ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53
50.அநவத்யாங்கீ : குற்றமில்லாத அங்ககளைக்கொண்டவள் . நிகரில்லாத உன்னத தேகத்துடன் திகழ்பவள் 51.ஸர்வாபரண பூஷிதா : பல வகையான அணிகலன்களைக் கொண்டவள் . அனைத்து ஆபரண அலங்கார பூஷணங்களும் தரித்திருப்பவள் 52.சிவகாமேச்வராங்கஸ்தா : காமேஸ்வரி - ஆசைகளைபபூர்த்தி செய்பவள் - காமேஸ்வரியாக அம்பாள் எங்கே வீற்றிருக்கிறாள் ? சிவகாமேசுவரனாக உள்ள தனது பர்த்தாவின் திருத்தொடையில் . சிவனின் அர்த்தாங்கினியானவள் - அவனின் பாதியை கொண்டவள். சிவனின் அம்சமாக விளங்குபவளாகிய அன்னை அர்த்தாங்க்கினி அதாவது அங்கத்தின் பாதியைக் கோண்டவள் எனவே "சிவகாமேஷ்வர அங்கஸ்தா" - 'அவனின் அங்கமானவள்' என்று உணரலாம். அங்கம் என்பதை மடி (lap) என்று பொருள் கொண்டால், சிவகாமேஸ்வரனின் மடியில் அமர்ந்து அருளுபவள் என்றும் விளங்கிக்கொள்ளலாம் 53.சிவா – இந்த நாமம் அம்பாளையும் குறிக்கும் .சிவத்துடன் ஐக்கியமானவள், அதனின்று வேறுபாடற்றவள்