பச்சைப்புடவைக்காரி -- மூன்று திருடர்கள் -1 (130)
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் மூன்று திருடர்கள் -1 (130) ரவி இறைவனைத்தான் எல்லோரும் கள்வன் என்று சொல்வார்கள் .. மனதை திருடிக்கொள்பவன் .. கண்ணனை திருடன் இன்றும் சொல்லி வருபவர்கள் ஏராளம் .. நாவுக்கரசர் - என் மனமதை கொள்ளை கொண்டவனே என்று ஈசனை பாடுகிறார் ... இங்கே நான் சொல்ல வருவது உண்மையில் பொருளைத்திருடி அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இறைவனுக்கு கோயில் கட்டி அதனால் அடிபட்டு, அவமானப்பட்டு இறுதியில் இறைவனால் ஆட்க்கொள்ளப்பட்டு மகான்களாக ஆனவர்கள் .... எண்ணங்கங்கள் நல்லெண்ணம் ஆனாலும் செய்யும் முறையிலும் தர்மம் நியாயம் வேண்டும். நான் சொல்லப்போகும் மூவர்களும் இந்த வரைக்கோட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் . முதலில் நாம் இன்று பார்க்கப்போவது பத்ராச்சலம் ராமதாஸ் .. அம்மா --- பாக்கியம் செய்தேன் சொல்லுங்கள் தாயே !! சிறுவயது முதலே, ராம பக்தியில் ஆழ்ந்தவர் கோபன்னா. அதன் விளைவாக தான தருமங்கள் செய்வதிலும் தாராளமானவராக விளங்கினார் இவர். ஒருசமயம் பத்ராசலம் என்ற இவர் வாழ்ந்த தலத்தில் பாகால டாமக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அச்சமயம் பாகா...