பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் கம்பனின் கவித்துவம் (261) 👍👍👍💥💥💥 கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவன் இராவணன் - இலங்கை அரசன். இராமனுக்கு இணையான வலிமையும் வீரமும் பொருந்திய இராவணனின் பெருமையையும் பெண்ணாசையால் அவன் அவற்றை இழந்த சிறுமையையும் ஒரே பாடலில் உணர்த்தி விடுகிறார் கம்பர். வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்ததோளும் நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும் தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்தவாளும் வீரமும் களத்தே போட்டு வெறுங் கையே மீண்டு போனான். (கம்ப. 7272) கம்பரின் காப்பியச் சிறப்பிற்கு ஒரு மிகச்சிறந்த அடிப்படை கம்பரின் பாத்திரப் படைப்பு ஆகும். நூற்றுக்கணக்கான பாத்திரங்கள், வெவ்வேறு பண்பியல்புகள், முரண்பட்ட மனநிலைகள், மானிடர், குரக்கினத்தார், அரக்கர், பறவை எனும் பல்வேறு வகையினர், அவர்களின் இன்ப...
Comments
மண்ணிலே உருவானாய்
மங்களங்கள் தன்னுள் நிறைத்துக்
கொண்டாய்
மாதவம் செய்தாளோ அன்னை உன்னை ஈன்றிடவே !!
அனுதினமும் பூஜை பல செய்தானோ உமை பாகன் உன் உருவம் கண்டு மகிழ்ந்திடவே!!
அஸ்வமேத யாகம் பல புரிந்தானோ மாதவன் உன்னால் பாரதம் எழுதவே!
சண்டி ஹோமம் செய்தாரோ தேவர்கள் வண்டி நிறைய நீ வரம் கொடுத்திடவே !
நாங்கள் என்ன தவம் செய்தோம் நாளும் உனக்கு மலர் பலத்தூவிடவே !
மனதில் இடம் இல்லை என்றே கடல் நோக்கி சென்றாயோ ?
கடல் உள் வாங்கியதால் கரையிலே நின்றாயோ ?
கண்ணீர் பெறுக கடலில் இன்னும் உப்பு சேர்ந்ததோ ?
காத்திருப்போம் மோதகம் பல செய்து வைத்தே !
ஓடட்டும் ஒரு வருடம்
காத்திருப்போம் வழியில் விழி வைத்தே ... !!
விழியின் பாவை என்றே நீ வந்து விட்டால்
கலி என்ன செய்யும் ... ?
காற்று கருப்பு என்ன செய்யும் ...
கதிரவன் போல் ஒளி தருவோம் உலகம் ஒன்று படவே !!
நீ நிர்குணம் என்றனர் ஞானிகள்
சத் குணம் என்றனர் தேவியர்
நீயே அவித்யா என்றனர் துறவியர்
நீ அன்றோ வித்யா என்றனர் பண்டிதர்
நீ யே காளி என்றனர் உத்தமர்
கௌரீ நீ அன்றோ என்றே வியந்தனர் விவரம் தெரிந்தோர்
பாசம் கொண்டவள் என்றோர் பரம புருஷர்கள்
பாசம் கொண்டவள் திரிபுரை என்றே பாடினான் சங்கரன் அன்றே
தாயென்றே அழைத்தனர் வாக் தேவிகள்
சம்ஹாரிணீ என்றே பெயர் தந்தனர் கல்பம் பல கண்டவர்கள்
இருளும் நீ
ஒளியும் நீயே இருப்பவளும் நீயே இல்லாமல் இருப்பவளும் நீயே
ஆணும் நீயே பெண்ணும் நீயே
அகிலமும் நீயே அண்டங்களும் நீயே
அழைத்தால் வருபவள் நீயே வந்தே அழைப்பவள் நீ
மஹா மாயா நீயே விஷ்ணு மாயா நீயே
மாயை அகல வழி சொல்பவளும் நீயே !!
நீ நிர்குணம் என்றனர் ஞானிகள்
சத் குணம் என்றனர் தேவியர்
நீயே அவித்யா என்றனர் துறவியர்
நீ அன்றோ வித்யா என்றனர் பண்டிதர்
நீ யே காளி என்றனர் உத்தமர்
கௌரீ நீ அன்றோ என்றே வியந்தனர் விவரம் தெரிந்தோர்
பாசம் கொண்டவள் என்றோர் பரம புருஷர்கள்
பாசம் கொண்டவள் திரிபுரை என்றே பாடினான் சங்கரன் அன்றே
தாயென்றே அழைத்தனர் வாக் தேவிகள்
சம்ஹாரிணீ என்றே பெயர் தந்தனர் கல்பம் பல கண்டவர்கள்
இருளும் நீ
ஒளியும் நீயே இருப்பவளும் நீயே இல்லாமல் இருப்பவளும் நீயே
ஆணும் நீயே பெண்ணும் நீயே
அகிலமும் நீயே அண்டங்களும் நீயே
அழைத்தால் வருபவள் நீயே வந்தே அழைப்பவள் நீ
மஹா மாயா நீயே விஷ்ணு மாயா நீயே
மாயை அகல வழி சொல்பவளும் நீயே !!
அலை பாயும் நெஞ்சமதில் நீ அமைதி ஓடமாய் வந்தாய்
கரை சேர்த்து விடு தாயே என்றேன் என் கறை படிந்த கரங்கள் கூப்பி
கரை இல்லா கருணை கொண்டவள் நீ
அக்கறை கொண்டு அக்கரையில் சேர்த்தாய்
பத்தரை மாற்று தங்கம் நீயே !!
திரை போட்டு மறைத்தாலும்
நரை வந்து சிரித்தாலும்
புண்கள் புரை தட்டி மகழ்ந்தாலும்
அரை நொடி உனை நினைத்தால் போதுமே
மிகையான வாழ்வு அன்றே பூத்திடுமே
தரை தொடும் வானம் போல் உன் திருவடி தொழுதோம்
பறை தருவாய் பாக்கள் இயற்றும் பண்பு தருவாய்
பாரில் எல்லோரும் நலம் கொண்டு வாழ
வரம் தனை அள்ளித்தருவாய் வற்றாத நீர் சுனையே !!!💐💐💐
யோக நித்திரையில் ஆழ்ந்த திருமால் உன்னால் அன்றோ சக்தி பெற்றார் ...
அதனால் அன்றோ மது கைடப வதம் நடந்தது .. ?
மகிஷனை கொல்ல ஆயுதம் பல தந்தனர் அனைத்து தேவர்களும் ...
உன் புன்னகை எனும் ஓர் ஆயுதம் முன் வீழாதோர் எவர் உண்டு இப்புவி தனில் ..
ஆத்ய சக்தியாய் உருவெடுத்து நிர்குணத்தை சத் குணமாக்கினாய்
அசையாத சக்தியை ஆட வைத்தாய் ...
அசையும் சக்தியில் அரசாட்சி செய்தாய் ..
புரியும் சக்தியில் புவி சுழல வைத்தாய் ...
தெரியும் சக்தியில் சஹஸ்ர ஆதவனை புகுத்தி வைத்தாய்
அம்மா உன் திறன் சொல்ல நாதி இல்லை ...
ஈசன் பாதி மேனி கொண்டவளே ...
வாதம் செய்து உனை வென்றோர் எவரும் இல்லை ...
வேதம் தாள் பணிய பேதை நான் புகழ்வது வீண் தானே ? 😊🙏🙏🙏
சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட வர பலத்தாலும், இயல்பான அரக்கத்தனத்தாலும் இந்திரன் மீது போர் தொடுத்து, தேவருலகத்தையே அடிமைப்படுத்தினர். தேவர்களின் பொறுப்புகளையெல்லாம் தாமே ஏற்று நடைமுறைப்படுத்தவும் முற்பட்டனர். தம் சுகபோகங்களையும், செல்வங்களையும் இழந்த தேவர்கள், தேவியைத் தஞ்சமடைந்தனர். தங்களை அரக்கர் பிடியினின்றும் காத்தருள வேண்டினர்.
“யார் தம்மை அவர்களது ஆபத்து காலத்தில் துதிக்கிறார்களோ, அவர்களின் துயர் அனைத்தையும் அக்கணமே போக்குவேன்” என தேவி அவர்களுக்கு ஏற்கெனவே வரமளித்திருந்தாள். அதனால் தேவர்கள் மலையரசாகிய இமயத்தை அடைந்து விஷ்ணுமாயாவான பராசக்தியை துதித்தார்கள்.
இத்துதி தேவி மஹாத்மியத்தில் இடம் பெற்றுள்ளது. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் இத்துதியை பாராயணம் செய்பவர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்கிறது தேவி மகாத்மியம்!
🟥
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (01)
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (02)
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன மற்றும் மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச் சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக அமைகிறாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யாதேவி ஸர்வ பூதேஷு புத்தி ரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (03)
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (04)
இங்கே தூங்குவதற்குக் கூட தேவியைத் தொழவேண்டுமா என்று கேட்கலாம். அந்த நித்திரை கூட அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் வந்துவிடுகிறதா என்ன? எத்தனையோ பேர் பலவிதமான உபாதைகளால், தூக்கம் வராமல் தவிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படி நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக விளங்கும் தேவியை தினமும் இரவில் நினைத்து நம் கவலைகளை அவளின் பாதத்தில் சமர்ப்பித்தால் அவள் தூக்கத்தின் வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். எந்த தேவியானவள் அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில் உறைகின்றாளோ, அதன் மூலம் உடல் அயர்ச்சியைப் போக்கிப் புத்துணர்வு தருகின்றாளோ, அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (05)
மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும் மற்றும் ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும் போதுமா? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருத்தல் வேண்டும் அல்லவா? என்னதான் அறுசுவை உணவை நம் கண்முன் வைத்திருந்தாலும் நமக்கு பசி இல்லை என்றால் சாப்பிடமுடியாது. இந்த உலகத்தில் எதையும் போதும் என்று நாம் சொல்லமாட்டோம். ஆனால் சாப்பாடு மட்டும் வயிறு நிறைந்துவிட்டால் போதும், இனிமேல் சாப்பிட முடியாது என்று கூறுவோம். அப்படி நாம் உயிர்வாழ நமக்கு அத்தியாவசியமான அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி உணர்வு நமக்கு தேவை. எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (06)
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில் பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்ததேவிக்கு நமஸ்காரம். வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (07)
எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப்படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப்படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப்படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவி ஸர்வ பூதேஷு த்ருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (08)
எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை அல்லது வேட்கை வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம். த்ருஷ்ணா என்றால் பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள் பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும் பேராசையைத்தான். ஆகவே தேவியை அடைய நினைக்கும் பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளே என்று வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (09)
அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும் தேவிக்கு
நமஸ்காரம். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும். தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (10)
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம். இதை லலிதா ஸஹஸ்ரநாமம் வர்ணாஸ்ரம விதாயினி என்று கூறுகிறது. அவளே வர்ணங்களை வகுப்பவள்.
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (11)
லஜ்ஜா என்றால் வெட்கம், நாணம் என்று அர்த்தங்கள் வருகின்றன. என்றாலும் இந்த இடத்தில் இதற்கு அடக்கம், பணிவு என்பது பொருந்தும். நாம் செய்யும் தவறுகளுக்கு வெட்கப்படுவதோடு அல்லாமல், நாம்தான் அனைத்தும் செய்தோம், நம்மால் தான் எல்லாம் என்ற நினைப்பும் வரக் கூடாது. அடக்கமாய், பணிவாய், விநயமாய் இருக்கவேண்டும். அத்தகைய கல்விதான் தேவை, இல்லையா? கல்வியால் பெறக்கூடிய இந்த லஜ்ஜை என்னும் உணர்வாய் எந்த தேவி அனைவரிடத்திலும் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவீ ஸர்வ பூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (12)
எந்த தேவியானவள் நம் அனைவரிடத்திலும் சாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம். இங்கே சாந்தி என்பது மௌனம், பொறுமை, பகை தீர்ந்து அமைதி அடைதல் என்ற அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர் நம்மிடம் கோபமாய் இருந்தாலோ மன வேறுபாடுகள் இருந்தாலோ அமைதியா இரு என்று சொல்கின்றோம் அல்லவா? அந்த அமைதிதான் இங்கே. மௌனமும் ஒரு மொழியே.
மௌனமாய் இருந்தால் அதைவிடச் சிறந்ததொரு பேச்சு வேறு கிடையாது. அனைத்தையும் உணர்த்தும் மௌனம். மௌனம் கடைப்பிடிக்கப்பட்டால் அங்கே சாந்தி தானாகவே வந்து சேரும். தேவையான சமயங்களில் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய மௌனம், அமைதி என்ற உருவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (13)
சிரத்தை என்பது ஒருமித்த மனத்துடனும் தீவிரமான எண்ணத்துடனும் ஒன்றை அடைய நாம் அக்கறையுடன் எடுத்துக்கொள்ளும் முயற்சியே. எந்த தேவியானவள் நம்மிடம் சிரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவீ ஸர்வ பூதேஷு காந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (14)
காந்தி என்றால் ஒளி, வெளிச்சம் என்றும் பொருள். தனிப்பட்ட முறையில் அலங்கரித்துக் கொள்வதையும் குறிக்கும். அந்த அலங்கரிப்பினால் ஏற்படும் தனிப்பட்ட கவரும் தன்மையையும் குறிக்கும். ஆனால், இங்கே ஒளி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி இல்லையேல் உலகில்லை அல்லவா? பகலில் சூரிய ஒளி தேவைப்படுகின்றது. இரவில் மாற்றாக சந்திரன் ஒளி குளுமையாகக் கிடைக்கின்றது.
வெறும் இருட்டு மட்டுமே இருந்தால் என்ன தெரியும்? எதுவும் தெரியாது, புரியாது. நம் அனைவருக்கும் இவ்வாறு ஒளியின் அவசியம் தேவைப்படுகின்றது. அதை உணருவது நம் கண்களே அல்லவா? நம் அனைவருக்கும் அந்தக் கண்களுக்கு ஒளியைத் தரும் தேவியாக உறைபவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (15)
உயிர் வாழ அனைவருக்கும் உணவு தேவை, அந்த உணவை எல்லாராலுமா உற்பத்தி செய்ய முடியும்? யாரோ உற்பத்தி செய்கின்றார்கள். நாம் விலை கொடுத்து வாங்குகின்றோம். அதற்குப் பணம் தேவை அல்லவா? பணம் இல்லை எனில் எதையும் வாங்க முடியாது. தேவைக்குத் தக்க பணம் இல்லாமால் ஒருவராலும் இருக்க முடியாது. நாம் ஆசைப்பட்டு சேர்த்து வைக்கும் பணம் இல்லை இது. தேவைக்கான பணமே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி தேவி தான். அந்த லக்ஷ்மி தேவி வடிவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
யா தேவீ ஸர்வ பூதேஷூ வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: (16)
பொதுவாய் சொத்துக் குவிப்பையும், மேன்மேலும் வட்டி வாங்கிச் சேர்ப்பதையுமே குறித்தாலும், வளர்ச்சியைக் குறிக்கும் இந்த வ்ருத்தி என்னும் சொல்லானது இங்கேயும் நல் வளர்ச்சியை மட்டுமே குறிக்கின்றது. செழிப்பாக இருக்கும் மனிதன், குடும்பத்தையும், குடும்பம் சமூகத்தையும், சமூகம் நகரத்தையும் நகரம், மாவட்டங்களையும், மாவட்டங்கள் மாநிலங்களையும், மாநிலங்கள் நாட்டையும் எவ்வாறு செழிப்பாக்குகின்றதோ, அந்தத் தனி மனிதனின் செழிப்பு, வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் தேவை. அதைக் கொடுப்பவள் தேவியே. இங்கே வ்ருத்தி வடிவில் உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
யா தேவீ ஸர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (17)
ஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல், நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை அல்லவா? தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே! ஆகவே நல்ல சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவற்றையே நினைக்கும் மனதைக் கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில், ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
நம்ஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (18)
தயை, கருணை, இரக்கம், பரிவு அனைத்துமே இங்கே பொருந்தும். சகல ஜீவ ராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும். எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா? தயை உருவில் அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவீ ஸர்வ பூதேஷு துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (19)
துஷ்டி, திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே சந்தோஷம் வரும் அல்லவா? இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. ‘கறந்த பாலைத் திரும்பக் கொடு’ என்று பசு கேட்டால் என்ன செய்ய முடியும்? பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடி, மரமாவது கேட்கின்றதா?
இல்லையே! நமக்கு எந்த மறுப்பும் காட்டாமல் நம் தேவைக்கு உதவும் இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும் பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா? வரவில்லையே! இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (20)
அம்மா என்றால் அன்பு, பொறுமை, பாசம், இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது! எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியவில்லையே! பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி, உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும். பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும்,
மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பொதுவாக பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவிதான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோ?அந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (21)
ப்ராந்தி என்றால் சுற்றுதல், ஸ்திரமற்ற தன்மை என்று பொருள்படும். மாயை, என்றும் அர்த்தம் கொள்ளலாம். பூமியின் சுழற்சியை எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே? என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா? அந்த மாயையைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:
அனைத்து உயிர்களிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்யஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி என்று அந்த உணர்வாய் உறைபவளே, நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்ற அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
அனைவருக்கும் என்றும் மங்களமே உண்டாக அந்த சர்வேஸ்வரியைப் பிரார்த்திப்போம்.
🙏 வளர்ச்சியையும், வெற்றியையும் அளிக்கும் தேவிக்கு நமஸ்காரம் 🙏
🟨🟨🟨♦️🟥🟥🟥
எல்லாம் அவன் சித்தம்
சர்வம் சிவமயம்
🟨🟨🟨♦️🟥🟥
அலை பாயும் நெஞ்சமதில் நீ அமைதி ஓடமாய் வந்தாய்
கரை சேர்த்து விடு தாயே என்றேன் என் கறை படிந்த கரங்கள் கூப்பி
கரை இல்லா கருணை கொண்டவள் நீ
அக்கறை கொண்டு அக்கரையில் சேர்த்தாய்
பத்தரை மாற்று தங்கம் நீயே !!
திரை போட்டு மறைத்தாலும்
நரை வந்து சிரித்தாலும்
புண்கள் புரை தட்டி மகழ்ந்தாலும்
அரை நொடி உனை நினைத்தால் போதுமே
மிகையான வாழ்வு அன்றே பூத்திடுமே
தரை தொடும் வானம் போல் உன் திருவடி தொழுதோம்
பறை தருவாய் பாக்கள் இயற்றும் பண்பு தருவாய்
பாரில் எல்லோரும் நலம் கொண்டு வாழ
வரம் தனை அள்ளித்தருவாய் வற்றாத நீர் சுனையே !!!💐💐💐
அம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆசார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்த போது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இருக்கிறது. ‘த்ருசா த்ராகீயஸ் யாதரதளித நீலோத்பல ருசா’என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசார்யாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக் கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக் கிட்ட வேண்டும் என்று மட்டுமில்லை, ‘தமக்கும்கூட கிட்டவேண்டும்’ என்கிறார் – பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசார்யாள்.
.
‘தகுதியைப் பார்க்காமல் கடாக்ஷிப்பாய்’ என்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறார். பூரண சந்திர ஒளிபிரகாசிக்கிறது. அது வித்தியாசம் பாராட்டாமல் எல்லா இடங்களிலும் ஒரே போல் அமிருதமான நிலாவைக் கொட்டுகிறது – சக்கரவர்தியின் மாட மாளிகை நிலா முற்றத்தில் சந்திரிகையைப் பொழிகிறது. அதே போல் ஒரே முள்ளுப்புதர் மண்டிய காட்டிலும் நிலவைப் பொழிகிறது. உப்பரிகையில் விழுந்ததால் அரண்மனையின் சௌகரியங்கள் நிலாவைச் சேரவில்லை. காட்டில் விழுந்ததால் அதற்கு முள் குத்தவும் இல்லை. இப்படித்தான் அம்பாளின் கடாக்ஷம் எங்கு விழுந்தாலும் அதற்குக் கூடுதல் குறைவு இவை இல்லை. என் மேல் அது விழுந்தால் ஒன்றும் குறைந்துவிடாது. நானோ அதன் ஸ்பரிசத்தால் நிறைந்தவனாகிவிடுவேன். உனக்கு ஒரு நஷ்டமும் இல்லாமலே எனக்குப் பரம லாபம் கிடைக்கிறது. அதனால் என்னையும் உன் கடாக்ஷத்தில் முழுக்கடிப்பாய் அம்மா என்கிறார்.
என்னையும் என்று ‘உம்’ போட்டுச் சொன்னது நம்மையெல்லாம் உத்தேசித்துச் சொன்னதுதான். அம்பாளும் ஈஸ்வரனும் ஆசாரியாளும் ஒன்றேதான். அப்படிப்பட்ட ஆசார்யாள் பரம கருணையினால் நம்மோடு சேர்ந்து நின்று கொண்டு நமக்காக இந்த சுலோகத்தை அநுக்கிரகித்திருக்கிறார். மனமாரப் பிரார்த்தித்து விட்டால், எத்தனை யோக்கியதை இல்லாதவர்களையும் அம்பாள் கடாக்ஷிக்கிறாள்; நிலாப்போலவும் நீலோத்பலம் போலவும் குளிர்ந்தது அவளது கடாக்ஷம். அது எவரையும் கைதூக்கிவிடும் என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறார்
பொட்டிக்குள் பாம்பாகி உன் ஆணை கேட்க
ஓர் பொருட்டாகுமோ கோள்களெல்லாம்?
நோவாது சலியாது நோயொன்றும் தீண்டாது
நீர் தந்த தேகம் கொண்டு
நூறாண்டு காலம் உன் புகழ்பாடிப் பாடியே
நின் பாதம் நாங்கள் சேர வேண்டும்.
சங்கரா!! சிவ சங்கரா!!! சங்கடஹரா!!!
சுப சுப்ரபாதம் 🌹🌹🌹
சுப தினம் 💐💐💐
ஹரி ஓம் 🙏🙏🙏🙏🙏
கண்ணின் இமை போல் காக்கின்றாய்
அதற்கே கருணை என்றே பெயர் கொண்டாய் !
அண்டமெல்லாம் சுழல நீ அருள் செய்கின்றாய்
அகிலேஸ்வரீ என்றே பெயர் கொண்டாய் !
கவசம் போல் என்னை காக்கின்றாய் !
தாய்மையின் உச்சம் தொடுகிறாய்!
தலை கனம் கொண்டோர்க்கு மடி கனம் சுமக்க வைக்கிறாய் .. !
மனதில் உனை வைப்போர்க்கு மறுவாழ்வு இன்றி மன்னிக்கிறாய் !
மண்ணில் பிறந்தோர்
சென்னியில் வைத்து உனை தொழுதால்
எண்ணிய எண்ணமெல்லாம் ஈடு ஏறும் அன்றோ !💐💐💐
ஸ்லோகம் 18
நித்யம் யஸ்தவ மாத்ருகாக்ஷர ஸகீம் ஸெளபாக்ய-வித்யாம் ஜபேத்
ஸம்பூஜ்யாகில-சக்ர.ராஜநிலயாம் ஸாயந்தனாக்னிப்ரபாம் |
காமாக்யம் சிவநாம-தத்வமுபயம் வ்யாப்யாதிமனா ஸர்வதோ
தீவ்யந்தீ-மிஹ தஸ்ய ஸித்தி.ரசிராத் ஸ்யாத் த்வத்ஸ்வரூபைகதா !!
எவன் உலக
வடிவமான ஸ்ரீசக்ர ராஜத்தில் நிலைபெற்று விளங்குபவளும் ஸாயங்காலத்தில் பிரகாசிக்கும் அக்கினியைப் போன்ற நிறமுடையவளும், காமன் எனப் பெயர்பெற்ற ஈசுவரனையும் ,
சிவம் எனப் பெயர் பெற்ற தத்துவத்தையும் , இரண்டையும் தன் ஸ்வரூபத்தால் முழுதும்
வியாபித்து பிரகாசிப்பவளும் ஆகிய உன்னை நன்கு பூஜித்து எப்பொழுதும்
மாத்ருகா அக்ஷர மாலையின் ஸஹாயத்துடன் உன்னுடைய ஸெளபாக்ய வித்தையை ஜபம் செய்கின்றானோ ? அவனுக்கு இங்கு விரைவில் உன் ஸ்வரூபத்துடன் ஒன்றுபட்ட ஸித்தியானது ஏற்படும்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ஸ்லோகம் -17
ப்ரஹ்மா-யோனி-ரமா-ஸுரேச்வர-ஸுஹ்ருல்லேகாயி. ருக்தைஸ்ததா
மார்த்தாண்டேத்து - மனோஜ - ஹம்ஸ - வஸுதா-மாயாபி-ருத்தம்ஸிதை!
ஸோமாம்பு-க்ஷிதி-சக்திபி: ப்ரகடிதைர்-பாணாங்க-வேதை: க்ரமாத்
வர்ணை: ஸ்ரீசிவதேசிகேன விதிதாம் வித்யாம்
தவாம்பாச்ரயே
தாயே!
க ","ஏ ""ஈ", "ல" ஹ்ரீம் என்ற இவற்றால் கூறப்பட்டதும்; அவ்வாறே "ஹ", " ஸ", "க", "ஹ" ,ல" ஹ்ரீம் என்ற இவற்றால் சிறப்பாய்க் கூறப்பட்டதும், "ஸ", "௧", "ல ஹ்ரீம் என்றவற்றால் வெளியிடப்பட்டதும், ஐந்து, ஆறு, நான்கு என்ற வரிசையில் எழுத்துக்களுடன் கூடியதும் உலக குருவான ஸ்ரீபரமசிவனால்
அறியப்பட்டதுமான உன்னுடைய வித்யை யை நான் சரணடைகிறேன்.
ஸ்ரீவித்யா பஞ்சதசாக்ஷரி இந்த ஸ்லோகத்தில் உத்தாரம் செய்யப்படுகிறது.
இந்த பஞ்சதசாக்ஷரி மந்திரத்தை ஸெளந்தர்யலஹரி 32 வது ஸ்லோகமும்
"சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார-ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் !
என்று விளக்குவதை காணலாம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ஸ்லோகம் -16 :-
இத்தம் த்ரீண்யபி மூல - வாக்பவ -மஹா ஸ்ரீகாமராஐ ஸ்ப்புரச்
சக்தீயாக்கீயானி சது; ச்ருதிப்ரகடிதான் வுத்க்ருஷ்ட கூடானி தே !
பூத - ருது-ச்ருதி-ஸங்க்ய - வர்ண - விதிதான்-யாரக்த-காந்தே சிவே
வோ ஜானாதி ஸ ஏவ ஸர்வஜகதாம் ஸ்ருஷ்டி- ஸ்த்திதி-த்வம்ஸக்ருத் ॥
சிவே! அருணவடிவ விமர்ச
ரூபிணியே! இதுவரை கூறப்பட்ட மூன்று பீஜங்களும் மூலமந்திரமான வாக்பவம், மஹா
காமராஜம், நன்கு விளங்கும் சக்தி எனப்பட்டதாய், நான்கு வேதங்களிலும் வெளியிடப்பட்டதாய் உள்ள உன்னுடைய உத்தமமான
மூன்று கூட வடிவான ஸ்ரீவித்தையாய் ஐந்து
ஆறு நான்கு என்ற எண்ணிக்கையுள்ள அக்ஷரங்களுடன் கூடியவையாய் அறியப்படுவன. எவன் இதை அறிகிறானோ அவனே உலகிற்கெல்லாம் சிருஷ்டிஸ்திதிஸம்ஹாரத்தைச் செய்யும் ஈஸ்வரனைப் போன்றவனாவான்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ஸ்லோகம் -15
ஏகைகம் தவ மாத்ருகே பரதரம் ஸம்யோகி வா$யோகி வா
வித்யாதி.ப்ரகட-ப்ரபாவ-ஜனகம் ஜாட்யாந்த்த காராபஹம்!
யந்நிஷ்ட்டாச்ச மஹோத்பலாஸன - மஹாவிஷ்ணு - பரஹர்த்ராதயோ
தேவா; ஸ்வேஷு விதிஷ்வனந்த மஹிம-ஸ்ப்பூர்த்திம் ததத்யேவ தத் |
மாத்ருகாஸ்வரூபிணியான தாயே!
உன்னுடைய சிறந்த மந்திரம் ஒவ்வொன்றுமே மெய்யெழுத்துக்களுடன் கூடிய மூன்று அக்ஷர பாலா மந்திரமானாலும், மெய்யெழுத்துக்கள் சேராத ஸங்கேதஸாரவித்தை என்னும் மூன்று
பீஜங்களானாலும், வித்தை முதலிய
வெளிப்படையான மகிமையை உற்பத்தி செய்யக்கூடியதாயும், அஞ்ஞான மாகிய ஆழ்ந்த இருளைப் போக்கக் கூடியதாயும் உள்ளது. எதில் நிஷ்டை கூடியவார்களான சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மா ,மகாவிஷ்ணு, ஸம்ஹார மூர்த்தியான ருத்ரன் முதலிய தேவர்கள் உண்டோ
அவர்களுக்கு , தங்கள் தங்களுக்குரிய செயல்களில் அளவுகடந்த பேராற்றலையும்
அதுவே நிச்சயமாய்க் கொடுத்து அருள்கிறது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
மடியாத வானம் தனில் மடி விரித்து நகரும் மேகங்கள் ☁️☁️☁️
திருமுடி சுமந்து செல்லும் மேகம் நடுவில் த்ருப்தியாய் உணவு அருந்தும் வெண்ணிலா 🌝
திசை எங்கும் இடி வந்து மத்தள மேளம் வாசிக்க
மின்னல் வெட்டி வெட்டி களை எடுத்ததே ⚡⚡⚡
நட்சத்திரக்கூட்டம் திருவிழா என வந்திருக்க ✨✨
ஆதவனும் தன் பங்கில் கதிர்கள் வைத்து கோலமிட 🌞
எண்ணி வியந்தேன்
இத்தனையும் உன் புன்சிரிப்புக்கு ஈடாகுமோ ??
ஏழ் கடலும் உன் கருணையின் ஆழம் கண்டே சமம் என சொல்லுமோ ?
அவசரம் இன்றி பார்க்கும் பார்வை
அதில் பரவசம் ஒன்றே குடியிருக்க
இதுவே நிதர்சனம் என்று உள்ளம் சொல்ல
உன் கரிசனம் கண்டு
அந்த தரிசனத்தில் எனையே நான் தொலைத்து விட்டேன் 👍👍👍
தேனி போல் இயங்கிடும் தேகம் வேண்டும்.
எந்த ஓர் நிலையிலும் எதற்கும் கலங்காத இதயம் நீர் அருள வேண்டும்.
அப்பனாய் அன்னையாய் உன்னையே எண்ணினோம் ஆதரவு காட்ட வேண்டும்.
இன்பமயமான வாழ்வு தந்து
அடியார்கள் எங்களுக்கு அருள் செய்ய வா.
அகம் ஆளும் அபயவரதா எங்கள் சங்கரா...
ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
சுப சுப்ரபாதம் 🌹🌹🌹
சுப தினம் 💐💐💐
ஹரி ஓம் 🙏🙏🙏🙏🙏
அனைத்தும் நீ என்றேன் என் நண்பனிடம் ... சிரித்தான் அவன்
அனைத்தும் அவளே என்றால் நீயும் நானும் யாரோ என்றான் !
அவள் செய்யும் விளையாட்டு பொம்மைகள் என்றேன் !
மீண்டும் சிரித்தான் ...
விளையாட்டு பொம்மை என்றால் வாங்கிய பரிசுகள் பட்டங்கள் என் முயற்சி அன்றோ ... ?
முயற்சி உனதே எனினும் முடிவு அவள் கையில் என்றேன் ... !
ஒட்டப்பந்தயத்தில் முதலில் வருபவன் ஒருவனே ...
உலக கோப்பை வெல்பவன் ஒருவனே ...
புத்தி பேதலித்து பேசுகிறாய் ...
என் வெற்றிக்கு நானே காரணம்
உன் அவள் அல்ல என்றான் ...
ஓடியது நாட்கள் ...
ஓர் நாள் வந்தது ஓர் வெடி குண்டு ...
தொண்டையில் புற்று நோயாம்
நாட்கள் எண்ண படுகின்றன என்றான் ...
விக்கித்துப்
போனேன்...
அன்னையின் திருவடியில் முட்டி முட்டி உறங்கி போனேன் ....
மருத்துவர் ஒரு பெண்
கண்டதில்லை யாரும் இதுவரை ...
கழுத்தில் கத்தி வைக்க வில்லை ...
தன் சக்தி தந்தாள் ...
பேசும் திறன் இல்லா என் நண்பன்
என் கரங்களில் முகம் வைத்து அழுதான்
வந்தவள் மருத்துவர் அல்ல கண்டேன் ஓர் ஜோதி பிழம்பை ...
அவள் நீ வணங்கும் அவளே என்றான் ...
திருத்திக்
கொண்டான் வேக வேகமாய்
நாம் தொழும் அவளே என்றான் .... 🙏🙏🙏
23rd September
*Words of Scriptures, Saints and Soul-searching*
Once Uddhava requested Shrikrishna, ‘You Yourself tell us how shall we attain You’. Shrikrishna told him, ‘You will be able to attain me by devotion alone’. There are three-fold means of devotion; words of the scriptures, words of the saints (or seniors), and inward search by oneself.
Everything has become topsy-turvy these days. We have become so ‘learned’ that we are ashamed of putting faith in scriptures. Similarly, when the son is even a little more educated than his father, he thinks, “Why should I obey this ignorant father? What shall I gain by that? “The same is with our search. What is our research? Where did Pandavas reside? Where was Rama born? Where did the Mahabharata war take place? Now tell me, what shall we gain by this research? A professor once told me, ‘I have researched a lot into Shrikrishna’s life and now I am sure of the places of His birth and death.’ What they are doing may be all right, but saints did not feel the need of being certain of Shrikrishna’s birthplace. They made Shrikrishna their own by intense devotion to Him. Really speaking, with the earnest devotion Shrikrishna must be born in our heart itself; that is His real birthplace.
If we examine our behaviour and the thoughts in our mind, we shall be sure that people will not like even to look at us, if they are aware of our mind; in spite of this we are proud of our thoughts and research! Shall we attain love for God with this kind of knowledge? There is no need for someone else to tell us about our spiritual progress. We know about it fully well. Deep-rooted pride, no control over thoughts, laziness in spiritual discipline; with all this, how shall we attain God’s love? Saints have prescribed only one remedy for this, and that is total surrender to God. With an earnest supplication, say to Shri Rama, ‘Rama, I am now Yours; whatever happens henceforth, I shall regard it as Your will. I shall try my utmost to chant Your name; kindly accept me as Yours. ’How compassionate God really is! Swallowing hundreds of offences, and wrong actions of people, He is ever ready to help those who surrender to Him. So, concentrate on nama and forget your existence as a ‘body’.
* * * * * * * *
22nd September
*Devotion is only Intense Love for God*
In a big machine, when one wheel turns, all other wheels start their motions, slow or fast according to their assigned functions. Our mind also works similarly. When one faculty of the mind starts functioning, all other faculties also begin to function. It is very difficult to control the mind; that is possible only for a great man. Mercury is visible if kept before you, but you cannot strike it with a stick. Similarly, you can feel the existence of the mind but can’t control it. Therefore, you should surrender to God. You have to clean the mirror when it becomes dirty. Cleaning of the mind requires some discipline. Very tasty condiments are prepared by properly mixing correct quantities of chilies, salt, pepper etc. For the attainment of God, three items are required, namely, good behaviour, purity of mind and chanting of nama. Good behaviour implies honesty, righteous actions, and moral behaviour; purity of mind implies non-existence of pride, envy or hatred and praying God for every one’s happiness; chanting of nama implies not forgetting God even for a moment. A wife need not forsake nama though her husband may dislike God; it does not amount to disloyalty to him.
Stray thoughts arising in the mind obstruct love for nama; the remedy is not to pay attention to them. One police officer was very efficient in apprehending thieves. He used to find out the woman whose house the thief frequented and saw to it that the woman betrayed the thief. Similarly, find out where our mind gets attached, and place God there; with this you can certainly control your mind. There are two ways to regulate mind; Patanjali Yoga and Bhakti Yoga. The former consists of regulation of diet and physical activity and control of sense organs. Bhakti implies intense love for God. The means for creating such love consists of chanting of nama, propagating His praise and stories, association with saints and the most important, the grace of a sadguru. Actions in forgetfulness of God are bad actions. Make it a habit to utter nama whenever you eat or drink anything. Do not deviate from remembrance of God under any circumstances. Whoever conducts his family life in the remembrance of God, will have his pride destroyed, and he will be blessed with contentment and happiness.
* * * * * * * * *
ஸ்லோகம்-19
காவ்யைர்வா படிதை:கிமல்பவிதுஷாம் ஜோகுஷ்ய-மாணை: புன:
கிம் தைர்-வ்யாகரணைர்- விபோபுதிஷயா கிம் வாபிதாரனச்ரியா
ஏதைரம்ப நபோபவீதி ஸுகவிஸ்-தாவத்தவ ஸ்ரீமதோர்
யாவந்நானுஸரீஸரீதி ஸரணிம் பாதாப்ஜயோ: பாவனீம் ॥
தாயே! படிக்கப்பட்ட காவியங்களால் தான் என்ன பயன்?
அல்ப ஞானம் படைத்தவர்களுக்கு மேலும்
கோஷம் செய்யப்பட்ட அந்த வியாகரணங்களால் தான் என்ன பயன்? பேச்சுவன்மையுடன் வாதம்
செய்வதால் தான் என்ன பயன்?
எதுவரை உன்னுடைய எல்லாச் சிறப்புக்களும்
பொருந்திய திருவடித்தாமரைகளின் பரிசுத்தமான மார்க்கத்தை பின்பற்றவில்லையோ அதுவரை
உண்மையான கவித்திறன் உடையவனாக ஒருவன் ஆகிவிடுவதில்லை.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
24th September
*Mutual Behaviour in the Family*
In this human life, one should do appropriate duty towards others. There should be perfect harmony in the house. The young should not find faults with elders. Children should follow the righteous behaviour of the father, this enhances the reputation of the family. The elder members, on retirement, should regard themselves as the servants of God. A wife should have no other deity than the husband. All should stick to the name of God. He who behaves according to his inherent normal nature in his youth, can easily do so in his old age; his old age will not at all be painful to him. We behave unnaturally, that is, with attachment; in old age our capacity for work gets reduced, but attachment remains unchanged, and that becomes the root cause of trouble. The person who is free from attachment and insistence in his old age, will be liked by others, in spite of his bodily weakness. His hearing may be impaired, his eyesight may get affected, he may not be able to recollect past events, his sleep may diminish; in spite of all this, none may feel like avoiding him, and he himself will not be tired of life. How splendid it will be if our ego melts away in old age! There will be no sorrow if the feeling of doership is absent and the tendency, ‘but I tell you this’ is eliminated.
Everybody in the family should introspect, find out his own defects, and try to eliminate them. The age between sixteen and twenty-five years is a period of growth of intellect. For its proper growth, some regulation is necessary. The best regulation is to obey the parents; because they don’t have any motive except the welfare of the children. How can we hope to learn everything in the world by self-experience? Therefore we should certainly benefit from the experience of our parents. Not that our parents will not err sometimes, for to err is human. But their error will not do permanent damage to us because they have only our well-being at their heart. No one can foretell whose good luck brings a good period to the family; therefore, never feel despaired.
The greater the righteous deed, the greater are the obstacles. Constant remembrance of God is the greatest righteous deed. We should therefore resolutely and with a doubt-free mind chant nama and live in its joy.
* * * * * * * * *
பதினெட்டு கரங்கள் கொண்டு வந்தாய் ...
ஆயிரம் கரங்கள் கொண்டு மகிஷனை கொன்றாய் ....
தீங்கு பல செய்தாலும் தீமைகள் பல புரிந்தாலும்
வேதனைகள் பல தந்தாலும் வீரன் அம்மா என்றே அழுதான் ...
உன் பத்ம பதம் தனில் சிரம் வைத்து சிரஞ்சிவீ ஆனான்
தீமைகள் காலடியில் நசுங்கும் போது
தீவினைகள் பாதங்களில் பஷ்மம் ஆகும் போது
நான் எனும் போதை மறையும் ஆச்சரியம் என்ன ?
நீயே எல்லாம் எனும் நினைவு அங்கு உதிக்கும் ரகசியம் என்ன ?
உன் நினைவு வாழும் போதும் வரவேண்டும்
நான் வளரும் போதும் வரவேண்டும் ....
என்னில் நான் பிரியும் போதும் வரவேண்டும்
உன்னில் கலந்த பின்னும் வரவேண்டும்
அது ஒன்றே வேண்டும் எனும் மனமும் என்றும் வேண்டும் !!💐💐💐
பதினெட்டு கரங்கள் கொண்டு வந்தாய் ...
ஆயிரம் கரங்கள் கொண்டு மகிஷனை கொன்றாய் ....
தீங்கு பல செய்தாலும் தீமைகள் பல புரிந்தாலும்
வேதனைகள் பல தந்தாலும் வீரன் அம்மா என்றே அழுதான் ...
உன் பத்ம பதம் தனில் சிரம் வைத்து சிரஞ்சிவீ ஆனான்
தீமைகள் காலடியில் நசுங்கும் போது
தீவினைகள் பாதங்களில் பஷ்மம் ஆகும் போது
நான் எனும் போதை மறையும் ஆச்சரியம் என்ன ?
நீயே எல்லாம் எனும் நினைவு அங்கு உதிக்கும் ரகசியம் என்ன ?
உன் நினைவு வாழும் போதும் வரவேண்டும்
நான் வளரும் போதும் வரவேண்டும் ....
என்னில் நான் பிரியும் போதும் வரவேண்டும்
உன்னில் கலந்த பின்னும் வரவேண்டும்
அது ஒன்றே வேண்டும் எனும் மனமும் என்றும் வேண்டும் !!💐💐💐
ஓசை இன்றி ஆசைகளை அறுத்து ஏறிபவளே ரீங்காரி
பாசம் வைத்து பாசம் களைப்பவளே சிங்காரீ
பயணத்தின் வழித்துணையாய் பயணிப்பவளே பங்காளி
எண்ணமெல்லாம் ஈடேற எண்ணிய
தெல்லாம் நிஜமாக
அருள்பவளே அங்காரீ
உன் நினைவின்றி வாழ்வது தேனில் இனிப்பு எடுத்து உண்பது போல் அன்றோ சொல்லடி அபிராமி !!
பதினெட்டு கரங்கள் கொண்டு வந்தாய் ...
ஆயிரம் கரங்கள் கொண்டு மகிஷனை கொன்றாய் ....
தீங்கு பல செய்தாலும் தீமைகள் பல புரிந்தாலும்
வேதனைகள் பல தந்தாலும் வீரன் அம்மா என்றே அழுதான் ...
உன் பத்ம பதம் தனில் சிரம் வைத்து சிரஞ்சிவீ ஆனான்
தீமைகள் காலடியில் நசுங்கும் போது
தீவினைகள் பாதங்களில் பஷ்மம் ஆகும் போது
நான் எனும் போதை மறையும் ஆச்சரியம் என்ன ?
நீயே எல்லாம் எனும் நினைவு அங்கு உதிக்கும் ரகசியம் என்ன ?
உன் நினைவு வாழும் போதும் வரவேண்டும்
நான் வளரும் போதும் வரவேண்டும் ....
என்னில் நான் பிரியும் போதும் வரவேண்டும்
உன்னில் கலந்த பின்னும் வரவேண்டும்
அது ஒன்றே வேண்டும் எனும் மனமும் என்றும் வேண்டும் !!💐💐💐
உன் பாத பங்கஜம் அழகாக மலர அங்கே கண்டேன்
தேன் பருகும் வண்டுகள் பல ...
ரீங்காரம் இட்டே நாமகங்கள் சொல்லின
கல்யாணீ , கல்யாண குண ஸாலினீ கல்யாண ஸைல நிலயா கமனீயா கலாவதீ என்றே
உன் கமல நயனங்கள் கொஞ்சம் திறந்து பார்க்கவே
கொஞ்சும் கிளிகள் பழம் என்றே வட்டமிட
கீச் கீச் என்றே உன் நாமங்கள் சொல்லின
கமலாக்ஷி , கருணாம்ருத ஸாகரா, கல்மஷக்னீ, கதம்ப காநானா வாஸா, கதம்ப குஸு மப் ப்ரியா
உன் குமுத கரங்கள் கொடி போல் படர்ந்து வளர
நிற்கும் கொம்புகள் உன் நாமம் அதை சொல்ல
மேகம் ஆனந்த கண்ணீர் சிந்தியதே !
காரயித்ரா , கலி தோஷ ஹரா கஞ்ஜ லோசனா , கர்ம பலப்ரதா
அம்மா உன் பரிவு இருந்தால் உன் நாமங்கள் துணை இருந்தால்
வேறு வரம் என்று ஒன்று உண்டோ
*ஏகானந்த சிதா க்றுதியே !!* ⚡⚡✨✨✨
கற்பூர ஒளி தனில் தாயே உன் சிரிக்கும் முகம் கண்டேன்
கற்கண்டு சுவை தனில் உன் நாமங்கள் ஊருவதைக் கண்டேன்
ஊறும் நாமங்களிலே நாறும் என் வினைகள் கரையக் கண்டேன்
தேரும் அசைந்தாட வேராய் நிலைத்து நின்றாய் .
மேராய் உயர்ந்து நின்ற உன் புகழ் தனில் வேறாய் நான் வியந்து நின்றேன்
சிறகுகள் நீயே என்றால் நான் வானில் பறந்து வட்டமிடுவது ஓர் மலைப்போ மலைமகளே !!
போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே,
சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே,
மஹிஷாசுரனை அழித்தவளே
உனக்கு வெற்றி வெற்றி 👍
மின்னலை போல் மேனி கொண்டவளே !
போரில் இடியைப்போல் கர்ஜனை புரிபவளே !
சூல் கொண்ட மேகம் மழை பிரசவிப்பதைப் போல் கருணை பொழிபவளே
கடல் நீர் உறிஞ்சும் கதிர் போல் அஞ்ஞானம் என்னில்
உறிஞ்சுபவளே
வானத்தின் நீளம் போல் வாழ்வை தருபவளே
கடலின் ஆழம் போல் கடாக்ஷம் பொழிபவளே
தாரகை குவியல் போல் தண்ணளி காட்டுபவளே
உன் பாத பத்மம் ஒன்றே என்றும் கேட்பேன் ...
தருவதற்கு உனக்கு தடை ஏதும் உண்டோ ? 💐💐💐
கீதையில் சொல்லாத அறிவுரைகள்
1.உடம்பில் அழகை பராமரிப்பதை விட எண்ணங்களில் அழகை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள் .
உடம்பின் அழகு நிரந்தரம் அல்ல .
எண்ணங்களின் அழகு அழிவதில்லை
2 பெண்களின் அழகு அவர்களின் மனநிலை ...
ஆண்களின் அழகு பெண்களின் மனநிலையை மதிக்க கற்றுக் கொள்வது 👌
3.போதும் எனும் மனம் நான் எல்லோருக்கும் தருவதில்லை .
கிடைத்தவர்கள் என்னைத் தவிர வேறு நினைப்பதில்லை 👌
4.பக்தி என்பது ஒரு மாந்திரீகம் போட்டு வரவழைப்பது அல்ல ...
இறைவன் விரும்பி ஏற்றுக்கொள்வதே பக்தி 👌
5.பல நாட்கள் கடினமாய் உழைத்து கட்டிய ஒற்றுமை உதிர்ந்து போகிறது ஒரு நொடியில்
ஒரு சில நாட்கள் மட்டுமே உரைக்கும் இறை நாமங்கள் உயிர்க்கு முக்தி கொடுக்கின்றது 👍
எதிரில் நின்று கொண்டிருப்பது பாம்பும் புலியுமாக இருந்தால் யார் தான் பயந்து நடுங்க மாட்டார்கள் .??
நடராஜர் ஆடுவது பயத்தினால்
பாம்பு : பதஞ்சலி
புலி : வியாகரபாதர்
2.உடம்பெல்லாம் நல்ல பாம்புகள் புஸ் புஸ் என்று சீறிக்கொண்டிருக்கிறது
3.ஒரு கையில் சுட்டு விடும் நெருப்பு
4.ஒரு கையில் எதற்கும் அடங்காத மான்
5.காலில் சமமாக இல்லாமல் இருக்கும் முயலகன்
6.நிற்காமல் வடிந்து கொண்டிருக்கும் கங்கை
7.சடையில் கம்பளிப்பூச்சி போல் ஊறும் மூன்றாம் பிறை
8.தானாக சப்தம் எழுப்பும் உலுக்கை
ஒருவர் நிற்பதே கடினம்
இவரோ சிரித்துக்கொண்டு பயத்தை வெளிக்காட்டாமல் நடனம் புரிகிறார் 🙏
உயிர் இருந்தும் இறந்தோர் பலர் வாழாதோராகி மண்ணுக்கு பளு சேர்த்தோர் பலர்
இறந்தோர் பலரில் உயிர் தந்து அழைத்து வந்தோம் இந்த மகாளய பட்சத்தில்
உயிர் இருக்கும் போது அவர்கள் உணர்வுகளை மதிக்க மறந்தோம்
மிதியடி போல் வாழ்ந்தோரை சுவற்றில் படமாய் தொங்க விட்டோம்
காக்கைக்கு எச்சில் கரங்களை காட்டியதில்லை ...
இன்று கரம் கொண்டு குவித்தே கரைகிறோம் வந்து உணவு அருந்த
வேடிக்கை மனிதர்கள் வீண் வம்பு வீரர்கள் ..
வேண்டாத மனிதர்களாய் வீட்டில் இருந்தோர் மறைந்தவுடன்
பண்டிதர் வைத்து பலகாரம் படைக்கும் விந்தை வீணர்கள் ...
வாழும் போது ஓர் வாய் கஞ்சி தந்தே உதவும் கரம் நீட்டி இருந்தால்
ஓத வேண்டுமோ தர்ப்பணம் ஊர் அறிய ... ?
தர்ப்பணம் என்று ஒன்றுமில்லை
தாய் தந்தைக்கு தன்னை அர்ப்பணம் செய்தோர்க்கே !!
அர்ப்பணம் செய்யாதோர் வரிப்பணம் போல் வாடி வதங்கி நலிந்து போவார்
இது வேதம் சொன்ன உண்மை
🌲🌲🌲
*அம்மா* ...
மரத்தில் ஓர் யானை செய்தேன் ..🐘
என் மழலை ஒன்று பயந்து நின்றது ....
அப்பா அப்பா யானை முட்டும் ... 🐘
அருகில் சொல்லாதே என்றே சொல்லி அழுதது. ...
மரத்தில் மறைந்த மாமத யானை🐘 எனைப் பார்த்து சிரித்தது ....
குழந்தை வளர்ந்து பெரியவளானாள்
நான் முதிர்ந்து சிறியவனானேன் ...
மரத்தில் மறைந்த மா மத யானை🐘 தனை மகள் தூக்கி பரண் மேல் வைத்தாள் ..
மரத்தில் மறைந்து போனது நான் வடித்த யானை 🐘
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம்
அப்பா இதற்கு என்ன அர்த்தம்? என்றாள் நான் வளர்த்த மகள் !!
மரமும் யானையும் ஒன்றே என்றே அறிய பல திங்கள் ஓடியது ...
ஞானம் கதவு தட்டியவுடன் மரத்தில் மறைந்து போனது என் யானை .... 🐘
இறை வேறு இவ்வுலகம் வேறு என்றே வாழ்கிறோம் ..
பரம் தெரிவதில்லை பஞ்ச பூதங்கள் மறைப்பதனால் ...
பாரும் பரம் படைத்ததே என்றே ஞானம் வந்தால்
பரம் வேறு பார் வேறு என்றே நினைப்போமா ?
பரண் மீது வைத்த யானையை
எடுத்து
ஆரத்
தழுவிக்
கொண்டாள்
என் மகள் ...
புரிந்து கொண்டேன் அப்பா
பார் வேறு பரம் வேறு அல்ல
எல்லா உயிரிலும் இனி அவனை காண்பேன்! என்றாள் ...
ஞானம் நிறைந்த என் மகளை நானும் ஆழத் தழுவிக்
கொண்டேன்
கண்ணீர் வந்தே இடை வந்து மறித்தாலும்💐💐💐
நீண்ட நாட்களுக்கு பிறகு துப்பாக்கி , வெடி குண்டு , கத்தி , தமிழை மறக்க வைக்கும் முதல் வரிசை பாடல்கள் இவை இல்லாமல் எடுக்கப் பட்ட படம்
60s ,70s தமிழ் படங்களை பார்த்த மகிழ்ச்சி கிடைக்கிறது ...
பேசியே கொல்ல முடியும் என்பது இரண்டாவது பாதி அழுத்தம் திருத்தமாய் சொல்கிறது...
படத்தில் நகைச்சுவை மருந்துக்கும் இல்லை .
நாமே நம்மை கிச்சு கிச்சு செய்து கொண்டு சிரித்தால் யாரும் தடுப்பதில்லை
உறவுகள் , பிணைப்புக்கள் பந்தங்கள் இவைகளின் முக்கியத்துவம் புரிய வைத்திருக்கிறார்கள்...
யாரோ இவன் யாரோ என்றோ கமலும் எங்கிருந்தோ படுகிறார் ...
கேட்கும் படி இருப்பது அதிசயம் ...
குடும்பத்துடன் பார்க்கலாம்
ஆனால் படம் முடியும் வரை உங்களுடன் வந்தவர்கள் தியேட்டருக்குள் இருப்பார்களா என்பது சந்தேகமே !!
ஓடி வரும் தேவி அவள் , தேடி வந்தே குடியிருப்பாள்
நாடி செல்லும் மனம் தனில் ,
பாடி வரும் நாமங்களில் பாவை அவள் தங்கிடுவாள்
ஆடி வரும் மனம் தனை அடக்கி சிரித்திடுவாள் ...
வாடி நிற்கும் உயிர்களுக்கு தாய் என்றே வந்திடுவாள்
தாய் என்றே அழைப்போர்க்கு வாய் நிறைய அமுதம் ஊட்டிடுவாள் ...
சிந்தும் மணிகள் நடுவே அவள் ஓர் சிந்தாமணி ...
கற்பக விருக்ஷங்கள் அவள் பாதம் தனில் படுத்துறங்கும் ...
இல்லை என்பது இல்லை அவளிடம் ...
வரும் நவராத்திரி பாடட்டும்
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளை 👌