ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 39.-காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா-பதிவு 46
39 कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद् वयान्विता - காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா -- இடையழகை தொடர்ந்து வாக் தேவிகள் அவள் தொடையழகை வர்ணிக்கிறார்கள். அவள் தொடையழகு அவளது பிராண நாதன் காமேஸ்வரன் ஒருவனுக்கல்லவோ தெரியும் என்கிறார்கள் நாம் பாதத்தை வணங்கி அருள் பெறுபவர்கள்.. *காமேஷ* = ஈஸ்வரன் - மஹாதேவன் *ஞாத* = அறிந்த - உணர்ந்த *சௌபாக்ய* = மங்கலமான - அழகான *மார்தவ* = மென்மை - கனிவான *ஊரு* - தொடைப்பகுதி *த்வய* = இரண்டு - ஜோடி *அன்விதா* = அழகாய் அமைந்திருத்தல் *39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; =* அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள் 👏👏