ஒரு புன்னகையில் எரிந்த திரிபுரம்
ஒரு புன்னகையில் எரிந்த திரிபுரம் இறைவன் தன் பக்தர்களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப்போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாளமாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழ்கிறது திருவதிகை திருக்கோவில். இது சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகும். ஒரு புன்னகையை மட்டுமே ஆயுதமாக ஈசன் எடுத்துக்கொண்டான் ... பாதங்களில் பலர் குவித்த ஆயுதங்கள்... ரதம் , வில் , திரிசூலம் , ஈட்டிகள் .. எதுவுமே ஈசன் நாட வில்லை .. தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத...