ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 42 ( 217-220)

 ஹ்ரீம்‍காரகன்த³ராஸிம்ஹீ ஹ்ரீம்‍காராம்போ⁴ஜப்⁴ருங்கி³கா ।

ஹ்ரீம்‍காரஸுமனோமாத்⁴வீ ஹ்ரீம்‍காரதருமஞ்ஜரீ ॥ 42 ॥

LT 42

217-220

 

217 : ஹ்ரீம்‍காரகன்த³ராஸிம்ஹீ 

ஹ்ரீம் ங்காரமாகிய குகையில் வசிக்கும் அழகிய பெண் சிங்கம் . 

218. ஹ்ரீம்‍காராம்போ⁴ஜப்⁴ருங்கி³கா ।

ஹ்ரீம்ங்காரமாகிய தாமரைப் பூவில் ரமிக்கும் அழகிய பெண் வண்டு  

219. ஹ்ரீம்‍காரஸுமனோமாத்⁴வீ   

ஹ்ரீம்ங்காரமாகிய புஷ்பத்தில் இருக்கும் மதுரமான தேன்  

220. ஹ்ரீம்‍காரதருமஞ்ஜரீ  

ஹ்ரீம்ங்காரமாகிய விருக்ஷத்தில் விளங்கும் பூங்கொத்து  

 

217. Om Hreenkaara kandaraa Simhyai Namaha

Salutations to the Mother, who is like the Lioness in a Guha, (cave) called Hreenkara.The peak of Mountain which has a Cave is called Kandara. Being rocky in nature and because of its enormous height it is very difficult to go there. This is compared to Hreenkara which is proclaimed by the Vedas and upanishads to be the highest of knowledge and very Secretive. Materialistic people can never do this, so an ordinary person can never enter the Cave seeing the Ferocity and roars of the red eyed Lion. But a Mahaveera, an undaunted person can enter the cave fearlessly, and the Lioness in turn gives him the priceless Pearls, which produced from its Claws. 

In the same way, Devi is not accessible to people who are Lazy, Materialistic, and who have no Devotion. She is more accessible to the Devotees like Mahaveeras who are Inward, and who have control over their Mind and Indriyas, she gives them happiness and jnanam. Here she is compared to the Lioness. 

218. Om Hreenkaara Bhoja Bhringikaayai Namaha

Salutations to the Mother, who is like the Female Honey bee and Hreenkara is the Lotus Flower. Lotus is beautiful having white and pink colours with stamens full of Nectar like Honey,Fragrance Taste and Smell. 

That is the reason why the Bee loves to suck the Honey from the Lotus Flower. Hreenkara which gives Ashta Aishwaryas and Purusharthas, has many letters which bestows wisdom, paving way to Moksha, Thats why it is compared to the Lotus Flower. Likewise, Devi loves Hreem Mantra. So, she is compared to Honey bee here.

219. Om Hreenkaara Sumano Maadhvyai Namaha

Salutations to the Mother, who is like the Honey in a Flower called Hreenkara. Flowers are tender Fragrant, when not crushed and beautiful and are meant for pooja. Hreem is compared to the Flower, when Meditated upon with Devotion and Concentration leads us to Devi. So, Hreem is not separated from Devi.

 The Flowers having Honey, yield small and big branches, fruits and flowers, the ones without honey do not yield Fruits. Honey is compared to the Earth element having its sweetness due to the Water element in it. Devi gives Hreenkara all the powers, which in turn fulfills the Desires of the Devotees. Here Devi is compared to Honey.


220. Om Hreenkarathru Manjaryai Namaha

Salutations to the Mother, who is like the Bunch of flowers on top of the tree called Hreekara. Hreem is like a Tree which gives shelter and rest to the passers by. Hreem is a karpaga tree, when people surrender themselves to the Mantra, relieves them of the Fear of Life and Death and the Fear of Samsara (distress and suffering in the world) and showers them with Happiness. The Bunch of Flowers gives rise to small and big Branches, Flowers, and Fruits. Like wise Devi gives all the four Fruits of Purushaarthaas, Dharma, Artha, Kama and Moksha with her grace through Guru Upadesham of the mantra Hreem. To remove the doubts of the Devotees, She Manifests herself and lets them experience herself in them. 

* 217 * Hrimkara kandhara simhi - She who is the lioness living in the cave called “hrim”


* 218 * Hrimkarambhoja bringika - She who is the she-insect playing in the lotus flower called “hrim”


* 219 * Hrimkara sumano maadhvi - She who is the honey in the flower called “hrim”


* 220 * Hrimkara tharu manjari - She who is the flower bunch in the tree called “hrim”

=====================================================================

Comments

ravi said…
*தையல் நாயகி*

உடல் எனும் உடையில் ஓராயிரம் ஓட்டைகள் ....

உள்ளமும் பள்ளம் உணர்வுகள் கள்ளம்

ஆசைகள் ஓடி வரும் வெள்ளம் ...

சுவைப்பதில்லை உன் நாமங்கள் எனும் வெல்லம் ....

தையல் போட்டு சேர்ப்பாயோ என் ஓட்டைகளை

இல்லை கந்தல் அதிகம் என்றே கரை கடர்ந்து செல்வாயோ

ஆதி நீயே என்றால் சாதி உனக்கில்லை என்றால்

பாதியில் கை விடுவது நீதியோ ....

மீதி கடன் எனக்கிருந்தால் வீதி வந்து சொல்லாதே ...

நாதி நீ தான் என்றே நான்மறை மீது சத்தியம் செய்திடுவேன்

உன்னிடம் சேர்ந்திடவே அழகான தையல் ஒன்று நெய்திடுவாய்

உள்ளம் எங்கும் உன் உணர்வை நிறப்பிடுவாய் ... 🌷🌷🌷🪛🪛
ravi said…
O Devi, whose heart is full of mercy, who is worshipped throughout the three worlds
and who is the giver of all fortune and the mother of Creation.
All glories to You,

O
shelter of all living entities. O fulfiller of all desires, You are the wonderful energy of
Lord Achyuta, who is maintaining the three worlds.

You are the Supreme Goddess.

O
protector of the devotees, all glories to You.

O Devi, it is You who fulfills the desires of
the devotees, and it is You who engages them in the service of Lord Achyuta.

You are
eternal and deliverer of all fallen souls.

All glories unto You.

O Devi, for the welfare
and protection of the three worlds, You take on many forms such as Ambika, Brahmi,
Vaishnavi, Maheshwari, Varahi Maha-Lakshmi, Narasimhi, Indri, Kumari, Chandika,
Lakshmi, Savitri, Chandrakala, Rohini and Parameshwari.

All glories unto You, whose
glories are unlimited. Kindly be merciful upon me."
🙏🦅🪷
ravi said…
*முருகன் தை பூச சிறப்பு பதிவு*

சிறப்பான இந்நன்நாளில் உன் சீர்மிகு சரித்திரம் கேட்டிட என்ன தவம் செய்தேன்

குரத்தியை மணந்தாய் குன்றின் மீது அமர்ந்தாய் ...

உன் ஆறு வீடும் ஆதார சக்கரங்களோ ?

கணக்கில் அடங்கா இல்லங்கள் இருந்தும்

என் உள்ளம் உன் வீடு என ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

உள்ளே விளக்கில்லை ... பக்தி இல்லை ஊதுபத்தியும் இல்லை ...

உன் நாமங்கள் சொல்வதும் இல்லை ...

தேவானைக்குத் தெரியுமோ நீ தேர்ந்தெடுத்த வீடு

வள்ளிக்குத் தெரியுமோ வரும் இடம் நல்ல இடமென்று ?

தவறு செய்து விட்டாய் முருகா ...

சூரனும் பதுமனும் வாழும் இடம் இதுவன்றோ ...

சிங்க முகனும் நரி முகனும் நாடும் இல்லம் என் உள்ளம் அன்றோ

பகை இருப்பது தெரிந்தும் சூரசம்ஹாரம் செய்ய வந்தாயோ முருகா ...

சிறிய வீடே எனினும் பெரிய மனம் கொண்டு வந்தாய் ...

இச்சாவும் க்ரியாவும் உள்ள வர

ஞானம் எனும் முருகனே

வேல் கொண்டு மயில் அமர்ந்து என்றும் நிலைத்திட வந்தாயே

என் உள்ளம் எனும் குகை தனில் இன்றே !!🦚🐓
ravi said…
compassion , even you are pleased . O master , how can I behold the pure pair of Your Lotus feet ? For the long line of Devata-s eagerly waiting to bow before You , stands before me , the golden crowns entrusted with dazzling gems obstructing my view of Your feet

18. O Bhagavan Siva You alone grant the ultimate benefit of liberation to all living beings , bestowing them the divine state . Even Vishnu and other Devata-s who have gained their powers through You , continue to worship You . Your compassion is countless and boundless and so too my desires for Your grace . When will You cast Your merciful compassion - filled glance upon me and take me under Your protection. ?

19 .. O Vibho ! This world is filled with base desires .Waiting at the doorsteps of wicked kings only leads one to endless miseries . It is a dwelling of sins and a source of constant sorrows . I am weary and exhausted . Will You not remove my sufferings ? For whom are You showing Your kindness , if not to help ? If the compassion You extend to Your devotees truly reflects Your love , indeed we are fulfilled by this birth .
ravi said…
Shriram

15th February

*”I am Present Wherever _Nama_ is Chanted”*

When I say, “See me in _nama_,” I mean that I treat my body as only the outer cloak but I am really in _nama_, for, really speaking, we are only where the mind is. Suppose you are on a pilgrimage, but your mind is thinking of your home; then you are virtually at home, not in the sacred place. If asked, “Where do you usually reside?” you will have to answer, “In the world of the senses and the material world.” One can say that a person is where his liking lies. If then, you are asked where your _guru_ lives, will you not say, “In _nama_”! Therefore, I am where _nama_ is being chanted; whoever chants _nama_ may rest assured I am right by his side.

The learned, versed as they are in the _Shastras_, claim that the _dnyanamarg_, the path of knowledge, is the way fit for them to attain God. In saying this, they lose sight of the fact that, path of knowledge is not only difficult but also risky, because it is very likely that the _sadhaka_ may be infused with pride, the very thing which must be fully conquered before realization. They may verbally understand the doctrine that _‘Brahman_ is the ultimate, undying Truth, while the creation is transitory’, but they never experience it. In practice, they treat the body as the reality, although they theoretically declare the world unreal.

The orthodox, on their part, declare that they will rigidly adhere to the rites and observances prescribed by the _Vedas_ and _Shastras_. They, too, deny faith in _nama_. They observe rules and limits very scrupulously, as if they were the goal and not the means, whereas the attainment of God is the end in view. Actually, the rules and rites have no more utility than the hedge for a field. They, however, mistake the one for the other, and assiduously water and manure the hedge; that is, they scrupulously carry out the rituals, forgetting all about the real objective, namely, God. It is accepted that _Vedic_ rituals are designed for purifying the heart, but that purification itself is for the attainment of God. If that ritual has not as its basis that objective, what ultimately emerges is sheer bigotry and orthodoxy. Actually, they contradict themselves; for, at the beginning of the _sandhya_ or any ritual, they first utter _Omkar_ that is, _nama_.

```* * * * *```
ravi said…
*வண்டார்குழலி ...*
*திருவாலங்காடு*

*அம்மா*

ஈசன் ஊர்த்தவ நடனம் கண்டு உள்ளம் மகிழ்ந்தாயோ ... ?

ஒன்றாடும் நேரம் உயரும் பாதம் கண்டு வியந்தாயோ ?

உள்ளமெல்லாம் ஈசன் ஆட

அந்த உவகையில் உலகம் ஆட ,

ஊழ்வினைகள் ஊர்த்தவத்தில் கரைந்து போனதே

பிரளயத்தில் எல்லாம் மறைந்து போக

மறையாமல் மறை போற்றும் மன்னவன் மட்டும் நடம் புரிவது எங்கனம் என்றே தலைமுறை கேட்க

உன் தாடகங்களின் மகிமை

உன் திரு
மாங்கல்யத்தின் பெருமை

உன் கருணையின் அருமை

உன் அழகின் பொறுமை

என்றே யார் அறிவார் ... ?

மூங்கில் எடுத்து குழல் செய்தேன் ...

உன் நாமம் அதில் இசைக்க

வண்டுகள் படை எடுத்து வந்ததேன் ?

உன் கரும் குழலில் அமர்ந்த பூக்கள் மகரந்தம் அள்ளித் தெளிக்க

வண்டார் குழலியே அறிந்தேன் ரகசியம் அனைத்தும் மதுரம் என்று ....

கருணையின் கனியே

கலைகளின் நிலையே

காண வேண்டும் நினதுருவே

வருக வருக எனதிதய மலரிருந்து
மங்களமே தருவாயே -

அறியாமை இருள் மனமாயை அற
அருணோதயமே வருவாய்

சிறியேனையும் ஓர் பொருளாய் கருதி என்
ஜீவனை மீட்டிடுவாயே -

கருவுடல் போயினும் கவியுடல் எய்தி நான்
காலமுழுதும் நிலை பெறுவேன் ...

படைக்கும் கவிகளில்

கரு நீயே என்றே சுமந்திடுவேன் உன் நாமங்கள் என் சுகப்பிரசவம் ஆகும் வரை 💐💐💐
ravi said…
வண்டார்குழலியே


வார்த்தைகளின் தேனெனும் வனம் உருவாக்கினாய்!

அம்மா என்றொரு தெய்வீகச் சொல்லில்
அருளின் அள்ளல் பொங்கச் சொன்னாய்.

உன் அழகின் மயக்கம்,
உன் கருணையின் அழகு,
என் மனம் முழுதும் இசைபோல் ஆடுகிறது.
தொலைவில் இருந்தும் உன் நடன நாதம்
என் உள்ளத்தில் ஒலிக்கிறது!

அறிவற்ற இருளில் ஒளியாகி,
என்னை உயிர்ப்பித்து, ஏந்தியாய் அம்மா!


உன் மகிமையில் நான் நீங்கா நிழலாக,
கவியின் கருவாக நீயே நின்றாய்!
ravi said…
*குரு நம்மை எப்படி காப்பாற்றுவார்* ??

துளசி தாசர் மிக அருமையாக அனுமன் சாலீஸாவில் சொல்கிறார் ...

ராமாயணம் நம் வாழ்க்கையுடன் பிண்ணி பிணைக்கப்பட்ட காவியம்
.
இதில் ராமர் பரமாத்மா ,

சீதை ஜீவாத்மா ...

ஜீவாத்மா பரமாத்மாவை சேரத் துடிக்கிறது

ஆனால் ராவணன் எனும் நம் மனது பரமாத்மாவின் பக்கம் போக விரும்புவதில்லை ...

ராவணனுக்கு எப்படி பத்து தலைகள் உள்ளதோ அதுபோல் நமக்கும் பத்து இந்திரியங்கள் உள்ளன ...

இந்த பத்து இந்திரியங்களும் மனதை இறைவன் சிந்தனையில் செல்ல தடுக்கின்றன ...

இந்த ராவணன் எனும் நம் மனம்

இந்த ஜீவாத்மாவை ஸம்சாரம் எனும் கடல் தாண்டி மாயை எனும் இலங்கையில் சிறை வைத்துள்ளது ...

இந்த சரீரம் அசோக வனம் ...

இந்த மரத்தை மூன்று குணங்கள் காவல் காக்கின்றன ...

விபீஷணன் சத்வ குணம் ... சூர்ப்பனகை ரஜோ குணம் கும்பகர்ணன் தமோ குணம் ..

இந்த சிறையில் இருந்து ஜீவாத்மாவை மீட்க வருபவர்தான் குரு ....

அவர் பாடு பட்டு மாயை எனும் இலங்கையை எரித்து இந்த ஜீவாத்மாவை அந்த பரமாத்மா வுடன் சேர்த்து வைக்கிறார் அனுமானைப்போல்

நம் சத்வ குணம் விபீஷணனை ப்போல் பரமாத்மாவை சரணடைகிறது நம் ஆன்மீக முயற்சியாலும் குருவின்
கடாக்ஷ்த்தினாலும் !!!
ravi said…
*அப்பைய தீக்ஷிதர் செய்த அற்புதம்* 👇🏻

அப்பைய தீக்ஷிதர் தீவிர சிவ பக்தர் .
இவருக்கு வேலுரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் சின்ன பொம்மன் நான்கு தடவை கனகாபிஷேகம் செய்துள்ளார்.

இவர் நிறைய சிவ ஸ்துதிகள் பாடி இயற்றியுள்ளார்கள்

ஒரு சமயம் ஶ்ரீ காளஹஸ்திஸ்
வரரை தரிசிக்க சென்றார்கள் .

பிறகு திருமலை (திருப்பதி ) வந்தார் . அன்று சிவபெருமான் நக்ஷத்ரமான ( *பகவத் ராமானுஜர் இதே நக்ஷத்திரத்தில் பிறந்தவர்* ) "திருவாதிரை " நக்ஷத்திரம் என்பதால் திரு மலை பெருமாளுக்கு வில்வ தளங்களை சேகரித்து ஶ்ரீநட ராஜ பெருமான் என்ற மன நிலையிலேயே திருமலை வேங்கடேஸ்வர சுவாமிக்கு சாத்துவதற்கு அங்குள்ள
பட்டாசாரியரிடம் வில்வ தளங்களை கொடுத்து உள்ளார் தீக்ஷிதர்.

பட்டாசாரியார் இந்த மூர்த்தி விஷ்ணு அம்ஸம் துளசி மட்டும் தான் சாத்துவோம் .
வில்வ மாலை தளங்கள் சாத்த மாட்டோம் என்று பல தடவை கூறினார் .

அப்பைய தீக்ஷிதர் இன்று திருவாதிரை ஆகவே பெருமாள் ஆகிய நடராஜ பெருமானுக்கு சாத்துங்கள் என்று திரும்ப ..!!.திரும்ப ..!!வற்புறுத்தவே பட்டாசாரியார்கள் பொறுமை இழந்து கோபமுற்று அப்பைய தீக்ஷிதர் ஒரு பைத்தியம் என்று கருதி அவரை வன் முறை மூலம் மலையில் இருந்து விரட்டி உள்ளார்கள் .

அப்பைய தீக்ஷிதர் "ஏகா அக்ர " சித்தத்தில் வில்வ தளங்களை பெருமாளை ஶ்ரீ
நடராஜ பெருமானாக நினைத்து வெளியே வில்வத்தை கொண்டு மானசீகமாக அர்ச்சித்துள்ளார்.

உள்ளே பெருமாள் சன்னதியில் நித்ய திருக் கல்யானம் முடிந்து சந்நதியை பார்த்த பட்டாசாரி யர்களுக்கு அதிர்ச்சியும் பயமும் தொற்றியது . சுவாமியின் துளசி மாலை கீழே கிடந்தது .

ரத்தம் தோய்ந்த வில்வதளங்கள் திருமலை பெருமாள் திருமார்பில் இருந்தது .

பட்டாசாரிகளுக்கு "அசரீரீயாக "பெருமாள் பதில் அளித்தார்கள் . என்னை நீங்கள் யாரும் #ஸ்பரிசிக்க வேண்டாம் .
நீங்கள் அபவித்திர மானவர்கள் .
சிவ பிராமணனை ரத்த காயப்படுத்தி உள்ளீர்கள் .

நாம் தினமும் ஆரோகணம் செய்யும் அனந்த (சேஷ ) வாகஹனத்தில் தீக்ஷிதரை ஏற்றி அழைத்து அவர் கையால் திரு மஞ்சனம் நீங்கள் எனக்கு செய்விக்க வேண்டும் , என்று பெருமாள் அசரீரியாக திருவாய் மலர்ந்தருள
பிறகு பட்டாச்சாரியார்கள்தீக்ஷிதரை அனந்த வாகஹனத்தில் தூக்கி வந்து .
திருமலை பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தனர் .

மேலும் பிரதி திருவாதிரை நக்ஷத்திரத்தில் "யாம் " வில்வ தளங்களையே மாலையாகவும் அர்ச்சனையாகவும் செய்ய வேண்டும் என்ற #ஸ்தல ஆகம விதியை ஏற்படுத்தி திருப்பதி ஶ்ரீவேங்கடச பெருமாள் ஆணையிட்டார் .

அதுவே இன்றும் தொடர்கிறது - பெருமாள் சிவாம்சமாக குறிப்பிட நாட்களில் இன்றும் காக்ஷி அளிக்கிறார்....

வேலூரை அடுத்த ஆரணிக்கு பக்கத்தில் உள்ள அடையபுலம் என்ற கிராமத்தில் அவதரித்து சிதம்பரம் நடராஜ பெருமானோடு ஐக்யமானர் அப்பய்ய தீக்ஷிதர்.

வேலூர் மன்னர் சின்ன பொம்மன் அளித்த பொற் காசுகளை கொண்டு அடைய புலத்தில் "கால கண்டேச்வரர்" ஆலயத்தை கட்டினார். சாம வேதத்தை சார்ந்த இவர், தான் யஜுர் வேத குலத்தில் பிறக்கவில்லையே என வருத்தப் பட்டார். காரணம் யஜுர் வேதத்தின் சப்த காண்டத்தின் மத்தியில் உள்ளது "'நமசிவாய'" மந்திரம். ஶ்ரீருத்ரத்தின் நமகத்தில் எட்டாவது அனுவாகத்தில் "'நமசிவாய'" என்று வரும்.

எந்த தெய்வத்திற்கு மான மூலமந்திரம் வேதத்தில் இல்ல. சிவபெருமானுக்குஉண்டான மூல மந்திரம் மட்டுமே மேற் குறிப்பிட்ட படி வேதத்தில் உள்ளது.

இந்த வேதமே பரமேச்வரனின் மூச்சுக்காற்று.
ravi said…
*ஓய்வுக்குப் பிந்தைய மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான 36 பரிந்துரைகளின் பட்டியல் இது.*

1. *தனியாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.*

2. *உங்கள் மனைவியுடன் பயணம் செய்யுங்கள்.*

3. *உச்சக்கால நேரங்களில் (Peak hours) வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.*

4. *அதிக உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி தவிர்க்கவும்.*

5. *அதிக வாசிப்பு, மொபைல் பயன்பாடு அல்லது டிவி பார்ப்பதை தவிர்க்கவும்.*

6. *அதிகப்படியான மருந்துகளை தவிர்க்கவும்.*

7. *சரியான நேரத்தில் மருத்துவர்களை சந்தித்து மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.*

8. *பணி ஓய்வுக்குப் பிறகு சொத்து பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்.*

9. *உங்கள் ஐ.டி மற்றும் முக்கியமான தொலைபேசி எண்களை எப்போதும் எடுத்துச் செல்லுங்கள்.*

10. *கடந்த காலத்தை மறந்து விடுங்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.*

11. *உங்களுக்கு ஏற்றதை உண்ணுங்கள், மெதுவாக மெல்லுங்கள்.*

12. *குளியலறை மற்றும் கழிப்பறையில் எச்சரிக்கையாக இருக்கவும்.*

13. *புகை பிடித்தல் மற்றும் மது குடிப்பதை தவிர்க்கவும். அவைகள் தீங்கு விளைவிக்கும்.*

14. *உங்கள் சாதனைகளைப் பற்றி பெருமை கொள்ளாதீர்கள்.*

15. *ஓய்வுக்குப் பிறகு சில வருடங்கள் அதிகமாகப் பயணம் செய்யுங்கள். பிறகு நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்.*

16. *உங்கள் சொத்து மற்றும் சொத்துக்கள் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம்.*

17. *உங்கள் திறன் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்கள்.*

18. *உங்களுக்கு அதிக இரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்சனைகள் இருந்தால் தலையணை மற்றும் கபாலபதியைத் தவிர்க்கவும்.*

19. *நேர்மறையாக இருங்கள் மற்றும் அதிகப்படியான உணர்ச்சிகளைத் தவிர்க்கவும்.*

20. *சாப்பிட்ட உடனே தூங்க வேண்டாம்.*

21. *பிறருக்கு கடன் கொடுக்கவே வேண்டாம்.*

22. *அடுத்த தலைமுறைக்கு தேவையில்லாத அறிவுரைகளை வழங்குவதை தவிர்க்கவும்.*

23. *மற்றவர்களின் நேரத்தை மதிக்கவும்.*

24. *தேவை இல்லை என்றால் அதிகமாக சம்பாதிக்க முயற்சிக்காதீர்கள்.*

25. *இரவில் நன்றாக தூங்க பகல் தூக்கத்தை தவிர்க்கவும்.*

26. *உங்களுக்கான சொந்த இடத்தை வைத்து, மற்றவர்களின் தனியுரிமையை மதிக்கவும்.*

27. *உயில் எழுதுவது குறித்து, உங்கள் மனைவியிடம் ஆலோசனை செய்யுங்கள்.*

28. *உங்கள் ஓய்வூதிய சேமிப்பை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.*

29. *மூத்த குடிமக்கள் குழுவில் சேருங்கள். ஆனால் மோதல்களைத் தவிர்க்கவும்.*

30. *உங்களால் தூங்க முடியாவிட்டால் மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.*

31. *மரங்களில் ஏறி பூக்களை பறிக்க வேண்டாம்.*

32. *அரசியல் பற்றி விவாதிப்பதையோ அல்லது மாறுபட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்வதையோ தவிர்க்கவும்.*

33. *உங்கள் உடல்நிலை குறித்து தொடர்ந்து புகார் செய்யாதீர்கள்.*

34. *உங்கள் துணையுடன் சண்டையிடுவதைத் தவிர்க்கவும். அவர்/அவள் உங்கள் முதன்மையான ஆதரவு.*

35. *ஆன்மிக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள், ஆனால் கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களாக மாறாதீர்கள்.*
*36. மன அழுத்தமில்லாத புன்னகையுடன் வாழ்க.*

*இந்திய தேசிய மூத்த குடிமக்கள் நல சங்கம் பகிர்ந்துள்ள இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தயவு செய்து புரிந்து கொண்டு முடிந்தால் பின்பற்றவும்.*
ravi said…
📚 இன்றைய ஸ்லோகம் 📚*

கஸ்தூரிகா குங்குமார்ச்சிதாயை
சிதாரஜ:

புஞ்ஜவிசர்ச்சிதாய |
ச்ருதஸ்மராயை விக்ருதஸ்மராய

நம: சிவாயை ச நம: சிவாய||

கஸ்தூரி குங்குமம் இவைகளால் அலங்கரிக்கப்
பட்டவளும்,

பஸ்மத்தால் பூசப்பட்ட உடலையுடையவரும்,

மன்மதனை உயிர்பெறச் செய்தவரும்,

காமனை எரித்தவருமான 'சிவா’ என்ற அம்பிகைக்கும்,
சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
ravi said…
அற்புதம் .. தெரியாத சம்பவம் ...

இவர் கடும் வயிற்று வலியினால் அவதி பட்டவர் ..

பிறருடன் தர்க்கம் செய்யும் போது மட்டும் தன் வயிற்று வலியை அருகில் உள்ள அருகம்புல் மீது ஏவி விடுவார் .

தர்க்கம் முடிந்தபின் வயிற்று வலியை திரும்பி வாங்கிக்
கொள்வார்...

ஒருமுறை ஒருவர் கேட்டார்

நீங்கள் அம்பாளிடமும் ஈசனிடம் இவ்வளவு பக்தி செய்கிறீர்கள் இந்த வலி போகவேண்டும் என்று வேண்டிக்
கொள்ளலாமே என்றார் ...

வலியை பொறுத்துக்
கொண்டு சிரித்து க்கொண்டே சொன்னார் ...

உண்மை வேண்டிக்
கொண்டால் இந்த வலி போய் விடும் ...

இது கர்ம வினை ... இதை முழுவதும் தீர்க்க இன்னும் பிறவிகள் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் ...

இந்த பிறவியிலேயே நான் இந்த கர்ம வினை முழுதும் தீர்ந்து போகவே நான் இறையை வேண்டிக்கொள்ளவதில்லை ...

ராமகிருஷ்ண பரம்ஹம்சரும் , ரமண மகரிஷியும் இப்படித் தான் வலியை அனுபவித்து தங்கள் கர்ம வினைகளை தீர்த்துக்
கொண்டனர் 🙏🙏🙏
ravi said…
இராமாயணத்தில் இடம் பெற்ற 69 கதாபாத்திரங்களை கொண்டு அதனை நினைந்து பயனுள்ளதாக செய்வோம்

பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் குறிப்பாக அவரின் முக்கிய 10 அவதாரங்களில் ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ந்ருசிம்ஹர் ஆகிய மூன்று அவதாரங்கள் மிகவும் அதீதமாக பெரியோர்களால் போற்றப்பட்டு வருகின்றன

அதிலும் இந்துமத பிரதான இதிகாச காப்பியங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ ஒருசில முக்கியமான கதாபாத்திரங்களையும் ( வால்மீகி உட்பட) தமிழில் அதை காவியமாக தந்த கம்பன் என கிட்டதிட்ட 69 பாத்திரங்களை பற்றிய சிறு விளக்கம்.
ravi said…

கானகத்தில் ஶ்ரீராமன் இருந்தபோது அவருக்கு தொல்லை கொடுக்க ஶ்ரீராமனாலேயே வதைக்கப்பட்டவன்

பின்னர் இவனே கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்

9. குகன் (Kugan)

இவன் வேடர் தலைவன் கங்கைகரை படகோட்டி ஶ்ரீராமர் இலக்குமணர் தாயார் ஆகியோர் கங்கையை கடக்க உதவியதால் ஶ்ரீராமரால் ஐந்தாவது சகோதரனாக ஏற்றுக் கொள்ள‍ப்பட்ட‍வன்

10. கும்பகர்ணன் (Kumbakarna)

இலங்கை வேந்தன் ராவணனின் தம்பி பிரமனிடம் கேட்ட வரத்தில் ஏற்பட்ட சிறு தவறால் ஆறுமாதங்கள் சாப்பிட்டும் மீதமுள்ள‍ ஆறுமாதங்கள் பெரும் தூக்கம் என உண்டும் தூங்கியுமே பொழுதை கழித்தவன் செஞ்சோற்று கடனுக்காக மகாபாரத்த்தில் உயிரை விட்ட கர்ணனுக்கு செஞ்சோற்று கடனை கழிப்பது எப்படி என வழிகாட்டிவன்
ravi said…

11. கும்பன் (Kumba)

இவனும் இலங்கையின் இளவரசன் ஆனால் மேலே சொன்ன கும்பகர்ணனின் மகன் இவனும் தந்தையை போலவே இராம இராவண போரில் இராமலக்குமணர்களா்ல் அழிக்கப்பட்டவன்

12. குசத்வஜன் (Susajvajan)

பகவான் ஶ்ரீராமரின் மாமனாரும் தாயார் சீதாதேவியின் தகப்பனாருமான ஶ்ரீஜனகரின் தம்பி அதாவது பரத சத்ருக்கனர் மனைவிகளான மாண்டவி சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை இவர்தான் பரத சத்ருக்கனின் மாமனார்

13. கவுசல்யா கைகேயி சுமித்திரை (Kowsalya Kaikeyee Sumithra)

இவர்கள் முறையே ஶ்ரீராம பரத லக்குமண சத்ருக்கன் ஆகியோரின் தாயார்கள் அயோத்தி மாமன்னர் ஶ்ரீதசரதரின் மூன்று திவ்யமான பட்டத்தரசியர்

இதில் இளைய மனைவியான கைகேயி ஒருமுறை போரில் தசரதனுக்கு தேர் சாரதியாக இருந்து தேரை அழகாக செலுத்தி அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்ததால் அகம் மகிழ்ந்த தசரதன் கைகியிடம் இரண்டு வரம் தருவதாக கூற கைகேகி அதை தனக்கு வேண்டும் பொழுது கேட்டு பெற்று கொள்வதாக கூற

ஆம் ஜானகியை மிதிலையில் ஶ்ரீஶ்ரீஜனக மன்னனிடம் இருந்து கன்னிகாதானமாக பெற்று கைபிடித்து அயோத்திக்கு அழைத்து வந்த ஶ்ரீராமனுக்கு தசரதர் பட்டாபிஷேகம் செய்ய எண்ண கைகேகி ஶ்ரீராமன் மண்ணில் பிறந்த காரணத்தை முற்றிலும் அறிந்தவளாக தன் தோழி மந்தரை போதனையாக ஏற்று

மன்னனான தசரதனிடம் ஸ்வாமி தற்போதைய இளவரசனான ஶ்ரீராமன் இன்று முதல் 14 ஆண்டுகள் கானகம் செல்லவும்

அவருக்கு பதிலாக தன் மகன் பரதன் ராஜாவாக அயோத்தி நாட்டை ஆளவேண்டும் என முன்பு போர்களத்தில தருவதாக சொன்ன இரண்டு வரமாக இப்போது கேட்க அப்போதே அந்தக்ஷணமே இராமாயண காவியத்தின் கதை தொடங்க காரணமான இருந்த ஶ்ரீராமனுக்கு பிரியமான தாய் இந்த கைகேகி

கைகேகி இல்லையேல் இராமாயண கதை இல்லை என்னும்படியாக முக்கிய மனுஷி ஆனால் தான் பெற்ற மகனால் முற்றிலும் வெறுப்கப்பட்டவள்
ravi said…
14. சுநைனா (Sunaina)

மிதிலை மன்னர் ஶ்ரீஜனகரின் மனைவி தாயார் சீதையின் தாய்
ஶ்ரீராமனின் மாமியார்

15. கௌதமர் (Gowthamar)

கல்லாகி ஶ்ரீராமர் கால் தூசிபட்டு மீண்டும் பெண்ணான கற்புக்கரசி ஶ்ரீஅகல்யையின் கணவர் மாகபெரிய முனிவர்

இஷ்வாகு குல ஆசாரியர்

16. சதானந்தர் (Sadhanandha)

மேலே சொன்ன அகல்யை கவுதமரின் மகன்
இவர்தான் மிதிலையில் ஶ்ரீராம சீதா கல்யாணத்தை நடத்தி வைத்த புரோகிதர்

17. சம்பராசுரன் (Sambrasoora)

மகா பெரிய வீரன் அசுரன் ஒருமுறை இவனுக்கும் தேவர்களுக்கும் நடந்த போரில் இந்திரன் வேண்டுதலை ஏற்று தசரதர் அஅவனை அழித்து தேவர்களுக்கு வெற்றிகிட்ட உதவினார்

18. சபரி (Sabari)

நல்ல தபசி ஶ்ரீமதங்க முனிவரின் மாணவி சிறந்த சிஷ்யை முனிவரின் ஆக்ஞை படி பல ஆண்டுகள் காத்திருந்து பகவான் ராமனை தரிசித்தவள் தான் உண்ட எச்சில் பழத்தை பகவானுக்கு பிரசாதமாக சமர்பித்து மோட்ச்தை அடைந்தவள்

19. சதபலி (Sadhabali)

சுக்ரீவனின் வானர சேனையில் ஹனுமனை போன்ற வீரன் இவன் ஶ்ரீராம தூதனாக ஹனுமன் தென் திசையில் தாயாரை தேட செல்ல அதே தூதனாக இவர் வடதிசையில் சீதையை தேடச்சென்றவன்
ravi said…
21. சீதா (Seetha)

பகவானான ஶ்ரீராமனின் மனைவி அகலகில்லேன் என பகவான் மார்பில் உறையும் சாட்சாத் ஶ்ரீதேவி என்னும் மங்கை இந்த பகவத் ஶ்ரீராம அவதாரத்தில் தானும் ஈடுபட விரும்பி ஜானகி தாயாராக அவதரித்தார் இவரை வைதேகி ஜனகநந்தினி ஜனககுமாரி மைதிலி ஆகிய பெயர்களிலும் அழைப்பர்

இந்த அவதாரத்தில் தாயார் மிகவும் கஷ்டப்பட்டார் என்றால் மிகையில்லை

22. சுமந்திரர் (Sumandhirar)

அயோத்தி மன்னன் தசரதனின் அரச சபையில் ஹனுமனை ஒத்த அறிவார்ந்த மந்திரி தசரத மன்னனின் ஆஸ்தான தேரோட்டி

23. சுக்ரீவன் (Sukriva)

வானர சூரன் இவர் கிஷ்கிந்தையின் மன்னன் வானரவீரன் வாலியின் உடன்பிறந்த தம்பி ஹனுமன் ஶ்ரீராமதூதனாகும் முன் இவரிடம்தான் நண்பனாக மந்திரியாக பணிசெய்தார் இவர் சூரியபகவானின் அருளால் பிறந்தவர்

பகவான் ஶ்ரீராமர் கானகத்தில் பிரிந்த தாயாரை மீண்டும் காண வானரசைன்யத்தை கொடுத்து தானும் உற்ற நண்பனாய் இருந்து உதவியவர் இவரை ஶ்ரீராமர் தனது ஆறாவது சகோதரன் என அறிவித்தார் சுக்ரீவன் நல்ல பண்பு மிக்கவர்

24. சுஷேணன் (Sushona)

சிறந்த வானர வீரன் வானர அரசன் வாலியின் மாமனார் அதோடு வானரங்களுக்கான ஆஸ்தான மருத்துவர்

ராவணனிடம் சிறைபட்ட தேவியை தேடி மேற்கு திசையில் சென்றவர்

25. சூர்ப்பணகை (Surpanaga)

இலங்கை வேந்தன் ராவணன் விபிஷணன் கும்பகர்ணன் ஆகியோரின் தங்கை

தங்கையின் கணவன் என்றும் பாராமல் தன் கணவனை கொன்ற தன் அண்ணனான இராவணனை பழிவாங்க சந்தர்பம் தேடி அலைந்த போது ஶ்ரீராமரை கண்டு மையலுற்று அதன்காரணமாக மூக்கையும் காதையும் அறுபட்டவள் இதையே காரணமாக கொண்டு ஶ்ரீராமனின் விருப்பமான சீதாதேவியின் மூலம் இராவணன் அழிவுக்கு வழி கண்டவள்
ravi said…
26. தசரதர் (Dhasaradha)

இஷ்வாகு குல மன்னன் அயோத்தியின் அரசன் எட்டுதிசை மட்டுமல்ல வானம் பூமி என மேலும் கீழுமாக பத்து திசைகளிலும் தேரை லாவகமாக ஓட்டும் திறமைசாலி அதனால் தசரதன் என்று அழைக்கப்பட்டார்

தனக்கு பின் அயோத்தியை ஆள இஷ்வாகு குலத்தில் ஓர் ஆண்பிள்ளை இல்லையே என எண்ணி புத்ர காம இஷ்டி யாகம் செய்து அதன்மூலம் பகவான் ஶ்ரீமன் நாராயணனையே ஶ்ரீராமனாக தன் மகனாக பெற்றவர்

மனைவியான கையேகிக்கு தவறான வரம் தந்ததால் புத்ரசோகத்தில் உயிரிழந்தவர்

ஶ்ரீராம இலக்குண பரத சத்ருகன் பாசமிகு ஆகியோரின் தந்தை

27. ததிமுகன் (Tathimugan)

வானரவீரன் வானர அரசர்களான வாலி சுக்ரீவன் ஆகியோரின் சித்தப்பா அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட மதுவனம் என்ற பகுதியின் பாதுகாவலர்

28. தாடகை (Thaadagai)

விஸ்வமித்ரர் தவம் செய்து வந்த காட்டில் அவர்களுக்கு தொல்லை கொடுத்தபடியே வசித்த அரக்கி பாலபருவத்திலேயே இலக்குமணன் உதவியால் ராமனால் முதன் முதலாக கொல்லபட்டவள் பெண் என்றாலும் மூர்க்க குணம் உள்ளவள் எனவே கொல்வதில் தவறில்லை என முனிவர் கூறியதால் இவளை ஶ்ரீராமர் அழித்தார்
ravi said…
27. ததிமுகன் (Tathimugan)

வானரவீரன் வானர அரசர்களான வாலி சுக்ரீவன் ஆகியோரின் சித்தப்பா அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட மதுவனம் என்ற பகுதியின் பாதுகாவலர்

28. தாடகை (Thaadagai)

விஸ்வமித்ரர் தவம் செய்து வந்த காட்டில் அவர்களுக்கு தொல்லை கொடுத்தபடியே வசித்த அரக்கி பாலபருவத்திலேயே இலக்குமணன் உதவியால் ராமனால் முதன் முதலாக கொல்லபட்டவள் பெண் என்றாலும் மூர்க்க குணம் உள்ளவள் எனவே கொல்வதில் தவறில்லை என முனிவர் கூறியதால் இவளை ஶ்ரீராமர் அழித்தார்

29. தாரை (Thaarai)

வானர வீரன் கிஸ்கிந்தை மன்னன் வாலியின் மனைவி வானரசூரன் அங்கதனின் தாய்
அறிவில் சிறந்தவள் வானரராணி புராண பஞ்ச பதிவிரதைகளில் ஒருவர்

30. தான்யமாலினி (Dhanya Malini)

இந்த பெயரை பலர் கேட்டு இரார் இவள் நல்ல உள்ளம் கொண்டவள் இலங்கை வேந்தன் இராவணனின் இளைய மனைவி

31. திரிசடை (Thirisada)

இலங்கையில் இராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமான அரக்கி தாயாரை அசோக வனத்தில் இராவணன் சிறை வைத்தபோது காவலுக்கு இருந்தவள் இலங்கையில் வசித்த அரக்கிகளில் நல்லவள் தாயார் சீதைக்கு ஶ்ரீராமன் உம்மை மீட்டு போக வருவான் என நம்பிக்கையை தினமும் ஊட்டியவள்

32. திரிசிரஸ் (Thirisirus)

இலங்கை வேந்தன் இராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி நல்ல வீரன்

33. நளன் (Nalan)

வானர வீரன் அதிலும் பொறியியல் அறிந்த சிறந்த வானரவீரன் காரணம் தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகன் இராம இராவண யுத்தத்துக்கு கடலின்மீது இலங்கைக்கு இவன் மேற்பார்வையிலேயே சேதுபாலம் கட்டபட்டது

34. நாரதர் (Naradha)

ஶ்ரீமன் நாராயணனின் நாபியில் உதித்த பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர் பிரம்ம புத்ரர் மகாஞானி இசையில் வல்லவர் அதேநேரம் தேவலோகம் பூலோகம் பாதாள லோகம் என ஈரேழு லோகத்திலும் சஞ்சரித்தபடியே இருந்து கொண்டு நல்லவைகளுக்காக பல இடங்களில் கலகம் ஏற்றபடுத்தும் முனிவர்
ravi said…
35. நிகும்பன் (Nigumbhan)

இராமாயணத்தில் இராவணன் தாயாரான சீதையை சிறைபிடித்தது தவறு அதனால் அரக்கவம்சமே அழியபோகிறது என இராவணனிடம் எச்சரித்த போதும் செஞ்சோற்று கடனுக்காக இராவணனுடன் இருந்து உயிர் துறந்த கும்பகர்ணனின் மகன் கும்பனின் சகோதரன் இராமராவண யுத்தத்தில் வீரமரணம் அடைந்தவன்

36. நீலன் (Neelan)

வானர வீரன் சுக்ரீவனின் வானர படையில் முக்கிய நபர் வானரவீரன் நளனின் நண்பன் வானர சேனாதிபதிகளில் ஒருவன் இவன் அக்னி தேவனின் அருளால் பிறந்தவன் இராமாயண சேதுபாலம் அமைய நளனுடன் துனைபுரிந்தவன்

37. பரசுராமர் (Parasurama)

பகவான் விஷ்ணுவின் ஒரு அவதாரம் இவர் ஜமத்கனியி என்ற மகானின் தந்தை இராமாயண காலத்தில் ஜனக மன்னர் சபையில் சிவதனுசை முறித்த ஶ்ரீராமனுடன் விஷ்ணுதனுசை நாணேற்ற கேட்டு போரிட்டவர் ஶ்ரீராமரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்

38. பரத்வாஜர் (Baradhvaja)

இராமாயண காலத்தில் வடக்கே பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்து தவமியற்றி வந்த முனிவர் இவரின் வேண்டுகோளை ஏற்று ஶ்ரீராமன் தாயாருடன் படைகளுடன் இராவணனை வென்று அயோத்தி திரும்பும் முன் இவரின் ஆஸ்ரமத்தில் ஓரிரவு தங்கி உணவருந்தி சென்றார்கள்

39. பரதன் (Bharada)

பகவான் ஶ்ரீராமனின் தம்பி அயோத்தி மன்னன் தசரதன் மற்றும் அவரின் அபிமான மனைவி கைகேயியின் மகன் பகவான் ராமனின் அபிமான தம்பி

ஶ்ரீராமனின் நாட்டை தான் ஆள தாயார் வரம் கேட்டபோது தாய் மாமன் இல்லத்தில் இருந்ததால் திரும்பி வந்ததும் தாயரிடம் அவளின் செயலை கண்டித்தத்துடன் அவளை முழுவதுமாக வெறுத்து பகவான் ஶ்ரீராமனை தேடி கானகம் சென்று தாயாரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு தந்தையின் இழப்பையும் கூறி அறத்தின்படி மூத்தவரான ஶ்ரீராமனை அயோத்தியை் அரசாள வரும்படி அழைத்தான்

ஶ்ரீராமன் இவனின் இச்செயலுக்காக மெச்சி தந்தைக்கான இறுதி காரியங்களை செய்து தான் தந்தை கட்டளைபடி 14ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பி வரும்வரை பரதனையே அரசாளும்படி கூறி இறுதியில் பரதனின் அன்பான வேண்டுகோளுக்காக தன் பாதரட்சையை தந்தான்

இராமனின் பாதுகையே பிரதானமாக கொண்டு அயோத்தி கூட செல்லாமல் நந்திபுரம் என்ற இடத்திலேயே பதினான்கு ஆண்டுகள் இராமனையே எதிர்பார்த்து அரசாண்டான் பரதன்

கம்பனால் ஆயிரம் ஶ்ரீராமருக்கு சமமானவன் என பாராட்டபெற்றவர்

லக்குமணனே பொறாமைபடும் அளவுக்கு ஶ்ரீராமன் மீது பக்திகொண்டவன் பகவத் கைங்கர்யத்துக்கு உதாரணம் ஆனவன்

சிறந்த வில்லாளி வீரன்
ravi said…
40. மந்தரை (Mandra)

தசரதனின் மனைவி கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த கைகேயின் சேடிபெண் அதாவது வேலைக்காரி

இவளை கூனி என்றும் அழைப்பர்

இராமாயண காவியத்தில் ஶ்ரீராமர் பட்டத்தை துறந்து கானகம் செல்லவும் அதன் மூலம் இராமாயண வைபவம் நடக்கவும் முக்கிய காரணமானவள் அத்தோடு தசரதன் மறைவுக்கும் காரணமானவள்

41. மதங்கர் (Madhangar)

இராமாயண காலத்தில் வாழ்ந்த சிறந்த முனிவர் இவரின் சிஷ்யையான சபரிக்கு ஶ்ரீராமரின் தர்சனம் கிட்டும் என கூறி ஆசிவழங்கியவர் அதன்படியே சபரி ஶ்ரீராமனின் தர்சனம் பெற்று மோட்சம் அடைந்தாள்

42. மண்டோதரி (Mandodhari)

தேவலோக சிற்பியான மயனின் மகள் இலங்கை வேந்தன் ராவணனின் பட்டத்தரசி சிறந்த வீரனான இந்திரஜித்தின் தாய்

இராவணனிடம் சீதையை ஶ்ரீராமனிடம் விட்டுவிடும்படி கூறியவள் இதிகாசம் கூறும் பஞ்சபதிவிரதைகளில் ஒருவர்

43. மாரீசன் & சுபாகு (Mareesan & Subagu)

இராமாயணத்தில் இராமனால் அழிக்கப்பட்ட பெண் அரக்கியான தாடகையின் மகன்கள் தாடகையை வதம் செய்தபோதே சுபாகுவும் ராமனால் வதம் செய்யப்பட்டான்

மாரீசன் அப்போது தப்பி ஓடி ஶ்ரீராமன் தாயாருடன் கானகத்தில் இருந்தபோது இராவணனின் தூண்டுதலால் மாய பொன்மானாக வந்து சீதையின் ஆசையை தூண்டி பகவானும் தாயாரும் பிரிய காரணமாகி ஶ்ரீராமனால் கொல்லபட்டவன்
ஒருவித்த்தில் இராவணன் அழிவுக்கும் காரணமானவன்

44. மால்யவான் (Malyavaan)

இவர் இலங்கை வேந்தன் ராவணனின் தாய்வழிப்பாட்டன் இவரும் சூர்ப்பனகை மூலம் இராவணன் அழிவுக்கு காரணமானவர்

இவர் எங்கள் ஊரான மன்னார்கோவில் வேத நாராயணன் அருளுக்கு பாத்ரமானவர் இன்றும் இவரது சுதை உருவம் ஊரில் வேதநாராயணரை வணங்கியபடி இருப்பதை பிரதான கோபுரத்தின் மேல் நிலையில் உள்ள சயனகோல சன்னதியில் காணலாம்
ravi said…
45. மாதலி (Madhali)

இவர் தேவலோக தலைவன் இந்திரனின் தேரோட்டி இந்திரஜித்துடன் போரிடும் போது இந்திரனின் தேரை ஓட்டியவர்

46. யுதாஜித் (Udhajith)

கேகய நாட்டு இளவரசியும் தசரத மன்னனின் மனைவியுமான கைகேயியின் தம்பி இவர்தான் பரதனின் தாய்மாமன் கைகேகி வரம் கேட்டபோது பரத சத்ருகணர்கள் இவரது ஊரில் இருந்தனர்

47. ராவணன் (Ravana)

இராவணன் மிச்ரவா என்பரின் மகன்

ஶ்ரீபதியான ஶ்ரீமன் நாராயணனின் வைகுண்டத்தில் வாயில் காப்போனாக இருந்த ஜெய விஜயன்கள் சனகாதி முனிவர் சாபத்தால் அரக்கனாகி வந்தவர்கள் அதில் இராமாவதாரகலத்தில் ஜெயனும் விஜயனும் இராவணன் கும்பகரனண் என அவதரித்தனர்

இராவணன் சிறந்த சிவ பக்தன் நல்ல இசை ஞானம் கொண்டவன் வீணைவாசிப்பதில் வல்லவன் பத்து தலைகளை கொண்டவன் தன் தவத்தால் இசையால் கைலாய மலையையே அசைத்தவன்

இலங்கையை இந்திரனின் இந்திரபுரிக்கு சம்மாக நிர்மானித்து தன் வம்சத்துடன் அரக்கர்களின் தலைவனாக ஆட்சி புரிந்து வந்தவன்

தன் தவ்வலிமையல் மூன்று லோகத்தையும் வென்றவன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் கிரஹங்களையும் அடிமையாக்கி தேவர்களை முனிவர்களை தவம் செய்பவர்களை துன்புறுத்தி இன்பம் கண்டவன்

பெண்சபலம் கொண்டவன் அதனாலேயே பெற்ற சாப்தின் பயனாய் தங்கையான சூர்ப்பனகை துர் போதனையால் கானகத்தில் இருந்த ஶ்ரீராமனின் மனையாளான தாயார் சீதாதேவியை அவளின் விருப்பத்துக்கு மாறாக ஶ்ரீராமன் இலக்குமணர் இல்லாதபோது சிறை எடுத்து தன் வம்சமே அழிய காரணமானவன்

இராவணன் குபேரனின் தம்பி
புலஸ்திய முனிவரின் பேரன்

பகவான் ஶ்ரீராமனாக அவதாரம் எடுக்க காரணமானவன்
ravi said…

48. ஶ்ரீராமன் (Sri Rama)

ஶ்ரீமன் நாராயணனின் ஏழாவது அவதாரம் தசரதருக்கும் கோசல்யாதேவிக்கும் புத்ர காம இஷ்டி யாகத்தில் பாயச ரூபத்தில் வந்து கௌசல்யாவை ஸ்வீகரிக்க வைத்து அவதாரம் செய்தவன்

நட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரமான புனர்வசு நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் கடக ராசியில் தேவர்கள் முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இராவணாதி அசுரர்களை அழிக்க நல்ல நவமி திதியில் இலக்குமணன் பரத சதருகணன் என்ற தம்பிகளுடன் தசரதருக்கு மூத்த மகனாக அவதரித்தார்

நம் இராமாயண காதையின் கதாநாயகன்

49. ரிஷ்யசிருங்கர் (Rishyasirungar)

இவர் சிறந்தமுனிவர் யாகங்கள் ஹோமங்கள் செய்வதில் வல்லவர்

ஶ்ரீராமருக்கு முன்பாக அயோத்தி மன்னரான தசரதருக்கு மகளாக பிறந்த ஷாந்தா என்பவரை மணந்து கொண்டவர்

தசரதரின் மாப்பிள்ளை

இவர்தான் தசரதருக்கு தன் மைத்துனர்களான ஶ்ரீராம லக்குமண பரத சத்ருக்கனர்கள் அவதரிக்க காரணமான புத்திரகாமேஷ்டி யாகத்தை அயோத்தியில் செய்த முனிவர்

50. ருமை (Rumai)

வானரசூரனான சுக்ரீவனின் மனைவி இவளை தான் சுக்ரீவன் அண்ணன் வாலி கவர்ந்து கொண்டு சுக்ரீவனை விரட்ட அதன்பயனாய் பின்னர் சுக்ரீவன் ஶ்ரீராமரால் வாலி கொல்ல வைத்து அவர்களின் வானர சேனை ஶ்ரீராம ராவண யுத்தத்துக்கு உதவ காரணமானவள்

51. லங்காதேவி (Lanka devi)

இலங்கையை குபேரபட்டணமாக நிர்மானித்த இராவணன் அந்த பட்டணத்தின் காவலாளியாக நியமித்த காவல் தெய்வம் இந்த பெண்

இவளை மீறி எதிரிகள் யாருமே இலங்கைக்குள் நுழைய முடியாது ஹனுமன் கூட பெண்ணான இவளை ஜெயித்த பின்பே இலங்கைக்குள் நுழைய முடிந்தது

இவள் என்று அழிகிறாளோ அன்று முதல் இலங்கை அழிவு ஆரம்பமாகும் என்பது உண்மையாயிற்று
ravi said…

52. வசிஷ்டர் (Vashishtar)

இஷ்வாகு குல அரசனான தசரதனின் குலகுரு பெண்களில் சிறந்த அருந்ததியின் கணவர் இவரது யோசனையால் தசரதர் புத்ரகாம இஷ்டி யாகம் செய்தார் பின்னாளில் ஶ்ரீராமருக்கும் அவரது மைந்தர்களுக்கும் அரசனாக பட்டாபிஷேகம் செய்துவைத்தவர்

53. தசரதர் அவையில் இருந்த மேலும் சில குரு பெயர்கள்

சமார்க்கண்டேயர் மவுத்கல்யர் வாமதேவர் காஷ்யபர் கார்த்தியாயனர் கவுதமர் ஜாபாலி என்போர்

54. வருணன் (சமுத்திரராஜன்)

இவர்தான் கடலரசன் இராமர் அழைத்தும் வராமல் பின்னர் ராம்பானத்துக்கு பயந்து தன்மீது அணை கட்ட ஶ்ரீராம சேனையை அனுமதித்தவன்

55. வால்மீகி (Vaalmiki)

இராமயணத்தை வடமொழியான சம்ஸ்க்ருத்த்தில் எழுதியவர்
ரத்னாகரன் என்பது இயற்பெயர்
திருடனாக கொள்ளைக்காரனாக இருந்தவர்
நாரதரின் கேள்வியால் மனம் திருந்தி மரா மரா என பல ஆண்டுகளாக மனம்ஒன்றி தியானிக்க தியானிக்க அதுவே ராம ராம என்ற மந்திரமாக மாற

தன் உடலைசுற்றி கரையான் புற்று ஏற்பட்டும் கவனியாமல் தவம் செய்தமையால் வால்மீகி ( கரையான் புற்று) என்ற பெயர் பெற்றார்

அவர் செய்த ராமநாம தவத்தின் பயனால் ஶ்ரீராம சரிதமே அவர் முன் நடக்க அதை அப்படியே கூற கூற சிவனின் மைந்தரான பிள்ளையார் இராமயணத்தை எழுதியதாக கூற்று

ஶ்ரீராம பட்டாபிஷேகம் முடிந்து மீண்டும் ஶ்ரீராமனால் கானகம் அனுப்பபட்ட தாயார் சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்

இவரது ஆஸ்ரமத்திலேயே ஶ்ரீராம சீதா புத்ரர்களாக லவகுசர் பிறந்தனர்

பின்னாளில் ஶ்ரீராமனின் புத்ரர்களுக்கு அதாவது லவகுசனுக்கு தன் இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை போதித்தவர் அதை ஶ்ரீராம சபையில் லவகுசர்கள் பாடலாக பாடிகாட்டி ஶ்ரீராமர் மற்றும் சபையோர் ஆசிகளை பெற்றனர்

இன்று வழகத்தில் உள்ள இராமாயணம் அனைத்துக்கும் முன்னோடி இவரது வால்மீகி இராமாயணமே அதுவே ராமகாதைக்கு உத்தாரணம்

ஶ்ரீராமரால் கேட்டு ஆனந்திகப்பட்ட இராமாயணம் என்ற பெயரும் பெற்றது இவரது இராமாயணம்
ravi said…
56. வாலி (Vaali)

வானர வீரன் இவன் இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன் மகாபலசாலி மூவுலகையும் அடக்கிய இராவணனை தன் வாலீல் கட்டி போட்டவன்

இவன் எதிரில் போர் புரிய எவர் வந்தாலும் அவர்களின் பலத்தில் பாதி இவனை வந்தடையும் என்ற வரம் பெற்று இருந்ததால் யாராலும் வெற்றி கொள்ள முடியாத பராக்கிரமம் பெற்றவன்

ஶ்ரீராமன் கூட சுக்ரீவனுக்காக மறைந்து இருந்தே அம்பெய்தி இவனை கொன்றார் இறக்கும் போது கூட ஶ்ரீராம நாமாவை உச்சரித்தபடியே உயிர் துறந்து வைகுந்தம் ஏகினான்

57. விஸ்வாமித்ரர் (Vishvamithra)

இவர் சிறந்த முனிவர் அரசனாக இருந்து கடும் தவமிருந்து பிரம்ம ரிஷி ஆனவர் அதுவும் இஷ்வாகு குல ஆஸ்தான குலகுரு வசிஷ்டர் வாயாலேயே பிரம்மரிஷி என அழைக்கப்பட்டவர்

ஶ்ரீராம லக்குமணர்கள் பால்ய வயசாக இருந்தபோதே தசரதன் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஶ்ரீராம லக்குமணர்களை தன் யாகத்தை காப்பாற்ற அனுப்ப கேட்டு இறுதியில் தசரதன் வசிஷ்டர் சம்மதத்துடன் அவர்களை அழைத்து கொண்டு சென்று ஶ்ரீராம லக்குமணர்களுன் பிறப்பின் ரகசியத்தை ஆரம்பித்து வைத்து இராமகாதையை இளமையிலேயே துவக்கியவர்

ஶ்ரீராமனுக்கும் லக்குமணனுக்கும் பலபல அஸ்திரவித்தை போதித்த குரு

தாயாரான சீதா ஶ்ரீபதியான ஶ்ரீராமன் திருமணத்திற்கு முக்கிய காரணமானவர்

58. விராதன் (Viradhan)

இராமாயண காலத்தில் தண்டகவனத்தில் வசித்த அரக்கன் கந்தர்வன் இருந்து சாபம் பெற்றவன் ஶ்ரீராமனால் அந்த சாபம் தீர்ந்தவன்

59. விபீஷணன் (Vibeeshana)

இலங்கை வேந்தன் ராவணனின் தம்பி சிறந்த தர்ம சிந்தனை கொண்டவன் தூதனாக வந்த ஹனுமனை கொல்வதை தவறு என சபையில் உறைத்தவன் சீதாதேவியை மீண்டும் ஶ்ரீராமரிடமே தந்துவிட யோசனை சொன்னவன் அதனால் இராவணனால் விரட்டப்பட்டு ஶ்ரீராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்

இராம இராவண யுத்தத்தில் இராவணனின் உயிர் ஸ்தானத்தை ஶ்ரீராமனுக்கு் உணர்த்தி இராவண வதம் நடக்க காரணமானவன்

ஶ்ரீராமனால் இலங்கைக்கு அரசனாக மகுடம் சூட்டபட்டவன்

இன்றய பூலோக வைகுண்டமாக நாம் போற்றும் ஶ்ரீரங்கம் உருவாக காரணமானவன்

60. வினதன் (Vinadhan)

சிறந்த வானர வீரன் இராமகாவியத்தில் தாயார் சீதையை தேடி ஹனுமன் தென் திசை சென்றது போல் கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன் பின்னாளில் இராம இராவண யுத்தத்திலும் பங்கேற்றவன்

61. ஜடாயு (Jadayu)

இவர் கழுகரசன் சம்பாதியின் தம்பி ஶ்ரீராமரின் தந்தையான தசரதனின் தோழன்

கானகத்தில் இராவணன் தாயாரை சிறைபிடித்தபோது முதன்முதலில் இராவணனுடன் தாயார் சீதைக்காக போராடியவர் இதனால் தன் இறகுகளையும் இழந்தோடு தன் உயிர்நீத்தவர் ஆனால் உயிர்துறக்கும் முன் ஶ்ரீராமரிடம் இராவணனை பற்றிய விபரம் கூறியவர்

ஶ்ரீராமராலேயே அந்திம கைங்கர்யம் பெற்ற பாக்யசாலி
ravi said…
62. ஜனகர் (Janagar)

இவர் சிறந்த ராஜரிஷி துளிகூட உலக ஆசையின்றி ராஜாவாக மிதிலாபுரியை எந்த குறையும் இன்றி ஆண்டுவந்வர் இவரின் அந்த வாழ்க்கைக்கு பரிசாக லோக மாதாவான தாயாருக்கே தந்தையாகும் பாக்யம் பெற்றவர் அதனால் பின்னாளில் பகவானான ஶ்ரீராமருக்கும் அவரின் நிழலான இலக்குமணனுக்கும் மாமனாரானவர்

ஆம் இவர் தாயார் சீதாதேவி மற்றும் இலக்குமணன் மனைவி ஊர்மிளாவின் தந்தை

63. ஊர்மிளா (Oormila)

பகவத் கைங்கர்யமே உத்தாரணம் என காட்டி அதற்காக பெற்ற தாய் தந்தையரையே துச்சம் என உதறி பகவத் கைங்கர்யத்துக்காக கானகம் சென்ற ஶ்ரீராமனின் நிழலான ஶ்ரீலட்சுமணனின் மனைவி

எங்கே தன் கணவன் கானகத்தில் தன் நினைவால் அவரதுஶ்ரீராம கைங்கர்யத்தில் பங்கம் ஏற்படுத்தி கொண்டுவிடுவாரோ என்ற எண்ணத்தில் தன்னையே இலக்குமணர் வெறுக்கும்படியாக செய்தவள்

இறுதியில் தாயார் மூலமாக இலக்குமணன் அவளது தியாகத்தை பதிபக்தியை அதன் உண்மையை உணர்ந்தான்

ஶ்ரீராம கைங்கர்யத்துக்காக தன்னையே தியாகம் செய்தவள்

இவளும் தாயார் சீதாதேவியின் சகோதரியே

64. ஜாம்பவான் (Jambavan)

இராமாயணத்தில் வரும் அழகிய பாத்ரம் கானகத்தில் வாழும் கரடி வேந்தர் ஹனுமனுக்கு அவரின் பிறப்பின் ரகசியத்தை உணர்தியவர் ஶ்ரீராமரின் அன்பை பெற்றவர் இவர் பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர் கிருஷ்ணாவதாரத்திலும் இருந்தவர்
ravi said…
65. அனுமான் (Hanuman)

இராமாயண காவியத்தில் ஶ்ரீராமரும் சீதாதேவியும் எவ்வளவு முக்கிய பாத்திரமோ அதற்க்கு சற்றும் குறைவில்லாத பாத்திரம் ஶ்ரீஹனுமத் பாத்ரம்

இவர் அஞ்சனை மற்றும் வானர சூரன் ஶ்ரீகேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன் என்பதால் அஅவரை ஆஞ்சநேயன் வாயுபுத்ரன் மாருதி எனவும் வேறு பெயர் கொண்டும் அழைப்பர்

ஶ்ரீராமனின் தூதனாக தென்திசை சென்று ஶ்ரீராம நாமாவை உச்சாடனமாக கொண்டு சமுத்திரத்தை தாண்டி தாயாரான சீதாதேவியை இலங்கையில் அசோகவனத்தில் கண்டு பேசி அவரது உயிரை காப்பாற்றியவர்

இலங்கையை இராவணன் தன் வாலில் வைத்த தீயால் எரித்து இராவணனுக்கு முதன்முதலில் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியவர்

ஶ்ரீராம ராவண யுத்தத்தில் சஞ்சீவிமலையை கொணர்ந்து ஶ்ரீராம லக்குமணர்கள் உயிரை மீட்டவர்

ஶ்ரீராம ராவண யுத்தம் முடிந்து அயோத்திக்கு ஶ்ரீராமர் வர தாமதமான வேளையில் மீண்டும் ஶ்ரீராம தூதனாக சென்று பரதன் உயிரை காத்தவர்

ஶ்ரீராம நாம மகிமையை உலகுக்கு உணர்த்தியவர் அதையே தன் மூச்சாக கொண்டவர் ஶ்ரீராமதூதன் என்ற பெயர் பெற்றவர்

இவரது இயற்பெயரான சுந்தரன் என்ற பெயரை நினைவு கொள்ளும் விதமாக இவரது இராமாயண லீலைகளை இராமாயணத்தில் சுந்தரகாண்டம் என தன் பகுதியாகவே வால்மீகி கூறியுள்ளனர்

ஶ்ரீராம நாமாவுக்கு முற்றிலும் உரிமையானவர் ஶ்ரீராமா நாமா உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் இருப்பவர் சிரஞ்சீவியானவர்
ravi said…
66. ஸ்வயம்பிரபை (Svyambrabai)

இந்த பெண்மணி குகையில் வாழ்ந்த தபஸ்வினி இவளின் கைங்கர்யம் ஶ்ரீராமரின் வானரசேனையான குரங்குப் படையினருக்கு உணவிட்டதே இதனால் ஶ்ரீராமரின் கருனையை பெற்றவள்

67. மாண்டவி (Mandavi)

பகவத் கைங்கர்யமே உத்தாரணம் என காட்டி அவரது திருவடியையே சரணாக கொண்ட ஆயிரம் ஶ்ரீராமனுக்கு ஒப்பானவர் என வாழ்த்த பெற்ற கைகேயி தசரதன் புதல்வர் ஶ்ரீபரதனின் மனைவி

தாயார் சீதாதேவியின் சகோதரி

சீதாதேவியின் தகப்பார் ஜனகரின் தம்பி குஜத்வசனின் மகள்

68. சுருதகீர்த்தி (Surudhakeerthi)

பகவத் கைங்எர்யத்தை விடவும் அவனது அடியார்களான அவனின் பாகவத கைங்கர்யமே உத்தாரணம் என வாழ்ந்து காட்டியவரும் பரதனின் திருவடியே சரணம் என வாழ்ந்தவரும் ஶ்ரீராமனின் கடைகுட்டி தம்பியுமான ஶ்ரீசத்ருக்கனனின் மனைவி

ஒரு வித்த்தில் தாயார் சீதாதேவியின் சகோதரி

சீதாதேவியின் தகப்பார் ஜனகரின் தம்பி குஜத்வசனின் மகள்

69. கம்பர் (Kambar)

சோழநாட்டு கவிஞன் வடமொழிக்கு எப்படி ஶ்ரீவால்மீகி எழுதிய இராமாயணம் மூலமோ அதுபோல் தமிழில் இவர் எழுதிய இராமாயணம் மூலம் என்ற சிறப்புக்கு ஒப்ப தமிழில் இராமாயண காவியத்தை எழுதியவர்

இவர் எழுதிய அந்த இராமாயணத்தைத்தான் கம்பராமாயணம் என்று இன்றும் தமிழர்கள் போற்றுகின்றனர்

இவரது ராமாயணத்தை ஶ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியுள்ள பகவான் ஶ்ரீமேட்டழகிய சிங்கர் என்ற ந்ருசிம்மனே அங்கிகரித்ததாக வரலாறு கூறுகிறது

பகவத் நாமாவை அதுவும் நன்மையும் செல்வமும் நாளும் நல்கும் பல ஜன்மத்தையும் பல ஜென்ம பாவங்களையும் போக்கும் ஶ்ரீராம நாமத்துக்கு தொடர்பான சில பாத்திரங்களை நினைவு கொண்டோம் அல்லவா இதுவும் நமக்கு ராமாயணத்தை படித்த பலனை தரும், என்பதில் சந்தேகமே இல்லை

ஜெய் ஶ்ரீராம்!
ravi said…
*உருமாறிய கருமாரி*
---------------------------------------
சுற்றிலும் தீபம் ஒளி நிறைக்க,
ஏற்றிய தூபம் மணம் சேர்க்க,

சாற்றிய மாலை தோள் ஏற்க,
போற்றிய வண்ணம் அமர்ந்திருந்தாள்!

நவமணி மிளிர் ஓர் கிரீடம்,
இவள் சிரசை அலங்கரிக்க,

கருங்குழல் குஞ்சலப் பின்னல்
அருமைக் காட்சி மெய் சிலிர்க்க

தங்கமெனவே அங்கமிருக்க
மங்கை வதனம் ஜொலிக்க,

நத்துடன் மூக்குத்தி தரிக்க,
அத்துடன் புல்லாக்கும் சிறக்க...

பவள வாய்ச் சிரிப்புடனே,
குவளைக் கண் திறப்புடனே...

பொன்னகைப் பட்டுடை தக தகக்க,
புன்னகை அரசி வீற்றிருந்தாள்!

உடுக்கையும் கபாலமும் இடக்கரத்தில்,
கத்தியும் சூலமும் வலக்கரத்தில்,

மிடுக்குடன் ஏந்திய அவள் மாட்சி !
பொருத்தமாய் அமைந்த அருட்காட்சி!

திருவருள் மாரியெனவே சொரிய,
கருமாரி உருவாய் வரம் புரிய,

அலங்கார அம்சமாய்க் கொலுவிருந்தாள்!
நலங்காக்கும் அம்மனாய் அருள் புரிந்தாள்!

----- *மஹா*
ravi said…
*தில்லை சிவகாமி*

(*லாஷ்யப்ரியா* )

பிரபஞ்சம் எனும் மேடை தனில் ஆடுகிறான் ஈசன் நீ போடும் ஜதி தனில்

ஆனந்தத் தாண்டவம் கண்டே புல்லரித்துப்போனதம்மா

சிவானந்தம் பெருகிவர சீக்கிரமே அருள் செய்தாய்

சந்தியா தாண்டவம்
கண்டேன் ... பந்தியில் முதல் உண்டவனாய் சுகம் கண்டேன்

உமா தாண்டவம்
சிவ கௌரி

கண்டேன்
காணகிடைக்கா காட்சி தனை

கண்ணீர் பெருகி கங்கையில் கலந்ததே !!

காளிகா தாண்டவம்
திரிபுர தாண்டவம்
ஸம்கார தாண்டவம்

எல்லாம் ஓர் இடத்தில்

உவகையோ தேன் குடத்தில் !!

அம்மா ஈசன் ஆட நீ வியக்க உன் லாஸ்யம் வேண்டி நின்றேன்

சுத்த லாஸ்யம் கண்டேன் லாஸ்யப்பிரியா எனும் நாமத்தில்

(தட்சிணப் பிரமணம்) -

வலப்பக்கமாகச் சுழன்று ஆடினாய்

(வாமப் பிரமணம்) -

இடப்பக்கமாகச் சுழன்று கடைக்கண் தந்தாய்

(லீலாப் பிரமணம்) -

விளையாட்டாகச் சுழன்றே ஊழ்வினை அகற்றினாய்

(புஜங்கப் பிரமணம்) -

பாம்பு போலச் சுழன்றே காம்பு எனை கொடியாய் உன் மீதே படரவிட்டாய்

(வித்யுத் பிரமணம்)

- மின்கொடி போல அசைந்து ஆடி மீன்கொடி பறக்க விட்டாய்

(லதாப் பிரமணம்) -

கொடி போல அசைந்தே காற்றை படர விட்டாய்

ஊர்த்துவ தாண்டவம் தனில் உன் திருப்பாதம் பூமியில் கோலம் இடக்கண்டேன் ... வானில் உயர்ந்த ஈசன் பாதம் கண்டே

*தேசி லாஸ்யம்*

பிரேரணா லாஸ்யம் உனதன்றோ

பிரேரங்கணா லாஸ்யம் வானியின் நடனம் அன்றோ

குண்டலி லாஸ்யம் மாதவனின் மா நடனம் அன்றோ

தண்டிகா லாஸ்யம் & கலச லாஸ்யம்

லட்சுமியின் ஆனந்த நடனம் அன்றோ

எல்லாம் நான் கேட்ட வரங்களோ அம்மா ?

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா. -
நாவசைக்க

நமசிவாய நான்கு புறமும் சுகந்தம் வீசியதே !!
ravi said…
*மட்டுவார்குழலி*

*தாயுமானவர் கோயில் திருச்சி*

தேன் ஒழுகும் நீண்ட குழல் உனதோ அம்மா

குழல் எடுத்து ஊதினால் என் குரல் கேட்டு வருவாயோ

மடல் ஒன்று வரைந்தேன் என் உளம் தழல் நீங்கி உன் கழல் பற்றிடவே

அம்மா மழல் நீயன்றோ வாழ்வு விழலாகி போக விடுவாயோ

அழல் தீண்டும் மேனிதனில் உன் நிழல் படரவேண்டும்

சுகந்த
குந்தளாம்பிகையே

ஆனந்தவள்ளியே

தாயாக இருக்கும் நீ தாயுமானவரோடு தாய் என வந்தால்

பாய் என சுருட்டிக்
கொள்ளாதோ என் பாழ்வினைகள் ? 💐💐💐
ravi said…
*Sunday Story*

*The Truth Of Life*

"Are You Taking All The Credit For Your Success?"

Your success is the result of not only your efforts, it is a combination of several other factors and support systems.

While the battle of Kurukshetra was at its peak, *Arjuna and Karna* were fighting each other. It was a battle to witness, a flurry of arrows were being exchanged, and even the gods were witnessing this epic battle between the two warriors.

*Arjuna* would shoot his arrows and the impact of these arrows was so intense that *Karna’s* chariot would go back by 25-30 feet. People who witnessed this were amazed by the skills of *Arjuna.*

*Karna* was no less. When he shot arrows, *Arjuna’s* chariot would also shake and go back by three-four feet.

More than anyone else, *Krishna* would applaud *Karna* every time his arrow hit *Arjuna’s* chariot. But not once did he applaud *Arjuna’s* skills.

At the end of the day, *Arjuna* asked *Krishna*: “O Lord, I have shot so many arrows at *Karna’s* chariot, it was being displaced like a feather in the wind, but not once did you appreciate me. Rather, you would appreciate *Karna’s* skill despite his arrows just displacing my chariot a little.”

*Krishna* smiled and replied: *“Arjuna,* remember, your chariot is protected by *Hanuman* on your flag at the top; you have *me* as your charioteer in the front and you have *Sheshnag* at its wheels, yet the whole chariot would still sway and get displaced whenever the valiant *Karna* hit us with his arrows. But *Karna’s* chariot is not protected by any such force. He is on his own, yet he fights valiantly.”

It is said that after the battle of *Kurukshetra* was over, *Krishna* refused to get off the chariot till *Arjuna* got down. Once *Krishna* alighted from the chariot, it caught fire and was reduced to dust.

*Krishna* said: *“O Arjuna,* your chariot was destroyed by *Karna* a long time ago; I was still protecting it. Never in your life have the arrogance to say that you have achieved great heights. If you have achieved something, it is due to the *divine will*. It is *divine intervention* that has always protected you, cleared your path and given you right opportunities at the right time!”

*Reflection*

Every time you feel you have done great in markets/life or anything, just read this, it will bring back to your senses.

Good morning and have a great week ahead.🙏

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53