ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 40 பூதனை மோக்ஷம்
तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम्।
समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥
தத₃நு நந்த₃மமந்த₃ஶுபா₄ஸ்பத₃ம் ந்ருபபுரீம் கரதா₃நக்ருதே க₃தம்|
ஸமவலோக்ய ஜகா₃த₃ ப₄வத்பிதா விதி₃தகம்ஸஸஹாயஜநோத்₃யம: || 1||
1. நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை வசுதேவர் நந்தகோபனிடம் கூறினார்.
अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् ।
इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥
அயி ஸகே₂ தவ பா₃லகஜந்ம மாம் ஸுக₂யதே(அ)த்₃ய நிஜாத்மஜஜந்மவத் |
இதி ப₄வத்பித்ருதாம் வ்ரஜநாயகே ஸமதி₄ரோப்ய ஶஶம்ஸ தமாத₃ராத் || 2||
2. “உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வசுதேவர் அன்புடன் நந்தகோபனிடம் கூறினார்.
इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्नि ततो लघु गम्यताम् ।
इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥
இஹ ச ஸந்த்யநிமித்தஶதாநி தே கடகஸீம்நி ததோ லகு₄ க₃ம்யதாம் |
இதி ச தத்₃வசஸா வ்ரஜநாயகோ ப₄வத₃பாயபி₄யா த்₃ருதமாயயௌ || 3||
3. மேலும், “சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்வாய்” என்று கூறினார். நந்தகோபனும் உனக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.
अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना ।
तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥
அவஸரே க₂லு தத்ர ச காசந வ்ரஜபதே₃ மது₄ராக்ருதிரங்க₃நா |
தரலஷட்பத₃லாலிதகுந்தலா கபடபோதக தே நிகடம் க₃தா || 4||
4. கபடக் குழந்தை வேடம் பூண்டவனே! கோகுலத்தில், அழகிய பெண் ஒருத்தி, வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடன் உன் அருகே வந்தாள்.
सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना ।
व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥
ஸபதி₃ ஸா ஹ்ருதபா₃லகசேதநா நிஶிசராந்வயஜா கில பூதநா |
வ்ரஜவதூ₄ஷ்விஹ கேயமிதி க்ஷணம் விம்ருஶதீஷு ப₄வந்தமுபாத₃தே₃ || 5||
5. எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். அவளும் உன்னைக் கையில் எடுத்தாள்.
ललितभावविलासहृतात्मभिर्युवतिभि: प्रतिरोद्धुमपारिता ।
स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने॥६॥
லலிதபா₄வவிலாஸஹ்ருதாத்மபி₄ர்யுவதிபி₄: ப்ரதிரோத்₃து₄மபாரிதா |
ஸ்தநமஸௌ ப₄வநாந்தநிஷேது₃ஷீ ப்ரத₃து₃ஷீ ப₄வதே கபடாத்மநே || 6||
6. தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். வீட்டின் உள்ளே அமர்ந்து, உன்னை மார்போடு அணைத்து, உனக்குப் பாலூட்டினாள்.
समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषित: ।
महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥
ஸமதி₄ருஹ்ய தத₃ங்கமஶங்கிதஸ்த்வமத₂ பா₃லகலோபநரோஷித: |
மஹதி₃வாம்ரப₂லம் குசமண்ட₃லம் ப்ரதிசுசூஷித₂ து₃ர்விஷதூ₃ஷிதம் || 7||
7. குழந்தைகளைக் கொன்றதால் கோபமடைந்த நீ, பயமின்றி அவள் மடி மீது ஏறி விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினாய்.
असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना ।
निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥
அஸுபி₄ரேவ ஸமம் த₄யதி த்வயி ஸ்தநமஸௌ ஸ்தநிதோபமநிஸ்வநா |
நிரபதத்₃ப₄யதா₃யி நிஜம் வபு: ப்ரதிக₃தா ப்ரவிஸார்ய பு₄ஜாவுபௌ₄ || 8||
8. பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தாய். அவள், இடி போலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன் இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு கீழே விழுந்தாள்.
भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे ।
व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥
ப₄யத₃கோ₄ஷணபீ₄ஷணவிக்₃ரஹஶ்ரவணத₃ர்ஶநமோஹிதவல்லவே |
வ்ரஜபதே₃ தது₃ர:ஸ்த₂லகே₂லநம் நநு ப₄வந்தமக்₃ருஹ்ணத கோ₃பிகா: || 9||
9. அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த உன்னைக் கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள்.
भुवनमङ्गलनामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षण: ।
त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥
பு₄வநமங்க₃லநாமபி₄ரேவ தே யுவதிபி₄ர்ப₃ஹுதா₄ க்ருதரக்ஷண: |
த்வமயி வாதநிகேதநநாத₂ மாமக₃த₃யந் குரு தாவகஸேவகம் || 10||
10. மங்கலங்களைக் கொடுக்கும் உன் நாமங்களைக் கொண்டே அவர்கள் உனக்கு ரட்சை செய்தார்கள். குருவாயூரப்பா! நீ என் நோய்களைப் போக்கி, உன் பக்தனாக ஏற்க வேண்டும்.



Comments
பார்க்கும் மழலை எல்லாம் தன் வயிற்றில் பூத்த குவலைகள் என்றே அந்த பெண் நினைத்தாள் ...
அங்கிங்கே கேட்கும் மழலை ஒலியில் ஓம்கார நாதம் கேட்டு மகிழ்ந்தான் தந்தை
வரும் சிவனடியாருக்கு வயிறு முட்ட அன்னம் இட்டாள் அந்த அன்னம் ....
தேடி கூட்டி வர அவனோ தேவாரம் பாடி நின்றான் ....
எவ்வளவு சிவனடியார்கள் உணவு அருந்தி இருப்பார்கள் ...
ஒருவரது ஆசிர்வாதம் கூடவா பலிக்காது என்று கொஞ்சமும் எண்ண வில்லை அந்த தம்பதிகள் ...
பலனை எதிர்பார்த்து செய்யும் தானம் அல்லவே அவர்களுடையது ...
பரமன் கரம் பிடித்தாள் உலகம் ஈன்ற உமை ....
குழந்தை பாக்கியம் அந்த தம்பதிகளுக்கு தரவேண்டி ....
பரமன் கரம் வழக்கத்திற்கு மாறாய் மிகவும் ஜில் என்று இருந்தது ...
என்ன பிரபோ ... ஏன் இந்த அச்சம் யோசனை நடுக்கம் ?
தந்து விடுவேன் வரம் அதை ... பிறகு பெற்றுக்கொள்வது சரியோ ? ...
உமைக்கு புரியவில்லை ...
ஊமையாக இருந்தாள் ஓர் நிமிடம் ...
ஈசன் நடத்தும் லீலைகள் ஈசன் இன்றி வேறு யார் அறிவார் ... ?
அன்று ஓர் சோதனை ...
வேதனை துடைக்கும் வேத நாயகன் தன் மனம் தனை கல்லாக்கிக் கொண்டான் ...
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம் அவன் ஏற்பானோ ?
நட்ட கல்லும் பேசுமோ? ...
நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
தன் மனதை கல்லாக்கி சிறுத் தொண்டர் மனம் தனை உருக வைத்தான் ஈசன்
இறை தந்தான் மழலை
சீராட்டினார்கள் தம்பதிகள் ...
சீராளன் எனும் பெயர் வைத்தே
சோதனை இரவு நேரமதில் கதவை தட்டியது ...
நாள் முழுவதும் கிடைக்காத சிவனடியார் ஒருவர் வீடு தேடி வந்தார் ...
வந்தவர் கண்டார் சீராளனை...
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் சுமந்து வந்தே நமஸ்கரித்தான் சீராளன் ..
தன்னையும் மீறி அந்த சிவனடியார் சொன்னார் *ஆயுஷ்மான் பவ !*
பசிக்கிறது வேண்டும் எனக்கு வேறு உணவு ...
காய்கறிகள் எனக்கு கசக்கும் ...
பச்சடி பாயாசங்கள் என்னை வதைக்கும் ...
வேண்டும் பிள்ளை கறி ... என்றான் பிள்ளை வரம் தந்தவன் ...
முதல் பிள்ளை கறி உங்களுக்கு முக்தி தரட்டும் ...
கண்ணீர் சிந்தாமல் ரத்தம் தரையில் படராமல் அறுத்து சமையல் செய்ய வேண்டும் ...
ஏலக்காயில் எண்ணிக்கை தெரியக்கூடாது
முந்திரியில் வறுத்த சிவப்பு குடி கொள்ள வேண்டும் ...
உப்பு சற்றே கம்மி ...
மிளகாய் தூக்கல் ...
நெய் ஓட வேண்டும் அங்கங்கே
அதன் ஓட்டத்தை முற்றிய திராட்சை தடை செய்ய வேண்டும் ...
வாயடைத்து போனார்கள் தம்பதிகள் வாய்க்குள் நம சிவாய தடை இன்றி சுழன்றது ....
சீராளன் மனம் மகிழ்ந்து தன்னை வெட்ட கெஞ்சினான் ...
தந்தையோ தாயோ தவிப்பின்றி வெட்ட முன் வந்தனர் ...
தாய் இரு பாதம் பற்ற தந்தை அறுத்தான் தன் பிள்ளை பந்தத்தை ...
குருதி விழாமல் பாத்திரங்கள் ஏந்தின ...
வெட்டும் முன் சீராளன் கன்னங்களில் முத்தமிட ஆசை இருவருக்கும் ...
எச்சில் பட்டு படைக்கும் பிரசாதம் கெட்டு விடுமே என்றே உதடுகளை வற்ற வைத்தனர் தம்பதிகள் !
செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தவன்
அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தவன்
திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் திருநீற்றுப் பொட்டாக நெற்றியிலிட்டு கொண்டிருந்தவன்.
செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்திருந்தவன்
இடக்கையிற் சூலம் ஏந்தியவன் உணவு அருந்த அமர்ந்தான் ...
தலைக் கறி முதலில் போடு என்றான் ...
தலையை மட்டும் சிதைக்காத தம்பதிகள் கறி சமைத்து இட்டனர் முதல் உணவாய் ...
சரி உன் மகனை கூப்பிடு
அவனும் என்னுடன் சேர்ந்து உணவருந்தட்டும் என்றான் பித்தன் என்றே பேர் எடுத்தவன் ....
சுவாமி அவன் உங்கள் இலையில் பதார்த்தமாக இருக்கிறான்
வருவது எங்கனம் என்றாள் தாய் ...
கூப்பிடு வருவான் என்றான் கூப்பிடும் குரலுக்கு ஓடி வருபவன்
தந்தை துக்கம் மீறி அழைத்தான் சீராளா...
வந்த சிவனடியார் உணவு அருந்த வேண்டும் ஓடி வா என்றே ...
கதவு தட்டும் சப்தம் ... மகன் நின்றிருந்தான் அழகு இன்னும் கூடியே ... ...
பிரிந்தவர் சேர அங்கே நிசப்தம் குடி கொண்டது ...
அந்த நிசப்தத்தில் மறைந்தான் சப்தம் தந்தவன்
எதை நாம் பெரிது என்று நினைத்து பாராட்டுகிறோமோ அதனிலும் பெரியதாய் அவன் தருவான் அவன் தந்ததே எல்லாம் என்றே நினைப்போர்க்கு .... 🙏
Born in the quiet cradle of the Himalayas,
You flow toward the land where Rama’s name resounds,
Rocking Ayodhya in a mother’s lullaby—
River of grace, O Maa Sarayu.
Upon your sacred banks fell Rama’s footsteps,
In your waters Sita’s devotion blossomed,
Lakshmana’s vigil turned to the living stream—
Are you not the pathway of pure bhakti?
You carry in silence the tears of sages,
The dreams of devotees are blessed by a single glance,
Bearing all with gentle strength—
A current made of compassion.
Sins dissolve within your waters,
Fears are burnt away by your waves;
Stand once upon your shore,
And the heart itself becomes Ayodhya.
Though your depths seem calm and gentle,
Your flow is rich with meaning;
Quiet in movement, yet mighty in spirit,
You rule the soul without command.
🌼 Rama’s name is your eternal sound,
Dharma your chosen direction,
Moksha your destined end—
Flow forever in our hearts,
O Maa Sarayu. 🌼
இமயத்தின் மௌன மடியில் பிறந்து,
இராம நாமம் ஒலிக்கும் திசை நோக்கி
அயோத்தியைத் தாலாட்டி ஓடும்
அருள் நதியே —
மா சரயுவே!
ராமன் காலடி பட்ட புனித கரை,
சீதையின் நெஞ்சம் துளிர்த்த நதி,
லக்ஷ்மணன் காத்த அன்பின் ஓடை,
பக்தியின் பாதை நீயல்லவா?
தவம் செய்த முனிவர் கண்ணீரையும்
தரிசனம் கண்ட பக்தர் கனவையும்
மெளனமாய் தாங்கி செல்லும்
கருணையின் ஓடமே!
உன் நீரில் சிந்திய பாவங்கள் கரைந்து,
உன் அலைகளில் பயம் கருகி,
உன் கரையில் நின்றால் கூட
உள்ளம் அயோத்தியாகும்.
ஆழமில்லை என நினைத்தாலும்
அர்த்தம் நிறைந்த ஓட்டம் உனக்கு,
அமைதியாய் ஓடினாலும்
ஆன்மாவை ஆளும் சக்தி உனக்கு.
🌼 ராம நாமம் உன் ஓசை,
தர்மமே உன் திசை,
மோக்ஷமே உன் முடிவு—
எங்கள் உள்ளங்களில் என்றும் ஓடு,
மா சரயுவே! 🌼💐
இமயத்தின் மௌன மடியில் பிறந்து,
இராம நாமம் ஒலிக்கும் திசை நோக்கி
அயோத்தியைத் தாலாட்டி ஓடும்
அருள் நதியே —
மா சரயுவே!
ராமன் காலடி பட்ட புனித கரை,
சீதையின் நெஞ்சம் துளிர்த்த நதி,
லக்ஷ்மணன் காத்த அன்பின் ஓடை,
பக்தியின் பாதை நீயல்லவா?
தவம் செய்த முனிவர் கண்ணீரையும்
தரிசனம் கண்ட பக்தர் கனவையும்
மெளனமாய் தாங்கி செல்லும்
கருணையின் ஓடமே!
உன் நீரில் சிந்திய பாவங்கள் கரைந்து,
உன் அலைகளில் பயம் கருகி,
உன் கரையில் நின்றால் கூட
உள்ளம் அயோத்தியாகும்.
ஆழமில்லை என நினைத்தாலும்
அர்த்தம் நிறைந்த ஓட்டம் உனக்கு,
அமைதியாய் ஓடினாலும்
ஆன்மாவை ஆளும் சக்தி உனக்கு.
🌼 ராம நாமம் உன் ஓசை,
தர்மமே உன் திசை,
மோக்ஷமே உன் முடிவு—
எங்கள் உள்ளங்களில் என்றும் ஓடு,
மா சரயுவே! 🌼💐
மேற்குத் தொடர்ச்சி மலை மடியில்
மெளனத் தாலாட்டில் பிறந்தவளே,
தலைக்காவேரி எனும் தாயின் கருவறையில்
தெய்வநதியாய் உருவானவளே—
மா காவேரியே, உனக்கு நமஸ்காரம்.
பாறைகளைப் பணிவுடன் தழுவி,
பசுமையைப் பால் போலப் பொழிந்து,
விதையின் கனவுக்கு உயிர் கொடுத்து
விவசாயியின் வியர்வையை துடைப்பவளே.
ஸ்ரீரங்கம் உன் மார்பில் மாலை போல,
திருச்சி உன் நெஞ்சில் தீபம் போல,
தஞ்சை உன் அடியில் தங்கம் விளைய—
சோழரின் சுவாசமாய் ஓடினவளே.
வறட்சியில் கூட வாக்கு தவறாதவள்,
வெள்ளத்தில் கூட கருணை மறவாதவள்,
கண்ணீரை கனியாக மாற்றி
கருணையை பயிராக்கும் தாயே.
பெண்மை உன் ஓட்டம்,
பொறுமை உன் கரை,
புனிதம் உன் நுரை—
பாரதத்தின் அன்னமே, மா காவேரியே!
🌼 அன்னபூரணி நீ,
அறத்தின் ஆறு நீ,
அருளின் ஓடை நீ—
என்றும் ஓடிக் கொண்டே இரு,
எங்கள் உயிரோட்டமே… 🌼
Born in the cradle of the Western Ghats,
Hummed into life by the hush of hills,
From Talakaveri, the mother’s womb,
You rise— a river, a divinity.
O Maa Kaveri, I bow to you.
You embrace the rocks with quiet grace,
Pouring green like milk upon the land,
Breathing life into a seed’s dream,
Wiping the farmer’s tired brow.
Srirangam rests like a garland on your breast,
Trichy glows like a lamp upon your heart,
Thanjavur blooms as gold at your feet—
You flow as the very breath of the Cholas.
Even in drought, you never break your promise,
Even in floods, compassion leaves you not;
You turn tears into harvest,
And mercy into grain.
Womanhood is your flow,
Patience your banks,
Purity your foam—
Mother of the land, Maa Kaveri!
🌼 You are Annapurna,
The river of righteousness,
The stream of grace—
Flow on forever,
Pulse of our lives. 🌼
நெருப்பில் ஒளியும் நீரோ நீ ?
நித்தம் தவம் செய்யும் உமையோ நீ ...
நேரில் வரும் ரதமோ நீ
நெஞ்சில் ஒளி வீசும் கதிரோ நீ
நேற்று இன்று நாளை என்றும் முடிவில்லா முதலோ நீ
முத்தமிழில் கவி பாடும் கடல் முத்தோ நீ ... மூகர் வழி வந்த முக்கனி சுவையோ நீ
யார் என்றே அறியேன் ... யாதும் அறிய வைத்தே ஆதவனாய் மிளிர செய்தாய் ...
நடமாடும் தெய்வம் நீ ..
நடப்பதெல்லாம் உன் செயல் என்றால் தர்மம் ஓங்கச் செய்வாய் ...
தரணி தனில் தெய்வம் தனை தவழ வைப்பாய் ..
தீபம் ஏற்றி இருள் அகலச் செய்வாய் ...
தீவினைகள் எல்லாம் கல்லறையில் உறங்க செய்வாய் !!!
காஞ்சி மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில். இந்த கோவிலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் (OMR) - செங்கல்பட்டு சாலையில் உள்ளது வட திருவானைக்கா என அழைக்கப்படும் செம்பாக்கம். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில் (ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் அருகில்) ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில் 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை
இந்த திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும் (இரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள் நவரத்தினங்கள் நமது உடம்பிலுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து சாற்றப்பட்டு பலஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் ஏழரை ஆண்டுகள் உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, ஸஸ்த்திரம என்ற முறையில் அமையப்பெற்றவளாவாள்.
திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையாகியுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌத்தரய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள்.
மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 முழுபுடவை அணிவிக்கப்படும் என்று பீடத்தின் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார். தினசரி பாதபூஜை உண்டு.
தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஸ்ரீசக்ரசபை என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மூம்மூர்த்தி சொரூபிணி.
ஒளஷத லலிதாவிற்கு நந்தவன புஷ்பங்கள் மட்டுமே சாற்றப்படுகிறது. பச்சை கற்பூர ஆரத்தி மட்டுமே. திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும். பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், மூலிகை பிரசாதம் வழங்கப்படும்
ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி
கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம். ஸ்ரீபாலா - அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள் வல்லவர்கெல்லாம் வல்லலளாய் ஆட்சி செய்வாள், அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் சித்தர் கருவூரார்.
சித்தமெல்லாம் சிவ மயமாய் திளைத்திருந்த ஆதி சக்தியின் அருளும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகையை ஆதிசக்தியின் அம்சம் தான் ஸ்ரீ பாலா தெய்வம் அவளையே போற்றி அகத்தியர், போகர், திருமூலர்,கெங்கனார், கரூரார் போன்ற சித்தர்கள் வணங்கி பூஜித்தனர். இந்த அம்சம் ஒரு சின்னஞ்சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சரியமான ஒன்று. நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில் வாலை வாலாம்பிகை என்றும் சித்தாந்தம் வணங்குகிறது.
வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம்.
* ஆடி : மகா வாராகி ( ஆஷாட) நவராத்திரி உற்சவம் (ஆடி அமாவாசை திதி முதல் தசமி திதி) வரை
* புரட்டாசி : ஸ்ரீ சாரதா நவராத்திரி உற்சவம் (புரட்டாசி அமாவாசை திதி முதல் தசமி திதி வரை) விஜயதசமி அன்று காலை ஏககால இலட்சாரச்சனை
* தை : ஸ்ரீ இராஜ மாதங்கி நவராத்திரி உற்சவம் (தை அமாவாசை முதல் தசமி திதி வரை)
* பங்குனி : ஸ்ரீ லலிதா மஹா (வசந்த) நவராத்திரி மகோற்சவம்.
ஸ்ரீ வித்யா நவாரண மகாயாகம், திருக்கல்யாணம், ஸ்ரீ லலிதா பட்டாபிஷேகம், பண்டாசூரசம்ஹாரம், அற்புத திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி.
* மஹா சிவராத்திரி மகோற்சவம் ( Massi_4 Kala SiavaLinga Pooja)
பிரதி மாதம் பௌர்ணமியில், மாலை மகா அபிஷேக சர்வ அலங்காரம், பாலா உற்சவர் ஊஞ்சல் சேவை, நவஆவரண பூஜை, மூலிகை அம்பாளுக்கு 27 ஆர்த்தி திபாராதனை.
காலை 8 மணி முதல் 1 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரை.
அமைவிடம்:
திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.
ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,
திருப்போரூர் (OMR)- செங்கல்பட்டு சாலை,
செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா
காஞ்சிபுரம் மாவட்டம்-603 108.
தொடர்புக்கு: 9789921151 , 9445359228.
உதிக்கும் கதிரவன் சுட்டெரிக்கும் தீச் சுடர் உவமை இல்லா தீபங்கள்
மண்ணுக்குள் சிரிக்கும் வையிரங்கள் உன்னிடம் தானே ஒளி பெற்றன ...
ஓடும் நதிகள் போல் இரைச்சல் இடும் மானிடம் உன்னிடம் அன்றோ சரண் புகும்
நடமாடி நடமாடி மண்ணுக்கு புனிதம் தந்தாய் ...
தேனிலும் இனிய குரல் தந்தே வாணீயின் கச்சபியை மூட வைத்தாய் ...
காமாக்ஷியை கண் எதிரே காண்பித்தாய் ..
கருணைக்கு ஓர் உருவம் தந்தே ஈசனுக்கே பாடம் சொன்ன சுவாமி நாதனுமாய் ஆனாய் ...
பூத உடல் மறைந்தும் உயிர் வாழும் அதிசயமே... !!
பலமுறை அழைக்கின்றோம் ...
மீண்டும் ஒரு முறை இம்மண்ணில் பிறவாயோ ...
கள் உண்ணும் கயவர்கள் கதை முடிப்பாயோ !!💐💐