பச்சைப்புடவைக்காரி-நடமாடும் தெய்வம்


பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

நடமாடும் தெய்வம்


பெரியவா கை தூக்கி ஆசிர்வாதம் செய்யும் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

 -- ஏனோ இனம் புரியாத துக்கம் தொண்டையை அடைத்தது

_கண்கள் என் அனுமதி பெறாமல் அணை போட்ட கண்ணீரை திறந்து விட்டன_ -- 

எவ்வளவு பெரிய மகான் , நடமாடும் தெய்வம் நம்மிடையே வாழ்ந்தார் என்பதை நினைக்கும் பொழுது மேனி சிலிர்த்தது

உடம்பெல்லாம் புல்  அரித்தது --- 

எவ்வளவு சாதனைகள் , எவ்வளவு ஆச்சரியங்கள் , எவ்வளவு அதிசயங்கள் அவர் நமக்கு காண்பித்தார்

இறைவனுக்கு நடுவில் நந்திகேஸ்வரர் இருப்பதைப்போல் நமக்கும் இறைக்கும் நடுவே பாலமாக இருந்து தெய்வத்தை உணர வைத்தார்

அன்று  அருமை பெருமைகள் பலரை எட்ட வில்லை ஆனால் இன்று நமக்கு எட்டுகிறது அவரோ எட்டிப்பிடிக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் .... 

இருக்கும் போது என்றுமே எவருடைய அருமை பெருமைகளை நாம் உணர்வதும் இல்லை - பாராட்டுவதும் இல்லை .... 

இதை நாம் ஒரு பெரும் கொள்கையாகவும்பரம்பரை
கலாச்சாரமாகவும் , பெருமையாகவும்  கடைப்பிடித்து வருகிறோம் ..



யாரோ என் கண்களை துடைப்பதைப்போல் உணர்ந்தேன்

_எதிரில் என் பச்சைப்புடவைக்காரி_ ---- 

அவரதாரங்கள் முடிந்துபோகும் ரவி

தேவை பட்டால் மீண்டும் மலரும் --- 

நான் சில வருடங்கள் உங்கள் நடுவே மனிதனாக வாழ ஆசைப்பட்டேன்

அதனால் காஞ்சி மகா பெரியவாளாக அவதாரம் எடுத்தேன் -- 

கவலை வேண்டாம் - இந்த புண்ணிய பூமியில் இன்னும் பல மகான்கள் வருவார்கள் 

அவர்களுடன் சேர்ந்து நானும் வருவேன் சூக்ஷ்ம ரூபத்தில் .... 

அம்மா! பெரும்பாலும் பெரியவா காமாக்ஷியையே வணங்கி கொண்டிருப்பார் -- 

ஆனால் அவருடைய மீனாக்ஷி அனுபவம் உன் மூலம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது தாயே

கொஞ்சம் கருணை கூர்ந்து  சொல்ல முடியுமா ?  

ரவி , முதலில் நான் யாரோகாமாக்ஷி யாரோ என்பதைப்போல் பேசுகிறாய் -- 

நான் ஒருத்திதான் வேறு வேறு பெயர்கள் , வேறு வேறு ஊர்களில் --  

நீ ஒருவன் தானே?  

ஆனால் உன் உறவினர்கள்வேறு வேறு உறவுமுறை சொல்லி உன்னை அழைப்பதில்லையா

அதே மாதிரி தான் நானும் என் பெயர்களும் ...


இல்லை அம்மா ...அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை

பெரியவாளின் அனுபவங்கள் என்று பார்க்கும் போது அதிகமாக நான் கேள்வி பட்டது காமாக்ஷியையும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியைப் பற்றியதுதான்

அதனால் தான் கேட்டேன் - தவறு இருந்தால் மன்னிக்கவும் ...



சிரித்தாள் கயல்விழி --

*_விசாலமான பார்வை விசாலாக்ஷியை காண்பித்தது -*_

_*கருணை நிறைந்த கமல விழிகள் காமாக்ஷியை காண்பித்தது*_

மலர்ந்த தாமரை விழிகள் தாமரையில் உறையும் லக்ஷ்மியையும் -

விழிகளில் தெரிந்த வெண்மை கலைவாணீயையும் காண்பித்தது -

இங்கும் அங்கும் ஓடும் விழிகள் மீனலோசனையை காண்பித்தது -

மிரட்சியான  பார்வை துள்ளி குதிக்கும் மான்களை காண்பித்தது --*_

கருத்த இமைகளும் புருவங்களும் ரீங்காரம் செய்யும் வண்டுகளாகத் தெரிந்தன ..


சொல்கிறேன் பெரியவாளின் அனுபவத்தை மீனாக்ஷியுடன் .... என்றாள் அந்த கமலாக்ஷி .


1961 ல் சங்கர ஜெயந்திக்கு மதுரைக்கு விஜயம் பண்ணிய பெரியவா, எனக்கு ஒரு முத்துநகை ஒன்றை சாத்தினார்

எனக்கு முத்துநகை என்ற நாமமும் உண்டு - உனக்குத்  தெரியுமா

அம்மா - குறுக்கே பேசுவதற்கு மன்னிக்கவும்

அங்கயற்கண்ணியின் சந்நிதியில் பெரியவா கண்களில் நீர்
சொரிய நின்றது பேரானந்தமான காட்சி அன்றோ அது ...

சரி மேலே கேள். அன்று என் சந்நிதியில் என்  முன்னால் நின்றதும்  அவருக்கு என்ன அனுபவமோ

என்னைத்தவிர  வேறு யாரால்  தெரிந்துகொள்ள முடியும்

தெரிந்தாலும் எதை புரிந்து கொள்ளமுடியும்

முப்பத்தி மூணு வர்ஷங்களுக்கு முன்னால் அவர் ப்ரவேசித்த சந்நிதி

அவர் அங்கே இருக்கும் தன் சிஸ்யர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார் .

நம்ம மடத்துக்கு அதிதேவதை அம்பாள் காமாக்ஷி. அவதான் சக்ரவர்த்தினி லலிதாம்பா......

மீனாக்ஷி அவளுக்கு மந்த்ரி.... 

மந்த்ரிணின்னு சொல்றோமே, அந்த ஷ்யாமளாம்பாள்தான் மீனாக்ஷி

அவளோட சேனாதிபதி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிதான்!"

இதில் விந்தையான விஷயம் பெரியவா முதன்முதலாக அகிலாண்டேஸ்வரியையும்,மீனாக்ஷி அம்மனையும் தர்சித்த பின், [1922 லும் 1928 லும் மதுரை வந்தபோது மீனாக்ஷி அம்மனை தர்சனம் பண்ணினார்

1931 ல்தான் முதன்முறையாக காஞ்சிபுரம் சென்று காமாக்ஷி அம்மனை தர்சனம் பண்ணினார்

1908 ல் பட்டத்துக்கு வந்த புதுசில் நடந்த சதுர்மாஸ்யத்துக்கு அப்புறம் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷியை தர்சனம் பண்ணிவிட்டு அவர் சொன்னது,

பங்காரு காமாக்ஷியோட சந்நிதில காமாக்ஷியையே மீனாக்ஷியாத்தான் பாத்தேன்..." 

என்று புதிர் போட்டவர்

பங்காரு காமாக்ஷி நாலு கையோட
இருக்கலை...ஒரு கையை தொங்கப் போட்டுண்டு ஒரு கைல கிளியை வெச்சுண்டு நின்னுண்டு இருப்பா.....மீனாக்ஷி மாதிரி* ...

என்று சொல்லி புதிரை அவிழ்த்தார்.


ஆதி சங்கரர் அகிலாண்டேஸ்வரிக்கு சேனா நாயகிக்கான கிரிசக்ர தாடங்கம் அணிவிக்காமல், அவளை ராணி லலிதையாகவே தர்சித்து, ஸ்ரீசக்ர தாடங்கமே அணிவித்திருக்கிறார்

பெரியவாளுக்கும் மீனாக்ஷியாகிய நான்  என்றாலே அலாதி பக்தி,நெகிழ்ச்சி

என்னைப்பற்றி  சொல்லும் போதே மெழுகாக உருகி விடுவார்.



1961 ல் அவள் சந்நிதியில் நின்றவுடன் அவராலேயே அவரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதபடி ஆனந்தப் பரவசம் பெருக்கெடுத்தது

முதலில் வைத்த கண் வாங்காதபடி என்னையே  நோக்கியபடி கற்சிலைபோல் நின்றார்

ஆனால், அர்ச்சனை செய்யும் பட்டர் உச்ச கோஷத்தில் தொடங்கி ராஜ மாதங்கியின் முதல் நாமத்தை சொல்லி 

என்னுடைய  பாதபங்கஜத்தில் குங்குமார்ச்சனை செய்ய --

குங்குமத்தை தூவினாரோ இல்லையோ....பொங்கி வெடித்தது பெரியவாளின் ஆனந்த பரவசம்!


பார்வை நிலைகுத்திட்டு நின்றது!

நயனங்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது!

கண் மட்டுமா பொழிந்தது

அவருடைய ஆவியே உருகி உடலை உருட்டி புரட்டி பிழிந்து கண்வழியாக மடை பெருக்குவதுபோல

அவருடைய திருவுடல் முழுதும் படபடவென்று ஆட ஆரம்பித்தது
புயல் காற்றில் சிக்கிய மெல்லிய சருகுபோல

பெரியவாளை யாருமே தொட்டதில்லை, கூட கைங்கர்யம் பண்ணும் பாரிஷதர்கள் முதற்கொண்டு

விழுந்து விடப்போகிறாரே! என்று அஞ்சி கூட வந்தவர்கள் ஓரளவு நெருக்கமாக, அதே சமயம் அவரைத் தொடாமல் அவரைச் சுற்றி அரண் போல நின்று கொண்டனர்.

என்பெலாம் உருகியுக்கிட்டு என்னுடை நெஞ்சமென்னும் அன்பினால் ஞானநீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே


என்று ஆழ்வார் பாடியதில், அன்பு என்பது த்வைதமான பக்தி

இங்கே பெரியவா என்னும் அத்வைத ஞானமலை தன் ஞானநீரால் தனக்கே அபிஷேகம் பண்ணிக்கொண்ட பேரானந்தக் காட்சியை நீ  மானசீகமாகவாவது கற்பனை பண்ணிக் கொண்டு உன் 
ஜென்மத்தை கடைத்தேற்று ரவி ....

அம்மா எப்படிப்பட்ட காட்சி -

உன் கருணைக்கும் அளவே இல்லையே -- 

நீ உனக்கே அபிஷேகம் செய்துகொண்டாய்  என்பதை எவ்வளவு நாசுக்காக பெரியவா செய்து கொண்டார் என்று  சொல்கிறாய் --- 

அம்மா பெரியவா வாழ்ந்த காலத்தில் அவர் பிறந்த இந்த ஞான பூமியில் உன் கருணையால் பிறவி எடுத்தோமே என்று புளாங்கிதம் அடைகிறோம் தாயே ... 

சிரித்துக்கொண்டே கிளியாக வெளியே பறந்து சென்றாள் --- 

பெரியவா படம் காற்றில்  ஆடியது ---

நான் தான் நீ வணங்கும் பச்சைப்புடவைக்காரி என்பதை இன்று  தெரிந்து  கொண்டாயா என்று கேட்பது போல் இருந்தது.


 ========================================================



Comments

ravi said…
from Mr.Sasishekar -L&T C

ஆஹா ...ஆனந்தம்... அற்புதம்... பரவசம்... புல்லரித்தது பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து  அவர் பால் பக்தியோடு இருந்தது... அவருடைய ஆசியைப் பெற்றது எவ்வளவு பெரிய பாக்கியம்....மீனாட்சி அம்மன் மீதுபெரியவா கொண்டுள்ள பக்தியை படிக்க நேரும் பொழுது.. பரவசம்
ravi said…
From SGS Ramani pune

பச்சை புடவைக்காரி....பெரியவா...

தினம் தினம் ஒரு புது ஆன்மிக சிந்தனை கொடுத்து
எங்களை நல்வழி படுத்தும் வார்த்தை சித்தரே...

இது போன்று பல்லாயிரம் பதிவுகள் இன்னும் தங்களிடம் இருந்து உதிக்க
பணிவோடு வாழ்த்துகிறேன்

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை