பச்சைப்புடவைக்காரி -குருடிமலை ,ஞானமலை ,பேரூர் 392 , 393 & 394 - 74, 75 & 76

            பச்சைப்புடவைக்காரி

                என் எண்ணங்கள்

பகையை வெல்லும்   74, 75 & 76   - 111, 112 & 113

திருப்புகழ் ஸ்தலங்கள் 

திருப்புகழ் 

 

 111.குருடிமலை 112.ஞானமலை 113. பேரூர்

392, 393, 394




அருணகிரிநாதர் அடுத்து தரிசித்துப்பாடிய 113வது தலம் குருடிமலை. இது கோயமுத்தூர் அருகே உள்ள துடியலூருக்கு சமீபத்தில் உள்ள  இடம். 

இங்கு பாடிய ஒரு பாடல் இருக்கிறது. முற்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் பொதுவாக வறுமையில் வாடினர். செல்வந்தர்களைப்  புகழ்ந்துபாடி பரிசில் பெற முனைந்தனர். இது தகாது என்று அருணகிரியார் பாடுகிறார்.

உலகோரைப் பாடுதல் தகாது

கருடன் மிசைவரு கரிய புயலென
  கமல மணியென        வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
  கருதி முதுமொழி       களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
  செவியில் நுழைவன      கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
  சிறிது முணர்வகை         யறியேனே

வருடை யினமது முருடு படுமகில்
  மரமு மருதமு                 மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
  வழிய வகைவகை       குதிபாயுங்

குருடி மலையுறை முருக குலவட
  குவடு தவிடெழ        மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
  குறைவி லிமையவர்        பெருமாளே.



கருடன் மேல்வரும்  கரியமேகம் போன்ற திருமால் நீ என்றும், பத்ம நிதி, சிந்தாமணி நீ என்றும் 

இரைந்துபாடி, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மிகவும் யோசித்து  பழைய  செஞ்சொற்களைத் தேடி,

அவற்றைத் திருடியும் ஓரளவு திரித்தும் தம் பாடலில் அமைத்து, அறிவில்லாதவர்களுடைய செவியில் புகும்படிப் பாடல்களைப் பாடித்,
திரிகின்ற சில புலவர்கள் கூறும் வழியை நான் அறிந்திலேன்.

மலையாடுகளின் கூட்டமும், கரடுமுரடான அகிலும் மருத மரமும் அடிபெயர்ந்து சாயும்படி,
'மதுரம்' என்னும் ஆறு பெருகி இருகரைகளும் வழிய பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற  குருடி மலையி,ல் அமர்ந்த முருகனே ! 

சிறந்த மலையான க்ரௌஞ்சம் தவிடுபொடியாகித்   தூளெழ  மயிலில் ஏறும் குமரனே ! குருபரனே ! அஞ்ஞான இருளை விலக்கும் ஞான சூர்யனே! குறைவிலாத தேவர் பெருமாளே !

உலகத்தவரைப் பாடிப்பிழைப்பதை நான் அறியவில்லை.

இந்த நதியை மருத நதி என்றும் சொல்கிறார்கள்.
இதே கருத்தில் வேறு சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.



114. ஞானமலை

அடுத்த தலம் ஞானமலை. இது எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை.

தணிகைமணியவர்கள் இதைக்குறிப்பிடவில்லை. இது ஷோளிங்கருக்கு அருகில் இருக்கிறது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள். 

ஆனால் இது சரியெனத்  தோன்றவில்லை.ஏனெனில் அருணகிரிநாதர் இப்போது  பார்த்துவரும் தலங்கள் கொங்கு நாட்டில் இருக்கின்றன.

இங்கு பாடிய இரண்டு பாடல்கள் இருக்கின்றன.

பொது மகளிர் உறவு கூடாது

வேத முனிவோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூசல்         எனஏகி
வீறசுரர் பாறி  வீழ அலையேழு
வேலை அளறாக விடும்      வேலா
நாதரிடமேவு  மாது சிவகாமி
நாரி அபிராமி      அருள்பாலா
நாரணசுவாமி ஈனுமகளோடு
ஞானமலைமேவு    பெருமாளே !
ஆக தாடியிடுவோர்கள் உறவாமோ 

எளிய பாடல். இதில் முதல் இரண்டு அடிகளில் பண்டைக்காலப் போரில் பின்பற்றப்பட்ட வழக்கம் ஒன்றைச் சொல்கிறார். போர் தொடங்கும் போது,  அந்த ஊரில் இருந்த அந்தணர், பெண்கள், நோயாளிகள், பசுக்கள்  ஆகியவை  துன்பம் அடையாதவாறு அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச்சொல்லி பறை அறிவிப்பார்கள். இச் செய்தியை புற நானூறு  9ம்பாடலும் தெரிவிக்கிறது. 

ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்.

அசுரர்களுடன் நடந்த போரில் முருகனும் இப்படிச் செய்தான் எனச் சொல்கிறார்.





அடுத்த பாடல் திருவடி தீக்ஷை பற்றியது.

மனையவள் நகைக்க வூரி ல் அனைவரு நகைக்க லோக
  மகளிரு நகைக்க தாதை        தமரோடும்
மனமது சலிப்ப நாய ன் உளமது சலிப்ப யாரும்
  வசைமொழி பிதற்றி நாளும்         அடியேனை
அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின்
  அகமதை யெடுத்த சேமம் இதுவோவென்று
அடியனு நினைத்து நாளும்  உடலுயிர் விடுத்த போதும்
  அணுகிமுன் அளித்த பாதம்     அருள்வாயே


தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
  தமருகம் மறைக்கு ழாமும்   அலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்கள் இறக்கு மாறு
  சமரிடை விடுத்த சோதி           முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
  எழுதரிய பச்சை மேனி         யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
  இலகிய சசிப்பெண் மேவு         பெருமாளே.


இதுவும் எளிய பாடல். இது அருணகிரிநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது எனச் சொல்கின்றனர்.  மக்களின் வசைமொழியும் உறவினரின் பரிகாசமும் தாங்காமல் உயிர்விடத் துணிந்தபோது முருகன்  பாத தரிசனம் தந்து ஆட்கொண்டதை  (முன்  அளித்த பாதம் ) விவரிக்கிறார். மீண்டும் அதை வேண்டுகிறார்.



115.பேரூர்.

இவ்வாறு அருணகிரியார்  கொங்கு நாட்டில் காடு, மலைகளைத்தாண்டி பேரூரை அடைந்தார். இது இவர் தரிசித்துப் பாடிய 115வது தலம். இது கோயமுத்தூருக்கு அருகில் உள்ளது. புராணச் சிறப்பும் சரித்திரச் சிறப்பும் உள்ள தலம். இதன் புராணப்பெயர் பிப்பலாரண்யம். காமதேனுபுரி, ஆதிபுரி, பட்டிபுரம், தக்ஷிண கைலாசம், தவச்சித்திபுரம்  என்றெல்லாம்  பெயர்கள் இருக்கின்றன. ஸ்தல புராணப்படி இங்கு திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் சிவபெருமான நடன தரிசனம் அளித்தார். அதனால் இது மேலைச் சிதம்பரம் எனப்படுகிறது.

இங்குள்ள பட்டீஶ்வரர் கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது.
ஸ்வாமிபெயர் பட்டீஶ்வரர், அம்பாள் பச்சை நாயகி.
 இங்கு இரு பாடல்கள் இருக்கின்றன.








தீராப் பிணிதீர ஜீவாத்தும     ஞான
ஊராட்சியதான   ஓர்வாக்    கருள்வாயே
பாரோர்க்கிறைசேயே பாலாக்கிரி ராசே
பேராற் பெரியோனே  பேரூர்ப்பெருமாளே 

முடிவில்லாது தொடர்ந்துவரும் பிறவிப்பிணி  ஆத்மஞானத்தால்தான் அழியும். இதை முருகனிடம் ஒப்பற்ற உபதேசமாக அருணகிரிநாதர்
வேண்டுகிறார்.


 கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள்  நிறைந்த ஒரு கல் தூண். பழைய படம்.



மைச்ச ரோருக நச்சு வாள்விழி
   மானா ரோடே நானார் நீயா         ரெனுமாறு

வைத்த போதக சித்த யோகியர்
   வாணாள் கோணாள் வீணாள் காணா  ரதுபோலே


நிச்ச மாகவு மிச்சை யானவை
   நேரே தீரா யூரே பேரே         பிறவேயென்


நிட்க ராதிகண் முற்பு காதினி
   நீயே தாயாய் நாயேன் மாயா        தருள்வாயே



மிச்ச ரோருக வச்ர பாணியன்
   வேதா வாழ்வே நாதா தீதா          வயலூரா

வெற்பை யூடுரு வப்ப டாவரு
   வேலா சீலா பாலா காலா             யுதமாளி

பச்சை மாமயில் மெச்ச வேறிய
   பாகா சூரா வாகா போகா        தெனும்வீரா

பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
  பாரூ ராசூழ் பேரூ ராள்வார்        பெருமாளே.






மை பூசி யுள்ளதும் தாமரை, விஷம், வாள்  போன்றதுமான கண்களையுடைய பெண்களுடன்,

நான் யார், நீ யார் எனச் சிறிதும் மயங்காதவராகிய மன நிலையில் உள்ள   ஞானத்துடன் கூடிய சித்தர்களும் யோகிகளும்,
தமது வாழ்நாளாலும் கிரஹங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போவதைக் காணமாட்டார்.
அது போல (மண், பெண், பொன் ஆகிய ) மூவாசைகளும் உறுதியாக முடிவுபெறுவதில்லை.

அதனால் எனக்குச் சொந்த ஊர் போல , பேர் போலஇனியவனே,, எனக்கு  இனிய இன்னும்  பிற பொருட்கள் ஆனவனே !




என்னை நிச்சயமாகப் பற்றும் மூன்றாகிய எவையும்  [மூவாசைகள், முக்குணங்கள். மும்மலங்கள்,  (பொய் களவு கொலை  என்னும்) முக்குற்றங்கள், (ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி  தெய்விகம் என்னும் ) முத்தாபங்கள்  போன்றவை] என்னைத் தாக்காமல், நீயே இனி தாய் போலிருந்து நான்  (வீணில்) இறந்து போகாமல்  அருள்புரிவாயாக.

தாமரை போன்ற கண்கள் உடல்முழுதும் கொண்டவனும் வஜ்ராயுதன் தாங்கியவனுமான  இந்த்ரனும் ப்ரம்மாவும் போற்றும் செல்வமே ! நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே ! வயலூரானே !

க்ரௌஞ்ச மலையைத் துளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே ! நற்குணங்கள் நிறைந்தவனே!, பாலனே ! காலை ஆயுதமாகக் கொண்ட சேவலை கொடியாக உடையவனே !
அழகிய பச்சை மயில்மீது தேவரும் மெச்சும்படி ஏறிய பாகனே !




அடேய்  சூரனே ! ஆஹா, விலகிப் போகாதே என்று கூறி ( போருக்கு அழைத்த ) வீரனே ! 

பட்டி என்ற முனிவராக வந்த ப்ரம்மனுக்கு கொடுகொட்டி என்னும் நடனத்தை ஆடி அருள்செய்தவரும், பூமியில் சிறந்த தலமும் காமதேனுவாக  வந்த திருமால் வலம் செய்த தலமும் ஆகிய பேரூரை  ஆண்டு அருள்பவராகிய சிவபெருமானுக்குக் குருவாக வந்த  பெருமாளே ! 

நான் வீணே இறந்து போகாமல்  அருள்வாயாக.

மிக  அருமையான பாடல்.. 

பிறந்தவர்கள் எல்லாம் இறப்பது நியதி. வீணில் இறப்பது என்பது என்ன? தெய்வத்தை உணராமல் மரிப்பது வீணில் இறப்பதாகும். 

கடவுளை உணர்வதுதான் வாழ்வின் பயன். இதை அடையாமல்  மரிப்பது  விணில் மரிப்பதாகும். இவ்வாறு தனக்கு நேராமல் இருக்க முருகன் அருளை வேண்டுகிறார். ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய பாடல்.

இந்தப் பாடலில்  திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் நடன தரிசனம் அருளிய  ஸ்தலபுராணச் செய்தியைச் சொல்கிறார்.




அம்மா ... அற்புதம் ஆனந்தம் இன்பம் ஈகை உண்மை ஊற்றும் சுனை நீர் என் பால் ஏன் இந்த பரிவு தாயே ஐயம் தெளிவு செய்தே தினம் தினம் முருகன் அருள் புரிகின்றாய் .. ஒன்று இரண்டு அல்ல பதிவுகள் ஓராயிரம் தொடும் நாட்கள் தூரமில்லை . நான் ஔவையானாலும் உன் பொன் மொழிக்கு காத்திருப்பேன் தாயே ... 

சிரித்தாள் சின்ன சேலைக்காரி ... சிதறி தெளித்தன முத்துக்கள் மாணிக்கங்கள் 




அம்மா ... தாங்கள் சொல்ல வில்லை என்றால் இந்த ஸ்தலங்கள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும் ... 

அருணாகிரியின் மன உறுதியும் சொல்லாற்றாலும் , பக்தியும் எங்களுக்கும் முருகன் வரமாக தரவேண்டும் தாயே ... 

ரவி இவைகள் கேட்டுப்பெறுவது அல்ல ... நீங்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும் .. 

நிறைய படிக்க வேண்டும் ... முடியவில்லையா பிறர் போடும் பதிவுகளையாவது மனமார படிக்க வேண்டும் ...

சுலபமான வழி வரம் கேட்பது ... 

அன்னை சொன்ன உண்மை சுரீர் என்று உரைத்தது ...  படிப்பதும் இல்லை பிறர் போடும் பதிவுகளை படிக்க நேரம் ஒதுக்குவதும் இல்லை ... 

அருணகிரி எங்கே?  நாம் எங்கே ? 😢😢



*692*
 *ஸாம்ராஜ்யதாயினீ*  -  

பக்தர்களை சாம்ராஜ்ய அதிபதிகளாக்குபவள் என்று சொல்லும்போது ஸ்ரீ லலிதாம்பாளின்  தாராள மனசு,  காருண்யம் எல்லாம் எவ்வளவு அழகாக  வெளிப்படுகிறது. 

ராஜசூய யாகம் புரிந்தவன் தான் சாம்ராட்.  சாம்ராஜ்ய அதிபதி.
 
ராஜாக்களையெல்லாம் தலைவன்.   

தைத்ரிய உபநிஷத்   (I.vi.2) ஆப்னோதி  ஸ்வாராஜ்யம் என்று சொல்லும்போது, நமக்குள் உறையும் பிரம்மத்தை அறிந்து கொள்ளும்  ஆத்ம  ஞானிகளாகிறோம்.  

இதற்கும் மிஞ்சிய  சாம்ராஜ்ய அதிபதி பட்டம் உண்டா?👌👌👌




                 ≠========👍👍👌👌≠==========

Comments

Ajith ranganekar said…
Dear Ravi, my thanks to you for carrying out such onerous responsibilities effectively. Enjoy life post retirement. There is a lot to life beyond work. Keep yourself intellectually stimulated, though. With the new covid wave, I have again stopped going out. I hope you are based in Hyderabad and we can meet later too. Best wishes for your next innings.
Vijayalakshmi iyer said…
Oh .. my best wishes for you in your second innings.... stay safe and March on ... Regards Mrs iyer
SKJ said…
Dear Ravi

It is impossible to think of LnT Metro without you .

It has been a difficult project , yet you were always positive and smiling !

Wish you all the best for your next phase of life .

May God grant you good health , happiness and long life !

Shrikant Joshi
Pras said…
Ravi, you have done yeoman service to the project and your financial engineering has has helped the project go on track. You must find something to do. You have a lot left in you. Where do you plan to settle? Please give me your coordinates and keep in touch.
God bless!
Pras
NDSC said…
Really miss you sir , and LTMRHL will be missing senior person and guider like you who had closed financials within stipulated time lines for such Mega PPT project.

Regards
NvsR said…
Will be missing you. Wish you a happy, healthy, active & peaceful retired life. Where are you settling down?
Anil said…
Dear sir, I'm really happy for you. I believe retirement is not the end of life. This is the time that one should look back and try to fill the gaps that are left behind, be it learning a new musical instrument or visiting northern lights.... I have been asking my dad to do the same. Hope he will listen to me this year.

And looking back thru our relationship, I really cherished the moments we shared. I must say one thing that you are a ruthless negotiator (poor me 😔).

Wishing you all the best for your future endeavors, I'm sure you must have planned already to embark on some.... I'm only a call away from you for any assistance that I can.... Pls excuse me for the delay in replying.... Wishing you that Live, Love and Laughter be with you.... 😃
ravi said…
பரமசிவன் பார்வதிக்கு பாதி உடலை கொடுத்திருக்க திருமால் ஏன் மகாலட்சுமியை மார்பிலே வைத்துள்ளார் என்பதற்கு
காரணம் தெரியுமா?

பரமசிவன் பார்வதிக்குப் பாதி உடலைத் தந்ததோடு நில்லாமல் தானும் *அர்த்தநாரீஸ்வரர்* கோலத்தில் காட்சி அளிக்கிறார்

ravi said…
ஆனால் பகவான் மகாவிஷ்ணு மட்டும் ஏன் மகா லட்சுமியை மார்பில் வைத்து கொண்டதோடு அல்லாமல் *பூமாலையால்* அல்லது *மேலாடையால்* *மூடிக்கொள்கிறார்*

*இதில்* ஒரு நல்ல தத்துவம் அடங்கியுள்ளது

சிவனின் மனைவி பெயரில் உள்ளவள் பார்வதி அதாவது சக்தி

எளியவனோ வறியவனோ பலவானோ ஆள்பவனோ ஆண்டவனோ *யாரானாலும்* தன் பலத்தை (சக்தியை) வெளியே அவசியம் காட்ட வேண்டும்

அது அவனுக்கு ஒருவித *பாதுகாப்பை* தரும்

ravi said…
மகாவிஷ்ணுவின் மனைவி பெயர் ஶ்ரீதேவி அதாவது மகாலெக்ஷ்மி

*அவள்* ஶ்ரீ அதாவது *செல்வம்*

பலத்தை வெளியே நன்கு காட்டலாம்

ஆனால் ஒருவன் எவ்வளவு பலவானானலும்
*செல்வத்தை* பத்திரமாகப் பூட்டியே *வைக்கவேண்டும்*

ravi said…
வெளியே அதிகம் தெரியும்படி காட்டிக்கொள்ள கூடாது

*செல்வத்தை* பகட்டாக *காட்டினால்* ஆபத்துதான்

எனவே தான் சிவன் வெளியில் தெரியும்படி பார்வதியாகிய சக்தியை தனது இடபாகத்திலும்

பகவான் விஷ்ணு ஶ்ரீதேவி என்ற மகாலட்சுமியை தன் மார்பில் (மறைவாக) வைத்துள்ளார்கள்.
ravi said…
திருப்பூந்துருத்தியில் அமர்ந்த செஞ்சடையானாகிய பொய்யிலியைக் கண்டு, அவன் திருவடிக்கீழ் இருப்போம் என்று இருந்து, பேரின்பம் நுகர்ந்து, திருத்தொண்டு புரிந்து, தம்பிரானார் அருள் பெற்றுத் திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று செய்து பல்வகைத் தாண்டகமும் தனித் திருத்தாண்டகமும் சிவதலங்களின் அடைவு திருத்தாண்டகமும் பிறவும் பாடிய பின்னர், நம்மனோர் செல்கதியைக் காட்டிடப் போற்றி யியம்பிய திருப்பதிகம் இத் திருவங்கமாலை
ravi said…
திருச்சிற்றம்பலம்

82. தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

1

1. பொ-ரை: தலைகளால்ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.

கு-ரை: தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. வணக்கம் தலைவனுக்கே உரியது.
ravi said…
மகாநாராயணோபநிடதம் சிவபிரானுக்கே எவ்வுயிர்களின் வணக்கமும் உரியது என்கின்றது. பலிதேர்வோன் எனினும் தலைவனே. ஏனையோர் தேரும்பலி தத்தம் வறுமையைக் குறித்து. (தாம் உய்யும் பொருட்டு). இறைவன் பலிதேர்வது உயிர்கள் உய்யும் பொருட்டு. பிறர் பலி தேர உதவுங்கருவி, அவர் வறுமை நிலைக்கேற்ற(பிச்சைப்) பாத்திரம்.
ravi said…
சிவபிரானுக்கோ பிரமகபாலம் பிச்சைப் பாத்திரம் ஆதலின், அவனது தலைமை புலனாகும். அது மட்டுமோ? தலையில் அணிந்த மாலை, நூறுகோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணலெண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. ‘தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே’ (தி.7 ப.4 பா.1). இத் தலைமை சிவனடியார்க்கன்றி, ‘செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்திசெய் மனப் பாறைகட்கு ஏறுமோ?’ ஏறின், அவர்க்கு மாதேவன் அலால் தேவர் மற்று இல்லையே.
ravi said…
அத்தலைவனுக்கே வணக்கம் உரியது. அதனால், தலையே நீ வணங்கு. அவனை நேரே வணங்காமல், வேறு எங்கு வணங்கினும், அங்குத் தாபரமோ சங்கமமோ அவனது உருவாய் நிற்கும். அத் தாபர சங்கமங்கள் என்ற இரண்டு உருவில் நின்று நீ செய்யும் வணக்கத்தை(பூசையை)க் கொண்டு அருளை வைப்பவன் மாபரனே. ‘யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூரம்மான் அத்தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே’ (தி.2 ப.44 பா.6).
ravi said…
‘கானப் பேர்தலையினால் வணங்குவார் நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே’ (தி.3 ப.26 பா.8). ‘தலையினால்வணங்குவார் தவம் உடையார்களே’ (தி.3 ப.26 பா.9).
ravi said…
இத் திருமுறைக் கருத்தே கொண்டு, ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கோளில் பொறியிற் குணம் இலவே’என்றார் பொய்யாமொழியார். ஆசிரியரது திருத்தலை, ஏனையோர் தலையும் பெருவிரல் இறை ஊன்றலும் பொறாது பற்கழல அங்காந்து அலறி வீழ்ந்த வரைபொரு தோளரக்கன் தலையும் போலாது இருவரும் ஒருவனாய அவ்வள்ளல் திருவடி சுமந்து கொண்டு திரியும் (தி.4 ப.75
ravi said…
பா.10)பெருமையதாதலின், ‘தலையே’ என்று அதன் பயிற்சி தோன்றவிளித்தார். ஏனைக் கண், செவி முதலியவற்றிற்கும் இவ்வாறு பொருந்துவன கொள்க. இருமுறை கூறியதன் கருத்து:- வணங்கிப் பயின்ற தலை முதலிய உறுப்புகளை யுடையாராயினும், தமக்குத் தாமே தூண்டிக்கொள்ளும் வகையில் ஒருமுறைக்கு இருமுறை தம் வாயால் ஏவிக்கொண்டு, தம் உடலின் பயனைத் தம் தலைவன் வழிபாட்டுத் திறத்தில் நிலைபெறுவித்துக்கொள்வாரானார் தாண்டகச் சதுரர். ‘தலைசுமந்து இருகை நாற்றித் தரணிக்கே பொறையதாகி நிலையிலா’ (தி.4 ப.69 பா.2)ப் பொய்வாழ்வு வேண்டா. மெய் வாழ்வு வேண்டின், ‘தலையே நீ வணங்காய்’என்று ஏவுகின்றார்.
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 956*🥇🥇🥇🏆🏆🏆

*US 948*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

38 வது ஸ்தபகம்

அஷ்டத்ரிம்ஸ ஸ்தாபக

தஸ மஹா வித்யா (பாதா குலக வ்ருத்தம் )

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
948🦅🦅🦅

மூலே ஸ்தித்யா பை ரவ்யாக்யாம்

தாராம் தேவீ முத்கீதேன
ஸேவேதார்யோ விதி தரஹஸ்யோ

மாதங்கீம் தாம் குண கானேன 👏👏
ravi said…
உமா திரிபுர பைரவியாகவும் தாரா தேவியாகவும் வைகரீ தேவியாகவும் மாதங்கீயாகவும் வருகிறாள் .. நாமங்கள் வேறுபடலாம் ஆனால் கருணையில் எந்த வேறுபாடும் கிடையாது . காரூண்யத்தில் எந்த மாறுபடும் இல்லை .🐟🐟🐟
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 376*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

49
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
மார்கேண மஞ்ஜு கச காந்தி தமோ வ்ருதேன

மந்தாய மான கமனா மதநா துரா ஸௌ

காமாக்ஷி த்ருஷ்டிரயதே தவ சங்கராய

ஸங்கேத பூமிம் அசிராதபிஸாரி கேவ 🙏🙏🙏
ravi said…
தேவியின் கண்கள் கடல் அலைகள் போல் ஓய்வதே இல்லை .. என்றும் நமக்கு பாதுகாப்புத் தர அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன 🐟🐟🐟
ravi said…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

ravi said…
* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
ravi said…
*[96/108]* – அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்💐💐💐
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
ஆஹா! எப்பேர்ப்பட்ட ஆயுதங்களை உடையவன் பிரஹஸ்தன்.

அவனை வெறும் மரங்களைக் கொண்டு போர் புரியும் குரங்குகள் கொன்றனவா?" என்று மனம் புழுங்கினான் இராவணன்.

"இந்திரனை வென்று வீழ்த்திய பிரஹஸ்தனை ஒரு சிறிய குரங்கா கொன்றது?

இந்தச் செய்தியே என் செவிகளைச் சுட்டது. அது மேலும் என் நெஞ்சையும் சுட்டதே" என்று வருந்தினான் இராவணன்.

கோபம் தலைக்கேறிய இராவணன் தானே போர்க்கோலம் பூண்டு ஒரு தேரின் மீது ஏறினான்.

அந்தத் தேர் ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேர். கடல் ஒலி போல அதிரும்படி ஓசை எழுப்பும் தேர் அது.

தேவர்தம் விண்ணுலகுக்கும் சென்று வரும் வலிமை பெற்றது.

இந்திரன், முன்பு போரில் தோற்றபோது இராவணனுக்குக் கொடுத்த தேர் அது.

தான் வழிபடுகின்ற ருத்ரனை மனதால் எண்ணி, உடம்பால் வணங்கி, தன் வில்லை கையிலே எடுத்து, நாணின் ஒலியை எழுப்பினான்.

சிறந்த படைக்கலன்களைத் தேடி எடுத்துக் கொண்டான். மார்பில் கவசம் அணிந்தான்.

தும்பைப்பூ மாலையை கழுத்தில் அணிந்து கொண்டான்.
ravi said…
🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
ravi said…
திருக்கடையூர் அபிராமி *8*

*பாடல் 6*

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
*6. மந்திர சித்தி பெற*

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை;

சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்;

சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே

பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.👣👣👣
ravi said…
*மேலான பொருள்:*

சிந்தூரத்தின் செந்நிறத்தையொத்த திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே!

பொலிவுமிக்க பொன்னான உன் திருவடிகள் என்னும் அழகிய தாமரை மலர்கள் என் சிரசின் மேல் இருக்க,

என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது.

உன்னையே வணங்கி நிற்கும் உன்

அடியவர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது,

உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையே யாகும்.🙏🙏🙏
ravi said…
*சென்னியது உன் பொன் திருவடித்தாமரை*

அம்மா உன் தாமரையைக்காட்டிலும் மென்மையான உன் பாதங்கள் என் சிரசின் மேல் பொருந்தியுள்ளது ...

இதை விட நான் என்ன பாக்கியம் செய்திருக்க முடியும் ..

ravi said…
சாதாரண பாதங்களா அவை ??,

மனிதரும் , தேவரும், மாயா முனிவர்களும் வணங்கும் பாதங்கள் என் சிரசினின் மேல் பதிவதென்றால் என்னை போல் பாக்கியவான் யார் இருக்க முடியும் ? 👌👌👌
ravi said…
கற்பூரம் காட்டும் போது நாம் நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி வணங்குகிறோம் அல்லவா அதன் தாத்பரியம் அன்னையின் பாத கமலங்கள் நம் சிரசின் மேல் பதிந்துள்ளதால் அவைகளுக்கு நம்மையும் அறியாமல் வணக்கம் போடுகிறோம் ...

ravi said…
அருணகிரி தன் கந்தர் அலங்காரத்தில் 40வது பாடலில் இப்படி பாடுகிறார்

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல்

பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்

மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்

*அவன்*
*கால் பட்டு அழிந்தது* *இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.**

......... பதவுரை .........

ravi said…
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின;

மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று.

பெருமை தங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின.

இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.👌👌👌
ravi said…
திரு நாவுக்கரசர்

தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!

என்று பாடுகிறார் . அவள் பாதங்கள் அயன் எழுதிய தவறான வினைப்பயனை மாற்றி எழுதும் வல்லமை படைத்தவை 👣👣👣
ravi said…
*சிந்தையுள்ளே மன்னியது உன் திருநாமம்*

அம்மா உன் நாமங்கள் என் நெஞ்சில் நிலைத்து விட்டன ... பொருந்தி விட்டன ... உள்ளுக்குள்ளே என் மனம் உன் நாமத்தையே சொல்லும் வரம் கொடு ...🙏🙏🙏
ravi said…
*சிந்தூர வண்ணப்பெண்ணே*

ஆஹா என்ன வர்ணனை ... அவள் குங்கமத்தில் குங்கமப் பூவை சேர்த்த குழம்பில் தன் மேனியை செதுக்கிக் கொண்டவள் .. அவள் சிந்தூரம் மணக்கும் வண்ணப்பெண் அவள் ... 👣👣👣
ravi said…
*6. மந்திர சித்தி பெற*


*முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே*

*பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.* 👣👣👣

ravi said…
அம்மா உன்னையே நினைக்கும் அடியார்களுடன் சேர்ந்து திரும்ப திரும்ப உன் நாமங்களை பாராயணம் செய்வதோடு இல்லாமல் உன்னைப்பற்றிய எல்லா நூல்களையும் பெருமைகள் கூறும் எல்லா புராணங்களையும் சேர்ந்து மீண்டும் படிக்கும் பாக்கியம் உன்னால் அல்லவோ எனக்கு கிடைத்தது .. எப்படி நன்றி சொல்வேன் தாயே !!👌👌👌
Karnani said…
Your message is touching and moving. I am not sure I deserve these compliments.. Anyway, wishing you all the best and we will be in touch. Hoping to get over the current trying times. Pl take good care
ravi said…
*நித்ய* = நித்யதேவிமார்கள்

*பராக்ரம* = பராக்ரமம் - வீரியம்

*ஆடூப* = பெருமை

*நிரீக்ஷண* = பார்த்திருத்தல் = காண் - கவனி

*சமுத்சுகா* = ஆர்வமாக = ஆரவாரமாக - உணர்ச்சிப் பெருக்கு


*73 நித்ய பராக்ரமாடூப நிரீஷண சமுத்சுகா* =

நித்யதேவிகளின் ஆற்றலையும் பெருமையையும் கண்டு உணர்ச்சிப்பெருக்கில் ஆர்பரிப்பவள்
ravi said…
பாவங்கள் செய்தவனுக்கும் பாற்கடல் காட்டினாய் ...

பாதங்கள் பற்றியவனுக்கும் பரமபதம் காட்டி அருளினாய் ...

பாசம் கையில் பாசம் கொண்டவர் உன் நெஞ்சமதில்...

அங்குசம் உன் கையில் பங்கஜம் கொண்டு துதிப்போர் உன் பார்வை தேடும் பாரிஜாதம்

கரும்பும் உன் கையில் மலர்கணைகள் உன் கையில் ...

உன் நாமம் சொல்வோர்க்கு நீ ஒரு கரும்பு ... இரும்பு உள்ளம் கொண்டோர்க்கு நீ என்றும் ஒரு தழும்பு ..

மலர்கள் உன் அர்ச்சனை கூடாரம் ... அதில் நீ எறியும் கணைகள் துளைக்கும் என் மூலாதாரம் . 🙏🙏🙏
ravi said…
Subiksha is joining Chalo as financial controller . A small tribute to her

*To our dear Subi* 🏆🏆🏆

Let bygone is bygone .. *Chalo* forward

Let past nightmares be the bad dreams - *Chalo* ... A new dawn

Let the rear mirror be not a guiding factor - *Chalo* on the road less travelled with courage and faith .

Let your supporting system blossom further and let the fragrance lead you to a new life ... *Chalo* from where you hv broken-down

Let *Chalo* take you to a new high and let all your dreams be fulfilled .

Let the new light of divinity guide you to remove all darkness . Let us name the new power as *Chalo*

👍👍👍👍🙏🙏👏👏👏🥇🥇🥇🏆🏆🏆🦚🦚🦜🦜🦜🌸
ravi said…
*பண்ட* = பண்டாசுர
சைன்ய = படை - சேனை

*வதோத்* = அழித்தல் - நாசமாக்குதல்

*யுக்த* = பணிசெய்திருத்தல் - செயலாற்றுதல்

*ஷக்தி* = ஷக்தி சேனை
விக்ரம = வலிமை - தைரியம்

*ஹர்ஷிதா* = களிப்பு -களித்தல்


# *72 பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா =*

பண்டாசுரனின் படைகளை துவம்சம் செய்த ஷக்திசேனையின் பராக்ரமத்தை கண்டு ஆனந்திப்பவள்👏👏👏
ravi said…
தானவர்கள் அகங்காரம் கொண்டவர்கள் மமதையில் மேதை பட்டம் பெற்றவர்கள் நான் என்றே நான் ஒன்றே நான் நன்றே என்றே நினைப்பவர்கள் ...

தாயல்ல நீ தண்டம் எடுத்தே களை நீக்குபவள் ... பெற்ற அன்னையை உன்னையே தன்னயையே என்று சொல்லும் பேடிகளை பேய் கொண்டே துரத்துவாய் ...

உன் அருள் இன்றி ஒரு புல் தான் முளைக்குமோ ?

முளைக்கும் புல் தான் தாய் நீ இல்லை என்று சொல்லிடுமோ ...

தவமே தயாநிதியே அழிப்பாய் அரக்கர் கூட்டம் ...

பெண்ணுக்கும் பேய்க்கும் பேதம் காணா கூட்டும் இருந்தென்ன வாழ்ந்தென்ன ? 👏👏👏
ravi said…
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🍃🌷 #மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேஸ்வரர்_திருக்கோயில் #சித்திரை_திருவிழா2021- இன்று 19.04.2021-5ம் நாள் மாலை சுவாமி, அம்பாள் #தங்ககுதிரை_வாகனம்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🍃🌷 #Madurai Sri #Meenkshi_Sundareswarar temple- #Chithirai_festival 2021- 19.04.2021 day 5 evening Swamy, Ambal Procession in #Golden_horse_vehicle
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்
மறந்தும் பிறவா வரம் தா - சிறந்தபுகழ்
ஞாலவாயா முடிக்கு நாட்டுஞ்சூளாமணியாம்
ஆலவாய்ச் சொக்கநாதா-
சொக்கநாத வெண்பா
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
ravi said…
கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,
சுந்தரேசர் மகிழும்... மயிலே

கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே

பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே


கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து

அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே

சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)

ravi said…
தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)🦜🦜🦜
S G S Ramani said…
நிறைய படிக்க வேண்டும் ... முடியவில்லையா பிறர் போடும் பதிவுகளையாவது மனமார படிக்க வேண்டும் ...

உண்மைதான் தாயே...

இதை படித்த பிறகாவது ஆன்மீகம் அறிந்து கொள்ள நமது நேரத்தில் சிறிது ஒதுக்குவோம்...

ஓம் சரவணபவ..

🙏🙏🙏🙏🙏🙏🙏
Lakshmi balaraman said…
நல்ல விஷயங்கள் படிக்க நேரம்
காலம் வேண்டாம். திரும்ப திரும்ப படிக்கலாம். அதுவும்
ரவியுடய எழுத்து நடை மிகவும்
எளிது அழகு அறிவு 🙏🙏
Savitha said…
அருமை
வெற்றி வேல் முருகா
ஞான வேல் முருகா
சக்தி வேல் முருகா🌷🌷🙏🏻🙏🏻
Savitha said…
அருமையான விளக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷
ravi said…
அம்மா ... தாங்கள் சொல்ல வில்லை என்றால் இந்த ஸ்தலங்கள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும் ...

அருணாகிரியின் மன உறுதியும் சொல்லாற்றாலும் , பக்தியும் எங்களுக்கும் முருகன் வரமாக தரவேண்டும் தாயே ...

ரவி இவைகள் கேட்டுப்பெறுவது அல்ல ... நீங்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும் ..

நிறைய படிக்க வேண்டும் ... முடியவில்லையா பிறர் போடும் பதிவுகளையாவது மனமார படிக்க வேண்டும் ...

சுலபமான வழி வரம் கேட்பது ...

அன்னை சொன்ன உண்மை சுரீர் என்று உரைத்தது ... படிப்பதும் இல்லை பிறர் போடும் பதிவுகளை படிக்க நேரம் ஒதுக்குவதும் இல்லை ...

அருணகிரி எங்கே? நாம் எங்கே ? 😢😢
ravi said…
*692*
*ஸாம்ராஜ்யதாயினீ* -

பக்தர்களை சாம்ராஜ்ய அதிபதிகளாக்குபவள் என்று சொல்லும்போது ஸ்ரீ லலிதாம்பாளின் தாராள மனசு, காருண்யம் எல்லாம் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது.

ராஜசூய யாகம் புரிந்தவன் தான் சாம்ராட். சாம்ராஜ்ய அதிபதி.

ராஜாக்களையெல்லாம் தலைவன்.

தைத்ரிய உபநிஷத் (I.vi.2) ஆப்னோதி ஸ்வாராஜ்யம் என்று சொல்லும்போது, நமக்குள் உறையும் பிரம்மத்தை அறிந்து கொள்ளும் ஆத்ம ஞானிகளாகிறோம்.

இதற்கும் மிஞ்சிய சாம்ராஜ்ய அதிபதி பட்டம் உண்டா?👌👌👌
ravi said…
She who dispels fear

She who is the wife of shambhu (shiva)

She who is worshipped by sharada (sarasvati, the goddess of speech)

She who is the wife of sharva (shiva)

She who confers happiness

She who gives happiness

She who bestows riches in abundance

She who is chaste

She whose face shines like the full moon in the clear autumn sky

She who is slender-waister ॥ 130 ॥🦜🦜🦜🦚🦚🦚
ravi said…
A bad attitude is like a flat tyre, we can’t get very far until we change it.

We are all tourist and Almighty is our travel agent who has already fixed all our routes, reservations and destinations. *So trust him and enjoy the trip called life.*
ravi said…
*BE RICH AND HAPPY WITHIN*

With the car parked on the road, I got on the bus. But seeing the crowd inside, I was scared. There was no place to sit.

At that moment, a seat became vacant. The next guy could easily sit there. But he gave me that seat.

Next stop. The same thing happened again.

Again he gave his seat to another.

This happened four times in our entire bus journey. The man looked very normal, that is, he must have been going home after his job...now the last stop. We all got off.

So out of curiosity I spoke to him.

Asked why you were giving your seat to another every time?👍👍👍
ravi said…
The interesting answer he gave was, “I haven’t studied in my life - I do not know many things or don’t have much money and I have nothing to give to anyone.

No knowledge, no money. So I do this every day. That's all I can do easily.

After working all day‌ I can stand for a little longer.

I gave you my place. You said thank you to me, I was very satisfied, I did something for someone today is the great source of satisfaction to me -

I do this every day & feel I am contributing to the best of my abilities and thus I go home refreshed & happily every day that I gave something to someone. That's what I do every day.🙏🙏🙏
ravi said…
I was shocked to hear the answer.

His thoughts. And understanding it. Whom do we call uneducated?

What do you mean? *Wanting to do something for someone completely unknown and on a daily basis is the ultimate learning.*

I am sure God will be happy to see the solution he found on it - *This is one of my best art of* *giving something*.

He taught me a lot of things today - I started to examine myself by bowing down in front of him.

_*How easy it is to be rich from within? God must have taught this angel this splendid lesson.*_👍👍👍👌👌👌
ravi said…
உண்மை சம்பவம்.



பொதுவாக நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள்.ஆனால் அன்றைக்கோ வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள்‌ குழுமியிருந்தார்கள்.
ravi said…
நானும் ஒரு வாய்தாவுக்கு ஆஜராகத்தான் போயிருந்தேன்.உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.

இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்.அந்தப் பெண்ணின் அக்காள் மாப்பிள்ளை அந்தப் பையனை கண்டிக்கிறார்.
ravi said…
பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது.தன்னைக் கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
ravi said…
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.குழந்தை அழத் தொடங்குகிறது.ஒரு‌பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
ravi said…
அந்தக் கோயிலை ஒட்டியுள்ள கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு தப்பிக்கிறான்.பொழுதடைய கோவிலைச் சாத்த குருக்கள் வரும்போது குழந்தையின் முனங்கல் கிணற்றுக்குள் லிருந்து கேட்க குருக்கள் எட்டிப்பார்க்கிறார்.
ravi said…
குழந்தை யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.பொதுமக்கள் சேர்ந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்.
ravi said…
போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.ஒரு மணிநேரத்தில் காவல்துறை பெற்றோரைக் கண்டுபிடிக்கிறது.குழந்தையைக் காணவில்லை என்று யாராவது புகார் கொடுத்திருக்கிறார்களா என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரித்து ஒரே மணிநேரத்தில் நெல்லை போலீஸ் மதுரையில் இருக்கும் பெற்றோரை கண்டுபிடிக்கிறார்கள்.
ravi said…
இரவோடு இரவாக பெற்றோர்கள் நெல்லை வந்து சேர்கிறார்கள்.அடுத்த நிமிஷமே குற்றவாளியை கைது செய்கிறது நெல்லை காவல்துறை.
ravi said…
காலையில் அந்தக் குழந்தையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அப்புறமாக சட்டரீதியான நடவடிக்கைக்குப் பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவே அந்தக் கூட்டம்.
ravi said…
தன்னைக் காப்பாற்றிய அந்த யானைப் பொம்மையை இடுக்கிப் பிடித்தபடியே குழந்தையை ஒரு பெண்காவலர் கொண்டுவந்தார்.அதைப் பார்த்ததும் அந்தத் தாய் அழுத அழுகை அனைவரின் கண்களும் பனித்தன.தெய்வீகக் குழந்தை என்றார் நீதிபதி.
ravi said…
எருமை வாகனத்தில் வந்து குழந்தையின் உயிரைப் பறிக்க முயன்ற எமன் தோற்றுப் போனான்.காரணம் குழந்தை யானையிடமல்லவா இருக்கிறது.யானையை ஜெயிக்க எருமையால் முடியுமா .
ravi said…
கிளைமாக்ஸ்:-வழக்கமாக அந்தக் கோவிலைச் சாத்திப் பூட்ட வருகிற குருக்களுக்கு இரண்டு காதுகளும் செவிடாம்.அன்றைய தினம் திடீர் உடல்நலக் கோளாறினால் தன்னுடைய மருமகனை அனுப்பியிருக்கிறார்.
ravi said…
அந்த காதுகேளாத குருக்கள் அன்றைக்கு வந்திருந்தால்i குழந்தையின் முனங்கல் கேட்டிருக்காது.குழந்தை இரவுமுழுக்க தண்ணீரில் மிதந்து விறைத்து இறந்திருக்கும்.இதற்குப் பெயர்தான் கடவுள் என்பது.

ravi said…
உலக அரசுகள் கொரொனாவுடன் வாழ பழகுங்கள் இனி வேறுவழியில்லை என கையினை விரித்துவிட்டது, இனியும் ஊரடங்கை தாங்க அரசுகளால் முடியாது, தேசத்து கட்டமைப்பே உடைந்துவிடும் என அஞ்சுகின்றன‌.

லட்சகணக்கில் மக்களை காவு கொடுத்த அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த முடிவுக்கு வந்தாயிற்று, மருத்துவமும், அரசும் கைவிட்ட நிலையில் இனி தெய்வமே கதி.

சென்னையிலும் கொரோனா தலைவிரித்தாடும் நேரமிது...

ravi said…
அறிவியல் உச்சத்தில் ஆடும் அந்த தேசங்கள் மருந்தில்லா நோய்க்கு தெய்வமே துணை என சரணடைந்துவிட்ட நேரம் சென்னையும் தமிழகமும் அதற்கு தப்பமுடியாது.

இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்...

அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்.

ravi said…
கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருகபெருமான் காட்சியளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான்.

அந்த இடத்தில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார்.

அதுதான் ¤கந்த சஷ்டி கவசம்¤
சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு..

ravi said…
நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது.
அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது.

ravi said…
ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது.

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பே
சிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க

ravi said…
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது.

இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது.

ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்.
உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது.

ravi said…
உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது.
தொடரும் பாடலில் அர்த்தமில்லா சில வரிகள் வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக‌...

இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.

ravi said…
அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள், சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான‌ சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள்.

தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும்.

ravi said…
ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்.

ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே.

அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்.

ravi said…
குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான்.

முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்.

ravi said…
முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்.

வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்.

நலம் பெற்றோர் ஏராளம், ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் கண்டது.

ravi said…
இதைத்தான் பாடலாக சொன்னார்கள்.

*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே..*

○இனி மனிதர் தங்களை தாங்களே காத்துகொள்ள வேண்டும் எனும் சூழல் வந்துவிட்ட நேரம், தெய்வ அனுக்கிரகம் ஒன்றே வழி.○

ravi said…
தமிழர்கள் தங்கள் தனிபெரும் கடவுளை, அவன் கொடுத்த பாடல் வழி தேடட்டும், தமிழருக்காய் அல்ல உலக மக்களுக்காய் முறையிடட்டும்.

எந்த பாடலை பாடினால் மக்களெல்லாம் நோயிலிருந்து விடுபடுவார்கள் என முருகனே சொன்னாரோ அந்த பாடல் பாடபடட்டும்.

ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமான பாடபடட்டும்.

ravi said…
அதில் தமிழினம் பாதுகாக்கபடும், நிச்சயம் முருகன் தமிழகத்தை காப்பார், சுனாமி நேரம் திருசெந்தூர் ஆலய மக்களை ஒரு சொட்டு கடல்நீரும் தாக்காமல் காத்த முருகன், நிச்சயம் தன்னை அழைக்கும் ஒவ்வொருவரையும் காப்பார்.

¤நம்பிக்கையோடு கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுப்போம், நிச்சயம் நல்லது நடக்கும்¤
ravi said…
மதுரை அருள்மிகு
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

*சித்திரைத் திருவிழா*

இன்று 19.04.2021 திங்கள் கிழமை ஐந்தாம் நாள் மாலை சுவாமி, அம்பாள் தங்ககுதிரை வாகனம்

💜➰️💜➰️💜➰️💜➰️💜➰️💜

இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்
மறந்தும் பிறவா வரம் தா - சிறந்தபுகழ்
ஞாலவாயா முடிக்கு நாட்டுஞ்சூளாமணியாம்
ஆலவாய்ச் சொக்கநாதா

சொக்கநாத வெண்பா
ravi said…
காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான்.

இவனை காப்பாற்ற ஆளில்லை..

"யாராவது என்னை தூக்கி விடுங்கள்...கஷ்டம் தாங்க முடியவில்லை.. காப்பாற்றுங்கள்" என்று கூவி கூவி கதறினான்..

இவனை காப்பாற்ற ஒருவர் வந்து விட்டார்.

வந்தவர், குழியில் இவன் விழுந்து இருப்பதை பார்த்து, "அடடா! கீழே விழுந்து விட்டாயா!! கவலைப்படாதே நான் உன்னை காப்பாற்றுகிறேன்" என்றார்.

ravi said…
முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ! இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள்! நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.

இவனோ! கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்..

"
ravi said…
ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே! இங்கு என்னை தவிர ஆள் கிடையாது.. இந்த கயிறை பிடித்துகொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையோடு கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.

"அது சரி.. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.

"
ravi said…
கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர். நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்" என்றார் வந்தவர்.

"கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.

"கவலையே படாதே! நான் விடவே மாட்டேன். கை சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால், உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் (ஸங்கர்ஷண)" என்றார் வந்தவர்.

"
ravi said…
இழுத்து விடுவேன் என்று சொல்கிறீர். என்னை இழுக்க உங்களுக்கு தெம்பு உண்டா?" என்றான் விழுந்தவன்.

"தெம்பு இருப்பதால் தானே இப்படி சொல்கிறேன்." என்று வந்தவர் சொல்ல,

"தெம்பு இருப்பதாக நினைத்து கொண்டு இப்படி சொல்கிறீரோ?" என்று சந்தேகத்துடன் விழுந்தவன் கேட்க,

"நான் ஒருக்காலும் விழவே மாட்டேன் (அச்யுத). கவலையே படாதே!" என்று வந்தவர் சொல்ல,

"அது சரி.. நீங்கள் விழ மாட்டீர்கள் என்றாலும், என் பலத்தையும் சேர்த்து, நீங்கள் எப்படி தூக்க முடியும்? என்னை கரையேற்றுகிறேன் என்று சொல்லி நீங்களும் விழுந்து விட்டால்?" என்று விழுந்தவன் கேட்க,

"
ravi said…
நான் திடமானவன் (த்ருட). நான் திடமானவன் என்பதாலேயே நானும் விழ மாட்டேன். பிறரையும் விழ செய்யவும் மாட்டேன். தைரியமாக அந்த கயிறை பிடி" என்றார் வந்தவர்.

"அதெல்லாம் முடியாது.. நீங்கள் போங்கள். ஒருவேளை நீங்கள் என்னை கரையேற்றி விட்டாலும், காப்பாற்றியதற்கு தக்ஷிணை கொடு என்று கேட்பீர்கள்" என்றான் விழுந்தவன்.

"
ravi said…
நீ எனக்கு ஒன்றுமே கொடுக்க வேண்டாம்.. நீ கஷ்டப்படுகிறாய். என்னால் காப்பாற்ற முடியும். கஷ்டப்படுவது உன் நிலையாக உள்ளது. காப்பாற்றுவது என் ஸ்வபாவம். என் ஸ்வபாவப்படி உன்னை காப்பாற்றுகிறேன் என்று இருக்கும் போது, தக்ஷிணை எனக்கு தேவையே இல்லை" என்றார் வந்தவர்.

"
ravi said…
தக்ஷிணை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இந்த பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றியதால், 'நான் தான் உன்னை காப்பாற்றினேன். நான் தான் காப்பாற்றினேன். நீ எனக்கு அடிமை' என்று ஆக்கி கொண்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.

"வேண்டவே வேண்டாம். நீ எனக்கு அடிமையாக இருக்கவே வேண்டாம். சுதந்திரமாகவே இரு (கைவல்யம்). காப்பற்றுவது என் ஸ்வபாவம். நான் உன்னை காப்பாற்றாமல் விடவே மாட்டேன்" என்றார் வந்தவர்.

"
ravi said…
நீங்கள் என்ன சொன்னாலும், எனக்கு உங்கள் மேல் சந்தேகம் வருகிறது..
ஒரு வேளை என்னை தூக்கி விட்ட பிறகு, 'ஏண்டா.. கவனிக்காமல் இந்த பாழுங்கிணற்றில் விழுந்தாய்?' என்று நீங்கள் அடித்து விட்டால்?.. அதனால், நான் இங்கேயே இருக்கிறேன் (அத்தை தின்று அங்கேயே கிடக்கும் - நம்மாழ்வார்). என்னை விடுங்கள்." என்றான் விழுந்தவன்..

"
ravi said…
நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று ஆசையோடு வந்தும், 'பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன், பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன்' என்று இப்படி அசட்டு பிடிவாதம் செய்து கொண்டு, அடம் செய்தால் நான் என்ன தான் செய்வது?"
என்றார் வந்தவர்.

ravi said…
இப்படி காப்பாற்றுபவர் வந்தும்,
காப்பாற்ற ஒரு பிடியாக முடிச்சுகள் உள்ள கயிறை கொடுத்தும்,
போட்ட கயிற்றின் மீது சந்தேகப்பட்டு கொண்டு,
காப்பாற்றுபவன் மீதும் சந்தேகப்பட்டு கொண்டு,
பிடிவாதம் செய்து கொண்டு பாழுங்கிணற்றிலேயே இருந்து வந்தான். அவரும் இவன் எப்பொழுதாவது தன்னை நம்புவானோ என்று அங்கேயே இருந்தார்.

ravi said…
வந்தவர் - பகவான் நாராயணன்.
விழுந்தவன் - ஜீவாத்மா (நாம்)
பாழுங்கிணறு - பிறப்பு பிறப்பிலிருந்து மீள முடியாத சம்சார குழி
கயிறு - பக்தி என்ற கயிறு போட்டார்.

முடிச்சு - பக்தி என்ற கயிற்றில் "ஹரே" என்ற நரசிம்ம நாமத்தையும், "ராம' என்ற ராம நாமத்தையும், "கிருஷ்ண' என்ற கிருஷ்ண நாமத்தையும் முடிச்சுக்களாக போட்டு பிடித்து கொள்ள சொன்னார்.

ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற முடிச்சுக்கள் உடைய பக்தி என்ற கயிறை பிடித்து கொண்டால், த்ருடமான (த்ருட) பகவான், தானும் நழுவாமல் (அச்யுத), நிச்சயமாக இந்த சம்சாரம் என்ற பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்றி விடுவார்.

ravi said…
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், கிருஷ்ண பரமாத்மாவை பார்த்து, பீஷ்மர் "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்று இந்த அனுபவத்தில் பகவானுக்கு பெயர் சூட்டுகிறார்.

திடமானவர் (த்ருட:), தன்னிடத்தில் இழுப்பவர் (ஸங்கர்ஷண), திடமானவர் என்பதாலேயே நழுவ விடாதவர் (அச்யுத)

கீதோபதேசம் செய்த போதே, கிருஷ்ண பரமாத்மா இதை சொன்னார் என்று பார்க்கிறோம்..

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्
- bhagavad gita
தேஷாம் அஹம் சமுத்தர்தா
ம்ருத்யு சம்சார சாகராத்
- பகவத் கீதா
Sree krishna says "Paartha! I swiftly pullout them from the ocean of birth and death"
"பார்த்தா! பிறப்பு இறப்பு என்ற சம்சார கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஜீவனை உடனேயே கரையேற்றுபவன் நான்" என்று சொல்கிறார்.

ravi said…
நான் நிச்சயம் காப்பாற்றுவேன்..என் நாமத்தை நம்பிக்கையோடு பிடி என்று பகவான் பக்தி என்ற கயிறை போட்டாலும், சந்தேக புத்தி உள்ள ஜீவன், அங்கேயே இருக்கிறேன் என்று அசட்டு தனம் செய்வதை தான், நம்மாழ்வார் பதிலாக மதுரகவிக்கு சொல்கிறார் என்று பார்க்கிறோம்.

ravi said…
ஞானத்தை அறிந்து கொள்ள விரும்பிய மதுரகவி, திருக்குருகூர் வந்து நம்மாழ்வாரைச் சந்தித்து,
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''
என்ற கேட்டார்.

அதற்கு நம்மாழ்வார்,
"அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார்.

நம்மாழ்வாரின் பதிலைக்கேட்ட மதுரகவி,
"இவர் அவதார புருஷர். இவரே நாம் தேடி வந்த ஆத்ம குரு' என்று உணர்ந்து அவரையே தம் ஆசார்யராகவும் தெய்வமாகவும் போற்றித் திருத்தொண்டு புரிந்தார்.

ravi said…
பகவான் போட்ட பக்தி என்ற கயிறை பிடித்து கொல்லாதவரை, நமக்கு விமோசனம் இல்லை என்று உணர்த்துகிறது "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்ற விஷ்ணு சஹஸ்ரநாமம்.
ravi said…
மான் ஒரு மணி நேரத்திற்கு 90 கி.மீ வேகத்தில் ஓடும்.
புலி மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும். நம்ப முடியவில்லையா ...?
இருப்பினும், புலி மான்களை வேட்டையாடுகிறது.

ஏனென்றால், மான்களின் மனதில் ஒரு பயம் இருக்கிறது. நாம் ஒரு புலியை விட பலவீனமாக இருக்கிறோம் என்ற அந்த பயம் அவற்றை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறது
இது அவற்றின் வேகத்தையும் மன உறுதியையும் குறைக்கிறது அதனால் வேட்டையாடப்படுகிறது.!

கொரோனாவிலும் இதே நிலைதான்.

கொரோனாவை விட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் உள்ளது. நமது மன உறுதியும் வேகமும் பயத்தால் மட்டுமே குறைகிறது, மேலும் நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

*பதட்டப் படாதீர்கள்..!*
🙏😷🙏😷🙏😷🙏
*உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்,*
*பாதுகாப்பாக இருங்கள் !!*
*நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள்*
Ajayan pnb said…
Dear Ravi,

Good Morning !

It took some time for me to let your message sink. The fact that you could serve with the great L&T is really creditable .Destiny chose you to be part of this great organization. Your contribution to L&T has been invaluable for sure. I consider it my good fortune to associate with you.

This is not the end. Let this be the begining of a new innings .Were are you going to settle and what is your immediate plan.

The country need contributions from people like you for nation building. I wish that you continue to contribute and your capabilities are utilised.

Wish you and your loved ones lots of joy, happiness , good health and togetherness.

With lots of love and regards.

I once again extend my invitation to you to visit Calicut and stay with us.

With lots of love and regards.

K A Ajayan.

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53