பச்சைப்புடவைக்காரி - மாரிமுத்தா பிள்ளை-3 - 211

                                             பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

                                               மாரிமுத்தா பிள்ளை-3

(211) 👍👍👍💥💥💥

Inspired from 



 காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே- என்னைக்

 கைதூக்கி ஆள் தெய்வமே (காலை)

என்ற பாட்டை திருமதி எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரலில் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். யதுகுல காம்போதி ராகத்திலமைந்த நயமிகுந்த பாடல். இதன் கவிதை நயமே ‘தூக்கி’ என்ற ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பப் பிரயோகம் செய்ததால் தான் பட்டை தீட்டிய வைரம் போல ப் பளீரிடுகின்றது.

        வேலைத் தூக்கும் பிள்ளை தனைப் பெற்ற தெய்வமே

        மின்னும்புகழ் சேர்தில்லைப் பொன்னம்பலத்தில் ஒரு (காலை)

எவை எவற்றை அண்ணல் தூக்கியவாறு ஆடுகின்றான் என விளக்கிப் பின் யார் யார் எவ்வாறு நடனத்திற்கு ஈடு கொடுத்தனர் எனக் கூறுகிறார்.

        நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க

        தொந்தமென்றயன் தாளம் சுருதியோடு தூக்க

        சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரந்தூக்க

        முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க (காலை)




தமிழின் இனிமையையும் பொருட்செறிவையும் உணர்வதனால் இந்தப் பாடல் நம்மைப் புல்லரிக்க வைப்பதாகும். ஒவ்வொரு பாடலையும், அடியையும் ஆற அமர இருந்து, படித்துக் கேட்டு, ரசித்து மகிழ வேண்டும்.

தில்லை ஈசன் மீதே பாடல்களைப் பாடியவர் அன்னை பராசக்தி மீது ரீதிசந்திரிகா எனும் ராகத்தில் ஒரே ஒரு பாடலை இயற்றியுள்ளார்.

        ஏன் இந்தப் பராக்கு ஏழை மீதில் உனக்கு

        என்ன வன்மமோ அம்மா (ஏன்)

(என்மேல் உனக்கு அக்கறையில்லையோ தாயே? பராக்கு- கவனமின்மை)

        பானந் துலவிய பழனந் தனிற்கயல்

        பாயும் புலிசையில் ஆயன் திசைமுகன்

        வானிந் திரன்தொழும் ஆனந்த நடேசர்

        வாம முறுஞ்சிவ காம சவுந்தரி (ஏன்)

( நடேசனின் இடப்பாகம் கொண்டவளே)

மூன்றாம் சரணம்:

        பிஞ்சுமதிநுதல் வஞ்சி யெனும்அபி ராமியே- தெய்வப்

        பிடிக்கும் ஒரு குறக்கொடிக்கும் வாய்த்த நன் மாமியே

        தஞ்சம் எனும் அடியார்களிடத்துறை வாமியே- கொன்றைத்

        தாமம் அணிந்திடும் ஏம சபைச் சிவகாமியே

        செஞ்சிலம் பணியுன் திருவடி யேகதி

        தேவர் ஒருவரைச் செய்திடேன் துதி

        அஞ்சேல் அஞ்சேலென்றாள வேவிதி

        அசட்டை இனிச் செய்வதனைத்தும் பெண்மதி   (ஏன்)




இந்தச் சரணத்தில் வேறு கவிஞர்கள் யாருமே பாடியிராத உமையவள்- வள்ளி தெய்வானை உறவு பற்றிய ஒரு செய்தி விரிகின்றது! 

‘தெய்வப்பிடியான தேவகுஞ்சரிக்கும் குறக்கொடியான வள்ளிக்கும் வாய்த்த மாமியே,’ என சிவகாமி அன்னையை விளிக்கின்றார். 

‘கொன்றை மலர்க் கொத்தினை அணிந்த பொன்னம்பலத்துச் சிவகாமியே,’ என்கிறார். 

கொன்றை மலரணிந்தவன் அவள் நாயகன் தான்; அம்மை அதை அணிந்துள்ளாள் எனக் கூறும் போது, ‘அம்மையும் அப்பனும் ஈருருவாகிய (அல்லது ஓர் உரு ஆகியோர் எனவும் கொள்ளலாம்) ஓர் பரம்பொருளே,’ எனச் சொல்லாமல் சொல்லி விளங்க வைக்கிறார். என்னை அசட்டை செய்வதும் உன் பெண்மதி என அந்த அன்னையையும் விட்டு வைக்காமல் உரிமையுடன் நிந்தாஸ்துதியும் செய்கின்றார்!


இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நிறைவு செய்யும் முன் ஒரு அருமையான பாடலைக் காண்போம்-

‘ஒருக்கால் சிவ சிதம்பரம் என்று நீ சொன்னால் இருக்காது ஊழ்வினையே,’ எனும் பொருள் செறிந்த ஆரபி ராகப் பாடல்.

தெய்வ வழிபாட்டின் சாரத்தைப் பிழிந்து நம்முன் வைக்கும் பாடல். சடங்குகளும் சம்பிரதாயங்களும் சேர்ந்து வழிபாட்டை வியாபாரமாக்கி விடும் இக்காலத்தில், அதைச் சித்தர் பெருமக்கள் போல் கண்டித்து, ‘திரை மறைவில் உள்ள ரகசியத்தின் திறனை அறிந்து கொள்; தலங்கள் தொறும் திரிந்து பல தெய்வம் தொழுவானேன்; சிவசிதம்பரம் என்று சொல்; உன் ஊழ்வினை அறுபடும்,’ எனக் கூறுகிறார்.

        வேத மந்திரம் சொல்லி ஆயிரம் தெண்டன்புவி

        மீதினில் விழுவானேன்-இரு

        பாதமும் சிவந்திடத் தலங்கள் தொறும் திரிந்து

        பல தெய்வம் தொழுவானேன்- கொல்லன்

        ஊதும் துருத்தி போல வாயுவைக் கும்பித்துடல்

        யோகத்தில் எழுவானேன்- ஐந்து

        பூதங்களும் கலங்க அங்கப் பிரதட்சிணமாய்ப்

        புரண்டு புரண்டு மதி மருண்டெழுவானேன்

        ………………………………………………………….சபைத்

        திரைக்குள்ளே மறைவாகி இருக்கும் ரகசியத்தின்

        திறம் தெரியாமல் வீணே இறந்தின்னும் பிறப்பானேன் (ஒருக்கால்)



மாரிமுத்தா பிள்ளை அவர்கள் 75 ஆண்டுகள் வாழ்ந்திருந்து பின்பு இறை அடி சேர்ந்தார். ---8----👌👌👌


ஈசனும் அன்னையும் ஆனந்த நடம் ஆடிக்கொண்டே இவரை தங்களுடன் அழைத்துச் சென்றனர் . 🙏🙏🙏

இவருடைய பாடல்களில் சிலவே உங்களுக்கு கிடைத்துள்ளன. 

இந்தத் தமிழ்ப் பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாப்பது உங்கள்  கடமையாகும். 

*அம்மா  அற்புதம் என்பது மிகவும் குறைவான பதம்* --- அந்த *பாதம்* தூக்கி ஆடுபவனையும்  அவன் அழகை ரசித்துக்கொண்டிருக்கும் உன்னையும்  பார்த்துக்கொண்டே இருக்கலாம் --- . 

*அடி முட்டாளான அடியேனும் கவியாகி விடுவேன்  உன் அருளால்*🌸🌸🌸...






அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீi - 

அம்மா உன்  மெல்லிய இடையை சுற்றி அழகாக ஒரு இளம்சிவப்பு  பட்டு வஸ்திரம் மினுக்குவது என்ன நேர்த்தியாக இருக்கிறது. மனத்தை கொள்ளை கொள்ளும் தெய்வீக அழகு அல்லவோ அது 

ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா 

-   நமது பெண்கள் அக்காலத்தில் ஒட்டியாணம் என்று ஒரு பட்டை யான தங்க ஆபரணம் அணிவார்கள். பயமுறுத்துவார்கள்.  அம்மா நீ   அணியும் விதமே வேறு.  மெல்லிய நூல் மாதிரி மெலிந்த  பொன்  கயிறு உன்  இடுப்பை அலங்கரிக்கும். அதில் சுநாதம் எழுப்பும் சிறிய மணிகள் அசைந்து அழகும் ஒளியும் ஒலியும்  சேர்க்கும். 




சிரித்துக்கொண்டே நாளை மூன்றாவது தமிழ் இசை ஞானியை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு கொடுத்த குங்குமத்தை தன்  நெற்றியில் ஒரு பூர்ண சந்திரனைப்போல் இட்டுக்கொண்டாள் - இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு பேஷ் பேஷ்  எனக்கு பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு முன்னதாகவே தாழம்பூ குங்குமத்தை மதுரையில் இருந்து வரவழைத்து விட்டாயே --- அவள் எடுத்துக்கொண்ட குங்குமம் அவளுடைய  சிந்தூர வகுடில் பால சூரியனை ப்போல் உதயம் ஆனது ....

அம்மா அது மட்டும் அல்ல உனக்குப்பிடித்த பச்சைப்புடவை -- பட்டு அல்ல அம்மா கைத்திரி புடவை --- நீ திட்டுவாயே என்று தான் பட்டுப்புடவை வாங்கவில்லை --- இதோ மதுரை குண்டுமல்லி --- இவைகள்  சேர்ந்தபின் தான் இவைகளுக்கு அழகே வருகின்றன - அம்மா இவைகளைப்போல் நான் உன்னுடன் சேர்வதும் எந்நாளோ ? 


அவள் பரிசாக கொடுத்த புன்னகையில் இருந்து நாள் முழுக்க நான் மீளவே இல்லை 😊😊😊




Comments

ravi said…
ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
ravi said…
*புன்னகை ராமாயணம் 45/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
ஸீதேயம் பரிரக்ஷிதா தச முகாத் வேதாந்தி ராஜாத்மஜா
ஜாதா தே அநுகுணைவ தத்ர பவதா பக்னம் தனு: மத்குரோ:

ப்ராசீனம் தத் இதம் தனு: குரு ததா இதி ஏவம் ப்ருவாணே முனௌ
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே

सीतेयं परिरक्षिता दशमुखात् वेदान्तिराजात्मजा
जाता तेऽनुगुणैव तत्र भवता भग्नं धनुर्मद्गुरोः।
प्राचीनं तदिदं धनुः कुरु तथेत्येवं ब्रुवाणे मुनौ
यन्मन्दस्मितमानने तव तदा तत्सांप्रतं दृश्यते॥
ravi said…
ராமரிடம் பரசுராமர் தன்னிடம் இருக்கும் வில்லைக்காட்டி சவால் விடுகிறார் -

அதைக்கேட்டு ராமன் சிந்தும் புன்னகை🙂🙂🙂

வில்லுக்கு வில்லே புன்னகை🙏🙂

திவ்ய‌ தம்பதியர் என்றதும் திவ்யமான ஒன்றும் சவாலை சமாளிக்கும் மந்த ஹாஸமும் இரண்டறக் கலந்த புன்னகை🙂🙂🙂
ravi said…
*ஸீதேயம் பரிரக்ஷிதா தச முகாத்*💐💐💐

ராமா நீ ஒரு நல்ல காரியமும் கெட்ட காரியமும் செய்திருக்கிறாய் -

நல்ல காரியம் - நீ இந்த சீதையை மணந்து தற்காலிகமாக இராவணனிடம் இருந்து அவளை காப்பாற்றியுள்ளாய்

இன்னொரு நல்ல காரியம்

*வேதாந்தி ராஜாத்மஜா* -

சீதையின் தந்தை ஜனகர் ஒரு பெரிய வேதாந்தி அவருக்கு வேதங்களும் உபநிஷத்துகளும் அத்துப்படி

*ஜாதா தே அநுகுணைவ தத்ர பவதா* --

அப்படிப்பட்ட ஒரு பெரிய அரசனின் மகளான சீதையை நீ கைப்பற்றினாய் என்பது ஒரு பெரிய விஷயம் -

இந்த நல்ல காரியத்தை நீ செய்யும் போது ஒரு மன்னிக்கமுடியாத பெரிய பாவச் செயலையும் சேர்த்து பண்ணி விட்டாய் -

என்னுடைய குருவான சிவபெருமானின் வில்லை முறித்துவிட்டாய் அதை நீ தெரிந்து செய்தாயோ இல்லை தெரியாமல் செய்தாயோ பாவம் பாவம் தான் - மன்னிக்க முடியாத ஒன்று👌👌👌
ravi said…
*பக்னம் தனு: மத்குரோ: ப்ராசீனம் தத் இதம் தனு: குரு ததா இதி ஏவம் ப்ருவாணே முனௌ*

சரி அது ஒரு முடிந்து போன காரியம்

இதோ என் கையில் இருக்கும் வில்
சிவதனுசுவைப்போல போல் சக்தி வாய்ந்தது -

எங்கே உன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி இந்த வில்லை முறித்து விடு பார்க்கலாம் -

அப்படி நீ ஒருவேளை இந்த வில்லை முறித்து விட்டால் உன்னை ஒரு சுத்த வீரன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்...🏹🏹🏹

*யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே*

அந்த சவாலைக்கேட்டு

நீ அன்று பரசுராமரைப்பார்த்து புன்னகைத்தாயே

அதே புன்னகையைத்தான் இன்று வடுவூரிலும் பார்க்கிறோம் ராமா !

அது ஒரு வெற்றிப்புன்னகை -

எப்படி மழை வருவதை முன் கூட்டியே மயில் தோகை விரித்து ஆடி உணர்த்துகிறதோ

எப்படி சூரியன் உதயமாகப்போகிறது என்பதை வானம் சிவந்து காண்பிக்கிறதோ

நீ அடையப்போகும் வெற்றியை உன் மெல்லிய புன்னகை முன்கூட்டியே எல்லோருக்கும் எடுத்துச் சொன்னதோ ராமா -

*அந்த புன்னகை எங்கள் எல்லோரையும் காப்பாற்றட்டும்*👍👍👍😊😊😊
ravi said…
🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
Kousalya said…
Ahha ahha.. Sokki idam Sokki ponen... Ippo inda Punnagai Mannannidam mattikkonden... Arumai arumai 👌 👌 🌷🌷🌷Jai Siya Ram 🌷 🌷
S G S Ramani said…
ஆண்டவன் நீ எப்படி அவனை தொழுகிறாய் என்று பார்ப்பதில்லை எவ்வளவு பக்தியுடன் வணங்குகிறாய் என்பதை மட்டுமே பார்க்கிறான்...

அழகான ஆணித்தரமான வரிகள்...உண்மை...

🙏🙏🙏🙏🙏🙏🙏
Savitha said…
அருமை
வில்லுக்கு வில்லே புன்னகை
Savitha said…
ஒரு ப்ரவர்சனத்தி ல்
கேட்டது
கிருஷ்ணர் உபதேசத்தில்
ஜனகரை பற்றி உயர்வாக பேசினார் என்றால் அவர் மிகவும் உயர்ந்தவர் என்று
எடுத்து காட்டு

அப்படி உயர்ந்த காதைகள் கொண்டது
இந்த புன்னகை ராமாயணம்
🙏🏻🙏🏻🌷🌷

எங்கள் வீட்டு கொலுவில்
வடுவூர் ராமர்
🌷🙏🏻
Lakshmi balaraman said…
மிகவும் நன்றாக உள்ளது.
ravi said…
*புன்னகை ராமாயணம் 46/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
சைவம் தத் தனு: அர்ச்சக: அஸ்ய ஜனக: ராஜா ததோ நோ ஹத:
பக்னம் தத் பவதா பயம் ந விசதா ஸோயம் குடாரோ மம
பச்ய அத்ய இதி தனு: ததன்முனி மணி: யத் ப்ராஹ தேனோதிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ விபோ தத் மங்கலம் யச்சது

शैवं तद्धनुरर्चकोऽस्य जनको राजा ततो नो हतः
भग्नं तद्भवता भयं न विशता सोऽयं कुठारो मम।
पश्याद्येति धनुर्ददन्मुनिमणिः यत्प्राह तेनोदितं
यन्मन्दस्मितं आनने तव विभो तन्मङ्गलं यच्छतु॥

தபஸ்விக்குப் பணிவு, ஜனங்களுக்கு உறுதி இரண்டும் இழையோடிய இந்த புன்னகை
மக்கள் புன்னகை 🙏🙏
ravi said…
பரசுராமர் தன்னிடம் இருக்கும் வில்லை எடுத்து ராமனிடம் கொடுத்து ராமா , இதோ இந்த வில்லிடம் உன் கை வரிசையை காண்பி பார்க்கலாம் என்றார்

அப்பொழுது ராமன் உதிர்த்த புன்னகை😊😊😊

43 வது ஸ்லோகத்தில் தன் தம்பிகள் உட்பட எல்லோரும் பரசுராமரைக் கண்டதும் பயந்தவுடன் பயப்படவேண்டாம் என்று அபாயம் காட்டி புன்னகை பூத்தான் ராமன்😊

44 வது ஸ்லோகத்தில் பரசுராமர் ராமரிடம் பயத்தை உண்டாக்கும் தொனியில்

ராமா நீ ஒரு பெரிய பாவத்தை செய்து விட்டாய் என் குருவான சிவபெருமானை அவமானப்படுத்திவிட்டாய் என்று சொன்னதும்

அதைக்கேட்டு பயப்படாமல் ஒரு புன்னகையினால் பதில் சொல்கிறான் ராமன்😊
ravi said…
45வது ஸ்லோகத்தில் பரசுராமரின் சவாலை ஏற்றுக்கொண்டு அவரிடம் இருந்து அவருடைய சிவதனுசுவிற்கு கொஞ்சமும் குறைவில்லாத வில்லை வாங்கிக்கொள்ள போகிறான் -

இந்த சவாலில் நான் கண்டிப்பாக வெற்றிக்கொள்வேன் என்பதை ஒரு புன்னகையினால் அங்கே எல்லோருக்கும் காண்பிக்கிறான் ராமன்😊😊😊

46வது ஸ்லோகத்தில் வில்லை வாங்கிக்கொள்கிறான்

அப்படி வாங்கிக்கொள்ளும் போது ஒரு புன்னகையை உதிர்க்கிறான் ராமன்😊😊😊
ravi said…
வில்லைத்தரும்போது பரசுராமர் ராமரிடம் சொல்கிறார்

சைவம் தத் தனு: அர்ச்சக: அஸ்ய ஜனக: ராஜா ததோ நோ ஹத:

ராமா!!!

ஜனகர் வைத்திருந்த வில் சைவம் அதாவது பரமேஸ்வரனின் வில் அதற்கு ஜனகரும், சீதையும் தினமும் பூஜை செய்துகொண்டு வந்தார்கள்👍👍👍
ravi said…
ராஜா ததோ நோ ஹத: -

ஜனகர் என் குருவை அந்த பரமேஸ்வரனை இப்படி உண்மையாக ஆத்மார்த்தமாக பூஜை செய்தும் வணங்கியும் வந்ததால்

21 அரச தலைமுறைகளை அழித்துக்கொண்டு வந்த நான் இந்த ஒரே காரணத்திற்க்காக நான் ஜனகரை மட்டும் வெட்டாமல் இருந்தேன் -

இது நான் செய்த சத்தியத்திற்கு சவாலாக இருந்தாலும் ஜனகரின் சிவ பக்தி அபூர்வமானது அற்புதமானது அதனால் அவர் என் மழுவிற்கு இரையாகவில்லை
ravi said…
பக்னம் தத் பவதா பயம் ந விசதா - ராமா நீ சிவனுக்கும் பயப்படவில்லை அவருடைய பூர்ண அருளைப்பெற்ற அவருடைய சிஷ்யனான என்னைக்கண்டும் நீ பயப்படவில்லை

ஸோயம் குடாரோ மம பச்ய அத்ய இதி தனு: குடாரோ மம என்றால் என்னுடைய வில்

இதோ உனக்கு என்னிடம் எப்பவும் பயம் இருக்கவேண்டும் என்பதால் என்னுடைய சிவதனசுவிற்கு ஒப்பான ஒரு வில்லைத் தருகிறேன் இதை முறித்துவிடு பார்க்கலாம் இப்படி சொன்னார்
ravi said…
ததன்முனி மணி: யத் ப்ராஹ தேனோதிதம் - முனிவர்களுக்குள் ரத்தினமாய் திகழும் பரசுராமர்

உன் ஒரே புன்னகை என்ன என்ன செய்திகளை சொன்னது தெரியுமா --- ???

முனிவர்களுக்குள் ரத்தினமாய் திகழும் பரசுராமர் ஒரு பெரும் தபஸ்வி ,

சிறந்த , உயர்ந்த சிவ பக்தர் .

சிவனிடம் இருந்து யாருமே வெல்லமுடியாத மழுவை பெற்றுக்கொண்டவர் --

பிரம்மாஸ்த்திரம் இதை நன்றாக பிரயோகிக்ககூடியவர் .

சக்தி உபாசகரும் கூட -

திரேதா யுகத்திலும் வரப்போகிறவர் -

விஷ்ணுவின் அம்சம்

இப்படிப்பட்டவருக்கு என் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் என்பதை உன் புன்னகை தெரிவித்தது - 😊😊😊
ravi said…
அதே சமயம் பரசுராமரைக்கண்டு பயந்துகொண்டு ஓடி ஒளிய இடமில்லாமல் தவித்த கூட்டத்திற்கு அஞ்சேல் நான் இருக்கிறேன் என்று உறுதி செய்தது அந்த புன்னகை -- 😊😊😊

ravi said…
மூன்றாவதாக பரசுராமரிடம் இருந்து அவருடைய வில்லை வாங்கிக்கொள்ளும் போது அங்கே கூடியிருந்த கூட்டத்திற்கு நான் தான் வெல்லப்போகிறேன் என்ற நம்பிக்கையைத் தந்தது - 👍👍👍
ravi said…
ஒரு அழகான புன்னகை ஒரே சமயத்தில் மூன்று வேலைகளை செய்தது -

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இன்னுமொரு புன்னகை😊😊😊 ---

ravi said…
இவ்வளவு பெரிய தபஸி -

முக்காலமும் உணர்ந்தவர் --

ஒரு சாதாரண மனிதரைப்போல நடந்துகொள்கிறாரே -

இவருக்கு தெரியாததா நான் வேறு அந்த பரமேஸ்வரன் வேறு இல்லை என்று -
சிவாய விஷ்ணு ரூபாய சிவரூபாய விஷ்ணுவே என்கிறதே வேதம் -

வேதம் படித்தவர் இப்படி எங்கள் இருவருக்குள் பேதம் பார்க்கலாமா ?

என்று அவர் அறியாமையை எண்ணி கூடுதலாக அதே சமயத்தில் அவர் மனதை கொஞ்சமும் புண் படுத்தா வண்ணம் தன் மனதிற்குள் சிரித்துக்கொண்டானாம் ராமன் --- அந்த சிரிப்பு
அவன் அருகில் நின்று கொண்டிருந்த சீதைக்கு மட்டுமே புரிந்தது --

என் வில்லை நானே உடைக்க யாருடைய அனுமதி தேவை ?

வில்லை உண்மையில் நான் உடைக்கவில்லை அதை நான் என் கோதண்டமாக ஆக்கிக்கொண்டேன் என்னையும் ஈசனையும் பிரிக்கவே முடியாது என்பதைக்காட்டவே அந்த புன்னகை பிறந்தது ராமன் மனதிற்குள் -

சீதையும் அந்த சத்திய வார்த்தைகளைக்கேட்டு உள்ளுக்குள் அகமகிழ்ந்தாள்😊😊😊👌👌👌👍👍👍
ravi said…
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ விபோ தத் மங்கலம் யச்சது

ராம இந்த உன் புன்னகைத்தான் வெற்றி எனும் மங்கலத்தைக்காட்டியது அங்கே இருந்த அனைவருக்கும்

அந்த புன்னகை வடுவூரில் இன்னும் எல்லா மங்கலத்தையும் இன்றும் எல்லோருக்கும் தந்துகொண்டிருக்கிறது ராமா😊😊😊💐💐💐
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 139*
🌸🌸🌸🌸


குலோத்தீர்ணா, பகாராத்யா, மாயா, மதுமதீ, மஹீ |
கணாம்பா, குஹ்யகாராத்யா, கோமலாங்கீ, குருப்ரியா ‖ 139 ‖
🌸🌸🌸🌸


कुलोत्तीर्णा, भगाराध्या, माया, मधुमती, मही |
गणाम्बा, गुह्यकाराध्या, कोमलाङ्गी, गुरुप्रिया ‖ 139 ‖
🌸🌸🌸🌸


kulottirnaa, bhagaaraadhyaa, maayaa, madhumati, mahi |
ganaambaa, guhyakaaraadhyaa, komalaangi, gurupriyaa ‖ 139 ‖
🌸🌸🌸🌸

ravi said…

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸

ஓம் குலோத்தீர்ணாயை நம;
ஓம் பகாராத்யாயை நம;
ஓம் மாயாயை நம;
ஓம் மதுமத்யை நம;
ஓம் மஹ்யை நம;
ஓம் கணாம்பாயை நம;
ஓம் குஹ்யகாராத்யாயை நம;
ஓம் கோமளாங்க்யை நம;
ஓம் குருப்ரியாயை நம;
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*714.குலோத்தீர்ணா* - ''குலா'' என்று நிறைய வரும். குலா என்றால் இந்திரியம் (உணர்வுகளின் ஒட்டு மொத்தம்) அவற்றால் அறிய முடியாத ருபத்தையுடையவள் அம்பாள் என்று ஒரு அர்த்தம்.
🌸🌸🌸🌸

*715.பகாராத்யா* - சூரிய மண்டலத்தில் உபாஸிக்கப்பட்டுகிறவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*716.மாயா* - மாயா ரூபணியாக இருப்பவள்.
🌸🌸🌸🌸

*717.மதுமதீ* - மதுவோடு - மதி என்பது புத்தியாக இருப்பவள்.
🌸🌸🌸🌸

*718.மஹீ* - மஹீ என்றால் பூமி ரூபமாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*719.கணாம்பா* - சகல பூதகணங்களும் தாயானவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*720.குஹ்யகாராத்யா* - குஹ்யகா்களென்ற தேவ விசேஷா்களால் ஆராதிக்கப்பட்டவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*721.கோமலாங்கீ* - ஸுகுமாரமான (மென்மையான / ம்ருதுவான) அழகு பிம்பமாக இருப்பவள்.
🌸🌸🌸🌸

*722.குருப்ரியா* - ஜகத்குருவான சிவனுடைய ப்ரியையாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
ravi said…
வெள்ளை தாடி உன் மனம் காட்டும் கண்ணாடியோ அருணாசலா

குளிமை உன் கண்ணில் இமயத்தை காட்டும் சமயமோ அருணாசலா

உன் மெல்லிய புன்னகை வண்டுகள் மொய்க்கும் தேன் குடமோ அருணாசலா

காரூண்யம் என்பதே உன் வாழ்க்கை என்றால் காந்தம் போல் உன் கருணை என்னை இழுப்பதேன் அருணாசலா ? 👌👌👌
ravi said…
கரம் தூக்கி வணங்கினேன் கற்பகம் சிரித்தது ...

கால் தூக்கி நின்றாடும் கயிலை நாதனை வேண்டினேன் ...

கடல் முழுவதும் தேனாய் ஆனது

தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமி நாதா உன்னையே நினைக்கின்றேன் ...

உள்ளம் காற்றாய் மித்தப்பதேன் ...

ஓராயிரம் பட்டாம் பூச்சிகள் போல் உள்ளம் குளிர்வதேன்...

உன் பெயரில் ஊரும் மதுரம் மலைத்தேனை கசக்க வைப்பதேன் ?💐💐💐
ravi said…
எங்கும் உன் நாமம் எதிலும் உன் ஞானம் ... ஏழ் பிறப்பும் பிறந்தும் இளைத்தேன் ... வேண்டும் ஒரு பிறவி உனை மனதார பாட

செய்த கருணைக்கு அளவுண்டோ நீ காட்டும் அன்பிற்கும் கரை உண்டோ

காமதேனுவும் தரும் பாலை நிறுத்தலாம் ... உன்பால் அன்பு கொண்டோர் வம்பால் மாள்வரோ ராகவேந்திரா 🙏🙏🙏
ravi said…
மதி மயக்கும் நேரம் சாயி மதி மயங்கிப்போனேன் ... சதி கொண்ட மனம் விதியுடன் விளையாடியது

உன் நினைவு வரவில்லை ஊழ்வினை என்னை ஆட்கொண்டது ...

என்றோ ஒருமுறை சாயி என்று சொன்னேன் ...

இதோ என்றே ஓடி வந்தாய் சாயி

அயன் தலை எழுத்து அழிந்துபோனதென் மர்மம் என்ன சாயி ...

மறக்க முடியுமா உன் அருளை மறந்து விட்டால் மனிதன் ஆவேனோ நான் சாயி 🌸🌸🌸
ravi said…
*Lalita Trishati 261 - 270*👌👌👌
ravi said…
*261. Lakāriṇī लकारिणी*💐💐💐💐 She is siva in the form of knowledge and bless 🌸🌸🌸

*262. Labdharūpā लब्धरूपा*💐💐💐 She was created by Siva

*263. Labdhadhīḥ लब्धधीः*💐💐💐 She alone can take us to Siva the ultimate Bliss . 🥇🥇🥇

*264. Labdhavāñchitā लब्धवाञ्छिता*💐💐💐 She has everything ...Nothing is wanting 🙏🙏🙏

*265. Labdhapāpamanodūrā लब्धपापमनोदूरा*💐💐💐 She is far away from perpetual sinners 🦜🦜🦜

*266. Labdhāhaṁkāradurgamā लब्धाहंकारदुर्गमा*👌👌👌 Ego prevents us in reaching Her 👍👍👍🦜🦜🦜
ravi said…
*267. Labdhaśaktiḥ लब्धशक्तिः*💐💐💐💐💐
ravi said…
She is an embodiment all powers, which includes the power of māyā.

She represents the independent power of autonomy of Śiva and obviously, She is vested with all powers.

There is none in this universe, who can match Her Powers.

Alternatively, this nāma can be explained through Lalitā Sahasranāma 199 Sarvaśakti-mayī, which says that She is the power of all śaktī-s.

There are two different meanings for the word śaktī. Śaktī means power.

As far as She is concerned, Her power is the divine power.

She uses this divine power for Her acts of creation, sustenance and dissolution. Since Her saguṇa (form) is being discussed, it can be said that She has ministers such as Vārāhī, Śyamalā, or even Her ten forms which is popularly known as dasa mahā vidyā, who are Her śaktī-s.

In this context śaktī-s mean these goddesses who function under Her control. In literal sense, She is in the form of all such goddesses, in view of the omnipresent nature of the Brahman.

Since She is the embodiment of all śaktī-s, She is known as Śaktī.

This is the reason for addressing Her as Sarvaśakti-mayī.🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 26

*Started on 26th sep 2020*💐💐💐💐

*லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்*

1. லகு
2. லலிதம்
3. லக்ஷணம்
4. லட்சியம்
5. லயம்
ravi said…
*5 .லயம்* :

லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன.

உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வது,

ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளையும் தருவதோடு, அம்பிகையோடு லயமாகிவிடும் (ஐக்கியமாகிவிடும்) மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது.

இதில் உள்ள அம்சங்கள் எத்தனை எத்தனை ?

அம்பிகைக்குரிய புஷ்பங்கள், நிவேதனங்கள், அம்பிகை உறையும் ஸ்ரீ நகரத்தின் விவரணை, தேவர்களைக் காத்திட்ட பாங்கு, தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வ நிலை,

சிவ, விஷ்ணு, அம்பிகை – மூவரும் ஒன்று தான் என்னும் விளக்கம்,

யோக சாஸ்திர நிலைகள், ஞானம் அருளும் ஞானாம்பிகையாக, வேண்டுதல் அனைத்தையும் வரமளிக்கும் காமேஸ்வரியாக,

புவனம் காக்கும் புவனேஸ்வரியாக அருள்பாலிக்கும் அம்பிகையைப் போற்றிச் சொல்லுகின்றது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.💐💐💐👌👌👌
Savitha said…
அருமை ஓம் நமசிவாய🌷🌷🌷🙏🏻
Sujatha said…
Beautiful narration 👏👏🙏🏼🙏🏼
S G S Ramani said…
மாரிமுத்தா பிள்ளை பற்றிய பதிவு விளக்கவுரையுடன் அழகு...அருமை..

🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
சிவபெருமானே போற்றி
ஹர ஓம் நமசிவாயா

குருவே நமசிவாயம் உயிரே நமசிவாயம்
அருவே நமசிவாயம் அகிலம் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
ravi said…
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
அன்னை உமைக்கு இடமாய் உடலில்
ஆலயம் தந்தாய் போற்றி
சிவ ஓம் நமசிவாயா
சொன்ன வண்ணமே
செய்யும் நாதனே
சோனாசலனே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
ஆதியும் நமசிவாயம் அந்தமும் நமசிவாயம்
ஜோதியும் நமசிவாயம் சுந்தரம் நமச்சிவாயம்
சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன்
ஒதி நாடும் நாதா போற்றி
சிவ ஓம் நமசிவாய
சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
சம்பவம் நமசிவாயம் சத்குரு நமசிவாயம்
ravi said…
அம்பிகை நமசிவாயம் ஆகமம் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
வேதலிங்கமே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
பாதை காட்டுவாய் போற்றி
ஹர ஓம் நமசிவாயா
கதிரும் நமசிவாயம் சுடரும் நமசிவாயம்
புதிரும் நமசிவாயம் புவனம் நமசிவாயம்
ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாய
ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
அடி அண்ணாமலை போற்றி
ஹர ஓம் நமசிவாயா
குளிரே நமசிவாயம் முகிலும் நமசிவாயம்
பனியும் நமசிவாயம் பருவம் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
------------------------------------------
ravi said…
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
கம்பதிலையான் குகனை கண்ணில்
படைத்த சிவனே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும்
நாகா பரணா போற்றி
ஹர ஓம் நமசிவாயா
திருவே நமசிவாயம் தெளிவே நமசிவாயம்
கருவே நமசிவாயம் கனிவே நமசிவாயம்
அருணை நகர சிகரம் விரிந்த
அக்னிலிங்கனே போற்றி
சிவ ஓம் நமசிவாய
கருணை வேண்டி காலடி பணிந்து
சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நமசிவாயா
பெண்ணும் நமசிவாயம் ஆணும் நமசிவாயம்
என்னம் நமசிவாயம் ஏகம் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
----------------------------------------
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே
சூல நாதனே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
ஒலியே நமசிவாயம் உணர்வே நமசிவாயம்
வெளியே நமசிவாயம் விசையே நமசிவாயம்
மோன வடிவாகி மோஹனம் காட்டும்
மூர்த்திலிங்கனே போற்றி
சிவ ஓம் நமசிவாய
ஞானம் வழங்கி நர்கதி அளீக்கும்
நந்தி வாகனா போற்றி
ஹர ஓம் நமசிவாயா
நாகம் நமசிவாயம் ரகசியம் நமசிவாயம்
யோகம் நமசிவாயம் யாகம் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
ravi said…
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்
அருணாச்சலனே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
நர்த்தன தாண்டவ நாடகம் ஆடும்
ராக நாதனே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
அதிர்வும் நமசிவாயம் அசைவும் நமசிவாயம்
நிலையும் நமசிவாயம் நிறைவும் நமசிவாயம்
ரமண முனிக்கு ரகசியம் சொன்ன
ராஜலிங்கனே போற்றி
சிவ ஓம் நமசிவாய
இமையோர் தலைவன் பதவியும் வழங்கும்
ஈசமகேஷா போற்றி
ஹர ஓம் நமசிவாயா
கோடை நமசிவாயம் கொண்டலும் நமசிவாயம்
வாடையும் நமசிவாயம் தென்றலும் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
----------------------------------------
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
பரணி தீபமாய தரணியில் ஒளிரும்
பரமேஷ்வரனே போற்றி
ravi said…
சிவ ஓம் நமசிவாயா
ஹரஹர என்றால் வரமழை பொழியும்
ஆதிலிங்கனே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
சித்தியும் நமசிவாயம் முக்தியும் நமசிவாயம்
பக்தியும் நமசிவாயம் சக்தியும் நமசிவாயம்
கார்த்திகை திருநாள் உற்சவம் காணும்
தீபச்சுடரே போற்றி
சிவ ஓம் நமசிவாய
தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
நிலவே நமச்சிவாயம் நிஜமே நமச்சிவாயம்
கலையே நமச்சிவாயம் நினைவே நமச்சிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
----------------------------------------
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும்
சோனாலச்சனே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
பொற்ச்சபைதன்னில் அற்புத நடனம்
புரியும் பரமே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
லிங்கம் நமசிவாயம் லீலை நமசிவாயம்
கங்கை நமசிவாயம் கருணை நமசிவாயம்
சோனை நதி தீரம் கோயில் கொண்ட
அருணாசலனே போற்றி
சிவ ஓம் நமசிவாய
வானவெளிதனை கோபுரம் ஆக்கி
மலையில் நிறைந்தாய் போற்றி
ஹர ஓம் நமசிவாயா
செல்வம் நமசிவாயம் சீரும் நமசிவாயம்
வில்வம் நமசிவாயம் வேஷம் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
ravi said…
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
ஆதிரை அழகா ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி
சிவ ஓம் நமசிவாயா
வேதியர் போற்றும் வென்சடை இறைவா
வேதப்பொருளே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
முதலும் நமசிவாயம் முடிவும் நமசிவாயம்
இடையும் நமசிவாயம் விடையும் நமசிவாயம்
நாகமுடியுடன் யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி
சிவ ஓம் நமசிவாய
வேத நடுவிலே திருநீர் அணியும்
அருனேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
அம்மையும் நமசிவாயம் அப்பனும் நமசிவாயம்
நண்மையும் நமசிவாயம் நாதனும் நமசிவாயம்
----------------------------------------
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
அடிமுடி இல்லா ஆனந்த வடிவே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
அம்மையப்பனாய் அகிலம் காக்கும்
அமுதேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
அதுவும் நமசிவாயம் இதுவும் நமசிவாயம்
எதுவும் நமசிவாயம் எதிலும் நமசிவாயம்
விடையாம் காளை வாகனம் ஏறி
விண்ணில் வருவாய் போற்றி
சிவ ஓம் நமசிவாய
வேண்டிய கணமே என்னிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி
ஹர ஓம் நமசிவாயா
சூலம் நமசிவாயம் சுகமே நமசிவாயம்
நீலம் நமசிவாயம் நித்தியம் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
ravi said…
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
பௌர்னமி நாளீல் பிறைநிலவணியும்
மகாதேவனே போற்றி
சிவ ஓம் நமசிவாயா
ஒஹவ்சகமாலாய் பிணிகள் தீர்க்கும்
அருணச்சலமே போற்றி
ஹர ஓம் நமசிவாயா
தீபம் நமசிவாயம் திருவருள் நமசிவாயம்
ரூபம் நமசிவாயம் ருத்ரம் நமசிவாயம்
பனிகைலாயம் தீ வடிவாகிய
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாய
பனிவடிவாகிய தென்னாடுடையாய்
திருவருளேசா போற்றி
ஹர ஓம் நமசிவாயா
எங்கும் நமசிவாயம் எல்லாம் நமசிவாயம்
எழிலும் நமசிவாயம் என்றும் நமசிவாயம்
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா,
நமசிவாயா நமசிவாயா ஓம் நமசிவாயா
ravi said…
இருளை விழுங்கும் சூரியனே, என்னை ஆட்கொண்டருள்வாய்!

திருவண்ணாமலையிலுள்ள விருபாக்ஷக்குகையில் இருந்தார் ரமணர். அடியவர்கள் பலர் அவரிடம் பக்திவழியை, நன்னெறிகளைக் கற்றுக்கொண்டு அண்ணாமலையானைத் துதித்தபடியிருந்தார்கள்.

இவர்கள் நாள்தோறும் பிட்சைகேட்டு ஊருக்குள் செல்வது வழக்கம். அப்போது அவர்கள் அனைவரும் ஒரு துதிப்பாடலைப் பாடிக்கொண்டு செல்ல விரும்பினார்கள், ‘எங்களுக்காக ஒரு பாடல் இயற்றித் தாருங்கள்’ என்று ரமணரைக் கேட்டார்கள்.

‘புதிய பாடலெல்லாம் எதற்காக? தேவாரமும் திருவாசகமும் பாடுங்கள்’ என்றார் ரமணர். இறைவன் புகழைச் சொல்லும் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும், ரமணர் சொல்லக் கேட்பதில் அடியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ஆகவே, அவர்கள் அவரைத் தொடர்ந்து கேட்டவண்ணமிருந்தார்கள், அவரும் மறுத்தவண்ணமிருந்தார்.

இந்நிலையில் ஒருநாள், ரமணர் இயல்பாகத் தனது மனத்திலிருந்த எண்ணங்களைத் துதிவடிவில் சொல்லத் தொடங்கினார், அடியவர் ஒருவர் அவற்றை எழுதிக்கொண்டார்.
அப்படி உருவானதுதான் ‘ஸ்ரீஅருணாசல அக்ஷர மணமாலை’ எனும் நூல்.

இறைவனுக்கும் அடியவருக்கும் இடையில் இருக்கிற உரிமையானதோர் உரையாடலை இந்நூலில் சிறப்பாகக் காணலாம். பக்தனின் இறைஞ்சுதலையும் எதிர்பார்ப்புகளையும் இறைவனின் கருணைநிலையையும் ரமணர் மேன்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ravi said…
1 –
அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணசலா! (அ)
ravi said…
அருணாசலம் - இது ஒரு மலை அல்ல -- சிவமே அமர்ந்திருக்கும் ஒரு இடம்
நினைத்த மாத்திரத்தில் முக்தி கிடைக்கும் ---

சிவந்து நெருப்பாக இருந்த ஒரு மலை தன் உக்கிரகத்தை குறைத்துக்கொண்டு கருணை மலையாக மாறியது ....

அதை மாற்றியவர் நம் ரமணர்

ஒருவர் ரமணரை தேடி திருவண்ணாமலைக்கு சென்றார் - அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சித்தர் போல் ஒருவர் அமர்ந்திருந்தார் -

அவரிடம் கேட்டார் --- ரமணர் எங்கே இருக்கிறார்? அந்த சித்தர் கேட்டார் -

" ஓ அந்த கொலைகாரனைத் தேடுகிறாயா?

அசந்துபோய் விட்டார் அந்த வழிப்போக்கர் -

உலகமே வணங்கும் ஒரு பெரிய பகவானை இவர் போய் கொலைகாரன் என்கிறாரே --- இவருக்கு என்ன பையித்தியமா? " என்று நினைத்தார் -

பிறகுதான் அவருக்கு விளங்கியது --

ரமணர், தான் என்று வரும் குணத்தை உடையவர்களின் மமதையை கொல்கிறார் -
அதனால் அந்த சித்தர் அவரை கொலைகாரன் என்று சொல்வதில் வியப்பு என்ன இருக்கிறது?

ரமணர் இந்த பெருமையை அருணாசலத்திற்கே தந்து விடுகிறார் தன் முதல் பாடலில்
உள்ளத்தில் ‘அருணாசலம்’ என உன்னை நினைத்தவர்கள் யாரானாலும்,
அவர்களுடைய அகத்தில் இருக்கும் கர்வத்தை வேரோடு அறுத்து விடுவாய் அருணாசலா! 🙏
ravi said…
2 –
அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா! (அ)
ravi said…
ரமணரின் தாயார் பெயர் அழகம்மை - தந்தையின் பெயர் சுந்தரம் --

தன் தந்தை தாயின் உயர்ந்த தாம்பத்தியத்தை அதைப்போல் ஒரு அன்னியோனத்தை ரமணர் வேறு எங்கும் பார்த்ததில்லை

---அருணாசலா என் தாய் தந்தையர் எப்படி ஒன்றாக இருவர் அல்ல ஒருவராக வாழ்ந்தாரோ அதைப்போல் என் மனமும் நீயும் அபின்னமாய் (ஒன்றாக ) இருப்போம் அருணாசலா 🙏
ravi said…
அழகு, சுந்தரம் என்ற இரு சொற்களும் வெவ்வேறாக இருந்தாலும், அவை குறிக்கும் பொருள் ஒன்றுதான்.

அதுபோல, அருணாசலா, நீயும் நானும் வெவ்வேறாகத் தோன்றினாலும், உண்மையில் ஒன்றே!

இதே கருத்தை வலியுறுத்தும் இன்னொரு பாடலும் உண்டு. அதில், ‘நீ வேறு, நான் வேறு என்ற வித்தியாசமே இல்லாதபடி என்னை அணைத்துக்கொள், வாழ்வில் பேரானந்தத்தைப் பெருக்கு’ என்று வேண்டுகிறார் ரமணர்:
ravi said…
3 –
அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
அமர்வித்து என்கொல் அருணாசலா! (அ)

ravi said…
பக்தரைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் இறைவன், அவர்களுடைய மனத்தினுள் நுழைகிறான்,

அங்கிருந்து அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுவந்து, தன் மனத்தில் வைத்துக்கொள்கிறான்.

இந்த அதிசயத்தை வியக்கும் பாடல்

இப்படிச் சொன்ன மறுகணம், அது நிரந்தரச் சிறையா அல்லது அதிலிருந்து தன்னை அவன் விடுவித்துவிடுவானா என்கிற எண்ணம் ரமணருக்கு வருகிறது,
‘நீ என்னை விட்டுவிட்டால், உலகம் உன்னைதான் பழிக்கும்’ என்கிறார்.
ravi said…
4-
ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா! (அ)
ravi said…
‘நீ என்னை விட்டுவிட்டால், உலகம் உன்னைதான் பழிக்கும்’ என்கிறார்:

அருணாசலா நீ தான் என்னை உன்னுடன் சேர்த்துக்கொண்டாய் -
சும்மா சிவனே என்று இருந்த என்னை சிறை பிடித்து உன் மனதில் கொண்டு போய் வைத்துவிட்டாய் -

சரி இந்த சிறைவாசம் எவ்வளவு நாட்களுக்கு?

என்னை யாரும் ஜாமீனில் எடுக்க வர மாட்டார்கள் -
அதனால் அவசரப்பட்டு என்னை உன் மன சிறையில் இருந்து விடுவித்து விடாதே -
அப்படி ஏதாவது நீ செய்து விட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் -

இந்த உலகமே உன்னை பழிக்கும் படி செய்துவிடுவேன்
அருணாசலா நான் பொல்லாதவன் என்று அந்த பொல்லாதவனுக்கே சவால் விடுகிறார் ரமணர்...
ravi said…
5 –
இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாசலா! (அ)

ravi said…
இறைவா, இப்படி ஒரு பக்தனை நீ கைவிட்டாய் என்ற பழியிலிருந்து தப்பித்துக்கொள், என்னை நிரந்தரமாக உன்னுடன் சேர்த்துக்கொள்’ என்று கோரும் ரமணர்,
இனிமேல் நீ என்னை விட்டாலும், நான் உன்னை விடுவதாக இல்லை’ என்கிறார்.

இவன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறானே என்று நினைக்காதே, எல்லா வற்றுக்கும் காரணம் நீதான், நான் உன்னை நினைக்குமாறு செய்தவன் நீதானே?

இதையேத் தான் மாணிக்க வாசகர் ... உன்னை சிக்கென (கெட்டியாக / உறுதியாக) பிடித்து கொண்டு விட்டேன் ... எனக்கு உன்னை விட்டால் யார் கதி? இனி என்னை விட்டு உன்னால் எங்கும் போக முடியாது ஈசனே என்கிறார் ...

ரமணர் போன்றவர்களின் பக்தியில் பூர்ண சரணாகதி இருந்தது .. உரிமை இருந்தது ... அதிகாரம் இருந்தது ... நானே நீ, நீயே நான் என்று ஆகி விடும் போது அங்கே பயமோ, பணிவோ தேவை இல்லை ... உயர்ந்த பக்தி ஒன்றே வேண்டும்.
ravi said…
ஸர்வாங்கே கனஸார-குங்கும-கன-
ஸ்ரீகந்த-பங்காங்கிதம்
கஸ்தூரீ-திலகஞ்ச பாலபலகே
கோரோசனாபத்ரகம் |
கண்டாதர்சன-மண்டலே நயனயோர்-
திவ்யாஞ்ஜனம் தேSஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருகநாபி-பங்க மமலம்
த்வத்-ப்ரீதயே கல்பதாம் ||
ஸர்வ-அங்கே கனஸார குங்கும-கன
ஸ்ரீகந்த- பங்க-அங்கதிதம்
கஸ்தூரீ திலகம் ச பால-பலகே
கோரோசநா பத்ரகம் |
கண்ட ஆதர்சன மண்டலே நயநயோ:
திவ்ய-அஞ்ஜநம் தேsஞ்சிதம்
கண்ட-அப்ஜே ம்ருகநாபி-பங்கம்- அமலம்
த்வத்-ப்ரீதயே கல்பதாம் || 7.
ravi said…
ஹேதேவி!. உனது திருமேனி முழுவதும் பூசுவதற்கு கெட்டியான குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கலந்த சந்தனக் கலவையும், பளபளப்பான பலகை போன்ற நெற்றியில் கஸ்தூரீ திலகமும், கண்ணாடி போன்று வளவளப்பும், பிரகாசமும் கொண்ட கன்னத்தில் கோரோசனைக் கோடும், கண்களில் திவ்யமான மையும், கழுத்து பாகத்தில் கஸ்தூரியுமான தொப்புள் விழுது ஆகியவற்றால் உனக்கு அலங்காரம் செய்கின்றோம், அது உனது மகிழ்ச்சியை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்.


கனஸார – கற்பூரம், குங்குமகன- குங்குமப்பூ, பாலபலகே- பலகை போன்ற நெற்றியில், கண்டாதர்சன மண்டலே- கண்ணாடி போன்ற கன்னப்பிரதேசத்தில், ம்ருகநாபி-பங்க – கஸ்தூரிக் குழம்பு.
ravi said…
இந்த எட்டாவது ஸ்லோகம் அம்பாளுக்கு மலர் மாலை சார்த்தி அலங்கரிப்பதை விளக்குகின்றது.
கல்ஹாரோத்பல-மல்லிகா-மருவகை:
ஸௌவர்ண-பங்கேருஹை:
ஜாதீ-சம்பக-மாலதீ-வகுலகைர்-
மந்தார-குந்தாதிபி: |
கேதக்யா கரவீரகைர்-பஹுவிதை:
க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம் ||
கல்ஹார-உத்பல மல்லிகா மருவகை:
ஸெளவர்ண பங்கேருஹை:
ஜாதீ சம்பக மாலதீ வகுலகை:
மந்தார குந்த ஆதிபி: |
கேதக்யா கரவீரகை: பஹுவிதை:
க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம் || 8.
ravi said…
ஹே தேவி! வரங்களை கொடுத்தருள்பவளே. செங்கழுநீர் மலர், கருங்குவளை, மல்லிகை, மருக்கொழுந்து, மஞ்சள் தாமரை, ஜாதிப்பூ, சண்பகம், மகிழம்பூ, தும்பைப்பூ, தாழம்பூ, அலரிப்பூ ஆகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள், சரங்கள் மனதளவில் ஸமர்பிக்கின்றேன். இவை உனக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்.
கல்ஹாரம் – செங்கழுநீர் மலர், உத்பலம்- குவளைப்பூ, மகுவக – மருக்கொழுந்து, வகுல- மகிழம்பூ, குந்த-தும்பைப்பூ, கேதகீ- தாழம்பூ, கரவீர- அலரிப்பூ, ஸ்ரஜ - மாலை
இந்த ஒன்பதாவது ஸ்லோகம் அம்பிகைக்கு தூபம் காண்பித்து வாசனை புகையூட்டி சுற்றுச்சூழலை நறுமணம் கமழச் செய்வதை விளக்குகின்றது.
ravi said…
இந்த ஒன்பதாவது ஸ்லோகம் அம்பிகைக்கு தூபம் காண்பித்து வாசனை புகையூட்டி சுற்றுச்சூழலை நறுமணம் கமழச் செய்வதை விளக்குகின்றது.
ஹந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை-
ரங்கை: ரனங்கோஜ்வலை:
யைர்- ப்ருங்காவலி - நீல குந்தல-பரைர்-
பத்னாஸி தஸ்யாசயம் I
தானீமானீ தவாம்ப கோமலதராண்-
யாமோதய லீலா க்ருஹாண்-
யாமோதாய தசாங்க-குக்குலு-க்ருதைர்-
தூபை: ரஹம் தூபயே ||
ஹந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை:
அங்கை: அனங்க- உஜ்ஜ்வலை:
யை: ப்ருங்க- ஆவலி நீல- குந்தல-பரை:
பத்னாஸி தஸ்ய- ஆசயம் I
தானீ- இமானீ தவ அம்ப! கோமலதராணி-
ஆமோத-லீலா க்ருஹாணி-
ஆமோதாய தசாங்க குக்குலு-க்ருதை:
தூபை: அஹம் தூபயே || 9.
ravi said…
ஹே அன்னையே. உனது மிக மிருதுவான வாசனை மிக்க கேலீக்ருஹங்களை தசாங்கம், குங்கிலியம், பசுநெய் முதலியவற்றால் புகைத்து மணம் கமழ வைக்கிறேன். முதலாவதாக, மன்மதனையடக்கிய பரமேச்வரனுக்கே காம விகாரத்தையுண்டு பண்ணும் சில உடற்பாகங்கள், இரண்டாவதாக பரமேச்வரனின் புத்தியை ஸ்தம்பிக்கச்செய்யும் நீலமான கேசம் - மொய்க்கும் வண்டுக்கூட்டமென விளங்குமவற்றையும் புகை போட்டு மணக்கவைக்கிறேன்.
ஆயசம் – உள்ளம், குக்குலு – குங்கிலியம்
ravi said…
இந்த பத்தாவது ஸ்லோகம் தீபம் ஏற்றி அன்னையின் ஸந்நிதானத்தை கண்டு வணங்குவதற்கு ஏதுவாக பிரகாசமாக்குவதை விளக்குகின்றது.
லக்ஷ்மீ- முஜ்ஜ்வலயாமி ரத்ன-நி்வஹோத்-
பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப- விலம்பிதைர்-மணிமய-
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை: I
சித்ரைர்- ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்
கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:
திவ்யைர் தீபகணைர்- தியா கிரிஸுதே
ஸந்துஷ்டயே கல்பதாம் II
லக்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை: I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
கவ்யை: க்ருதை: வர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II 10.
ravi said…
இரத்தின கற்கள் இழைத்த உனது திருக்கோவிலில் மாலை போல் தொங்குகின்றவையும், இரத்தினமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றனவையும், பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் என்னும் பலவித பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன். மலை மகளே அது உன்னை மகிழ்விக்கட்டும்.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 805*🥇🥇🥇

*US 797*

*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*

பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

*32 வது ஸ்தபகம்*👌👌👌

இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸
ravi said…
797

த்வக் ராஸனக் ராணாநா

மனுபூதீ ப்ராண சக்தி ஸாத்குர்வாண

கம் நார்பயதே போகம்
பகவதி தே ஸர்வ லோக பார்வதி வவநிதே
ravi said…
ஹேதேவி!.

உனது திருமேனி முழுவதும் பூசுவதற்கு கெட்டியான குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கலந்த சந்தனக் கலவையும், பளபளப்பான பலகை போன்ற நெற்றியில் கஸ்தூரீ திலகமும், கண்ணாடி போன்று வளவளப்பும், பிரகாசமும் கொண்ட கன்னத்தில் கோரோசனைக் கோடும்,

கண்களில் திவ்யமான மையும், கழுத்து பாகத்தில் கஸ்தூரியுமான தொப்புள் விழுது ஆகியவற்றால் உனக்கு அலங்காரம் செய்கின்றோம்,

அது உனது மகிழ்ச்சியை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்🌸🌸🌸
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 226*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
ravi said…
பாண்டித்யம் பரஸ்மேச்வரி ஸ்துதிவிதௌ னைவாச் ரயந்தே கிராம்

வைரிஞ்சான் யபி கும்ஃபனானி விகலத் கர்வாணி சர்வாணி தே

ஸ்தோதும் த்வாம் பரிஃபுல்ல நீல நலின ச்

யாமாக்ஷி காமாக்ஷி மாம்
வாசாலீகுருதே ததாபி

நிதராம் த்வத்பாத ஸே வாதர 🙏🙏🙏
ravi said…
மலர்ந்த நீலோத்பலம் போன்ற கரிய கண்களை உடைய எழிலரசியான தேவியே !

உன்னை தோத்திரம் செய்யும் விஷயத்தில் வாக்
விலாஸம் உள்ள பிரஹ்மாவின் சொல்லாற்றாலும் திறமையற்று செறுக்கிழக்கின்றன...

இருப்பினும் உன் திருவடிகளை துதிப்பதில் உள்ள ஆர்வம் என்னை வாயாடியாக்குகிறது 🌸🌸🌸

1/ 3
Savitha said…
அற்புதமான விளக்கம்
சிவராமன் 🙏🏻🙏🏻🌷🌷🌷🌷

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53