ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 10 - ஸ்லோகம் - 1 to 10 படைப்புகளின் வர்ணனை

वैकुण्ठ वर्धितबलोऽथ भवत्प्रसादा- दम्भोजयोनिरसृजत् किल जीवदेहान् । स्थास्नूनि भूरुहमयानि तथा तिरश्चां जातिं मनुष्यनिवहानपि देवभेदान् ॥१॥ வைகுண்ட₂ வர்தி₄தப₃லோ(அ)த₂ ப₄வத்ப்ரஸாதா₃- த₃ம்போ₄ஜயோநிரஸ்ருஜத் கில ஜீவதே₃ஹாந் | ஸ்தா₂ஸ்நூநி பூ₄ருஹமயாநி ததா₂ திரஶ்சாம் ஜாதிம் மநுஷ்யநிவஹாநபி தே₃வபே₄தா₃ந் || 1|| 1. வைகுண்டநாதா! உன் அருளால் பிரும்மன் மிகுந்த சக்தியை அடைந்து, பல ஜீவராசிகளையும், மரம், செடி, கொடி, பறவை, மிருகம் முதலியவற்றையும், மனிதர்களையும், தேவர்களையும் படைத்தார். मिथ्याग्रहास्मिमतिरागविकोपभीति- रज्ञानवृत्तिमिति पञ्चविधां स सृष्ट्वा । उद्दामतामसपदार्थविधानदून - स्तेने त्वदीयचरणस्मरणं विशुद्ध्यै ॥२॥ மித்₂யாக்₃ரஹாஸ்மிமதிராக₃விகோபபீ₄தி- ரஜ்ஞாநவ்ருத்திமிதி பஞ்சவிதா₄ம் ஸ ஸ்ருஷ்ட்வா | உத்₃தா₃மதாமஸபதா₃ர்த₂விதா₄நதூ₃ந - ஸ்தேநே த்வதீ₃யசரணஸ்மரணம் விஶுத்₃த்₄யை || 2|| 2. அறிவு மயக்கம், அகங்கார மமகாரம், ஆசை, கோபம், பயம் முதலிய ஐந்து அஞ்ஞான காரியங்களை உண்டு பண்ணினார். தமோகுணமான காரியங்களைப் படைத்ததால் துயரத்தை அடைந்தார். அத்துயரம் விலக உன் திர...