ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 40 *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* - பதிவு 47

 *40*  माणिक्यमकुटाकारजानुद्वयविराजिता -  *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* -




இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்பபெறுபவள் 


அம்பாளின் தேஹ லாவண்யம் எவ்வளவு நேர்த்தி என்று சொல்கிறது இந்த நாமம்.

ஜானு = முழங்கால் 

த்வய = இரண்டு , இருமை 

விராஜிதா = எழிலுடன் விளங்குதல் 
               ============================================================

Comments

ravi said…
ஹரஹர ஹரஹர மஹாதேவா
அற்புதமான காட்சி….
நாகர் கர்னூல் மாவட்டம், கோலாப்பூர் மண்டலம், சோமசிலா கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் சங்கமேஸ்வரர் கோயில் இருப்பது தெரிந்ததே. பழமை வாய்ந்த இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஸ்ரீசைலம் திட்டத்தில் பல மாதங்களாகக் கடலில் மூழ்குவது தெரிந்ததே. இந்த ஆண்டும் பெய்த கனமழையின் பின்னணியில் வந்த வெள்ளநீரால் கோவில் படி படியாக மூழ்கும் பூஜை நிகழ்ச்சியின் காட்சிகள். பரமேசுவரரின் தலையில் வீற்றிருக்கும் கங்கம்மாவின் தாயாரின் மடியில் சர்வேஸ்வர பகவான் கைகோர்க்கும் இந்த அற்புதமான காட்சிகளைப் பார்க்கும்போது அணுவும் சிலிர்க்கிறது.
ஓம் நம சிவாய v. .Jeyaraman
ravi said…
[16/03, 17:12] Jayaraman Ravilumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

*ஸமாத்மா* ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[16/03, 17:13] Jayaraman Ravilumar: என்ன பீமா? வெந்நீர் தயாரா?” என்று கேட்டான் கண்ணன்.

“கொஞ்சம் பொறு கண்ணா!” என்றான் பீமன்.

மேலும் அரைமணி நேரம் கழித்து, “வெந்நீர் தயாரா?” என்று கேட்டான் கண்ணன்.

பீமன் தொட்டுப் பார்த்தால் அப்போதும் தண்ணீர் சுடவில்லை.

மேலும் அரைமணி நேரம் கழித்துப் பார்த்தான். சுடவில்லை.
[16/03, 17:16] Jayaraman Ravilumar: ப3ஹுவித4-பரிதோஷ–பா3ஷ்பபூர்-
ஸ்பு2ட-புலகாங்கித-சாரு-போக–பூ4மிம் |

சிரபத2-ப1லகாங்க்ஷி-ஸேவ்யமானாம்

பரமஸதா3 சிவ-பா4வனாம் ப்ரபத்3யே || 67

நிலையான பதவியென்ற மோக்ஷத்தையடைய விரும்புகிறவர்களால் போற்றப்படும் மேலான சதா சிவத்தியானத்தை அடைக்கலம் புகுகிறேன்.

(ஏனெனில் அந்த தியானம்) பற்பலவிதமான இன்பத்தால் ஆனந்தக்கண்ணீர் பெருக்குவதற்கும், வெளிப்படையாக மயிர்க்கூச்சுண்டாவதற்கும் நல்ல விளை நிலமாக உள்ளது.🙏🙏🙏
ravi said…
[16/03, 17:10] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 109 started on 6th nov

*பாடல் 34 ... சிங்கார*

(தீநெறியினின்று எனைக் காவாய்)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்

சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே👏👏👏
[16/03, 17:10] Jayaraman Ravilumar: போர் வீரனே, மயில் வாகனனே,

ஆறுமுகனே, கங்கா தேவியின்
மைந்தனே,

கருணா வாரிதியே, அலங்காரத்தில் மிகவும் ஈடுபாடு
உள்ள பெண்களின் மீது செலுத்தும் காம இச்சையாகிய
துன்மார்க்கத்தில் சென்று என் அறிவு மங்கிவிடாதபடி
அடியேனுக்கு வரம் கொடு.🙏🙏🙏
ravi said…
[16/03, 11:37] Jayaraman Ravilumar: *காள மேகம் கவித்திறன் 5* ( முன்பு மடப்பள்ளி வரதன் ....திருவானைக்கோயில்)
[16/03, 11:38] Jayaraman Ravilumar: இல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.

ஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

அனைவரும் சிரித்தனர்.

குடத்தில் எப்படி கங்கை அடங்கும்?

காளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:
ravi said…
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை

இடத்திலே வைத்த விறைவர் சடாம

குடத்திலே கங்கை அடங்கும்.
ravi said…
*கங்கை* – கங்கா நதியானது

*விண்ணுக்கு அடங்காமல்* – ஆகாயத்திற்கு அடங்காமல்

*வெற்புக்கு அடங்காமல்* –

மலைகளில் அடங்காமல்

*மண்ணுக்கு அடங்காமல்* – பூமிக்கு அடங்காமல்

*வந்தாலும்* – பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்

*பெண்ணை இடத்திலே வைத்த* – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்

*இறைவர் ஜடா மகுடத்திலே* –

சிவபிரானின் ஜடை மகுடத்திலே

*அடங்கும்* – அடங்கும்.🙏🙏🙏
ravi said…
[16/03, 11:35] Jayaraman Ravilumar: 💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 515* 🙏🙏🙏started on 7th Oct 2021

*231வது திருநாமம்*
[16/03, 11:36] Jayaraman Ravilumar: *231 महाभैरवपूजिता - மஹா பைரவ பூஜிதா* -


மஹா சக்தி வாய்ந்த பைரவராலேயே பூஜிக்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை.

மீண்டும் கவனப்படுத்துகிறேன்.

சிவனும் சக்தியும் கலந்த அம்சம் தான் பைரவர் எனும்போது எவ்வித சக்தியும் வலிமையும் உடையவர் என்று புரியும்.🙏🙏🙏
ravi said…
[16/03, 11:33] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 108*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*98*
[16/03, 11:33] Jayaraman Ravilumar: अन्तरपि बहिरपि त्वं जन्तुततेरन्तकान्तकृदहन्ते ।
चिन्तितसन्तानवतां सन्ततमपि तन्तनीषि महिमानम् ॥98॥

98. Antharapi , bahirapi thwam janthu therantha kantha krudaham they,

Chinthitha santhanavathaam santhathamapi thantha neeshi mahimanam.

அன்தரபி பஹிரபி த்வம் ஜன்துததேரன்தகான்தக்றுதஹன்தே |

சின்திதஸன்தானவதாம் ஸன்ததமபி தன்தனீஷி மஹிமானம் ||98||
[16/03, 11:34] Jayaraman Ravilumar: மார்க்கண்டேயனை ரக்ஷிக்க, காலனை ஸம்ஹாரித்த காலஸம்ஹார மூர்த்தி,

பரமேஸ்வரனின் மனதில் குடிகொண்ட அம்பாளை

அஹந்தா ரூபிணி, அகங்கார ரூபிணி என்ற நாமங்களால் ஸ்தோத்ரம் செய்து நமஸ்கரிக்கிறேன். 🪷🪷🪷🪷🪷
ravi said…
பகைவர்களால் என்று தொடப்படாத பெரிய மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் காகுத்தன்

தன் திருவடி மேல் *தாலேலோ* என்று சொன்ன தமிழ்மாலையாம்,

பகைவரைக் கொல்லத் துடிக்கும் வேலை வலக்கையில் ஏந்திய வெண்கொற்றக் குடையைக் கொண்ட குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன

இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்களும் வல்லவர்கள் இறைவனுடன் என்றும் தோழமை கொண்ட பக்தர்கள் ஆவார்கள்!

சேர மன்னராய் இருந்து அடியவர்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடியது.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நாராயணம், பத்மபுவம்' என்று ஆரம்பித்தே நாம் (ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களைப் பின்பற்றும் ஸ்மார்த்தர்கள்) ப்ரஹ்ம வித்யா ஸ்ம்ப்ரதாயத்திற்கு குரு பரம்பரை சொல்வதால் இங்கே அந்த முதல் குருவான விஷ்ணுவைக் குறிப்பிட்டுச் சொல்வது ரொம்பவும் பொருத்தமாயிருக்கிறது. ஸஹஸ்ர நாமத்தில் அவருக்கு 'குரு' என்றும் 'குரு - தமன்' என்றும் நாமாக்கள் கொடுத்திருக்கிறது.
ravi said…
குரு - தமன் என்றால் ஏனைய குருமார்களை விட ச்ரேஷ்டமான உத்தம குரு என்று அர்த்தம். இங்கே (குரு என்பதற்கு) ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது மஹாவிஷ்ணு ஸர்வ வித்யைகளையும் உபதேசிப்பதால் குருவாகிறார் என்று சொல்லி, அதோடு இன்னொரு அர்த்தமாக ஸர்வ ஜீவர்களையும் பிறப்பிப்பவர் என்பதாலும் அவர் குரு என்று சொல்லியிருக்கிறார்.
ravi said…
இதிலிருந்து பிறப்பைத் தரும் பிதாவை குரு என்று சொல்வதுண்டு என்று புரிந்து கொள்ளலாம். ஸம்ஸ்க்ருத 'லிட்ரேச'ரில் பரிசயமுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் - அப்பாவுக்கு குருப் பட்டம் உண்டு என்பது. மாதா -பிதா - குரு - தெய்வம்' என்பது எல்லோருக்கும் தெரிந்த பொது வசனம். இதில் மாதா-பிதா இண்டு பேருமே குருவின் கார்யமான நல்வழிப்படுத்தலையும் செய்பவர்கள்தான். ரொம்பக் குழந்தையாக இருக்கும்போது அம்மா பரம ஹிதமாக கொஞ்சம் கொஞ்சம் நல்லதைச் சொல்லிக் கொடுப்பாள். அப்புறம் கொஞ்சம் விவரம் தெரிகிற வயஸிலிருந்து எட்டு வயஸில் உபநயனம் பண்ணி குரு என்றே இருப்பவரிடம் குருகுலவாஸம் பண்ணுவதற்காகக் குழந்தையை ஒப்படைக்கிற வரையில் அப்பா, அம்மாவை விடக் கொஞ்சம் கண்டிப்புக் காட்டி, 'இப்படியிப்படி இருக்கணும், பண்ணணும்' என்று அநேக நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார். அதனால் அவருக்கே குரு பெயர் ஏற்பட்டிருக்கிறது...
ravi said…
'குரு' என்றால், அட்சரம் அட்சரமாகப் பிரிக்காமல் நேராக ஒரே வார்த்தையாக அர்த்தம் பண்ணும்போது 'பெரியவர்' என்றே அர்த்தம். அகத்திற்குப் பெரியவர் head of the family - அப்பாதானே? அதனால் அவர் குரு.
ravi said…
உபப்லவா = நாசம் - பேரழிவு

*❖ 143 நிருபப்லவா* = அழிவற்ற தன்மையுடையவள்👍👍👍
ravi said…
*அம்மா*

அண்டங்கள் ஆகாசங்கள் ஆழ் கிணறு சென்றாலும் அழிவுண்டோ தாயே உனக்கு ?

கடல் சென்று கோடி அகிலாண்டம் தனை விழுங்கினும்

விதி சதி செய்யுமோ *அம்மா* உனக்கு

நட்சத்திரம் விண்மீன்கள் காயும் நிலவு கத்தரிக்கும் வெயில்

பூமி தன்னுள் சேர்த்துக்
கொண்டாலும்

புண்ணியவளே உன் கால் தூசுக்கு காவடி எடுக்காதோ *அம்மா* ?

இந்திரன் சந்திரன் மிந்திரன் வந்திரன்

யார் வந்து போனாலும்

ஈடு இணை உண்டோ உன் பார்வை ராஜாங்கத்திற்கு ...

மாண்டவர் கோடி மாளுபவர்கள் கோடி
மாளப்போகிறவர்கள் கோடி

மாண்டாலும் மீண்டும் உன் மடி மீதே வரவேண்டும் ..

தாழ்ந்தாலும் மீண்டும் வீழ்வேனோ என சொல்லும் பாரதி மீசை வேண்டும் ...

உன் புகழ் ஒன்றே என் மொழியாக இருக்க வேண்டும் ..

வேறு மொழி குறுக்கே வந்தால் அதிலும் உன் நாமம் தேடும் வரம் வேண்டும் ...

தருவாயோ *அம்மா* தடை இன்றி கேட்ட வரமெல்லாம்

விடை ஏறும் கடை கொண்டவளே ..

மடை காணா சடை அருகில் இருக்க

படை ஏதும் வருமோ எனை எதிர்க்க ??💐💐💐
ravi said…
[16/03, 08:11] Jayaraman Ravilumar: அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

100 –
வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா
வைத்து எனை விடாது அருள் அருணாசலா (அ)
[16/03, 08:14] Jayaraman Ravilumar: *Meaning*

Taking my blame of You as my praise of You , make me reside in Your Grace , bless me without leaving me *Arunachala*
ravi said…
*அருணாசலா*

இது உனக்கு என்றும் புதிதல்லவே *அருணாசலா*!!

உன் மதிப்பு அறியா தக்ஷன் பிழைத்தான் உன் அருளாலே

உன் மீது வைத்த அன்பைத் தவிர வேறொன்றும் அறியா திண்ணன் உயர்ந்தான் உலகளவில் உன் அருளாலே

மலர் என்றே கல் எறிந்தான் உன் மேலே சாக்கியன் ...

கொன்றை மலராய் ஆக்கிக்கொண்டாய் உன் அன்பினாலே

வேலை செய்வாய் என்றே பிட்டு சமைத்தாள் வந்தி

பிட்டை தின்று கட்டை அவளை கைலாயம் சேர்த்துக்கொண்டாய் உன் கருணை கொண்டே

நரிகளை பரியாக்கி நெறிகளை நேர்செய்தாய் ..

வரிகளை கோயிலாக்கி அதில் மணி மணியாய் வாசகம் செப்ப வைத்தாய்

செருப்பால் தொட்டவனை உன் இரு கண்களாக்கி கொண்டாய்

செந்தமிழால் பாடியவனை காதல் எனும் மலர் தொடுத்து காமன் வேலை தனை செய்தாய்

விடம் கக்கும் பாம்புக்கும்

அகம் கொண்ட கங்கைக்கும்

மதி இழந்த திங்களுக்கும்

உன் சென்னி தனில் இடம் தந்தாய்

கருணாகரனே என்றாலும் கணக்கில் அடங்குமோ உன் கருணை

நான் திட்டுவதெல்லாம் உன் புகழே என்றால்

நானும் கோடி முறை உன் நாமம் ஜபித்து விட்டேன் ...

கோடிகள் குவியக்கண்டேன் ..

கோமகன் உனை மறவாமல் இருக்க

கோடியில் ஒன்றாய் மறையாமல் இருக்க

தெருக்கோடி வந்தே உன்னை திட்டாமல் இருக்க

ஒரு கோடும், வரை என்றே போடாமல் அருள்வாயே *அருணாசலா* 🪷🪷🪷👍👍👍👍👍
ravi said…
🌹🌺" *முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும்* .... *என்பதை பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺" ஒரு கழுதையொன்று புலியிடம்,
புல்லின் நிறம் நீலம்!" என்று கூறியது.
புலி கோபமடைந்து, இல்லை, புல் பச்சை!" என்று கூறியது.

🌺விவாதம் சூடுபிடித்தது, இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர், எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.

🌺சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை,
"அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?" என்று கேட்டது.

🌺சிங்கம்,உண்மை, புல் நீலநிறமானது" என்று பதிலளித்தது. கழுதை விரைந்து தொடர்ந்தது, புலி என்னுடன் உடன்படவில்லை முரண்படுகிறது அரசே....! என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டியுங்கள்." என்று கூறியது.

🌺அப்போது அரசர்,
புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு
யாருடனும் பேசக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும். இதுதான் உனக்குரிய தண்டனை" என்று அறிவித்தது.

🌺கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து,
"புல் நீலநிறமானது!", "புல் நீலநிறமானது!"
என்று கூறிக்கொண்டு அங்கிருந்து அகன்றது.

🌺புலி அதனது தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் அது சிங்கத்திடம் அரசே, ஏன் என்னைத் தண்டித்தீர்கள்? புல் பச்சை நிறம்தானே." என்றது.

🌺சிங்கம், நீ சொல்வது சரிதான் - புல் பச்சைநிறம்தான்."
புலி,அப்படியானால் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?".

🌺சிங்கம் பதிலளித்தது,
புல் நீலமா அல்லது பச்சை நிறமா
என்ற கேள்விக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான ஓர் உயிரினம் ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கினாய்? அதுவே எனக்கு கவலையை உண்டாக்கியது. அதற்கே இந்தத் தண்டனை!"

🌺முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும். அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள்,

🌺ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது மாய்கையான நம்பிக்கைகளில் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத வாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள் ...

🌺நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை வழங்கினாலும் அவர்கள் புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்கள்.

🌺அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும் கண்மூடித்தனமாகத்தான் இருப்பார்கள்.

🌺அவர்கள் பிழையாக இருந்தாலும் அவர்களுக்கு தம்மை சரியாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும்.

🌺அறியாமை அலறும் போது, ​​நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும்.
"உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை."🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
16.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 14)

Sanskrit Version:

मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत।।2.14।।

English Version:

maatraasparshaastu kaunteya
sheetoshnasukhaduhkadaaha |
aagamaapaayinoonityaah:
taanstitikshasva bhaarata ||


Shloka Meaning

Contact of the senses with objects produce heat and cold, pain and pleasure.
These experiences come and go, and are impermanent. Endure them, O Arjuna.

Those who do not know that the world is a great illusion consider that the experiences
of the senses and the mind are real, and super impose them on themselves and suffer
all through their life. But those who know that these modifications belong to the body only
and the self remains untroubled and uncontaminated by them, are free from pleasure and
pain and such people live always in a sense of happiness.

As long as the man is in an embodied state, even the Jnani must go through the physical changes.
But since the Jnani is aware of the differences between the body and atma, his attitude to them
is entirely different from that of the ignorant man. Krishna's command is to endure them and
no other escape route.


Endure them (titikshasva). This is one of th e great mantras of the Gita.
Man should be equal minded where cold and heat, pleasure and pain, come in the form of an endless chain.
So, long as man has the body, they come. None can stop them. So the lord gives the satvic law
(titikshasva) - ensure them. Like the control of internal and external organs, titikshasva
(endurance is an absolutely necessary qualification for the spritual seeker).

How does this apply to our day to day life? (Gita is meant to be applied and not be just read and forgotten)

All of us go through up cycles when he success comes over way and down cycles when life seems unfiar.
What this says is very simple.

When success comes do not think you are the greatest man on this earth and walk with collars up and strut around.
When failure comes do not sulk and sink and have all sorts of self doubt and self pity.

Do not jump around when success comes and do not sink when failures hit you.
Success and failure should not define your persona. Go with the flow irrespective of ups and downs.
Benefit. No BP. No diabetes. No need to go to the doctor. One would be so much at peace with oneself.

Can we apply this simple technique? It will give huge dividends with zero spend!!!!!

Again, Gita is a live scripture that should be applied in our day to day life.

It is not meant just for Arjuna. It is every living being.

Jai Shri Krishna 🌺
ravi said…
15.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 13)

Sanskrit Version:

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति।।2.13।।


English Version:

dehinosminyathaa dehe
kaumaram yauvanam jaraa |
tathaa dehaantarapraaptih:
dheerastatra na muhyati ||


Shloka Meaning

Just as man in this body passes through the various stages of boyhood, youth and old age, like so,
he passes into another body after death. The wise know it and are not deluded.

Additional Details:
Boyhood, youth, old age and migrating into another body are four stages that are inevitable
for the embedded being.

It is very clear that the physical changes affect only the body and not the atma.
When a boy turns into a youth or a youth turns into a old age man, no one grieves. The Lord
questions, why should one grieve when the body falls and another is taken up by the individual being.

The wise who now the secret remain firm when these changes overtake the body.

The first three changes are visible and can be felt. The fourth change is unseen and it is looked upon
with a feeling of awe and wonder. Krishna points out that even the fourth change is like the three
previous changes and not different from them.

Cycle of the human body

Boyhood - Youth - Old Age - Rebirth

This cycle rotates inevitably so long as the karma force works. When it is neutralized and destroyed,
by knowledge, the man is freed from the cycle of birth and death. This is what every follower
of Sanatana Dharma aspires for. Moksha. Moksha is nothing but a liberation from the endless cycle
of birth and death and unite back into the Brahman.

Every living being will get moksha one fine day, but when that day is driven by one's own prarabdha karma.

Jai Shri Krishna 🌺
ravi said…
The beauty of this Pathigam is tge assurance of Sundarar that
The there is no trouble for those who recite or *listen* this Pathigam
If it was so there is nothing special
His second assurance is to their * the kin n kith* too
Please listen
ravi said…
🙏🌹🌼🪔🌺🌷🙏
சிவாயநம


10 பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை
அல்லி அம் தாமரைத்தார் *ஆரூரன் உரைத்த தமிழ் சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும்*,
எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .
*திருச்சிற்றம்பலம்*
ravi said…

பழனிக் கடவுள் துணை -16.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-89

மூலம்:

மோகக் கடலில் முழுகித் தவிப்புறும் நான்
ஏகத் துவம் உணர்தல் எவ்வாறோ – மாகத்தார்
ஏத்தும் பழனிக்(கு) இறைவா! எனைநீயே
காத்துன்உள்ளிற் சேர்க்கை கடன் (89).

பதப்பிரிவு:

மோகக் கடலில் முழுகித் தவிப்புறும் நான்
ஏகத்துவம் உணர்தல் எவ்வாறோ – மாகத்தார்
ஏத்தும் பழனிக்கு இறைவா! எனை நீயே
காத்து உன் உள்ளில் சேர்க்கை கடன்!! (89).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பழனியம்பதியில் இருந்து இன்று- 16.03.2023ல் இந்தப் பாடலுக்கான விளக்கம் எழுத என்ன தவம் செய்தேனோ எம் பெருமானே? என்னே உன் கருணை?

மாகத்தார் - தேவர்;
ஏகத்துவம்-ஏகம் + தத்துவம் = ஏகத்துவம்-பலவாக பிரிந்து காணப்படுகின்ற தத்துவங்களை ஒரே தத்துவமாக அல்லது ஒரே உள்ளமையாக அறிந்து உணர்வதாகும்.

தேவர்கள் நித்தம் போற்றி, வாழ்த்தி, துதிக்கும் பழனிக்கு இறைவா! கருணாசலனே! மோகக் கடலில் முழுகித் தவிப்புறும் நான், பலவாக பிரிந்து காணப்படுகின்ற தத்துவங்களை ஒரே தத்துவமாக அறிந்து உணர்தல் எவ்வாறோ எம் பெருமானே? பழனிவாழ் ஞான தண்டாயுதபாணி சுவாமியே! உன் வழி வழி அடிமை, என்னை நீயே காத்து, உன் பேரருளால், உன் உள்ளில், உன் உள்ளத்தில் என்னை நீ தயவு கூர்ந்து சேர்த்துக் கொள்ள வேண்டும் ஐயா! என்னை உன்னுள்ளில் சேர்த்துக் கொள்ளல் உன் கடமை அல்லவோ எம் பெருமானே? கருணை செய்!

பழனிப் பெருமாளே! உன் அடிமையென்னை *சேரார் வசம் சேர விடாது, உன்னுள்ளிலே சேர்! உன்னை மட்டுமே நான் சார்ந்து, நேர்த்தியான உன் சேர்த்தியே எனக்குச் சேர, உன் கருணைக் கண் கொண்டு பார்! தயை கூர்!

* சேரார்- பகைவர்;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
முருகா சரணம்!

கௌமாரம் தழைக்க வேண்டும் என்ற ஒரே சீர் நோக்கோடும், முருக பக்தி தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், பழனி ஆண்டவனின் பெருங் கருணையாலும் பேரருளாலும் வெளிவருகின்ற , நீலச்சிகண்டி என்ற முருக பக்தர்களுக்கான பிரத்யேக மாத இதழ்- கலாபம்-10- மாசி -2023.

இந்தப் பத்தாவது கலாபத்தின் தனிச் சிறப்பு- எம் பெருமான் பழனாபுரி ஆண்டவனின் குடமுழுக்கு முடிந்து இன்று 48வது நாள் நிறைவு. மண்டலாபிஷேகம் காணும் எம் பெருமானின் திருக்கோவிலில் அவன் கருணை மிகும் தரிசனம் கிடைக்கப் பெற்று, பழனியில் இருந்து இந்தக் கலாபம் வெளி வருகிறது. என்னே எம் பெருமானின் கருணை?

தயவு கூர்ந்து, இந்த இதழை உங்கள் இணைப்பில் உள்ள முருக பக்தர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

முருகன் அருள் பெருக வேண்டும்! கௌமாரம் தழைக்க வேண்டும்! எம் பெருமான் அருளே எங்கும் சூழ வேண்டும்!

முருக பக்தியில்,

செந்திலாண்டவன் அடிமை மற்றும் பழனிப் பித்தன், மாசி -2023, 15.03.2023, பழனபுரியில் இருந்து, பழனிப் பெருமானின் பேரருளோடு.
ravi said…
🌹🌺 "Arguing with a fool and a fanatic is the worst waste of time.... - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 "A donkey to a tiger,
The color of the grass is blue!”
The tiger got angry and said, "No, the grass is green!"

🌺The argument got heated and both decided to submit the case to the jury, so they went before the king of the jungle, the lion.

🌺The donkey saw the lion sitting on his throne,
"Is it true, O king, that the grass is blue?" asked.

🌺The lion replied, "Truth, the grass is blue." The donkey hurried on. The tiger disagrees with me and contradicts me...! Annoys me, please punish him." That said.

Then the king
You are a tiger for five years
Don't talk to anyone, stay silent. This is your punishment."

🌺The donkey jumped with joy,
"The grass is blue!", "The grass is blue!"
Saying that, it left there.

🌺 The tiger accepted his punishment, but it said to the lion, O king, why have you punished me? "The grass is green."

🌺Lion, you are right - the grass is green."
Tiger, then why did you punish me?".

🌺 The lion replied,
Is the grass blue or green?
This has nothing to do with the question. Why did a brave and intelligent creature like you waste your time arguing with a donkey? That's what worried me. That's what this punishment is for!"

Arguing with a fool and a fanatic is the worst waste of time. They are unconcerned with truth or reality,

🌺But all they want is success in their hypocritical beliefs. Don't waste time on pointless arguments...

No matter how many proofs we give them, they are incapable of understanding.

🌺 They are blinded by their ego, hatred and anger.

🌺Show yourself right to them even if they are wrong.

🌺When ignorance screams, our intelligence should be very quiet towards Lord Sri Krishna. because
"Our peace of mind and silence are worth more."🌹🌺

🌺🌹valga Vayakam 🌹Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*படித்ததும் மனது கலங்கியது.*

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்.!

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிட மிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார்.

ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர்.

கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்.

எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார்.

குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.

பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள்.

அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.

ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள்.

முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள்.

பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்,அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்........!

ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு..
ravi said…
_*நீங்கள் என்ன கோத்ரம்? ​*_


நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை.

சடங்குகளில், ஆலயங்களில் சங்கல்பம் செய்து கொள்ளும்போது கோத்திரம் என்று ஒரு ரிஷியின் பெயரை சொல்கிறோம்.

கோத்ரம் என்னால் வழி வந்தவர்கள், வம்சாவழி என்று ஒரு அடையாளம்.

முக்கியமாக ஏழு
ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர்.

ravi said…
இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள்
​ அபிவாதயே என்று பெரியோரிடம் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும்போது ப்ரவரம் என்று இதற்கு பெயர், எந்த ரிஷி வம்சாவழி, என்ன பெயர், எந்த ஆசார்யன், எந்த வேதத்தை பின்பற்றுகிறோம் என்றெல்லாம் சொல்லி நமஸ்கரிப்பது.

முக்கியமான அந்த 7
​ ரிஷிகள் 1 ​. . பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர் 7. அகஸ்த்யர்
கோத்ரம் பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்குமே உண்டு.

அதிகமாக பிராமணர்கள் உபயோகிப்பது அவ்வளவு தான்.

ravi said…
நாம் எந்த ரிஷி வம்சம் என அறியாதவர்கள் பொதுவாக சிவ ​ கோத்திரம், விஷ்ணு கோத்திரம்
என்பார்கள். ​ தாங்கள் ​ ​ எந்த ​ கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் ​ தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் ​ ​ ஆனபின் கணவன் கோத்ரத்தை சேர்ந்தவர்கள்.

ஒரே கோத்ரம் கொண்டவர்கள் அனைவரும் ச-கோத்ரர்கள். சகோதரர்கள்.

ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் ​ பிறந்த கோத்திரம் மாறிவிடும்.

ravi said…
ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது.

ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

ஆண் தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்துகொள்வதுடன் தன் மனைவியின் தந்தை கோத்திரத்தையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கோத்திரம் (Gotra) என்பது குடும்பப் பெயர் போன்றது. வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால், அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் .

ravi said…
கோத்திரங்கள் பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன.

தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இரும்பு , மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர்.

ravi said…
இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள் – சானக ரிஷி கோத்திரம்
2) மர வேலைக் கலைஞர்கள் – ஸநாதன ரிஷி கோத்திரம்
3) உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு – அபுவனஸ ரிஷி கோத்திரம்
4) கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம்
5) பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம்

1)தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

ravi said…
விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3)கேரள தேசத்தில் ஆச்சாரிகள், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

ravi said…
5)கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள். பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள்..

தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு ​ என்ற வாசகம் தெரியுமல்லவா. அதன் அர்த்தம் இதோ கீழே.

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்.

பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை

ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. .

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.

பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.

பெண்கள் மட்டுமே பிறக்கும் குடும்பத்தில் அந்தத் தந்தையுடன் அவர் கோத்திரம் முடிவடையும். இதனால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று சொல்லி இருக்கிறார்கள்.
ravi said…
முக்தா = விடுதலை - சுதந்திரம்

*❖ 144 நித்யமுக்தா =* சாஸ்வத நிலைபேறுடைய முக்தியில் நிலைத்து நிற்பவள் (உலக இச்சை ஆசாபாசங்களைக் கடந்த முக்தி நிலையில் இருப்பவள்)🥇🥇🥇
ravi said…
*அம்மா* ...

பல சுற்றுக்கள் உனை வைத்து ...

பல புள்ளிகள் கோலமாய் அமைந்தே உன் புகழ் பாடும் அதிசயம் என்ன .. !!

ஒரு சுற்றில் பார்க்கிறேன்

வாக் தேவிகளின் சஹஸ்ரநாமம் ..

மறு சுற்றில் பார்க்கிறேன்

நித்ய சூரிகளின் நிரந்தர பாராயணம் ..

இன்னொரு சுற்றில் பார்க்கிறேன்

ஏகாம்பரனின் யாழ் மீட்டும் கானம் ...

மறு சுற்றில் பார்க்கிறேன்

மாதவன் அள்ளித்தெளிக்கும் கதம்ப பூக்கள்

ஒரு சுற்றில் பார்க்கிறேன்

உன் ஓம்கார ஸ்வரூபம்

அதில் செவி வைத்துக் கேட்கிறேன் உமா நாதனின் ஒய்யார சலங்கை ஒலி ...

உள்ளம் உவகை கொள்ள

ஆனந்தம் அலை போல் வந்து மோத

பரமானந்தம் கண்ணடித்து எனை பள்ளி அறைக்கு அழைத்து சென்றதே ... 🪷

போட்ட மாக்கோலம் செம்மண்ணுடன் சேர்ந்து சிரிக்க

கண்டேன் அங்கே அர்த்தனாரியின் ஆன்மீக நடனம் ..

வேண்டேன் இனி ஒன்றும்

வேண்டுவேன் உனை காணும் திருக்கோலம் இன்றும் என்றுமே 🥇🥇🥇🪷🪷🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

101 –
அம்புவில் ஆலிபோல் அன்பு உரு எனில்

எனை
அன்பாக் கரைத்து அருள் அருணாசலா (அ)
ravi said…
*Meaning*

Like Salt that melts in water make me melt in love in Your form *Arunachala* 🙏
ravi said…
*யார் அழிந்தார்?*

*இனி யார் அழிவார்?*

*அருணாசலா* 💐💐💐
ravi said…
*அருணாசலா*

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கஜினி முஹமதுவின் அடிமைகளால் இடிக்கப்பட்ட

குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தின் சோமநாதர் மறைந்து விட்டாரா..?
*அருணாசலா*

அழிந்து விட்டாரா..?
*அருணாசலா*

முட்டாள் கஜினி அன்றோ *அருணாசலா*

அழிந்தது அவனும் அவன் கூட்டமும் அன்றோ *அருணாசலா* ....

மீண்டும் எழுந்தாயே நீ கம்பீரமாய்....!!!

ஔரங்கசீப் மதுராவை இடித்து மசூதி கட்டினான்.

கிருஷ்ண லாலா காணாமல் போய்விட்டானா..
*அருணாசலா ?*

கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இன்றும் விளையாடிக் கொண்டு தானே இருக்கிறான் *அருணாசலா* ....!!!

காசி விஸ்வநாதர் கோயிலையும் இடித்து மசூதி கட்டினான்.

நீ தொலைந்து போனாயோ *அருணாசலா* ; ?

அழியவில்லை நீ

அழிப்போரே அழிக்க நினைத்தோரே அழிந்து போயினர் அன்றோ *அருணாசலா ?*

பூனாவின் பவானி கோயிலை இடித்த ஔரங்கசீப்பின்

கண்முன்னேயே வானுயர எழுந்தாள் அன்னை பவானி அன்றோ *அருணாசலா* .!!!

ஸ்ரீசைலம் கோயிலை இடிக்க வந்தவனை

அழித்து நிமிர்ந்து நிற்கின்றவன் நீ அன்றோ *அருணாசலா* ?

ஹம்பி, மேலக்கோட்டை, பேலூரை இடிக்க வந்த பீஜப்பூர் சுல்தான் தானழிந்தான்.

அவை இன்றும் ஓங்கி நிற்கிறதே *அருணாசலா* .....!!!

தளிபரம்பாவை சின்னாபின்னம் ஆக்கினான் ஹைதரும், திப்புவும்.

இருவரும் இன்று எங்கே போயினர் *அருணாசலா* ?.

உலகையே ஈர்த்து வருகிறாள் அன்னை ராஜராஜேஸ்வரி அன்றோ ....
*அருணாசலா* !!!

மலைநாட்டு மலப்புரத்தின் திருநாவாய் நவமுகுந்தன் கோயிலையும் இடித்தான் திப்பு.

இன்று திப்பு இல்லை.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநாவாய் நவமுகுந்தன் மலைமீது ஜொலித்துக் கொண்டிருக்கின்றானே *அருணாசலா* .....!!!

குருவாயூர் கிருஷ்ணனை அழிக்க வந்தான் திப்பு.

அது தப்பு என்றே உணர்ந்தபின்

உப்பு போல் நீரில் மறைந்து போனானே *அருணாசலா*

அம்பலப் புழையில் பக்தர்களால் பாதுகாத்து

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குருவாயூருக்கு குதித்து வந்தான் பார்த்தசாரதி அன்றோ *அருணாசலா* ....!!!

வேலூரின் ஜலகண்டேசரை இடித்தவன் காணாமல் போனான்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு

சத்துவாச்சாரி கிணற்றிலிருந்து

கலெக்டர் கங்கப்பாவால் கிளர்ந்தெழுந்தாயே *அருணாசலா* .....!!!

காஞ்சியிலே வைகுண்ட
பெருமாளின் கோபுரத்தை இடித்தான் ஆற்காட்டு நவாப்.

இடித்தவன் இடிந்து போய் இறந்தும் போனானே *அருணாசலா*

இன்றும் வைகுண்டநாதனாய் இவ்வையத்தைக் காத்து நிற்கின்றாயே *அருணாசலா* .....!!!

ஸ்ரீரங்கம் கோயிலையும் தாக்கினான் அலாவுதீனின் அடிமை அலி மாலிக்காபூர்.

மாலிக் மாண்டு போனான்.

ரங்கநாதன் ரம்யமாய் காணக் கிடைக்கின்றாரே *அருணாசலா* ...!!!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நாற்பது ஆண்டுகள் பூஜையின்றி பூட்டப்பட்டு இருந்தும்

நீயும் உன் சொக்கியும்
அழிந்தா போனீர்கள்?

இல்லையே *அருணாசலா* ...???

மீண்டும் உலகமே திரண்டு வர இன்றும் உன் அருளும் மீனாட்சியின் அருளும்

பொற்றாமரைக் குளத்தில் பொங்கி வருகிறதே *அருணாசலா* .....!!!

சில வால் குரங்குகள் திப்பு போல் ,
கஜினி போல் ,
மாலிக் போல், ஆற்காட்டு நவாப் போல்,
பீஜப்பூர் சுல்தான் போல்
ஹைதரை போல்

உன் கோயில்களை இடிக்க ,
இடிக்க துடிக்க இருப்பார்களோ இன்னும் பதவி தன்னில் *அருணாசலா* ...?

நெருப்போடு விளையாடுபவர்கள் நீரில் கரைந்து போவோர் அன்றோ ..
*அருணாசலா* ?

தலைமுறைகள் தவிடு பொடியாகும் அன்றோ அருணாசலா ...

உன் அருள் எனும் வெள்ளத்தில் கரையாமல்

சாக்கடை நீரில் கரைவோர்

தினம் உயிர் வாழும் பிணங்கள் அன்றோ *அருணாசலா* ...
ravi said…
கோயிலை இடிப்பவர்கள்

இடிக்க நினைப்பவர்கள்

இடிக்க உதவுபவர்கள்

இடிப்பதை வேடிக்கை பார்ப்பவர்கள்

இடிக்க உதவும் கருவிகள்

எல்லோருமே வம்சம் இன்றி அழிந்து போவார்கள் .

விளையாடுவது நெருப்புடன் 🔥🔥🔥
ravi said…
கூட்டுக்குடும்பம்...

இடம் பத்தலை ...

தலையணை இல்லை...

போர்வை எனக்கு...

என்ற சண்டைகளை மீறி தூங்கிய பிறகு

தலையணை எல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட ...

தலையணை பறி போனாலும்....

ஆளுக்கொரு டைரக்ஷனில் ... உருண்டு..புரண்டு..
மரண தூக்கம் தூங்கி...

காலையிலேயே....
அத்தை...சித்தியோட கைக்குழந்தை...
பூபாளம் பாட...
நை நைன்னு எரிச்சலோட தூக்கம் கலைந்து விழிப்போம்...

ravi said…
அடுத்து பல்துலக்கும் படலம்...
தாத்தாவோ மாமாவோ.
பொறுப்பு இந்த டிபார்ட்மென்ட்டுக்கு...

இல்லையேல் Colgate tooth powder டப்பா ஒரே நாள்ல காலி...
கொஞ்சமா எல்லோர் கையிலயும் போடறது...

Next காபி படலம்...
விறகு அடுப்பில்
பாலைக்காய்ச்சி...
ஈயம்பூசிய பித்தளை குண்டான்ல. காபி கலந்து....ஓட்டல்ல அடுக்கற மாதிரி...20 பேருக்கு காபி கலந்து ஒவ்வொண்ணா கொஞ்சம் பெரிய பிள்ளைக கையில் தந்து தாத்தா சித்தப்பா மாமா என ஆண்களுக்கு கொடுத்து வர சொல்லுவாங்க...

ravi said…
பிறகு சின்ன பள்ளிக்கூடம் போல இருக்கும் வாண்டு பட்டாளத்தை வரிசையா உக்காரவச்சி உக்காந்து குடின்னு கைல கொடுத்தாலும் அதில் சிலது காப்பி டம்ளரை டபுக்னு கவிழ்த்து விட்டு...

ரெண்டு முதுகுல வாங்கி
வீர்னு அலறும்...

தாத்தாவோ பாட்டியோ சமாதானப்படுத்த...

வீட்டு பெண்களுக்கு தயாராகும் அடுத்த டோஸ்....

டிகாக்‌ஷனில் காபி கொடுக்கப்படும்....

ravi said…
திண்ணையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டே கதை பேசிக் கொண்டிருக்கும் எங்கள் கூட்டத்தில் அழுதழுது கன்னத்தில் காய்ந்த கண்ணீர் கோடுடன் காபியை குடித்து விட்டு வந்து
அமரும் வாண்டுவை வலிக்குதா...

சரி சரி. அழாதே.... அத்தை தான அடிச்சாங்கன்னு சமாதானபடுத்துவோம்...

அடுத்து குளியல் படலம். சித்தியோ... பாட்டியோ...பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு...

ravi said…
கதற கதற கண்ல சோப்பு சீயக்காய் பட்டாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும் துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டு கன்னுகுட்டிகளை குளிப்பாட்டி பவுடர் போட்டு தலை வாரி விட்டு அடுத்த செக்‌ஷனுக்கு அனுப்புவாங்க...

அப்பாடா...

டிபன் படலம்...

அணையா அடுப்பு காலை டிபன் முடிய 11 மணி ஆகும்...

எனக்கு குட்டி தோசை...எனக்கு ரோஸ்ட்...எனக்கு இட்லி...ன்னு விதவிதமா ஆர்டர் கொடுத்தாலும் கிளை அடுப்பை முடுக்கி விட்டு கட கடவென சப்ளை செய்யும் அத்தையும் சித்திகளும்...

பத்துமணிக்கு மேல் அவங்க துணிகளை சர்ஃப்பில் நனைக்க ...

செல்ல மிரட்டலை மீறி
சோப்புக்குமிழிகளை அள்ளிக்கொண்டு...

ப்ரியமாக விளையாட ஓடுவோம்...

உண்டு முடித்ததும் ...

வயது வாரியாக பிரிந்து தாயம்...

பல்லாங்குழி...

தோட்டத்து பப்ளிமாஸ் மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடுதல் என...

பொழுதுபோகும்...

வீட்டு பெண்கள் குளித்து துவைத்து. துணிகாயப்போட மாடிக்கு போகையில் நாங்களும் ஓடறது....

மற்ற நேரத்ல மாடி கதவு பூட்டப்படும்....

பாதுகாப்புக்காக....

யாருக்கேனும் எப்போதும் ஒரு கைக்குழந்தை இருப்பதால் வீட்டில் தூளி தொங்கிக்கொண்டே இருக்கும்...

குழந்தையை குளிப்பாட்ட எடுத்து போகின்ற இடைப்பட்ட நேரத்தில் அதில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவோம்...

அதை உட்காரக்கூடாது தம்பிக்கு உடம்பு வலிக்கும் என்று இறக்கி விட்டுவிடுவார்கள் பாட்டி...

குழந்தையை குளிப்பாட்ட எண்ணெய் வெந்நீர் எடுத்து கொடுக்க...

பவுடர் கண்மை எடுத்து வரன்னு....

மதிய வேளை நெருங்கிடும்.....

மதிய உணவில் பச்சடி பொரியல் வறுவல்னு...

பக்கத்துல இருக்கறவனை(ளை) விட நமக்கு குறையாம இருக்கான்னு பாத்துகிறது...

இல்லன்னா கோவிச்சிகிட்டு சீன் போட முடியாதுல்ல...

மூணு மணிக்கு பெண்கள் சாப்பிட்டு வெற்றிலை பாக்கு போட்டுகிட்டே சிரித்து கதை அளந்து கண்ணயர்ந்து...

நாலு மணி போல் எழுந்து..
வீடு பெருக்கி...

மாலையில்..

புரச இலையில் சூடாக கட்டி தரும் மிக்ஸர் கடை பொட்டலம் வாங்கி தந்து...காபியைக் கொடுத்து

மாமாவின் தலைமையில் பார்க்குக்கு அழைத்து போக pack பண்ணி விட்ருவாங்க...

போகும் போதே பனாரஸில் பால்கோவா...

வாங்கி கொண்டு போய் பார்க்கில் அமர்ந்து தின்றுவிட்டு...

அங்கு ஒலிக்கும் ரேடியோ பாடலுடன் செய்திகளையும் கேட்டு...

வீடு திரும்புகையில் மாமா சொல்லும் சில டுபாக்கூர் கதை உண்மை கதைகளை கேட்டுக்கொண்டே வருவோம்...

வீட்டுக்கு வந்து கை கால்களை கழுவி....

இரவு
சாப்பாடு...

கூடத்தில் வட்டமாக குழந்தைகளை அமரவைத்து...

குண்டானில் சோறு போட்டு...

சுடசுட சாம்பார் ஊற்றி ...

தளதளவென பிசைந்து உருண்டை உருட்டி...

நடுவில் குழித்து...பொறியை வைத்து...புறங்கையில்.. சாம்பார் ரசம் வழிய... காதுகளில் பாட்டி சொல்லும் மந்திரவாதி கதைகள்...

புராணக் கதைகளை கேட்டு வாய் பிளந்திருப்போம்...

ம்ம்ம்...சாப்பிடு... சாப்பிட்டால்தான் கதை... என்று தொடரும் போட்டுவிடுவார் பாட்டி...

மீதிக்கதை உறங்கும்போது தொடரும்...

பாட்டியின் மீதே கால்களை போட்டு கொண்டு இடது புறம் நான் ...

வலது புறம் நீ...

என போட்டி போட்டு படுத்துறங்குவோம்...

அந்த மகிழ்வான நாட்கள்...

இன்றைய தலைமுறை அறியாத ஒன்று...
Padma said…
Super 🙏🙏
Rajamani said…
Great🙏🏻
ravi said…
*ராமா* ...

விழிகள் இரண்டும் தூளியாக்கி

இமை இரண்டும் நெய்த புடவை கட்டி

இரு புருவம் தனில் கட்டி விட்டேன் கண்மணி ராமா

தாலேலோ என்றே தாய் என தாலாட்டு பாடினேன் ...

தமிழே! தன்னிகரற்ற தவப்புதல்வனே!!

சக்ரவர்த்தி திருமகன் என்பதாலோ ஏழை என் குடில் வர மறுத்தாய் ராமா ?

எட்டு மாடி கட்டடம் எனக்கில்லை

ஏறி வர வின்யிங்கியும் எனக்கில்லை ...

உன் தேர் வைக்க இடமும் இல்லை ...

நேரில் உனை காண ஆசை மட்டும் கரை காண்பதில்லை

உத்தமனே!!

நிலை அறிந்து
விதி புரிந்து
மதி இல்லா என்னிடம் சதி செய்திட எண்ணமோ ?

கதி நீயே என்ற பின்னும்

கை இரண்டை பின்னுக்கு கட்டுதல் ராஜ முறையோ ..

முறையுடன் நான் கூறும் குறைகள்

உன் வரைந்து வைத்த செவி தனில் சேர்கின்றனவோ ?

செந்தாமரை இதழோனே ...

செங்கமல விழியோனே ...

விரைந்து வர மனம் இல்லையோ ... ?

நீ வாராத நாள் எல்லாம் எனக்கு இன்னும் பிறவாத நாளே *ராமா* 💐💐💐
Akshaya said…
Your encouragement, dedication and concern for all of us to know and understand the spiritual path is really amazing...

I have just started learning from you that there are many ways to reach her and no one is wrong in doing it!!!!!

You have inspired me a lot!! Truly a gift given by Kamakshi
ravi said…
Papamochani Ekadasi Tomorrow...

Significance of this Ekadashi is mentioned in Bhavishya Purana. As the name refers Papamochani removes all sin which is committed. There lived a Sage named Medhavi, an ardent Shiva Bhakt who spend life meditating Shiva.

Indra Deva who felt disappointed send apsara Manjughosha to stop his meditation. She was successful & Medhavi forgot his poojas & rituals. Later Manjughosha requested Medhavi her wish to return, Sage remembered his meditation was lost due to her.

Out of anger, he cursed Manjughosha to transform into an ugly & dreadful women. Medhavi went to Sage Chyavana, his father who guided him to observe Papamochani Ekadashi Vratham to remove his sins.

Medhavi & Manjughosha both observed Vratham & got relieved from their sins. Vratham should be taken from today Dashami & ending by taking parana on dwasdashi day, on Sunday
ravi said…
காளமேகப்புலவர் பாம்பும் எலுமிச்சம்பழமும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

*பாடல்*

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் –

எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம் (6)
ravi said…
*பாம்பு* பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும்.

பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும்.

அரி (காற்று) உண்ணும்.

அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும்.

எரிச்சல் (சினம்) குணம் உடையது

*எலுமிச்சம்பழம்*

பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும்.

பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும்.

அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும்.

உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும்.

சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.
ravi said…
[17/03, 12:55] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 109*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*99*
[17/03, 12:56] Jayaraman Ravilumar: कलमञ्जुलवागनुमितगलपञ्जरगतशुकग्रहौत्कण्ठ्यात् ।

अम्ब रदनाम्बरं ते बिम्बफलं शम्बरारिणा न्यस्तम् ॥99॥

99. Kala manjula vaganumitha gala panchara gatha suka grouthkandyath,

Amba radhambaram they bimba phala, sambareena nyastham.

கலமஞ்ஜுலவாகனுமிதகலபஞ்ஜரகதஶுகக்ரஹௌத்கண்ட்யாத் |

அம்ப ரதனாம்பரம் தே பிம்பபலம் ஶம்பராரிணா ன்யஸ்தம் ||99||
ravi said…
காமாக்ஷி உன் இதழ்கள் கோவைப்பழம் போல் சிவந்தவை.

உன் கழுத்துக்குள் ஒரு அழகிய கிளி இருந்துகொண்டு பேசுகிறதோ?

அதை வெளியே வரச்செய்து பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வாயில் இதழ்களை கிளிக்கு பிடித்த கோவைப்பழமாகக் காட்டி இருக்கிறதோ? 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
ravi said…
[17/03, 12:53] Jayaraman Ravilumar: 💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 516* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*
[17/03, 12:53] Jayaraman Ravilumar: *சக்தி ஆலயம்: அவனியாபுரம் ரேணுகாம்பாள்:*
ravi said…
அப்பா, நீங்கள் விருப்பப்பட்டபடியே நான் புண்ய ஸ்தலங்களுக்கு சென்று யாத்திரை செய்து வருகிறேன்'' என்று ஜமதக்னி ரிஷியை வலம் வந்து நமஸ்கரித்து கிளம்பினார் பரசுராமர்.

ஒரு வருஷ காலம் சென்றது. திரும்பினார்.

தந்தைக்கு யாக யஞங்களுக்கு உதவியாக இருந்தார்.

வழக்கம் போல ஓர் நாள் ஆற்றங்கரைக்கு சென்ற அவரது தாய் ரேணுகா தேவி தரையில் குனிந்து மண் குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள்.

அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள்.

இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள்.

கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது.

கூட்டி எடுத்த மண் அன்று அந்த நிமிடமே மண்குடம் ஆகவில்லை.
ravi said…
*ராமா* ...

விழிகள் இரண்டும் தூளியாக்கி

இமை இரண்டும் நெய்த புடவை கட்டி

இரு புருவம் தனில் கட்டி விட்டேன் கண்மணி ராமா

தாலேலோ என்றே தாய் என தாலாட்டு பாடினேன் ...

தமிழே! தன்னிகரற்ற தவப்புதல்வனே!!

சக்ரவர்த்தி திருமகன் என்பதாலோ ஏழை என் குடில் வர மறுத்தாய் ராமா ?

எட்டு மாடி கட்டடம் எனக்கில்லை

ஏறி வர வின்யிங்கியும் எனக்கில்லை ...

உன் தேர் வைக்க இடமும் இல்லை ...

நேரில் உனை காண ஆசை மட்டும் கரை காண்பதில்லை

உத்தமனே!!

நிலை அறிந்து
விதி புரிந்து
மதி இல்லா என்னிடம் சதி செய்திட எண்ணமோ ?

கதி நீயே என்ற பின்னும்

கை இரண்டை பின்னுக்கு கட்டுதல் ராஜ முறையோ ..

முறையுடன் நான் கூறும் குறைகள்

உன் வரைந்து வைத்த செவி தனில் சேர்கின்றனவோ ?

செந்தாமரை இதழோனே ...

செங்கமல விழியோனே ...

விரைந்து வர மனம் இல்லையோ ... ?

நீ வாராத நாள் எல்லாம் எனக்கு இன்னும் பிறவாத நாளே *ராமா* 💐💐💐
ravi said…
17.03.2023:

"Gita Shloka (Chapter 2 and Shloka 15)

Sanskrit Version:

यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते।।2.15।।

English Version:

yam hi na vyathayantyete
purusham purusharshabha |
samaduhkhasukham dheeram
somrutatvaaya kalpate ||


Shloka Meaning

The firm man who is not affected by pain and pleasure, who remains equal minded, surely is
fit for mortality, O Arjuna, chief of mortals.

Chief of mortals
----------------
One who has controlled the senses, who is not attracted by worldly objects, and one who is equal
minded in pain and pleasure, is the best of men. Worldly greatness is good but not enough.
Along with Wordly greatness, focus should be on acquiring spiritual excellence also.

Then alone he becomes the chief among mortals. Krishna exhorts Arjuna to strive for spiritual
excellence and hence he addresses him as purusharshabha (Chief among mortals).

Equal in pain and pleasure
--------------------------

Firmness of character imp[lies equamity of mind under all conditions of pain and pleasure.
One who is firmly fixed in the atma feels pain and pleasure are only modifications of body and
mind. The Atma is above the mind and is a witness to all these changes.

A firm man would be indifferent to all these things.

Fit for mortality
-----------------

Liberation is also known as immortality. The world of name and fame are subject to birth and death.
The state of atma is deathless. Liberation is not something to be acquired fresh by man, it is his
essential nature. It is not in the heaven or sky or in some outer space. It is immortality here and now
and for ever. He who reaches this state goes beyond the purview of death. He has no need to take a body

Fitness for moksha is confined to any race, religion or caste. Krishna prescribes that any person
who has heroic endurance and equal mindedness is alone fit for liberation. There is no further
distinction of caste or creed.


The state of happiness ('ananda') is Moksha.
One who is not attracted to sense objects, who is firm and equal minded in pain and pleasure would
attain moksha.
The term Dhira comes in this shloka. One who is equanimous in life and death and in the middle of all agitations is qualifed to be a Dhira.

Jai Shri Krishna 🌺





"
:
ravi said…
16.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 14)

Sanskrit Version:

मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत।।2.14।।

English Version:

maatraasparshaastu kaunteya
sheetoshnasukhaduhkadaaha |
aagamaapaayinoonityaah:
taanstitikshasva bhaarata ||


Shloka Meaning

Contact of the senses with objects produce heat and cold, pain and pleasure.
These experiences come and go, and are impermanent. Endure them, O Arjuna.

Those who do not know that the world is a great illusion consider that the experiences
of the senses and the mind are real, and super impose them on themselves and suffer
all through their life. But those who know that these modifications belong to the body only
and the self remains untroubled and uncontaminated by them, are free from pleasure and
pain and such people live always in a sense of happiness.

As long as the man is in an embodied state, even the Jnani must go through the physical changes.
But since the Jnani is aware of the differences between the body and atma, his attitude to them
is entirely different from that of the ignorant man. Krishna's command is to endure them and
no other escape route.


Endure them (titikshasva). This is one of th e great mantras of the Gita.
Man should be equal minded where cold and heat, pleasure and pain, come in the form of an endless chain.
So, long as man has the body, they come. None can stop them. So the lord gives the satvic law
(titikshasva) - ensure them. Like the control of internal and external organs, titikshasva
(endurance is an absolutely necessary qualification for the spritual seeker).

How does this apply to our day to day life? (Gita is meant to be applied and not be just read and forgotten)

All of us go through up cycles when he success comes over way and down cycles when life seems unfiar.
What this says is very simple.

When success comes do not think you are the greatest man on this earth and walk with collars up and strut around.
When failure comes do not sulk and sink and have all sorts of self doubt and self pity.

Do not jump around when success comes and do not sink when failures hit you.
Success and failure should not define your persona. Go with the flow irrespective of ups and downs.
Benefit. No BP. No diabetes. No need to go to the doctor. One would be so much at peace with oneself.

Can we apply this simple technique? It will give huge dividends with zero spend!!!!!

Again, Gita is a live scripture that should be applied in our day to day life.

It is not meant just for Arjuna. It is every living being.

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -17.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-90

மூலம்:

கடகமணி பன்னிருதோட் காங்கேயன், காமர்க்
குடமுலைக்கா னக்குறத்தி கொண்கன் – நடனமயில்
ஊர்வான், பழனிவெற்பில் உற்றவன், சீ ரோதியருள்
சேர்வார்க்கே எய்தும் செயம். (90).

பதப்பிரிவு:

கடகம் அணி பன்னிரு தோள் காங்கேயன், காமர்க்
குடமுலைக் கானக்குறத்தி கொண்கன் – நடன மயில்
ஊர்வான், பழனிவெற்பில் உற்றவன், சீர் ஓதி அருள்
சேர்வார்க்கே எய்தும் செயம். (90).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

கடகம்- வாகுவலயம் என்னும் தோளணி; கொண்கன்- கணவன், தலைவன்;

அன்பர்களே! "வாகுவலயம் என்னும் தோள் அணிந்த பன்னிரு வீரத் தோள்கள் உடைய காங்கேயன்; அழகு பொருந்திய, குடமுலையை உடைய என் தாய், கானக்குறத்தி வள்ளி நாச்சியாரின் அன்புக்குரிய கணவன்; நடன மயிலை நடத்தி, அதன் மீது ஊர்பவன்; காசியின் மீறிய பழனாபுரியின் தலைவனான, எல்லாம் வல்ல எம் பெருமான் பழனி ஆண்டவனின் அரும் பெரும், யாரும் சொல்ல ஒண்ணாத புகழை ஓதி, அவன் பேரருளைச் சேர்வார்க்கே, ஜெயம் எய்தும் என்று உணர்க! எல்லாம் வல்ல எம் பெருமான் பழனிக் கோமான் திருவடி பணிக!" என்று நம் சுவாமிகள் உரைக்கிறார் இந்த வெண்பாவில்.

சீர்கெட்டவாழ்வு சீராய், சீருக்குவர, சீர்ப்பிழை பொறுக்கும் எம் பெருமான் பழனி ஆண்டவன் சீர்சிறப்பை சீரோடு பாடு! சீர் மிகும் பெருமான் துர்ச்சீர் நீக்கி என்றும் நற்சீர் அளிப்பான்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺 "Live with love and virtue...everyone is a flower blossomed by Lord Sri Krishna's will!..." - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Don't have any regrets in life. You can't handle too much power.

🌺 We are here to chant the name of Sri Krishna and celebrate life happily day by day.

🌺We have become machine humans and have forgotten our hearts
Let's start life anew

🌺 There is beauty and grace in each

🌺No duty pulls you down, you have imprisoned yourself

🌺Make responsibilities not obligations!
Leave when you can't Do not regret when you can't fulfill It may be a different outcome Accept it.

🌺Stay with life and go with life.
Live in celebration
Dharma is the only canon here.

🌺 Don't interfere in other people's life and don't hurt anyone
Let them live their lives in their own way and don't criticize. Directing the lives of others is God's power! If you criticize it, you are criticizing Lord Sri Krishna's action and that is not good.

🌺 Be kind to others if possible. Share it
If others don't need you, go on your merry way.

🌺 Lord Sri Krishna will bless and keep your soul if no one suffers because of you.

🌺 Live with love and virtue.
All the flowers blossomed by the will of Lord Sri Krishna! Enjoy life and live.
Go through life slowly enjoying many things.

No need to run with your eyes closed
There is no target here
Live the life
Appreciate life
Worship life.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *அன்பும் அறமும் கலந்து வாழுங்கள்* ... *எவ்வுயிரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் விருப்பத்தில் மலர்ந்த மலர்களே* !... - *என்பதை* *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺வாழ்வில் எந்த வருத்தமும் வேண்டாம்.மிக பெரிய சக்தியை நீங்கள் கையாள முடியாது.

🌺நாம் இங்கே இருப்பது ஸ்ரீ கிருஷ்ணன் நாமத்தை சொல்லிக்கொண்டு வாழ்வை தினம் தினம் மகிழ்வாக கொண்டாடுவதற்கு தான்.

🌺இயந்திர மனிதர்களாய் மாறி இதயத்தை மறந்து போனோம்
வாழ்வை புதிதாய் தொடங்குவோம்

🌺ஒவ்வொன்றிலும் அழகும் அருளும் நிறைந்துள்ளது

🌺எந்த கடமையும் உங்களை இழுக்காது நீங்கள் தான் உங்களை சிறைபடுத்தி கொண்டுள்ளீர்கள்

🌺பொறுப்புகளை செய்யுங்கள் கடமைகளாக அல்ல!
முடியாத போது விட்டு விடுங்கள் நீங்கள் நிறைவேற்ற இயலாத போது வருந்த தேவையில்லை வேறு வித முடிவாக அது இருக்கலாம் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

🌺வாழ்வோடு ஒட்டி இருங்கள் வாழ்வோடு இணைந்து செல்லுங்கள்.
கொண்டாட்டமாக வாழுங்கள்
இங்கே தர்மம் நியதி ஒன்று மட்டுமே.

🌺பிறர் வாழ்வில் குறுக்கிடாதீர்கள் யாரையும் புண்படுத்தி விடாதீர்கள்
அவரவர் வாழ்வை அவரவர் விருப்பத்தில் வாழ விடுங்கள் எந்த விமர்சனமும் செய்யாதீர்கள். பிறர் வாழ்வை இயக்குவதும் இறை சக்தியே! நீங்கள் அதை விமர்சித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் செயலை பழிக்கிறீர்கள் அது நல்லதல்ல.

🌺முடிந்தால் பிறரோடு அன்பாய் இருங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்
பிறர் தேவையில்லை எனில் நீங்கள் உங்கள் வழியில் ஆனந்தமாக செல்லுங்கள்.

🌺உங்களால் யாரும் துன்பப்படாமல் இருந்தாலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதித்து கடைத்தேற்றுவார்.

🌺அன்பும் அறமும் கலந்து வாழுங்கள்.
எவ்வுயிரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் விருப்பத்தில் மலர்ந்த மலர்களே! வாழ்வை ரசித்து வாழுங்கள்.
மெதுவாக பலவற்றை ரசித்து வாழ்வில் பயணியுங்கள்.

🌺கண்களை மூடிக் கொண்டு ஓட தேவையில்லை
இங்கு இலக்கு ஏதுமில்லை
வாழ்வை வாழுங்கள்
வாழ்வை மதியுங்கள்
வாழ்வை ஆராதியுங்கள்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை"..*

*_✍️ 17, Friday, Mar., 2023_*

https://srimahavishnuinfo.org

*🧿"காலத்தைப் பயன் படுத்துங்கள்.."*

*♻️"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே.*

*♻️காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுதுபோக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது. காா்ல்சான்ட்பா்க்:*

*♻️"நேரம் என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற உாிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்படுகிறது.*

*♻️உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.*

*♻️உங்கள் நேரம் உங்களுக்காகவே.*
*அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள்.*
*உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்*
*எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப் போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப் போடும் பழக்கம் நல்லதல்ல.*

*♻️வாழ்க்கை என்ற கடிகாரத்திற்கு ஒரு முறை தான் சாவி கொடுக்கப் படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமா? அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமா? என்பதை யாரும் கூற இயலாது.*

*♻️தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்துக் கொள்ளுங்கள்.*

*♻️நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும்.கால விரயத்தைத் தடுக்கலாம். காலத்தைச் சாியாகப் பயன்படுத்தத் தொிந்தால் போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராகச் சென்று கொண்டு இருக்கிறீா்கள் என்று நம்பலாம்..*

*😎ஆம்.நண்பர்களே...*

*🏵️உலகில் இழந்த செல்வத்தை கூட மீண்டும் பெறலாம் பெற முடியாதது இழந்த காலத்தை மட்டுமே.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
பாதாரவிந்த சதகம் !

103.இதம் ய: காமாஷ்யா: சரண நலிந ஸ்தோத்ர சதகம்
ஜபேந் நித்யம் பக்த்யா நிகில ஜகதாஹ்லாத ஜனகம்
ஸவிச்வேஷாம் வந்த்ய: ஸகல கவி லோகைக திலக:
சிரம் புக்த்வா போகான் பரிணமதி சித்ரூபகலயா

உலகமனைத்திற்கும் பேரானந்தம் தருகிற காமாக்ஷியின் திருவடித் தாமரைப்பற்றிய நூறு துதிகளையும் தினமும் பக்தியுடன் ஜபிப்பவன் உலகினரால் வணங்கத்தக்கவனும், எல்லாக்கவிகளின் உலகிற்கு நெற்றித்திலகமுமாகி நீண்டகாலம் இம்மைச் சுகம்
பெற்றனுபவித்து சித்ரூபிணியின் கலையாக வடிவாக ஆகின்றன்.

சித்ரூபிணியின் கலையாக
திருவடிகளில் வணங்கி நிற்பவன் எல்லா தன்மைகளையும் பெறுகிறான். மமதையும் அகந்தையும் நீங்கி
விருப்பு வெறுப்பின்றி ஸமநோக்குடன் உலகுடன் பழகுவதால் அமைதி பெறுகிறான்.

திருவடியில் வணங்கும் போது சிவபெருமானின் அருகாமையும் கிடைக்கிறது. மங்களம் சூழ ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாதாரவிந்த சதகம் நிறைவுற்றது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
[17/03, 17:43] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரி*
*67 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[17/03, 17:44] Jayaraman Ravilumar: ப3ஹுவித4-பரிதோஷ–பா3ஷ்பபூர்-
ஸ்பு2ட-புலகாங்கித-சாரு-போக–பூ4மிம் |

சிரபத2-ப1லகாங்க்ஷி-ஸேவ்யமானாம்

பரமஸதா3 சிவ-பா4வனாம் ப்ரபத்3யே || 67
ravi said…
ஒரு போக பூமி எப்படி இருக்கும் தெரியுமா ?

அதை யார் விரும்புவார்கள் தெரியுமா ?

மோட்சத்தை விரும்புபவர்கள் இதை அனுபவிக்க துடிப்பார்கள் ...

அந்த போக பூமி சதாசிவம் தியானம் ..

அனுபவிப்பவர்க்கே இது புரியும் ..

சிவ தியானத்தில் ஏற்படும் போகத்தை மட்டுமே நான் விரும்புகிறேன் ...🥇🥇🥇
ravi said…
[17/03, 17:40] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 110 started on 6th nov

*பாடல் 34 ... சிங்கார*

(தீநெறியினின்று எனைக் காவாய்)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்

சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே👏👏👏
[17/03, 17:41] Jayaraman Ravilumar: *சங்ராம சிகாவல* ...

போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக
உடையவரே,

*சண்முகனே* ... ஆறுமுகக் கடவுளே,

*கிருபாகரனே* ... கருணைக்கு இருப்பிடமானவரே,

*சிங்கார மடைந்தையர் ...* அழகிய விலை மாந்தர்களின்,

*தீ நெறி போய் ...* தீய வழியில் சென்று,

*மங்காமல்* ... நான் கெட்டுப் போகாமல்,

*எனக்கு வரம் தருவாய்* ... அடியேனுக்கு வரம் தந்தருள்வீர்
ravi said…
[17/03, 17:35] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

*ஸமாத்மா* ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[17/03, 17:38] Jayaraman Ravikumar: முந்தையநாள் முழுவதும் ஊன்வாட உயிர்வாட நோன்பிருந்த பீமனுக்கோ பசி வயிற்றைக் கிள்ளுகிறது.

கண்ணனோ “வெந்நீர் தயாரா?” என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

“தண்ணீர் சுடாமலேயே இருக்கிறதென்றால், ஒரு வேளை வெந்நீர்ப் பானைக்குள் பிரகலாதன் ஒளிந்திருக்கிறானோ?” என ஐயம் கொண்டான் பீமன்.

ஏனெனில் பிரகலாதனைத் தீயிலிட்ட போதும் அந்தத் தீ அவனுக்குக் குளிர்ச்சாதனம் போல இருந்ததல்லவா?
ravi said…
Papamochani Ekadasi Tomorrow...

Significance of this Ekadashi is mentioned in Bhavishya Purana. As the name refers Papamochani removes all sin which is committed. There lived a Sage named Medhavi, an ardent Shiva Bhakt who spend life meditating Shiva.

Indra Deva who felt disappointed send apsara Manjughosha to stop his meditation. She was successful & Medhavi forgot his poojas & rituals. Later Manjughosha requested Medhavi her wish to return, Sage remembered his meditation was lost due to her.

Out of anger, he cursed Manjughosha to transform into an ugly & dreadful women. Medhavi went to Sage Chyavana, his father who guided him to observe Papamochani Ekadashi Vratham to remove his sins.

Medhavi & Manjughosha both observed Vratham & got relieved from their sins. Vratham should be taken from today Dashami & ending by taking parana on dwasdashi day, on Sunday
ravi said…
17.03.2023:

"Gita Shloka (Chapter 2 and Shloka 15)

Sanskrit Version:

यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते।।2.15।।

English Version:

yam hi na vyathayantyete
purusham purusharshabha |
samaduhkhasukham dheeram
somrutatvaaya kalpate ||


Shloka Meaning

The firm man who is not affected by pain and pleasure, who remains equal minded, surely is
fit for mortality, O Arjuna, chief of mortals.

Chief of mortals
----------------
One who has controlled the senses, who is not attracted by worldly objects, and one who is equal
minded in pain and pleasure, is the best of men. Worldly greatness is good but not enough.
Along with Wordly greatness, focus should be on acquiring spiritual excellence also.

Then alone he becomes the chief among mortals. Krishna exhorts Arjuna to strive for spiritual
excellence and hence he addresses him as purusharshabha (Chief among mortals).

Equal in pain and pleasure
--------------------------

Firmness of character imp[lies equamity of mind under all conditions of pain and pleasure.
One who is firmly fixed in the atma feels pain and pleasure are only modifications of body and
mind. The Atma is above the mind and is a witness to all these changes.

A firm man would be indifferent to all these things.

Fit for mortality
-----------------

Liberation is also known as immortality. The world of name and fame are subject to birth and death.
The state of atma is deathless. Liberation is not something to be acquired fresh by man, it is his
essential nature. It is not in the heaven or sky or in some outer space. It is immortality here and now
and for ever. He who reaches this state goes beyond the purview of death. He has no need to take a body

Fitness for moksha is confined to any race, religion or caste. Krishna prescribes that any person
who has heroic endurance and equal mindedness is alone fit for liberation. There is no further
distinction of caste or creed.


The state of happiness ('ananda') is Moksha.
One who is not attracted to sense objects, who is firm and equal minded in pain and pleasure would
attain moksha.
The term Dhira comes in this shloka. One who is equanimous in life and death and in the middle of all agitations is qualifed to be a Dhira.

Jai Shri Krishna 🌺



:
ravi said…
Papamochani Ekadasi Tomorrow...

Significance of this Ekadashi is mentioned in Bhavishya Purana. As the name refers Papamochani removes all sin which is committed. There lived a Sage named Medhavi, an ardent Shiva Bhakt who spend life meditating Shiva.

Indra Deva who felt disappointed send apsara Manjughosha to stop his meditation. She was successful & Medhavi forgot his poojas & rituals. Later Manjughosha requested Medhavi her wish to return, Sage remembered his meditation was lost due to her.

Out of anger, he cursed Manjughosha to transform into an ugly & dreadful women. Medhavi went to Sage Chyavana, his father who guided him to observe Papamochani Ekadashi Vratham to remove his sins.

Medhavi & Manjughosha both observed Vratham & got relieved from their sins. Vratham should be taken from today Dashami & ending by taking parana on dwasdashi day, on Sunday
ravi said…
*பேனா*✍️

ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் பேனாவை பற்றி ஒரு கவிதை வரையுங்கள் என்றார் .

மாணவர்களில் முத்து வரைந்த கவிதை அனைவரையும் ஈர்த்தது ...

முத்துவின் கவிதை இதோ

ஏனோ அறியேன் தலையில் இன்று குடைச்சல் தலையில் இருப்பது பேனா ?

கையில் எடுத்தேன் பேனா

காகிதம் அடிப்பட்டது என் கண்ணால் ...

எழுதியது வீணா ... எழுத்துக்கள் காணா போனது ஏனோ ?

தானா வந்த எண்ணங்கள்

மானாய் துள்ளிய வார்த்தைகள்

மீனாய் நீந்திய நெஞ்சில்

தணலாய் தவித்தது ஏனோ ?

பெண்ணாய் நெஞ்சம் பேதலித்ததும் ஏனோ

பெரும் வார்த்தைகள் உப்பாய் துவர்ந்தது ஏனோ ... ?

கடலில் கொட்டிய வார்த்தைகள் அலையாய் என்னிடம் மீண்டும் வருமோ .. ?

கடலில் பேனாவை வைத்தால் சமுத்திரம் உள் செல்லும் மை ஆகாதோ ?

இனிப்பாக எழுத்துக்கள் பிறக்குமோ ...

பேனா தான் ஏனோதான் என்றே வாழுமோ ?

இருந்த பேனாவை உடைத்துப்போட்டேன்

உடைந்த பேனா பேசியது

உருப்படியாய் ஒரு வேலை செய்தாய் ...

பேனா பென்சில் வாங்கி கொடு ஏழை பிள்ளைகளுக்கு

என்னை கடலில் நிறுத்தி

உன் நிலை தாழ்த்திக்கொள்ளதே என்றே ✍️✍️✍️✍️✍️
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

அம்பாளிடம் நாம் இன்னின்ன வேண்டும் என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. “உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஆனாலும் மலயத்வஜ பாண்டியனின் புத்திரியான ஹே மீனாக்ஷி! மனஸில் உள்ள குறையை வாய்விட்டுச் சொல்லாவிட்டால், அது உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
ravi said…
அதனால்தான் இப்படிப் பிரார்த்தனைப் பண்ணுகிறேன். உனக்குத் தெரியாததைத் தெரியப்படுத்துவதற்காக அல்ல; எனக்கு உள்ளே கருணைக்கிழங்கு மாதிரி அரிப்பதைக் கொஞ்சம், சமனப்படுத்திக் கொள்ளவே பிரார்த்தனை பண்ணுகிறேன்” என்று நீலகண்ட தீக்ஷிதர் ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’ என்கிற ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்.

ravi said…
நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களே உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான வழி புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது. லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது. மனஸில் இந்த அன்பு ஊறாமலே வாய்ப்பேச்சில் இன்று ‘சகோதர சகோதரிகளே’ என்று பிரசங்கம் பண்ணி சமத்துவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறோம். அம்பாளிடம் பக்தி பண்ணாத வரையில் இது அநுபவத்தில் வராத வாய்ச் சவடால்தான்; புரளிதான். சாக்ஷாத் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே, ‘உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா; லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான்; அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள்” என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபாஸிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சத்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது என்கிறார் மூகர்.

ravi said…
எல்லாம் சமமாகத் தெரிகிற ஞானநிலையின் உச்சிக்கே அம்பாளின் அநுக்கிரஹம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. ‘அவள் அம்மா; அவளுடைய குழந்தைகளே நாம் எல்லோரும்’ என்பதற்கு மேலே ஒரு படி போய் – அம்மா, குழந்தை என்கிற வித்தியாசம்கூடப் போய் – எல்லாமே அவள்தான் என்று தெரிகிறது. ‘ஒரு சக்திதான் இத்தனை ஆகியிருக்கிறது; ரூபங்களில்தான் பேதம், உள்ளே இருக்கிறது ஒன்றுதான்’ என்கிற பரம அத்வைத ஞானம் சித்திக்கிறது. இதைத்தான் மூகர் சொல்கிறார் – “சிவ சிவ பச்யந்து ஸமம்” என்கிற சுலோகத்தில், காமாக்ஷியின் கருணா கடாக்ஷ வீக்ஷண்யம் பெற்றவனுக்குக் காடும் வீடும் சமமாகத் தெரிகின்றன; சத்துருவும் மித்ரரும் சமமாகத் தெரிகின்றனர் என்கிறார்.

ravi said…
அம்பாளைத் தாயாராகவும் நம்மைக் குழந்தையாகவும் வைத்துக்கொண்டு உபாஸிக்க ஆரம்பித்தாலும் அவளே காலக்கிரமத்தில் இந்த இரண்டும்கூட ஒன்றேதான் என்கிற பரம ஞானத்தை அநுக்கிரஹம் செய்கிறாள். இதை ஆசாரியாள் ஒரு ச்லேஷை (சிலேடை) மூலம் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்கிறார்.

ravi said…
பவானி, உன்னுடைய அடிமை நான்” என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். ‘பவானித்வம் –’, “பவானி உன்னுடைய”, (‘த்வம்’ என்றால் ‘உன்’) என்று இவன் சொல்லுகிறபோதே, அம்பாள் இவனுக்கு ‘பாவானித்வம்’ என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சிலேடை பண்ணுகிறார். முதலில் இவன் பிரார்த்திக்கிறபோது ‘பவானி’ என்றால் அம்பாள். பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி. மறுபடி, பவானித்வம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் ‘பவானித்வம்’ என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, ‘பவானி என்றால் ஆகிவிடுகிறேன்’ என்று அர்த்தம். ‘தீர்க்க ஸுமங்கலி பவ’ என்கிறோமே, இங்கே ‘பவ’ என்றால் ‘ஆவாய்’ என்று அர்த்தம். ‘பவானி’ என்றால் ‘ஆகிறேன்’. ‘பவானித்வம்’ என்றால் ‘நீயாவே நான் ஆகிவிடுகிறேன்’; எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கிறான் பக்தன். தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகிறாள் அம்பிகை. “பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா” என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், “பவானி உன்” (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, “ஆமாமப்பா பவானித்வம்தான்; அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா” என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகிறாள். ‘பவானித்வம்’ என்றால் ‘பவானியின் தன்மை’ என்றும் அர்த்தம். பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகிறான்.
ravi said…
துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

*நெசவாளி சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.
ravi said…

பழனிக் கடவுள் துணை -18.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-91

மூலம்:

செயசெயவென்(று) அண்டர்குழாம் தெண்டனிட்டுப் போற்ற
அயமுகைக்கும் தோட்பழனி யப்பன் – நயமதுரப்
பாடல் விழைந்தான் பரிசுதவு வான், இனிப்போய்
நாடவர்முற் கெஞ்சிநில்லேன் நான் (91).

பதப்பிரிவு:

செய செய என்று அண்டர் குழாம் தெண்டனிட்டுப் போற்ற
அயம் உகைக்கும் தோள் பழனியப்பன் – நயமதுரப்
பாடல் விழைந்தான் பரிசு உதவுவான், இனிப்போய்
நாடவர் முன் கெஞ்சி நில்லேன் நான்!! (91).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

அயம்-ஆடு; அசம் என்றும் வழங்கப்படும்; நாடவர் - தேசத்தவர்;

"பழனிப் பெருமானே! உனக்கே ஜெயம்! ஜெயம்! வெற்றிவேல் பெருமாளே உனக்கே ஜெயம்! ஜெயம்! என்று தேவர்கள் கூட்டம் உன்னைச் சேவித்துப் போற்ற, ஆட்டுக் கிடாவை வாகனமாய்ச் செலுத்தும், வலிமையான தோள்களை உடைய எம் பெருமான் பழனியப்பன், நயமான ,இனிமையான பாடல்களைப் புனைந்தால், அவன் அகம் மகிழ்ந்து, அருள் கூர்ந்து, எனக்குப் பரிசு அளித்து உதவுவான். இப்படி எம் பெருமான், கருணாச்சலமூர்த்தி, கருணாமேரு, கருணாசாகரன், பழநியாண்டவன் எனக்காய் இருக்க, இனிப்போய் தேசத்தவர் முன் கெஞ்சி நான் நில்லேன்!!" என்று சுவாமிகள் தனக்கு உரைக்கும் கூற்றாக நமக்கும் இந்த அறிவுரையை எடுத்து உரைக்கின்றார். பழநியாண்டவனைப் பணிந்து துதித்து ஏத்துங்கள்; மானிடரை அல்ல என்று அறிவுரை பகர்கிறார் நம் தண்டபாணி சுவாமிகள்.

*அயத்தில் உழலும் எனக்கு அயத்திலுதித்த அயவாகனப் பெருமாளே! நின் கருணை வாய்க்குமா? **அசம் மணக்கும் உன் பழனிச்சந்நிதியே நிசம் என்று நான் உணரச் செய் ஐயா!

* அயம்-சேறு; சுனை; குளம்; அயவாகனன்- முருகன்; ** அசம்- சந்தனம்.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" *கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, கனவில், தோன்றிக் கூறிய மதுரை சொக்கன்* , .... *பற்றி* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺" முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர்.

🌺கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான்.

🌺சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

🌺மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

🌺32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

🌺மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.

🌺சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
[18/03, 07:28] +91 96209 96097: *ஷோபணாய நமஹ*🙏🙏
தீயவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்
[18/03, 07:28] +91 96209 96097: ராஜராஜார்சிதா *ராஜ்ஞீ* ரம்யா ராஜீவலோசனா |🙏🙏
மனத்திற்கும் உணர்விற்கும் அப்பாற்பட்ட ஆளும் அரசியாக அருள்பவள்
[18/03, 07:28] +91 96209 96097: நல்ல மாணவர்களுக்கு குழப்பத்தை தவிர்த்து தெளிவான அறிவை அளிப்பவர்
ravi said…
மேற்கு நோக்கிய சிவதரிசனம் விளக்கம்

மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.

கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி.

ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.

ravi said…
இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன.

மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது.

தேடிப் பிடித்து 41 மேற்கு நோக்கிய சிவ திருத்தல விவரங்களைக் கீழே தந்துள்ளேன்.

அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே உம் பேரருளோடு

ravi said…
அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே
உம் திருவடியை பணிகிறேன்

1) அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை

2) அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை

3)அருள்மிகு இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை

4)அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்

5)அருள்மிகு வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்

6) அருள்மிகு திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்

7) அருள்மிகு காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்

8).அருள்மிகு ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்

9)அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்

10) அருள்மிகு அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்

11) அருள்மிகு மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்

12) அருள்மிகு வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்

13) அருள்மிகு சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்

14) அருள்மிகு வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

15) அருள்மிகு அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

16) அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்

17) அருள்மிகு கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

18) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்

19) அருள்மிகு பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்

20) அருள்மிகு மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்

21) அருள்மிகு விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்

22) அருள்மிகு கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்

23) அருள்மிகு அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்

24) அருள்மிகு கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்

25) அருள்மிகு இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்

26) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்

27) அருள்மிகு இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்

28) அருள்மிகு உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்

29) அருள்மிகு தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி

30) அருள்மிகு ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

31) அருள்மிகு கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்

32) அருள்மிகு உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்

33) அருள்மிகு வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்

34) அருள்மிகு காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

35) அருள்மிகு மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்

36) அருள்மிகு நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்

37) அருள்மிகு திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்

38) அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்

39) அருள்மிகு விஸ்வேஸ்வரன்
பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம்

40) அருள்மிகு கைலாசநாதர்
தாரமங்கலம் சேலம் மாவட்டம்

41) அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும்.

இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான
திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.

தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்:

1. பக்த ஸ்தலம்: சிவசைலம் அருள்மிகு சிவசைலப்பர் திருக்கோவில்.

2. மகேச ஸ்தலம்: வழுதூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்.

3. பிராண லிங்க ஸ்தலம்: கோடகநல்லூர் அருள்மிகு
அவிமுக்தீஸ்வரர் திருக்கோவில்.

4. ஞானலிங்க ஸ்தலம்: சிங்கிகுளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்.

5. சரண ஸ்தலம்: மேலநத்தம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்.

6. சகாய ஸ்தலம்: ராஜவல்லிபுரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்.

7. பிரசாதி ஸ்தலம்: தென்மலை அருள்மிகு திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோவில்.

8. கிரியாலிங்க ஸ்தலம்: அங்கமங்கலம் அருள்மிகு நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோவில்.

9. சம்பத் ஸ்தலம்: காயல்பட்டினம் அருள்மிகு மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில்.

10. பஞ்சாக்ர ஸ்தலம்: திற்பரப்பு அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்.

சொக்கநாதபெருமானே உம் திருவடி வணங்குகிறேன்

எந்த சூழ்நிலையிலும் நின்னை நினைக்கும் பேரு கொடுத்தாய் ஈசா!

என்றும் அன்புடன் இறைவன் திருத்தொண்டில் அன்பே சிவம் ...சிவாய நம. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ravi said…
துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

*நெசவாளி சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.
ravi said…
*கர்மா - புரியாத விவகாரம்*

எவ்வளவு தான் படித்தாலும் கேட்டாலும் மேலும் தெரியாத, புரியாத, சில விஷயங்களில் முக்கியமானது ''கர்மா''.
ஆமாம் கர்மா கர்மா என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்று முதலில் தெரியவில்லை. சரி எதையாவது படித்து தெரிந்து கொள்ளலாம் என்று படித்தால் சுத்தமாக புரியவில்லை. அதை புரிய வைக்க தான் கொஞ்சம் சிரமப் படுகிறேன்.



ravi said…
ரொம்ப சிம்பிள். செயல்,கார்யம், என்பது தான் கர்மா -- ஒரு ஸம்ஸ்கிருத வார்த்தை. சயன்ஸ் மட்டும் தெரிந்த ஹிந்துக்களே, நீங்கள் படித்த நியூட்டனின் விதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். - ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பதில் செயல் (விளைவு) உண்டு''. நாம் நினைப்பது, பேசுவது, செய்வது எல்லாவற்றிற்கும் ஒரு பதில் விளைவு உண்டு. என்ன வித்தியாசம் இதில் என்றால், இந்த பதில் விளைவானது கொஞ்சம் மாறுதல் கொண்டதாக , வேறே ரூபத்தில்
இருக்கலாம்,
ravi said…
எதிர் பாராததாக அமையலாம், தொங்கலில் விடுவதாக தோன்றலாம், படுத்தலாம், சந்தோஷ துக்கம் சம்பந்தப் பட்டதாகவும் நேரலாம். எல்லாம் நாம் செய்யும் செயலை பொறுத்ததே. ஒன்று மட்டும் நிச்சயம். எவருமே இந்த பதில் விளைவைத் தடுக்கவோ, அழிக்கவோ, அதிலிருந்து தப்பிக்கவோ வழியில்லை, முடியாது. அது தான் கர்ம பலன்.
ravi said…
இதை ஒரு தண்டனையாக எதற்கு பாவிக்க வேண்டும்? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நல்லதாகவும் இருக்கலாம் அல்லவா? நம்மைத் திருத்துவதற்கு, அல்லது ஒரு நல்ல, உபயோகமான, படிப்பினையாக கூட இருக்க லாமே.
தான் கஷ்டப்படுவதற்கு ஏதுவான செயல்களை ஒருவன் புரிந்திருந்தால் பின் விளைவு கஷ்டமாக இல்லாமல் பின் எப்படி இருக்கும்? எனக்கு மனசாக்ஷி, நீதி, நேர்மை ஒன்றும் தெரியவில்லை என்று சொல்வது, எனக்கு சட்டம் தெரியாதே எதற்கு நான் செய்த குற்றத்துக்கு தண்டனை என்பது போல. கோர்ட், போலீஸ் இதை ஏற்குமா?
ravi said…
தைர்யமாக ''வருவதை மேற்கொள்ளடா கர்ணா!'' பிறவிகள் பல எடுத்து கர்மத்தை தொலைக்க வேண்டி இருக்கிறது.
எனவே கர்ம பலன் என்பது பிரபஞ்ச நீதி. வினை விதைத்தவன் தினையா அறுக்க முடியும்? சுவற்றில் நீ அடித்த பந்து அதே வேகத்தோடு உன் முகத்தில் தான் வந்து அடிக்கும்.
உங்களுக்கு சந்தோஷம், மன அமைதி, நட்பு, அன்பு இன்பம், இதெல்லாம் வேண்டுமா. ஐயா, ஸ்வாமி, நீங்களும் அதை மற்றவருக்கு கொடுத்து பாருங்கள் பலமடங்கு கூடவே உங்களிடம் அவை அணுகும். அது தான் உங்கள் செயல் சொல் விளைவு.
வாழ்வு உலகில் நமக்கு தானாகவே அமைவதில்லை. நமது செயல்பாடு இன்றி அது இல்லையே. பிரபஞ்சத்தின் ஒரு அம்சம் தான் நாம். உள்ளும் புறமும். நம்மைச் சுற்றி நாம் காண்பது நமது உள்ளே தோன்றுபவற்றின் வெளிப்பாடே. நீ நீயாகவே இரு. உனக்கு எது தேவையோ அது மற்றவர்க்கும் தேவையாச்சே என்று உணர்ந்து உனக்கு தேவையானதை தேடும்போது மற்றவர்க்காகவும் சேர்த்து தேடு என்று தான் வேத சாஸ்திரங்கள், கீதை போன்ற ஆன்மீக நூல்கள் சொல்கிறது.
எதை நீ தவிர்க்க முயல்கிறாயோ அது உன்னை விடாது என்ற உண்மையை நினைவில் கொள்வோம். எதிராளிகளை துச்சம் என நினைப்பது, ஏளனம் செய்வது, இளக்காரம் புரிவது எல்லாம் அதைவிட நமக்கு கொஞ்சம் கூடவே அசலும் வட்டியுமாக வர காத்திருப்பதை உணர்வோம்..
இடமாற்றம் நம்மை மாற்றிவிடாது. அங்கும் நாம் நாமாகத்தான் செயல் புரிவோம். செய்யும் செயல்களின் தன்மையை கவனமாக சிந்தித்துப் பார்த்த பின் செயல்பட வேண்டும். மன அளவில் வளர மாறுதல் செய்ய வேண்டியது நம்மையே தவிர மற்றவர்களையோ மற்றதுகளையோ அல்ல.
கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டியது நம்மைத் தான். நாம் உள்ளே சீர் பட்டு விட்டோமானால் வெளியே உள்ளது அனைத்தும் தானே சீர் பட்டதாகவே மாறிவிடும்.
என் வாழ்க்கையில் எங்கோ கோளாறு என்றால் அது என்னுள்ளேயே தான் என்பது வெட்ட வெளிச்சம். நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் கண்ணாடி. நமது பிம்பத்தைத் தான் அதில் காண்கிறோம். எனவே நமக்கு நேர்ந்தவை, நேர்பவை, நேரப் போகின்றவை, அனைத்தும் நமது செயலின் விளைவு தான்.

ரெண்டு எண்ணங்கள் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. நாம் உயர்வைத் தேடி உழைக்கும்போது தாழ்ந்த தீய எண்ணங்களுக்கு இடமிருக்காது. தீய எண்ணங்களிலேயே உழல்பவன் மேன்மை பெறுவது குதிரைக்கொம்பு.

'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்பதேது?' பி பி ஸ்ரீனிவாஸ் பாடுவதை அவ்வப்போது கேட்பதோடு அர்த்தமும் புரியட்டும். நாமாகவே நமக்கு இந்த க்ஷணம் கிடைக்கும் நிம்மதியை இழக்கிறோம். பழங்கதை நிகழ்வதை விழுங்கிவிடுகிறது.
உண்மையை அறியும் வரை சரித்திரம் அதன் வழியே தொடர்ந்து தான் செல்லும். சென்ற வழியை மாற்றினால் சரித்திரமும் மாறுமே. சரித்திரம் என்பதே நடந்ததை ஞாபகப்படுத்துவது தானே.

உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை , மதிப்பு, உண்டு. வியர்வை சிந்துபவன் பலன் அடைகிறான்.
பொறுமை, விடா முயற்சியோடு நம்பிக்கை -- இந்த இரண்டும் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் உதவுபவை.
மாவுக்கேற்ற பணியாரம் என்கிறோமே அது இதற்கும் பொருந்தும். உழைப்புக் கேற்று தான் ஊதியம்.
எண்ணமும் செயலும் நல்லதாக பலனெதிர் நோக்காது அமைந்தால் நாம் எல்லோரும் ஸ்ரீ கிருஷ்ணன் தான்
-

Gopi ernakulam said…
Dear Sir

My Namaskarams to you.

It is really shocking to know that you wish to leave this forum.

I wish to mention that Akshaya's sessions have been valuable due to your excellent insights and inputs .

Your knowledge and experience will really help members like me to tread the path of bhakthi with more focus and sincerity.

Kindly do rethink on your decision to quit and continue to enlighten us with your rich experience and explanations🙏🙏🙏.

I sincerely request you to continue to guide us all .

This is my humble wish🙏🙏
Saro said…
I was much interested in attending your QB which in turn helps to recollect the meaning while reciting
Your explanations in the Saturday and Sunday class too were much informative
Please continue to do
Rajeswari said…
Pl continue enlightening us. You were giving lot of information and many new things which we have not heard it earlier.
Akshaya said…
i understand that there are some positive and negative comments or suggestions!!! I agree that many don't respond!!!

Still on behalf of everyone in the group, i would like you to continue sharing your knowledge and experience 🙏🙏

I request you with utmost humbleness to continue enlightening us 🙏
Rajeswari said…
Read in the mookasaram group that you are leaving the group. You were giving so many good information. I was waiting for your quiz also. Very good service by you in enlarging our knowledge. Pl don't move out of the group. It is my personal request 🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/CUqqRqLCK4BDxSqNWcy9ax

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு பற்றிய பதிவுகள் :*

ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். இவர் அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆவார்.

அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர் வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.

இவரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும்.

ஆஞ்சநேயர் வழிபாடு :

ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.

அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் கஷ்டங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

துளசி மாலையும், வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. எனவே சனிக்கிழமை வெற்றிலை மாலையை சாற்றி அனுமன் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.

திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை அன்று வெற்றிலை மாலை சாற்றலாம்.

அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள் ஆகும். வெற்றி கிடைத்திட இவருக்கு திராட்சைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.

அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவிக்க அனுமனின் அருள் பெறலாம்.

அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாற்றி வழிபடலாம்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்"

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
https://chat.whatsapp.com/CUqqRqLCK4BDxSqNWcy9ax

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம் பற்றிய பதிவுகள் :*

நாம் தினமும் இறைவனை வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்போம்.

அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும்.

அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம் இதோ.

*பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்:*

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
ஸமேகமான் காம காமாய மஹ்யம் !
காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !
குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

*பொது பொருள்:*

அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியை தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதை கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களை போற்றுகிறேன்.

மேலே உள்ள பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் .

நாம் குபேர சம்பத்துகளுடம் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார். இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் ஜபிப்பது நல்லது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
"நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" -பெரியவா

(உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே... . வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!"-பக்தர்)

( தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற இன்னொரு பக்தர் வேண்டுதலுக்கும் செவிசாய்த்த பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயத்துல ஆந்திராவுல இருக்கிற சித்தூருக்கு ஒரு தரம் விஜயம் பண்ணியிருந்தார் பரமாசார்யா. அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினா.

அந்த சமயத்துல ஒரு பக்தர் மகாபெரியவாகிட்டே ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

"பெரியவா நமஸ்காரம். இந்த தேசத்துல பலப்பல க்ஷேத்ரங்கள், உங்களோட திருப்பாதம் பட்டுப் புனிதம் அடைஞ்சிருக்கு. அந்த பாக்யம் எங்க ஊருக்கும் கிடைக்கணும்னு ப்ரியப்படறோம். தயவு செஞ்சு எங்க ஊருக்கு ஒருதரம் நீங்க எழுந்தருளணும்!"

பக்தர் கேட்டதும் மென்மையா புன்னகைச்ச ஆசார்யா, "ஒங்க ஊர் எது? அது எங்கே இருக்கு?" அப்படின்னு கேட்டார்.

பக்தர் சொன்ன ஊர், அந்த சமயத்துல ஆசார்யா தங்கியிருந்த இடத்துலேர்ந்து மூணுமைல் தொலைவுல இருந்தது. அதை மகாபெரியவாகிட்டே சொன்னார், அவர்.

"நீயே என்னை அழைச்சுண்டுபோறியா?" மகாபெரியவா இப்படிக் கேட்பார்னு எதிர்பார்க்காத பக்தர், சந்தோஷத்துல திணறிப்போனார். அன்னிக்கு ராத்திரி அவரை அங்கேயே தங்கச் சொன்ன மகாபெரியவா, நாளைக்குக் கார்த்தால நித்யானுஷ்டானம் முடிஞ்சதும் புறப்படலாம்னுட்டார்.

சொன்னமாதிரியே மறுநாள் கார்த்தால பக்தர்கூட அவரோட ஊருக்குக் கிளம்பிவிட்டார், மகாபெரியவா. வழியில வெயில் அனலா கொளுத்தித்து.கொஞ்சம் கூட சலிச்சுக்காமலும் ஒடம்பு வருத்தத்தை வெளியில காட்டிக்காமலும் நடந்தார் மகாபெரியவா.அந்த பக்தருக்கு தான்,தப்புப் பண்ணிட்டோமோ.. பெரியவாளை கஷ்டப்படுத்தறோமோ! என்றல்லாம் தோணித்து.

ஒரு வழியா ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் ,ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பூர்ணகும்பம் தந்து பரமாசார்யாளுக்கு வரவேற்பு குடுத்தா."இங்கே நான் தங்கறதுக்கு எங்கே ஜாகை ஏற்பாடு செஞ்சிருக்கே?" என்று கேட்டார், மகாபெரியவா.

பக்தர் ஒரு இடத்தைச் சொன்னார். அதைக் கேட்ட பரமாசார்யா, "அங்கே வேண்டாம்.இங்கே பாதி கட்டிண்டு இருக்கற கட்டடம் ஒண்ணு இருக்கும் பார். அங்கே நான் தங்கிக்கறேன்" அப்படின்னார்.

பக்தருக்கும் அங்கே இருந்தவாளுக்கும் ஆச்சரியம்! ஊர்ல அந்த சமயத்துல ஒரே ஒருத்தர்தான் வீடு கட்டிண்டு இருந்தார். அது பரமாசார்யா வந்த வழியில் எங்கேயும் இல்லைஊர்ல இன்னொரு கோடியில இருந்தது.அதை எப்படி மகாபெரியவா தெரிஞ்சுண்டார்ங்கறது அவாளுக்கு வியப்பா இருந்தது. ஆனா, அதைவிடப் பெரிய ஆச்சரியம் ஒண்ணு மறுநாள் நடக்கப் போறதுங்கறது அவாளுக்குத் தெரியாது.
புதுசா கட்டிக் குடித்தனம் வராத அந்த அகத்துல மகாபெரியவர் தங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சா.அந்த வீட்டுக்கு சொந்தக்காரர், பரமாசார்யாமேல பரமபக்தி உள்ளவர். வயசு ரொம்ப ஆயிட்டதால தரிசனத்துக்குப் போகமுடியலையே, ஆசார்யாளுக்கு எதுவும் கைங்கர்யம் பண்ண முடியலையேன்னு ஏங்கிண்டு இருந்தார் அவர். இப்போ ஆசார்யாளே தன்னோட அகத்தைத் தேடிவந்து தங்கிக்கறதா சொன்னதும் அவருக்கு சந்தோஷம் பிடிபடலை. ஒரு நாள் முழுக்க ஆசார்யா அங்கேயேதான் இருக்கப்போறார். பக்கத்துலயே இருந்து பார்த்துண்டே இருக்கலாம் .மனசெல்லாம் சந்தோஷத்துல நிறைஞ்சு இருந்தது அவருக்கு. அன்னிக்கு அங்கேயே தங்கி இருந்து எல்லாருக்கும் தரிசனம் குடுத்தார், மகாபெரியவா. ஊர்க்காராள்லாம் மறுநாளும் அங்கே இருந்து அருளம்ணு ரொம்பவே வேண்டிண்டதால அங்கேயே தங்கினார்.

ravi said…
அடுத்த நாள் பொழுது விடியறதுக்கு முன்னாலயே யாரோ கிணத்துலேர்ந்து தண்ணீர் இறைச்சுண்டு இருக்கற சத்தம் கேட்டுது. அந்த இடத்தோட சொந்தக்காரருக்கு. இந்த நேரத்துலயாரா இருக்கும்னு வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் .மகாபெரியவாதான் எழுந்திருந்து தன்னோட மரச் செம்பால ஜலம் இறைச்சு ஸ்நானம் பண்ணிண்டு இருந்தார்.

ravi said…
அடடா...ஆசார்யா ப்ரம்ம முகூர்த்தத்துலயே எழுந்துட்டார்ங்கறதை புரிஞ்சுண்டு அவசர அவசரமா அவருக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணலாம்னு நினைச்சுண்டு கிட்டே ஓடினார் அந்த பக்தர்.

அவரைப் பார்த்ததும்,"என்ன,நீயும் எழுந்துண்டுட்டியா? எனக்கு ஒத்தாசை பண்ணலாம்னு வந்தியாக்கும்.இந்த ஜலம் இறைக்கறதெல்லாம் நான் பார்த்துக்கறேன். இதோ இந்த மரச்சொம்பைப் பார்த்தியா. ஒடைஞ்சு போய் கையெல்லாம் கிழிக்கறாப்புல இருக்கு. நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" ஆணை இடவேண்டிய ஆசார்யா, செய்யறியான்னு கோரிக்கை மாதிரி கேட்டதும் அப்படியே குழைஞ்சுபோனார் அந்த பக்தர். அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.

"பகவானே உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே.... வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!" தழுதழுத்தார் பக்தர்.

கொஞ்ச நேரத்துல பொழுது நன்னா விடிஞ்சதும் திருப்பதிக்குஆள் அனுப்பி கொஞ்சமும் ஆசாரம் குறையாதபடிக்கு மரச்சொம்பு, கமண்டலு, தண்டம் எல்லாம் வாங்கிண்டு வரச் சொன்னார், அந்த பக்தர்.மகாபெரியவாளோட அன்னிக்கு சாயங்கால அனுஷ்டானத்துக்கு அதையெல்லாம் அவர் முன்னால வைச்சு சமர்ப்பிச்சார்
.
"நன்னா வழவழப்பா இருக்கு. கையைக் கிழிக்காதபடிக்கு பார்த்து வாங்கிண்டு வந்து குடுத்திருக்கே. எல்லாரும் பரம சௌக்யமா இருக்கணும்!" ஆசிர்வதிச்ச ஆசார்யா, அன்னிக்கு ராத்திரியே அங்கேர்ந்து புறப்பட்டு மடத்தோட ஜாகை இருந்த சித்தூருக்குப் போய்ட்டார்.

பக்தர் கூப்பிட்டதுமே அவரோட ஊருக்கு வரேன்னு பெரியவா ஒப்புத்துண்டதுக்குக் காரணம் அந்த பக்தர்மேல இருந்த அன்பு மட்டும் இல்லை .அங்கே தனக்குத் தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற இன்னொரு பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்க்கணும்கற கருணையும்தான் அப்படிங்கறது அதன்பிறகுதான் புரிஞ்சுது எல்லாருக்கும்
ravi said…
அடடா...ஆசார்யா ப்ரம்ம முகூர்த்தத்துலயே எழுந்துட்டார்ங்கறதை புரிஞ்சுண்டு அவசர அவசரமா அவருக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணலாம்னு நினைச்சுண்டு கிட்டே ஓடினார் அந்த பக்தர்.

அவரைப் பார்த்ததும்,"என்ன,நீயும் எழுந்துண்டுட்டியா? எனக்கு ஒத்தாசை பண்ணலாம்னு வந்தியாக்கும்.இந்த ஜலம் இறைக்கறதெல்லாம் நான் பார்த்துக்கறேன். இதோ இந்த மரச்சொம்பைப் பார்த்தியா. ஒடைஞ்சு போய் கையெல்லாம் கிழிக்கறாப்புல இருக்கு. நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" ஆணை இடவேண்டிய ஆசார்யா, செய்யறியான்னு கோரிக்கை மாதிரி கேட்டதும் அப்படியே குழைஞ்சுபோனார் அந்த பக்தர். அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.

"பகவானே உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே.... வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!" தழுதழுத்தார் பக்தர்.
ravi said…
கொஞ்ச நேரத்துல பொழுது நன்னா விடிஞ்சதும் திருப்பதிக்குஆள் அனுப்பி கொஞ்சமும் ஆசாரம் குறையாதபடிக்கு மரச்சொம்பு, கமண்டலு, தண்டம் எல்லாம் வாங்கிண்டு வரச் சொன்னார், அந்த பக்தர்.மகாபெரியவாளோட அன்னிக்கு சாயங்கால அனுஷ்டானத்துக்கு அதையெல்லாம் அவர் முன்னால வைச்சு சமர்ப்பிச்சார்
.
"நன்னா வழவழப்பா இருக்கு. கையைக் கிழிக்காதபடிக்கு பார்த்து வாங்கிண்டு வந்து குடுத்திருக்கே. எல்லாரும் பரம சௌக்யமா இருக்கணும்!" ஆசிர்வதிச்ச ஆசார்யா, அன்னிக்கு ராத்திரியே அங்கேர்ந்து புறப்பட்டு மடத்தோட ஜாகை இருந்த சித்தூருக்குப் போய்ட்டார்.

பக்தர் கூப்பிட்டதுமே அவரோட ஊருக்கு வரேன்னு பெரியவா ஒப்புத்துண்டதுக்குக் காரணம் அந்த பக்தர்மேல இருந்த அன்பு மட்டும் இல்லை .அங்கே தனக்குத் தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற இன்னொரு பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்க்கணும்கற கருணையும்தான் அப்படிங்கறது அதன்பிறகுதான் புரிஞ்சுது எல்லாருக்கும்
ravi said…
https://youtu.be/Kki-QQeaUlw

ஶ்ரீ மஹா பெரியவா தனது பக்தர்களை தினமும் கடைப்பிடிக்க சொன்ன ஒரு விஷயம் என்னவென்றால் தினமும் நாம் அனைவருமே உணவருந்தும் பொழுது கோவிந்த் கோவிந்த என்று மனதார பிரார்த்தனை செய்து கோவிந்தா கோவிந்தா என்று அவன் நாமாவை சொல்லி உணவருந்தினால் நாம் சாப்பிடும் உணவு நமது உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி தெய்வீக சிந்தனையில் ஈடுபட செய்யும். அதனால் நமது நல்வாழ்வுக்காக அவன் அருள் புரிவார் என்று கூறினார்.
அனைவரும் மஹா பெரியவா உபதேசத்தை தானும் தனது குடும்பத்துடன் கடைப்பிடித்து பலன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த காணொளியை யூ ட்யூப் சேனல் மூலம் முழுவதும் கண்டு கேட்டு மகிழவும் பகிர்ந்து கொள்ளவும்.🕉️
ravi said…
பங்குனி உத்திரம் ஸ்பெஷல். சிறப்பு பதிவு.

ஊடலும் கூடலும் இல்லாத இல்லறமோ வீடோ கிடையாது.

ஆனானப்பட்ட ஸ்ரீரங்கம் அரங்க பெருமாளே துணைவியுடன் ஊடலில் அடிவாங்கும்போது நாமல்லாம் எம்மாத்திரம்..!

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட ஊடலையும் கூடலையும் அழகாக சொல்கின்றது புராணங்கள்..!

ஒரு பங்குனி உத்திரநாளில் நடந்தேறிய இதைதான், பங்குனி உத்திரம் என்று சிறப்பாக ஸ்ரீரங்கம் கோவிலில் கொண்டாடு கின்றனர்..!

ravi said…
தர்மத்தின் தலைவனான அரங்கன் அரங்கமாநகரில் தர்ம அடி வாங்க போகிறார் பங்குனி உத்திரநாளில்..

அவரது தர்ம பத்தினி கையால்தான்!

உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக்கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார்..

அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலெட்சுமியின் அனுமதியின் பெயரில் தான்
உறையூர்நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்!

புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறார்.
ஆஹா நம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி ‘எங்கே நான் அணிவித்த மோதிரம், புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா?
எனக்கேட்டு நம்மை தொலைத்து விடுவாளே என்ன செய்வது ‘ என தவிக்கிறார்..

காவிரிக்குப்போய் பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்கள் எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறார்; தானும் தேடுகிறார்.

ஒன்றும் கிடைக்கவில்லை!

இந்தக்காட்சிகள் இன்று அம்மா மண்டபம் காவிரியில் காணக்கிடைக்கும

தப்புபண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான் அரங்கன்.

ஆகவே ஓசைப்படாமல், (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார்.

ravi said…
தாயாருக்கா தெரியாமல்போகும் அரங்கனின் தந்திரம்?

டமால் என வாசற்கதவை சாத்திவிடுகிறாள்.

அரங்கன் ஏமாற்றமாய் நகர்கிறான்.

மறுபடி கதவைத் திறந்து வைக்கிறாள் அரங்க நாயகி.

‘ஆஹா நல்ல சந்தர்ப்பம் வேகமாய் போய்விடுவோம்’ என அரங்கனின் பல்லக்கு அவசர அவசரமாய் வாசல் கதவருகில் வரவும் மறுபடி ‘டமால்’...

சரி இனி பல்லக்கில் மறைந்து கொண்டு விடுவோம். வெறும் பல்லக்குதான் வருகிறதென அவள் வழிவிடாமலா போய்விடுவாள்? என பல்லக்கில் தன்னை திரைத்துணியால் மறைத்துக்கொள்கிறான் அரங்கன்.

‘ம்ம் மெல்ல ஓசையின்றி உள்ளே செல்லுங்கள்’ என அடியார்களுக்கு ஆணையிடுகிறான்.

அவர்களும் பூனைப்பாதம் வைத்து நடந்து வாசற்கதவருகில்போகும்போது உள்ளிருந்து வெண்ணைக் கட்டிகள் வீசப்படுகின்றன. புஷ்பங்களையும் சிறு இலைகளையும் தன் அடியார்களைவிட்டு அரங்கனின் பல்லக்கு மீது அடிக்க சொல்கிறாள் அன்னை.

சண்டை துவங்குகிறது!

ப்ரணய கலகம் என்று பெயர்.

தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர்.

பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.

தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து
பின்னோக்கி நடக்கிறார்.

சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார்.

உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...

படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....

இப்படியே மூன்று முறை!

ஒரே கலாட்டா தான் !

கடைசியில் மட்டையடி ஆரம்பமாகிறது!

மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து!

மட்டையடி உற்சவம் என்பது இதுதான். பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும். விஷயம் நம்மாழ்வாருக்கு போகிறது .. சமாதானம் பண்ண நம்மாழ்வாருக்கு தூதுபோகிறது.

நம்மாழ்வாரின் பல்லக்கு, வீட்டு வாசலுக்கு வருகிறது.

அண்ணலின் பல்லக்கை ஏறிடுகிறார்.

பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!

அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?
வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே
இவருக்குத் தாளவில்லையே!

இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்? கம்சனின் வயிற்றில் நெருப்பென்ன நின்றான்?நம்மாழ்வார் தாயாரைப் பார்த்துக்கேட்கிறார்.

“அரங்கவல்லியே!நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்? அப்போ சரியென்று சொல்லிவிட்டு,
இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?

”பங்குனி உத்திரம், உன் பிறந்த நாள் வேறு. இன்று உன்னோடு இருக்க ஓடி வந்தவனை இப்படிக்காயப்படுத்தலாமா ..
அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டேன் என்று உன் கணவனைக் கரும்பென்னும்
தொண்டரடிப்பொடி ஆழ்வார்தான், இப்படி நீ அண்ணலை அலட்சியம் செய்வதைத்தாங்குவாரா? அடியார்கள் மனம் சற்று வாடினாலும் நீதான் பொறுத்துக் கொள்ள முடியுமா? ஆகையினால் மகளே, அரங்கனை மன்னித்து ஏற்று சேர்ந்திரு. உன் சேர்த்தி வைபவமான இன்றைய உத்திரத்திருநாளை வையகம் கொண்டாடட்டும்!” என்பதாக அருளினார்.

அன்னையின் மனம் சமாதானமாகிறது. அண்ணலை அன்னை நோக்க அவரும் அன்புடன் நோக்க, அங்கு ஒரு காதல் காவியம் அரங்கேறுகிறது.

பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.

அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி! கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்;

உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, ஏன் இவ்வளவு நாழி? என்று தான் கேட்பாள்.

அதனால் தான் பங்குனி உத்திர விழா அவள் வீட்டின் உள்ளேயே அந்த நாழி கேட்டான் வாசலிலேயே நடக்கிறது.

இவை அனைத்தும் ஶ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் கண் கொள்ளா காட்சி அல்லவா. அனைவரும் காணும் அழகு தரிசனம்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!

அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை.

கோவில்மட்டுமா. ஊரே கொண்டாடும் திருவிழா இது..

வீட்டுக்குவீடு செம்மண் கோலமிட்டு, சக்கரைப்பொங்கல் செய்து கொண்டாடும் அற்புத நாள் இந்த பங்குனி உத்தர திருநாள்...

இரவு முழுவதும் சேர்த்தி மண்டபத்தில் சேர்ந்து அருளிப்பிற்கு பிறகு, விடிந்ததும் அன்னையை அவள் சந்நிதிக்கு அனுப்பிவிட்டு அரங்கன் கோரதம் ஏறி வீதி உலா வருவார்....

வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டிய நிகழ்வு இது....

தவறாவிடாதீர்கள்..
படித்ததை பகிர்கின்றேன்

அரங்கநாதனுக்கே அந்த அடினா... நீங்கலாம் எம்மாத்திரம்னு மனச தேத்திக்கோங்க
ravi said…
[18/03, 07:39] Jayaraman Ravikumar: *யானையை இழுத்த எலி!*

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்

பாப்பான் கதையும் பறிபோச்சோ – மாப்பார்

வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ

எலி இழுத்துப் போகின்ற(து) என்!
[18/03, 07:41] Jayaraman Ravikumar: காஞ்சிபுரத்தில் விநாயகர் உற்சவம்.

பெருச்சாளி (மூஞ்சூறு) வாகனத்தில் உலா வந்தார் பிள்ளையார்.

அதைப் பார்த்த காளமேகம் வியப்போடு பாடுகிறார்

உலகத்துக்கே முதல்வனான சிவபெருமானின் ஆயுதம் ‘மழு’,

’முராரி’ எனப் புகழ் பெற்ற திருமாலின் ஆயுதம் திருச் சக்கரம்,

பிரமனின் ஆயுதம் கதை…

இப்படி மும்மூர்த்திகளும் ஆளுக்கு ஒரு பெரிய ஆயுதம் வைத்திருந்து என்ன புண்ணியம்?

பெரிய, வலிமை மிகுந்த யானையை இங்கே ஓர் எலி இழுத்துக்கொண்டு செல்கிற ஆச்சர்யத்தைப் பாருங்கள்,

இதை அவர்களால் தடுக்கமுடியவில்லையே💐💐💐
ravi said…
[18/03, 07:37] Jayaraman Ravikumar: 💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 517* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*

*சக்தி ஆலயம்: அவனியாபுரம் ரேணுகாம்பாள்:*
[18/03, 07:37] Jayaraman Ravikumar: அடடா என்ன தவறு செய்துவிட்டேன்.

என்னால் மண்ணில் குடம் செய்து நீர் கொண்டு செல்ல முடியவில்லையே என்று திகைத்தாள். ஜமதக்னி முனிவர்

தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டு வரச் சென்ற ரேணுகா ஏன் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார்.

ஞானக் கண்ணால் ஆற்றங்கரை நிகழ்ச்சி தெரிந்தது. ரேணுகாவின் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்து ஜமதக்னி ரிஷி, சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயை உடனே கொல்லுமாறு கர்ஜித்தார்.

தந்தையின் இந்த கோபமான கட்டளை பிள்ளைகளை திகைக்க வைக்க

அவர்கள் அப்பாவின் கட்டளையை நிறைவேற்ற தயங்கினார்கள்🙏
ravi said…
[18/03, 07:33] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 110*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*100*🪷🪷🪷🥇🥇🥇
[18/03, 07:35] Jayaraman Ravikumar: जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते ।
जय जय महेशदयिते जय जय चिद्गगनकौमुदीधारे ॥100॥

*100* . Jaya jaya jagadamba shive, jaya jaya Kamakshi, jaya jayadri suthe,

Jaya jaya mahesadayithe, jaya jaya chidga gana koumudhee dhare.

ஜய ஜய ஜகதம்ப ஶிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்ரிஸுதே |

ஜய ஜய மஹேஶதயிதே ஜய ஜய சித்ககனகௌமுதீதாரே ||100||
[18/03, 07:35] Jayaraman Ravikumar: மூக பஞ்சசதி ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு முதல் நூறு ஸ்தோத்திரங்கள் *ஆர்யா சதகம்* என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதல் நூறு ஸ்லோகங்களில் அம்பாளை விதவிதமாக வர்ணித்து ரசித்து நமஸ்கரிக்கிறார் மூக சங்கரர்.

அம்பாளை ஜகன்மாதா, பரமேஸ்வர பத்னி, பர்வத ராஜகுமாரி, என்று பல பெயர்களில் ஸ்தோத்ரித்து ஜயஜய என்று வெற்றிபெற வேண்டி இதை நிறைவு செய்கிறார் மூகர் .🙏🙏🙏🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
*ராமா*

பொன்னும் பொருளும் விரும்புவோர் உள்ளம் பொய்யில் விளைந்த காடு அன்றோ *ராமா*

எண்ணும் எழுத்தும் உன் நாமம் நிறைத்தோர் உள்ளம் பாற்கடல் அமுதம் அன்றோ *ராமா*

செய்யும் காரியங்களில் சீற்றம் கொள்வோர் உள்ளம் மண் புதைந்த மேடு அன்றோ *ராமா*

செய்யும் செயல்கள் ராம சேவை மட்டுமே என்றால் உள்ளம் அயோத்தி ஆகாதோ *ராமா*

உன் நாமம் தினம் உரைப்போர் எல்லோரும் வாமனரே ... உலகம் அளக்கும் வல்லமை கொண்டோரே *ராமா*

ராம நாமம் சொல்லி உள்ளே காம தீ வளர்ப்போர் மகாபலிகளே

மண்ணில் புதைந்து போவோர் அன்றோ *ராமா*🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுவரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால் இப்படியில்லாமல், அஸாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று ப்ராணன் போகிறபோது நினைப்புக்கு வந்துவிட்டால்? இப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு ஸ்வாமி கொடுத்துவிடுகிறார். ‘இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!’ என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்யத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.
ravi said…
வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற ஸமயத்திலே ஈஸ்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப ‘ஷார்ட்-கட்’ தானே?
ஆனால் வாழ்நாள் முழுக்க நினைத்ததுதானே அந்திமத்தில் வரும்? அதெப்படி வேறு ஒரு நினைப்பு அப்போது வரும்? இது எப்படி ‘ஷார்ட்-கட்’? சும்மாவுக்காக ‘ஷார்ட்-கட்’ மாதிரி பகவான் ஏமாற்றுகிறாரா? இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது; அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்!
இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது-அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால் அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா சுரீல் என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.
ravi said…
நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்; அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ”ஹர ஹர மஹாதேவா”, ”ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலைபாய்கிறபோது,
ravi said…
அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால் அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான (effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.
ravi said…
உற்றார் ஆர் உளரோ? உயிர்கொண்டு போம் பொழுது? 
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக் (கு) உற்றார் ஆர்உளரோ?*
என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective -ஆக ”கடைசியில் எதெதை நினைத்தாலும் அததை அடைகிறான்” என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.
எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.
கடைசிகால ஈஸ்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால்கூடப் பாவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்;நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.
புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா?இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.
இந்த மஹா பெரிய தர்மத்தை, ஈடில்லாத உபகாரத்தை, முதலில் சொன்னேனே, வாரவழிபாடு, ஜீவாத்ம கைங்கர்யம், மற்ற பரோபகாரங்களுக்காக ஸங்கமாகச் சேரவேண்டும் என்று, இந்த ஸங்கத்துக்காரர்கள் தவறாமல் செய்ய வேண்டும்.
ravi said…
*விகார* = வடிவம்,

தன்மை இயல்பு முதலியவற்றின் மாறுதல்

*❖ 145 நிர்விகாரா =*

பேதமற்றவள் -

மாறுதலுக்கு உட்படாதவள்
ravi said…
*அம்மா* ...

விகாரம் நிறைந்த வாழ்க்கை இது ...

விட்டில் பூச்சி என முடியும் வாழ்க்கை இது

விவேகம் இன்றி
வீரம் இன்றி
வித்தை இன்றி விதை என முளைத்து வந்தோம் .

விண்ணில் தோன்றும் மீன்கள் எங்கள் குளத்தில் நீந்த
முயற்சி செய்தோம்

மண்ணில் மறைந்த கற்கள்

எண்ணி எண்ணி எழில் இல்லம் செய்தோம் ...

கடலின் ஆழம் போல் நெஞ்சில் ஆழம் வைத்து

எண்ணம் கொண்டு நிரப்பி மகிழ்ந்தோம்

வானின் பரப்பை அளந்து

வீட்டில் பொன் பொருள் சேர்த்தோம்

விடை ஏறி நீ வரும் போது

சேர்த்த புண்ணியம் எவ்வளவு என்றாய் ..

தேடி தேடி பார்க்கிறேன்

ஓடி ஓடி தேடுகிறேன் . செய்த பாவம் கோடி

சேர்த்த புண்ணியம் ஏதும் இல்லை *அம்மா* ...

என் நாமம் ஒன்றாவது சொல்லி இருந்தால் என் விடையில் புடை சூழ வந்திருப்பாய்

மண்ணில் மறையும் பொருள் எண்ணில் அடங்கா சேர்த்து என் பயன் ...

ஒன்றும் வருவதில்லை உன்னுடன் ...

வருவதெல்லாம் என் நடையும் கடையுமே என்றாயே *அம்மா*

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கிறேன் ..

உன் கண் கொண்டு என் பார்வை யில் பாவை என வருவாயே பார்த்துப் பார்த்து அருள்வாயே 🙏🙏🙏
ravi said…
[18/03, 07:58] Jayaraman Ravikumar: அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

102 –
அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன்
உன் அருள்வலை தப்புமோ அருணாசலா (அ)
[18/03, 08:00] Jayaraman Ravikumar: *Meaning*

As soon as I thought of *Aruna* I got caught in your Vision . Will your net of Grace miss me *Arunachala*🪷🪷🪷
ravi said…
*அருணாசலா*

அருணா என்றே சொன்னேன் உன் நாமம் முழுசாக சொல்ல வில்லை .. உன் பார்வை என் மீது பட்ட அதிசயம் என்ன *அருணாசலா*

இருண்டு கருத்த வானம் போல் இருந்த என் வாழ்க்கை அருண மயமாய் ஆனதே *அருணாசலா*

ஆதவனாய் நீ வந்தாய்

என் வாழ்க்கை அருண மயமானதே *அருணாசலா*

ஆயிரம் கரங்கள் நீட்டி கிழக்கிலே சிரிக்கின்றாய் ..

மலை ஏறி நின்று மகிழ்விக்கின்றாய்...

மாசறு பொன்னாய் மதி மயக்கம் தருகின்றாய்...

மேற்கில் மறைவாயோ என்றே பயந்து தெற்கு வடக்கு தாண்டி ஓடி வந்தேன் ...

வருவேன் என்றே மறையாமல் மலர்ந்தாயோ *அருணாசலா* 🙏🙏🙏
ravi said…
*இனியவை நாற்பது* - பாடல்: *21*
---------------------------------------------------------------
*பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே*
*அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே*
*மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்*
*திறந்தெரிந்து வாழ்தல் இனிது.*

உரை சுருக்கம்:
பிறர் பொருளை கவராது வாழ்வது இனிது.
அறமில்லா செயல்களை நீக்குதல் இனிது.
மறந்தும் அறிவற்ற மாண்பிலாரை சேராத
திறமும் வழியும் தெரிந்து வாழ்தல் இனிது.
ravi said…
[19/03, 07:21] +91 96209 96097: ராஜராஜார்சிதா ராஜ்ஞீ *ரம்யா* ராஜீவலோசனா |🙏🙏
எப்போதும் உள்ள மகிழ்ச்சியை அருள்பவள்
[19/03, 07:21] +91 96209 96097: *தேவாய நமஹ*🙏🙏
ஜீவாத்மாவுடன் விளையாடுபவர்
ravi said…
இன்றைய சிந்தனை"..*

*_✍️ 19, Sunday, Mar., 2023_*

https://srimahavishnuinfo.org

’எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல்’’..*


*♻️நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது..*

*♻️பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, நமக்கு இருக்க வேண்டும்..*

*♻️பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்து விட முடியும்*

*♻️நம்மால் பிறருக்கு புது வாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம்,புது நம்பிக்கை அளிக்கலாம். இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும்.*

ravi said…
♻️எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்வது சிலரின் குணமாகவே கூட இருக்கும்.,*

*♻️அப்படிப்பட்ட, வணக்கத்துக்கு உரிய மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.*


*♻️அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவ மனையின் சிறப்பு வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார்.*

*♻️அவருக்கு வந்து இருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்று நோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.*

*
ravi said…
♻️அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்து கொள்ளும் நர்ஸ் வந்தார்.*

*♻️சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்து இருக்கார்.’’*
*கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார்.*

*♻️அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்று கொண்டு இருந்தான்.சீருடை அணிந்து இருந்தான்.*

*♻️அவன் அணிந்து இருந்த சீருடை 'யூத்மரைன்'*
*(Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது.*

*♻️படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று ஏற்கனவே சொல்லிஇருந்தார்.*

*♻️அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தி இருந்தாள்.*
*இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார்.*

*♻️அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றி கொண்டார்.*

*♻️ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே நர்ஸ் போட்டார். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார்.*

*♻️அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார்.*

*♻️இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார்..*

*♻️தம்பி... நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் கொஞ்சம் ஓய்வு எடுங்க, எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்து இருப்பீங்க?’’*

*♻️வேண்டாம். பரவாயில்லை’’ என்று சொல்லி விட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான்.*

*♻️அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்க வில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றி இருந்தது.*

*♻️விடிந்தது. கிழவர் இறந்து போய் இருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான்.*

*♻️வெளியே வந்தான். நர்ஸிடம் செய்தியை சொன்னான்.*
*ரொம்ப சாரி தம்பி... உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்... என்றார் அந்த நர்ஸ்.*

*♻️நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்தது கூட இல்லை.’’*

*♻️அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர் கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்பவே சொல்லி இருக்கலாமே.. ஏன் சொல்லலை?’*

*♻️நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. நீங்க ரொம்ப அவசரத்துல இருந்தீங்க.*

*♻️அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும்,அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சுது.*

*♻️அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால் நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய் வாய்ப்பட்டு இருக்கார்னு புரிஞ்சுது.*

*♻️அவரோட அந்தக் கடைசி நேரத்தில் அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது.அதான் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.’’*

*♻️நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக் கொண்டு இருக்க, அந்த இளைஞன் மெல்ல நடந்து வெளியே போனான்.,*

*��ஆம்.,நண்பர்களே..*

*��️வாழ்வில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஒரு குறிக்கோளை நோக்கி நம் வாழ்க்கைப் பயணம் செல்ல வேண்டும்.*

*⚽வாழ்வில் நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும் அந்த எதிர்பார்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும்.*

*அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்*

*⚽நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்.....*

ravi said…
[19/03, 19:53] Jayaraman Ravikumar: *_108. ஸமாத்மநே நமஹ (Samaathmane namaha)_*
[19/03, 19:54] Jayaraman Ravikumar: பிரகலாதன் உள்ளே அமர்ந்து கொண்டு தண்ணீர் சுடாமல் தடுக்கிறானோ எனச் சந்தேகப்பட்ட பீமன்,

உள்ளே எட்டிப் பார்க்க,
பானைக்குள் ஒரு தவளை இருப்பதைக் கண்டான்.

“கண்ணா! உள்ளே ஒரு தவளை இருக்கிறது.

இவ்வளவு நேரம் நான் அதைக் கவனிக்கவே இல்லை!” என்றான் பீமன்.

கண்ணன், “எனக்கு முன்னமே தெரியும். நீ அடுப்பு மூட்டியவுடனேயே அந்தத் தவளை வெப்பம் தாங்க முடியாமல்
“கண்ணா! காப்பாற்று!” என்று என்னை அழைத்து விட்டது.

அதனால் நான் வெந்நீர் சுடாத படி அந்தத் தவளையைக் காப்பாற்றினேன்.🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
ravi said…
வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

*ஸமாத்மா* ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12������
ravi said…
[19/03, 19:48] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 111 started on 6th nov

*பாடல் 34 ... சிங்கார*

(தீநெறியினின்று எனைக் காவாய்)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்

சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே👏👏👏
[19/03, 19:49] Jayaraman Ravikumar: தீநெறி என்று குறிப்பிடுதல் இங்கு பொது மாதரையே
குறிப்பிடுவதாக கொள்ள வேண்டும்.

அனாத்ம விருத்திகளில்
ஒன்றாகிய காமத்தை போர் செய்து வெல்ல வேண்டும் என்பதால்
முருகனை ' *சங்ராம* ' என்று அழைக்கிறார்.

சிற்றின்ப ஆசை
விலக்கிய தன் மனதில் சுத்த சித்தி சொரூபமான மயிலில்
நீ வர வேண்டும் என வேண்டுகிறார்.

நம்முடைய புத்தி மாறுபாட்டிற்கு மாயையே காரணம்.

அந்த
மாயையை முருகன் வாகனமாகக் கொண்டிருப்பதால்,
*சிகாவல* ' என்று அழைக்கிறார்.
ravi said…
[19/03, 19:31] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*68 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[19/03, 19:45] Jayaraman Ravikumar: அமித-மு3தம்ருதம் முஹுர்-து3ஹந்தீம்

விமல-ப4வத்பத3-கோ3ஷ்ட2-மாவஸந்தீம் |

ஸத3ய பசுபதே ஸுபுண்ய பாகாம்

மம பரிபாலய ப4க்திதே4னு-மேகாம் ||
[19/03, 19:46] Jayaraman Ravikumar: உயிர்களின் தலைவரே!

தயை நிறைந்தவரே!

எனது பக்தியென்ற பசுவை மாத்திரம் காத்தருளுங்கள்.

அப்பசு பேரின்பம் என்ற அளவற்ற அமுதத்தை மேன்மேலும் பெருக்கும்.

உமது திருவடிகள் என்ற பரிசுத்தமான கொட்டிலில் வசிக்கும்;

சிறந்த புண்யத்தின் பயனாகத் தோன்றும்.
ravi said…
முருகப் பெருமான் தன் மனைவியருடன் சிவபூஜை செய்த திருப்புகழ் தலம்

வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வயலூர் சுப்பிரமணிய சுவாமிக்குத் தனிப்பெருமை உண்டு. மற்றத் தலங்களில் தாய் தந்தையரை முருகப்பெருமான் தனித்து நின்று பூசை செய்திருக்க, வயலூரில் மட்டும் தெய்வயானையுடனும், வள்ளியுடனும் சேர்ந்து பூசை செய்தார்..தாய் தந்தையரை வணங்காதவர்களுக்கு இறைவனருள் கிட்டாது என்பது வேதவாக்கு. முருகப்பெருமான், இங்கு தன் கையிலுள்ள வேலால் சக்தி தீர்த்தம் அமைத்து,அதில் நீராடி தன் மனைவியருடன் பெற்றோரைப் பூசித்து வழிபட்டார்.
ravi said…
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில்... ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?
(அறிமுகமே இல்லாத வைதிகர், தூய சிவப்பணியாளர் எனபது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)

(அது எந்தவகை ஸித்தி?)


தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு வைதிகர். எளிய வாழ்க்கை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில். சிவன் கோயில், மாரியம்மன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடு பட்டுத் திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட, அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள். அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம், தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால், இப்போது அவர் மழை - காற்றுக்கு அஞ்சாமல், கருவறையில் கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால், வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில், ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!.

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்குத் தெரிந்திருந்தது.

'எப்படி?' என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது சிவரகசியம்!.

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர். அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!.

அவர் வழி அப்பர் வழி. ஆமாம் Upper வழி!.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து பையன்களை உடன் வைத்துக்கொண்டு, சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக நின்றார். வழக்கமான ஊர்பேர் விசாரணைகூடச் செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில், பரம பணக்காரத் தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள் தொண்டருக்கு என்ன குறிப்பு கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில் வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர். பெரியவாள், அந்தப் பணக்கார பக்தரை அழைத்து, அந்தச் சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச் சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது,

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய பண்டிதரா? யாகம் செய்தவரா...?"

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

"இவரைப் பார்த்திருக்கிறாயோ?"

"இல்லை"

"இவர் அட்ரஸ் தெரியுமோ?"

"தெரியாது"

"எனக்குத் தெரியும் !.. சொல்லட்டுமா?"..(என்ன குறும்பு!)

"சாஸ்திரிகள், கேர் ஆஃப் சிவன் கோயில்!. இவர் பெரிய Builder என்ன? பல சிவன்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்....!"

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது. ஒரு பத்திரிகையில்கூட ...இவர் புகைப்படத்தைப் பார்த்ததில்லையே !...

"இவர், சிவப்பழம்...பிரசாதத்தோடு,நெறய்ய பழங்கள் கொடு..."

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர் என்பது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

அது எந்தவகை ஸித்தி?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில், ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா,என்ன?
Geeta said…
Sree Gurubhyo Namaha 🙏

Really superb.

Feeling very divine and blessed to have உங்களுடைய சத்சங்கம்.
Thank you very much. 🙏
ravi said…
*இனியவை நாற்பது* - பாடல்: *22*
---------------------------------------------------------------
*வருவா யறிந்து வழங்கல் இனிதே*
*ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே*
*பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்*
*திரிபின்றி வாழ்தல் இனிது.*

உரை சுருக்கம்:
தன் வருவாய் அறிந்து வழங்குதல் இனிது
அடுத்தவரை சார்ந்திலாத முயற்சி இனிது
பெரும் பயன் வரினும் முறையற்ற செயல்
விடுத்து நிறை பிறழாது வாழுதல் இனிது.
ravi said…
💠நீங்கள் எதன் மீது கவனம் செலுத்துகிறீர்களோ...

💠அவை அதிகரித்துக் கொண்டே போகும்...

💠பிரச்னைகள் மீது கவனம் செலுத்தினால் பிரச்னைகள் அதிகரிக்கும்...

💠அதுவே வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தினால்...

💠வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

💠Whatever you focus on...

💠They keep increasing…

💠Focusing on problems only increases problems...

💠If you focus on opportunities...

💠More opportunities available.
ravi said…
This comment has been removed by the author.
ravi said…
[20/03, 07:21] +91 96209 96097: *ஸ்ரீகர்ப்பாய நமஹ*🙏🙏
மஹாலக்ஷ்மியை திருமார்பில் சுமந்து இருப்பவர்
[20/03, 07:21] +91 96209 96097: ராஜராஜார்சிதா ராஜ்ஞீ ரம்யா *ராஜீவலோசனா* |🙏🙏
நன்னெறிப் படுத்தும் அருள் பார்வையை கொண்டவள்
ravi said…
*ராமா* ...

மாறா அன்பு கொண்டே ராமா என்றே ஒரு முறை

மனம் எங்கும் ஏறாமல் இறங்காமல் சொன்னேன் ...

மரம் ஏறி வந்தே மந்தி ஒன்று எனைக்கண்டு சிரிக்க கண்டேன் ... 🐒

சிங்கார ராமன் நாமம் செப்புகிறேன்

நீ சிரிப்பது ஏன் என்றே வால் நீண்ட மந்தியிடம் ...

நீண்ட வாலை நிமிர்த்திக்கொண்டே

நெஞ்சை கொஞ்சம் தாழ்த்திக்கொண்டே

நேர்க்கோட்டில் பதில் தந்தது ... 🐵

ராம நாமம் உரைத்து தியாகராயர் ஆகப்போகிறாயா

இல்லை வால்மீகி உருவாக போகிறாயா

இல்லை ராமதாஸ் ஆகப்போகிறாயா

அதுவும் இல்லை துளசி தாசர் ஆகப்போகிறாயா ...

ஏன் இந்த வேடம்

யார் காண்பார் உன் வேடம் ?

அழுது விட்டேன் ஜோராக...

யாரும் ஆக சொல்ல வில்லை

என் மனம் ரம்மியம் ஆகவே சொல்கிறேன் ..

மந்தி மீண்டும் சிரித்தது .. 🐒

உனக்காக வேண்டுவதற்கு ராம நாமம் தேவையோ ?

பிறர் வாழ உதவும் நாமம் இது ...

பிறர் உயர உதவும் நாமம் இது ...

பிறருக்காக சொல்லி வந்தால்

உனக்காக சொல்பவர்கள் ஒரு கோடிக்கும் மேலே ஆவாரே ... 🙏

மந்தியை தேடினேன் கிடைக்க வில்லை

மந்தி சொன்ன வார்த்தைகள் மறைய வில்லை ...

*ராமா, ராமா* என்றேன்

எல்லோரும் நலமாய் வாழ்ந்திடவே 🙏🙏🙏
ravi said…
*அஷ்ரய* = சார்பு நிலை - சார்ந்திருத்தல் - ஆதாரமான

❖ *147 நிராஷ்ரயா =*

சுயம்புவானவள் - எதனையும் சாராதிருப்பவள் - சுவாதீனமானவள்
ravi said…
*அஷ்ரய* = சார்பு நிலை - சார்ந்திருத்தல் - ஆதாரமான

❖ *147 நிராஷ்ரயா =*

சுயம்புவானவள் - எதனையும் சாராதிருப்பவள் - சுவாதீனமானவள்
ravi said…
*அம்மா* ...

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே

என் முன் தோன்றி பின் தொடர்ந்து வருபவளே

கண் தோன்றி காதுகள் முளைத்து கரு உருவாகும் போது

அருவாய் வந்தே பிரசவம் பார்ப்பவளே

என் மனம் என்றும் உன் எண்ணமே ..

என் எண்ணமெல்லாம் உன் எழில் வண்ணமே

எழில் வண்ணமெல்லாம் உன் பொங்கும் கன்னமே

உன் எழில் கன்னமெல்லாம் காமேஸ்வரன் விரும்பி உறங்கும் இல்லமே ...

உன் ஒரு நாமம் ஒரு திருவடி ஒரு புன்னகை ஓராயிரம் கோடி நன்மை தடை இன்றி தந்திடுமே

பெறுவதற்கு தடை இல்லை பெற்றவள் நீ இருக்க அடைக்கும் தாழ் ஏதம்மா?

🙏🙏🙏🙏🙏🦜🦜🦜
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

104 –
அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
அன்பன் ஆயிட அருள் அருணாசலா (அ)
ravi said…
*Meaning*

Bless me and make me the devotee of those devotees who are devotees of those devotees who are lovingly listening to Your name *Arunachala* 🪷🪷🪷
ravi said…
*அருணாசலா*

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்றாய் திருவாரூர் ல் ...

தீதில்லா சிறு தொண்டர் புராணம் பிறக்க வைத்தாய் ...

அதுவரை என்ன தீது இருந்தது என்றே உன்னிடம் கேட்டேன்

அழகாக பதில் சொன்னாய் நேரில் வந்தே ..

உன் நாமம் சொல்வோர் புகழ்

யாரும் வணங்கிலர் அவர்களை தெரிந்திலர் யாரும் புரிந்திலர் ...

இது மா பெரும் தீதன்றோ என்றாய் ..

உண்மை இதுவே அருணாசலா ..

உள்ளம் உவகை கொண்டேன் ...

பெண்ணுக்கு பெருமை சேர்த்தாய் இடப்பாகம் தந்தே

உன் அடியார் போற்றும் உத்தமருக்கு எல்லாம் தந்தாய் ...

உன் போல் எளியவன் உண்டோ *அருணாசலா* ...

கடையில் நிற்கின்றேன் உன் கடை என் மீது படுமா *அருணாசலா* ...

அடியார் இல்லை நான் ..

அணுவிலும் சிறியவன் ...

குணத்திலும் குன்றியவன் ...

உன் நாமம் சொல்வோரை என் பக்கம் இழுப்பாயே *அருணாசலா* ...

பாவி செவிகள் பாதி நாமமாவது பாந்தமுடன் கேட்கட்டுமே *அருணாசலா*🪷🪷🪷
ravi said…
20.03.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 16)

Sanskrit Version:

नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः।।2.16।।

English Version:

naasato vidyate bhaavo
naabhaavo vidyate sataha: |
ubhayoropi drishtontah
tvanayostattvadarshibhihi: ||


Shloka Meaning

The unreal (asat - that which is not sat) has no being. The real (sat) has no non-being.
The final truth of these two has been seen indeed by those who have experienced the essence
of things.

Knowers of truth
----------------

This refers to persons who have directly seen the final truth. For such people, truth is all about perception.
Such realized person understand what is real and what is not real.

Body is here today and gone tomorrow. The world is hear today and gone tomorrow. They would get
destroyed in course of time and they cannot be the truth. They are non existent. That which
can become non existent cannot be real. Even though it looks real, it is a mirage, a facade.

The Atma alone is real. There is no time where Atma was not present. In the present or the future,
there is no time where Atma would not be present.

The man of knowledge knows only the Atma is present across time and space constraints.

The ignorant think that the body is real and do not understand the atma. This confusion is the root cause
of all sorrows and miseries for mankind.

Jai Shri Krishna 🌺
ravi said…
https://chat.whatsapp.com/KIZSxqwsGMN8Sd3SZPFRy5

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நினைத்ததை நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு பற்றிய பதிவுகள் :*

பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பாகும். யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

*விரதமுறை :*

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்துவிட்டு தரிசனம் முடிந்த பின்பு பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.

*பிரதோஷ பலன்கள் :*

தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலால் அபிஷேகம் செய்து நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 112*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
ஆர்யா சதகம் முடிந்து விட்டாலும் சில முத்துக்களை நாம் மீண்டும் பார்க்க வேண்டும் ...

ரசிக்க வேண்டும் ...

பெரியவா மூக சாரம் என்று மூக பஞ்சசதீ யில் இருந்து 31 பாடல்களை ஒவ்வொரு சதகத்தில் இருந்தும் சில ஸ்லோகங்களை எடுத்து ஒரு அரிய நவரத்தின மாலையை தொடுத்துள்ளார்

அதை தவிர இன்னும் சில ஸ்லோகங்கள் காமாக்ஷி , பெரியவா போல் உடனே பலன் தரக்கூடியவை ..

எல்லாவற்றையும் பார்த்து பரவச பட்டபின் அடுத்த சதகம் போவோம் 🙏🙏🙏
ravi said…
*ஸ்பெஷல்* *ஸ்லோகங்கள் ஆர்யா சதகத்தில் இருந்து*

1 & 26 = 2 ஸ்லோகங்கள்

பெரியவா தொகுத்த முத்துக்கள் 31
ஸ்லோகங்கள்

*1. ஆர்யா சதகம் ()*

46, 47, 98- total 3
ஸ்லோகங்கள்

*மொத்தம் = 2 +3 = 5* 💐💐💐💐💐💐💐💐
ravi said…
*ஆர்யா சதகம் முதல் ஸ்லோகம்*

காரணபரசித்3ரூபா காஂசீபுரஸீம்நி காமபீட2க3தா |

காசந விஹரதி கருணா காஶ்மீரஸ்தப3ககோமலாங்க3லதா ‖1‖

*காரண பர சித்ரூபா’* வான தேவி ‘ *கார்ய காரண நிர்முக்தா* ’வாகவும் ஆகிறாள்.

சத் சித் ஆனந்தம் எல்லா உயிர்களிலும் ஒன்றியும்,

எல்லாவற்றிலும் விடுபட்டும்,

மேலான அதீதமான பரப்ரம்மமாகவும் விளங்குகின்றாள்.

பூமிதேவியின் நாபிஸ்தானமான காஞ்சீ எனும் நகரத்தில் காமபீடத்தில் குங்குமப்பூ கொத்துப் போல் கருணையை வாரி வழங்கிக் கொண்டு அநேக திருவிளையாடல்களை புரிந்து கொண்டிருக்கிறாள்.

குவித்து வைத்த குங்குமமோ,

கொட்டி வைத்த குங்குமப்பூ குவியலோ என்பதாக மூகர் நம் மனக்கண் முன்பு தேவியை நிறுத்துகிறார்🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 518* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*

*சக்தி ஆலயம்: அவனியாபுரம் ரேணுகாம்பாள்:*
ravi said…
ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார்.

எதுவும் நிகழாததுபோல் கையைக் கட்டிக்கொண்டு

''ராமா! உன் சகோதரர்கள் எனது கட்டளையை நிறைவேற்றத் தயங்கினாலும் நீ யோசனையே செய்யாமல் என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார் ஜமதக்னி ரிஷி.

''தந்தையே, என் குருதேவா... எனக்கு என்ன வேண்டும்.....

தங்கள் தவ மகிமையால் இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும்.

அவர்கள் உயிர் பெற்ற பின்னர் நான் தான் அவர்களைக் கொன்றேன் என்ற எண்ணமே அவர்களுக்கு எழக்கூடாது.

இந்த வரம் அருளவேண்டும்'' என்கிறார் பரசுராமன்.
ravi said…

பழனிக் கடவுள் துணை -20.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-93

மூலம்:

தவளக் களிறுகைப்பாய்: சங்கரன்கண் ஈன்ற
பவளக் கிரியனைய பாலா! – நவமணிப்பொற்
கோயிற் பழனிக் குகவேலே! என்மிசைநீ
தாயிற் புரிவாய் தயை (93).

பதப்பிரிவு:

தவளக் களிறு உகைப்பாய்: சங்கரன் கண் ஈன்ற
பவளக் கிரி அனைய பாலா! – நவமணிப் பொன்
கோயில் பழனிக் குக வேலே! என் மிசை நீ
தாயில் புரிவாய் தயை!! (93).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தவளக் களிறு- வெண்மையான யானை; வெள்ளையானை;

மிக உருக்கமான ஒரு வெண்பா. பழனிப்பெருமாளே! நீ எனக்குத் தாயைப் போன்று தயை செய் என்று வேண்டிக் கொள்கிற ஒரு வெண்பா.

வெள்ளையானை, ஐராவதத்தை வாகனமாக உடையவனே! சங்கரனின் நெற்றிக் கண் ஈன்ற, பவள மலை போன்ற பாலனே ! நவமணிகளான வைரம், மரகதம், நீலம்,கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம் ஆகியவைகளுடன் பொன்னும் சேர்ந்து விளங்கி, ஜொலிக்கும், பேரழுகுடைய பழனிக் கோயிலில் குடி கொள்ளும் பழனிக் குகனே! பழனி வேலவனே! உன் அடிமை, உன்னை அன்றிப் பிரபஞ்சம் அதை நம்பாத இந்த நாயடியேனுக்கு, பழனி பகவானே! என் மீது நீ தாயைப் போல் தயை புரிந்து, என்னை நித்தம் காக்க வேண்டும் ஐயா!

நாயினும் கீழான இந்தப் பேயேன் புரி பிழையெல்லாம் பொறுத்து, தாயென நித்தம் உன் மாறா அன்பைத் தாயேன்! பழனாபுரித் தாயே! உன் காலடியில் கதறுது நின் சேயே! கருணை செய்யே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺 "Friend..... 'I am happy in the service of your mother and father. Ask for boon'" is a simple story explained by Bandurenga Vittalan 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Pundarikan was the son born to Janudevar and Satyavathi who lived in Maharashtra. He was very respectful and devoted to his parents, but after marriage he started insulting them with his wife's speech. Distraught, the parents left for Kashi Yatra.

🌺 How can they go alone? We have to go too,' insisted Bundarikan's wife. They also joined the group going to Kashi. As his parents walked, Bundarigan and his wife rode on horseback.

🌺 All of them stayed and rested in the ashram of Sage Kukuda. Just before dawn, Bundarikan saw many beautiful young women entering the ashram, looking hideous and dirty in faded clothes.

🌺They cleaned the floor of the ashram. They washed the sage's clothes. They pumped water from the well. When they emerged from the sage's room, they were dressed in the cleanest of clothes and became aspects of purity.

🌺 The next day, he noticed that the women came into the ashram dirty, and when they came out clean after finishing their work, he fell at their feet. 'who are you?' he asked. 'We are many holy rivers like Ganga, Yamuna, Saraswati. Others cast all their sins upon us and are purified.

🌺We come to this ashram everyday to get rid of those sins. Our sins are washed away by serving Sage Kukuda who treats her parents as deities. Saying, 'We are coming back purified again', and they disappeared.

🌺 At that moment Bundarikan changed his mind. His main duty was to serve his parents.

🌺Krishna was waiting for the right moment to introduce this Pundarika to the world. Once, Rukmini was angry with him when she saw that Krishna was making out with Radha and came to (Tandir) forest and was alone. After pacifying her, Krishna left to take her back to Dwarka.

🌺Stand on it for a while. I will take care of you after finishing the tasks for my parents' he said. Accordingly, Bundarikan met his parents after completing their service.

He welcomed the visitors. Rukmini, who couldn't bear it any more, broke it by saying that it was Krishna who had come.
🌺 Bundarigan panicked. He fell on the ground and apologized. Krishna smiled. Friend..... 'I am happy in the service of your mother and father. Ask for a boon,' he said.

'🌺 Pandurangane! This place where you have woken up should be considered a holy place. Pundareekar prayed that you should take sanctity here as Vittalan so that all the devotees can visit and get blessings.

🌺Krishna was pleased and blessed that 'those who bathe in the Bhima river flowing here and visit me, all dangers will be removed and they will live with all the blessings'. At the auspicious place called Pundarikapuram, a magnificent temple was built on the banks of the river. Later Pundarikapuram became as Pandaripuram.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நண்பா* ..... ' *உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன்* . *வேண்டும் வரம் கேள்* ' *என்ற பாண்டுரெங்க விட்டலன்* .. *விளக்கும்* *எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர்.

🌺அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர்.

🌺அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான்.

🌺அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர்.

🌺மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன், வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப் பாதங்களில் விழுந்தான். 'நீங்கள் யார்?' என வினவினான். 'கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள்.

🌺தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்புகிறோம்' என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள்.

🌺அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.

🌺இந்தப் புண்டரீகனை அகிலத்துக்கு அறிமுகப் படுத்த எண்ணி, தக்கதொரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான் கிருஷ்ணர்.ஒரு முறை கிருஷ்ணர், ராதையுடன் குலவிக்கொண்டிருந்ததைப் பார்த்து, ருக்மிணி அவனிடம் கோபித்துக்கொண்டு, (தண்டிர்) வனத்துக்கு வந்து, தனித்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி, மீண்டும் துவாரகைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டார் கிருஷ்ணர்.

🌺வழியில் பெற்றோர்க்குச் சேவை செய்யும் மைந்தனை அவளுக்குக் காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டார் கிருஷ்ணர். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டார்.

🌺சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன்'என்றார். அதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டினார்.

🌺வந்தவர்களை வரவேற்றார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணர் என்பதைப் போட்டு உடைத்தார்.
🌺புண்டரீகன் பதறினார். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத் தார். நண்பா..... 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்' என்றான்.

'🌺பாண்டுரங்கனே! நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீங்கள் இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினார், புண்டரீகர்.

🌺கிருஷ்ணர் மனமுவந்து, 'இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள்' என்று அருளினார். புண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத் தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரீபுரம் ஆகிவிட்டது.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
_*இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!*_



*1. மகாலெட்சுமிதீர்த்தம்*

*இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.*

*2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம்*

*இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்டசித்தி அடையலாம்.*
ravi said…

*5. சேது மாதவ தீர்த்தம்*

*இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராம பிரானால் சகல லெட்சுமி காடாட்சமும்,சித்த சக்தியும் பெறலாம்.*

*6. நள தீர்த்தம்*

*மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் கடவுளின் அனுக்கிரகம் பெற்று, சொர்க்கலோக பதவி அடைவர்.*

*7. நீல தீர்த்தம்*

*மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.*

ravi said…
*8. கவாய தீர்த்தம்*

*இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் தேக ஆரோக்கியம் கிடைக்கும்.*

*9. கவாட்ச தீர்த்தம்*

*இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.*

*10. கந்நமாதன தீர்த்தம்*

*சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.*

*
ravi said…
11. சங்கு தீர்த்தம்*

*இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.*

*12. சக்கர தீர்த்தம்*

*இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.*

*13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்*

*இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சூனியமும் நீங்கும்.*

*14. சூர்ய தீர்த்தம்*

*இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.*

*15. சந்திர தீர்த்தம்*

*இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.*

*16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம்*

*இம்மூன்று தீர்தத்தங்களும்திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.*

*19. சாத்யாம்ருத தீர்த்தம்*

*திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் கோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.*

*20. சிவ தீர்த்தம்*

*இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.*

*21. சர்வ தீர்த்தம்*

*இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னதி முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.*

*22. கோடி தீர்த்தம்*

*இந்த தீர்த்தமானது, இராமர் லிங்கப் பிரதிஸ்டை செய்தபோது, அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமர், தன் அம்பின் நுனியைப் பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.பக்தர்களுக்கு தீர்த்தத்தை பாட்டில்களில் சேமித்து விற்கிறார்கள்.*

*சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள்.*

ravi said…
🌺வாழ்க்கையில்
பல பேருக்கு
நன்றி சொல்..

சில பேருக்கு
மிகவும் நன்றி சொல்..

பல பேர் நம் வாழ்க்கையில்
பாடம் கற்பிக்க வந்தவர்கள்..

சில பேர்
பாடமாகவே
வந்தவர்கள்..!


*இன்றைய நாளை இனிமையாகி தந்ததற்கு* *இறைவனுக்கு நன்றிகள்* *பல*


*அன்புடன்*
*இனிய இரவு* *வணக்கம்..!*

https://mahavishnuinfo.org

🪷🙏🏼😴
ravi said…
*இப்புராணம் ஏதோ சில ஸ்லோகங்களின் தொகுப்பு அல்ல. ஏதோ சில ச்லோகங்களின் கூட்டம் அல்ல. இவை 'கண்ணனே! இந்த ஒவ்வொரு சலோகமும் 'கண்ணனே'! ஒவ்வொரு சொல்லும் 'கண்ணனே’1 இதன் பொருளும் 'கண்ணனே'! அப்படி இருக்கும்போது கண்ணனே நம்மோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் - ஒரே வழி, பாகவத புராணத்தைப் படிப்பதுதான்! அதில் சொன்ன கருத்துகளின்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான்!*

*யாருக்குத்தான் குழந்தை கண்ணன் தன் வீட்டில் ஓடி ஆட வேண்டும் என்ற ஆசை இருக்காது? பெருமான் கண்ணனே நம் வீட்டுக்கு வந்தால் அது திருப்தி தரும், சந்தோஷத்தைக் கொடுக்கும், நாம் ஆசைப்பட்டதை எல்லாம் கொடுக்கும். சாந்தி நிலவும். அதற்கு ஒரே வழி, பாகவத புராணத்தை படிப்பது.*





ravi said…
🪷 *ஸ்ரீமத் பாகவதம் இன்று முதல்......*🪷

"ஸ்ரீமத் பாகவதம்" - இது ஸ்ரீ வேத வியாசரால் இயற்றப்பட்ட பதினெட்டு புராணங்களில் ஒன்று. ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தின் தொடர்ச்சியாக இந்த புராணக் கதை ஆரம்பிக்கின்றது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன.

நைமிஷாரண்யத்தில் இறைவன் காடாக இருக்கிறார்.

புஷ்கரம் என்னும் புண்ணிய தலத்தில் இறைவனே ஏரியாக இருந்து அனைவரின் ஸம்ஸார தாகத்தையும் தணிக்கிறார்.

மரங்களில் அரசமரமாக வீற்றிருக்கிறார்.

அதுபோல், புத்தகங்களில் ஸ்ரீமத்பாகவதமாக இறைவன் இருக்கிறார்.

"श्रीमद्भागवताख्योयं प्रत्यक्ष: कृष्ण एव हि" - "ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி"
என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.

ஸ்ரீமத்பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.

இந்த பாகவதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

புராணம் என்றால் படிப்பார்கள், சொல்லுவார்கள், பிறர் சொல்லக் கேட்பார்கள்.
யாரவது பருகினார்கள், அருந்தினார்கள், சுவைத்தார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியுமா?
ஆனால் இந்த புராணத்தைப் பருக முடியும், அதுவும் காது வழியாக.

தேனினும் இனிய பகவானின் குணங்களை, லீலைகளைக் சொல்லும் நூல், சொல்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு, என அனைவருக்கும் இனிமையை வாரி வழங்கும்.

ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீமத்பாகவதத்தை வேதம் என்ற மரத்தில் பழுத்த பழம் என்கிறார்.
அந்த பழத்தை ஸ்ரீசுகர் என்னும் முனிவர், கிளி வடிவில் கொத்தி சுவைத்து நமக்காக அருளியுள்ளார்.

தினமும் உங்களுக்காக👇
https://srimahavishnuinfo.org
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
இந்தப் பெரிய பணியில் முதல் ஸ்டெப்பாகச் செய்யவேண்டியது தற்போது மிஞ்சியுள்ள சாஸ்திரக்ஞர்களையெல்லாம் குருகுலமோ, பாடசாலையோ எதுவா ஒன்றில் பிடித்துப்போட்டு போதிப்பதற்கு ஊக்கம் தரவேண்டும். அங்கே பழைய சாஸ்திரங்களின் ஸம்பந்தமான நூல்களை, சுவடிகளையெல்லாம் முடிந்தமட்டும் சேகரித்து வைக்கவேண்டும். இவற்றில் ரிஸர்ச்சுக்கும் தூண்டுதல் அளிக்க வேண்டும். முக்யமான நூல்களையாவது அச்சுப் போடுவதற்கு ஸஹாயம் செய்யவேண்டும் நன்றாகப் படித்தறிந்த ஒருத்தர் நாலு பேருக்காவது அதைப் படிப்பிக்காமல் போனார் என்று ஏற்படவே கூடாது. நன்றாகக் கற்று வித்வானாகிற எவனும் அப்புறம் தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து ப்ரசாரம் செய்தேயாக வேண்டுமென்பது ஆன்றோர் விதித்த விதி. தன்மட்டில் கற்றவனாயிருந்து பயனில்லை. கற்பிப்பவனாயிருந்து கல்வியின் பயன் வருங்கால ஸமுதாயத்துக்கும் போகும்படி செய்யவேண்டும்.
மநுஷ்யனுடைய வாழ்க்கையில் ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸந்ந்யாஸம் என்று நாலு ஆச்ரமம் உள்ளது என்றால், கல்வி கற்பிப்பதிலும், நாலு ஸ்டேஜ்கள் உண்டு. அதீதி, போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று இந்த நாலுக்குப் பேர். அதீதி என்றால் படிப்பது. முதலில் நன்றாகப் படிக்கவேண்டும். அப்புறம் போதம், அதாவது படித்ததை நன்றாகப் புரிந்துகொண்டு அதிலே மேலும் புது அறிவு பெறுவது. மூன்றாவதாக ஆசரணை. முதலிரண்டும் இப்போதுங்கூடப் பல ஸப்ஜெக்ட்களில் நடந்துவிடுகின்றன. ஆனால் இந்த மூன்றாவது விஷயத்தில் தான் கோளாறாக இருக்கிறது. அது என்ன? ஆசரணை என்றால் அறிவிலே இறக்கிக் கொண்டதை நம்முடைய வாழ்க்கையிலே இழைத்து, நடைமுறையில் நடத்திக் காட்டுவது என்று அர்த்தம். கற்றபின் அதற்குத் தக நிற்பது ஆசரணை.
இந்த மூன்றோடு மட்டும் வித்வானின் லக்ஷணத்தை முடிக்காமல், முடிவாக ‘ப்ரசாரணை’ என்றும் ஒரு நாலாவது லக்ஷணம் சொல்லியிருக்கிறது. இதுதான் தான் கற்ற கல்வி தன்னோடு போகாமல் அதை நாலுபேருக்குக் கற்றுக் கொடுப்பது. ப்ரசாரம் செய்வது ப்ரசாரணை.
ஸ்ரீ ஹர்ஷர் இந்த விஷயத்தைக் கவி சாதுர்யத்தோடு சொல்லியிருக்கிறார். நளனுடைய கதையை “நைஷதம்” என்ற பெயரில் எழுதியிருப்பவர் அவர். நளன் நிஷத தேசத்து ராஜாவானதால் புஸ்தகத்துக்கு “நைஷதம்” என்று பெயர் வைத்தார். வித்வான்கள் விரும்பும்படியான காவ்யம் அது. “நைஷதம் வித்வத் ஒளஷதம்” – நைஷத காவ்யமானது வித்வான்களுக்கு லேஹ்யம் மாதிரி – என்று சொல்வார்கள். அதிலே அவர் நளன் சதுர்தச வித்யைகளைக் கற்றுத் தேர்ந்தான் என்று சொல்லும்போது இந்த ஸமாசாரம் சொல்லியிருக்கிறார். ‘சதுர்தச’ என்ற வார்த்தையில் சிலேடை செய்து சொல்லியிருக்கிறார்.
ravi said…
சதுர்தச’ என்ற வார்த்தை இரண்டுவிதமாக அர்த்தம் கொடுக்கும். பதிநாலு என்பது ஒரு அர்த்தம். தசம் – பத்து, சதுர்தசம் – நாலு ப்ளஸ் பத்து, அதாவது பதிநாலு நாலு வேதம், அதன் ஆறு அங்கம், நாலு உபாங்கம் என்பவை சேர்ந்து பதிநாலு வித்யைகள்.
‘சதுர்தச’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் நாலு தசை, நாலு விதமான ஸ்டேஜ்கள் என்பது.
சதுர்தச வித்யைகளைக் கற்று, அவற்றுக்கு அதீதம், போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று சதுர்தசைகளை நளன் கொடுத்தான் என்று (கவி ஸ்ரீஹர்ஷர்) வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்.
ravi said…
பால் தயிராகிறது - தயிர் பாலாகுமா?

(Butter Milk ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் சொன்ன பெரியவா)

(மைகாட்...! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!" என்று சொல்லி பெரியவாள் உரையின் நயத்தை ரசித்த ஆங்கிலேய மாணவர்கள்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
மறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கல்வித்துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருவார்.

இந்தத் தடவை, இரண்டு ஆங்கிலேய மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து மாணவர்கள், தன்னை நாடி வந்திருக்கிறார்கள் என்பதால், உள்ளூர ஒரு பெருமிதம்.

தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று அகந்தை.

"இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்து கொண்டிருக்கிறார்கள்.பல சப்ஜெக்ட்களில் புகுந்து விளையாடுகிறார்கள்.. இங்கிலீஷ்காரர்களே ரொம்ப புத்திசாலிகள்! இவர்கள் இரண்டுபேரும், ரொம்ப ரொம்ப இண்டலிஜெண்ட்..! பி.எச்.டி. வாங்கியிருக்கிறார்கள். இங்கிலீஷில் தான், வருஷந்தோறும் புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல், ப்யூராகவே இருந்திண்டிருக்கு..."

அன்பரின் ஆங்கிலத் தோத்திரம் முடிவடைவதாக இல்லை.

மகாப் பெரியவாள் முன்னிலையில் பேசும்போது, ஓர் அடக்கம் வேண்டும். ஆங்கிலத்தைப் புகழ்வதில் தவறு இல்லை. ஆனால், தலைகால் தெரியாமல், சொற்களைக் குவித்துக்கொண்டே போகக்கூடாது.

அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம், பேச்சை நிறுத்தியபோது, பெரியவாள் பேசத் தொடங்கினார்கள்

"ஆமாம்....இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலிதான்! . நாம், பாலைத் தயிராக மாற்றுகிறோம்.அது ஸ்வபாவ மாறுதல். ஆனால்,தயிரைப் பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது. அதனாலே,அக்ஞானிகளான நாம் அந்தமாதிரியெல்லாம் முயற்சி பண்றதில்லே. இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ!....'இதோ, நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்'னான். Butter Milkன்னு ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சுட்டான் ! பார்த்தியா..எவ்வளவு சுலபமா, Butter-ஐ மில்க் ஆக்கிவிட்டான்.!. நாம் என்னவோ அதை மோர் என்று சொல்கிறோம் மில்க்ன்னு சொல்றதில்லே..."

அருகில் இருந்தவர்கள், மென்மையாகச் சிரித்தார்கள்.

ஆங்கிலேய மாணவர்கள்,'பெரியவாள் என்ன சொன்னார்கள்' என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

" மை காட் ! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச் !" என்று சொல்லி, பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.

கல்வி அதிகாரியின் முகத்தில், வெண்ணெய் - இல்லை - விளக்கெண்ணெய் வழிந்தது !..
ravi said…
*ராமா*

இரண்டு எழுத்திலே எல்லாம் பெற பெற்றேன் ...

சொல்லும் நாவும் நினைக்கும் நெஞ்சமும்

உன் நாமம் தனில் ஒய்யாரமாய்
நவமியில் பவனி வரக்கண்டேன் ..

கிடைக்காதது இனி ஒன்றும் இல்லை என்றவுடன் உள்ளம் ராம நாமத்தில் உருக கண்டேன் ..

இதனிலும் உயர்ந்த பொருள் ஒன்றும் இல்லை என்றே இரண்டு எழுத்துக்குள் என்னை பொறுத்திக்கொண்டேன் 🪷🪷🪷
ravi said…
ஷுத்த = நிர்மலமான - சுத்தமான

*❖ 148 நித்யசுத்தா =* என்றென்றும் அப்பழுக்கற்று விளங்குபவள்🙏🙏🙏
ravi said…
*அம்மா* ...

அசுத்தம் நிறைந்த என் உள்ளத்தில் உனை அமர வைக்க ஆசைப்பட்டேன் ...

எங்கும் நீண்டு வளர்ந்த மரங்கள் இரவும் பயப்படும் கருமை காணும் எங்கும்

கோட்டான்கள் கூக்கரலிடும் ...

தாய் இழந்த கன்று அங்கே தாய்ப்பாலுக்கு அழும் ...

பாசி படிந்த பாறைகள் அதில் பாசம் கொண்ட ஆசைகள் ....

இதயம் துடிப்பதை போல் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்றே துடிக்கும் மனம்...

என் ஆசை அறிந்து ஓடி வந்தாய் ...

க்ஷணம் நேரத்தில் வீட்டை சுத்தம் செய்தாய்

வர மறுத்த குயில்களும் கிளிகளும் மான்களும் மயில்களும் தானாய் வந்து சேர்ந்ததே *அம்மா* ..

இருள் மறைந்து இதயம் ஆதித்யஹ்ருதயம் சொல்கின்றதே தினமும் எப்படி *அம்மா* ?

எல்லாம் உன் கருணை என்றால் எங்கள் கர்வம் தலை தூக்குதல் நியாமோ *அம்மா* 🙏🙏🙏
ravi said…
Kollur Chariot Festival. On the new chariot Devi Mugambigai. The new bramchariot was made from Jack and Teakwoods. This chariot has replaced 400 years old chariot and in the new chariot Devi Mugambigai departed to see her worshippers. This was the principle idea of this chariot drag. On the path of the chariot 5 lakh worth of panneer flowers were spread. This new bramchariot for Devi Mugambigai cost 2 crore rupees. The wheels of the chariot did not run on sand road but on yellow and red roses bed which cost 5 lakhs rupees....
ravi said…
[21/03, 16:20] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா *ஸம்மிதஸ்ஸம* : |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[21/03, 16:21] Jayaraman Ravikumar: *109. ஸம்மிதாய நமஹ (Sammithaaya namaha)*
[21/03, 16:23] Jayaraman Ravikumar: ஆதி சங்கர பகவத் பாதருக்குப் பத்மபாதர் என்றொரு சீடர் இருந்தார்.

அவர் சிறந்த நரசிம்ம பக்தர்.
நரசிம்மப் பெருமாளை நேரில் காணும் ஆவலுடன் தவம் புரிவதற்காக ஓர் அடர்ந்த காட்டை அடைந்தார்.

எதிரே வந்த ஒரு வேடன் பத்மபாதரைப் பார்த்து, “ஐயா! உங்களைப் பார்த்தால் பெரிய யோகியைப் போலத் தெரிகிறதே!
ravi said…
[21/03, 16:16] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 111 started on 6th nov
[21/03, 16:18] Jayaraman Ravikumar: *பாடல் 35 ...* *விதிகாணும்*

(நற் கதி காண அருள்வாய்)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?

மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.
[21/03, 16:19] Jayaraman Ravikumar: சந்திரன்போல் பிரகாசிக்கும் வதனமுடைய வள்ளியை அன்றி
வேறு எவரையுமே துதிக்காத கொள்கையை உடையவனே,

அண்டர் உலகாதிபதியே, பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட
தேகத்தை விடாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து உழலும்
வினையை உடையவனாகிய யான், மறுபடியும் கருவில்
வந்துவிடாதபடி உயர் கதியை அடைய உனது பாத பங்கயங்களை
எப்போது தந்தருளப் போகிறாய்?
ravi said…
[21/03, 16:08] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*69வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[21/03, 16:12] Jayaraman Ravikumar: ஜட3தா பசுதா கலங்கிதா

குடிலசரத்வம் ச நாஸ்தி மயி தே3வ |

அஸ்தி யதி3 ராஜமௌலே

ப4வதா3ப4ரணஸ்ய நாஸ்மி கிம் பாத்ரம் || 69
[21/03, 16:14] Jayaraman Ravikumar: மதியை சிரத்தில் அணிந்தவனே!

என்னிடம் ஜடத்தன்மை, மிருகத் தன்மை, களங்கமுள்ள தன்மை, கோணலான தன்மை இவை ஒன்றும் இல்லையே.

இவை ஏதாவது என்னிடம் இருக்குமாயின் உனது சித்தத்தில் அணியாக இருக்க நானும் பாத்திரனாயிருக்க மாட்டேனா?

(ஸம்ஸ்கிருதத்தில் ‘ஜலம்' என்பது 'ஜடம்' என்றும் மாறும்.

எனவே, ஜடத்தன்மை என்பது பனியைப் பெருக்குவதாகக் கருதப்படும் சந்திரனின் ஜலத்தன்மையைக் குறிப்பதுமாகும்.

'மிருகம்' எனப்படும் மானின் அடையாளம் சந்திரனுள் இருப்பதால் சந்திரனுக்கு மிருகத்தன்மை உள்ளது.

அதையே களங்கம் என்றும் சொல்கிறோம்.

பெருமான் அணிவது பூர்ண சந்திரனாக இன்றிப் பிறையாக இருப்பதால் அது கோணலானது எனப்படுகிறது.)👏👏👏
ravi said…
[21/03, 12:42] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 519* 🙏🙏🙏started on 7th Oct 2021

*232 வது திருநாமம்*

*சக்தி ஆலயம்: அவனியாபுரம் ரேணுகாம்பாள்:*
[21/03, 12:43] Jayaraman Ravikumar: உயிர் பெற்ற ரேணுகா தான் மாரி அம்மன்.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.

சென்னையை அடுத்த போளூர் வந்தவாசி சாலையில் அவனியாபுரம் என்கிற ஊரில் அற்புதமாக ஒரு ஆஞ்சநேயர், நரசிம்மர். ரேணுகாம்பாள் ஆலயம் எல்லாம் தரிசித்த நினைவு வருகிறது.

ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார்.

பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனை கொல்கிறார் .

தந்தையை இழந்த கார்த்தவீரியார்ஜுனன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள்.

அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.
ravi said…
[21/03, 12:40] Jayaraman Ravikumar: மோதி3தமது4கரவிஶிக2ம்
ஸ்வாதி3மஸமுதா3யஸாரகோத3ண்ட3ம் |

ஆத்3ருதகாஂசீகே2லநமாதி3மமாருண்யபே4த3மாகலயே ‖26‖
[21/03, 12:41] Jayaraman Ravikumar: தேவி தன் வலது முன் கையில் தாமரை, செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், மாம்பூ என ஐந்து புஷ்பங்களையே பாணங்களாகக் கொண்டிருக்கிறாள்.

பூக்களிலிலுள்ள தேனைப் பருகும் வண்டுகள் ஹ்ரீம் என்று ரீங்காரமிடுகின்றன.

ஹ்ரீங்காரத்துடன் வண்டுகள் தேனை பருகுவதால் வண்டின் எச்சில் படும் என்றாலும், அந்த மலர்கள் பூஜைக்கு உகந்ததாகின்றன.

தேவி வலது முன்கையில் கரும்பை வில்லாகக் கொண்டிருக்கிறாள்.

நம் மனமே தேவி கைக்கரும்பு வில். கரும்பிலிருந்துதான் கற்கண்டு,சர்க்கரை, வெல்லம் போன்ற இனிப்புப் பொருட்கள் கிடைக்கின்றன.

மனம் எனும் கரும்புவில்லில் கருணை என்ற புஷ்பங்களால் தேவி நம் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுகிறாள்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 113*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
🌹🌺" *நம்மை நிராகரித்தவர்களையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் போல் எண்ணி நேசிப்போம்* .... *என்பதை பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺"உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய்
முயற்சி செய்யுங்கள்.

🌺 என் வாழ்க்கை சோகம் நிறைந்தது
என்று நினைக்காதீர்கள். எல்லாம்
நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு
யாருக்குமே அமைவதில்லை என்பதே
உண்மை.

🌺உங்களுக்கு எதுவும் தெரியாது.
எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும்
என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்.
இந்த எண்ணம் இருந்தால் நீங்கள்
சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம்
இன்றி சொல்லி முடிக்க முடியாது.

🌺 கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக
சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட
நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல்
தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக்
கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக
புரியவைத்தவர்கள்.

🌺அழும் போது தனியாக அழுங்கள்.
நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ
இங்கு யாரும் வரப்போவதில்லை
என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர
எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

🌺உங்கள் அன்பு எந்த இடத்தில்
நிராகரிப்பட்டாலும் இழப்பு
உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே
என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்!

🌺நம் அன்பினை என்றென்றும் நிரந்தரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் காண்பித்து நம்மை நிராகரித்தவர்களையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் போல் எண்ணி நேசிப்போம்
நம் வாழ்க்கையும் நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் _வாழ்க்கை வளமாகட்டும்!🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம்

ஸ ஜயதி ஸுவர்ணசைல:
ஸகலஜகச் சக்ர ஸங்க்கடிதமூர்தி: | காஞ்சன நிகுஞ்ஜ வாடீ
கந்தலதமரீ ப்ரபஞ்ச ஸங்கீத: /

மேரு தங்கமலை. அதன் உருவினுள் அனைத்து உலக மண்டலங்களும் வரிசையாகத் தம் தமது இடங்களில் பொருந்தி ஒன்றோடொன்று இணைந்து அமைந்துள்ளன. மலையைச் சுற்றியுள்ள கொடி வீடுகளில் அமர்ந்து தேவமாதர் கூட்டம் அதன் புகழைப்பாடுகின்றது. அந்த தங்கமலை சிறந்து விளங்குகிறது. (2)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் மஹரிஷி துர்வாஸர் இயற்றியது.

வந்தே கஜேந்த்ர வதனம் வாமாங்காரூட வல்லபாச்லிஷ்டம் குங்கும பராகசோணம்
குவலயினீ ஜார கோரகாபீடம் ||

இடது மடியில் வீற்றிருக்கும் வல்லபாதேவியால்
அணைக்கப்பெற்றவரும், குங்குமப்பூத்தூள் போன்று
சிவந்தவரும் செவ்வல்லிப்பூவின் காதலனான சந்திரனின் மொட்டு போன்ற கீற்றைச் சிரத்தில் சூடியவருமான சிறந்தயானை முகத்தோனை வணங்குகிறேன். (I)
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*சங்கமேஸ்வரர் ஆலயம்.*

கோவையிலிருந்து 106 கி.மீ தொலைவிலும் சேலத்திலிருந்து 56 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சங்கமேஸ்வரர் ஆலயம். ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்திருக்கும் இந்த கோவிலை திருக்கூடுதுரை என்றும் அழைப்பதுண்டு. இந்த கோவிலின் தான் இதன் தனிச்சிறப்பு. இந்த ஆற்றில் காவேரி, பவானி, மற்றும் ஆகாய கங்கை எனும் அமுத நதி மூன்றும் சங்கமிக்கிறது. நம் சங்க இலக்கியங்களில் இந்த பகுதியை திருநாணா என்று புகழ்ந்து பாடியுள்ளனர்.
ravi said…
இந்த இடத்திற்கு தக்‌ஷிண திரிவேணி சங்கமம் மற்றும் கூடுதுறை என்ற பெயர்களும் உண்டு. இந்த பெயர்கள் அனைத்தும் இங்கே கூடுகிற மூன்று நதிகளை குறிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. மக்கள் தங்களின் முன்னோர் மற்றும் இறந்தவர்களின் இறுதி சடங்குகளை இந்த நதியில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த தலம் குறித்து சுவரஸ்யமான தல வரலாறு சொல்லப்படுவதுண்டு. ஒருமுறை விஸ்ரவரின் மகனான குபேரருக்கு அவர் பக்தியின் பயனாய் ஒரு வானூர்தி கிடைத்தது இதன் மூலம் திக்கெங்கிலும் இருக்கும் சிவாலயங்களை அவர் தரிசித்து வந்தார். ஒருமுறை அவர் காவேரி நதிக்கரையின் மீது பறந்து கொண்டிருந்த போது ஒரு அதிசயத்தை கண்டார்.
மான், புலி, பசு, யானை, பாம்பு, எலி என அனைத்து ஜீவராசியும் எந்தவித எதிரித்துவமும் இல்லாமல் மிக தைரியமாக ஒன்றாக சேர்ந்து ஒரு இலந்தை மரத்தின் அடியில் நீர் அருந்தி கொண்டிருந்தன. இதை கண்டு அதிசயத்த குபேரருக்கு பதிலளிக்கும் விதமாக அசரீரீ ஒன்று ஒலித்தது. இந்த இடம் மிக புனிதமான இடம் வேதங்கள் அனைத்தும் இங்கே வந்து இறைவனை வழிபட்டுள்ளது. கந்தர்வர்களால் சூழப்பட்டது.
எனவே இங்கே இலந்தை மரத்தின் அடியில் இருக்கும் சிவபெருமானை வணங்குவது மிகுந்த சிறப்பை தரும் என்ற அசரீரீயை கேட்டு மெய் சிலிர்த்தார். இந்த இலந்தை மரம் அனைத்து தட்பவெட்ப காலங்களில் கனி கொடுக்கும் அதிசயத்தை நிகழ்த்துகிறது. இன்றும் இந்த மரம் கொடுக்கும் கனியை பூஜைக்கு பயன்படுத்துகின்றனர்.
இங்கிருக்கும் சங்கமேஸ்வரரை குபேரர், விஸ்வாமித்ரர், பரசரர் அனைவரும் வணங்கி வழிப்பட்டுள்ளனர். சிதம்பரம் கோவிலுக்கும் சங்க்மேஸ்வரர் ஆலயத்திற்கும் தொடர்பு இருந்தது என்ற நம்பிக்கை உண்டு. சேர சோழ பாண்டிய காலத்தில் இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டதே இதற்கு சான்றாகவும் சொல்லப்படுகிறது. தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகும்
ravi said…

பழனிக் கடவுள் துணை -21.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-94

மூலம்:

தயையும், பொறையும், தவமும், உளார் தம்மோ(டு)
இயையும் படிஎனைக்கை ஏற்பாய் – வயமலியும்
சத்திவடி வேலா தமிழ்பழனிச் சண்முகவா;
எத்திசைக்கும் நன்மையுண்டா மே (94).

பதப்பிரிவு:

தயையும், பொறையும், தவமும், உளார் தம்மோடு
இயையும் படி எனைக் கை ஏற்பாய்! – வயம் மலியும்
சத்தி வடிவேலா! தமிழ்பழனிச் சண்முகவா!
எத்திசைக்கும் நன்மையுண்டாமே!! (94).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

வயம்- ஆடு; வெற்றி என்று ஒரு பொருளும் உண்டு;

இரக்க குணமும், பொறுமை உணர்வும், தவக் குணமும் நிறைந்த உன் அடியார் தம்மோடு சேரும்படி எனக்கு அருள் கொடுத்து. உன் அடியன் என என்னையும், உன் கையில் ஏற்பாய்! பழனி வேலவனே! உன்னை நித்தம், "வெற்றி நிறைந்து விளங்கும் சத்தி வடிவேலாயுதப் பெருமாளே! தமிழ் பழனிச் சண்முகவேளே!" என்று போற்றித் துதிப்போர்க்கு எத்திசைக்கும் நன்மையுண்டாமே! பழனி ஆண்டவனே! நன்மை செய்!

*வயமோட்டிய, வயம் புகழ் வள்ளியின் வயம் அறிந்து அவளை உன் வயப்படுத்திய வயவனே! வயமெல்லாம் உன் வசமென்பதில் என்ன அதிசயம்!! வயவாஹன! வயம் நிறை உனக்கு வயமென்பதே வாடிக்கை தானே!

* வயம்- பறவை;பூமி; வேட்கை; வசம்; ஆடு; வலிமை; வெற்றி;
வயவன்- தலைவன்; hero ;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை -20.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-93

மூலம்:

தவளக் களிறுகைப்பாய்: சங்கரன்கண் ஈன்ற
பவளக் கிரியனைய பாலா! – நவமணிப்பொற்
கோயிற் பழனிக் குகவேலே! என்மிசைநீ
தாயிற் புரிவாய் தயை (93).

பதப்பிரிவு:

தவளக் களிறு உகைப்பாய்: சங்கரன் கண் ஈன்ற
பவளக் கிரி அனைய பாலா! – நவமணிப் பொன்
கோயில் பழனிக் குக வேலே! என் மிசை நீ
தாயில் புரிவாய் தயை!! (93).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தவளக் களிறு- வெண்மையான யானை; வெள்ளையானை;

மிக உருக்கமான ஒரு வெண்பா. பழனிப்பெருமாளே! நீ எனக்குத் தாயைப் போன்று தயை செய் என்று வேண்டிக் கொள்கிற ஒரு வெண்பா.

வெள்ளையானை, ஐராவதத்தை வாகனமாக உடையவனே! சங்கரனின் நெற்றிக் கண் ஈன்ற, பவள மலை போன்ற பாலனே ! நவமணிகளான வைரம், மரகதம், நீலம்,கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம் ஆகியவைகளுடன் பொன்னும் சேர்ந்து விளங்கி, ஜொலிக்கும், பேரழுகுடைய பழனிக் கோயிலில் குடி கொள்ளும் பழனிக் குகனே! பழனி வேலவனே! உன் அடிமை, உன்னை அன்றிப் பிரபஞ்சம் அதை நம்பாத இந்த நாயடியேனுக்கு, பழனி பகவானே! என் மீது நீ தாயைப் போல் தயை புரிந்து, என்னை நித்தம் காக்க வேண்டும் ஐயா!

நாயினும் கீழான இந்தப் பேயேன் புரி பிழையெல்லாம் பொறுத்து, தாயென நித்தம் உன் மாறா அன்பைத் தாயேன்! பழனாபுரித் தாயே! உன் காலடியில் கதறுது நின் சேயே! கருணை செய்யே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*நாளை நமக்கும் இதுதான்!*

படித்ததில் மிகவும் பிடித்தது!!!

*முதுமை + தனிமை= கொடுமை !*

*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!*

*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*

*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*

*இங்குதான் என் மகள் படிப்பாள்...*

*இங்குதான் விளையாடுவாள்...*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*

*என்ன சமைப்பது?...*

*என்ன சாப்பிடுவது?...*

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*

*தனிமை... வெறுமை...*

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*

*பயணம் ஒரு கொடுமை...*

*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*

*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*

*ஓலாவும், ஊபரும்...*
நமக்கு தேவைப்படும் நேரத்தில்,
*பீக் hour சார்ஜ்*
போட்டு களைப்படைய
செய்கின்றனர்...

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி...

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*
என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

*ஏதோ ஒரு மாலில்...*

*ஏதோ ஒரு ஓட்டலில்...*

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*

*பிசியாக இருப்பார்கள்...*

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*

*நாலு நாள் கழித்து...*

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

*அவர்கள் டைமிற்கு...*

*நம் தூக்க நேரம்...*

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

*அவன் வெளியே விளையாடறான்...*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*

*அவன் டியூஷன் போயிருக்கான்...*

*யோகா போயிருக்கான்...*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*

*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*

*ஓடி விடும்...*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*

*இந்த அரசியல்களும்...*

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...*

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...*

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*

*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*
( மனதுக்குள் *ஏதோ...*)
*வாழ்கிறேன்!*

🤔🤭🤫😰😥😓😦😪

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*

ஆழமான அழுத்தமான அழத்தூண்டும் பதிவு🤔
ravi said…
*ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம்*💐💐💐

(மஹரிஷி துர்வாஸர் இயற்றியது.)

எல்லா சௌபாக்கியங்களையும் அளிக்க வல்லது
=====

வந்தே கஜேந்த்ர வதனம்

வாமாங்காரூட வல்லபாச்லிஷ்டம்

குங்கும பராகசோணம்

குவலயினீ ஜார கோரகாபீடம் ||

இடது மடியில் வீற்றிருக்கும் வல்லபாதேவியால்
அணைக்கப்பெற்றவரும்,

குங்குமப்பூத்தூள் போன்று
சிவந்தவரும்

செவ்வல்லிப்பூவின் காதலனான சந்திரனின் மொட்டு போன்ற கீற்றைச் சிரத்தில் சூடியவருமான

சிறந்த யானை முகத்தோனை வணங்குகிறேன். (I)
ravi said…
வஸந்த நவராத்திரி ஆரம்பம்.....

நான்கு வித நவராத்திரிகள்.

1)பங்குனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்குவது லலிதாதேவியின் வசந்த நவராத்திரி.

2)மாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்குவது, ராஜ மாதங்கியின் நவராத்திரி.

3)ஆடி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்குவது, மஹாவாராஹியின் நவராத்திரி. இது ஆஷாட நவராத்திரி என்பர்.

4)புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்குவது, சாரதா நவராத்திரி. இது துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவருக்கும் உரியது.

வசந்த நவராத்ரி ஸ்பெஷல்:
லலிதா ஸஹஸ்ரநாமம் தேவி விரும்பும் அறுசுவை பற்றி ‘யோகினி ந்யாஸம்’ என்ற பகுதியில் குறிப்பிடுகிறது. (475 முதல் 534 வரை உள்ள நாமாக்கள்). அவை வருமாறு:

1. பாயஸான்னப்ரியா : பாலில் வேக வைத்த அன்னம். (நாமா:480)

2. ஸ்னிக்தௌதன ப்ரியா (ஸ்நிக்த்த - ஓதன - ப்ரியா) : ஓதனம் என்றால் வடமொழியில் உணவு, சோறு என்று பொருள். ஸ்நிக்த்த என்றால் நெய். நெய் கலந்து சமைத்த அன்னத்தில் பிரியமுள்ளவள். (நாமா:492)

3. குடான்ன ப்ரீத மானஸா: வெல்லப் பொங்கலால் மனநிறைவடைபவள். (நாமா 501)

4. தத்யன்னாஸக்த ஹ்ருதயா: தயிர் சாதத்தில் விருப்பமுடையவள். (நாமா : 512)

5. முத்கௌதனா (முத்க - ஓதந) ஸக்தசித்தா: பயறு பொங்கலில் ஈடுபட்ட மனமுடையவள். (நாமா: 519)

6. ஹரித்ரான்னைக ரஸிகா: மஞ்சள் பொடி சேர்த்துப் பொங்கிய அன்னத்தில் தனித்த ஈடுபாடுள்ளவள். வடமொழியில் ஹரித்ரா என்றால் மஞ்சள் என்று பொருள். (நாமா:526)

கடைசியில் ‘ஸர்வௌ தன ப்ரீதசித்தா’ (ஸர்வ - ஓதந- ப்ரீத - சித்தா): முன் கூறப்பட்ட அன்னங்களிலும் மற்றும் பலவகைப்பட்ட அன்னங்களிலும் விருப்பமுள்ளவள்.
(நாமா : 533)

வசந்த நவராத்திரியில் அன்னைக்கு மிகவும் பிடித்த இந்த பிரசாதங்களை நைவேத்யம் செய்து தேவியை மகிழ செய்து நாமும் அவள் பெற்ற பிரசாதங்களை உண்டு, பக்தர்களுக்கு கொடுத்து அவள் அருள் பெறுவோம்.
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 21, Tuesday, Mar., 2023_*

https://srimahavishnuinfo.org

*🧿''முற்பகல் செய்யின் பிற்பகல்..."*


*♻️மென் சிரிப்பு, கனிவான அணுகுமுறை, உபசரிக்கும் குணம்,பிறருக்கு உதவும் எண்ணம்... இந்தக் குணங்கள் இருப்பவர்களை எல்லோருமே விரும்புவார்கள்..*

*♻️முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் இதயத்தில் கூட இவர்களின் உதவும் குணத்தால் இடம் பிடித்து விடுவார்கள்.*

*♻️பிறரிடம் நல்ல பெயர் எடுப்பது அத்தனை சுலபம் அல்ல..நாம் பிறருக்கு செய்த உதவி அது ஏதோ ஒரு விதத்தில், யாரோ ஒருவர் மூலமாக நினைத்தே பார்க்காத அளவுக்கு நமக்கு ஏதோ ஒரு நல்ல பலனை அது தந்து விடும்..*

*♻️உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும். எந்தவித பிரதிபலன் பாராமல் உதவ வேண்டும்..*

*♻️ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பணம் படைத்த பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார்.*

*♻️வாகனங்கள் செல்லும் போது அந்தப் பெண்மணி கை காட்டி நிறுத்தப் பார்த்தார் ஆனால் எந்த வாகனமும் நிற்காமல் சென்றது.*

*♻️அந்த மனிதர் அருகில் சென்று என்ன பிரச்சனை அம்மா ? என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டார். கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.*

*♻️என் பெயர் தயாளன். காரில் உட்காருங்கள். நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் என்று டயரைக் கழட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு டயரை மாற்றினார்*

*♻️அந்தப் பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.*

*♻️நான் பக்கத்தில் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன. அதில் இருந்து வரும் பணமே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. நீங்கள் பணம் எதுவும் தர வேண்டாம் என்றார்.*

*♻️துன்பமான நேரத்தில் என்னாலான உதவி உங்களுக்கு செய்தேன் அவ்வளவே.. நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.*

*♻️அந்தப் பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றார்.. வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.*

*♻️டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா"? என்று கேட்டார்.*

*♻️அந்த பணக்கார பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார், கடையில் அந்த பெண் தன் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு இருந்தது.*

*♻️அதில் இருந்த ஆணின் படம் சற்று முன் தன் காரின் டயரை மாற்றியவர் என்று தெரிந்து கொண்டார்.. வெளிக் காட்டவில்லை*

*♻️அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதையும் அவரிடம் பேசித் தெரிந்து கொண்டார்.*

*♻️குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.அந்த அம்மா டீ குடித்து விட்டு ரூ.5000/- ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விறுவிறுப்பாக காருக்கு சென்று விட்டார்.*

*♻️அந்தப் பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.*

*♻️அதை எடுத்துக் கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார் அதற்குள் கார் கிளம்பிச் சென்று விட்டது.*

*♻️கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டுச் சென்ற பணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.*

*♻️பிரசவ செலவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று புலம்பிக் கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்தப் பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.*

*♻️ஆனால் மிகுந்த அசதியால் தூங்கிக் கொண்டு இருந்தார் அவரின் கணவரான தயாளன்.*

*😎ஆம்,நண்பர்களே.,*

*🏵️உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் நமக்கு இருக்க வேண்டும்.*

*⚽தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும்.அதில் மகிழ்ச்சி காண முடியும்.................*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்

1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. உலக அதிசியங்களுள் ஒன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்றே கூறலாம் . இவளை சரண் அடைந்தால் நம்மைக் காப்பாள் அன்னை மீனாட்சி.
ravi said…
இம்புட்டு சங்கதி இருக்கா... இது தெரியாமத்தான் இத்தனை நாளா இருந்திருக்கோமாக்கும்...

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!

எடப்பாடி அல்ல;
இடையர்பாடி.

மதுரை அல்ல;
மருதத்துறை.

மானாமதுரை அல்ல;
வானவன் மருதத்துறை.

காளையார் கோவில் அல்ல;
கானப்பேரெயில்.

சிவகங்கை அல்ல;
செவ்வேங்கை.

திருவாரூர் அல்ல;
ஆரூர்.

பொள்ளாச்சி அல்ல;
பொழில் ஆட்சி.

சிதம்பரம் அல்ல;
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்.

கான்சாபுரம் அல்ல;
கான்சாகிபு புரம்.
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)

வத்ராயிருப்பு அல்ல;
வற்றாத ஆறு இருப்பு.

தனுஸ்கோடி அல்ல;
வில்முனை.

இராமேஸ்வரம் அல்ல;
சேதுக்கரை.

இராமநாதபுரம் அல்ல;
முகவை.

காஞ்சிபுரம் அல்ல;
கஞ்சிவரம்.

செங்கல்பட்டு அல்ல;
செங்கழுநீர்பட்டு.

சேர்மாதேவி அல்ல;
சேரன்மகாதேவி.

விருத்தாசலம் அல்ல;
முதுகுன்றம்.

வேளாங்கண்ணி அல்ல;
வேலற்கன்னி.

சைதாப்பேட்டை அல்ல;
சையது பேட்டை.

தேனாம்பேட்டை அல்ல;
தெய்வநாயகம் பேட்டை.

கொசப்பேட்டை அல்ல;
குயவர்பேட்டை.

குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.

புரசைவாக்கம் அல்ல;
புரசைப்பாக்கம்.

பெரம்பூர் அல்ல;
பிரம்பூர்.

சேத்துப்பட்டு அல்ல;
சேற்றுப்பேடு.

அரும்பாக்கம் அல்ல;
அருகன்பாக்கம்.

சிந்தாதரிப்பேட்டை அல்ல;
சின்னத்தறிப்பேட்டை.

உடுமலைபேட்டை அல்ல;
ஊடுமலைப்பேட்டை.

பல்லாவரம் அல்ல;
பல்லவபுரம்.

தாராசுரம் அல்ல;
ராராசுரம்.

ஈரோடு அல்ல;
ஈரோடை.

ஒகனேக்கல் அல்ல;
புகைக்கல்.

தர்மபுரி அல்ல;
தகடூர்.

பழனி அல்ல;
பொதினி.

கும்பகோணம் அல்ல;
குடந்தை.

தரங்கம்பாடி அல்ல;
அலைகள்பாடி.

காவிரிபூம்பட்டினம் அல்ல;
காவிரிபுகும்பட்டினம்.

பூம்புகார் அல்ல;
புகும்புகார்.

ஸ்ரீரங்கம் அல்ல;
அரங்கம்.

திருவையாறு அல்ல;
ஐயாறு.

சீர்காழி அல்ல;
சீகாழி.

வேதாரண்யம் அல்ல;
திருமறைக்காடு.

கல்பாக்கம் அல்ல;
கயல்பாக்கம்.

சேலம் அல்ல;
சேரளம்.

திருத்தணி அல்ல;
திருத்தணிகை.

திருவண்ணாமலை அல்ல;
அண்ணாந்துமலை.

கடலூர் அல்ல
கூடலூர்.

படித்ததில் பகிர்ந்தது
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

106 –
என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என்
புன்மொழி கொள அருள் அருணாசலா (அ)
ravi said…
*Meaning*

Your ears that listen to the sweet words of those who melt in love for You, let them listen to my ill words too , *Arunachala*��
ravi said…
*சப்த விடகங்கள்*

*அருணாசலா*

நான் திருவாரூரில் பிறக்க வில்லை ..

*வீதி விடங்கர்* தரிசனம் கண்டதில்லை ...

திருமால் மூச்சுக்காற்றில் உன் *அஜபா* நடனம் காணப்பெற்றேன்
*அருணாசலா*

நகர விடங்கர் காண திரு நள்ளாறு வரவில்லை ...

*உன்மத்த* நடனம் கனவில் காணப்பெற்றேன்

பித்தானேன் உன் மீதே *அருணாசலா*

*சுந்தர விடங்கர்* தரிசனம் கிட்ட ஓடி வர நினைத்தேன் நாகைக்கு...

என் எதிரில் நீ வந்து கடல் அலைகள் எழும் *தரங்க* நடனம் புரியக்கண்டேன் *அருணாசலா*

திருக்காராயில் வந்தே *ஆதி விடங்கர்* உனை பார்க்க விழைந்தேன் ...

கோழிகள் ஆடும் *குக்குட* நடனம் இங்கே காணப்பெற்றேன் *அருணாசலா*

திருக்குவளை ஓடி வர நினைத்தேன் வண்டு மலருக்குள் குடைந்து குடைந்து ஆடுதல் போன்ற உன் *பிருங்க நடனம்* காணப் பெற்றேன்

அங்கே *அவனி விடங்கராய்* காட்சி தந்தாயே *அருணாசலா*

திருவாய்மூர் ஓடி வர நினைத்தேன் *நீல விடங்கர்* தரிசனம் பெறவே *அருணாசலா*

தாமரை மலர் அசைவது போன்றுள்ள *கமல*🪷 நடனம் கண் குளிர காணப் பெற்றேன் இருக்கும் இடத்திலே

வேதாரண்யம் வர வேதம் அழைக்க கண்டேன் *புவனிவிடங்கர்* காண *அருணாசலா*

அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போல்

உன் *ஹம்சபாத* நடனம் இங்கேயே காணப்பெற்றேன் *அருணாசலா*


நான் இருக்கும் இடத்தில் நீ தேடி வந்தே

உளி செதுக்கா உன் மரகத திருமேனி காண்பித்து

அஜபா ,
உன்மத்த,
தரங்க ,
குக்குட,
பிருங்க ,
கமல,
ஹம்சபாத நடனம் புரிந்தாயே *அருணாசலா* ...

என் சொல்வேன் உன் கருணா ரஸ ஸாகரம் தனை..

தன்னியன் ஆனேன் தமிழே!!

உன்னால் இன்று *அருணாசலா* 💐💐💐
ravi said…
*Ramayana quiz*

*Day 1 (22-03-23)*

Q 1. What was sage Valmiki’s previous name?

Q 2. What did Sage Narada ask Vamiki to chant ?

Q 3. How many kandas & shlokas are there in Valmiki Ramayana

Q 4. Valmiki Ramayana’s verses are written in 32 syllable metre. What is it called?

Q 5. The first letter of every thousandth verse of Ramayana will form a powerful manthra which is mentioned in Rig Veda.

Name the Manthra & who composed it?
ravi said…
Ans

Q 1 .. ரத்னாகர்

Q 2... மரா

Q 3... 500 சர்காக்கள் , 7 காண்டங்கள் , 24000 வரிகள்...

Q 4 . *Anustubh* ..

Q 5 Gayatri mantra n composed by Raja rishi Viswamitra
ravi said…
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்
திருமகள்

கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்

அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.🙏🙏🙏
ravi said…
அழகிய பவளம் போன்ற திருமேனியில்

ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து

மணம் பொருந்திய கொன்றை,

திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து

சிவபிரான் உமையம்மையாரோடு

வெள்ளை விடைமீது ஏறிவந்து

என் உளம் புகுந்துள்ள காரணத்தால்

திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும்.

அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.🙏🙏🙏🙏🙏
ravi said…
எல்லா தெய்வங்களும் ஈசனுக்குள் அடக்கம் .. அவன் ஒருவனை வழிபட்டால் அவன் அம்சமாய் திகழும் அனைத்து தெய்வங்களும் நமக்கு நல்லதையே செய்வார்கள் ஏன் என்றால் அவன் நம் உள்ளங்களில் புகுந்து விட்ட ஒரே காரணத்தால் 🪷
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 114*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
இனி பெரியவா தேர்ந்தெடுத்த 3 முத்துக்கள் ஆர்யா சதகத்தில் இருந்து பார்ப்போம் 🙏🙏🙏
ravi said…
ஸ்லோகங்கள் 46 , 47 & 98
ravi said…
*46*
குண்ட³லி குமாரி குடிலே சண்டி³ சராசரஸவித்ரி சாமுண்டே³ ।

கு³ணினி கு³ஹாரிணி கு³ஹ்யே கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி ॥46॥ ---1



कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।

गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥ ४६॥

46. Kundali Kumaari Kutile Chandi Chara chara savithriChamunde,

Guninee Guhaarini guhye Guru murthe thwam namami Kamakshi.

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை