பச்சைப்புடவைக்காரி----அமிர்தத்தை பொழியும் பாம்பு
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
அமிர்தத்தை பொழியும் பாம்பு
சுவற்றில் அப்பா வாங்கிக்கொடுத்த கடிகாரம் - ஏறி சாவி கொடுக்கவேண்டியது - மிகவும் பழசானாலும் அப்பா ஆசை ஆசையாய் வாங்கிக்கொடுத்தது - தூக்கிப்போட்டு வேறு வாங்கிக்கொள்ள மனம் இல்லை - சரியாக 6மணி காட்டி விட்டு நின்று விட்டது --- மனம் வேறு விதமான எண்ணங்களில் ஆழ்ந்து போனது.
ஆறு என்பது அற்புதமான எண். பரதேவதையின் ஆளுமைக்குட்பட்ட எண். சுக்கிர கிரகத்திற்கு அடையாளமாக உள்ள எண்.
அம்பிகை மனித உடலில் ஆறு ஆதாரங்களாக விளங்குபவள். இதனால் தேவி ஷட்சக்ரமாதா எனப் போற்றப்படுகிறாள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள் அவ்வை பாட்டி இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் அறிய வாய்ப்பு இந்த மனித பிறவியில் தான் கிடைக்கின்றன.
இன்று பச்சைப்புடவைக்காரி வந்தால் இந்த ஆறு ஆதார சக்கிரங்களை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் -- குண்டலினியைப்பற்றி ஒன்றுமே தெரிந்துக்கொள்ளாத ஜடமாக எவ்வளவு நாட்கள் தான் இப்படி வாழ்வது? கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு ஏன் நெய்க்கு அலைய வேண்டும்?
என்னப்பா வெண்ணெய், நெய் என்று ஏதேதோ தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறாய்---? கேட்டவள் வேதங்களின் நாயகி.
அம்மா எனக்கு ஈசன் மாணிக்கவாசகருக்கு குருவாகி உபதேசம் செய்ததைப்போல் தாங்கள் இன்று இந்த ஆறு ஆதா ரசக்கரங்களைப்பற்றி அடியேனும் புரிந்துகொள்ளும் அளவிற்கு எடுத்துச்சொல்லவேண்டும் .படிக்கிறேன் ஆனால் மனதில் நிற்பதில்லை.
அடடே இது ஒரு பெரிய விஷயமாயிற்றே -- இந்த விஷயம் உன் வீட்டு கடிகாரம் மாதிரி நின்று போவதில்லை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம் - பொறுமை வேண்டும் , கவனம் வேண்டும் -- முடிந்த வரையில் ஒரு கதை சொல்வதைப்போல சொல்ல முயற்சி செய்கிறேன் - நீயும் கொட்டாவி விடாமல் கேட்க ஏதுவாக இருக்கும் ... சரியா ?
சொல்லம்மா - தேனாக நீ பேசும்போது அதை சுவைக்காமல் கொட்டாவி கண்டிப்பாக விட மாட்டேன்.
சரி மனித உடம்பில் சூக்ஷ்ம
ரூபத்தில் 6 ஆதார சக்கிரங்கள் உள்ளன
அவை
1. மூலாதாரம்
2. சுவாதிஷ்ட்டானம்
3. மணிபூரகம்
4. அநாகதம்
5. விசுத்தி
6. ஆஜ்ஞை
ஆஜ்ஞா சக்ரத்திற்கு மேல் தலை உச்சியில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூவில் சஹஸ்ராரம் அமைந்துள்ளது . இது பிரபஞ்ச வெளியோடு தொடர்பு உடையது --- இங்கே நானும் ஈசனும் நடமாடிக்கொண்டிருக்கிறோம் --- ஏராளமான அமிர்தம் இங்கே பருகலாம் ... ஸ்ரீசக்கர வடிவம் இவை அனைத்தையும் உடையது
ஆதிசங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் 9வது ஸ்லோகத்தில்
மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹீதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி
மனோஸ்பி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே
தாயே, மூலாதாரத்திலிருக்கும் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்திலுள்ள ஜலதத்துவத்தையும். அநாகத சக்ரத்திலுள்ள வாயுதத்துவத்தையும், விசுத்தி சக்ரத்திலுள்ள ஆகாச தத்துவத்தையும் புருவங்களிடையே ஆஜ்ஞாசக்ரத்தில் உள்ள மனஸ் தத்துவத்தையும் பிளந்து கொண்டுபோய்,மேலே ஆயிரம் தளங்களுள்ள ஸஹஸ்ராரமென்னும் தாமரை மலரில் நீ உன் கணவனுடன் வீற்றிருக்கிறாய். என்று பாடுகிறார்.
குண்டலினி என்பது மனித பிறவியை தெய்வாம்சம்
பொருந்தியதாக்கும் சக்தி
இது மனிதரின் மூலாதாரச் சக்கரத்தில் இருக்கிறது - குண்டல என்ற வார்த்தைக்கு சுருள்
என்றொரு பொருளும் உண்டு .
குண்டலினி சக்தி மூன்றரை சுருளாக சுருண்டு தன் வாலை வாயில் கவ்விக்கொண்டு
தூங்கும் நாகமாகக் கருதப்படுகிறது - நான் தான் அது
என்றும் பலர் சொல்வார்கள்
இந்த உறங்கும் நிலை அரங்கனை குறிக்கும்
--- பாம்பின் மீதுதான் அவன் சயனம் - கண்ணன்
மாயக்காரன் - அவன் தங்கையான நானும்
மாயக்காரி- விஷ்ணு மாயா ---
எது உண்மை... எது அழியாதது , எது பிரம்மம் என்பதை உங்களிடம் இருந்து மறைத்து நீங்கள் வாழும் வாழ்க்கை நிரந்தரமானது -- பொன்னும் பொருளும் சேர்ப்பதில் தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும் என்ற ஒரு மாயை நாங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் அனைவருக்கும் உண்டாக்குகிறோம்.
இது மூலாதாரச் சக்கரத்தில் பிறப்புறுப்பிற்கு சற்று கீழாக இருக்கிறது . இதன் மூன்று சுழல்கள்
உன் மனதின் மூன்று நிலைகளை அதாவது விழிப்பு , ஆழ்ந்த தூக்கம் , கனவு நிலையைக்குறிக்கும்
மூலாதாரச் சக்கரம் , நான்கு இதழ் கொண்ட தாமரை
வடிவானது .இதன் மையத்தில் தான்
, குண்டலினி சக்தி கருப்பு நிற லிங்கத்தை ச்
சுற்றிய மஞ்சள் வண்ண நாகத்தின் வடிவில்
உள்ளது .
இதன்
அதிதேவதை விநாயகர் .... அவரை தினமும் தொழுதால்
குண்டலினி சக்தி மேல் எழுந்து இடுப்பை
அடையும் -- இதைக்காட்டவே அவர் தன் தொப்பையை
சுற்றி ஒரு நாகத்தை பெல்ட்
போல் கட்டி இருப்பார் -- இவர் நானும் அரங்கனும்
ஏற்படுத்திய மாயையை நிர்விக்கினமாக்கி குண்டலினியை எழுப்பி மேலே அனுப்புகிறார் -- இங்கே
பக்தி , சரணாகதி எனும் எண்ணங்கள் உங்கள் மனதில் உதிக்க ஆரம்பிக்கின்றன - கோயில் போகவேண்டும் என்ற ஆசை பிறக்கின்றது
நீ கவனித்திருக்கலாம் -- விநாயகர் அகவலில் அவ்வை " மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால் எழுப்பும்
கருத்தறிவித்தே" என்ற வரிகள் வரும்
- உன் பாரதி கூட விநாயகர் நான்மணி
மாலையில்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
என்று
குண்டலினி விழிப்புற விநாயகரின் அருள் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்.
சரி
குண்டலினி எழுந்துவிட்டது - தான் ஒரு மாய
வலையில் இருக்கிறோம் - பொன்னும் பொருளும் வாழ்க்கை அல்ல இறைவன் தான்
நிரந்தரம் அவனை அடைய வேண்டும்
மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்ற எண்ணம் அந்த
நாகத்திற்கு வருகிறது ...
மூலாதாரைக நிலயா ப்ரஹ்மகிரந்தி விபேதனீ என்று ஒரு நாமம் லலிதாசஹஸ்ரநாமத்தில்
வரும் ....மூலாதாரத்தில் இருந்து குண்டலினி ரூபமாக விநாயகரை வணங்குவதன் மூலம் நான் , ப்ரஹ்மக்ரந்தியை அறுத்துக்கொண்டு மேலேறுகிறேன் என்பதன் இந்த நாமத்தின் பொருள்
.
விபேதனீ என்றால் அறுப்பவள் என்று எனக்கு பெயர் உண்டு . ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும்
நடுவே சில முடிச்சுக்கள் உள்ளன
. இடகலை , பிங்கலை ஆகிய இரண்டும் நடுத்தண்டில்
சந்திக்கும் இடத்தில் இந்த முடிச்சுகள் ( க்ரந்திகள்
) இருக்கும் . இவற்றை அறுத்தால் தான் குண்டலினி மேலேழும்ப
முடியும் அதனை இருப்பவள் நானே!
ஆறு ஆதாரச் சக்கரங்களும் அக்னிக் கண்டம் , சூர்ய கண்டம் , சோம கண்டம் என
மூன்று கண்டங்களாய்ப் பிரிக்கப்பட்டுள்ளன.
முதலிரு சக்கரங்கள் அக்னிக்கண்டம் - அடுத்த இரண்டு சூரியக்கண்டம் , அதையடுத்த இரு சக்கரங்கள் சோம
கண்டம் எனப்படும் . அக்னிக் கண்டத்திற்கும் சூரிய கண்டத்திற்கும் இடையில் வருவதே பிரம்மக் கிரந்தி ....
ரவி, நீங்கள் செய்த கர்மாவின் பவனாக உங்கள் ஆன்மாவில் உள்ள வாசனைகளிலிருந்து நீங்கள்
விடுபடவேண்டும் . ப்ரஹ்மகிரந்தி அறுபடும் போது, சிருஷ்டி வாசனையிலிருந்து விடுதலை கிட்டும் ...
ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும் ரவி , நீங்கள் எல்லோரும் –
இந்த மனித பிறவி எல்லா
சுகங்களையும் அனுபவிப்பதர்காக நான் உங்களுக்குத் தரவில்லை
--- நீங்கள் இறைவனுடன் ஒன்றிய சேர்வதற்காக இந்த பிறவியை பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் - வேறு எந்த பிறவியிலும்
இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது
மூலாதாராம்புஜாரூடா பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா |
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா ||106||
மூலாதாரத்தில்
நான் செந்நிறத்தினளாக ஐந்து முகங்களோடு கூடியவளாக அமர்ந்திருக்கிறேன். தனுசு, புஷ்பபாணம், அபய, வரத ஹஸ்தத்துடன்
இருக்கிறேன் . உயிர்களிடத்தில் எலும்பு ரூபத்தில் இருக்கிறேன்
ரவி உன் நண்பர்கள் எல்லோருக்கும்
சொல் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை
பக்தியுடன் மனம் ஒன்றி பாராயணம்
செய்தால் ஸஹஸ்ராரக் கமலத்தில் ஒரு துளி அமிர்தம்
விழுவதை நீங்கள் உணரலாம்
அம்மா --- உன்ன கருணையே கருணை
- எனக்குத்தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் எல்லோரிடமும் லலிதா சஹஸ்ரநாமத்தை மனம் ஒன்றி பாராயணம்
செய்ய சொல்கிறேன் - எனக்கு அமிர்தம் விழவில்லை என்றாலும் பரவாயில்லை - லலிதாசஹஸ்ரநாமத்தை சொல்லும் ஓவ்வொருவர் மீதும் உன் கருணை அமிர்தம்
விழவேண்டும் தாயே .....
சௌந்தரிய லஹரியில் 41 வது ஸ்லோகத்தில் ஆதிசங்கரர்
என்ன சொல்கிறார் தெரியுமா?
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மாநம் மந்யே நவரஸமஹாதாண்டவநடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதயவிதிமுத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்
தாயே!,
லாஸ்யத்தில் ப்ரியமுடைய மஹா பைரவியாகிய உன்னுடன்
நவரஸங்களுடன் கூடிய மஹாதாண்டவத்தைச் செய்யும் நவாத்மகனான ஆனந்த பைரவராகிய ஸதாசிவனை என்னுடைய மூலாதார சக்ரத்தில் வைத்து தியானித்து நமஸ்கரிக்கிறேன். ப்ரளயகாலத்தில் நாசமடைந்த லோகங்களை உஜ்ஜீவிக்க வேண்டும் என்ற கருணையுடன் நீங்கள்
இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவம் செய்வதால் இந்த உலகானது உங்களிருவரையும்
மாதா-பிதாவாக கொண்டது.
ரவி , மூலாதாரத்தில் இருந்து எழுந்த குண்டலினி சக்தி நீ வளர்த்துக்கொள்ளும் இறை அன்பால்
வேகமாக மற்ற ஆதார சக்கரங்களை
கடந்து சிரசை அடைகிறது.
இதற்க்கு
உனக்கு உதவி செய்ய்ய முன்
வருவது குமரன் - முருகன் , கார்த்திகேயன் - தன் வேலாலும் மயிலாலும்
மேலே செல்லும் பாம்பை நிமிர்த்திவிட்டு கீழே மீண்டும் சுருண்டு
விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறேன் - கந்தசஷ்டி , கந்தர் அனுபூதி சொல்வதால் முருகன் சந்தோஷப்பட்டாலும் ஆதிசங்கரர் பாடிய சுப்ரமணியபுஜங்கம் அவனை
உன் பக்கம் இன்னும் அதிகமாக ஈர்க்கும் - புஜங்கம் என்றால் பாம்பு ... உனக்குத்தெரியுமா ஆறுபடை வீடுகளும் ஆறு ஆதார சக்கரங்களைத்தான்
குறிக்கும்
ஏற்கனவே நான் உனக்கு சொன்னேன்
முதுகெலும்பின் அடியில் மூலாதாரச் சக்கரம் இருக்கிறது. அதற்கு மேலாக சுவாதிஷ்டான சக்கரமும், அடுத்தபடியாக மணிப்பூரக சக்கரமும் இருக்கின்றன. இதயம் அருகே அனாஹத சக்கரமும், கழுத்து உயரத்தில் விசுத்தி சக்கரமும், நெற்றியில் ஆஞ்ஞா சக்கரமும் உள்ளன.
இந்தச் சக்கரங்கள் குறிப்பிடும் ஆறுபடை வீடுகளும் பின் வருமாறு உள்ளன.
ஆஞ்ஞா - பழமுதிர்சோலை, விசுத்தி - திருத்தணி, அனாஹதம் - சுவாமிமலை, மணிபூரகம் - பழநி, சுவாதிஷ்டானம் - திருச்செந்தூர், மூலாதாரம் - திருப்பரங்குன்றம்.
இன்னொரு விஷயம் - ஏன் ஈசன் அரங்கன் போல் அலங்காரம் செய்துகொள்வதில்லை? வெறும் பாம்பையும் மண்டை ஓடுகளையும் மட்டும் அணிந்துகொள்கிறான் என்று சிலர் நினைக்கலாம்.
அவன் கழுத்தில் இருப்பது மூலாதாரத்தில் இருந்து கிளம்பிய பாம்பு -- அதில் விஷம் இல்லை அது கக்குவது அமிர்தம் மட்டுமே - அவனிடம் போய் சரணடையும் எதற்குமே விஷம் கிடையாது வஞ்சனை கிடையாது என்பதை கழுத்தில் அணியும் நாகங்கள் எடுத்துக்காட்டாய் இருக்கின்றன –
மண்டை ஓடுகள் / எலும்புகள் - இதை தவிர மற்ற பாகங்கள் நெருப்பினால் அழிக்கப்படுகின்றன -- அவன் நிரந்தரமானவன் –
வாழ்க்கை என்பது மாயை என்பதை நானும் அரங்கனுக்கு உங்களிடம் இருந்து மறைக்கிறோம் - அவன் மட்டும் தான் மறைப்பதில்லை அவனை வணங்குபவர்கள் இந்த உண்மையை மறப்பதும் இல்லை .
அம்மா அரங்கனை எழுப்பி விநாயகரை வணங்கி முருகனைத் தொழுது இப்பொழுது அஞ்ஞா சக்கரத்திற்கு வந்துவிட்டேன் உன் அருளால் ---
ரவி அங்கே பார் ஆயிரம் இதழ்
கொண்ட தாமரை மலர்கள் - அதிலே தில்லை நாதன் எப்படி ஆடுகிறான் பார் -- இங்கிருந்து அதாவது உன் ஆத்மாவை அந்த
ஜகத் ஜோதியிடன் இணைப்பதுதான் என் வேலை --- இனி
உன் குண்டலினி சக்தி மீண்டும் மூலாதாரத்திற்கு செல்லாது - எங்கள் இருவருடன் இணைந்து விட்டது - இனி பிறவாத தன்மை
-- அமிர்தம் இனி நீ அருந்தும்
உணவு .....
தாயே ---- எவ்வளவு நேரம் கீழே விழுந்து கிடந்தேன் என்று புரியவில்லை --- பச்சைப்புடவைக்காரி ஆயிரம் கமலங்களை சூக்ஷமாக காட்டிவிட்டு அங்கே சிந்தும் அமிர்தத்தை குடிக்க வைத்து சொக்கனையும் காண வைத்தாள் –
இனி வேண்டுவதற்கும் அடைவதற்கும் ஒன்றுமே இல்லை
Comments
Ahha.. Arumai arumai.. Aagna chakrandalarasta bhrmagrandi nivedini...I hv to read few more times to understand fully... 🙏🙏🙏
Aaha excellent narration.
Om namashivaya
Lalithambigai saranam
கடின பாடம்....மனதை தூண்டக்கூடிய வார்த்தைகள்....முயற்சி செய்வோம் முழுவதும் அறிய....🙏🙏🙏🙏
அருமையான விளக்கம்
அனைவரும் ஆன்மிக institution ல்
படிப்பதுபோல் உள்ளன.
பாக்யமே பாக்யம். 🙏🙏
Wow wonderful kundalini 👍🏻🙏🏼🙏🏼Mooladharambujaruda pancha vaktrasti samsthita pachai padavai kari potri potri
Arumai. Pudhirana subject..puriyumpadi vaarthaigal.. Mooladharathai pol mattra nadigaliyum chatru explain seyyavum.👌🙏
OMG what a write up Ravi. Amazed at your research, analysis and joining of various dots ( divine powers ) to show how Lord Shiva and Parvati together guide bhaktas to attain highest state of mukti.
To write about the Chakras and Kundalini shakthi needs Pachai Pudavaikkari's grace and blessing. To master and elevate that shakthi is divine. You are really blessed and in turn we also get HER blessings.
🙏🙏🙏
A very good effort. Continue.May God bless you and your family.
இவ்வளவு விஷயங்களை தெரிந்து உள்ள நீங்கள் மீனாக்ஷி அருள் பெற்றவர் என்பது திண்ணம்,🙏🙏🙏
உயர்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளும்படி அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அந்த சுந்தரி அருள் பெற்ற உங்களுக்கு என் நமஸ்காரங்கள். அறுபடை வீட்டுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது இன்று தான் தெரிந்தது. நன்றி.
நூலகத்தில் போனால் கூட தேடி
படிப்பது கஷ்டம் 🙏
*ஆறவேண்டிய சினம் ஆறவில்லை*
*ஆறெட்டில்* அடைய வேண்டிய ஆன்மீகமும் அடையவில்லை
*ஆறாம் அறிவோ* அகத்துக்கு அகப்பட வில்லை
கடவுளின் நாமம் பாடிய பின் *ஆறுசுவை* உணரவில்லை
உன்னதம் அடையும் *ஆறு* தெரியாமல்
அவதியுற்று அல்லல்படும் வேளையில்......
உங்கள் தாய் பச்சைபுடவைக்காரி உங்களை *ஆறுபடுத்துவதன்* மூலம்...
எங்கள் வாழ்விலும் உங்கள் தொகுப்பால்
*ஆறுகண்டு* பேறு கண்டோம்.
*ஆறு* படை வீட்டவனும் உங்களுக்கு துணை நிற்பானாக....🙏🙏🦚🦚🦜🦜
From Kousalya Gopal
Sir first time when I just read, it was really puzzling... That's why I hv written like that. But now, one specific thing I can tell...Only after started chanting *"Lalitha Sahasranamam"* my mind got started settling...Its a wonderful feeling while chanting as and when I do.
That's only because of you I started, the credit goes to you only..
Regarding this Chakra part, with your very nice and clear narrations, Arupadai veetin arumai purindadu.. Mikka Nandri.. 🙏🙏
இன்றைய dosage very heavy sir... I have already read 4 times still not able to come to any conclusion..Probably i am at pre LKG level..😃😃
ஆறும் ஆறாக பிரவாகம்..சக்ரவாகம். To be preserved as treasure.. as one of your friends have commented..we wont get this even in library..வாழ்க நீ எம்மான்.. 🙏
Very nice experience well explained
சாய்ராம், நாம் அனைவருமே அந்த இறைவனின் திருவடிகளில் தான் இருக்கிறோம் .
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னுடைய மனதைத் தொடுகின்றன.
எனக்கு தேவையான நேரத்தில் சில விஷயங்களையும் எனக்கு புரிய வைக்கிறது. உங்களுடைய பதிவுகள் எனக்கான இறைவனின் வழிகாட்டுதல் போல் எனக்கு தோன்றுகிறது.
உங்களின் எல்லா பதிவுகளுமே மிகவும் அற்புதமானவை
இன்றைய பதிவில் நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்கள், மிக எளிமையாக நீங்கள் சொல்லியிருக்கும் விதம்... பச்சைப் புடவை அம்மாவை மனதில் நீங்கா வண்ணம் செய்துவிட்டது.
என்னைப் பொருத்தவரையில் செய்பவர் சாய் மற்றும் பச்சை புடவைக்காரி, நாமெல்லாம் வெறும் கருவிகள்...
நீங்கள் சொல்வதுபோல என்றோ செய்த புண்ணியம் சாயி அருளால் அவரை நினைக்கும் பாக்கியம் கிடைத்தது...இதற்கு ஈடானது வேறு எதுவும் இந்த வாழ்க்கையில் இல்லை என்பது மட்டும் புரிகிறது 🙏🙏🙏🙏
👏👏👏 சார், அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தங்குதடையற்ற நீரோட்டம் போல் உங்கள் எழுத்தோட்டம். நானும் இந்த சக்கரங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். என்றாலும் எனக்கு அந்த பயிற்சி பற்றியோ அது தரும் மகிழ்ச்சிபற்றியோ ஞானம் இல்லை. உங்கள் விளக்கம், எழுத்து எளிமையாக உள்ளது. எனக்கு விருப்பம்தான் என்றாலும் பயிற்சியில் ஈடுபட நேரமும் இல்லை. மேலும் இன்று என்னென்ன வேலை, இது இது செய்ய வேண்டும், அடுத்து.. அடுத்து என்று மனம் ஓடிக்கொண்டிருக்குமே தவிர நிலைப்படுத்துவது கஷ்டம். உங்கள் எழுத்தாக்கத்துக்கு பாராட்டுக்கள். நன்றி.👏👏👏🙏🙏🙏
You have explained in easy to understand language about Kundalini shakti. You explanation about the connection between arupadai veedugal and Kundalini is interesting. A new explanation not heard of earlier. I should read it again and again to understand fully. Thanks.