பச்சைப்புடவைக்காரி- என் நெஞ்சே நீ வாழும் எல்லை
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
என் நெஞ்சே நீ வாழும் எல்லை
ஆஹா இன்னும் கொஞ்ச நேரத்தில் என் தாய் வந்துவிடுவாள் - இதுவரையில் அவள் சொன்னது மனதில் ஆழமாக பதிந்து விட்டது அவள் அருளால் ---
ஆனாலும் அவள் ஏதாவது கேள்விகேட்டால் எனக்குப்பதில் தெரிய வேண்டுமே - மனதில் வேண்டிக்கொண்டேன் -
அம்மா நீ ஏதாவது என்னை கேள்விகேட்டால் பதில் சொல்லும் வரமும் நீதான் எனக்குத் தரவேண்டும் ......
தாழம்பூவின் நறுமணம் - உலகையே ஆளும் மாமேரும் வருகிறாள் பராக் பராக் என்று மதுரை கிளி சொல்ல பாதங்களில் விழ தயாரானேன் --- சொன்ன நேரத்திற்கு ( என்னுடைய கடிகார நேரம் அல்ல ) வந்துவிட்டாள் பேரழகி
அம்மா இன்ற ஆதார சக்கரத்தை சொல்வதற்கு முன் உண்மையான பக்தி அல்லது சரணாகதி எப்படி இருக்க வேண்டும் என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா ? என்று கெஞ்சினேன் ---
சரி ரவி ஒரு சிறுகதை சொல்கிறேன் - நீயே புரிந்துகொள்வாய் --- ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது புது மனைவியை ஆசையுடன் கப்பலில் வெளிநாட்டுக்கு தேன் நிலவுக்கு அழைத்துச் சென்றார் ---
விரும்பி கட்டிக்கொண்ட கல்யாணம் - அந்த புது மணப்பெண்ணுக்கு அவரைப்பற்றி நன்றாகத் முன்பாகவே தெரியும் ... கப்பல் சென்று கொண்டிருந்தது - திடீரென்று சூறாவளி , கப்பல் தடுமாறியது - கப்பலில் இருந்தவர்கள் எல்லோரும் கடவுளை வேண்ட ஆரம்பித்தனர் -
கப்பல் கேப்டன் என் கையில் இனி ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டான் - நேரம் ஆக ஆக எல்லோருக்கும் மரண பீதி வந்துவிட்டது --
இந்த புது மணத்தம்பதிகளுக்குள் அவர் எந்த சஞ்சலமும் இல்லாமல் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் கொந்தளிக்கும் அலைகளை ரசித்துக்கொண்டும் வந்தார் --
அவருடைய புது மனைவியால் அவரை புரிந்துகொள்ள முடியவில்லை ---
சில மணி நேரம் நகர்ந்தது கடல் அமைதியானது - எல்லோருக்கும் திரும்பி வந்தது - மெதுவாக இந்த புதுப்பெண் அவரிடம் கேட்டார் எப்படி ஒரு சலனமும் இல்லாமல் சந்தோஷமாக அவரால் வர முடிந்தது என்று -
அவர் உடனே தன்னிடம் இருந்த கத்தியை அவர் மனைவியின் வைத்து கொல்வதைப்போல் விரைந்தார் - அவர் மனைவி கொஞ்சமும் பயப்படவேயில்லை --
நீ ஏன் என் கத்திக்கு பயப்படவே இல்லை என்று கேட்டதிற்கு அவள் சொன்னாள் எனக்கு உங்களைப்பற்றி நன்றாகத் தெரியும் - என்னை காப்பாற்றத்தான் துடிப்பீர்களேத் தவிர கொலை செய்வதற்கு அல்ல -
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் - அதே போலத்தான் இதுவும் நான் இறைவனை நம்புகிறேன் - அவன் நம் எல்லோரையும் கைவிட மாட்டான் என்று முழுவதும் நம்பினேன் ------ இதுதான் பக்தி / சரணாகதி -- இறைவனிடம் பேரம் பேசுவதில்லை பக்தியும் சரணாகதியும்....
அம்மா ! எவ்வளவு அழகாக என் போன்ற மடையனுக்கும் புரிகிற மாதிரி பக்தி/சரணாகதி என்றால் என்ன என்பதை எடுத்துச் சொன்னாய் --- நான் அதை செய்கிறேன் உனக்கு நீ இதை கொடு எனக்கு என்று சொல்வது பக்தியிலும் சரணாகதியிலும் சேராது - அது உன்னுடன் நாங்கள் செய்யும் வியாபாரம் / பேரம் ..
சரி ரவி விஷயத்திற்கு வருவோம் - இதுவரை நான் என்ன சொன்னேன் -? உனக்கு புரிந்து விட்டதா என்று எனக்குத் தெரியவேண்டும் ....
அம்மா இப்படி ஒரு பரீட்சை எனக்கு வைக்க வேண்டுமா ? புரிந்துகொண்டதை சொல்கிறேன் ... தவறு இருந்தால் என்னை மன்னித்துவிடு தாயே !
மூலாதாரம் --- ஆசனவாய்க்கும் , பிறப்புறுக்கும் இடையே இருப்பது -- விநாயகரை வழிபடவேண்டும்
ஸ்வாதிஷ்ட்டானம் - பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது - விஷ்ணு, பிரம்மா வை வழிபடவேண்டும்
எங்கள் சக்தி மூலாதாரத்தில் ஓங்கி இருந்தால் , எங்கள் வாழ்க்கையில் உணவும் , தூக்கமும் தான் பிரதானமாக இருக்கும் .
எங்கள் சக்தி ஸ்வாதிஷ்ட்டானத்தில் ஓங்கி இருந்தால் வாழ்க்கை இன்பங்களை பின் தொடர்ந்தே செல்லும் --- அழியக்கூடியவை எல்லாமே நிரந்தரமானவை என்ற மாயை உண்டாகும்
சரியாகவே புரிந்துகொண்டுள்ளாய் ரவி - இனி இன்று நாம் பார்க்கப்போவது மூன்றாவது ஆதாரச் சக்கரம் -- மணிபூரகம்
தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்
தாயே, நீலமேக ரூபமான,மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன்.
அந்த மேகமானது, மணிபூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது.
பற்பலவிதமான ரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களை தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது.
(ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், சௌந்தர்ய லஹரி).
மணி பூரகச் சக்கரம் இருக்கும் இடம் மனித உடலின் நாபி பகுதியாகும் .
இது ஸ்வாதிஷ்டானத்திற்கு எட்டு விரற் கடைக்கு மேல் உள்ளது பிறைச்சந்திரனை வட்டத்துக்குள் உள்ளடக்கி பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை வடிவானது .
ஜடராக்னி எனப்படுகின்ற தகிக்கும் ஜ்வாலையை மையத்தில் கொண்டது இந்த சக்கரம் . இந்த சக்கரம் பிளவு பட்ட ரத்தினம் போல் ஒளிர்வதால் மணிபூரகம் எனப்படுகிறது
பத்துத் தாமரை இதழ்களும் பத்து யோக நாடிகளைக் குறிக்கும் . அந்த நாடிகளின் சப்த பரிமாணம் . டட, ணத, தத , தந , பப என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது .
இதன் மையத்தில் நமசிவாய மந்திரத்தின் , ம என்ற எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது . உங்கள் சக்தி மணிபூரகத்தில் ஓங்கி இருந்தால் நீங்கள் எல்லோரும் செயல்வீரர்களாக இருப்பீர்கள் . உலகத்தில் பல செயல்கள் செய்ய முனைவீர்கள்.
இந்த சக்கரம் மலரும் போது உடல் உறுதி பெறும் - என்ன நேர்ந்தாலும் மனம் அமைதியுடன் இருக்கும் - சுறுசுறுப்பும் கடுமையாக உழைக்கும் திறனும் கூடும் .
வயிறு , சிறுகுடல் , கல்லீரல் போன்ற உடல் உறுப்புக்கள் இந்த சக்கரத்துடன் தொடர்புடையன -- இந்த சக்கரத்தின் அதிதேவதை விஷ்ணு , வாகினி தேவி . ...இந்த சக்கரத்தில் நான் இச்சாசக்தி ரூபணீ யாக எழுந்தியருளியிருக்கிறேன் ...
ஆமாம் தாயே -- ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாமத்தில் மணிபூரகத்தில் லாகினீ என்னும் பெயருடனும் தாங்கள் இருப்பதாய்க் கூறுகிறது சஹஸ்ரநாமம்.
“மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்ப்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணீ
ஆமாம் ரவி ---மணிபூரகச் சக்கரத்தில் நான் மூன்று முகங்களை உடையவளாக வஜ்ராயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை தரித்தவளாகவும் வெல்லம் சேர்த்த அன்னத்தை விருப்பத்துடன் ஏற்பவளாக இருக்கிறேன் ...
ஓவ்வொரு ஆதார சக்கரத்தில் உள்ள முடிச்சை அவிழ்த்துக்கொண்டே மேலே செல்கிறேன் உங்களை என் பதியுடன் சேர்க்க ---
அம்மா நீ தாயாக இருப்பதினால் தான் இந்த கருணை உனக்கு பொங்கி வருகிறது .....அதற்கு ஈடோ இணையோ எதுவுமே இல்லை ....
அடுத்த சக்கரத்திற்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் தாயே ...
சிரித்துக்கொண்டே சிங்காரமாய் என்னுடன் அமர்ந்தவள் மறைந்து போனாள் - நாளை வருவாள் என்ற நம்பிக்கையில் இன்றைய நாளை ஓட்டுகிறேன்.
Comments
எப்படித்தான். உனக்கு. இப்படி எல்லாம். எழுத முடிகிறதோ? சிலது புரிகிறது. பலது. புரியவில்லை
ரவி உன் அளவுக்கு. இப்படி பக்திரசம் பொங்கி இறைவனை. வணங்க எனக்குத் தெரியலை அப்பா .மிக நல்ல பதிவுகள்
ambike jagadambike suravandithe saranam
akhila charaachara rakshakiyam
muni vandite saranam 🙏🏼🙏🏼pachai padavai kari potri potri 🙏🏼🙏🏼
💐💐💐💐
நன்றி சார். வேலை சுமை, களைப்பு ஒருபக்கம்.
இன்னொன்று.. உண்மையை சொல்கிறேன். எனக்கு இந்த சக்கரங்களில் அவ்வளவு ஞானம், விருப்பம் இல்லை. என் கருத்தை சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி🙏
பச்சைப்புடவக்காரியின் கருணையை பற்றி படிக்க படிக்க கண்ணில் நீர் வருகிறது.
Arumai arumai arumai
Lalitha sahasranamam oru pokkisham🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
Sree matre namaha🌹🌹🌹
Tough subject Ravi. Will take time to assimilate.
Hats off to your knowledge and patience. 🙏🙏🙏🙏
Arumaiyana narrations.. Manipoorabja nilaiya Charanam Charanam Charanam 🌷 🌷🙏🙏🙏 🌷
N. Kumar