எங்கும் நிறைந்த பிரபுவே!
மூவுலகிலும் மகிமை மிக்கதைக் காட்டிலும் மகிமை மிக்கதும் , மனதை கவர்வதைக் காட்டிலும் மேலான கவர்ச்சி படைத்ததும் ஒளிக்குவையைக் காட்டிலும் ஒளி மிக்கதும் , இனிமையிலும், அழகிலும் ஒப்புயர் வற்றதும் , ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதும் ஆகிய உமது வடிவழகு , உலகில் யாருக்குத்தான் அதில் ஆசையை வளர்க்காது ?
ஸத்வம் யத்தத் பராப்⁴யாம் அபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்³து பூ⁴தைர் பூ⁴தேன் த்³ரியைஸ்தே வபுரிதி ப³ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம் ।
தத்ஸ்வச்ச²த்வாத்³ யத³ச்சா²தி³த பரஸுக²சித்³க³ர்ப⁴ நிர்பா⁴ஸரூபம்
தஸ்மின் த⁴யா ரமன்தே ஶ்ருதிமதிமது⁴ரே ஸுக்³ரஹே விக்³ரஹே தே ॥ 1-3॥
பகவான் திருமேனி ரஜோ குணம் தமோ குணம் தீண்டாத வடிவம் - சுத்த சத்வ த்தமயமான தூய்மையான மேனியைக்கொண்டவர் . நம் உடம்பு உள்ளே இருக்கும் ஜீவாத்மாவை மறைத்துவிடும் - ஆனால் பகவானின் மேனி சுத்த சத்வ குணத்தினால் உருவானதால் அவன் உள்ளே இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் மறைக்கப்படுவதில்லை . பகவானின் திருமேனி அவன் ஸ்வரூபத்தையும் காட்டுகிறது .. மஹான்கள் அனுபவித்து மகிழ்கிறார்கள்
ஶ்ருதிமதிமது⁴ரே - காதும் மனமும் அந்த அமுதத்தை அந்த விக்ரஹத்தை பார்க்கும் போது அனுபவிக்கின்றது
The great sage Vyaasa has identified Lord in the form of Suddha Sathva . which compared to the other two Gunas (Rajas and Tamas) That Satva Guna is absolutely pure . From such pure Satva guna, Thy form was born. It is thus stated by sage Vyaasa, again and again, in many scriptures. Lord form because of such purity, Contemplation of this pure divine is supremely resplendent. In that form is pleasurable to the mind and ears . In that form the fortunate ones can reveal.
=======================================================================
ஸ்லோகம் -4 வடிவழகு- அவதாரங்கள்
நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி⁴ பரமாநந்த³பீயூஷரூபே
நிர்லீந அநேக முக்தாவளி ஸுப⁴க³தமே நிர்மலப்³ரஹ்மஸின்தௌ⁴ ।
கல்லோலோல்லாஸ துல்யம் க²லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா³த்மா
கஸ்மான்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூ⁴மன்னு ॥ 1-4॥
மாற்றம் இல்லாத கடலாக -- பூர்ணமான கடலாக , பரமானந்தத்தை தரக்கூடிய கடலாக அமிர்தத்தை (பீயூஷரூபே) அள்ளித்தரும் கடலாக நீ இருக்கிறாய் - குருவாயூரப்பன் எனும் கடலில் முத்துக்கள் கிடைக்குமா ? கிடைக்கும் அவனை அடைந்த அடையும் முக்தாத்மாக்கள், முக்தர்கள் அவனிடத்தில் முத்துக்களாக ஒளி வீசுகிறார்கள் - உன்னுடைய
அவதாரங்கள் கடலில் எழும் அலைகளாக வந்து வந்து போகிறாய் -- மிகவும் தூய்மையான வடிவங்கள் உன் எல்லா அவதாரங்களும் ! அந்த அவதாரங்கள் மூலம் உன்னை நாங்கள் அனுபவிக்கின்றோம் !
கஸ்மான்நோ நிஷ்கலஸ்த்வம் - நீ முழுமையான பரப்பிரம்மம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? உன் அவதாரங்களை வேண்டுமானால் (உன் அம்சங்கள்) ( சிறு சிறு அலைகள் ) என்று சொல்லலாம் அண்ணல் நீயோ பரிபூர்ண பரப்பிரம்மம் !!
பூமன்னு - மிகப்பெரியவன் , உயர்ந்தவன் !!
Summary
அசைவற்று, என்றும் நிறைந்து எல்லையற்று பரமானந்த அம்ருத ஸ்வரூபமாய்த் தன்னுள் பல முக்தர்களின் கூட்டத்தை - கடலில் முத்துக் குவியல் போல் அடக்கிக்கொண்டு அழகு மிகுந்து நிர்மலமாய் விளங்கும் பரப்பிரம்மாகிய சமுத்திரத்தில் சுத்த சத்வ வடிவான தேவரீருடைய அர்ச்சாமூர்த்தி (அவதாரங்கள்) பாய்ந்து விளையாடும் அலையைப்போன்றது என்று ஞானிகள் கூறுகிறார்கள் - ஆகையால் பரிபூர்ண ஸ்வரூபியே , நீர் நிஷ்கல நிர்குண பிரம்மமாய் இல்லாமல் போய்விடவில்லை . சகலம் , சகுணம் என்பது உன்னுடைய ( சமுத்திரத்தின் அலை போன்ற ) அம்ஸாவதாரத்திற்கேப் பொருந்தும் !!
Oh Lord! You are ever full, changeless, unchanging form of Suddha Sathva and of the nature of giving supreme happiness to all true devotees unlimited. innumerable liberated souls are absorbed in Thy Brahmic bliss and embedded like pure pearls in the waves of this ocean. hence it is extremely resplendent. Thine as Lord Krishna can be called the only complete one. Hence why cannot Thou be called as Poorna-avataar (Nishkalaa)?
A comparison
*Ocean & Lord Guruvayurappan*
*Ocean*
Is deep , calm , tranquil , blue in colour
*Guruvayurappan*
HE is deep in HIS karunaa , full of gnanam , peace , satva roopam , blue in colour
*Ocean*
You may find treasures underneath especially lots of pearls
*Guruvayurapan*
All mukthas are serving HIM . HIS kaustubh is made of devotees who are HIS gems
*Ocean* :
All waves generated will often come , touch and go back
*Guruvayurapan*
All HIS avatars keep coming , touching , retuning just like waves ..
*Ocean*
Some waves are small in sizes and some are huge waves
*Guruvayurapan*
Some of HIS avatars are small in purpose ( maccha, koorma, varaaha , vaamana , parasurama, balarama, etc., ) some are huge and their impacts are also immense ( Narasimha , Rama , Krishna etc., )
*Ocean*
Waves are miniscule parts of ocean . It does not represent the entirety of Ocean
*Guruvayurapan*
His Avatars are some miniscule parts of HIS being Brahman
*Ocean*
All rivers will finally merge with Ocean
*Guruvayurapan*
All jeevatmas will finally reach HIS abode and merge with HIM eternally .

*கடலும் குருவாயூரப்பனும்*
*A comparison*
*கடல்* =
பரிபூர்ணம் ...
அமைதி , ஆழம் , அழகு , நீலம்
*குருவாயூரப்பன்*
பரிபூர்ணம் , பிரம்மம் , கருணை எனும் ஆழம் அளவிட முடியாது ... அமைதி , ஞானம் , அழகு சொல்லி மாளாது ... நீலத்திருமேனி
*கடல்*
அலைகள் வந்து வந்து போகும்
*குருவாயூரப்பன்* ... எடுக்கும் அவதாரங்கள் வந்து வந்து போகும்
*கடல்* ... சிறிய அலைகள் பெரிய அலைகள் கொண்டது
*குருவாயூரப்பன்* எடுக்கும் அவதாரங்கள் சில சிறியவை ( மச்ச , வராக , வாமன , பரசுராம , பல ராம) சில அவதாரங்கள் மிகப்பெரியவை ( நரசிம்ம, ராம , கிருஷ்ண .....)
*கடலில்* முத்துக்கள் அதிகம்
*குருவாயூரப்பன்* எனும் கடலில் முக்தர்கள் அதிகம்
கடலில் எல்லா நதிகளும் சங்கமம்
*குருவாயூரப்பனிடம்* அனைத்து ஜீவராசிகளும் இறுதியில் சங்கமம்
=========================================================================
நிர்வ்யாபாரோ அபி நிஷ்காரணமஜ ப⁴ஜஸே யத் க்ரியாமீக்ஷணாக்²யாம்
தேநைவோதே³தி லீநா ப்ரக்ரு’திரஸதி கல்பாऽபி கல்பாதி³காலே ।
தஸ்யா: ஸம்ஶுத்³த⁴மம்ஶம் கமபி தமதிரோதா⁴யகம் ஸத்த்வரூபம்
ஸத்வம் த்⁴ரு’த்வா த³தா⁴ஸி ஸ்வமஹிமவி ப⁴வாகுண்ட² வைகுண்ட²ரூபம் ॥ 1-5॥
பிறப்பற்றவரே ! நீர் செயலற்றவராயினும் , ஈக்ஷணை( பார்வை) என்று வேதம் கூறும் சங்கல்பத்தைச் செய்வதால் , இல்லாத ஒன்றைப்போல் உம்மிடம் லயித்திருந்த ப்ரகருதி கல்பத்தின் தொடக்கத்தில் வெளிப்படுகிறது . ( Micro to Macro )
அந்த ப்ரக்ருதியின் பரிசுத்தமான அம்சத்தை, விளக்க முடியாத சத்வப் பகுதியைக்கைக்கொண்டு , வைகுண்டவாசியே! தடையற்ற உம்முடைய யோக மாயையின் மகிமையால் லீலா விக்ரஹத்தைத் தரிக்கிறீர் .. வைகுண்டத்தில் உனக்கு என்னென்ன ஆளுமை, பெருமைகள் உள்ளதோ அப்படியே குருவாயூரில் எழுந்து அருள்கிறாய் !
Oh Birthless Guruvayoorappa! Even though you are not bound by any activities, are without any motive,Thou Even without any action or reason you activate Maya. Because of that only Maya manifests itself if nonexistent in the beginning of a new cycle of creation. Then, form an absolutely pure part which does not obstruct Thy glory of the Saatvic form. Thou O Lord of Vaikuntha! manifests itself as Maya or Prakruthi in full glory, with a Divine form.
ஸ்லோகம் -6 - திருமேனி அழகு
தத்தே ப்ரத்யக்³ரதா⁴ராத⁴ரலலிதகலாயாவலீகேலிகாரம்
லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ரு’திஜநத்³ரு’ஶாம் பூர்ணபுண்யாவதாரம் ।
லக்ஷ்மீநிஶ்ஶங்க லீலாநிலயநமம்ரு’தஸ்யன்த³ஸன்தோ³ஹமன்த:
ஸிஞ்சத்ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகா³ரநாத² ॥ 1-6॥
உன் திருமேனி புதியதாய் எழுந்த நீர் உண்ட மேகம் (தா⁴ராத⁴ர)போல் உள்ளது - கார்மேகம் போல் எங்கள் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி விடுகிறது - காயாம் பூவின் கொத்து போல் மென்மையாகவும் ஒளிமிக்க வண்ணத்தோடும் உன் திருமேனி விளங்குகிறது . அழகே வடிவெடுத்ததைப்போல் உன் திருமேனி இருக்கின்றது - புண்ணியம் செய்த சான்றோர்களுக்கு உன்னை தரிசிக்கும் போது அந்த புண்ணியங்களே வடிவம் எடுத்து வந்தது போல் உள்ளது -- மஹாலக்ஷ்மி எந்த வித சங்கடங்களும் இல்லாமல் விளையாடும் இடமாக இருக்கின்றது - அமுதம் நிறைந்து பொங்கி வழிந்து எங்கள் மனதை நனைத்துவிடுகிறது - அப்படிப்பட்ட உயர்ந்த அழகிய திருமேனியை நான் இப்பொழுது தரிசிக்கிறேன்
குருவாயூரப்பா ! நீருண்ட மேகம் போல் அழகியதும் காயாம் பூக்கோத்துப்போல் மனதிற்கு இனியதும் லாவண்ணியத்திற்கு உறைவிடமும் புண்ணியம் செய்தவர்களின் கண்களுக்கு புண்ணியமே பரிபூர்ணாவதாரமாக விளங்குவதும் லக்ஷ்மீ தேவிக்குக் கூச்சமின்றி லீலை புரிய இடமாய் இருப்பதும் தியானிப்பவர்களின் உள்ளத்தில் அமுதத்தை இடையறாது பெருக்குவதும் ஆகிய உமது திருமேனியை நான் இடை விடாது தியானிக்கிறேன்
Oh Guruvayurappa ! I Thy form excels in the beauty of the fresh rain bearing clouds, and of a beautiful bunch of blue kayam flowers. Thy form is an embodiment of beauty, in the eyes of the people who have done all their good deeds in complete incarnation. Thou are the abode where Goddess Lakshmi plays uninhibitedly becomes the source for pouring flow of nectarine Bliss which being the abode of beauty, is the ultimate haven of all true devotees; On that form of Thine I continuously meditate.
========================================================================
ஸ்லோகம் -7 - திருமேனி அழகு
கஷ்டா தே ஸ்ரு’ஷ்டிசேஷ்டா ப³ஹுதரப⁴வகே²தா³வஹா ஜீவபா⁴ஜாமித்யேவம் பூர்வமாலோசிதமஜித மயா நைவமத்³யாபி⁴ஜாநே ।
நோ சேஜ்ஜீவா: கத²ம் வா மது⁴ரதரமித³ம் த்வத்³வபுஶ்சித்³ரஸார்த்³ரம்
நேத்ரை: ஶ்ரோத்ரைஶ்ச பீத்வா பரமரஸஸுதா⁴ம்போ⁴தி⁴பூரே ரமேரன் ॥ 1-7॥
வெல்லப்படாதவரே ! ஜீவர்களுக்குப் பலவகையான தூக்கத்தை விளைவிக்கும் உம்முடைய சிருஷ்டி காரியம் இவ்வுலகில் கொடுமையானது (கஷ்டா தே ஸ்ரு’ஷ்டிசேஷ்டா) என்றே நான் நினைத்திருந்தேன்
ஜீவர்களை சிருஷ்ஷிட்டக்காவிட்டால் சிதானந்த ரஸம் நிறைந்த இந்த மதுரமான (மது⁴ரதரமித³ம்) உமது திருமேனியைக் கண்ணால் பருகியும் காதுகளால் துதியைக்கேட்டும் இந்த பரமானந்த அமுதக்கடலில் (பரமரஸஸுதா⁴ம்போ⁴தி⁴) யார் எப்படி இன்புறுவார்கள் ?
Oh Guruvayurappa ! I Thy form excels in the beauty of the fresh rain bearing clouds, and of a beautiful bunch of blue kayam flowers. Thy form is an embodiment of beauty, in the eyes of the people who have done all their good deeds in complete incarnation. Thou are the abode where Goddess Lakshmi plays uninhibitedly becomes the source for pouring flow of nectarine Bliss which being the abode of beauty, is the ultimate haven of all true devotees; On that form of Thine I continuously meditate.
O invincible Lord, Earlier, in my ignorance, I had thought that Thy activity of creation was unkind, as it causes a lot of sufferings to the living beings. but now I realize how wrong I was. if there were no creation, how could human beings revel in the ocean of supreme bliss enjoy the beauty and sweetness of Thy form which is Exceedingly delightful to hear and thus revel in the ocean of Supreme-Bliss-Consciousness.
=======================================================================================
ஸ்லோகம் -8 - திருமேனி அழகு
நம்ராணாம் ஸன்நித⁴த்தே ஸததமபி புரஸ்தைரநப்⁴யார்தி²தாநப்யர்தா²ன் காமாநஜஸ்ரம் விதரதி பரமாநன்த³ஸான்த்³ராம் க³திம் ச ।
இத்த²ம் நிஶ்ஶேஷலப்⁴யோ நிரவதி⁴கப²ல: பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்³ரம் தம் ஶக்ரவாடீத்³ருமமபி⁴லஷதி வ்யர்த²மர்தி²வ்ரஜோऽயம் ॥ 1-8॥
ஹரே ! வணங்குபவர்களின் முன் எப்பொழுதும் இருப்பதும் கேட்கத் தெரியாதவர்களுக்கும் அவர்கள் மனதில் இருக்கும் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அர்த்தங்களை எப்பொழுதும் கொடுப்பதும் , பரமானந்தம் நிறைந்த மோக்ஷத்தையும் அளிப்பதும் இப்படி எல்லோராலும் அடையக்கூடியதும் அளவில்லாத பலனைத் தருவதுமான கற்பக விருக்ஷம் நீர் ... அப்படி இருந்தும் பிராத்திப்பவர்களின் கூட்டம் இந்திர லோகத்தில் ஸ்வர்க்கத்தில் உள்ள அற்பமான கற்பகத்தை வீணில் விரும்புகிறது.!
*குருவாயூரப்பனும் கற்பகத்தருவும்*

*கற்பகத்தரு*
கேட்டதை கொடுக்கும் ... நினைப்பதைக் கொடுக்கும்*குருவாயூரப்பன்*
வேண்டதக்கது தருவான்வேண்டும் முழுதும் தருவான்*கற்பகத்தரு*
கண்ணில் தெரிவதில்லை இருக்கும் இடமும் புரிவதில்லை*குருவாயூரப்பன்*
கண்ணிலே அன்பு இருந்தால் கல்லிலும் தெரிவான் ...மனதிற்குள் இருப்பான்மதி மயங்கியோர் தேடும் இடத்தில் வெறும் கல்லாய் இருப்பான்*கற்பகத்தரு*
எல்லாம் இருக்கும் தேவர்களுக்கு கற்பகத்தரு தேவை இல்லை*குருவாயூரப்பன்*
எல்லாம் அறிந்தவர்க்கும் அவன் ஒருவனே தேவை ...*கற்பகத்தரு*
இல்லாத வஸ்துக்கு ஏங்கவோர் பலர்அடையாத கனவுக்கு அரச மரியாதை செய்வோர் பலர் ...*குருவாயூரப்பன்*
கண்ணெதிரில் தெரியும் கற்பகத்தருவை காண மறுப்போர் பலர்*Conclusion*
வானில் உள்ள கற்பகதருவுக்கு ஏங்கும் கஞ்சர்களும்மண்ணில் உள்ள கல்லாமையை காற்றோரும் ஒருங்கிணைந்த மூடர்களே !! 


Oh Guruvayurappa !yor are like parijatha tree [parijaata: a heavenly flower]. which is ready to shower on us all that we desire and granting freedom to wretched souls and giving moksha. But due to ignorance people pursue worldly belongings and sensual pleasuresand long for parijatha tree In Indhra’s Garden. when the Kalpaka Vriksha . [Kalpaka: a wish fulfilling tree]in the form of Lord Krishna is waiting to grant them salvation.
=======================================================================================
ஸ்லோகம் -9 - இறைவனின் மேன்மை
காருண்யாத்காமமந்யம் த³த³தி க²லு பரே ஸ்வாத்மத³ஸ்த்வம் விஶேஷாதை³ஶ்வர்யாதீ³ஶதேऽந்யே ஜக³தி பரஜநே ஸ்வாத்மநோऽபீஶ்வரஸ்த்வம் ।
த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத³மது⁴ரே சேதநா: ஸ்பீ²தபா⁴க்³யாஸ்த்வம் சாத்மாராம ஏவேத்யதுலகு³ணக³ணாதா⁴ர ஶௌரே நமஸ்தே ॥ 1-9॥
மற்ற தேவர்களுக்கு முக்தி அளிக்கும் சக்தி இல்லை - தன்னையே கொடு என்று கேட்டால் அப்படி தரக்கூடிய வீரியமும் அவர்களுக்கு இல்லை -- காரூண்யம் உண்டு அதனால் சிறிய பலன்கள் கிடைக்கலாம் - ஏ குருவாயூரப்பா நீ எப்படி பட்டவன் தெரியுமா - தன்னையே தரக்கூடியவன் ! விஷேசமானவன் ! தங்களைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள் தேவர்கள்! ஆனால் நீ உனக்கே ராஜாவாக இருக்கிறாய் . எல்லா கல்யாண குணங்களை கொண்டு நீ உன் பிரம ஆனந்தத்திலேயே திளைத்து நிற்கிறாய் - எல்லா மகான்களும் உன்னையே அமிர்தம் என்று பருக ஓடி வருகிறார்கள் - உனக்கு நமஸ்காரம் !!
மற்ற தெய்வங்கள் கருணையால் மற்றப்பொருள்களை கொடுக்கிறார்கள் . நீரோ ஆத்மாவையே ( உம்மையே) கொடுக்கிறீர்கள் .விசேஷமான ஐஸ்வரியத்தையும், அணிமாதி சக்திகளையும் கொண்டு உலகில் பிறரிடத்தில் ஈஸ்வரத் தன்மையைக் காட்டுபவர்கள் பிறர் , ஆத்மாவையும் ஆள்பவர் நீர் ,பாக்கியம் மிகுந்த ஜீவர்கள் உம்மை நாடி வருகையில் அடிதோறும் உத்தமமான ஆனந்தத்தை உம்மிடமிருந்து அடைகிறார்கள் . நீரோ பிறரிடம் எதையும் வேண்டாத ஆத்மா ராமர் , ஆனந்தமே உருக்கொண்டவர் . இப்படி ஒப்புவமை அற்ற கல்யாண குணங்களுக்கு உறைவிடமாகிய சௌரியே ! உமக்கு நமஸ்காரம் !!
O Lord Shri Krishna! While other gods out of compassion, fulfill the desires of their devotees. While other gods rule over the world with the powers invested in them, Thou are the very inner controller of all and rule over all beings and other gods as well as Thyself. Thou are ever satisfied in Thyself are the abode of incomparable attributes. Thou the ruler of Thyself .O Lord! Who does confer Bliss every moment to those enlightened souls who are very fortunate and Thou revel in Thyself alone.
ஆதி சங்கரர் தனது ஆனந்த லஹரீயில் இப்படி துதிக்கிறார்
மஹான்தம் விஶ்வாஸம் தவ சரண பங்கேருஹயுகே³
நிதா⁴ய அன்ய நைவ ஆஶ்ரிதம் இஹ மயா தை³வதம் உமே ।
ததா²பி த்வச்சேதோ யதி³ மயி ந ஜாயேத ஸத³யம்
நிரா லம்போ³ லம் போ³த³ரஜனநி கம் யாமி ஶரணம் ॥ 11॥
ஓ அன்னை உமையே! நினது திருவடித் தாமரைகளையே துணையென உறுதியுடன் ஏற்று, அதனால் வேறு தெய்வங்களை நான் எதற்கும் நாடியதில்லை! அப்படி இருந்தும் என்மீது நீ இரக்கம் காட்டாவிட்டால், (அந்த ‘நம்பிக்கை’ எனும்) ஊன்றுகோல் இல்லாதமுடவனாகிவிடும் நான், பிறகு வேறு யாரைச் சரணடைய முடியும்! ஓ பெருவயிற்றோன் தாயே! (நீ எனக்கும் தாயல்லவா!)
த்வத் அன்ய அஸ்மாதி³ச்சா²விஷய ப²லலாபே⁴ ந நியம:
த்வம் அஞ்ஞானாம் ² இச்சா அ தி⁴கம் அபி ஸமர்தா² விதரணே
இதி ப்ராஹு: ப்ராஞ்ச: கமல ப⁴வனாத்³யாஸ்த்வயி மனஸ் :
த்வத் ³ஆஸக்தம் நக்தம் தி³வம் உசிதம் மீஶானி குரு தத் ॥ 13॥
ஹே
மஹேஸ்வரி! உன்னைத் தவிர வேறு தெய்வங்களிடமிருந்து விரும்பிய பயனைப் பெறுவது உறுதியில்லை! நீயோ எளிய மக்களுக்கும், அவர்கள் ‘விருப்பத்தைவிடவும் அதிகமாகக் கொடுப்பதில் வல்லவள்’
என்று பிரம்மதேவன் முதலானோர் புகழ்கின்றனர். எனவே, எப்பொழுதும் உன்னிடமே எனது மனம் நாட்டம் கொண்டுள்ளது என்பதை நீயும் கவனித்து, எது சரியோ அதனைச் செய்வாயாக! (13)
சிவானந்த லஹரீயில் இப்படி சொல்கிறார்
நாலம்
வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா
நதிர்வா
நுதி:
பூஜா
வா ஸ்மரணம்
கதா²ஶ்ரவணமப்யாலோகநம் மாத்³ருʼஶாம்
।
ஸ்வாமிந்நஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந கிம் லப்⁴யதே
கா வா முக்திரித:
குதோ
ப⁴வதி சேத்
கிம்
ப்ரார்த²நீயம்
ததா³ ॥ 33॥
Sloka 33
பக்தியே முக்தி!!
==========================================================================
ஸ்லோகம் -10 - பலஸ்துதி
ஐஶ்வர்யம் ஶங்கராதீ³ஶ்வரவிநியமநம் விஶ்வதேஜோஹராணாம்
தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யஶோ நிஸ்ப்ரு’ஹைஶ்சோபகீ³தம் ।
அங்கா³ஸங்கா³ ஸதா³ ஶ்ரீரகி²லவித³ஸி ந க்வாபி தே ஸங்க³வார்தா
தத்³வா தாகா³ரவாஸிந் முரஹர ப⁴க³வச்ச²ப்³த³முக்²யாஶ்ரயோऽஸி ॥ 1-10॥
இதி ப்ரத²மத³ஶகம் ஸமாப்தம் ।
உன் ஆளுமை (ஐஶ்வர்யம்) எல்லோருடைய ஆளுமையை ஆள்கிறது ... உலகத்தில் உள்ள தேஜஸ் , வலிமை கொண்டவர்களை உன் ஆளுமை வென்று விடுகிறது . ஞானிகள் மட்டுமே உன்னை புரிந்து கொண்டுள்ளார்கள் .மஹாலக்ஷ்மி உன் திருமார்பில் உறைவதால் நீ எல்லாவற்றிலும் ஆளுமை கொண்டவனாக இருக்கிறாய் .... நீ தான் பகவான் என்பதற்கு பொருத்தமானவன் - முரனை அழித்தவனே உன் அருள் இன்றி வேறு எதுவும் வேண்டேன் !!
முரஹரா ! குருவாயூரில் கோவில் கொண்டவரே ! உம்மிடம் ஐஸ்வரியம் சங்கரர் முதலிய ஈஸ்வரர்களையும் ஈஸ்வரராக நியமிப்பது . உமது வீரியம் , எல்லோருடைய வீரியத்தையும் அபகரிக்கும் ஹரனுக்கு ஒப்பானது . விமலமான உமது கீர்த்தி ஆசையே இல்லாதவர்களாலும் பாடப்பட்டிருக்கிறது . ஸ்ரீதேவி எப்பொழுதும் உம்மை விட்டு ப் பிரியாதவளாய் இருக்கிறாள்
நீர் எல்லாம் அறிந்த ஞான ஸ்வரூபி . எவ்விடத்தும் பற்று என்ற வார்த்தைக்கே இடமில்லை . ஆகையால் பகவத் சப்தத்திற்கு முக்கியமான உறைவிடமாய் விளங்குகிறீர் !!!
O Lord Guruvaayurappa! By addressing the Lord as “Murahara " or “ the destroyer of Mura", Your supremacy is in controlling all other Gods beginning withSankara. all others who excel in valour in the whole Universe. Thy pure fame is sung by even the most desireless sages. Laxmi Devi always resides in Thy bosom. Thou are omniscient. Therefore, Lord of Guruvayoor! You are the fittest One for the title of “Bhagavan.”
=======================================================================================
தசகம் 1-10 Summary
ஸ்லோகம் 1 >>>>>>>>>>>> பூர்ணம், சத்வகுணம் , ஞானம் , பிரம்மம்
ஸ்லோகம் 2 >>>>>>>>>>>> மக்கள் குருவாயூரப்பனை பார்க்காமல் வேறு லௌகீக விஷயங்கள் ஈடுபாடுகிறார்கள் - மூடர்கள்
ஸ்லோகம் 3 >>>>>>>>>>>> பகவானின் திருமேனி அவன் ஸ்வரூபத்தையும் காட்டுகிறது .. மஹான்கள் அனுபவித்து மகிழ்கிறார்கள்
ஸ்லோகம் 4 >>>>>>>>>>>>கடலும் குருவாயூரப்பனும்
ஸ்லோகம் 5 >>>>>>>>>>>>எதிலும் எங்கும் ஆளுமை கொண்டவன்
ஸ்லோகம் 6 >>>>>>>>>>>> திருமேனி அழகு
ஸ்லோகம் 7 >>>>>>>>>>>> ஜீவர்களாக பிறப்பதே நாங்கள் வேண்டும் வரம்
ஸ்லோகம் 8 >>>>>>>>>>>> கற்பக விருக்ஷமும் குருவாயூரப்பனும்
ஸ்லோகம் 9 >>>>>>>>>>>> குருவாயூரப்பனின் மேன்மை Vs மற்ற தேவதைகளின் காரூண்யம்
ஸ்லோகம் 10 >>>>>>>>>>>> பலஸ்துதி
=========================================================================
Comments
ப்ரஸீத மாதர் ஜகதோ *கி* லஸ்ய
ப்ரஸீத விஷ்வேஸ்வரி பாஹி விஸ்வம்
த்வமேஸ்வரீ தேவி சரா சரஸ்ய
===
*ஞான*
*பிரசுனாம்பிகை*
*காளஹஸ்தி*💐💐💐
உள்ளம் எங்கும் உந்தன் எண்ணம்
எண்ணம் தனில் நீயிருப்பாய் இது திண்ணம்
உன் மேனி ஓர் வண்ணம் ...
கன்னம் பதுமராகம் இழைத்த கிண்ணம்
அன்னம் நடைபயிலும் அங்கே
ஜனனம் எடுக்க வேண்டும் உன் ஞானம் கண்டு மகிழ இங்கே !
ஆனந்தம் வேண்டுமென்றே உனை தேடி வந்தேன் ...
பரமானந்தம் என்றே வந்தாய் !!
காற்று வீசும் திசை தனில் பாய்மரக் கப்பல் செல்லும் ...
நீ வாசம் புரியும் இடமெல்லாம் இந்த பாய்மரக்கப்பல் பவனி வர வேண்டும் தாயே ! 👍💐💐💐
*கற்பகத்தரு*
கேட்டதை கொடுக்கும் ... நினைப்பதைக் கொடுக்கும்
*குருவாயூரப்பன்*
வேண்டதக்கது தருவான்
வேண்டும் முழுதும் தருவான்
*கற்பகத்தரு*
கண்ணில் தெரிவதில்லை இருக்கும் இடமும் புரிவதில்லை
*குருவாயூரப்பன்*
கண்ணிலே அன்பு இருந்தால் கல்லிலும் தெரிவான் ...
மனதிற்குள் இருப்பான்
மதி மயங்கியோர் தேடும் இடத்தில் வெறும் கல்லாய் இருப்பான்
*கற்பகத்தரு*
எல்லாம் இருக்கும் தேவர்களுக்கு கற்பகத்தரு தேவை இல்லை
*குருவாயூரப்பன்*
எல்லாம் அறிந்தவர்க்கும் அவன் ஒருவனே தேவை ...
*கற்பகத்தரு*
இல்லாத வஸ்துக்கு ஏங்கவோர் பலர்
அடையாத கனவுக்கு அரச மரியாதை செய்வோர் பலர் ...
*குருவாயூரப்பன்*
கண்ணெதிரில் தெரியும் கற்பகத்தருவை காண மறுப்போர் பலர்
*Conclusion*
வானில் உள்ள கற்பகதருவுக்கு ஏங்கும் கஞ்சர்களும்
மண்ணில் உள்ள கல்லாமையை காற்றோரும் ஒருங்கிணைந்த மூடர்களே !! 💐💐💐
🪷*This is a beautiful
Message..*
🪷Everyday Krishna would visit the garden and say to all the plants, “I love you”.
🪷The plants were very happy and responded saying “Krishna,
we love You too”.
🪷One day Krishna rushed quickly into the garden very alarmed.
🪷He went to the bamboo plant and the bamboo plant asked,
“Krishna, what´s wrong?”
🪷Krishna said “I have something to ask you, but it is very
difficult”.
🪷The bamboo said “Tell me: if I can, I will give it to you”.
🪷So Krishna said “I need your life. I need to cut you”.
🪷The bamboo thought for a while and then said “You don´t have any other choice. You don’t have any other way ?”
🪷Krishna said, “No, no other way”.
🪷And it said “OK” and gave himself up.
🪷So Krishna cut the bamboo n made holes in it, and each time, he carved the holes, the bamboo was crying in pain ...
🪷Krishna made a beautiful flute out of it n this flute was with him all the time.
🪷24 hours a day, it was with Krishna. Even the Gopis were jealous of the flute.
🪷They said, “Look, Krishna is our Lord, but yet we get to spend only some time with him.
🪷He wakes up with you, He sleeps with you, all the time you are with him”.
🪷Gopis asked the bamboo, “Tell us your secret. What secret
do you have, that the Lord treasures you so much ?”
🪷And the bamboo said “The secret is that, i gave myself up, and he did whatever was right for me, in the process i had
to undergo a lot of pain.
🪷And the Lord does whatever he wants with me, whenever he wants with me and however he wants with me. I have just become His instrument”.
🪷So this is complete surrender: where God can do whatever
He wants with you, whenever He wants, as He wants.
🪷Trust Him completely and have faith in Him and Always Know.. that you are in His Hands ... What can go wrong ??
This is Samarpan.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஸர்வ பூ⁴தா யதா³ தே³வீ பு⁴க்தி முக்திப்ரதா³யினீ।
த்வம் ஸ்துதா ஸ்துதயே கா வா ப⁴வந்து பரமோக்தய
=====
*அம்மா* ,
அதி மதுரம் உன் நாமம் ...
பதி மயங்கிப்போன நாமம்
விதி மாற்றும் நாமம் சதி செய்வோர்
கதி கலங்க வைக்கும் நாமம்
மதியில் மது சேர்க்கும் நாமம்
நதி போல் துயரங்கள் ஓட வைக்கும் நாமம்
எதில் இல்லை உன் நாமம் இது அது என்பது ஏட்டரியார் சொல்வது அன்றோ
பரந்த வனம் எனும் பிறவி தனில்
கற்பக விருக்ஷம் போல் இருப்பவளே ... சுரந்து வரும் பால் என சுவைப்பவளே
இருண்டு போன மனமதில் கலங்கரை போல் வந்தாய் ...
பெருங்கடலில் விழுந்த என்னை கரை சேர வைத்தே குறை இல்லா உன்னை நிறையாய் பாட வைத்தாய் 🙏🙏
அம்பாளுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் சொன்னேன். இப்போது உங்களுக்குத் தெரியாத ஒரு கதை சொல்கிறேன். ராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்தத் தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசீதாஸர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாஸ ராமாயணம் என்றெல்லாம் பல இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த விஷயம் இருக்கிறது.
அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈசுவரனே ஸீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம். ‘மரகதமணி வர்ணன்’ என்பார்கள். அம்பிகையை ‘மாதா மரகத சியாமா’ என்கிறார் காளிதாஸர். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் ‘மரகதச்சாயே’ என்று மீனாக்ஷியைப் பற்றிப் பாடுகிறார்.
சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரத்தைத் தாண்டி மூல காரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருத்தருக்குப் பத்தினியாகிப் பார்வதியாக இருக்கிறபோது பச்சையாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள். பரமேசுவரன் ஸீதா தேவியானார்.
பழைய காலத்தில் சின்ன வயசிலேயே குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்வார்கள். அப்போது ஹோமம் முதலிய கர்மங்களால் குழந்தைகளுக்கு அலுப்புத் தட்டிவிடப் போகிறதே என்று குஷிப்படுத்துவதற்காக விளையாடல், ஊஞ்சல், நலங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். ஊர்வலத்தின் போது கல்யாணப் பெண்ணுக்கு ஆண் வேஷமும், மாப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள். இந்த மாதிரி, லோகத்தில் ராக்ஷஸ பயத்தைப் போக்கி விளையாட்டாக ஊர்வலம் வருவதற்கு அம்பாள் ராமனாகவும், ஈசுவரன் ஸீதையாகவும் வேஷம் போட்டுக் கொண்டார்கள். இது ஒருத்தருக்கும் தெரியாது. ஸ்ரீராமனும் ஸீதையும்கூட இதை மறந்தே போனதுபோல் இருந்தார்கள். ஆனால் ரொம்பவும் உணர்ச்சி வேகம் ஏற்பட்டால் மனஸின் அடியிலே எங்கோ மறைந்திருப்பதுகூட வெளியிலே வெடித்துவிடுகிறது அல்லவா? இப்படி ஒரு கட்டம் ராமாயணத்தில் வருகிறது.
ஸ்ரீராமன் ஸீதையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணிவிடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிக்கொண்டு வந்துவிடுகிறது. “காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதால் பெண்டாட்டியை அழைத்துப் போக மறுக்கிறாரே, இவரும் ஒர் ஆண் பிள்ளையா” என்று ஸ்வாதினத்தில் அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள்.
“உம்மை மாப்பிளையாக வரித்த என் பிதா ஜனகர் நீர் புருஷ வேஷத்தில் வந்திருக்கிற ஒரு ஸ்திரீ (ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே!” என்று ராமனைப் பார்த்து சண்டை போடுகிறாள் ஸீதா தேவி. இது சாக்ஷாத் வால்மிகி ராமாயண வசனம்.
ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூக்ஷ்மமாக ஞாபகப்படுத்திவிட்டாள் ஸீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவிற்கு வந்தது. ராக்ஷஸ சம்ஹாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்ததும், அதற்கு அநுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக ஸீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.
இவரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய ராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாஸத்திலிருந்து இலங்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து அசோக வனத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாஸத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈஸ்வரனைக் கட்டிக் கொள்ள அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஒடி வந்தான். மகா சிவ பக்தனாதலால் அவனுக்குக் தன்னுடைய ஈசுவரன்தான் ஸீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப்போச்சு என்கிற கோபத்தில், இப்போது அவள் தலையீடு இருக்கக்கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு ஸீதையை தூக்கி வந்து அசோக வனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராக்ஷஸ அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் ராவணனுடைய அன்பு விகாரப்பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது துளி தெரிந்தது. ஆஞ்சநேயரைப் பார்த்தவுடனே ராவணன், ‘இவன் யார்? நந்தியம் பெருமானா?’ என்று நினைக்கிறான். ‘கிமேஷ பகவான் நந்தீ?’ என்பது வால்மீகி ராமாயண வசனம். ஸீதா ராமர்களின் பரமதாஸனாக இருக்கப்பட்ட ஹநுமாரைப் பார்த்ததும் கைலாஸத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தாஸனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல ராவணன் பேசுகிறான்.
ராம சரிதத்தை பாடாதவர்களே இருக்க முடியாது ...
ராம நாமத்தை ஜெபிக்காதவர்களும் யாரும் இருக்க முடியாது ...
இந்த புன்னகை ராமாயணம் வேறு விதமான ராமாயணம் ...
சோர்ந்து போகும் மனதிற்கு சுகம் தரம் புன்னகை ராமாயணம் ...
பட்டத்ரி நாராயணீயம் சொல்லும் போது குருவாயூரப்பன் ஆமோதித்ததை போல் இங்கும் ஓவ்வொரு பாடலுக்கும் ராமன் உண்மை என்று புன்னகை புரிந்து ஆமோதித்தானாம் ...
ஒரு இனம் புரியாத சுகம் நம்மை கட்டிப் போட வைக்கும் ... 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
வடுவூர் ராமனின் சிறப்பம்சமே அவரது அழகிய புன்னகையாகும்.
அந்தப் புன்னகையில் மிகவும் ஈடுபட்ட ஸ்ரீநிதி சுவாமிகள், ஒவ்வொரு நாளும் ராமனின் புன்னகைக்கான காரணத்தை வினவும் விதமாக ஒரு ஸ்லோகம் இயற்றி அதனை அவன் விண்ணப்பம் செய்து அதனைப் பதிவு செய்தும் வந்தார்.👌👌👌
இன்று முதல் ஓவ்வொரு பாடலாக பார்ப்போம் .
ராமனின் மந்தஸ்மிதம் நமக்கு எல்லா சௌக்கியங்களையும் தரட்டும் ... 🙂🙂🙂
1/317
ஸ்ரீமத் வேங்கட சேஷ தேசிக மணேர் அஸ்மத்
குரோர் பாரதீம் அன்யாத்ருக்ஷ மதீய திவ்ய
ஸுஷமா ஸேவேதி பத்யா க்ருதிம் அந்தர் பாவயதோ
பஹிர் யத் அபவத் மந்த ஸ்மிதம் தத் ப்ரபோ
மஹ்யம் ஸம்பதம் ஆதனோது ஸததம் மஹ்யா: ஸுதாயா: பதே
🙂🙂🙂
அவரை நமஸ்கரித்து முதல் பாடலை ஆரம்பிக்கிறார் ...
பூமாதேவியாகிய சீதையை மணந்த அழகிய மண வாளனே ...
என் குரு இயற்றிய பாடல் ஒன்றில் ஒரு பக்தன் தினம் உன் கோயில் வந்து என் பாவங்களை போக்கி விடு என்று உன்னை வேண்டுகிறான் ...
ஒரு முறை உன்னை தரிசித்தாலே அனைத்துப்
பாவங்களும் போய் விடுமே ...
இதை புரிந்து கொள்ளாமல் தினம் தினம் உன்னிடம் வந்து என் பாவங்களை போக்கு என்கிறான் ..
ஏ ராமா ... அவன் அறியாமையைப் பார்த்து உனக்குள் புன்னகைத்துக் கொண்டாயே அன்று அதை எனக்காக இன்று வெளிப்படையாக காட்டுகிறாயோ ?
ராமனின் புன்னகை நமக்கு எல்லா சம்பத்தையும் தரட்டும் . 😊
*பெரு*
*நலமாமுலையம்மை*
*திருவிடைமருதூர்*
ஆதா⁴ர பூ⁴தா ஜக³தஸ்த்வமேகா
மஹீஸ்வரூபேண யத:
ஸ்தி²தாஸி
அபாம் ஸ்வரூப
ஸ்தி²தயா த்வயைத
தா³ப்யாயதே
க்ருத்ஸ்னமலனக்⁴ய வீர்யே ॥
பலப்பல நாமங்கள் சொல்லி அழைத்தும் கேளாத செவிகள் கொண்டாயோ என்றே நினைத்திருந்தேன் ...
கல் தடுத்து விழுந்த வேளையிலே *அம்மா* என்றே குரல் கொடுத்தேன் ..
சொன்ன நாமங்கள் இருக்கும் கோடிக்கும் மேல்
அம்மாவென்றே சொன்னபின் என் தலை இருந்ததோ உன் மடியில் ...
என்ன விந்தை அம்மா இது .... ! என்றேன் ஏதும் அறியாமல்
*அ* என்பது தமிழில் முதல் எழுத்து ...
அழுத்தி கூப்பிட்டாலும் (*ம்*) தளர்த்தி அழைத்தாலும் (மா) அம்மா உனக்கு நான் ஒருத்தியே என்றாய்
ஆயிரம் கோடி நாமங்கள் தாரா இன்பம் அதை தந்துவிடும் *அம்மா* என்ற ஒரே நாமம் ..
தானாக ஆட்டுவதும் இந்த ஓர் நாமம் தான்
தாலாட்டு பாடுவதும் இந்த ஒரு நாமம் தான் ..
போராடுவோர் மத்தியிலே புண்ணுக்கு மருந்து போடுவதும் இந்த ஓர் நாமம் தான்
எள்ளி நகை ஆடுவோர் முன்னே எரிமலை ஆவதும் இந்த ஓர் நாமம் தான் !
இதற்கு இல்லை தடை ..
இதையும் எதிர்ப்போர் கடை காண்போர் இல்லையே !!💐💐💐