ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 27 - sloka 1 to 10 -கூர்மாவதாரம்

दुर्वासास्सुरवनिताप्तदिव्यमाल्यं शक्राय स्वयमुपदाय तत्र भूय: । नागेन्द्रप्रतिमृदिते शशाप शक्रं का क्षान्तिस्त्वदितरदेवतांशजानाम् ॥१॥ து₃ர்வாஸாஸ்ஸுரவநிதாப்ததி₃வ்யமால்யம் ஶக்ராய ஸ்வயமுபதா₃ய தத்ர பூ₄ய: | நாகே₃ந்த்₃ரப்ரதிம்ருதி₃தே ஶஶாப ஶக்ரம் கா க்ஷாந்திஸ்த்வதி₃தரதே₃வதாம்ஶஜாநாம் || 1|| 1. தேவலோக மங்கையால் தனக்குக் கிடைத்த மலர் மாலையை, துர்வாச முனிவர் இந்திரனுக்குக் கொடுத்தார். அந்த மாலை, இந்திரனுடைய ஐராவதம் என்ற யானையால் மிதிக்கப்பட்டது. அதனால், முனிவர் கோபம் கொண்டு இந்திரனைச் சபித்தார். உன்னிடமிருந்து தோன்றியவர்களைத் தவிர வேறு எவருக்கும் பொறுமை இருப்பதில்லை. शापेन प्रथितजरेऽथ निर्जरेन्द्रे देवेष्वप्यसुरजितेषु निष्प्रभेषु । शर्वाद्या: कमलजमेत्य सर्वदेवा निर्वाणप्रभव समं भवन्तमापु: ॥२॥ ஶாபேந ப்ரதி₂தஜரே(அ)த₂ நிர்ஜரேந்த்₃ரே தே₃வேஷ்வப்யஸுரஜிதேஷு நிஷ்ப்ரபே₄ஷு | ஶர்வாத்₃யா: கமலஜமேத்ய ஸர்வதே₃வா நிர்வாணப்ரப₄வ ஸமம் ப₄வந்தமாபு: || 2|| 2. பிறகு, இந்திரன் சக்தி குறைந்தவனாக ஆனான். தேவர்களும் சக்தியை இழந்து அசுரர்களால் ஜயிக்கப்பட்டார்கள். பரமசிவனும், மற்ற தேவர்களும், பிரம்மாவுடன் உன்னை சரணடைந்தனர்...