பச்சைப்புடவைக்காரி-நீயல்லால் தெய்வம் இல்லை*💐💐💐
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் நீயல்லால் தெய்வம் இல்லை* அம்மா -- எவ்வளவோ தவம் நான் செய்திருந்தால் குண்டலினி சக்தியை நீயே விளக்கி சொல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கும்!! --- குழந்தைகள் கையில் தங்க வளையல்களை கொடுத்து நீங்கள் இதையும் உங்கள் விளையாட்டு பொருள்களில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காது -- ஏன் என்றால் தங்கத்தின் மதிப்பு அந்த உண்மையான தங்கங்களுக்குத் தெரியாது - அதைப்போல் வேதங்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காதவள் தினமும் நேரம் தவறாமல் என்னைத் தேடி வந்து என்னை புதுப்பிக்கின்றாயே தாயே - உன் அருமையை இன்னும் என்னால் அந்த குழந்தைகளைப்போல் புரிந்து கொள்ள முடியவில்லை அம்மா --- என்னை மன்னித்துவிடு... கண்கள் அணையை திறந்து விட்ட நீரைப்போல் பாய்ந்து ஓடியது ..... பச்சைப் புடவைக்காரி என்னை தன் மடியில் சாய்த்துக்கொண்டாள் --- கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான் தெரிவதில்லை - கண்ணை மூடிக்கொண்டு என்னையே நினைப்பவர்களுக்கு மட்டுமே தெரிவேன் --- சரி இன்று அடுத்த ஆதார சக்கரம் - பார்ப்போமா ?...