Posts

Showing posts from July, 2022

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 31

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  38 31 कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता - கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா - 🙏🙏🙏 அம்பாள் அணிந்துள்ள கேயூரம் எனும்  தோள் வளை  எப்படி கண்ணைப் பறிக்கிறது பார்த்தீர்களா?  இப்போது இம்மாதிரியான  ஆபரணங்கள் வழக்கத்தில் இல்லாத ஒரு நாகரீகம் நம்மை ஆக்ரமித்துவிட்டது. கனகாங்கத = தங்க வளையல் -    கனக  என்றால் தங்கம்  கேயூர  = வங்கி (புஜங்களில் அணியும் அணிகலன்)   கமனீய  = ரம்யமான புஜ = கைகள்    அன்விதா = அதனுடன் -  கூடிய  31 கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா =  தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள் 🇨🇮🇨🇮🇨🇮 கைகளில் மலர் ஏந்தி காளி வந்தாள்  கங்கை கரையோரம் நீலி வந்தாள்  மை நிறத்து பேரழகி நேரில் வந்தாள்  மலரடிகள் நோகும் படி அருள வந்தாள்  ஓடமெல்லாம் ஓயிந்திருந்த நதியோரம்  வேத மொழி முழங்குகின்ற கரையோரம்  தேகம் தனை இழந்த மகள் செல்லும் நேரம்  தேவ தேவி அருகில் இருந்தாள் வெகு நேரம்  மங்கை இவள் வாழ்ந்திருந்த...