ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 39 - யோகமாயா அவதாரம் கண்ணன் பிறப்பும் கோகுலத்தில் மகிழ்ச்சியும்
भवन्तमयमुद्वहन् यदुकुलोद्वहो निस्सरन् ददर्श गगनोच्चलज्जलभरां कलिन्दात्मजाम् । अहो सलिलसञ्चय: स पुनरैन्द्रजालोदितो जलौघ इव तत्क्षणात् प्रपदमेयतामाययौ ॥१॥ ப₄வந்தமயமுத்₃வஹந் யது₃குலோத்₃வஹோ நிஸ்ஸரந் த₃த₃ர்ஶ க₃க₃நோச்சலஜ்ஜலப₄ராம் கலிந்தா₃த்மஜாம் | அஹோ ஸலிலஸஞ்சய: ஸ புநரைந்த்₃ரஜாலோதி₃தோ ஜலௌக₄ இவ தத்க்ஷணாத் ப்ரபத₃மேயதாமாயயௌ || 1|| 1. யதுகுலத்தில் தோன்றிய வசுதேவர் உன்னைக் கையில் எடுத்துச் செல்லும் போது, யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்! प्रसुप्तपशुपालिकां निभृतमारुदद्बालिका- मपावृतकवाटिकां पशुपवाटिकामाविशन् । भवन्तमयमर्पयन् प्रसवतल्पके तत्पदा- द्वहन् कपटकन्यकां स्वपुरमागतो वेगत: ॥२॥ ப்ரஸுப்தபஶுபாலிகாம் நிப்₄ருʼதமாருத₃த்₃பா₃லிகா- மபாவ்ருதகவாடிகாம் பஶுபவாடிகாமாவிஶந் | ப₄வந்தமயமர்பயந் ப்ரஸவதல்பகே தத்பதா₃- த்₃வஹந் கபடகந்யகாம் ஸ்வபுரமாக₃தோ வேக₃த: || 2|| 2. கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கி...