ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 31- மகாபலியின் செருக்கை அழித்தல்
வாமனாவதாரம் (தொடர்ச்சி) மகாபலியின் செருக்கை அழித்தல் प्रीत्या दैत्यस्तव तनुमह:प्रेक्षणात् सर्वथाऽपि त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद । मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥ ப்ரீத்யா தை₃த்யஸ்தவ தநுமஹ:ப்ரேக்ஷணாத் ஸர்வதா₂(அ)பி த்வாமாராத்₄யந்நஜித ரசயந்நஞ்ஜலிம் ஸஞ்ஜகா₃த₃ | மத்த: கிம் தே ஸமபி₄லஷிதம் விப்ரஸூநோ வத₃ த்வம் வித்தம் ப₄க்தம் ப₄வநமவநீம் வா(அ)பி ஸர்வம் ப்ரதா₃ஸ்யே || 1|| 1. உன் தேககாந்தியைக் கண்ட மகாபலி, மிகுந்த அன்பினால், உன்னைப் பூஜித்தான். கைகளைக் கூப்பிக்கொண்டு, “பிராம்மண குமாரரே! உமக்கு என்னிடமிருந்து என்னென்ன வேண்டுமோ பெற்றுக் கொள்ளுங்கள். உணவோ, வீடோ, பூமியோ, எல்லாவற்றையுமோ கேளுங்கள் தருகிறேன்” என்று சொன்னான். तामक्षीणाम् बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ- प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् । भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥ தாமக்ஷீணாம் ப₃லிகி₃ரமுபாகர்ண்ய காருண்யபூர்ணோ(அ)- ப்யஸ்யோத்ஸேகம் ஶமயிதுமநா தை₃த்யவம்ஶம் ப்ரஶம்ஸந் | பூ₄மிம் பாத₃த்ரயபரிமிதாம் ப்ர...