அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 67 பதிவு 56
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 67 பதிவு 56👌👌👌 கேள்வி பதில் நேரம் பதிவு 56🥇🥇🥇 பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * . கேள்வி 67 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது * நான் * . பட்டர் வரும் நேரம் .. இதழ்கள் இன்று வரைந்த கவிதையை முணுமுணத்தன... அடைக்கலம் கொடுக்கும் அகிலாண்ட நாயகி கற்சிலை என நினைத்து முன்னே நின்றேன் காதோரம் கதிரவன் ஒளிஉமிழக் கண்டேன் நுதலிடை சித்துகள் பிறப்பதை கண்டேன் திலகமதில் நான்மறைகள் உறைய கண்டேன் கண்களிலே கருணை மழை பொழிய கண்டேன் நாசியிடை உயிர் இனங்கள் மூச்சினை கண்டேன் பில்லாக்கு பிறையொன்று இருக்க கண்டேன் செந்தளிர் இதழிடையே தமிழை கண்டேன் சங்கொக்கும் கழுத்தினிலே சாகரம் கண்டேன் வளை கொஞ்சும் கைகளிலே அருளை கண்டேன் உயிரினங்கள் பசி போக்கும் மார்பை கண்டேன் அகிலமது உறைகின்ற கருவை கண்ட...