பச்சைப்புடவைக்காரி - எழுகரைநாடு.,தென் சேரிகிரி ,.பட்டாலி-சிவமலை 395 , 396 & 397 - 77,78,79
* பச்சைப்புடவைக்காரி * என் எண்ணங்கள் பகையை வெல்லும் 77,78,79 - திருப்புகழ் ஸ்தலங்கள் திருப்புகழ் 116.எழுகரைநாடு.117.தென் சேரிகிரி 118.பட்டாலி-சிவமலை 395 , 396 & 397 15.திருப்புகழ் 116.எழுகரைநாடு இது இடம் விளங்காத ஸ்தலம் என்றாலும் வட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தது என்று தணிகைமணி யவர்கள் எழுதியிருக்கிறார். சிலர் இது இலங்கையில் இருக்கிறதென்றும் குடகில் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். அருணகிரிநாதர் தரிசித்த 116வது ஸ்தலமான இதில் பாடிய மிக உருக்கமான பாடல் ஒன்று இருக்கிறது. பரம்பொருளைப்பெற விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும் விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல் மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற விழைவுகு ராப்புனை யுங்குமார முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப என்றுபாடி மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட முழ...