ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 29- தேவர்கள் அம்ருதம் அடைந்ததும், அசுரர்கள் வதமும் மோஹினி அவதாரம்
उद्गच्छतस्तव करादमृतं हरत्सु दैत्येषु तानशरणाननुनीय देवान् । सद्यस्तिरोदधिथ देव भवत्प्रभावा- दुद्यत्स्वयूथ्यकलहा दितिजा बभूवु: ॥१॥ உத்₃க₃ச்ச₂தஸ்தவ கராத₃ம்ருதம் ஹரத்ஸு தை₃த்யேஷு தாநஶரணாநநுநீய தே₃வாந் | ஸத்₃யஸ்திரோத₃தி₄த₂ தே₃வ ப₄வத்ப்ரபா₄வா- து₃த்₃யத்ஸ்வயூத்₂யகலஹா தி₃திஜா ப₃பூ₄வு: || 1|| 1. தேவனே! உன் கையில் அம்ருத கலசத்துடன், தன்வந்தரி பகவானாக சமுத்திரத்தில் இருந்து தோன்றியதும், அசுரர்கள் அதை உன்னிடமிருந்து பறித்துச் சென்றனர். ஆதரவற்றவர்களாக இருந்த அந்த தேவர்களைச் சமாதானம் செய்து உடனே அங்கிருந்து மறைந்து விட்டாய். உன் மாயையினால் அசுரர்களிடையே அம்ருதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் கலகம் உண்டாயிற்று. श्यामां रुचाऽपि वयसाऽपि तनुं तदानीं प्राप्तोऽसि तुङ्गकुचमण्डलभंगुरां त्वम् । पीयूषकुम्भकलहं परिमुच्य सर्वे तृष्णाकुला: प्रतिययुस्त्वदुरोजकुम्भे ॥२॥ ஶ்யாமாம் ருசா(அ)பி வயஸா(அ)பி தநும் ததா₃நீம் ப்ராப்தோ(அ)ஸி துங்க₃குசமண்ட₃லப₄ம்கு₃ராம் த்வம் | பீயூஷகும்ப₄கலஹம் பரிமுச்ய ஸர்வே த்ருஷ்ணாகுலா: ப்ரதியயுஸ்த்வத...