Posts

பச்சைப்புடவைக்காரி -சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 20 - 245

Image
                                                              பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 20 (245) 👍👍👍💥💥💥 ஜாம்பவான் பேசப்பேச அனுமனின் கண்களில் கண்ணீர் கங்கைபோல் பொங்கி வந்தது -- ஜாம்பவானுக்கு புரியவில்லை -  நானோ இவனை உற்சாகம் செய்துகொண்டிருக்கிறேன் --  இவன் ஏன் காரணமே இல்லாமல் அழுதுகொண்டிருக்கிறான் ---  தலையை சொரிந்துகொண்டே கேட்கிறார் ஆஞ்சநேயா உன் வீரத்தை  மறைந்திருக்கும் உன் திறமைகளை சொல்லிக்கொண்டிருக்கிறேன்  யாரைப்பற்றியோ சொல்வதைப்போல ஏன் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறாய் ? இல்லை ஜாம்பவான் அவர்களே -- நீங்கள் சொல்ல சொல்ல என் எண்ணங்கள் தனியாக இலங்கைக்கு சென்று அன்னையைப்பார்த்து அவள் இருக்கும் நிலையைக்கண்டு பொறுக்க  முடியாமல் கண்ணீரை ஒரு கண் வெளியேற்றிக்கொண்டிருக்கிறது - இன்னொரு கண்ணில் ஆனந்தம் பிரவாகம் எடுத்து கண்ணீராக -ஓ...

பச்சைப்புடவைக்காரி -சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 19 - 244

Image
                                                              பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 19 (244) 👍👍👍💥💥💥 ஜாம்பவான் கவனமும் அனுமன் பக்கமே - இங்கே எல்லோரும் மனஉளைச்சல் கொண்டு அடுத்த வழிக்கு வழி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் அனுமனால் எப்படி பிரச்சனைக்குள் வராமல் தனித்து இருக்க முடிகிறது ? இதுவும் அவருக்கு இறைவன் கொடுத்த வரமாகத்தான் இருக்கவேண்டும்.  மெதுவாக தன்  கரங்களை அனுமனின்  தோள்களில் பதித்தார் - அவர் பதித்த விதத்தில் இருந்தே ஜாம்பவானின் எண்ண  ஓட்டங்களை புரிந்துகொண்டார் அனுமான் ---  மெதுவாக மெல்லிய குரலில் கேட்கிறார் ஜாம்பவானிடம் --- ஐயனே என்னால் ஏதாவது காரியம் இங்கே செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா - உத்தரவு இடுங்கள் ராம நாமத்தால் செய்து முடிக்க முயற்சி செய்கிறேன் .. ஜாம்பவானின் கண்களில் இருந்து  கண்ணீர் தாரை ...

பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 18 - 243

Image
                                                           பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 18 (243) 👍👍👍💥💥💥 ரவி சுந்தரகாண்டத்தில் சில பகுதிகளை பார்ப்போம் --  முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டியது எவ்வளவு மேலே பறந்தாலும் கால்கள்  பூமியில் தான் இருக்கவேண்டும் , அடக்கம் , பணிவு , சமயோசிதம் , ஞானம் , வீரம் , இறைபக்தி இவைகள் எல்லாமே அனுமனிடம் ஒன்று சேர்ந்து இருந்தன - எதையுமே தான் சாதித்ததாக அவர் எங்கேயும் யாரிடத்திலும் சொல்லவில்லை --  இவர் இல்லை என்றால் ராமாயணம் இல்லை என்றாலும்  இவர் யார் கண்களிலும் புலப்படாமல் எங்கோ அமர்ந்து இன்னும் ராம நாமத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்  அனுமனின் குணங்களை சொல்லி மாளாது இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன்  ஒன்றே சொல்பவர்  ஒன்றே செய்பவர் அதையும் நன்றே செய்பவர் - அவர் உள்ளத்தில் அதனால் என்றும் அமைதி இருந்தது அமைதியைத்...

பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 17 - 242

Image
                                                            பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 17 (242) 👍👍👍💥💥💥 ரவி  நேற்று சீதையின் அதி சுந்தர சம்பாஷணையை கேட்டோம்  அம்மா நான் மட்டும் வால்மீகியாக இருந்திருந்தால்  சீதாயணம் எழுதியே பெரும் பேர் பெற்றிருப்பேன் -  இல்லை கம்பனாக இருந்திருந்தால் சீதைக்கு என்றே குறைந்தது 50,000 பாடல்களையாவது எழுதியிருப்பேன் -  நீ என்னை ஒரு மட சாம்பிராணியாக  பெற்று போட்டு விட்டாய் ..  அன்னை சிரித்துக்கொண்டாள் பதில் சொல்லவில்லை --- அவள் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே தெரிந்துகொண்டேன் நான் ஒரு வாழ மட்டைதான் என்று  ரவி , ராமன் கோதண்டத்தை தண்டமாக தூக்கிக்கொண்டு பார்க்கும் ரிஷி களுக்கெல்லாம் நான் இருக்கிறேன் உங்களை தொந்தரவு செய்யும் அரக்கரைகளை கொன்று வீழ்த்துவேன் என்று தண்டகாரண்யத்தில் சொல்லிக்கொண்டிருந...