ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 26 - sloka 1 to 10 - கஜேந்திர மோக்ஷம்
इन्द्रद्युम्न: पाण्ड्यखण्डाधिराज- स्त्वद्भक्तात्मा चन्दनाद्रौ कदाचित् । त्वत् सेवायां मग्नधीरालुलोके नैवागस्त्यं प्राप्तमातिथ्यकामम् ॥१॥ இந்த்₃ரத்₃யும்ந: பாண்ட்₃யக₂ண்டா₃தி₄ராஜ- ஸ்த்வத்₃ப₄க்தாத்மா சந்த₃நாத்₃ரௌ கதா₃சித் | த்வத் ஸேவாயாம் மக்₃நதீ₄ராலுலோகே நைவாக₃ஸ்த்யம் ப்ராப்தமாதித்₂யகாமம் || 1|| 1. பாண்டிய நாட்டின் முதல் அரசன் இந்த்ரத்யும்னன். உன்னிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட அவன், மலய மலையில் உன்னை ஆழ்ந்து தியானித்துக் கொண்டிருந்தான். அதனால், அவனுடைய அதிதியாக இருக்க வேண்டும் என்று விரும்பி வந்த அகத்திய முனிவரை அவன் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. कुम्भोद्भूति: संभृतक्रोधभार: स्तब्धात्मा त्वं हस्तिभूयं भजेति । शप्त्वाऽथैनं प्रत्यगात् सोऽपि लेभे हस्तीन्द्रत्वं त्वत्स्मृतिव्यक्तिधन्यम् ॥२॥ கும்போ₄த்₃பூ₄தி: ஸம்ப்₄ருதக்ரோத₄பா₄ர: ஸ்தப்₃தா₄த்மா த்வம் ஹஸ்திபூ₄யம் ப₄ஜேதி | ஶப்த்வா(அ)தை₂நம் ப்ரத்யகா₃த் ஸோ(அ)பி லேபே₄ ஹஸ்தீந்த்₃ரத்வம் த்வத்ஸ்ம்ருதிவ்யக்தித₄ந்யம் || 2|| 2. கோபம் அடைந்த அகத்திய முனிவர், “வினயமற்ற நீ யானையாகக் கடவது” என்று அவனைச் சபித்தார். அவன் யானை வடிவெடுத்து, உன்னை பஜித்ததால், யானைகளின...