பச்சைப்புடவைக்காரி-- ஒரு கோமேதகம் குழந்தையாய் வந்த அதிசயம்
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் ஒரு கோமேதகம் குழந்தையாய் வந்த அதிசயம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருந்தேன் --- எதோ என் தொண்டையை கொஞ்சம் அடைத்தது - இதுவரை இல்லாத அனுபவம் -- ஒரே ஒரு நாமத்தில் கண்கள் நிலைத்து நின்று அடுத்த நாமாவளிக்கு போக கொஞ்சம் மறுத்தது – கண்கள் நீரைக்கொட்டின ---- ஏன் இந்த அனுபவம் இன்று ? இதே நாமாவாளியை இதற்க்கு முன்னா ல் கூட சொல்லியிருக்கிறேன் - அப்போது தொண்டையை ஏதும் அடைக்கவில்லை - கண்கள் கண்ணீரை மறந்து இருந்தது ...... பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா விக்ரம நந்திதா | எல்லோரையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன் ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்த பால திரிபுரசுந்தரியை மாதங்கியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமே - கேட்டிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள் - அவள் பாதங்களில் இன்று சா ஷ்ட்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் .... தாழம்பூவின் மணமும்...