ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 55 TO 58 பதிவு 54
LS 22 || ஸ்ரீ நகர வர்ணனை || || ஸு மேரு - ம்த்யச் ருங் கஸ்தா ஸ்ரீ மந்நகர - நாயிகா | சிந்தாமணி க்ருஹாந் தஸ்தா பஞ்ச - ப்ரஹ்மாஸனஸ்த்திதா || 55. ஸு மேரு - ம்த்யச் ருங் கஸ்தா : மேரு மலையின் உச்சியில் ஸ்ரீ புரம் இருப்பதாகக் கணக்கு . மேருமலைக்கு நான்கு சிகரங்கள் உண்டு . இந்த நான்கு சிகரங்களுள் மூன்று ஒரே உயரமாக இருக்கும் . பிரம்மா , விஷ்ணு , ருத்ரன் ஆகியோரே இந்த மூன்று சிகரங்கள் . மூன்று சிகரங்களுக்கு மேல் நான்காவது சிகரமாக உயரத்தில் ( ஸு மேரு - ம்த்யச் ருங் கஸ்தா ) ஸ்ரீபுரம் இருக்கிறது 56. ஸ்ரீ மந்நகர – நாயிகா அந்த ஸ்ரீபுரத்தில் சிந்தாமணி கிருஹத்தில் அம்பாள் வீற்றிருக்கிறாள் . சிந்தாமணி என்பது என்ன ? : அப்படி ஒரு கல் இருந்ததாகச் சொல்வார்கள் . அதனிடம் ஏதேனும் வேண்டும் என்று கேட்டால் உடனே கொடுத்துவிடும் . சிந்தாமணியின் குணமே அதுதான் ! சின்னஞ்சிறு கல்லாக இருக்கும் சிந்தாமணியே நாம...