அபிராமி அந்தாதி: பாடல் 21 : மங்கலை செங்கலசம் முலையாள்!!
பச்சைப்புடவைக்காரி -462 அபிராமி அந்தாதி - பதிவு 37 பாடல் 21 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச் சங்கலை செங்கை! சகலகலாமயில்!🦚🦚🦚 தாவுகங்கை பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்! பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.🦜🦜🦜 *அருமையான இன்னொரு பாடல்* * மங்கலை * .... அன்னை மங்கலமானவள் ... மெட்டி அணிந்த பாதங்கள் , தங்க கொலுசுகள் குழையும் கால்கள் , இடுப்பில் ஒட்டியாணம் , கைகளில் சங்குகள் சத்தம் போடும் வளையல்கள் , கழுத்தில் மாணிக்கம் ஒளி வீசும் நவரத்தின மாலை காதுகளில் வைரம் வரம் வாங்கி அழகுப் படுத்தும் காதுகள் ... நாசியில் மாணிக்கம் அரசாளும் மூக்குத்தி கண்களில் கஸ்தூரி மான் இட்ட கரும் மை நெற்றியில் மூன்றாம் பிறை விழிகளில் தினம் குதித்து விளையாடும் மீன்கள் ......