Posts

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 26.கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா- பதிவு 33

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  33 26  கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா 26 कर्पूरवीटिकामोदसमाकर्षिदिगन्तरा - கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா --(1 அவள் இருக்கும் இடத்திற்கு வெகுதூரம் வரை கம்மென்று மணம் வீசுகிறதே அது என்னவா ?  வேறு ஒன்றுமில்லை. அவள் மெல்லும் வெற்றிலை தாம்பூலம் அதில் இருந்து வீசும் சுகந்தம்.👍👍👍 கற்பூர  = கற்பூரம்  வீடிகா  = வெற்றிலையுடன் மெல்லக்கூடிய பாக்கு மற்றும் இதர நறுமணப் பொருட்கள்    மோத  = நறுமணம்  சமாகர்ஷி  = பரவலாக மணம் கம்ழதல்  திகந்தரா = பிரபஞ்சம்    = நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும் சுகந்தம் பரப்புபவள்🪔 அ ம்பாள் போடும் தாம்பூலம் அதில் இருந்து சொட்டும் தேன் அதை பருக  மொய்க்கும் வண்டுகள் போல தேவர்கள் ரிஷிகள், கிங்காரர்கள் பல பல மகான்கள் புத்தி மான்கள் இப்படி ஒரு பெருங்கூட்டமே காத்திருக்க  அவள் என்ன செய்தாள் தெரியுமா ?  தன்னை கூப்பிடாத ஒருவனை தேடிச் சென்று அந்த மடப்பள்ளி வரதனை காளமேகமாக்கி கவி மழை பொழிய வைத்தாள் ...  பேசத் தெரியாத...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 25 : சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா.. பதிவு 32

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  32 25    சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா 10 ( 25 -26)💐 25 शुद्धविद्याङ्कुराकारद्विजपङ्क्तिद्वयोज्ज्वला - சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா  அவள் பதினாறு அக்ஷரங்களை கொண்ட ஸ்ரீ வித்யா அல்லவா.  அவள் பற்கள் அவ்வளவு தூய சாஸ்திரங்களின் சத்ய ஞான வெண்மை கொண்டவை.💐💐💐 ஷுத்த = தூய ;  வித்யா = மெய்யறிவு  ஆகார் = தோற்றம் / வெளிப்பார்வை  த்விஜ  = பற்கள்  பக்க்தி = அணி / வரிசை  த்வய = ஜோடி  உஜ்வலா = மின்னுதல்  ஒளிரும் பல்வரிசைகள் இரண்டும், ஞான மொட்டுகள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.👍👍👍👍👍👍👍👍👍👍 16 பற்கள் மேல் வரிசையில்  16 பற்கள் கீழ் வரிசையில் ..  ஒன்றுக்கு மேல் ஒன்று இல்லை .  உள் புறம் வளரும் பல்லும் இல்லை ..  There is no need for root canal , nil cavity , nil cosmatic surgery ...  யானையின் தந்தங்கள் போல் மயிலின் ...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 24. :நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா - பதிவு 31

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  31 24  वविद्रुमबिम्बश्रीन्यक्कारिरदनच्छदा நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா - செம்பவழங்களை வரிசையாக ஒழுங்கான அளவில் இணைத்ததுபோல் உருவம் கொண்டது லலிதா தேவியின் இதழ்கள்.👄👄 👄 நவ  = புதிய ;  வித்ரும = பவழம் / பவளம்  பிம்ப = ஒப்பிட்டால் / பிரதிபலிப்பு  ஸ்ரீ = காந்தி  ந்யக்கார்  = தரம் தாழ்த்துதல்  ரதனச்சதா  = இதழ்கள் / உதடுகள்  24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா* =   பவளத்தின் பிரகாசத்தை பழிக்கும் உதடுகளைக் கொண்டவள். சிலர், பிம்ப எனும் சொல் கோவைப்பழத்தை குறிப்பிடுவதாக பொருள் உணர்கின்றனர்.👍👍👍 பட்டர் 38 வது அந்தாதியில் இப்படி பாடுகிறார் ..  பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திரு நகையும்...  அம்பாளின் இதழ்கள் ஏன் பவளம் போல் சிவப்பாய் இருக்கிறது  தெரியுமா ?  இரண்டு காரணங்கள்   1.ஈசன் தான் இருக்கும் பள்ளியறையை மாற்றிக்கொண்டு அவள் இதழ்களில் வந்து துயில் கொள்கிறான்...  அதனால் பெண்மைக்கே உரிய நாணத்தினால் அவள் இதழ்கள் எப்...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 23. பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: பதிவு 30

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  30 23 पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः - பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: இன்று நாம் பார்ப்பது 23வது திருநாமம் . . மிகவும் அருமையான நாமம் 🌸🌸🌸🌸🌸 23 पद्मरागशिलादर्शपरिभाविकपोलभूः - பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: பத்ம ராக கல்லை இழைத்து கண்ணாடியாக்கினால் எப்படி வழவழவென்று ஒளி வீசுமோ  அது போல் இருக்கும் கன்னங்களை உடையவள் அம்பாள்.👍👍👍👍👍👍👍👍👍👍 பத்மராக = மாணிக்கத்தின் வகை  ஷிலா = (மாணிக்க) கற்கள்  தர்ஷ = பார்வைக்க பரிபாவி = மனத் தோற்றம்  கபோல = கன்னம் பத்மராக ரத்தினத்தை போல ஜொலிக்கும் கன்னங்கள் கொண்டவள் இப்படி ஓவ்வொரு நாமமாக வாக்தேவிகள் அம்பாளை வர்ணிப்பதை முழுசா கேட்க நம் அபிராமி பட்டருக்கு பொறுமை இல்லை ..  எப்போ நாம் வர்ணித்து முடிப்பது இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்றே நினைத்தாரோ என்னவோ ... ஒரே வரியில் பாடி விட்டார் ரத்ன சுருக்கமாய்  அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகி சிவந்த பதாம் புயத்தாள் 🙏🙏🙏 பத்மராகத்தால் செய்யப்பட்ட கண்ணாடி போன்று பளபளக்கும் கன்னங்களை உடையவள்.  ...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 22.தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா பதிவு 29

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  29   22.  ताटङ्कयुगलीभूततपनोडुपमण्डला -  தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா || நம்மைப்போல குந்து மணி தங்கத்தில் அவள் தோடு அணிபவள் இல்லை. கண்ணைப்பறிக்கும் ஒளி வீசும் சூரியனும் சந்திரனும் என்னை போட்டுக்கொள் என்று எதிரே வந்து நின்றால் போனால் போகிறது என்று காதில் அணிபவள் .🌞🌝 தாடங்க = காதணி யுக = ஜோடியாக  பூத  = இருப்பது / உள்ளது  தபன  = சூரியன்  உடுப  = சந்திரன் மண்டல =  உருண்டையான / சந்திர சூரியர்களின் ஒளிவட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்  தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா*  = சந்திரனையும் சூரியனையும் இரு காதணிகளாக்கியிருப்பவள்.🙏🙏🙏🙏🙏 சந்திரனும் சூரியனுமே அவள் தாடங்கள் ஆக இரு க்கும் போது அவள் மேலை சமயங்கள் உண்டோ ?   இதையே பட்டர் பிரான் இப்படி சொல்கிறார் அம்மா ... சமயங்கள் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்து இருந்தும் வேறு சமயம் உண்டு என்று கொண்டாண்டிய வீனர்களுடன் நான் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் ...  இன்னொரு இடத்திலும் இப்படி சொல்கிறார்  ஆதித்தன் 🌞 அம...