பச்சைப்புடவைக்காரி - மூன்று திருடர்கள் - 3
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் மூ ன்று திருடர்கள் - 3 (132) ரவி இன்று மூன்றாவது திருடனை பார்க்கப்போகிறோம் ... மாணிக்க வாசகர் இறைவனை சிக்கென பிடித்துக்கொண்டவர் அதனால் இவர் எழுதிய பாடல்கள் ஓவ்வொன்றும் கற்கண்டு , தேனில் ஊறிய பலா சுளை , பச்சைக்கற்பூரம் தட்டிப்போட்டு முந்திரியும் சக்கரையும் அளவின்றி அள்ளிப்போட்டு அதில் வெல்ல பாகை ஓடவிட்டு முந்திரி பாதாம் மேரு மலை அளவு அள்ளிப்போட்டு அதில் காமதேனுவை நெய்யாக கறக்க வைத்து அதில் ஒரு கரண்டி எடுத்து சாப்பிட்டால் வரும் சுவையை விட கோடி மடங்கு அதிகம் " வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என் ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" "வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!." ரவி இதை நான் சொல்ல வில்லை வள்ளலார் சொல்லியிருக்கிறார் அம்மா தாங்கள் சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது தாய...