ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 22.தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா பதிவு 29

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 29

 22. ताटङ्कयुगलीभूततपनोडुपमण्डला

தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா ||



நம்மைப்போல குந்து மணி தங்கத்தில் அவள் தோடு அணிபவள் இல்லை.

கண்ணைப்பறிக்கும் ஒளி வீசும் சூரியனும் சந்திரனும் என்னை போட்டுக்கொள் என்று எதிரே வந்து நின்றால் போனால் போகிறது என்று காதில் அணிபவள் .🌞🌝

தாடங்க= காதணி யுக = ஜோடியாக 

பூத = இருப்பது / உள்ளது 

தபன = சூரியன் 

உடுப = சந்திரன் மண்டல = 

உருண்டையான / சந்திர சூரியர்களின் ஒளிவட்டம் என்றும் பொருள் கொள்ளலாம் 

தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா* 

= சந்திரனையும் சூரியனையும் இரு காதணிகளாக்கியிருப்பவள்.🙏🙏🙏🙏🙏

சந்திரனும் சூரியனுமே அவள் தாடங்கள் ஆக இருக்கும் போது அவள் மேலை சமயங்கள் உண்டோ ? 

இதையே பட்டர் பிரான் இப்படி சொல்கிறார் அம்மா ... சமயங்கள் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்து இருந்தும் வேறு சமயம் உண்டு என்று கொண்டாண்டிய வீனர்களுடன் நான் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் ... 



இன்னொரு இடத்திலும் இப்படி சொல்கிறார் 

ஆதித்தன் 🌞

அம்புலி ( சந்திரன்🌝)

அங்கி( அக்னி🔥)

குபேரன் 

அமரர் தங்கோன் ( இந்திரன்) 

போதிற் பிரம்மன் 

முராரி ( திருமால்) 

புராரி ( சிவன்) 

பொதிய முனி காதி ( அகஸ்தியர்) 

பொருப்படை கந்தன் 

கணபதி 

காமன் 

முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே என்கிறார் .. 

எல்லாம் அவளுக்குள் அடக்கம் அவளோ நமக்குள் அடக்கம் ... 

அவளை விட நாமே உயர்ந்தவர்கள் எனும் எண்ணத்தையும் அவளே நமக்குத் தருகிறாள் தாயன்புடன் 💥🌝🔥🙏🙏🙏👍👍

தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா. 

யுகளி என்றால் இரண்டு; 

இரண்டு தோடுகளாகத் தபனனும் (சூரியனும்) உடுபாவும் (சந்திரனும்) இருக்கிறார்கள். 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் அம்பாளோடு விசேஷத் தொடர்புகள் உள்ளன. 

அம்பாளின் கண்கள், அம்பாளின் மார்பகங்கள், அவளின் தாடங்கங்கள் என்று மூன்று விதங்களில் அவை வர்ணிக்கப்பட்டுள்ளன. 

ஸூர்ய சந்த்ரௌ ஸ்தனௌ தேவ்யா: தாவேவ நயனே ஸ்ம்ருதௌ உபௌ தாடங்க யுகளம் இத்யேஷா வைதிகீ ச்ருதி: 

என்பது ஆகம வாக்கியம். அம்பாளின் கருணை மங்கலம் கண்கள், உயிர்களைப் பொறுத்தவரை ஊட்டமான அருள் என்பதை விளக்க வக்ஷோருஹங்கள் (மார்பகங்கள்), பெண்களின் மங்கல அணிகலன் என்ற வகையில் தாடங்கங்கள் என்பதனால் இவ்வாறு மூன்று வகையான வர்ணனைகள். 

'சுட்டும் விழிச் சுடர்தான் சூரிய சந்திரரோ?' என்று இதனால் தான் பாரதியாரும் பாடினார். 



பராசக்தியின் தாடங்கத்திற்கு வெகு சிறப்பு உண்டு. 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலகால விஷம் வந்தது. அனைவரும் பயந்துபோய், கைலாயத்திற்கு ஓட, விஷத்தை அப்படியே உருட்டியெடுத்து விழுங்கிவிட்டார் 

சிவபெருமான். பின்னர் அமுதம் வந்தது. அதை தேவர்கள் அருந்தினார்கள். அமுதம் சாப்பிட்ட அவர்கள்கூட, ஊழிப்பிரளய காலத்தில் அழிந்துபோகிறார்கள். ஆனால், விஷம் சாப்பிட்ட சிவபெருமான் அப்போதும்  நடனமாடுகிறார். 

இது எப்படி சாத்தியம்? அம்பாளின் தாடங்க மஹிமை (தாலி பாக்கியம் போல தாடங்க பாக்கியம்) என்கிறார் ஆதிசங்கரர். 

ஸுதாம் அப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யு ஹரிணீம் விபத்யந்தே விச்வே விதி சதமகாத்யா திவிஷத: கராளம் யத்க்ஷ்வேலம் கபளிதவத: காலகலனா ந சம்போஸ் தன்மூலம் தவ ஜன்னி தாடங்க மஹிமா 

என்பது சௌந்தர்யலஹரியின் 28ஆவது ஸ்லோகம்.



இது வரை.

ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம்

ஓம்
ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ
ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ
சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா 1
(1-5)💐

உத்யத்பானு-ஸஹஸ்ராபா சதுர்பாஹு-ஸமன்விதா
ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா 2
(6 -9)💐

மனோரூபேக்ஷுகோதண்டா பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா
நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட-மண்டலா 3
(10-12)💐

சம்பகாசோக-புன்னாக-ஸௌகந்திக-லஸத்-கசா
குருவிந்தமணி-ச்ரேணீ-கனத்-கோடீர-மண்டிதா 4
(13-14)💐

அஷ்டமீசந்த்ர-விப்ராஜ-தளிகஸ்தல-சோபிதா
முகசந்த்ர-களங்காப-ம்ருகநாபி விசேஷகா 5
(15-16)💐

வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா
வக்த்ர-லக்ஷ்மீ-பரீவாஹ-சலன்-மீனாப-லோசனா 6
(17-18)💐

நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா
தாராகாந்தி-திரஸ்காரி நாஸாபரண-பாஸுரா 7
(19-20)💐

கதம்ப-மஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹரா
தாடங்க-யுகளீபூத-தபனோடுப-மண்டலா  8
(21-22)💐



1.ஸ்ரீ-மாதா; 

2.ஸ்ரீமஹாராஜ்நீ; 

3.ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி; 

4.சிதக்னி-குண்ட சம்பூதா; 

5.தேவகார்ய சமுத்யதா; 

6.உத்யத்பானு சஹஸ்ராபா 

7.சதுர்பாஹு சமன்விதா; 

8.ராகஸ்வரூப பாஷாட்யா ; 

9.க்ரோதாகாரங்க்குசோஜ்வலா; 

10.மனோரூபேக்ஷு கோதண்டா; 

11.பஞ்சதன்மாத்ர சாயகா; 

12.நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா;



(கேசாதி பாத வர்ணனை

(13-24) 

13.சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா; 

14.குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா; 

15.அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா; 

16.முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா; 

17.வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா; 

18.வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா; 

19.நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா; 

20.தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா;

21.கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா; 

22.தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா; 



23.பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ: 

24. நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா;



22. தாடங்க-யுகளீ-பூத தபனோடுப-மண்டலா ச்ரோத்ரத்திற்கு (காதுக்கு) விசேஷம் ஜாஸ்தி. 

பஞ்ச பூதங்களில் உசந்ததான ஆகாச தத்வத்தில் எழுகிற சப்தத்தை க்ரஹிப்பதாகப் பஞ்சேந்திரியங்களில் இருப்பது அதுவே. 

வேதம் பூராவுமே இப்படி ச்ரோத்ரத்தால் க்ருஹிக்கப்பட்டதால் தானே ச்ருதி என்றே பேர் பெற்றிருப்பது?

உபதேசங்களையெல்லாம் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரந்தான். அம்பாள் தான் குரு ஸ்வரூபிணியானாலும் அத்தனை ஆகமங்களையும் மந்திரங்களையும் அவள்தான் சிஷ்யையாயிருந்து பதியும் குருவுமான ஈஶ்வரனிடமிருந்து தன்னுடைய ச்ரோத்ரத்தினால் கேட்டுக் கொண்டாள். 



எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய ப்ரார்த்தனை, ஸ்தோத்ர கீர்த்தனை எல்லாவற்றையும் அவள் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரத்தினால் தானே? 

அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம்.  

ஸூர்ய சந்திரர்களே அவளுடைய இரண்டு தாடங்கம் என்று ஸஹஸ்ரநாமத்தில் வரும்: “தாடங்க-யுகளீ-பூத தபனோடுப மண்டலா”. “ஸர்வ மங்களா” எனப்படும் அம்பாளுக்கு மங்களச் சின்னம் அது. 

அப்படிப்பட்ட மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது. 

அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். 

இதனால்தான் அவர் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. 

“பங்கு போட்டுக் கொண்டு அம்ருதம் சாப்பிட்ட அத்தனை தேவர்களும் அழிந்து போனார்கள். 

யாருக்கும் பங்கில்லாமல், தானே மிச்சம் மீதியில்லாமல் விஷத்தைச் சாப்பிட்ட உன் பதி அழிவே இல்லாமலிருக்கிறதானென்றால் அது உன் தாடங்க மகிமையம்மா!” என்கிறார் ஆசாரியாள்.    

விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருதமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான். 

கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.



                                               👌👌👌👌👌👌👍👍👍👍👍👍







Comments

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

“சரி, வேதமும் கிருஷ்ண பரமாத்மாவும் ஜாதி தர்மத்தைச் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது பக்ஷபாதமாகத்தான் இருக்கிறது. அவரவர், குணப்படி, மனோபாவப்படி தொழிலைத் தேர்ந்தெடுத்து நடத்துவதற்குத்தான் வசதி செய்து தரவேண்டுமே தவிர, ஜாதிப்படி செய்ய வேண்டும் என்று வைக்கக்கூடாது. இந்த வித்தியாஸத்தைத் தொலைத்துவிட வேண்டும்” என்று சொல்லலாம்.
ravi said…
இருக்கட்டும். இந்த குணம், மனோபாவம் என்பதற்கும் நவீன ‘ஸெட்-அப்’ பில் ஒருத்தர் எடுத்துக் கொள்ளும் தொழிலுக்கு என்ன சம்பந்தம்? நன்றாக யோசித்துப் பார்த்தால் இது இந்த காலத்தில் வேண்டுமென்றே மிகைப்படுத்திச் சொல்கிற விஷயமாகத்தான் இருக்கிறது. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் ரொம்ப ஸ்வதந்திரம் வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.
ravi said…
அதனால்தான் தங்கள் தங்கள் மனோபாவத்தை மதிக்க வேண்டும் என்கிறார்கள். அது ஸமூகத்திற்கு உதவுகிற நல்ல மனோபாவமா, கெட்டதனால் நல்லதாக்கிக் கொள்ளவேண்டுமே, அதற்காக ஓரிடத்தில் ஸ்வதந்திரத்தை விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே என்பதை எல்லாம் நினைக்காமல் எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஸ்வதந்திரம் கேட்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
மனோபாவம் அல்லது குணத்துக்கும் தற்காலத்தில் ஒருத்தன் விரும்பும் வேலைக்கும் எந்த அளவுக்கு ஸம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சம்பந்தமேயில்லை!
ravi said…
ரொம்பக் கொஞ்சம் பேர் விஷயத்தில்தான் குணத்துக்கும் தொழிலுக்குமிடையே சம்பந்தமிருக்கும். ரொம்பவும் வைராக்ய குணமுள்ளவன் எந்த வேலையிலும் ஒட்டாமலிருப்பான். துருதுருவென்று ப்ளான் போட்டு யோஜனை பண்ணுகிற ஸ்வபாவமுள்ளவனுக்கு மெஷின் மாதிரி வேலை செய்வதான தொழில்கள் பிடிக்காமலிருக்கும். ஆர்மிக்கு [தரைப்படைக்கு] த்தான் போவது, நேவிக்கு [கடற்படைக்கு] த்தான் போவது என்று சில பேருக்கு ஒரே ஆர்வம் இருக்கும். இன்னும் சிலபேர் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் ஸைதன்யத்தில் சேருவதில்லை என்று இருப்பார்கள். எழுதுவது, பாடுவது, சித்திரம் போடுவது என்கிறவற்றில் ஆசை உள்ளவர்கள் வேறு எந்த வேலையிலும் பிடிமானம் வைக்க மாட்டார்கள்.
ravi said…
இப்போது நான் சொன்ன இத்தனை பேரும்-அதாவது தங்கள் இயற்கை மனோபாவப்படிதான் தொழில் பண்ணுவது என்று இருக்கிற அத்தனை பேரும்- மொத்தமுள்ள ஜன சமூகத்தில் கால்வாசிகூட இருக்கமாட்டார்கள். பத்து பெர்ஸென்ட் (சதவிகிதம்) கூட இருக்க மாட்டார்கள்.
இங்கே என்னை ஒரு மடத்துக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறது என்றாலும் என்னிடம் எல்லா தினுசு ஜனங்களும் வந்து அவரவர் பிரார்த்தனையை, ஆசையைச் சொல்லிவிட்டுத்தானே போகிறார்கள்?
ravi said…
இதிலிருந்து எனக்கு தெரிவது, விசேஷமாக ஒருத்தனும் தொழிலைக் குணத்தோடு சம்பந்தப்படுத்தவில்லை என்பதுதான். ஒரு அப்பாக்காரர் வருகிறார். “பையனுக்கு எஞ்சினியர் காலேஜிலும் மனுப்போட்டிருக்கிறது. பி.காமும் போட்டிருக்கிறது. எஞ்சினியரிங் கிடைக்காவிட்டால் பி.காம் சேர்த்தாக வேண்டும். எஞ்சினியரிங்கே கிடைத்துவிட்டால் சிலாக்கியம். அநுக்ரஹ‌ம் பண்ணவேண்டும்” என்கிறார். பி.காம் படித்தால் படிக்கிற ‘ஆடிட்’ வேலைக்கும், எஞ்சினியரிங் படித்து சர்வே, கிர்வே பண்ணுவதற்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதோ? ஆனால் இந்தப் பையன் இந்த இரண்டுக்கும் தயாராக இருக்கிறான். இன்னொரு பையன் வருகிறான். “இன்ட‌ர்மீடியட் ரொம்ப ‘ஹை’ யாகப் பாஸ் பண்ணிவிட்டேன். மெடிகல் காலேஜில் சேரலாமா, எம்.ஏ. படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். எழுதலாமா என்று தெரியவில்லை” என்கிறான். வைத்தியத் தொழிலுக்கும் கலெக்டர் வேலைக்கும் என்ன சம்பந்தம்? குணத்தை வைத்து தொழில் என்றால் மெடிக்கல் காலேஜுக்குப் போகிறவன் எப்படி எம்.ஏ. ஐப் பற்றி நினைப்பான்?
ஒருத்தர் வக்கீலாக இருக்கிறார். அல்லது இண்டஸ்ட்ரி [தொழிற்சாலை] வைத்திருக்கிறார். அப்புறம் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விடுகிறார். மந்திரியாகி இருக்கிறவர்களில் வக்கீலாக இருந்தவர், அதிகாரியாக இருந்தவர், ப்ரொஃபஸராக இருந்தவர், டாக்டராக இருந்தவர் என்று பல தொழில்களில் இருந்தவர்களைப் பார்க்கிறோம். மந்திரித் தொழிலுக்கு எந்த குணங்கள் இருக்க வேண்டுமோ அது எப்படி இந்தத் தொழில்களுக்கும் வேண்டும் என்று சொல்ல முடியும்?
இப்படி பெரிய லெவலில்தான் என்று இல்லை. “ஸினிமாக் கொட்டகையில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது மிலிட்டரியில் சேர்ந்திருக்கிறேன், ஆசீர்வாதம் வேண்டும்” என்று ஒருத்தன் வருகிறான். ஹோட்டல் சர்வராக இருந்து பெட்டிக்கடை வைத்திருக்கிறேன்” என்று இன்னொருத்தன் வருகிறான். இந்த இரண்டு தினுஸான வேலைகளுக்கு என்ன சமபந்தம்?
இன்னொன்று கூடச் சொல்லலாம். இப்போது ராஜாங்கமும் அபேத வாத‌த்தை [ஸோஷலிஸத்தை] முக்கியமாகச் சொல்வதாகத்தான் ஆகிவிட்டது. அவனுக்கும் ஸ்வபாவப்படியும், படிப்பு முதலான தகுதிப்படியும்தான் வேலை தரவேண்டுமேயன்றி ஜாதிப்படி இல்லை என்பதும்தான் சர்க்காரின் கருத்தும். ஆனால் இவர்களே பெரிய உத்தியோகத்திற்காகப் பரீக்ஷை வைக்கிறபோது, ஒரு பரீக்ஷையை எழுதினவர்களில்தான் சில பேரை ஐ.ஏ.எஸ் என்று செலக்ட் செய்கிறார்கள். சில பேரை போலிசுக்கு அனுப்பி விடுகிறார்கள். கலெக்டர் வேலைக்கும், போலீஸ் ஸூப்பிரன்டு வேலைக்கும் மனோபாவ ரீதியில் பார்த்தால் என்ன சம்பந்தம்? டெக்னிகல் ஸப்ஜெட்டாக இல்லாத வரையில் ஒரு டிப்பார்ட்மென்ட்காரர்களை சம்பந்தமே இல்லாத வேறே டிபார்ட்மென்ட்களுக்கு மாற்றுகிறார்கள்.
குணம், மனோபாவம் என்று பார்த்தால் அவற்றுக்கு ஆதரவாகச் சொல்ல இங்கெல்லாம் ஒன்றுமெயில்லை.
ஆகவே பெரும்பாலும் ஜனங்கள் தங்கள் குணத்தைப் பார்த்து அதற்கு அநுஸரணையான தொழிலாக ஒன்றை எடுத்துக் கொள்ளவே இல்லை. தங்களுக்கு பிடித்த தொழில் கிடைக்காவிட்டாலும், கிடைத்த தொழிலுக்கு எப்படியோ ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்கிறார்கள்.
பொதுவாக எதிலே ஜாஸ்தி பணம் கிடைக்குமோ, அஸெள‌கர்யம் குறைவோ, அந்தத் தொழிலுக்குத்தான் எல்லோரும் ஆசைப்பட்டு போட்டி போடுகிறார்களே யொழிய, குணம், மனோபாவம், அது இது என்பதெல்லாம் அநேகமாகப் புரளிதான். ஜாஸ்தி வருமானமும் குறைச்சல் சிரமமும் உள்ள தொழிலுக்குப் போவேன் என்பதே ஸ்வதர்மம் என்றால் பரிஹாஸத்துக்கு இடமல்லவா?
குணத்தைக் கொண்டு காரியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்று நவீனர்கள் சொல்வது வெற்றுச் சவுடாலாகத்தான் நிற்கிறது. நம்முடைய பூர்விகர்கள் கச்சிதம் பண்ணிக் கொடுத்திருக்கும் ஏற்பாட்டிலோ கார்யமே ஒருத்தனுக்கு இயற்கையாகவும் பாரம்பரியமாகவும் உண்டான குணத்தை அவனுடைய ஆத்மாபிவிருத்திக்கும், வெளிலோகத்தின் க்ஷேமத்திற்கும் ஏற்றபடி ஒரு ஒழுங்கில் ரூபப்படுத்திற்று. காயத்ரி அநுஷ்டானம், கத்தியைச் சுழற்றுவது [சுற்றுவது], Knack [நுணுக்கம்] தெரிந்து வியாபாரம் பேசுவது, மெய்வருந்த உழைப்பது என்ற நாலு விதமான கார்யங்களே அததற்கான ப்ரஜையின் குணத்தை அந்தந்த துறையில் நன்றாகப் பிரகாசித்துத் தன்னையும் சுத்தி செய்து கொண்டு, ஸமுதாயத்தின் ஒட்டுமொத்த க்ஷேமத்திற்கும் உதவும்படியாக ரூபப்படுத்தியது. காயத்ரி அநுஷ்டானக்காரனும் எப்படி மெய்யை வருத்திக் கொண்டானென்று அப்புறம் சொல்கிறேன்.
ravi said…
॥ महाकालभैरवाष्टकम् अथवा तीक्ष्णदंष्ट्रकालभैरवाष्टकम् ॥
यं यं यं यक्षरूपं दशदिशिविदितं भूमिकम्पायमानं
सं सं संहारमूर्तिं शिरमुकुटजटा शेखरंचन्द्रबिम्बम् ।
दं दं दं दीर्घकायं विक्रितनख मुखं चोर्ध्वरोमं करालं
पं पं पं पापनाशं प्रणमत सततं भैरवं क्षेत्रपालम् ॥ १॥

रं रं रं रक्तवर्णं, कटिकटिततनुं तीक्ष्णदंष्ट्राकरालं
घं घं घं घोष घोषं घ घ घ घ घटितं घर्झरं घोरनादम् ।
कं कं कं कालपाशं द्रुक् द्रुक् दृढितं ज्वालितं कामदाहं
तं तं तं दिव्यदेहं, प्रणामत सततं, भैरवं क्षेत्रपालम् ॥ २॥

लं लं लं लं वदन्तं ल ल ल ल ललितं दीर्घ जिह्वा करालं
धूं धूं धूं धूम्रवर्णं स्फुट विकटमुखं भास्करं भीमरूपम् ।
रुं रुं रुं रूण्डमालं, रवितमनियतं ताम्रनेत्रं करालम्
नं नं नं नग्नभूषं , प्रणमत सततं, भैरवं क्षेत्रपालम् ॥ ३॥

वं वं वायुवेगं नतजनसदयं ब्रह्मसारं परन्तं
खं खं खड्गहस्तं त्रिभुवनविलयं भास्करं भीमरूपम् ।
चं चं चलित्वाऽचल चल चलिता चालितं भूमिचक्रं
मं मं मायि रूपं प्रणमत सततं भैरवं क्षेत्रपालम् ॥ ४॥

शं शं शं शङ्खहस्तं, शशिकरधवलं, मोक्ष सम्पूर्ण तेजं
मं मं मं मं महान्तं, कुलमकुलकुलं मन्त्रगुप्तं सुनित्यम् ।
यं यं यं भूतनाथं, किलिकिलिकिलितं बालकेलिप्रदहानं
आं आं आं आन्तरिक्षं , प्रणमत सततं, भैरवं क्षेत्रपालम् ॥ ५॥

खं खं खं खड्गभेदं, विषममृतमयं कालकालं करालं
क्षं क्षं क्षं क्षिप्रवेगं, दहदहदहनं, तप्तसन्दीप्यमानम् ।
हौं हौं हौंकारनादं, प्रकटितगहनं गर्जितैर्भूमिकम्पं
बं बं बं बाललीलं, प्रणमत सततं, भैरवं क्षेत्रपालम् ॥ ६॥

var वं वं वं वाललीलं
सं सं सं सिद्धियोगं, सकलगुणमखं, देवदेवं प्रसन्नं
पं पं पं पद्मनाभं, हरिहरमयनं चन्द्रसूर्याग्नि नेत्रम् ।
ऐं ऐं ऐं ऐश्वर्यनाथं, सततभयहरं, पूर्वदेवस्वरूपं
रौं रौं रौं रौद्ररूपं, प्रणमत सततं, भैरवं क्षेत्रपालम् ॥ ७॥

हं हं हं हंसयानं, हसितकलहकं, मुक्तयोगाट्टहासं, ?
धं धं धं नेत्ररूपं, शिरमुकुटजटाबन्ध बन्धाग्रहस्तम् ।
तं तं तंकानादं, त्रिदशलटलटं, कामगर्वापहारं,
भ्रुं भ्रुं भ्रुं भूतनाथं, प्रणमत सततं, भैरवं क्षेत्रपालम् ॥ ८॥

इति महाकालभैरवाष्टकं सम्पूर्णम् ।

नमो भूतनाथं नमो प्रेतनाथं
नमः कालकालं नमः रुद्रमालम् ।
नमः कालिकाप्रेमलोलं करालं
नमो भैरवं काशिकाक्षेत्रपालम् ॥
ravi said…
🪷 *தினம் ஒரு திவ்ய பிரபந்தம்* 🪷

*இன்னைக்கு நாம சேவிக்க போற பாசுரம் திருப்பல்லாண்டு* பாசுரம் 4 மற்றும் 5

பாசுரம்

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து

கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று

பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே

பொருள்

ஏடு நிலம் என்பது கைவல்யம் ஆகும். இதில் வசிக்கும் கைவல்யார்த்திகள் தங்கள் ஆத்மாவை தாங்களே அனுபவிக்க விரும்புபவர்கள்.

கைவல்யம் என்றால் என்ன?

கைவல்யம்: ஒரு மாதிரியான மோக்‌ஷ நிலை. perfect isolation state. இந்த நிலையில் ஆத்மா மறு பிறப்பிலிருந்து விடு பட்டாகி விட்டது. ஆனால் விரஜா நதியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. வைகுண்டத்தை இன்னும் அடைய வில்லை, அல்லது அடைய விரும்பவில்லை.

கைவல்யவாசிகள் அச்ரார்தி வழியில் செல்லுபவர் இல்லை. இவர்கள் விரஜா நதியிலிருந்து தொலை தூரத்தில் வசிப்பவர்கள். இவர்கள் பகவான் நாராயணனுக்கு பணி புரிபவர்களும் இல்லை, திரும்பப் பிறப்பு எடுப்பவர்களும் இல்லை.

இப்படிப் பட்ட ஏடு நிலத்தில் தள்ளப் படுவதற்கு முன்னால் எங்கள் குழுவில் வந்து சேர்ந்து விட ஆசைப் பட்டால் உடனே வாருங்கள். நாடு நகரம் அறியும் வண்ணம் ‘நமோ நாராயணா’ என்று பல்லாண்டு பாடுங்கள்.

பாசுரம் 5

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை

இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு

தொண்டக் குலத்திலுள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்மினே

பொருள்

பிரதிவாதி சுவாமி இந்தப் பாடலுக்கு விளக்கம் அளிக்கும் போது, இந்தப் பாடல் ஐஸ்வரார்த்திகளை பல்லாயிரம் பாடும் படி அழைக்கிறது என்கிறார். யார் இந்த ஐஸ்வரார்த்திகள்? இவர்கள் இரு வகைப் படுவர்: ஒருவகையினர் கை தப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய முயற்சி செய்பவர்கள்; இன்னொரு வகையினர் எளியோராய் இருந்து இப்பொது செல்வம் அடைய முயற்சி செய்பவர்கள்.

அண்ட சராசரங்களுக்கு அதிபதி ஆனவனும், அசுரரையும் அரக்கர்களையும் (என்ன வேறுபாடு?) பூண்டோடு அழித்தவனும், தன் இந்திரியங்களை அடக்கி ஆள்பவனுமான இருடிகேசன் (ரிஷிகேசன் என்ற வட மொழிச் சொல்லுக்குத் தமிழ் வடிவம்) நாராயணனுக்கு ஆயிரம் நாமங்கள் என்ன, பல்லாயிரம் நாமங்கள் சொல்லிப் பாட வாரீர்!

நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்...

💢💢💢💢💢💢💢💢

ravi said…
*எளியோர்க்கும் அருளிய நாமம் எட்டெழுத்து மந்திரம்*
ௐ நமோ நாராயணய

http://www.srimahavishnuinfo.blogspot.com
ஶ்ரீஇராமானுஜாய திருவடிகளே

அஷ்டாச்சரத்தை(பிரணவத்தோடு நாமத்தை) ஓத விட வேண்டிய விஷயங்கள் திருக்கோட்டியூர் நம்பி இராமனுஜருக்கு சொன்னது

1. சம்சார பீஜம் தொலைந்த ’பிறகு வாரும்’ என்று சொல்லி அனுப்பினார் நம்பி. (உலக விஷயங்களில் உள்ள பற்றை விட்டுவிட்டு வேண்டும்) ராமானுஜரும் நம்பியிடம் விடைபெற்றுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். நம்பிகள் சொன்ன விஷயத்தை மனதில் சிந்தித்தார். உலக வாழ்கையில் பற்று இருந்தால் பெருமாள் மீது எப்படிப் பற்று வரும் ? தன்னை சுயபரிசோதனை கொண்ட பிறகு இரண்டாம் முறை திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.
ravi said…

2. அஹங்காரம் மமகாரம் அற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( நான், என்னுடையது என்ற எண்ணம்). ராமானுஜர் திருவரங்கம் திரும்பினார். நம்பி சொன்ன விஷயத்தை அசைபோட்டுக்கொண்டு அஹங்காரம் பெரிய தடை தான். மீண்டும் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

3. ஆத்ம ஞானம் பெற்ற பிறகு வாரும்' என்று நம்பிகள் சொல்ல ( உடல் வேறு ஆத்மா வேறு ) ராமானுஜர் அதைக் கேட்டுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். தேகமே ஆத்மா கிடையாது என்பதைச் சுயபரிசோதனை செய்துகொண்டு மறுபடியும் திருக்கோட்டியூர் கிளம்பினார்.

ravi said…
4. தேஹாபிமானம் தொலைந்த பிறகு வாரும்' என்றார் நம்பி. (உடல்மீது உள்ள பற்று) உடையவர் நம்பி சொன்ன வார்த்தையைக் கேட்டுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். நம்பி இந்த உடலை வளர்ப்பதை விட்டுவிட்டு ஆத்மாவை வளர்க்க வேண்டும் என்று சொன்னதைச் சிந்தித்தார். சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

ravi said…
5. கைவல்ய மோஹம் தொலைந்த ‘’பிறகு வாரும்' என்றார் நம்பி. (செல்வம், சொத்து சேர்ப்பதில் ஆசை) திருவரங்க திரும்பினார் ராமானுஜர். நம்பி சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டார். பெருமாள் தான் நமக்கு நிரந்தர செல்வம். மற்ற செல்வம் பெருமாளை அனுபவிக்கத் தடை என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

6. விஷயாந்தரப் ஆசை அற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (மற்ற விஷயங்களில் ஆசை) திருவரங்கம் திரும்பிய உடையவர் பெருமாளைப் பற்றும்போது வேறு பலன்களைக் கேட்காமல் ஆண்டாள் சொல்லுவது போல ’உன்னை அருத்தித்து வந்தோம்’ என்று இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். மீண்டும் திருக்கோட்டியூருக்கு புறப்பட்டார்.
ravi said…

7. பகவத்விஷயத்தில் ஆசை பிறந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி (பெருமாள் மீது ருசி(ஆவல், ஆசை) வர வேண்டும் ) திருவரங்கம் வந்தபின் அவன் திவ்ய ரூபம், ஸ்வரூபம், குணம் எல்லாம் நினைத்துப் பூரிப்பு அடைந்தார். உடனே மீண்டும் கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

8. ராக த்வேஷங்களை விட்ட ’பிறகு வாரும்’ என்றார் நம்பி (இன்ப - துன்பங்கள், விருப்பு - வெறுப்புகள்). திருவரங்கம் திரும்பியபின் அதை நினைத்துச் சிந்தித்தார். விருப்பு வெறுப்பு, இன்ப துன்பங்கள் எல்லாம் இந்த உலக வாழ்கையில் பற்று இருந்தால் வருவது என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூர் கிளம்பினார்.
ravi said…

9. பார தந்தர்யம் அறிந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( பெருமாள் விருப்பப்படி இருப்பேன்) ஆண்டான்(சேஷ) — அடிமை(சேஷி) சம்பந்தம் பற்றிச் சிந்தித்துவிட்டு. நாம் என்றுமே அவருக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டன் தான் என்று கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

10. ஸ்ரீவைஷ்ணவத்வம் கைவந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (ஸ்ரீ வைஷ்ணவ பண்புகள்) இதுவரை ஒன்பது முறை சென்றபோது சொன்ன வார்த்தைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை சிந்தித்தார். அதைத் தவிர நித்ய கர்மானுஷ்டானங்களையும் செய்பவன் தான் உண்மையான ஸ்ரீ வைஷ்ணவன் என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூர் கிளம்பினார்.

11. ஸாத்விக பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி (நல்ல மக்களின் அபிமானம்). திருவரங்கம் வந்த ராமானுஜர் நல்லவர்களின் சம்பந்தம் எப்போதும் நமக்கு முக்கியம் என்று புரிந்துகொண்டார். நல்லார்கள் வாழும் அரங்கத்தில் அதற்குக் குறைவு ஏது ? மீண்டும் திருக்கோட்டியூருக்கு சென்றார்.

12. பாகவத பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி.(எம்பெருமானின் அடியார்களின் அங்கீகாரம்) நல்லவர்கள் சம்பந்தம் மட்டும் இல்லை அதைவிடப் பாகவதர்களின் சம்பந்தம் மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார்.

13. பகவத் பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (பெருமாளின் கிருபை) திருவரங்கம் திரும்பிய ராமானுஜர் நம்பி சொன்னதைச் சிந்தித்தார். எப்போதும் பெருமாளின் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். மீண்டும் கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

14. அனன்ய சேஷத்வம் பெற்று ’பிறகு வாரும்’ என்றார் நம்பி.( நான் எம்பெருமான் ஒருவனுக்கே என்ற எண்ணம்) ராமானுஜர் திருவரங்கம் வந்த பின் நாராயணனே நமக்கே என்ற சிந்தனையுடனும் ’மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்பது போலவும் ’மருத்துவன் பால் மாறாத காதல் கொண்டவன்’ போலவும் 'புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோஷ்டியூர் புறப்பட்டார்.

15. அனன்ய ப்ரயோஜனத்வம் கைக்கூடிய ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( பெருமாளுக்கே நாம் அவனை அடைவதே நம் பலன் என எண்ணம் ) திருவரங்கம் வந்த ராமானுஜர் ’உனக்கேநாம் ஆட்செய்வோம்' என்று எம்பெருமானை அடைவது ஒன்றே தனக்குப் பிரயோஜனம் என்பதைப் போலப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூர் கிளம்பினார்.

16. அனன்ய போக்யத்வம் கை கூடிய ‘பிறகு வாரும்’ (பெருமாளை அனுபவிப்பதே ஆனந்தம்) என்றார் நம்பி. திருவரங்கம் வந்த ராமானுஜர் ’உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்று மற்றை நம் காமங்கள் தொலைத்து ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை கூடி இருந்து குளிர்ந்து அனுபவிப்பதே ஒரே குறிக்கோள் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூர் புறப்பட்டார்.

17. ஆசார்ய அனுக்ரஹம் கிடைத்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( ஆசாரியனின் கருணை அவரின் அருள் ) ராமானுஜர் கிளம்ப, நம்பி “அடுத்த முறை வரும் போது தண்ட பவித்திரத்துடன் நீர் மட்டும் வாரும் கூட யாரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டாம்” என்றார். திருவரங்க வந்த ராமானுஜர் ஆளவந்தாரின் கடாக்ஷத்தை சிந்தித்தார். திருக்கச்சி நம்பி சொன்ன ஆறு வார்த்தைகளைச் சிந்தித்தார். பெரிய நம்பிகள் மதுராங்கத்தில் தமக்கு பஞ்சமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார். நாதமுனிகள் தொடக்கமாக மற்ற ஆசாரியர்கள் ’நம் பையல்’ என்று அவர்கள் “நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன் என்று உபதேசித்த நல் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். திருக்கோட்டியூருக்கு புறப்பட்டார்.

18. இந்த முறை அவர் திருக்கோட்டியூர் சென்றபோது "அதிகாரி புருஷரே வாரும்!” என்று அழைத்தார் நம்பி. உடையவருடன் முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பார்த்தபோது. “இளையாழ்வாரே தண்ட பவித்திரத்துடன் உம்மை மட்டும் தானே வரச் சொன்னேனே” என்றார். ராமானுஜர் நம்பியை வணங்கி “இதோ இங்கே இருக்கும் முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் அடியேனுக்குத் தண்டமும், பவித்திரமுமாக எப்போதும் பிரியாமல் இருப்பவர்கள்” என்றார்.

ravi said…
*எளியோர்க்கும் அருளிய நாமம் எட்டெழுத்து மந்திரம்*
ௐ நமோ நாராயணய

http://www.srimahavishnuinfo.blogspot.com
ஶ்ரீஇராமானுஜாய திருவடிகளே

அஷ்டாச்சரத்தை(பிரணவத்தோடு நாமத்தை) ஓத விட வேண்டிய விஷயங்கள் திருக்கோட்டியூர் நம்பி இராமனுஜருக்கு சொன்னது

1. சம்சார பீஜம் தொலைந்த ’பிறகு வாரும்’ என்று சொல்லி அனுப்பினார் நம்பி. (உலக விஷயங்களில் உள்ள பற்றை விட்டுவிட்டு வேண்டும்) ராமானுஜரும் நம்பியிடம் விடைபெற்றுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். நம்பிகள் சொன்ன விஷயத்தை மனதில் சிந்தித்தார். உலக வாழ்கையில் பற்று இருந்தால் பெருமாள் மீது எப்படிப் பற்று வரும் ? தன்னை சுயபரிசோதனை கொண்ட பிறகு இரண்டாம் முறை திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.
ravi said…

2. அஹங்காரம் மமகாரம் அற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( நான், என்னுடையது என்ற எண்ணம்). ராமானுஜர் திருவரங்கம் திரும்பினார். நம்பி சொன்ன விஷயத்தை அசைபோட்டுக்கொண்டு அஹங்காரம் பெரிய தடை தான். மீண்டும் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.
ravi said…

3. ஆத்ம ஞானம் பெற்ற பிறகு வாரும்' என்று நம்பிகள் சொல்ல ( உடல் வேறு ஆத்மா வேறு ) ராமானுஜர் அதைக் கேட்டுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். தேகமே ஆத்மா கிடையாது என்பதைச் சுயபரிசோதனை செய்துகொண்டு மறுபடியும் திருக்கோட்டியூர் கிளம்பினார்.

4. தேஹாபிமானம் தொலைந்த பிறகு வாரும்' என்றார் நம்பி. (உடல்மீது உள்ள பற்று) உடையவர் நம்பி சொன்ன வார்த்தையைக் கேட்டுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். நம்பி இந்த உடலை வளர்ப்பதை விட்டுவிட்டு ஆத்மாவை வளர்க்க வேண்டும் என்று சொன்னதைச் சிந்தித்தார். சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.
ravi said…

5. கைவல்ய மோஹம் தொலைந்த ‘’பிறகு வாரும்' என்றார் நம்பி. (செல்வம், சொத்து சேர்ப்பதில் ஆசை) திருவரங்க திரும்பினார் ராமானுஜர். நம்பி சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டார். பெருமாள் தான் நமக்கு நிரந்தர செல்வம். மற்ற செல்வம் பெருமாளை அனுபவிக்கத் தடை என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

6. விஷயாந்தரப் ஆசை அற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (மற்ற விஷயங்களில் ஆசை) திருவரங்கம் திரும்பிய உடையவர் பெருமாளைப் பற்றும்போது வேறு பலன்களைக் கேட்காமல் ஆண்டாள் சொல்லுவது போல ’உன்னை அருத்தித்து வந்தோம்’ என்று இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். மீண்டும் திருக்கோட்டியூருக்கு புறப்பட்டார்.
ravi said…

7. பகவத்விஷயத்தில் ஆசை பிறந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி (பெருமாள் மீது ருசி(ஆவல், ஆசை) வர வேண்டும் ) திருவரங்கம் வந்தபின் அவன் திவ்ய ரூபம், ஸ்வரூபம், குணம் எல்லாம் நினைத்துப் பூரிப்பு அடைந்தார். உடனே மீண்டும் கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

8. ராக த்வேஷங்களை விட்ட ’பிறகு வாரும்’ என்றார் நம்பி (இன்ப - துன்பங்கள், விருப்பு - வெறுப்புகள்). திருவரங்கம் திரும்பியபின் அதை நினைத்துச் சிந்தித்தார். விருப்பு வெறுப்பு, இன்ப துன்பங்கள் எல்லாம் இந்த உலக வாழ்கையில் பற்று இருந்தால் வருவது என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூர் கிளம்பினார்.
ravi said…

9. பார தந்தர்யம் அறிந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( பெருமாள் விருப்பப்படி இருப்பேன்) ஆண்டான்(சேஷ) — அடிமை(சேஷி) சம்பந்தம் பற்றிச் சிந்தித்துவிட்டு. நாம் என்றுமே அவருக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டன் தான் என்று கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

10. ஸ்ரீவைஷ்ணவத்வம் கைவந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (ஸ்ரீ வைஷ்ணவ பண்புகள்) இதுவரை ஒன்பது முறை சென்றபோது சொன்ன வார்த்தைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை சிந்தித்தார். அதைத் தவிர நித்ய கர்மானுஷ்டானங்களையும் செய்பவன் தான் உண்மையான ஸ்ரீ வைஷ்ணவன் என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூர் கிளம்பினார்.

ravi said…
11. ஸாத்விக பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி (நல்ல மக்களின் அபிமானம்). திருவரங்கம் வந்த ராமானுஜர் நல்லவர்களின் சம்பந்தம் எப்போதும் நமக்கு முக்கியம் என்று புரிந்துகொண்டார். நல்லார்கள் வாழும் அரங்கத்தில் அதற்குக் குறைவு ஏது ? மீண்டும் திருக்கோட்டியூருக்கு சென்றார்.

12. பாகவத பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி.(எம்பெருமானின் அடியார்களின் அங்கீகாரம்) நல்லவர்கள் சம்பந்தம் மட்டும் இல்லை அதைவிடப் பாகவதர்களின் சம்பந்தம் மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார்.
ravi said…

13. பகவத் பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (பெருமாளின் கிருபை) திருவரங்கம் திரும்பிய ராமானுஜர் நம்பி சொன்னதைச் சிந்தித்தார். எப்போதும் பெருமாளின் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். மீண்டும் கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

14. அனன்ய சேஷத்வம் பெற்று ’பிறகு வாரும்’ என்றார் நம்பி.( நான் எம்பெருமான் ஒருவனுக்கே என்ற எண்ணம்) ராமானுஜர் திருவரங்கம் வந்த பின் நாராயணனே நமக்கே என்ற சிந்தனையுடனும் ’மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்பது போலவும் ’மருத்துவன் பால் மாறாத காதல் கொண்டவன்’ போலவும் 'புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோஷ்டியூர் புறப்பட்டார்.
ravi said…

15. அனன்ய ப்ரயோஜனத்வம் கைக்கூடிய ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( பெருமாளுக்கே நாம் அவனை அடைவதே நம் பலன் என எண்ணம் ) திருவரங்கம் வந்த ராமானுஜர் ’உனக்கேநாம் ஆட்செய்வோம்' என்று எம்பெருமானை அடைவது ஒன்றே தனக்குப் பிரயோஜனம் என்பதைப் போலப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூர் கிளம்பினார்.

16. அனன்ய போக்யத்வம் கை கூடிய ‘பிறகு வாரும்’ (பெருமாளை அனுபவிப்பதே ஆனந்தம்) என்றார் நம்பி. திருவரங்கம் வந்த ராமானுஜர் ’உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்று மற்றை நம் காமங்கள் தொலைத்து ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை கூடி இருந்து குளிர்ந்து அனுபவிப்பதே ஒரே குறிக்கோள் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூர் புறப்பட்டார்.

17. ஆசார்ய அனுக்ரஹம் கிடைத்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( ஆசாரியனின் கருணை அவரின் அருள் ) ராமானுஜர் கிளம்ப, நம்பி “அடுத்த முறை வரும் போது தண்ட பவித்திரத்துடன் நீர் மட்டும் வாரும் கூட யாரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டாம்” என்றார். திருவரங்க வந்த ராமானுஜர் ஆளவந்தாரின் கடாக்ஷத்தை சிந்தித்தார். திருக்கச்சி நம்பி சொன்ன ஆறு வார்த்தைகளைச் சிந்தித்தார். பெரிய நம்பிகள் மதுராங்கத்தில் தமக்கு பஞ்சமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார். நாதமுனிகள் தொடக்கமாக மற்ற ஆசாரியர்கள் ’நம் பையல்’ என்று அவர்கள் “நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன் என்று உபதேசித்த நல் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். திருக்கோட்டியூருக்கு புறப்பட்டார்.
ravi said…
18. இந்த முறை அவர் திருக்கோட்டியூர் சென்றபோது "அதிகாரி புருஷரே வாரும்!” என்று அழைத்தார் நம்பி. உடையவருடன் முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பார்த்தபோது. “இளையாழ்வாரே தண்ட பவித்திரத்துடன் உம்மை மட்டும் தானே வரச் சொன்னேனே” என்றார். ராமானுஜர் நம்பியை வணங்கி “இதோ இங்கே இருக்கும் முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் அடியேனுக்குத் தண்டமும், பவித்திரமுமாக எப்போதும் பிரியாமல் இருப்பவர்கள்” என்றார்.
ravi said…
🌹🌺 ""A simple story of Lord Vishnu who said that he will wake up only if he prolongs the life of his devotee 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺
Among 108 Divya Desams..!! 56th Divya Desam
: Opened 1000-2000 years ago

District : Kanchipuram

🌺 Once Parvati, Lakshmi and Saraswati all came to earth together and did penance. Rishis Athiri, Bhrigu, Kasipan, Kaundliyan, Triorisheyyan and Bharadvajar helped them in their penance.

🌺Shiva, Mahavishnu and Brahma came to earth to take the three goddesses to heaven. Unable to approach the goddess due to the penance of the rishis, the trio sent a Gandharva maiden.

🌺 When Bharadwajar Kamura saw her, a child was born. Lord Vishnu, who took the form of Veduva, raised the child as "Paramechuravarman". He also taught Paramechuran, who was a devotee of Thirumal from birth.

🌺 Before he finished learning all the arts, his final time was approaching.
Vishnu, who wanted to increase his life, gave a hint.

🌺 Eman lay down with his head towards the north, seeing the time coming. It is generally said that if you lie with your head towards the north, your life will decrease.

🌺 What if Vishnu who protects the world is lying like this when humans have this destiny?. Seeing his condition, Eman thought that something disastrous was going to happen and came to him and asked him to wake up.

He also refused. When he woke up without understanding the reason, he said that if he prolongs the life of his devotee, he will wake up. Accepting Vishnu's request to have mercy on the devotee, Eman left without taking Paramechuran's life.

🌺🌹 Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*'நீங்களே கதி என்று ஒருவரிடம் சொல்வதும், அவருக்கு அடியவராக இருப்பதும் தவறு.*

*அதேபோல், 'நானே பெரியவன்’ என்று சொல்வது அகங்காரம்; ஆகவே, அதுவும் தவறு'' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அல்லவா?*

http://www.srimahavishnuinfo.blogspot.com

*ஆனால், இறைவனுக்கு இதெல்லாம் பொருந்தாது.*

தன்னை 'அடியேன்’ என்று சொல்லிக்கொண்டே அனைவரிடமும் பழகி, எல்லோரையும் மதித்து வாழ்ந்தவர் யார் தெரியுமா? ஸ்ரீராமச்சந்திர பிரபுதான் அவர்.

ravi said…
தன்னை அவதாரமாக அவர் ஒருபோதும் காட்டிக் கொள்ளவில்லை.

எப்போதும், எங்கும் தன்னை 'அடியேன்’ என்றுதான் சொல்லிக் கொண்டார்.

விஸ்வாமித்திரரிடம் 'அடியேன்’ என்றுதான் பணிந்தார்

. பரத்வாஜ முனிவரைப் பார்த்ததும், 'அடியேன்’ என்று சொல்லித்தான் நமஸ்கரித்தார்.

வசிஷ்டரைச் சந்தித்ததும், 'அடியேன்’ எனப் பரவசப்பட்டு வணங்கினார்.

அவ்வளவு ஏன்..? சமுத்திரராஜனிடம்கூட அப்படி 'அடியேன்’ என்று சொல்லித்தானே வழிவிடும்படி மூன்று நாட்கள் வேண்டினார்.

ஆனாலும் சமுத்திரராஜன், கடலைக் கடப்பதற்கு வழிவிடவில்லை.

பிறகுதான் ஸ்ரீராமன், 'என்னுடைய வில்லையும் அம்பையும் எடுத்து வாருங்கள். இந்தக் கடலை அப்படியே வற்றச் செய்கிறேன். அப்படி வற்றினால்தான், வானரங்கள் கடலைக் கடக்க, வழி கிடைக்கும்’என்றாரே, பார்க்கலாம்!!

ஆக... எவருக்கு, எப்போது, எதனால் அடிமையாக, தாசனாக, அடியவனாக இருக்கவேண்டுமோ, அப்போதெல்லாம் அப்படி இருப்பதே சிறப்பு என்பதை வாழ்ந்து காட்டிய அவதார புருஷன் ஸ்ரீராமபிரான்.

சரி... 'நானே பெரியவன்’ என்று பறைசாற்றிய பகவான் யார் தெரியுமா?

அவர்... ஸ்ரீகிருஷ்ணரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?

கீதையில், பல இடங்களில், 'நானே பெரியவன்’ என்று அர்ஜுனனுக்கு அருளியுள்ளார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

எதற்கெடுத்தாலும், எங்கே தீங்கு நேர்ந்தாலும், 'சங்கை ஊதிவிடுவேன்

;
ravi said…
சக்கரத்தை ஏவி விடுவேன்’ என்பது போல், தயாராக, துடிப்புடனும் விழிப்புடனும் அஞ்சாநெஞ்சனாக, 'நானே பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னவர், ஸ்ரீகிருஷ்ணன்.

அதனால்தான் அவருக்கு 'சர்வாசு நிலையஹ’ எனும் திருநாமம் உண்டானது.

'இந்த உலக உயிர்கள் அனைத்துக்கும் இருப்பிடமாகத் திகழ்பவன்’ என்று இதற்குப் பொருள்.

உலகத்து மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக, அடைக்கலம் தருபவனாக இருப்பவன்தானே, மிகப் பெரியவன்! அப்படியெனில், பகவான் சொன்னதில் தவறென்ன இருக்கிறது?

இப்படித்தான்... கீதையின் 16-வது அத்தியாயத்தில், அசுரர்களையும் தேவர்களையும் பிரித்துப் பகுத்து எடுத்துரைக்கிறார் அர்ஜுனனிடம்!

இதையெல்லாம் கேட்ட அர்ஜுனனுக்கு சின்னதாக ஒரு பயம், பதற்றம், குழப்பம்!!

'அசுரர்களையும் தேவர்களையும் பற்றிச் சொல்கிறானே கண்ணன்...

நம்மை இவன் அசுரனாக நினைக்கிறானா, அல்லது தேவர்களில் ஒருவனாக மதிக்கிறானா? என்று தவித்தான்; மருகினான்.

கண்ணனிடம் மெள்ள, 'அசுரர்கள் என்பவர் யார்?
தேவர்கள் என்பவர் யார்?

ஒற்றை வரியில் தெளிவாகச் சொல்லேன், கண்ணா! என்று கேட்டான்.

உடனே கண்ணபிரான்,

'சாஸ்திரங்களையும் அதன் விதிமுறைகளையும் யாரெல்லாம் அத்துமீறுகிறார்களோ அவர்கள் அசுரர்கள்.

அந்த சாஸ்திரத்தையும் அதன் விதிமுறைகளையும் போற்றி, அதன்படி யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் தேவர்கள்! என்றார்.

உடனே அர்ஜுனன், 'சரி கண்ணா, நான் யார்? என்று கேட்டான்.

'இதிலென்ன சந்தேகம்? உன்னிடம் எத்தனை முறை 'நான் பெரியவன்... நான் பெரியவன்... என்று என்னைச் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல், என் நல்லுரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த நீ, தேவர்களில் ஒருவன் தான்!! என்று சொல்லிப் பூரித்தார் கண்ணபிரான்.

இதில் வியந்தும் நெகிழ்ந்தும் போனான் அர்ஜுனன்.

ஒருநாள் மாலையில், தன் கூந்தலைத் தோகைபோல் விரித்து, நெய் தடவிக்கொண்டிருந்தாளாம் திரௌபதி.

அவளின் அந்தத் தலைவிரிகோலத்தைக் காணச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணன், 'ம்... சீக்கிரம், சீக்கிரம்’ என்று விரட்டி, அவளை உடனே தலைவாரிக் கொள்ளச் செய்தானாம்.

நல்லதொரு பொழுதில், அவள் சிறிது நேரத்துக்குத் தன் கூந்தலை முடிந்துகொள்ளாமல் இருந்ததையே காணப் பிடிக்காத கருணையாளனான கண்ணபிரான், 'துரியோதன - துச்சாதன ரத்தத்தைத் தடவிக் கொள்ளும் வரை, என் கூந்தலை முடிய மாட்டேன்’ என்று அவள் சபதமிட்டபோது, பேசாமல் இருப்பானா, என்ன?

அதைத் தாங்கமுடியாதவனாக, வெகுண்டு எழுந்து அவன் நிகழ்த்தியதே மகாபாரத யுத்தம்!

'அடியேன்’ என்று ஸ்ரீராமனாகவும்,

'நான் பெரியவன்’என்று ஸ்ரீகிருஷ்ணனாகவும் அவதரித்து,

உலகுக்கு எப்படியெல்லாம் உணர்த்தியிருக்கிறார் பாருங்கள்,

பகவான்! 'அடியேன்’ எனப் பணிந்தது ஸ்ரீராமரின் காலம்.

'சக்கரத்தை எடுப்பேன்’ என வியூகத்துக்குத் தயாராக இருந்தது ஸ்ரீகிருஷ்ணனின் காலம். துவாபர யுகத்தின் மாறுபாடு அது!

சரி... 'நான் பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னாலும், கண்ணன் அப்படியே இறுமாப்பும் கர்வமுமாகவே இருந்துவிட்டானா என்ன?!!
ravi said…
🌹🌺"யானை ஏற முடியாதபடி, 70 சிவன் கோவில்கள் கட்டிய சோழன்...!.. விளக்கும் எளிய கதை 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில் கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களையும் கொண்டது.

🌺திருவானைக்கா எனப்படும், திருவானைக்கோவில் திருச்சிக்கு
அருகே அமைந்துள்ள மாபெரும்சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர்.

🌺இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான #நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது.

🌺முன்னொரு காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது.

🌺சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

🌺சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.

🌺யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.

🌺சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.

🌺இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

🌺சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான்.

🌺அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

🌺திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

🌺கடும் கோடை காலத்திலும், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

🌺திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம், நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.

🌺அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி
என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🌹🌺🌻


ravi said…
ராம ராம ராம ராம !!

ராம் என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும்,

அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்புடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும்.

தாரக மந்திரம் என்கிற ஒரு சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லச்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும்

கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.

ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.
கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.

பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.

ராம நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து. நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும்.

பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.
நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.

நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.

நாமம் தாய்-தந்தை போன்றது.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.

சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை, ஸ்வதர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால்தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.

நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.

நாமம் சொன்னால் பகவானே வந்துவிடுவார்
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.

நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.

நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.

நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.
நாமத்தை பரபிரும்மாக நினைப்பவன், பரபிரும்மாகவே ஆகிவிடுவான்.

ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்! !
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 403* 🙏🙏🙏started on 7th Oct 2021

*155*
ravi said…
*155 निरीश्वरा - நிரீச்வரா -*

யாருடைய எந்த கட்டுப்பாடும் இல்லாதவள்.

தானியங்கி. அவளே ஈஸ்வரன் ஈஸ்வரி.

சர்வ சக்தியான அவளுக்கு மேலே யார்?
ravi said…
அபிராமி பட்டர் இப்படி பாடுகிறார்

தவளே அவள் எங்கள் சங்கரனார் மனைமங்களமாம்

அவளே அவர்த்தமக்கு அன்னையும் ஆயினள்...

ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக தொண்டு செய்யுமெனில்... 💫💫💫
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 402* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️

103
ravi said…
நிதே நித்யஸ்மேரே நிரவதிகுணே நீதிநிபுணே

நிராகாடஜ்ஞானே நியம பரசித்தைக நிலயே

நியத்யா நிர்முக்தே நிகிலநிகமாந்த ஸ்துதபதே

நிராதங்கே நித்யே நிகமய மமாபி ஸ்துதிமிமாம்

103
ravi said…
மிகவும் அற்புதமான ஸ்லோகம் ..

இந்த ஸ்லோகமும் நூறாவது ஸ்லோகமும் தினமும் சொல்லிக்கொண்டு வந்தால் நாம் நம் அகங்காரம் மமகாரம் இரண்டிலிருந்தும் தப்பிக்கலாம் ...

கவி இப்படி சொல்கிறார்

💫 அம்மா உனை கேசாதி பாதம் வரை எனக்கு தெரிந்த வார்த்தைகளால் பாடியுள்ளேன் ..

அதில் கண்டிப்பாக என் அதிகபிரசங்கித் தனம் அதிகம் இருக்கும் ...

இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் என் ஸ்லோகங்களை ஏற்றுக்கொள் அம்மா

💫 இதையே அபிராமி பட்டரும் சொல்கிறார் .. அபிராமி அன்னையே ஏதோ நான் உளறினாலும் அங்கங்கே உன் நாமங்களை சொல்லி இருக்கேன் அதனால் நான் பாடிய 100 பாடல்களையும் உன் தோத்திரங்களாக ஏற்றுக்கொள்

💫 அம்மா என் வர்ணனை கொஞ்சம் பிறருக்கு விரசமாக தெரியலாம்

ஆனால் நான் ரசித்து பாடுவது முழுதும் என்னை பெற்ற உன்னை பற்றி ...

குழந்தை தாய்ப்பாலுக்கு ஏங்குவது விரசமாகுமா அம்மா ?

💫 மேலும் நான் சொன்ன வர்ணனை உன் பாத தூசிக்கு சமமாகுமா ?

💫 என்னை யோசிக்க வைத்து என்னை எழுத வைத்தது நீ அன்றோ ...
ravi said…
இத்துடன் சௌந்தர்யலஹரி நிறைவு பெறுகிறது ..

மிகவும் அனுபவித்து ரசித்து உள் வாங்கி போட்ட பதிவுகள் ..

தவறு தவறு நான் யார் போடுவதற்கு

அவள் போட வைத்த பதிவுகள் ..

எல்லோருக்கும் ஆனந்தமும் சௌந்தர்யமும் அலை போல் வாழ்க்கையில் நிலைத்திருக்க அன்னை அருள் செய்யட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
கண்ணா* நீ வளர்ந்ததால் அன்றோ மதுரா மதுரம் ஆனது

அன்று யானை ஒன்றை காப்பாற்றி

தானவன் யானயாய் வந்தவனை கொன்று

யானையை காத்தும் அழித்தும் மாயாஜாலம் செய்கின்றாய் ...

ஈசனும் யானை ஒன்றை குழந்தையாய் ஈன்று

யானை ஒன்றை கிழித்தானே அது போன்றோ இது *கண்ணா*

கண்ணா வாமன அவதாரமும் மதுராவில்

சத்ருக்னன் தலைநகராக கொண்டதும் மதுராவே

நீயும் தோன்றி மதுராவை மதுரம் ஆக்கினாயே

அடியார்க்கும் ஆழ்வார்க்கும் அடியேன் நான்

தரம் உண்டோ இவன் என்றே நினையாமல்

தேன் சிந்தும் கவி படைக்கும் திறன் தனை அள்ளித் தருவாய் *கண்ணா* ..

திருப்பித் தந்திடுவேன் உனக்கே அதை என் பாமாலையாய் என்றும் *கண்ணா* 💫💫💫💫💫💫💫💫
ravi said…
வளவெழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள்

கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை

துளவத் தொண்டாய தொல்சீர் தொண்டரடிப்பொடி சொல்

இளைய
புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே!”💥💥💥
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*❖ 24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா =*

பவளத்தின் பிரகாசத்தை பழிக்கும் உதடுகளைக் கொண்டவள்.👄
ravi said…
அம்மா உன் பவள இதழ்களுக்குள் முத்துக்கள் கோத்தே புன்னகை பிறந்து வளர்ந்ததோ ...

வண்டுகள் மதுர கவி ஆனதோ உன் இதழ் சுவை கண்டே

கொவ்வை செவ்வாயில் உன் குமிழ் சிரிப்பு கண்டு மானிக்கங்கள் மூர்ச்சை ஆனதோ

கொட்டும் வையிரங்கள் சேர்ந்தே கும்மி அடித்து குற்றாலம் போல் கருணை நீர்விழுச்சி தந்ததோ

என் வீழ்ச்சி எதுவும் இல்லாமல் உன் பத்மராக கண்கள் என்னை உன் இமை போல் காத்து நின்றதோ 🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 127*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
ஏகபோக மாகிய விருவரு மொருவராய்

போகமும் புணர்ச்சியும் பொருந்துமாற தெங்ஙனே

ஆகலும் அழிதலும் அதங்கணேய தானபின்

சாகிலும் பிறக்கிலு மில்லையில்லை யில்லையே. 127
ravi said…
ஏகமனதுடன் ஆணும் பெண்ணும் கூடி இருவரும் ஒருவராகி புணர்ந்து போகம் செய்கின்ற சிற்றின்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக பொருத்தி ஒத்து இருக்கின்றதே

அது எங்ஙகனம்?

அதுபோல் ஏகமாக உனக்குள் செய்யும் யோகத்தால் சக்தியும் சிவனும் ஒன்றாகி கலந்து பேரின்ப அனுபவத்தை ஞானிகளும் சித்தர்களும் பொதுவாக இருப்பதை உணர்ந்தனர்.

அனைத்தும் ஆவதற்கும், அழிவதற்கும், அழகிற்கும் காரணம் சிவமே என்பதை அறிந்து அன்பு வைத்து தியானியுங்கள்.

தன்னம்பிக்கையுடன் பாடுபட்டு மெய்நிலை அடைந்தவர்களுக்கு இப்பூவுலகில் சாவதும் பிறப்பதும் இல்லாது போகும்
ravi said…
முகுந்தமாலா 29,30 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில இன்னிக்கு 29ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம்.

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।

हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥

ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்

யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி ।

ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின்

தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
எனக்கு இது கூட தெரியலையே, நான் இவ்ளோ தீனனா இருக்கேனேன்னு அந்த சரணாகதியில தன்னுடைய குறைகளை நினைச்சு பகவான்கிட்ட முறையிடறது ஒரு அங்கம்னு சொல்றார்.

நாராயண நாமம்ங்கிறது உசந்தது. ஸந்யாசிகள் கூட நமஸ்காரம் பண்ணினா, நாராயண, நாராயண, நாராயண, நாராயண னு ஆசீர்வாதம் பண்ணுவா. நாராயண நாமத்துக்கு அவ்ளோ மஹிமை. விஷ்ணு சஹஸ்ரநாமத்துல நாராயண நாமம் நாலு தடவை வர்றது. திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்துல

“குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்றதாயினுமாயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

ன்னு சொல்றார்
ravi said…
சக்தி வாய்ந்த ஐந்து சிவ மந்திரங்கள்
ravi said…
சக்தி வாய்ந்த ஐந்து சிவ மந்திரங்கள்
ravi said…
உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு.
பிறந்த ஜாதகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு.

சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ravi said…
பஞ்சாக்ஷர சிவந்திரம்:

ஓம் நமசிவாய

சிவபெருமானை போற்றிவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. "நான் சிவபெருமை வழிபடுகிறேன்" என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
ravi said…
ருத்ர மந்திரம் :

ஓம் நமோ பகவதே ருத்ரே

இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
ravi said…
சிவ காயத்ரி மந்திரம் :

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.
ravi said…
சிவா தியான மந்திரம்:

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத்
க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்
ravi said…
மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய



அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.
ravi said…
Listen and silent are two words with same alphabets. When you are silent you listen and when you really listen you are silent.



Don’t choose the one who is beautiful to the world; choose the one who makes your world beautiful.



Confidence comes from strength, and strength comes from continuous efforts.



Future is not what we planned for tomorrow, actually, it is the result of what we do today. So do the best in present. We will definitely enjoy the future.



Life is not about waiting for the storm to pass, it's about learning how to dance in the rain.



When you have eyes that see the best, a heart the forgives the worst and a mind that forgets negativity, your life is truly blessed.



People and time will teach you more 4han the books.
ravi said…
WABI SABI WAY



“Wabi Sabi” is a Japanese term that essentially means finding beauty in imperfection.



‘Wabi’ refers to living with humility and simplicity while being at one with nature,



‘Sabi’ is defined as the ability to accept the lifecycle of anything as it is - flaws and all.



The Japanese, for instance, often use the term to describe fading autumn leaves – changing over time, imperfect, yet beautiful.



In a world that is riddled with high-stress levels, fast-paced living, unrealistic pursuits of perfection, and a damaging affliction with materialistic wealth, ‘Wabi Sabi’ is an ancient Japanese way of life that can be just what we need right now, to save us from our total degeneration.



Wabi Sabi is an elegant philosophy that denotes a more connected way of living - a lifestyle, where we are deeply connected to nature, and thus, better connected to our truest inner-selves.



Wabi Sabi is a concept that motions us to constantly search for the beauty in imperfection and accept the more natural cycle of life. It reminds us that all things, including us and life itself, are impermanent, incomplete, and imperfect. Perfection, then, is impossible and impermanence is the only way.



Taken individually, Wabi and Sabi are two separate concepts:



Wabi is about recognizing beauty in humble simplicity. It invites us to open our heart and detach from the vanity of materialism so we can experience spiritual richness instead.



Sabi is concerned with the passage of time, the way all things grow, age, and decay, and how it manifests itself beautifully in objects. It suggests that beauty is hidden beneath the surface of what we actually see, even in what we initially perceive as broken.



Together, these two concepts create an overarching philosophy for approaching life: Accept what is, stay in the present moment, and appreciate the simple, transient stages of life.



Stoics have a term called ‘Amor Fati – a love of fate’ and Wabi Sabi preaches the same: You will find peace and freedom, and you will step onto the path of growth, once you begin yielding and surrendering to the imperfect flow of life.



Another quote from the Wabi Sabi philosophy that I resonate with is, 'There is a crack in everything, that's how the light gets in.'
Kousalya said…
நம் கண்ணன் காருண்யமானவன், அவனை நினைப்பதே மதுரமானதல்லவோ..... மதுராதிபதே....மதுரம் மதுரம் மதுரம் ..🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
Kousalya said…
காருண்ய ரச ஸாகரியின் சௌந்தர்யத்தை பருக எங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தற்கு நன்றிகள்...🙏🙏🪷🪷
ravi said…
ஆடம்பரம் எனும் பாதையில் செல்பவர்கள் தான் அடமானம் எனும் பாதையில் சிக்கி தவிக்கிறார்கள்.

வசதியான வாழ்க்கை தவறல்ல. வசதி தான் வாழ்க்கை என்பதுதான் தவறு.

வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான், இருந்தாலும், வாழ்வதிலும் பொருள் வேண்டும்.

நீங்கள் சேர்த்து வைக்கும் பொருட்களிலும், சொத்துக்களிலும் இல்லை மகிழ்ச்சி. நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது மகிழ்ச்சி.

எதிலும் அளவோடு இருந்தால் அவதிப் படவும் தேவையில்லை, அவமானப்படவும் தேவையில்லை.
- (ப/பி)

���� *இனிய காலை வணக்கம்* ����
ravi said…
*இல்லாத போது தேடல் அதிகமாகவும்.....!*

*இருக்கின்ற போதும் அலட்சியம் அதிகமாகவும் இருப்பதே வாழ்க்கையின் விநோதம்....!*

*இனிய காலை வணக்கம் ������*
Shivaji said…
We are blessed, thanks for your passion and contribution sir. 🙏🙏
Moorthy said…
தங்களின் விடா முயற்ச்சியும் சிறப்பான பதிவுகளும் மிகவும் அருமை... 👌🤝👏👏👏🪷
ravi said…
Rishi Patanjali: Parameshti Guru of Sri Adi Sankaracharya..

Sri Patanjali is an Avatar of Sri Adi Seshan, the 1000 headed Snake on whom rests Sri Maha Vishnu.

Sri Patanjali is said to be the master teacher on all subjects including Advaitam (a rare concise book with his authorship is said to be available, Yoga sutras etc.

During his mega class in Chidambaram, where close to a thousand students had joined to learn Grammar (Vyakaran).

To provide one to one interaction with the students, Sri Patanjali had to come to his original 1000 hooded snake form but none of the students would be able to withstand this form and so he had strongly instructed that no student will leave the class till it gets over and also no one will remove the screen behind which Sri Patanjali would be teaching them.
Once the class began, two things happened, in direct disregard to his instructions:
1. One student left the class to attend his nature call
2. One another curious student, removed the screen and thus all the children got exposed to the fiery form
Of Sri Patanjali and got burnt away.

While Sri Patanjali sat there utterly dejected with loss of so many students and none to transmit his knowledge, the lone boy returned back to the class. Happy to have found one student, Sri Patanjali transmitted his knowledge to Sri Gaudapada but cursed him to turn into a Bhramarakshas for disobedience. The antidote would be to successfully locate a capable student to whom he can transmit this knowledge.
Roaming in the forests for years, Gaudapada questioned various students but on receiving wrong answers, gobbled them up.
Looking at this, Sri Patanjali reincarnated himself as Sri Govinda Bhagvatpadacharya, answered all the questions and thus released Gaudapada from the curse.
We have installed an idol of Sri Patanjali inside the Cave in Omkareshwar, where Sri Adi Sankaracharya obtained Sanyassa deeksha from Sri Govinda bhagvadpadacharya.
ravi said…
🪷 *தினம் ஒரு பாசுரம்* 🪷

*இன்னைக்கு நாம சேவிக்க போறது திருப்பல்லாண்டு பாசுரம் ஆறு மற்றும் ஏழு*

*பாசுரம் 6*

*எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அாி உருவாக அரியை அழித்தவைன பந்தைன தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே*

*பொருள்*

பகவானே, இன்று நேற்றல்ல, ஏழேழ் பிறவிகளாக உன்னை வணங்கி உனக்கு அடியார்களாக இருக்கிறோம். திருவோணத் திருநாளில் அந்திப் பொழுதில் நரசிம்ம உருவம் கொண்டு இரண்யனை அழித்தவனுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

*பாசுரம் 7*

*தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்*

*கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*

*மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி*

*பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே*

*பொருள்*

ஆச்சாரியரிடம் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு (சமாஷ்ரயணம் செய்து கொண்டு, மந்திர உபதேசம் பெற்றுக் கொண்டு) உன்னுடைய புகழைப் பாடி வருகின்றோம். வாணாசுரனின் ஆயிரம் தோள்களை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தி வெற்றி கொண்ட பெருமானின் புகழுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்.......*

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

குருவின் முழுச் 'சொத்து'ம் சீடனுக்கு
'யதாவத்' சொல்லிக்கொடுப்பது என்பது பற்றிக் கொஞ்சம் விஸ்தாரம் பண்ணணும். அப்பா முழு ஸொத்தையும் பிள்ளைக்கு எழுதி வைக்கிற மாதிரி ஆசார்யன் தனக்குத் தெரிந்த வித்யை முழுதையும் சிஷ்யனுக்குச் சொல்லிக் கொடுப்பதுதான் இந்த 'யதாவத்'. இரண்டு பிள்ளை இருந்துவிட்டால் அப்பா ஒவ்வொருத்தனுக்கும் முழு ஸொத்து எழுதி வைக்க முடியாது.
ravi said…
ஆனால் குருவோ எத்தனை சிஷ்யாள் இருந்தாலும் ஒவ்வொருத்தனுக்கும் பூர்ணமகா வித்யாப்யாஸம் பண்ணுவிக்க முடியும். இது வித்யையின், அறிவின் விசேஷம். எத்தனை பங்கு போட்டாலும் குறையாத ஸ்ரீ அது.

ravi said…
சிஷ்யனிடம் பரம ப்ரேமையும், அவனுக்கு வழிகாட்டணும் என்பதில் முழு ஈடுபாடும், தனக்குத் தெரிந்த வித்தையை தன்னோடு போகாமல் நாலு பேரிடம் பிரகாசிக்கவேண்டும் என்பதாக அந்த வித்யையிடமே பக்தி - ப்ரேமைகளும் இருந்தாலொழிய இப்படிப் பூர்ணமாகக் கற்றுக்கொடுக்க முடியாது. இக் காலத்தில் அபூர்வமாகத்தான் அப்படிப் பார்க்க முடிகிறது. அடியோடு இல்லாமல் போய் விடவில்லை என்று இன்றைக்குப் பல துறைகளில் பெரியவர்களாக இருக்கப் பட்டவர்கள் தங்கள் ஆசிரியர்மார்களைப் பற்றிச் சொல்வதிலிருந்து தெரிகிறது, என்னிடம் பல இள வயஸுக்காரர்கள் 'தீஸில்' கொண்டு வந்து கொடுக்கிறார்கள், அவர்களுள் சொல்வதிலிருந்து தற்காலத்திலும் அப்படிப் பூர்ணமாக அநேக ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் நேர்மாறாக, 'கம்ப்ளெய்ன்ட்'களும் கேட்கிறேன்

ravi said…
ஆனால் உபநிஷத்துக்களைப் பார்த்தால், ஏதோ ரொம்ப ஸ்வல்பமான விலக்குத் தவிர அக்காலத்தில் அத்தனை ஆசார்யர்களுமே தாங்கள் கற்றறிந்த வித்யையைப் பூர்ணமாக சிஷ்யர்களுக்கு உபதேசித்தார் என்று தெரிகிறது. அத்தனை கர்வியாக இருந்த ச்வேதகேதுவே அப்பாக்காரர் கேட்ட ஸமாசாரம் தனக்குத் தெரியவில்லை என்கிறபோது, தன்னுடைய குருமார் அதை உபதேசிக்கவில்லை என்று சொல்லி, கூடவே, "அவாளுக்கும் விஷயம் தெரியாது போலேயிருக்கு, தெரிஞ்சிருந்தா எனக்கு ஏன் சொல்லித்தராம இருந்திருக்கப் போறா?" என்று சொல்கிறான். அதொன்றே போதும். அந்த ஸந்தர்ப்பத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரம் இப்படி ஒன்று சொன்னது விசேஷம்.

'
ravi said…
ப்ரச்நோபநிஷத்'திலிருந்து கொஞ்சம் முன்னே சொன்னேன். அதன் முடிவிலே சிஷ்யர்கள் ஆசார்யரைப் பார்த்து, "அவித்யையின் அக்கரையில் எங்களைச் சேர்த்த நீங்கள்-னா எங்க அப்பா!" என்று வருவதாகச் சொன்னேன். ஆரம்பத்தை இப்போது சொல்கிறேன்.

ravi said…
ஆறு பேர் சிஷ்யர்களாகப் புறப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களே குருஸ்தானம் வரிக்கும் யோக்யதை பெற்றவர்கள் - ஸுகேசர், ஸத்யகாமர், கார்க்யர், கெனஸல்யர், பார்கவர், கபந்தி என்றிப்படி ஆறு பேர். அவர்களுக்கும் ப்ரஹ்ம வித்யையில் இன்னும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தன. தெரிந்துகொள்ளணும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்காக ஆறு பேரும் 'பகவந்தர்' என்று உபநிஷத்

ravi said…
சிறப்பித்துச் சொல்லும் மஹரிஷி பிப்பலாதரை ஆசார்யராக வரித்து, உபஹாரமாக-

அதாவது, குரு காணிக்கையாக - ஸமித்தை எடுத்துக்கொண்டு அவரிடம் போனார்கள். ஸமித்து என்றால் வெறும் சுள்ளிதான். ஹோமத்திலே போட உபயோகமாகிற சுள்ளி. 'வெறும்' சுள்ளி என்று நான் சொன்னதையே பெரிய தக்ஷிணையாக அந்தக் கால ரிஷி-குருமார் நினைத்தார்கள். அத்தனை எளிமை!அதிலேயே வஸ்துவைவிட வஸ்துவைத் தருகிறவரின் மனோபாவத்தை மதிக்கத் தெரிந்த பண்பும்!

ravi said…
இது யோக்யதையுள்ள சிஷ்யர்களென்றால் தக்ஷிணையைப் பொருட்படுத்தாமல் வித்யை போதிக்கிறதைக்காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாகவே இன்னொன்றும், அதாவது யோக்யதை போதாதவன் என்றால் அவன் எத்தனை பெரிசான தக்ஷிணை கொடுக்கிறானென்றாலும் அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வதில்லை என்றே அந்த குருமார்கள் இருந்திருக்கிறார்கள். 'ஸமுத்ரம் சூழ்ந்த பூமி பூராவையும் தக்ஷிணையாகத் தரக் கூடியவனாயிருந்தாலும் யோக்யதை போதாதவன் என்றால் அவனுக்கு உபதேசிக்கப்படாது' என்றே மதுவித்யை உபதேசிக்கும் KS சொல்லியிருக்கிறார். ஆசார்யாளும் இதை நினைப்பில் கொண்டு தம்முடைய 'உபதேச ஸாஹஸ்ரீ' ஆரம்பத்தில் 'ஸமுத்ரம் சூழ்ந்த லோகம் பூராவையும், அதிலுள்ள பூர்ணமான செல்வங்களோடு குருவுக்குத் தந்தாலும் அவர் தருகிற உபதேசமோ அதற்கும் பெரிதானது என்று சாஸ்திரம் சொல்கிறது' என்கிறார். இந்த விஷயம் இருக்கட்டும்.

ravi said…
ஸுகேசர் முதலான ஆறு பேர் ஸமித்தை எடுத்துக்கொண்டு பிப்பலாதரிடம் போனார்கள். பெரியவர்களாக இருக்கப்பட்ட ஆறு பேர் தங்களுடைய வித்யா ஞானம் பூர்த்தியாகவில்லை என்று ஒருத்தருக்கொருத்தர் மனஸ்விட்டுச் சொல்லிக் கொண்ட சிஷ்யர்களாகப் புறப்பட்டார்கள் என்பதிலிருந்து அவர்களுடைய விநய மனப்பான்மையையும் வித்யா தாஹமும் தெரிகிறது. 'வித்யா -விநய ஸம்பன்ன' என்று சேர்த்துச் சேர்த்தே நம்முடைய மரபில் சொன்னது நடைமுறையிலேயே நடந்த ஸமாசாரந்தான் என்று தெரிகிறது. அது இருக்கட்டும்.

பிப்பலாதருக்கு ப்ரஹ்மவித்யை பூர்த்தியாகத் தெரியும் என்று இவர்களுக்குத் தெரிந்ததாலேயே அவரிடம் உபதேசம் பெறுவதற்குப் புறப்பட்டது. அப்போது இவர்கள், அவர் பூர்த்தியாக அறிந்ததைத் தங்களுக்கும் பூர்த்தியாகச்சொல்லிக் கொடுப்பார் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டே புறப்பட்டதாக வருகிறது. "தத் என்கிற ப்ரஹ்மத்தைப் பற்றி ஸர்வமும் அவர் நமக்குச் சொல்லுவார்" என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.

அப்படியே அவரிடம் போக, அவர், "இன்னும் ஒரு வருஷம் கட்டுப்பாட்டோடு தபஸ் பண்ணிக்கொண்டு முறைப்படி ச்ரத்தையோடு இங்கே இருங்கோ!அப்புறம் கேட்கவேண்டியதையெல்லாம் உங்கள் இஷ்டம்போல கேட்டுக்கோங்கோ. நீங்கள் கேட்பது எனக்குத் தெரிஞ்சிருந்தால் தெரிஞ்சமட்டில் முழுக்க - ஸர்வமும் - சொல்லித் தரேன்" என்கிறார்.

ஒரு குருவானவர் தாம் அறிந்த ஸர்வமும் சிஷ்யனுக்கு போதிக்காமல் விடமாட்டார் என்பதற்கே இதைச் சொல்லவந்தேன்.

ரொம்ப அழுத்தமாக ஒன்று ஞாபகம் வருகிறது. ஜனகருக்கு யாஜ்ஞவல்க்யர்

அநேக உபதேசங்கள் கொடுத்துக் கொண்டே போகிறார். ஒவ்வொரு

உபதேசத்தையும் கேட்டவுடன் ஜனகருக்கு ஸந்தோஷம் பொங்கிக் கொண்டு வருகிறது, 'இதோ ஆயிரம் பசு, ஆனை மாதிரி காளையோடுகூடத் தருகிறேன்' என்கிறார். ஆனால் யாஜ்ஞவல்க்யர், "பூர்த்தியாக உபதேசம் கொடுக்காமல் தக்ஷிணை வாங்கிக் கொள்ளக்கூடாதென்று என் அப்பா தீர்மானம்" என்று பிதாவுக்குப் பெருமை கொடுத்துச் சொல்லி, தேடி வருகிற ஸம்பாவனையை நிராகரிக்கிறார். சிஷ்யன் என்ன தக்ஷிணை தருகிறான் என்பதைவிட தாம் முழுக்கச் சொல்லிக் கொடுக்கணும் என்பதைத்தான் குரு முக்யமாக நினைத்தார் என்று இங்கே தெரிகிறது.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"சாமி கொடுத்த பணம்!"-திருப்பித் தந்த ஏழைப் பெண்.

("திருப்பித் தரவேண்டாம். நீயே வச்சுக்கோ"-பெரியவா)

(அவள் சென்ற பின் பெரியவா, சிஷ்யர்களிடம் சொன்னார்; "பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் நானும்ஒரு வட்டிக்கடைக்காரன் ஆகியிருப்பேன்!")

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-7
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

கணவனை இழந்த ஒரு குடியானவப் பெண்மணி, பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள்.

"ரொம்பக் கஷ்டப்படறேன், சாமி. இரண்டு புள்ள குட்டிங்க இருக்கு. அவங்க போயி இரண்டு வருஷமாச்சு.ஆபீசிலேர்ந்து என்னவோ பணம் வரும்னு சொன்னாங்க. இன்னும் வரலை. பெரிய அதிகாரிங்ககிட்டேவெல்லாம் நேர்ல போய்ச் சொன்னேன். சாமிதான் வழி செய்யணும்" என்று வேண்டிக் கொண்டாள்.

பெரியவாள் அவளுக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாடு போடச் சொன்னார்கள். அவள் விடை பெற்றுக் கொள்ள வந்தபோது பஸ் டிக்கெட்டுக்காக இருபத்தைந்து ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள்.

அவள் வீடு திரும்பியதும் ஒரு பதிவுத் தபால் காத்துக் கொண்டிருந் தது. அவள் புருஷன் வேலை பார்த்த கம்பெனியிலிருந்துதான்உள்ளே செக் ஒன்றரை லட்சத்துக்கு பிராவிடென்ட் தொகை, கிராஜுவிட்டி எல்லாமாக.

மறுநாளே மறுபடியும் தரிசனத்துக்கு வந்தாள் அந்தப் பெண்மணி. மகிழ்ச்சியுடன் பணம் கிடைத்த விவரத்தைப் பெரியவாளிடம் தெரிவித்து விட்டு ரூபாய் இருபத்தைந்தை எதிரே வைத்தாள்.

"சாமி கொடுத்த பணம்!"

"திருப்பித் தரவேண்டாம். நீயே வச்சுக்கோ. இந்த இருவத்தஞ்சு ரூபா வந்தப்புறம்தானே லட்சம் வந்தது. இதுவும் உங்கிட்டயே இருக்கட்டும்..."

உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு போனாள் அந்தப் பெண்மணி. அவள் சென்ற பின் பெரியவா,சிஷ்யர்களிடம் சொன்னார்;

"பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டிருந் தால் நானும் ஒரு வட்டிக் கடைக்காரன் ஆகியிருப்பேன்!"


ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 8 started on 6th nov
ravi said…
*பாடல் 4 ... வளைபட்ட கை*

(மனை மக்கள் எனும் மாயை அகல அருள்வாய்)

வளைபட்ட கைம் மாதொடு,

மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!!💐💐💐
ravi said…
ஆன்ம விசாரத்திற்கு முதல் எதிரியாக மனைவி மக்களைக் கூறுகிறார்.

மனிதன் பல உறவினர்களிடம் பலவிதமாக அன்பு செலுத்துகிறான்.

ஆனால் அந்த அன்பு இறைவனிடம் செலுத்தும் அன்பிற்கு
இடையூறாக இருக்கக்கூடாது.

எதாவது பதில் பிரதிபலனை எதிர்பார்த்து
செலுத்தும் அன்பு, பாசம், பற்று எனப்படுகிறது.

அற வாழ்வில், துணை செய்யும் மனைவி மக்கள் வாய்க்கப்பெற்றால்
அது பெரும் பாக்கியமாகும்.

வளை கைக்கு அணியாக இருப்பதுபோல்,
மனைவி இல்வாழ்க்கைக்கு அணியாகத் திகழ வேண்டும்.

இல்லை
எனில் அந்த வளையே தளையாக (விலங்காக) மாறிவிடும்.

இந்தத் தளை
நீங்க, கிளை கிளையாக சுற்றம் சூழ, போருக்கு வந்த சூரனை வேறோடு
அழித்த முருகனின் துணையை நாடுகிறார்.

சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும் முறையே ஆணவ
கன்ம மாயா மலங்களின் உருவங்கள்.

மனைவி மக்கள் என்னும் பந்தமே
மும்மதங்களையும் சேர்த்து வைக்கும் இயல்பின.

அவர்கள் பேரில்
கொண்ட பற்று மாயா சொரூபம். அவர்களை ரட்சித்து காக்கும் முயற்சியே
கரும பந்தம்.

என் மனைவி என் மக்கள் என்கிற இடையறாத எண்ணமே
ஆணவம்.

முருகா நீ என்னைக் காப்பாற்றுவதற்கு கடமைப்பட்டவனாயிற்றே.

இப்படி
நான் தவிப்பது என் ஆன்மாவின் உண்மை சொரூபத்திற்கு தகாது.

அது
உன் கருணை திறத்திற்கும் தகாது' என்கிற குறிப்பில் இரண்டு முறை
தகுமோ தகுமோ' என்கிறார்.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 392* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ *ஸம்வத்ஸரோவ்யால* :
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
*92. ஸம்வத்ஸராய நமஹ (Samvatsaraaya namaha)*
ravi said…
அந்தச் சமயம் அங்கிருந்த ஒரு பூனை ஒலி எழுப்பிடவே,

அதைக் கண்டு அந்த எலி நடுங்கியது.
அதனால் அதன் வாயில் கவ்வியிருந்த திரி தூண்டப்பட்டு, அணையும் நிலையில் இருந்த தீபம், பிரகாசமாக எரியத் தொடங்கியது.

திரியைக் கவ்விச் செல்வதே நோக்கமாக இருந்ததே தவிர, தீபத்தைத் தூண்டி எரிய வைக்க வேண்டும் என்றோ,
ஸ்ரீ இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றோ அந்த எலிக்கு நோக்கமில்லை.
ravi said…
*ஆசமனத்தைக் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மட்டும் செய்வது ஏன்?*
ஆசமனத்திற்கு பல விளக்கங்கள் உண்டு. சந்தியா வந்தன, பிரம்ம யக்ஞம், ஔபாஸனம், ஸமிதாதானம், பித்ரு தர்ப்பணம் கோயிலில் ஆறுகால பூஜைகள், வீட்டில் நித்ய பூஜை போன்ற பல முறைகளிலும் மல ஜலங்கழித்தபின் தேக சுத்தியிலும் ஆசமனம் செய்யப்படுகிறது, செய்கின்ற பூஜையின் ஸங்கல்பத்திற்கேற்றவாறு ஆசமன மந்திர விளக்கங்கள் மாறும். பொதுவாக உடல் சுத்திக்காகவே ஆசமனம் செய்யப்படுகின்றது. உடல் சுத்திக்கான ஆசமனத்தில் உடலில் உள்ள தேவதைகளே அவற்றை ஏற்கின்றனர். சந்தியாவந்தனத்தில் சூர்ய சவிதா மண்டல தேவதைகளும் தேவ மண்டல தேவதைகளும் ஆசமனத்தை ஏற்கின்றனர். இவ்வாறாக இதன் விளக்கங்கள் பலப்பல.,
ஆசமனத்தில் கீழே பாத்திரத்தில் இருக்கும் வரை அது சாதாரண நீர்! வலது கை உள்ளங்கையில் ஊற்றப் பட்டவுடன் அது “பிந்து கோஷ்ட தீர்த்தமாகிறது!“ கிழக்கே பார்த்து அமர்ந்து வலது கையை உள்ளே தீர்த்தம் ஏற்க குழியாக மடித்தால் அதற்கு “பிந்து கோஷ்டம்” என்று பெயர். பிந்து கோஷ்டத்தில் தீர்த்தத்தை ஏந்தி “கேசவா, நாராயணா/அச்யுதா/அனந்தா என்று இறைநாமாவைத் துதித்திட அது ஆசமன பூஜைக்கேற்ப தேவதீர்த்தம், பித்ரு தீர்த்தம், ஸ்வதா தீர்த்தம், ஸாவித்ரீ தீர்த்தம் என பல வகைப் பெயர்களில் அனுக்ரஹ சக்திக்கேற்ப மாற்றப்படுகிறது.
கிழக்கே இந்திர மண்டலத்தின் பகுதியில் வாலகில்ய மஹரிஷிகள் தவம் புரிகின்றனர். இவர்கள் பிந்து கோஷ்ட தீர்த்தத்தை மட்டுமே அருந்திக் கடுமையான தவம் புரிகின்றனர். எதற்கு? யார் ஒருவர் பிந்து கோஷ்ட தீர்த்தம் மூலம் விஷ்ணு நாமங்களுடன் ஆசமனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்ம வினைகளில் ஒரு சிறிதைத் தாங்கள் ஏற்று அனுபவிப்பதற்காக! என்னே தியாகம்!!
எனவே வாலகில்ய மஹரிஷிகள் தவம் மேம்படுவதற்காகவும், அவர்களுடைய ஆசியினைப் பெறவும் கிழக்கு நோக்கி ஆசமனம் செய்யப்படுகின்றது.
வடக்கு திசையில் ஆசமனம் ...
ஸ்ரீவித்யா மேரு சக்கரத்தில் 43 கோடி அம்பிகைகள், தெய்வ மூர்த்திகள் உறைகின்றனர் என்று நாமறிவோம். வடக்கு காந்ததிசைப் பகுதியில் “சுக்ல வர்ணா” என்ற அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.
காந்த சக்தியானது உச்சிக் காலத்திலும் மாலையிலும் சுக்ல வர்ணா அம்பிகையிடம் பூசுவர்ணா, நீளாக்ய வர்ணா, பர்பராலிக வர்ணா, பலிபந்தன வர்ணா, பாச வர்ணா என்று ஐந்து உபதேவியர் உண்டு. இவர்களே நம்முடைய பஞ்சேந்திரியங்கள் செய்த தீவினைகளின் தீயசக்தியை ஓரளவு குறைத்து நம் தேகத்தை புனிதப்படுத்த உதவுகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தினாலும் நாம் செய்கின்ற நல்ல, தீய காரியங்களுக்கேற்ப நம் தேகத்தின் பஞ்சபூத சக்தி கூடும்/குறையும். மனிதன் தீர்க ஆரோக்யத்துடன் வாழ குறித்த அளவு பஞ்சபூத சக்தி தேவை. பொதுவாக நித்ய ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் இதைத் தர வல்லதாம். தீய காரியங்களில் எண்ணங்களில், ஈடுபட்டால் இப்பஞ்சபூத சக்தி குறையும். இதனால் தான் நோய்கள், மனவருத்தங்கள் உண்டாகின்றன.
வடக்குத் திசையில் செய்கின்ற ஆசமனத்தின் போது உள்ளங்கையில் ஏந்துகின்ற தீர்த்தமானது சுக்ல கோஷ்ட தீர்த்தமாக மாறுகிறது. இதில் கேசவா, நாராயணா/அச்சுதா, அனந்தா என்ற இறை நாமங்கள் சேர்ந்திட இவற்றையே சுக்ல தாரிணியின் ஐந்து உபதேவிகள் நம் உடலில் 72 ஆயிரம் நாடிகளிலும் சுழலச் செய்கின்றனர். கோவிந்தா என்று ஆசமனத்தின் கடைசி மந்திரம் மூலம் தீர்த்ததைக் கீழே விடுகையில் அதனையே அவர்கள் அர்க்யமாக ஏற்று நம்முடைய பஞ்ச இந்தியங்களின் மூலம் விளைந்த தீவினை கர்ம வினைகளை ஓரளவு நீங்கச் செய்கின்றனர். இந்த ஆசமனம் செய்த பின்னர் தான் அடுத்து வரும் பூஜையைச் செய்வதற்கான தகுதியை நம் உடல் பெறுகிறது.
எனவே, இனியேனும் ஆசமனத்தை ஏதோ மும்முறை நீரைக் குடிக்க வேண்டும், ஒரு முறை கீழே ஊற்ற வேண்டும் என எண்ணாது இதன் மஹிமையினை உணர்ந்து சிரத்தையுடன் செய்தல் வேண்டும்.
கோயில் தீர்த்தக் குளங்களைப் போல் ஒரு சாதாரண மனிதனும் தன்னுடைய வலக்கை உட்புறத்தைக் குழிவாக அமைத்துப் பிந்து கோஷ்டத் தீர்த்தம், சுக்ல கோஷ்ட தீர்த்தங்களை எளிமையான மந்திரங்கள் மூலம் உருவாக்க முடியுமென்றால் எத்தகைய அரிய மந்திரங்களை இந்த மானுடப் பிறவியில் பெற்றிருக்கிறோம்!
இந்த எளிய ஆசமன மந்திரம் அனைவருக்கும் உரித்தானது. நாள் முழுதும் பூஜை, ஹோமம், தர்ப்பணம் போன்ற எவ்வழிபாட்டிற்கும் முன்னரும் இந்த எளிய ஆசமனத்தைச் செய்து அனைவரும் பயனுற வேண்டும்.
ravi said…
*கீதையின் பெருமை*
*"""""""""""""""""""""""""""""""""""*
பெரியவர் ஒருவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டு
வாசலில் அமர்ந்தபடி கீதையை படித்துக்
கொண்டே இருப்பார்.

இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் ,

" தாத்தா!

எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே.

இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,

" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்
இருக்கும் ".

"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு
மனப்பாடம் ஆயிருக்குமே!

அப்புறம் ஏன்
இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.

தாத்தா சிரித்தபடி கூறினார்,

" எனக்கு ஒரு உதவி செய்.

நீ செஞ்சு
முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".

இளைஞன் கேட்டான்,

" என்ன உதவி தாத்தா? "

பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
இருந்த ஒரு மூங்கில் கூடையை
எடுத்தார்.

அதில் அடுப்புக் கரி
இருந்தது.

அதை ஒரு மூலையில்
கொட்டினார்.

பல நாட்களாகக் கரியை
சுமந்து சுமந்து அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.

பெரியவர் சொன்னார்,

" தம்பி,

அதோ இருக்குற பைப்புல
இருந்து இந்தக் கூடையில கொஞ்சம்
தண்ணி பிடியேன்"

இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.

இருந்தாலும் பெரியவர் சொல்லி
விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர்
நிரப்பி எடுத்து வந்தான்.

அவன் வந்து
சேருவதற்கு முன்பே எல்லா நீரும்
தரையில் ஒழுகிப்போனது.

பெரியவர் சொன்னார்,

" இன்னும் ஒரு முறை " . இளைஞன்
மீண்டும் முயன்றான்.

ஆனால் மூங்கில்
கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப் போனது.

பெரியவர் கேட்டார்,

" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு
முறை மட்டும் " .

இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்.

"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி
செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல்
ஓடிவிடுவோம்.

அவர் எந்தப் புத்தகத்தைப்
படித்தால் எனக்கென்ன வந்தது? "
தண்ணீர் பிடித்தான்.

வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.

" தாத்தா,

இந்தாங்க உங்க கூடை.

இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா?

எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க " என்றான்.

அவர் புன்னகையோடு சொன்னார்,

" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்
தெரியும்.

நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்
போகும் போது இதோட உட்புறம் எப்படி
இருந்தது? " என்றார்.

இளைஞன் சொன்னான் ,

" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா
இருந்தது "

"இப்போ பார் "என்றார்.

தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்
உட்புறம் சுத்தமாகி இருந்தது.

பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில்
இதுதான்.

எத்தனை முறை தண்ணீர்
பிடிச்சாலும் மூங்கில் கூடை
நிரம்பவே இல்லை.

ஆனாலும் ஒவ்வொரு
முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.

அது போலத்தான்
எத்தனை முறை படிச்சாலும் முழு
கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு
சொல்ல முடியாது.

ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள
இருக்கும் அழுக்கும், கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்.

ஏனெனில் பகவத் கீதையில் இல்லாத விசயங்களே இல்லை என கூறமுடியும்
காரணம் பகவத் கீதை எல்லா வேத வேதாந்தங்களின் சாரம்
பகவத் கீதை உண்மையுருவில் &ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்கள்
வாழ்நாள் முழுவதும் வேறுறொரு ஆன்மிக நூலை தேடவே மாட்டார்கள்
ஆன்மிக தேடல்உள்ளவர்களுக்கு பகவத் கீதை உண்மையுருவில் &ஸ்ரீமத் பாகவதம் போதுமானது

நான் யார்,

நான் ஏன் துன்பப்படுகிறேன்
எப்படி வாழ வேண்டும்
எப்படி வாழக்கூடாது
மறுபிறவி அடையாமல் இருக்க வழி
ஆன்மிக ராஜ்ஜியம் எங்கே உள்ளது ஆன்மிக ராஜ்ஜியத்தை அடையும் வழிமுறை
கடவுள் யார் அவரின் சிறப்புகள் என்னென்ன
இந்த ஜடவுலகம் எப்படிப்பட்டது
தேவர்கள் யார்
தேவர்களின் உலகம் எங்கே உள்ளது இப்படி கூறிக்கொண்டே போகலாம் என்றதும்

அந்த இளைஞனுக்குள்ளே என்னென்னவோ செய்தது....
மேற்கூறியவைகளை அறிந்து கொள்ளும் ஆவலில் பகவத் கீதை உண்மையுருவில் & ஸ்ரீமத் பாகவதம் வாங்கி படித்து தனது வாழ்வில் ஆனந்தமாக வாழ்ந்தான்.

*
ravi said…
Many of us reflect on the noble deeds done by us, the good things that have happened many times; while this indeed gives us points for introspection, we need to spend time on 'Now' and 'What lies
ravi said…
Old man has 8 hair on his head.

He went to Barber shop.

Barber in anger asked:

shall i cut or count ?

Old man smiled and said:

"Colour it!"

LIFE is to enjoy with whatever you have with you, keep smiling

If you feel STRESSED,

Give yourself A Break.

Enjoy Some..

Icecream
Choclates
Candy
Cake

Why?
B'Coz

STRESSED backwards spelling
is DESSERTS ...enjoy

Alphabetic advice for you:

*A B C*
Avoid Boring Company..

*D E F*
Don't Entertain Fools..

*G H I*
Go for High Ideas .

*J K L M*
Just Keep a friend like ME..

*N O P*
Never Overlook the Poor

*Q R S*
Quit Reacting to Silly tales..

*T U V*
Tune Urself for ur Victory..

*W X Y Z*
We Xpect You to Zoom ahead in life

Very ....beautiful lines pls store it.

ONE Good FRIEND is equal to ONE Good Medicine. . .

Likewise ONE Good Group is equal to ONE Full medical store...👌🙏👍
☺😊😉😄😴

So Believe in YOURSELF

We all are tourists on Planet Earth and we are lucky to have lived and met! So “Enjoy the "Trip" called LIFE...

You will never come back again .. .Live Today Meaningfully

*When you wake up tomorrow, remember to make full/best use of it.

Send to all people who are important to you.. 👍
ravi said…
🌹🌺 "“ *அர்ஜுனன் போன்ற மாணவர்களை உயர்த்தி விட்டு தொடங்கிய இடத்திலேயே நிற்கும் ஸ்ரீ கிருஷ்ணன் போன்ற ஆசிரிய சமுதாயம் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 அமெரிக்காவில்‌ இரண்டு வகையான மக்கள்‌ மட்டுமே உயர்ந்தவர்களாக
கருதப்படுகிறார்கள்‌. விஞ்ஞானிகள்‌ மற்றும்‌
ஆசிரியர்கள்‌.

🌺பிரான்சின்‌ நீதிமன்றங்களில்‌
ஆசிரியர்களுக்கு மட்டுமே நாற்காலியில்‌
அமர உரிமை உண்டு.

🌺ஜப்பானில்‌, அரசாங்கத்திடம்‌ அனுமதி பெற்றால் மட்டுமே ஆசிரியரை கைது செய்ய
முடியும்‌.

🌺கொரியாவில்‌ ஒவ்வொரு ஆசிரியரும்‌...அவர்‌ தனது அடையாள அட்டையை
காண்பிப்பதன்‌ மூலம்‌ அமைச்சர்‌ பெறும்‌
அனைத்து உரிமைகளும்‌ கிடைக்கும்‌.

🌺அமெரிக்க மற்றும்‌ ஐரோப்பிய நாடுகளில்‌,
முதன்மை ஆசிரியர்‌ அதிக சம்பளம்‌
பெறுகிறார்‌,
ஏனென்றால்‌ அவர்கள்‌ எதிர்கால சமூகத்தை
வடிவமைப்பவர்கள்‌.

🌺 *ஆசிரிய கவிதை* 🌹

🌺1.நமக்கு உலகை காட்ட நம்மை
செதுக்கியவள் தாய்..
உலகிற்கு நம்மை காட்ட
செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.!

🌺2. அன்புள்ள ஆசிரியரே என்னில்
நம்பிக்கையை தூண்டியதற்கு நன்றி..
என் கற்பனையை பற்ற வைக்கிறது..
என்னுள் ஊடுருவி.. கற்றல் ஒரு காதல்.!

🌺3. பல நேரங்களில் மாணவர்களாகவும்
சில நேரங்களில் ஆசிரியர்களாகவும்
இருக்கும் அனைவருக்கும்
எனதருமை வாழ்த்துக்கள்.!

🌺4. யாரிடம் கற்றுக் கொள்கிறமோ
அவரே ஆசிரியர்.. போதிப்பவர்கள்
எல்லோரும் ஆசிரியர்கள் அல்ல.

🌺6. எதை நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ள
வேண்டி இருக்கிறதோ..
அதை அதிகம் மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுங்கள். நீங்களும் சிறந்த ஆசிரியர்தான்

🌺நம் நாட்டில் எத்தனை எத்தனையோ ஆசிரியர்கள் மகா பாரதத்தில் அர்ஜுனன் போன்ற மாணவர்களை உயர்த்தி விட்டு தொடங்கிய இடத்திலேயே நிற்கும் ஸ்ரீ கிருஷ்ணன் போன்ற ஆசிரிய சமுதாயம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்கவளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*ஆண்டவன் தங்கும் இடம் எது?*

கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான்...
வீதியெங்கும் அலங்கார வளைவுகள்...
பூரணகும்பம் கொண்டு வரவேற்பு...

பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான்...

கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!!

கண்ணன் கேட்கிறான்: "பச்சை வர்ணம் பூசப்பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே..! அது யாருடைய வீடு?''

"அச்சுதா அது என்னுடைய வீடு" துரோணர் சொல்கிறார்.

கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"

கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''

கண்ணன்: "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"

பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"

கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"

அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா.. அது என்னுடைய வீடு''

கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்தி நிற்கிறதே...! அது யாருடைய வீடு?"

*விதுரர்: "கண்ணா.. அது உன்னுடைய வீடு!"*

கண்ணன்: "என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று எண்ணியிருந்தேன்... இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா?''

பீஷ்மர், கிருபர் யாவரும் அவரவர் வீட்டுக்கு கண்ணனை அழைத்தனர்.

''நான் என் வீட்டிற்கு போகிறேன்.'' - என்று சொல்லிவிட்டு விதுரர் வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.

எல்லாமே இறைவனுடையது என்கிற அர்ப்பண உணர்வுடையவரையே கடவுள் விரும்புகிறார்...

*'யான்' "என்னுடையது என்னும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் ஆண்டவன் இருப்பான்!"*

ravi said…
*ஆண்டவன் தங்கும் இடம் எது?*

கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான்...
வீதியெங்கும் அலங்கார வளைவுகள்...
பூரணகும்பம் கொண்டு வரவேற்பு...

பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான்...

கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!!

கண்ணன் கேட்கிறான்: "பச்சை வர்ணம் பூசப்பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே..! அது யாருடைய வீடு?''

"அச்சுதா அது என்னுடைய வீடு" துரோணர் சொல்கிறார்.

கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"

கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''

கண்ணன்: "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"

பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"

கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"

அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா.. அது என்னுடைய வீடு''

கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்தி நிற்கிறதே...! அது யாருடைய வீடு?"

*விதுரர்: "கண்ணா.. அது உன்னுடைய வீடு!"*

கண்ணன்: "என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று எண்ணியிருந்தேன்... இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா?''

பீஷ்மர், கிருபர் யாவரும் அவரவர் வீட்டுக்கு கண்ணனை அழைத்தனர்.

''நான் என் வீட்டிற்கு போகிறேன்.'' - என்று சொல்லிவிட்டு விதுரர் வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.

எல்லாமே இறைவனுடையது என்கிற அர்ப்பண உணர்வுடையவரையே கடவுள் விரும்புகிறார்...

*'யான்' "என்னுடையது என்னும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் ஆண்டவன் இருப்பான்!"*

ravi said…
🌹🌺 ""A community of teachers like Sri Krishna who raised students like Arjuna and stands where they started - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 Only two types of people are superior in America
are considered Scientists and
teachers.

🌺 In French courts
Chairs for teachers only
Right to sit.

🌺In Japan, arrest a teacher only with permission from the government
can

🌺Every teacher in Korea...he has his ID card
The minister will receive by showing
All rights reserved.

🌺 In America and European countries,
Principal teachers are highly paid
receives,
Because they are the future society
Designers.

🌺 Teacher's poem 🌹

🌺 1. To show us the world
Carver mother..
To show ourselves to the world
Carvers are teachers!

🌺 2. Dear teacher in me
Thanks for inspiring me..
Captures my imagination..
Penetration in me.. a love of learning.!

🌺 3. Many times as students
Sometimes as teachers
To all who exist
Congratulations sir!

🌺 4. From whom he learns
He is the teacher.. the teachers
Not everyone is a teacher.

6. What you learn more
Do you want..
It's more for others
Teach me. You are also a great teacher

🌺 How many teachers in our country have lifted up students like Arjuna in Mahabharata and are standing where they started. Wish the community of teachers like Sri Krishnan to continue to grow.

🌺🌹🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்கவளமுடன்
🌷🌹 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*சித்தி தாய நமஹ*🙏
அஷ்ட மஹா சித்திகளை அருள்பவர்
ravi said…
நிஸ்துலா நீலசிகுரா *நிரபாயா* நிரத்யயா |🙏

எ‌ந்த பாதிப்பும் அற்றவள்
ravi said…
*"இதுவும் கடந்து போகும்"*

*பகிர்வு - தகவல் உலா ✍️*


நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது *"இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். - கர்வம் தலை தூக்காது.
தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். -


சோர்ந்து விட மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது *"இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது *"இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் *"இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

*
ravi said…
🙏🌹🪔🔯🕉⚛️🪔🌹🙏
*சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
*9 *அனைத்தும் வசமாக*

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

*15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற*
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
*69.* *சகல* *சௌபாக்கியங்களும்* *அடைய*
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🪔🔯🕉⚛️🪔🌹🙏
ravi said…
*விஷ்ணுவை பற்றிய அனைத்து ஆன்மீக தகவல்கள் ஒரே இடத்தில்......*


ஆன்மீக புராண கதைகள்
வைஷ்ண குரு பரம்பரை பற்றிய தொடர்
ஏழுமலையான் கதை
நவகிரஹதலங்கள் (வைணவம்)
ராமானுஜர் வரலாற்று மகிமை
திருப்பாவை 30 பாசுரம் விளக்கத்துடன்
இப்போது திவ்ய தேசங்களின் தொகுப்பு நாலாவது பிரபந்தம் முழு விளக்கத்துடன் பதிவு இது எல்லாம் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது மற்றும் பல விஷ்ணு ஆன்மீக தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
👇👇
ravi said…
*மீண்டும்*

MOOKA PANCHASATHI
மூக பஞ்ச சதி

இப்பொழுது தானே பார்த்தோம் என்று பதிவுகளை விடாமல் படிப்பவர்கள் நினைக்கலாம் ...

அவர்களுக்கு ஒரே பதில் ...

கரும்பு , தேன் , பல இனிப்பு பதார்த்தங்கள் சிறு வயதில் சாப்பிட்டோம் .

இன்னும் சாப்பிட்டுக்கொண்டே தானே இருக்கிறோம் ...

அம்பாள் வர்ணனை அவள் நாமங்கள் அப்படித் தான் ..

பல யுகங்களாக பலரும் அவள் நாமாவளியை சொல்லி வருகிறார்கள் .

நம் அடுத்த சந்ததிகளும் சொல்வார்கள் ...

ஆனால் சுவை கூடுமே தவிர குறையாது ...

புதுமை வாய்ந்தவை ...

அதனால் தான் அபிராமி பட்டர் கற்பது உன் நாமம் என்றார் ..

புதிய புதிய அர்த்தங்கள் விளக்கங்கள் கிடைக்கும் .. வேறு கண்ணோட்டத்தில் 500 ஸ்லோகங்களை சுவைப்போம்...
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 1 ...18th Nov 22*

மஹா பெரியவாளுக்கு மூக பஞ்ச சதி ஸ்லோகங்கள் ரொம்ப பிடிக்கும்.

அடிக்கடி அதிலிருந்து மேற்கோள் காட்டுவார்.

மூக என்றால் வாய் பேசமுடியாத ஊமை நிலை.

பஞ்ச சதி என்றால் ஐந்து நூறு.

காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்ச சதீ.

இது 5 சதகங்களை கொண்டது.

ஒவ்வொரு நூறு ஸ்லோகங்களும் ஒரு பெயர்.

முதல் நூறு *ஆர்யா* சதகம், ரெண்டாவது நூறு *பாதாரவிந்த* சதகம், மூன்றாவது நூறு *ஸ்துதி* சதகம், நான்காவது நூறு *கடாக்ஷ* சதகம், என்றும் கடைசி ஐந்தாவது நூறு சதகம் *மந்தஸ்மித* 😊😊😊😊😊சதகம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதை இயற்றியவர் மூக கவி.

பேச முடியாத அவர் எப்படி பாடினார்?

ஊமையாக இருந்த போது காஞ்சீபுரத்தில் குடி கொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி 500 சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார் என்று மஹா பெரியவா சொல்லி இருக்கிறார்.

அது போதும். இது தான் *மூக பஞ்ச சதி.*
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 404* 🙏🙏🙏started on 7th Oct 2021

*156*
ravi said…
*156 नीरागा -நீராகா --*
எந்த ஆசையும், விருப்பமும் இல்லாதவள் ஸ்ரீ லலிதா.

இல்லாதவன் தான் எதையாவது தேடுவான்?

சர்வமும் ஆன பரப்ரம்மத்துக்கு எது தேவை?
ravi said…
இன்னொரு திருநாமம் *ராக மதனா ...* வித்தியாசங்கள் இருந்தால் அதை தீர்க்கக்கூடியவள் 🌸🌸🌸
ravi said…
செஞ் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய் மின்
திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன்

மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார்

அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே!

- திருவாய்மொழி
ravi said…
செம்மையான சொற்கள் கொண்டு கவி பாடும்
கவிஞர்களே!!

உங்கள் உயிரை
பாதுகாத்துக் கொள்வீர்
திருமாலிருஞ்சோலையில் வாசம் செய்கின்ற

ஏமாற்றுக்கார (சூது நிறைந்த) கள்வன் (deceitful but delightful fellow :)

பெரிய மாயங்கள் அறிந்தவன் (குட்டிக் கண்ணனாக மண்ணை உண்டு யசோதைக்கு வாயில் உலகங்களைக் காட்டிய மாயம் ஒன்று போதுமே)

மாயமான கவிஞனாய் வந்து

எனது உள்ளத்திலும் உயிரிலும்

ஒன்றறக் கலந்து

என்னருகில் இருப்போர் கூட
அறியாத வகையில்

எனது மனதையும், உயிரையும்
உண்டு

எனது அனைத்துமாய் நிறைந்து நின்றானே!
👌👌👌
ravi said…
*நாரதமுனி , அந்தணர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளி*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

http://www.srimahavishnuinfo.blogspot.com

ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு பகவான் நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதரை வணங்கிய அந்தணர், “தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

அதற்க்கு, “நிச்சயமாக, நான் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!” என பதிலுரைத்தார்.

“அப்படியா, மிக்க மகிழ்ச்சி!!  எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?”

“தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!”

“தாங்கள்  பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?”

“நிச்சயமாக” என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார்.  சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில்  ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார்.   நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்தித்து அங்கிருந்து வைகுந்தம் செல்கிறார்.

வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடுபேறு அடைவார்கள் என வினவினார்.

சற்றும் யோசகாமல் பகவான், “அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி இப்பிறவி முடிந்ததும் பிறவிக் கடலை நீந்தியவராவர், அந்த அந்தணர் இப்போதைக்கு வீடு பேரு பெரும் சாத்தியம் இல்லை, இன்னும் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்”   என்று இயம்பினார்.

இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு!!  பகவானை நோக்கி, " ஓ பிரபு, வேதங்களை நன்கு கற்றறிந்த பண்டிதன், ஆச்சாரமாக வாழும் ஒருவனை விட ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக பிறவிக்கடல் தாண்டி வீடு பேரு அடைவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை, சற்றே என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?” என வினவினார்.

அதைக் கேட்டு புன்னகைத்த பகவான், ஒரு ஊசியை நாரதரிடம் கொடுத்து, “நீ நேராக சென்று அவர்களை சந்திப்பாயாக, அவர்கள் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் எனக் கேட்டால், இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தேன் என்று சொல், அதற்க்கு அவர்கள் எந்த மாதிரி பதில் தருகிறார்கள் என்று பார், உன் சந்தேகம் தீரும்” என அனுப்பி வைத்தார்.

நாரதரும் அவ்வாறே திரும்ப வந்து,  வழியில்  சந்தித்த அந்தணரை மீண்டும் கண்டார்.  அவரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், “நாராயணரைச், சந்தித்தீர்களா?  அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என வினவினார்.

நாரதர் பகவான் சொன்னபடி, ” ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தார்” என்றார்.

அதற்க்கு அந்தணர், ” மாமுனிவரே தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை, ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்? ” என்றார்.  புன்னகைத்த நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.

அதைக் கேட்டதும், “ஆஹா, என் இறைவன் எல்லாம் செய்ய வல்லவன், அவனால் இது நிச்சயம் முடியும்” என்று துள்ளிக் குதித்தார்.

இதைப் பார்த்த நாரதருக்கோ பெருத்த ஆச்சரியம்.  “ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா?  எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்று வினவினார்.

அதைக் கேட்ட அந்த தொழிலாளி, “ஐயா யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை  விட சிறிய துளையிலும் என் இறைவனால் நுழைக்க முடியும்” என்றார்.

மேலும் வியந்துபோன நாரதர் “எப்படி?” என  வினவினார்.

கீழே குனிந்து அங்கே கொட்டிக் கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின் பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்த அந்த தொழிலாளி “இதோ நான் தினமும் வந்து உட்காரும் இந்த இடத்திலுள்ள ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பதென்ன பெரிய விஷயமா?”  என்று கேட்டார்.

இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் தற்போது முற்றிலும் தீர்ந்தது!!

ஆம் நம்பிக்கையற்றவன்  வைகுணடத்தில் ஶ்ரீமன் நாராயணனின் பக்தித் தொண்டினை அடைய முடியாது 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஶ்ரீமத் பகவத் கீதை 9.3 .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அஷ்ரத்ததானா: புருஷா
தர்மஸ்யாஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்தந்தே
ம்ருத்யு-ஸம்ஸார-வர்த்மனி

எதிரிகளை வெல்வோனே, இந்த பக்தித் தொண்டில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடைய முடியாது. எனவே, அவர்கள் இந்த பௌதிக உலகின் பிறப்பு இறப்பு பாதைக்கே திரும்பி வருகின்றனர்.

இதுவே இப்பதத்தின் பொருள்.

ravi said…
அம்மா ...

உன் பல் வரிசை உமிழும் வெண்மை எனும் நூல் கொண்டு நெய்தாலோ வாணீ தன் சேலை தனை ?

உன் பல் வரிசை நிறம் கொண்டே ஆவினங்கள் பால் சொரிகின்றதோ ?

கடல் வாழ் முத்துக்கள் உன் பல் வரிசை நிறம் தனக்கே வேண்டும் என்றே கடலடியில் மா தவம் புரிகின்றதோ ?

உன்னிடம் நடை பயிலும் அன்னங்கள் உன் பல் வரிசை கண்டே வெண்மை ஆக்கி கொண்டதோ தங்கள் மேனி தனை ?

ஈசன் பூசும் திருநீறும் உன் பல் வரிசை கண்டே வெண்மை நிறம் வேண்டி பெற்றதோ ?

உன் பல் வரிசை கண்டே பரமனும் தன் உள்ளம் அதை வெண்மையாக்கி கொண்டானோ ?

முகில் கொஞ்சும் வெண்ணிலா உன் பல் வரிசை கண்டே தன் நிறம் மாற்றி க்கொண்டதோ ?

வெள்ளை மனம் கொண்டவளே உன் ஓவ்வொரு பல்லும் உன் நாமம் தினம் உரைக்கும் வாக் தேவி ஆனதோ 🌸🌸🌸
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 25 ஷுத்த வித்யாங்குராகார த்விஜ பக்க்தி த்வயோஜ்வலா* =

ஒளிரும் பல்வரிசைகள் இரண்டும், ஞான மொட்டுகள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.🌸🌸🌸
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 128*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
வேதனாலு பூதமாய் விரவுமங்கி நீரதாய்

பாதமேயி லிங்கமாய்ப் பரிந்துபூசை பண்ணினால்

காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்

ஆதியந்த முங்கடந் தரியவீட டைவரே. 128👏👏👏
ravi said…
நாண்டு வேதங்களில் உள்ள மெய்ப்பொருள் பஞ்சபூதங்களாய் விரிந்து நம் உடம்பில் நீராய் நிற்கின்றது.

அதுவே ஈசன் திருவடியாகவும் இழிந்கமாகவும் இருப்பதை அறிந்து ஆன்மா எனும் பூவை அசையாமல் நிறுத்தி தியானிக்க வேண்டும்.

அப்போது வாசியானது லயமாகி நாத சப்தத்துடன் நம் காதுகளில் கேட்கும்.

அந்நாத ஒலியால் மெய் வாசலைத் திறந்து மனமெனும் பேயை தவத்தால் கட்டறுத்த ஞானிகள் ஆதி அந்தமும் கடந்து அனாதியாய் உள்ள சிவத்தை அடைந்து அரிய வீடு பேறை அடைவார்கள்.
ravi said…
முகுந்தமாலா 29,30 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில இன்னிக்கு 29ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம்.

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।

हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥

ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்

யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி ।

ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின்

தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
உயர்ந்த குலத்தைக் கொடுக்கும். நிறைந்த செல்வத்தைக் கொடுக்கும்.

அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் நிலந்தரம் செய்யும் –

அடியார்களுடைய துயர்களை எல்லாம் தரை மட்டம் ஆக்கிடும்.

காணாம போக்கிடும். நீள் விசும்பு அருளும் – வைகுண்ட பதவியைக் கொடுக்கும். அருளோடு பெருநிலம் அளிக்கும் – அருளையும் கொடுக்கும்.

பகவானுக்கு கைங்கர்யம் பண்ணக் கூடிய அந்த ஒரு பெரிய பாக்யத்தையும் கொடுக்கும்.

நாராயண நாமம் வலம் தரும்னா சக்தியை தரும்.👏👏👏
ravi said…
Friday Festoon (From Bhagavad Gita)

इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्य: परं मन: |
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धे: परतस्तु स: ||

The senses are superior to the gross body, and superior to the senses is the mind. Beyond the mind is the intellect, and even beyond the intellect is the soul.
ravi said…
Patience, persistence and perspiration make an unbeatable combination for success.



Valuables we carry may impress others. But, values we hold will inspire others.



More powerful than the will to win is the courage to begin. Orrin Woodward



Have faith in your journey. Everything had to happen exactly as it did to get you where you are going next.



Gratitude is the practice of finding the good in each day.



You will get only what you work for, not what you wish for.



Be bold when you lose. Be calm when you win.
ravi said…
TWO VOICES INSIDE YOU



A boat was going to a distant land. Among other travellers there sat a poor beggar also. Some mischievous persons were teasing that beggar in all ways. When he was sitting in the night-prayer, they thought that at that time he would not be able to do anything and they started beating his head with shoes.



He was in prayer and the tears of love were coming out of his eyes. Then there came a voice from the sky: ”My dear, If you say I will upturn the boat”.



Those persons became nervous.



Other travellers were also upset. The recreation was getting costly. They all fell down at the feet of the beggar and started apologizing to him. When the beggar’s prayers came to an end he got up and spoke to those men: ”Do not be worried”.

ravi said…
Then he lifted up his face to the sky and said: ”My dear God, in what language of the Satan are you talking? If you want to play the game of turning up, turn the intellect of these people. What use will it be to turn over the boat?”



There was a voice from the sky once again: ”I am very pleased. You have rightly recognized the fact. The earlier voice was not mine. He who can recognize the voice of Satan can alone recognize MY voice.”



Recognize the two voices inside you. If you can recognize one, you can recognize the other.

ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 8 started on 6th nov
ravi said…
*பாடல் 4 ... வளைபட்ட கை*

(மனை மக்கள் எனும் மாயை அகல அருள்வாய்)

வளைபட்ட கைம் மாதொடு,

மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!!💐💐💐
ravi said…
ஆன்ம விசாரத்திற்கு முதல் எதிரியாக மனைவி மக்களைக் கூறுகிறார்.

மனிதன் பல உறவினர்களிடம் பலவிதமாக அன்பு செலுத்துகிறான்.

ஆனால் அந்த அன்பு இறைவனிடம் செலுத்தும் அன்பிற்கு
இடையூறாக இருக்கக்கூடாது.

எதாவது பதில் பிரதிபலனை எதிர்பார்த்து
செலுத்தும் அன்பு, பாசம், பற்று எனப்படுகிறது.

அற வாழ்வில், துணை செய்யும் மனைவி மக்கள் வாய்க்கப்பெற்றால்
அது பெரும் பாக்கியமாகும்.

வளை கைக்கு அணியாக இருப்பதுபோல்,
மனைவி இல்வாழ்க்கைக்கு அணியாகத் திகழ வேண்டும்.

இல்லை
எனில் அந்த வளையே தளையாக (விலங்காக) மாறிவிடும்.

இந்தத் தளை
நீங்க, கிளை கிளையாக சுற்றம் சூழ, போருக்கு வந்த சூரனை வேறோடு
அழித்த முருகனின் துணையை நாடுகிறார்.

சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும் முறையே ஆணவ
கன்ம மாயா மலங்களின் உருவங்கள்.

மனைவி மக்கள் என்னும் பந்தமே
மும்மதங்களையும் சேர்த்து வைக்கும் இயல்பின.

அவர்கள் பேரில்
கொண்ட பற்று மாயா சொரூபம். அவர்களை ரட்சித்து காக்கும் முயற்சியே
கரும பந்தம்.

என் மனைவி என் மக்கள் என்கிற இடையறாத எண்ணமே
ஆணவம்.

முருகா நீ என்னைக் காப்பாற்றுவதற்கு கடமைப்பட்டவனாயிற்றே.

இப்படி
நான் தவிப்பது என் ஆன்மாவின் உண்மை சொரூபத்திற்கு தகாது.

அது
உன் கருணை திறத்திற்கும் தகாது' என்கிற குறிப்பில் இரண்டு முறை
தகுமோ தகுமோ' என்கிறார்.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 392* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ *ஸம்வத்ஸரோவ்யால* :
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
*92. ஸம்வத்ஸராய நமஹ (Samvatsaraaya namaha)*
ravi said…
அந்தச் சமயம் அங்கிருந்த ஒரு பூனை ஒலி எழுப்பிடவே,

அதைக் கண்டு அந்த எலி நடுங்கியது.
அதனால் அதன் வாயில் கவ்வியிருந்த திரி தூண்டப்பட்டு, அணையும் நிலையில் இருந்த தீபம், பிரகாசமாக எரியத் தொடங்கியது.

திரியைக் கவ்விச் செல்வதே நோக்கமாக இருந்ததே தவிர, தீபத்தைத் தூண்டி எரிய வைக்க வேண்டும் என்றோ,
ஸ்ரீ இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றோ அந்த எலிக்கு நோக்கமில்லை.
ravi said…
கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.

பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.

உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.

ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*🙇🏻‍♂️ _TODAY'S G.K._ 🙇🏻‍♀️*


*🤔 Do you know?*

1. The first cricket world cup was held in England in 1975.

2. Pumpkin boat racing is a popular autumn sport.

3. In 1906, the UK parliament banned women from participating in dangerous sports.

4. The most participated sport on earth is fishing.

5. The sport with maximum number of spectators is football.

6. Boxing was recognized as a legal sport in 1901.

7. About 42,000 tennis balls are used in the Wimbledon Championship.

8. William George Morgan of Holyoke, invented volleyball in 1895.

9. A badminton shuttlecocks speed easily exceeds 180 km/h and can go up to 350 km/h.

10. The weight of football is 410 to 450 g.

*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. முதல் உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் 1975 இல் நடைபெற்றது.

2. பூசணிக்காய் படகு பந்தயமானது பிரபலமான இலையுதிர்கால விளையாட்டு ஆகும்.

3. 1906 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பாராளுமன்றம் பெண்கள் ஆபத்தான விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதித்தது.

4. பூமியில் பெரும்பாலானவர்கள் பங்கேற்கும் விளையாட்டு மீன்பிடித்தல்.

5. அதிகபட்ச பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு கால்பந்து ஆகும்.

6. 1901 இல் குத்துச்சண்டை ஒரு சட்டபூர்வமான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டது.

7. விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் 42,000 டென்னிஸ் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

8. 1895 இல் வில்லியம் ஜார்ஜ் மோர்கன், ஹோல்யோக் என்பவரால் கைப்பந்து கண்டுபிடிக்கப்பட்டது.

9. பூப்பந்தாட்டத்தின் பந்தின் வேகம் எளிதில் மணிக்கு 180 கிமீ அதிகமாகும், மேலும் மணிக்கு 350 கிமீ வரை செல்லும்.

10. கால்பந்தின் எடை 410 முதல் 450 கிராம் ஆகும்.



🌷🌷



ravi said…
*இன்றைய 10 சொற்கள்!*

*அறிவு பரவல் ✍*


1. Shrine (ஸ்ரைன்) - ஆலயம்.
அவர்கள் எகிப்தில் உள்ள பார்வோனின் பழமையான ஆலயத்தைப் பார்க்க சென்றனர்.
They went to visit a Pharaoh′s ancient shrine in Egypt.

2. Monastery (மனெஸ்ட்ரி) - மடம்.
15ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த மடத்தில் ஜெனடி என்ற ஒரு துறவி இருந்தார்.
In the middle of the 15th century, a monk named Genadii was lived in this monastery.

3. Halidom (ஹலிடெம்) - புனித இடம்.
திருடர்கள் புனித இடத்திற்கு செல்ல தயங்குவார்கள்.
Thieves are reluctant to go to the halidom.

4. Monk (மாங்க்) - துறவி.
கோவிலில் பல ஞானிகளும் பல துறவிகளும் இப்போதும் உள்ளனர்.
Many saints and monks are still in temples.

5. Consecrate (கான்சிக்ரேட்) - கும்பாபிஷேகம்.
சிவன் கோவிலில் மறுகட்டுமானம் செய்யப்பட்ட பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Shivan temple was consecrated after reconstruction.

6. Pray (ப்ரே) - பிரார்த்தனை.
முழு குடும்பமும் அவனுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
The whole family is praying for him.

7. Dilapidate (டிலபிடெட்) - பாழடைந்த.
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பழைய பாழடைந்த கோவில்களை புதுப்பிக்க உள்ளது.
The Archeological Survey of India is renovating the old dilapidated temples.

8. Priory (ப்ரையிரி) - துறவி மடம்.
கிராமத்தின் மறுபுறத்தில் துறவி மடம் அமைந்துள்ளது.
Priory is located on the other side of the village.

9. Inscription (இன்ஸ்க்ரிப்ஸன்) - கல்வெட்டுகள்.
பல கல்வெட்டுகள் தஞ்சாவூர் கோவிலில் இன்னும் உள்ளது.
Many inscriptions are still found in the Thanjavur temple.

10. Pilgrims (பில்க்ரிம்ஸ்) - புனிதப் பயணிகள்.
புனிதப் பயணிகள் தொலைதூர தேசங்களிலிருந்து பரிசுகள் கொண்டு வந்தனர்.
The pilgrims brought gifts from distant lands.
ravi said…
*நான்கு விதமான மனிதர்கள்...* ❗

1. எதிர்பார்த்தது எதுவோ அதற்காகவே பழகுவார்கள்.
கிடைத்ததும் சென்றுவிடுபவர்கள்.
மீண்டும் தேவைப்படும்போது வருவார்கள்.
100 % சுயநல வாதிகள் இவர்கள்.

2. பலனை அடைவதற்காக சில நன்மையைச் செய்வார்கள்.
இப்படிப்பட்டவர்கள் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் சரியாக இருக்கும்.
அவரின் காரியத்தை நிறைவேற்ற நமக்கும் சில காரியம் செய்வார்கள்.
இப்படிப்பட்டவர்களிடம் தாராளமாக பழகலாம்.
ஆனால்...
இவர்கள் அனைவரிடமும்
இப்படி பழக மாட்டார்கள்.

3. பலனை எதிர்பார்க்கவே மாட்டார்கள்.
அவர்களாகவே அனைத்தையும் செய்வார்கள்.
"எதற்காக செய்கிறீர்கள்?" என்றால்
"நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?" என்பார்கள்.
அவர்கள் அன்பால் உங்களை திணறடிப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களால் தான் நம் சமுதாயம் செழிக்கிறது.
இப்படிப்பட்டவர்களை உறவினராக, நண்பனாக வைத்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

4. யாருடனும் பழக்கம் அதிகம் இருக்காது.
ஆனால்...
அன்பு மிகுதியாக இருக்கும்.
அறிவும் அப்படியே...
அல்லது
அன்பு செலுத்த தெரியாது.
இவர்களிடம் நாம் கேட்டால் பலன் அடையலாம்.
இவர்களிடம் பழகுவதற்கு தவம் செய்திருக்க வேண்டும்.

ஆக...
மனிதர்களை ஆராய்ந்து இனம் கண்டு கொள்ளுங்கள்.
போலித்தன்மை வாய்ந்த மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
மாற்றம் ஆரோக்கியமானது.
ஆனால்,
ஏமாற்றம் என்றுமே ஆரோக்கியமற்றது.
நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருங்கள்.
நிச்சயம், ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
*நல்லதே நினையுங்கள்*
*நல்லதே செய்யுங்கள்...*
அப்போது,
*நல்லதே நடக்கும்.*

ravi said…
ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே

அது பூசை என்று வெளியே உன் மேல் பாசம் செய்யுதே

நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே

அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே

எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்றே தோணுதே

செய்த ஓவ்வொன்றிலும் சுயநலமே எண்ண நாணுதே

போதும் போதும் இந்த போலி நாடகம்

உன் பாதம் ஒன்றே ஆகவேண்டும் எந்தன் தாரகம்

பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே

பலர் புகழ இன்னும் புகழு என்னும் கள்ளம் வெல்லுதே

காமகோபம் வென்றோம் என்றே வாயும் சொல்லுதே

உள்ளே விருப்பும் வெறுப்பும் தலை விரித்தே ஆடிச் சொல்லுதே

பசி ருசியை கடந்தோம் என்று மார் தட்டுதே

இந்தா புசி என்றே தினம் நாக்கும் வயிறும் காலைக்கட்டுதே

போதும் போதும் இந்த போலி நாடகம்

எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்

சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது

ஆனால் ஜகத்தினையே ஜெயித்ததாக சொல்லி அலையுது

நன்று செய்த நல்லவரை அன்றே மறக்குது பிறர் நல்ல பதிவு போட்டால் வாழ்த்த மறுக்குது

இது குன்று போன்ற குறை இருந்தும் கூசாது இருக்குது

வந்தவர்க்கே அறிவுரையை வாரி வழங்குது

இது தன் வாழ்கையில் தத்தளித்தே வாடி வதங்குது

போதும் போதும் இந்த போலி நாடகம்

உருவம் கொண்ட குருவின் பாதம் உயர வைக்குமே .

பணிய மறுக்கும் பாதர்களை குனிய வைக்குமே

நினைத்தபடி நடப்பதுவே எந்தன் வாடிக்கை

அது உன் நினைவே என்று சொல்வது என்ன வேடிக்கை

உனக்காகவே வாழ்ந்திடுவேன் என்று பாரிக்கை

பின் எனக்காக இது செய் என்று என்ன கோரிக்கை ?

துறவி என்று கூறிக்கொண்டும் எதையும் துறக்கலை

இந்த பிறவிக்கேனோ ஞானம் ஏதும் இன்னும் பிறக்கலை

போதும் போதும் இந்த போலி நாடகம்

தினம் நாடகம் நடுத்தும் பாதங்களே எனது புண்ணியம்

காஞ்சி வாழ் மகான் எந்தன் கால பையிரவர் ...

அவர் காலடியில் என்றும் வாழும் எந்தன் சுவாசமே 👣👣
Kousalya said…
அற்புதம் அதி அற்புதம் இந்த உங்கள் பதிவுமே , போலி என்று உணர்ந்து கொண்ட போதும், அதை பின் தொடர்ந்து போகின்றோம்...அந்த மோசம் செய்யும் ஆசையை, அடக்க மறக்கின்றோம்... கருணை கடலே உனை பணிகின்றேன், இந்த பவசாகரதை கடக்க அருள வேண்டுகிறேன்...🙏🙏🙇‍♀️🙇‍♀️🪔🪔
Shivaji said…
Arumai... 👌
Savitha said…
அற்புதம்
Rajamani said…
Arumai
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன.
ravi said…
மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியினால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை.
ravi said…
ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.
ravi said…
அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.

ravi said…
ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்து – ஜனன மரணச் சூழலிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.

ravi said…
மாயா’ என்றால் ‘எது இல்லையோ அது’ என்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. அது எப்போதுமே இல்லாதது அல்ல; எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். அவற்றிடம் ஆசை – துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அனுபவ பூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே;
ravi said…
தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழிந்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது; இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகிறது. மாயையும் அப்போது இல்லாமலே போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது – அதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.

ravi said…
மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.

ravi said…
காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள்.
ravi said…
அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.

ravi said…
மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’ என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.
ravi said…
*விஷ்ணு சகஸ்ரநாமத்தை, சகாதேவன் மூலம் தந்து உலகுக்கு அறிய வைத்த கங்கை மாதா..!*



பாரத போர்...

உடல் முழுவதும் அஸ்திரங்கள் எய்யப்பட்டு அம்பு படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். அவரை சுற்றி கண்ணன், பாண்டவர்கள், கௌரவர்கள் என அனைவரும் கவலையுடன் நின்றிருக்க,

பீஷ்மரோ அம்பு படுக்கையிலும் கம்பீரமாக படுத்து, கணீர் குரலில் நல்ல உபசேங்களை கூறிக் கொண்டிருந்தார்.

அவரின் உபதேசங்களை காது குளிர கேட்டு மகிழ்ந்த பாண்டவர்களில் ஒருவரான தருமர், "பாட்டனாரே! உங்கள் உபதேச கருத்துக்கள் யாவும் மனிதன் போற்றி வாழக்கூடிய ஒன்று.

ஆனால் வாழ்வில் இவையெல்லாம் ஒரு மனிதன் கடைபிடித்து வாழ்வது என்பது கடினமன்றோ! அதனால் எளிமையான உபதேசங்கள் எவையேனும் இருந்தால் அதைப்
பற்றி கூறுங்களேன்", என்று வேண்டிக் கொள்ள,

தருமர் கூறியதைக் கேட்ட பீஷ்மர், தன் இரு கண்களால் கண்ணனை பார்த்துக் கொண்டே, தன் இரு கரம் கூப்பி கண்ணனை வணங்கிக் கொண்டே,

"ஆயிரம் ஆயிரம் பாவங்களை போக்கவல்ல ஆயிரம் அனந்தனின் நாமத்தை கூறுகிறேன்; கேட்டு உயர்வு பெறுங்கள்." என்று கூறியதுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.

அனந்தனின் ஆயிரம் நாமங்களை கேட்டு பூரிப்படைந்தனர் யாவரும். ஆனால் சகாதேவன் மட்டும் ஏதோ யோசனை செய்து கொண்டிருக்க, அதை கவனித்த கண்ணன், சகாதேவனை தனியே அழைத்து சென்று அவனது யோசனைக்கு காரணம் கேட்க,

சகாதேவன், "அனைத்தும் அறிந்தவன் நீ... என் யோசனை என்னவென்று அறியாதவனா ...! சரி, நானே கூறுகிறேன் கண்ணா!

பீஷ்மர் கூறிய உனது ஆயிரம் திருநாமங்களை கேட்டு நாங்கள் மன பாரம் குறைந்தோம். மனம் தெளிவுற்றோம் என்பது எல்லாம் உண்மையே...

ஆனால் நாங்கள் கேட்ட இந்த புண்ணிய விஷ்ணு சகஸ்ரநாமம் ஆயிரத்தையும், இனி வரும் மக்கள் யாவரும் கேட்கும் வண்ணம் அதை நாங்கள் குறிப்பெடுத்து வைக்க முடியாமல் போயிற்றே.. அதை நினைத்துதான் நான் யோசனை செய்தேன்." என்று வருந்தி கூற,

கண்ணன், "சகாதேவா! வருந்தாதே.. பீஷ்மரின் கழூத்தில் ஒரு ஸ்படிக மாலை உள்ளது. அவர் எரியூட்ட படுவதற்கு முன், அந்த ஸ்படிக மாலையை அணிந்து கொள்.. அவர் கூறிய சகஸ்ரநாமம் ஆயிரமும் உன் சிந்தனையில் தோன்றும்; நீ அதை எழுத்து வடிவமாக உருவாக்கி, வியாசர் மூலம் இந்த உலகுக்கு தந்து விடு." என்றான் கண்ணன்.

கண்ணன் சகாதேவனிடம் கூறி முடிக்க,

சகாதேவன் கண்ணனிடம், "கண்ணா! எங்கள் எல்லோர் மனதிலும் நீயே கேள்விகளை எழுப்பி, அதற்கு நீயே விடைகளையும் கூறி விடுகிறாய்.

" உன் ஆயிரம் திருநாமங்களை கொண்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமம், யாவர் பாபங்களையும் கங்கையை போலவே நீக்க வல்லது.

"பீஷ்மரின் ஸ்படிக மாலையை அணிந்து, வியாசர் உதவியுடன் சகஸ்ரநாமத்தை எழுதி இந்த உலகுக்கு அளிப்போம். அதை படித்து யாவரும் புனிதமடையட்டும். அதற்கு அருள் புரிவாய் கண்ணா.." என்று சகாதேவன் கண்ணனை வணங்கி நின்றான்.

ஆதிசங்கரர் காஷ்மீரத்தில் இருக்கும் போது லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுத சிஷ்யை தேவி புத்தகம் எடுத்து வருமாறு கூறுகிறார்.

சிறுவன் எடுத்து வந்து கொடுத்தால் அது விஷ்ணுவைப்பற்றி உள்ளது.இது மாதிரி மூன்று முறை விஷ்ணு பற்றிய புத்தகமே வந்தால் சிறுவனை கூப்பிட்டு கேட்டார்.அதற்கு சிறுவன் ஒரு சிறுமை என்னிடம் இந்த புத்தகத்தை தான் நீங்கள் தேடுவதாக கொடுக்கிறார்கள் என் கூறினான்.

ஆதிசங்கரர் சற்று யோசித்து இதுவும் அம்பாளின் கருணை போலும்.
ஆகவே முதலில் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதினார்.பிறகே லலிதா சஹஸ்ரநாமம் பாஷ்யம் எழுதினார்.

ஓம் நமோ நாராயணா.


ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 12

தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையிள்ளாள் பெண்மை விழைவு. . . . .[12]

விளக்கம்:

தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும். வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண் தன்மையை விரும்புதல் துன்பமாகும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*சித்தி சாதனாய நமஹ*🙏🙏
சாதனத்தையே சித்தி போல் இனிமையாக ஆக்குபவர்
ravi said…
நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா *நிரத்யயா* |🙏

குறை குற்றம் காணா தவள்
ravi said…
*அதெல்லாம் ஒரு பொற்காலம் என்று பின்னாளில் சொல்லக்கூடிய அந்த நாட்களைதான், இப்பொழுது அதை அறியாமலே கடந்து கொண்டிருக்கின்றோம்.*


*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலவீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்றகேள்வி வரலாம்.

தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது.

ஒரு புழு இந்த உலகத்தினுடைய சக்கரவர்த்தி நான்தான் அப்படின்னு நம்மகிட்ட கர்வப்பட்டா நாம் எப்படி சிரிப்போமோ, எப்படி பரிதாபமா அந்த புழுவை பார்ப்போமோ, இந்த பிரபஞ்ச சக்தி நம் கர்வத்தை பார்க்கிறது.

அப்படித்தான் இங்கு மிகப்பெரிய மாயை என்பது நம்முடைய கர்வமே. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.


🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*Beautiful lines by Robert Drake.......*

*Sometimes,*
I feel I want to go back in time...
Not to change things, but to feel a couple of things twice..

*Sometimes,*
I wish I was a Baby for a while...
Not to be walked in the pram but to see my Mother's smile

*Sometimes,*
I wish I could go back to school...
Not to become a child but to spend more time with those friends, I never met after school..

*Sometimes,*
I wish I could be back in college...
Not to be a rebel but to really understand what I studied

*Sometimes,*
I wish I was a Fresher at my work...
Not to do less work but to recall the joy of the first pay cheque.


*Sometimes,*
I wish my kids were younger....
Not because they grew fast but to play with them a bit more.

*Sometimes,*
I feel I still had some more time to live...
Not to have a longer life but to know what I could give to others.

*Since the times*
that are gone can never come back, let's enjoy the moments as we live them from now on, to the fullest..

*Let's Celebrate Our Remaining Life - Every Moment, Every Day. 😎😀😇🙃😉🤪🥳🤩*
ravi said…
*CATCHING WILD PIG*

Karl Marx once said- _*"Remove one freedom from every generation. Soon you will have no freedom left and no one would have ."*_


A student looked at the Professor and asked a strange question-

*"Do you know how to catch wild Pigs ?"*

The professor thought it was a joke and asked for the punchline. The young man said that it was no joke at all.

*"You catch wild Pigs by finding a suitable place in the woods and putting Corn on the ground. The Wild Pigs find the Corn and begin to come every day to eat the Free food.*

When they are used to coming every day, you put a fence on one side of the place where they are used to coming regularly.

At first, the Wild Pigs are scared, but when they get used to the fence, they begin to eat the corn again and you put up another side of the fence.

They get used to that and start to eat again. You continue until you have all four sides of the fence up with a gate in the last side.

The Pigs, which are used to the Free Corn, start to come through the gate to eat that Free Corn again. Then you slam the gate on them and catch the whole herd.

*Suddenly, the wild Pigs have lost their freedom. They run around inside the fence, but they are caught. Soon they go back to eating the Free Corn.*

They are so used to it that they have forgotten how to forage in the woods for themselves, so they accept their captivity and they are slaughtered thereafter."

The young man then told the Professor-
*"That is exactly what is happening in many countries today."*

The Governments keep pushing the people towards Socialism and keep spreading the Free Corn out in the form of programmes such as Free Rations, Free Electricity, Tax credits, Caste Benefits, Farm subsidies, Welfare Schemes, Free entitlements, Free medicines, while the people continually lose their freedom, just a little bit at a time."

One should always remember a simple Truth:

*There is no such thing as a Free Lunch*

If you think that the Free Ride is essential to your way of life, then God help you when the gates slam shut !

*Most of the problems we are facing today, are because the people who work for a living are now outnumbered by those who vote for a living !*
ravi said…
*இன்று சர்வதேச ஆண்கள் தினம்*

*இன்று (நவம்பர் 19) சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.*

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி சர்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு ஆண்கள் செய்யும் பங்களிப்புகளை போற்றும் வகையிலும் ஆண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன்முதலில் 1999-ம் ஆண்டு டாக்டர் ஜெரோம் தீலக்சிங் சர்வதேச ஆண்கள் தினத்தை தோற்றுவித்தார். டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைகழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜெரோம் தன்னுடைய தந்தையின் பிறந்த தினத்தை நினைவு கூறும்வகையில் நவம்பர் 19-ஐ ஆண்கள் தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்தார்.
ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் தினத்தை கொண்டாடுமாறு மக்களை ஊக்குவித்தார். தொடக்க காலக்கட்டத்தில் கரீபிய தீவுகளில் ஆதரவைப் பெற்ற ஆண்கள் தினம் அதன்பின்பு, தொடர்ச்சியாக பிறநாடுகளின் ஆதரவுகளையும் பெற்று தற்போது சர்வதேச அளவில்
கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் 45 வயதிற்குட்பட்ட ஆண்களின் மரணத்திற்கு தற்கொலையே முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. பாலியல் அடையாளம், சமூக மற்றும் கலாச்சார சீரமைப்புகள் ஆகியவை ஆண்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கங்களே இந்த தற்கொலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆண்கள் வலிமையானவர்கள், பாதிப்பில்லாதவர்கள் என அவர்களின் வெளித்தோற்றம் கொண்டு சமூகத்தால் அளவிடப்படுகின்றனர். இதனால் உணர்வுப்பூர்வமான அவர்களின் தேவைகள் மதிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றன.

சர்வதேச ஆண்கள் தினம் 6 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

* நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை உருவாக்குவது.

* சமூகம், குடும்பம், திருமணம், குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழலில் ஆண்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவது.

* ஆண்களின் உணர்ச்சி, உடல், சமூகம் மற்றமு ஆன்மீக பாதுகாப்பை கவனித்துக்கொள்வது.

* ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவது.

* பாலின உறவுகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி பாலின சமத்துவத்தை மேம்ம்படுத்துவதில் கவனம் செலுத்துவது.

* ஒவ்வொரு இனமும் தங்கள் முழுத் திறனுடன் செழித்து வளரக்கூடிய சிறந்த மற்றும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது.


*ஆண்கள் தினம் பெண்கள் தினத்துக்கு போட்டியாக கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்டதில்லை.*

மாறாக ஆண்களின் மதிப்புகள், குணாதிசயங்களை உணர்த்தும் விதமாகவும் ஆண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகவும் ஆண்களை மனம்திறந்து பேச ஊக்குவிப்பதற்காகவும் ஆண்கள் தினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

ravi said…
*🙇🏻‍♀️ _TODAY'S G.K._ 🙇🏻‍♂️*


*🤔 Do you know?*

1. Marie Curie was the first Woman to win a Nobel Prize.

2. Upanishad are books on Philosophy.

3. Air conditioner was discovered by Willis Carrier.

4. The gas liberated in the Bhopal gas tragedy was Methyl isocyanate.

5. Yellow Revolution is associated with the production of Oil seeds.

6. Permanent Revenue settlement was introduced by Cornwallis.

7. Mario Puzo wrote the book The God Father.

8. The acid used in car battery is Sulphuric acid.

9. Louis Fischer wrote the Book Gandhi and Stalin.

10. Human Rights Day is observed on December 10.

*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார்.

2. உபநிஷதம் என்பது தத்துவத்தின் புத்தகங்களாகும்.

3. காற்றுச்சீரமைப்பி வில்லிஸ் கேரியர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

4. போபால் விஷ வாயு பேரழிவில் விடுவிக்கப்பட்ட வாயு மெத்தில் ஐசோசைனேட் ஆகும்.

5. மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் விதைகள் உற்பத்தி தொடர்புடையது.

6. வங்கியின் நிரந்தர வருவாய் தீர்வு காரன்வாலிஸ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

7. தி காட் பாதர் என்ற புத்தகத்தை எழுதியவர் மரியோ புஜோ.

8. கார் பேட்டரியில் பயன்படுத்தப்படும் அமிலம் சல்பூரிக் அமிலம் ஆகும்.

9. லூயிஸ் பிஷ்ஷர் என்பவர் காந்தி மற்றும் ஸ்டாலின் என்ற புத்தகத்தை எழுதினார்.

10. டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*


*PROGNOSTIC*

*(முன் கணிப்பு)*

meaning.....  describes something that would help predict the likely outcome of a disease or illness...



1. Performing a *prognostic* biopsy will tell us the stage at which the cancer is currently.


2. Early on, *prognostic* scores predicted recovery to be unlikely, but we haven’t given up hope.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
*இன்றைய 10 சொற்கள்!*

*அறிவு பரவல் ✍*


1. Spacecraft (ஸ்பேஸ்க்ரேஃப்ட்) - விண்கலம்.
விண்கலம் என்பது விண்வெளியில் பறக்க வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம் அல்லது இயந்திரமாகும்.
A spacecraft is a vehicle or machine designed to fly in outer space.

2. Astronaut (அஸ்ட்ரானெட்) - விண்வெளி வீரர்.
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
Astronauts conducted many experiments in space.

3. Comet (கொமெட்) - வால்மீன்.
ஒரு வால்மீனின் வாலை 84 மில்லியன் மைல்கள் வரை நீட்டிக்க முடியும்.
The tail of a comet can extend over 84 million miles.

4. Constellation (கான்ஸ்டெல்லேஸன்) - விண்மீன் கூட்டம்.
தொலைநோக்கியை பயன்படுத்தி உங்களால் எளிதாக விண்மீன் கூட்டத்தை பார்க்க முடியும்.
You can easily see the constellation by using the telescope.

5. Cosmic dust (காஸ்மிக் டஸ்ட்) - அண்டத் தூசி.
அண்டத் தூசி துகள்களின் அளவு 0.1 மைக்ரோமீட்டர் ஆகும்.
Cosmic dust particles are 0.1 micrometer in size.

6. Satellite (சேட்லைட்) - செயற்கைக்கோள்.
இரண்டு நாடுகளும் பல செயற்கைக்கோள் திட்டங்களில் ஒத்துழைக்கின்றன.
The two nations are collaborating on several satellite projects.

7. Meteor (மெடியோர்) - விண்கற்கள்.
மக்கள் விண்கற்களின் பொழிவை பார்க்க ஆவலாக இருந்தனர்.
People were very eager to see the meteor shower.

8. Corona (கொரொனா) - சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டம்.
பெரும்பாலான வானியல் நிபுணர்களும் மக்களும் சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை பார்க்க தயாராக இருந்தனர்.
Most of the astronomers and the people were ready to see the corona.

9. Eclipse (எக்லிப்ஸ்) - கிரகணம்.
சந்திரன் சூரியனை முன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும்.
A solar eclipse happens when the moon passes in front of the sun.

10. Accredited (அக்கிரடிடேட்) - அங்கீகாரம் பெற்ற.
அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு.
Only accredited investors are allowed to participate.
ravi said…
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹

*இன்றைய சிந்தனை.*
.....................................................................

*"மதிப்பெண் மட்டும் கல்வி இல்லை...!"*
..................................................................................

கல்வி’’ என்பது அழியாத செல்வம். ‘’கல்வி’’ கற்பதன் முலம் நாம் புது புது விஞ்ஞான செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

பல பல பட்டம் பெறுவது மட்டும் கல்வி அல்ல... நம் அறிவை பெருக்குவதற்கும், வாழ்க்கை நிலையையும் உயர்த்துவதோடு பொருளாதார நிலைமையும் உயர்த்துகின்றது கல்வி ஒன்றே..

மனிதனின் மிகப்பெரிய சொத்து கல்வி. கற்ற மனிதனே முழுமையான மனிதனாவான்.

கல்வி நமக்கு நல்வழி காட்டும் கல்வி கற்றால் வாழ்க்கை சிறக்கும்.. இதுவே வாழ்க்கையின் நியதி..

கல்வி கற்ற பின்னே வேலை பெற்றான். சுற்றம் சூழ வாழக் கற்றான். நல்ல பழக்கம் கல்வி கொடுக்கும். இவை அனைத்தும் கல்வி கற்ற பின்னே நடக்கிறது.

படித்தால் சுயமாய் சிந்திக்க‌ முடியும். நன்மை எது தீமை எது என தெரியப் படுத்தும்.

அமெரிக்காவில் ஒரு ஏழைத் தொழிலாளின் மகனுக்கு புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். ஆனால் புத்தகம் வாங்குவதற்கு உண்டான பணம் இல்லை

.அவன் தந்தையோ மிகுந்த ஏழை. அவரால் எப்படி இதற்கு எல்லாம் செலவு செய்ய முடியும்.?

அவனோ புத்தகம் படிக்கும் ஆசையில் வெகுதுாரம் சென்று பலரை கெஞ்சி கேட்டு புத்தகங்கள் வாங்கி வருவான்.

ஒருநாள் அவன், ‘அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்’ பற்றிய புத்தகத்தைப் படித்து வந்தான். உறக்கம் வரவே, புத்தகத்தை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டான்.

அன்று பெய்த மழையில் அப் புத்தகம் நனைந்து விட்டது. ஐயோ! இதன் உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?’’ என்று தவித்தான்..

பின் ‘‘ஐயோ! இந்தப் புத்தகம் எனது அஜாக்கிரதையால் நனைந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.’’ என்று கேட்டுக்கொண்டான்.

ஆனால் அவரோ ‘‘அதெல்லாம் முடியாது..இந்த. புத்தகத்திற்கான விலையை நீ தர வேண்டும்’’என்றார். ‘ஐயா! என்னிடம் பணம் இல்லை’’ என்றான்.

அப்படியானால் நீ என் வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்’’ என்றார்..
.
‘சரி! அப்படியே செய்கிறேன். ஆனால் தாங்கள் இந்தப் புத்தகத்தை எனக்கே தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு அப் புத்தகத்தைப் பெற்றுச் சென்றான்.

இப்படிப் புத்தகத்தை வாங்கிப் படித்த அச்சிறுவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார்..

ஆம்! அடிமைத் தளையை அறுத்து எறிந்த ஆபிரகாம் லிங்கன்தான் அந்த சிறுவன்.. அவனது நுாலறிவு அவனை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருந்தது..

*ஆம்.,நண்பர்களே...!*

*உங்கள் குழந்தைகள் அவர்கள்விரும்பிய பாடம் படிக்கட்டும். அவர்கள் விருப்பபடி படிக்கட்டும் என பெற்றோர்கள் முடிவெடுக்கும் உரிமையை தர வேண்டும்...*

*படிப்பு என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. உங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்...*

*மதிப்பெண் மட்டும் கல்வி இல்லை. என்பதை புரிந்து கொள்ளுங்கள்...*

*படித்தவர் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் இல்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் பல பேர் நன்கு படித்தவர் இல்லை...*

*உங்கள் பிள்ளை களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர எதிரியாக இருக்காதீர்கள்...*

*மாணவர்களின் வசந்த காலத்தை இறந்தகாலமாய் ஆக்கி விடாதீர்கள்...*

பகிர்வு - தகவல் உலா

🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹

ravi said…
➿➿➿➿➿➿➿➿➿➿

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

எதுவுமே செய்யாமல்
வீணாகும் வாழ்க்கையை விட,
எதையாவது நல்லதாகச் செய்யும்போது
ஏற்படும் பிழைகள்
பயனுள்ளதே..!


🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது.


📰 *நாளும் ஒரு செய்தி*

ராயல் பெங்கால் புலி 10 அடி நீளம் வளரும். உலகில் உள்ள மொத்த ராயல் பெங்கால் புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது.


🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

வெங்காய சாம்பார் செய்யும்போது, தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்த்தால், ருசியும், மணமும் கூடுதலாக இருக்கும்.


💰 *நாளும் ஒரு பொன்மொழி*

தங்க ஆபரணங்களைவிட முக மலர்ச்சிக்கு வசீகரம் மிக அதிகம்.
*-ரூஸ்வெல்ட்*


📆. *இன்று நவம்பர் 19-*

▪️ *பன்னாட்டு குடியுரிமையாளர்கள் நாள்.*

▪️ *பன்னாட்டு கழிவறை நாள்.*

▪️ *பன்னாட்டு ஆண்கள் நாள்.*

🌸 *பிறந்த நாள்* 🌸

⭕1828- *இராணி இலட்சுமிபாய்* (ஜான்சி பேரரசி)

⭕1917- *இந்திரா காந்தி* (3-ஆவது இந்தியப் பிரதமர்)

➿➿➿➿➿➿➿➿➿➿
ravi said…
கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.

பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.

உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.

ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
🌹🌺" *மனிதவாழ்வு_மேம்பட*
*ஸ்ரீமந் நாராயணனால்* *அருளப்பட்ட* *வேதங்கள்* ..!.. *விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺மனிதவாழ்வு_மேம்பட_ஸ்ரீமந் நாராயணனால் அருளப்பட்ட 10 வேதங்கள் .........

🌺1 - ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா __அர்ஜூனனுக்குக் கூறியது
#ஶ்ரீமத்பகவத்கீதை

🌺2 - வசிஷ்டர் _இராமருக்குக் கூறியது
#யோக_வாசிஷ்டம்

🌺3 - கிருஷ்ணர்_ உத்தவருக்குக் கூறியது.
#உத்தவகீதை

🌺4 - விதுரர் _திருதராஷ்டிரருக்குக் கூறியது.
#விதுர_நீதி

🌺5- பீஷ்மர் அம்புப் படுக்கையில்
பாண்டவர்களிடம் கூறியது
#பீஷ்ம_நீதி

🌺6- கருடனிடம், விஷ்ணு கூறிய மறுபிறவி
இரகசியங்கள்
#கருட_புராணம்

🌺7 - சிறுவன் நசிகேதனிடம் மரணத்தின் இறைவனான யமன் கூறிய மரணத்தின் இரகசியம்.
#கட_உபநிஷம்

🌺8 பாம்பு கடிபட்டு இறக்கும் சாபம் பெற்ற அர்ஜுனனின் பேரன்
பரிட்சித்து மன்னனுக்கு, முனிவர் சுகர் கூறியது
#பாகவதம்

🌺9- செளதி முனிவர் நைமிசாரண்ய காட்டில் உள்ள முனிவர்களுக்குக் கூறியது.
#மகாபாரதம்

🌺10:- இனிய பாடல்களால் அமைந்த இந்து வேதம்
#சாம_வேதம்

🌺 *பாடல்* 🌹

🌺கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

🌺ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா

🌺கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺🌻



Io
ravi said…
🌺 🌹 "Human_Life_Improvement".
Vedas blessed by Sriman Narayan ..!.. A simple story explaining 🌹🌺 -------------------------------------------------- -----
🌺Human Life_Improvement_10 Vedas blessed by Shriman Narayana .........

🌺 1 - Lord Krishna said to __Arjuna
#Shrimadbhagavadgita

🌺 2 - Vashishtar told Rama
#yoga_vasishtam

🌺 3 - Krishna_ said to Utdha.
#Uddavagita

🌺4 - Vidurar said to Dhritarashtra.
#Divorce_Justice

🌺5- Bhishma on the bed of arrows
told the Pandavas
#Bhishma_Neethi

🌺6- Reincarnation told by Vishnu to Garuda
Secrets
#Garuda_Puranam

🌺7 - The secret of death told by Yama, the lord of death, to the boy Nasiketan.
#Kada_Upanisham

🌺 8 The grandson of Arjuna who was cursed to die of snake bites
Sage Sugar said to king Parikshithu
#Bhagavatam

🌺9- Sage Seluti said to the sages in Naimisaranya forest.
#Mahabharata

🌺10:- Hindu Veda composed of sweet songs
#Sama_Veda

🌺 *Song* 🌹 https://youtu.be/jXsilcEabgA

🌺Krishna Krishna is the one who gives after asking
Krishna Krishna is the hero of Gita
Krishna Krishna is the one who gives after asking
Krishna Krishna is the hero of Gita

🌺 Krishna is Krishna in the lit lamp
We put our hearts on the poor, Krishna Krishna
Krishna is Krishna in the evening
We stood in search of dharma, Krishna Krishna

🌺Krishna Krishna is the one who gives after asking
Krishna Krishna is the hero of Gita

🌹 valga Vayakam🌺 🌹 valga Vayakam🌺
🌹 *valga Valamudan 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹Sarvam Shri Krishnarpanam🌹🌺🌻
ravi said…
பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலவீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்றகேள்வி வரலாம்.

தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது.

ஒரு புழு இந்த உலகத்தினுடைய சக்கரவர்த்தி நான்தான் அப்படின்னு நம்மகிட்ட கர்வப்பட்டா நாம் எப்படி சிரிப்போமோ, எப்படி பரிதாபமா அந்த புழுவை பார்ப்போமோ, இந்த பிரபஞ்ச சக்தி நம் கர்வத்தை பார்க்கிறது.

அப்படித்தான் இங்கு மிகப்பெரிய மாயை என்பது நம்முடைய கர்வமே. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.


🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்........!!*

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ravi said…
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.

ravi said…
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் - வெற்றி
ச - வீரம்
வி - பராமரிப்பு
து - நன்மை
வ - ஒற்றுமை
ரி - அன்பு
நி - பணம்
யம் - அறிவு
ஃபர் - பாதுகாப்பு
க்கோ - ஞானம்
த்தி - அழுத்தம்
வா - பக்தி
ஸ்யா - நினைவாற்றல்
ஃத்தி - மூச்சு
மா - சுய ஒழுக்கம்
யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல்
நஹ- இனிமை
பரா- நல்லது
சோ- தைரியம்
த்தா- ஞானம்
யட் - சேவை

ravi said…
காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்

ப்பூ - உடல் விமானம்

புவஹா - நிழலிடா விமானம்

ஸ்வ - வான விமானம்

தத் - அந்த தலை தெய்வத்தின்

ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி

வரேன்யம் - வணங்க வேண்டும்

பர்கோ - பிரபல

தேவஸ்ய - பிரகாசமிக்க

தீமஹி - நம் த்யானம்

தியோ - அறிவினை

யா - யார்

நஹ - எங்கள்

ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்

ஓம் பூர் : புவ : ஸீவ :

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ : யோந: ப்ரசோதயாத்

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத் மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

ravi said…
இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

ravi said…
காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

ravi said…
காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

* கம்பீரத் தோற்றம்
* தரமான பேச்சு
* வறுமை, குறை நீங்குதல்
* பாதுகாப்பு வட்டம்
* கண்ணில் அறிவு தெரிதல்
* அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
* நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்

மேலும்
* அமைதியாய் இருப்பர்
* நற்செயல்களில் ஈடுபடுவர்
* காந்த சக்தி ஆகியவை உருவாகும்.

மேலும்
* வாழ்க்கையில் தடைகளை நீக்கும்
* மூளையை பிரகாசிக்கச் செய்யும்
* உள்ளுணர்வினை தெளி வாக்கும்
* உயர் உண்மைகள் தெரிய வரும்

- என்றும் கூறப்படுகின்றது.

ravi said…
டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

ஒரு மந்திரமோ, தியானமோ, யோகவோ, உடற்பயிற்சியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.

ravi said…
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ-ம்) காபி, டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.

த்யானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ, கடைப்பிடிக்கும் பழக்கமோ நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ-ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால், வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

* மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

* ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

* 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

* 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

* 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

* 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

* இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

- மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
* கிழக்கு முகமாக அமருங்கள்.
* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

ravi said…
மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது ‘இயற்கை வைத்தியம்’ என்ற புத்தகத்தில் ‘ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் ‘ராம’ நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘ரா’ என்பது ‘ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், ‘ம’ என்பது ‘ஓம் நம சிவாய’ என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

கந்தர் சஷ்டி கவசத்தில் கூட ‘ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி’ என சொல்லப்படுகின்றது. ‘ரா’ என்ற எழுத்தும் ‘ம’ என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.

ravi said…
திருமாலை பாசுரம்-17.

விரும்பிநின் றேத்த மாட்டேன்:

விதியிலேன் மதியொன் றில்லை:

இரும்பு போல் வலிய நெஞ்சம்,

இறையிறை யுருகும் வண்ணம்,

சுரும்பமர்
சோலை சூழ்ந்த:
அரங்கமா கோயில் கொண்,

கரும்பினைக் கண்டு கொண்டேன்:

கண்ணினை களிக்கு மாறே.🦅🦅🦅
ravi said…
கண்ணா என்னிடம் எவையெல்லாம் இல்லை தெரியுமா ?

எனக்கு கர்ம- ஞான- பக்தி யோகபயிற்சிகளு
இல்லை …..

உனை தொழுது போற்றிப் பாட விதியும் இல்லை

நல்ல புத்தியும் இல்லை…..

இதை உணர மென்மையான மனமும் இல்லை.!!!

இரும்பு போல் வலிய நெஞ்சம் தான் எனக்கு…..

உன்னை எண்ணி உருக மென்மை இல்லை………

ஒரு கரும்பு கண்டேன் அரங்கமா கோயில் தனில் ஆனந்த சயனமதில்

அது வாய்க்கு மட்டும் இனிப்பு இல்லை என கண்ணிற்கும் என் கண்ணா 🦚🦚🦚
ravi said…
*🔯ஏகாதசி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?*


🔯பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஏகாதசி என்றால் என்ன?

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிப்பது ஆகும்.

இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்று அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி என்கின்றனர்.

ஏகாதச எனும் வடமொழிச் சொல்லுக்கு 11 எனப் பொருள். காலக்கணிப்பில் 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

ravi said…
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பில் 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதம் ஒன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ண பட்சம் எனப்படும். தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும்.

ravi said…
அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
ஏகாதசி தோன்றிய புராணம்
ஏகாதசி பற்றி புராணங்கள் பல்வேறு கதைகளை கூறுகின்றன.

அவற்றில் ஒன்று, புராணத்தில் முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால், அவர்கள் அனைவரும் அசுரை அழித்து தங்களை காக்குமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அவர்களிடம் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுமாறு கூறுகிறார். அதன்படி தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்.

ravi said…
தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய மகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார்.
இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகள் நீடித்தது. இதனால், மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.
அந்த நேரத்தை தனக்கு சாதகமாகப் பயண்படுத்திக்கொள்ள நினைத்த அசுரன் முரன் மகாவிஷ்ணுவை கொல்லத் துணிந்தான். அப்போது போது, அவரிடமிருந்த சக்தியானது ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த பெண்ணை அசுரன் முரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

ravi said…
நித்திரையில் இருந்து விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட மகாவிஷ்ணு, அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகாவிஷ்ணுவின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று நலமாக வாழ்வோம் என்பது ஐதீகம்.

ravi said…
ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?
ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனை கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மேலும், இத்தகைய வைகுண்ட ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி
மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு கதை இருக்கிறது.

இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைக்கின்றனர். அதனால்தான், ஏகாதசி அன்று புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் என்று கூறபடுகிற சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ravi said…
*ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.*

அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். மகாவிஷ்ணு பெருமாளின் புகழ்பாடும் பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, மகாவிஷ்ணு பெருமாளின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும்.

ravi said…
ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அல்லது அவர்கள் வீட்டில் இருந்தபடியே பகவானின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.
பக்தர்கள் இந்த வழிபாட்டை மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவார்கள்.
அதனால், அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து பெருமாளின் அருளைப் பெற்று வாழ்வில் ஏற்றம் காணுங்கள்.

ravi said…
ஆடி வரும் அழகில் புலி நடந்து வரும் வழியில்

துவண்டு நின்றே உனை தேடி நின்றேன் ஐயப்பா

உன் பாத ஒலி கேட்கவே பாவி நான் தவம் இருந்தேன்

காவி உடை அணிந்தே கன்னி சாமி என்றே பெயர் எடுத்தே

விரதம் பல பூண்டே உனை பார்க்க ஓடி வந்தேன் ஐயப்பா ...

உன் சலங்கை ஒலி கேட்க பாவி நான் தவம் இருந்தேன்

பதினெட்டு படி அளந்தேன்
பக்குவமாய் சரணம் சொல்லியே ...

என் பாவம் பம்பா நதியில் அடித்து செல்லக்கண்டேன்

பார்க்கடல் கண்டேன் அங்கே தில்லை கூத்தன் தன் தித்திக்கும் சிரிப்பு கண்டேன் ...

திருடி செல்லும் கண்ணன் அவன் குழல் ஊதக் கண்டேன் ...

தித்திப்பதெல்லாம் உன் நாமம் ஒன்றே என்று உணர்ந்து கொண்டேன் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Hemalatha said…
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
ravi said…
Swamye Saranam Ayyappa
அருமை🙏🏻
Hemalatha said…
தினம் சமையல் செய்யும் நாங்கள் என்றாவது ஒருநாள் தயிர் சாதம்,உப்புமா செய்வோம் ஆனால் தினமும் விருந்து தான்.
Hemalatha said…
எப்படி தொடர்ந்து எழுதமுடிகிறது என்று நினைக்கிறேன்
Hemalatha said…
Sairam should give good health,and strength to you always sir🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 405* 🙏🙏🙏started on 7th Oct 2021

*156* *நீராகா*
ravi said…
ஆசைகள் அவளை அண்டாது ... மாயை மூலம் ஆசைகளை நமக்கு ஏற்படுத்தி விட்டு அவளை நினைக்கிறோமா என்று சோதிப்பவள் ... நம்மிடம் கேட்டு வாங்க என்ன இருக்கிறது ? அவளிடம் இல்லாததா ?

இருந்தாலும் வெட்கத்தை விட்டு கேட்கிறாள் ...

என் நாமாவளி கொஞ்சம் சொல்லேன் ...

ஒரு நாளில் ஒரு விநாடியாவது என்னை பற்றி நினையேன் ...

செவிடன் காதில் அவள் ஊதும் சங்கு அவளை பார்த்து சிரிக்கிறது ..

இந்த மூடர்கள் முட்டாள்கள் திருந்துவார்களா தாயே என்றே .... 🙏🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 2 ...18th Nov 22*

*ஆர்யா சதகம்*
ravi said…
*ஆர்யா சதகம் - ஸ்லோகம் 1 -5*

1. कारणपरचिद्रूपा काञ्चीपुरसीम्नि कामपीठगता ।
काचन विहरति करुणा काश्मीरस्तबककोमलाङ्गलता ॥ १॥

1. Karana para chidroopaa, Kanchi puraseemni, Kama peeta gatha,
Kachana viharathi karunaa Kasmeera sthabhaka Komalangalatha.

காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா |

காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபககோமலாங்கலதா ||1||🌸🌸🌸
ravi said…
பரமேஸ்வரன் பர சித் ஸ்வரூபன்.

அம்பாள் காமாக்ஷி பரசித் ஸ்வரூபிணி.

வெவ்வேறாகவும் தனித்தும் தோற்றம் கொண்டவர்கள்

சக்தியும் சிவனும். கஷ்மீரம் என்றால் குங்குமப்பூ.

கஷ்மீரம் நிறைய இருப்பதால் அந்த பிரதேசம் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.

51 சக்தி பீடங்களில் முக்கியமான நான்கு ஒட்யாண , ஜாலந்தர, பூர்ணகிரி, காமராஜ பீடங்கள். காமராஜ பீடம் தான் காமகோடி பீடம்.

காஞ்சிபுரத்தில் உள்ளது.

காமாக்ஷி குங்குமப் பூவை போன்றவள்.

ம்ருதுவானவள். அஹம் என்றால் நான்.

இதம் என்றால் மற்றவை.

இந்த ரெண்டுமாக ஜகத்தில் காட்சி அளித்து ரட்சிக்கும் பர பிரம்மத்தின் விளையாட்டு தான் பிரபஞ் சத்தில் ஓயாமல் ஒழியாமல் மாயையாக நடைபெறுகிறது.

நம்மிடம் அளவிலா கருணை கொண்டவள் *காமாக்ஷி தேவி.* ஜகத் காரணி.🌸🌸🌸
ravi said…
திருமாலை பாசுரம்-17.

விரும்பிநின் றேத்த மாட்டேன்:

விதியிலேன் மதியொன் றில்லை:

இரும்பு போல் வலிய நெஞ்சம்,

இறையிறை யுருகும் வண்ணம்,

சுரும்பமர்
சோலை சூழ்ந்த:
அரங்கமா கோயில் கொண்,

கரும்பினைக் கண்டு கொண்டேன்:

கண்ணினை களிக்கு மாறே.🦅🦅🦅
ravi said…
கண்ணா என்னிடம் எவையெல்லாம் இல்லை தெரியுமா ?

எனக்கு கர்ம- ஞான- பக்தி யோகபயிற்சிகளு
இல்லை …..

உனை தொழுது போற்றிப் பாட விதியும் இல்லை

நல்ல புத்தியும் இல்லை…..

இதை உணர மென்மையான மனமும் இல்லை.!!!

இரும்பு போல் வலிய நெஞ்சம் தான் எனக்கு…..

உன்னை எண்ணி உருக மென்மை இல்லை………

ஒரு கரும்பு கண்டேன் அரங்கமா கோயில் தனில் ஆனந்த சயனமதில்

அது வாய்க்கு மட்டும் இனிப்பு இல்லை என கண்ணிற்கும் என் கண்ணா 🦚🦚🦚
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 26 கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா =* நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும் சுகந்தம் பரப்புபவள்
ravi said…
அம்மா* ...

சுகந்தம் உன் நிழல் அன்றோ சுந்தரி உன் வதனம் அன்றோ ...

கண்ணாடிக்கே அலங்காரம் செய்கின்றோம்

காற்றுக்கு ஆடை நெய்கின்றோம்

கடலுக்கு சேலை விரிக்கின்றோம்

வானில் விளையாடும் நிலவிற்கு அமுதம் படைக்கின்றோம் ...

தத்தி தத்தி செல்லும் தாரகைகளுக்கு காவடி எடுக்கின்றோம் ...

தன்னிகரில்லா உன்னிடம் பெறுவதற்கே வருகின்றோம் தருவதற்கு ஒன்றும் இல்லாமலே

மடப்பள்ளி வரதன் மாணிக்கமானான் உன் தாம்பூலம் சிந்திய தேன் சுவைத்தே ...

பிறவி ஊமை மூகபஞ்ச சதீ பாடினான் உன் தாம்பூலத்தின் கருணை பெற்றே

மூடன் ஒருவன் சியாமளா தண்டகம் பாடினான் உன் மதுர இதழ் சுவை பெற்றே

தாயே மூடன் நான் ஊமை நான் செய்வது ஒன்றும் அறியேன் ..

நான் உளரவதும் தோத்திரங்கள் என்றே உன் தாம்பூலம் கொஞ்சம் சிந்தாயோ சிந்தாமணி பேடகமே 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 129*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே

துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்

கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்

திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே. 129👏👏👏
1 – 200 of 312 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை