ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 36 -கிருஷ்ணாவதாரத்தின் காரணம்
सान्द्रानन्दतनो हरे ननु पुरा दैवासुरे सङ्गरे त्वत्कृत्ता अपि कर्मशेषवशतो ये ते न याता गतिम् । तेषां भूतलजन्मनां दितिभुवां भारेण दूरार्दिता भूमि: प्राप विरिञ्चमाश्रितपदं देवै: पुरैवागतै: ॥१॥ ஸாந்த்₃ராநந்த₃தநோ ஹரே நநு புரா தை₃வாஸுரே ஸங்க₃ரே த்வத்க்ருத்தா அபி கர்மஶேஷவஶதோ யே தே ந யாதா க₃திம் | தேஷாம் பூ₄தலஜந்மநாம் தி₃திபு₄வாம் பா₄ரேண தூ₃ரார்தி₃தா பூ₄மி: ப்ராப விரிஞ்சமாஶ்ரிதபத₃ம் தே₃வை: புரைவாக₃தை: || 1|| 1. ஆனந்த ரூபமானவனே! முன்பு தேவாசுர யுத்தத்தின் போது பல அசுரர்களைக் கொன்றாய். பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய அசுரர்களாகப் பிறந்தார்கள். அவர்களின் பாரத்தால் பூமாதேவி துன்பமடைந்து, தேவர்களுடன் பிரம்மனை அண்டினாள். हा हा दुर्जनभूरिभारमथितां पाथोनिधौ पातुका- मेतां पालय हन्त मे विवशतां सम्पृच्छ देवानिमान् । इत्यादिप्रचुरप्रलापविवशामालोक्य धाता महीं देवानां वदनानि वीक्ष्य परितो दध्यौ भवन्तं हरे ॥२॥ ஹா ஹா து₃ர்ஜநபூ₄ரிபா₄ரமதி₂தாம் பாதோ₂நிதௌ₄ பாதுகா- மேதாம் பாலய ஹந்த மே விவஶதாம் ஸம்ப்ருச்ச₂ தே₃வாநிமாந் | இத்யாதி₃ப்ரசுரப்ரலாபவிவஶாமாலோக்ய தா₄தா மஹீம் தே₃வாநாம் வத₃நா...