பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-1 - 215

                                             பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

பாஸ்கர ராயர்-1


                                    (215) 👍👍👍💥💥💥

அம்மா என் அறியாமயை என்னவென்று சொல்வது . பலரைப்பற்றி சொல் சொல் என்று உன்னை நான் மிகவும் தொந்திரவு படுத்திக்கொண்டு வருகிறேன் ... 

மிகவும் முக்கியமான ஒருவரை பற்றி கேட்கவே இல்லை .. 
எவ்வளவு முக்கியமானவர் என்று அளவிட முடியாத மகான் ... 

இன்று நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம் என்றால் அவர் செய்த மாபெரும் சேவை , பக்தி , சரணாகதி .

தாங்கள் விளக்கிய இசை ஞானிகளின் அருமை பெருமைகளில் மூழ்கி இவரை மறந்து விட்டேன் ... 

அம்மா இன்று கண்டிப்பாக தாங்கள் சொல்லி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ... 




ரவி யாரைப்பற்றி சொல்கிறாய் என்று புரியவில்லை ... 

அம்மா தங்களுக்கு புரியவில்லையா ? 

என் கண்களில் உண்மையில் கண்ணீர் பெருகியது ... 

தாய் அல்லவா ... இன்னும் சோதிக்க விரும்பவில்லை .. 

ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ... சும்மா விளையாடினேன் ரவி 

அம்மா லலிதே ... அதைத்தான் சொல்ல வந்தேன் ... 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இதற்கு விளக்கம் எழுதிய பாஸ்கர ராயரைப் பற்றி சொல்லுங்கள் தாயே ! 

சொல்கிறேன் கண்டிப்பாக ... உனக்கு நினைவு வந்திருக்காவிட்டாலும் நானே சொல்வதாக இருந்தேன் .. இன்று நல்ல நாள் .. நீயே இவரைப் பற்றி கேட்டுவிட்டாய் ... சொல்கிறேன் ...

பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா 

விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர்.  இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை   தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். 

அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். 



பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார்.  அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். 

மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். 

பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். 

தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். 

பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார். 




இவருக்கு வித்யையை உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். 

கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். 

காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததார் பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். 

அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பினார். 

அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். 

அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது. ரவி கொஞ்சம் கொஞ்சமாக இவர் புராணத்தை ரசிப்போம் ... இனிய நவராத்திரி வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும் ..

அம்மா... எப்படிப்பட்ட ஆரம்பம் ... உள்ளுக்குள் உன் எல்லா நாமங்களும் கூடி  அருள் மழை பொழிய வைக்கின்றது 🥇🥇🥇




ப்ரஹ்ம,   ब्रह्म   

அம்பாள் தான் ப்ரம்மம்.  அவளை ப்ரம்ம சக்தி என்போம்.பிரம்மத்தை  அனுபவிக்கலாம் தவிர விவரிக்க வார்த்தைகள் கிடையாது.   

அத்வைத சித்தாந்தத்தை போதித்த ஆதி சங்கரர் சொல்வது போல்  ஆத்மா ஒன்றே சத்யம், உண்மையானது.  ஞானத்தினால் நிரம்பியது. அதுவே  ப்ரம்மம்.   
உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சதா ஆனந்தத்தில் நிலைத்திருப்பது. சக்தியும்  சிவனும் இணைந்த நிலை.  

ஆகவே தான் அம்பாளை இந்த நாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.ஜனனீ   जननी    தாய்,  
ஜெகன் மாதா,  பிரபஞ்ச காரணி அம்பாள்.  சர்வமும்  அவளால் உருப்பெற்று உயிர்பெற்றவை. 




பஹுரூபா, बहु-रूपा

ஒன்றல்ல ரெண்டல்ல, அநேக  உருவங்களை கொண்டவள் அம்பாள். பக்தர்கள் மனதில் தோன்றியபடி காட்சி தருபவள்.    

எல்லா உயிர்களிலும்  மூலமாக இருப்பவள். அவளை சப்த   SABDHA ப்ரம்மம் என்று அறிவோம்.  

அம்மா உன்னைப்பற்றி மட்டும் அல்ல உன்னை சரணாகதி அடைந்தவர்கள் எல்லோருடைய  பெருமைகளையும் உன் பெருமையாக சொல்கிறாய் .. ஒரு தாயாக இருந்தால் மட்டுமே இது சாத்யம்..  பெருமையும் கர்வமும் கரை புரண்டு ஓடுகிறது அம்மா 

சிரித்துக்கொண்டே சிங்காராமாய் சிம்ம வாகனத்தில் சிவப்பு சூரியனாய் காட்சி கொடுத்தே மறைந்தாள் மரகத வல்லி


Comments

ravi said…
இன்றைய வரிகளை அலசும் முன், ஒரு சிறிய flashback -- மீண்டும் மனம் முதல் பாடலு க்கே ஓடுகிறது ---

அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா

ஏன் அகத்தை (கர்வத்தை, மமதையை) வேருடுன் அழிக்கவேண்டும் என்று ரமணர் அருணாசலத்திடம் வேண்டுகிறார் --- கிள்ளி எறிந்தால் அல்லது பிடுங்கி போட்டால் போதாதா? ஏன் வேருடுன் பிடுங்க வேண்டும்?

ravi said…
இரண்டு வரிகள் தான் அக்ஷர மாலை அனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி உள்ளன - அருணாசலேஸ்வரருக்கும், ரமணருக்கும் மட்டுமே அதன் உள் அர்த்தம் புரியும் --
இருந்தாலும் ரமணர் நமக்கெல்லாம் ஒரு வரத்தை தருகிறார் -- நான் யார் என்று உள்ளுக்குள்ளே தேடு - தேடிக்கொண்டே இரு - ஒரு இடத்தில் நீ

தேடுவது நின்று போகும் -- அங்கே உன்னை நீ காண்பாய் சிவமாக என்கிறார் ரமணர் -- அதேபோல் அக்ஷர மாலையை படிக்க படிக்க வேறு வேறு அர்த்தங்கள், விளக்கங்கள் வரும்.

முடிவில் அங்கே நீ காண்பது ரமணராக நிற்கும் அருணாசலேஸ்வரைத்தான். ஏன் வேருடன் அறுக்கவேண்டும்? --

ravi said…
நமக்குள் இருக்கும் நான் என்ற எண்ணத்தை, மமதையை, அகங்காரத்தை வெறுமனே கிள்ளிபோட்டால் வேர் இருப்பதால் மீண்டும் மீண்டும் முளைத்து விடும் ----
அருணாசலா உன்னை நினைப்பவர்களுக்கு அந்த கஷ்டம் வரக்கூடாது -
உன்னை நினைக்கும் மாத்திரத்தில் அவர்கள் மனதில் இருக்கும் எல்லா குப்பைகளும், அகந்தையும் அடிச்ச்சுவடே இல்லாமல் வேருடன் பிடுங்கி அழித்துவிடு என்கிறார் --
ரமணருக்குத்தான் நம்மீது எவ்வளவு கனிவு, பாசம், அன்பு பாருங்கள் -
நமக்கு அகந்தை இல்லை என்றால் நமக்கு எல்லோர் மீதும் அன்பு வரும் -
அந்த அன்பே சிவம் - அதுவே அருணாசலேஸ்வரர் ....

இன்னுமொரு பாடல் வரிகளை பார்ப்போம்

எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா!

ravi said…
ஆண்டவனை பார்த்து எப்படி உனக்கு ஆண்மை இல்லை என்று சொல்ல முடியும்?
ரமணரால் மட்டுமே இப்படியும் கேட்க முடியும்?
இங்கே வேறு அர்த்தம் புதைந்துள்ளது ---

அருணாசலேஸ்வரா --- நீயோ பலமிக்கவன் --- உன் அடி முடி தெரியாமல், உன் ஆண்மை புரியாமல் தோற்று போயினர் தேவர்கள் ---ஆனாலும் உனக்கு ஆண்மை குறைவே --- ஏன் தெரியுமா?

உன் சரிபாதியை என் அன்னை உமைக்குத் தந்துவிட்டாய் --
மீதி இருக்கும் பாதியில் ஆண்மை அரை பங்குதானே இருக்க முடியும்?

அந்த அரை பகுதி ஆண்மையை நீ காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் என் மனதில் இருக்கும் நான், எனது என்ற குப்பைகளை கலைத்துவிட்டு -- என்னை திருடிக்கொண்டு உன்னிடம் சேர்த்துக்கொள் --

இல்லை என்றால் நீ பாதிதான் ஆண்மை உடையவன் என்றே எல்லோருக்கும் சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!! நான் மிகவும் பொல்லாதவன் என்கிறார் ரமணர் -

வரிகளை அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள் -

அதில் புதைந்துள்ள தாத்பரியங்களையும், பக்தியையும், இறைவன் மீது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய உரிமைகளையும் புரிந்துகொள்ளுங்கள் -
அப்பொழுதுதான் ரமணரின் அக்ஷர மாலையை நாம் நன்றாக அனுபவிக்க முடியும்.


ravi said…
10 –
ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
இது உனக்கு அழகோ அருணாசலா! (அ)


படிப்படியாக இறைவனை கேட்கிறார் - ஏதாவது ஒரு கேள்வியில் அவன் மசிய மாட்டானா என்று -

அருணாசலேஸ்வரன் மசியவில்லை - ரமணரின் கேள்விகளும், திட்டல்களும், கெஞ்சலும், அதிகாரமும், கட்டளைகளும், கதறலும் ஓயவே இல்லை ----

ravi said…
எல்லாமே நமக்காகத்தான் இவ்வளவு பாடு படுகிறார் ரமணர் ....

என் தாயினும் அதிக அன்பு காட்டுகிறாய் இன்று இப்பொழுதுதான் சொன்னேன் - சொன்ன வார்த்தைகளில் உள்ள ஈரம் காயும் முன்னே நீ உறங்கிப்போய் விட்டாயே அருணாசலா ---

என்னை பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா?

ravi said…
-- இங்கே பிறர் இழுக்க என்பது என் மனம், நான் எனும் எண்ணங்கள், அதனால் வரும் மமதை, அகம்பாவம்.

இவைகள் ஒன்றாக சேர்ந்துகொண்டு இறைவனிடம் நெருங்க விடாமல் இழுக்கின்றன -அதனால் இப்படி சொல்கிறார்.

-- காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு தூங்குகிறாயே,


ravi said…
என் தாயினும் நீ உயர்ந்தவன் என்று நினைத்தேனே - நீ செய்யும் காரியமா இது? என் மனதை திருடி (அதற்குத் தெரியாமல்) உன் உள்ளம் எனும் குகையில் கொண்டு போய் வை என்று கதறுகிறேனே ---

இப்படி ஒன்றுமே உன் காதில் வாங்காமல் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே அருணாசலா - இது உனக்கு அழகா??

ரமணரின் ஒவ்வொரு வரிகளும் ஈசனை கட்டிப்போட்டு வைக்கின்றன

---- ரமணா என்னை மன்னித்துவிடு என்று ஏதாவது வரிகளில் அருணாசலேஸ்வரர் சொல்கிறாரா என்று பார்ப்போம்.
ravi said…
11 –
ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாசலா! (அ)

ஆளில்லாத வீட்டில்தான் திருடர்கள் வருவார்கள். ‘ஐம்புலன்களாகிய திருடர்கள் என் உள்ளத்தில் நுழைகிறார்கள் என்றால், அங்கே நீ இல்லையா?’ என்று ஏக்கத்துடன் கேட்கிறார் ரமணர்.
ravi said…

‘பெருமானே, உனக்கு இணை யாருமில்லையே, உன்னை மறைத்து என் மனத்தில் நுழையக்கூடியவர்கள் யார்?

இதெல்லாம் உன்னுடைய சோதனைதானா!’

மாணிக்க வாசகர் பாடும் போது இமைப்பொழுதும் என் நெஞ்சை நீங்காதான் தாள் வாழ்க என்றார் --

என் நெஞ்சத்தில் எப்பொழுதும் இமை மூடும் போதும் இருப்பவன் இறைவன் -

ravi said…
ரமணர் இதையே மாற்றி கேட்க்கிறார் -

ஐந்து புலன்களும் ஐந்து திருடர்கள் -- இவர்கள் அடங்கினால் மனம் அடங்கும் -
மனம் அடங்கினால் மனம் லயிக்கும் -

அதை தொடர்ந்து மனம் நாசம் ஆகும் -

மனம் நாசம் ஆனால் நான் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் ----ரமணர் சொல்கிறார் ....

ravi said…
புலன்களே கள்வர்களாக இருக்கும் நிலை - முதல் வகுப்பு என்று வைத்துக்கொள்வோம் - அடுத்து வகுப்பு நாம் போவதற்கு இந்த கள்வர்களை அடக்கவேண்டும்

-- இனி மூன்றாவது வகுப்பு போக வேண்டும்.

இங்கே கள்வர்கள் அடங்கி விட்டார்கள் -

மனம் எங்கே போய் லயிக்க வேண்டுமோ அங்கே போய் லயித்துவிடும் நிலை - அடுத்த வகுப்பில் மனம் லயித்துப்போனது மட்டும் அல்ல, மனம் இரண்டற கலந்தும் போனது -
அடுத்த வகுப்பில் எல்லாம் ஒன்றாய் போன நிலை - இங்கே இறைவனிடம் நாம் கலந்து விடுகிறோம்

ravi said…
ஏன் புலன்களை கள்வர் என்று சொல்கிறார் ரமணர்? --
தன் சொல்படித்தான் மனம் கேட்க வேண்டும் என்று இந்த புலன்கள் ஆட்டம் போடுகின்றன -
மனம் கண்களை அங்கே பார்க்காதே என்று சொன்னால் கண்கள் அங்கே தான் பார்க்கும் -
கால்கள் கோவில் வந்தால் தாண்டி ஓடும் -
காதுகள் நல்லவைகளை ஏற்காது -
வாய் வேண்டாத வார்த்தைகளை வெளிவிடும் --

இப்படி நமக்குள்ளே இருந்துகொண்டு நம்மை இறைவனிடம் அண்டாமல் இருக்கும் புலன்களை கள்வர்கள் என்று ரமணர் சொல் வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே -----
அருணாசலா -- இந்த நாள் வரை நீ என் மனதின் உள்ளே இருக்கிறாய் என்றல்லவா நினைத்தேன் --

எங்கே போய் விட்டாய் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் -
இதோ பார் ஐம்புலன்களாகிய திருடர்கள் என் உள்ளத்தில் நுழைகிறார்கள் -----
நீ வரவில்லை என்றால் என்னை ஒரேயடியாக இவர்கள் அழித்துவிடுவார்கள்

-- நான் போய் விட்டால் உன்னை தினமும் அன்புடன் அருணாசலா என்று யார் கூப்பிடுவார்கள் ---

வா அருணாசலா- வந்து இந்த கள்வர்களை உடனே அழித்துவிடு என்கிறார் ரமணர்.... ௐௐௐௐௐ
S G S Ramani said…
கிடைத்ததற்கரிய, விலை மதிப்பற்ற பொக்கிஷமான ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதிய பாஸ்கர ராயரை பற்றிய இப்பதிவு அருமை..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Shivaji said…
Arumai....Sree Mathre Nama..💐💐💐🙏
Savitha said…
அருமை👍👍👍👍👍💐💐💐💐💐
Kousalya said…
Wow.. From Vijaydasami we are going to have Lalithambike in fullll swing..Thank you once again Kavikumar avargale 🙏🙏🌷🌷
ravi said…
ஜாதவேதஸே ஸுநவாம ஸோமமராதீயதோ நிதஹாதி வேத:

ஸ ந: பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி: (1)

அக்னி வடிவமாக விளங்கும் சக்திக்கு ஸோம ரசத்தை பிழிந்து தருவோம், அனைத்தையும் அறியும் அந்த சக்தி எனது பகைமைகளை பொசுக்கட்டும்.

அது எனது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும்,

கப்பலால் கடலைக் கடப்பது போல பாவக் கடலில் இருந்து அந்த அக்னி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.🔥🔥🔥
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)

காச்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். ‘பண்டிட்’ என்றே ஒரு ஜாதியாகச் சொல்வார்கள். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு எல்லாம்கூட இப்படிப்பட்ட பண்டிட்கள்தாம். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருந்ததற்குக் காரணம், வாக்தேவியான (வாக்குத்தேவதையான) ஸரஸ்வதி ஆராதனை காஸ்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்ததுதான். அங்கே ‘சாரதா பீடம்’ என்றே ஒன்று இருந்தது. பாரத தேசத்தின் மகா பண்டிதர்களும் அந்த சாரதா பீடத்தில் ஏறினாலே தங்கள் வித்வத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ததுபோல் என்று கருதினார்கள்.
ravi said…
நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காச்மீர மண்டலம் என்று ஒரு பெயர் இருந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது.

அங்கே ஒரு பாடலிபுத்திரம் இருப்பது போலவே, இங்கேயும் நடுநாட்டிலே ஒரு பாடலிபுத்திரம் உண்டு; அதுதான் திருப்பாதிரிப்புலியூர். வடக்கே காசி இருப்பதுபோல், இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி காஞ்சி மண்டலமே தக்ஷிணகாச்மீரம்.

.
ravi said…
இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சாந்நித்தியம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் ‘ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே’ என்கிறார். ஊமையாக இருந்த இந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அநுக்கிரகித்த விசேஷத்தால்தான் அவர் மகா கவியானார். காமாக்ஷி ஆலயத்தில் எட்டுக் கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு ஸரஸ்வதி பிம்பத்துக்கு சந்நிதி இருக்கிறது. ஆதி ஆசார்யாள் காஞ்சீபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வக்ஞ பீடம் ஏறினார். இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீட) மடத்துக்கு ‘சாரதா மடம்’ என்ற பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்திற்கும் ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன.

ravi said…
ஆதியிலிருந்தே காஞ்சியில் ‘கடிகாஸ்தானம்’ என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன. வடக்கே இருந்த நாலந்தா, தக்ஷசீலம் இவைபோல், இந்த கடிகாஸ்தானங்களும் யூனிவர்ஸிடி போலப் பெரிதாக இருந்திருக்கின்றன. திருவல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கல்வெட்டில் ‘கடிகை ஏழாயிரவர்’ என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்யார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம்.

மைசூரில், ஷிமோகா ஜில்லாவில், ஷிகார்பூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே பிரணவேச்ரஸ்வாமி ஆலயத்தில் ஒரு மிகப் பழைய கல்வெட்டு இருக்கிறது. அதில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட மயூரவர்மன் தன் குருவான வீரசர்மனுடன் ‘பல்லவேந்திரபுரி’யான காஞ்சி கடிகையில் படிக்க வந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அரக்கோணத்தருகே வேலூர் பாளையத்தில் உள்ள ஒரு ஸம்ஸ்கிருதக் கல்வெட்டு, இன்று லோகப் பிரசித்தமாயிருக்கிற கைலாஸநாதர் கோயிலை நரசிம்மவர்மா என்கிற ராஜசிம்ம பல்லவன் கட்டினான் என்று சொல்வதற்கு முன்பாக, அவன் காஞ்சிபுரத்திலிருந்த பழைய கடிகையை மீண்டும் நிறுவியதை முக்கிய விஷயமாகச் சொல்கிறது. அப்பர் சுவாமிகளும் “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்கிறார்.

‘
ravi said…
மூக பஞ்சதீ’யின் ஆர்யா சதக சுலோகமொன்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. ‘விமலபடீ’ என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளைக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித்தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது.
ravi said…
சரத் காலத்தின் விசேஷமும் இது தான். ‘சரத் சந்திரன்’ என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான், மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரிகையை ஆடை மாதிரிப் போர்த்துகிறது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன.
ravi said…
ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான ‘வித்யை’ சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.

ravi said…
ஸரஸ்வதி பூஜா காலத்தை நினைக்கிறபோது, இந்த தாப சாந்தியைச் சொல்லும்போது, இதற்கு அநுகூலமாக இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. வெளி உலகம் எப்படியிருக்கிறதோ அது நம் மனஸையும் அப்படி ஆக்குகிறது. பல பலவென்று விடிவதைப் பார்த்தால் நமக்கும் ஒரு உற்சாகம் உண்டாகிறது. மப்பும், மந்தாரமும், அழுகைத் தூற்றலாகவும் இருந்தால், நமக்கும் களையே இல்லாமல் என்னவோபோல் துக்கமாயிருக்கிறது. விடிவதற்கு முந்தின ப்ராம்ம முகூர்த்தத்திலும், ஸாயங்கால ஸந்தியிலும் வெளி உலகில் ஒரு சாந்தி பரவியிருப்பதால் அப்போது நமக்கும் மனசு அடங்கி தியானத்தில் உட்காரத் தோன்றுகிறது. வெளியுலகம் இப்படித் தன்மயமாகும்போது, உள்ளத்தையும் தன் மயமாக்கப் பிரயாசை செய்தால், சாதாரணமாக மற்ற சமயங்களில் இருப்பதைவிட சுலபமாக மனசை நிறுத்தி, உள்ளும் புறமும் ஒன்றாகி, சாந்தத்தில் தோய்ந்திருக்க அநுகூலமாயிருக்கிறது. தினந்தோறும் வைகறை சந்தியையில் இப்படி இருப்பதைப் போல், ஒரு வருஷம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட பக்ஷம் முழுவதுமே இப்படி மனோலயத்திற்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது ஸரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம்தான். சீதோஷ்ணம் பரம சுகமாக, ஹிதமாக, வெயிலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் இருக்கிற காலம் இது. சாந்தமான சூரியன், தாவள்யமான சந்திரிகை, வெள்ளை வெளேர் என்ற மேகக் கூட்டங்கள் எல்லாம் இருக்கிற காலம்.

ravi said…
இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும். பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஒரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கே நம் ஊரைவிட பத்து, பன்னிரண்டு டிகிரிக்குமேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமில்லை என்கிற மாதிரி, வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது. நம் சீமையில் ஓயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை. பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்தியப்பிரதேசத்திலும் மான்ஸுன் மழை கொட்டுகிறது. இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுஸாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய்க் குளிரில் நடுங்க வைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது. இந்த சமயத்தில் காச்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமாரி என்று எல்லா ஊர் Weather report -ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிகள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்தது போல் இப்போது இல்லை.
ravi said…
சீதோஷ்ண ரீதியில் இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், அதாவது துவந்தம் போய் எல்லோரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம். ஞானத்தினால் எல்லாம் ஒன்று என்று துவந்தத்தைப் போக்கி வைக்கிற வித்யா அதிதேவதையின் தெளிவான ஸ்வரூபம் போலவே இந்த சீதோஷ்ணம் இருக்கிறது. நம் தேசம் முழுவதும் இப்படி சமசீதோஷ்ண நிலையும், வெண்ணிறமும் சாந்தமும் அமையும்போது, வெளியுலகின் ஹிதத்தால் உள்ளுக்கும் சுலபத்தில் அந்த சமநிலையை உண்டாக்கிக்கொள்ள வசதியாக இருக்கிறது. இக்காலத்தில் இப்படிப்பட்ட குண விசேஷமே உருவெடுத்து வந்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் ஆராதனமும் வருவதால். சகல ஜனங்களும் இதை எல்லாம் உணர்ந்து பூஜித்தால் ஞானமும் தெளிவும் பெற முடியும்.

ravi said…
ஜபமாலையும் ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரம ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி தேவி இருவர் கைகளிலும் இவற்றைக் காணலாம்.
ravi said…
ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. ‘வித்யை’ என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யைதான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது. முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன. திருவள்ளுவரும், பரமேசுவரனைப் பாத பூஜை பண்ண வைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார்.

ravi said…
கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்?

அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய்ப் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அகங்காரங்கள் ஒரு பக்கம் இருக்க, ‘நாம் வித்வான்’ என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அகம்பாவம் வந்துவிடும். இதனால்தான், நம் பூர்விகர்கள் வித்தையோடு, விநயத்தையும் சேர்த்துச் சேர்த்துச் சொன்னார்கள்: வித்யா விநய ஸம்பன்னே!

ravi said…
இப்போது படிப்பு எல்லாம் லௌகிகத்துக்காகத்தான் என்று ஆகிவிட்டது. பலவிதமான வித்யைகள், ஸயன்ஸுகளைத் தெரிந்து கொண்டு வெகுசாமர்த்தியமாக பாபங்களைப் பண்ணிப் பிறரிடமிருந்து தப்பித்துக்கொண்டு பெருமைப்படுகிறோம். இப்போதைய படிப்பினால் வருகிற விஷய அறிவை ஞானம் என்று சொல்வதானால், அஞ்ஞானம்தான் மோக்ஷ சாதனம் என்று கூடச் சொல்லி விடுவேன். ஞானம் ஒன்றே மோக்ஷ உபாயம் என்று சொல்ல வந்த அத்வைதத்துக்கு நான் பிரதிநிதி என்று பேர். ஆனால், இப்போது படித்தவர்களின் ‘நாகரிக’ தேசங்களில் நடக்கிற அகாரியங்களைப் பார்க்கிறபோது, எதுவுமே தெரியாமல், எழுத்தறிவே இல்லாமல், பரம அஞ்ஞானிகளாக இருந்துகொண்டு, பகவான் என்கிற ஒருத்தனை நம்பிப் பாவத்துக்குப் பயந்து, கள்ளங் கபடமில்லாமல் இருக்கிற ஆதிவாசிகளும் காட்டுக் குடிகளும்தான் ஈஸ்வரப் பிரசாதம் பெறுபவர்கள் என்றே தோன்றுகிறது. நாம்கூட அப்படி ஆகிவிட்டால் தேவலை போலிருக்கிறது.
ravi said…
ஆனால், இப்போதுள்ள வித்யைகளும் போதனை முறைகளும் வெற்று லௌகிகத்துக்கும் அகங்காரத்துக்குமே ஆஸ்பதமாக இருக்கின்றன என்பதால், ஆத்மார்த்தமான சாஸ்திரங்களை, கலைகளை, வித்யைகளைக் குறைவாகப் பேசக் கூடாதுதான். இவை எல்லாம் அகங்காரத்தைக் கரைத்து, லோக க்ஷேமத்தையும் ஆத்ம க்ஷேமத்தையும் தரவே நம் தேசத்தில் ஏற்பட்டிருந்தன. இப்போதும்கூடப் புதிது புதிதாக விருத்தியாகியிருக்கிற வித்யைகள், டெக்னாலஜி ஆகியவற்றால் எத்தனையோ லோக க்ஷேமத்தை உண்டாக்கலாம். நல்லறிவை வளர்த்துக் கொள்ளலாம். எல்லா ‘எலிமென்டு’களுக்கும் மூலமான ‘எனர்ஜி’ ஒன்றேதான் என்று கண்டுபிடித்து விட்ட அடாமிக் (அணு) ஸயன்ஸிலேயே நன்றாக ஊறினால், அதுவேகூட ஆத்மிக அத்வைதத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். ஓயாமல் ஆசை வாய்ப்பட்டுப் பறப்பாகப் பறந்து கொண்டிராமல் ஆன்றோர்கள் போட்டுத் தந்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொண்டு, வித்யைகளை அப்பியசித்து வந்தால், இன்றும் அவை புறத்துக்கு நல்லது செய்யும்; உள்ளுக்கு ஞானமும் தரும்.
ravi said…
மருந்தோடு பத்தியமும் முக்கியம். வித்யை என்கிற மருந்துக்கு அடக்கம், விநயம் என்கிற பத்தியம் அவசியம். இப்போது அது இல்லாததால் மருந்தே விஷமாகியிருக்கிறது. ஆனால், அடக்கத்தோடு பயின்றால் வித்யையே உண்மையில் ஞானம் தரும் அமிருதமாகும். அதனால்தான் ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி இரண்டு பேரையுமே வித்யா தேவதைகளாகவும் வைத்திருக்கிறார்கள். ஸரஸ்வதி, சகல கலாவாணி, வித்யா ஸ்வரூபிணி என்று எல்லோருமே அறிவீர்கள். ‘சர்வ வித்யைகளுக்கும் பிரபு (ஈசானன்)’ என்றே வேதம் ஸதாசிவனான தக்ஷிணாமூர்த்தியைச் சொல்லுகிறது. பேச்சு, காரியம் அறிவது எல்லாம் அடங்கிப் போன நிலையிலிருக்கிற தக்ஷிணாமூர்த்தியே ‘மேதா தக்ஷிணாமூர்த்தி’யாகிப் பெரிய புத்திப் பிரகாசம், வாக்குவன்மை, வித்வ சக்தி எல்லாம் தருகிறார். ஸரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி இருவரும் அக்ஷமாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்திருக்கிறார்கள். அதற்குப் பேரே ‘கலை’. ‘கலை’ என்றால் எது வளருகிறதோ அது. வித்யைக்கு முடிவே இல்லை. ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு’ என்று ஸரஸ்வதியே விநயத்தோடு நினைக்கிறாளாம். இவள் தலையில் வைத்திருப்பது மூன்றாம் பிறை. அது பூரண சந்திரனாக வளர வேண்டும்.
ravi said…
ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகளின் அடையாளம்.

ravi said…
இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும்கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு, (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகமாகிறது. தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி இருவருமே இப்படிப்பட்ட ஸ்படிகத்தினாலான அக்ஷமாலையைத்தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிகமாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

“இதைத்தா, அதைத்தா,” என்று நாம் பிரார்த்திக்க வேண்டியதே இல்லைதான். நம் யோக்கியதைக்கு என்ன தரவேண்டும் என்று அம்பாளுக்கே தெரியும். இருந்தாலும் நடைமுறையில் இப்படி விவேகத்தோடு இருக்க முடிய மாட்டேன் என்கிறது. “இது வேண்டும். அதுவேண்டும்” என்பதற்காகத்தான் பிரார்த்தனை செய்கிறோம்.

ravi said…
யோசித்துப் பார்த்தால் இதை அடியோடு தப்பு என்று சொல்ல முடியவில்லை. கீதையில் பகவான் பக்தர்களை நாலு தினுசாகப் பிரித்துச் சொல்கிறார். அதிலே மோக்ஷத்தை விரும்பி உபாஸிக்கிற சாதகன், அந்த மோக்ஷ லட்சியத்தையே பிடித்துவிட்ட ஞானி ஆகிய இரு சாராரைச் சொன்னதோடு பகவான் நின்றுவிடவில்லை. நோய் நொடி முதலான துன்பங்கள் நீங்குவதற்காகப் பிரார்த்திக்கிறவன், பொருளை வேண்டிப் பிரார்த்தனை பண்ணுகிறவன் ஆகிய இரு சாராரைக்கூடச் சேர்த்துக் கொள்கிறார். இம்மாதிரி லௌகிக சௌக்கியத்துக்காக வழிபடுகிறவர்கூடத் தன்னை பூஜிப்பதாக பகவான் ஒப்புக் கொள்கிறார். பகவானே ஒப்புக்கொண்ட விஷயத்தை நாம் ஆட்சேபிப்பதற்கில்லை.

ravi said…
ஆனால், கீதா சாஸ்திரம் முதலிய எந்த ஞான நூலாகட்டும், சமய கிரந்தமாகட்டும், இகலோக சௌக்கியங்களைத் தள்ளிவிட்டு, சாசுவதமான பேரின்பத்தைத்தான் நாடவேண்டும் என்பதை லட்சியமாக வலியுறுத்துகின்றன. அப்படியானால் பகவானே முரண்படப் பேசுகிறாரா? அப்படி அர்த்தமில்லை. லௌகிக காரியங்களை எடுத்த எடுப்பில் யாராலும் விட்டுவிட முடிகிறதில்லை. ஆனாலும் இந்த நிலையில் இருக்கிற போதுகூட, “எல்லாம் நம்மாலேயே முடியும், நாம் நினைத்ததை எல்லாம் நாமே ராஜாவாக நடத்திக் கொள்ள முடியும்’ என்று நினைத்துவிடாமல், ‘நமக்கு மேலே ஒரு மகா சக்தி இருக்கிறது. அதற்குச் சக்தி இருப்பதோடு கருணையும் இருக்கிறது. நாம் தழைத்து வேண்டினால் அது அநுக்கிரகம் பண்ணும்’ என்கிற நம்பிக்கை இருந்தால், அது விசேஷம்தானே? பணம் வேண்டும், வீடு வேண்டும், பதவி வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்கிறபோதுகூட,
ravi said…
இப்படி ஒரு மகா சக்தியிடம் நம்பிக்கை வைத்து, அதனிடம் நம் அகங்காரத்தையெல்லாம் தாழ்த்திக் கொண்டு நிற்கிறோம் அல்லவா? அந்த மட்டில் இது நாஸ்திகத்தைவிட எத்தனையோ சிலாக்கியம்தானே? முதலில் ஏதேதோ வஸ்துக்களுக்காகப் பகவானிடம் போகிறோம். பூஜை, ஆலய தரிசனம், ஸ்தோத்திரம், ஜபம் என்று செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இதுகளில் பிடிப்பு உண்டாக உண்டாக, மற்ற வஸ்துக்களில் பிடிப்புக் குறைகிறது. கடைசியில் பகவானுக்காகவே பகவானைப் பக்தி பண்ண வேண்டும் என்கிற ருசி பிறக்கிறது.

ravi said…
அதனால்தான் லக்ஷ்மீ கடாக்ஷத்தை விரும்பியே பக்தி செலுத்துகிறவர்களைக்கூட, ‘அர்த்தார்த்தி’ என்று தனியாகச் சொல்லி, தன்னை பூஜிப்பவனாக பகவான் ஒப்புக் கொள்கிறார்.

“
ravi said…
ஆசைக்கோர் அளவில்லை” என்றார்கள். முக்கியமாக செல்வம் வேண்டும் என்கிற ஆசைக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகிறது. இதனால்தான் அனர்த்தம் எல்லாம் வந்து விடுகிறது. ஞானம் வேண்டும், குணம் வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திக்கிறவர்கள் எங்கேயாவது துர்லபமாக இருப்பார்களோ என்னவோ? லக்ஷ்மீகடாக்ஷத்திற்கு மட்டும் பிரார்த்திக்காதவர் இல்லை. இதிலே எந்தக் கோடீஸ்வரனுக்காகவது திருப்தி வந்திருக்குமா என்றால் அதையும் காணோம்.

ravi said…
சௌக்கிய அநுபோகம் அதிகமாக ஆக, ஞானம் வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே போகிறது. இதனால்தான் லக்ஷ்மி இருக்கிற இடத்தில் ஸரஸ்வதி இருப்பதில்லை என்று பொதுவில் வசனம் வந்துவிட்டது. இதற்கு வேடிக்கையாக ஒரு காரணம் தோன்றுகிறது. சாதாரணமாக மாமியாரும் மாட்டுப் பொண்ணும் ஒரே இடத்தில் ஒத்து இருக்க மாட்டார்கள். மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் தகப்பனாரும் பிள்ளையும் ஆகிறார்கள் என்றால், அப்போது மஹா லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் மாமியார் – மாட்டுப் பெண் ஆகிறார்கள். இவர்கள் சேர்ந்து சௌஜன்யமாக இருக்க மாட்டார்களே! அதனால்தான் பொதுவில் லக்ஷ்மீ கடாக்ஷம் இருக்கிற இடத்தில், ஸரஸ்வதீ கடாக்ஷம் இருப்பதில்லை. அல்லது இதையே நல்லபடியாகச் சொல்லலாம். மாமியாரிடம் உள்ள மகா மரியாதை காரணமாகவே அவள் இருக்கிற இடத்தில் தான் முந்திரிக்கொட்டை மாதிரி தெரியக்கூடாது என்று ஸரஸ்வதி ஒதுங்கிப் போவதாகவும் சொல்லலாம்.

ravi said…
இதெல்லாம் வேடிக்கையாகச் சொல்கிற பேச்சு. வாஸ்தவத்தில் இருக்கிறது ஒரு பராசக்திதான். அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக அநுக்கிரகம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ அப்படிச் செய்வதற்காக மகாலக்ஷ்மியாக, ஸரஸ்வதியாக, ஞானாம்பிகையாக வருகிறாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வைத்துவிட்டால் போதும். அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம். அதுவே பெரிய லக்ஷ்மி.
ravi said…
கலைவாணி நாவில் அமர்ந்திருக்க

அலைமகள் நெல்லிக்கனிகளாய் கனக தாரா புரிய ,

உண்டான் முழித்திருக்க ஒழித்தான் நடனம்
உனை போற்ற

என் மனம் சிற்சபை ஆவதென் ஆச்சரியம் என்ன ?

என் உள்ளம் தான் சிதம்பர ரகசியமோ சுவாமி நாதா ? 👍🌷🌷
ravi said…
பித்தன் என்றார் உனை சிலர்
எத்தன் என்றார் பலர்... சித்தன் என்றே கண்டோம்
சிலையாக நின்றோம் ..

மௌனம் எனும் நாடகத்தில் நடித்தே ஒரு நடிகன் ஆனாய்...

நடிக்கத் தெரியாமல் நாங்கள் நிழல் ஒன்றை நிஜம் என்றே நம்பி வாழ்கிறோம்
ravi said…
வெள்ளைத்தாமரை உன் உள்ளமோ அதில் வீணை வாசிப்பது உன் நாவில் அமரும் வாணீயோ

உத்தமனே உயர்ந்தவனே உள்ளம் எல்லாம் உன் நினைவே ...

கல்வியில் சிறந்து விளங்க கற்பகமே கண் திறவாயோ 🌷🌷🌷
ravi said…
வாணீ போற்றும் வாக் வித்தனே .. தேனி சூழும் கடம்ப வன வாசனே

ஏணி போல் வாழ்வில் உயர ஏற்றுபவனே ...

காணி நிலமும் வேண்டேன் ...

உன் நிழல் என்னை தொடரும் ஒரு சொர்க்கம் போதும் சாயி 🥇🥇🥇
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 30

*Started on 26th sep 2020*💐💐💐💐

*ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்*

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.👌👌👌
ravi said…
சிவலிங்கத்தின் மேல் பாகம் - லிங்க பாகம் சிவமாகவும்,
கீழ்பாகம் – ஆவுடையார் பாகம் – சக்தியாகவும் விளங்குவதை லிங்கபுராணம் கூறும்.

சிவனையும், சக்தியையும் ஒருங்கே அல்லது ஸம்மேளனமாக (கலந்து) தரிசனம் செய்ய வழி செய்யும் இறைவடிவம் சிவலிங்க வடிவம்.

சிதம்பரம் – பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச தலமாக விளங்குவது. சிதம்பர ரகசியம் விளங்கும் ஸ்தலம்.

சிதம்பர ரகசியத்தின் பல விளக்கங்களில் முக்கியமான ஒன்று :
சிதம்பர ரகசியம் அமைந்த அந்த அற்புதமான இடத்தில், சிவ யந்திர சக்ரமும், சக்தி யந்திர சக்கரமும் ஒருங்கே (ஸம்மேளனமாக) இணைந்துள்ளது.
ஆகாயம் எல்லையற்று விளங்குவதைக் குறிப்பது, இறைவனின் சக்தி எல்லையற்றது என்பதை தெளிவுபடுத்துவது, ஆகாயத்தின் முழுமை நம் கண்களுக்கு புலப்படாதது என்பதை உணர்த்துவது சிதம்பர ரகசிய தத்துவம்.

(யந்திர சக்கரம் – தெய்வத்திற்கான உயிர் போன்றது. உயிர் எப்படி நம் கண்களுக்குப் புலப்படுவது இல்லையோ அது போல யந்திர சக்கரங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் அமைக்கப்பட்டிருக்கும்.)
ravi said…
*Lalita Trishati 271 - 280*👌👌👌
ravi said…
*261. Lakāriṇī लकारिणी*💐💐💐💐 She is siva in the form of knowledge and bless 🌸🌸🌸

*262. Labdharūpā लब्धरूपा*💐💐💐 She was created by Siva

*263. Labdhadhīḥ लब्धधीः*💐💐💐 She alone can take us to Siva the ultimate Bliss . 🥇🥇🥇

*264. Labdhavāñchitā लब्धवाञ्छिता*💐💐💐 She has everything ...Nothing is wanting 🙏🙏🙏

*265. Labdhapāpamanodūrā लब्धपापमनोदूरा*💐💐💐 She is far away from perpetual sinners 🦜🦜🦜

*266. Labdhāhaṁkāradurgamā लब्धाहंकारदुर्गमा*👌👌👌 Ego prevents us in reaching Her 👍👍👍🦜🦜🦜

*267. Labdhaśaktiḥ लब्धशक्तिः*💐💐💐💐💐 She is an embodiment of all powers

*268. Labdhadehā लब्धदेहा*👌👌👌👌👌She takes whatever forms She likes

*269. Labdhaiśvaryasamunnatiḥ लब्धैश्वर्यसमुन्नतिः*👌👌👌

She has huge Wealth of Wisdom 👍👍👍

*270. Labdhavṛddhiḥ लब्धवृद्धि*💐💐💐 She is the absolute
ravi said…
*271. Labdhalīlā लब्धलीला*💐💐💐💐
ravi said…
Līlā means play or pastime.

She has five primary acts – creation, sustenance, destruction, concealment (annihilation) and re-creation (Grace).

Lalitā Sahasranāma 264 to 274 describe these acts. While creating, She takes the form of Brahmā (god of creation); while sustaining the created universe, She takes the form of Viṣṇu; while destructing (death of individuals), She takes the form of Rudra; while annihilating, She takes the form of Īśvara; while re-creating the annihilated universe, She takes the form Sadāśiva. She does all these acts like a sport.🌸🌸🌸
ravi said…
Brahma Sūtra (II.i.33) says, “Creation is a mere pastime for the Brahman.”

The act of Creation, as if it is a play for the Brahman is based on logical reasoning.

The Brahman acts in spontaneity without extraneous influence or motive (Divine Freewill).

Activities concerned with names and forms arise out of ignorance and meant to propound the fact that everything is Brahman.

Brahman plays hide and seek game with humans, using His potent tool known as māyā or illusion.
ravi said…
Śvetāśvatara Upaniṣad (III.21) says, “ahaṁ ajaraṁ purāṇaṁ अहं अजरं पुराणं” where ahaṁ means the Self, ajaraṁ means never aging and purāṇaṁ means eternal. The Upaniṣad says that Brahman is without aging and is eternal and this message is conveyed through this nāma.
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 144*
🌸🌸🌸🌸

பாக்யாப்திசந்த்ரிகா, பக்தசித்தகேகி கனாகனா |
ரோகபர்வத தம்போலிர் ம்ருத்யுதாரு குடாரிகா ‖ 144 ‖

🌸🌸🌸🌸

भाग्याब्धिचन्द्रिका, भक्तचित्तकेकि घनाघना |
रोगपर्वत दम्भोलि, र्मृत्युदारु कुठारिका ‖ 144 ‖
🌸🌸🌸🌸

bhaagyaabdhichandrikaa, bhaktachittakeki ghanaaghanaa |
rogaparvata dambholi, rmrtyudaaru kuthaarikaa ‖ 144 ‖
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸

ஓம் பாக்யாப்திசந்த்ரிகாயை நம;
ஓம் பக்தசித்தகேகி கனாகனாயை நம;
ஓம் ரோகபர்வத தம்போலயே நம;
ஓம் ம்ருத்யுதாரு குடாரிகாயை நம;
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*746.பாக்யாப்திசந்திரிகா* - (அதிர்ஷ்டம்) பாக்யாகிய ஸமுத்ரத்தைப் பொங்கச் செய்யும் சந்திரிகையாக ஒளி வீசும் முழுநிலா அம்பாள்.
🌸🌸🌸🌸

*747.பக்த சித்த கேகி கண கணா* - பக்தர்களின் சிந்தங்களாகிற (மனது / பக்திக்கு ) அழகிய தோகை விரித்தாடும் மயில்களுக்கு உல்லாஸத் தைக்கொடுக்கும் மேக (கருமுகில்) ஸ்வருபமாயிருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*748.ரோகபர்வத தம்போளி* - பக்தர்களின் உடல், மன வியாதி, நோய், வலிகளுக்கு வஜ்ராயுதம் போல் இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை. (இந்திரனின் வஜ்ராயுதம் -மலைகளை பிறந்துவிடும்).
🌸🌸🌸🌸

*749.ம்ருத்யு தாரு குடாரிகா* - மரணம் எனும் (ம்ருத்யுவாகிற) மரத்தை வெட்டும் கோடாலி போன்றவள் அம்பாள் ஸ்ரீ லலிதை
🌸🌸🌸🌸
ravi said…
அபிராமி பதிகம்

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச தனயை மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி மிகவும் அகில மதில் நோயின்மை கல்விதன தானியம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி சூலி! மங்கள விசாலி! மகவுநான் நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை வளைதிருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினான்காவது ஸ்லோகம் – இருபதமுமறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயே👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதிமூணு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம்.

நேற்றைக்கு, ஆச்சார்யாள் ஸுப்ரமண்ய ஸ்வாமியோட ஆறுமுகங்களை வர்ணிக்கும் போது, சந்திரனைக் கூட இதற்கு உவமையா சொல்ல முடியாது. ஏன்னா சந்திரன் ஒரே சந்திரன், ஆனா ஆறுமுகங்கள் ஆறு சந்திரன்கள் போல இருக்கு. அதுவும் களங்கமில்லாத சந்திரனுக்கு நிகரான அழகுன்னு சொன்னார்.

ravi said…
இன்னிக்கும் இந்த ஆறு முகங்கள் பத்தி இன்னொரு ஸ்லோகம். இந்த ஆறு முகங்கள் பத்தி மஹான்கள் எல்லாம் ரொம்ப, திரும்ப திரும்ப அதை த்யானம் பண்ணி, தர்சனம் பண்ணி சந்தோஷப் பட்டிருக்கான்னு தெரியறது. கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனுடைய அவதாரத்தை சொல்லும் போது,
ravi said…
அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்

கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே

ஒரு திருமுருகன் வந்தாங்குதித்தனன் உலகம் உய்ய

னு பாடறார்.

ravi said…
அருணகிரிநாதர் ஆறுமுகத்தை நிறைய பாடல்களில் பாடியிருக்கார்.

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.

நம்ம மாதிரி மஹா பெரியவாகிட்ட பக்தி இருக்கறவாளுக்குனே ஒரு கந்தர் அலங்காரப் பாடல் இருக்கு

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்

பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்

மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்

குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
ravi said…
அருணகிரிநாதர் ஆறுமுகத்தை நிறைய பாடல்களில் பாடியிருக்கார்.

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.

நம்ம மாதிரி மஹா பெரியவாகிட்ட பக்தி இருக்கறவாளுக்குனே ஒரு கந்தர் அலங்காரப் பாடல் இருக்கு

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்

பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்

மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்

குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
ravi said…
அப்படீன்னு அந்த மருவடிவான வதனங்கள் ஆறும், மலர்க் கண்களும் குருவடிவாய் வந்து என் உள்ளத்தில் குடி கொண்டவே, வந்து தங்கியாச்சு, என் உள்ளத்துலதான் இருக்கார்ன்னு சொல்லியிருக்கார். முருகப் பெருமான் அருணகிரி நாதருக்கு முத்து முத்தா பாடுன்னு, முத்துங்கற வார்த்தையை எடுத்து கொடுத்தார். உடனே அருணகிரிநாதர் என்ன பாடறார்.

முத்தைத் தரு பத்தி திருநகை அத்திகிறை சக்தி சரவண ன்னு பாடறார். அந்த முத்து போன்ற வரிசையான பற்களில் விளங்கும் புன்சிரிப்பு, முத்தை தரு பத்தி திருநகை-ன்னு புன்சிரிப்பைத் தான் பாடறார்.
ravi said…
அப்படி பாகவனோட தர்சனம் கிடைச்ச உடனே மஹான்கள் எல்லாம் முகத்தினுடைய அழகை பார்த்து ரொம்ப லயிக்கிறா. இன்னொரு பாடல் இருக்கு. அந்த ஆறுமுகம் தான் எல்லாமே, எனக்கு கிடைச்ச எல்லா நன்மைகளும் அந்த ஆறுமுகம் தான்னு அந்த பாடல்ல வரும். எல்லாரும் முழுத் திருப்புகழைப் பாடுங்கோ, எங்களுக்கு கேட்கணும்னு சொல்றா. அதனால முழுப்பாட்டையும் நான் பாடறேன்.

ravi said…
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டதாடுமயி லென்ப தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற ஸோகமது தந்து எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே.
ravi said…
இந்த பாட்டுல ‘ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகமென்று தெரியேனே ன்னு பாடறார். அப்படி மஹான்கள் எல்லாம் அந்த ஆறுமுக தரிசனத்துல ரொம்ப சந்தோஷப் பட்டிருக்கா. ஆறுமுகம், ஆறுமுகம்-ன்னு இதே ஒரு மந்த்ரமா ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம்ன்னு ஒரு பாடல் இருக்கு. முன்னமே நாம அதைப் பார்தோம். ஆச்சார்யாள் ஆறு திருமுகங்களை பத்தி இன்னொரு ஸ்லோகம் சொல்றார் ன்னு சொல்ல வந்தேன். அதை இப்ப படிக்கிறேன்
ravi said…
स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्च-

त्कटाक्षावलीभृङ्गसङ्घोज्ज्वलानि ।

सुधास्यन्दिबिम्बाधराणीशसूनो

तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥ १४॥

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்

கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி

ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ

தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி
ravi said…
நேத்தி ஸ்லோகத்துல இந்த ஆறு முகங்களை சந்திரனோட ஒப்பிட முடியாதுன்னு ஒரு கவித்துவமா சொன்னார். இந்த ஸ்லோகத்துல ஆனா அவற்றை தாமரையோட ஒப்பிடலாம் ன்னு சொல்றார். ‘
ravi said…
ஹே ஈஷஸூனோ’ பரமேஸ்வரனுடைய புத்ரனான ஷண்முகக் கடவுளே ‘ஸ்புரன் மந்தஹாஸை’ உன்னுடைய முகத்துல மந்தஹாசம் ஒளிவிடுகிறது. மந்தஹாசம் என்றவுடன் எப்பயுமே மஹான்கள் வெண்மையா இருக்கு, வெள்ளையா சிரிக்கறது எங்கறதை வெச்சுண்டு, தூய்மையான புன்சிரிப்பு என்பதைப் பத்தி மூக கவி கூட காமாக்ஷியினுடைய மந்தஹாஸத்தை பத்தி நூறு பாடல்கள் எழுதியிருக்கார்.

ravi said…
அதுல வெண்மை, இனிமை, குளுமை இந்த மூணும் எடுத்து தான் பேசுவார். ஒரு ஐம்பது பாடல்கள்-ல வெள்ளையா சிரிக்கறது பத்தி வரும். அந்த மாதிரி அந்த தூய்மையான புன்சிரிப்புங்கறது எல்லாரும் சொல்றா. அதனால இங்க முகத்தை தாமாரைன்னு சொல்லும் போது இந்த ஜொலிக்கின்ற புன்சிரிப்புங்கற ஹம்ஸங்கள், தாமரைக்கு பக்கத்துல ஹம்சம் இருக்கும். அந்த மாதிரி இந்த முகமாகிய தாமரைக்கு பக்கத்துல அந்த புன்சிரிப்புங்கற வெண்மையான ஹம்ஸங்கள் இருக்குங்கறார்.

ravi said…
அடுத்தது ‘சஞ்சத் கடாக்ஷாவலீ ப்ருங்க ஸங்கோ ஜ்வலானி’ தாமரைன்னா அதுல வண்டுகள் இருக்கணும். முகத் தாமரையில் என்ன வண்டுன்னா, கடாக்ஷாவலீ, கடாக்ஷம்-ன்னா கண்கள் கிடையாது. அந்த கண்களிலிருந்து வர்ற பார்வை. அந்த பார்வை வந்து ஆவளி போல ஒரு வரிசையா கண்களிலேருந்து அந்த பார்வை வந்துண்டே இருக்கு. கறுப்பு தானே கண்ணோட பார்வைங்கறது. அது இப்படியும், அப்படியும் சலிக்கறது. ‘சஞ்சத்க டாக்ஷாவலீ’ கண்ணோட பார்வை இங்கேயும் அங்கேயும் போகும் இல்லையா? அது ‘ப்ருங்கங்கள்’ வண்டு போல இருக்கு. வண்டு தாமரை மேல வட்டமிடற மாதிரி, உன்னுடைய முகமாகிய தாமரையில இந்த கண்களில் இருந்து வெளி வரும் அந்த கடாக்ஷ வரிசைகளுடைய ப்ருங்கங்கள் இருக்கு, வண்டுகள் இருக்குங்கறார்.
ravi said…
அப்புறம் தாமரைன்னா தேன் இருக்கணுமே. இதுல ‘ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீ’ உன் பிம்ப அதரங்கள், கோவைப்பழம் போன்ற உன்னுடைய உதடு முகத்துல செக்க செவேல்னு இருக்கு. அதுல அந்த சிகப்பழகு தாமரையில இருக்கற தேன் மாதிரி அமிர்த ப்ரவாகமா, அந்த அழகு உதடுலேர்ந்து வந்துண்டிருக்கு. இப்பேற்பட்ட ‘தவ ஷண்முகாம்போரு ஹாணி’ உன்னுடைய ஆறு முகங்கள் என்ற ஆறு தாமரைகளை ‘ஆலோகயே’ : நான் பார்க்கிறேன்னு இந்த அழகனா ஸ்லோகம்.

ravi said…
स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्चत्कटाक्षावलीभृङ्गसङ्घोज्ज्वलानि ।

सुधास्यन्दिबिम्बाधराणीशसूनो तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥ १४॥

முகத்துக்கு அழகா இவ்வளவு உவமைகள் சொல்லி முகத்தை தாமரைன்னு சொல்றார். மூககவி காமாக்ஷியினுடைய முகத்தை பத்தி சொல்லும் போது ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கார்.

ravi said…
ताम्राम्भोजं जलदनिकटे तत्र बन्धूकपुष्पं

तस्मिन्मल्लीकुसुमसुषमां तत्र वीणानिनादम् ।

व्यावृन्वाना सुकृतलहरी कापि काञ्चिनगर्याम्

ऐशानी सा कलयतितरामैन्द्रजालं विलासम् ॥

தாம்ராம்போஜம் ஜலதநிகடே தத்ர பந்தூகபுஷ்பம்

தஸ்மின்மல்லீகுஸுமஸுஷமாம் தத்ர வீணாநினாதம் |

வ்யாவ்ருன்வானா ஸுக்ருதலஹரீ காபி காஞ்சீநகர்யாம்

ஐஷானீ ஸா கலயதிதராமைந்த்ரஜாலம் விலாஸம் ||

ன்னு ஒரு ஸ்லோகம், காஞ்சிபுரத்துல, ஐந்திரஜாலம்ன்னா magic show. காஞ்சிபுரத்துல ஒரு magic show நடந்துண்டிருக்கு அப்படிங்கறார். என்னப்பா அதுன்னு கேட்டா.
ravi said…
தாம்ராம்போஜம் ஜலதநிகடே’ ஜலதம்னா மேகம். மேகத்துக்கு பக்கத்துல ஆகாசத்துல ஒரு பெரிய தாமரை தெரியறதாம். அந்த தாமரைக்குள்ள ‘தத்ர பந்துக புஷ்பம்’ அதுக்குள்ள செம்பரத்தை பூ தெரியறது. அந்த செம்பரத்தை பூக்குள்ள ‘தஸ்மின் மல்லி குஸுமஸுஷமாம்’அதுக்குள்ள ஒரு மல்லிகைச் செண்டு தெரியறது. அந்த மல்லிகைப் பூக்குள்ளேயிருந்து ‘தத்ர வீணாநினாதம்’ அதுக்குள்ளேயிருந்து வீணையோட இனிமையான நாதம் கேட்கறது.
ravi said…
இப்படி magic பண்றார் ஒருத்தர், அப்படி யாருடா பண்றான்னு கேட்டா, காமாக்ஷி தேவிதான்னு சொல்றார். ‘ஐஷானீ’ ஈஷானனுடைய மனைவியான காமாக்ஷி தேவியினுடைய கூந்தல் மேகம் மாதிரி இருக்கு. முகம் தாமரையாட்டமாக இருக்கு . அந்த முகத்துல உதடு செம்பரத்தை பூ மாதிரி இருக்கு.
ravi said…
அதற்குள்ள பற்கள் மல்லிகை பூ மாதிரி இருக்கு, அதுக்குள்ள அம்பாளுடைய குரல், அந்த த்வனி வீணா நாதம் போல இருக்குன்னு, இப்படி ஒரு magic ஐந்த்ரஜாலம் பண்ணிண்டிருக்கா காமாக்ஷி அப்படீன்னு அழகான ஸ்லோகம். இந்த மந்தஸ்மிதத்தை மஹான்கள் எப்பவுமே வெண்மைக்கு ஒப்பிடுவாங்கறது இந்த மந்தஸ்மித சதகத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம்.

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53