலவும்
அந்த மிருகம் இருக்கும்!” என்றார் பத்மபாதர்.🪷🪷🪷
ravi said…
[22/03, 20:07] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*69வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[22/03, 20:07] Jayaraman Ravikumar: ஜட3தா பசுதா கலங்கிதா

குடிலசரத்வம் ச நாஸ்தி மயி தே3வ |

அஸ்தி யதி3 ராஜமௌலே

ப4வதா3ப4ரணஸ்ய நாஸ்மி கிம் பாத்ரம் || 69
[22/03, 20:27] Jayaraman Ravikumar: என்னிடத்தில் ஜடத்தன்மையோ ,
ஓடாத மான் களங்கம் கொண்ட சந்திரன் போலவோ

வளைந்து வளைந்து போகும் கங்கை போலவோ ....இப்படி நான் ஏதாவது ஒரு குறையுடன் இருந்திருந்தால் என்னையும் உன் சிரசில் வைத்து கொண்டாடி இருப்பாயோ ?

என்ன செய்வது என்னை நீ ஒரு குறையும் இல்லாமல் படைத்து விட்டாய் ...

🥇🥇🥇
ravi said…
சமயம் இது சமயம் .. சமயம் யாவும் சம்பவிக்கும் அன்னை அவளை தரிசிக்க

அபயம் என்றே அளறியோர்க்கு க்ஷணம் கூட தாமதம் இன்றி சடுதியில் வரும் மாரி காண சமயம் இது சமயம்

புரம் எரித்த புண்ணியன் அகம் அழிக்கும் அருட்காவலன் அங்கம் தன் பாகம் கொண்ட அன்னை அவள் அழகு கொலு வீற்றிருக்கும் சமயம்

புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே

சமயம் வந்து உதவி செய்யும் சமயபுரத்தாளை சந்திக்கவே 🥇
ravi said…
திருவடி பார்த்தபின் மறுபடி பிறக்கும் எண்ணம் வருமோ அம்மா ?

வரும்படி கொண்ட வாழ்க்கை என்றாலும்

பிரம்படி கொண்ட வாழ்க்கை என்றாலும்

நரம்படி நலியும் வாழ்க்கை என்றாலும்

கரும்படி காணும் உன் திருவடி

தினம் தினம் பார்க்கும் கருவடி இல்லா வாழ்க்கை

தருவாயோ தயாநிதியே 🙏🙏🙏
ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை"..*

*_✍️ 22, Wednesday, Mar., 2023_*

https://srimahavishnuinfo.org

*🧿’நான் சொல்வது தான் சரி.’’?*

*♻️ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் சில தடைகள்,குறுக்கீடுகள் இருக்கத்தான் செய்யும்..*

*♻️நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழிவிடவோ செய்யாத சில தவிர்க்க முடியாதவைகளாக அவைகள் இருக்கலாம்..*

*♻️மாற்ற முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.*

*♻️அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன்,நான் சொல்வது தான் சரி, என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடிகட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.*

*♻️இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக் குறைவாக தோன்றுவது உண்டு.*

*♻️ஒருவருடைய பிடிவாதத்தை அவர்கள் கோணத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.*
.
*♻️ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.*

*♻️பனி மூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.*

*♻️ஒருநாள் இரவு கடும் பனி மூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.*

*♻️அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார்.*

*♻️“ஐயா நாம் போகின்ற பாதையில் சற்றுத் தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்” என்றார்.*

*♻️“அது நின்று கொண்டு இருக்கிறதா? இல்லை, நகர்கிறதா?”என்று கேட்டார் கேப்டன்.*

*“நகராமல் தான் இருக்கிறது” என்றான்..*

*♻️“உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்.”என்றார் கேப்டன்.*

*♻️அப்படியே சிக்னல் அனுப்பப்பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது.*

*♻️“நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது”.என்றது.*

*♻️எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். “நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்”*

*♻️மறுமொழி உடனடியாக வந்தது. “ஐயா நான் கப்பல் படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்” என்றான்..*

*♻️கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படிக் கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.*

*“இது போர்ப் படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்*

*பதில் உடனடியாக வந்தது.*

*♻️“இது கலங்கரை விளக்கம்” அய்யா என்றான் அந்த ஊழியர்..*

*♻️மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️கேப்டனுக்கு வந்த கோபம் போல,*

*“ஈகோ” பிரச்சினை நமக்கும் சில வேளைகளில் எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.*

*⚽இந்த பிடிவாத குணம் தான் மற்றவர்களை அனுசரித்து செல்ல முடியாமல் தடுக்கிறது.*

*🏵️அதாவது நான் உன்னை விட பலம் வாய்ந்தவன் ஆகவே நீ தான் என்னை அனுசரித்து செல்ல வேண்டும் என்கிற குணம்.*

*⚽இதை நம்மில் பலரும் தவிர்த்தால் உலகத்தில் பிர்ச்சினைகளே இருக்காது..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
அம்மா, அம்மா 🙏🙏

உன் பாதம் கண்டேன் அம்மா
என் கர்வம் நீப்பாய் அம்மா

உன் பாதம் பார்த்தேன் அம்மா
என் கோபம் குறைப்பாய் அம்மா

உன் பாதம் ருசித்தேன் அம்மா
என் ஆசை மறைப்பாய் அம்மா

உன் பாதம் பணிந்தேன் அம்மா
என் தாபம் தீர்ப்பாய் அம்மா

உன் பாதம் சரணடைந்தேன் அம்மா
என் ஜென்ம சாபல்யம் அம்மா அம்மா !!!! 🙏🙏
ravi said…
*அம்மா*

வண்டார் குழலி உன் பத்ம பாதங்கள் சொரியும் தேனை உண்டே வண்டுகள் பூக்கள் நாடி எங்கும் செல்வதில்லை

கமலாம்பிகையே உன் பாத கமலங்கள் கதிரவன் வரவை நாடி காய்வதில்லை

அமுதை பொழியும் தாரகையே நிலவு உன் கடனாளியே... உன்னிடம் கடன் பெற்ற அமுதம் அன்றோ அவன் எங்கும் பொழிவது ...

குபேரன் கொண்ட செல்வம் எல்லாம் உன் முத்து பற்கள் பொழிந்த தனம்
அல்லவோ ?

எல்லோரும் கடனாளியே அம்மா உனக்கு ...

பட்ட கடன் தீர்க்க முடியுமோ

பாற்கடலை சொம்பு கொண்டு அளக்க முடியுமோ

வானம் அதை அளவு பார்க்க இயலுமோ ?

வட்டி குட்டி போட்டு நிற்க எட்டி நின்ற சட்டிக்குள் ஏகாந்தமாய் நிற்கின்றேன் ..

பட்ட கடன் நீ திரும்பி கேட்கமாட்டாய் என்றே 🦋🦋🦋
ravi said…
[23/03, 19:57] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*70 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[23/03, 19:58] Jayaraman Ravikumar: அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர-புத்3த்4யா

       வரிவஸிதும் ஸுலப4: ப்ரஸன்ன-மூர்த்தி: |

அக3ணித-ப2லதா3யக: ப்ரபு4ர்-மே

       ஜக3த2தி4கோ ஹ்ருதி3 ராஜசேக2ரோஸ்தி ||                    
ravi said…
பிறைசூடிய
பெருமான் மனத்தை வசப்படுத்தியவர்களால்

உள்ளத்தும் புறத்தும் ஆராதிக்கக்கூடியவர்;

தெளிந்த உருவமுடையவர் (அல்லது அருள் புரியத் தயாராய் இருப்பவர்);

எண்ணவியலாத நற்பயன்களை அளிப்பவர்.

சகலத்திற்கும் பிரபு.

உலகத்திற்கு அதீத மானவர். (அத்தகையவர்)

எனது உள்ளத்தில் எப்பொழுதும் உறைகின்றார்.

🙏🙏🙏🙏🙏
ravi said…
[23/03, 19:55] Jayaraman Ravikumar: *109. ஸம்மிதாய நமஹ (Sammithaaya namaha)*
[23/03, 19:55] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா *ஸம்மிதஸ்ஸம* : |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
ravi said…
ஐயா! நான் சிறுவயது முதல் இக்காட்டில் தான் இருக்கிறேன்.

இதன் மூலை முடுக்குகள் அனைத்தும் எனக்குத் தெரியும்.

இக்காட்டில் அப்படி ஒரு மிருகம் இல்லவே இல்லை.

நீங்கள் தயவு செய்து திரும்பிச் செல்லுங்கள்!” என்றான் வேடன்.

“இல்லை அப்பா! உனக்குத் தெரியாது. ஆனால் அப்படி ஒரு மிருகம் உள்ளது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

நீ உன் வேலையைப் பார்!” என்றார் பத்மபாதர்.🪷🙏
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 113 started on 6th nov

*பாடல் 35 ...* *விதிகாணும்*

(நற் கதி காண அருள்வாய்)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?

மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.
ravi said…
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதவடி
களையெத்திடி ராகவகை யதின்மீறிக்
கருணைப்பிற காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவயை யொழிவேனோ?

... என்கிறது திருவொற்றியூர் திருப்புகழ் ('சொருபப் பிரகாச'
- பாடல் 687).

இருவினையின் பயன் அதைச் செய்தனைச் சென்று அடைவதற்கு
காரணமாகிய நியதியே விதி எனப்படும்.

கருமங்களைச் செய்து
கொண்டிருக்கும்
வரை, பிறப்பும் நீங்காமல் திருப்பத் திருப்ப
வந்துகொண்டேதான் இருக்கும்.

பற்றை விட்டால் அவா நீங்கும்.

அவா அகன்றால் வினை நீங்கும்.

வினை நீங்கினால் மறு பிறப்பு கிடையாது.

தன்னை விட்டு நீங்காத
வள்ளியுடன் சேர்ந்தே முருகன் உயிர்களுக்கு அனுக்ரகம்
செய்கிறான்.

பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கே அந்த அனுக்ரகம்
கிட்டும்.

ஆதலால் பக்குவம் அடைவதற்கு சரீர அபிமானத்தால்
வரும் இரு வினைகளையும் விட்டுவிட வேண்டும் என்பதையே
இப்பாடலில் சுட்டிக் காட்டுகிறது.🦋🦋🦋
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 521* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*

*சக்தி ஆலயம்: அவனியாபுரம் ரேணுகாம்பாள்:*
ravi said…
இந்த கணம் முதல் க்ஷத்ரியர்களை பூண்டோடு அழிப்பேன் என சபதம் பூண்டு புறப்படுகிறார்.

பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார். கார்த்த வீர்யன் புதல்வர்கள் மற்றும் அரச குமாரர் களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார்.

ரத்த ஆறு ஓடியது.

குருக்ஷேத்ரத்தில் இரத்தம் குளமாகியது.

ஜமதக்னியின் தலையை மீட்டு உடலோடு சேர்த்து ஈம கிரியைகளை செய்தனர்.

இருபத்தொரு திக்விஜயம் செய்து பாரதம் முழுதும் பல க்ஷத்ரியர்கள் வம்சம் வேரறுந்தது.

அந்த க்ஷத்ரிய ஹத பாபத்திற்கு பரிகாரமாக யாகங்கள் செய்தார்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 115*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

47 வது ஸ்லோகம்
ravi said…
अभिदाकृतिर्भिदाकृतिरचिदाकृतिरपि चिदाकृतिर्मातः ।

अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥ ४७॥

47. Abhidha kruthlr bhidha kruthir, achidhakruthir api chida kruthir matha,

Anahantha thwamahantha bramayasi Kamakshi saswathi viswam.

அபி⁴தா³க்ருதிர்பி⁴தா³க்ருதிரசிதா³க்ருதிரபி சிதா³க்ருதிர்மாத: ।

அனஹன்தா த்வமஹன்தா ப்⁴ரமயஸி காமாக்ஷி ஶாஶ்வதீ விஶ்வம் ॥47॥ ---2
ravi said…
அம்பாள் பேதமில்லாதவளாகவும்,

பேதங்கள் உள்ளவளாகவும்,

சித் ஸ்வரூபிணியாகவும்,

சித் ரூபமே இல்லாதவளாகவும்,

அஹங்காரமே உருவானளாகவும்,

அஹங்காரம் சற்றும் இல்லாதவளாகவும்,

பல வித குணங்கள் உடையவளாக, நிர்குணமாகவும் உள்ள சாஸ்வத மாய ஜகத் காரிணி.

ஒரு சிறந்த நடிகை பல வித குணாதிசயங்களை காட்டுபவது போல் அல்லவா காமாக்ஷி காட்சி தருகிறாள்.👍
ravi said…
*ராமா*

வசந்த காலம் உன் நாமம் அதில் தஞ்சம் புகுந்ததோ ☘️🍀🪴

வானில் விண்மீன்கள் உன் நாமம் எனும் தடாகம் தனில் நீந்த கற்றுக்கொண்டதோ ✨✨✨

அன்னங்கள் உன் நாமம் சொல்லியே நடை பயில முயன்றதோ 🦢🦢🦢

குயில்கள் உன் நாமம் கேட்டே குரல் வளர்த்துக்கொண்டதோ ?🪶🪶🪶

மயில்கள் உன் நாமம் கண்டே தோகை தன்னை வான் முட்ட விரித்ததோ 🦚🦚🦚

கிளிகள் உன் நாமம் எனும் பழம் தனை கொத்தி கொத்தி இன்னும் சுவை ஊட்டியதோ பாகவதம் போல் 🦜🦜🦜

ரீங்காரம் தனில் ஓங்காரம் செய்யும் வண்டுகள்

மமகாரம் அகங்காரம் ஒழித்தே உன் நாமம் தனில் தேன் உறுஞ்சியதோ 🪲🪲🪲

*பிபரே ராமரஸம்* என்றேன் ...

ராமா ஒரு சொட்டு பாக்கி இன்றி

எல்லா உயிர்களும் உறுஞ்சி விட்டதே உன் நாம சுவையை இன்றே ராமா 🦥🦥🦥🦋🦋🦋🐻🐻🐿️🐿️
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இப்படிப் போகப் போக, உபாஸனா மார்க்கம்தான் வித்யை என்பதும் விரிவடைந்து, இப்போது நாம் சொல்கிற அர்த்தத்தில் அநேக ‘ஆர்ட்’களும் ஸயன்ஸ்களும் ஏற்பட்டு, இவையும் வித்யை என்று பெயர் பெற்று குருகுலங்களில் கற்பிக்கப்படலாயின. சாந்தோக்ய உபநிஷத்திலேயே இப்படிப்பட்ட வித்யைகளுக்கு ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது, ‘எத்தனை காலத்துக்கு முன்னேயே நம் பூர்விகர்கள் இத்தனை துறைகளில் தேர்ச்சி கண்டு, அவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தும் வந்திருக்கிறார்கள்!’ என்பதாக நமக்கு ஆச்சர்யமே உண்டாகிறது.

ravi said…
அநேக வித்யைகளைக் கற்றும் ஆத்ம ஞானத்துக்கு அப்யாஸம் பண்ணாததால் நிறைவு காணாமல் ஏதோ ஒரு ஏக்கம் பிடித்து க்லேசப்பட்டுக் கொண்டிருந்த நாரதர், தாம் படித்த வித்யைகளின் பேர்களை ஸநத்குமாரரிடம் சொல்வதாக அந்த உபநிஷத்தில் வருகிறது. நாலு வேதங்கள், ஐந்தாவது வேதமாக நாரதர் சொல்கிற இதிஹாஸ புராணங்கள் ஆகியவற்றோடு “வேதங்களின் வேதம்” என்று அவர் குறிப்பிடும் வ்யாகரணம், “பித்ர்யம்” என்பதான பித்ரு கர்மாக்களைப் பற்றிய கல்பம், “ராசி” என்பதான கணித சாஸ்த்ரம், “தைவம்” என்னும் சகுன சாஸ்த்ரம், “நிதி” என்கிற பொருளாதார சாஸ்த்ரம், “வாகோ வாக்யம்” என்கிற தர்க்க சாஸ்த்ரம், “ஏகாயனம்” என்கிற ராஜநீதி, “தேவ வித்யா” என்பதான நிருக்தம் (அதாவது வேதத்தின் அக்ஷரங்களுக்கு அர்த்தம் சொல்கிற Etymology), “ப்ரஹ்ம வித்யா” (வேதாந்தம் பூராவுக்கும் ஏற்பட்டுள்ள ப்ரஹ்ம வித்யா என்ற பேர் இந்த இடத்தில் வேதமந்த்ர சப்தங்களை வழுவற நிர்ணயித்துத் தரும் சிக்ஷா சாஸ்த்ரம் என்ற phonetics-ஐ மட்டும் குறிக்கும்) “பூதவித்யா” என்னும் ஜீவஜந்துக்களைப் பற்றியதான Biology, “க்ஷத்ரவித்யா” என்பதான க்ஷத்ரியர்களுக்குரிய யுத்த சாஸ்த்ரம், அஸ்ட்ரானமி அஸ்ட்ராலஜீ ஆகிய இரண்டும் சேர்ந்த “நக்ஷத்ர வித்யா”, விஷங்களை முறிக்க வழி சொல்லித்தரும் “ஸர்ப்ப வித்யா”, “தேவஜன வித்யா” (அதாவது உச்சாணி தேவர்களுக்கும் நம்மைப் போன்ற மநுஷ்ய ஜாதிக்கும் இடையிலேயுள்ள ‘தேவஜன”ங்களான கந்தர்வர்களுக்குரிய ஸங்கீத நாட்ய நாடக சில்ப சித்ரக் கலைகள்) என்றிப்படி அநேக “கோர்ஸ்”கள் படித்ததாக நாரதர் சொல்கிறார்*.

ravi said…
நாரதர் மஹாமேதை பொருந்தியவர். அதனால் அவரால் இத்தனை படிக்க முடிந்தது. அதோடு இத்தனை படிப்பாலும் ஆத்மானந்த நிறைவைப் பெற முடியவில்லை என்று தெரிந்துகொள்கிற விவேக விநயங்களும் அவருக்கு இருந்தது. அதனால்தான் ஸநத்குமாரரை ஆச்ரயித்து அவரிடமிருந்து ஆத்ம வித்யோபதேசம் பெற்றிருக்கிறார். ஈச்வர தத்வத்தைக் காட்டிக் கொடுக்கவே கல்வி ப்ரயோஜனப்படவேண்டும் என்பதும் இதிலேயே தெரிகிறது. அது இருக்கட்டும். ‘நான்’ சொல்ல வந்தது – இத்தனை கோர்ஸ்கள், இத்தனை ஸப்ஜெக்ட்கள் ஏற்பட்டுவிட்டனவென்றால் அப்போது குருகுலமும் விஸ்தாரமாகிக் கொண்டே போய் பல டீச்சர்கள் இருந்திருக்க வேண்டும். நாரதரைப் போல இல்லாமல் இவற்றிலே ஒரு சில ஸப்ஜெக்ட்களை மட்டும் படிக்கும் மாணவர்களைக் கொண்ட தனித்தனியான பல க்ளாஸ்கள் அமைந்த பெரிய வித்யாசாலைகள் உண்டாயிருக்கவேண்டும். காட்டிலே ரிஷிகள் நடத்திய இப்படிப்பட்ட Forest University-களின் அடிப்படையிலேதான் டாகூர் சாந்தி நிகேதனம் அமைத்தது.

நாரதருக்கு ஏற்பட்ட குறை பொதுவாக அந்தக் கால வித்யார்த்திகள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்காது. ஈச்வர ஸம்பந்தம், ஆத்ம ஸம்பந்தம் உள்ளதாகவே அந்நாள் கல்வி இருந்தாலும் ஒரு ஸாமான்ய ஜீவனை வித்யாப்யாஸ காலத்திலேயே ஒரேயடியாக அவனுக்கு எட்டாத ஞானமார்க்கத்தில் பிடித்துத் தள்ளிவிடவில்லை. அறிவு ரீதியில் ப்ரம்ம வித்யையையும் சொல்லிக்கொடுத்தாலும் அதை அப்பொழுதே அவன் அநுபவத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று நிர்பந்தப் படுத்தவில்லை. படிப்பு முடிந்த பிறகு அவன் கல்யாணம் கார்த்திகை பண்ணிக்கொண்டு குழந்தை குட்டிகளைப் பெற்று இல்லற வாழ்க்கையை நன்றாய் நடத்திப் பழைய கர்மாக்களைத் தீர்த்துக்கொண்டும் தனக்கான கர்மாவைப் பண்ணியும் சித்த பரிபாகம் (பரிபக்குவம்) அடைந்து, அப்புறம்தான் ஸந்நியாஸி ஆகி ஆத்மவிசாரம் செய்ய வேண்டுமென்பதே வேத சாஸ்த்ர வழி. இதற்கு அநுகூலம் பண்ணும்படியாகவே கல்விமுறை இருந்தது.
ravi said…
சங்கராம்ருதம் - 460

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, ""சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.

ravi said…
அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை.
அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச்சத்தம் கேட்டது.
தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, ""வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம் பண்ணிட்டு வாயேன்,'' என்றார்.

அந்த அம்மையாரும் வெளியே போய்விட்டார். அவர் வெளியே செல்லவும், ஒரு விவசாயக் குடும்பப் பெண்மணி சுவாமியைத் தரிசிக்க உள்ளே வந்தார்.

ravi said…
பரம ஏழையான அந்தப் பெண்ணின் இடுப்பில் அவளது குழந்தை. ஆறுமாதம் தான் இருக்கும். அதற்கு ஏகமாய் ஜலதோஷம். மூச்சு விட திணறிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் பெரியவரிடம்,""சுவாமி! கொழந்தைக்கு ஜல்ப்பு...மருந்து வாங்க வழியில்லே! சாமி தூண்ணுறு(திருநீறு) கொடுக்கணும்,'' என்று கண்களில் நீர் மல்க கேட்டார்.

பெரியவர் அவசர அவசரமாக, முன்பு வந்த பக்தை கொடுத்த குங்குமப்பூ தொன்னையை எடுத்து அவரிடம் கொடுத்தார். ""இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. குழந்தைக்கு இரண்டு, மூணு தடவை பற்றுப்போடு,'' என்றார். அத்துடன், ""ரோட்டிலே போகும் போது தூசு விழுந்துடும்! மறைச்சு எடுத்துண்டு போ,'' என்று எச்சரிக்கை வேறு!

அவள் சென்றதும், தன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்தார். அதை சிறிது தண்ணீர் விட்டு பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்று போட்டுக் கொண்டாற்போல இட்டுக் கொண்டார்.

இதற்குள் காமாட்சியைத் தரிசிக்க சென்ற குங்குமப்பூ அம்மையார் திரும்பினார். பெரியவர் நெற்றில் பற்று போட்டிருந்தது கண்டு, தான் கொடுத்த மருந்தைத் தான் இட்டிருக்கிறார் என்று ஏராளத்துக்கு சந்தோஷப்பட்டார்.

மறுநாள் வழக்கம் போல் அந்த அம்மையார் வந்தார்.

"உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது' என்றார். அம்மையாருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

பெரியவர் இங்கே வார்த்தையைக் கவனமாகக் கையாண்டார். ""உன் குங்குமப்பூவால் "என்' கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்தஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்திருக்கும் இல்லையா! அதைத் தான் அப்படி குறிப்பிட்டார்.

ஆக, அவர் வைத்த குங்குமம், இரண்டு நெஞ்சங்களில் மகிழ்ச்சியை சங்கமிக்கச் செய்து விட்டது.

இதுதான் மகாபெரியவரின் கருணா கடாட்சம்!

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ravi said…
*அவத்யா* =

குறைபாடு – தரம்தாழ்ந்த

❖ *150 நிரவத்யா* =

உயர்வானவள் ; மேம்பட்டவள் ; முழுமையானவள்
ravi said…
அம்மா

*என் முன் நீ எப்படி வர வேண்டும் தெரியுமா ?*

மின்னல் போல் வந்தே மறையக்கூடாது ..

மெதுவாய் அன்னம் தோற்கும் நடையில்

நவரத்தினங்கள் சிந்தாமணியுடன் உறவாட

சித்திரை பெண்ணாய்

சிங்கார ரதத்தினிலே வாக் தேவிகள் வாழ்த்துரை சொல்ல ..

வண்ணத் தாமரைகள் வழி எங்கும் வாடாமல் முழித்திருக்க

ரீங்காரமிடும் வண்டுகள் தேனை சொரிந்து வழி எங்கும் மதுரம் ஓடவிட ..

பாலினும் சொல் இனியவளே

மானும் மயிலும் கிளியும் மானும் குயிலும் ஹம்சமும்

கொஞ்சி குளவாட

வஞ்சி உன் கரங்கள் கரும்பும் மலரும் ஏந்திருக்க

இணை இல்லா அழகுடன் ஈடில்லா உன் காரூண்யத்துடன்

காதுகளில் தாடங்கம் தழைந்து தழைந்தாட

உன் கண்கள் எனும் தடாகத்தில் விழிகள் எனும் கருணை மீன்கள் நீச்சல் போட்டி போட

தேவர்கள் உன் நாமம் வாசிக்க

உன்னவர் ஆனந்த நடம் புரிய

நந்தி மேளம் கொட்ட திருமால் குழல் ஊத

தாமரை உடையாள் இருவரும் சாமரம் வீச

தங்க பேழையாய்
மா தவம் புரிபவளே

மாம்பழ கண்களால் என்னை அணைத்து க் கொள்ள வருவாய் ..

விடிவுக்கு வடிவம் தருபவளே வருவாய் வருவாய் *அம்மா*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

107 –
பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா (அ)
ravi said…
*Meaning*

Oh king of mountains , that is the form of patience pls consider all ill words uttered on You as good words , tolerate me and bless me as You wish *Arunachala* ...
ravi said…
*அருணாசலா*

உன் பொற் சபை கண்டேன் சிதம்பரம் வந்தே புனிதமானேன்

இனி புவி வந்து மீண்டும் பிறவேனோ *அருணாசலா*

உன் வெள்ளி சபை வந்தேன் வெள்ளி முளைக்கும் முன்னே

மதுரை மாநகரில் கால் மாற்றி எக்காலமும் என்னை காப்பாற்றும் உன் நடனம் காணப்பெற்றேன் *அருணாசலா*

*ஒரு கால்*..... எனும் சந்தேகம் ஒழியக்கண்டேன் *அருணாசலா*

ரத்தின சபை வந்தேன் திருவாலங்காடு தனில் உன் திருவடிகள் கண்டேன்
*அருணாசலா*

ரத்தினமாய் நீ ஜொலிக்க கண்டேன் ..

நவ ரத்தினங்கள் யாவும் உன் புன்னகையில் தெறித்து ஓடும் ரகசியம் என்ன *அருணாசலா* ?

தாமிர சபை வந்தேன் .

நெல்வேலி தனில் உன் திரு நடனம் கண்டே

கண்களில் தாமிரபரணி ஓடக்கண்டேன் ... *அருணாசலா*

சித்திர சபை வந்தேன் .

குற்றால நாதனாய் பொங்கி வரும் அருவியில் உன் நடனம் ஜதி போடக்கண்டேன் ..

பித்தம் தெளிந்து என் சித்தமெல்லாம் சிவம் நிறையக்கண்டேன் *அருணாசலா*

நான் திட்டியதெல்லாம் உன் திருப்புகழாய் மாற வைத்தாய் ..

திகட்டும் அளவிற்கு உன் நாமம் தினம் சொல்லும் திறன் தந்தாய்

என்ன புண்ணியம் செய்தேன் *அருணாசலா*?
ravi said…
🌹🌺" *எங்கும் பரந்து* *விரிந்த ஆத்ம* *சொருபமான தன் உயிரை* *தானே தரிசித்த*
*ஒரு ஆன்மீக விஞ்ஞானி*
*உருவாக்கிய குறியீடு* *தான் சிவலிங்கம்* ., .... *என்பதை பற்றி* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺" சிவனுக்கு எக்கோயில்களிலும் உருவமில்லை...உடலுக்கு உருவமுண்டு..நம் உயிருக்கு உருவம் ஏதடா??அண்டத்தில் எத்தனை உயிர்கள் - உண்டோ அத்தனையும் சிவ சொரூபமே

🌺சிறிதோ, பெரிதோ,
ஒரு நாளோ, பல நூறு வருடமோ
என எல்லாம் சிவ சொரூபமே.

🌺கோயில்களில் சிவனை சுயம்பு லிங்கமாக காண்பிப்பதற்கு அர்த்தம் உண்டு. அந்த சிவன் (ஜீவன்) தானாகவே
தோன்றியதால் தான் சுயம்பு ஆகிறான்.
தானாக தோன்றியது எதுவோ,
அது தானாகவே தான் அழியும்.

🌺தோன்றியவனும்(பிறப்பு) அவனே
அழித்தவனும்(இறப்பு) அவனே!
ஈன்றெடுத்த தாயாகினும் உயிரை
பெற்றாளே அன்றி படைக்கவில்லை.

🌺வளர்த்தெடுத்த தந்தையாகினும் உயிரை
வளர்த்தாரே அன்றி வார்க்கவில்லை.
தானகேவே தான் தோன்றியதை
குறிக்கும் அடையாளமே சிவலிங்கம்.

🌺சிவலிங்கம் என்றால்.
மூளையின் ஒரு பகுதியின் சுரப்பி என்றோ
எண்ணுபவர்கள் கோடி இவ்வுலகில்.

🌺ஆனால், எங்கும் பரந்து விரிந்த ஆத்ம சொருபமான தன் உயிரை தானே தரிசித்த
ஒரு ஆன்மீக விஞ்ஞானி
உருவாக்கிய குறியீடு தான் சிவலிங்கம்.

🌺சிவ புராணம் பாடல் 🌹

🌺நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

🌺கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க


🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
23.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 18)

Sanskrit Version:

अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत।। 2.18।।

English Version:

antavanta ime dehaa:
nityasyoktaaha shareerinaha: |
anaashinoprameyasya
tasmaadyudhyasva bhaarata ||


Shloka Meaning
O Arjuna! These bodies which belong to the real imperishable, unknowable Atma are said
to be subject to end; therefore do fight Arjuna.


Subject to end
--------------
Human bodies are subject to death. You are not the body. You are the atma, that is holding the
body as a vehicle. No one should depend on the perishable bodies. You should hold on to the atma,
till you obtain the consciousness of your identity with the atma, and cut off false identification
with the body.

Atma is not far away. He is in and pervading the body, but completely free and uncontaminated
by all the modifications of the physical and subtle bodies. Man should constantly cultivate
his identity with Atma, and reject the identity with the body and remain as Atma.

Therefore fight
---------------

Since atma is imperishable, and the bodies are subject to death now or in the future, Krishna
exhorts Arjuna to carry out his duty and fight the battle free from sorrow and fear. Krishna wants
Arjuna to act in the light of the knowledge of the Atma, and the perishable nature of material things.

Jai Shri Krishna 🌺
ravi said…
22.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 17)

Sanskrit Version:

अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम्।
विनाशमव्ययस्यास्य न कश्िचत् कर्तुमर्हति।।2.17।।

English Version:

avinaashi tu tadviddhi
yena sarvamidam tatam |
vinaashamavyayasyaasya
na kashchitkartumarhati ||


Shloka Meaning

O Arjuna! Know that the Atma pervades the whole universe. The Atma by nature is undestructable
and imperishable. That which does not perish cannot be destroyed.

Additional explanation:

The every moving and non moving objects of the world is pervaded by the Self, which is present
in the heart of every individual, one should consider every object as the manifestation of the self
and be full of love and kindness for all. He should not commit any sin, since Atma, the Lord,
is present every where. Since the Atma is ever present and can never be destroyed, one should
contemplate abd strive to live in the Atma without any kind of doubt or fear.

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -23.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-96

மூலம்:

அரச நிழற்பவுத்தர் ஆதியரே ஆய
விரச குணத் தோரை வெல்லச் – சரசகுண
வள்ளிமக(வு) என்றெனைநீ வாழ்விப்பாய் வான்பழனி
ஒள்ளியவே லப்பா உவந்து (96).

பதப்பிரிவு:

அரச நிழல் பவுத்தர் ஆதியரே ஆய
விரச குணத்தோரை வெல்லச் – சரச குண
வள்ளிமகவு என்று எனை நீ வாழ்விப்பாய்!! வான்பழனி
ஒள்ளிய வேலப்பா உவந்து!! (96).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

வான் அளவும், வான் தாண்டியும் பெரும் புகழ் உடைப் பழனியில் மகிழ்ந்து வாழும், பேரொளியுடைய பழனி வேலாயுதப் பெருமாளே! அரச நிழலில், அரச அடியை வணங்கும் பௌத்தர் போன்ற இனிமை அற்ற குணத்தோரை வெல்ல, மிக இனிய குணம் வாய்ந்த என் தாய் வள்ளி நாச்சியாரின் மகனான என்னை அல்லது எல்லா நற்குணங்களும் ஒருங்கே அமை வள்ளி நாச்சியாரின் மகன் (எல்லாம் வல்ல உன் மகவு) என்று என்னை நீயே, உன் மனம் உவந்து வாழ்விப்பாய்! பழனிமலைப் பெருமாளே! அருள் நல்காய்!

ஒள்ளிய வள்ளி கேள்வ! நாளும் உனையே நினைத்துருகும் என்னை உன் அன்பால் சாய்ச்சு, என் வினையெல்லாம் மாய்ச்சு, கருணை வெள்ளமென உன் அருளை என்மேல் பாய்ச்சு!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
( சுமார்1000-ஆண்டுகள் பழமையான, 150-படிகள் கொண்ட இந்த சிறு மலைக்குன்றின் மிகச்சிறிய ஆலயத்தின் கருவறையில்,
'எனை ஆளும் ஆண்டவன்' எம்பெருமான் முருகன்,
வேல்(தண்டம்)கொண்ட பாலகனாக அழகு அருட்காட்சியளிக்கிறார்.

(🙏🏻சிறப்புகள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

இந்த தபசுமலைக்குன்றில்
முற்காலத்தில், எம்பெருமான் முருகனை முனிவர்களும், சித்தர்களும்
வேலாகவும், பிற்காலத்தில்
சிற்ப வடிவமாகவும்
வழிபட்டதாக கூறப்படும்
இத்தலத்தில்,
சப்தரிஷிகள் தவமிருந்து இறைவனை தரிசனம் கண்டதால், இம்மலைக்கு
'தபசுமலை' எனும் பெயர் உண்டானதாகவும்
தலவரலாறு கூறுகிறது..

மலை அடிவாரத்தில், சப்தரிஷிகள் வழிபட்ட இடத்தில் சிறிய குடவறைக்கோயில் இருக்கிறது. உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற இங்கு கந்தக்கடவுளை எண்ணி தியானம் செய்வது வெகு விசேஷமாம்.

இங்கேயுள்ள தம்பதி சமேத ஶ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மிகுந்த சக்தி உள்ளவராம். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவில் தீர்த்து வைப்பதில் வல்லவர் என்கின்றனர் பக்தர்கள்.

இத்தலத்தில் தரப்படும்
மூலிகை கலந்த பிரசாதம், சர்க்கரை நோய், குடல்புண் மற்றும் நரம்பு தளர்ச்சியின் தாக்கத்தை
குணப்படுத்துகிறது என்பது தலச்சிறப்பு.

கந்தசஷ்டி, வைகாசி விழாக்கள் மற்றும்
கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், செவ்வாய் வழிபாடும், பவுர்ணமி கிரிவலமும் இப்பகுதியில் வெகுபிரசித்தம்).

🙏🏻ஓம் ஶ்ரீ தபசுமலை முருகனுக்கு,
அரோகரா!
அரோகரா!
அரோகரா!
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

4.மத்யே புநர்மநோஹர ரத்நருசி ஸ்தபக ரஞ்ஜித திகந்தம் |
உபரி சதுச்சத யோஜநம் உத்துங்க ச்ருங்க புங்கவம் உபாஸே ||

இந்த மூன்று சிகரங்களின் இடையே மனத்தைக் கவர்கிற தனது ரத்தின ஒளிக் கொத்துகளால் திக்கெட்டின் எல்லைகளையும் சிவக்கச் செய்வதும் நானூறு யோஜனை உயரமுள்ளதுமான சிறந்த சிகரத்தை வழிபடுகிறேன். (ஒரு யோஜனை சுமார் 10 miles.) (4)
ravi said…
🌹🌺 "He saw his own life, which is the all-pervading soul
A spiritual scientist
A simple story to explain about Shivalingam being the symbol created., ...
-------------------------------------------------- ------

🌹🌺 "Shiva doesn't have a form in any temple...body has a form...does our life have a form?"

🌺 Little, big,
A day or several hundred years
Everything is a form of Shiva.

🌺 Showing Shiva as Swayambu Lingam in temples has meaning. That Shiva (life) is automatic
He becomes Swayambu just because he appears.
Whatever appeared automatically,
It will automatically disappear.

🌺 He is the one who appeared (born).
He is the one who destroys (death)!
Life as a pregnant mother
He did not create except the Father.

🌺Life as a foster father
It is not cast by the nurturer.
Thanaka himself appeared
Shiva Lingam is the symbolic symbol.

🌺 Shivalingam means.
A gland of a part of the brain
There are millions of people in this world.

🌺But, he saw his own life, which is the all-pervading soul
A spiritual scientist
Shiva Lingam is the symbol created.

🌺 Shiva Puranam Song 🌹

🌺 Long live Namachivaya! Long live Nathan Sheets!
Even in the blink of an eye, you live in my heart

🌺 Long live Gurumanitan, Lord of Kokazhi
Live as Agama and the sheet of paper... May the Lord of the One and Many live forever


🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
"கலியுகத்தில்" என்னென்ன நடைபெறும் என்பதை விளக்கமாக கூறிய ஸ்ரீ கிருஷ்ணர்...

பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வியை கேட்டனர்.

அதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்" என்று கூறி தனது வில்லில் இருந்து நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

ravi said…
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.

சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது.

இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தைவிட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான்.

அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்.

ravi said…
அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தி தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்.

பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை இதனால் கன்றுக்கு சிறிய காயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனை தடுக்க சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.

'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான்.

அப்போது...

மலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது.

அவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.

ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

இவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.

அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர்.

கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்...

"பீமா! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள். ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும், தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக்கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்...

ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்...

நிரம்பி வழியும் நான்கு கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்" என்றார்.

பின்னர் அர்ஜூனனிடம் திரும்பி, கிருஷ்ணர்...

"அர்ஜூனா! கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள், போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்...

இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்...

இனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல!" என்றார்.

தொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், "சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்.

இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்.

இதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.

இவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்...

கன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்..."

அடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர்,

"நகுலா! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும், நன்னெறிகளிலிருந்தும் நீங்குவார்கள்...

யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்...

எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்...

இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்.

மரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை தடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல!" என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்.

இன்றைய கலியுகத்தில் தற்போது கிருஷ்ணர் கூறியபடித்தான் நடந்து கொண்டிருக்கிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயத்தில் இதற்கு தீர்வாகவும் இறைவனை சரணடைவதை தவிர வேறு எந்த தீர்வும் நமக்கு கைகொடுக்காது என்தையும் கிருஷ்ணர் தெளிவாக கூறியுள்ளார். எனவே இந்த கலியுகத்தில் நாமும் ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து இறையருள் பெறுவோம்.
ravi said…
*அப்பா*

நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்.

ஆருயிர்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்.

செப்பாத மேல்நிலைமேல்

சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்.

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்.

தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
Oldest Older 401 – 459 of 459

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை