அம்பாளின் கடாக்ஷம்
அம்பாளின் கடாக்ஷம் ரகுவிற்கு தீராத காய்ச்சல் .. உடம்பெல்லாம் முத்து முத்தாய் அம்பாளின் புன்னைகை போல் பரவி இருந்தது முத்து மாரியம்மனின் கருணை .. பிழைப்பது மிக கடினம் என்றே சொல்லி விட்டனர் எல்லா மருத்துவர்களும் ... ரகுவின் தந்தை தன் மகன் எப்படியும் பிழைத்து விடுவார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை .. லலிதா சஹஸ்ரநாமத்தில் மிக அதிக நம்பிக்கை உடையவர் ... அம்மா .. மிகவும் சோதித்து விட்டாய் ... ரகு நீ கொடுத்த வரம் ... கொடுப்பதும் எடுப்பதும் உன் கையில் .. நான் தனியாக வேண்டி என்ன செய்யப்போகிறேன் ... உன் இஷ்ட்டம் எதுவோ அதை செய் ... அவர் கண்கள் தாரை தாரையாக கண்ணீரை அவள் மீது தெளித்துக்கொண்டிருந்தது .. வாய் லலிதா சஸஷ்ரநாமத்தை சொல்லிக்கொண்டே இருந்தது ... மருத்துவர்கள் ventilator வைத்து விட்டனர் ... எப்பொழுது வேண்டுமென்றால் செயற்கை குழாய்களை நீக்கிவிட்டு இயற்கையை ரகு தழுவிக்கொள்ளலாம் என்ற நிலைமை .... விமர்சரூபிணீ வித்யா வியதாதி ஜகத்ப்ரஸூ: | ஸர்வவ்யாதி ப்ரசமநீ ஸர்வம்ருத்யு...