பச்சைப்புடவைக்காரி-நடமாடும் தெய்வம்
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் நடமாடும் தெய்வம் பெரியவா கை தூக்கி ஆசிர்வாதம் செய்யும் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் . -- ஏனோ இனம் புரியாத துக்கம் தொண்டையை அடைத்தது - _ கண்கள் என் அனுமதி பெறாமல் அணை போட்ட கண்ணீரை திறந்து விட்டன _ -- எவ்வளவு பெரிய மகான் , நடமாடும் தெய்வம் நம்மிடையே வாழ்ந்தார் என்பதை நினைக்கும் பொழுது மேனி சிலிர்த்தது - உடம்பெல்லாம் புல் அரித்தது --- எவ்வளவு சாதனைகள் , எவ்வளவு ஆச்சரியங்கள் , எவ்வளவு அதிசயங்கள் அவர் நமக்கு காண்பித்தார் - இறைவனுக்கு நடுவில் நந்திகேஸ்வரர் இருப்பதைப்போல் நமக்கும் இறைக்கும் நடுவே பாலமாக இருந்து தெய்வத்தை உணர வைத்தார் - அன்று அருமை பெருமைகள் பலரை எட்ட வில்லை ஆனால் இன்று நமக்கு எட்டுகிறது அவரோ எட்டிப்பிடிக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் .... இருக்கும் போது என்றுமே எவருடைய அருமை பெருமைகளை நாம் உணர்வதும் இல்லை - பாராட்டுவதும் இல்லை .... ...