பச்சைப்புடவைக்காரி -சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 19 - 244

                                                 பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 19

(244) 👍👍👍💥💥💥



ஜாம்பவான் கவனமும் அனுமன் பக்கமே - இங்கே எல்லோரும் மனஉளைச்சல் கொண்டு அடுத்த வழிக்கு வழி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் அனுமனால் எப்படி பிரச்சனைக்குள் வராமல் தனித்து இருக்க முடிகிறது ? இதுவும் அவருக்கு இறைவன் கொடுத்த வரமாகத்தான் இருக்கவேண்டும். 

மெதுவாக தன்  கரங்களை அனுமனின்  தோள்களில் பதித்தார் - அவர் பதித்த விதத்தில் இருந்தே ஜாம்பவானின் எண்ண  ஓட்டங்களை புரிந்துகொண்டார் அனுமான் --- 

மெதுவாக மெல்லிய குரலில் கேட்கிறார் ஜாம்பவானிடம் --- ஐயனே என்னால் ஏதாவது காரியம் இங்கே செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா - உத்தரவு இடுங்கள் ராம நாமத்தால் செய்து முடிக்க முயற்சி செய்கிறேன் ..




ஜாம்பவானின் கண்களில் இருந்து  கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது - அதைப்பார்த்த அனுமனுக்கு வாலியின் மனைவி தாரையின் நினைவு வந்தது -

- தாரையை பார்க்கும் போதெல்லாம் அனுமனுக்கு தன் தாய் அஞ்சலையின் ஞாபகம் தான்  வரும் --- தாரை ஒருமுறை அனுமனிடம் -- நீ வாலிக்கு அமைச்சராக இருக்கக்கூடாதா - உன் பரிசம் பட்டாலே அவனுக்கு நல்ல புத்தி வந்துவிடுமே 

மேலும் வாலிக்கு உன் மீது எந்த கோபமும் இல்லை -- நீ இங்கு வந்து வாலியுடன் கொஞ்ச நாட்கள் இருந்தால் அண்ணனும் தம்பியும் சண்டைகளை மறந்து ஒற்றுமையாகி விடுவார்களே என்று கெஞ்சினாள் - 

அனுமன் பதில் சொன்னான் - தாயே உங்கள் வருத்தம் புரிகிறது -- நான் இப்பொழுது வந்து வாலியின் பக்கம் சேர்ந்தாலும் இதுவும் சுக்கிரவனின் சூழ்ச்சிகளில் ஒன்று என்று எண்ணி என்னையும் கொல்ல  வருவான் -- நான் இறப்பதற்காக வருத்தப்படவில்லை - ஆனால் நம்பிக்கைத்துரோகம் செய்து வாழ மாட்டேன் - இப்பொழுது உதவி , துணை பரிவு எல்லாமே சுக்ரீவனுக்கு மட்டுமே தேவை வாலிக்கு இல்லை .. தாரை ஒப்புக்கொண்டாள் ..



ஜாம்பவான் பேச ஆரம்பித்தார் - ஆஞ்சநேயா -- எல்லோரும் வாழ்வதா சாவதா என்பதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் --- 

இந்த கடலைத்தாண்டவேண்டும் - இலங்கை சேரவேண்டும் அங்கே சீதா பிராட்டியை தேடி கண்டு பிடிக்கவேண்டும் அவளை ராமனின் தூதன் என்று நம்ப வைக்க வேண்டும் நம்ப வைப்பதோடு இல்லாமல் ராமன் சீதையை பார்த்தேன் என்பதற்கு சீதையிடம் ஏதாவது சாட்சி வாங்கிக்கொண்டு வரவேண்டும் - இவ்வளவு நடப்பதற்குள் இங்கிருந்து போகுபவன் உயிருடன் இருக்கவேண்டும் . 

சொல்லுங்கள் ஜாம்பவான் அவர்களே நான் ஏதாவது இதில் செய்வேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ? 




ஜாம்பவான் :  நம்பிக்கை மட்டுமா?  எங்கள் எல்லோருடைய உயிர்களும் உன் கையில் தான் இருக்கிறது 

உன்னால்  முடியாதது ஒன்று இருக்கிறது என்றால் அது  பிராட்டியை பார்க்காமல் திரும்பி வருவதுதான் ..சங்கர சுவானா - சீதா பிராட்டி சிறைப்பட்டு அழுதுகொண்டிருக்கிறாள் .நாங்கள் சிறைப்படாமல் அழுது கொண்டிருக்கிறோம் - 

அவள் கண்ணீரும் கடலில் சேருகிறது எங்கள் கண்ணீரும் கடலில் சேருகிறது - ராமன் வராததால் சீதா பிராட்டிக்கும் ஆத்ம தியாக செய்துகொள்ளவேண்டும் என்று எண்ணம் வந்திருக்கலாம் எங்களுக்கும்  அதே எண்ணம் வந்திருக்கிறது 




சீதா பிராட்டியை இங்கிருந்து ஒருவர் தேடப்போகும் போது நம்மையும் தேடி சுக்ரீவன் ஆட்களை அனுப்பலாம் .

எல்லா வகையிலும் நாம் எல்லோருமே சீதா பிராட்டியின் நிலைமையில் தான் இருக்கிறோம் ..

நீ தான் இங்கிருந்து பறந்து லங்கை அடையவேண்டும் உன்னைப்போல் சாதிப்பவர் யாரும் பிறக்கவில்லை பிறக்கப்போவதும் இல்லை -- உன்னைப்போல் உத்தமன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை இனியும் வாழ்வான் என்ற நம்பிக்கையும் இல்லை - உன்னைப்போல இறை பக்தி இருப்பவனை நான் கண்டதில்லை இனியும் காணப்போவதும் இல்லை .. 

நீ வெற்றி அடைய வெறும் ராம நாமம் மட்டுமே போதாது - சீதா பிராட்டியின் கருணையும் அருளும் வேண்டும் - தாயாரின் கடாக்ஷம் மட்டுமே முழு வெற்றியையும் ஒருவனுக்குத் தேடித்தரும் 

அவளை மனமார வேண்டிக்கொண்டு இங்கிருந்து கிளம்பு சங்கர சுவானா - ஒரு தாயின் கண்ணீரை நீ துடைக்கப்போகிறாய் அதுவும் உலக மாதாவின் கண்ணீரை - யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? - 

ராமனாலும் தன் தாய்மார்கள் அழுவதை நிறுத்த முடியவில்லை -- உன்னால் அது முடிகிறது என்றால் அந்த தாயின் கடாக்ஷமே மூலக்காரணம் 



அம்மா நேரில் பார்ப்பதைப்போல் இருக்கிறது --- அனுமனின் திறமைகள் கடலை விட ஆழமானதாகவும் வானத்தை விட நீண்டும் இருக்கிறது 

புன்னகைத்தாள் பொன்  மேனியாள் -- பூவுலகம் பூ மழை பொழிந்தது 




ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ |  जन्म-मृत्यु-जरा-तप्त-जन-विश्रान्ति-दायिनी .    

இந்த உலகில் தோன்றியவர்கள்,  தோன்றியவைகள், எல்லாமே  பிறப்பு, வயோதிகம், முதுமை,  இறப்பு என்ற வழியில் தான் தப்ப முடியாமல் செல்லவேண்டும். 

மீண்டும் அதே.  அவர்களுக்கு ஆறுதல் தரும் ஒரே தெய்வம் அம்பாள் ஸ்ரீ  லலிதை தான்.  தாயல்லவா?  முக்தி ஒன்றே இந்த பந்தத்திலிருந்து விடுபடும் மார்க்கம்.  

ஸ்வர்கம் என்பது நிரந்தரவாசமல்ல . ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான்.  அப்புறம் விடுதியை காலி செய்துவிட்டு கீழே இறங்கவேண்டும். முக்தி என்பது  ஆத்மா  இறைவனோடு ஒன்று  சேர்வது. அதற்கு  பிறப்பு இறப்பு இல்லை.  அது தான் ப்ரம்மத்தோடு கலந்துவிட்டதே. அதற்கு தனியாக எந்த அடையாளமும் இல்லையே.




ஸர்வோபநிஷதுத்குஷ்டா, सर्वोपनिषदुद्गुष्टा    எல்லா உபநிஷதங்களும் போற்றுவது அம்பாளைத்  தானே.  அவள் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவள். சக்தி வாய்ந்தவள். அவள் சொல்லுக்கு மறுப்பு இல்லை.  ஞானத்தை தருபவை  உபநிஷதங்கள். அவற்றின் உருவம் அவள்.  ப்ரம்ம ஸ்வரூபம்.  அவளில்லையேல் சிவன் இல்லை. பக்தர்களை சிவனிடம் கொண்டு சேர்ப்பது சக்தி தான்.





உபநிஷதங்கள்  வேதங்களின் சாரம். அந்தம். முடிவு.  ப்ரம்ம ஞானத்தை அடைய உதவுவது.  உபநிஷதங்களுக்கு  ஞான காண்டம் என்று பெயர் உண்டு. பிரம்மத்தை அறிய, தெரிய, உணரச்  செய்வதால்  இந்த பெயர்.  சாந்தோக்ய உபநிஷத்  (I.i.10) “ ஞானமும், அறியாமையும் வெவ்வேறு முடிவை தருபவை. ஞானத்தை அறிவதன் மூலம், ஆச்சர்யன் மேல் பக்தி, நம்பிக்கை கொண்டு அதை உணர்பவன், தெளிபவன்,  வேதங்களை அறிபவன் பயன் அடைகிறான்'' என்கிறது.  ரிஷிகள் பலர் இப்படி எல்லாம் அற்புதமாக எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.  அஞ்ஞானம் என்ன செய்யும் என்று சொல்லவோ  எழுதவோ வேண்டாம். அனுபவிக்கிறோமே  தெரியாதா? போதாதா?

உபநிஷதங்கள் ப்ரம்மத்தோடு ஆன்மாவை இணைப்பவை என்கிறது ப்ரம்ம சூத்ரம்.  (III.iii.1),இப்படி  ஆன்மாவுக்கும்  ப்ரம்மத்துக்கும்  இணைப்பு பாலமாக விளங்குபவள் அம்பாள். 

                                                    =======================


Comments

Savitha said…
அருமை
அனுமன்.....தாரை உறையாடல்
அதை அனுமன் Flash back
..🌷🌷🙏🏻🙏🏻
ஜெய் ஸ்ரீராம்
மமாதா ஜய ஒம் லலிதாம்பிகையே🙏🏻🙏🏻🌷🌷🌷
S G S Ramani said…
ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான்..

.... கவிஞர் வாலி

இங்கு ஊக்குவித்தவரோ...
ஜாம்பவான்.

ஊக்குவிக்கப்பட்டவரோ ....லட்சிய வேந்தர் அனுமன்..

இக்கூட்டணியிடம் இருந்து வெற்றி ஒன்றே நிச்சயம்..

வார்த்தை சித்தரின் அருமையான வரிகள்...மனதை ஊக்குவிக்கும் சொற்தொடர்கள்...

ஊக்கம்...

🙏🙏🙏🙏🙏🙏🙏
Shivaji said…
Arumai🌹🌹🌹🙏
T.N Ketharam said…
நன்றாக கதைத்திருக்கிறீர்கள்!
T.N Ketharam said…
அனமனைப்பற்றி எழதிக்கொண்டே போகலாம். எங்கு முடிக்க வேண்டும் என்பதை அவர்தான் கூறி அருளவேண்டைம்!
T.N Ketharam said…
ஹனுமானுக்கு அவர் திறமை தெரியவில்லை!
ரவிக்கும் தன்திறமை புரியவில்லை!
ravi said…
*புன்னகை ராமாயணம் 79/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
தாதஸ்ய அஹம் வயஸ்ய: தவ மம ஹ்ருதயம் புத்ரகே மாமகீனே
யத்வத் தத்வத் நிவிஷ்டம் வஸ மம ஸவிதே ப்ராணதோபி ப்ரியம் தே
குர்யாம் வத்ஸ இதி க்ருத்ர க்ஷிதி பதி வசஸா ராம யத் தே முகாப்ஜே

ஜாதம் மந்த ஸ்மிதம் யத் மத் அவன நிபுணம் ராஜதே ஸாம்ப்ரதம் தத்

तातस्याहं वयस्यः तव मम हृदयं पुत्रके मामकीने
यद्वत् तद्वत् निविष्टं वस मम सविधे प्राणतोऽपि प्रियं ते।
कुर्यां वत्सेति गृध्रक्षितिपतिवचसा राम यत्ते मुखाब्जे
जातं मन्दस्मितं यत् मदवननिपुणं राजते सांप्रतं तत्॥

வெண் கொற்றக்குடை- வெண்பனி
பெருந்தன்மை- கடல்
தானம்- கற்பகமரம்
ravi said…
ராமர் , சீதை லக்ஷ்மணன் மூவரும் அகஸ்தியரை வணங்கி விட்டு பயணத்தை தொடர்கின்றனர் . அவர்கள் செல்லும் பாதையில் ஜடாயுவை சந்திக்கின்றனர் -

ஜடாயு பேசிய அன்பு வார்த்தைகளில் அகம் மகிழ்ந்து ராமன் பூத்த புன்னகை🙂🙂🙂
ravi said…
*தாதஸ்ய அஹம் வயஸ்ய: தவ மம ஹ்ருதயம் புத்ரகே மாமகீனே*💐💐💐

கழுகளுக்கு ராஜாவான ஜடாயுவின் கண்களில் மூவரும் வருவது தெரிந்தது .. கண்களில் இருந்து பொங்கி வந்த கண்ணீரை காணிக்கையாக ராமன் பாதங்களில் சேர்க்க துடித்துக்கொண்டிருந்தான்

ராமனும் தொலைவில் இருந்தே ஒரு பெரிய மலைபோல் இருந்த ஜடாயுவை பார்க்கிறான் -

ravi said…
ஜடாயு தசரதனின் உயிர் நண்பன் -

ராமனும் அச்சு தசரதனைப்போலவே இருந்ததால் ஜடாயு இப்படி கேட்கிறான் --

என்ன தசரதா சௌக்கியமா? எங்கே இவ்வளவு தூரம்? --

உனக்கு வயதே ஆகாதா அன்று பார்த்த மாதிரியே இருக்கின்றாயே? என்று வினவுகிறான்

அருகில் மூவரும் வந்தவுடன் ஜடாயுவிற்கு புரிகிறது வந்திருப்பவன் தசரதன் இல்லை என்று ..

ராமன் எடுத்துச் சொல்கிறான் ... பறவைகளுக்கு ராஜாவாக இருக்கும் ஜடாயு அவர்களே உங்களுக்கு வந்தனம் .

உங்களை சந்திதத்தில் என் தந்தை தசரதனையே பார்க்கிறேன் ..

இவள் என் மனைவி சீதை , இவன் என் தம்பி லக்ஷ்மணன் ..

தந்தை இறந்த விஷயம் தொடங்கி வனம் ஏன் வந்தோம் என்பது வரை ராமன் ஜடாயுவிற்கு விளக்கி சொல்கிறான் .💐💐💐
ravi said…
ஜடாயுவிற்கு மிகுந்த வருத்தம்

நெஞ்சைப்
பிடித்துக்கொண்டு சொல்கிறான்...

என்ன என் உற்ற ஆருயிர் நண்பன் தசரதன் இறந்து விட்டானா? 😱


ravi said…
*யத்வத் தத்வத் நிவிஷ்டம் வஸ மம ஸவிதே ப்ராணதோபி ப்ரியம் தே*

நான் இனி உயிர் வாழ வேண்டுமா ராமா ?

ராமா உனக்குத் தெரியாது அவன் இறப்பில் மூன்று பேர்கள் மட்டுமே இனிமேல் நிம்மதியாக இருப்பார்கள்

மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை

தன் தந்தையின் மரணத்தில் 3 பேர்கள் நிம்மதியாக இருப்பார்களா ?

யார் அவர்கள் ?

லக்ஷ்மணனுக்கு ஒரே கோபம் ..

நாண் ஏற்றத் துடித்தான் .. ராமன் அவனை சாந்தப்படுத்தி ஜடாயுவிடமே கேட்கிறார்

ஜடாயு அவர்களே யார் அந்த மூவர்கள் ? 🦅🦅🦅
ravi said…
*குர்யாம் வத்ஸ இதி க்ருத்ர க்ஷிதி பதி வசஸா ராம யத் தே முகாப்ஜே*

சொல்கிறேன் ராமா ... ஒன்று பனி மலை இன்னொன்று கடல் மூன்றாவது கற்பக விருக்ஷம் ..

புதிரை தொடரவில்லை ராமா ..

லக்ஷ்மணனின் கோபம் என்னையும் ஏதாவது செய்யும் முன்னே சொல்லி விடுகிறேன் 🏆
ravi said…
*1. பனி மலை* ....

தசரதனின் வெண் கொற்ற குடை ...

மிகவும் வெண்மை வாய்ந்தது

கொஞ்சமும் கறை யோ அழுக்கோ படாமல் அவன் ஆட்சி காலம் முடியும் வரை வெண்மை நிறம் மாறாமல் இருந்தது ...

அரசர்களின் ஆட்சி தர்மப்படி நடக்க வில்லையென்றால் அந்த வெண் கொற்றக் குடையில் அழுக்கு படிய ஆரம்பிக்குமாம் ...

ravi said…
முழுவதும் கண்ணங்கரேல் போல் ஆகிய குடைகளும் அந்த காலத்தில் இருந்தன

ஆனால் தசரதன் தர்ம வழியில் ஆட்சி செய்ததால் அந்த குடையில் நிறமும் மாறவில்லை , கறையும் படிய வில்லை ..

பனி மலை, தான் தசரதனின் வெண் கொற்றக்குடையைப்போல் வெண்மையாக இல்லை யே என்று பொறாமையும் வருத்தமும் கொண்டிருந்தாம் ..

இப்பொழுது தசரதன் உயிருடன் இல்லாததால் நிம்மதியாக ஆனந்தமாக இருக்கும்

தனக்கு மீறிய வெண்மை யாரிடமும் இல்லை என்று 👍👍👍
ravi said…
*2. கடல்* ...

தசரதனின் பெருந்தன்மை கடலினும் பெரிதாம் ...

அதனால் கடலுக்கு பொறாமையும் கோபமும் வருத்தமும் இருந்ததாம் ..

இப்பொழுது கடலும் அமைதியாய் இருக்கும் இனி தன்னை விட பெரியவர் என்று யாரையும் ஒப்பிட மாட்டார்கள் 👌👌👌
ravi said…
*3. கற்பக விருக்ஷம்*

கேட்டதை கொடுப்பது கற்பக விருக்ஷம் ..

ஆனால் தசரதனோ கேட்காமலேயே அள்ளி அள்ளித்தருவதில் பெயர் போனவன் ...

அந்த கண்ணன் கர்ணனை சந்தித்தான்

இந்த ராமன் அந்த கர்ணனை தசரதன் என்று அழைக்கிறான் ..

கற்பக விருக்ஷம் கொடுப்பதில் தசரதனுக்கு ஈடு கொடுப்பதில் தோற்றுப்போனது ..

இப்பொழுது அதுவும் நிம்மதியாக இருக்கும் 💐💐💐
ravi said…
ராமன் சீதை லக்ஷ்மணன் அசந்து போனார்கள்

அப்பாவை பற்றி ஒரு அந்நியன் அவருடைய நண்பன் என்று சொல்லிக்கொள்பவன் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று ..

பெருமையும் கர்வமும் ஒன்று சேர்ந்து ராமனின் ஒரு அழகிய புன்னகையாக வெளி வந்தது

ராமா தசரதன் இல்லை என்று வருந்தாதே ..

ravi said…
நானும் உன் தந்தைதான் இந்த வனத்தில் உங்களில் யாருக்காவது ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் நான் என் உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன்

இது சத்தியம் ராமா ... என்றான் ஜடாயு 🦅🦅🦅
ravi said…
*ஜாதம் மந்த ஸ்மிதம் யத் மத் அவன நிபுணம் ராஜதே ஸாம்ப்ரதம் தத்*

ராமரின் புன்னகை அதிகரித்தது ...

அப்பா இல்லையே என்ற என் அடிமன வருத்தம் இன்றுடன் என்னை விட்டு அகன்றது ...

இதோ எனக்கு இன்னொரு தசரதன் கிடைத்துவிட்டான் என்று சொல்லி ஜடாயுவை ஆலிங்கனம் செய்து கொண்டான் ராமன்

ராமா அதே பெருமிதப்புன்னகை இன்றும் எங்களுக்காக வடுவூரில் காண்பித்து கொண்டிருக்கிறாயோ ?
ravi said…
🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
ravi said…
ஆஹா அருமை
ஜடாயு சொன்ன
பனிமலை கடல்
கற்பகவிருஷம்....
தசரதனின் உயர்ந்த
குனங்கள்...வியக்க வைக்கிறது........
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
ravi said…
*Lalitha Trishati 291 - 300* 💐💐💐
ravi said…
*291. Hrīṁkāraśuktikāmuktāmaṇi ह्रींकारशुक्तिकामुक्तामणि*💐💐💐

She is compared to a pure pearl

*292. Hrīṁkārabodhitā ह्रींकारबोधिता*👌👌👌

She is made known or explained through hrīṁ (ह्रीं).

The nāma says that there is no difference between Her and hrīṁ and if one knows the significance of hrīṁ, it is equivalent to realizing Her.
ravi said…
*293. Hrīṁkāramayasauvarṇa-stambhavidrumaputrikā ह्रींकारमयसौवर्ण-स्तम्भविद्रुमपुत्रिका*💐💐💐
ravi said…
Sauvarṇa – consisting of gold or made of gold; stambha – pillar; vidruma – coral tree or coral; putrikā – daughter, an idol.

She is in the form of hrīṁ, who shines like a coral in a hall with gold pillars.

Brahman is Self-illuminating. She, in accordance with the general description of Her complexion, is in the form of coral, which is red in colour and is seated in the midst of a huge hall with gold pillars.

Hall with gold pillars refers to universe on the macrocosmic scale and the gross body in the microcosmic scale.

She is the Self of the universe and She is also the Self of a being.

She does not change, whether it is macrocosm or microcosm. It can also be explained that hall is the universe and gold pillars are the effects of māyā, always glittering and attracting.
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 61 🏆🏆🏆🥇🥇🥇

*Started on 26th sep 2020*💐💐💐💐

👌👌👌
ravi said…
*4வது திருநாமம்*🏆🏆🏆

*சிதக்னி-குண்ட-ஸம்பூதா*
ravi said…
தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி.

நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள்.

இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.

*சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா* –

அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள்,🔥🔥🔥
ravi said…
பண்டாசூரனின் அக்கிரமம் அட்டகாசம் தாங்க முடியவில்லை ...

காமனை எரித்த சாம்பலில் இருந்து வெளி வந்தவன் பண்டா சூரன் ...

காமனை ஈசன் மேல் ஏவி விட்ட பாவத்திற்கு முதல் பலி மன்மதன் இரண்டாவது பலி தேவர்கள் ...

நீங்கள் கேட்கலாம் சிவன் பார்வதி திருமணம் நடக்க வேண்டும் , குமரன் தோன்றி பத்மாசுரனை அழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தானே காமனை தக்ஷிணாமூர்த்தி யாக அமர்ந்திருந்த ஈசன் மீது அம்பு எய்த சொன்னார்கள் எல்லா தேவர்களும் ...

ஈசன் ஏன் எல்லோரிடமும் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறார் ??

அவிர்பாகம் ஈசனுக்கு சேரவேண்டிய பங்கை தர மறுத்தான் தக்ஷன்

அவன் ஈசனை அழைக்க வில்லை ..

எல்லோருக்கும் மஹா தேவனாய் இருக்கும் ஈசனுக்கு ஒரு அவமானம் என்றால் அவன் கீழ் இருக்கும் எல்லோருக்கும் நேர்ந்த அவமானம் அல்லவா ?

இதை புரிந்து கொள்ளாமல் எல்லோரும் தக்ஷன் அழைத்ததால் யாகத்தை புறங்கனிக்காமல் சென்றனர் ...

அந்த பாவம் தான் மன்மதனை அழித்தது பண்டாசூரனாக வடிவம் எடுத்தது ..

*சிவ நிந்தனை மிகவும் பாவமானது ... அம்பாளின் கடாக்ஷமும் நின்று போகும்* ..

*சிவ பூஜை செய்பவர்களுக்கு அவர்கள் எதுவுமே கேட்காமல் அள்ளி அள்ளி த் தருபவள் ஸ்ரீ லலிதா*💐💐💐

தொடரும்
ravi said…
வில்வத்தின் வாழ்வு தனை பார்த்தேன் வியந்து நின்று

வேழ முகத்தோனின் தம்பியின் மேல் படர்ந்தே விஸ்வரூபம் எடுத்து நின்றன ...

வேதம் குழலசைக்க தேவாரம் பின் தொடர வில்வம் கொஞ்சம் நடந்து வந்தது ...

இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்றே நமஸ்கரித்தேன் ...

நடந்த வில்வம் பிரசாதமாய் என் கையில் வந்து அமர்ந்தது 👍👍👍
ravi said…
குழந்தை பருவத்தில் கோமேதகம் ஆனாய்

குமரன் பருவத்தில் தந்தைக்கு உபதேசம் செய்த குமரனாய்

வயதான பருவத்தில் மீண்டும் குழந்தை ஆனாய் ...

கோபுரங்கள் குனிந்தே உன்னை தாலாட்டும் அதிசயம் கண்டோம் ...

காண கிடைக்குமோ இந்த அற்புதம் 🥇🥇🥇
ravi said…
மூன்றடி மண் கேட்டான் ஒருவன் ... மூன்று உலகம் வாங்கிக்கொண்டான்

ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் என்றான் ஒருவன் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டான்

பிட்டுக்கு மண் சுமந்தான் ஒருவன் ..

பிரம்படி வாங்கியே அவன் இன்றி அசையாது அணுவும் என்று புரிய வைத்தான்

சுமந்த மண்ணை தின்றான் ஒருவன் ..

உலகம் முழுதும் அவனுக்குள்ளே என்றே அறியவைத்தான் அரி நாமம் கொண்டவன்

சுற்றி வந்தால் கோடி சொர்க்கம் என்றே காண்பித்தான் ஒருவன் ..

பிருந்தாவனம் எங்கும் கொட்டிக்கொடுத்தான் பல கோடி புண்ணியங்களை ������
ravi said…
எங்கும் சாயி எதிலும் சாயி சொர்க்கமும் சாயி சுகமும் சாயி

துவண்டு போகும் இதயங்களை தூக்கி நிறுத்தும் சாயி ... வாழ்க்கை இல்லை என்று நினைப்போருக்கு வாழ்க்கையாய் வருபவன் சாயி

எல்லாம் முடிந்தது என்று நினைப்போருக்கு ஆரம்பம் இனி தான் என்றே வரும் சாயி ..

ஆனந்தம் குடியிருக்கும் அற்புத தேவன் நான் வணங்கும் சாயி 🥇🥇🥇
ravi said…
*"தோல் டாக்டரும் Soul டாக்டரும்!"*

(மூன்று சம்பவங்கள்-டாக்டர் எம். நடராஜன்)

(உலகம் போற்றும் மகாப்பெரியவாள் அற்பனான
என்னையும், (என் விலாசத்தையும்) நினைவில்வைத்துக் கொண்டிருக்கிறார்களே.. என்ன பாக்கியம் செய்திருக்கிறேனோ?--டாக்டர் எம். நடராஜன்)

ravi said…
பிரும்மஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்திரிகள் என்பவர் ரிக் வேத விற்பன்னர். மடத்துக்குப் பெருமை சேர்க்கும் ஒரு மாமேதை.

கொடுமையான தோல்நோய் அவருக்கு. என்னிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

பேட்டையிலிருந்த சமஸ்க்ருத பாடசாலையில்
பேராசிரியராகவும் வேலை பார்த்து வந்தார் அவர். சிலசமயம், உரிய காலத்தில் வந்து என்னிடம் மருந்து வாங்கிக்கொள்ள மறந்துவிடுவார். நான் அவருடைய மாணவர்கள் ஓரிருவரை அழைத்து மருந்து கொடுத்து அனுப்புவேன். அப்படி மருந்து கொடுக்கும் போது, ஒரு சமயம் மாணவர்களிடம், " நான் சாஸ்திரிகளை மட்டும் காப்பாற்றவில்லை. அவரிடம் இருக்கும் ரிக் வேதத்தையும் சேர்த்துக் காப்பாற்ற முயல்கிறேன்" என்று விளையாட்டாகச் சொன்னேன்.

ravi said…
இந்தச் சொற்கள், பெரியவாள் செவிகளுக்குப் போய்விட்டது.

அடுத்த தடவை தரிசனத்துக்குப் போனேன்.

"நீ சாஸ்திரிகளைக் காப்பாற்றி வருகிறாய் சந்தோஷம். ரிக் வேதத்தையும் காப்பாற்றுவதாகச் சொன்னாயாமே?"

"அவருக்கு மருந்தில் ஓர் அக்கறை வரவேண்டும்
என்பதற்காக அப்படிச் சொன்னேன்.."--டாக்டர்.

பெரியவாள் மெல்லப் புன்னகைத்தார்கள்.

"இவ்வளவு அக்கறையாக உன்னைப்போல
சொல்லக்கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.."
என்று ஆசியுடன் பாராட்டினார்கள்.
............................................................

ravi said…
*சம்பவம் -2*

கூட்டமில்லாத வேளை. நீண்ட நேரம் பேசுகிற வாய்ப்பு.

மரு, படை, Warts, Thistle Toe, Allergy, Eczema என்ற பல தோல் நோய்களைப் பற்றி விரிவாக, துருவித் துருவிக் கேட்டார்கள். மருந்துகள் பற்றியும் கேட்டார்கள். பிறகு அவர்களுக்கே உரித்தான முறையில், சில ஆன்மீக விளக்கங்களும், பழங்கால தமிழ் வைத்திய நிவாரணங்களையும் கூறினார்கள்.

சித்த மருத்துவ முறை பற்றிப் பெரியவாள் கூறிய நுட்பமான செய்திகள் என்னைப் பிரமிக்க வைத்தன.

.............................................................

ravi said…
*சம்பவம் -3*

கும்பகோணத்துப் பாட்டி.
தொழில் - ஹோட்டல்களில் மாவாட்டுவது.

வெண்குஷ்டம் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவிவிட்டது. "பார்க்கவே நன்னாயில்லே. நாளைலேர்ந்து
வேலைக்கு வரவேண்டாம்..." என்று சொல்லிவிட்டார்கள்.

வேலை பயிற்று. ஆனால், வேளை தவறாமல் பசி வருகிறதே.

சதாராவில் பெரியவாள் முகாம். பாட்டி அம்மாள் தெய்வ சந்நிதியில் முறையிட்டாள்.

ravi said…
இவ்வளவு தூரம் ஏன் வந்தே? சென்னை கீழ்ப்பாக்கம் லாண்டன்ஸ் சாலையில், நடராஜன் என்று தோல் டாக்டர் இருக்கார். அவரிடம் போய் சொல்லு. அவரே மருந்து கொடுத்து குணப்படுத்துவார்.-- பெரியவா.

பாட்டி அம்மாள் வந்து விபரம் சொன்னார்.

நான் நெகிழ்ந்தே போனேன். உலகம் போற்றும்
மகாப்பெரியவாள் அற்பனான என்னையும்,
(என் விலாசத்தையும்) நினைவில் வைத்துக்
கொண்டிருக்கிறார்கள். என்ன பாக்கியம்
செய்திருக்கிறேனோ?

🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
ravi said…
சிவானந்தலஹரி 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
ravi said…
சிவானந்தலஹரியில முதல் இரண்டு ஸ்லோகங்களைப் பார்த்தோம். இன்னிக்கு 3ஆவது 4ஆவது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

त्रयीवेद्यं हृद्यं त्रिपुरहरमाद्यं त्रिनयनं

जटाभारोदारं चलदुरगहारं मृगधरम् ।

महादेवं देवं मयि सदयभावं पशुपतिं

चिदालम्बं साम्बं शिवमतिविडम्बं हृदि भजे ॥ ३॥

த்ரயீவேத்³யம் ஹ்ருʼத்³யம் த்ரிபுரஹரமாத்³யம் த்ரிநயனம்

ஜடாபா⁴ரோதா³ரம் சலது³ரக³ஹாரம் ம்ருʼக³த⁴ரம் ।

மஹாதே³வம் தே³வம் மயி ஸத³யபா⁴வம் பசுபதிம்

சிதா³லம்ப³ம் ஸாம்ப³ம் சிவமதிவிட³ம்ப³ம் ஹ்ருʼதி³ ப⁴ஜே ॥ 3॥

ன்னு பரமேஸ்வரனுடைய ரூபத்தை தியானம் பண்றார்.
ravi said…
பெருமைகளையெல்லாம் நினைக்கிறார். த்ரயீவேத்³யம் – மூன்று வேதங்கள், ரிக் யஜூர்,ஸாம வேதம். இந்த மூன்று வேதங்களால் அறியப் படுபவர் பரமேஸ்வரன்னு சொல்றார்.

ravi said…
அதுக்கு ஒரு proofஏ இருக்கு. ரிக்,யஜூஸ், ஸாமம்னு மூன்று வேதங்கள். அதுக்கு மத்தியில இருக்கிறது யஜூர் வேதம், யஜூர் வேதத்துல ஏழு காண்டங்கள். அதுல மத்தியில இருக்கிறது 4 வது காண்டம். அதுல ருத்ர பிரச்னம்ங்கிறது மத்தியில இருக்கு.
ravi said…
அதுக்கு மத்தியில பரமேஸ்வரனுக்கு உகந்ததான பஞ்சாக்ஷரம் இருக்கு. அதுல சிவ நாமம் இருக்கு. அப்படி சிவபெருமான் வேதங்களால் அறியப்படுபவர் எங்கிறதுக்கு proof.
ravi said…
ஒரு ரத்தினத்தை பெட்டிக்குள்ள பெட்டிக்குள்ள பெட்டியில வைக்கற மாதிரி அந்த பரமேஸ்வரனுடைய சிவ நாமத்தை வேதத்துல வெச்சிருக்கான்னு மஹான்கள் சொல்லுவா. அந்த மாதிரி த்ரயி வேத்யம். வேதத்தால் அறியப்படும் வஸ்து எதுன்னா, அது பரமேஸ்வரன்தான்.
ravi said…
ஹ்ருத்யம்-நம் மனதிற்கு இனியவராக இருக்கிறார் பரமேஸ்வரன்னு சொல்றார். நாம பரமேஸ்வரனுடைய எந்த ரூபத்தை பார்த்தாலும் நடராஜாவை பார்த்தாலும் சரி, திருவண்ணாமலையில மலையை பார்த்தாலும் சரி, ஸ்வாமி சன்னதியில லிங்கத்தை பார்த்தாலும் சரி, மனசுக்கு ஒரு ஸந்தோஷம் ஏற்படறது.

ravi said…
இதுக்கு மேல பரமேஸ்வர வடிவமான அடியார்களை பார்த்தாலே மனசுக்கு ஸந்தோஷம் ஏற்படறது. ஒரு விபூதி இட்டுண்டு, ருத்ராக்ஷம் போட்டுண்டு ஒருத்தரை பார்த்தாலே நமக்கு மனதுக்கு இனியவர்களா ஆயிடறா இல்லையா. அது மாதிரி ஹ்ருத்யம்
ravi said…
திரிபுரம் மூன்று புரங்களை அழித்தவர்னு இதுக்கு அர்த்தம். இதுக்கு ஸ்தூல, சூக்ஷ்ம,காரண சரீரங்கள் ன்னு மூன்று சரீரங்கள் நமக்கு இருக்கு. இந்த மூன்றையும் அழித்தாலே அதுக்குள்ள இருக்கக் கூடிய ஞானம் நமக்கு புரிந்து விதேக முக்தி அடைய முடியும். அதைத் தவிர புராணக் கதை ஒண்ணு இருக்கு. தாரகாக்ஷன், கமலாக்ஷன்,வித்யுத்மாலின்னு மூன்று பேர் தங்கம், வெள்ளி, இரும்பு கோட்டைகள் பண்ணிண்டு ஆகாசத்துல பறக்கிறா.

ravi said…
பெரிசா நகரம் மாதிரி இருக்கு. அதுல ஸஞ்சாரம் பண்ணுவா. அதுல எங்கேயாவது ஒரு இடத்துல போயி இறங்குவா. அதுக்கு கிழே இருக்கிறது எல்லாம் அழிஞ்சு போயிடும். ரொம்ப ஹிம்சை பண்ணிண்டு இருந்தா. இந்த மூன்று கோட்டைகளும் ஒரு கோட்டுல ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தடவை வரும். அப்ப ஒரே அம்பால அடிச்சா தான் அவாளை வதம் பண்ண முடியும்ன உடனே எல்லாரும் பரமேஸ்வரனை வேண்டிக்கறா. எல்லா தேவர்களும் ஸஹாயம் பண்றதுக்கு வரா. ஒருத்தர் சக்ரமா வரார். ஒருத்தர் வில்லாகவும், ஒருத்தர் அம்பாகவும் வரார். கடைசியில பரமேஸ்வரன் அந்த மூன்று கோட்டைகளையும் சிரிச்சுண்டு ஒரு அம்பு போட்டு எரிச்சுடரார்னு புராண கதை. ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களை அழித்து விதேக முக்தி கொடுக்கிறார்னு ஒரு அர்த்தம். த்ரிபுரஹரம்
ravi said…
ஆத்யம் ஆதிசிவன். எல்லாருக்கும் முன்னாடி வந்தவர் பரமேஸ்வரன் தான். த்ரிநயனம்-மூன்று கண்களை கொண்டவர். சூரியன்,சந்திரன்,அக்னி மூன்றுமே அவரோட கண்கள்.

ஜடாபா⁴ரோதா³ரம் – ஜடாபரத்தினால ரொம்ப கம்பீரமா இருக்கார். இமயமலையினுடைய சிகரங்களை எல்லாம் பார்க்கும் போது அதுதான் பரமேஸ்வரனுடைய ஜடாபாரம் ன்னு தியானம் பண்ணனும். அதுலேயிருந்து தானே கங்கை பெருகி வரது. எவ்ளோ கம்பீரமா இருக்கு. கண் வெச்சா எடுக்க முடியாம இருக்கு அந்த காட்சிகள். அப்படி பரமேஸ்வரனுடைய ஜடாபாரம். ஜடாபாரத்தோட அவரை தியானம் பண்ணனும்

ravi said…
சலது³ரக³ஹாரம் – அசையும் பாம்புகளை மாலைகளாக அணிந்தவர். வாஸுகி, தக்ஷகன் எல்லாம் எடுத்து மாலையா போட்டுண்டு இருக்கார். அவ்ளோ பராக்ரமம். ம்ருகதரம் – கையில மான் வெச்சுண்டு இருக்கார். மான் என்கிறது துள்ளும் மனசுக்கு ஒரு அடையாளம். அதை அவர் அடக்கி வெச்சிருக்கார். மஹாதேவம் – எல்லா தெய்வங்களுக்கும் மேலான பெரிய கடவுள். தேவம்- இன்னொரு வாட்டி தேவம்ன்னு வறது. இங்க ஸ்வயம் பிரகாசமானவர். தானே ஒளி விடுபவர்னு அர்த்தம்.
ravi said…
மயி ஸதய பாவம் – என்னிடத்துல தயா பாவம் இருக்கு அவருக்கு. அதுதானே நமக்கு வேணும்.பரமேஸ்வரனுடய தாயை கிடைச்சுதுன்னா வேற என்ன வேணும்?சிவபெருமான் கிருபை வேணும். வேற என்ன வேணும்னு பாடினாரே. பசுபதிம் – எனக்கு மட்டும் தயை இல்லே. எல்லா ஜீவன்களுக்கும் அவர்தான் தலைவர். நான் பக்தி பண்றதுனால எனக்கு தயை காண்பிக்கறார்

ravi said…
சிதாலம்பம் – அறிவுக்கு உறைவிடம். மோக்ஷ சாதனமான ஞானத்தை கொடுப்பவர் பரமேஸ்வரன். ஸாம்பம் – அம்பாளோட கூடினவர். அம்பாளோட சேர்த்து த்யானம் பண்ணினாதான் நமக்கு அனுக்ரஹம் சீக்கிரம் கிடைக்கும். அம்மா தப்பு பண்ணினாலும் பொறுத்துண்டு ஏதாவது சிபாரிசு பண்ணுவா.
ravi said…
சிவம் அதிவிடம்பம் – சிவம்னா பரம மங்களமானவர்னு அர்த்தம். இவர் நாடகம், நாட்யம், ஹாஸ்யம், இது மாதிரி எல்லாம் விடம்பமா பண்ணி நம்மளை சந்தோஷப் படுத்தறார். ஹ்ருதி பஜே-என்னுடைய ஹ்ருதயத்தில் இந்த பரமேஸ்வரனை சிவம் பஜே நான் பூஜிக்கறேன்னு அழகான ஸ்லோகம்.
ravi said…
அடுத்த ஸ்லோகம்

सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा

न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।

हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं

चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥



ravi said…
ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ க்ஷுத்³ரப²லதா³

ந மன்யே ஸ்வப்னே வா தத³னுஸரணம் தத்க்ருʼதப²லம் ।

ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்

சிரம் யாசே சம்போ⁴ தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் ॥ 4॥

ravi said…
இந்த ஸ்லோகத்துல ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ – உலகத்துல ஆயிரக் கணக்கான தெய்வங்கள் இருக்கு. ஒவ்வொருத்தர் ஒண்ணு ஒண்ணு வழிபடறா. அந்த தெய்வங்கள் எல்லாம் என்ன கொடுக்கறதுன்னா
ravi said…
க்ஷுத்³ரப²லதா³ – சாதாரண பலன்களை கொடுக்கும். கீழான பலன்களை கொடுக்கும். வீடு வாங்கணும்னா இந்த ஸ்வாமியை வேண்டிக்கோ. பணம் வேணும்னா குபேரனை வேண்டிக்கோ. நவக்ரஹங்களை வேண்டிக்கோ. அவாளாம் ஓரளவு தான் பலன்களை கொடுக்க முடியும். பரமேஸ்வரன்தான் எல்லாருக்கும் மேலான தெய்வம்.
ravi said…
எவ்ளோ பெரியவர்னா ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம் – நாம எல்லாம் எங்கேயோ தள்ளி இருக்கோம். ஹரி: ன்னா விஷ்ணு, பிரம்மா இவாள்லாம் பரமேஸ்வரனுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கா.
ravi said…
ஆனா அவாளுக்கு கூட அசஸுலபம். கிடைத்தற்கரியதான ஒண்ணு இருக்கு. அது என்னன்னா, ‘தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம்’ – உன்னுடைய பாத தாமரைகளை வழிபடுவது என்ற அந்த பலன்.
ravi said…
அது கிடைச்சுடுத்துன்னா உலகத்துல இருக்கிற எல்லா விஷயங்களும் கிடைச்சுடும். முக்தியும் கிடைச்சுடும். அதனால நான் மத்த சாதாரண தெய்வங்களை எல்லாம் ந மன்யே ஸ்வப்னே வா – என் ஸ்வப்னத்துல கூட நான் அவாளை நினைக்க மாட்டேன் தத³னுஸரணம் – அவா பின்னாடி நான் போகமாட்டேன் தத்க்ருʼதப²லம் – அவா கொடுக்கிற பலன் எனக்கு வேண்டாம் சம்போ – சம்போன்னா ஞானத்தினுடைய பிறப்பிடம். சந்தோஷத்தின் பிறப்பிடமான அப்பேற்பட்ட அந்த பரமேஸ்வரன் தான் என் தெய்வம்.

ஹே பரமேஸ்வரா தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் – உன்னோட பாதத்தை வழிபடும் அந்த காரியத்தை சிரம் – உடனடியாக பாத பக்தியை உடனே எனக்கு கொடுன்னு கேட்கறார்.
ravi said…
இந்த இடத்துல ஏக பக்தியைத் தான் நாம முக்யமா புரிஞ்சுக்கணும். நஹிநிந்தா நியாயம்னு ஒண்ணு இருக்கு. எந்த வஸ்துவையும் நிந்தனை பண்றதுல அவாளுக்கு நோக்கம் இல்லை. மஹான்களுக்கு தான் வழிபட வந்த தன் இஷ்ட தெய்வத்தை உயர்த்தி பேசறதுதான் அவாளோட நோக்கம்.
ravi said…
அந்த மாதிரி பரமேஸ்வரனுடைய பெருமையை நினைக்கும்போது, ஆசார்யாளுக்கு எல்லாத்துக்கும் மேலான தெய்வம் இந்த பரமேஸ்வரன். இந்த பரமேஸ்வர பக்தியே வேணும்னு வேண்டிக்கறார்.
ravi said…
வேற தெய்வங்களை குறைச்சு பேசறதா அர்த்தம் எடுத்துக்க கூடாது. ஏகபக்திங்கிறது எல்லா தெய்வங்களுக்கும் மூல வஸ்து அந்த பரம்பொருள்தான். அது தெரிஞ்சதுனால தான் ஆதி சங்கரர் பரமேஸ்வரனை பாடும்போது இப்படி சொல்றார்.
ravi said…
அடுத்தது, சுப்ரமண்ய ஸ்வாமியை பாடற போது ‘குஹாத் தேவமன்யம் ந ஜானே ந ஜானே’ ன்னு சொல்றார். இப்படி அந்தந்த தெய்வங்களை பக்தி பண்ணும்போது அதுக்கு பின்னாடி இருக்கிற பரம்பொருளை உணர்ந்து அவாளால அப்படி பக்தி பண்ண முடியறது. அதுதான் உண்மையான பக்தி.
ravi said…
மத்த தெய்வங்களை வெறுத்தா அதுக்கு பேர் பக்தி கிடையாது. ஆனா ஏதாவது ஒரு தெய்வத்துக் கிட்ட நாம மனசை வைக்கணும். அந்த தெய்வத்தினுடைய சரித்ரத்தை, ரூபத்தை, நாமத்தை அதிகமா நாம பண்ணிண்டே போனோம்னா ‘ஏக பக்திர் விஷிஷ்யதே’ ன்னு கீதையில கூட கிருஷ்ண பரமாத்மா சொல்றார்.
ravi said…
ஸுலபமா ரொம்ப சீக்ரத்துல நமக்கு பலன் கிடைக்கும். ஒரு இடத்துல 50 அடி தோண்டினா ஜலம் கிடைக்கும். 50 இடத்துல ஒரு ஒரு அடியா தோண்டினா ஜலம் கிடைக்குமா? அந்த மாதிரி ஏக பக்தி பண்ணனும்.
ravi said…
நம்முடைய பூர்வ புண்யத்துனால பூர்வ வாசனையினால ஒவ்வொரு தெய்வத்தோட குணம் நமக்கு பிடிக்கும். ரொம்ப பாக்யசாலிகளுக்கு நல்ல குரு கிடைச்சா அந்த குருவை குணத்தை தியானம் பண்ணிண்டிருந்தாலே போறும்.
ravi said…
அந்த மாதிரி ஏதாவது ஒரு இடத்துல மனசை வெச்சா அந்த concentration, constancy யோட பஜனம்னு ஸ்வாமிகள் சொல்வார். அது பண்ணினா இவர் கேட்கற இந்த உத்தம பக்தி வந்துடும். அப்புறம் ஞான வைராக்யம் தானா வரும் என்கிறதுனால மஹான்கள் இந்த வழியை காண்பிக்கறா. அப்படி பரமேஸ்வரனுடைய பாதத்தில் ஏகபக்தி வேணும்னு வேண்டிப்போம்

ravi said…
பரமேவரனுடைய பாத பஜனத்தை வேண்டிப்போம். “ஆடும் பரிவேல் அணி சேவலென பாடும் பணியே அருள்வாய்” னு அருணகிரி கேட்டா மாதிரி பகவானோட பஜனம் பண்றதுக்கு பிரார்த்தனை பண்ணிக்கறார்.

அடுத்தது ஸ்ம்ருதௌ சாஸ்த்ரே ன்னு ஒரு ஸ்லோகம். அதை நாளைக்கு பார்ப்போம்.



நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
ravi said…
ஸ்ரீ லலிதாம்பாள் சோபனம் 13

தோள்களை கட்கதாரிணியும், புஜங்களை வஜ்ரதாரிணியும், கைகளை தண்டினியும், விரல்களை அம்பிகையும் காக்கவேண்டும்.

நகங்களை சூலேச்வரி ரக்ஷிக்க, கஷ்கங்களை அனலேஸ்வரி ரக்ஷிக்க, ஸ்தனங்களை மஹாதேவி ரக்ஷிக்க, மனதைச் சோகவிநாசினி ரக்ஷிக்கவேண்டும்.

இருதயத்தை ஸ்ரீலலிதையும், வயிற்றை சூலதாரிணியும், நாபியைக் காமினீ தேவியும், ரஹஸ்யஸ்தானத்தை குஹ்யேஸ்வரியும் காக்கவேண்டும். பூதநாதா லிங்கத்தையும் மஹிஷவாஹினி அபானத் துவாரத்தையும், இடுப்பில் பகவதியும், முழங்கால்களை விந்திய வாஸினியும் காக்கவேண்டும்.

தொடைகளை மஹாபலாதேவியும் முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில் நாரஸிம்ஹிதேவியும், பின்னங்கால்களில் மிதெளஜஸியும் ரக்ஷிக்கட்டும்.
ravi said…
தொடைகளை மஹாபலாதேவியும் முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில் நாரஸிம்ஹிதேவியும், பின்னங்கால்களில் மிதெளஜஸியும் ரக்ஷிக்கட்டும்.

கால்விரல்களை ஸ்ரீதரியும், பாதத்தின் கீழ் தலவாஸினியும், நகங்களை தம்ஷ்ட்ராகராலியும், கேசங்களை ஊர்த்வகேசினியும், மயிர்க்கால்களை கெளபேரியும், தோலை வாகீச்வரியும், இரத்தம், வீரியம், கொழுப்பு, மாம்ஸம், எலும்பு,மூளை இவற்றைப் பார்வதியும் காக்கவேண்டும்.

குடல்களைக் காலராத்திரியும், பித்ததாதுவை முகுடேஸ்வரியும், ஆதாரக் கமலங்களில் பத்மாவதியும், சுபதாதுவில் சூடாமணியும் ரக்ஷிக்கட்டும். நகங்களுக்குப் பிரகாசத்தை ஜ்வாலாமுகியும், எல்லா சந்திகளிலும் அபேத்யா தேவியும் பிரம்மாணி சுக்லத்தையும், நிழலை சத்ரேஸ்வரியும் ரக்ஷிக்கட்டும்.
ravi said…
தர்மசாரிணி நமது அஹங்காரத்தையும், மனதையும், புத்தியையும் காக்கவேண்டும், பிராணன், அபானன், வியானன், ஸமாநன், உதானன் போன்றவற்றையும் அவளே காப்பாள்.
ravi said…
புகழ், கீர்த்தி, அழகு இவற்றை சக்ரீணியும், இந்திராணி கோத்திரத்தையும், சண்டிகை பசுக்களையும் காக்கவேண்டும். மஹாலக்ஷ்மி தன் குழந்தைகளான நம்மை காக்கவேண்டும்.

ravi said…
பைரவி மனைவியையும், க்ஷேமங்கரீ வழியையும், விஜயா அனைத்துப் புறங்களிலும் காக்கவேண்டும். இங்ஙனம் தேவியின் ஸ்மரணமே நம்மைக் காக்கும் கவசமாக நினைத்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும் என்று தேவி மஹாத்மியம் கூறுகிறது.
ravi said…
இதைத் தவிரவும் தேவியின் இருப்பிடங்களாகவும், அவற்றில் குடிகொண்டிருக்கும் நாமாவளிகளும் விவரிக்கப் பட்டிருக்கிறது.
ravi said…
அவையாவன:
லக்ஷ்மி தேவிக்குக் கோலாபுரம் மஹாஸ்தானமாகவும்,
ரேணுகாதேவிக்கு மாத்ருபுரமும்,
துர்க்கைக்கு சப்தஸ்ருங்கம், துளஜாபுரம், இங்குலை, ஆகிய இடங்களும்,
ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிராமரி, ஸ்ரீரக்த தந்த்ரிகா, அன்னபூரணி ஆகியோரின் இருப்பிடமாக சர்வ சக்தி வாய்ந்ததும், மூலாதார க்ஷேத்திரங்களின் முதன்மையானதும் ஆன காஞ்சிபுரமும்,
ravi said…
அங்கேயே பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்ட ஏகாம்பரமும்,
யோகேஸ்வரி பிரதிஷ்டை செய்த தேஜோஸ்தானம்,
பீமாதேவி விந்த்யாசலத்திலும்,
விமலாதேவி, நீலாம்பிகை போன்றோர் திருவானைக்காவல், ஸ்ரீநகரம்
நேபாளத்தில் குஹ்யகாளியாகவும்,
ravi said…
எல்லாவற்றுக்கும் மேல் தஹராகாச க்ஷேத்திரமான சிதம்பரத்தில் சிவகாமியாகவும்,
வேதாரண்யத்திலும் சீனத்திலும் நீல சரஸ்வதியாகவும்,
வைத்தியநாதத்தில் வகலாவாகவும்,
ravi said…
மணித்வீபத்தில் புவனேஸ்வரியாகவும்
காமாக்யாவில் திரிபுர பைரவியாகவும்
புஷ்கரில் காயத்ரி தேவியாகவும்,
அமரேசத்தில் சண்டிகையாகவும்,
பிரபாச க்ஷேத்திரத்தில் புஷ்கரேக்ஷணியாகவும்,
நைமிசாரண்யத்தில் லிங்கதாரிணியாகவும்,
புருஹூதையில் புஷ்கராக்ஷியாகவும்,
ஆஷாடத்தில் ரதி தேவியாகவும்,
மைசூரில் சண்டமுண்டிகாவாகவும்,
பராபூதி, பூதியில் பரமேஸ்வரியின் தண்டினியாகவும்,
ravi said…
நகுலத்தில் நகுலேஸ்வரியாகவும்,
அரிச்சந்திராவில் சந்திரிகாவாகவும்,
ஸ்ரீபர்வதத்தில் சங்கரியாகவும்
திருவையாறில் திரிசூலியாகவும்,
ஆம்தாத்கேச்வரத்தில் குக்ஷுமாவாகவும்,
மகாகாளேச்வரத்தில் சங்கரியாகவும்
மத்திமத்தில் சர்வாணியாகவும்,
கேதாரத்தில் மார்க்கதாயினியாகவும்,
பைரவத்தில் பைரவியாகவும்,
கயையில் மங்களாவாகவும்,
குருக்ஷேத்திரத்தில் ஸ்தாணுப்ரியாவாகவும்,
நகுலத்தில் ஸ்வாயம்பவியாகவும்
ravi said…
கனகலத்தில் உக்ராதேவியாகவும்,
விமலேஸ்வரத்தில் விஸ்வேஸ்வரியாகவும்,
மஹாநந்தாவில் மஹாந்தகையாகவும்,
பீமக்ஷேத்திரத்தில் பீமேஸ்வரியாகவும்,
பவானியில் சங்கரியாகவும்.
அர்த்தகோடியில் ருத்ராணியாகவும்
ravi said…
காசியில் தன் விசால நயனங்களால் அருளாட்சி புரியும் விசாலாக்ஷியாகவும்,
மகாலயத்தில் மஹாபாகாவாயும்,
கோகர்ணத்தில் பத்ரகாளியாகவும்,
பத்ரகர்ணிகையில் பத்ரியாகவும்
உத்பலாக்ஷியில் ஸ்வர்ணாக்ஷியாகவும்,
ஸ்தாண்வீயில் ஸ்தாணுவாகவும்,
ravi said…
திருவாரூர் என்னும் மற்றொரு மூலாதார க்ஷேத்திரத்தில் கமலாம்பிகையாகவும்
சகலண்டகத்தில் பிரசண்டையாகவும்
குருண்டலையில் த்ரிசந்தியாதேவிகளாகவும்
மாகோடத்தில் மகுடேஸ்வரியாகவும்
ravi said…
மண்டலேசத்தில் கண்டகியாகவும்,
காலஞ்சரத்தில் காளிகாவாயும்,
சங்குகர்ணத்தில் த்வனீஸ்வரியாகவும்
ஸ்தூலகேஸ்வரத்தில் ஸ்தூலகேஸ்வரீயாகவும்,
அனைத்துக்கும் மேல் பக்தர்களின் இதயத்திலும், ஞாநிகளின் இதயத்திலும் நித்யவாசம் செய்யும் ஹ்ருல்லேகா என்னும் மந்திர தேவியாகவும் இருக்கின்றாள்.
ravi said…
தேவியின் இந்த நாமாவளிகளை முடிந்தவர்கள் தினமும் காலை, மாலை இருவேளைகளுமோ அல்லது ஒருவேளையோ சொல்லலாம். இவை தேவியின் சக்திபீடங்கள் எனச் சொல்லப் படுகின்றன.
ravi said…
இவற்றில் சில இருக்குமிடம் தெரியவில்லை. சிலவற்றின் இன்றைய பெயர்கள் மாறியுள்ளன. விரைவில் ஒரு சின்ன அட்டவணையுடன் தர முயல்கிறேன்.
"
ravi said…
இடது துடைமேல் சுவாமி வைத்துக்கொண்டம்மனை
வலது கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டு
விடைமேல் அழகரும் வளமுடன் தேவிக்கு
விபூதியிட்டு திருஷ்டி கழித்து
அஞ்சாதீர் எனப் பக்தர்க்கபயப் பிரதானஞ்செய்து
அம்பிகையுடன் தாம்பூலந்தரித்து
இந்தபடி ஈசன் சிந்தாமணிக்கிருஹத்தில்
இருந்தார் தேவியுடன் -சோபனம் சோபனம்
ravi said…
தேவிக்கு உயர நாற்பது முழத்திற்கு மேல்
தேசத்தில் ஒப்பில்லா மேல்கட்டிலில்
யமுனாகைஹாரமாகச் சுற்றியிருக்கின்றாள்
இச் ஜகத்தை மோஹிப்பிக்கும் மாயை!
தேவியுடைய ஸெளபாக்கியத்திற் கொப்பில்லை
தேவிதானறிய வேணுமகஸ்தியா
நாவாலும் மனதாலும் எண்ண முடியாது
ராஜேச்வரி மஹிமை-சோபனம், சோபனம்
யமுனாகைஹாரம் என்பது மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி.
ravi said…
குண்டலினி சக்தியை தேவி என்றும் உடலைப் பாம்புபோல் மூன்றரைச் சுற்றாய் வளைத்துக்கொண்டு அங்கே வீற்றிருப்பதாயும் கூறுவார்கள். இந்தச் சக்கர விபரங்களையும், ஸ்ரீவித்யா ஜபத்தின் மஹிமை பற்றியும் வரும் நாட்களில் காணலாம்.
ravi said…
இப்போ தேவி ஆறுசக்கரங்களிலும் விளங்குவது எப்படி என்று ஒரு எளிமையான சின்ன விளக்கம். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலிலேயே பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன என்பதைக் குறிக்கவே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம் , மணி பூரகம், அநாஹதம், விசுத்தி, போன்ற சக்கரங்களும் பஞ்சபூத தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. கடைசியான ஆக்ஞா சக்கரம் நம் புருவ மத்தியைக் குறிக்கும் இடம். ஜீவாத்மாவிடம் ஈசனின் ஆக்ஞாயானது அங்கே பிரகாசிக்கின்றது. அதனாலேயே ஆக்ஞாசக்கரம் என்பார்கள்.
ravi said…
லலிதாசமேத காமேசுவர மகாலிங்கமானது அங்கே நிர்குண, ஸகுண சக்தியால் அலங்கரிக்கப்படும். இங்கே நிர்குண, ஸகுண சக்தியாக அம்பிகையே குறிக்கப் படுகிறாள். இப்படி குறிக்கப்படும் அம்பிகை ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகங்களோடு பிரகாசிக்கும் வெண்ணிறத்தோடு ஹாகினி என்னும் பெயரோடு எழுந்தருளி இருக்கிறாள்.

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53