ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 39.-காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா-பதிவு 46
39 कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद्
இடையழகை தொடர்ந்து வாக் தேவிகள் அவள் தொடையழகை வர்ணிக்கிறார்கள்.
அவள் தொடையழகு அவளது பிராண நாதன் காமேஸ்வரன் ஒருவனுக்கல்லவோ தெரியும் என்கிறார்கள்
நாம் பாதத்தை வணங்கி அருள் பெறுபவர்கள்..
*காமேஷ* = ஈஸ்வரன் - மஹாதேவன்
*ஞாத* = அறிந்த - உணர்ந்த
*சௌபாக்ய* = மங்கலமான - அழகான
*மார்தவ* = மென்மை - கனிவான
*ஊரு* - தொடைப்பகுதி
*த்வய* = இரண்டு - ஜோடி
*அன்விதா* = அழகாய் அமைந்திருத்தல்
*39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; =*
அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள் 👏👏
Comments
படேத்
ஸ்ரீகாமாக்ஷி பவேத் தஸ்ய ப்ரஸந்ததா
சவரப்ரதா.
இந்த பஞ்சசதீ துதியை யார் தினமும் பக்தியுடன் படிக்கின்றனரோ, அவர்கள் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் அனுக்ரஹத்தைப் பெற்று சகல நலன்களையும் சகல வரங்களையும் அடைவர்.
96.ரணந் மஞ்ஜீராப்யாம் லலித கமநாப்யாம் ஸுக்ருதிநாம்
மனோ வாஸ்தவ்யாப்யாம் மதி
ததி மிராப்ப்யாம் நக ருசா
நிதேயாப்யாம் பத்யா நிஜ சிரஸி காமாக்ஷி ஸததம் நமஸ்தே
பாதாப்யாம் நலிந ம்ருதுலாப்யாம் கிரிஸுதே.
மலை மகளே ! காமாக்ஷி ! இனிது ஒலிக்கின்ற சிலம்புகளுடன் கூடியதும் மென்மையுடன் நடமாடுவதும், புண்ணியம் செய்தவரின் உள்ளத்தில் குடியிருப்பதும், நக ஒளியாக உள்ளத்து இருட்டைப் போக்குவதும் கணவரால் தன் சிரசில் தாங்கத்தக்கதும், தாமரை போன்று மென்மை உள்ளதுமான உனது திருவடிக்கு நமஸ்காரம்.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
போலிக்கும் வித்தியாசமே
காணமுடியா வண்ணம்
நிஜம் போலவே.. சிற்பங்களைச்
செதுக்குவதில் சிறந்தவர்..
கருடனின் சிற்பத்தினை
அவர் வடித்துக் கொண்டிருந்தார்..
இரண்டு இறக்கைகளையும்
மிகச் சிறப்பாய் வடித்து அதற்கு
உயிரூட்டச் செய்திருக்கிறார்..
இந்தக் கருடனை
தரிசிப்பவர் தமக்கு
சுபமே நடக்க வேண்டுமென
மனத்திலே பிரார்த்தித்து..
பிராணப் பிரதிஷ்டை செய்ய..
சாமவேத த்வனியோடு
கருடன் மேல் நோக்கிப் பறக்க..
வெலவெலத்துப் போனார் சிற்பி..
என்னை சிற்பியாக நினைப்பரோ?
மந்திரவாதியாய் நினைப்பரோ?
இனி என்னிடம் யார் வருவார்?
இவன் பறந்து போனால்
அடுத்த சிற்பம் வடிக்க
அடியேனிடம்
பொருள் கூட இல்லையே?
எண்ணங்களால்
அலைக்கழிக்கப்பட்ட சிற்பி..
பறக்கும் கருடனை நோக்கி
தன் கையிருந்த உளியைத்
தூக்கி எறிய.. கருடனின்
கூர்மையான மூக்கினை
அந்த உளி பதம் பார்க்க..
நிலம் விழுந்தான் கருடன்..
பயந்தான் சிற்பி..
தேற்றினான் கருடன்..
என்னைப் படைத்த நீர்
கச்யப முனிவருக்கு
இணையானவர்..
எமக்குத் தந்தையாவீர் நீர்..
அன்று கருடன்
தரையிறங்கிய நிலமே
திருநறையூர் எனப்படும்
நாச்சியார் கோயில் ஆகும்..
கும்பகோணம் அருகில் உள்ள
திவ்யதேசம் இதுவாகும்..
பெருமானின் சன்னதிக்கு அருகே
ஒரு மகா மண்டபத்தில்..
நீள் சிறகும்.. நீள் முடியும்..
நீண்டு வளர்ந்த திருமேனியும்..
ஒன்பது நாகங்களைத் தன்
ஆபரணமாகப் பூண்டு..
அன்று தரையிறங்கிய கருடனை..
இன்றும் நாம் தரிசிக்கலாம்..
மிகவும் பிரசித்தமானவர்..
வைகுண்ட ஏகாதசி..
பங்குனி உத்திரத் தேர்..
இந்த வைபவ நாட்களில்
நான்காம் நாள் கல்கருட சேவை..
மூலஸ்தானத்திலிருந்து
வெறும் நான்கு பேர்..
பின்னர் எட்டு.. பதினாறு..
முப்பத்திரண்டு..
அறுபத்துநான்கு என
கல்கருடனை அடியார்கள்
எழுந்தருளப் பண்ணுவார்கள்..
கருவறையிலே
குழந்தையாய் இருந்தவன்..
பின்னர் வெளிவந்து
விஸ்வரூபம் எடுப்பதாய்..
இச் சம்பவம் நமக்கு உணர்த்தும்..
மீண்டும் தன் கருவறைக்குள்
கருடன் செல்லும்போது
நால்வரே தோள் சுமப்பர்..
இங்குள்ள பெருமானுக்கு
அமுத கலசம் எனப்படும்
மோதகமே நிவேதனமாகி..
அதன் பின்னர் அதுவே
அங்கிருக்கும் கருடனுக்கு
ஆறுகாலமும் ஆராதனமாகிறது..
மோதக மோதர் என்ற திருநாமம்
இந்தக் கல்கருடனுக்கு உண்டு..
ஆடியில் சுவாதி
அத்தனை அமர்க்களமாய்..
ஹோமமும்.. பூஜைகளும்..
கருடனின் சன்னதிக்கு
பெருமாளும் பிராட்டியும்
எழுந்தருளுவார்கள்..
பெருமான் வாமனனாய்
அவதரித்த அக் காலம்
கச்யபருக்கே
மகனாகப் பிறந்தார்..
அந்த வகையில் பெருமான்
கருடனின் சகோதரரும் ஆவார்..
தை மாதம் சுவாதியும்
இங்கு பிரசித்தமானதே..
இலட்சார்ச்சனை நடைபெறும்..
நவ நாகங்களையும் கருடன்
ஆபரணமாக அணிந்திருப்பதால்..
அதனை நாம் கண்டால்
நவக்கிரக தோஷமும்..
நாக தோஷமும்..
நம்மை விட்டு அகலும் என
உச்ச நம்பிக்கை பக்தருக்கு உண்டு..
கருடன் தன்
இடுப்பில் கட்டிய
சண்டாயுதத்தைக் கண்டால்
இடுப்பு சம்பந்தமான
பிணிகளும் விலகி விடுமாம்..
அந்தச் சிற்பியின் தவம்
வென்றதே சத்தியம்..
கல்கருடனைக் கண்டால்
சுபம் மட்டுமே உறுதியாகும்..
வினதையின் மைந்தனை
ஆளவந்தார்
மங்களாசாசனம் செய்கையில்..
ஏழு வகையான
கைங்கர்யங்களை
கருடன் செய்வதாய்
பதிவு செய்துள்ளார்..
தாசனாய்..
சினேகிதனாய்..
வாகனமாய்..
ஆசனமாய்..
கொடியாய்..
விதானமாய்..
சாமரமாய்..
ஏழு விதமான கைங்கர்யங்களை
எம்பெருமானுக்குக்
கருடன் செய்கிறானாம்..
விஷத்தினை அறுப்பதால்
விஷஹாரி என்ற திருநாமமும்
விநதை மைந்தனுக்கு உண்டு..
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
93 –
லாபம் நீ இகபரலாபம் இல் எனை உற்று
லாபம் என் உற்றனை அருணாசலா (அ)
தந்தது உந்தனை கொண்டது எந்தனை
உனை பெற்று அந்தம் ஒன்றுமில்லா ஆனந்தம் பெற்றேன்
எனை பெற்று என் கண்டாய் ?
காலணா அளவும் மதிப்பு இல்லா எனை
காலனை அழித்து எனை கொண்டாய் ...
எதற்கும் உதவா எனை பெற்றோ உனை தந்தாய் .. ?
பித்தன் என்றே பலரும் சொல்ல
பித்தனாய் ஏன் செய்தாய் இக்காரியம் ?
ஓர் தூசிக்கு யார் தருவார் அரியாசனம் ?
ஓர் கொசுவுக்கு யார் தருவார் தங்க வாகனம் ?
ஒரு குருவிக்கு யார் சொல்வார் கருடனுக்கு சமம் என்று
ஒரு கழுதைக்கு யார் செய்வார் அசுவமேத யாகம்
எதிலும் இழிவுற்றேன் எனை பெற்று என் செய் போகிறாய் ..?
தகடம் பொன்னாகுமா ...?
வெண் காடு சிவமாகுமா ?
எழில் வானம் தரை தொடுமா ?
முடிவில் எனை சதுரன் ஆக்கி சதுரங்கம் ஆடினாயோ ...?
வேண்டத்தக்கது நான் என்றும் அறிவேன் என்றே அருள் செய்தனையோ ??💐💐💐
You are a profitable one !
What profit did you get from one like me who has no profit either in this world or beyond it *Arunachala* ?🥇🥇🥇
--------------------------------------------------------
🌹🌺சிவ பூஜை என்னவொன்று அறியாத மானிடர்களுக்கும் நாயன்மார்களுக்கும் விலங்கினங்களும் சிவ கதி அடைந்துள்ளார்கள் அவர்கள் எந்தவித சாஸ்திரங்களும் சாம்பிரதாயங்களும் கடைபிடித்து சிவகதி அடைய வில்லை
🌺 அன்பு ஒன்று தான் இந்த உலகத்தை ஆட்டுவிக்கும் ஒரு மாபெரும் சக்தி அதை இயக்குபவன் பரம்பொருள் ஈசன்
🌺உனக்குள் இருந்து ஆட்டுவிக்கும் இறைவன் ஈசனாக, கிருஷ்ணனாக இருக்கலாம், இயேசுவாக இருக்கலாம் அல்லாவாக இருக்கலாம் ஆனால் அவர்கள் யாரும் அவர்களை வணங்க வரைமுறை இயற்ற வில்லை உண்மையான அன்பை...
தவிர ....!
🌺நவ அபிசேகம் செய்தவனுக்கும் ஒரே புண்ணியம் தான் நான்கு ரூபாய்க்கு எண்ணெய் வாங்கி செல்பவனுக்கும் ஒரே புண்ணியம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம் ...!
🌺 தன்னிடம் பிச்சை கேட்டு வந்த சிறுவனுக்கு ஒரு நெல்லிக்கனிக்கு பல தங்க நெல்லிக்கனி தந்த வரலாறு நமது தாய் திருநாட்டில் தான் நடந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
🌺அந்த அம்மையிடம் இருந்தது சாஸ்திரம் அல்ல தன்னலமற்ற அன்பும் பக்தியும்..! மனமது செம்மையானல் மந்திரம் தேவையில்லை
🌺ஹர ஹர மஹா தேவா🌹
🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 In Chola country, in a town called Brivantangudi, as part of Thirumal's Vyjayanthi mala, I surrender to Dondaradippodi Alvar, who was born in the star of Ketai in the month of Margazhi.
🌺Thondaradipodi appeared in the month of Margazhi in the Ketai Nakshatra in the Vaishnava Anthanar clan in the divine land called Vividalangudi on the banks of the Kaveri in the Azhwar Chola country.
🌺He is worshiped as an aspect of the garland Vyjayanthi worn by Thirumal. His original name was Vibra Narayan. At an early age he was very devoted and devoted to Tirumal.
🌺 Living in Tiruvaranga, he built and maintained a beautiful Nandavana for the service of Thirumal. He used to grow various flower plants in it.
🌺He used to live by picking flowers from them and garlanding them and wearing them to Ranganathan. He was admired by all who lived without resorting to domestic life.
🌺 A woman named Devadevi belonging to the Kanikaiyar clan lived in a place called Thirukarambanoor to the north of Thiruvarangam.
🌺One day she along with her elder sister performed dance songs in the Chola king's palace and was returning to her abode after receiving many gifts. On the way she reached the Nandavan of Vibra Narayana.
🌺Bewitched by the beauty of Nandavana, she wanted to look around it and entered it. There Vibra Narayan was watering the plants, forgetting himself in divine thought. He did not look at her.
🌺 Devadevi was very angry with Vibra Narayan who neglected to see her beauty. He asked his sister, 'Who is he who does not look at beautiful women?' she asked.
🌺 To that she said, 'He is completely devoted to the charity of Thiruvarangan. People like him do not care about anything other than serving the Lord.
🌺 But if you take him under your control, I will be your slave for six months.' Devadevi said, 'Sister! She vowed that I will enslave him, otherwise I will be your slave.
🌺Then she took off her expensive saree and jewelery and gave it to her sister and put on a very simple kolam. Approaching Vibra Narayan like a devotee, 'Sir! She requested them to allow her to do the work of picking flowers to help them.
He agreed to that. As always, Vibra Narayan continued his charity work.
🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*_✍️ 09, Thursday, Mar., 2023_*
https://srimahavishnuinfo.org
*🧿"சும்மா இருப்பதே சுகம் ''!*
..............................
*♻️''சும்மா கிடப்பதே சுகம்’ என்றார்கள் வாழ்வியல் ஞானிகள்.*
*♻️நாம் என்ன நினைக்கிறோம்.. உடல் உறுப்புகளை அசைக்காமல் இருந்தால் என்ன ஆவது..! எப்படி நம்மால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியும்.. என்று தானே*
*♻️ஆனால் அந்த ஞானிகள் நமக்குச் சொன்னது ஒரு மறை பொருள் சூத்திரத்தை.*
*♻️நமது மனதை வெறுமையாக வைத்துக் கொண்டு இருப்பது என்பதே அந்த சுகம். அப்படி நம்மால் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியுமா..!*
*♻️முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி இருந்ததால் தான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது அளவிட முடியாத சுகம்.*
.
*♻️ஆராய்ச்சி அற்று ''சும்மா இருப்பதே சுகம்''.. .இதைத் தேடுகிறேன், அதைத் தேடுகிறேன்,ஆன்மீகத்தை தேடுகின்றேன், என்னைத் தேடுகின்றேன் என்ற எந்த தேடுதலும் இல்லாமல் சும்மா இருந்தாலே சுகம்*
*♻️சும்மா ஆராய்ச்சி அற்று இருந்தால் மனம் ஒருமை நிலை ஏற்படும். முழு திருப்தி நிலை வந்து விடும் . அறிவு முழுமை அடையும்*
*♻️ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் தருமாறு தன் மாணவர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.*
*♻️யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ? அவன் தன்னை உணர்ந்தவன் எனப் பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார்.*
*♻️எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,''சும்மா'' 'இருப்பதற்குண்டான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.*
*♻️சிலர் பேசாமலும்,சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர்.சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.*
*♻️இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள்.*
*♻️ஆனால்,ஒரே ஒரு மாணவன் மட்டும்* *"சும்மா'' இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல்,* *தன்னுடைய வேலைகளை எப்போதும் போல செய்துக் கொண்டு இருந்தான்*
*♻️போட்டியின் முடிவு நாள் வந்தது..குரு முடிவை சொன்ன போது அனைவருக்கும் அதிர்ச்சி..*
*♻️எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத் தான் குரு பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.*
*♻️இதை ஏற்காமல், எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.*
*இதற்கு குரு,*
*♻️"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்து சிந்தித்து, எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்..*
*♻️நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்கத் தவறி விட்டீர்கள்...*
*♻️ஆனால்,எந்த முயற்சியும் எடுக்காமல், அந்தந்த நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி,உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"என்று கூறினார் குரு..*
*😎ஆம்.,நண்பர்களே.,*
*🏵️நடந்து ஒரு இடத்திற்கு சென்று அமர்கிறோம். அமர்ந்த பிறகும் கால் செயல்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? வேலை முடிந்ததும் கால் தானே ஓய்வெடுப்பதைப் போல, மனமும் ஓய்வெடுக்க வேண்டும்.*
*⚽அப்போது தான் நம் மனம் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் நாம் மனதிற்கு ஓய்வு கொடுப்பதே இல்லை. கண்டதையும் அதுபாட்டுக்கு அசை போட்டுக் கொண்டே இருக்கிறது.*
*🏵️இதைக் கொஞ்சம் நிறுத்தி, ஒருநாளில் ஒரு சில நிமிடங்களாவது அமைதியாக சும்மா இருக்க வேண்டும்.*
*⚽இப்படி இருந்து பாருங்கள், அப்புறம் புரியும் ''சும்மா'' இருப்பதில் உள்ள அருமையும், பெருமையும்...*
╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
பழனிக் கடவுள் துணை -09.03.2023
பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்
பழனித் திருவாயிரம் -நூல்
இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-82
மூலம்:
மெய்யறிந்து பொய்யனைத்தும் விட்டோர், வியன்பழனிச்
சையமிசை வாழும் தலைவனன்றி – வையகமும்
வாரிதியும் தீயும் வளியும் வெளியுமின்(று) என்(று)
யாரிடத்தும் சொல்வதுண்டுண் டே (82).
பதப்பிரிவு:
மெய் அறிந்து பொய் அனைத்தும் விட்டோர், வியன் பழனிச்
சையம் மிசை வாழும் தலைவன் அன்றி – வையகமும்
வாரிதியும் தீயும் வளியும் வெளியும் இன்று! என்று
யாரிடத்தும் சொல்வது உண்டு! உண்டே!! (82).
பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:
ஆஹா! என்ன ஒரு அற்புத வெண்பா? பழனிப்பெருமான் தான் அனைத்தும்- அவன் அன்றி இந்த உலகிலும், எந்த உலகிலும் எதுவும் இல்லை. "தரணி தனில் அறுபத்து அறுகோடி" பாடலை நினைவில் கொண்டு வருகிறது இந்தப் பாடல். ஆனந்தக் கண்ணீர் பெருத்து ஓடுகிறது இந்தப் பாடலைப் படிக்கும் பொழுது எல்லாம்! என்னே பழனிப் பெருமான் கருணை!
எல்லாம் வல்ல எம் பெருமான் பழனிக் கடவுளின், நிலையான திருவருளைத் தெரிந்து, பொய்யான உலகாசையைச் துறந்து விட்டோர், பெருமைகளின் ஒட்டுமொத்த உறைவிடமான பழனிச் சையம் (மலை) மீது வாழும், யாம் கண்ட, கொண்ட, ஒரே தலைவன், எம் பெரும் தலைவன்- பழனிப் பெருமானை அன்றி, பூவுலகும், மலையும், தீயும், கடலும், காற்றும், வானும் முதலிய, யாதும் இல்லை என்று, யாரிடத்தும் சொல்வது உண்டு! உண்டே! அவன் தான் அனைத்தும்! அவனை அன்றி ஒன்றும் இல்லை! பழனிப் பெருமானே சர்வமும்!
வெளி, வளி, ஒளி, எங்கும் ஒளிரும் ஒளி*, ஒளியோனும்** ஒளியிழக்க ஒளிவிடும் ஒளிவிளங்குமேனியுடை ஒளியுருவியகல்***, பழனிப் பெருமானே! அவன் அளித்த ஒளி கொண்டு, அவன் ஒளியில் சொக்கி, அவன் ஒளி பாடும் அன்பர்க்கு ஒளிக்காது அருளும் ஒளி அவனே!
* ஒளி-சோதி; விளக்கம்; பார்வை; அறிவு; தோற்றம்; அழகு; கடவுள்; புகழ்;
**ஒளியோன்- சூரியன்; ***ஒளியுருவியகல்-வைடூரியம்;
ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!
வேலும் மயிலும் சேவலும் துணை;
பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
கொட்டி வைத்த குங்கம மலையோ ?
குவிந்து வைத்த குங்கமப்பூ நிறமோ ?
தேடி வைத்த நவரத்தின கற்களோ ?
பாடி வைத்த கவிகளை எழுத வைத்த எழுத்தாணியோ ?
நாடி வந்த நல்லவர்களை ஆட வைத்த அழகு சிலையோ ?
தாடி வைத்த ரிஷிகளின் தவப்பயனோ ?
ஏட்டில் இருப்பவளே பாட்டில் உறைபவளே?
என்றும் இருப்பவளே எதிலும் நிறைபவளே ?
எண்ணில் என்னுள் பழைய இருப்பிடமாய் வருபவளே ... !
என் வாசம் கண்டாய் உன் வாசம் கொண்டேன் !
மண் வாசம் இனி என் செய்யும் ?
மண் வசம் எனை இழுக்க முடியுமோ இனி மண்ணால் ...
கண்ணால் காப்பவள் என் உள் இருக்க
அந்த பெண்ணால் எந்நாளும் நல் நாளே 🙏🙏🙏🙌🙌🙌
rich woman came to the temple and informed the priest to handover the sarees to the great devotee of lord Vittala ,so he was thinking about Jijabai to offer her the srees Jijabai could not believe herself that lord Vittala gave her 4 new sarees Tukharam was in tears singing Vittala Vittala Jai Jai Vittala 🙏🙏
காஞ்சிபுரத்தில் 15 திவ்ய தேசம் தரிசன செய்யலாம் ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியான சிறப்புகள் உண்டு அதில் ஸ்ரீ ராமானுஜரின் சால கிணறு,
சொன்ன வண்ணம் செய்த பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், சுவாமி தேசிகர் ஆலயம், அழகிய சிங்கர், வைகுண்ட நாத பெருமாள், பவளவண்ண பெருமாள், காமாட்சி அம்மன் கோவில் கள்வப்பெருமாள் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் என ஒவ்வொரு திவ்ய தேசத்திற்கும் தனி சிறப்புக்கள் உண்டு ஒரு நாளில் கூட இந்த 15 கோவில் தரிசனம் செய்துவிடலாம் ஆனால் இரண்டு நாட்கள் சரியானதாக இருக்கும்... ஒவ்வொரு கோவிலின் சிறப்புக்கள் இனிவரும் தொடர்களில் தவறாமல் படியுங்கள்
ஏன் இதை மட்டும் குறிப்பா உங்களுக்கு சொல்றேன் தெரியுமா அந்த அளவு சூப்பரா இருக்கும் அத நீங்க தெரிஞ்சிக்கணும் அதற்காகத்தான்...
அந்த சிறப்புகளை தெரிந்து எம்பெருமானின் பேரருளை நீங்களும் நேரில் சென்று தரிசித்து பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அடியேன்....
ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல,
மூன்று சென்டுல ஒரு வீடு...
இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு...
அந்த வீட்ல
ஒரு வயதான தம்பதிகள், அவங்கள தேடி
யாரும் வந்த மாதிரி தெரியல.
பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல.
நாங்க புதுசா கல்யாணம் ஆன
இளம் ஜோடி.
இனிமே தான் குழந்தை...
வார நாட்களில்
எங்க ரெண்டு பேருக்கும்
வேலைக்கு போய்ட்டு வரவே
சரியா இருக்கும்...
எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி...
காபி குடித்து விட்டு ஒரு மணி நேரம் பேசிய பின்பு தான் வீடுதிரும்புவோம். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்...
அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்...
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவங்க வீட்டுக்கு போகும் போது,
காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க...
தாத்தாவும் மீசையை ஸ்டைலா முறுக்கி விட்டுக் கிட்டு ஒரு வெற்றிச் சிரிப்புடன் திறந்து கொடுப்பார்...
பாட்டி ஒரு நமட்டுச் சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க...
இத ரெண்டு மூணு வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு கருவி device வாங்கி கொடுத்தோம்...
இந்த வாரமும் வழக்கம் போல்
எங்கள் ஞாயிறு மாலை visit.
வழக்கம் போல்
காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி. தாத்தாவும் இறுமாப்புடன்
திறந்து கொடுக்க,
பாட்டி உள்ளே சென்றார்...
பாட்டி உள்ளே செல்ல,
என் மனைவியும் பின் சென்று..
"பாட்டி, ஏன் அந்த கருவியை device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல. மறந்துட்டீங்களானு"
கேட்க …
பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைட்...
"குழந்தே,
இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை.
நானே திறந்திருவேன்
அவர நான் தெறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம். சந்தோசம்...
இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு கெத்து. இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு உபயோகமா இருக்கோம் என்ற
ஒரு மகிழ்ச்சி. நான் இன்னும்
அவரை சார்ந்து இருக்கேன்னு
அவருக்கு ஒரு ஆளுமை...
திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே.
இன்னும் வாழப்போறது
கொஞ்சநாள் தான்.
யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழணும். அதுக்குத் தான் இந்த நாடகம்"னு*சொன்னாங்க...
கொஞ்ச நேரம்
என்னால ஒன்னும் பேச முடியல.
இந்த மூடியில இவ்வளவு விஷயமா...
வயசானவங்களை under estimate பண்ணக்கூடாது.
அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க...
இந்த பாடம் எல்லாம்
எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க...
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்துத் தான் கத்துக்கணும்.
அதுக்கு அவங்க
நம்மளோட இருக்கணும்.
தாத்தா,பாட்டியோடு வாழ்வது வரம் என்றால் பேரன்,பேத்தியோடு
வாழ்வது கொடுப்பினை...
பணத்துக்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை
பாசத்துக்கு கொடுங்கள்...
“ஆன்மீகம் என்பதே சக மனிதரை மதிப்பதுதானே..!”
*பதிவு 103*
*18th Nov 24*
*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌
💐💐💐
*91*
[09/03, 17:10] Jayaraman Ravilumar: स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला
कनकरुचिचौर्यशीला त्वमम्ब बाला कराब्जधृतमाला ॥91॥
91. Smara madhana varana lolaa Manmatha helaa, vilasa mani shaala,
Kanaka ruchi chourya sheela, Thwamamba balaa karabhja drutha mala.
ஸ்மரமதனவரணலோலா மன்மதஹேலாவிலாஸமணிஶாலா |
கனகருசிசௌர்யஶீலா த்வமம்ப பாலா கராப்ஜத்றுதமாலா ||91||
[09/03, 17:11] Jayaraman Ravilumar: தனக்குப் பிடித்த தன்னைக் கவர்ந்த ராஜகுமாரன், ராஜா, யாரென்று தேடிக்கொண்டு ஸ்வயம்வர மண்டபத்தில் கையில் மாலையோடு ராஜகுமாரி ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வருவாள்.
அப்படித்தான் ஸ்வயம்வரம் அக்காலத்தில் நடப்பது வழக்கம்.
அம்பாள் கையில் மாலையோடு தனக்கு பிடித்த பொன்னார் மேனியன், பரமேஸ்வரனை கணவனாகக் கொள்ளும் ஆர்வத்தில் அவனுக்காக காத்திருக்கும் அழகிய பெண்ணாக வர்ணிக்கிறார் மூகர் .
*ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
*பதிவு 508* 🙏🙏🙏started on 7th Oct 2021
*224 வது திருநாமம்*
[09/03, 17:04] Jayaraman Ravilumar: *224 महासिद्धिः - மஹாஸித்திர் --*
அதீதமான சித்தத்தில் வாய்க்கப்பட்டவள் .
இயற்கையாகவே சர்வமும் வரப்பெற்றவள்.
அஷ்ட மா சித்திகள் மட்டுமா?
சகல சித்திகளுக்கும் ஆதார நாயகி அம்பாள்.🥇🥇🥇
பதிவு 106 started on 6th nov
[09/03, 17:00] Jayaraman Ravilumar: *பாடல் 33 ... சிந்தாகுல*
(பந்தத்தின்று எனைக் காவாய்)
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே🥇
[09/03, 17:01] Jayaraman Ravilumar: கங்கை ஏந்திக் கொண்டுவந்து அளித்து, தேவர்கள் பெற்ற வரத்தின்
நிமித்தமாக அவதாரம் செய்தவனே.
மனச் சஞ்சலத்தைக் கொடுக்கும்
சம்சார வாழ்க்கை, ஐஸ்வரியம் என்கிற விசித்திரமான காட்டில் வசிப்பதை
எப்போது நீங்கப் பெறுவேன்?🦚
ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ
வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏
*107. ஸத்யாய நமஹ (Sathyaaya namaha)*
[09/03, 16:53] Jayaraman Ravilumar: மூங்கில் கழிகளை அவரது சிறைக்குள் கொண்டு வந்து போடச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் அந்தப்புரத்துக்குச் சென்றான்
அன்றிரவு திருமலையப்பன் தனது பக்தனான கஜேந்திரனைச் சிறைச்சாலைக்கு அனுப்பினார்.
கஜேந்திரன் வந்து அனைத்து மூங்கில்களையும் எளிதில் தின்று தீர்த்தார்.
தன் திருமார்பில் உள்ள மகாலட்சுமியிடம்
அந்தச் சிறைச்சாலையைக் கடாட்சிக்கும்படி கூறினார் மலையப்பன்.
மகாலட்சுமியின் பார்வை பட்டதும் சிறைச்சாலை பொன்மயமானது.👏👏👏
[09/03, 16:48] Jayaraman Ravilumar: சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்…66வது ஸ்லோகம்.
क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।
शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥
க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ
க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜனா꞉
யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ ப்ரீத்யை ப⁴வத்யேவ தத் |
ஶம்போ⁴ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ
மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ
தஸ்மான்மாமகரக்ஷணம்ʼ பஶுபதே கர்தவ்யமேவ த்வயா || 66 ||
[09/03, 16:50] Jayaraman Ravilumar: இந்த மாதிரி, என்ன காப்பாத்தணும்னு மட்டும் சொல்லனுமா?
என்ன காப்பாத்தறது அவரோட விளையாட்டுல ஒண்ணு தானே,
அவர் காப்பாத்தத்தானே போறார் அப்படின்னா,
அப்படி பக்தர்கள் வேண்டிக்கறதும் ஸரணாகதில ஒரு அங்கமா இருக்கு..
” உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.”
அப்படின்னு திருவெம்பாவைல மாணிக்கவாசகர் சொல்றார்…
*********************************
ராகவேந்திரர் தனது பயணத்தில் ஒரு முறை ஷிரஸங்கி என்ற ஊரில் தங்க வேண்டியிரு ந்தது. அவர் வந்திருப்பதை கேள்விப்பட்டதும், அந்த ஊர் அந்தணர்கள் தேடி வந்து “நாங்கள் மழை இல்லாமல் தவிக்கும் பயிர்களைப்போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வேதங்களை ஓதுவ தையும் கூடச் செய்ய முடியவில்லை!” என்று கூறினர்.
“ஏன்? என்ன காரணம்?” என்று கேட்டார் சுவாமிகள்.
“
சுவாமிகள் “நல்லது. இங்கே எனது தலை மை யில் ஒரு பெரிய யாகம் நடத்த ஏற்பா டு செய்யு ங்கள். நான் முன்னின்று நடத்தி வைக்கிறேன். கவலைப்படாதீர்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
மாபெரும் யாகம் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றன. அந்தத் தகவல் பாளையக் காரர் காதையும் எட்ட சுவாமிகளைச் சந்திக்க வந்து சேர்ந்தார்.
“பலன் இல்லாவிட்டால் அது பைத்தியக் காரர் செய்கை தான். ஆனால், மழை பொழியவும், பயிர்கள் செழிக்கவும், நாடு வளம் பெறவும், யாகம் செய்வது புனிதமா ன காரியமே அல்லவா?” என்று கூறினார் சுவாமிகள்.
“பயிர் விளைய விதைகளை போடுகிறோ ம். பலன் கிடைக்கிறது. இதுவும் அப்படி என்று தாங்கள் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார் பாளையக்காரர்.
“நிச்சயம் உண்டு. நீங்கள் விதையை எப்படிப் போடுகிறீர்கள்? காலால் மிதித்து, மாட்டைப் பூட்டி உழுத சகதியில் அல்லவா மணியான விதைகளை அள்ளி வீசுகிறீர் கள்? விவரம் தெரியாத ஒருவனுக்கு அது அநியாயம் என்று தோன்றும் இல்லையா... “ என்று கேட்டார் சுவாமிகள்.
“நல்லது. சகதியில் எறிந்த நெல் பசுமை யான பயிராக முளைக்கும் என்று என்னா ல் நிரூபி க்க முடியும். பட்டுப் போன மரத் தைத் தாங்கள் மந்திர சக்தியால் உயிர் பெற்றுப் பசுமையாக வளர்க்கச் செய்ய முடியுமா? செய்தால், நான் உங்கள் வாதத் தை ஏற்றுக்கொள்கிறேன்.” என்று சவால் விட்டார் பாளையக்காரர்.
பட்டுப்போன சில மரங்கள் இருந்த நிலப் பகுதி யையே யாக பூமியாகத் தேர்ந்தெடு த்தார் சுவாமிகள். அங்கேயே யாகத்தை நடத்தினார்.
தாமே மந்திரங்களைக் கூறி தீர்த்தத்தை அந்த மரங்களின் மீது தெளிக்க செய்தார். பட்ட மரங்கள் துளிர்த்தன. வறண்டு கிடந்த அந்த பூமியைப் பெருமழை பெய்து குளிர்வித்தது!
பாளையக்காரர் சுவாமிகளின் பாதங்களி ல் விழுந்து வணங்கினார். தாம் சொன்ன படி அந்தணர்களிடமிருந்து பெற்ற நிலங் களைத் திருப்பி அளித்தார்.
குருவே சரணம்...
ஸ்ரீ குரு ராகவேந்திரர் திருவடிகள் சரணம்...
09.03.2023... நேசமுடன் விஜயராகவன்...
நல்வழிப்படுத்துவது' என்பதுதானே குருவின் முக்யமான கார்யம்? அதனால் அம்மாவுக்கும் அப்பா மாதிரியே குரு ஸ்தானம் உண்டு. இதையும் ஆசார்யாள் எடுத்துக்காட்டிச் சொல்லியிருப்பதுண்டு. சித்தே முந்தி தானே பார்த்தோம், பிள்ளை குணவானாக இருப்பதில் அம்மாவுக்கே ப்ராதான்யம் (பிரதானமான ஸ்தானம்) என்று அவர் சொன்னதை? குணவதியான மாதாவின் கர்ப்பத்தில் ரூபமாகி, அவளிடமிருந்து ஆஹாரம் - பானம் பண்ணிக் குழந்தை வளர்வதாலேயே முக்யமாக ஒரு ப்ரஜைக்கு குண ஸம்பத்து ஏற்படுகிறது. இது அவளுக்கே தெரியாமல் அவள் புத்ரனை நல்வழிப்படுத்துவது!அப்புறம் சின்ன வயஸில் அதற்குக் கதை புராணம் சொல்லி, ஸ்தோத்ரங்கள், நீதிப் பாடல்கள் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துகிறாள். 'இப்படிப் பண்ணப்பா, இப்படிப் பண்ணாதேப்பா!' என்று அநகேம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுடைய நல்ல நடத்தையைப் பார்த்துப்பார்த்தே - அதன் ஸூக்ஷ்மமான சக்தியாலேயே கூட - பாலப்பிராயத்தில் ஒருத்தன் நல்லவற்றைத் தெரிந்து கொண்டு அந்தப்படி செய்கிறான். 'தாயைப் போலப் பிள்ளை' என்று வசனமே இருக்கிறது.
இதையெல்லாம் ஆசார்யாள் கவனித்து - ரொம்பவும் 'ஸிம்பதெடிக்'காகவும் கெளரவம் கொடுத்தும் கவனித்துத்தான் - கடோபநிஷத்திலே ஒரு இடத்தில் ப்ருஹதாரண்யகத்தையும் Quote பண்ணிக் காட்டி, வேதம் வகுத்துக் கொடுக்கிற விதிமுறையின்படி குருவைப் போலவே அம்மா - அப்பாவுக்கும் - 'அம்மாவுக்கும்' என்பதைக் கவனிக்க வேண்டும், மாதா - பிதா - குரு என்று மூன்று பேருக்குமே - 'ப்ரமாண காரணம்' என்ற பெருமை, உரிமை இருப்பதாகக் காட்டியிருக்கிறார். 'ப்ரமாண காரணம்' என்பதற்கு 'அதிகாரபூர்வமான குரு ஸ்தானம்' என்று இங்கே அர்த்தம்.
அதாவது, தாயாருக்கும் குருஸ்தானம் உண்டு.
தாயார்களின் பெயரைச் சொல்லி ப்ருஹதாரண்யகத்தில் ஏராளமான ரிஷிகளைத் தெரிவித்திருக்கிறதென்றால், சாந்தோக்யத்திலும் இரண்டு பேரை அந்த மாதிரியே சொல்லியிருக்கிறது. அதிலே ஒருத்தர் ஸாட்சாத் கிருஷ்ண பரமாத்மா 'இதுதான் க்ருஷ்ணரைப் பற்றிய earliest reference; அவர் வாஸ்தவமாகவே இருந்த historical personality என்று ரூபக்கிற reference' என்று படிப்பாளிகள் சொல்கிறார்கள். அது எங்கே வருகிறதென்றால், சாந்தோக்யத்தில் 'புருஷ யஜ்ஞம்' என்பதைப் பற்றிச் சொல்கிற இடத்திலே. ஒருத்தரை 116 வயசு ஜீவிக்கச் செய்கிற யஞ்ஜம் அது. க்ருஷ்ணர் 120 வயஸுக்கு அதிகமாக ஜீவித்தவர் என்பது கவனிக்கவேண்டிய பாயின்ட். அவர் கோர ஆங்கிரஸ் என்ற ரிஷியிடமிருந்து இந்த உபதேசம் கேட்டுக் கொண்டார், கேட்டுக் கொண்டதற்கப்புறம் 'தாஹமில்லாதவராக ஆனார்' என்று சொல்லியிருக்கிறது. அதற்கு அர்த்தம், 'இந்த உபதேசம் பெற்றுக்கொண்ட பிறகு அவருக்கு வேறே வித்யை எதுவும் தெரிந்துகொள்ளணும் என்று ஆசை போய் விட்டது என்பதே' என்று ஆசார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். ஆசை ஒரு தீராத தாஹம். 'த்ருஷ்ணா' என்பது (தாஹம், ஆசை என்ற) இரண்டையும் குறிக்கும். புத்தர் ஆசையை 'த்ருஷ்ணா' என்றே சொல்வார். அதை 'தன்ஹா' 'தன்ஹா' என்ற 'ஸம்ஸ்க்ருதச் சிதைவான பாலி மொழியில் பௌத்தப் புஸ்தகங்களில் போட்டிருக்கும்.
'
அவர் த்ருப்திப்பட்டது இருக்கட்டும். அம்மா பேரில் பிள்ளையைச் சொல்வதிலல்லவா இருந்தோம்? இங்கே க்ருஷ்ணரைப் பற்றிச் சொல்லும்போது 'க்ருஷ்ணாய தேவகிபுத்ரா' என்றே இருக்கிறது!அவர் வஸுதேவர் பிள்ளை என்பதாலேயே பிரஸித்தமான 'வாஸுதேவ' நாமம் பெற்றவர். 116 வயஸு ஆயுஸிலும் முதல் பாகத்தில் வஸுக்கள்தான் ப்ராணாதாரமாக இருப்பது. ஆனாலும் தம்முடைய மாயவித்தனத்திற்கேற்ப, தேவகிபுத்ரர் என்றே இங்கே தம்மை ரிஷிக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்!க்ருஷ்ணாவதாரத்தை ஏற்படுத்திய வித்து எதுவோ அதை வஸுதேவர் மனஸிலே தரித்து தேவகியின் மனஸுக்கு அனுப்பி வைத்ததாகத்தான் - பௌதிக கர்ப்பமாக இல்லாமல் மானஸீக ரீதியில் - பாகவதத்தில் சொல்லியிருக்கிறதே தவிர, சரீர ஸம்பந்தத்தால் அவர்களை அப்பா அம்மா என்று சொல்லும்படியாகக் காட்டவில்லை. ஆனாலும் அவர்களில் தேவகி வாஸ்தவமாகவே கர்ப்பவதியாக இருந்துதான் அவரைப்
பெற்றிருக்கிறாள். அதனால் அவளுக்குத்தான் ஓரளவுக்காவது மாத்ரு ஸ்தானம் கொடுக்க இடமிருக்கிறது, வஸுதேவருக்கு (பித்ரு ஸ்தானம்) கொடுக்க அந்த அளவுக்குக்கூட ந்யாயமில்லை என்றே பகவான் நினைத்து அப்படிச் சொல்லயிருக்கலாம்
"Gita Shloka (Chapter 2 and Shloka 9)
Sanskrit Version:
सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तप।
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह।।2.9।।
English Version:
sanjaya uvacha
evam uktvaa hrshikesham
gudaakeshah: parantapa |
na yotsya iti govindam
uktvaa tushnIm bhava ha ||
Shloka Meaning
Sanjaya said
Having spoken thus, Arjuna, thet destroyer of foes, finally said to Lord Krishna.
"I WILL NOT FIGHT" and became silent.
Arjuna is referred to as Gudakeshah.
Krishna is referred to as Hrishikesha
Gudakeshah means one who has conquered sleep. Sleep also means ignorance.
Arjuna conquered sleep and ignorance due to the guidance of Krishna
Hrishikesha refers to Lord Vishnu and it is the 47th name in the Vishnu Sahasranama
The city of Rishikesh in Uttarkhand is named after Lord Hrishikesha"
Jai Shri Krishna 🌺
"Gita Shloka (Chapter 2 and Shloka 4)
Sanskrit Version:
अर्जुन उवाच
कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन।।2.4।।
English Version:
kaTHam Bhishmam aham samkhye
droNam cha maDhuSudana |
ishuBhih: pratiyotsyaami
puJaarhavarisUdana ||
Shloka Meaning
Arjuna said
O Krishna ! Bhishma and Drona are my teachers fit to be worshipped. How can I attack them with my arrows in the battle?
Arjuna refers to Krishna as arisUdana. ari means enemies. arisUdana means destroyer of enemies
From Arjuna's statement, it is clear the amount of respect and reverence Arjuna had for his teachers
even though they were in the rival camp.
Our tradition says Acharya devo bhava. An acharya is like a deva in our tradition.
Jai Shri Krishna 🌺
பழனிக் கடவுள் துணை -09.03.2023
பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்
பழனித் திருவாயிரம் -நூல்
இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-82
மூலம்:
மெய்யறிந்து பொய்யனைத்தும் விட்டோர், வியன்பழனிச்
சையமிசை வாழும் தலைவனன்றி – வையகமும்
வாரிதியும் தீயும் வளியும் வெளியுமின்(று) என்(று)
யாரிடத்தும் சொல்வதுண்டுண் டே (82).
பதப்பிரிவு:
மெய் அறிந்து பொய் அனைத்தும் விட்டோர், வியன் பழனிச்
சையம் மிசை வாழும் தலைவன் அன்றி – வையகமும்
வாரிதியும் தீயும் வளியும் வெளியும் இன்று! என்று
யாரிடத்தும் சொல்வது உண்டு! உண்டே!! (82).
பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:
ஆஹா! என்ன ஒரு அற்புத வெண்பா? பழனிப்பெருமான் தான் அனைத்தும்- அவன் அன்றி இந்த உலகிலும், எந்த உலகிலும் எதுவும் இல்லை. "தரணி தனில் அறுபத்து அறுகோடி" பாடலை நினைவில் கொண்டு வருகிறது இந்தப் பாடல். ஆனந்தக் கண்ணீர் பெருத்து ஓடுகிறது இந்தப் பாடலைப் படிக்கும் பொழுது எல்லாம்! என்னே பழனிப் பெருமான் கருணை!
எல்லாம் வல்ல எம் பெருமான் பழனிக் கடவுளின், நிலையான திருவருளைத் தெரிந்து, பொய்யான உலகாசையைச் துறந்து விட்டோர், பெருமைகளின் ஒட்டுமொத்த உறைவிடமான பழனிச் சையம் (மலை) மீது வாழும், யாம் கண்ட, கொண்ட, ஒரே தலைவன், எம் பெரும் தலைவன்- பழனிப் பெருமானை அன்றி, பூவுலகும், மலையும், தீயும், கடலும், காற்றும், வானும் முதலிய, யாதும் இல்லை என்று, யாரிடத்தும் சொல்வது உண்டு! உண்டே! அவன் தான் அனைத்தும்! அவனை அன்றி ஒன்றும் இல்லை! பழனிப் பெருமானே சர்வமும்!
வெளி, வளி, ஒளி, எங்கும் ஒளிரும் ஒளி*, ஒளியோனும்** ஒளியிழக்க ஒளிவிடும் ஒளிவிளங்குமேனியுடை ஒளியுருவியகல்***, பழனிப் பெருமானே! அவன் அளித்த ஒளி கொண்டு, அவன் ஒளியில் சொக்கி, அவன் ஒளி பாடும் அன்பர்க்கு ஒளிக்காது அருளும் ஒளி அவனே!
* ஒளி-சோதி; விளக்கம்; பார்வை; அறிவு; தோற்றம்; அழகு; கடவுள்; புகழ்;
**ஒளியோன்- சூரியன்; ***ஒளியுருவியகல்-வைடூரியம்;
ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!
வேலும் மயிலும் சேவலும் துணை;
பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
97.ஸுராகே ராகேந்து ப்ரதிநிதி முகே பர்வத ஸுதே
சிராத் லப்யே பக்த்யா சமதன ஜனானாம் பரிஷதா
மனோப்ருங்கோ மத்க: பத கமல யுக்மே ஜநநிதே
ப்ரகாமம் காமாக்ஷி த்ரிபுர ஹர வாமாக்ஷி ரமதாம் || 97
திரிபுரமழித்தவரின் மனைவியே ! தாயே / மலைமகளே ! பௌர்ணமி சந்திரனுக் கொப்பான முகம் உள்ளவளே / காமாக்ஷி ! நன்கு சிவந்தவையும் மனவடக்கத்தையே செல்வமாகக் கொண்டவரின் கூட்டத்தால் வெகு நாட்களின் வழிபாட்டால் பெறத்தக்கவையுமான உள் இரு திருவடிகளில் என் மனமாகிய தேனீ
விரும்புமளவு, இன்புறட்டும்.
வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
எவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!!
மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும்,
கீழ் இருப்பவரை பார்த்து தலைக்கனமும் வந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது!!!
*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*
🎀 mahavishnuinfo.org 🎀