Posts

Showing posts from December, 2022

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 33

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  40 33 कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी -காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | - பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா என்று அறிந்து கொண்டாலே போதுமானது.  தாயை அதற்கு மேல் வர்ணிக்க நமக்கு உரிமையில்லை. காமேஷ்வர ப்ரேம  = காமேஷ்வரனின் அன்பு ப்ரேமை ரதன-மணி  = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற  ப்ரதிபண = ப்ரதியாக - பரிமாற்றம் ஸ்தனி  = மார்பகம்  33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி = காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள் 🌷🌷🌷  👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 32

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  39 32 रत्नग्रैवेयचिन्ताकलोलमुक्ताफलान्विता -  ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா - உலகின் விலையுயர்ந்த எந்த நகைக் கடையிலும் காணமுடியாத அற்புத நெக்லெஸ் அம்பாள் அணிந்து கொண்டிருக்கிறாளே.  சிப்பியிலிருந்து வெளிவந்த நல் முத்துக்கள்,  நவமணி முத்து மாணிக்கங்கள் கோர்த்த தேவலோக நகைச் சிற்பிகளின்  கைவண்ணத்தில் உருவான  நகாஸ் வேலைப்பாடு மிக்க ஆபரணம் அம்பாளிடம் வந்தபிறகு மேலும் அழகு பெறுகிறது.💐💐💐 அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அல்லவோ அவள் 🙏 ரத்ன = ரத்தினங்கள் / மணிகள் க்ரைவேய =  பதக்கமாலை - ஹாரம்  சிந்தாக = ஓயாது / அலைகழிக்கப்படுவது  லோல = ஆடும் - இங்குமங்கும் ஆடுதல்  முக்தபல் = முத்துகள்  அன்விதா = சேர்ந்த - கூடிய  32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா = முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள். லோல   என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள். லோலக   என்றால் பதக்கம் என்று கொள்ளலாம்.   லோலக   என்று பொருள் கொண்டு முத்துமாலையுடன் கூட...