Posts

Showing posts from March, 2025

ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 1 - ஸ்லோகம் -3 to 10

Image
ஸ்லோகம் -3 வடிவழகு - சத்வ குணம் மட்டுமே கொண்ட மேனி  எங்கும் நிறைந்த பிரபுவே!  மூவுலகிலும் மகிமை மிக்கதை க்  காட்டிலும் மகிமை மிக்கதும் , மனதை கவர்வதைக் காட்டிலும் மேலான கவர்ச்சி படைத்ததும் ஒளிக்குவையைக் காட்டிலும் ஒளி மிக்கதும் , இனிமையிலும், அழகிலும் ஒப்புயர் வற்றதும் , ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதும் ஆகிய உமது வடிவழகு , உலகில் யாருக்குத்தான் அதில் ஆசையை வளர்க்காது ? ஸத்வம் யத்தத் பராப்⁴யாம்  அபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்³து பூ⁴தைர் பூ⁴தேன் த்³ரியைஸ்தே வபுரிதி ப³ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம் ।  தத்ஸ்வச்ச²த்வாத்³ யத³ச்சா²தி³த பரஸுக²சித்³க³ர்ப⁴ நிர்பா⁴ஸரூபம் தஸ்மின்  த⁴யா ரமன்தே ஶ்ருதிமதிமது⁴ரே ஸுக்³ரஹே விக்³ரஹே தே ॥ 1-3॥ பகவான் திருமேனி ரஜோ குணம் தமோ குணம் தீண்டாத வடிவம் - சுத்த சத்வ த்தமயமான தூய்மையான மேனியைக்கொண்டவர் . நம் உடம்பு உள்ளே இருக்கும் ஜீவாத்மாவை மறைத்துவிடும் - ஆனால் பகவானின் மேனி சுத்த சத்வ குணத்தினால் உருவானதால் அவன் உள்ளே இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் மறைக்கப்படுவதில்லை . பகவானின் திருமேனி அவன் ஸ்வரூபத்தையும் காட்டுகிறது .. மஹான்கள் அனுபவித்து மகிழ்க...