ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 30 காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -- பதிவு 37
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே பதிவு 37 30 कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா - அ ம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா? மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித மாங்கல்ய சரடு தான். இதைவிட விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா? காளமேகம் ( முன்னாள் மடப்பள்ளி வரதன் ) புலவர் அதிகமாகவே கிண்டலாக பாடுபவர் .. அவர் ஒரு பாடலில் அம்பாளை கேட்க்கிறார் தாயே!! நீயோ பரிபூரண தேவதை .. சகல சௌபாக்கியமும் தருபவள் ... அன்ன பூரணீ ... ஆனால் உன் புருஷனோ கபாலம் ஏந்தி தெருவில் பிச்சை வாங்குகிறார் அது மட்டுமா ? அணிய நல்ல ஆடை இல்லாமல் 8 திசைகளையும் ஆடையாக அணிகிறார் ... அணிந்துகொள்ள ஆபரணங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ... உன் மாமியார் வீட்டு சீதனம் என்று ஏதாவது உண்டா உனக்கு ? அவரிடம் இருப்பதெல்லாம் பயமுறுத்தும் பூத கணங்களும் , மண்டை ஓடுகள் மட்டுமே .. என்ன அப்படி கண்டு விட்டாய் அவரிடம் இப்படி தவசியாய் இருந்து அவர் துணைவியாக ?? இதையே வேறு யாராவது சொல்லி இருந்...