ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 39.-காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா-பதிவு 46

 39  कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद्वयान्विता - காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா --





இடையழகை தொடர்ந்து வாக் தேவிகள் அவள் தொடையழகை வர்ணிக்கிறார்கள். 

அவள் தொடையழகு அவளது பிராண நாதன் காமேஸ்வரன் ஒருவனுக்கல்லவோ தெரியும் என்கிறார்கள் 

நாம் பாதத்தை வணங்கி அருள் பெறுபவர்கள்..

*காமேஷ* = ஈஸ்வரன் - மஹாதேவன் 

 *ஞாத* = அறிந்த - உணர்ந்த 

 *சௌபாக்ய* = மங்கலமான - அழகான 

 *மார்தவ* = மென்மை - கனிவான 

 *ஊரு* - தொடைப்பகுதி 

 *த்வய* = இரண்டு - ஜோடி 

 *அன்விதா* = அழகாய் அமைந்திருத்தல் 

 *39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; =* 

அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள் 👏👏

Comments

ravi said…
🌹 *TODAY'S THOUGHT*🌹
      ( 24 FEBRUARY 2023 )

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍂🍂🍃🍂

Smooth roads never make good drivers..

Smooth sea never make good sailors..

Clear skies never make good pilots..

Problem free life never makes a strong & good person..

Be strong enough to accept the challenges of life..

🙏 *Good Morning*🙏

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
ravi said…
*❖ 123 ஷாரதாராத்யா* =

கலைவாணியின் பூஜைக்கு உகந்தவள்🙏
ravi said…
*அம்மா*

கச்சபீயின் விதி முடிந்து போனதோ ??

வீணை வாசிக்கும் வாணீ தனை விண்ணுலகம் பழிக்க வைத்தனயோ ??

கல்விக்கு அதிபதி உன் பல்லவிக்கு அடி பணிந்தாள் !!

ஆதி அந்தம் இல்லாதவள்

உன் ஆதி தாளம் கேட்டு மதி மயங்கி போனாள் !!

சரணம் என்றே உனை நாடினாள் !!

அனுசரணம் என்றே உன் குரல் தனில் குடி புகுந்ததாள் !!

காம்போதி இசை தனில் பூபாளம் தான் பாட விழைந்தாள் !!

குரல் ஏனோ வராமல் உன் விழி மான் போல் மிரட்சி கொண்டாள் !!

உன் குரல் கேட்டு காய்ச்சிய வெண்ணெய் போல் உருகி போனாள் !!

மெய் பொய்த்து போக மெய்யாக நெய் போல் உன் வசம் ஆனாள் ...

பாலினும் சொல் இனியவளே

நெய் மீண்டும் பாலாகுமோ ??

ஆனது உன் அருளால்

உன் பாதம் தொழுது வணங்கியதே

அவள் தினம் படிக்கும் ஏட்டு சுவடிகள் 🙌🙌🙌💐💐💐
ravi said…

பழனிக் கடவுள் துணை -24.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-69

மூலம்:

வேனன் துணிந்துமுன்னாள் வேதங் களிற்கலந்த
ஆனபிழைக் கஞ்சி அடங்குவரோ – மானளித்த
வள்ளி மணவாளன் வான்பழனி மால் வரையிற்
தெள்ளியதொண் டாற்றும் சிலர் (69).

பதப்பிரிவு:

வேனன் துணிந்து முன்னாள் வேதங்களில் கலந்த
ஆன பிழைக்கு அஞ்சி அடங்குவரோ? – மான் அளித்த
வள்ளி மணவாளன் வான் பழனி மால் வரையில்
தெள்ளிய தொண்டு ஆற்றும் சிலர்!! (69).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

வேதத்தில் வேனன் என்பவன் ஊன்யாக முதலியவற்றைக் கலந்து விட்டான். இதை உணர்ந்தோர் அதை களைந்து ஏற்பார்கள் என்று இந்தப் பாடலில் உரைக்கிறார் நம் சுவாமிகள்.

மான் பெற்ற மான், என் தாய், வள்ளி நாச்சியாரின் மணவாளன், வள்ளிமணவாளப் பெருமாள், பழநியாண்டவன், அருள் கொழிக்கும் வான் உயர்ந்த புகழுடைய பழனி மலையில், தெள்ளிய தொண்டு ஆற்றும் சிலர், வேதத்தில் வேனன் என்பவன் துணிந்து ஊன்யாக முதலியவற்றைக் கலந்து விட்ட பிழைக்கு அஞ்சி நடுங்கிடுவாரோ? என் பெருமான் அருள் பெற்ற நமர், அவன் அருளால் இதை உணர்ந்து, அதைக் களைந்து ஏற்பார்கள் என்று கொள்க!

தேன் தோற்கும் இனியமொழியுடை மான்மகள் வள்ளிக்குச் சொக்கும் சொக்கன் மகனுக்கு ஊன் உருக பக்தி செய்வோரை, அவன் கண் பார்வை கை விடுமோ?வேன்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
பழனித் திருவாயிரம்-நூல்-இரண்டாவது- வெண்பா அந்தாதி - 69- பழனிப் பெருமான் திருவடிகளுக்குச் சமர்ப்பணம் 👆
ravi said…
தேன் தோற்கும் இனியமொழியுடை மான்மகள் வள்ளிக்குச் சொக்கும் சொக்கன் மகனுக்கு ஊன் உருக பக்தி செய்வோரை, அவன் கண் பார்வை கை விடுமோ?
ravi said…
*ராமா*

உன் கால் வண்ணம் கண்டாள் அகல்யா

உன் எழில் வண்ணம் கண்டாள் சீதா

உன் கை வண்ணம் கண்டான் தசமுகன்

உன் சொல் வண்ணம் கண்டோம் உன் நாமம் உரைத்தே

தேன் இன்று கசப்பதேன் ?

கற்கண்டு புளிப்பதேன்?

சர்க்கரை துவப்பதேன்?

கரும்பின் சுவை வெறுப்பதேன் ?

தேன் உண்ட தேனீக்கள் கொண்ட மௌனம்
மனதில் அலை பாய்வதேன் ?

உன் நாமம் ஒன்றே இனிக்க

மற்றவை நிழலாகி போவதேன் ?

நிஜம் கூறுவாயோ ?

அகல்யாவைப் போல் கல்லாய் சமைத்து நின்றோம்

உன் நாமம் செதுக்கி எங்களை உன்னுடன் அணைத்துக்கொள்ளும் விந்தை கண்டே

தேனாய் பாலாய் பாகாய் , வெண்ணெயாய் உருகி போனோம்

உத்தமனே

வில் இன்றி
வேல் இன்றி
அம்பு இன்றி

வென்றாய் எங்களை

வீடு பெற்றோம் அங்கே வாசல் தோரணமாய் உன் நாமம் வைத்தோம் *ராமா* 💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

80 –
முடு அடி காணா முடி விடுத்து அனைநேர்
முடுவிடக் கடனிலை அருணாசலா (அ)
ravi said…
முடி காணா பிரம்மன் அடி காணா திருமால்

அன்று மூர்ச்சை ஆயினரே முயற்சியில் தோல்வி கண்டே

அகம் கொண்ட கங்கை

மதி இழந்த திங்கள்

கதி என்று வந்த முயலகன்

துவண்டு விழுந்த மான்

துரத்தி வந்த புலி

குரல் கொடுத்த களிறு

விஷம் கக்கிய நாகங்கள்

விடை பெற்ற உயிர்கள்

தன் வீடு இழந்து உன் வீடு பெற்றனரே ...

யாரும் காணா திருவடிகள் என் சென்னி காண வைத்தாய் ...

எவரும் உணரா தத்துவம் எண்ணில் உலாவ விட்டார்

எவரும் புரியா தவப்பயன்கள் என்னிடம் தந்தாய்

எந்தையே என் சொல்வேன் ...

என்னிலும் பாக்கியம் செய்தவரும் உளரோ நீ படைத்த அண்ட சராசரங்களில் ?? 💐💐💐
ravi said…
💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 496* 🙏🙏🙏started on 7th Oct 2021

*216வது திருநாமம்*
ravi said…
*216 *महासत्त्वा - மஹாஸத்வா -*

எல்லா ஞானமும் தானேயானவள். சத்வ குண சீலி.😌😌😌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 91*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*78*
ravi said…
विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले ।

भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥ ७८॥

78. Vidhye vidhathru vishaye kathyayini Kali Kamakoti kale,

Bharathi Bhairavi Bhadre sakini shambhavi shive sthuthe bhavathim

வித்யே விதாத்றுவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே |

பாரதி பைரவி பத்ரே ஶாகினி ஶாம்பவி ஶிவே ஸ்துவே பவதீம் ||78||
ravi said…
ப்ரம்மாவின் நாவில் உறைந்து பிரம்மாவை மகிழ்விக்கும் ஸரஸ்வதி தேவி அம்சமும் நீயே அம்பா.

தேவர்களுக்கு உதவ, காத்யாயன மகரிஷி மகளாக உருவெடுத்து காத்யாயனி என பெயர் கொண்டவளே.

கரிய நிறம் கொண்ட கோபமான காளியும் நீயே.

கலாமாலா , கலாநாதா, காலாத்மிகா, கலாவதி என்று ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பெயர் கொண்டவளே,

வித்யா, விதாத்ருவிஷயா, பாரதி என்பவை ஸரஸ்வதியாக நீ அழைக்கப்படும் பெயர்கள் அல்லவா?

சிவனின் மனைவியாக பைரவி, மங்களரூபிணி, பத்ரா என்றும் பெயர் கொண்டவளே,

சாம்பவி, சிவை, யோகினி, சாகம்பரி என்றெல்லாம் புகழப்படுவளே ,

உன்னை நமஸ்கரிக்கிறேன். 🌞🌞🌞
ravi said…
🌹🌺" *ஸ்ரீராமா* !
*இந்த உலகில் உங்களை* *போன்ற*
*வலிமையான ரக்ஷகன்* *இல்லவே*
*இல்லை என்ற ரிஷிகள்* - *விளக்கும்* *எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺"14 வருடங்கள் தண்டக வனத்தில்
வாழ வேண்டும்" என்று கைகேயி
வரமாக தசரதரிடம் கேட்டு
கொண்டதால், ஸ்ரீராமபிரான்
சித்ர கூடத்தில் பரதனை பார்த்து
தன் பாதுகையை கொடுத்து
சமாதானம் செய்து, அயோத்திக்கு
திருப்பி அனுப்பிய பிறகு தண்டக
வனத்தில் பிரவேசித்தார்.
அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார்.

🌺ஸ்ரீராமபிரானை தரிசித்த பிறகு,
சரபங்க ரிஷி தன் உடலை
அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம
லோகம் சென்று விட்டார்.

🌺சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன
ரிஷியைபார்க்க பல வனங்கள்,
மலைகள் கடந்து வந்து
கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான்.
கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும்
வந்து கொண்டிருந்தனர்.

🌺வரும் வழிகளில், பல ரிஷிகள்
தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

🌺அப்போது சில ரிஷிகள்
ஸ்ரீராமபிரானை பார்த்து,
தங்களுக்கு நேரும் அபாயத்தை
பற்றி விவரித்து, ராமபிரானிடம்
அபயம் கேட்டனர்.

🌺"ஸ்ரீராமா ! நாங்கள் பெரும்பாலும்
வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள்.
உங்களை போன்ற பாதுகாவலர்
இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால்
அனாதைகள் போல நாங்கள்
குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.

🌺ஸ்ரீராமா ! இதோ பாருங்கள்..
இங்கு குவியலாக கிடக்கும்
எலும்பு குவியலை. நர மாமிசம்
உண்ணும் ராக்ஷஸர்கள், தவம்
செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை
விழுங்கி துப்பிய எலும்புகள் இவை.

🌺ஸ்ரீராமா! பம்பா நதிக்கரையில்,
மந்தாகினி ஓடும் நதிக்கரையில்,
சித்ரகூட சமீபத்தில் வசிக்கும்
அனைவரையும் கொத்து கொத்தாக
கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.

🌺ஸ்ரீராமா! ராக்ஷஸர்கள் செய்யும்
இந்த பெரும் நாசத்தை, எங்களால்
பொறுத்து கொள்ள முடியவில்லை.

🌺நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு
தகுதியானவர். எனவே உங்கள்
பாதுகாப்பை நாடி நாங்கள்
உங்களிடம் வந்துள்ளோம்.

🌺இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால்
நாங்கள் கொல்லப்படுகிறோம்.
எங்களை காப்பாற்றுங்கள்.

🌺பராக்ரமசாலியே ! ஸ்ரீராமா !
இந்த உலகில் உங்களை போன்ற
வலிமையான ரக்ஷகன் இல்லவே
இல்லை.
நீங்கள் எங்கள் அனைவரையும்
இந்த ராக்ஷஸர்களிடமிருந்து
ரக்ஷிக்க வேண்டும். "

🌺இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல,
தர்மத்தில் இருப்பவர்களை காக்கும்
காகுஸ்தனான ஸ்ரீராமபிரான்
கம்பீரமாக பேசலானார்..

🌺"ரிஷிகளான தாங்கள் இவ்வாறு
என்னிடம் கேட்பது கூடாது.
எனக்கு நீங்கள் ஆணை இட
வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை
செயல்படுத்தும் சேவகன் நான்.

🌺நான் என்னுடைய கடமையை
செய்யவே வனத்திற்கு வந்தேன்.
என் தந்தையின் கட்டளைகளுக்கு
கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு
வந்த நான், உங்களுக்கு தொந்தரவு
செய்யும் இந்த ராக்ஷஸர்களை
தடுப்பேன்.

🌺அதிர்ஷ்டத்தால்,
உங்களுக்கு சேவை செய்ய,
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
உங்களுக்கு சேவை செய்வதால்
என் வனவாசம் பலன் பெற்றது.
உங்களுக்கு எதிரியாக இருக்கும்
அந்த ராக்ஷஸர்களை நான்
ஒழிப்பேன்.

🌺மஹாத்மாக்களான ரிஷிகளே!
என் சகோதரனோடு நான்
வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள்
காணப்போகிறீர்கள்."

🌺சங்கல்பத்தில் உறுதியும்,
மரியாதைக்குரியவருமான
துணிவுடைய ராமபிரான்,
தவமே செல்வமாக கொண்ட
ரிஷிகளைப் பாதுகாப்பதாக
உறுதியளித்தார்.

🌺 *மூல ராமோ விஜயதே*
*குரு ராஜோ விஜயதே* .🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "Sri Rama!
Like you in this world
There is no strong Rakshakan
The Rishis of No - A Simple Story to Explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 "14 years in Dandaka Vanam
Kaikeyi said, "I want to live."
Ask Dasaratha as a boon
Because of that, Sri Ramaphiran
Seeing Bharata in the Chitra Hall
Giving his protection
Make peace and go to Ayodhya
Penalty after repatriation
He entered the forest.
There he visited Sage Sarabanga.

🌺After visiting Sri Rambhiran,
Sarabhanga Rishi his body
Left in Agni, Brahma
The world is gone.

🌺Sudaikshana, as Sarabangar said
Many forests to see the Rishi,
came across the mountains
Sri Ramabhran had.
Also Lakshmana and Sita Devi
were coming

🌺In the coming ways, many rishis
They were engaged in penance.

🌺Then some rishis
Seeing Sri Ramabhira,
risk to themselves
Narrating about, to Ramapiran
They asked for danger.

🌺 "Sri Rama! We are mostly
Brahmins who hold Vanaprastam.
A protector like you
However, here by Rakshasas
We are like orphans
We are being killed in droves.

Sri Rama! Look here..
There are heaps here
A pile of bones. Nerve steak
Eating rakshasas, penance
rishis who are doing
These are the swallowed bones.

🌺 Sri Rama! On the banks of the river Pampa,
On the banks of the flowing river Mantakini,
Chitrakuta resides recently
Bunch everyone up
Rakshasas are killing.

🌺 Sri Rama! Rakshasers do
This great destruction, by us
Couldn't bear it.

🌺 To shelter you
deserving. So your
We seek protection
We have come to you.

🌺By the rakshasas who roam the night
We are being killed.
Save us.

🌺 You are talented! Sri Rama!
Like you in this world
There is no strong Rakshakan
No.
You are all of us
From these monsters
To be protected. "

🌺Thus the ascetic sages say,
Protects those who are righteous
Kakusthan Sri Ramabhran
He spoke majestically..

🌺 "You rishis are like this
Don't ask me.
Place your order for me
want Your order
I am the implementing servant.

🌺 I do my duty
I came to the forest to do it.
To my father's commands
Obedient to this forest
I came, bothering you
These monsters do
I will block.

🌺Fortunately,
To serve you,
I got a chance.
By serving you
My exile paid off.
will be your enemy
I am those monsters
I will get rid of it.

🌺 Mahatma Rishis!
Me with my brother
You show bravery
You will see."

🌺Resolute in Sankalpam,
Honorable
Brave Ramabran,
Penance is wealth
To protect the rishis
promised.

🌺 Source Ramo Vijayate
Guru Raju Vijayate.🌹

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
24.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 42)

Sanskrit Version:

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च।
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः।।1.42।।

English Version:

sangkaro narakaayaiva
kulaGnaanaam kulasya cha |
patanti pitaro hyeshaam
lupta pinDodakapriyaah ||

Shloka Meaning

When the purity of caste is polluted by confusion and mixture, caste pollution leads to hell for both the family
and the slayers of the family, and the dead fore fathers fall from the higher realms of existence,
being deprived of the rites of Shraardha and Tarpana.

Jai Shri Krishna 🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம்முடைய மடத்துக்கு அம்பாள் காமாக்ஷி ரொம்ப முக்கியம்; ஜீவநாடி அவள்தான். அவளைப் பற்றி ஐநூறு ச்லோகம், “மூக பஞ்சசதீ” என்று. அதைப் பண்ணிய மூகர் அவளையே முதல் சதகத்தில் ஒரு இடத்தில் “குருமூர்த்தே” என்று கூப்பிட்டு “உனக்கு நமஸ்காரம்மா!” என்று சொல்லியிருக்கிறார். குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி. *1 அவளுடைய க்ருபையாலேயே அத்வைத ஞானம் ஸித்திப்பதை பஞ்சசதீயில் அநேக இடங்களில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முதல் சதகத்தில் துர்காம்பாள், சாமுண்டேச்வரி, அன்னபூர்ணேச்வரி, வாராஹி முதலிய பல ரூப பேதங்களாகவும் காமாக்ஷியையே சொல்லிவிட்டு, ஏறக்குறைய முடிக்கும் இடத்தில்,
ravi said…
“அம்மா! உன்னுடைய க்ருபையால் சிலபேர் குரு சரணத்தில் சரணாகதி பண்ணி, அதனால் ஸகுணாபாஸனையோ, நிர்குணோபாஸனையோ எதுவோ ஒன்றால் ஏணியில் ஏறிப்போவது போலப் போய் மோக்ஷம் என்னும் அரண்மனை உப்பரிகையில் வாஸம் செய்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்:

ravi said…
ஸத்க்ருத-தேசிக-சரணா: ஸபீஜ-நிர்பீஜ-யோக-நிச்ரேண்யா |
அபவர்க-ஸெளத-வலபீம் ஆரோஹந்த்யம்ப கே(அ)பி தவ க்ருபயா || *2

‘ஸெளதவலபி’ என்றால் அரண்மனை மேல் மாடம். ‘ஸெளதம்’ என்றால் அரண்மனை நேர் அர்த்தம், ‘சுதையால் ஆனது; சுதைக் கட்டிடம்’ என்பது. ஸுதை, ஸுதா ஸம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு அம்ருதம் என்பதுதான் முக்யமான அர்த்தம். ஜில்லென்று ஹிதமாக உள்ள அம்ருதப் பேரையே வெந்து வேக்காடாக்கும் சுண்ணாம்புக் கலவைக்குப் பேராகக் கொடுத்திருக்கிறது! நல்லதில்லாத ஒன்றை மங்களமாகச் சொல்லவேண்டும் என்று அதற்கு நேரேதிராக உள்ள நல்ல வஸ்துவின் பேரில் சொல்லும் வழக்கமுண்டு. அடிமண்டுவை ‘ப்ருஹஸ்பதி’ என்கிற மாதிரி. ‘மங்கல வழக்கு’,’ Euphemism என்று இதைச் சொல்வார்கள். வேதாந்தமாகப் பார்த்தால், கெட்டதைக் கூட நல்லதாகப் பார்க்கவேண்டும் என்ற ஸம பாவனை வருவதற்காக இப்படிச் சொல்வது என்கலாம்… ச்லோகத்தில் மோக்ஷத்தைச் சொல்லும்போது சுதை மாளிகை என்று ‘ஸுதா’ போட்டதில் உள்ளர்த்தமிருக்கிறது. [‘ஸுதா’ என்பதே பெயரெச்சத்தில் ‘ஸெளத’ என்றாயிருக்கிறது.] அம்பாளை யோக மார்க்கத்தில் உபாஸனை செய்யும்போது முடிவாக சிரஸ் உச்சியில் ப்ராணசக்தி பரமாத்ம சக்தியோடு இரண்டறக் கலந்து மோக்ஷம் சித்திக்கும். அந்த ஸமயத்தில் அங்கே ஸுதா தாரை, அம்ருததாரை, பெருக்கெடுக்கும். அதையும் குறிப்பிடுவதாகவே ‘ஸெளத’ வலபி என்று கவி போட்டிருக்கிறார். யோகம் என்று நிர்குணமாகப் பண்ணும்போது ஸுதா தாரை பெருக்கெடுக்கும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு ஸாதனை செய்யப்படுகிறது. அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் ப்ரேம பக்தியிலேயே ஸகுணமாக உபாஸித்தாலும் அவள் அந்த உச்ச ஸ்தானத்துக்கு ப்ராண சக்தியை ஏற்றி அம்ருத தாரையில் முழுக்கடிக்கத்தான் செய்வாள். இந்த ஸகுணம் – நிர்குணம் இரண்டையுமே ‘ஸபீஜம் நிர்பீஜம்’ என்று ச்லோகத்தில் சொல்லியிருப்பது. அடியிலிருந்து உச்சிக்கு ப்ராணசக்தி ஏறுவதால் ஏணியில் ஏறிப்போவதைச் சொல்வதும் பொருத்தமாயிருக்கிறது. ‘நிச்ரேணி’ என்ற வார்த்தைக்கு ‘ஏணி’ என்று அர்த்தம். ‘நிச்ரேண்யா’ – ‘ஏணியினால்’, ‘ஏணி வழியாக’. ‘ச்ரேணி’ என்றால் வரிசை. அதிலிருந்துதான் ஏணி என்ற வார்த்தை வந்திருக்கிறது. ‘ச்ரமணர்’ என்பது ‘அமணர்’ என்றும் ‘ச்ராவணி’ என்பது ‘ஆவணி’ என்றும் ஆகிறமாதிரி ‘ச்ரேணி’ என்பது ‘ஏணி’ ஆகிறது.

ravi said…
பராசக்தியின் க்ருபை இருந்தால்தான் ஸத்குரு கிடைப்பதும், அவரிடம் சரணாகதி பண்ணத் தோன்றுவதும். அதைத்தான் “ஸத்க்ருத தேசிக சரணா:…. தவ க்ருபயா” என்று சொல்லியிருக்கிறார்.

இங்கே ஸத்குரு என்பதற்கு “தேசிக” என்ற வாரத்தையையே போட்டிருக்கிறது என்று காட்ட வந்தேன். மோக்ஷ உச்சிக்கு ஏற்றிவிடக்கூடிய சக்தியுள்ளவராக ‘தேசிகர்’ இருக்கிறார்.

ravi said…
அம்பாள் க்ருபையால் தேசிகர் கிடைத்து அவரிடம் சரணாகதி செய்வதையே மூகர் சொன்னாரென்றால், காளிதாஸர் அம்பாளையே தேசிக ரூபிணியாகச் சொல்லியிருக்கிறார். ‘ச்யாமளா தண்டகம்’ பண்ணிய அவர் ‘ச்யாமளா நவரத்னமாலா’ என்ற ஸ்தோத்ரமும் செய்திருக்கிறார். அதில்,

தயமாந தீர்க்க நயநாம்
தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்

என்று குரு ஸ்வரூபிணியாக அவளைச் சொல்லியிருக்கிறார். ‘தயமான’ என்பதில் வருகிற ‘தய’வை ‘தர்சிதாப்யுதயாம்’ என்று திருப்பி அழகாக சப்தாலங்காரம்-சொல்லணி- செய்திருக்கிறார்.

ravi said…
அம்பாளுடைய அழகான நீண்ட நேத்ரங்களில் தயை பெருகுகிறது. அப்படி தயாகடாக்ஷம் செய்கிறவள் தேசிக ரூபத்தில் – குரு ஸ்வரூபிணியாக – வந்து அப்யுதயத்தைக் காட்டுகிறாள் என்கிறார். ‘அப்யுதயம்’ என்றால் நல்ல எழுச்சி. ‘ஸூர்ய உதயம்’ என்பதை ஸூர்யன் எழுந்தான் என்கிறோம். ‘உதயம்-எழுச்சி. ‘அப்யுதயம்’ – உயர்வு பொருந்திய எழுச்சி. ‘தர்சித அப்யுதயாம்’ என்பதற்கு இரண்டு தினுஸாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அம்பாள் தன்னுடைய அனுக்ரஹத்தின் மேலான எழுச்சியை பக்தனுக்குக் காட்டுகிறாள் என்பது ஒன்று. இன்னொன்று – பக்தனுக்கு அவனுடைய மேலான அத்யாத்ம எழுச்சியைக் காட்டுகிறாள்; அதாவது ‘தேசிக’ சப்தத்திற்கேற்ப, அவன் ஆத்யாத்மிகமாக உயரே எழும்ப வழிகாட்டுகிறாள் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

தயாகடாக்ஷத்தைச் சொல்லி உடனே தேசிக ஸ்வரூபத்தைச் சொல்வதில் நிரம்பப் பொருள் பொதிந்திருக்கிறது. கண் பார்வைதான் ஒருத்தரை வழிநடத்திச் செல்வது. கண்ணில்லாதவரை வேறெவராவது தானே பிடித்து நடத்திச் செல்லவேண்டியிருக்கிறது? ஆகையால் கண்ணே நம்மை அழைத்துப் போவதாக ஆகிறது. கண் காட்டிக் கொடுக்கும்படிதான் கால் நடப்பது. ‘நயனம்’ என்கிற வார்த்தைக்கும் வழிநடத்திப் போவது, முன்னே சென்று வழி காட்டுவது, ‘லீட்’ பண்ணுவது என்றுதான் அர்த்தம். நம் ஒவ்வொருவருடைய கண்ணும் அவரவருக்குத்தான் வழிகாட்டி அழைத்துப் போகிறது; அம்பாளுடைய கண்ணோ அதிலிருந்து பெருகும் தயா கடாக்ஷத்தால் லோகத்து ஜனங்களையெல்லாம் ச்ரேயோ மார்க்கத்தில் வழிகாட்டி அழைத்துப் போகிறது!

உத்தம குருவாயுள்ள எவருமே சிஷ்யர்களுக்குக் கடாக்ஷ மாத்திரத்தால் தீக்ஷை தந்து நல்வழி நடத்திச் செல்லமுடியும்.*3 அதற்கு ‘நயன தீக்ஷை’ என்றும் ‘சக்ஷு தீக்ஷை’ என்றும் பெயர். சக்ஷு என்றாலும் கண்தான்.

மீநாக்ஷியம்மனை சக்ஷுதீக்ஷை தரும் குருவாகவே மஹான்கள் அநுபவத்தில் கண்டிருக்கிறார்கள். ஒரு தாயார்-மீன் தான் இட்ட முட்டையைக் கண்ணால் பார்த்தே பொறிக்க வைத்துவிடும் என்று நம்பிக்கை. முட்டை பொரிந்ததும் உள்ளேயிருந்த கரு முழு ப்ராணியாகிறது. அப்படியே மீன்போன்ற நயனங்களைக் கொண்ட மீநாக்ஷி ஒருவரைக் கடாக்ஷித்து, சக்ஷு தீக்ஷை கொடுத்தால் அந்த ஜீவனுக்குள்ளே கரு மாதிரி உள்ள ஆத்ம தத்வம் பூர்ணமாக விகஸித்து [மலர்ச்சி கண்டு]விடும்.

மீநாக்ஷியையே மந்த்ர சாஸ்த்ரத்தில் ச்யாமளா என்று சொல்வது. மந்த்ரிணி, மாதங்கி, ச்யாமளா என்ற மூன்று பெயர்களும் மீநாக்ஷியுடையவையே. அவளைக் குறித்துத் தான் காளிதாஸர் இந்த நவரத்னமாலை பாடியது. ஆகையால் அவளுடைய தயா கடாக்ஷத்தை அவர் சொல்லும்போதே குருவாக அவள் சக்ஷு தீக்ஷை தருவதை வ்யங்க்யமாக [மறைமுகமாக]த் தெரிவித்து விடுகிறார். அப்புறம் வ்யக்தமாகவே [வெளிப்படையாகவே] “தேசிக ரூபேணே தர்சிதாப்யுதயாம்” என்று சொல்லிவிடுகிறார்.

ஞானாம்பிகையாக உள்ள அவள் தேசிக ரூபத்தில் எல்லோருக்கும் அருள்புரிந்து நல்லவழியில் போகப் பண்ணும்படி ப்ரார்த்தனை செய்வோம்.
ravi said…
"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் எழுதப்பெற்ற "கிருஷ்ண மந்திரம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை.

"கறுத்தன எந்தை தன் கண்ணன்
வண்ணக் கனக வெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு
நல்கின பேரருள் கூர்
திருத்தன பாரமும் ஆரமும்
செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே
வந்து என் முன் நிற்கவே..."

ravi said…
சுவாமி நம் முன்னாடி வந்து நிக்கணும். அம்பாள் முன்னாடி வந்து நின்னாதான் கரையேற முடியும்.

அவ முன்னாடி வந்து எப்போ நிப்போ. நான் கூப்பிட்டாவா. நான் வித்தை பண்ணியா. நான் மந்திர ஜபம் பண்ணியா. நான் ஹோமம் பண்ணியா. என் தந்திரத்துக்கு மசிவாளா.

இல்லை, அதுவே தன்னைக் காட்டினாலொழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது. அம்பாளே வந்து நிக்கணும். அவளே ஆசைப்படணும். என்னுடைய முயற்சியால் இங்கு எதுவும் நடக்காது.

அப்போ இதெல்லாம் எதுக்கு. இந்த பூஜை எதுக்கு. இந்த ஜபம் எதுக்கு.

சும்மாயிருக்கறதுக்குத்தான்.

"
ravi said…
வெறுமே எந்தச் செயலும் செய்யாத மனதிற்குள் இறைவன் வந்து அமர்கிறான். எண்ணங்களை ஏற்படுத்துவதுதான் மனதின் சக்தி. அந்த எண்ணங்கள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட மனதின் வேறொரு சக்தி வெளிப்படுகிறது.

எண்ணங்கள் ஏற்படுவதை எப்படி நிறுத்துவது. எண்ணங்களை உற்றுப் பார்க்கும்போது. இது யாருக்கு ஏற்படுகிறது என்று பார்க்கும்போது.

எங்கிருந்து இந்த எண்ணம் உதயமாகிறது, அந்த உதயத்தை, அந்த வேர்நுனியை கவனிக்கிறபோது மனம் வெட்கப்பட்டு சுருங்கத் துவங்குகிறது. மனம் சுருங்கி ஒன்றுமில்லாமல் போகிறது.

மனம் காணாமல் போன நேரத்தில் வேறொரு சக்தி வெளிப்படுகிறது. உங்களைச் சூழ்ந்து கொள்கிறது. அதை விவரிக்க முடியாது.

நீங்களற்று நடக்கின்ற அந்த மன அசைவில், உடல் அசைவில் வேறு விஷயங்கள் வெளியாகின்றன. உடம்பில் மாறுதல்கள் ஏற்படுகின்றன.

மனம் முற்றிலும் படுத்துக் கிடந்து காணாமல் போகிறபோது உங்களுடைய அவயங்கள் என்ன செய்வது என்று அறியாது நிலை குலைந்து முழு வேகத்தில் செயல்படத் துவங்குகின்றன.

அப்போது உடம்பின் மாற்றம் மிகப் பலமாய் இருக்கிறது. இதுவரை அனுபவித்திராத ஒரு வேகம் தோன்றுகிறது. அந்த வேகத்தை அனுபவிக்க அங்கு எவரும் இல்லை.

ravi said…
எனவே எந்தக் குறிக்கோளும் இல்லாமல் பானையிலிருந்து உடைந்த ஜலம் போல உங்களிடமிருந்து சக்தி பீறிடுகிறது.

அது பழக்கதோஷத்தினால் இதுவரை செய்து வந்த பழக்கம் போல பாட்டாகவோ, ஆட்டமாகவோ, பேச்சாகவோ இருக்கலாம்.

அல்லது இவை எதுவுமல்லாது வெறும் பிளிறலாய் அன்புச் சிரிப்பாய், ஆவேசமான கூக்குரலாயும் இருக்கலாம். பாட்டும், ஆவேசக் கூக்குரலும் ஒரு ஆட்டமும் ஒரு வெளிறச் சிரிப்பும் ஒன்றே. ஒரே விதமான வெளிப்பாடே.

அப்படிப்பட்ட ஒரு நிலையிலிருந்து பாடியதுதான் இந்த அபிராமி அந்தாதி. "பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்."

ஒரு குழந்தைக்குத் தாயார் பால் ஊட்டறது போல, குழந்தையினுடைய பசியறிந்து அந்த அழுகையை நிறுத்துவதற்கு, அதன் துன்பத்தை நீக்குவதற்கு பால் கொடுப்பது போல் அம்பாளுடைய கருணை நம்மீது பாய்கிறது.

நமக்கு என்ன வேணும்னு தெரியாது. என்ன கொடுத்தால் நம்முடைய அழுகை குறையும்னு அவளுக்குத் தெரியும். அடுத்தப் பாட்டு என்ன தெரியுமா. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை...

மனசே அடங்கிப் போயிடுத்துன்னா மனசுக்குள்ள இருக்கற விதம்விதமான பசிகள் அம்பாளுடைய க்ருபையில் காணாமப் போயிடுத்துன்னா அப்புறம் என்ன நினைச்சுண்டிருப்ப. என்ன வேலை உனக்கு.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை...

உள்ளுக்குள்ள எப்பவும் அவ நினைப்புதான். அந்த சாஸ்வதம்தான். அதுதான் முழுமை. அதுதான் முழுசு. அதுக்குத்தான் போராட்டம். அதுக்குத்தான் பூஜை.

உள்ள இருக்கறது அத்தனையும் சுத்தமாகத் துடைத்துவிட்டு அவள் கருணையை உள்வாங்கி அவளையே நினைத்துக் கொண்டிருப்பது.

வேற ஒண்ணுமில்லை. இதுக்குத்தான் பூஜை. ஆடற மனசை நங்கூரம் போட்டு அடக்கறா மாதிரி ஒரு பயிற்சி.

யானை கையில சங்கிலி கொடுத்த மாதிரி மந்திர ஜபத்தை மனசுக்குள்ள கொடுத்துடோம்னாக்க அது மந்திர ஜபத்தை பிடிச்சுண்டிருக்கும். இங்க அங்க, அதை இதை தொட்டுண்டு அலையாது.

இது ஒரு பயிற்சி. இதுவொரு சாக்கு. ஆனால் இதுவே முழுமையல்ல. இது எதை நோக்கிப் போக வேண்டும். மனம் அழிதல். தான் காணாமல் போதல்.

அப்போது வேறொரு சக்தி வருகிறது. அந்தச் சக்தியோடு இங்கே கிடத்தல். இதுதான் பூஜை."

(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)

நன்றி.
குருவே துணை.
ravi said…
ராம் ராம் 🙏🏻🙏🏻

ராம நாம சுர வந்தித ராம்

ரவிகுல ஜனநிதி தந்தவராம்

சாகேதஸ்தலம் வந்தவராம்

தசரத கோசலை தந்தவராம்

விஸ்வாமித்ரர் பின் சென்றவராம்

மேவு தாடகையைககொன்றவராம்

அகலிகை சாபம் முடித்தவராம்

அரியதோர் பாணம் ஒடித்தவராம்

பாவை சீதை மணம் கொண்டவராம்

பரசுராமன் வலி கொண்டவராம்

தாய் மொழிப்படி வனம் போந்தவராம்

சாரும் குகன்பால் அன்பு மீந்தவராம்

பரதற்கு பாதுகம் ஈந்தவராம்

பரவு தண்டகவனம் போந்தவராம்

முனிவர்களுக்கு அபயம்
அளித்தவராம்

முனிவர் புகழக்கண்டு களித்தவராம்

சூர்பனகைக்கு மையல் கொடுத்தவராம்

தோன்றும் கரன் படையைக்கெடுத்தவராம்

மாயமானின் பின்னே ஓடினராம்

வைதேகியைப் பிரிந்து தேடினாராம்

சபரிக்குத் தன்பதம் தந்தவராம்

சாரும் அனுமனை உகந்தவராம்

சூரனாம் வாலியை வாட்டினராம்

சுக்ரீவனை முடி சூட்டினராம்

அனுமனை சீதைபால் விடுத்தனராம்

அடையாளமும் கையில் கொடுத்தனராம்

தேவி சூடாமணி பெற்றவராம்

தென் சமுத்திரக் கரை உற்றவராம்

சரணம் விபீஷணர்க்கு ஈந்தவராம்

சமுத்திரம் அணைகட்டி போந்தவராம்

இராவணாதியரைக் கொன்றவராம்

ராட்சசர் முதலற வென்றவராம்

அன்னையை சிறை நீக்கினராம்

அவர் பெருமையை வெளியாக்கினராம்

வீடணனுக்கு முடி புனைந்தவராம்

மேவும் அயோத்தி செல்ல நினைந்தவராம்

புஷ்பக மீதில் போனவராம்

புண்ய முனிவர் விருந்தானவராம்

சேதுவில் பூஜை செய்தவராம்

சேர அரக்கர் பழி கொய்தவராம்

அனுமனை பரதன்பால் விடுத்தனராம்

அவன் உயிர் அழியாமல் தடுத்தவராம்

தமர் அயோத்திலன் மீண்டவராம்

கைகேயி மலர்ப்பதம் பூண்டவராம்

மகிழ்ச்சி எவரும் பெறக்கொண்டவராம்

மகுடாபிஷேகம் கொண்டவராம்

குவலய ரக்ஷணை புரிந்தவராம்

கோதண்ட ரக்ஷ குருவரராம் ... !!!

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம.
ravi said…
*இன்றைய சிந்தனை (24.02.2023)*
…………………………………...

*"அவன் தான் மனிதன்"*
......................................


பூமியில் வாழும் மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது...

ஆனால்!, விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு, கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன...

ஆனால்!, மனிதனை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்தே அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை...
படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை...
தலைமுறைக்கு பெண்ணின் உதவி தேவை...
இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம்...

ஆனால்!, தற்போதைய காலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலை கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்...? - என்று வீணே வழக்குரைக்கின்றான்...

அப்படி கேள்வி கேட்போருக்கு ஒரு செய்தி இதோ...!

ஓருவர் அவரின் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது, அழகிய பெண் ஒருவர் வந்து 500 ரூபாய்க்குப் கரிக்கோல் மற்றும் மைக்கோல் வாங்கிச் சென்றிருக்கிறார்...(கரிக்கோல் - பென்சில், மைக்கோல் - பேனா)

நண்பர் வந்தவரிடம் "இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா...?” என்று கேட்டிருக்கிறார்...

”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் வந்தவர்...

“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார். ஆனால் அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா...?

இந்தச் சூழலிலும் வெறும் 5000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 500 ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு பென்சில், பேனாவாக வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் வந்தவரின் நண்பர்...

_*”மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும்...!*_

இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு வழங்கிச் சென்றது.

மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்...

*ஆம் தோழர்களே...!*

*இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த நாம் , மனித்தன்மை பெற்று வாழ வேண்டும் . எல்லா உயிர் இனங்களை காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்குத்தான் இருக்கிறது...!*

*மனிதனாக பிறந்த நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்து விட்டு செல்ல வேண்டும்...!!*

*வந்தோம் , பிறந்தோம் , வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், அடுத்த வரும் நம் தலைமுறை நன்கு வாழ்ந்திட அவர்களுக்கு நல் வாழ்வு வாழ வழி வகைகள் செய்யவேண்டும், நாம் இன்று எதிர்கொள்ளும் அல்லல்கள் வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் தூய பூமியாக விட்டு செல்வோம்...!!*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*"தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? எதை கேட்க வேண்டும்?"*

*ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.*

பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது,
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது,

என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.

ravi said…
ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே'என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

ravi said…
*1. கர்வம்*
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்"என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?

*2. ஆசை*

நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது.

ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.

முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.

கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.

பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.
ravi said…

*3. திருப்தி:*

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்

"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)

என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது"என்கிறார்.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

*4. இரக்கம்:*

நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".

இரக்க குணம் உள்ளவனுக்கு,
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல,
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

*5. மோக்ஷம்*

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன்.
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது?
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.

இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று.
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.

நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.
செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும்.
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?

'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.

"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும்,
பகவானிடம் கேள்"
என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.

நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு.

பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு,
மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு!! உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே !

"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா"

சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை
ravi said…

*3. திருப்தி:*

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்

"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)

என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது"என்கிறார்.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

*4. இரக்கம்:*

நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".

இரக்க குணம் உள்ளவனுக்கு,
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல,
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

*5. மோக்ஷம்*

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன்.
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது?
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.

இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று.
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.

நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.
செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும்.
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?

'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.

"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும்,
பகவானிடம் கேள்"
என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.

நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு.

பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு,
மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு!! உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே !

"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா"

சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 94 started on 6th nov

*பாடல் 29 ... இல்லே எனும்*

(அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ

பொல்லேன் அறியாமை பொறுத்திலையே

மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.🙌
ravi said…
1. பல மாறுதலுக்கு உட்பட்ட இப் பிரபஞ்சம் எவ்வித மாறுதலும்
இல்லாத ஒரு பொருளிலிருந்து தோன்றுகிறது.

நிலையற்ற
இவ்வுலகம் நிலையான பொருளிலிருந்து உற்பத்தி ஆகிறது.

அசைவுள்ள உலகம் அசையாத பொருளிலிருந்து வருகிறது.

இவ்வாறு மாறுதல் அடையாததும், நிலைத்ததும், அசைவில்லாத
பொருள்தான் பிரம்மம் எனப்படுகிறது.

பிரம்மமே பிரபஞ்சமாகவும்
தோற்றமளிக்கிறது (கயிறு பாம்பு போல தோன்றுவது போல).

பரிணாம வாதப்படி பிரம்மமே பிரபஞ்சமாக உருவெடுக்கிறது.

ஆனால் அது எப்படி இருந்தாலும் உலக உற்பத்தியில் பிரம்மத்திற்கு
எந்த வித பாதிப்பும் கிடையாது.

இந்த ஆச்சரியமான தொடர்புதான்
மாயை எனப்படுகிறது.

பூர்ண மத என்ற மந்திரம் இங்கு நோக்கற்பாலது.
ravi said…
*சிவானந்தலஹரி 64வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
நம சிவாய நம சிவாய
நண்பர்கள் உடன் விளையாட சென்ற வேடுவ இளவரசர் கண்ணப்பரை இறைவன் தன் கருணையால் ஆட்கொண்டார்.

இந்த கதையைக் கேட்க ஆனந்தமாக இருக்கு.

பக்தியில் திளைத்து அந்த உணர்வுடனே, எவையெவை அநாசாரமாக கருதப்பட்டவையோ அவைகள் எல்லாம் அந்தக் கண்ணப்ப நாயனாரின் அன்பு ததும்பிய பக்தி மூலம் புனிதமாயிற்று.

இறைவனின் கண்ணில் இருந்து ரத்தம் கசிவதைப் பார்த்து அவர் பச்சிலை மருத்துவம் செய்தும் ரத்தம் நிற்கவில்லை என்ற நிலையில் ஊனனுக்கு ஊன் (plastic surgery) என்று கருதி தன் கண்ணை இறைவனின் கண்ணில் அப்பினார்.

இது போன்ற உத்தமமான உள்ளுணர்வு உந்திய பக்திக்கு அவர் செயல் பக்தி எடுத்துக் காட்டாக உள்ளாது.

இந்த தூய்மையான பக்தியில் பகவானை ஸ்மரிக்க அவர் நம்மை ஆட்கொள்ள ப்ரார்த்திக்க வேண்டும்.

மற்றவை, பக்தி அனுக்ரஹம் செய்வது அவர் கருணையினால் மட்டும் நடக்கும்.
🙏🙏💐
ravi said…
*வஸுர்‌* வஸுமனாஸ்: ஸத்யஸ்:

ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
ravi said…
*106. வஸுமநஸே நமஹ (Vasumanase namaha)*
ravi said…
பதினாறாயிரத்து எட்டுப் பெண்களை மணம் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசாட்சி புரிந்து வந்தான்.

“ஒரு மன்னனுக்குத் தன் ராஜ்ஜியத்தின் நிர்வாக ரீதியிலான அலுவல்களைப் பார்க்கவே நேரம் இருக்காதே.

இதில் கண்ணன் எப்படி ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொண்டு,

பதினாறாயிரத்து எட்டு மனைவிகளையும்
திருப்திப் படுத்த முடியும்?”

என்ற ஐயம் நாரதருக்கு எழுந்தது.

அதனால் கண்ணனின் தினசரி நடவடிக்கைகள் என்ன
என அறியும் ஆவலுடன் துவாரகையை அடைந்தார் நாரதர்.🙏
Moorthi said…
வழிபாட்டு முறைகளை எடுத்துக் கூறும் அருமையான விளக்கம்.... ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

எந்த உறவிலும் சுமையாகிக்
கனத்துப் போய் விடாமல்,

ஒரு புன்னகையோடு விடை
பெற முடிந்தால் நலம்

அதுவே அவ்வுறவுக்கு நாம்
செய்யும் மரியாதையும் கூட.....

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
பாதாரவிந்த சதகம் !

91.பரிஷ்குர்வந் மாத: பசுபதி கபர்தம் சரண ராட்
பராசாம் ஹ்ருத் பத்மம் பரமபணிதீநாம் ச முகுடம்
பவாக்யே பாதோதௌ பரிஹரது காமாக்ஷி மமதா-
பராதீநத்வம் மே பரிமுஷித பாதோஜ மஹிமா

காமாக்ஷி ! தாயே / தாமரையின் பெருமையைப் பறிப்பவனாக, பசுக்களான ஜீவர்களின் பதியாகிய சிவனின் சடைமுடியையும், வெளிநோக்குள்ளவர்களின் இதயத்தாமரையையும் வேதவசனங்களின் மகுடமான உபநிஷத்தையும் சீராக்கிக் கொண்டு வருகிற உன் சரணமாகிய அரசன், ஸம்ஸாரக்கடலில் மமதையின் ஆட்சிக்கு உட்பட்ட நிலையைச் சீர்ப்படுத்தட்டும்.
மமதையை அகற்றிச் சடைமுடிமுதலானவற்றைச் சீரமைத்தது போல் என்னையும் சீரமைக்கட்டும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…

பழனிக் கடவுள் துணை -25.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-70

மூலம்:

சிலம்பும் சிலம்பணிந்து திண் சிலம்பு தோறும்
நலம்புரிந்து மீள்பழனி நாதன் – புலம்புமெனைத்
தள்ளாமல் ஏற்றால் தரையோரும் வானவரும்
துள்ளார்வந் தோய்வதுமெய்ச் சொல் (70).

பதப்பிரிவு:

சிலம்பும் சிலம்பு அணிந்து திண் சிலம்பு தோறும்
நலம் புரிந்து மீள் பழனி நாதன் – புலம்பும் எனைத்
தள்ளாமல் ஏற்றால் தரையோரும் வானவரும்
துள் ஆர்வம் தோய்வது மெய்ச் சொல்!! (70).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

ஒலிக்கின்ற வீரக் கழல் பொருந்தியக் காலணியைப் பூண்டு, மலை, நிலங்கள் நிலங்கள் தோறும் போய், எல்லோர்க்கும், நலமே புரிந்து, மீண்டு, பழனாபுரியில் நல்லாட்சி புரியும் பழனியின் தலைவன், எம் பெருமான், பழநியாண்டவன், அவன் வழி வழி அடிமை என்னை, அவன் அருள் நோக்கிப் புலம்பும் என்னைத் தள்ளாமல் ஏற்றால், பூவுலகில் உள்ளோரும், வான் உலகில் உள்ளோரும், அவன் மேல் துள்ளுகின்ற, பொங்குகின்ற ஆர்வம் பூண்டு அவன் திருவடியிலே தோய்வது என்பது சத்தியமான சொல் ஆகி விடும்!! பழனாபுரிப் பெருமாளே! என்னை அருள் கூர்ந்து நோக்காய்!

கந்தாவென்றுன் காலடியில் கிடக்குமென்னைக் கண்கூராய் கதிர்காமத்துக் கந்தவேளே*! தாளாதுத் தவிக்குமென்னைத் தள்ளாமல், தண்ணருள் தருவாய் தணிகாசலனே!

*25.02.2023- கதிர்காமத்துக் கந்தவேள் உறையும் கதிர்காமத்தில் இருந்து எம் பெருமான் பழநியாண்டவன் அருளால் எழுதியது.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
பழனித் திருவாயிரம்-நூல்-இரண்டாவது- வெண்பா அந்தாதி - 70- பழனிப் பெருமான் திருவடிகளுக்குச் சமர்ப்பணம் 👆
ravi said…
பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான் மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும்.புரியறதா?"---மகாபெரியவா

(பித்ரு தேவதைகள்,பிண்டத்தை பாரத பூமியில,பரதகண்டத்துல மட்டும்தான் வந்து வாங்கிக்கறதா சாஸ்திரவிதி இருக்கு)

நன்றி- -ஸ்ரீகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு சமயம் பணக்காரர் ஒருத்தர் தன் குடும்பத்தோட, மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் மடத்துக்கு வந்திருந்தார். இந்தியாவுலேர்ந்து அமெரிக்கா போய் அங்கேயே செட்டில் ஆனவர் அவர். வருஷத்துக்குரெண்டு தரமோ மூணு தரமோ இந்தியாவுக்கு வந்துட்டுப் போவார். இதெல்லாம் அவர் பேசினதுலேர்ந்து தெரிந்தது. அதுக்கப்புறம் அவர் பேசினதுதான் விஷயம்,

"பெரியவா நான் வெளிநாட்டுலயே இருந்துட்டாலும் நம்ம சாஸ்திர சம்பிரதாயத்தை எல்லாம் தவறாம அனுஷ்டிக்கறேன் பெத்தவாளோட ஸ்ராத்த கர்மாவை அங்கேயே பண்ணிடறேன் . அதுக்குத் தேவையான எல்லாத்தையும் இங்கேர்ந்து வரவழைச்சுடறேன்.ஒரு குறையும் வைக்கறதில்லை!" தான் சாஸ்திர சம்பிரதாயத்தை மீறாம நடந்துக்கறதை கொஞ்சம் கர்வமாக சொல்லிண்டார் அவர்.

அவர் சொன்னதைக் கேட்டு மௌனமா சிரிச்சார் மகாபெரியவா. வந்தவரே தொடர்ந்து பேச ஆரம்பிச்சார்.

"பெரியவா,இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, வெளிநாட்டுக்குப் போயும் ஒருத்தன் இத்தனை சிரத்தையா இருக்கான்கறதைத் தெரிஞ்சுண்டு,மத்தவாளும் இதே மாதிரி எதையும் விடாம சிரத்தையா பண்ணணும்தான். நீங்களே சொல்லுங்கோ, நான் நினைக்கறது சரிதானே?"

சுய தம்பட்டம் அடிச்சுண்டு அவர் இப்படிப் பேசினது, அங்கே இருந்த பலருக்கும் பிடிக்கலை. இருந்தாலும் மகாபெரியவா முன்னால அசூயை எதையும் காட்டிக்கக்கூடாதுன்னு எல்லாரும் அமைதியா இருந்தா.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டுண்ட மகாபெரியவா,

"ஸ்ராத்த சாமான்லாம் பெருஞ்செலவு பண்ணி இங்கேர்ந்து அங்கே வரவழைச்சுக்கறதா சொன்னே..சரி, பண்ணிவைக்க வைதீக பிராமணா வேணுமே, அது எப்படி..?அமைதியாகக் கேட்டார்.

"அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை பெரியவா. எங்க குடும்ப வாத்யார் இங்கே ஒருதரம் சிராத்தம் செஞ்சு வைச்சப்போ சொன்ன மந்திரமெல்லாம் ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கேன். அதைப் போட்டுக் கேட்டுண்டே செஞ்சுடறேன்! இங்கே வந்து வாத்யாரை வைச்சுண்டு செஞ்சுட்டுப் போறதுக்கான நேரமும் செலவும் மிச்சம் பாருங்கோ!" சொன்னார், வந்தவர்.

"வாஸ்தவம்தான், ஆமாம்..நீ இந்தியாவுக்கு எப்போல்லாம் வருவே?" மென்மையாகக் கேட்டார்,ஆசார்யா.

"
ravi said…
எத்தனைதரம், எப்போ வருவேன்னு சொல்ல முடியாது பெரியவா,எப்படியும் ரெண்டு மூணுதரம் பிசினஸ் விஷயமா வருவேன்.அப்புறம் நவராத்திரிக்கு கண்டிப்பா குடும்பத்தோட வருவேன். ஏன்னா, நம்ம பாரம்பரியப் பழக்கத்தை விடமுடியாது பாருங்கோ...!

சொன்னவர்,மகாபெரியவா கேட்காமலே மேலும் சில விஷயத்தைச் சொன்னார். "நான் பணத்தை லட்சியம் பண்றதில்லை. எப்பவும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல தான் வருவேன். ஏன்னா, சாதரண க்ளாஸ்ல வர்றவாள்ளாம் மட்டரகமா இருப்பா!"

பொறுமையாகக் கேட்டுண்டு இருந்த மகாபெரியவா பேச ஆரம்பிச்சார்,

" நீ சொல்றதெல்லாம் உன் வரைக்கும் சரிதான். ஆனா, அதெல்லாம் வாஸ்தவத்துல சரியான்னு நினைச்சுப்பார்த்தியோ? நெறைய பணம் இருக்கிறதால,மத்தவாளை மட்டரகம்னு சொல்றே.இங்கேருந்து எல்லாம் வாங்கிண்டு போய் அங்கேயே பித்ரு கார்யம் பண்றதா சொல்றே...! ஆனா, பித்ரு தேவதைகள் அந்த பரதேச பூமியிலே எப்படி வந்து பிண்டம் வாங்கிக்குவா? எனக்குத் தெரிஞ்ச பித்ருக்களெல்லாம் அமாவாசை, மாச தர்ப்பணம்,மஹாளய தர்ப்பணம்,ஸ்ராத்த திதி இதுலே எல்லாம், இந்த பாரத பூமியில, பரத கண்டத்துல மட்டும் தான் வந்து வாங்கிக்கறதா சாஸ்திரவிதி இருக்கு. அது தெரியாம பாவம், நீ கடல் கடந்துபோய் எங்கேயோ இருந்துண்டு, டேப்ரெக்கார்டர்ல கேட்கறதை வைச்சுண்டு பித்ரு கார்யம் பண்ண்றதா சொல்றேஅவாள்ளாம் இங்கே வந்து பார்த்து நீ பிண்டம் தரலைன்னு நினைச்சு பட்னியோட, உன்னை சபிச்சுட்டுன்னா போயிண்டு இருப்பா?"

பெரியவா சொன்னதைக் கேட்டு பதறிப் போனார், அந்தப் பணக்காரர். "பெரியவா மன்னிகணும்...செய்யறது தப்புன்னே தெரியாம இருந்துட்டேன்..!" குரல் நடுங்க சொன்னார்.

"நவராத்திரிக்கு வர்றேன்னு சொல்ற ஒனக்கு, பித்ரு கார்யம் பண்ண அந்த திதியிலே இங்கே வர மனசில்லையே! உன் தோப்பனார்,தாயார் மேலே உண்மையா பக்தி இருந்தா இத்தனை வருஷம் பண்ணின தப்புக்கு ப்ராயச்சித்தமா உன் குடும்ப வாத்யார்கள்கிட்டே கலந்து பேசி, அவா சொல்ற திதியில பித்ரு கர்மாக்களைப் பண்ணிட்டு வா....அப்புறம் ஆசிர்வாதம் பண்றேன்...பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான் மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும்.புரியறதா?"

அந்தப் பணக்காரர் அப்படியே ஆடிப்போய்ட்டார். கண்லேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சுது!

"தெய்வமே,என் கண்ணைத் திறாந்துட்டேள். முட்டாள் நான் தப்பு பண்ணிட்டேன்.இப்பவே போய் எல்லாத்தையும் பூரணமா செஞ்சுட்டு, அப்புறம் உங்க சன்னதிக்கு வரேன்!" சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டார்.

கொஞ்சநாள் கழிச்சு, குடும்பத்தோடு வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார் அந்தப் பணக்காரர்.

"ஸ்ராத்தம்,பரிகாரம் எல்லாம் திவ்யமா பண்ணி முடிச்சியா? இப்போ என்னோட ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமா உண்டு"ன்னு சொல்லி, ஒரு தாம்பாளத்துல கல்கண்டு, பழம், வில்வம், விபூதி,குங்குமம் எல்லாம் வைச்சுக் குடுத்து அவா எல்லாரையும் ஆசிர்வதித்தார் மகாபெரியவா.
Jaya Jaya Shankara hare hare Shankara
ravi said…
🌹🌺 "Let's recite some words of Vishnu Sakasranama whenever we finish....we will get good - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Names given by Sakala Karyasiddhi (Vishnu Sahasranama Stotram)*

🌺Student*
Vedic scholars
Vedango is a Vedavid poet

🌺Relieve Stomach Pain*
Prajishnur Bhojanam Bokta
Sahishnur Jagadadija

🌺 get excited*
Athindrio Mahamayo
Mahotsaho Mahapala

🌺 To develop subtle intelligence*
Maha Puthir Mahaviryo
Mahashaktir Mahadyuti

🌺Clear vision*
Sahasramurtha Viswadma
Sahasraksha: Sahasrabad

🌺 To be proud*
Sadkarta Sadkruta: Satur
Jahnur Narayanonara

🌺 To get things done*
Siddhartha: Siddha Sankalpa:
Siddhi: Siddhi Sadhana

🌺 To get married*
Kamaha Kamakrut Ganda:
Kama: Kamapratha: Lord

🌺 To get higher position*
Vyavasayo Vyavasthana:
Samsthana: Sthanatho Dhruva

🌺Get rid of the fear of death*
Vaikunda: Purusha: Prana:
Pranatha: Pranava: Pruthu:

🌺Achieving Immortal Wealth*
Arthonartho Mahagoso
Mahabogo Mahadana

🌺Good sense*
Sarvadarsee Vimukdadma
Sarvajno Jnana Muthamam

🌺 Have fun*
Anandho Nandano Nanda:
Sathyadharma Trivikrama

🌺Misery Away*
Poosha or Poosha Poothir
Visoka: Soganasana

🌺 Get rid of diseases*
Poorna: Pooraita Punya:
Punyakirthi Ranamaya

🌺 To get salvation*
Satgati: Satkruti: Satta
Satbhuti: Satparayana

🌺 Get rid of sins*
Devaki Nandana: Creator
Kshidhisa: Papanasanah:.🌹

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள் முடிந்த போதெல்லாம் கூறுவோம்....நன்மை அடைவோம் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)*

🌺படிப்பில் வல்லவனாக*
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி

🌺வயிற்று வலி நீங்க*
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ

🌺உற்சாகம் ஏற்பட*
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல

🌺ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட*
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி

🌺கண்பார்வை தெளிவுபெற*
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

🌺பெருமதிப்பு ஏற்பட*
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர

🌺எண்ணிய காரியம் நிறைவேற*
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன

🌺கல்யாணம் நடக்க*
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு

🌺உயர்ந்த பதவி ஏற்பட*
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ

🌺மரண பயம் நீங்க*
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

🌺அழியாச் செல்வம் ஏற்பட*
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந

🌺நல்ல புத்தி ஏற்பட*
ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

🌺சுகம் உண்டாக*
ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம

🌺துன்பங்கள் தொலைய*
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன

🌺வியாதிகள் நீங்க*
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய

🌺மோக்ஷமடைய*
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண

🌺பாபங்கள் நீங்க*
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா
க்ஷிதீச: பாபநாசந:.🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
25.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 43)

Sanskrit Version:

दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः।
उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः।।1.43।।

English Version:

doshairetaih: kulaGnaanaam
varNasangkarakaarakaih |
utsaadyante jaatiDharmaah:
kulaDharmaashcha shaashvataah: ||

Shloka Meaning

O Krishna! By the evil deeds of the slayers of families leading varna sangraha,
the eternal jaathi dharma and the eternal kuladharma gets destroyed permanently."

Jai Shri Krishna 🌺
Hemalatha said…
😂😂😂
சார் அப்படி இல்ல சார்
உங்கள் பேனாவால் மட்டும்தான் இப்படி எழுதுவீங்களா இல்லை எந்த பேனா கொடுத்தாலும் இப்படி எழுதுவீங்களா அப்படி சார்
ravi said…
*ராமா* ...

கோடி பசுக்கள் தானம் செய்தான் ஒருவன் கோடி புண்ணியம் பெற்றிடவே

கோடி பொருள் கூப்பிட்டு கொடுத்தான் ஒருவன் செய்த கோடி பாவம் தொலைந்திடவே

கோடி நதிகளை தேடிக் குளித்தான் ஒருவன் கோடி பிறவி வேண்டா தவம் கொண்டே

கோடி ஆலயம் சென்று வந்தான் ஒருவன்

சேர்த்த கோடி தன்னில் சேராமல் இருக்கவே

கோடி தர்ப்பணம் செய்தான் ஒருவன் பித்ருக்கள் கோடி சாபம் தொலைந்து போகவே

கோடி அன்னதானங்கள் செய்தான் ஒருவன்

கோடி உயிர்கள் அகமும் புறமும் த்ருப்தி எனும் சொல் கேட்டிடவே

கோடியில் நின்றே உன் நாமம் ஒரு முறை மட்டும் உரைத்தேன்

அனைவர் செய்யும் புண்ணியம் அனைத்தும்

கோடி கோடி என எனை தேடி வந்து அணைத்து க்கொண்டதே 🙏🙏🙏
ravi said…
*அம்மா*

இன்பம் என்ற நந்தவனத்தில் ஆனந்தம் எனும் மலர்கள் பூத்துக் குலுங்கக் கண்டேன்

பக்தி எனும் கொடிகள் உன் நாமம் எனும் கொம்பில் படரக்கண்டேன்...

தன் பற்று அறுத்து உன் மீது பற்று வைத்து மகிழக்கண்டேன்

இனிக்கும் பழங்கள் எங்கும் சிதறி விழ கண்டேன்

விழுந்த பழங்கள் அனைத்தும்

வாக் தேவிகள் போல் *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* சொல்லக் கண்டேன்

மனதில் செவிகளில் தேன் வந்து மழை பொழியக்கண்டேன்

மதுரம் அருந்திய இதழ்களில் உன் நாமம் மணக்கக் கண்டேன்

இது போதும் என்றே உள்ளம் உவகை கொள்ளக் கண்டேன்

அந்த உவகை தனில் உலகம் என் காலடியில் சுழலக்கண்டேன்

காலடி நாதனை அங்கே நாலடி ஸ்லோகம் சொல்லக் கண்டேன் ...

நாலடி ஸ்லோகங்கள் என் நாவில் கலவையாய் சிரிக்கக் கண்டேன் ..

கண்டேன் எவரும் காணா தீப் பிழம்பை

*தாயே* என்றே அணைத்தேன் எரியும் தீயினை🔥

உனை தீண்டும் இன்பம் தீக்குள் கிடைக்கப்பெற்றேன்

ததிம் தரிகிட தகதத்தோம்
ததிம் தரிகிட தகதத்தோம்

தஜம் தஜம் தஜம்
தா தரிகிடதத் தரிகிடதத் ஜம் ஜம்...

என்றே என் அங்கங்கள் அனைத்தும்

பொற் சபையில் ஆடக்கண்டேன் ஆடல் அரசனுடன் சேர்ந்தே 🙏🙏🙏
ravi said…
*❖ 124 ஷர்வாணீ =*

‘ *ஷர்வா* ’ என்ற சிவனின் பத்தினியானவள்

*ஷர்ம* = இன்பம் - மகிழ்ச்சி

*தாயின்* - கொடுத்தல்
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

81 –
மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத்
தூக்கி அணைந்து அருள் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

கண்ணாடி முகம் காட்டும் என் அகம் காட்டுமோ *அருணாசலா* ?

தூசி படித்தால் துடைத்து விடலாம் .

என் அகம் தூசி கொண்டால் துடைப்பது எங்கனம் *அருணாசலா ?*

கண்ணாடி நிஜம் அன்று என் நிழல் தானே *அருணாசலா* ...

அகம் நிஜம் அன்று உன் நிழலாய் இருக்க அருள் செய்வாயோ *அருணாசலா*

நீ உள்ளவரை என் நெஞ்சில் ஐம்பெரும் கள்வர்கள் நுழைய முடியுமோ *அருணாசலா* ... ?

நீ இல்லை உள்ளே என்றபின் எரும்பும் யானயாய் உள் வருமே *அருணாசலா*

இமை பொழுதும் நீங்கேன் என்றாயே *அருணாசலா* ...

இமை மூடி கண்கள் மூடி செவி இழந்து முடி கொட்டி

பற்கள் தில்லை நடம் புரிய

செம்மேனி சிதைந்து குலைந்து போக

செப்பனிட்ட பாதை சீர் குலைந்து போக *சிவாய நம:* என்றே வாய் சொல் மறுக்க

இன்னும் எனை மீட்க ஏன் வரவில்லை *அருணாசலா* ... ??

மூப்பு உனக்கில்லை முடிவும் உனக்கில்லை

அழியும் அங்கம் உனக்கில்லை என்ற ஆனவமோ *அருணாசலா ?*

சொற்கள் வருவது நின்று போகும் வரை சொல்லால் உனை வதைப்பேன் *அருணாசலா*

வேண்டுமோ இந்த பனிப்போர் நம் இருவருக்குள்ளே ...

திட்டமிட்டு செயல்படு *அருணாசலா* ... திடமாய் ஓர் முடிவு எடு *அருணாசலா* 💐💐💐💐
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை*
*ஔவையார் பாடல்கள்*

*பாடல் 25 :*

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு–நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

*பொருள்:*

தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து
வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர்,
குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து
கொண்டிருப்பர்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
[25/02, 12:22] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 92*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*79*
[25/02, 12:23] Jayaraman Ravilumar: मालिनि महेशचालिनि काञ्चीखेलिनि विपक्षकालिनि ते ।
शूलिनि विद्रुमशालिनि सुरजनपालिनि कपालिनि नमोऽस्तु ॥ ७९॥

79. Malini, Mahesa chalini, Kanchi Khelini, Vipaksha kalini they,

Soolini Vidhruma salini sura jana palini Kapalini Namosthu

மாலினி மஹேஶசாலினி காஞ்சீகேலினி விபக்ஷகாலினி தே |

ஶூலினி வித்ருமஶாலினி ஸுரஜனபாலினி கபாலினி னமோ‌உஸ்து ||79||
ravi said…
52 அக்ஷர ரூபங்களாக மாலை தரித்த மாலினி,

மஹேஸ்வரனின் பத்தினியாக,

மஹேச சாரிணீ, சூலம் கபாலம் ஏந்தி சூலினி, கபாலினி, காஞ்சி நிவாஸினி, காமாக்ஷி, காமேஸ்வரி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.🙏🙏🙏
ravi said…
💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 497* 🙏🙏🙏started on 7th Oct 2021

*217வது திருநாமம்*
ravi said…
*217 * महाशक्तिः -மஹாசக்தி -*

அதீத சக்தி படைத்தவள் அவள் பெயரே சிவசக்தி அல்லவா.

சர்வ சக்தி கொண்ட அம்பாள் மஹா சக்தி என்று புகழ்ந்து போற்றுகிறார் ஹயக்ரீவர்.

ஆமாம் சந்தேகமென்ன என்கிறார் அகஸ்திய மகா ரிஷி.
ravi said…
பிறந்த மழலை கண்டது ஒருநாள் முதிர்ந்த பழம் ஒன்றை ..

இரண்டும் சிவமே ....

சிவம் வளர்க்க சவம் கொண்ட மதங்கள் அங்கே தடை போட்ட வண்ணம் இருந்தன ...

பாண்டிய ராஜன் சூல நோய் வந்து அவதி பட்ட வண்ணம் இருந்தான் ...

சமணர்கள் செய்த மாந்திரீகங்கள் ஒன்றும் அவனை குணப்படுத்த வில்லை

குரல் கொடுத்தான் காப்பாற்ற யாருமே இல்லையா என்றே ..

குரல் தந்தவன் சிரித்தான் ..

தன் குரல் கொண்ட குழந்தையை அங்கே அனுப்ப தீர்மானித்தான் ...

அழைப்பு வந்தது சம்பந்தருக்கு

தடுப்பு வந்தது நாவுக்கரசர் இடம் இருந்து

போகவேண்டாம் என்றே ...

எல்லாம் கடந்தவர் சொன்னார் ...

நாளும் கோளும் நன்றாக இல்லை மதுரை செல்லவேண்டாம் என்றே ...

பேசியது அவர் இல்லை அவர் அனுபவம் ... 🙏🙏🙏
ravi said…
[25/02, 07:33] +91 96209 96097: *ஆப்³ரஹ்மகீடஜனனீ* வர்ணாஶ்ரமவிதா⁴யினீ🙏🙏

ஒரு செல் ஜீவி முதல் பிரமன் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவள்
[25/02, 07:33] +91 96209 96097: *மஹாக்ஷயா நமஹ*🙏🙏
பூஜிக்க படும் கருடனை தனக்கு தேராக கொண்டவர்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இப்படி மூன்று விதமாக வைராக்யத்தைப் பற்றிப் பார்க்கிறோம் – ஒன்று: பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது; இரண்டு: கேட்டதில் கேட்கப் போவதில் ஆசையை விடுவது; மூன்று: பார்ப்பதில் பார்க்காததில் ஆசையை விடுவது.எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் ‘ஸர்வான் பார்த்த மனோகதான்’ என்று பகவான் சொன்னாற்போல ஒரு மநுஷ்ய மனஸில் இடம் பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.
ravi said…
அது ஸாதனையில் ரொம்பவும் முக்யமான அங்கம்.
பர்த்ருஹரி என்பவர் ரொம்பப் பெரியவர். அவர் துறவறத்தைப் பற்றி, துறவியைப் பற்றி ரொம்பவும் உணர்ச்சியோடும், காம்பீர்யத்தோடும் ஒரு சதகம் (நூறு ச்லோகங்கள்) செய்திருக்கிறார். அதற்குப் பேர் ‘ஸந்நியாஸ சதகம்’ என்று வைத்திருக்கலாம். ஆனால் அப்படி வைக்காமல் ‘வைராக்ய சதகம்’ என்றே வைத்திருக்கிறார். வைராக்யம் இருந்து விட்டால் போதும், அதுதான் ஸந்நியாஸம் என்ற அபிப்ராயம் இதிலிருந்தும் தெரிகிறது.
ஆமாம், ‘ஸந்-ந்யாஸம்’ என்றாலே என்ன? பூர்ணமாகத் துறப்பது’தானே? ஆசை என்ற ஒன்றைத் துறந்தால்தானே பாக்கி அத்தனையையும் துறக்க முடியும்? ஆகையால் ஸந்-ந்யாஸம், துறவு என்றாலே வைராக்யம் என்றாகியிருப்பதில் ஆச்சர்யமில்லை.
தமிழில் தர்மங்களைச் சொன்ன மஹாபெரியவர் திருவள்ளுவர். அவர் துறவு பற்றிச் சொல்லியிருக்கும் அதிகாரத்தில், பற்றற்றானான பரமாத்மாவையே பற்றிக் கொண்டு ஸகல பற்றுகளையும் விடுவதைத் துறவாகச் சொல்லியிருக்கிறார். ஆசையால், ராகத்தால் வருவதுதான் பற்று. அல்லது ஒன்றோடு நமக்குத் தொடர்பு, அதாவது பற்று உண்டானால் அதனிடம் ஆசை உண்டாகிவிடுகிறது- “ஸங்காத் ஸஜ்ஜாயதே காம:” என்று பகவான் சொன்னாற்போல்.
ravi said…
ஆகக்கூடி ராகமும் பற்றும் பரஸ்பரம் காரிய காரணங்களாக இருக்கின்றன. ஆனதால் “பற்று விடற்கு” என்று திருவள்ளுவர் சொல்வது வைராக்யம் உண்டாவதைத்தான். அதைத்தான் அவர் துறவு என்றே வைத்து, அந்த (‘பற்று விடற்கு’ என்ற) வார்த்தையோடேயே அந்த அதிகாரத்தை முடித்திருக்கிறார். அப்புறம் இதே துறவறவியலிலேயே “அவா அறுத்தல்” என்றே ஒரு அதிகாரம் – பத்துக் குறள்கள் – பண்ணியிருக்கிறார். ‘அவா அறுத்தல்’ என்றாலும் வைராக்யம் என்றாலும் ஒன்றுதான்.

ஓடு நமக்குண்டு” பாடியவரே அப்புறம் ஓடு வைத்துக் கொண்டவனும் ஸம்ஸாரிதான் என்ற அளவுக்குப் போன மாதிரி ப்ரஹ்மேந்த்ராள் வாழ்க்கையிலேயும் ஒரு ஸம்பவம் சொல்வதுண்டு. கையையே மடித்துத் தலையணையாக வைத்துக் கொண்டு, ஆகாசமே போர்வை, கட்டாந்தரையே மெத்தை, விரக்தி என்பவளே பத்னி என்று சயனித்துக் கொண்டிருக்கும் துறவி ஆனந்த பரவச ஸமாதி என்ற நித்ரையில் ஆழ்ந்திருக்கிறாள் என்று அவர் பாடியிருக்கிறார்.அதில் பாடினபடி அவரே அப்படி ஏதோ ஒரு வயற்காட்டில் திறந்த வெளியில் கையை மடித்து அதிலே தலைவைத்துப் படுத்துக் கொண்டிருந்தாராம். நடுமத்யான வேளை. அப்போது அந்தப் பக்கம் உழவு வேலை செய்யும் சேரிப் பொம்மனாட்டிகள் சிலபேர் போனார்களாம். அதிலே ஒருத்தி ப்ரஹ்மேந்திராளை அந்த மாதிரிப் பார்த்ததும் பரிஹாஸமாகச் சிரித்துவிட்டு, “சன்னாஸியாமே சன்னாசி! தலைக்கொஸரம் கேக்கற நல்ல சன்னாஸிடீயம்மா!” என்று கூட வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டே போனாளாம். ப்ரஹ்மேந்த்ராளுக்குச் சுரீலென்று தைத்ததாம். ‘ஆகக்கூடி தனக்கும் மற்ற அவயங்களைவிடத் தலையை உயர்த்தி வைத்துக் கொண்டாலே ஸெளக்யம் என்ற எண்ணம் போகவில்லையல்லவா? அது போகாதவரையில் நான் என்ன ஸந்நியாஸி? அம்பாளே தான் அந்தப் பஞ்சமப் பெண் வாய் வழியாக உபதேசித்து விட்டுப் போயிருக்கிறாள்!’ என்று நினைத்து, தலைக்கு வைத்துக் கொண்டிருந்த கையை எடுத்துவிட்டு, அப்படியே கிடந்தாராம்.
அந்தப் பொம்மனாட்டிகள் திரும்பிப் போகிற வழியில் மறுபடி அங்கே வந்தார்களாம். அப்போது முதலில் பரிஹாஸம் பண்ணின அவள் அதேமாதிரி மறுபடி சிரித்தாளாம். “சாமியாருன்னா அவங்களுக்காகவே எப்படி இருக்கணும்னு தெரியவேணாம்? ஊர்லே போறவங்க, வரவங்க பேச்சையெல்லாம் கேட்டுப் பண்றவங்க இன்னா சாமியாருங்க?’ என்றாளாம்!
அன்றிலிருந்துதான் ப்ரஹ்மம் என்றால் ப்ரஹ்மமாகவே, ஸதாசிவ ப்ரஹ்மமாக அவர் ஆனாராம்.
ravi said…
[25/02, 16:26] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 95 started on 6th nov

*பாடல் 29 ... இல்லே எனும்*

(அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ

பொல்லேன் அறியாமை பொறுத்திலையே

மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.🙌
[25/02, 16:27] Jayaraman Ravilumar: 2. எல்லையில்லாத பொருளை எல்லைப் படுத்துவதும்,

உருவமில்லாத பொருளுக்கு உருவத்தைக் கொடுப்பதும்

குணமில்லாத ஒன்றுக்கு குணத்தைக் கொடுப்பதும்,

பெயரில்லாததற்கு பெயர் கொடுக்கும் தத்துவமே மாயை.

இங்கு மாயையின் சலனத்தால், குணம், குறி, நாமம், ரூபம்
ஒன்றுமில்லாத பிரமத்தை எல்லாவற்றோடும் சேர்ந்த நிலையில்,
சினிமாப் படம் காட்டுவது போல, நடத்திக் காட்டுவது மாயையே.

பிரம்மம் இரண்டு நிலையிலும் பேசப்படுகிறது.

. மாயையை தன்னுள் அடக்கி இருக்கும் நிலை (Static state).
. உலக சிருஷ்டிக்காக மாயை பிரிந்து நிற்கும் நிலை (Kinetic state).

முந்தியது நிர்குண பிரம்மம், பிந்தியது சகுணப் பிரம்மம்.
ravi said…
*சிவானந்தலஹரி 64வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
யமனுடைய மார்பில் உதைத்தல்,

பாதத்தால் அபஸ்மாரம் எனும் பூதத்தை துகைத்தல்,

மலைகளில் சஞ்சாரம் செய்தல்,

தன்னை வணங்கும் தேவர்களின் கிரீடத்தில் உறைதல்

போன்ற காரியங்களை, கௌரி பதி யான தங்கள் மிருதுவான சரணங்களுக்குப் பொருந்துமா?

என் மனதாகிய மணிமயமான பாதுகைகளை அணிந்து கொண்டு எங்கும் சுற்றுதலை ஸதா ஏற்றுக்கொள்ளுங்கள்!

எப்போதும் தன் மனதில் வாசம் செய்யும்படி ஆசார்யாள் ஈசனிடம் வேண்டுகிறார்!!

பரமேஸ்வரா பக்தனைக் கண்டு எமன் நடுங்குகிறான்.

ஏன் அவன் அவரது பாத பத்மத்தில் தன் மனம் முழுதும் ஈட்டுப்படுத்தி பக்தி செய்கிறான்!

முக்தி என்ற மாது பக்தர் விருப்பம் கொண்டு வருகிறாள்!

இந்த உலகத்தில் அவனுக்குக் கிடைக்காதது ஒன்றுமே இல்லை !

பாத பஜனம் என்ன செய்யாது?

பரதன் அண்ணல் பாதுக்கையை பாதமாக நினைந்து அதன் மேல் வெயில் படாமல் காப்பது, இங்கு பொருத்தமானது!

பாத தூளி பட்டு பாதுகையும் பாதத்துக்குச் சமமாக ஆவது இங்கு குறிப்பிடத்தக்கது!

மூக பஞ்ச சதியில் பாதாரவிந்த சதகம் முழுதும் பாதத்தின் சிறப்பை வர்ணித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது!
ravi said…
இந்த சமயத்தில் பெரியவா பற்றிய ஒர் சம்பவம் மனதில் தோன்றுகிறது.

ஒரு சமயம், ஒரு கோவில் உள்ளே பெரியவா செல்லும்போது,

ஒரு பக்தர், வயதில் இளைஞர் பாதுகைகளை தன் சிரசில் தாங்கி நின்ற கோலம் மனதில் உறைந்திருக்கிறது!

அதுவே பாதுகையின் சிறப்பு!

வேறொரு சமயம் சுடும் வெயிலில் ஒரு பக்தர் பெரியவா ஸ்நானம் செய்யும் வரையில் நதிக் கரையில் பாதுக்கைகளை சிரசில் வெறும் காலோடு காத்திருந்தார்!

பக்தியின் எல்லை பாதுகா பூஜை !!🙏🙏🙏
ravi said…
[25/02, 16:19] Jayaraman Ravilumar: *வஸுர்‌* வஸுமனாஸ்: ஸத்யஸ்:

ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[25/02, 16:19] Jayaraman Ravilumar: *106. வஸுமநஸே நமஹ (Vasumanase namaha)*
ravi said…
விடியற்காலையில் துவாரகையை நாரதர் அடைய, எதிர்பாராத விதமாகக் கண்ணனும் எதிரே வந்தான்.

“என்ன நாரதா! விடியற்காலையிலேயே இந்தப் பக்கம்?” என்று கேட்டான்.

“உன்னுடைய அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்க வந்தேன்!” என்றார் நாரதர்.

“இதென்ன புதுக்கதை! என்னை நீ கண்காணிக்கப் போகிறாயா?” என்று கேட்டான் கண்ணன்.

“ஆம்! நீ எப்படி இத்தனை மனைவிகளைச் சமாளிக்கிறாய் என அறிந்து கொள்ள விரும்பி வந்தேன்!” என்றார் நாரதர்.🙏
ravi said…
*ஸ்ரீ நம்பெருமாளின் கிளிக் கூண்டு சேவை*

திருபள்ளியோட திருநாள் மாசி தெப்ப உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் ஏன் கிளி கூண்டில் சேவை சாதிக்கிறார்

நம் பூர்வாசார்யர்கள் இரண்டு கிளிகளை அடையாளம் காட்டுவர்..

ஒரு கிளி கனிக்கு அருகில் இருந்து கனியை புசித்து புசித்து வாடிபோயிருக்கும்
மற்றோர் கிளி கனிகளை புசிக்காமல் தேஜசாய் பருத்து இருக்கும்..

இதென்ன விதோதம்
புசிக்கும் கிளிதானே பருத்திருக்க வேண்டும்???

கனி புசிக்கும் கிளி ஜீவாத்மா

கனி என்னும் கர்மாவை புசித்து அதிலேயே நாட்டம் கொண்டு இளைத்து வாடும்..

கனி உண்ணாத கிளி பரமாத்மா அது என்றும் தேஜசாய் இருக்கும்...

84 லக்ஷம் பிறவிகள் உண்டென்று சாஸ்திரம் சொல்கிறது...

இந்த கிளிக்கூண்டில் இருக்கும் துவாரங்கள் 84,
இது 84 லக்ஷம் பிறவிகளை குறிக்கும்..

இந்த ஜீவாத்மாக்களை காக்க அவர்களை கர்மவசத்தில் இருந்து விடுவிக்க நம்பெருமாளும் தானே ஒரு கிளிக்கூண்டில் வந்து நமக்காக அருள்கிறார்...

*பீதகவாடை பிரானார் பிரமகுருவாய் வந்து* நமக்கு உபதேசித்தார் நாம் திருந்த காணோம்

ஆகவே தனது சௌந்தர்யத்தை காட்டி நம்மை திருத்த இங்கே *கிளிக்கூண்டில் அருள்கிறார் ஸ்ரீ நம்பெருமாள்*
ravi said…
[25/02, 16:35] Jayaraman Ravilumar: வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா

அரனேஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு

மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
[25/02, 16:36] Jayaraman Ravilumar: வெவ்வேறு விகாரங்களையுடைய, ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன்,

எம் ஐயனே, சிவனே, ஓ என்று முறையிட்டு, வணங்கி, திருப்புகழை ஓதியிருந்து, அறியாமை நீங்கி, அறிவுருவானவர்கள், மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப் பிறவியையடையாமல்,

வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை, அறுக்க வல்லவனே,

நடு இரவில், மிகுந்து, நடனம் செய்கின்ற, இறைவனே, தில்லையுள் கூத்தனே,

தென்பாண்டி நாட்டையுடையவனே, துன்பப் பிறப்பை அறுப்பவனே, ஓவென்று முறையிட்டு, சொல்லற்கு அரியானைச் சொல்லி, அவனது திருவடியின்மீது பாடிய பாட்டின், பொருளையறிந்து துதிப்பவர்,சிவபுரத்தினுள்ளார்,

சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்.
ravi said…
🐅🐅🐅🐅🐅🐅🐅

*நாளை நோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க.*
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
பானு சப்தமி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். நாளை பிப்ரவரி 26 பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள்.
🌞
ravi said…
நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒளியும். *சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் பானு சப்தமி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது.* நாளை பிப்ரவரி 26ஆம் தேதி பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். பானு சப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை. நாளை விரதமிருந்து சூரியனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது.
ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
🌞
*
ravi said…
#பெற்றோர்களை_வழிபட்ட_சனிபகவான்*
சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார். சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி.
🌞
ravi said…
*#ராமர்_செய்த_சூரிய_பூஜை*
சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர்.
🌞
*
ravi said…
#முன்னோர்கள்_ஆசி*
காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்துசேரும். நாளை பிப்ரவரி 26ஆம் நாள் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும் இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்.
🌞
*
ravi said…
#தொழுநோய்_நீங்கும்*
கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார்.
சூரிய வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களும் கழியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பானு சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர தொழுநோய் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலவ முனிவர் முக்காலமும் உணர்ந்தவர். தனக்கு தொழுநோய் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து நவக்கிரகங்களை நோக்கி தவமிருந்து நோய் வராமல் இருக்க வரம் பெற்றார். இதனை அறிந்த பிரம்மன் சினம் கொண்டு நவகிரகங்களை பூலோகத்தில் அவதரித்து தொழுநோய் பீடிக்க சாபம் கொடுத்தார். சபவிமோசனமாக காவிரி நதிக்கரையில் அர்க்கவனத்தில் கார்த்திகை முதல் ஞாயிறு முதல் பன்னிரண்டு ஞாயிறு தவம் செய்து திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் சிவபெருமானை வழிபட்டு உதயாதி ஏழு நாளிகைக்குள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து உண்டு சாபம் நீங்கினர்.
🌞
*#அரசு_பதவி*
அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் பானு சப்தமியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் அரசு தொடர்பான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது.
🌞
*#அரசு_வேலை_தரும்_சூரிய_வழிபாடு*
பானு சப்தமி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். காலபுருஷ தத்துவப்படி பத்தாமிடம் இடம் தொழில் உத்யோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.
🌞
*#உடல்_நலம்_பெறும்*
பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்.
🌞
*#சூரிய_வழிபாடு*
வெள்ளெருக்கு செடியில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து சூரியனை வழிபட்டால் எதிரிகளை எளிதில் வெல்ல முடியும். நாளை அதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டால் புகழ் கூடும். மங்களம் உண்டாகும். உடல் நலம் பெறும்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

92.ப்ரஸூநை: ஸம்பர்காத் அமர தருணீ குந்தல பவை:
அபீஷ்டாநாம் தாநாத் அநிசமபி காமாக்ஷி நமதாம் |
ஸ்வஸங்காத் கங்கேலி ப்ரஸவ ஐநகத்வேன ச சிவே
த்ரிதா தந்தே வார்தாம்
ஸுரபிரிதி பாதோ கிரி ஸுதே

மலைமகளே ! சிவே ! காமாக்ஷி ! தேவமாதரின் கூந்தலிலிருந்த பூக்களுடன் தொடர்பாலும், வணங்குபவரின் விருப்பத்தை
எப்போதும் வழங்குவதாலும், தனது ஸ்பர்சத்தால் அசோகப்பூக்கள்
உண்டாவதாலும் உன் திருவடி ஸுரபி என்ற புகழைப் பெறுகின்றது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
Hemalatha said…
Wow very proud of you sir🙏

பாராட்ட க்கூட அருகதை அற்றவள்.ஆனால் உளம் மகிழ்கிறேன்.இப்பேர்பட்டவரை எனக்கு தெரியும் என்பதே என் பெருமை சார்.அம்பாளின் அருட்கடாட்சம் நிரம்ப பெற்றவர் தாங்கள் 🙏🙏🙏💐
Sama said…
Good morning sir. One of the most astounding achievement of your career in LTMRHL. Lot of efforts and dedication. 🙏🙏
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறட்டும்.

எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.

ஆனால் எதுவும் மறந்து போகாது...


🌷🌷

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
Gopu said…
Very nice.it is indeed a memoranle occasion to ponder.All your efforts and hardwork have brought name and fame to the nation.God bless
Amar said…
I am really proud of your achievements
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை*
*ஔவையார் பாடல்கள்*

*பாடல் 26 :*

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்–மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

*பொருள்:*

ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக்
கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன்
தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால்
கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
🌹🌺" *பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கம் அளித்ததில் தலைசிறந்த மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺வேதாந்தம் (வேதம்+அந்தம்).
அந்தம் என்ற சொல்லுக்கு இறுதி என்று பொருள். வேத வரிசையில் இறுதியாக ஆக்கப்பட்டது வேதாந்தமாகும்.

🌺இது மூன்று பிரிவுகளைக் கொண்டது.
(1). அத்வைதம்.
(2). விசிட்டாத்வைதம்.
(3). துவைதம்.

🌺பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கம் அளித்ததில் தலைசிறந்தவர் *மகான் ஸ்ரீ ஆதிசங்கரர்* ஆவார். இவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அத்வைதம் என்னும் சொல்லை அ+துவைதம் என பொருள் பிரித்து உணரலாம்.

🌺அ என்றால் இல்லை.,
துவைதம் என்றால் இரண்டு என்று பொருள்படும். *இரண்டல்ல ஒன்று* என்பதே *அத்வைத கொள்கையாகும்.* பிரம்மம் என்ற ஒரு பொருள் நிலையானது. உண்மை.

🌺ஆதிசங்கரர்* எல்லாம் பிரம்மம் என்று எழுதிய *சங்கரபாஸ்யம்* மிக முக்கியமான நூலாகும். *அகம் பிரம்மாஸ்மி* என்பதை உணர்த்தினார்.

🌺துவைதம் என்றால் இரண்டு என்று பொருள். *மகான் மத்துவர்* தென்னிந்தியாவில் *உடுப்பிக்கு அருகே கி.பி.1138ல்* தோன்றியவர். இவர் 37 நூல்களை எழுதியுள்ளார். அந்த நூல்களின் *மணிமகுடமாக* கருதப்படுவது *பாஷ்யம்* என்ற நூலாகும்.

🌺ஆன்மா வேறு, இறைவன் வேறு. இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்பது மத்துவரின் கொள்கையாகும்.

🌺விசிட்டாத்வைதம் என்பது உயிர்(சித்து), உலகம்(அசித்து), இறைவன் (ஈசன்) என்ற மூன்று சக்தி உள்ளது என்கிறது இந்த இயக்கம்.

🌺சித்து என்பது உயிர் பொருள். அசித்து என்பது உயிர் இல்லாத பொருள். இவ்விரண்டையும் உடலாக கொண்டு உயிராக விளங்கும் பரம்பொருள் இரண்டில்லை ஒன்றே ஆகும் என்பது இதன் அடிப்படை.

🌺சங்கருக்கு பிறகு *11-ம் நூற்றாண்டில்* தமிழகத்தில் உள்ள *ஸ்ரீபெரும்புதூரில்* தோன்றி வாழ்ந்த *மகான் ராமானுஜர்* ஆவார். இவர் எழுதியதில் *ஸ்ரீபாஷ்யம்* மிக முக்கிய நூலாகும்.

🌺பசு (உடல்), பதி (இறைவன்), பாசம்(உலகம்). மரம் ஒன்றுதான் என்றாலும் வேர், தண்டு, இலை என்று இருப்பதை போல இறைவன் ஒன்றுதான் என்றாலும் மூன்றாக உள்ளது என்கிறது விசிட்டாத்வைதம்.🌺🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺



ravi said…
🌹🌺 "Sri Adisankara, the Great Master in Explaining the Brahma Sutra - A Simple Story to Explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Vedantham (Veda + Antham).
Andham means final. The last to be made in the Vedic order is the Vedanta.

It has three sections.
(1). Advaita.
(2). Vishitadvaitam.
(3). Wash.

🌺Mahan Sri Adisankara* is the best in explaining the Brahma Sutra. He lived in the eighth century. The word Advaita can be understood as A+dvaitam.

🌺A means no.,
Dvaitam means two. *One, not two* is the *advaita principle* Brahman is the one substance. true

🌺Adi Shankara* is the most important book *Sankarabhasyam* written by Brahmam. He realized that *Agam Brahmasmi*.

🌺 Dvaitam means two. *Mahan Mathuvar* appeared in South India near *Udupi in AD 1138*. He has written 37 books. The *Crown* of those books is considered to be *Bashyam*.

🌺 Soul is different, God is different. It is the principle of Mathuvar that these two can never merge.

🌺Visitadvaitam is this movement which says that there are three forces namely life (sidhu), world (asittu) and lord (esan).

🌺Siddhu is life substance. Asittu is non-living matter. The basis of this is that the Supreme Being, which manifests itself as a body with these two, is one and the same.

🌺 Mahan Ramanujar* appeared after Shankar in the *11th century* and lived in *Sriperumbudur* in Tamil Nadu. * Sribhashyam* is the most important book written by him.

🌺Pasu (body), Pati (Lord), Pasam (world). Vishitadvaita says that the Lord is one but three, just as a tree is one but has roots, stems and leaves.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -26.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-71

மூலம்:

சொல்லும் பொருளும் சுமைஎன்றும் சொல்லாரூ(டு)
அல்லும் பகலும் அவிர்கின்றோன் – வில்லுமம்பும்
கொண்டுபலர் சூழ்பழனிக் குன்றக் குவட்டினின்றோர்
தண்டுபுனை கைக்குமரே சன் (71).

பதப்பிரிவு:

சொல்லும் பொருளும் சுமை என்றும் சொல்லாரூடு
அல்லும் பகலும் அவிர்கின்றோன் – வில்லும் அம்பும்
கொண்டு பலர் சூழ் பழனிக் குன்றக் குவட்டில் நின்று ஓர்
தண்டு புனை கைக் குமரேசன்!! (71).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

வில்லும் அம்பும் கொண்டு பலர் சூழ்ந்து இருக்கும் பழனி மலையில் நின்று, ஓர் தண்டு மட்டுமே கையில் புனைந்து உலகை ஆளும், காக்கும் பழனிக் குமரேசன், கருத்தோடுள்ள சொல் அமைத்துப் பாடுவதையும் சுமை என்று இருப்போரான யோகியர் போலல்லாமல் கருத்தாழமிக்கப் பாடல் புனைந்து அவன் திருவடியில் ஏற்றும் புலவரிடமும் விளங்குபவன் என்று உணர்க! தெளிக!

விண்ணளவுயர்ந்த புகழுடைப் பழனியப்ப! பண் கொண்டு பாடத் தெரியாத என்னைக் கண் கொண்டு பார்! கொழும்பில் உறைக் கதிர்வேல*! எத்தழும்பும் எனையடையாது கா!

*26.02.2023- கதிர்வேலாயுத சுவாமி உறையும் கொழும்பில் இருந்து எம் பெருமான் பழநியாண்டவன் அருளால் எழுதியது.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*"வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது"*

வேதம் மகா புண்யமானது. வேத மந்திரங்களைச் சொல்றவாளை அந்த மந்திர தேவதைகள் காப்பாத்தும்.

வேத மந்திரத்தை தினமும் சொல்றவாளோட நாக்குல சரஸ்வதி நிரந்தரமா வாசம் செய்வா. அவா வாக்குலேர்ந்து ஒரு நாளும் தவறான வார்த்தைகளோ, பொய்யோ வரவே வராது அப்படின்னு வேத சாஸ்த்ரங்கள் சொல்றது.

ravi said…
பிழைப்புக்காக வேத மந்திரத்தைச் சொன்னாலும் அதுல எந்தக் குத்தமும் வந்துடக்கூடாதுங்கற அக்கறையோட மனசார்த்தமா மந்திரங்களைச் சொல்லக்கூடிய சாஸ்திரிகள் ஒருத்தர் இருந்தார். ஒரு சமயம் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைப் போக்கறவிதமா மகாபெரியவா ஓர் அற்புதத்தை நடத்தினார்.

எண்ணூர் அருகே கார்வேட் நகர் என்று ஒரு இடம் இருக்கு. ஒரு சமயம் அங்கே நவராத்திரி பூஜைக்கு எழுந்தருளி இருந்தார் மகாபெரியவா . அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர்ல இருந்து போட்டுலதான் போகணும். ஆழம் ரொம்ப அதிகம் இல்லாத பகுதிங்கறதால படகை கயறு கட்டி இழுத்துச் செல்வார்கள்.அங்கே மகாபெரியவா தங்கி இருந்தது, ஒரு பெரிய வனாந்திரம் மாதிரி தனிமையான இடம் அங்கே இயற்கையின் எழில் கொஞ்சும்.

ravi said…
பெரியவா அந்த நவராத்திரியில் காஷ்ட மௌனமாயிருந்தார். அதாவது ஒன்பது நாளும் உபவாசம். கூடவே மௌனம். சைகையால் கூட விருப்பத்தை வெளியிடமாட்டார்.

பத்தாவது நாள், காஷ்ட மௌனத்தை கலைச்ச மகாபெரியவா ஒரு பெரிய மரத்தடியிலே உட்கார்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார்.

ஒன்பது நாள் உபவாசமும் மௌன விரதமும் இருந்த ஆசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக அன்னிக்கு நிறைய பேர் வந்திருந்தா. அவாள்ல, முதல்ல சொன்ன வேதம் சொல்ற சாஸ்திரிகளும் இருந்தார். அதேமாதிரி அந்தக் கூட்டத்துல இன்னொரு பெரிய மனுஷரும் இருந்தார். அவர் அந்தக் காலத்துல வருமானவரித் துறையில இருந்த முக்கியமான அதிகாரி.

ravi said…
தற்செயலா அந்த சாஸ்திரிகளும், அதிகாரியும் ஒரே சமயத்துல வந்திருந்தா.

அவா ரெண்டு பேரையுமே தனக்கு முன்னால உட்காரச் சொன்ன ஆசார்யா, பக்கத்துல இருந்த பழத் தட்டுல இருந்து ஆரஞ்சு ஒண்ணை எடுத்து உரிச்சுண்டே பேச ஆரம்பிச்சார்.

சாஸ்திரிகளைப் பார்த்து, "என்ன வேதபாராயணம் எல்லாம் நடந்துண்டு இருக்கா? புரோஹிதத்துல உனக்கு மாசம் எவ்வளவு வருமானம் வரும்?" அப்படின்னு கேட்டார்.

"ஏறக்குறைய மாசத்துக்கு முன்னூறு ரூபாய் கிடைக்கும்!"

"நீ கடனெல்லாம் வாங்குவியா?"

"பெரியவா..கடன் வாங்கறது தப்புன்னு தெரியும். இருந்தாலும் ஜீவனத்துக்கு கஷ்டம் வர்றதால அப்பப்போ பத்து ரூபாயோ இருபது ரூபாயோ வாங்குவேன்!"

மென்மையா சிரிச்ச ஆசார்யா, பக்கத்துல இருந்த வருமானவரி ஆபீசரைப் பார்த்து, "ஒனக்கு எவ்வளவு சம்பளம்?" அப்படின்னு கேட்டார்.

"பத்தாயிரம் ரூபாய் வர்றது!" சொன்ன அலுவலர், தன்னையும் கடன் வாங்கறது உண்டான்னு கேட்பார்னு தானாகவே தீர்மானித்துக்கொண்டு, "வருமானம் போதாததால், அப்பப்போ ரெண்டாயிரம்,
மூணாயிரம் கடன் வாங்குவேன். இப்போ எல்லா குடும்பத்துலயுமே இது சகஜம்தானே!" அப்படின்னும் தானாகவே சொன்னார்.

"தேவைகளை பெருக்கிண்டே போறோம். அதனால எவ்வளவு வருமானம் வந்தாலும் போதாதுதான். போதும் என்ற எண்ணம் எப்போ வருதோ அப்போதான் வருமானத்தை சரியான வழியில் செலவிடவும் முடியும். நல்ல கார்யம் பண்ணவும் முடியும்"

சொன்ன ஆசார்யா, அதுவரைக்கும் உரிச்சுண்டு இருந்த ஆரஞ்சுப் பழத்தை வருமானவரி அதிகாரிகிட்டே கொடுத்து, " இந்தா, இதுல எத்தனை சுளை இருக்குன்னு எண்ணிப்பார்த்து சொல்லு!" அப்படின்னார்.

கையில வாங்கின ஆரஞ்சுப் பழத்தை இரு பிளவாக செய்து எண்ணின அவர், "ஆறு ப்ளஸ் அஞ்சு.மொத்தம் பதினொரு சுளை இருக்கு!" என்று சொன்னார்.

"ஆறும் அஞ்சும் இருக்கு அப்படின்னா இதை 'ஷட் பஞ்ச பலம்'னு (ஷட் = 6 ,பஞ்ச = 5) சொல்லலாம் இல்லியா?"

பெரியவா கேட்டதுதான் தாமதம், மறு விநாடி சாஸ்திரிகளும், ஆபீசரும் எழுந்து மகாபெரியவா திருவடியில சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினா .ரெண்டு பேரோட உடம்புமே நெகிழ்ச்சியில அப்படியே நடுங்கித்து. மௌனமா ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.

ஆசார்யா சொன்னதுமே ரெண்டுபேரும் ஏன் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு நமஸ்காராம் பண்ணினா? அப்படிங்கறதெல்லாம் அங்குள்ள யாருக்குமே தெரியலை.

மடத்து சிப்பந்தி ஒருத்தர்தான் அதை விளக்கினார்;

அந்த சாஸ்திரிகள்தான், அந்த வருமானவரி ஆபீஸர் வீட்டுல நடக்கற எல்லா விசேஷங்களுக்கும் புரோஹிதம் செய்யறவர். போன மாசத்துல ஒருநாள் அப்படி ஒரு சமயத்துல ஆரஞ்சுப் பழத்தை நைவேத்யம் செய்யறச்சே, அதோட சம்ஸ்கிருதப் பெயரான நாரங்க பலம் என்பதற்கு பதிலா ஷட்பஞ்ச பலம்னு சொல்லிட்டார். அதைக் கேட்டதும் அந்த அதிகாரி, வார்த்தையை தப்பா பிரயோகிச்சுட்டார்னு சொல்லி ரொம்பவே அவமானப்படுத்தற மாதிரி சாஸ்திரிகளை திட்டியிருக்கார்.

சாஸ்திரிகள் தவறுதலா சொல்லவில்லை. அது வேதவாக்கு அதுதான் வெளிப்பட்டிருக்கு. வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை மகாபெரியவா நடத்தியிருக்கார்.

வேத மந்திரங்கள் மறைஞ்சுபோகாம காப்பத்தறவாளை அந்த வேதமே காப்பாத்தும்னு சொல்லுவா.அது சத்தியமான வாக்கு என்பதை வேதத்தோட வடிவமாகவே வாழ்ந்த மகாபெரியவாளே நிரூபணம் பண்ணினதை உணர்ந்து,
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர"ன்னு கோஷம் எழுப்பினா அங்கே இருந்த எல்லாரும்.

*kn*
ravi said…
*ராமா* ....

சீதையை தேடி நீ திரிந்தாய் காட்டுக்குள்ளே

சிந்திய கண்ணீர் சிறம் பட செடி கொடிகளை வளர்த்ததோ *ராமா ?*

சேது அமைத்தே லங்கை அடைந்தாய் ...

உப்புக்கடல் நீரும் உன் பாதம் பட்டு சர்க்கரை ஆனதோ *ராமா ?*

உன் நாமம் சொல்லி உயர்ந்தான் ஒருவன்

கண்டேன் சீதையை என்றே காண வைத்ததோ உன் நாமம் *ராமா ?*

கற்கள் நீருக்குள் மூழ்காமல் உன் திருமேனி தரிசனம் பார்திருந்ததோ *ராமா* ?

உன் பாதம் பட்ட பாதணிகள் ராஜாவாக ஆகும் போது

உன் நாமம் சொல்பவர் ஆழ்கடலை தாண்டும் போது

உன் நாமம் கல்லை கன்னியாக்கி வெளி வரும் போது

உன் நாமம் சபரிக்கு மோக்ஷம் தரும் போது

உன் பரிசம் ஜடாயுவிற்கு ஜென்மம் வேறு இல்லா பதவி தரும் போது

உன் நாமம் தாங்கி கற்கள் நீரில் நீந்தும் போது

உன் நாமம் தினம் சொல்லும் என்னை

கோள் என் செய்யும்? நாள் என் செய்யும்?

என் வினை தான் என் செய்யும் *ராமா ?* 💐💐💐
Kousalya said…
எத்தனை முறை படித்தாலும், எப்படி சொன்னாலும், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே இல்லாத, காணாத வகையில் இருக்கின்ற உன் பார்வையாலும், பிரேமையாலும், அழகாலும் எல்லார் மனதையும் ஈர்க்கும், அந்த ஶ்ரீயையும் ரமிக்க வைக்கும் ராமரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.... ஜெய் ஶ்ரீ ராம்....🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

82 –
மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம்
மெய் கலந்திட அருள் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

என் உடல் எனும் அகத்தில் உள்ளம் எனும் மலரணையில் உன்னை சிறை வைத்தேன்

சுற்றி நின்ற உதரிப் பூக்கள் ஒங்காரமாய் ருத்திரம் சொல்ல

உல்லாச தென்றல் ஒய்யாரமாய் நடந்து வர ..

பன்னீர் குடம் பத்து திங்கள் சுமக்கும் பெண்ணின் நீர்க் குடம் போல் வெடித்து சிதற

சாம்பிராணியும் ஊது பத்தியும் வானில் மேகங்கள் எழுப்ப

வையகம் என்னுள் வட்டமிட்டு திட்டமிட்டு என்னை ஆனந்த வெள்ளத்தில் அழுத்தியதே *அருணாசலா*

நீ என் உள் இருந்தால் ஓர் ஆயிரம் அண்டாக்கள் தேன் குடித்த சுவை தேடாமல் கிடைப்பதன் மர்மம் என்ன *அருணாசலா* ?💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
*❖ 125 ஷர்மதாயினி =* நிறைவான ஆனந்தம் அளிப்பவள்
ravi said…
*அம்மா*

நிறைவு காண குறை இல்லா உன்னிடம்

மறை தொழும் உன் மலர் பாதங்களிடம்

வரை இன்றி அருளும் உன் திருக்கரங்களிடம்

நரை காணா உன் திருமேனியிடம்

சடை கொண்டோன் பாதி மேனியிடம்

அன்னம் நடை பயிலும் அழகியிடம்

கருணை மடை உடைத்து ஓடும் உத்தமியிடம்

எடை ஒன்றும் இல்லா இடை கொண்டவளிடம்

தடை இன்றி கடை கொண்டு பக்தனை அடைபவளிடம்

சரண் அரண் நமக்கே என்றேன் ...

காரணம் இன்றி அருளும் அன்னையிடம் கேட்டேன் ஒரு கேள்வி

ஏனம்மா தாமதம் என்னிடம் வருவதற்கு என்ன தடை கண்டாய் என்றே !!

சிரித்தாள் சிங்கார வல்லி ...

உன்னுள் நானிருக்க வெளி தேடும் அறிவு எங்கு பெற்றாய் ?

உள்ளுக்குள் பார்த்தால் உமை பங்கனாய் நான் இருப்பது தெரியாதோ என்றாள் ..

வெட்கி தலை குனிந்தேன் வேண்டா ஒரு கேள்வி கேட்டே 💐💐💐
Hemalatha said…
எளிமை, ஆழமான சிந்தனை அற்புதம் 🙏
சிவாயநம 🙏
Hemalatha said…
என்ன ஒரு‌ அன்யோன்யம் தங்களுக்கு தான் அன்னையிடம்.வியப்பு👏👏👌🙏
ravi said…
ஐயகோ பால் மணம் மாறா இச்சிறு குழந்தை சமணர்கள் கையில் சிக்கி கொண்டால் என்னாவது ?

என்னை சுண்ணாம்பு கால்வாயில் தள்ளினது போல

கல் முதுகில் கட்டி கடலில் வீசி எறிந்ததை போல

இந்த குழந்தையை செய்து விட்டால் நாளை சைவம் எப்படி வாழும் ?

நான் கிழவன் ... என் உயிர் இன்றோ நாளையோ

ஆனால் இந்த குழந்தை பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டுமே ..

பாண்டி மன்னன் சமண மதத்தை தழுவினவன்

புத்தி கெட்டு ஏதாவது தீங்கு இந்த குழந்தைக்கு இழைத்து விட்டால் நான் என் செய்வேன் ?

தமிழ் என் செய்யும் ..?

பால் ஓடி வந்து கொடுத்தவள் தான் தாங்குவாளா ?

எதையாவது சொல்லி எப்படியாவது இந்த குழந்தை மதுரை செல்லாமல் நான் தடுக்க வேண்டும் ..

ஈசனே!!!

ஒரு வழி நீ தான் காட்ட வேண்டும் ..

உள்ளுக்குள் கதறினார் நாவுக்கரசர் 💐💐💐
ravi said…
💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 498* 🙏🙏🙏started on 7th Oct 2021

*218வது திருநாமம்*
ravi said…
*218 महारतिःமஹாரதி:*

உலகத்தில் எதெல்லாம் நாம் சுகம் இன்பம் என்கிறோமே அதெல்லாம் நாம் அனுபவிக்க வாரி வழங்குபவள் *ஸ்ரீ லலிதாம்பிகை.*

சந்தோஷபடுத்தும் சந்தோஷி மாதா அல்லவா அவள்?.
ravi said…
[26/02, 11:10] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 93*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*80*
[26/02, 11:11] Jayaraman Ravilumar: देशिक इति किं शंके तत्तादृक्तव नु तरुणिमोन्मेषः ।

कामाक्षि शूलपाणेः कामागमसमयदीक्षायाम् ॥ ८०॥

80. Desika ithi kim shankhe thath thadrukthwa nu tharunee monmesha,

Kamakshi, soola pane, kamagama thanthra, yajna deekshayaam.

தேஶிக இதி கிம் ஶம்கே தத்தாத்றுக்தவ னு தருணிமோன்மேஷஃ |
காமாக்ஷி ஶூலபாணேஃ காமாகமஸமயதீக்ஷாயாம் ||80||
ravi said…
அம்பாள் சந்தேகத்திற்கு துளியும் இடமில்லாமல் சர்வ லோக குரு,

யௌவன ஆசார்ய ஸ்வரூபிணி.

த்ரிசூலநாதன் ஸாக்ஷாத் பரமேஸ்வரனுக்கு ஞானோபதேசம் செய்பவள்.

மன்மதனின் சக்தியையும் , அவனது பஞ்சபாண அஸ்திரங்கள், தனுசு, எல்லாம் பெற்று அவனைப் போலவே காந்தசக்தி கொண்டு பிரபஞ்சத்தை கவரும் காமேஸ்வரி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.👏👏👏🙏🙏🙏
ravi said…
*MAKING IT TO THE TOP*

I called a candidate about a new opportunity. It was a promotion from his current role, and he had the right skills and qualifications.

"Sorry but I'm not interested," he politely said. I pressed him on it until he said something that really confused me.

He told me that he "already made it to the top".

I was familiar with his current company and looked at his CV again.

He wasn't anywhere near the top. He would have needed binoculars to see the top.

He wasn't even a manager yet. He explained to me that "making it to the top" for him meant he loved the exact work he did each day, he loved his company, he was treated fairly and with respect, he made enough money to be comfortable, he had excellent benefits, he had flexibility, and most importantly to him, he's never missed a single football game, school play, parent-teacher conference, anniversary, birthday, or any family event.

He knew what taking the next step in his career meant.

More time, travel, and sacrifice. "Not worth it," he said.

Your definition of "making it to the top" doesn't have to be society's or anyone else's definition.

Have Superlative Sunday
ravi said…
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா

குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது

அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க

இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா

நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து

உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

கோடி ஜன்மம் நான் எடுப்பேன்

குரு உந்தன் அருள் இருந்தால்


உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்

நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது

நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)
ravi said…
காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?

ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம்
ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம்.

வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா?

நம்முடைய வீடுகளில் கூட சாதாரணமாக திரிகின்ற பல்லி மோட்ச ஸ்தலமான வாரணாசியில் மட்டும் ஏன் இல்லை என்று யோசிக்க வேண்டியது மிக அவசியம்.
ராவண வதம் நடந்தது பல யுகங்களுக்கு முன்பு ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார். அப்படி அனுப்புகிற பொழுது, காசிய நோக்கி ஹனுமான் பயணம் செய்கிறார்.

அப்படி காசியை நோக்கி ஹனுமான் வரும்பொழுது, அவருடைய கண்களில் அங்கிருக்கும் பல ஆயிரக்கணக்கான லிங்கங்களும் அங்கு தென்படுகின்றன. அதைப் பார்த்ததும் ஹனுமான் குழம்பிப் போகிறார். அங்கிருக்கும் லிங்கங்களில் எது சுயம்பு லிங்கம் என்பது அவருக்குத் தெரியவில்லை. சுய லிங்கத்தைக் கொண்டு சென்றால் அதற்குரிய பலன் என்பது மிகமிக அதிகம். அதற்குரிய சக்தியும் அதிகம். அதனுடைய சக்திப் பிரவாகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சுயம்பு லிங்கத்தை காசி முழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஹனுமன். ஆனால் கிடைக்கவில்லை.

அப்பொழுது கருடன் அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். இதுதான் நீங்கள் தேடுகின்ற சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து கத்திக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தது கருடன். அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார்.

அதேபோல் பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்தி காட்டிக் கொடுத்தது. இவ்வாறு கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தது.

இதன்பின்பு, கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தார். அப்படி கிளம்புகிற பொழுதுதான் அங்கே ஒரு பெரிய பிரச்னை வெடித்தது.

காசியில் காவல் தெய்வமாக இருப்பவர் யார் தெரியுமா? காசிக்கு காவல் தெய்வமாக இருப்பவர் கால பைரவர். அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் ஹனுமனோ தன்னுடைய எஜமானர் ஸ்ரீ ராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார். அப்போது கால பைரவர் ஹனுமனை தடுத்து நிறுத்துகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்து, சண்டை வலுக்க ஆரம்பிக்கிறது. இருவருக்குமே கோபமும் ரௌத்திரமும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அதிக பலசாலிகளாக இருப்பதால் இருவருக்கும் இடையே இருக்கின்ற சண்டையை எப்படியாவது பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசித்து கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினார்.

ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட அவர், லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கொடுத்தார். தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாகத் தெரிவித்தார். அதோடு சுயலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார்.

ஆனால் அதேசமயம் ஹனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபத்தை வழங்கினார் கால பைரவர். இந்த வாராணசியில் (காசியில்) எங்கும் நீங்கள் இருவரும் இருக்கக்கூடாது என்று சாபம் கொடுத்தார். எப்போதும் காசிக்கு வரக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.

அதனால் தான் வாரணாசியில் எப்போதும் கருடனும் பல்லியும் இருப்பதில்லை.

மு சுகுமாரன்
ravi said…
[26/02, 16:27] Jayaraman Ravilumar: வஸுர்‌ *வஸுமனாஸ்* : ஸத்யஸ்:

ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[26/02, 16:38] Jayaraman Ravilumar: *106. வஸுமநஸே நமஹ (Vasumanase namaha)*
ravi said…
அவ்வளவுதானே!” என்று சொன்ன கண்ணன், தன் அரண்மனை இருக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான்.

அங்கே வரிசையாக ஒரே மாதிரி அமைப்பு கொண்ட பதினாறாயிரத்து எட்டு மாளிகைகள் இருந்தன.

“நாரதா! நீ இந்த மாளிகை களுக்குள்ளே சென்று பார்த்தால் நான் எப்படி அனைத்தையும் நிர்வகிக்கிறேன் என்று புரியும்!” என்றான் கண்ணன்.

“ஒரு மாளிகையில் ஒரு நிமிடம் செலவிட்டால் கூட, ஒரு நாளில் 1440 மாளிகைகளுக்குத் தான் செல்ல முடியும்.

அதனால் சௌபரி ரிஷியைச் சந்தித்து ஒரே நேரத்தில் ஐம்பது உருவங்கள் எடுத்துக் கொள்ளும் சக்தியை
அவரிடமிருந்து வரமாகப் பெற்று வந்துள்ளேன்!” என்றார் நாரதர்.

“மிக்க மகிழ்ச்சி! உள்ளே சென்று பார்!” என்றான் கண்ணன்.

ஐம்பது வடிவங்களுடன் ஐம்பது மாளிகைகளுக்குள்ளே நுழைந்தார் நாரதர்.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 96 started on 6th nov

*பாடல் 29 ... இல்லே எனும்*

(அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ

பொல்லேன் அறியாமை பொறுத்திலையே

மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.🙌
ravi said…
3. பிரம்மத்தின் ஆற்றலுக்கும் மாயை என்றே பெயர்.

அம்பாளை
மாயை என்று வழங்குவதைப் பார்க்கலாம்.

சூரியனிடமிருந்து
கிரணத்தை பிரிக்க முடியாது.

அதுபோல பிரம்மத்திலிருந்து
சக்தியைப் பிரிக்க முடியாது.

4. இந்த சக்தி ஆவாரணம் விட்சேபம் என இரண்டு தொழிலை
செய்ய வல்லது.

உள்ளதை மறைப்பது ஆவாரணம்.

இல்லாததை
தோற்றுவிப்பது விட்சேபம்.

5. சைவ சித்தாந்தத்தில் மாயை என்பதற்கு எதில் எல்லாம்
மாய்ந்து எதிலிருந்து மறுபடியும் தோன்றுகிறதோ அதுதான் மாயை.

வேதாந்தத்தில் மாயை என்பதற்கு உண்மையான பொருள் அல்ல
என்று கூறுவார்கள்.

சித்தாந்திகளுக்கு பதி, பசு, பாசம் மூன்றும்
உள்ள பொருள்கள். இதில் பாசம் என்பது மாயை.

என்னுடைய பழைய வினைக்கு ஈடாக எனக்கு இந்த இல்
வாழ்க்கையை கொடுத்தவன் நீ.

அப்படி இருந்தும் நான் உன்னை
புகழ்ந்து பாடும்பொழுது நீ எனக்கு தந்தை தாய் என்றே இருக்கவும்
நானும் இப்படியே தவித்திடவோ என்று நான் பாட நீ மனம் இரங்கி
என்னை வந்து ஆட்கொண்டாய்.

பல அருளாளர்கள் பாட்டிலும் இப்படிப்பட்ட கருத்துக்களை காணலாம்.

.. நாய் போன்ற என்னையும் ராஜ பல்லக்கில்
ஏற்றுவித்தாயே ..

... என மாணிக்கவாசகர் பாடுகிறார்.
ravi said…
[26/02, 16:18] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 64வது ஸ்லோகம் பொருளுரை*
[26/02, 16:20] Jayaraman Ravilumar: வக்ஷஸ்தாடன-மந்தகஸ்ய கடி2னாபஸ்மார-ஸம்மர்த2னம்

பூ4ப4ருத்-பர்யடனம் நமத்ஸுரசிர:-கோடீர-ஸங்க4ர்ஷணம் |

கர்மேத3ம் மருது3லஸ்ய தாவகபத3த்வந்த்3 வஸ்ய கௌரீபதே
மச்சேதோ-மணி-பாது3 காவிஹரணம் சம்போ4 ஸதா2ங்கீ குரு || 64
ravi said…
உமாபதியே!

மென்மையான உனது இணையடிகளுக்கு
யமனது மார்பில் உதைப்பது;

அஞ்ஞானமென்ற கடினமான அபஸ்மாரத்தை மிதிப்பது;

(கைலாய) கிரியில் அலைவது,

வணங்கும் தேவர்களது கிரீடங்களில் உறைவது

ஆகிய இவை தொழிலாயுள்ளது.

(அவற்றால் ஏற்படும் வேதனையை விலக்க) எனது மனமாகிய இரத்தினப் பாதுகையை அங்கீகரித்து, அதனையணிந்துகொண்டு சஞ்சரிப்பீராக.🙏🙏🙏
ravi said…
விழிப்பு நிலையிலே ஸமாதி தழுவும்
விழுப்புரத்தில் உதித்த
வேத விழுப்பொருளே சங்கரா...
ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
ravi said…
கடவுள் மனிதனுக்குச் சொன்ன நூலாக பகவத் கீதை விளங்குகிறது.

மனிதன் மனிதனுக்குச் சொன்ன நூலாக திருக்குறள்
புகழ் பெறுகின்றது.

மனிதன் சொல்ல கடவுளே கைப்பட எழுதிக்கொண்ட நூலாக திருவாசகமே
உச்ச நிலையில் ஒளி விடுகின்றது.

குருநாதர் சொல்வதை மாணவர்கள் எழுதுவது மரபு

திருவாசகமோ மாணவன் சொல்ல ஆதி குரு எழுதிய அதிசயம்.

எதற்காக இந்நூலைக் கைப்பட கடவுளே எழுதினார் என்று அறிந்து கொள்வோமா?
ravi said…
கடை யூழி வருந்தனிமை கழிக்க அன்றோ

உடையார் உன் வாசகத்தில் ஒருவிரதி கருதி யதே!
ravi said…
அதாவது ஊழிக்காலத்தில் உலகம் முழுவதும் அழிந்த பின்பு சிவபெருமான் மட்டுமே தனித்து இருக்க நேரிடும். அல்லவா!

அத்தனிமை நேரத்தில் ஓய்வாக மன நிம்மதியுடன் மாணிக்கவாசகரின் திருவாசகம் படிக்கலாமே என்னும் காரணத்தால் தான் கைப்பட அவரே எழுதினாராம்.

இத்தகு பெருமை மிக்க திருவாசகத்தில் சிவ வாசகங்களாவது நாம் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

92.ப்ரஸூநை: ஸம்பர்காத் அமர தருணீ குந்தல பவை:
அபீஷ்டாநாம் தாநாத் அநிசமபி காமாக்ஷி நமதாம் |
ஸ்வஸங்காத் கங்கேலி ப்ரஸவ ஐநகத்வேன ச சிவே
த்ரிதா தந்தே வார்தாம்
ஸுரபிரிதி பாதோ கிரி ஸுதே

மலைமகளே ! சிவே ! காமாக்ஷி ! தேவமாதரின் கூந்தலிலிருந்த பூக்களுடன் தொடர்பாலும், வணங்குபவரின் விருப்பத்தை
எப்போதும் வழங்குவதாலும், தனது ஸ்பர்சத்தால் அசோகப்பூக்கள்
உண்டாவதாலும் உன் திருவடி ஸுரபி என்ற புகழைப் பெறுகின்றது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
_*இரவு சிந்தனை ��*_

உனக்கு எது பிடிக்கவில்லையோ..
அதனிடம் இருந்து விலகி நில்....!
பொருளானாலும் உறவானாலும்....
 

அதையே நினைத்து  உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதே ......!
 
அதனால் பாதிக்கப்படுவது  நீ  மட்டுமே...!

*இரவு இனிதாகட்டும் ��*

*விடியல் நலமாகட்டும்��*

╔•═•-⊰❉⊱•��•⊰❉⊱• •═•╗
★mahavishnuinfo.org ★
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱••═•╝
ravi said…
[27/02, 10:08] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 94*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*81*
[27/02, 10:10] Jayaraman Ravilumar: वेतण्डकुम्भडम्बरवैतण्डिककुचभरार्तमध्याय ।

कुङ्कुमरुचे नमस्यां शंकरनयनामृताय रचयामः ॥ ८१॥

81. Vethanda Kumbha dambara , vaithandika kucha bharartha madhyaya,

Kumkumaruche namasyam Shankara nayanamruthaya rachayama.

வேதண்டகும்படம்பரவைதண்டிககுசபரார்தமத்யாய |

குங்குமருசே னமஸ்யாம் ஶம்கரனயனாம்றுதாய ரசயாமஃ ||81||
ravi said…
இணை கூற முடியாத பேரழகி காமாக்ஷி.

குங்குமப்பூவில் வர்ணம் கொண்ட யௌவன ஸ்திரீயாக் காட்சி தருபவள்.

பரமேஸ்வரனின் அன்புக்கும், காதலுக்கும், ப்ரேமைக்கும் பாத்ரமானவள்.

காமேஸ்வரன் கண்களுக்கு அம்ருதமாக விருந்தானவள்,

ஆனந்த வெள்ளமானவள்.

அப்படிப்பட்ட அம்பாளை நமஸ்கரிக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*ஒரு சின்ன விஷய தானம்.*

என் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னது

அம்பாளின் கருணை ப்ரத்யக்ஷமாக எனக்கு கிடைத்ததற்கு ஒரு சின்ன உதாரணம். நான் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம் எழுத ஆரம்பித்து முதல் கட்டுரை அனுப்பினேன்.

வயதான ஒரு மெல்லிய குரல் டெலிபோனில் வந்தது.

ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி, நாற்பத்தைந்து ஐம்பது வருஷங்களாக சக்தி உபாசகர்.

தினமும் குறைந்தது ஏழு எட்டு மணி நேரங்களாவது லலிதா பூஜை வழிபாடு செய்துவிட்டு உண்பவர்.

இப்போது பொன்னேரியில் வசிக்கும் அவர் அடிக்கடி என்னோடு பேசுபவராகி விட்டார்.

மகா பெரியவளோடு நெருக்கமான ஒரு குடும்பம்.

மஹா பெரியவாளுக்கு ஆசானாக இருந்த பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி குடும்பம்.

பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளின் ரஸ நிஷ்யந்தினியை நான் தமிழில் எழுத காரணமானவர்.
ravi said…
அவரிடமிருந்து *பஞ்ச பஞ்சிகா* எனும் ஐந்து ஐந்து தேவி நாமங்களை பற்றி அறிந்தேன்.

இந்த பூஜை நாமாவளி நவாவரண பூஜைக்கு பிறகு உச்சாடனம் செய்வது.

குறிப்பாக இந்த ஐந்தைந்து பிரிவுகளும் அதில் வரும் நாமங்களை மட்டும் அவரிடமிருந்து அறிந்ததை விஷய தானம் செய்கிறேன்.


*பஞ்ச பஞ்சிகா பிரிவுகள்*

1.லக்ஷ்மி பஞ்சகம்
2.கோச பஞ்சகம்
3.கல்பலதா பஞ்சகம்
4.காமத்துக்கா பஞ்சகம்
5.ரத்ன பஞ்சகம்

ஒவ்வொரு பஞ்சகத்திலும் வரும் அம்பாளின் நாமங்கள்

1. *லக்ஷ்மி பஞ்சகம்:*

ஸ்ரீ வித்யா லக்ஷ்மி, ஸ்ரீ லக்ஷ்மி, கமலாலய மஹா லக்ஷ்மி, த்ரிசக்தி மஹாலக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி

*2. கோச பஞ்சகம்* :

ஸ்ரீ வித்யா கோஸி , பரஞ்ஜோதி கோஸி , பரா நிஷ்கள சாம்பவ கோஸி , அஜபா கோஸி மாத்ருகா கோஸி

*3.கல்பலதா பஞ்சகம்:*

ஸ்ரீ வித்யா கல்பலதா, துக்தா கல்பலதா , ஸரஸ்வதி கல்பலதா , திரிபுரா கல்பலதா, பஞ்ச பாணேஸ்வரி கல்பலதா

*4. காமதுகா பஞ்சகம்:*

ஸ்ரீவித்யா மஹா திரிபுரசுந்தரி, அமிர்த பீடேஸ்வரி, சுதா, அம்ருதேஸ்வரி, அன்னபூர்ணா.

*5. ரத்ன பஞ்சகம்* :

ஸ்ரீ வித்யா ரத்னா, சித்த லக்ஷ்மி ரத்னா, புவனேஸ்வரி ரத்னா, ராஜமாதங்கி ரத்நா , வாராஹி ரத்நா

ஸ்ரீ லலிதாம்பா நவாவர்ணமோ சக்தி வழிபாடோ ஒரு பெரிய கடல்.

முத்துக்கள் நவமணிகள் நிறைந்தது.

அதன் ஆழத்தை, என் போன்று கடற்கரையில் ஈர மணலில் வீடு கட்டும் சிறுவர்கள் அறிய இயலாதது...🙏🙏🙏
ravi said…
💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 499* 🙏🙏🙏started on 7th Oct 2021

*219வது திருநாமம்*
ravi said…
*ராமா*

எட்டும் ஐந்தும் பதிமூன்று எனக்கு எட்டுவதெல்லாம் *இரண்டு* ...

சொல்லும் பொருளும் சேர்ந்தே *ரா* *மா* என்றே இரண்டானதே

பாலும் சுவையும் பிரிக்க முடியுமோ *ராமா*?

ஸ்வரமும் இசையும் பிரியுமோ *ராமா*?

காற்றும் பரிசமும் கலையுமோ *ராமா* ?

நிலமும் மணமும் ஊடல் கொள்ளுமோ *ராமா*

வானமும் ஒலியும் விண்ணில் ஒன்றாய் பிரியுமோ *ராமா* ?

நெருப்புக்குள் இருக்கும் நீர் நான் வேறு என்று நினைக்குமோ *ராமா*?

உன் இரண்டு எழுத்தும் சிவம் வேறு நீ வேறு என்று சொல்லுமோ *ராமா*

ரம்மியமும் உன் நாமமும் என்று பிரியுமோ *ராமா*?

உன் கருணை பஞ்சம் என்றும் காணுமோ *ராமா ?* 💐💐💐
ravi said…
Sri Swamy Samarths' Akkakot connection .Akkalkot means Fort of knowledge (akal =knowledge , kot = fort )It is also known as Chaitanya nagar ,and Pradnyapur meaning town of intelligence. In mythology there is a story about Bori river flowing near Akkalkot. Badrika was a daughter of a sage she was flowing as a river .people named that river as Boori Bhadra (very Auspicious) In order to have strength for uplifting the souls of Devotees she did penance to please the almighty God. The almighty was pleased and gave her the desired boon and said in Kaliyuga lord Dattathreya will come on the earth by name of Swamy Samartha and by his grace you will be emancipated. Boori Bhadra was later called as Bori river.This river flows near Akkalkot, people have strong faith that this river is the source of life and protection for devotees and gives freedom from fetter of worldly life. Sri Swamy Samarth must have selected this place to make Bori river sacred and auspicious. Also this place is nearer to Ganagapur where Sri Narasimha Saraswathi Maharaj stayed .Sri Swamy Samarth happens to be Sri Narasimha Saraswathi Maharaj only , came back after 350 years of penance.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

93.மஹா மோஹஸ்தேன வ்யதிகர பயாத் பாலயதியோ
வினிக்ஷிப்தம் ஸ்வஸ்மிந் நிஜஜந மநோ ரத்னமநிசம்
ஸ-ராகஸ்யோத்ரேகாத் ஸததமபி காமாக்ஷி தரஸா
கிமேவம் பாதோஸெள கிஸலய ருசிம் சோரயதிதே

காமாக்ஷி ! பெரும் மோகம் எனும் திருடனின்
கைவரிசையிலுள்ள பயத்தால், தன்னிடம் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த தன்னைச் சார்ந்தவரின மனமாகிய ரத்தினத்தை இரவுபகலாகக் காப்பாற்றுகிற உன் இந்தத் திருவடி, தன் செம்மை எனும் ஆசை மிகுதியால் துளிரின் ஒளியை வேகத்துடன்
பறித்துச்செல்கிறதே ? ஏன் இப்படி?
பாதுகாப்பாளனே திருடுவதா?

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
Prof Bannanje Govindacharya was a great scholar and a great upasaka of Vishnu sahasranama.

Thousands of people used to attend his lecture on Vishnu sahasranama. One day while getting down the steps he twisted his ankle much pain was there and he was advised bed rest by Doctors.

His friend Dr V Shastry was a great Astrologer came to see him .

After talking to Sri Bannanje Govindacharya he looked into the horoscope of Sri Bannanje Govindacharya.

He told Sri Bannanje Govindacharya that his horoscope indicates Sade Saath and Astama Shani and would not be cured of his foot problem .

Sri Bannanje Govindacharya said his chanting of Vishnu sahasranama will not cause any ill effect of planets .

The Astrologer challenged Sri Bannanje Govindacharya and told him that he would be bed ridden for at least 4 months.

Sri Bannanje Govindacharya said in three days he would be alright and would visit the Astrologers house after 3 days .

Sri Bannanje Govindacharya as usual went on chanting Vishnu sahasranama continuously and the second day his ankle became normal and the 3d day he visited his Astrologer friends house by walk.

The friend Astrologer was more than surprised.

Sri Bannanje Govindacharya told the Astrologer That by chanting Vishnu sahasranama no ill effect of any planet takes place.

There are innumerable benefits of Vishnu sahasranama. 🙏🙏
ravi said…
[27/02, 19:45] Jayaraman Ravilumar: வஸுர்‌ *வஸுமனாஸ்* : ஸத்யஸ்:

ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[27/02, 19:45] Jayaraman Ravilumar: *106. வஸுமநஸே நமஹ (Vasumanase namaha)*
ravi said…
ஐம்பது மாளிகைகளுள் ஒவ்வொரு மாளிகையிலும் ஒரு கண்ணன் இருப்பதைக் கண்டார்.

ஐம்பது மட்டுமல்ல, பதினாறாயிரத்து எட்டு வடிவம் எடுத்துக்கொண்டு பதினாறாயிரத்து எட்டு மாளிகைகளிலும்
கண்ணன் இருந்து கொண்டு, அத்தனை மனைவிகளையும் திருப்திப் படுத்துகிறான் என்பதை உடனேயே புரிந்து கொண்டார்.

தனது ஐயத்துக்கு விடை கிடைத்த போதும், கண்ணன் அங்கே அன்றாடம் என்ன செய்கிறான் என அறியும் ஆவல் நாரதருக்கு ஏற்பட்டது.
ravi said…
*சிவானந்தலஹரி 64வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
மிகவும் அருமையான கற்பனை வளம் நிறைந்த ஸ்லோகம் . பாதார விந்த மகிமை

ஏ பரமேஸ்வரா ! காடு மலை கற்கள் முட்கள் நிறைந்த இடங்களில் நீ நடக்கின்றாய் ...

கொடிய எமனை காலால் உதைத்தாய்

முயலகனை பாதங்களில் அமிழ்த்தி நடம் புரிகின்றாய்

சுந்தரனுக்காக திருவாரூர் தெருவெங்கும் பல முறை நடந்தாய்

உன் மிருதுவான பாதங்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறது .. உமையும் உன் பாதங்கள் படும் கஷ்டங்களை நினைத்து கலங்காத நாள் இல்லை

ஒரே ஒரு வேண்டுகோள்

என் மனம் உன் நாமம் தாங்கி இருப்பதால் மிகவும் மிருதுவானது...

அதனால் பாதணிகள் செய்து தருகிறேன்

அதை அணிந்து கொண்டு நடந்தால் உன் பாதங்கள் இப்படி கரடு முரடாக ஆகாது ...

கருணை செய்து ஏற்றுக்கொள் என் மனம் எனும் பாதணிகளை 👣👣
ravi said…
*பாடல் 30 ... செவ்வான் உருவில்*

(உணர்த்திய ஞானம் சொல்லொணானது)

செவ்வான் உருவில் திகழ் வேலவன்,

அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்

அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.🪷🪷🪷
ravi said…
சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் தோன்றுகின்ற இளம்
சிவப்பு பிரகாசிக்கின்ற வேலாயுதக் கந்தன்,

முன்பு குருவாய் மானிட
வடிவில் தோன்றி என்னை ஆட்கொண்டபோது,

நான் கொண்டிருந்த
பெளதீக உலகாயுத வாழ்க்கை, ஆன்ம லட்சணத்திற்கு பொருந்தாது
என்ற உண்மை நெறியை உபதேச வாயிலாக

நான் உணரும்படி
செய்தது, அது என்னைப் போன்று அதை குருமுகமாக அறிய
வாய்ப்புகொண்ட அறிவாளிகளே அன்றி எப்படி அந்த அனுபவத்தைப்
பெற்று பிறருக்கு எடுத்து உரைக்கக் முடியும்?
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 97 started on 6th nov
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

"மரியாதை" கொடுத்து பேசுபவர்களிடம் அவர்களை மதித்து நின்று பேசு...

"அவமரியாதையோடு" பேசுபவர்களை அலட்சியம் செய்து விட்டு கடந்து செல் வாழ்க்கை சிறக்கும்....!


🔥🔥🔥

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★mahavishnuinfo.org ★
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱••═•╝
Friend said…
Hello ravi ji today you recited L S very beautifully. and then I finished Visvas B batch also I got 34/40 marks. . I say once again thank you for the pdf you send to me . what about your self whether you finished B batch.
Jai sri rsm
ravi said…
*❖ 127 ஸ்ரீகரீ =*

செழிப்பையும் வளத்தையும் உண்டாக்குபவள்🪷
ravi said…
அம்மா

உன் நாமங்கள் பஞ்சம் காண்பதுண்டோ ?

உன் நாமங்கள் சொல்வோர்க்கு பஞ்சம் வருவதுண்டோ ?

உன் நினைவில் வாழ்வோர் கவித்துவம் தனில் பஞ்சம் பார்ப்பதுண்டோ ?

பஞ்சும் அஞ்சும் மெல்லடிகள் அதில் கொஞ்சும் பொன்னிற கொலுசுகள்

உன் கொவ்வை வாயின் குமிழ் புன்னகை தனை பஞ்சமின்றி கொட்டதோ ?

உன் அருள் வெள்ளம் என்றும் வற்றியதுண்டோ ...

வண்டலார் குழலி அம்மையே

எனை என்றும் வாடாத மலராக்கினாய் ...

அங்கே வண்டாய் வந்தே மலரின் பிறவிப் பயனைத் தந்தாய் !!!

எனை சூழ்ந்த அறியாமை எனும்
பஞ்சம் அஞ்சி பறந்ததே 👣👣👣
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

84 –
மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை
வசம் ஆக்கினை அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

அறியாமை எனும் இருளில் சிக்கி தவிக்கிறேன் உன் ஒளி தெரியுமோ *அருணாசலா ?*

மை போன்ற இருள் உன் மந்தஸ்மிதம் தனில் கரையாதோ *அருணாசலா* ..

உதவும் உன் கரங்கள் ஒளி கொண்ட உலகை படைக்கத்தோ *அருணாசலா*

மின்னும் பொன்னும் முன்னும் பின்னும் ஒளிரும் உன் திருவடிகள் திக்கட்டு அலையும் எனக்கு திக்கெட்டு திசையும் உன் காந்தி அருளாதோ *அருணாசலா*

ஓங்கி உலகளந்தவன் உன் அடி அளக்க வில்லையே *அருணாசலா* ...

ஹம்சமென பறக்கும் நான்முகனும் காணவில்லையே உன் ஒளி தனை *அருணாசலா*

அடி காண்பித்து ஆட்கொண்டாய்

முடி காண்பித்து என் மூர்க்கம் அறுத்தாய்

புன்னகை கொடுத்து பூவாய் மலரவைத்தாய்

மை பிறக்கும் இருள் தனில் முழு நிலவின் ஒளி தந்தாய் ...

நீ தராதது என்று எதுவும் இல்லை

நான் பெறாதது என்று எதுவும் இன்னும் பிறக்கவும் இல்லை *அருணாசலா*🪷🪷🪷🪷🪷
ravi said…
*Meaning*

Removing the dark illusion ... you have established me in true state by your grace , arunachala 🙏
ravi said…
💐சிவாய நம:💐

நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று `தந்தையே, சிவநாமங்களில் உயர்ந்தது `சிவாய நம:' என்று கூறுகிறார்களே. இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்' என்றார்.

பிரம்மா நாரதரிடம், `நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக்கேள்', என்றார்.

நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தை கேட்டார். நாரதர் இதைக்கேட்டதும், அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது.

இதைப்பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிச்சென்று, `தந்தையே, சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன்.

இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,' என்றார். `நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய்.

அதோ, அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,' என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா.

இதன்படி நாரதரும் ஆந்தையிடம் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார். பிரம்மாவிடம், `என்ன இது சோதனை' என்று கேட்டார்.

பிரம்மா, `நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ, அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும், என்றார்.

`தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம்,' என்று பயந்து நடுங்கினார் நாரதர்.

பயம் வேண்டாம்' என்று பிரம்மா தைரியம் கூறி நாரதரை அனுப்பி வைத்தார். நாரதரும், கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார்.

அப்போது தான் பிறந்த கன்று இதைக்கேட்ட உடனே உயிரை விட்டது. நாரதர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது. பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால் இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும், என நினைத்தார் நாரதர்.

அப்போது, அங்கு வந்த பிரம்மா அவரிடம், `கன்றும் இறந்து விட்டதா. சரி பரவாயில்லை. இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,' என்றார்.

இதைக்கேட்ட நாரதர் அலறிவிட்டார், பிரம்ம தேவா என்ன இது? அந்தக்குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான், என்றார் நாரதர். இருந்தாலும் பிரம்மா விடவில்லை.

இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும், என்றார்.

நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசியது. `நாரதரே, இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன்.

அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது.

இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்' என்று குழந்தை கூறியது.

அந்தக்குழந்தை மேலும் கூறியது, `சிவாயநம என்பதை `சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும்.

சி என்றால் சிவம்;🌹
வ என்றால் திருவருள், 🌿
ய என்றால் ஆன்மா,🌹
ந என்றால் திரோதமலம்,🌿
ம என்றால் ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள்.🌹

நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.

சிவாய நம:' என்று உள்ளம் உருக கூறினால், இந்த பிறவியில் இருந்து அவர் விடுபடுவார் என்றது குழந்தை.

இதைக்கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார். பிறவிப்பிணியில் இருந்து விடுபட `சிவாய நம:' என்போம், இறைவனின் திருவடிகளை அடைவோம்.
ravi said…
🌹🌺 "What we sow is what we get back.... - A simple story to illustrate 🌹🌺 -------------------------------------------------- ------
🌹🌺In Kapilapuram, there lived a merchant named Sangaman. Honesty in business. His wife is Neely. The husband is an unrepentant devotee.

🌺 The nearby town called Singhapuram was forbidden for anyone except traders. When Sangaman went there for business, Bharata, a rival merchant, saw him.

🌺Going to the king, a certain Sangaman has come from Kapilapuram to see Vevu. Catch him, he said.

🌺 The king also killed Sangaman without inquiring. Neely is shocked. She lamented. Those who wronged me and caused me suffering, may they suffer the same in their next birth! She cursed and died.

🌺In reincarnation, Bharata who caused the death of Sangaman was born as Govalan and his wife as Kannagi. Kovalan was killed.

🌺 Kannagi staggered. The misjudged king was born as Nedunchezhiyan and his wife Kopperundevi died. Don't even dream of hurting others from now on..

🌺 What we sow is what we get back... Evil and good do not come from what others give us... Good we do comes from evil 🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga vaiyagam 🌷🌹🌺 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நாம் எதை விதைக்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.... - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺கபிலபுரத்தில், சங்கமன் என்ற வியாபாரி வசித்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி. கணவன் சொல் தட்டாத பதிவிரதை.

🌺அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சங்கமன் அங்கு வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி வியாபாரியான பரதன் பார்த்தான்.

🌺அரசரிடம் சென்று, சங்கமன் என்ற ஒற்றன் கபிலபுரத்திலிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள், என்றான்.

🌺அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான். நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். நீதி தவறி யார் எனக்கு துன்பம் செய்தார்களோ, அவர்கள் அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக! என சாபமிட்டு இறந்து போனாள்.

🌺மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்கு காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான்.

🌺கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி கோப்பெருந்தேவியாகவும் பிறந்து உயிர் விட்டனர். இனிமேலாவது, பிறருக்கு துன்பம் இழைக்க கனவிலும் நினைக்காதீர்கள்..

🌺நாம் எதை விதைக்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்... தீதும் நன்றும் பிறர் தருவதால் வருவது அல்ல... நாம் செய்யும் நன்மை தீயவைகளால் வருவதே ஆகும் 🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


*
ravi said…
[28/02, 07:22] +91 96209 96097: நிஜாஜ்ஞாரூபனிக³மா *புண்யாபுண்யப²லப்ரதா³ *🙏🙏
எது எப்பொழுதும் நன்மை அளிக்கிறதோ, அந்த தீமை அற்ற நிலையை அளிப்பவள்
[28/02, 07:22] +91 96209 96097: *சரபாய நமஹ*🙏🙏
அறநெறி தவறி நடப்பவர்களை அழிப்பவர்
ravi said…
எப்படியாவது சம்பந்தர் மதுரை போவதை தடுக்க வேண்டும் என்ற கவலையில் ...

சம்பந்த பெருமானே இன்று கோளும் சரியில்லை

நாளும் சரியில்லை ... இன்னும் கொஞ்ச நாள் பிறகு செல்ல லாமே என்கிறார்

சம்பந்தர் நாவுக்காரசரை பார்த்து சொல்கிறார் ...

அப்பர் அடிகளே தங்களா இப்படி பேசுவது ?

நாம் அந்த ஈசனின் அடியார்கள் ...

அவன் என்றும் எப்பொழுதும் நம்முள்ளே இருக்கிறான் ...

யார் நம்மை என்ன செய்யய முடியும் ?

சந்திர கிரகணம் அண்டுமோ அவன் சூடும் மதி மதி இழக்குமா ?

விடம் கக்கும் நாகங்கள் என்ன செய்யும் ...

அவன் மேனி தனில் விளையாடும் வாய்ப்பை இழக்குமோ ?

மான் என் செய்யும்? மழு என் செய்யும்? முயல் என் செய்யும்? எலும்புகள் என் செய்யும்?

புலி என் செய்யும்? யானை என் செய்யும் ?,

நீர் காற்று என் செய்யும் ...?

அவன் அருள் இழக்க உடன் படுமோ ?

சூல நோயை அவன் திரிசூலம் அழிக்காதோ ?

ஆசை பேய்களை அவன் கண்கள் பொசுக்காதோ ?

நாவுக்காரசரின் நா அன்று மேலே பேச முடியாமல் தவித்தது 🙏🙏🙏🙏🙏
ravi said…
*ஒரு சக்தி ஆலயம்:*

ஸ்ரீ முண்டக கண்ணி அம்மன், மைலாப்பூர்.
ravi said…

ஸ்ரீ முண்டக கண்ணி அம்மன், மைலாப்பூர்.
[28/02, 07:10] Jayaraman Ravilumar: எல்லாவற்றையும் சிதைப்பது நமக்கு வழக்கம்.

பெயர்கள் பொருள்கள், புஷ்பம், பழங்கள், பண்பாடுகள், புஸ்தகங்கள், அனைத்துமே எது கண்ணில் கருத்தில் பட்டாலும் அதை த்வம்ஸம் பண்ணுபவர்கள்.

முண்டகம் என்றால் தாமரை, தாமரைக் கண்ணாள் என்ற அழகிய பெயரை விழி பிதுங்கியவள், பெருத்தவள் என்று முண்டக்கண் என்று கொச்சையாக சொல்லும்படியாக்கி விட்டார்கள்.

அரசாங்க சுற்றுலாத்துறை பதிவுகள் கூடவா இதைத் திருத்தக் கூடாது.

பல நூறு வருஷங்களாக பிரபலமான ஒரு சென்னை நகர ஹ்ருதயத்தில் உள்ள, நகரை அலங்கரிக்கும் ஒரு அழகு இந்த முண்டகக் கண்ணியம்மன் ஆலயம்.

சக்தி வாய்ந்த மாரியம்மன்.

தோஷ நிவர்த்தி பண்ணுபவள்.

பலவருஷங்களாக நான் சென்று வணங்குபவள் .

சுயம்புவாய்த் தோன்றி பக்தர்களுக்கு அருள் செய்யும் 1000 ஆண்டுப் பழைமையான முண்டகக் கண்ணியம்மன் கோயில்!
அம்பாள் ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒருவள்.

சப்த கன்னிகைகளுள் ஒருவள்

மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், கோலவிழி அம்மனும் முண்டகக்கண்ணி அம்மனும் தான்.

அம்பாளின் கருவறை ஓர் எளிய தென்னங்கீற்றுக் கொட்டகைதான்.

இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை , ' *விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்'* என்ற பொருளில் ' *முண்டகக் கண்ணியம்மன்'* என்கின்றனர்.🙏🙏🙏
ravi said…
[28/02, 07:02] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 95*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*82*
[28/02, 07:04] Jayaraman Ravilumar: अधिकाञ्चितमणिकाञ्चनकाञ्चीमधिकाञ्चि कांचिदद्राक्षम् ।

अवनतजनानुकम्पामनुकम्पाकूलमस्मदनुकूलाम् ॥ ८२॥

82. Adhikanchitha mani kanchana, Kaancheem, adhi Kanchi Kancha dhadraksham,

Avanatha jananukampham anukampakoolam, asmad anukoolaam.

அதிகாஞ்சிதமணிகாஞ்சனகாஞ்சீமதிகாஞ்சி காம்சிதத்ராக்ஷம் |

அவனதஜனானுகம்பாமனுகம்பாகூலமஸ்மதனுகூலாம் ||82||
[28/02, 07:06] Jayaraman Ravilumar: இந்த அழகிய காஞ்சி நகரத்தில் நான் யாரை தரிசித்தேன்?

எண்ணற்ற தங்க, மணிகளால் இழைக்கப்பட்டு, கோர்க்கப்பட்ட சிறந்த வேலைப்பாடு மிக்க பொன் ஒட்டியாணம் இடையில் அணிந்தவளும்,

தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி தயை புரிபவளுமான காமாக்ஷி தேவியை

கம்பா நதி தீரத்தில், ஆலயத்தில்கண்டு நமஸ்கரித்தேன்.👏👏👏
ravi said…
*ராமா*

பொன் பொருள் சுகம் தருமோ *ராமா*

உன் புன்னகை தனை கண்டபின்னும்

கண் செவி வேறு கண்டும் கேட்டும் இருக்குமோ *ராமா*

உன் நாமம் தினம் நான் உரைக்கும் போதில்

நெஞ்சும் மனமும் வெளி சுற்றுமோ *ராமா*

நீ உள் புகுந்தவுடன்

நேரமும் காலமும் என் விதி மாற்றுமோ

உன் மதி முகம் மனதில் நிழல் என பதியும் போதே *ராமா*

சோகமும் போகமும் என் நடை மாற்றுமோ *ராமா*

தொடர்ந்து நீ என்னுடன் வரும் வேளை தனில்

வேகமும் விவேகமும் உன் வில்லில் தங்கும் அம்பு போல் விருட்டென்றே வெளி வராதோ *ராமா*

உன் நினைவு எனும் அம்புறா துணி என்னுடன் என்றும் உறையும் போது 🙏🙏🙏
ravi said…

பழனிக் கடவுள் துணை -28.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-73

மூலம்:

வந்தோர்க்கும் தன்பால் வசிப்போர்க்கும் மாறிலின்பம்
தந்தோ வறக்கலக்கும் தம்பிரான் – திந்தோம்என்(று)
ஆடுவான் செய்த அருந்தவப்பே றாய்ப்பழனி
நீடுவான் என்கை நிசம் (73).

பதப்பிரிவு:

வந்தோர்க்கும் தன்பால் வசிப்போர்க்கும் மாறு இல் இன்பம்
தந்து ஓவறக் கலக்கும் தம்பிரான்! – திந்தோம் என்(று)
ஆடுவான் செய்த அரும் தவப்பேறாய்ப் பழனி
நீடுவான் என்கை நிசம்!!! (73).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தந்து ஓவற-கொடுத்து நீங்காமல், ஒன்றியிருந்து;
நீடு-நெடுங்காலம்; நிலைத்திருக்கை;
என்கை-என்று சொல்லுகை;

தன்னை, தன் அருளை நாடி வந்தோர்க்கும், தன்பாலே என்றும் வசிப்போர்ரான நமர்க்கும், மாறுதலே இல்லாத இன்பம் என்றுமே கொடுத்து, அவன் அடியவரை, நமரை, என்றும் நீங்காமல், அவரோடே ஒன்றியிருந்து கலக்கும் பழனிக் கடவுள், எங்கள் தலைவர், மன்னாதி மன்னர்! அவன் திந்தோம் என்று நடனக் கூத்து ஆடும் எல்லாம் வல்ல ஈசன் செய்த அரும் தவப்பேறாய்த் தோன்றியவன்; அவன், எங்கள் பழனி வேந்தன் பழனியில் வரையறுக்க முடியாத நெடுங்காலம், ஏன்? என்றுமே நிலைத்திருப்பவன் என்று நான் சொல்லுகை என்பது சத்தியமான சத்தியம். வேறு யாருக்கும் சாத்தியப்படாத சத்தியம்.

பழனித் தம்பிரான், நமர் எம்பிரான், அவன் என் பிரான்! முன்பு வெம்பினோர்க்கே* அன்பு அருளும் அவன், அவனை நம்பினோரிடமா வம்பு செய்வான்?

*வெம்பினோர்‌ - பகைத்தோர்‌.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*சிவபெருமானே உட்கார்ந்து ஓலைச்சுவடியில் எழுதிய சிவபுராணம்*!

நமச்சிவாய வாழ்க!

சிவபுராணத்தின் பெருமைகள் :

1.தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி  மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2.வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் "தாங்கள் எழுதிய  திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன்" என்றார்.

3.மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும், பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4.மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று, ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள்  கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5.ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில்    "மாணிக்கவாசகர் சொல்ல, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது" என கையொப்பம்
இடப் பட்டிருந்தது.

6.மீண்டும் திகைத்து போய், பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள், மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய், "ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது  பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8.தீட்சதர்கள்,  மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9.மாணிக்கவாசகர், மந்தகாசப் புன்னகையுடன்,
நடனக் கோலத்தில்
இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி" இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10.*அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.*

11.ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13.சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14.சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்கஎன முடியும்.

15.சிறப்பு - 4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16.இவ்வாறு 6-5-8 என  அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17.சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18.திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19.ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில், அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20.காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று
தங்கள் குறையை கூறினர். பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து
ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21.இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.
"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி,
பல் விருகமாகி,   பறவையாய், பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே
போகலாம்".

முதல் திருப்பதிகமான சிவபுராணத்தில் *நமச்சிவாய வாழ்க!* என ஆரம்பித்து...
*அம்மை எனக்கு அருளியவாறு ஆர்  பெறுவார் அச்சோவே!*
என முடித்திருப்பார் மணிவாசகப் பெருமான்.

*சிவமும் சக்தியும்தான் திருவாசகம்.*

*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர்
சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*

திருச்சிற்றம்பலம்

*மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி*
--------------------------------------------
ravi said…
Sri Raghavendra swamy ji giving Darshan to the British collector Sir Thomas Munro . Sir Robert Munro was the collector of Bellary in 1800 .He was a strict officer .Some body had given information to Madras government that the Math of sri Raghavendra swamy ji and the Mantralaya village are not submitting the annual tax to the British government. The Madras government ordered Sir Thomas Munro to collect the tax from the math. Sir Munro entered the premises of the math, he immediately removed his shoes and hat started moving towards the math.He was accompanied by many revenue officials. Suddenly Sir Munro stopped and saw Sri Raghavendra swamy ji coming out of Brindavan .He was totally dazed at the divine sight of Sri Raghavendra swamy ji. Sri Raghavendra swamy ji conversed with Sir Munro for more than an hour . The Saint was visible only to Sir Munro .The accompanied revenue officers were wonderstruck to see with whom Sir Munro was conversing . Finally Sri Raghavendra swamy ji blessed Sir Munro and gave him Mantraakshatha .The British officer went back to Madras and wrote and an order favoring the math and the village .This notification is published in Madras gazette and the order is still preserved in Fort St George and Mantralayam . Sir Munro became a staunch follower of Sri Raghavendra swamy ji .Very recently his 4th or 5th generation people visited Sri Raghavendra swamy ji math Mantralaya. What a great Soul Sir Munro must be for meeting and getting blessings from Sri Raghavendra swamy ji. PUJYA YA RAGHAVENDRA YA SATHYA DHARMA RATHAYACHA BAJATAM KALPA VRIKSHA NAM NAMATAM KAMADHENU VE 🙏🙏
ravi said…
Sri Manik Prabhu Maharaj is Lord Dattathreya incarnation 1817-1865 he is a saint poet philosopher from Bidar dist Karnataka Right from the age of 4 years he made people to realise that he is Lord Dattathreya incarnation when Sri Manik Prabhu was about 12 years he was moving in a village called Chakalapur near Bidar it was getting dark he entered into a Hanuman Mandir to spend the night He put his clothes sandals and other things into a cloth bundle and placed the bundle on the shoulder of Hanuman and went to sleep .early morning the priest came to the temple and became wild and infuriated by seeing old cloth bundle on Hanuman's shoulder he threw the bundle and looked at Sri Manik Prabhu and questioned him Sri Manik Prabhu smilingly replied that since Lord Hanuman protects the whole world he would look after his cloth bundles also The priest lost his patience and started beating Sri Manik Prabhu with a stick the nearby people crowded to see the happenings at that time the flower garland and ornaments from Lord Hanuman disappeared and they were on Sri Manik Prabhu also the statue of Lord Hanuman started bleeding the priest was shocked to see thee bleeding of Lord Hanuman and thought that Sri Manik Prabhu must be lord Hanuman himself The priest fell at the feet of Sri Manik Prabhu and sought forgiveness from Sri Manik Prabhu the saint blessed him and left , Many sadgurus and Dattathreya avatharis Sri swamy Samarth Sri Saibaba Sri Gondavalekar Brahma Chaitanya Maharaj have visited him his samadhi is at Manik nagar Humnabad Bidar dist Karnataka Thousands of Hindus and Muslims worship him 🙏🙏
ravi said…
28.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 45, 46 and 47)

Sanskrit Version of 1.45:

अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः।।1.45।।

English Version:

aho bata mahatpaapam
kartum vyavasita vayam |
yadraajyasuKhaloBhena
hantum svajanamudyataah: ||

Shloka Meaning

Alas ! What great sins are we prepared to commit by killing our own relatives,
for the sake of enjoying the pleasures of a kingdom!"
------‐‐------------------------
"Gita Shloka (Chapter 1 and Shloka 46)

Sanskrit Version:

यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्।।1.46।।

English Version:

yadi maamapratIkaaram
ashastram shastrapaanaaNayah: |
Dhaartaraashtraa raNe hanyuh
tanme kshemataram bhavet ||

Shloka Meaning

If the sons of Dhartarashtra, armed with weapons in hand, should slay me unresisting
and unarmed in the battle, that would be better for me.


Arjuna says if his enemies should kil him without any resistance on his part, it
would be for his own well being and wellfare.

1. By refusing to fight, he would escape the sin of killing his teachers and other family members,
with all its evil consequences, thereby retaining the former good that he has already done.

2. His relatives, friends and teachers would live. The kula naasha would get prevented.

3. To spare the lives of relations and teacher is in itself a good act which ultimately
would help him to rise higher in his spiritual aspirations.
‐-------------------------------
"Gita Shloka (Chapter 1 and Shloka 47)

Sanskrit Version:

सञ्जय उवाच

एवमुक्त्वाऽर्जुनः संख्ये रथोपस्थ उपाविशत्।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः।।1.47।।

English Version:

evamuktvaarjunah: samkhye
raThopasTha upaavishat |
visrujya sasharam chaapam
shokasamvignamaanasah: ||


Shloka Meaning

Having described the mental conflict of Arjuna, Sanjaya proceeds to narrate Arjuna's subsequent action.

Having spoken in this manner, Arjuna, distressed with sorrow, dropped his bow and arrows and sat down
on the seat of the chariot.

Arjuna dropped his great bow Gandiva and sat down in a mood of doubt, despair and helplessness.
Arjuna never did such a thing in any of the battles in his life so far.
What is the cause of Arjuna's actions? His feeling of attachment to his relatives and friends, and the
awful contemplation of having to kill people with whom he had spent a good portion of his life."

-----End of Chapter 1-------
--Stay tuned for Chapter 2--

Jai Shri Krishna 🌺
ravi said…
*சிவபெருமானே உட்கார்ந்து ஓலைச்சுவடியில் எழுதிய சிவபுராணம்*!

நமச்சிவாய வாழ்க!

சிவபுராணத்தின் பெருமைகள் :

1.தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி  மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2.வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் "தாங்கள் எழுதிய  திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன்" என்றார்.

3.மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும், பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4.மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று, ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள்  கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5.ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில்    "மாணிக்கவாசகர் சொல்ல, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது" என கையொப்பம்
இடப் பட்டிருந்தது.

6.மீண்டும் திகைத்து போய், பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள், மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய், "ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது  பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8.தீட்சதர்கள்,  மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9.மாணிக்கவாசகர், மந்தகாசப் புன்னகையுடன்,
நடனக் கோலத்தில்
இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி" இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10.*அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.*

11.ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13.சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14.சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்கஎன முடியும்.

15.சிறப்பு - 4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16.இவ்வாறு 6-5-8 என  அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17.சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18.திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19.ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில், அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20.காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று
தங்கள் குறையை கூறினர். பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து
ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21.இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.
"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி,
பல் விருகமாகி,   பறவையாய், பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே
போகலாம்".

முதல் திருப்பதிகமான சிவபுராணத்தில் *நமச்சிவாய வாழ்க!* என ஆரம்பித்து...
*அம்மை எனக்கு அருளியவாறு ஆர்  பெறுவார் அச்சோவே!*
என முடித்திருப்பார் மணிவாசகப் பெருமான்.

*சிவமும் சக்தியும்தான் திருவாசகம்.*

*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர்
சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*

திருச்சிற்றம்பலம்

*மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி*
--------------------------------------------
ravi said…
பாதாரவிந்த சதகம் !

94.ஸதா ஸ்வாதுங்காரம் விஷய லஹரீ சாலி கணிகாம்
ஸமாஸ்வாத்ய ஸ்ராந்தம் ஹ்ருதய சுக போதம் ஜனனிதே
க்ருபா ஜாலே பாலேக்ஷண மஹிஷி காமாக்ஷி! ரபஸாத்
க்ருஹீத்வா ருந்தீதா: சரண யுகலீ பஞ்ஜரபுடே

நெற்றியில் கண்ணுடையவரின் மனைவியே ! காமாக்ஷி ! என்
தாயே இது இனியது இது இனியது" எனத் தாவித்தாவி
நாட்டத்திற்குரிய பொருள் குவியலான தானிய மணியைப் பொறுக்கி உண்டு தளர்ந்த என் உள்ளமாகிய கிளிக்குஞ்சை கருணை எனும்
வலையில் பிடித்து திருவடியாகிற கூண்டில் வேகமாக
அடைப்பாயாக !
பெருங்காமனைச் சுட்டெரித்தவரையே அடக்கி ஆள்கிற நீ, சிறுகாமத்துக்கு அலைகிற என் உள்ளத்தை அடக்கமாட்டாயா ?

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺"A vernacular epic that beautifully tells the story of Kannan! - A simple story to illustrate 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Yadavadbudayam! It is a vernacular epic! Composed by Vedanta Desikan! The first slokam of this is this slokam. A very beautiful verse.

🌺🌹Vande Brindavanasaram Vallabhvi Jana Vallabam
Jayanthi sambavam thama vajayanthi vibhushanam 🌹🌺

🌺 The priest begins the first line by saying something that immediately comes to mind as Kannan. Lovers are all theirs; To others who deserve to be loved!

🌺 Gopis and Gopis are the ones who wandered in the form of that love. Kannan got all that love and became a dream of love!

🌺 Brindavanasaram Vallabhavi Jana Vallabam! He lived in Vrindavan! He loves those who have no knowledge who loved him!

🌺In the next line the priest's language game begins. He has sung the next line with the words Jayanthi in one sense and Vyjayanthi in another.

🌺Sahasranamam means Vishnu Sahasranamam. If Jayanti is like that, it is Krishna Jayanti! Although there are many other Jayantis, the word Jayanti is unique to Krishna Jayanti.

🌺 Jayanthi event! Kalidasa wrote the epic that tells the birth of Lord Shiva as Kumarasambavam! The word sambavam is used here in the same sense as there!

Kannan was born on Krishna Jayanti!

🌺Thama Vaijayanthi Vibhushanam! Of all the garlands, the best garland is the Vyjayanthi flower garland made up of colorful wild flowers, some fragrant flowers and some non-scented flowers!

🌺 When this Yadav goes to graze the calves in the forest, he picks the multi-colored flowers that bloom there and wears them as a garland.

🌺 Our Kannan is a simple person who wears such a Vyjayanthi garland as the most beautiful accessory!

🌺Let's praise and worship the primordial essence of Sri Kannan's Neemai Thiram saying 'Vande' many times!🌺🌹

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *கண்ணனின் திருக்கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு வடமொழிக் காவியம்! - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺யாதவாத்புதயம்! இது ஒரு வடமொழிக் காவியம்! வேதாந்த தேசிகன் இயற்றியது! இதன் முதல் சுலோகம் இந்த சுலோகம். மிக அழகான சுலோகம்.

🌺🌹வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்🌹🌺

🌺கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!

🌺அந்த அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

🌺பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்! பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்!

🌺அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார்.

🌺சஹஸ்ரநாமம் என்றால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.

🌺ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது!

🌺கிருஷ்ண ஜயந்தியில் பிறந்தவன் கண்ணன்!

🌺தாம வைஜயந்தீ விபூஷணம்! மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர் மாலை!

🌺காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம்.

🌺அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டிருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்!

🌺அந்த முழுமுதற்பொருளான ஸ்ரீ கண்ணனின் நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!🌺🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺" *கண்ணனின் திருக்கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு வடமொழிக் காவியம்! - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺யாதவாத்புதயம்! இது ஒரு வடமொழிக் காவியம்! வேதாந்த தேசிகன் இயற்றியது! இதன் முதல் சுலோகம் இந்த சுலோகம். மிக அழகான சுலோகம்.

🌺🌹வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்🌹🌺

🌺கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!

🌺அந்த அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

🌺பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்! பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்!

🌺அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார்.

🌺சஹஸ்ரநாமம் என்றால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.

🌺ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது!

🌺கிருஷ்ண ஜயந்தியில் பிறந்தவன் கண்ணன்!

🌺தாம வைஜயந்தீ விபூஷணம்! மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர் மாலை!

🌺காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம்.

🌺அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டிருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்!

🌺அந்த முழுமுதற்பொருளான ஸ்ரீ கண்ணனின் நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!🌺🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺"A vernacular epic that beautifully tells the story of Kannan! - A simple story to illustrate 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Yadavadbudayam! It is a vernacular epic! Composed by Vedanta Desikan! The first slokam of this is this slokam. A very beautiful verse.

🌺🌹Vande Brindavanasaram Vallabhvi Jana Vallabam
Jayanthi sambavam thama vajayanthi vibhushanam 🌹🌺

🌺 The priest begins the first line by saying something that immediately comes to mind as Kannan. Lovers are all theirs; To others who deserve to be loved!

🌺 Gopis and Gopis are the ones who wandered in the form of that love. Kannan got all that love and became a dream of love!

🌺 Brindavanasaram Vallabhavi Jana Vallabam! He lived in Vrindavan! He loves those who have no knowledge who loved him!

🌺In the next line the priest's language game begins. He has sung the next line with the words Jayanthi in one sense and Vyjayanthi in another.

🌺Sahasranamam means Vishnu Sahasranamam. If Jayanti is like that, it is Krishna Jayanti! Although there are many other Jayantis, the word Jayanti is unique to Krishna Jayanti.

🌺 Jayanthi event! Kalidasa wrote the epic that tells the birth of Lord Shiva as Kumarasambavam! The word sambavam is used here in the same sense as there!

Kannan was born on Krishna Jayanti!

🌺Thama Vaijayanthi Vibhushanam! Of all the garlands, the best garland is the Vyjayanthi flower garland made up of colorful wild flowers, some fragrant flowers and some non-scented flowers!

🌺 When this Yadav goes to graze the calves in the forest, he picks the multi-colored flowers that bloom there and wears them as a garland.

🌺 Our Kannan is a simple person who wears such a Vyjayanthi garland as the most beautiful accessory!

🌺Let's praise and worship the primordial essence of Sri Kannan's Neemai Thiram saying 'Vande' many times!🌺🌹

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை*
*ஔவையார் பாடல்கள்*

*பாடல் 29 :*

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்– திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.

*பொருள்:*

ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும்,
அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும் இலக்கிமியின் அன்பும் ஒருவனுக்கு இருக்கும் வரையில் தான். அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
ரகசியம் பரமரகசியம்.
கண்ணன் உண்ணும் கணக்கு.

பாரதப் போர் தொடங்கும் சமயம். பாரதத்திலுள்ள சில அரசர்கள் பாண்டவர் பக்கமும் சிலர் கெளரவம் பக்கமும் சென்றார்கள். உடுப்பி தேச ராஜா," நான் எந்தப் பக்கமும் சேரப் போவதில்லை.

எல்லா போர் வீரர்களுக்கும் உணவு அளிப்பதை என் கடமையாக எடுத்துக் கொள்கிறேன். மகாபாரதப் போரில் பங்கெடுத்த கெளரவ பாண்டவ சேனை வீரர்களுக்கு உணவு ஒன்றாக பரிமாறப்பட்டது.

தர்மருக்கும் கிருஷ்ணனுக்கும் உணவை பரிமாறுவது தனது கடமையென நினைத்தார் உடுப்பி தேசத்து ராஜா.

ravi said…
ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேருக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்பதை உடுப்பி ராஜாவே கணக்கிட்டு சொல்வார். அதன்படி (பிரசாதம்) உணவு பொருட்கள் தயாரிக்கப் படும். கூடுதலாகவோ குறைவாகவோ என்றும் இருந்ததில்லை.

கெளரவச் சேனை வீரர்கள் எல்லோரும் உணவு உண்ட பின் நேரே துரியோதனனிடம் சென்று ," நமது வீரர்கள் அனைவரும் உணவு உண்டு விட்டனர்" என்று சொல்வார்கள்.
அதே போல் தர்மர் தனது படை வீரர்களை அழைத்து," எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டீர்களா? என்று விசாரிப்பார். வீரர்கள்," எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டோம்!" என்பார்கள்.

ravi said…
இது தினப்படி நடக்கும் விஷயமாகி விட்டது. தர்மருக்கு இது ஒரு ஆச்சரியமான விஷயமாகப் பட்டது. அது எப்படி சரியான கணக்காக சாப்பாடு தயாரிக்க முடிந்தது ?அவருக்கு அது ஒரு புரியாத புதிராகவே இருந்தது.

நேரே சமையல் கூடம் சென்றார். அங்கு பணி புரிந்து கொண்டிருந்த சமையற்காரர்களைப் போய் கேட்டார். இது நாள் வரை எந்த வீரரும் பட்டினியில்லை! அனைவருக்கும் சரியாக சாப்பாடு போடப் படுகிறது!

இது எப்படி ? புரியாத புதிராக இருக்கிறதே! எங்ஙனம் பாண்டவர்கள் கெளரவர்கள் பக்கம் இறப்பவர்களைக் கணக்கிடுகிறார்கள்? ஒரு நாள் எங்கள் பக்கம் இறப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்! மறுநாள் கெளரவர்கள் பக்கம் இறப்பவர்கள் அதிகம்! இதைக் கணக்கிடுவது கடினம் அன்றோ! என்றார்.

அதற்கு பணியாட்கள்," எங்கள் மன்னன் தான் இன்று இத்தனை பேருக்கு சமையல் செய்ய வேண்டும் என்று கணக்கிட்டுச் சொல்வார். நாங்கள் அதன்படி தயாரிப்போம்!" என்றனர். தர்மர் முதலில் இந்த சந்தேகத்தை கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணரோ," இதை நீ நேரிடியாக உடுப்பி மன்னனிடமே போய் கேள்!" என்றார்.

தர்மர் உடுப்பி அரசனைக் காணச் சென்றார். அவரிடம் தனது சந்தேகத்தைக் கேட்டார்.

அவரும் மிகவும் பவ்வயமாகவும் அமைதியாகவும்," தர்மரே! தாங்களும் கிருஷ்ணனும் தினமும் ஒன்றாக தானே உண்ண வருவீர்கள் அல்லவா?என்று கேட்டார்."ஆமாம் ஆமாம்!" என்றார் தர்மர்.

பின் ,"உங்களுக்கும் கிருஷ்ணனுக்கும் நானே எனது கரத்தால் உணவை பரிமாறுவேன் அல்லவா? " என்றார் உடுப்பி அரசன்.அதற்கும் தர்மர்," ஆமாம் !"என்று தலை அசைத்தார்.

அப்போது நான் கிருஷ்ணன் சாப்பிடும் கவளங்களை கணக்கெடுப்பேன்.

ஒரு கவளத்துக்கு ஆயிரம் பேர் என எடுத்துக் கொள்வேன்! இதில் சிறு சிறு பருக்கைகளையும் சேர்த்துத்தான்!அதை வைத்துக் கொண்டு அடுத்த நாள் போரில் இத்தனை ஆயிரம் பேர் மடிவார்கள் என்று கணக்கிட்டு மீதியுள்ள வீரர்களுக்கு தயார் செய்வேன்! இது எனக்கும் கிருஷ்ணனுக்கும் உண்டான கணக்கு வழக்கு!
ரகசியம் பரம ரகசியம்!"
என்றார் உடுப்பி மன்னன்.

தர்மர் நேரே கிருஷ்ணனிடம் சென்றார். தர்மர், கண்ணனைத் கண்டவுடன் மண்டியிட்டு ," *கிருஷ்ணா! நீதான் இந்த போரில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேர் இறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறாய்!"நாங்கள் எல்லாம்*
வெறும் பொம்மைகள்!"என்று விழுந்து வணங்கினார்.

சான்றோர்களின் வாக்குப் படி," பகவானின் கருணையாலும் கட்டளையாலும் தான் நாம் பிறக்கிறோய் வளர்கிறோம்! வாழ்கிறோம்,மடிகிறோம்! பகவான் அருளால் தான் ஒரு முனைப் புல் கூட முளைக்கும்.

நமது கையில் ஒன்றுமில்லை! பகவான் எல்லாவற்றையும் தீர்மானித்து செயல் புரிகிறான்!நமது புத்திசாலி தனத்தாலோ புலமையினாலோ,நிர்வாகத் திறமையினாலோ இவையெல்லாம் செய்ய முடியாது.

பகவானே காரணமும் கர்த்தாவும்,நாம், அவனால் ஆட்டிப் படைக்கப்படும் பொம்மைகள்!நமக்கு அதிகாரமுமில்லை அதனால் ஆணவமும் தேவையில்லை! இதை உணர்வது கடினம்.ஆனால் உணர வேண்டும்.

நம் சிந்தனைகள்,செயல்கள்
அனைத்தும் எல்லாம் ஸ்ரீ பகவான் கிருஷ்ணன் திருவடிக்கே அர்ப்பணம்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருப்பதில் பஞ்சாயத்து போர்டு (இப்போது என்னவோ தமிழ்ப் பெயர் சொல்கிறார்கள்) உள்ள கிராமங்களின் எல்லையில் ஒரு போர்ட் போட்டு வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன் (பஞ்சாயத்து “போர்ட்” இல்லை!) அதில் இந்த கிராமத்தில் இவ்வளவு ‘பாபுலேஷன்’, இத்தனை பரப்பு, இன்ன பயிர் விளைகிறது என்பது முதலான விவரங்கள் போட்டிருக்கிறது. அதிலே படித்தவர் எவ்வளவு, படிக்காதவர் எவ்வளவு என்ற விவரமும் இருக்கிறது. அது மாத்திரமில்லை. இங்கிலாண்ட், அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளில் படிப்பாளிகள் எத்தனை சதவிகிதம் என்பதைக் காட்டி, நம் படிப்பாளிகள் எத்தனை சதவிகிதம் என்பதைக் காட்டி, நம் நாட்டில் அதையெல்லாம்விட எவ்வளவு குறைச்சல் சதவிகிதமே படிப்பாளிகள் இருக்கிறார்கள் என்றும் போட்டிருக்கிறது. அந்த தேசங்களைப்போல நம் தேசத்தையும் படிப்பிலே முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆட்சியிலிருப்பவர்களுக்கு எண்ணமிருப்பதாலேயே, “இப்படி எழுதி வைத்தாலாவது ஜனங்கள் மனஸில் தைத்து, அவர்கள் பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பாதவர்களிடம் எடுத்துச் சொல்லி ப்ரசாரம் பண்ணிக் கல்வியைப் பரப்பட்டும்” என்ற உத்தேசத்தில்தான் இதுபோலச் செய்திருக்கிறார்கள். எனக்குத் தோன்றுகிறது – யோக்யர்களாக எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள், அப்படியில்லாமல் எத்தனை இருக்கிறார்கள் என்று எப்படியாவது கண்டுபிடித்து அதை போர்டில் போட்டால் எப்படியிருக்கும் என்று! ஒவ்வொரு ஊரிலும் தேசத்திலும் படித்தவர் பெர்ஸென்டேஜையும், போட்டு இப்படி அதற்கு நேரேயே யோக்யர்கள் பெர்ஸென்டேஜையும், போட்டால் என்ன தெரியும்? படித்தவர்கள் நிறைய இருக்கிற இடத்தில்தான் யோக்யர்கள் நிறைய இருக்கிறார்களென்று போர்ட் காட்டுமா?
“யோக்யர்கள் என்று கண்டுபிடிப்பது எப்படி ஸாத்யம்? இது என்ன நடைமுறைக்கு வரமுடியாத யோசனை?” என்று கேட்டால் அது ந்யாயம்தான்.
ravi said…
அடுத்த பக்ஷமாக ஒன்று தோன்றுகிறது. யோக்யர் – அயோக்யர் யார் யார் என்று லிஸ்ட் எடுக்க முடியா விட்டாலும்ட இன்னொரு லிஸ்ட் ஸுலபமாகத் தயாரிக்கலாம். போலீஸ் டிபார்ட்மெண்ட்காரர்களும் ஸிவில் கோர்ட்காரர்களும் ஒவ்வொரு ஊரிலும் இத்தனை ஜேபடிக்காரர்கள் இருக்கிறார்கள், வரி தராமல் இத்தனை பேர், ஸொத்துக்களை மோசம் செய்தவர் இத்தனை பேர், பெரிய திருட்டுக்களில் ஏமாற்றுப் புரட்டுக்களில் இத்னைபேர் பிடிபட்டிருக்கிறார்கள், இன்னும் வ்யபசாரம், கொலை முதலான குற்றங்கள் செய்தவர்கள், அப்பட்டமாகவே பொய்த் துப்பாக்கியைக் காட்டிக்
ravi said…
கொள்ளையடிப்பவர்கள் ஆகியோர் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றெல்லாம் புள்ளி விவரம் வைத்திருப்பார்கள். ஆள் இத்தனை பேர் என்று காட்டமுடியாவிட்டாலும், இந்த இனங்களில் இத்தனை கேஸ்கள் இருக்கின்றன என்று காட்ட முடியும்.ஆகவே, இந்த போர்ட்களில் படித்தவர் இத்தனை பேர் என்பதற்கு நேரேயே குற்றவாளிகள் இத்தனை பேர் என்று – அது முடியாததால் குற்றங்கள் இத்தனை நடந்திருக்கின்றன என்று – போட்டு வைத்தால் நமக்கு ப்ரயோஜனமான உண்மைகள் தெரியுமென்று நினைக்கிறேன். அதாவது என்ன தெரியுமென்றால், தற்போது பொதுவாக லோகம் முழுக்கப் படிப்புமுறை இருக்கும் நிலையில் எங்கே படிப்பு ஜாஸ்தியோ அந்த ஊரில், அந்த நாட்டில்தான் குற்றமும் ஜாஸ்தி நடக்கிறதென்று தெரியும். ஹைஸ்கூல், டிகிரி தரும் காலேஜ், டாக்டரேட் தருகிற உயர்ந்த ஸென்டர்கள் என்று ஒன்றுக்குமேல் ஒன்றாக வளர்ந்துகொண்டிருக்கிற நாடுகளில்தான் குற்றங்களும் வளர்ந்துகொண்டிருப்பது தெரியும். எழுத்தறிவில்லாத காட்டுக்குடிகளும் மலைவாஸிகளும் உள்ள இடங்களில்தான் போலீஸுக்கு ரொம்பவும் வேலை குறைச்சல், வக்கீல்களுக்குத் தேவை இல்லை என்று தெரியும்.
படிப்பு ஜாஸ்தியாக ஆக நூதன நூதனமாக ஏமாற்று வித்தைகள் செய்கிற ஸாமர்த்யங்களும் வளர்கின்றன. தொழில்கள் நடத்துகிறவர்களும் அரசியல்வாதிகளும் செய்கிற பேற்று மாற்று, எங்கே போனாலும் ரஹஸ்யத்தில் நடக்கும் லஞ்சம் முதலான அநேகக் குற்றங்கள் இந்த ஸாமர்த்தியத்தில் கோர்ட்வரை வராமலே போகின்றன. அதனால் போர்ட் போட்டாலும்கூட அதில் கால்வாசிக் குற்றங்களைத்தான் காட்டமுடியும்! முக்கால்வாசிக் குற்றங்கள் நீதி ஸ்தலத்துக்கும், போலீஸுக்கும் வராமலே போயிருக்கும்! படிப்பினால் புத்தி ஸாமர்த்யம் அதிகரிப்பதில் ஸிவில் குற்றங்கள் மாத்ரம்தான் அதிகரித்திருக்கின்றன என்றில்லை. பெரிதான பாங்குக்கொள்ளை, ஒர மந்த்ரி ஸபையையே சுட்டுக் கொன்றுவிடுவது, கோஷ்டி கோஷ்டியாகத் தகாத கார்யத்துக்காகப் பெண்களைக் கடத்திப்போவது மாதிரி க்ரிமினல் குற்றங்களும், ராஜாங்கத்தையே வெறும்பௌதிக பலத்தால் புரட்டிவிடும் “கூ” (coup) முதலியனவும், படிப்பு ஸாமர்த்தயத்தாலேயே நன்றாக ஜோடித்துத் திட்டம் போட்டு நடத்தப்படுகின்றன. இதெல்லாம் போக நேராகவே அடிதடி, பிஸ்டலைக் காட்டுவது, சுடுவது முதலானவையும் படிப்பாளிகள் உள்ள நாடுகளில் ஏறிக்கொண்டே போகின்றன. யூனிவர்ஸிடி லெக்சரர்கள்கூட ஸெனட்டில் நடக்கும் மீட்டிங்குகளில் கல்லெறிவது, நாற்காலிகளைத் தூக்கி அடித்துக்கொள்வது என்று போகிற அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.
படிக்கத் தெரியாத ஆதிவாஸிகள் குடும்பச் சண்டை, கோஷ்டிச் சண்டை என்று எப்போதாவது ஒருத்தர் தலையை ஒருத்தர் சீவிக்கொள்வதாயிருக்கலாம். அது ஏதோ ஆத்திர, க்ஷாத்திரத்தில் ஒரு வேகம் வந்த ஸமயத்தில் செய்வதாகத் தான் இருக்கும்.மற்றபடி இத்தனை தினுஸு தினுஸான குற்றங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஃபோர்ஜரியில் ஆரம்பித்து ப்ளான் போட்டு செய்யப்படும் ஏமாற்றுக் குற்றங்களும், Organised -ஆகச் செய்யப்படும் திருட்டுப் புரட்டுக்களும் படிக்கத் தெரியாத பழங்குடி மக்களுக்குத் தெரியாது.
ravi said…
[01/03, 07:33] +91 96209 96097: *ஶ்ருதிஸீமந்தஸிந்தூ³ரீ க்ருதபாதா³ப்³ஜதூ⁴ளிகா*🙏🙏
எல்லா உறவுகளிடமும் அன்யோன்யமாக பழகி வணங்கத் தகும் நிலையை அளிப்பவள்
[01/03, 07:33] +91 96209 96097: *பீமாய நமஹ*🙏🙏
யாரை பார்த்து தேவர்கள் அச்சம் கொள்கிறாரோ அவர்
ravi said…
*அம்மா* ...

நற்பண்புகள் செய்த தவத்தால் உதித்தாயோ

ஏகாம்பரன் செய்த மா தவத்தால் மகிழ்ந்து வந்தாயோ

ஏனைய தெய்வங்கள் ஏங்கி தவம் செய்ய சிதக்கினி குண்டம் உடைத்தே வந்தாயோ

ஏழை நான் தவம் ஒன்று செய்யாமல்
*அம்மா* என்றே அழைத்தேன்.

இமை மூடும் முன்னே இனியவளே என் எதிரில் வந்து நின்றாயே

என் சொல்வேன் ?

இப்பிறவி புண்ணியம் ஒன்றும் செய்திலேன் ..

முன்பிறவி செய்தேனோ நான் அறியேன் ..

எப்பிறவி வரினும் எளிதாய் வருவாய் என் முன்னே ...

மறுபிறவி எனக்கு உண்டெனில்

உன் மடி மீதே துயில் கொள்ள வேண்டும் ..

இவன் ஒரு
தனிப்பிறவி என்றே

தரணி வாழ் மக்கள் சொல்ல வேண்டும்

*சாத்வீயாய்* வாழ வேண்டும் ...

உன் மகன் என்றே அடைமொழி கொள்ள வேண்டும் ..

உதவி செய்யும் உள்ளமே வேண்டும் .

ஒருபொழுதும் இல்லை என்பது இல்லாமல் போக வேண்டும் ... 🪷🪷🪷
ravi said…
பாதாரவிந்த சதகம் !

95.துநாநம் காமாக்ஷி ஸ்மரண லவமாத்ரேண ஐடிம-
ஜ்வர ப்ரௌடிம் கூட ஸ்திதி நிகம நைகுஞ்ஜ குஹரே!
அலப்யம் ஸர்வேஷாம் கதிசந லபந்தே ஸுக்ருதிந:
சிராதந் விஷ்யந்த: தவ சரண ஸித்தௌஷதமிதம்

காமாக்ஷி ! சிறிது தியானித்த உடனே, ஜடத்தன்மை என்ற ஜ்வரத்தின் தலைகனத்தை நீக்குவதும், வேதமெனும் கொடிவீட்டினுள் மறைந்துள்ளதும், எல்லோருக்கும் கிட்டாததுமான அந்த திருவடி என்ற பயன் தருவதில் தேர்ந்த பச்சிலையை வெகுநாட்களாகத் தேடி. புண்ணியம் செய்தோரில் ஒரு சிலரே பெறுகின்றனர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

85 –
மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ
நட்டம் ஆடினை என் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா* தலை முழுவதும் நான் எனும் கர்வம்

உடல் முழுதும் மெய் எனும் நினைப்பு

நெஞ்சமெங்கும் மமஹாரம்

மனம் முழுதும் அகங்காரம் .

நீ வரும் அக்ரகாரம் எங்கும் நான் பீத்திக்கொண்ட தர்மங்கள் ...

எல்லாம் என்னிடம் அடக்கம் எனும் இறுமார்ப்பு...

*அருணாசலா* இலவச வாழ்க்கையில் சொந்தம் எனும் பதம் எங்கிருந்து வந்தது *அருணாசலா*?

அடங்கிப்போகும் வாழ்க்கையில் அடக்கம் எட்டிப்பார்காததன் மர்மம் என்ன *அருணாசலா* ... ?

கொட்டி வைத்த பொன் கட்டிகள் சேர்த்து வைத்த செம்பவளங்கள்

கட்டி வைத்த மாளிகைகைகள்

கூட வந்து கும்மி அடிக்குமோ *அருணாசலா* ...

நீரில் தோன்றும் பிம்பங்கள் நிரந்தரம் ஆகுமோ *அருணாசலா ?*

தோன்றும் நீர் குமிழிகள் வழித்துணை ஆகுமோ *அருணாசலா* ...

இவை எல்லாம் தேவை இன்றி வளர்ந்த கேசங்கள் அன்றோ *அருணாசலா* ...

என்னை மொட்டை அடித்து வெட்ட வெளியில் நான் ஒன்றுமில்லை ஒர் சிறு கண்ணாடி துகள் என்றே காட்டினாய் *அருணாசலா* ...

உடைந்த கண்ணாடி துகளில் உன் முகம் பார்த்தேன் ..

வாழ்வின் அனைத்து பொருளும் பொருளுடன் குவிந்தது *அருணாசலா*
ravi said…
[01/03, 18:35] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 99 started on 6th nov

*பாடல் 30 ... செவ்வான் உருவில்*

(உணர்த்திய ஞானம் சொல்லொணானது)

செவ்வான் உருவில் திகழ் வேலவன்,

அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்

அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.🪷🪷🪷
[01/03, 18:36] Jayaraman Ravilumar: சீவனசத்துரு .. ' என்று தொடங்கும் கந்தர் அந்தாதியில் அசத்தாகிய
உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய லட்சணத்திற்கு
மாறுபட்டு, ஜெக மாயையில் சிக்குவதைக் கூறுகிறார்.

இதையே
ஒவ்வாதது என குறிப்பிடுகிறார்.

சத்து அசத்து ஆகிய இரண்டில் ஆன்மாவிற்கு எது ஒவ்வியது?

எது ஒவ்வாதது?

சத்து இறைவனின் பிரதி பிம்பம்.

எனவே சத்தே
ஆன்மாவிற்கு ஒவ்வியது.

இந்த நிலை கிட்ட மெய் ஞானம் பெற
வேண்டும்.

அதையும் இறைவனே தர வேண்டும்.

பிரபஞ்ச மாயையில்
அவதிப்படும்போது, முருகன் நம்மிடையே விவேகமாய் நின்று,
ஜெக மாயையின் நிலையற்ற தன்மையையும், அதில் உழல்வது
விவேகமற்ற செயல் என்பதையும் சிறிது சிறிதாக அறிவுணர்த்துகிறான்.
வாழ்க்கையில் நாம் படும் பற்பல துன்பங்களினால் ஏற்படும் விரக்தி
முற்றும்பொழுது, எதிரில் குருவாய் தோன்றி, மெய்ஞானத்தை
நல்குவான். அப்பொழுது கிடைக்கும் அநுபூதியை கல்வி
கேள்விகளினால் அடைய முடியாது.

குருநாதன் சொன்ன சீலத்தை
மெல்லத் தெளிந்து அறிவதே நாம் உய்யும் வழி.🙏🙏🙏
ravi said…
[01/03, 18:31] Jayaraman Ravilumar: வஸுர்‌ *வஸுமனாஸ்* : ஸத்யஸ்:

ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
[01/03, 18:31] Jayaraman Ravilumar: *106. வஸுமநஸே நமஹ (Vasumanase namaha)*
[01/03, 18:33] Jayaraman Ravilumar: கண்ணா! அதென்ன தங்கப் பேழைக்குள் ரகசியமான தெய்வம்?

அந்தத் தெய்வத்தை நான் காணலாமா?” என்று கேட்டார் நாரதர்.

“நான் இந்தத் தெய்வத்தை யாரிடமும் காட்டுவதில்லை.

அதனால் தான் இன்னொரு அர்ச்சகரை நியமிக்காமல் நானே பூஜிக்கிறேன்!” என்றான் கண்ணன்.

ஆனாலும், அதைப் பார்த்தே தீர வேண்டுமென நாரதர் சொன்னதால், தங்கப் பேழையைத் திறந்து காட்டினான் கண்ணன்.🤔
ravi said…
[01/03, 18:29] Jayaraman Ravilumar: *சிவானந்தலஹரி 66வது ஸ்லோகம் பொருளுரை*
[01/03, 18:30] Jayaraman Ravilumar: சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்…66வது ஸ்லோகம்.

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।
शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥

க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ

க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉

யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத் |

ஶம்போ⁴ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ

மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ

தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா || 66 ||
[01/03, 18:31] Jayaraman Ravilumar: இந்த ஸ்லோகத்துல ஞானிகள் ஆத்மவிசாரம் பண்ணி ப்ரஹ்மசூத்திர பாஷ்யங்கள் எல்லாம் படிச்சு எத உணர்றாளோ,

அந்த மனப்பக்குவத்தை தன்னை முழுமையா பகவானிடத்தில் ஒப்படைத்து ஒரு பக்தன் அடைந்து விடுகிறான்,

அப்டிங்கறத ஆச்சார்யாள் காண்பிக்கறார்🙏🙏🙏
ravi said…
[01/03, 18:26] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 96*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

*83*
[01/03, 18:27] Jayaraman Ravilumar: परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् ।

परगुरुकृपया वीक्षे परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥ ८३॥

83. Parichitha Kampa theeram Parvatha rajanya sukrutha sannaham,

Para guru krupaya Veekshe Parama shivoth sanga mangalabharanam.

பரிசிதகம்பாதீரம் பர்வதராஜன்யஸுக்றுதஸன்னாஹம் |

பரகுருக்றுபயா வீக்ஷே பரமஶிவோத்ஸங்கமங்கலாபரணம் ||83||
[01/03, 18:28] Jayaraman Ravilumar: காமாக்ஷி தரிசனம் எவ்வாறு கண்டேன் என்று சொல்லட்டுமா?

ஆஹா, சொல்ல முடியாத இயற்கை அழகைக் கொண்ட கம்பா நதிக்கரையில், மலைகளில் உயர்ந்த ஹிமவான் புரிந்த புண்ய கர்மாக்களின் பலனாக,

ஆவிர்பாவமாக அமைந்தவளும்.

பரமேஸ்வரனுடைய மடிக்கு ஒரு அற்புத ஆபரணமாக அமர்ந்தவளுமான,

ஸ்ரீ காமாக்ஷி தேவியை என் குருநாதருடைய அநுக்ரஹத்தால் தரிசிக்கும், நமஸ்கரிக்கும், பாக்யம் பெற்றேன். 🙏🙏🙏
ravi said…
[01/03, 18:25] Jayaraman Ravilumar: 💐💐💐

*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 501* 🙏🙏🙏started on 7th Oct 2021

*219வது திருநாமம்*
[01/03, 18:25] Jayaraman Ravilumar: முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவளைத் தாயாக ஏற்றுக்கொண்டு வேண்டிக்கொள்கிறார்கள்.

கோயிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் தான் அதிகம்.

அம்மனும் பெற்ற தாயைவிட வாஞ்சையுடன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறாள்.

கோயிலில், அம்மன் சந்நிதிக்கு எதிரே மிகப்பெரிய அரசமரம் ஒன்று உள்ளது.🙏
ravi said…
*ராமா*

கூனி செய்தாள் ஓர் சூழ்ச்சி ...

ஏணி வைத்தும் எட்டா புகழ் பெற்றாய்

கைகேயி சொன்னாள் காடு செல் என்றே ..

நீ கயற்றிய பாதணிகள் ராஜ்ய பரிபாலனம் செய்யவே

கல் அதை மிதி என்றான் கௌசிகன்

மிதித்த கல் மிருதுவாய் ஆனதே *ராமா*

கால் வண்ணம் கண்ட முனி பாவம் கால்வண்ணமே கண்டான் ...

மீதி முக்கால் வண்ணம் நாங்கள் காண வைத்தாயோ வடூவுரில் ...

முழு வண்ணம் கண்டேன் இன்று முப்பிறவி மலங்கள் மறைந்து போனதே

முதல்வன் நீ அழகன் நீ முக்காலம் உணர்ந்தவன் நீ என்றே என் மனம் சிந்து பாடுகிறதே ..

சிந்தும் வார்த்தைகள் நான் மீண்டும் கோத்தால்
ராமா என்றே சொல் அமைகிறதே 👍👍👍
ravi said…
🌹🌺" *பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகையை தவழ விடுவோம் ....* - *விளக்கும் எளிய கதை** 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லும் முன் வாய் பேச முடியாதவர்களை நினைத்து பாருங்கள்.*

🌺உங்கள் சாப்பாட்டை குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்து பாருங்கள்.*

🌺உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்து பாருங்கள்.*

🌺உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்து பாருங்கள்.*

🌺உங்களுடைய வீட்டை குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.*

🌺உங்களுடைய வேலையை குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.*

🌺சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகையை தவழ விடுவோம் ....*🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
திரிபுரை என்ற நாமம் நான் விளக்கும் போது

3 ஸ்வரூபங்களில் அவள் சிவந்த மேனி கொண்டவள் என்றேன்

1. ஸ்ரீ லலிதா

2. அபிராமி

3. ராஜராஜேஸ்வரி

அபிராமி பட்டர் 21 பாடல்

மங்கலை செங்கலசம் முலையாள்
மலையாள்

வருணச்
சங்கலை

செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன்

புடையாள்
உடையாள்
பிங்கலை
நீலி
செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே

*வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில்* -

வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே🦚

*தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் -*

பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே

*உடையாள்* - எல்லோருக்கும் தலைவியே.

எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.

*பிங்கலை* - பொன்னிறத்தவளே.

*நீலி* - நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.

*செய்யாள்* - சிவந்தவளே.

*வெளியாள்* - வெண்மை நிறம் கொண்டவளே.

*பசும் பெண்கொடியே* - பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.
ravi said…
*பர வித்யா-அபர வித்யா*


செப்படி வித்தைகற் றிப்படி மயக்குவிட்

டுருப்படு வித்தைகாட் டருணாசலா

இதில் உலக லௌகீயங்களுக்காக படிப்பது அபர வித்யா ... ஞானம் பெற்று அவளை புரிந்து கொள்வது பர வித்யா ... அப்படிப்பட்ட வரத்தை காமாக்ஷி தருபவள் என்று அர்த்தம் ... நிறம் குறிப்பிடவில்லை
ravi said…
🌹🌺 "Let's thank Lord Sri Krishna for the life he gave us and put a smile on our face...* - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Before you say a harsh word to others, think of those who cannot speak.*

🌺Before criticizing your food, think of those who cannot afford to eat.*

🌺Before criticizing your husband or wife, think of those who repent of their life partner.*

🌺Before criticizing your children, think of those who pray for children.*

🌺Before you criticize your house, count the homeless people living on the streets.*

🌺Before criticizing your job, count the unemployed people.*

🌺 When your face is withered in sadness, let us thank Lord Sri Krishna for the life he gave us and let a smile creep on your face....*🌹

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -02.03.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-75

மூலம்:

மிலைந்தகடம் பன்ன வியன் தமிழ்ப்பா வாணர்
கலைந்தலையா(து) ஒன்றுபடக் காட்டாய்! – மலைந்த
செயவீரர் போற்றத் திருப்பழனி வெற்பில்
இயல்வேட்கை நீடிநின்றோ னே(75).

பதப்பிரிவு:

மிலைந்த கடம் பன்ன வியன் தமிழ்ப் பாவாணர்
கலைந்து அலையாது ஒன்றுபடக் காட்டாய்! – மலைந்த
செய வீரர் போற்றத் திருப் பழனி வெற்பில்
இயல் வேட்கை நீடி நின்றோனே!!(75).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மிலைந்த- அணிந்துள்ள;
கடம்-தெய்வக்கடன்;
பன்னுதல்-புகழ்தல்;
வியன்-பெருமை;
இயல்- தமிழ்ப்பாடல்;
மலைந்த- எதிர்த்த (வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கைக் குத்தி மலைந்த வீரா என்கிறார் அருணகிரிப் பெருமான் திருப்புகழில்);

தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்துப் போரிட்டு ஜெயிக்கும் வெற்றி வீர்ரகள் போற்றத் திருப் பழனி மலையில்,
தமிழ்ப்பாடல் மேலுள்ள தீராத ஆசையால், எங்கும் வியாபித்து நின்ற பழனிப் பெருமாளே! தாங்கள் அணிந்துள்ள, கொண்டுள்ள தெய்வக்கடனால், அருள்நெறியால், உன்னை நீ மிக விரும்பும் தமிழ்ப்பாடல்களால், புகழ்ந்து ஏத்தும் பெருமை மிகும் தமிழ்ப் பாவாணர்கள் கூட்டம் அங்கும் இங்குமாகக் கலைந்து அலையாது ஒன்றுபட்டு நிற்க அருள் தாராய்!

உன்மேல் ஐயமற்ற, பய பக்தியுடை பக்தனெனக்குத் தயவு செய்! ஜெய ஜெய முருக!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
02.03.2023:

"Gita Shlokas (Chapter 2 ; Shlokas 1 and 2)


Sanskrit Version of Shloka 2.1:

सञ्जय उवाच

तं तथा कृपयाऽविष्टमश्रुपूर्णाकुलेक्षणम्।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः।।2.1।।

English Version:

tam taThaa krupayaavishTam
ashrupUrNakulokshNam |

vishIdan idam vaakyam
uvaacha maDhusdanah: ||

Shloka Meaning

With Arjuna plunged in a state of despair and despondency, with eyes blurred with tears,
Lord Krishna addresses to Arjuna.

Lord Krishna is referred to as Madhusudana. sudana means one who kills. Madhu is the name
of the demon. Honey is referred to as Madhu in Sanskrit. Man's ego, the pleasures of the body
and the senses are like honey when they are first enjoyed and afterwards they torment him like
poison. So one should renounced them. Then man becomes Madhusudana.

Arjuna is mentally at his lowest ebb. It is Madhusuduna who inspires strength and courage to
Arjuna to come out of his mental torment and stay true to his kshatriya dharma.
‐---‐---------------------------
"Gita Shloka (Chapter 2 and Shloka 2)

Sanskrit Version:

श्री भगवानुवाच

कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम्।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन।।2.2।।

English Version:

kutastvaa kashmalam idam
vishame sam upasThitam |
anaaryajustam asvargyam
akiirtikaram arjuna ||


Shloka Meaning

Krishna says.

O Arjuna! In this critical situation, when has this mental dejection taken hold of you.
This is unworthy, shameful and heaven excluding.

Krishna describes the mental weakness of Arjuna as dirty and wretched. Like dirt covering a physical body,
the mind becomes impure with sorry, fear, distress and hatred.

Just as one cleanses the dirt in the physical body, the mind should be cleaned by the knowledge of Atma.
Arjuna's mental filth ws washed off by the Bhavaaan's teaching.

It is the duty of every individual to purity the mind off its ignorance and passion by the study of Gita.

There are two types of individuals in the world. The wise and ignorant.

Those who follow the righteous path, who are ative and bold are the wise. This is the Aryan way of life.
(Aryan means an elevated person and not the story that gets spun in Tamil Nadu by the black shirts)

Those who live their life, subject to dark passions, follow demonic instincts are the ignorants.
This is the un Aryan way of living.

Every individual should question as to what life he is leading. The Aryan way or the un Aryan way.

All of us go through weakness, sorrow and fear. What are they? Nothing but the dirt of the mind.
The ignorant fall prey to them. They pull down man from achieving the higher level of existence.
They bring shame and disgrace and do nothing to elevate him spiritually.

Jai Shri Krishna 🌺
ravi said…
*ராமா*

*குகனவன்* செய்த புண்ணியம் தமயானான் ...

*சுக்ரீவன்* செய்த புண்ணியம் உன் தோழனானான் ...

*ஜடாயு* செய்த புண்ணியம் உன் கையால் காரியம் செய் கண்டான்

*சம்பாதி* செய்த புண்ணியம் தன் இரு இறககளாய் உனைக்கண்டான்

*ஜாம்பவான்* செய்த புண்ணியம் அவன் மகள் அடுத்த அவதாரம் தனில் உன் துணை ஆனாள்

*விபீஷணன்* செய்த புண்ணியம் லங்கைக்கு விளக்கேற்றி வைத்தான்

*கும்பகர்ணன்* செய்த புண்ணியம் கர்ணன் போல் தன் நாமம் வாழக்கண்டான்

நீ செய்த புண்ணியம் பெறக்கண்டாய் *சங்கர சுவனனாய்*

சர்வமும் உன் நாமம் ஒன்றே என்றே உணர வைத்தான்

அன்றும் இன்றும் என்றுமே 🙏🙏🙏
ravi said…
*❖ 129 ஶரச்சந்திர நிபானனா =*

இலையுதிர்காலத்து பூரண சந்திரனின் சோபையை போன்று ஜொலிக்கும் முகமுடையாள்🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝

*ஷரத்* =

இலையுதிர்காலம் - இலையுதிர்காலத்திற்கானவை

*ஷரச்சந்திர* =

இலையுதிர்
காலத்தின் சந்திரன் 🌝

*நிப* = ஒற்றுமை - சாயல்

*ஆனன* = முகம்
ravi said…
*அம்மா*

பத்துவிரல் மோதிரம் உன் கரங்களில் கொடுக்கும் பிரகாசம் அஷ்டமி சந்திரனை தோற்கடிக்குமோ ??

அம்மா உன் பாதம் கொஞ்சும்
தண்டை கொலுசும்,

பச்சை வைடூரியம் தன் இச்சையால் இழைத்திட்ட உன் மலர்
பாதச் சிலம்பி னொலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும்

முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் ,

சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையில் பொன்கங்கணம்,

ஜெகமெலாம் விலைபெற்ற

முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பி னழகும்,

ஷரச் சந்திரனை வர்ணிக்கலாம் அவனைப் படைத்த உனை

உன் சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ,

அழகான என் நெஞ்சமதில் என்றும் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே !!💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

86 –
மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்தும் என்
மோகம் தீராய் என் அருணசலா (அ)
ravi said…
*அருணாசலா*

என் மோகம் தீர்த்தாய் முதலில் ...

உன் மீதே மோகம் வளர்த்தேன் .

உன் மீதே வளர்த்த மோகம்

மேகமாய் பரவி வான் அதை தொட்டதே *அருணாசலா*

தொட்ட வானம் தொடர்ந்து என்னை கட்டிப் போட்டதே *அருணாசலா*

கட்டி போட்ட என்னை எட்டி பிடித்தே இறுக்க கட்டிக் கொண்டாயே *அருணாசலா*

கட்டிக்கொண்ட மேனி தனில் பட்டி போட்ட பால் வெண்நீறு பிரவாகம் எடுத்தே ஓட

எனை தட்டிக் கேட்ட தடைகள் தவிடு பொடியாய் ஆனதே *அருணாசலா*

வெட்டி வாழ்க்கை தனில் முட்டி போட்டு கேட்கின்றேன்

மிச்சம் இருக்கும் மோகம் மேகம் தனில் கரைந்திடவும்

கண் திறப்பாய் கருணை கடலே *அருணாசலா*🦚🦚🦚
Avb said…
That’s what sir, once anybody got whether big / small help either directly or indirectly , you would have really helped and must be in his heart .. sir .. always u are a helping person any human being whoever got must have that gratitude on you including me too sir 🙏🙏
Hemalatha said…
Sir last week also we spoked about your help.we never ever forget that🙏🙏🙏
Hkb said…
It's my pleasure Sir. You have done a lot for me. I am always indebted to you. I will always be at your service.
Regards
Sukumar said…
You are always humble and great Ravi
Ramani said…
Great Sir. How can anyone forget you? Your humbleness is your forte. That itself makes everyone follow you.🙏🙏🙏
1 – 200 of 434 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை