ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 3 - ஸ்லோகம் - 1 to 10-பக்தர்களின் பெருமை
தசகம் 3 - ஸ்லோகம் 1 - பக்தனுடைய லக்ஷணம்
பட²ன் தோ நாமாநி ப்ரமத³ப⁴ர ஸிந்தௌ⁴ நிபதிதா:
ஸ்மரன்தோ ரூபம் தே வரத³
கத²யன் தோ கு³ணகதா:² ।
சரன் தோ யே ப⁴க்தாஸ்த்வயி க²லு ரமன்தே பரமமூன்
அஹம் த⁴ன்யான்மன்யே ஸமதி⁴க³த ஸர்வாபி⁴லஷிதான் ॥ 3-1॥
पठन्तो नामानि प्रमदभरसिन्धौ निपतिता:
स्मरन्तो रूपं ते वरद कथयन्तो गुणकथा: ।
चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू-
नहं धन्यान् मन्ये समधिगतसर्वाभिलषितान् ॥१॥
स्मरन्तो रूपं ते वरद कथयन्तो गुणकथा: ।
चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू-
नहं धन्यान् मन्ये समधिगतसर्वाभिलषितान् ॥१॥
வரதா ! உம்முடைய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆனந்த ஸாகரத்தில் மூழ்கி தியானம் செய்து கொண்டும் குணங்களையும் கதைகளையும் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டும் சஞ்சரிக்கும் எந்த பக்தர்கள் உம்மிடம் ரமிக்கின்றார்களோ அந்த பக்தர்களை நான் ஸர்வாபீஷ்ட்டங்களையும் அடைந்த பாக்கியசாலிகளாகக் கருதுகின்றேன்
Oh Lord Krishna ! Bhakthi is the most superior path to merge with Thee and leads us to the state of pure divinity without delay. This can be done without much effort and it instantly leads to pure Knowledge. I pray to Thee May I soon experience that state of melting of the heart and Steeped in devotion to Thy lotus feet.
=================================================================
தசகம் 3 - ஸ்லோகம் 2- பக்தியை அருள்வாய்
க³த³க்லிஷ்டம் கஷ்டம் தவ சரணஸேவா
ரஸப⁴ரேऽ
ப்யநாஸக்தம் சித்தம் ப⁴வதி ப³த விஷ்ணோ குரு த³யாம் ।
ப⁴வத்பாதா³ம்போ⁴ஜ ஸ்மரணரஸிகோ நாமநிவஹாத்
அஹம் கா³யம் கா³யம் குஹசந விவத்ஸ்யாமி விஜநே ॥ 3-2॥
गदक्लिष्टं कष्टं तव चरणसेवारसभरेऽ-
प्यनासक्तं चित्तं भवति बत विष्णो कुरु दयाम् ।
भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा-
नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने ॥२॥
प्यनासक्तं चित्तं भवति बत विष्णो कुरु दयाम् ।
भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा-
नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने ॥२॥
ஆதி வியாதிகளால் {க³த³க்லிஷ்டம்} துன்புற்ற என் மனது உமது திருவடிகளை சேவிப்பதால் உண்டாகும் ஆனந்தத்தில் கூட ஆசை இல்லாமல் இருக்கிறது ... விஷ்ணுவே ! இது பெரிய கஷ்டம் . என்னிடம் அருள் புரியும் , நான் உம்முடைய பாத கமலங்களைத் தியானம் செய்வதில் ஆசை மிகுந்தவனாக உம்முடைய திவ்ய நாமங்களைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டு எங்காவது உலகியல் ஆசை கொண்ட அல்லது தாழ்ந்த எண்ணம் கொண்ட அல்லது இறை தியானம் செய்யாத மக்கள் (ஜன சஞ்சாரம்) இல்லாத இடத்தில் வசிக்க விரும்புகிறேன் !
==========================================================================
தசகம் 3 - ஸ்லோகம் 3
க்ரு’பா தே ஜாதா சேத்கிமிவ ந ஹி லப்⁴யம் தநுப்⁴ரு’தாம்
மதீ³யக்லேஶௌக⁴ப்ரஶமநத³ஶா நாம கியதீ ।
ந கே கே லோகேऽஸ்மிந்நநிஶமயி ஶோகாபி⁴ரஹிதா
ப⁴வத்³ப⁴க்தா முக்தா: ஸுக²க³திமஸக்தா வித³த⁴தே ॥ 3-3॥
O Guruvayoorappa! If Thy grace is achieved what is there that cannot be achieved? There are Innumerable devotees ofThine have been liberated from their sorrows and worldly ties by Thy mercy. Can I notbe one such fortunate devotee of Thine?
உம்முடைய கிருபை இருந்தால் உடல் படைத்தவர்களுக்கு என்னதான் அடைய முடியாது ?
என்னுடைய துன்பக் குவியலைக் களைவது என்பது எம்மாத்திரம் ?
இவ்வுலகில் எத்தனை பேர் எப்பொழுதும் துன்பம் இல்லாமல் உமது பக்தர்கள் முக்தர்களாகப் பற்றற்றவர்களாக இன்பமாக வாழவில்லை ?
தசகம் 3 - ஸ்லோகம் 4
முநிப்ரௌடா⁴ ரூடா⁴ ஜக³தி க²லு கூ³டா⁴த்மக³தயோ
ப⁴வத்பாதா³ம்போ⁴ஜஸ்மரணவிருஜோ நாரத³முகா:² ।
சரந்தீஶ ஸ்வைரம் ஸததபரிநிர்பா⁴தபரசித்ஸதா³நந்தா³த்³வைதப்ரஸரபரிமக்³நா: கிமபரம் ॥ 3-4॥
मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो
भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखा: ।
चरन्तीश स्वैरं सततपरिनिर्भातपरचि -
त्सदानन्दाद्वैतप्रसरपरिमग्ना: किमपरम् ॥४॥
உலக பிரசித்தாமான முனிசிரேஷ்டர்களான நாரதர் முதலியவர்கள் உம்முடைய பாத கமலத் தியானத்தால் பிரகாசிக்கும் சச்சிதானந்த ரூபமான அத்வைதப் ப்ரவாஹத்தில் மூழ்கிக் கவலைகள் இல்லாமல் இஷ்டப்படி சஞ்சரிக்கிறார்கள் . அதற்கு மேல் என்ன வேண்டும் ?
O Guruvayoorappa! Great sages like Naarada (who)are well known in the world, have attained Supreme Bliss by meditating on Thy lotus feet and now free to wander will without being noticed. They are free of all sorrows because of their constant contemplation on Thy lotus feet. Indeed, They have attained the eternal knowledge and are always immersed in Thy in the complete state of conscious Bliss beyond all limits of time and space. Is there anything more for them to attain?
தசகம் 3 - ஸ்லோகம் 5
ப⁴வத்³ப⁴க்தி: ஸ்பீ²தா ப⁴வது மம ஸைவ ப்ரஶமயேத³ஶேஷக்லேஶௌக⁴ம் ந க²லு ஹ்ரு’தி³ ஸந்தே³ஹகணிகா ।
ந சேத்³வ்யாஸஸ்யோக்திஸ்தவ ச வசநம் நைக³மவசோ
ப⁴வேந்மித்²யா ரத்²யாபுருஷவசநப்ராயமகி²லம் ॥ 3-5॥
भवद्भक्ति: स्फीता भवतु मम सैव प्रशमये-
दशेषक्लेशौघं न खलु हृदि सन्देहकणिका ।
न चेद्व्यासस्योक्तिस्तव च वचनं नैगमवचो
भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम् ॥५॥
दशेषक्लेशौघं न खलु हृदि सन्देहकणिका ।
न चेद्व्यासस्योक्तिस्तव च वचनं नैगमवचो
भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम् ॥५॥
எனக்கு உம்மிடத்தில் பக்தி பரிபூரணாமாக இருக்க வேண்டும் . அதுவே எல்லாத் துன்பக் குவியல்களையும் அழித்து விடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .. அப்படி இல்லாவிட்டால் , வியாசருடைய வாக்கியமும் உம்முடைய உபதேசமும் வேத வாக்கியமும் எல்லாம் வழிப்போக்கனுடைய வார்த்தை ப் போல பொய்யாகி விடும்
O Guruvayoorappa! Please help me to become more and more devoted to Thee. May my devotion to Thee grow intense, so that all my sufferings may automatically subside and as that is the only remedy for all my woes. I do not have the slightest doubt in my heart that devotion to Thee . For otherwise, all of Vyasa's teachings, Thy divine sayings and even the Vedas will become meaningless the casual mutterings of street wanderer.
=================================================================
தசகம் 3 - ஸ்லோகம் 6
ப⁴வத்³ப⁴க்திஸ்தாவத்ப்ரமுக²மது⁴ரா த்வத்³கு³ணரஸாத்
கிமப்யாரூடா⁴ சேத³கி²லபரிதாபப்ரஶமநீ ।
புநஶ்சாந்தே ஸ்வாந்தே விமலபரிபோ³தோ⁴த³யமிலந்மஹாநந்தா³த்³வைதம் தி³ஶதி கிமத: ப்ரார்த்²யமபரம் ॥ 3-6॥
भवद्भक्तिस्तावत् प्रमुखमधुरा त्वत् गुणरसात्
किमप्यारूढा चेदखिलपरितापप्रशमनी ।
पुनश्चान्ते स्वान्ते विमलपरिबोधोदयमिल-
न्महानन्दाद्वैतं दिशति किमत: प्रार्थ्यमपरम् ॥६॥
O Lord! Chanting Thy names and singing Thy praises is a sweet right from the beginning because of Thy glorious attributes. When such devotion becomes intense, it removes all sorrows of the devotee. Then ultimately it leads the mind to the path of supreme knowledge and bliss. What more is there for one to seek?
உம்மிடம் பக்தி ஆரம்பத்திலேயே உம்முடைய குண ரஸானுபவத்தால் இனிமையாது , சிறிது விருத்தி அடைந்து விட்டாலோ எல்லாத் தாபங்களையும் அறவே போக்கி விடுகிறது மேலும் முடிவில் உள்ளத்தில் நிர்மலமான ஞானத்தை உதிக்கச் செய்து பிரம்மானந்த அத்வைத அனுபவத்தைக் கொடுக்கிறது . அதற்கு மேல் வேண்டுவது என்ன ?
=========================================================================
தசகம் 3 - ஸ்லோகம் 7
விதூ⁴ய க்லேஶாந்மே குரு சரணயுக்³மம் த்⁴ரு’தரஸம்
ப⁴வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜநவிதௌ⁴ ।
ப⁴வந்மூர்த்யாலோகே நயநமத² தே பாத³துளஸீபரிக்⁴ராணே க்⁴ராணம் ஶ்ரவணமபி தே சாருசரிதே ॥ 3-7॥
विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं
भवत्क्षेत्रप्राप्तौ करमपि च ते पूजनविधौ ।
भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी-
परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥
भवत्क्षेत्रप्राप्तौ करमपि च ते पूजनविधौ ।
भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी-
परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥
O Lord of Guruvayoor, Due to my intense physical sufferings, I do not even feel inclined to serve you as my mind is pulled away by the intensity of physical pain. Kindly remove my afflictions so that my feet may be able to walk up to your temple, my hands may be able to worship you, my eyes may be able to have vision of you, my nose may be able to smell the fragrance of the Tulasi leaves offered at your feet and my ears may hear your glories sungand May Thy divine form embodying the Supreme Bliss envelop my mind and heart so completely that I am forced to forget all my physical maladies and experience only the thrill of shedding tears of joy in this state.
எனது கால்கள் உம்முடைய க்ஷேத்திரங்களுக்குச் செல்வதிலும்
கைகள் உமக்கு பூஜை செய்வதிலும், கண்கள் உமது மூர்த்தியை தரிசிப்பதிலும் மூக்கு உமது பாதத்தில் அர்ச்சித துளசியை முகர்வதிலும்
காதுகள் உமது கதைகளைக் கேட்பத்திலும் இன்புறுவதற்கு என்னுடைய துன்பங்களைப் போக்கி அருள் புரியும்
In Sivananda Lahari sloka 7
மனஸ்தே
பாதா³ப்³ஜே நிவஸது
வச: ஸ்தோத்ரப²ணிதௌ
கரௌ சாப்⁴யர்சாயாம்
ச்ருதிரபி
கதா²கர்ணனவிதௌ⁴ ।
தவ த்⁴யானே
பு³த்³தி⁴ர்நயனயுக³லம் மூர்திவிப⁴வே
பரக்³ரந்தா²ன் கைர்வா
பரமசிவ
ஜானே
பரமத:
॥ 7 ॥
10. மோட்ச சாதனம் பெற
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
முகுந்த மாலை சுலோகம் 16
ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।க்ருʼஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துலஸீம் மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம் ॥
அப்படீன்னு, இந்த உடம்பு விசித்தரமான அவயவங்களோட பகவான் படைத்து இருக்கார். ஒவ்வொண்ணுக்கு ஒரு கார்யம் கொடுத்து இருக்கார். ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் அவனோட காரியங்கள்ளே தான் அர்ப்பணம் பண்ணனும், அப்படின்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.
‘जिह्वे कीर्तय केशवं’ – ஹே நாவே! நீ கேசவனைப் பாடு.
‘मुररिपुं चेतो भज’ – மனமே! முரனை அழித்த, முரனுக்கு சத்ருவான அந்த விஷ்ணு பகவான ஸ்மரணம் பண்ணு.
‘पाणिद्वन्द्व श्रीधरं अर्चय’ – இரண்டு கைகளே! அந்த லக்ஷ்மிகாந்தனான நாராயணனுக்கு அர்ச்சனை பண்ணுங்கோ.
‘अच्युतकथा: श्रोत्रद्वय त्वं श्रृणु’ – காதுகளே! அச்யுதனுடைய கதைகளை நீங்கள் இடைவிடாது கேளுங்கள்.
‘कृष्णं लोकय लोचनद्वय’ – இரண்டு கண்களே! இந்த கிருஷ்ணனுடைய அழகைப் பாருங்கள், பருகுங்கள்.
‘हरेगर्चछाङिघ्रयुग्मालयं’ – கால்களே! ஹரியினுடைய ஆலயத்துக்கு நீங்க போங்கோ, அங்க போய் ப்ரதக்ஷிணம் பண்ணுங்கோ.
‘जिघ्र घ्राण मुकुन्दपादतुलसीं’ – ஹே மூக்கே! முகுந்தனுடைய பாதத்துல பூஜை பண்ணின அந்த துளசிய எடுத்து நீ அதை முகர்ந்து பார்.
‘मूर्धन् नमाधोक्षजम्’ – தலையே! நீ அதோக்ஷஜனை வணங்கு.
அப்படீன்னு, இந்த உடம்ப வெச்சுண்டு நம்ம பண்ணவேண்டியது, பகவானோட கார்யம்தான்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்
================================================================
தசகம் 3 - ஸ்லோகம் 8
ப்ரபூ⁴தாதி⁴வ்யாதி⁴ப்ரஸப⁴சலிதே மாமகஹ்ரு’தி³
த்வதீ³யம் தத்³ரூபம் பரமஸுக²சித்³ரூபமுதி³யாத் ।
உத³ஞ்சத்³ரோமாஞ்சோ க³லிதப³ஹுஹர்ஷாஶ்ருநிவஹோ
யதா² விஸ்மர்யாஸம் து³ருபஶமபீடா³பரிப⁴வான் ॥ 3-8॥
प्रभूताधिव्याधिप्रसभचलिते मामकहृदि
त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात् ।
उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो
यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान् ॥८॥
त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात् ।
उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो
यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान् ॥८॥
O Lord! In my mind, which is now very agitated due to mental and physical afflictions, May Thy divine form embodying the Supreme Bliss envelop my mind and heart so completely that I am forced to forget all my physical maladies and experience only the thrill of shedding tears of joy in this state.
அளவற்ற கவலைகளாலும் நோய்களாலும் மிகவும் சலிக்கின்ற என் உள்ளத்தில் உம்முடைய பரம ரஸமான அந்த ஞான ஸ்வரூபம் உதிக்கும் படியும் ஆனந்தத்தால் மயிர்கூச்சும் கண்ணீர்ப் பெருக்கும் உண்டாகும் படி செய்து எப்படி தீராத பீடைகளின் துன்பத்தை மறப்பேனோ அப்படி அருள் புரியும்!
தசகம் 3 - ஸ்லோகம் 9
மருத்³கே³ஹாதீ⁴ஶ த்வயி க²லு பராஞ்சோऽபி ஸுகி²நோ
ப⁴வத்ஸ்நேஹீ ஸோऽஹம் ஸுப³ஹு பரிதப்யே ச கிமித³ம் ।
அகீர்திஸ்தே மா பூ⁴த்³வரத³ க³த³பா⁴ரம் ப்ரஶமயன்
ப⁴வத்³ப⁴க்தோத்தம்ஸம் ஜ²டிதி குரு மாம் கம்ஸத³மந ॥ 3-9॥
O Guruvayoorappa! Many who are not even your devotees are seen leading a happy life. But I, your devotee am undergoing various sufferings. Why is this so? Oh Varada ! Is not Thy reputation of mercy to Thy devotees at stake here ? Oh Lord ! Kindly eradicate my afflictions. It is not a great thing for you to eradicate my ailments. O Lord, may my devotion to you become perfect and make me one of your foremost devotees! That alone can remove all my sufferings.
குருவாயூரப்பா! உம்மிடம் பக்தி இல்லாதவர்கள் கூட சுகமாக வாழ்கிறார்களே ! உம்மிடம் பக்தி செய்யும் நான் மிகவும் தவிக்கிறேன் இது ஏன் ? வரதா ! பக்தனை காப்பாற்றவில்லை என்ற அபகீர்த்தி உமக்கு வரவேண்டாம் . கம்சனை ஒழித்தவரே ! என் வியாதிகளைப் போக்கி விரைவில் என்னை பக்தர்களில் சிறந்தவன் ஆகும் படிச் செய்து அருளும்!
தசகம் 3 - ஸ்லோகம் 10
கிமுக்தைர்பூ⁴யோபி⁴ஸ்
தவ ஹி கருணா யாவது³தி³யாத³ஹம் தாவத்³தே³வ ப்ரஹிதவிவிதா⁴ர்தப்ரலபித: ।
புர: க்லு’ப்தே பாதே³ வரத³ தவ நேஷ்யாமி தி³வஸாந்
யதா²ஶக்தி வ்யக்தம் நதிநுதிநிஷேவா விரசயன் ॥ 3-10॥
இதி த்ரு’தீயத³ஶகம் ஸமாப்தம் ।
किमुक्तैर्भूयोभिस्तव हि करुणा यावदुदिया-
दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः ।
पुरः क्लृप्ते पादे वरद तव नेष्यामि दिवसा-
न्यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन् ॥१०॥
दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः ।
पुरः क्लृप्ते पादे वरद तव नेष्यामि दिवसा-
न्यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन् ॥१०॥
O Guruvayoorappa! What else is there for me to pray for ? I will be giving up lamentations of all kinds and spend my time doing Therefore, O Lord of Guruvayoor, I am not going to leave you. Until I get your grace, I shall serve you, worship you, sing before you, serve and seek your grace to the best of my ability. Kindly eradicate my disease and enable me to be the best of your devotees.
தேவா ! மேலும் மேலும் சொல்வதால் ஆவதென்ன ?
வரதா ! பலவாறுப் புலம்புவதை விட்டு என் முன் விளங்கும் உமது திருவடிகளில் என்னால் கூடியவரை நன்றாக நமஸ்காரம் ஸ்தோத்திரம் பூஜை ஆகியவற்றைச் செய்து கொண்டு நாட்களை கழிக்கிறேன்
பட்டத்தரியின் புலம்பல் ( தசகம் 1 to 3 - சாரம்)
ஏ குருவாயூரப்பா !
உன் அழகில் ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை என்றே அதி கர்வம் கொண்டாயோ ?
தாமரைகள் நெய்த மேனி என்பதால் என்னில் பற்றாமல் நின்றாயோ ?
கருணை, கடலின் ஆழம் என்பதால் உப்பாக கரித்தாயோ ?
உதவிக்கு ஓடி வருபவன் என்பதால் பிணிகள் பல தந்தாயோ ?
லஷ்மி வாழும் மார்பில் ஈரம் கசியாதாது ஏனோ ?
ஈனப்பிறவிகளை யும் ரக்ஷிப்பவன் நீ என்றால் மாசற்ற என்மீது தூசி வீசி சிரிப்பதென்ன ?
எனை விட பாவம் செய்தோர் தேடியும் கிடைக்க வில்லையோ ?
உனையே சரணடைந்தேன்... உன்னில் நான் இன்னும் இழக்கா உறுதியினால்
சிரித்தான் குருவாயூரப்பன்
பட்டத்தரி ...
பால் பொங்கும் முன் அடுப்பை அனைத்தல் நியாமோ?
சூரியன் வருவதற்கு முன் நிலவை காய்தல் தர்மமோ ?
கர்ம வினைகள் கடுகளவு இருந்தாலும் கலங்காமல் நான் வருவேன்
உப்பு தின்பவன் நீர் குடித்தே ஆக வேண்டும் ... பிணி கொடுத்தவன் பிணி தீர்பான்
எனை சரணடைந்தோர் வீழ்வதில்லை ... வீழ்ந்தோர் என் பக்தன் இல்லை....
========================================================================
ஸ்ரீமத் பாகவதத்தில் முதல் ஸ்கந்தம் 3 தசங்களுடன் பூர்த்தி அடைகிறது
Comments
Discipline is the bridge between goals and accomplishment.
The most intense conflicts, if overcome, leave behind a sense of security and calm that is not easily disturbed.
Nobody’s your friend until they defend your name in your absence.
Ease is a greater threat to progress than hardship.
Contributed by Ashok.
LEARNING FROM UNPLEASANT THINGS
More often than not, we're taught to "banish" unpleasant feelings, because of course, they make us feel bad. So, let's get rid of them, get them out of our lives and out of our minds and out of our hearts so that we can live healthy, positive, pleasant lives.
But what if there's something to learn from those unpleasant feelings? What if the fear that we're feeling has a deeper message? What if the discomfort we have when we're in the presence of a particular person has something to teach us about our own prejudices, biases, or instinct? Ignoring the feeling and trying to push it away will do nothing to help us to learn whatever it is that the feeling is trying to teach us.
It would be much like going to a class and disliking the content, and thus never reading the text because we didn't like it. We may avoid more unpleasant feelings of dislike by avoiding the text, but what have we learned? Of course, we've learned nothing, and we've made an obvious choice to learn nothing.
Unpleasant feelings can be a part of who we are. When they're caused by something specific, they can be a part of us for as long as that something is a part of our lives. But what can we learn from them? How can we face those feelings and accept them and actually learn to care for them, no matter how unpleasant they are? Until we find out how we can do so, we may be losing some of the most important lessons of our lives by trying to banish the unpleasant feelings just to feel a bit better in the moment.
May your choices reflect your hopes, not your fears.
Don't use your past as an excuse as to why you are bitter. Use your past as a reason as to why you are better.
When you carry joy in your heart, you can bring a little bit of sunshine everywhere you go.
You hold the key to your true potential.
Contributed by Ashok.
SAYING YOUR THANK YOUS
A year ago, at a get-together of a dozen girlfriends from college, I saw my old friend Therese Gibson. Therese had been one of the fun girls at school; she'd had an easy laugh and had always been up for an adventure. When she heard I was writing this book, she told me about the daily gratitude ritual she and her ninety-five-year-old father, Charlie, practice--they call it "saying their thank-yous"--that keeps them smiling and feeling good. Therese moved in with Charlie, who's still sharp as a tack, at a bad time in both their lives. Charlie's wife, Therese's mother, had just died, and Therese was at the tail end of a painful divorce. Money was tight and Therese says they were as glum as any two people could be. But both of them had heard that gratitude was a great way to feel better, so they decided to sit together for a few minutes each morning before Therese headed off to work and tell each other the three things they were grateful for in their lives.
"It was slow going in the beginning," Therese told me. "The first time we did it, I was feeling so low I had a hard time thinking of even one thing I was grateful for." Finally, she looked around the room and saw a vase she liked. She told Charlie, "I'm grateful for how pretty that vase is." It sounded silly, but it was the best she could do. Charlie wasn't any better at it, often waiting for Therese to give him a clue about what to say. But she and Charlie both noticed that even a thank-you for something superficial had a good effect.
Soon, their decision to focus on what was right in their lives began to pay off. Both Therese and Charlie started to feel happier and notice that more and more things were going their way. Even their money situation improved. Three thank-yous became five, became ten, and soon they had to stop listing the good things in their lives long before they ran out of things to say, or Therese would be late for work.
One day, they were feeling so light and happy after finishing their lists that Charlie, who'd always liked the musical Oklahoma!, started singing "Oh, What a Beautiful Morning." Therese joined in. It was the perfect expression of how being grateful made them feel. They added this song to their ritual and now, saying their thank-yous and singing together has become one of the highlights of their day.
What you're grateful for, you get more of. When you appreciate the happiness and love you already experience, more happiness and love come to you.
I've experienced myself how powerful gratitude is. After the heartbreak I went through, a friend told me to write down five things I was grateful for each night before I went to bed for three weeks straight. I knew that psychologists say it takes twenty-one days to change a habit, so I agreed. At first, I struggled, but my results kept me going. In fact, this simple little exercise worked so well that I continued doing it every night for the next three years, and over time, the pain in my heart eased.
I suggest you try the gratitude exercise yourself. Every night before you go to sleep, list five things that you're grateful for that day, and notice how you feel when you wake up the next morning.
Marci Shimoff
In a class, the teacher asked the children, "Which place in the world is called the epitome of love..?"
The whole class shouted in unison - "Taj Mahal"
Only one student said " *RAMSETU* "
The teacher asked him to stand up.
"What do you mean…?"
The boy stood up and said, "RamSethu was built by Lord Rama not to bury his wife's dead body on the occupied land, but to bring back his wife!!!
Lord Rama remained loyal to only one wife throughout his life and protected the dignity of women, whereas Shah Jahan had many wives, concubines and slave girls.
The Ram Setu was built by soldiers in Sri Rama’s army whereas the Taj Mahal was built by people who were kept as slaves by the Mughals during a big famine.
Moreover, Lord Rama gave full respect to those who built the bridge.
Sri Rama did not cut their hands so that nothing like this would happen again in the world."
The teacher and other students were shocked.
Indian history needs to be re-read from a new perspective. Rewrite Indian History.🐒
—-
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*பிரம்மனை பார்த்து சிந்திய புன்னகை*👌👌👌
ஸாஹாய்யம் தவ ஸம்விதாதும் அவனௌ ஸ்ருஷ்டோ மயா ஜாம்பவான்
ஸ்நேஹஸ்தே பரம: பிதாமஹ மயி த்வம் மத்பிதா கிம் ந்விதம்
கிம் ந அஜோ மம பிதாமஹ இஹ
ஸ்ரீமன் இதி வ்யாஹ்ருதௌ தாதுஸ்தே ச யதா ஸ
மந்தஹஸிதம் தத் தே அத்ய வித்யோததே
நாராயணன் ராமராக அவதாரம் செய்யப் போகிறார் 🥇🥇🥇
நாராயணன் அவதாரம் செய்ய பூமிக்கு வரப்போகிறார் -
அப்பொழுது அவர் பிரம்மாவை சந்திக்கிறார் அப்பொழுது நாராயணன் அவரைப்பார்த்து புன்னகைக்கிறார்..
*ஸாஹாய்யம் தவ ஸம்விதாதும் அவனௌ ஸ்ருஷ்டோ மயா ஜாம்பவான்*👌👌👌
பிரம்மா மிகப்பெருமையுடன் நாராயணனிடம் சொல்கிறார் தான் படைத்து வைத்த ஜாம்பவானைப்
பற்றி -
இவரைப்போல் உத்தமர் இல்லை நாராயணா!
அவர் உனக்கு எல்லா உதவிகளும் செய்வார் உன் அவதாரத்தில் என்று சொல்லியதும் நாராயணன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தானாம் -
யார் உதவியும் அவனுக்குத் தேவை இல்லை அப்படி இருந்தும் பிரம்மா சொன்னவுடன் மெல்லியதாய் புன்னகைத்து அவருக்கு நன்றி சொன்னானாம்...🌷🌷🌷
*ஸ்நேஹஸ்தே பரம: பிதாமஹ மயி த்வம் மத்பிதா கிம் ந்விதம்*
நாராயணன் சொல்கிறான்
பிதாமகரே அனைத்துக்கும் மூத்தவரே, என் தாத்தாவாக இருப்பவரே!!
உங்களுக்குத்தான் என் மீது எத்தனை கருணை...
*கிம் ந அஜோ மம பிதாமஹ இஹ ஸ்ரீமன் இதி வ்யாஹ்ருதௌ*
நான் உங்களுக்கு மகனாவேன் என்னைப்போய் பிதாமகர் ,தாத்தா என்று அழைக்கிறீர்களே நாராயணா - இது என்ன நியாயம் ?🤔🤔
நாராயணன் பதில் சொல்கிறார்
*தாதுஸ்தே ச யதா ஸ மந்தஹஸிதம் தத் தே அத்ய வித்யோததே*💐💐💐
நான்முகன் நான் ராமனாக அவதரிக்கப்
போகிறேன் -
உங்களுக்கு அஜன் என்று ஒரு பெயர் உண்டு
தசரதரின் தந்தையின் பெயரும் அஜன் ..
என் தாத்தாவின் பெயரை நீங்களும் வைத்துக்
கொண்டிருப்பதால் உங்களையும் என் தாத்தா என்று அழைத்தேன் - இதில் என்ன தவறு ?
மிகவும் எளிமையாக அடக்கத்துடன் எவரோ ஒரு அஜனுக்கு பேரனாக பிறக்கப்போகிறவன் இப்படி பிரம்மாவையும் அஜன் என்று சொல்லி புன்னகைக்கிறான்🙂🙂🙂
ராமா அன்று பிரம்மனைப் பார்த்து சிந்திய புன்னகையை எனக்கு காண்பிக்கவோ வடூவுரில் இன்றும் அதே புன்னகையை உன் தாமரை இதழ்களில் தவழ விடுகின்றாயோ ராமா ...
என்னே உன் எளிமை என்னே உன் தன்னடக்கம் .... 🙂🙂🙂🙂🙂
*வனேசுவரர் கோயில்**
*மங்களாம்பிகை*
*(மங்களநாயகி)*
ஸர்வ பூ⁴தா யதா³ தே³வீ பு⁴க்தி முக்திப்ரதா³யினீ।
த்வம் ஸ்துதா ஸ்துதயே கா வா ப⁴வந்து பரமோக்தய: ॥
அம்மா !
உருகி உனை அழைத்தால் உத்தமி நீ ஓடி வருவாய்
உள்ளம் உருகினால் கண்ணீர் சிந்த தேடி வருவாய்
உன் சரண் புகுந்தோர் எதுவும் பெறுவோர்
என்றும் நீயே நிரந்தரீ ....
எதிலும் நீயே சுந்தரீ
இடையில் வரும் தடைகளை அகற்றும் அந்தரீ ...
கேட்காமல் எதையும் கொடுக்கும் அந்த ஹரியும் நீயே !!
உனையே நினைந்தோர் வீழ்வதில்லை
வீழ்ந்தோர் உனை என்றும் நினைத்ததில்லை
சான்றோர் உனை விட்டு செல்வதில்லை
வாழ்ந்தோர் என்றும் உனை வாழ்த்தியவரே ...
வாழ்வோர் இதை உணர்வோர் ஒருநாளே🙏
குறைவாக எடை போடாதீர்கள்.
_*வீடு அழகாக இருக்க வீட்டை தினமும் சுத்தம் செய்கிறோம். வாழ்க்கை சிறப்பாக இருக்க உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.*_
வாழ்க்கையில்
மகிழ்ச்சியா இருப்பது ஒரு கலை
அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில மறதிகள் போதுமானது.
வார்த்தைகளின் வலிமையை குறைவாக எடை போடாதீர்கள். ஒரு சிறிய "ஆம்" ஒரு சிறிய "இல்லை"
என்ற வார்த்தை மொத்த வாழ்க்கையை திருப்பிப் போட்டு விடுகிறது.
சில பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தாலும் கூட
பல பிரச்சனைகளுக்கு தீர்வு பேசாமல் இருப்பதில் கிடைக்கிறது.
கேட்க மட்டுமே தெரிந்த
காதுகளும், பதில் பேசாத வாயும் தான் எப்போதும் எல்லோருக்கும் தேவைப்படுகின்றன.
_*ஆழம் தெரிந்து தான் நீந்த வேண்டுமெனில், காலம் மாறி விடும்..*_
_*விழும் போது தான் எழுந்து வர முடியும்.*_
_*கரையை அடைய எதிர்நீச்சல் போட்டுத் தான் ஆக வேண்டும்...*_
_*முடிவை எடுத்து விட்டால்,*_
_*செயல் முடியும் வரை போராடு...*_
_*வெற்றி நிச்சயம். *_
விழுந்தால் தூக்கி விட
யாரும் இல்லை என உணர்ந்தவனே தான் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் யோசித்து வைக்கிறான்.
தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாமல் வெற்றிகளைக் கொண்டாட முடியாது.
பேச நேரமில்லை என்றால்
நம்பாதீர்கள் அவர்களின் உரிமை பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று அர்த்தம்.
ஒருவரை ஏமாற்றி அபகரிக்கும் சொத்து ஒரு தலைமுறைக்கு கூட நிற்காது உங்களிடம் ஏமாந்தவர்களுக்கு எதிர்க்கும் பலம் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் இறைவனுக்கு கண் இருக்கிறது என்று ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
_*இல்லாதவனின் தேவை*_
_*இப்போதைக்கு இது போதும்*_
_*என்பதாகத் தான் இருக்கும்.*_
_*பெரும்பாலும் அதுவே மரியாதையும்.*_
*நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான*
*நிறத்தால் ஆனது ....*
*அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.*
*My response to him :*
Kindly do not ignore good morning messages from others .
They want to remain connected and also they are taking out time for wishing everyone our days to be good .
Might be boring but such messages will come from good hearted people only . Once in a way you may acknowledge .
I always consider myself lucky to be in someone 's prayer and wishes . Good day 😊
குறைவாக எடை போடாதீர்கள்.
_*வீடு அழகாக இருக்க வீட்டை தினமும் சுத்தம் செய்கிறோம். வாழ்க்கை சிறப்பாக இருக்க உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.*_
வாழ்க்கையில்
மகிழ்ச்சியா இருப்பது ஒரு கலை
அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில மறதிகள் போதுமானது.
வார்த்தைகளின் வலிமையை குறைவாக எடை போடாதீர்கள். ஒரு சிறிய "ஆம்" ஒரு சிறிய "இல்லை"
என்ற வார்த்தை மொத்த வாழ்க்கையை திருப்பிப் போட்டு விடுகிறது.
சில பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தாலும் கூட
பல பிரச்சனைகளுக்கு தீர்வு பேசாமல் இருப்பதில் கிடைக்கிறது.
கேட்க மட்டுமே தெரிந்த
காதுகளும், பதில் பேசாத வாயும் தான் எப்போதும் எல்லோருக்கும் தேவைப்படுகின்றன.
_*ஆழம் தெரிந்து தான் நீந்த வேண்டுமெனில், காலம் மாறி விடும்..*_
_*விழும் போது தான் எழுந்து வர முடியும்.*_
_*கரையை அடைய எதிர்நீச்சல் போட்டுத் தான் ஆக வேண்டும்...*_
_*முடிவை எடுத்து விட்டால்,*_
_*செயல் முடியும் வரை போராடு...*_
_*வெற்றி நிச்சயம். *_
விழுந்தால் தூக்கி விட
யாரும் இல்லை என உணர்ந்தவனே தான் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் யோசித்து வைக்கிறான்.
தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாமல் வெற்றிகளைக் கொண்டாட முடியாது.
பேச நேரமில்லை என்றால்
நம்பாதீர்கள் அவர்களின் உரிமை பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று அர்த்தம்.
ஒருவரை ஏமாற்றி அபகரிக்கும் சொத்து ஒரு தலைமுறைக்கு கூட நிற்காது உங்களிடம் ஏமாந்தவர்களுக்கு எதிர்க்கும் பலம் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் இறைவனுக்கு கண் இருக்கிறது என்று ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
_*இல்லாதவனின் தேவை*_
_*இப்போதைக்கு இது போதும்*_
_*என்பதாகத் தான் இருக்கும்.*_
_*பெரும்பாலும் அதுவே மரியாதையும்.*_
*நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான*
*நிறத்தால் ஆனது ....*
*அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.*
*"எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?" -பெரியவா*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*(ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?-பெரியவா)*
(*பெரியவா நடத்தின லீலை)*
*கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்*
*புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.*
*நன்றி-17-12-2015 தேதியிட்ட குமுதம் பக்தி
(ஒரு பகுதி)முன்பு படித்தது- இது வேறு ஆசிரியர்.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது.கிட்டத்தட்ட பத்தரை,பதினொரு மணி இருக்கும் .அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கிற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.
பரமாசார்யா அந்த பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரைக் கூப்பிட்டார்.
"எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?" அப்படின்னு கேட்டார்.
எல்லாருக்கும் ஆச்சர்யமான ஆச்சரியம்.அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா,ரவாதோசை வேணும்னு கேட்கிறார்.அதுவும் எனக்கு திங்கணும் போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும் விட ஆச்சரியம், கிட்டத்தட்ட பாதி ராத்திரியை நெருங்கிண்டு இருக்கிற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்!
ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர்,அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத்தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது?
உடனடியா உக்ராண அறைக்குப் போனவா, சங்கடமான விஷயம் தெரியவந்தது. அது என்னன்னா ரவாதோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒரு துளி கூட இல்லைங்கறதுதான்.
இத்தனை நேரத்துக்கு அநேகமாக எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்ணறதுன்னு புரியாம தவிச்ச நேரத்துல ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி விறுவிறுன்னு வெளியில் கிளம்பி, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கிறதைப் பார்த்து ,ரவையை வாங்கி,மூச்சுவாங்க அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்தா.
அப்புறம் என்ன! பத்துப் பன்னிரண்டு ரவா தோசை வார்த்து பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.
அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, "ரொம்ப நன்னா இருக்கு.திருப்தி ஆயிடுத்து இதெல்லாம் கொண்டுபோய் உள்ளே வைச்சுட்டு, எல்லாரும் தூங்கப் போங்கோ!" அப்படின்னார்.
என்னடா இது. ஒரு விள்ளல் சாப்பிடறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசாரியா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.
கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலஞ்சு வைதீகாள் பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துல தங்கி இருந்துட்டு விடியற்காலம் ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.
விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப்போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலயே, "என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும் அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவா தோசைகளை எடுத்துவைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!"-பெரியவா.
சொல்லப் போனவர் திகைத்து நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம்.அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணி வைக்கணும்கறதையும் மகா பெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்ப்பட்ட ஞானதிருஷ்டி.
"என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்க்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?
வந்திருந்த வைதீகாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம். தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்சு ,கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்கு தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா.
மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்
*ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🪔🌸
*பகிர்வு*
🪷🌸🌹🪔🌿🔔⛰️🔯✡️🛕🌋🔱🕉️🙏🪴🌺🌻💐
பரிவாரங்களுடன்
காட்டிற்குள்
வேட்டையாட சென்றான்.
திடீரென மன்னன் அமர்ந்திருந்த குதிரை மட்டும் வெறிபிடித்து, காட்டிற்குள் மன்னனை எங்கெங்கோ இழுத்துச்
சென்று,
இறுதியில் ஒரு குழிக்குள் தள்ளிவிட்டு சென்றது.
அந்த நேரத்தில் அங்கு வந்த கிராமத்து வாசிகள் 4 பேர் மன்னனை
காப்பாற்றி
பரிவாரங்களுடன்
சேர்த்தனர்.
மன்னன் அந்த 4 கிராமத்து
வாசிகளையும் அரசவைக்கு அழைத்து, விருந்து உபசரிப்பு செய்து மகிழ்ந்தான்.
இறுதியாக அரசவையை விட்டு கிளம்பும்
நேரத்தில், "உங்களுக்கு
என்ன
வேண்டும்" என்று மன்னன், அந்த கிராமத்து வாசிகளிடம் கேட்டான்.
அதற்கு முதல் கிராமவாசி தனக்கு ஒரு
மாடு
வேண்டுமென்றான்.
இரண்டாமானவன் நிலம் வேண்டும் என்றான்.
மூன்றாமானவன் அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றான்.
அவர்கள் கேட்டபடியே மன்னன் அவர்களுக்கு செய்து கொடுத்தான்.
நான்காமானவனிடம் “என்ன
வேண்டும்..?" என்று மன்னன் கேட்க, அதற்கு அவன், "தங்களை காப்பாற்றிய அந்த நாளை ஒரு திருநாளாக நினைத்து,
ஒவ்வொரு
வருடமும்
என் வீட்டிற்கு
நீங்கள் வருகை தரவேண்டும்
என்னோடு ஓரிரு நாள் தங்கி இருந்து
சிறப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக்
கொண்டான்.
அவன் கேட்டுக் கொண்டபடியே
ஒவ்வொரு
வருடமும் அந்த
கிராமத்திற்கே மன்னன்
செல்ல
ஆரம்பித்தான். மன்னன் செல்வதற்காக அந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்யப்பட்டது.
அதன்பின்னர் மன்னன் தங்கியிருக்கும் நாட்களில் குடிநீருக்காக அந்த கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
மன்னன் தங்குவதற்காக அங்கு அரண்மனை கட்டப்பட்டது.
அந்த
இளைஞனின்
நற்குணத்திற்காக
மன்னன், தன் மகளை மணமுடித்து
வைத்தான்.
ஆண் வாரிசு இல்லாத அந்த மன்னன், அந்த இளைஞனுக்கு முடிசூட்டி வைத்தான்.
நாமும் மன்னனிடம் முதல் மூன்று பேர் கேட்ட மாதிரியே இறைவனிடம் பொன்,
பணம்,
ஆபரணங்கள்
என
கேட்கின்றோம்.
நான்காமானவன் போல நாமும் இறைவனிடம், “என்னோடு வந்து
தங்கியிருங்கள்" என்று கடவுளிடம்
நாம்
கேட்டதும்
கிடைக்கும்.
அதோடு நமக்கு தேவையான சகலமும் பெற்று பெருவாழ்வு வாழலாம்..🙏
*வடுவூர்* *ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்வாமி*** 💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Mother's Special*...
கௌசல்யாவுக்கு ராமன் கொடுத்த முதல் பரிசு*😊😊😊
இதுவரை நாம் பார்த்த புன்னகை எல்லாம் ஸ்ரீமன் நாராயணன் ராமராக அவதரிக்கும் முன் சிந்தியவைகள் -
இன்று mother 's special --
கௌசல்யாவிற்காக ராமனாக அவதரித்த எம்பெருமான் ஒரு புன்னகை பூத்தானாம் -
*பூமியில் ராமனாக அவன் அவதரித்த பின் பூத்த முதல் புன்னகை இதுதான்*😊 -
இந்த புன்னகையை ராமர் தன் தாயாருக்காக dedicate செய்தாராம்....😊😊😊
*தத்த: கிம் மம ரங்கிணா கருணயா ஸத்யம் ஸுதஸ்தத்ஸம:*💐💐💐
அயோத்தியில் இருந்த ரங்கநாதர் - பிறகுதான் அவர் ஸ்ரீரங்கம் வந்தார் -
கௌசல்யா தினமும் அந்த ரங்கநாதரை வணங்கி நல்ல குழந்தையைக்
கொடு என்று கேட்பார் -
அந்த ரங்கநாதர் தான் கேட்டதற்கு மேலாக குழந்தையை கொடுத்துவிட்டு அந்த குழந்தை அரங்கனைப்போல் திவ்விய சொரூபனாகவும் இருக்கும்படி செய்து விட்டார் -
கேட்டதற்கு மேலாக இந்த அரங்கன் கொடுத்துவிட்டான் ---🙏🙏🙏
*கிம் வா அத ஸ்வயமேவ யேன ஸுஷமா காசின்முகே தாவகே*
அரங்கனைப்போல் இந்த குழந்தை இருப்பதால் இந்த குழந்தை அரங்கன் தான் -
அவனே எனக்கு குழந்தையாக இங்கு வந்து பிறந்து விட்டான் -
ரங்கநாதனுக்கு ஒரு குறை இருந்ததாம்
யாருமே தனக்கு சரியாக மங்கலாசனம் செய்வதில்லை என்று -
அதற்காக தானே ராமனாக அவதரித்து தனக்குத்தானே நல்ல முறையில் மங்கலாசனம் செய்து கொண்டானாம்...
பிரஷ்டி , சுதபர் எனும் தம்பதிகள் நாராயணனை வேண்டி தவம் இருக்கையில் நாராயணனிடம் எங்களுக்கு நீ பிள்ளையாக வந்து பிறக்கவேண்டும் என்று மூன்று தடவை வேண்டிக்
கொண்டார்களாம் -
இறைவனும் மூன்று முறை வேண்டிக்கொண்டதால் நான் உங்களுக்கு மூன்று முறை வந்து பிறப்பேன் என்று வரம் அளித்தான் -
முதலில் ப்ருஷ்டி கர்பனாக அவதரித்தார் -
இரண்டாவது பிரஷ்டி சுதபர் -- அதிதீ கச்சபராகி அவர்களுக்கு வாமனராக அவதரித்தார் -
பிறகு தேவகி வாசுதேவருக்கு குழந்தையாக அவதரித்தார்🌷🌷🌷
யேன ஸுஷமா காசின்முகே தாவகே
*எப்படி ரங்கநாதனே ராமனாக அவதரித்தான் என்று புரிந்து கொண்டாள் கௌசல்யா ?*👍👍👍
அதற்கான அறிகுறிகள் ராமனின் முகத்தில் தெரிகிறதாம்.
ரங்கநாதனுக்கு உரிய அங்க அடையாளங்கள் அவை ..
*நேத்ரம் கோமல பத்ம பத்ர விபுலம் வத்ஸேதி மாதுர்கிரா*-
ரங்கநாதனுக்கு உரிய அடையாளங்கள்
அவனுடைய திருக்கண்கள் ,
தாமரையைப்
போன்ற விரிந்த நீண்ட அகல திருக்கண்கள் ,
மிகவும் அழகான திருக்கண்கள் --
தாமரைக்கண்களை ராமன் முகத்தில் பார்க்கிறாள் கௌசல்யா -
இப்படிப்பட்ட கண்கள் அவனுக்கு மட்டுமே உரியவை -
அவன் மீனாக , வராகமாக , நரசிம்மனாக அவதரித்தபோதும் அவன் கண்கள் தாமரைக்
கண்களாகவே தான் இருந்ததாம் -- 🪷
ராமனுக்கும் அதே கண்கள் இருப்பதால் அரங்கன் தன்னைப்போல் ஒரு குழந்தையை தந்து விட்டானோ அல்லது அவனே ராமனாக வந்துவிட்டானோ என்று வியந்து போகிறாளாம்...🥇🥇🥇
*யன்மந்தஸ்மிதம் ஆஸ்ய பூஷணம் அபூத் தத் தே அத்ய வித்யோததே*
ஆஹா கௌசல்யா இந்த ரகசியத்தை எப்படியோ தெரிந்துகொண்டு விட்டாளே என்று அவளுடைய ஞானத்தை எண்ணி தொட்டிலில் இருந்த ராமன் மெலிதாக புன்னகைத்தானாம்
அந்த புன்னகைதான் ராமா நீ எங்களுக்காக வடூவூரில் காண்பிக்கிறாயோ ?😊😊😊
அந்த புன்னகை எங்கள் எல்லோரையும் காப்பாற்றட்டும்
*அந்த புன்னகை எங்கள் எல்லோரையும் காப்பாற்றட்டும்*😊😊😊
ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீ பாதமே ஷரனு
கமலா சதி மூகக்கமல கமலஹித
கமலப்ரியா கமலெக்ஷனா
கமலா சனசாஹித, கருட கமன ஸ்ரீ
கமலலா நாபா நீ பதகமலமே ஷரனு || 1 ||
பரம யோகிஜன பாகதேய ஸ்ரீ
பரமபுருஷா பராத்பரா
பரமாத்மா பரமானுருப ஸ்ரீ
திருவேங்கதாகிரிதேவா ஷரனு || 2 ||
*நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்*.
எந்த காலத்திலும் நீங்கள் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
*நடக்கும் எந்த நிகழ்வின் மீதும் யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது*
எல்லாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற அகந்தைப் போக்கு
ஓரு மாயத் தோற்றம்.
நிகழ்வுகள் எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன.
நடக்கும் நிகழ்வோடு நீங்கள் ஒத்துழைக்கலாம் அல்லது எதிர்த்துப் போராடலாம்.
எதிர்த்துப் போரிட்டாலும் நடப்பது நடந்தே தீரும்.
நீங்கள் தான் உங்களது மகிழ்ச்சியை இழப்பீர்கள்.
எனவே வாழ்க்கையோடு ஒத்துழையுங்கள்
ஒத்துழைத்தால் உங்கள் மனதில்
ஒரு பரவசம் ஓரு பேருவகை இருக்கும்
கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் தெளிவாகிவிடும்.
That night Misha got into a fight with her mother and left the house. On the way, she remembered that she had no money in her pocket, nor did she have any coins to call home.
Soon she crossed a noodle shop. Suddenly, the aroma of noodles made her hungry. She wanted a bowl of noodles, but had no money.
The shopkeeper saw her standing in front of the counter and asked, "Hey dear, do you want to eat a bowl of noodles?"
"But... I don't have money." She answered hesitantly. "Do not worry, I have a solution for that too." The shopkeeper said. "Come in, I will make you a bowl of noodles."
A few minutes later, the shopkeeper brought her a bowl full of hot noodles. A few minutes after eating it, Misha started crying.
"What happened child?" the shopkeeper asked. “Nothing! I'm just overwhelmed by your kindness." Misha said, wiping her tears. "A stranger on the street gives me a bowl of noodles, and my own mother kicked me out of the house after a small fight. What she did was wrong!!"
The shopkeeper remained silent for some time and kept listening to her. Then when she finished the noodles, he sat down beside her and asked her very patiently and affectionately, "Dear, why did you think so? Think again!! I just gave you a bowl of noodles and you felt a sense of gratitude...while your mother has been nurturing you since you were in her womb, even before you were born. Have you ever paid any attention to her? Have you ever felt heartfelt gratitude towards her?"
Misha was really shocked to hear this. She thought to herself, "Why didn't I ever think so? A stranger's bowl of noodles made me feel grateful and I have never felt such gratitude for my mother, who has raised me since childhood. I did not even have the slightest feeling of it."
In that moment, she got restless to meet her mother. A while ago, there was hatred for her mother in her eyes, but now she had tears of love for mother.
She thanked the shopkeeper wholeheartedly and went back home.
As soon as Misha reached home, she saw that her mother was waiting at the door. She looked worried and tired, and was looking for her everywhere. Seeing Misha, her mother said softly, "Where did you go Misha, come in, dear. You must be very hungry? I have prepared your favourite rice for you. Come eat it while it is still hot."
Misha ran to her mother and started crying in her arms. The mother's heart also filled with love, the atmosphere was brimming with love.
Sometimes, in life, we get so moved by a stranger's small kindness that it becomes easy to appreciate them, and be grateful to them. On the other hand, we tend to take for granted the love and support of those with whom we are very close, especially our parents. We get so used to their love, care, encouragement, support and sacrifice that we see all this as their responsibility towards us, and start thinking of ourselves as deserving of it all!
And often without even thinking about it, we vent our anger on them.
A loving embrace and respect for them from the bottom of our heart, perhaps that will bring them the happiest moments.
-----------------------------------------------
" நாம் ஒருபோதும் செய்ய விரும்பாதவற்றைச் செய்து கொண்டும், நமக்கு விருப்பமில்லாதவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டும், நமக்கு விருப்பமில்லாத ஒரு தொழில் அல்லது வேலையில் இருந்து கொண்டும் வாழும் இந்த வாழ்க்கையை வாழ்ந்தால் என்ன? வாழா விட்டால் என்ன?
ஆனால் தன்னுடைய பணி இன்னதென்று கண்டு கொண்டவனே செல்வந்தன் ஆவான்.
தன்னுடைய பணியில் ஒரு நிறைவை உணரத் தொடங்குகிறவனே பெரிய செல்வந்தன் ஆவான்.
அந்நிலையில் மொத்த வாழ்க்கையுமே ஒரு வழிபாடாகி விடும்."
-
*நா.ப*
ஏ குருவாயூரப்பா ...
ஸ்ரீமத் பாகவதம் என்பது ஓர் பெரிய கனி ...
அதில் எல்லா இடத்தையும் சுகர் எனும் கிளி கொத்தி கொத்தி 18000 ஓட்டைகள் போட்டுவிட்டது .
அதன் ஸாரை நாராயணீயம் எனும் பெயரில் 1000 plus
கிண்ணத்தில் உன் அருளால் தர முயர்ச்சிக்கிறேன் .
நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ண வேண்டும் !
*கு. வா* ...
ஏதேது இங்கே நீ வந்தது உன் வியாதியை குணமாக்கவா இல்லை என்னிடம் சத்தியம் வாங்கவா ?
*நா.ப* இரண்டும் பெறவே .
குறுக்கே கேள்வி கேட்க்காமல் கேள் ...
எப்படி ஸ்ரீமத் பாகவத்தைப் படிப்பவர்களுக்கு எல்லா சௌபாக்கியங்களும் கிடைக்குமோ அந்த அளவிற்கு... ஏன் அதற்கும் மேல்
ஸ்ரீமத் நாராயணீயம் படிப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும்
அவர்களும் முக்தி அடையவேண்டும் ..
எந்த வியாதிகளும் அவர்களை தீண்டக்கூடாது !!
*கு.வா:* பேஷ் பேஷ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ...
முதலில் உன் வாதம் சரியாகட்டும் பிறகு இதைப்பற்றி வாதம் செய்யலாம் !
*நா.ப :* சத்தியம் செய்தால் தான் நான் மேலே தொடர்வேன் !
*கு.வா* ... என்ன அழுத்தம் ! என்ன பிடிவாதம் ...
நான் என் அன்னை யசோதாவிடம் சீண்டிய மாதிரி ...
சரி சத்தியம் செய்கிறேன் ..
நாராயணீயம் படிப்பவர்கள் அடையும் நன்மை சொல்லி மாளாது அவர்கள் என்றும் என் முக்தர்கள் போதுமா ?
*நா.ப* .... ரொம்ப நன்றி குருவாயூரப்பா ...
என் கழுத்தில் கொஞ்சம் அசைவு வரும் படி செய்
உன் மேனியழகை காணாமல் எப்படி உன்னை வர்ணிப்பேன் ?
*கு.வா* : முடியாது ...
உன் வியாதியை 100வது தசகம் பூர்த்தியான பின் தான் சரி செய்வேன்
*நா.ப* ...
குருவாயூரப்பா ! நீ கருணை க் கடல் என்றார்களே ... உப்புக்கடலாய் அல்லவா இருக்கிறாய் ...
உன் முக அழகை பார்க்காமல் எப்படி என் வார்த்தைகளை அமைப்பேன் ?
*கு.வா* ....
உன்னை கோயிலுக்குள் நான்கு பேர் சுமந்து கொண்டு வந்தார்கள் அல்லவா ...
அப்பொழுது என்னை ஏன் கவனிக்க வில்லை ?
*நா.ப* உண்மைதான் உன் கோயிலுக்குள் வந்தும் உன் நினைவு வரவில்லை என் தேகத்தின் மீது தான் என் முழு கவனமும் இருந்தது
*கு.வா* ... உன் கழுத்து வலி நீயாக தேடிக்கொண்டது ...
என்னால் கழுத்தை இங்கும் அங்கும் அசைக்க முடியும் குதிக்க முடியும்
சரி ஒரு உதவி செய்கிறேன் என் கழுத்தை உன் பக்கமாய் திருப்புகிறேன் பார்த்துக்கொள்!
*நா.ப* ...2000 நாக்குகள் கொண்ட ஆதி சேஷன் கூட வர்ணிக்க முடியாத உன் அழகை வெறும் ஓரக்கண்ணால் எப்படி பருகுவேன் குருவாயூரப்பா ?
*கு.வா* ...
நீ கரடியாய் கத்தினாலும் சரி திரௌபதி போல் உரக்க கத்தினாலும் சரி ...
உன் கழுத்தில் அசைவுகளை நான் இப்பொழுது தரமாட்டேன் !
*நா.ப* ...
முதல் தசகம் முதல் ஸ்லோகம் ஆரம்பிக்கிறார் ...
யாரோ தன் கழுத்தை வருடி விடுவதைப்போல் உணர்கிறார் ...
அங்கே சின்ன குட்டி கிருஷ்ணன் தையிலம் எடுத்து அவர் வலியை குறைத்த வண்ணம் நிற்கிறான் !!
கண்களில் நீர் ததும்ப பட்டதரி சொல்கிறார் ...
இதுவன்றோ தாய் அன்பு ...
உன்னால் பொய்யாக கூட யாரையும் கோபிக்க தெரியாது என்பதை உணர்த்தி விட்டாய் குருவாயூரப்பா ...
குருவாயூரப்பன் சிரித்த வண்ணம் தலையை ஆட்டியவண்ணம் தன் கர்ப்பக்கிரஹத்துக்குள் செல்கிறான் ...
*நாராயணீயம் தொடர்கிறது* ...........
*கதலிவனேசுவரர் & காமாக்ஷி*
ஸர்வஸ்ய பு³த்³தி⁴ரூபேண ஜனஸ்ய ஹ்ருதி³ ஸம்ஸ்தி²தே।
ஸ்வர்கா³பவர்க³தே³ தே³வி நாராயணி நமோஸ்துதே ॥8॥
*அம்மா* ....
உன் நாமங்கள் யார் தினம் தினம் நாவில் இசைக்கின்றனரோ ,
எவர் உனை நினைத்து பாடிக்கொண்டும்
ஆனந்த ஸாகரத்தில் மூழ்கி தியானம் செய்த வண்ணம் இருப்பார்களோ
உன் கல்யாண குணங்களையும் கதைகளையும் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்
கொண்டும்
உன் ஆலயங்கள் நாடிக்கொண்டும் உன்னிடம் ரமிக்கின்றார்களோ
அவர்கள் ஸர்வா
பீஷ்ட்டங்களையும் அடைந்தவர்கள் என்றே சொல்வது மிகை ஆகுமோ *அம்மா* ?
நான் உன்டைய பாத கமலங்களைத் தியானம் செய்வதில் ஆசை மிகுந்தவனாக
உம்முடைய திவ்ய நாமங்களைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டு
உலகியல் ஆசை கொண்ட அல்லது தாழ்ந்த எண்ணம் கொண்ட
அல்லது இறை தியானம் செய்யாத மக்கள் (ஜன சஞ்சாரம்)
இல்லாத இடத்தில் வசிக்க அருள் செய்வாயோ *அம்மா* ? 💐💐
எல்லாம் இன்பமயம் எதிலும் உந்தன் முகம்
எங்கும் உந்தன் வனம்
பொங்கும் உன் எழில் குணம்
மனம் எங்கும் உன் நாம மணம் ...
நாவில் உன் ஆட்சி பலம்
நவில்வதெல்லாம் நீ தரும் வரம் ...
நல்லவர்களுக்கு நீ நீட்டும் கரம்
அதுவே நீ என்றும் செய்யும் அறம் ...
பரம் வேண்டி நின்றோர்க்கு
தவம் என்று வந்தாய் ...
வலம் வந்து வழி பட்டால்
வளம் குறைவின்றி தருவாய் ...
குலம் கோத்திரம் தேவையில்லை ...
குளம் எங்கும் உன் மலர் வனம் ...
அதில் கண்டேன் உன் கமல முகம் !!💐💐💐🪷🪷🪷🪷🪷
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Mother's special continues*💐💐💐💐😊😊😊
*மேலும் ஒரு சிறப்பான புன்னகை கௌசல்யாவிற்கு*👌👌👌😊
டோலாயாம் ஜனனீ ந ஸுப்த இதி ஸா த்வாம் வீக்ஷ்ய தூர்ணம் தத: ஸௌமித்ரீம் ஸவிதே
விதாய மதுரம் காதும் ப்ரவ்ருத்தா ததா ஸாகூதம் தவ நாம யச்ச வதனே மந்தஸ்மிதம் மஞ்ஜுளம்
தத்வேதம் வடுவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ🙂🙂🙂
*தாய்க்கு காட்டிய அதே புன்னகை வடூவூர் வசிக்கும் எல்லோருக்கும் கிடைக்க செய்தான் ராமன்*👌👌👌
*டோலாயாம்* = தொட்டில்
*ஜனனி* = அம்மா
*ந ஸுப்த* = தூங்குவதில்லை
கௌசல்யாவுக்கு ஒரே மன வருத்தம் .. தொட்டிலில் கிடந்த ராமன் தூங்குவதே இல்லை என்று ...😰💧
*இதி ஸா த்வாம் வீக்ஷ்ய தூர்ணம் தத👌👌*
ராமன் இப்படி தூங்காமல் அழுது கொண்டே இருப்பதற்கு கௌசல்யாவினால் காரணம் கண்டு
பிடிக்க முடியவில்லை ...
கௌசல்யா அங்கே வரும் வசிஷ்டரிடம் கேட்கிறார் இதற்கு ஏதாவது உபாயம் தர வேண்டி
வசிஸ்ட்டருக்கு புரிந்து விட்டது .
தொட்டிலை மாற்றி போடும் படி சொன்னார் .
முதலில் ராமன் தொட்டிலுக்கு அடுத்து பரதனும் , பரதனுக்கு அடுத்து இலக்ஷ்மணனும் அடுத்து சத்துகனும் இருந்த வரிசையை மாற்றி
ராமன் தொட்டிலுக்கு அடுத்து லக்ஷ்மணனையும் பரதன் தொட்டிலுக்கு அடுத்து சத்ருகனையும் இடம் மாற்றினாள்...👏👏👏
*ஸௌமித்ரீம் ஸவிதே*
*விதாய மதுரம்*👍👍👍
ராமனின் அழுகை குறைந்தது
ஆனால் புன் சிரிப்பு இல்லை தூங்கவும் இல்லை ..
உடனே மீண்டும் கௌசல்யா வசிஷ்டரிடம் ஓடினாள்.
உடனே வசிஷ்ட்டர் ...
நான்கு தொட்டில்கள் வேண்டாம் .. இரண்டு போதும் ...
ராமன் இருக்கும் தொட்டிலில் லக்ஷமணனை போடு
அதே மாதிரி பரதன் இருக்கும் அதே தொட்டிலில் சத்துருகனை போடு என்று அறிவுரை சொன்னார்...💐💐💐
ராமரின் அழுகை உடனே நின்று விட்டதாம் . ராமனின் முகத்தில்
புன்னகை பூக்க தொடங்கியதாம் ...
தன் பக்தன் பரிசம் தன் மீது பட்டவுடன் தூக்கமும் ஆனந்தமாக வந்ததாம் .
புன்னகையும் உறக்கமும் போட்டி போட்டுக்கொண்டு வர கௌசல்யாவிற்கு பெருமை , சந்தோஷம் தாங்க முடியவில்லை ...
அதே அழகிய தூக்கம், புன்னகை பரதன் முகத்திலும் தவழ்வதை கௌசல்யா கவனிக்க தவற வில்லை...🙂🙂🙂
*ஸௌமித்ரீ* என்று லக்ஷ்மணனுக்கு ஒரு பெயர் உண்டு
*ஸவிதே*
*விதாய மதுரம் காதும்*
*ப்ரவ்ருத்தா ததா ஸாகூதம் தவ நாம யச்ச*
*வதனே மந்தஸ்மிதம் மஞ்ஜுளம்*
இறைவன் பக்தனின் பரிசம் தன் மீது எப்பவும் இருக்க வேண்டும் என்று விரும்புபவன் .
பக்தர்களை தன் பக்கம் கொண்டு வந்து சேர்பவர்களையும் அதிகம் விரும்புவான் ...
துருவனுக்கு மோக்ஷம் கிடைக்கும் முன் அவன் தாயாருக்கு வைகுண்ட பதவி கொடுத்தானம் நாராயணன் ...
துருவன் எனும் மகத்தான பக்தனை தனக்கு கொடுத்ததற்காக இந்த விலை மதிக்க முடியாத பரிசை அவன் , துருவனின் தாயாருக்கும் கொடுத்தான்👍👍👍
அதை போல பக்தன் தன்னிடம் வந்து விட்டான் என்று காட்டிய புன்னகையை ராமன் இன்னும் அதிகப்படுத்திக்
கொண்டானாம் கௌசல்யாவை பார்த்து ...
தன் பக்தனை தன்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்காக ....🙂🙂🙂
*தத்வேதம் வடுவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ*
ராமா அன்று கௌசல்யாவிற்கு தன் பக்தனின் பரிசம் கிட்டியதற்காக புன்னகையை பரிசாக தந்தாயே
அதே புன்னைகையை வடுவூரில் உள்ள எல்லா பக்தர்களையும் உன் பாதங்களில் சேர்க்க வேண்டி இன்றும் உன் முகத்தில் தவழ வைத்துள்ளாயோ ராமா ?💐💐💐😊😊😊
துர்கா பரமேஸ்வரியின் பல நாமங்களில் மிகவும் பிரசித்தமான நாமம் இது ...
மன உற்சாகத்தை தருபவள் என்று பொருள் ...
லக்ஷ்மி செல்வம் தருவாள் வாணீ கல்வி தருவாள்
இவள் மன உற்சாகத்தைத் தருவாள் ...
எதையும் அனுபவிக்க உற்சாகம் மிகவும் அவசியம் ...
ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் கடைசி வரை நமக்கு இருப்பதில்லை ...
இதை நாம் வேண்டி பெற வேண்டும் ...
அபிராமி பட்டர் தளர்விலா மனம் தருவாள் அம்பாள் என்கிறார் ...
இதுவே மன உற்சாகம் ...
இதைப்பெற்றுவிட்டால் நம் கவனம் எதிலும் சிதறாது தோய்வு அடையாது 🙏
அர்ஜுனனின் துக்கம்: அர்ஜுனன் துக்கத்தாலும், தனது மதிப்பிற்குரிய பெரியவர்கள் மற்றும் உறவினர்களுக்கு எதிராகப் போராட தயக்கத்தாலும் மூழ்கடிக்கப்படுகிறான். அவர் தனது தார்மீக சங்கடத்தை வெளிப்படுத்துகிறார் மற்றும் இரத்தக்களரி மூலம் பெறப்பட்ட வெற்றியின் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறார். அர்ஜுனனை வழிகாட்டுதலை நாடி கிருஷ்ணரிடம் சரணடைகிறார்.
கிருஷ்ணரின் ஆரம்ப பதில்: அர்ஜுனனின் பலவீனம் மற்றும் உறுதியின்மைக்காக கிருஷ்ணர் அவரைக் கண்டிக்கிறார், அது ஒரு போர்வீரனுக்குத் தகாதது என்று கூறுகிறார். அர்ஜுனனை தனது உணர்ச்சி உணர்வுகளைக் கைவிட்டு தனது கடமையை நிறைவேற்றும்படி அவர் வலியுறுத்துகிறார்.
ஆன்மாவின் இயல்பு: கிருஷ்ணர் ஆன்மாவின் நித்திய இயல்பை விளக்கத் தொடங்குகிறார், அதன் அழியாத தன்மை மற்றும் மாறாத தன்மையை வலியுறுத்துகிறார். ஆன்மா அழியக்கூடிய உடலிலிருந்து வேறுபட்டது என்றும், எனவே, கொல்லப்பட்டவர்களுக்காக துக்கப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். கிருஷ்ணர் ஆன்மாவின் மறுபிறப்பை விளக்குகிறார்.
கடமை மற்றும் சமநிலை: பயன்பாடுகளின் மீது பற்று இல்லாமல் ஒருவரின் கடமையை (தர்மம்) நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை கிருஷ்ணர் வலியுறுத்துகிறார். அவர் "புத்தி யோகம்" என்ற கருத்தை அறிமுகப்படுத்துகிறார், இது அனைத்து சூழ்நிலைகளிலும் சமநிலையைப் பேணுவதை உள்ளடக்கிய புத்தியின் யோகமாகும் செயல்களின் பலன்களில் பற்று இல்லாமல் செயல்களைச் செய்வது கர்ம அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறது என்பதை அவர் விளக்குகிறார்.
உறுதியான முனிவரின் பண்புகள்: தெய்வீக உணர்வில் நிலைபெற்ற ஒருவரின் குணங்களைப் பற்றி அர்ஜுனன் விசாரிக்கிறார். நிலையான ஞானம் கொண்ட ஒரு முனிவரின் குணாதிசயங்களை கிருஷ்ணர் விவரிக்கிறார், சுயக்கட்டுப்பாடு, பற்றின்மை மற்றும் உள் அமைதியை வலியுறுத்துகிறார். கட்டுப்பாட்டு புலன்கள் எவ்வாறு அழிவுக்கு வழிவகுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் எவ்வாறு அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை அவர் விளக்குகிறார்.
அமைதியை அடைதல்: பொருள் ஆசைகளையும் அகங்காரத்தையும் கைவிட்ட ஒருவர் உண்மையான அமைதியை அடைகிறார், மேலும் ஞான நிலையை விவரிக்கிறார் என்பதை விளக்கி கிருஷ்ணர் முடிக்கிறார்.
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*தந்தைக்கு சிந்திய புன்னகை* 💐💐💐😊😊😊
இதுவரை ராமன் தன் தாய் கௌசல்யாவுக்கு மூன்று முறை மெல்லியதாய் புன்னகை உதிர்த்தான் ..
முதல் தடவை இந்த இனிய தமிழ் புத்தாண்டு நாளில் தந்தை தசரதனுக்கு புன்னகை உதிர்கிறான் 🙂🙂🙂
த்ராதா தஸ்ய கஜஸ்ய கிம் நு தனயோ ஜாதோ மமாயம் புமான்
ஆதௌ ஏவ கஜாதிரோஹண விதௌ ஆனம்ய ப்ருஷ்டே த்ருத:
ஸானந்தேன கஜேன பத்ம நயனம் தேனேதி வாசா பிது:
யன்மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் கிந்விதம் ராஜதே🥇🥇🥇
தசரதன் தன் பட்டது யானையின் மேல் குழந்தையாக இருக்கும் ராமனை அமர வைத்து அயோத்தி மக்கள் கண்டு களிக்க வேண்டி ஊர்வலம் வரச் செய்கிறான்
*த்ராதா தஸ்ய கஜஸ்ய கிம் நு தனயோ ஜாதோ மமாயம் புமான்*👌👌👌
*த்ராதா என்றால் காப்பாற்றியவன்*
தஸ்ய கஜஸ்ய ...அதாவது அந்த கஜேந்திரன் எனும் யானையை ...எது ஆதிமூலமே என்று அன்று பிளிரியதோ அந்த யானையை...
யானை ஆதி மூலமே என்று அழைக்க வில்லையாம்
முதலை ...
முதலே, மூலமே என்று அழைத்தது
ஆனால்
எம்பெருமானின் காதுகளில் ஆதி மூலம் என்று விழுந்ததாம் ...
பக்தன் மீது இறைவனுக்கு எவ்வளவு கருணை பாருங்கள்...🙂🙂🙂
*ஆதௌ ஏவ கஜாதிரோஹண விதௌ ஆனம்ய ப்ருஷ்டே த்ருத:💐💐*
தசரதன் சொல்கிறான்
எந்த நாராயணன் அன்று யானையை காப்பாற்றினானோ அவன் தான் இன்று யானையின் மீது அமர்ந்து கொண்டு பவனி வருகிறான் .
*சத்துருஜகன்* எனும் பட்டது யானை தன் வம்சத்தில் வந்த கஜேந்திரன் எனும் யானையை காப்பாற்றிய நாராயணனுக்கு , நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று அவன் அவதாரமாக இருக்கும் ராமனை பெருமையுடன் சுமந்து கொண்டு வருகிறதாம்...👍👍👍
*ஸானந்தேன கஜேன பத்ம நயனம் தேனேதி வாசா பிது:💐💐💐💐💐💐💐💐*
*ஸானந்தேன* .. மிகவும் ஆனந்தமாக
*கஜேன* ... பட்டது யானையானது
*பத்ம நயனம்* அந்த தாமரைக் கண்ணனான ராமனை சுமந்து கொண்டு வருகிறதாம் .💐💐💐
ஒரு கேள்வி வரலாம் .
பட்டத்து யானைக்கு ராமன் தான் அன்று காப்பாற்றிய நாராயணன் என்று எப்படித் தெரியும் ?
ராமரின் தாமரைக் கண்கள் காட்டிக்கொடுத்து விட்டதாம் ..
நாராயணனுக்கு மட்டுமே இருக்கும் தாமரைக் கண்கள் இந்த குழந்தை ராமனுக்கும் இருக்கிறதே அதானால் இந்த ராமன் தான் அன்று கஜேந்திரனை காப்பாற்றிய நாராயணன் என்று...🐘🐘🐘
*தேனேதி வாசா பிது:*
*யன்மந்தஸ்மிதம் ஆனனே*
*தவ பபௌ தத் கிந்விதம் ராஜதே💐💐💐💐*
தசரதன் சொன்னானம் ...
ஆஹா நம் பட்டத்து யானை ஆனந்தமாக , பெருமிதத்துடன் தாமரைக் கண்ணனை சுமந்து கொண்டு அன்று நாராயணன் மூலம் தப்பித்துக்கொண்ட கஜேந்திரனை காப்பாற்றியதற்கு நன்றி கடன் செலுத்துவதை போல் சந்தோஷமாக ராமனை சுமந்து கொண்டு பவனி வருகிறது ...💐💐💐
அதை கேட்டு குழந்தை ராமன் மெல்லியதாய் ஒரு புன்னகை பூத்தானாம் ..
அவ்வாறு தசரதன் சொன்னபோது ராமா உன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்ததே ...
அதே புன்னகையை எங்களுக்கும் காட்டவே வடுவூரில் காட்சி தருகிறாயோ ராமா எங்களுக்காக🥇🥇🥇
The death of the mighty Chhatrapati Shivaji Maharaj, who founded and led the Maratha empire to its undefeated glory relieved the Mughals.
Little did they know they would now be entering the tiger’s den by facing Shivaji’s valiant son Chhatrapati Sambhaji Maharaj, if they wished to expand their empire in the deccan.
There’s more to him than being Shivaji’s son who was betrayed by his own men, captured and brutally executed by Aurangzeb (played by Akshaye Khanna).
The film sheds light on why he was widely revered by his people and feared by rivals in the nine years that he held the Maratha throne.
Even his brutal execution couldn’t kill his warrior spirit and fight for Swaraj.
The irony is most of our history books have not been able to acknowledge the bravery of the Marathas ...
Difficult to hold the tears falling from our eyes on seeing the maratha cub being tortured by the mughals at the end .
A wonderful movie in other words a must watch movie for inspiring us to fight for our Swaraj , come what may !
*ஏ குருவாயூரப்பா !*
உன் அழகில் ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை என்றே அதி கர்வம் கொண்டாயோ ?
தாமரைகள் நெய்த மேனி என்பதால் என்னில் பற்றாமல் நின்றாயோ ?
கருணை, கடலின் ஆழம் என்பதால் உப்பாக கரித்தாயோ ?
உதவிக்கு ஓடி வருபவன் என்பதால் பிணிகள் பல தந்தாயோ ?
லஷ்மி வாழும் மார்பில் ஈரம் கசியாதாது ஏனோ ?
ஈனப்பிறவிகளை யும் ரக்ஷிப்பவன் நீ என்றால் மாசற்ற என்மீது தூசி வீசி சிரிப்பதென்ன ?
எனை விட பாவம் செய்தோர் தேடியும் கிடைக்க வில்லையோ ?
உனையே சரணடைந்தேன்... உன்னில் நான் இன்னும் இழக்கா உறுதியினால் !
*சிரித்தான் குருவாயூரப்பன்*
*பட்டத்தரி* ...
பால் பொங்கும் முன் அடுப்பை அனைத்தல் நியாமோ?
சூரியன் வருவதற்கு முன் நிலவை காய்தல் தர்மமோ ?
கர்ம வினைகள் கடுகளவு இருந்தாலும் கலங்காமல் நான் வருவேன்
உப்பு தின்பவன் நீர் குடித்தே ஆக வேண்டும் ...
பிணி கொடுத்தவன் பிணி தீர்பான்
எனை சரணடைந்தோர் வீழ்வதில்லை ...
இருந்தும் வீழ்ந்தோர் என் பக்தன் இல்லை....
*கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்*
*சாந்தநாயகி*
ஸ்ருஷ்டிஸ்தி²திவினாஶானாம் ஶக்திபூ⁴தே ஸனாதனி।
கு³ணாஶ்ரயே கு³ணமயே நாராயணி நமோஸ்துதே ॥11॥
விஸ்வாசம் கொண்டு வேண்டி நின்றால் நீயே *விசுவாவசு* வாக வந்திடுவாய் ..
சித்திரை ஒன்றிலே சித்திரம் உன்னை சிங்காரமாய் வரைந்து வைத்தேன் ...
குளத்தில் இருந்த கமலங்கள் என் படத்தில் வந்து அமர்ந்த மாயம் என்ன ? 🪷
குமரி உன் இதழ் வரைந்தேன் ... ரீங்காரம் இட்டு தேனீக்கள் மகரந்தம் சேர்க்க வந்த மாயம் என்ன ?
துன்பங்கள் இனி இருக்காது என்றே உன் இரு காதுகள் சொல்லி வரைந்தேன் ...
வானில் உள்ள நிலவு தாரகைகள் மூலம் தன்னை தாடகம் ஆக்கிக்கொண்ட மாயம் என்ன ?
நேர் கோட்டில் வாழ்க்கை செல்ல வேண்டும் என்றே வேண்டி உன் நாசி தனை வரைந்தேன் ...
மதுரை மூக்குத்தியும் குமரி மூக்குத்தியும் நேர்கோட்டில் தோழிகளாய் வந்து அமர்ந்த மாயம் என்ன ?
உன் கண்கள் திறக்க கர்ப்பூரம் ஏற்றினேன் ...
ஆயிரம் கரம் கொண்டு ஆதவன் என்னை ஆரத் தழுவக்கண்டேன்
அமையப்போகும் போகும் நாட்கள் எல்லாம் நான் வரம் தரும் நாட்களே என்றே கிளியாய் நீ பேசக்கண்டேன் ... 🦜
ஆனந்த கண்ணீரில் அலை வந்து மோத அதில் படகோட்டி சென்றேன் ... மாலுமியாய் நீ கூட வர
கரை காணாமல் போகுமோ ... இனி கறை ஏதும் படியுமோ ?
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*தந்தைக்கு சிந்திய புன்னகை* 💐💐💐😊😊😊
இதுவரை ராமன் தன் தாய் கௌசல்யாவுக்கு மூன்று முறை மெல்லியதாய் புன்னகை உதிர்த்தான் ..
முதல் தடவை இந்த இனிய தமிழ் புத்தாண்டு நாளில் தந்தை தசரதனுக்கு புன்னகை உதிர்கிறான் 🙂🙂🙂
த்ராதா தஸ்ய கஜஸ்ய கிம் நு தனயோ ஜாதோ மமாயம் புமான்
ஆதௌ ஏவ கஜாதிரோஹண விதௌ ஆனம்ய ப்ருஷ்டே த்ருத:
ஸானந்தேன கஜேன பத்ம நயனம் தேனேதி வாசா பிது:
யன்மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் கிந்விதம் ராஜதே🥇🥇🥇
தசரதன் தன் பட்டது யானையின் மேல் குழந்தையாக இருக்கும் ராமனை அமர வைத்து அயோத்தி மக்கள் கண்டு களிக்க வேண்டி ஊர்வலம் வரச் செய்கிறான்
*த்ராதா தஸ்ய கஜஸ்ய கிம் நு தனயோ ஜாதோ மமாயம் புமான்*👌👌👌
*த்ராதா என்றால் காப்பாற்றியவன்*
தஸ்ய கஜஸ்ய ...அதாவது அந்த கஜேந்திரன் எனும் யானையை ...எது ஆதிமூலமே என்று அன்று பிளிரியதோ அந்த யானையை...
யானை ஆதி மூலமே என்று அழைக்க வில்லையாம்
முதலை ...
முதலே, மூலமே என்று அழைத்தது
ஆனால்
எம்பெருமானின் காதுகளில் ஆதி மூலம் என்று விழுந்ததாம் ...
பக்தன் மீது இறைவனுக்கு எவ்வளவு கருணை பாருங்கள்...🙂🙂🙂
*ஆதௌ ஏவ கஜாதிரோஹண விதௌ ஆனம்ய ப்ருஷ்டே த்ருத:💐💐*
தசரதன் சொல்கிறான்
எந்த நாராயணன் அன்று யானையை காப்பாற்றினானோ அவன் தான் இன்று யானையின் மீது அமர்ந்து கொண்டு பவனி வருகிறான் .
*சத்துருஜகன்* எனும் பட்டது யானை தன் வம்சத்தில் வந்த கஜேந்திரன் எனும் யானையை காப்பாற்றிய நாராயணனுக்கு , நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று அவன் அவதாரமாக இருக்கும் ராமனை பெருமையுடன் சுமந்து கொண்டு வருகிறதாம்...👍👍👍
*ஸானந்தேன கஜேன பத்ம நயனம் தேனேதி வாசா பிது:💐💐💐💐💐💐💐💐*
*ஸானந்தேன* .. மிகவும் ஆனந்தமாக
*கஜேன* ... பட்டது யானையானது
*பத்ம நயனம்* அந்த தாமரைக் கண்ணனான ராமனை சுமந்து கொண்டு வருகிறதாம் .💐💐💐
ஒரு கேள்வி வரலாம் .
பட்டத்து யானைக்கு ராமன் தான் அன்று காப்பாற்றிய நாராயணன் என்று எப்படித் தெரியும் ?
ராமரின் தாமரைக் கண்கள் காட்டிக்கொடுத்து விட்டதாம் ..
நாராயணனுக்கு மட்டுமே இருக்கும் தாமரைக் கண்கள் இந்த குழந்தை ராமனுக்கும் இருக்கிறதே அதானால் இந்த ராமன் தான் அன்று கஜேந்திரனை காப்பாற்றிய நாராயணன் என்று...🐘🐘🐘
*தேனேதி வாசா பிது:*
*யன்மந்தஸ்மிதம் ஆனனே*
*தவ பபௌ தத் கிந்விதம் ராஜதே💐💐💐💐*
தசரதன் சொன்னானம் ...
ஆஹா நம் பட்டத்து யானை ஆனந்தமாக , பெருமிதத்துடன் தாமரைக் கண்ணனை சுமந்து கொண்டு அன்று நாராயணன் மூலம் தப்பித்துக்கொண்ட கஜேந்திரனை காப்பாற்றியதற்கு நன்றி கடன் செலுத்துவதை போல் சந்தோஷமாக ராமனை சுமந்து கொண்டு பவனி வருகிறது ...💐💐💐
அதை கேட்டு குழந்தை ராமன் மெல்லியதாய் ஒரு புன்னகை பூத்தானாம் ..
அவ்வாறு தசரதன் சொன்னபோது ராமா உன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்ததே ...
அதே புன்னகையை எங்களுக்கும் காட்டவே வடுவூரில் காட்சி தருகிறாயோ ராமா எங்களுக்காக🥇🥇🥇
*ஏ குருவாயூரப்பா !*
உன் அழகில் ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை என்றே அதி கர்வம் கொண்டாயோ ?
தாமரைகள் நெய்த மேனி என்பதால் என்னில் பற்றாமல் நின்றாயோ ?
கருணை, கடலின் ஆழம் என்பதால் உப்பாக கரித்தாயோ ?
உதவிக்கு ஓடி வருபவன் என்பதால் பிணிகள் பல தந்தாயோ ?
லஷ்மி வாழும் மார்பில் ஈரம் கசியாதாது ஏனோ ?
ஈனப்பிறவிகளை யும் ரக்ஷிப்பவன் நீ என்றால் மாசற்ற என்மீது தூசி வீசி சிரிப்பதென்ன ?
எனை விட பாவம் செய்தோர் தேடியும் கிடைக்க வில்லையோ ?
உனையே சரணடைந்தேன்... உன்னில் நான் இன்னும் இழக்கா உறுதியினால் !
*சிரித்தான் குருவாயூரப்பன்*
*பட்டத்தரி* ...
பால் பொங்கும் முன் அடுப்பை அனைத்தல் நியாமோ?
சூரியன் வருவதற்கு முன் நிலவை காய்தல் தர்மமோ ?
கர்ம வினைகள் கடுகளவு இருந்தாலும் கலங்காமல் நான் வருவேன்
உப்பு தின்பவன் நீர் குடித்தே ஆக வேண்டும் ...
பிணி கொடுத்தவன் பிணி தீர்பான்
எனை சரணடைந்தோர் வீழ்வதில்லை ...
இருந்தும் வீழ்ந்தோர் என் பக்தன் இல்லை....
மஹிஷன் தாமச குணத்தின் மொத்த வடிவம் ... சத்வ குணம் மட்டுமே கொண்டு அவனை திருத்த முடியாது அதனால் அம்பாள் ரஜோகுணம் கொண்டு அவனுடைய அகங்காரத்தை அழிக்கிறாள் ... துர்கையாக எல்லா தேவர்களுடைய ஒன்றிய சக்தியாக வருகிறாள் ...
அவள் போரிட்ட அசுரர்களின் பலம் வியக்கத் தக்கது
*List of Asuras who fought with maa durga*
1.சிக்ஷூரன் - படை சேனாதிபதி
2.சாமரன்- சதுரங்க பலங்களுடன் வருகிறான்
3.உதக்ரன் (ஆயிரம் தேர்களுடன் வருகிறான்)
4உத்தனை
5.உக்ராஷ்யனன்
6.உக்ரவீர்யன்
7மஹாஹனு-
(கோடித்
தேர்களுடன் வருகிறான்)
8.அஸிலோமா-5 கோடித் தேர்களுடன்
9.பாஷ்கலன் - ஆறு லக்ஷம் தேர்கள்
10.பரிவாரிதன் - ஆயிரக்கணக்கான யானைப்படைகளும் குதிரைப் படைகளும் கோடி தேர்களும்
11.பிடாலன் 50 கோடி ரதங்கள்
12.மகிஷாசுரன்
துர்க்கை ஓர் பெரிய அட்டஹாசம் ( பலத்த சிரிப்பு) செய்து இவ்வளவு பெரிய சேனையை அழிக்கிறாள்
தாமஸ் குணத்தை அழித்து சத்வ குணமாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ...
அபிராமி பட்டர் அடித்து சொல்கிறார் அவர்கள் இருவரும் ஒருவரே என்று
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே!
*என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!*
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!13
ஒரு குழந்தை பிறந்த ஓர் வினடிக்குப்பின் அதன் வயது என்ன என்று கேட்டால் என்ன சொல்வோம் ...
ஒரு வினாடி என்போம் ..
பிறந்த நாழிகையில் இருந்து அதற்கு வயது எறிக்கொண்டேதான் போகிறது ...
இங்கே பட்டர் மூவா முகுந்தன் என்கிறார் ...
அதாவது மூப்பே வராத அல்லது வயதே ஏறாத முகுந்தன் என்கிறார் ...
வயதே ஏறவில்லை என்றால் அவருக்கு சகோதரி எப்படி இருக்க முடியும் ... ?
வெளிச்சம் இருக்கிறது நாம் எதிர்மறையாய் நடந்தால் நிழல் முதலில் வருகிறது ...
நிழலும் பின் தோன்றும் நிஜமும் வேறு வேறு அல்லவே .....
அவர்கள் இருவரும் சொல்லும் பொருளும் போல் , நிழலும் நிஜமும் போல் நெருப்பும் அதன் உஷ்ணமும் போல் ...
மூவா முகுந்தற்கு இளையவளே! என்றால் நிஜத்திற்கு நிழலாய் இருப்பவளே என்று பொருள் ...
சகோதரி ஆனால் இதில் மூத்தவளும் இல்லை இளையவலும் இல்லை முகுந்தனே தான் அவள் 👍
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே!"
நம்மாழ்வாரின் அருமையான பாசுரம் ...
ஓவ்வொரு தடவை சொல்லும் போது புதுப்புது அர்த்தங்கள் நமக்கு கிடைக்கும் ..
ஓர் சின்ன அலசல் புரிவோமா ?
*என் மனனே* : எனது மனமே.
*உயர்வு அற உயர்நலம் உடையவன் யவனவன் :*
எதையெல்லாம் நாம் உயர்ந்தது என்று நினைக்கிறோமோ அவைகளை வீழ்த்தி அதற்கும் மேல் உயர்வாக இருப்பவன்
எண்ணில் அடங்காத கல்யாண குணங்கள் உடையவன் எவன் ஒருவனோ
*மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் :*
(மனதில் சூழ்ந்துள்ள) அஞ்ஞானம் முற்றிலும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியேனுக்கு க்ருபை பண்ணினவன் எவன் ஒருவனோ,
*அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் :* மறப்பு இல்லாத நித்யசூரிகளுக்கு ஸ்வாமி (தலைவன்) எவன் ஒருவனோ,
*துயரறு சுடர் அடி தொழுதெழு :*
துக்கங்களைப் போக்கக்கூடிய அந்த எம்பெருமானுடைய சோதி மயமான திருவடிகளை வணங்கி, நீ கடைத்தேறக் கடைவாய் (விழைவாய், விரும்புவாய்)
உன் பாதங்களையே பற்றிக்கொண்டு, உன்னாலேயே உயர்ந்த கதியைப் பெற்று, எப்போதும் உன்னுடன் கூடியிருக்கும் பாக்கியமானது எப்போதும் நிலையாக இருக்கவேண்டுமே! பகவானே!
தயவுசெய்து, இந்த நிலையான சுகத்தை எனக்கு அருள நீ எண்ணம் கொள்ளவேண்டுமே👍
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*விசுவாமித்திரர் சொல்லும் கதை கேட்டு ராமன் உதிர்க்கும் புன்னகை😊😊😊*
பூய: சித்ரா: ஸுரம்யா: பதி குசிக புவ: ச்ருண்வத: தே கதாஸ்தா: த்ருஷ்ட்வா ஸௌமித்ரி
வக்த்ரம் ரஸம் அனுபவத: ப்ரீதிமன் மானஸஸ்ய ஆஸீத் மந்த ஸ்மிதம் யத் வதன கமலஜம் ஹந்த
ஸாகூதம் ஏதத் ஸத்யம் ஸம்பத் மயம் ஸத் ஸ்புரதி ரகுபதே பச்யத: சித்தஹாரீ👌👌👌👌💐💐💐💐💐💐
விசுவாமித்திரர் ராமனையும் லக்ஷ்மணனையும் தன்னுடைய யாகசாலைக்கு அழைத்து செல்கிறார்.
போகும் வழியில் பல கதைகளை இருவருக்கும் சொல்கிறார் அதைக்கேட்டு ராமன் புன்னகைக்கிறான்
அது மட்டும் அல்ல லக்ஷ்மணன் மகிழ்ச்சியாக கதை கேட்டுக்கொண்டும் வரும் அழகைப்பார்த்து ராமன் புன்னகைக்கிறானாம்
🙂🙂🙂
*பூய: சித்ரா*: அழகாக இருந்தன
*ஸுரம்யா:* மிகவும் இனிமையாகவும் இருந்தன
*பதி குசிக புவ*: போகும் பாதையிலே விசுவாமித்திரர் கதைகளை சொல்கிறார்
*ச்ருண்வத: தே கதாஸ்தா*: -
அதை கேட்டு சந்தோஷத்தில் ராமன் மகிழ்கிறான்
ராமன் மட்டும் மகிழவில்லை லட்சுமணனின் சந்தோஷத்தை கண்டு மகிழ்கிறானாம்🙂🙂🙂
: *த்ருஷ்ட்வா ஸௌமித்ரி வக்த்ரம்* --
ஸௌமித்ரி என்று லக்ஷ்மணனுக்கு ஒரு பெயர் உண்டு -
சுமத்திரையின் மகனான லக்ஷ்மணனை பார்த்து
*ரஸம் அனுபவத: ப்ரீதிமன் மானஸஸ்ய* ---
அதே ரசனை, அதே முக பாவம் அத்தனையும் தன் தம்பியின் முகத்தில் இருப்பதைப்பார்த்து மகிழ்ச்சி அடைகிறான் ராமன் -
கதைகளின் ரசம் சுவையாக இருக்கிறது -
தம்பியும் மகிழ்ச்சியாக இருக்கிறான் -
அதாவது பக்தனின் மகிழ்ச்சி தான் உண்மையான சந்தோஷம் இறைவனுக்கு👌👌👌
*ஆஸீத் மந்த ஸ்மிதம் யத் வதன கமலஜம் ஹந்த ஸாகூதம் ஏதத்*
தாமரை மொட்டு மலர்ந்ததைப்போல் உன் முகத்தில் புன்னகை மலர்ந்ததோ ?
அதாவது உன் முகம் ஒரு தாமரை தடாகம் அதில் மலர்ந்த தாமரை மொட்டு உன் புன்னகை😊😊😊
*ஸத்யம் ஸம்பத் மயம் ஸத் ஸ்புரதி ரகுபதே பச்யத: சித்தஹாரீ*
அதே புன்னகை தான் , அன்று சிந்திய புன்னகைதான் இன்றும் வடுவூரில் உன் தாமரை முகத்தில் தங்க வைத்துள்ளாய் -
இது சத்தியம் இதில் வேறு மாறுபட்ட கருத்தே இல்லை -
பக்தர்களுக்கு எல்லா வரங்களையும், வளங்களையும் தரவல்லது இந்த புன்னகை -
கான்பவர் உள்ளங்களை கவர்ந்து செல்லக்கூடியதாகவும் இருக்கிறது ராமா உன் புன்னகை!!😊😊😊
ஆரணி.
( பெரிய பாளையம் அருகே )
திருவள்ளூர் மாவட்டம்
ஶரணாக³த தீ³னார்த பரித்ராணபராயணே।
ஸர்வஸ்யார்திஹரே தே³வி நாராயணி நமோஸ்துதே
*அம்மா* ....
இனிய நாமங்கள் பலக்கொண்டாய்
இனிக்கும் கரும்பை கரம் கொண்டாய்
இனிக்கும் மதுரம் இதழ் கொண்டாய்
இனிக்கும் பார்வையில் தாய்மை தந்தாய்
இனிக்கும் எழிலில் நிகர் கொன்றாய்
இனிக்கும் மாலை தனில் இகம் கொண்டாய்
இனிக்கும் பதியில் உயிர் தந்தாய் ... இனிக்கும் எதுவும் உன் வசம் கொண்டாய் ...
உனை நினைப்பது என்றும் இனிப்பதுவே ...
இனிப்பின் சுவை எனக் கலந்தேன்
இனிப்பும் நானும் சொல்லும் பொருளும் ஆனோம் அம்மா !
இனியவளே இளையவளே இயல் இசை நாடகம் என என்றும் தித்திப்பவளே !!
பேதை எனை ஆட்கொள்ள கோதை வந்தாள்!
எனை *ஆண்டாள்*! எனை *ஆண்டாள்*!
தனை ஆண்ட திருமாலின் மனை ஆண்டாள்!
அங்கமது பட்டுடை தரிக்க,
தங்க மணி ஆரம் அலங்கரிக்க,
மங்கையவள் செந்திலகக் கீற்றதைத்,
திங்கட்பிறை நெற்றியில் வரைந்தாள்,
நங்கையர் பலர் போற்றும் வண்ணம்,
மங்கலத்திரு உருவாய் வளர்ந்தாள்!
மண்டை முடி, கொண்டை கொண்டாள்!
கெண்டை,கயல் விழியால் கண்டாள்!
பண்டை அணிகலனாம் ...
தண்டை மணி ஒலிக்க...அவள்
கழல்பதிக்க, பசும்புல் பாதை விரிக்க,
நிழலெனவே வந்த பசுவுடன்
*அங்கே கோதை வந்தாள்*!
உள்ளம்,நிறைகாதல் கொள்ள
பள்ளிகொண்ட மால் ஆட்கொள்ள....
சித்தம் நெறி காட்டிய வழி,
புத்தம் புது காதல் மொழி,
நித்தம் பல வித்தை செய்யும்,
தத்தை வழி தூது விடுத்தாள்!
அல்லி மலர் மெல்லியலாள்,
சொல்லிய மொழி உடனுரைக்கும்,
கையிலேந்திய கிளியிடம் மெல்ல,
மையல் அதை காதில் சொல்ல...
நல்ல வார்த்தைத் திரும்பச் சொல்லும்,
செல்லக் கிளி அதுவும் செல்ல...
கோதை காதல் தூது விடுத்தாள்,
பாதை பார்த்து மனம் ஏங்கித் துடித்தாள்.
ஆதிசேஷ அரவப் படுக்கையில்,
பாதி சயன எழில் மிடுக்குடனே...
ஊதிய வலம்புரி நாதம் முழங்க,
ஓதிய வேதமாய் அருளும் வழங்க...
நாதன் பத்மநாபன் அவனை
மாதவன் ,அந்த அனந்த சயனனைத்
தோதாய்ப் பாற்கடல் *தாலாட்ட*,
தூதாய்த் தத்தையும் *தால்* *ஆட்ட*,
என்ன ஓர் அற்புத காட்சி *கோலம்*,
உன்னத தெய்வீகக் காதல் *கோலம்*
*பெரியநாயகி*
ஹம்ஸயுக்த விமானஸ்தே² ப்³ரஹ்மாணீ ரூபதா⁴ரிணீ।
கௌஶாம்ப:⁴ க்ஷரிகே தே³வி நாராயணி நமோஸ்துதே💐
எண்ணெமெல்லாம் நீ நிறைந்தாய் என் ஏக்கமெல்லாம் நீ மறைத்தாய் ...
உள்ளமெல்லாம் உவகை பொங்க சிரித்தாய் ...
உதடுகளிலே பழ ரஸம் பரப்பி வைத்தாய்
சிந்துவதெல்லாம் தேன் என்றால் தித்திப்பது உன் நாமம் ஒன்றே என்றால்
அம்மா அறுசுவை வேண்டேன் ...
ஆடம்பரங்கள் வேண்டேன் ...
வையம் வேண்டேன், துரகம் வேண்டேன் மதகரி வேண்டேன்,
மாமகுடம் வேண்டேன், சிவிகை வேண்டேன்
பெய்யும் கனகம் வேண்டேன் பெருவிலை ஆரம் வேண்டேன்
வேண்டுவதெல்லாம் உன் திருவடிகள் ஒன்றே ...
என் சென்னிதனில் கமலமாய் உன் அடிகள் பதிய
அடைந்திடுவேன் யாரும் அறியா பரமானந்தம் அதுவே நீ தரும் சிவானந்தம் !!💐💐💐
*கோடிக்காவல்* *கோடீசுவரர் கோயில்*
*வடிவாம்பிகை*
( *திரிபுரசுந்தரி* )💐💐💐
த்ரிஶூலசந்த்³ராஹித⁴ரே மஹாவ்ருஷப⁴வாஹினி।
மாஹேஶ்வரீ ஸ்வரூபேண நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
கோடீஸ்வரீ நீ கோபுரங்கள் நீ
கோடி கரங்கள் உள்ளவள் நீ
கோடி சூரியனைக் கொண்டவள் நீ
தேடித்தேடி அலைவோர்க்கு தெரியாத மறை நீ ...
தெரிந்து உணர்வோர்க்கு தெவிட்டாத அமிர்தம் நீ ...
புரியாமல் இருப்போருக்கு புதிர் நீ
புரிந்து தொழுவோர்க்கு பொக்கிஷம் நீ
வறுமையில் வாடுவோர்க்கு வற்றாத சுனை நீ
தற்பெருமையில் மிதப்போர்க்கு பெருந் துன்பம் தருபவள் நீ
மிருதங்கம் எழுப்பும் ஒலி நீ மெல்லிய குழலின் சுவை நீ
கோடிகள் சேர்ந்தாலும் கோமகள் உனை மறப்பேனோ ...
நாடிகள் உள்ளவரை உனையன்றி வேறு தெய்வம் நினைப்பேனோ ?
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*தாடகையைப்பற்றி வர்ணனை - விசுவாமித்திரர்... ராமனின் புன் சிரிப்பு 🙂🙂🙂*
ஸுந்த ஸ்த்ரீ ந து ஸுந்தரீ பலவதீ நைஷா அபலா
ராக்ஷஸீ யக்ஷீ நோ பத தாடகா நர ஸிரா ஹாரா நர
ஆஹாரிணீ இதி ஏவம் குசிக
ஆத்மஜஸ்ய வசஸா மந்த ஸ்மிதம் யத் முகே ஜாதம்
தேன ஸஹாஸி கிம் நு வடுவூர் தேசம் ஸமப்யாகத👍👍👍
*தாடகையைப்*
*பற்றி வர்ணனை - விசுவாமித்திரர்*
*ஸுந்த ஸ்த்ரீ ந து ஸுந்தரீ* -
ராமா இவள் சுந்தரி அல்ல சுந்தன் எனும்
அரக்கனின் மனைவி ஸூந்தரீ
*பலவதீ நைஷா அபலா*
- பலமில்லாத பெண் அல்ல - பலவான் என்பது ஆணுக்கு சொல்வது பலவதீ என்பது பெண்ணுக்கு சொல்வது
அபலை பெண் அல்ல ---
*நைஷா அபலா*😊😊😊
*ராக்ஷஸீ யக்ஷீ நோ பத*
- யாரோ ஒரு யக்ஷி என்று நினைக்காதே இவள் ராக்ஷசி ஆனாலும் பேரழகி
*நர ஸிரா ஹாரா* -மனிதர்களின் நரம்புகளை மாலையாய் அணிந்து கொண்டிருக்கிறாள்
*ஹாரா நர ஆஹாரிணீ*-
மனிதர்களையும் ரிஷிகளையும் தான் உணவாக உண்டுகொண்டு வாழ்கிறாள்..👀👀👀
*சுருக்கமாக*
தாடகை சுந்தரி இல்லை சுந்தன் எனும் அரக்கனின் மனைவி
பலமில்லாத பெண் அல்ல - மிகுந்த பலம் உடையவள்
அபலை பெண் அல்ல அவளுக்கு இரண்டு மகன்களும் உண்டு
யாரோ பேர் தெரியாத யக்ஷி அல்ல ஆனாலும் எல்லோரையும் கவரக்கூடியவள்
அவள் அணிந்திருப்பது முத்து மலை அல்ல மனிதர்கள் , ரிஷிகள் , மகான்களின் நரம்புகளை கோத்து மாலையாய் அணிந்திருக்கிறாள்
அவள் உண்ணுவது மனிதர்களை , ரிஷிகளை...
இப்படி விசுவாமித்திரர் அடுக்கு மொழியில் சொன்னதை கேட்டு ராமன் மெல்லியதாய் புன்னகைத்தானாம் -
அந்த புன்னகை கொஞ்சமும் மாறாமல் வடுவூரிலும் நமக்காக காண்பித்துக்கொண்டிருக்கிறான்🙂🙂🙂
மிகுந்த வலிமை கொண்ட இயக்கர் குலத்தைச் சேர்ந்த சற்சரன் என்பவனுடைய மகன் சுகேது.
அவன் தூய்மையான இயல்புகளைக் கொண்டவன்.
அவனுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் பிரமனை வேண்டிப் பல ஆண்டுகள் கடுமையான தவம் செய்தான்.
இதனால் மகிழ்ந்த பிரமன் அவன் முன் தோன்றி, அவனுக்கு மயில் போன்ற அழகும் மதம் கொண்ட யானையை ஒத்த வலிமையும் கொண்ட ஒரு மகள் பிறப்பாள் என வரம் அருளினார்.
இந்த வரத்தின் காரணமாகச் சுகேதுவுக்கு மகளாகப் பிறந்தவளே தாடகை.
மணப்பருவம் எய்தியபோது அவளது தந்தையான சுகேது அவளைத் தமது இனத்தைச் சேர்ந்தவனான சுந்தன் என்பவனுக்கு மணம் செய்து வைத்தான்.
அவர்களுக்கு வலிமை பொருந்திய, மாரீசன், சுவாகு என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர்.🙂🙂🙂
*அகத்தியர் சாபம்*
ஒரு முறை சுந்தன் அகத்தியருடைய ஆச்சிரமத்துக்கு வந்து மரங்களைப் பிடுங்கி வீசி எறிந்து அட்டூழியம் செய்தான்.
அகத்தியர் சினம் கொண்டு அவனை நோக்க அவன் எரிந்து சாம்பலானான்.
இதையறிந்த தாடகை தனது மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அகத்தியரைப் பழிவாங்கும் நோக்குடன் அவரது ஆச்சிரமத்தை அடைந்தாள்.
தாடகையின் மைந்தர்கள் அகத்தியரை அணுகவே கோபங்கொண்ட அவர் மூவரையும் அரக்கர்கள் ஆகுமாறு சபித்தார்.
இதன் பின்னர் மாரீசனும், சுகேதுவும் இராவணனுக்குப் பாட்டனான சுமாலி என்பவனை அணுகி அவனுடன் மகன் முறை கொண்டாடி அவனுடன் சேர்ந்துகொண்டனர்.
மகன்களைப் பிரிந்த தாடகை அந்த நாட்டுக் காட்டில் வந்து வாழலானாள்.👁️👁️👁️
என் வாழ்க்கையில்
நீ மட்டும் எப்படி ரோஜாவாக...??
நீல வானத்தில்
நிலவினை போல - என்
நீள கனவினில்
நீயடி..
காதல் தேசத்து
அகதி நான்..
உன் காதலன்
என்று
கைது
செய்தாய்..
சிறை எனக்கு
அல்ல
உனக்கு
என்
இதயத்தில்...!!
சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின்
வாசலும்
உன் கண்களில் தான்....
என் கிறுக்கலை கவிதை
என்பவள் நீ...
கவிதைக்குள் இருப்பவளும் நீ...
என் கவிதைகளை நீ
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்
என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...
உனக்கு நான்...
எனக்கு நீ...
நமக்கு நாம் ..
இதில் உனக்கு அதிகம்
எது பிடிக்கும்...!!
காதல் கடிதங்களாக
கவிதைகளை அனுப்புகிறேன்....
உன் பதில் என்ன
காதல் தானே...??
🩷🩵💚💛💜🧡🤍
What more does a guru need...a good student who can imbibe the knowledge imparted & share it with others & probably carry the baton on illuminating other's lives in the process.
*வீர துர்க்கை அம்மன்*
*Hyderabad*
மேதே⁴ ஸரஸ்வதி வரே பூ⁴தி பா³ப்⁴ரவி தாமஸி।
நியதே த்வம் ப்ரஸீதே³ஶே நாராயணி நமோஸ்துதே||
*அம்மா*
நெஞ்சில் சுமந்தாய் என்னை
நினைவில் சுமந்தேன் உன்னை
நிழலாய் தொடர்ந்தாய் என்னை
நிஜம் நீ என்பதே உண்மை
நேரில் கண்டேன் இல்லை
கனவை ரசிக்கிறேன் நீயே வருவாய் என்று
பார்ப்பதெல்லாம் உன் உருவம் என்றே பரிதவிக்கும் மனமிடம் சொல்லி வைத்தேன்
சொன்ன நாள் முதல் சொர்க்கம் இனி ஒன்று வேண்டேன் என்றே என் மனமும் உரத்த குரலில் சொல்லியதே !!
அங்கே இருக்கும் புலவர்கள் அவர் திறமையை சோதிக்க எண்ணி நடக்க முடியாததை உன்னால் நடக்கும் என்று பாட முடியுமா ?
*உதாரணம்*
கங்கை நதியை ஒரு குடத்தில் அடக்க முடியும் என்று பாட வேண்டும்
உடனே சற்றும் தயங்காமல் பாதி இடம் தந்த பரமன் ஜடாமகுடத்தில் கங்கை நதி தங்கும் என்று பாடி முடித்தார்
ஜடாமகுடம் என்பதை ஜடாம் குடம் என்று பிரிக்கலாம்
அம்பாளின் அருளால் மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் மாடபள்ளிகள் அனைத்தும் அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு சென்றார் 👍
அம்பாளுக்கு சிம்ம வாகனமும் புலி வாகனமும் உண்டு ...
சிம்மம் அவளது தந்தை இமயவானால் பரிசாக
மஹிஷ னையும் , சும்ப நிசும்பர்களையும் சம்ஹாரம் செய்ய கொடுக்கப்பட்டது ...
அம்பிகையின் இருப்பிடம் ஸ்ரீபுரம் ...
இங்கே ஆடவர்கள் நுழைய அனுமதி இல்லை ...
எல்லா பெண் தெய்வங்களும் உபசரிக்க அம்பாள் திரிபுர சுந்தரியாய் , ராஜ ராஜேஸ்வரியாய் சதாசிவம் மீது அமர்ந்திருப்பாள்...
அம்பாளுக்கு தன் பதியின் பரிசம் எப்பவும் வேண்டும் ...
அவருடைய அழகிய எண்ணங்கள் தானே அம்பாள் ...
அம்பாள் வேண்ட ஈசனே பிடரி படர்ந்த சிம்மமாய் இமாவானின் மலையில் இருந்து இறங்கி வந்தார் தன் மீது தன்னுடைய பத்தினி என்று அமர வேண்டி ...
*சரி புலி எப்படி வந்தது ?*
*கொல் புலித் தோல் ஆடை குழகா போற்றி.*
ஈசனை இப்படி போற்றுகிறார் திரு ஞான சம்பந்தர்
பஞ்சேந்திரியங்களின் ஆளுமைக்கு கட்டுப்பட்டவன் ஜீவாத்மன்.
அந்த ஜீவாத்மனுக்குள் இருக்கும் ரஜோ குணம்பாவனா
ரூபத்தில் இங்கேபுலி வாகனமாக அம்பிகைக்கு கட்டுப்பட்டு அடங்கி கிடக்கின்றது இது தத்துவம்.
எந்த ஆன்மா அம்பிகையே கதி என்று சரணடைகின்றதோ.
அந்த ஆன்மாவின் ரஜோ குணம் விலகி அது சத்துவ குணத்தின் இருப்பிடமாக மாறிவிடுகிறது.
.அதற்கு எடுத்துக்காட்டு ரஜோ குணத்தின் வடிவமாக இருக்கும் புலியை அம்பிகை தன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக அடக்கி
அதன் மீது அமர்ந்து ஆட்சி புரிகின்றாள் என்பதை சித்தரிக்கும் வடிவம்தான் புலி மீது அமர்ந்த அம்பிகையின் வடிவம்...
சத்வ குணம் வந்தபின் அந்த ஆன்மா இறைவன் அணியும் புலித்தோலில் இரண்டற கலந்து விடுகிறது அவளுடைய கருணையால்
*கொண்டார் ?*
எவ்வளவோ கலைகள் இருந்தும் ஏன் பரமேஸ்வரன் நடனக்கலையை தனக்கு தேர்ந்து எடுத்தார் தெரியுமா ?
எந்த இசைக் கருவிகள் எடுத்துக்
கொண்டாலும் கருவிகளையும் அவைகளை உபயோகிப்பவர்களையும் பிரித்துப் பார்க்கலாம் ..
*_உதாரணம்_*
புல்லாங்குழல் அல்லது நாதஸ்வரம் ...
இதை இசைப்பவர்கள் வேறு கருவிகள் வேறு ...
இரண்டையும் தனித் தனியாய் பிரித்து பார்க்க முடியும் ...
ஆனால் நடனம் என்பது வேறு ... நடனத்தை பிரித்தால் நடம் புரிபவர் காணாமல் போய் விடுவார் ... நடம் புரிபவரை ஒளித்து வைத்தால் நடனம் காணாமல் போய் விடும்
நடனம் அவருடைய அசைவில் ஓர் அங்கம் தனி கருவி அல்ல ....
இந்த பிரபஞ்சம் அவர் மேனி அது ஒரு தடங்கலும் இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டுமென்றால் அந்த மேனியில் ஓர் அசைவு எப்பொழுதும் இருக்க வேண்டும் ...
அதனால் தன்னிடமிருந்து என்றும் பிரிக்க முடியாத நடன கலையை தேர்ந்தெடுத்தார் ...
மிகப்பெரும் கருணா மூர்த்தி அவர் .... 🙏
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*அகல்யை சாப விமோசனம்*👌👌👌
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐
கட்டை வண்டிகளில் இருந்து எல்லோரும் இறங்கி கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கிறார்கள்...
அப்படி நடக்க ஆரம்பித்தவுடன் கொஞ்ச தூரம் சென்றபின் விசுவாமித்திரர் ராமனிடம் சொல்கிறார் -
ராமா!! உனக்காக அகல்யா என்ற ஒரு பெண் காத்துக்கொண்டிருக்கிறாள்
அதைக்கேட்டு ராமர் ஒரு மெல்லியதாய் புன்னகை பூத்தாராம்😊😊😊
சிலா பாலா காசித் பல மதன லீலா விலுலிதா
வஸதி அஸ்மின் தேசே தவ பத ரஜோ வாஞ்சதிதராம்
இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்
ஸ்மிதம் மந்தம் யத் தே ஜயதி தத் இதம் ஸ்ரீ ரகுபதே🥇🥇🥇
*சிலா பாலா* : சிலா என்றால் *கல்* ,
*பாலா* என்றால் இளம் பெண் - ஒரு இளம் பெண் கல்லாய் இருக்கிறாள்
*காசித் பல மதன லீலா விலுலிதா :*
ஏன் அவள் கல்லாய் இருக்கிறாள் என்றால்
இந்திரன் செய்த பல மன்மத லீலைகளில் இவள் தள்ளப்பட்டு கணவர் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாய் ஆகிவிட்டாள்🌺🌺🌺
*வஸதி அஸ்மின் தேசே :*
அவள் நீ போகும் இந்த பாதையில் தான் கல்லாய் வசித்துக்கொண்டிருக்கிறாள்
*தவ பத ரஜோ வாஞ்சதிதராம்* :
ஏன் கல்லில் வசித்துக்
கொண்டிருக்கிறாள் தெரியுமா ?
*தவ பத ரஜோ வாஞ்சதிதராம்* :
ராமா , உன் பாத துளி மண் அவள் மீது விழாதா என்ற ஏக்கத்துடன் கல்லில் வசித்துக்கொண்டிருக்கிறாள்😢😢😢
*இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்*💐💐💐
அப்பொழுது ராமன் ஒரு புன்னகை பூத்தானாம் ---😊😊😊
ராமன் ஏன் புன்னகை பூத்தான் என்றால் தனக்கு இன்னொரு தாய் கிடைத்து விட்டாளே என்ற சந்தோஷம் தாங்கவில்லை யாம்....
ராமன் கௌசல்யாவின் வயிற்றில் 12 மாதங்கள் வாசம் செய்தானாம்-
சாதாரணமாக இரண்டு மாதம் குழந்தை தந்தையிடமும்
பத்து மாதங்கள் தாயிடமும் வாசம் செய்யும் என்று சாஸ்த்திரங்கள் சொல்லும்
இங்கே தசரதன் மூலம் குழந்தை பிறக்காததினால் தசரதனிடம் தங்க வேண்டிய இரண்டு மாதங்களையும் சேர்த்து 12 மாதங்கள் கௌசல்யாவின் கர்ப்பத்தில் வாசம் செய்தான் ராமன்🌷🌷🌷
அகல்யா எத்தனையோ யுகங்களாக தன் நெஞ்சத்தில், கருத்தில் ராமனை சுமந்து
கொண்டிருக்கிறாள் -
இதோ என் ராமன் இப்பொழுது வந்துவிடுவான் -
ஏதோ காலடி சப்தம் கேட்கிறதே!!
ராமன் வருகிறானோ என்று வழிமேல் விழி வைத்துக்கொண்டு காத்திருந்தாளாம் -
மழை, புயல் விலங்குகளின் எச்சம் , சுடும் கதிரவனின் கதிர்கள் இப்படி எவ்வளவோ சங்கடங்களுக்கு நடுவே கல்லாய் அமர்ந்திருந்தாள் -
ராமா நீயும் என்னைப்போல் ஒரு கல்லா ?
உனக்கு என் மீது கருணை இல்லையா என்றே கண்ணீர் சிந்தியபடி....😢😢😢
ராமனுக்கு ஒரே சந்தோஷம்... வயிற்றில் சுமந்தவளைவிட கருத்தில் சுமந்தவள் இன்னும் உயர்ந்த பெண் என்று நினைக்கிறான் ராமன்...💐💐💐
ராமா அன்று இன்னொரு தாய் மனதினால் ராமனை யுகம் யுகமாக சுமந்தவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் ஒரு புன்னகை பூத்தாயே
அதே புன்னகை வடுவூரிலும் எங்களுக்கும் நீயே தாயாக இருக்கிறாய் என்பதைக்காட்டவே
அன்று சிந்திய அதே புன்னகையை எங்களுக்கும் காண்பிக்கின்றாயோ ராமா?? ☺️☺️☺️
*வீர துர்க்கை அம்மன்*
*Hyderabad*
மேதே⁴ ஸரஸ்வதி வரே பூ⁴தி பா³ப்⁴ரவி தாமஸி।
நியதே த்வம் ப்ரஸீதே³ஶே நாராயணி நமோஸ்துதே||
*அம்மா*
நெஞ்சில் சுமந்தாய் என்னை
நினைவில் சுமந்தேன் உன்னை
நிழலாய் தொடர்ந்தாய் என்னை
நிஜம் நீ என்பதே உண்மை
நேரில் கண்டேன் இல்லை
கனவை ரசிக்கிறேன் நீயே வருவாய் என்று
பார்ப்பதெல்லாம் உன் உருவம் என்றே பரிதவிக்கும் மனமிடம் சொல்லி வைத்தேன்
சொன்ன நாள் முதல் சொர்க்கம் இனி ஒன்று வேண்டேன் என்றே என் மனமும் உரத்த குரலில் சொல்லியதே !!
*இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்க்கிகா* *(इन्द्रगोपपरिक्षिप्तस्मरतूणाभजङ्घिका)*
*அது என்ன இந்திர கோபம் ?*
இந்திர கோபம் என்பது ஓர் வகையான பூச்சி ...
தூய தமிழில் *தம்பல பூச்சி* என்பார்கள்
சில கிராமபுறங்களில் இன்னமும் மழைக்காலத்தில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.
மூதாய் என்னும் இந்திரகோபம் பற்றி ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியத்தில இருக்கிறது,
இதுவும் ஒரு ஓட்டுண்ணிப் பூச்சி வகையேயாகும்.
சரி அதற்கும் இந்த நாமத்திற்கும் என்ன சம்பந்தம் ?
அவைகள் ஒன்று சேர்ந்து மன்மதனின் அம்புறாத் தூணியை
மொய்த்துக் கொண்டிருக்கின்றன ...
அது மிகச் சிவந்து காணப்படும்.
அம்பாள் மன்மதனின் அம்புறாத் தூணிக்கு ஒப்பான கணைக்கால்கள் உள்ளவள்.
தேவியின் இரு முன்னங்கால்களும் செம்மை படர்ந்து மன்மதனின் அம்பறாதூணி போல இறுகிக் காணப்படுகின்றன.
இதை ஸெளந்தர்யலஹரி 83 வது ஸ்லோகத்தில் , ஆசார்யர் ,
//பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட - மக்ருத |
யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர - பலா: பாதயுகலீ -
நகாக்ரச்சத்மாந: ஸுர - மகுட - ஸாணைக - நிஸிதா : //
அதாவது, அம்மா!, கணுக்கால்களானது உன்னுடைய கணவன் பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன.
அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல
உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன் தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது,
அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது என்கிறார்.
இவ்வாறான அம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன்.
நாம் துணிக்கடைக்கு செல்கிறோம் ...
அங்கே 2 லிட்டர் எண்ணெய் கேட்டால் கிடைக்குமா ?
எண்ணெய் கடைக்கு செல்கிறோம் ...
அங்கே சுத்தியும் ஆணியும் கேட்டால் கிடைக்குமா ?
அது அதற்கு தனிக்கடைகள் இருக்கின்றது அல்லவா ?
அங்கே போனால் தான் நாம் கேட்பது கிடைக்கும் ...
ஆனால் ஒரு மால் அல்லது சூப்பர் மார்க்கெட் போனால் நாம் எது கேட்டாலும் கிடைக்கும் ...
பல தெய்வங்கள் இருந்தாலும் மொத்தமாய் வரம் கேட்கும் போது நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை ...
ஆனால் அம்பாள் எனும் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்
அங்கும் இங்கும் ஓட வேண்டிய அவசியமே இல்லை ..... இதையே அபிராமி பட்டர் 64 வது ஸ்லோகத்தில்
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்;
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்;
நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும்
திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.🙏👍👑
இரு பகிர்வுகளும் ஆஹா!!!!!!!ஓஹோ!!! அருமை!!!!!
பேஷ்.. பேஷ்....
நல்ல கற்பனை வளம்
கதம்பமாக கொடுக்கும் கவிதை நயம்... அருமை 👌
*நிர்குணா*
அம்பாளின் அதிசயமான திருநாமங்களில் இதுவும் ஒன்று ...
குணங்கள் ஏதும் இல்லாதவள்
குணங்களுக்கு அப்பாற்பட்டவள் என்று அர்த்தம் .... லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது ...
ஆனால் அவள் இந்த நாமத்தின் பொருளுக்கு ஏற்ப நடந்து கொண்டாளா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் ... !!
ரஜோ குணம் கொண்ட மது கைடபர்களை தமஸ் குணம் கொண்டு சூழ்ச்சி செய்து மஹாவிஷ்ணு மூலம் அழித்தாள் ராத்திரி தேவியாய் மஹா மாயாவாக, விஷ்ணு மாயாவாக காளியாக....
சரி ஒரு குணம் தானே வெளிப்படுத்தினாள் பரவாயில்லை அவள் நிர்குணா தான் என்று நாம் நம்மை சமாதானம் செய்து கொள்ளும் போது
ரஜோ குணம் கொண்டு தமஸ் குணம் கொண்ட மஹிஷனை சம்ஹாரம் செய்கிறாள் ...
சரி இதுவும் பரவாயில்லை அவள் நிர்குணாவே தான் என்று நாம் எண்ணும் போது சத்வ குணம் கொண்டு
ரஜோ குணம் கொண்ட சும்ப நிசும்பர்களையும்
தமஸ் குணம் கொண்ட சண்ட முண்டர்களையும் , ரக்த பீஜனையும் , தூம்ரலோசனையும் அழிக்கிறாள் ....
அவளை ஒரு நாமத்தில் கட்டிப்போட முடியாது ஓர் வரைமுறைக்குள் கொண்டு வரமுடியாது என்பதைத்தான் இந்த லீலை நமக்கு எடுத்து சொல்கின்றது ...
*யாதுமாய் நிற்பவள் !!* 💐💐💐
இறைவனே தாயுமானவனாக வந்தான் என்பது வேறு ஆனால் இறைவனே தனக்கு அம்மா இல்லையே என்று புலம்பினது உண்டா ?
உண்டு ....
நம்மை பேணும் அம்மை இவள் என்று ஈசன் காரைக்கால் அம்மையாரை *அம்மா* என்று அழைத்தான் ....
நாம் எல்லோருமே இவரை நமக்கு தெரியும் அவரை நமக்குத் தெரியும் என்று பீத்திக்
கொள்கிறோம்...
ஆனால் அவர்கள் நம்மை தெரிந்து
கொண்டவர்கள் என்று எங்காவது சொல்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை ...
ஆனால் இறைவனே ஒருவரை என் அம்மா இவள் என்றால் அதுவல்லவோ பெருமை ,சிறப்பு ..
இறைவன் காரைக்கால் அம்மையாரை என் அம்மே வருக என்றான் ... மூன்று காரணங்கள்
1.இறைவன் திருவிளையாடலால் புனிதவதியின் இல்வாழ்க்கை தடைப்பட்டது ..
புத்திரபாக்கியம் இல்லாமல் போனது ..
அதனால் இறைவன் தன்னையே அவள் பிள்ளையாக்கிக் கொண்டான்
2.அழகு என்பது உயர்ந்த கௌரவம் பெண்களுக்கு ...
அழகை குறைக்கவோ இழக்கவோ எந்த பெண்ணும் முன் வரமாட்டாள்
அதுவும் இளமை பருவத்தில் ..
ஆனால் தாய்மை ஸ்தானத்தை பெற்றவுடன்
தன் குழந்தைதான் முக்கியம்
அழகு போனால் போகட்டும் என்ற பெருந்தன்மை வந்துவிடும் ...
ஆனால் புனிதவதி தன் கணவன் பேணா இந்த உடம்பு இனி வேண்டாம் என்று மூப்பை இறைவனை வேண்டி பெற்றுக்
கொண்டாள் ...
தனக்காக செய்த இந்த தியாகத்தினால் அவளை தாயாக கருதினான் இறைவன்
3 அவள் பாடிய பதிகத்தில் "உன் கழுத்தில் விஷம் உள்ள நாகங்கள் இருக்கின்றன ... ஏற்கனவே விஷம் உண்டவன் நீ ... அதனால் இந்த பாம்புகள் இனி வேண்டாம் உன் கழுத்தில் என்று தாயின் பரிவு போல் வேண்டிக்
கொண்டாள்...
அதனால் அவளை தனது தாயின் ஸ்தானத்திற்கு உயர்த்தினான் இறைவன்
அதே மாதிரி காஞ்சி வரதனும் தனக்கு தாய் இல்லையே என்று புலம்பிய கதை தெரியுமா ?
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது.
இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.
காஞ்சிபுரம் தேவப்
பெருமாளுக்கு தினமும் இளம் சூடான பாலமுது ஸமர்ப்பிக்கும் சேவை செய்து வந்தார் .
எப்படித் தாய் தன் குழந்தைக்குப் பாலை மிகவும் இளம் சூடான தகுந்த பதத்துடன் பருகத் தருவாளோ அப்படியே தேவப் பெருமாளுக்கும் செய்து வந்ததால்,
தேவப் பெருமாளே அவருக்கு அம்மாள் அல்லது வாத்ஸ்ய வரவரதாச்சார்யர் என்று அன்புடன் பெயரிட்டு கௌரவித்தார்..
இவர் ஆண் ஆனாலும் இறைவன் அம்மா என்று அழைத்தத்தினால் அன்று முதல் *நடாதூர் அம்மாள்* என்று அழைக்கப்பட்டார்
அம்மாவென்பது ஒரு அரிய பதவி ... இறைவனே நாடுவது ...
யார் யார் மனதில் கருணையும் பரிவும் பாசமும் உள்ளதோ அவர்கள் எல்லோருமே தாய்மார்கள் தான் ...
இதில் ஆண் என்றும் பெண் என்றும் குழந்தை என்றும் விலங்குகள் என்றும் எந்த பாகுபாடும் இல்லை
Karma, at its root, simply action in Sanskrit. In Indian traditions like Hinduism, Buddhism, Jainism, and Sikhism, karma refers to the idea that every action — physical, mental, or verbal — has consequences. It's not exactly a cosmic "punishment" or "reward" system. Rather, it's more like a natural law, similar to cause and effect: what you sow, you reap.
Now, to your deeper point:
Why suffer for things we don't remember doing?
In many teachings, especially in Hinduism and Buddhism, it's believed that the soul (or consciousness) carries impressions — called samskaras — from past lives. These impressions shape our tendencies, circumstances, and even the kinds of challenges we face. Even if the memory of a past action is lost to the conscious mind, its momentum carries forward, just like if you push a ball down a hill — the ball keeps rolling even if you forget pushing it.
From a philosophical point of view, the point isn't to "remember" the past deeds, but rather to understand that we are always co-creating our future with our present actions. Awareness, compassion, forgiveness, and wise living now can transform the karma of both past and present.
In short: Karma is less about blame and more about learning,
------------------------------------
*நீல கொடி மலர்கள்*
-------------------------------------------
அசந்திடும் இயற்கை எழில்தனைக் கூட்ட,
வசந்தமாய்ச் சிறு மலரது பூக்க...
இசைந்தாடும் தென்றலில் சுகமாய்,
அசைந்தாடின அதன் மேனியும் இதமாய்!
நீல வண்ணத் தோழியர் பலரும்....அங்கே
கோல மயில்போல் ஆடினரே!
கொடியிடைக் கொண்டோர்,
வளைந்து, நெளிந்து,
பசுஞ்செடிதனில் கொடியாய்ப்
படர்ந்தனரே!
இடையிடை பச்சை நீலமும் காண,
உடையது எழில் கூடிடுதே!
மடை திறந்த வெள்ளமாய் மகிழ்ச்சி,
தடையின்றி அங்கே பொங்கிடுதே!
இது,
எழில் நீல விழி போல் ஆக்கிரமித்த காட்சியோ?
பொழில் கோல விழா போல் ...
ஜாக்மோன்டியாவின் மாட்சியோ?
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*👌👌👌
சிலா ஸா ஸம்ஸ்ப்ருஷ்டா சரணரஜஸா தே ரகுபதே
புரோ தேசே ஜாதா பரம
ரமணீயா அத ரமணீ
முனே: ப்ராந்தே சாபூத் முனிரத பர: கோபி முதித:
முகே முக்தே மந்தஸ்மிதம் அபி மனோஜ்ஞம் தவ ததா
शिला सा संस्पृष्टा चरणरजसा ते रघुपते
पुरोदेशे जाता परमरमणीयाऽथ रमणी।
मुनेः प्रान्ते चाभूत् मुनिरथ परः कोऽपि मुदितः
मुखे मुग्धे मन्दस्मितमपि मनोज्ञं तव तदा॥
ராமனிடம் விசுவாமித்திரர் அகல்யா என்ற உத்தமி உனக்காக உன் பாத தூளிகள் அவள் சிரசின் மேல் படவேண்டி யுகம் யுகமாக கல்லாய் இங்கே இருந்துகொண்டு உன் வருகைக்காக தவமிருக்கிறாள் -
இவள் கௌதம முனிவரின் தர்ம பத்தினி -
இந்திரன் செய்த மன்மத லீலைகளில் அகப்பட்டு தன் கணவரிடம் சாபம் அடைந்தவள் என்று சொன்னவுடன்
*ஆஹா எனக்கு இன்னொரு தாய் கிடைத்துவிட்டாள்* -
என் தாய் கௌசல்யா பன்னிரண்டு மாதங்கள் மட்டுமே சுமந்தவள்
ஆனால் இந்த அகல்யை எனும் தாயோ யுகம் யுகமாக தன் கருத்தில் சுமந்தவள் என்றே சொல்லி மெல்லியதாய் புன்னகை ஒன்றைப்பூத்தான் என்று போன ஸ்லோகத்தில் பார்த்தோம்...🌸🌸🌸
*சிலா ஸா ஸம்ஸ்ப்ருஷ்டா சரணரஜஸா தே ரகுபதே*💐💐💐
ரகுபதியே உன் பாதங்கள் அவள் மீது படவேண்டாம் -
அவை தேவை இல்லை -
உன் பாதுகையில் பட்டுள்ள துளிகள் மட்டுமே போதும் அகல்யையின் சாபம் அதை நீக்க -
இங்கே இரண்டு அர்த்தங்கள் வரும் -
ராமனின் பாத்துளிகள் அவ்வளவு உயர்ந்தவை அவன் பாதங்கள் கொடுக்கும் சாபவிமோசனத்தை அவன் பாதுகைகளில் ஒட்டிக்கொண்ட மண் தீர்த்துவிடுமாம் --
இன்னொன்று ராமன் இன்னொரு பெண்ணை அது தாய்க்கு சமமாக இருந்தாலும் தீண்ட மாட்டான்
அதனால் அவன் திருவடிகளில் ஓட்டிக்கொண்ட மண் துளிகள் , அவள் சாபத்தை நீக்கக்கூடிய உயர்வை பெற்றுள்ளது...🥇🥇🥇
இதைத்தான் கவி சொல்கிறார்
ஏ ரகுபதே ... உன் திருவடிகள் கல்லாய் இருந்த அகல்யையின் மேல் படவில்லை --
உன் பாதத்தில் ஒட்டிக்கொண்ட மண் துளிகள் மட்டுமே அந்த கல்லின் மீது தெளித்தன
*புரோ தேசே ஜாதா பரம ரமணீயா அத ரமணீ*
பட்டவுடன் என்ன நடந்தது -
அந்த கல் சிதற அதிலிருந்து ஒரு அழகிய பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்....💐💐💐
கம்பன் வர்ணிக்கும் பாடல் ஒன்றைப்பார்ப்போம்....
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
*பண்டை வண்ணமாய் நின்றனள்* மாமுனி பணிப்பான். – 1.471
(மனத்தில்) உள்வாங்கிய அறியாமை என்னும் மயக்கம் நீங்கியதும் மெய்ஞானத்தை உணர்ந்து
வேறு (ஞான) உருவம் அடைந்து (இறைவனின்) திருவடிகளில் சேர்வது போல, (அவர்கள்) பார்த்த கல்லின் மீது காகுத்தர் வழிவந்தனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன், (அகலியை) முந்தைய (அழகு) வடிவத்தில் நின்றாள்.
பெரும் துறவியும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின் மனைவி அகலியை என்று) கூறினார்…👌👌👌
அவள் எப்படி தோற்றம் அளித்தாள் என்றால் கௌதமர் அவளைத் திருமணம் செய்து
கொள்வதற்கு முன் எப்படி ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தாளோ அப்படிப்பட்ட அழகுடன் , இளமையுடன் ராமன் முன் தோன்றினாளாம் .
கம்பன் மேலும் பாடுகிறான்
விசுவாமித்திரர் சொல்வதாக
அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன். – 1.481 -
கை வண்ணம் தாடகியை வதைத்த போது
கால் வண்ணம் இங்கே அகல்யாவின் சாப விமோசனம் பெரும் போது .....🌸🌸🌸🌸🌸
*முனே: ப்ராந்தே சாபூத் முனிரத பர: கோபி முதித:*👌👌👌
அப்போது கௌதமரும் வந்து சேர்ந்தார் அங்கே -
அகல்யா அவருடன் போய் சேர்ந்துகொண்டாள் -
இதைப்பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமடைந்தார் இன்னொரு முனிவரான விசுவாமித்திரர் -
ராமனுக்கும் மிகுந்த சந்தோஷம் -
என்னால் இரண்டு மாபெரும் முனிவர்களுக்கும் இன்று மகிழ்ச்சியை கொடுக்கமுடிந்ததே என்று ஒரு புன்னகையைப் பூத்தானாம்
*முகே முக்தே மந்தஸ்மிதம் அபி மனோஜ்ஞம் தவ ததா*
ராமனின் வெகுளித்தனமான முகத்தில் மிகவும் அழகான மெல்லிய புன்னகை பூத்தது -
அந்த புன்னகை தான் இன்று வடுவூரிலும் திகழக்கூடிய புன்னகையோ ராமா ?
*மகிழ்ச்சியில் சிறந்த மகிழ்ச்சி என்னவென்றால் இன்னொருவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் செயல் ஒன்றுதான்*💐💐💐
ராமன் என்ன நினைத்தான்?
- தான் ஒரு சாதாரண மனிதன் -
எப்பேர்ப்பட்ட ரிஷிகள் இவர்கள்
இவர்கள் முகத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் வருவதற்கு தான் செய்த ஒரு சிறு செயல் காரணமாக இருந்ததே என்று எண்ணி புன்னகை பூக்கிறான் -
*அப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்று சொல்கிறார் கவி*💐💐💐
ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே।
ப⁴யேப்⁴யஸ்த்ராஹி நோ தே³வி து³ர்கே³ தே³வி நமோஸ்துதே
*அம்மா !*
நன்றாய் இருக்க வேண்டும்
இவ்வுலகம்
நாவிருப்போர் நல் வார்த்தை பேசவேண்டும் ...
நல்லதையே மனம் நினைக்க வேண்டும்
நலிந்தோர் எவர்க்கும் விரைந்து உதவி செய்யும் மனம் வேண்டும் ...
இருப்பது போதும் எனும் திருப்தி வேண்டும் ...
இல்லாமை இல்லாமை வேண்டும் ...
கல்லாமை கற்ற கயவர்கள் பால் நான் செல்லாமை வேண்டும்
சத்வம் கொண்டு ரஜத்தை அழிக்க வேண்டும்
இடையே வரும் தமஸ் இல்லாமல் போக வேண்டும் ...
இனியானும் பிறவாமல் இருக்க வேண்டும் ...
மீண்டும் பிறந்தால் உனையன்றி வேறு தெய்வம் நினையாமல் இருக்க வேண்டும் ...
உன் காலடியோசை கேட்டிருக்க வேண்டும்
அங்கே என் கவித்தவம் பிரசவிக்க வேண்டும் எண்ணில்லா உன் புகழ் பாடும் கவிதைகளை ....!!!💐💐💐💐💐
இதை படிக்கும் போது மனதும் ரிலாக்ஸாக இருந்தது
மிக்க நன்றி
*வதனாம்பிகை* *அம்பாள் உடனுறை*
*பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பெருநகர்* உத்திரமேரூர் வட்டம்
ஏதத்தே வத³னம் ஸௌம்யம் லோசனத்ரய
பூ⁴ஷிதம்।
பாது ந: ஸர்வபூ⁴தேப்⁴ய: காத்யாயினி நமோஸ்துதே॥॥
*அம்மா*
கதிரவன் உதித்தான் கிழக்கில்
கதிர்கள் பறந்தன பல திக்கில் ...
வருணன் மறைந்து கதிரவன் வெளி வந்தான் ...
வாடிய பயிர்கள் தாய் என்றே மகிழ்ந்தன ....
கதிரவன் வருகை கமலங்களின் புன்னகை
இறை வணங்கி இரை தேட பறவைகள் செல்லும் வாடிக்கை
உதிக்கின்ற ஆதவன் ஒப்பாகுமோ உன் உச்சி திலக்கை ...
உயர்ந்தோர் உணர்ந்தோர் அடைவார் உன் இலக்கை ...
புரிந்தோர் பரிந்தோர் பணிந்தோர் போற்றுவர் உன்னை ...
அலைந்தோர் கலைந்தோர் காண்பாரோ உன்னை ...
தெளிந்தோர் அறிந்தோர் காணாமல் போவாரோ உன்னை ?💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*👌👌👌
*கௌதம முனிவரைப்*
*பார்த்து ராமன் சிந்திய புன்னகை*😊😊😊
விச்வாமித்ர முனீச்வரேண கதிதா அஹல்யா கதாம்
ச்ருண்வத:
பாத ஸ்ப்ருஷ்ட சிலா தலாத் ஸமுதிதாம் ச்யாமாம் புர:
பச்யத: வேகாத் ஆகத கௌதம அமல முகாத் ஜாதாசிஷோ பேஜுஷ: யத்
மந்தஸ்மிதம் ஆஸ ராம தத் இதம் கிம் நு அத்ர வித்யோததே🙂
विश्वामित्रमुनीश्वरेण कथिताहल्याकथां शृण्वतः
पादस्पृष्टशिलातलात् समुदितां श्यामां पुरः पश्यतः।
वेगात् आगतगौतमामलमुखात् जाताशिषो भेजुषः
यन्मन्दस्मितमास राम तदिदं किंन्वत्र विद्योतते॥
*விச்வாமித்ர முனீச்வரேண கதிதா அஹல்யா கதாம் ச்ருண்வத:*👌👌👌
விசுவாமித்திரர் எனும் மாமுனி ராமரை அழைத்துக்
கொண்டு வரும் வேளையில் அவர் ராமனுக்கு அகல்யையின் கதையை சொல்லிக்கொண்டேதான் வருகிறார்.💐💐💐
பிரம்மன் மிக மிக அழகான பெண் ஒருத்தியை படைக்க ஆசைப்பட்டார் ..
அப்படியே படைத்தவுடன் அவருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது ..
இப்படிப்பட்ட அழகான பெண்ணிற்கு ஏத்த பையனை எப்படி தேடுவது ..நடக்கக்கூடிய காரியமா இது ?
இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது சரஸ்வதி அந்த பெண்ணைப்பார்த்து அசந்து போனாளாம்...
பெண்ணுக்கே உரிய பொறாமை ஓங்கி எழ நாரதரை கூப்பிட்டு ஏதாவது கலகம் செய்ய சொன்னாளாம் ...
இதற்கு நடுவில் எல்லா தேவர்களும் நான் , நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அவளை திருமணம் செய்ய முன் வர நாரதரின் யோசனைப்படி யார் 16 அண்டங்களையும் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்குத் தான் இந்த பெண் என்று பிரம்மன் அறிவித்தார் ...
இதற்கு நடுவில் நாரதர் இந்த பெண்ணின் பெயர் என்ன என்று கேட்க பிரம்மன் , *அகல்யா* அதாவது *அ + கல்யா* = குற்றம் அற்றவள் என்று பெயர் வைத்துள்ளதாக சொன்னார் ..
அவள் தலையெழுத்தை எழுதி விட்டீர்களா என்று கேட்டதற்கு ஆம் ...அதுவும் குற்றம் அற்றவள் என்றே எழுதி விட்டேன் என்றாராம் ...
நாரதர் பிரம்மனுக்குத் தெரியாமல் கலைவாணீ யின் உதவிக்கொண்டு அகல்யாவில் *அ* என்ற எழுத்தை அழித்து விட்டாராம் ..
*அவள் குற்றம் உள்ளவள் என்று தலை எழுத்து மாறி விட்டது* 😢😢😢
மேலும் நாரதர் வயதான கௌதம ரிஷியிடம் சென்று அப்பொழுது கன்று ஈன்ற பசுவை மூன்று முறை வலம் வரச்சொல்லி அது 16 அண்டங்களையும் சுற்றி வருவதற்கு சமம்...என்று சொல்லி அகல்யாவை கௌதம முனிவருக்கு பிரம்மன் திருமணம் செய்ய வைத்தார் ..
கன்று ஈன்ற பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் இருக்கிறார்கள் , 16 அண்டங்களும் பசுவிற்குள் அடக்கம் ... 🐄🐄🐄
முதலாக வந்த இந்திரனுக்கு மிகுந்த வெட்கமும் கோபமும் வந்தது .
தான் ஏமாந்து விட்டதாக எண்ணி கௌதமருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றே தவறான காரியத்தில் இறங்கி சாபமும் பெற்றான் . 😡😡😡
இப்படி விசுவாமித்திரர் கதையை சொல்லிக்கொண்டே கௌதமர் வசித்துவந்த ஆசிரமத்தை அடைகிறார்
அங்கே தான் அகல்யா கல்லாக ராமனையே நினைத்துக்
கொண்டு காத்திருக்கிறாள்
*பாத ஸ்ப்ருஷ்ட சிலா தலாத் ஸமுதிதாம் ச்யாமாம் புர: பச்யத:*
யாருடைய கதையை காதால் ராமன் கேட்டுக்கொண்டு வந்தானோ அவள் ராமனின் பாதத் துளிகள் பட்டவுடன் ராமனின் கண்களில் தெரிந்தாளாம்...👌👌👌
*வேகாத் ஆகத கௌதம அமல முகாத் ஜாதாசிஷோ பேஜுஷ:*
அது மட்டுமா கௌதம ரிஷி தன் ஞானக்கண்ணால் அக்கல்யாவின் சாபம் தீர்ந்தது என்று புரிந்துகொண்டு வெகு வேகமாக அவளை பார்க்க வேண்டி ஓடி வருகிறாராம் .
அவர் மிகுந்த சந்தோஷம் கொண்டு ராமனை ஆசிர்வதித்தார் தம்பதிகளாக..
உடனே ராமன் அவர்கள் பாதங்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்கினான் .
அவர்கள் ஆசிர்வாதம் செய்யும் போது உன் முகத்தில் ஒரு புன்னகை உதித்ததே ராமா 🙂
*யத் மந்தஸ்மிதம் ஆஸ ராம தத் இதம் கிம் நு அத்ர வித்யோததே*💐💐💐
அதே புன்னகை வடுவூரிலும் காண்பிக்கிறாய்...
இந்த ஸ்லோகத்தில் ராமனின் எளிமை தெரிகிறது ...
எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அடக்கமும் பண்பும் மாறாமல் இருக்கவேண்டும் .
கல்யாவாக இருந்த பெண் ராமனின் பாதத்துளிகள் பட்டவுடன் மறைந்திருந்த *அ* என்ற எழுத்து ஓடி வந்து கல்யா என்ற பெயருடன் ஓட்டிக்கொண்டு அவள் குற்றமற்றவள் என்று நிரூபித்ததாம் .
தன்னால் எழுப்பப்பட்ட ஒரு பெண் என்று நினைக்காமல் அவள் என் இரண்டாவது தாய் என்று சொல்லும் அளவிற்கு ராமனின் பண்பு ஓங்கி இருந்தது ..
*ராமனின் பாதத்துளிகள் நம் மீதும் விழ நம் தலை எழுத்தும் மாற அந்த அன்பும் அடக்கமும் பண்புடன் வீரமும் கொண்ட ராகவனை மனதார வேண்டிக்கொள்வோம்*💐💐💐😊😊😊😊😊😊😊.
இறைவனே தாயுமானவனாக வந்தான் என்பது வேறு ஆனால் இறைவனே தனக்கு அம்மா இல்லையே என்று புலம்பினது உண்டா ?
உண்டு ....
நம்மை பேணும் அம்மை இவள் என்று ஈசன் காரைக்கால் அம்மையாரை *அம்மா* என்று அழைத்தான் ....
நாம் எல்லோருமே இவரை நமக்கு தெரியும் அவரை நமக்குத் தெரியும் என்று பீத்திக்
கொள்கிறோம்...
ஆனால் அவர்கள் நம்மை தெரிந்து
கொண்டவர்கள் என்று எங்காவது சொல்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை ...
ஆனால் இறைவனே ஒருவரை என் அம்மா இவள் என்றால் அதுவல்லவோ பெருமை ,சிறப்பு ..
இறைவன் காரைக்கால் அம்மையாரை என் அம்மே வருக என்றான் ... மூன்று காரணங்கள்
1.இறைவன் திருவிளையாடலால் புனிதவதியின் இல்வாழ்க்கை தடைப்பட்டது ..
புத்திரபாக்கியம் இல்லாமல் போனது ..
அதனால் இறைவன் தன்னையே அவள் பிள்ளையாக்கிக் கொண்டான்
2.அழகு என்பது உயர்ந்த கௌரவம் பெண்களுக்கு ...
அழகை குறைக்கவோ இழக்கவோ எந்த பெண்ணும் முன் வரமாட்டாள்
அதுவும் இளமை பருவத்தில் ..
ஆனால் தாய்மை ஸ்தானத்தை பெற்றவுடன்
தன் குழந்தைதான் முக்கியம்
அழகு போனால் போகட்டும் என்ற பெருந்தன்மை வந்துவிடும் ...
ஆனால் புனிதவதி தன் கணவன் பேணா இந்த உடம்பு இனி வேண்டாம் என்று மூப்பை இறைவனை வேண்டி பெற்றுக்
கொண்டாள் ...
தனக்காக செய்த இந்த தியாகத்தினால் அவளை தாயாக கருதினான் இறைவன்
3 அவள் பாடிய பதிகத்தில் "உன் கழுத்தில் விஷம் உள்ள நாகங்கள் இருக்கின்றன ... ஏற்கனவே விஷம் உண்டவன் நீ ... அதனால் இந்த பாம்புகள் இனி வேண்டாம் உன் கழுத்தில் என்று தாயின் பரிவு போல் வேண்டிக்
கொண்டாள்...
அதனால் அவளை தனது தாயின் ஸ்தானத்திற்கு உயர்த்தினான் இறைவன்
அதே மாதிரி காஞ்சி வரதனும் தனக்கு தாய் இல்லையே என்று புலம்பிய கதை தெரியுமா ?
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது.
இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.
காஞ்சிபுரம் தேவப்
பெருமாளுக்கு தினமும் இளம் சூடான பாலமுது ஸமர்ப்பிக்கும் சேவை செய்து வந்தார் .
எப்படித் தாய் தன் குழந்தைக்குப் பாலை மிகவும் இளம் சூடான தகுந்த பதத்துடன் பருகத் தருவாளோ அப்படியே தேவப் பெருமாளுக்கும் செய்து வந்ததால்,
தேவப் பெருமாளே அவருக்கு அம்மாள் அல்லது வாத்ஸ்ய வரவரதாச்சார்யர் என்று அன்புடன் பெயரிட்டு கௌரவித்தார்..
இவர் ஆண் ஆனாலும் இறைவன் அம்மா என்று அழைத்தத்தினால் அன்று முதல் *நடாதூர் அம்மாள்* என்று அழைக்கப்பட்டார்
அம்மாவென்பது ஒரு அரிய பதவி ... இறைவனே நாடுவது ...
யார் யார் மனதில் கருணையும் பரிவும் பாசமும் உள்ளதோ அவர்கள் எல்லோருமே தாய்மார்கள் தான் ...
இதில் ஆண் என்றும் பெண் என்றும் குழந்தை என்றும் விலங்குகள் என்றும் எந்த பாகுபாடும் இல்லை
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*👌👌👌
சிலா ஸா ஸம்ஸ்ப்ருஷ்டா சரணரஜஸா தே ரகுபதே
புரோ தேசே ஜாதா பரம
ரமணீயா அத ரமணீ
முனே: ப்ராந்தே சாபூத் முனிரத பர: கோபி முதித:
முகே முக்தே மந்தஸ்மிதம் அபி மனோஜ்ஞம் தவ ததா
शिला सा संस्पृष्टा चरणरजसा ते रघुपते
पुरोदेशे जाता परमरमणीयाऽथ रमणी।
मुनेः प्रान्ते चाभूत् मुनिरथ परः कोऽपि मुदितः
मुखे मुग्धे मन्दस्मितमपि मनोज्ञं तव तदा॥
ராமனிடம் விசுவாமித்திரர் அகல்யா என்ற உத்தமி உனக்காக உன் பாத தூளிகள் அவள் சிரசின் மேல் படவேண்டி யுகம் யுகமாக கல்லாய் இங்கே இருந்துகொண்டு உன் வருகைக்காக தவமிருக்கிறாள் -
இவள் கௌதம முனிவரின் தர்ம பத்தினி -
இந்திரன் செய்த மன்மத லீலைகளில் அகப்பட்டு தன் கணவரிடம் சாபம் அடைந்தவள் என்று சொன்னவுடன்
*ஆஹா எனக்கு இன்னொரு தாய் கிடைத்துவிட்டாள்* -
என் தாய் கௌசல்யா பன்னிரண்டு மாதங்கள் மட்டுமே சுமந்தவள்
ஆனால் இந்த அகல்யை எனும் தாயோ யுகம் யுகமாக தன் கருத்தில் சுமந்தவள் என்றே சொல்லி மெல்லியதாய் புன்னகை ஒன்றைப்பூத்தான் என்று போன ஸ்லோகத்தில் பார்த்தோம்...🌸🌸🌸
*சிலா ஸா ஸம்ஸ்ப்ருஷ்டா சரணரஜஸா தே ரகுபதே*💐💐💐
ரகுபதியே உன் பாதங்கள் அவள் மீது படவேண்டாம் -
அவை தேவை இல்லை -
உன் பாதுகையில் பட்டுள்ள துளிகள் மட்டுமே போதும் அகல்யையின் சாபம் அதை நீக்க -
இங்கே இரண்டு அர்த்தங்கள் வரும் -
ராமனின் பாத்துளிகள் அவ்வளவு உயர்ந்தவை அவன் பாதங்கள் கொடுக்கும் சாபவிமோசனத்தை அவன் பாதுகைகளில் ஒட்டிக்கொண்ட மண் தீர்த்துவிடுமாம் --
இன்னொன்று ராமன் இன்னொரு பெண்ணை அது தாய்க்கு சமமாக இருந்தாலும் தீண்ட மாட்டான்
அதனால் அவன் திருவடிகளில் ஓட்டிக்கொண்ட மண் துளிகள் , அவள் சாபத்தை நீக்கக்கூடிய உயர்வை பெற்றுள்ளது...🥇🥇🥇
இதைத்தான் கவி சொல்கிறார்
ஏ ரகுபதே ... உன் திருவடிகள் கல்லாய் இருந்த அகல்யையின் மேல் படவில்லை --
உன் பாதத்தில் ஒட்டிக்கொண்ட மண் துளிகள் மட்டுமே அந்த கல்லின் மீது தெளித்தன
*புரோ தேசே ஜாதா பரம ரமணீயா அத ரமணீ*
பட்டவுடன் என்ன நடந்தது -
அந்த கல் சிதற அதிலிருந்து ஒரு அழகிய பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்....💐💐💐
கம்பன் வர்ணிக்கும் பாடல் ஒன்றைப்பார்ப்போம்....
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
*பண்டை வண்ணமாய் நின்றனள்* மாமுனி பணிப்பான். – 1.471
(மனத்தில்) உள்வாங்கிய அறியாமை என்னும் மயக்கம் நீங்கியதும் மெய்ஞானத்தை உணர்ந்து
வேறு (ஞான) உருவம் அடைந்து (இறைவனின்) திருவடிகளில் சேர்வது போல, (அவர்கள்) பார்த்த கல்லின் மீது காகுத்தர் வழிவந்தனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன், (அகலியை) முந்தைய (அழகு) வடிவத்தில் நின்றாள்.
பெரும் துறவியும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின் மனைவி அகலியை என்று) கூறினார்…👌👌👌
அவள் எப்படி தோற்றம் அளித்தாள் என்றால் கௌதமர் அவளைத் திருமணம் செய்து
கொள்வதற்கு முன் எப்படி ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தாளோ அப்படிப்பட்ட அழகுடன் , இளமையுடன் ராமன் முன் தோன்றினாளாம் .
கம்பன் மேலும் பாடுகிறான்
விசுவாமித்திரர் சொல்வதாக
அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன். – 1.481 -
கை வண்ணம் தாடகியை வதைத்த போது
கால் வண்ணம் இங்கே அகல்யாவின் சாப விமோசனம் பெரும் போது .....🌸🌸🌸🌸🌸
*முனே: ப்ராந்தே சாபூத் முனிரத பர: கோபி முதித:*👌👌👌
அப்போது கௌதமரும் வந்து சேர்ந்தார் அங்கே -
அகல்யா அவருடன் போய் சேர்ந்துகொண்டாள் -
இதைப்பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமடைந்தார் இன்னொரு முனிவரான விசுவாமித்திரர் -
ராமனுக்கும் மிகுந்த சந்தோஷம் -
என்னால் இரண்டு மாபெரும் முனிவர்களுக்கும் இன்று மகிழ்ச்சியை கொடுக்கமுடிந்ததே என்று ஒரு புன்னகையைப் பூத்தானாம்
*முகே முக்தே மந்தஸ்மிதம் அபி மனோஜ்ஞம் தவ ததா*
ராமனின் வெகுளித்தனமான முகத்தில் மிகவும் அழகான மெல்லிய புன்னகை பூத்தது -
அந்த புன்னகை தான் இன்று வடுவூரிலும் திகழக்கூடிய புன்னகையோ ராமா ?
*மகிழ்ச்சியில் சிறந்த மகிழ்ச்சி என்னவென்றால் இன்னொருவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் செயல் ஒன்றுதான்*💐💐💐
ராமன் என்ன நினைத்தான்?
- தான் ஒரு சாதாரண மனிதன் -
எப்பேர்ப்பட்ட ரிஷிகள் இவர்கள்
இவர்கள் முகத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் வருவதற்கு தான் செய்த ஒரு சிறு செயல் காரணமாக இருந்ததே என்று எண்ணி புன்னகை பூக்கிறான் -
*அப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்று சொல்கிறார் கவி*💐💐💐
ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே।
ப⁴யேப்⁴யஸ்த்ராஹி நோ தே³வி து³ர்கே³ தே³வி நமோஸ்துதே
*அம்மா !*
நன்றாய் இருக்க வேண்டும்
இவ்வுலகம்
நாவிருப்போர் நல் வார்த்தை பேசவேண்டும் ...
நல்லதையே மனம் நினைக்க வேண்டும்
நலிந்தோர் எவர்க்கும் விரைந்து உதவி செய்யும் மனம் வேண்டும் ...
இருப்பது போதும் எனும் திருப்தி வேண்டும் ...
இல்லாமை இல்லாமை வேண்டும் ...
கல்லாமை கற்ற கயவர்கள் பால் நான் செல்லாமை வேண்டும்
சத்வம் கொண்டு ரஜத்தை அழிக்க வேண்டும்
இடையே வரும் தமஸ் இல்லாமல் போக வேண்டும் ...
இனியானும் பிறவாமல் இருக்க வேண்டும் ...
மீண்டும் பிறந்தால் உனையன்றி வேறு தெய்வம் நினையாமல் இருக்க வேண்டும் ...
உன் காலடியோசை கேட்டிருக்க வேண்டும்
அங்கே என் கவித்தவம் பிரசவிக்க வேண்டும் எண்ணில்லா உன் புகழ் பாடும் கவிதைகளை ....!!!💐💐💐💐💐
*நிர்குணா*
அம்பாளின் அதிசயமான திருநாமங்களில் இதுவும் ஒன்று ...
குணங்கள் ஏதும் இல்லாதவள்
குணங்களுக்கு அப்பாற்பட்டவள் என்று அர்த்தம் .... லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது ...
ஆனால் அவள் இந்த நாமத்தின் பொருளுக்கு ஏற்ப நடந்து கொண்டாளா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் ... !!
ரஜோ குணம் கொண்ட மது கைடபர்களை தமஸ் குணம் கொண்டு சூழ்ச்சி செய்து மஹாவிஷ்ணு மூலம் அழித்தாள் ராத்திரி தேவியாய் மஹா மாயாவாக, விஷ்ணு மாயாவாக காளியாக....
சரி ஒரு குணம் தானே வெளிப்படுத்தினாள் பரவாயில்லை அவள் நிர்குணா தான் என்று நாம் நம்மை சமாதானம் செய்து கொள்ளும் போது
ரஜோ குணம் கொண்டு தமஸ் குணம் கொண்ட மஹிஷனை சம்ஹாரம் செய்கிறாள் ...
சரி இதுவும் பரவாயில்லை அவள் நிர்குணாவே தான் என்று நாம் எண்ணும் போது சத்வ குணம் கொண்டு
ரஜோ குணம் கொண்ட சும்ப நிசும்பர்களையும்
தமஸ் குணம் கொண்ட சண்ட முண்டர்களையும் , ரக்த பீஜனையும் , தூம்ரலோசனையும் அழிக்கிறாள் ....
அவளை ஒரு நாமத்தில் கட்டிப்போட முடியாது ஓர் வரைமுறைக்குள் கொண்டு வரமுடியாது என்பதைத்தான் இந்த லீலை நமக்கு எடுத்து சொல்கின்றது ...
*யாதுமாய் நிற்பவள் !!* 💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*அகல்யை சாப விமோசனம்*👌👌👌
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐
கட்டை வண்டிகளில் இருந்து எல்லோரும் இறங்கி கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கிறார்கள்...
அப்படி நடக்க ஆரம்பித்தவுடன் கொஞ்ச தூரம் சென்றபின் விசுவாமித்திரர் ராமனிடம் சொல்கிறார் -
ராமா!! உனக்காக அகல்யா என்ற ஒரு பெண் காத்துக்கொண்டிருக்கிறாள்
அதைக்கேட்டு ராமர் ஒரு மெல்லியதாய் புன்னகை பூத்தாராம்😊😊😊
சிலா பாலா காசித் பல மதன லீலா விலுலிதா
வஸதி அஸ்மின் தேசே தவ பத ரஜோ வாஞ்சதிதராம்
இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்
ஸ்மிதம் மந்தம் யத் தே ஜயதி தத் இதம் ஸ்ரீ ரகுபதே🥇🥇🥇
*சிலா பாலா* : சிலா என்றால் *கல்* ,
*பாலா* என்றால் இளம் பெண் - ஒரு இளம் பெண் கல்லாய் இருக்கிறாள்
*காசித் பல மதன லீலா விலுலிதா :*
ஏன் அவள் கல்லாய் இருக்கிறாள் என்றால்
இந்திரன் செய்த பல மன்மத லீலைகளில் இவள் தள்ளப்பட்டு கணவர் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாய் ஆகிவிட்டாள்🌺🌺🌺
*வஸதி அஸ்மின் தேசே :*
அவள் நீ போகும் இந்த பாதையில் தான் கல்லாய் வசித்துக்கொண்டிருக்கிறாள்
*தவ பத ரஜோ வாஞ்சதிதராம்* :
ஏன் கல்லில் வசித்துக்
கொண்டிருக்கிறாள் தெரியுமா ?
*தவ பத ரஜோ வாஞ்சதிதராம்* :
ராமா , உன் பாத துளி மண் அவள் மீது விழாதா என்ற ஏக்கத்துடன் கல்லில் வசித்துக்கொண்டிருக்கிறாள்😢😢😢
*இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்*💐💐💐
அப்பொழுது ராமன் ஒரு புன்னகை பூத்தானாம் ---😊😊😊
ராமன் ஏன் புன்னகை பூத்தான் என்றால் தனக்கு இன்னொரு தாய் கிடைத்து விட்டாளே என்ற சந்தோஷம் தாங்கவில்லை யாம்....
ராமன் கௌசல்யாவின் வயிற்றில் 12 மாதங்கள் வாசம் செய்தானாம்-
சாதாரணமாக இரண்டு மாதம் குழந்தை தந்தையிடமும்
பத்து மாதங்கள் தாயிடமும் வாசம் செய்யும் என்று சாஸ்த்திரங்கள் சொல்லும்
இங்கே தசரதன் மூலம் குழந்தை பிறக்காததினால் தசரதனிடம் தங்க வேண்டிய இரண்டு மாதங்களையும் சேர்த்து 12 மாதங்கள் கௌசல்யாவின் கர்ப்பத்தில் வாசம் செய்தான் ராமன்🌷🌷🌷
அகல்யா எத்தனையோ யுகங்களாக தன் நெஞ்சத்தில், கருத்தில் ராமனை சுமந்து
கொண்டிருக்கிறாள் -
இதோ என் ராமன் இப்பொழுது வந்துவிடுவான் -
ஏதோ காலடி சப்தம் கேட்கிறதே!!
ராமன் வருகிறானோ என்று வழிமேல் விழி வைத்துக்கொண்டு காத்திருந்தாளாம் -
மழை, புயல் விலங்குகளின் எச்சம் , சுடும் கதிரவனின் கதிர்கள் இப்படி எவ்வளவோ சங்கடங்களுக்கு நடுவே கல்லாய் அமர்ந்திருந்தாள் -
ராமா நீயும் என்னைப்போல் ஒரு கல்லா ?
உனக்கு என் மீது கருணை இல்லையா என்றே கண்ணீர் சிந்தியபடி....😢😢😢
ராமனுக்கு ஒரே சந்தோஷம்... வயிற்றில் சுமந்தவளைவிட கருத்தில் சுமந்தவள் இன்னும் உயர்ந்த பெண் என்று நினைக்கிறான் ராமன்...💐💐💐
ராமா அன்று இன்னொரு தாய் மனதினால் ராமனை யுகம் யுகமாக சுமந்தவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் ஒரு புன்னகை பூத்தாயே
அதே புன்னகை வடுவூரிலும் எங்களுக்கும் நீயே தாயாக இருக்கிறாய் என்பதைக்காட்டவே
அன்று சிந்திய அதே புன்னகையை எங்களுக்கும் காண்பிக்கின்றாயோ ராமா?? ☺️☺️☺️
1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
2.கங்கை பூமியை தொட்ட நாள்
3.ஆதி சங்கரர் கனகதாரா ஸ்லோகம் இயற்றி பாடிய நாள்
4.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
5.வியாசர் மஹாபாரதம் எழுதத் தொடங்கிய நாள்
6.குசேலர் கிருஷ்ணனை சந்தித்த நாள்
7.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அக்ஷ்ய பாத்திரம் பெற்ற நாள்
8.அன்னபூரணி தேவியாக அம்பாள் அவதாரம் எடுத்த நாள்
இன்னும் பொருள் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படாமல் இல்லாதவர்களுக்கு இருப்பதை கொடுங்கள் ...
ரொம்பவும் அருமையான ஸ்துதி ...
தேவீ மாஹாத்மீயத்தில் தேவீ தூத ஸம்வாதம் ( 2.5 உத்தம சரித்திரம்) எனும் பகுதியில் வரும் தேவர்களின் ஸ்துதி இது
இந்த ஸ்லோகத்தின் கடைசியில்
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
என்று 3 முறை நமஸ்தஸ்யை என்று வரும் ... *தஸ்யை* என்றால் என்ன ஏன் மூன்று முறை சொல்ல வேண்டும்
தஸ்யை எனும் தத் பதம் .... தத் is such a force that cannot be described . It is a fundamental force responsible for all lives .
When Vedas approached para Brahman and asked about this force Brahaman said it is "THAT" and that become தத் ....
That தத் has taken feminine role and as per Sanskrit rules தத் becomes *தஸ்யை*
அனுமான் தேவியை லங்கையில் பார்த்துவிட்டு சொல்கிறான்
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யைச *தஸ்ய* ஜனகாத்மஜாயை
என்கிறான் ...
தேவ்யைச *தஸ்ய* who has incarnated as daughter of janaka... ராமன் லக்ஷ்மணனுக்கு நமஸ்காரம் என்று மட்டும் சொல்லிவிட்டு
சீதையை *தஸ்யை* என்கிறான் ...
SHE cannot be described , explained or understood .. that is the power of devi 's slokas ...
மூன்று முறை நமஸ்தஸ்யை மூன்று தேவிகளுக்கு நமஸ்காரம் என்று குறிக்கும் ...
மஹா காளி , மஹா லக்ஷ்மி , மஹா சரஸ்வதி .... None can describe or understand HER .
May god bless you in abundance this May
Let there not be any dismays ...
Queen of months, supremely fair,
Cloth'd with garments rich and rare,
None in beauty can compare
With thee, sweet May.
Lovely month, thou bringest mirth,
Spreadest sweetness over the earth,
Causest Nature to give birth
To fruits and flowers.
Thou art loved by young and old.
Joys for each thou dost unfold;
Never shall our hearts grow cold
To thee, sweet May.
Wishing you all happy May 💐💐💐
If , through the merits earned in previous lives as vast as mountains, one is guided to visualize the pure nectarine of Bhagavan Siva who shines with clarity and auspiciousness , is accompanied by Uma worshipped by the virtuous , holds a deer in one hand is complete in Himself , and dispels the darkness of ignorance - then when envisioned in the lotus of the mind ,
He becomes the ocean of bliss /Ananda .
This bliss manifests eloquently and the virtuous are inspired with noble and elevated thoughts !!💐💐💐
ரொம்பவும் அருமையான ஸ்துதி ...
தேவீ மாஹாத்மீயத்தில் தேவீ தூத ஸம்வாதம் ( 2.5 உத்தம சரித்திரம்) எனும் பகுதியில் வரும் தேவர்களின் ஸ்துதி இது
இந்த ஸ்லோகத்தின் கடைசியில்
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
என்று 3 முறை நமஸ்தஸ்யை என்று வரும் ... *தஸ்யை* என்றால் என்ன ஏன் மூன்று முறை சொல்ல வேண்டும்
தஸ்யை எனும் தத் பதம் .... தத் is such a force that cannot be described . It is a fundamental force responsible for all lives .
When Vedas approached para Brahman and asked about this force Brahaman said it is "THAT" and that become தத் ....
That தத் has taken feminine role and as per Sanskrit rules தத் becomes *தஸ்யை*
அனுமான் தேவியை லங்கையில் பார்த்துவிட்டு சொல்கிறான்
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யைச *தஸ்ய* ஜனகாத்மஜாயை
என்கிறான் ...
தேவ்யைச *தஸ்ய* who has incarnated as daughter of janaka... ராமன் லக்ஷ்மணனுக்கு நமஸ்காரம் என்று மட்டும் சொல்லிவிட்டு
சீதையை *தஸ்யை* என்கிறான் ...
SHE cannot be described , explained or understood .. that is the power of devi 's slokas ...
மூன்று முறை நமஸ்தஸ்யை மூன்று தேவிகளுக்கு நமஸ்காரம் என்று குறிக்கும் ...
மஹா காளி , மஹா லக்ஷ்மி , மஹா சரஸ்வதி .... None can describe or understand HER .
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*👌👌👌
*கௌதமர் ராமனைப்பார்த்து சிலவார்த்தைகளை கேட்க அதைக்கேட்டு ராமன் புன்னகை சிந்துகிறான்*☺️☺️☺️
பங்க்த்வா ராம சிலாமதா மம முதா பூர்ணாம் இமாம் பாமினீம் பங்க்த்வா நாம தநு: பஜ அவனி பவாம் ஸ்ரீ ஜானகீம் பாமினீம்
ஏவம் வாதினி கௌதமே குசிக பூ ஸந்தோஷ ஸம்வர்தகே
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் பாஸதே
भङ्क्त्वा राम शिलामदा मम मुदा पूर्णामिमां भामिनीं भङ्क्त्वा नाम धनुर्भजावनिभवां श्रीजानकीं भामिनीम्। एवंवादिनि गौतमे कुशिकभूसन्तोषसंवर्धके यन्मन्दस्मितमानने तव बभौ तत् सांप्रतं भासते॥
*பங்க்த்வா ராம சிலாமதா மம முதா பூர்ணாம் இமாம் பாமினீம்*
ராமா!! கல்லாய் இருந்த என் மனைவியை எனக்கு உயிருடன் திருப்பித் தந்துவிட்டாய்...🙏🙏🙏
*பங்க்த்வா நாம தநு: பஜ அவனி பவாம் ஸ்ரீ ஜானகீம் பாமினீம்*
அதே போல் மிதிலைக்கு சென்று சிவதனுசுவை உடைத்து சீதையை உன் மனைவியாகப்பெற்றுக்கொள்...🏹🏹🏹
*ஏவம் வாதினி கௌதமே குசிக பூ ஸந்தோஷ ஸம்வர்தகே*💐💐💐
இதைக்கேட்ட விஸ்வாமித்திரருக்கு ஒரே மகிழ்ச்சி -
தன் நோக்கத்திற்கும் சேர்த்து கௌதமர் ஆசிக்கூறி விட்டாரே என்று
ராமன்.... கௌதமரின் வார்த்தை + தன் குருவின் மகிழ்ச்சி இரண்டையும் கண்டு சந்தோஷப்பட்டு ஒரு புன்னகையை சிந்தினானாம்🙂🙂🙂
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் பாஸதே
அதே புன்னைகை வடுவூரிலும் எங்களுக்காகத் இன்னும் தந்துக்கொண்டிருக்கிறாய்
கல்லை உடைத்து அகல்யா .
வில்லை முறித்து ஜானகி.
சொல்லை கேட்டு முனியும்
எல்லை இல்லா மகிழ்ச்சி.🙂🙂🙂🙂🙂🏹🏹🏹🏹🏹
என்றே கலங்கிக் கண்ணநீர்
அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணிநின்
பெயரே பிதற்றுமாறு
அருள்எனக்கு அந்தோ!
காணுமாறு அருளாய் காகுத்தா!
கண்ணா! தொண்டனேன்
கற்பகக் கனியே!
பேணுவார் அமுதே! பெரியதண்
புனல்சூழ் பெருநிலம்
எடுத்தபே ராளா!
குளிர்ச்சியான.. கடல்
சூழ்ந்த.. இந்தப் பூமியை..
வராகமாய் அவதரித்து.. மீட்டு
வந்த எம்பெருமானே..
தொண்டனாகிய அடியேனின்
கற்பகக் கனியே.. உனக்குக்
கைங்கர்யம் செய்யும்.. உன்
அடியார்களுக்கு.. அமிர்தமானவனே..
ஸ்ரீராமனே.. கண்ணனே..
அடியேனுக்கு.. பெருமானே..
நீ தரிசனம் தரவேண்டும்..
உனது நாமங்களைச்
சொல்லிச் சொல்லி.. கண்ணீர்
பெருக.. பாவியான அடியேன்..
உனக்கு எந்தெந்த விதத்தில்..
எப்படி எப்படியெல்லாம்..
கைங்கர்யம் செய்ய முடியுமோ..
அப்படியெல்லாம்.. இடைவிடாது..
எப்போதும்.. எப்பொழுதும்..
தொண்டு புரிந்து.. நீ.காட்சி
தரவேண்டும் என்று..
பிதற்றும் நிலைக்கு..
அடியேன் வரும்படியாகவா..
நீ எனக்கு அருள்புரிவது?
இது என்ன பரிதாபம்?
த்ரிஶூலம் பாது நோ பீ⁴திர்ப⁴த்³ரகாலி நமோஸ்துதே
*உமாம்பிகை சமேத உமாமகேஸ்வரர்* *திருக்கோயில்* *வேடப்பட்டி, கோவை*💐
*அம்மா*
ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பாய் .
மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பாய்
பூலோகத்தில் வாழும் போது புகழையும் கொடுப்பாய்.
பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பாய்.
பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பாய்
அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வாய்.
பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வாய்.
கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பாய்
அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பாய்.
ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை மானுக்குக் கொடுப்பாய்.
பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பாய்.
அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பாய்.
அதை முழுவதும் பயன் படுத்தாத மனிதர்களையும் படைப்பாய்.
தவம் பல செய்தால் கேட்பதைக் கொடுப்பாய்.
தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பாய்.
நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பாய்.
கொள்ளையடித்தால் கொடுத்தவளே பிடுங்கவும் செய்வாய்.
புரியாதவனுக்கு புதிராய் இருப்பாய்.
தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பாய்.
கடல் முழுதும் தண்ணீரை வைப்பாய்.
தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பாய்.
மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.
சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.
பின்னிருந்து இயக்குவாய்.
தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவாய்.
உள்ளத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பாய்.
உன்னை புரிந்தோர் எவருண்டு ...
புரிய முனைவோர் இலக்கை தவறியதும் உண்டு
🌷🌷🌷🌷
கம கம வென்றே மணம்
மேனி முழுவதும் நெய்யின் வசம்
நதிகள் சேருமிடம் சமுத்திரம் ...
உன் ஆட்டம் ஓயும் இடம் வாயின் அந்தப்புரம்
இனிப்பில் ராணி நீ ... இணைப்பில் பாகம் பிரியாள் நீ
காமன் விடும் அம்புகள் கிருஷ்ணா ஸ்வீட் பக்கம் ...
காமனை எரித்தவன் என்றும் என்பக்கம் ... இருந்தும் தோற்றேன் உன் வனப்பிடம் ...
இனிமேல் தொடு வேனோ என்றே கேட்டேன் மனத்திடம்
இன்னொன்று கொடு சொல்கிறேன் என்றது பாழும் மனம்
*வடுவூர்* *ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐
ஸ்வேஷு ப்ராத்ருஷு தே ததா த்ரிஷு முதா யோஷித் ஸமேதேஷு அபூத்
சித்தே ந்ருத்த ரதோ அமித:
பரிணயே மோத: ஸபாயாம் ப்ரபோ
தஸ்ய இதம் பரிவாஹதாம் அதிகதம் மந்த ஸ்மிதம் யத் முகே
தத் ஹி இதம் விதனோது ராகவ பரம் கல்யாணம் அஸ்மாஸு அபி🙂🙂🙂
स्वेषु भ्रातृषु ते तदा त्रिषु मुदा योषित्समेतेषु अभूत्
चित्ते नृत्तरतोऽमितः परिणये मोदस्सभायां प्रभो।
तस्येदं परिवाहतां अधिगतं मन्दस्मितं यन्मुखे
तद्धीदं वितनोतु राघव परं कल्याणं अस्मास्वपि॥
பூமாரி பொழியும் காட்சி🙏🙏 ராமராஜ்யம் 👍 ஆனந்தம் ஆனந்தமே!! ஆனந்த புன்னகை.
41வது பெருமை மிக்க புன்னகை😊😊😊
தன் தம்பிமார்கள் மூவரும் மணக்கோலத்தில் இருப்பதைக் கண்டு ராமன் பூத்த புன்னகை .
லக்ஷ்மணன் , பரதன் , சத்துருகன் மூவரும் வெறும் தம்பிகள் மட்டும் அல்ல ...
ராமனுக்கு சேவை செய்த ஆழ்வார்கள் , அடியார்கள் ..
அவர்களும் ராமனை வெறும் அண்ணனாக பார்க்க வில்லை
சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனாகவே பார்த்தனர் ..
சீதையை தாயாராக பார்த்தனர் ..
*பிள்ளை பெறாமல் திருமண நாள் அன்றே சீதை ராமனின் மூன்று தம்பிமார்*
*களுக்கும் தாயானாள்...*👌👌👌
பெருமாளுக்கு தன் பக்தர்களை தன் நிலைக்கு உயர்த்தி பெருமை பட்டுக்கொள்வது வழக்கம் ..
தன்னிடம் இருக்கும் எல்லா கல்யாண குணங்களையும் அவர் பக்தர்களுக்கு வழங்குபவர்.
8 கல்யாண குணங்கள் அவரிடம் உள்ளன ..
1. பிறவி இன்மை
2. மூப்பு இல்லாமை
3. பசி இல்லாமை
4. வியாதி இல்லாமை
7. துக்கம் துயரம் இல்லாமை
8. எல்லோரும் சமம் என்று நினைக்கும் குணம்
இங்கே அம்பாளை நினைப்பது அவசியம்
அவளும் தன் அண்ணனைப்போல் *பவானீத்வம்* தருபவள் 🦜🦜🦜.
உனக்கு நான் அடிமை என்று பக்தன் சொன்னவுடன் தன்னையே தந்து விடுபவள் ...
கொஞ்சமும் அவள் தன்னையேத் தருவதில் யோசிக்க மாட்டாளாம் ..
வாம பாகத்தைய் வவ்வியவள் ஆயிற்றே தன்னுடன் ஈசனையும் சேர்த்து தன் பக்தனுக்கு தந்து விடுவாள் ...
அதனால் தான் அவளை *கருணா ரஸ ஸாகரா* என்கிறோம் . 👌👌
ஆண்டாள் பாடுகிறாள் வாரணம் ஆயிரம் என்று ...
கண்ணன் மட்டும் யானையில் வரவில்லையாம் அவன் தனக்கு சமமாக தன் தோழர்களை 1000 யானைகளில் அமர்த்தி தன்னுடன் அழைத்து வருகிறானாம் .🤗🤗🤗 தனக்கு சமமாக எல்லோரையும் நினைக்கிறான் ...
குசேலர் அடுத்து நல்ல உதாரணம் .
ராமன் நினைக்கிறான் ... சீதை எனக்கு கிடைத்ததை போல் ஜனகரின் மகளான ஊர்மிளை லக்ஷ்மணனுக்கும் கிடைத்துள்ளாள் ...👍👍👍
அவளும் அழகிலும் அறிவிலும் தியாகத்திலும் பொறுமையிலும் சீதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லை ...
லக்ஷ்மணன் எனக்காக உயிர் வாழ்பவன் ..
என்னிடம் இருக்கும் எல்லா கல்யாண குணங்களும் அவனிடமும் இருக்கின்றன ..
வீரத்தில் , தோள் வலிமையில் சளைத்தவன் இல்லை
அவனாலும் மீண்டும் இன்னொரு சிவதனுசு இருந்தால் என்னைப்போல் நாணேற்றி அதை முறிக்கவும் முடியும் அவனும் சிவசிந்தனை கொண்டவன் என்பதால் ....🏹🏹🏹
பரதன் ... 1000 ராமன் சேர்ந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாக முடியாது ..
அவன் தான் எனக்கு எல்லாமே . அவன் தன்னிடம் இருக்கும் எல்லா கல்யாண குணங்களையும் எனக்கு அருள வேண்டும் ..
பெரும் தபஸ்வீ , வேதம் தெரிந்தவர் ..சிவ பக்தி அதிகம் கொண்டவரின் மகள் *மாண்டவி*.
சீதையைப் போன்றவள் எல்லா குணங்களிலும் திறமையிலும். 👌👌
என் கடைக்குட்டி என் செல்லம் சத்ருகன் ..
இவனைப்பற்றி தனியாக இன்னொரு ராமாயணம் எழுத வேண்டும் ..
ஒரு புண்ணியாத்மா அடியார்க்கும் அடியேனாக விளங்குபவன் .
இவனுக்கும் சீதையைப்போல் மகத்தான சுருத கீர்த்தி எனும் குசத்வஜனின் மகள் கிடைத்துள்ளாள் .. 👏👏👏
எல்லோருமே எனக்கும் சீதைக்கும் சமமான ஏன் இன்னும் உயர்வான ஜோடிகள் ..
அவன் கொண்ட ஆனந்தம் உள்ளுக்குள் வெள்ளமாக மாறி எல்லா தடைகளையும் உடைத்துக்கொண்டு முகத்தில் புன்னகையாக தெளித்தாம்... 🙂🙂🙂
இறைவனால் மட்டும் தான் இப்படி மிக உயர்வாக நினைக்க முடியும் ..
தனக்கு சமமாக தன் பக்தனும் அந்த பக்தனுக்கும் பக்தனாக விளங்கும் அடியவர்களுக்கும் தனக்கு சமமாக கொண்டு வரவேண்டும் என்று ...
கல்யாண குணங்களை எல்லாம் தருகிறான் ...
அம்பாளைப் போல *பவானீத்வம்* தருபவன் ஸ்ரீமன் நாராயணன் ..
பக்தனை தன் அளவிற்கு கொண்டு வருவதில் அண்ணனும் தங்கையும் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்
ஈசனோ இவர்கள் இருவரையும் மிஞ்சியவன் ...
முசுகுந்த சக்கரவர்த்தி தன் முன் பிறவியில் குரங்காக இருந்த போது புலியிடம் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் மரத்தில் அமர்ந்து இல்லைகளை கிள்ளி கீழே போட்டுக்
கொண்டிருந்தானம் ...
கிள்ளிய இலைகள் வில்வம் கீழே விழுந்த இடம் சிவ லிங்கங்கத்தின் மீது ...
அடுத்த பிறவி ராஜாவாக ... திருவாரூர் தியாக ராஜாவே இவன் கருணையால் தான் இந்திர லோகத்தை விட்டு திருவாரூர் வந்து அமர்ந்தார் ....
*ராமா அப்படி சிதறிய புன்னகையை முத்துக்களாக கோத்து*
👌👌 *வடுவூரில் எங்களுக்காக இன்றும் தந்து கொண்டிருக்கிறாயோ* 😊😊😊
*வடுவூர்* *ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
பாணிக்ரஹணம் என்றால் கரம் பற்றுதல் என்று பொருள் கன்னிகையின் வலது கரத்தை பையன் தனது வலது கரத்தால் பிடித்துக் கொண்டு ( *பூஷா த்வேதோ நயது ஹஸ்தக் ருஹயாஷ்விநௌ த்வாப்ரவஹதாம் ரதேன க் ருஹான்கச்ச க் க்ருஹபத்நீ யதா அஸோ வசினி த்வம் வித் த மாவதாஸி*)
பூஷா என்ற தேவன் உன் கையை பிடித்து அக்னியின் அருகில் அழைத்துச் செல்லட்டும்,
அஸ்வினீ தேவர்கள் உன்னை புஸ்பரதத்தில் எனது கிஹத்திற்கு அழைத்துச் செல்லட்டும்,
ஆசியுடன் சுற்றத்தாருடன் ஆரோக்கியமாக நாம் வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம் என்ற மந்திரத்தால் அக்னியின் அருகே கிழக்கு முகமாக இருவரும்
அமருகிறார்கள்,
பெண் பையனுடைய வலது கை பக்கம் அமருவாள்
பிறகு மேன்மையான இருவரும் தர்ம சாஸ்திரங்களில் கூடியுள்ளபடி
அன்யோன்யமான மற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
எப்படி ஒரு
வருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும் , சுகதுக்கங்களில் பங்கு கொண்டு ஒற்றுமையாக ஆரோக்கியத்துடனும்),
*க்ருப்ணாமிதே*‘
என் தர்மபத்னி உத்தம்மான புத்திரனைப் பெற்றெடுக்கவும் ஒருமித்து வாழவும் குலம் தழைக்க உன்னை பகன்,அர்யமா,சவிதா,இந்திரன்முதலான தேவர்கள்
உனது தாய் தந்தைமூலம் எனக்கு அளித்திருக்கிறார்கள்💐💐💐
அவர்களைப் போலவே நாமும் இல்லறத்தை பேணி பூஜை ஆராதனை ஹோமம்
யாகம் யக்ஞம் எல்லா சௌகர்யத்துடனும் தீர்காயுஸுடனும் வாழவேண்டும் என்பதை வரன் பெண்ணிற்குப் எடுத்துச் சொல்கிறான்,
சீதையின் கரங்களை ராமன் பிடிக்கிறான் -
அவன் உள்ளத்தில் பேரானந்தம் -
எல்லோருக்கும் அள்ளி அள்ளி வழங்கும் கரங்கள் அல்லவா மஹாலக்ஷ்மியின் கரங்கள் -- ஆதி சங்கரர் கேட்டார் என்ற ஒரே காரணத்தால் தங்க நெல்லிக்கனிகளை மழைபோல் பொழிய வைத்தவள் அவள் அல்லவா -
அப்படிப்பட்ட தன்னிலும் தயா குணம் அதிகம் கொண்ட சீதையின் கரங்களைப் பிடித்த ராமன் உள்ளத்தில் பன்னீரை வாரி வாரி தெளிக்கின்றது -
நாதஸ்வர ஓசையும் மேள சப்தமும் --
*ராமா நீ கொடுத்து*
*வைத்தவன்*
எங்கள மைதிலியைப்
போல் இன்னொரு பெண் இந்த பூமியில் இனி பிறக்கப்
போவதில்லை👌👌👌: என்று முழங்கியது ....
பாணிக்கிரஹணம் தான் மிகவும் முக்கியமான கட்டம் -
கன்னிகாதானம் ஆனபிறகோ இல்லை தாலி கட்டியபிறகோ அவள் அவனை சேருவதில்லை , உரிமை ஆவதில்லை -
பாணிக்கிரஹணம் தான் அதை பூர்த்தி செய்கிறது -
திருக்கல்யாணம் பூரணமாக நிறைவேறியது என்பதை காண்பிக்கும் படலம் இது.
*ஸீதாயா: கர லாலனேன லாலனேன பகவன்* -
சீதையின் கரங்களை பற்றுகிறான் பகவானான ராமன்
*ஸந்துஷ்ட சித்த*: - உன் உள்ளத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது
*ததா* - அந்த நேரத்தில்
மனைவியை தர்மபத்தினி என்று சொல்வார்கள் --
கணவன் எந்த தர்ம காரியங்களை செய்தாலும் மனைவி கூட இருந்தால் தான் அந்த காரியம் பூர்ண சித்தி பெரும் -
இங்கே ராமன் செய்யப்போவது விசேஷமான தர்மம் -
அதை பூர்த்தி செய்ய வந்த மனைவியோ மிகவும் விஷேசமானவள்💐💐💐
: *ஸாகம் தர்ம ரத ஆத்மனா புவி ஸதாம் தர்மம் கரோமி உன்னதம்*👌👌👌
ராமா அப்பொழுது நீ மனதில் என்ன நினைத்தாய் --
இந்த உத்தமியோடு சேர்ந்து உன்னதமான தர்மத்தை செய்யப்போகிறோம்
என்ன தர்மம் ?
யார் என்னை சரணம் என்று சொல்லி வருகிறார்களோ அவர்களை காப்பேன் என்ற தர்மம் --
*சரணாகத ரக்க்ஷகம்* -- இதுதான் விஷேச தர்மம் அதை செய்யும் போது தர்மபத்தினியான சீதை என்னுடன் இருக்கப்போகிறாள் என்ற சந்தோஷம் ராமனுக்கு பீறிக்கொண்டு வந்ததாம்💐💐💐 சில கேள்விகள் எழலாம்
சுக்ரீவன் அனுமன் சரணாகதி அடையும் பொது பக்கத்தில் சீதை இல்லையே என்று
அதே மாதிரி விபீஷணன் சரணாகதி செய்யும் போது சீதை அருகில் இல்லையே என்று
சுக்ரீவன் சீதை கீழே போட்ட நகைகளை ராமனுக்கு காட்டித்தான் அவன் நம்பிக்கையை பெறுகிறான் -
அதனால் சீதை நகைகள் வடிவமாக அங்கே ராமன் அருகில் இருந்தாள் -
சீதை இலங்கைக்கு சென்ற பின் தான் அங்கிருந்த வீபீஷணன் ஓடிவந்து ராமனிடம் சரண்
அடைகிறான் -
சீதையின் அருள் இல்லாமல் இவர்கள் சரண் அடைந்திருக்கவே முடியாது
*இதி அந்த: கலயன்*- இப்படி உன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை
*யத் அகரோத் மந்த ஸ்மிதம் தத் பவான்*
வெளியே வாசகமாக சொல்லமால் ஒரு உயர்ந்த புன்னகையாக தெரிவித்தாய்😊😊😊
*தத் ஸங்க்ரீடதி ஸாம்ப்ரதம் தவ முகே ஸம்பச்யதாம் க்ஷேமதம்*
அதே புன்னகையை எங்கள் எல்லோருக்கும் வடுவூரிலும் கான்பித்துக்கொண்டிருக்கிறாய் -
*இந்த மந்தஸ்மிதம் எல்லோருக்கும் சர்வ மங்களமும் தரக்கூடியதாக அமையட்டும் - இந்த புன்னகையை யாரெல்லாம் தரிசிக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் வெற்றியாக அமையட்டும் - தம்பதிகள் சிறந்து வாழட்டும் ராமா*
அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ராமன் இன்னும் கூடவே சீதையோடு அதிகம் புன்னகைத்தான் 🙂🙂🙂
கல்யாணம். ஆஹா
ஆனந்தம்
தம்பிகள் பற்றி அண்ணன் கூறுவது
அருமை
அங்கு மற்றும். இல்லை
எங்கள் உள்ளத்தை உருக செயய்யும்
புன்னகை ராமாயணம்🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arpudham arpudham..andha Maha Lakshmiye pennai kidaikka yennai bhagyam seitharo Jaakar.
Idai ungal Moolam padithu anubavikka enna bhagyam kidaitthadu... Thank you.. Jai Sitaram 🙏🙏💐💐🌷🌷
[15/05, 07:23] Tamil Jayaraman Ravikumar: From Savitha
அற்புதம்
ராமனின் புன்னகை
ஜனகருக்கு தன் மகள் சாக்ஷாத் மகாலட்சுமி என்று கர்வம் அருமை
*SHLOKA Nbr: 1*
*Shiva-Shakthi, Supreme Reality – One Single Entity*
शिवः शक्त्या युक्तो यदि भवति शक्तः प्रभवितुं
न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि।
अतस्त्वाम् आराध्यां हरि-हर-विरिन्चादिभि रपि प्रणन्तुं स्तोतुं वा कथ-मक्र्त पुण्यः प्रभवति॥ 1 ॥
Siva Saktyaa yukto yadi bhavati Saktah prabhavitum
na chaed aevam daevo na khalu kusalah spanditum api
atas twaam aaraadhyaam hari hara virinchaadibhir api
pranastum stotum vaa katham akrita punyah prabhavati. (1)
*TRANSLATION* Lord Shiva, who is the embodiment of light and the provider of welfare to the Universe, gets the power to create this Universe (provide the “motive force” to enliven this world) only when he combines with Shakthi. Otherwise, on his own, He cannot move even an inch. In the circumstances, how can anyone hope to be alive, who does not sing your praise, Oh! Mother Goddess, who is worthy of being worshipped even by the Trinity of Brahma, Vishnu and Shiva?
*SIGNIFICANCE:*
This is a very interesting way of looking at ‘Shakthi’. As we discussed earlier, Shiva is the “form” superimposed on Sadashiva the forless Brahman or Pure Existence. Existence cannot be experienced through the senses – it has to be visualized intuitively. Since existence is all-pervading and is single (advaitam), it is infinite. So there cannot be any movement or action. Action presupposes motion and motion means limitation. So Shiva is always motionless. When he becomes aware of the ‘creative’ power (Shakthi) inherent in him, he becomes the creator. Then His power (Shakthi) manifests the universe from within. Thus in the presence of Shiva (Existence or Sat) Shakthi becomes the throbbing consciousness (Chit) and transforms herself into the world of plurality. This is achieved by combining her 3 gunas (qualitatively) and the 5 elements (quantitatively) – their permutation/combination giving rise to the sense organs (5+5) the mind-intelelct-complex and the objects (vishayas). Thus, technically speaking Shiva is able to act only when he ‘combines’ with Shakti. (material world). That is why Lord Krishna said in the Bhagavad Gita “Presided over by me, Prakrithi creates”. Practically speaking whatever we seriously determine (sankalpam) and work for it can be achieved by us – the determination is backed by powerful Shiva.
🪷🪷🪷🪷🪷
கண்ணனுடன் சகாக்களும் வர,
விட்டம் தொங்கும் தாழி இறக்க...அவனின்
பிட்டம் தூக்கித் தாங்கியிருக்க..
அறியா பிள்ளைகளுக்கு ஆட்டம் காட்டி,
உறியானது உயர ஆடியதே!
நம்பிய தோழருக்கு... அவன்
எம்பி தாழியை உடைக்கலானதோ,
உடை ,தலை என எங்கும்..களவு
அடையாளமாய்க் கிடைக்கலானதே!
எண்ணம் தடையின்றி நிறைவேறியதா ?தெரியாது!
வெண்ணெய் தடயமாய் உடலில் நிறைய ஏறியது!
இதுவல்லவோ ஏற்ற அத்தாட்சி,
புது வெண்ணெய் தோற்றமாய் அற்புத காட்சி!
அவனி போற்றுமே அவனை நிதம்..
*நவநீதன்* திருநாமமே பெருமிதம்!
----
சுட்டி கண்ணன் எட்டிப்பார்த்தான் ..
தட்டில் பல காரங்கள் விட்டில் தொங்கும் வெண்ணெய் கலசங்கள் ..
கட்டில் நிறைய கட்டிப்போடும் கயிறுகள் ..
மனதில் மட்டும் மட்டில்லா ஆசைகள்
எச்சில் ஊறும் இதழ்களிலே அம்மா வெனும் சொற்கள்
அச்சில் வார்த்த அழகில் மஞ்சில் விரிச்ச பூவாய் எழுந்தாள் யசோதை
அம்மாவென்ற வார்த்தை அகிலம் தனை புரட்டி போடுமா ?
கண்ணன் வாய் திறந்தால் அகிலம் உள்ளே தெரியுமா ?
வசந்த கண்களில் கண்ணனை தொட்ட கருப்பில் அஞ்சனம் தீட்டிக்கொண்டாள் காலங்கள் வியக்கும் யசோதை ...
என்ன வேணும் கண்ணா என்றாள் ...
வரம் தருபவன் வரம் பெற்றான் அன்னையிடம் ...
வெண்ணெய் பானை மூடாதே அம்மா ....
ஏன் என்றாள் ஏதும் அறியா மாது ....
வெண்ணெய்க்கு மூச்சு திணறும் ...
கண்ணை மூடிக்கொள்ளும்
காப்பாற்ற யாரும் இல்லை என்றே ...
கண்ணன் நான் இருக்கும் போது காப்பாற்ற யாரும் இல்லை என்றே யாரும் அழுவது நியாமோ அம்மா...?
வாய் அடைத்துப்
போனாள் வாய் நிறைய கண்ணா என்றே
கனப் பொழுதும் அழைக்கும் நந்தகோபன் பிரியாள் ...🦜🦚
A different dimension to the picture explained👍🏻
*அம்பாள் ; புவனேஸ்வரி*
ந தேஷாம் ஜாயதே கிஞ்சித³ஶுப⁴ம் ரணஸங்கடே ।
நாபத³ம் தஸ்ய பஶ்யாமி ஶோகது³:க²ப⁴யம் ந ஹி ॥ 7
*அம்மா*
ஆயிரம் கோடி நாமங்கள் அத்தனையும் தேனில் விழுந்த பலா சுளைகள்
ஆயிரம் கோடி ரூபங்கள் ... அத்தனையும் கடலில் சேரும் நதிகள்
ஆயிரம் கோடி தேவதைகள் அத்தனையும் நீ போட்ட விதைகள்
ஆயிரம் கோடி அர்ச்சனைகள் அத்தனையும் உன் பாதம் விழும் பூச்செண்டுகள்
ஆயிரம் கோடி வரங்கள் அத்தனையும் உன் நாமம் தந்த வரன்கள்
ஆயிரம் கோடி கண்கள் அத்தனையும் உன் அழகில் ஊறும் விட்டில் பூச்சிகள் ...
மெய்யூர், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம்
*ஸ்ரீ அனந்தநாயகி*
யைஸ்து ப⁴க்த்யா ஸ்ம்ருதா நூனம் தேஷாம் வ்ருத்³தி⁴: ப்ரஜாயதே ।
யே த்வாம் ஸ்மரந்தி தே³வேஶி ரக்ஷஸே தான்னஸம்ஶய: ॥ 8 ॥
*அம்மா*
ரத்னங்களால் இழைக்கப்பட்ட கண்ணாடியோ உன் கன்னங்கள்
தாமரையை ஒத்த மலர்ந்த முகமோ உன் திருமுகம் ?
அலங்காரமாய் ஒப்பற்ற அழகிய தாடங்கங்களை அணிந்து பொலிபவளோ நீ
செங்கமலத்தின் கர்ணிகையை போன்ற அழகிய நாசியை உடையவளோ நீ ?
கிருஷ்ணனின் சகோதரியாகத் திகழ்பவளோ நீ ?
ரக்ஷிக்க உனை அன்றி மற்றோர் தெய்வம் உளதோ அம்மா ?