ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 4 சிதக்நி குண்ட ஸம்பூதா பதிவு 9

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

சிதக்நி குண்ட ஸம்பூதா

பதிவு 9


4வது திருநாமம் ... 

சிதக்நி குண்ட ஸம்பூதா 🔥🔥🔥

சாதாரண  நெருப்பல்ல .  சித்தத்தில் ஸ்புடம் போட்ட   பிரம்ம ஞான அக்னியிலிருந்து அவதரித்த மஹா சத்ய ஸ்வரூபி என் தாய் அவளே மகாராணி அவளே சிம்மங்கள் நிறைந்த சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிந்து கொண்டு வருகிறாள்

சித் = சித் என்ற சேதனம் (அறிவு-ஆன்மா)

அக்னிகுண்ட = அக்னிகுண்டம் 

சம்பூதா = தோன்றுதல்  

சிதக்னி-குண்ட சம்பூதா = 'சித்' என்னும் அக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டவள். 

சுயம்புவாக தோன்றியவள். ' *சித்* ' என்பது சேதன்மாகிய ஆன்மாவைக் குறிக்கும் 🔥🔥🔥

*சத்* ’ என்றால் நிலையானது; ’ *சித்* ’ என்றால் அறிவு; ’ஆனந்தம்’ என்றால் மகிழ்ச்சி.

நிலையானவள் அவள்  ஒருவளே. 

அவளை வழிபட்டால் நல்லறிவு  பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை உணர்த்துவதே ’ சச்சிதானந்தம்..


சத் என்றால் பாதிக்கப்படாதது.

சித் என்றால் சுயம் பிரகாசமானது (அதாவது தானே பிரகாசிப்பது)

பாரதியாரின் பாடல் வரிகள் இங்கே நிழலாடுகின்றன 

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு

சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்

பல பல நல்லழகுகள் சமைத்தாய்

முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் – 

அங்குமு ழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்

பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்

பரமா பரமா பரமா👣👣👣👣


நம்முள் மூன்று நிலைகள் உண்டு ... மனம் , புத்தி , சித்தம் மனம் பேதலிக்கும் தன்மை கொண்டது .. நிலையில்லாமல் மரத்துக்கு மரம் தாவும் 

புத்தி இது தவறு இப்படி செய்யாதே என்று சொல்லும் 

சித்தம் என்பது மிகவும் உயர்ந்த நிலை ... அகங்காரமும் மமகாரம் குழி தோண்டி புதைக்கப்பட்ட இடம் ... இங்கு தான் சித் ஆக அம்பாள் வாசம் செய்கிறாள் அசித் ஆக நம்மை சித்தாக்கி சிவத்துடன் சேர்த்து வைக்கிறாள் ... 


சிதம்பரம் என்பது சித் + அம்பலம் .. அம்பலம் என்பது வெட்ட வெளி அங்கே சித் பரப்பிரம்மம் நின்று ஆனந்த கூத்து புரிகிறது ... 

இது தான் சிதம்பர ரகசியம் ... அந்த சித் எனும் குண்டத்தில் நாம் எல்லோரும் சகல பாக்கியங்களும் பெற தோன்றியவள் (ஸம்பூதா) என் தாய் ஸ்ரீ லலிதா அவளே மஹாராணி சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் சிங்காரமாய் கம்பீரமாய் சிந்தாமணியாய் கொலு வீற்றுருக்கிறாள்.. 

அவளை பனிவீர் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே 🙏👆👆🙌🙌🙌👣👣


முதலில் இந்த அண்ட சராசரங்களை படைத்தவளுக்கும் நமக்கும் என்ன உறவு என்று பார்த்தோம் ... தாய் , அன்னை , அம்மா , அம்மே , மா .... 

அவள் என்னவாய் இருக்கிறாள் ?

எல்லோரும் அண்ணாந்து பார்க்கும் நிலையில் 

ராஜ ராஜேஸ்வரியாய் 

மஹா ராணியாய்

சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் 

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் , 

மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய பெருமாட்டியாய் 

பேழகியாய் 

இன்பம் எல்லாம் தருபவளாய்

நம் எண்ணமெல்லாம் நிறைந்தவளாய் , 

பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடியவளாய் , 

பித்தனுக்கு நிகராய் நர்த்தனம் ஆடுபவளாய் 

சிரித்த வண்ணம் ஆட்சி செய்கிறாள் நம் மனம் எனும் மாளிகையை .... 

எல்லாம் சரி அவள் எப்படி வந்தாள் ...?  யாருக்கு பிறந்தாள்?

நமக்கும் தெய்வீக தாத்தா- பாட்டி உண்டா ?* 


அவள் தான் மூலமே .

தாய் தந்தையர் யாரும் இல்லை அதனால் நமக்கும் தெய்வீக தாத்தா- பாட்டி இல்லை ... 

சித் எனும் அக்னி குண்டத்தில் இருந்து  தோன்றியவள் .

ஆஹா அற்புதம் 

சிதக்னி குண்ட ஸம்பூதா: இதில் சிதக்னி என்பதைக் கொஞ்சம் பிரித்துப் பார்ப்போம். 

அக்னி குண்ட ஸம்பூதா-அக்னி குண்டத்திலிருந்து எழுந்தவள். அக்னி குண்டத்திலிருந்து ஒரு தங்கத் தாம்பாளம் தோன்றியது. 

அதில் ஓர் அழகான இளம் பெண்ணாகத் தோன்றியவள். மற்ற அவதாரங்களைப் போலச் சின்னக் குழந்தையாகத் தோன்றி, படிப்படியாக வளரவில்லை; தோன்றும்போதே பதினாறு வயதுப் பெண்ணாகத் தோன்றினாள். மகிழ்ச்சி தரும் லலிதை 

இதில் மற்றொரு விஷயத்தையும் தேவி மஹாத்மியம் கூறுகிறது. லலிதாம்பிகை என்னும் திருநாமத்துக்கே மென்மையானவள் என்று பொருள். மனத்தில் மென்மையைத் தருபவள் அவள்; மகிழ்ச்சியைத் தருபவள்!


யாருக்கு மகிழ்ச்சியைத் தருகிறாள்

ஜீவர்களுக்கு. அதனால்தான் லலித கலைகள் என்று வடமொழியில் சொல்வார்கள். 

நாம் நுண்கலைகள் என்று சொல்வதைப்போல லலித கலைகள். எந்தக் கலைகள் மனத்துக்கு இதம் தருகின்றனவோ அந்தக் கலைகள் லலித கலைகள். 

மகிழ்ச்சியை அளிப்பவள் லலிதாம்பிகை. 

மகிழ்ச்சியை அளிக்கும் பதினாறு வயதுக் குமரியாக அவள் வந்து நின்றபோது உலகத்துக்கெல்லாம் தந்தையாக-லோகஜனகனாக உள்ள சாக்ஷாத் பிரம்மாவுக்கு மனத்துக்குள் ஒரு நெருடல் வந்ததாம். 

அவள் அம்பிகைதான் என்பது தெரியும். அவ்வாறு தெரிந்தும்கூட திரோபாவம் வந்து கண்ணை மறைக்கிறது! 

பிரம்மாவுக்கே மறைக்கிறது! 'ஆஹா! இவ்வளவு அழகான பெண்ணாகத் தோன்றியிருக்கிறாளே! இவளுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா?' எனும் கவலை பிரம்மாவுக்கு வருகிறது! 

பிரம்மாவின் கவலை யாருக்கு அந்தக் கவலை வரும்? மகளைக் குறித்து அப்பாவுக்குத்தானே வரும்! உலகத்துக்கே தந்தையாக இருக்கும் 

பிரம்மாவுக்கு அந்தக் கவலை வந்ததாம்! "இந்த அழகான பெண்ணுக்கு நான் எங்கு போய் மாப்பிள்ளை தேடுவேன்? யாரிடம் போய்த் தேடுவேன்? ஈரேழு பதினாலு உலகங்களில் எங்கே போய் இவளுக்குப் பொருத்தமான மணமகனைத் தேடுவேன்?" என்று மனத்துக்குள்ளே மறுகினாராம். 

அவர் மனத்துக்குள் அந்த எண்ணம் வந்தவுடனேயே, ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைக்கக்கூடிய பரமேசுவரிக்கு அந்தக் கவலை புரிந்ததாம். 

உடனே அவள் லேசாக ஒரு புன்னகை பூத்தாளாம். 

அவ்வாறு அவள் புன்னகை புரிந்த மாத்திரத்தில், சாக்ஷாத் பரமேசுவரராக உள்ள காமேசுவரர் அங்கு வந்து நின்றதாகவும் காமேசுவரிக்கும் காமேசுவரனுக்கும் தேவர்களெல்லாம் ஒன்றுகூடி நின்று திருமணம் நடத்தியதாகவும் புராணம்!

சரி அவள்  எதற்காக தோன்றினாள் ?

அவளுக்குத் தான் பிறவிகள் கிடையாதே ?* 

பதில் நாளை பார்ப்போம் ..🌷🌷🌷🙌🙌🙌

தார் அமர் கொன்றையும் ..🐘🐘


அபிராமி அந்தாதியில் விநாயகர் காப்பாக இந்த பாடல் வருகிறது ... 

ஒரு பண்டிதர் எல்லா நலன்களும் பேரவேண்டி அபிராமி அந்தாதி 100 ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்கிறார் ... 

100 பாடல்களும் அவள் அருளால் அவரால் சுலபமாக மனப்பாடம் செய்ய முடிந்தது .

கூடவே அவருக்கு கர்வம் , பெருமை எல்லாம் வந்து விட்டது . 

பாடலில் கடைசி வரியில் உலகேழும் ஈன்ற சீர் அபிராமி அந்தாதி கார் அமர் கணபதியே நிற்க கட்டுரையே ... என்று வருகிறது ... அதை சொல்லும் போது அவருக்கு கர்வம் ஓங்கி 

நான் தான் 100 பாடல்களையும் மனப்பாடம் செய்துவிட்டேனே... 

இனி எதற்கு விநாயகர் காப்பை சொல்ல வேண்டும் 

அவரிடம் இன்னும் மனதில் நிற்க கட்டுரையே என்று ஏன் சொல்லி கெஞ்ச வேண்டும் ? 

இப்படி நினைத்து விநாயகர் காப்பை சொல்வதை நிறுத்திக்கொண்டார் .. 

சில நாட்கள் ஓடின ... அவர் உதிக்கின்ற . என்று ஆரம்பிக்க அவரால் அடுத்த வரிக்கோ  அடுத்த பாடலுக்கோ  போகவே முடியவில்லை .

எவ்வளவோ முயன்றும் ஒரு வரி கூட ஞாபகத்திற்கு வரவில்லை . 

கண்களில் நீர் தேங்கி அவர் தவறை உணரச் செய்தது .

விநாயகர் காப்பை மீண்டும் சொல்ல ஆரம்பிக்க 

ஓவ்வொரு வரியும் வார்த்தைகளும் பாடலும் மடை திறந்த வெள்ளம் போல் வந்தது .. 

எதிரில் நின்று சிரித்தவள் அபிராமி மட்டும் அல்ல வேழமுகத்தோனும் தான் . 🙌🙌🙌



Chidhagni is the fire of consciousness. Devi came out of the fire of pure knowledge and consciousness                                      
                                      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Comments

ravi said…
*க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽ’ –* உனக்கு சந்தனம் பூசணும்னா,

*‘க³ந்த⁴வஹாத்மதா:’,* ‘

க³ந்த⁴வஹாத்ம:’ ன்னா வாயு பகவான். வாயு பகவானா இருந்தா தான் உள்ளபடி எல்லா வாசனைகளையும் கொண்டு வந்து சமர்ப்பித்து, உனக்கு சந்தனம் பூசினதா ஆகும்.

‘ *அன்னபசநே* ’ -உனக்கு அன்னம் பண்ணி, சாதம் பண்ணி மஹா நைவேத்யம் பண்ணணும்னா, ‘ *ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா’.*

‘ப³ர்ஹிர்முக²:’ ன்னா அக்னி பகவான். அக்னி பகவான் அன்னத்தை சமைக்கிறார்.

மத்த தேவர்கள்… அக்னி பகவான் முதலிய தேவர்களாக இருந்தால் தான், எல்லா தேவர்களும் சேர்ந்து பண்ணாத்தான் உனக்கு பொருத்தமான நைவேத்யம் பண்ணி படைக்க முடியும்.👍
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 232* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத - ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் *மம்கலம் பரம் || 7 ||*
ravi said…
*64. பரஸ்மை மங்களாய நமஹ (Parasmai Mangalaaya namaha)*
ravi said…
அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள்.

தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான்.

சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.

கண்ணன் தீ மூட்டினான்.

அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.

நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார்.

அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன்,

“சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய்.

உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும்.

அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும்.

28வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன்.

சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.
ravi said…
ஹரே கிருஷ்ணா பக்தர்களே!! 🙏🙏

கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள்👇 உங்களது விரிவான பதிலுக்கான நிறை, குறைகளை சுட்டிக்காட்டுகின்றன.
இம்மதிப்பீடுகளை கவனமாக படித்து,பின்பு பகவத்கீதை புத்தகத்தையும் இன்னொரு முறை படித்து சரியான பதில்களை தாங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



நாள் 15 - A - தங்களின் பதில் திருப்திகரமாக இருந்தது - பாராட்டுக்கள்
நாள் 16 - -
நாள் 17 - A - துல்லியமான பதில்;

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருள் என்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

(A - Very Good , B - Good , C - Not Good)
NA- descriptive questions not attended
Blank- quiz not attended

நன்றி
ஹரேகிருஷ்ணா
தமிழ் கீதை குழு
ravi said…
10 realisations that you have to embrace.

1. As you get older, you choose the people that you accept in your life. You do not want to waste your energy trying to connect with someone, and it will not prosper into a relationship that is worth keeping.

2. You can't stop people from saying things about you. It is not your responsibility to change their minds. You only have to keep on doing what you do best. For as long as you are not hurting anyone, then there is no need to explain yourself.

3. You don't need so many friends in your life. You only need a few but are genuine with you. You cut off people in your life who do not respect you.

4. You are a work in progress, so there is no need for you to be hard on yourself. You have to continue learning and embrace that you will never please everyone.

5. Kindness goes a long way. If you have nothing good to say, it is better to keep your opinions to yourself. Allow people to grow and learn from their past mistakes.

6. Those people who know you better will stay with you no matter what. These are people that you have to keep because they have the purest intentions for you.

7. Maturity is to prioritize your needs over anything. For as long it can serve its purpose, you don't feel the need to buy a new one.

8. Embrace the fact that we outgrew people. Some of them do not stay because they have other priorities. You don't stop them, you let them go.

9. You choose your battles because not everything is worth your time and energy. You would want to protect your peace of mind than engage in drama.

10. You choose your happiness more than anything. You don't let people define your success. You make the most of every day because life is fleeting. You chase your dreams, not people anymore.”

~ LS ~
ravi said…
🙏🌹🌸🪔🪔🪔🌸🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*


60. *இறவாத இன்ப அன்பு* வேண்டிப் பின் வேண்டு கின்றார்
*பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்* இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
*அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க* என்றார்.

61. கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் *என்றும் நீடு வாழ் பழன மூதூர நிலவிய ஆலங்காட்டில்*
*ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் பாடுவாய் நம்மை* என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.

66. *ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றி….*

*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌸🪔🪔🪔🌸🌹🙏
ravi said…
விச்வநாதன்,
கனடா.

"என்ன ஐயரே தங்கக்காசு வேணுமா"

பக்தகோடிகளே ஸ்ரீமஹாபெரியவா பல குடும்பங்களில் நடத்திய திருவிளையாடல்கள் பல நம்மிடையே பகிரப்படாமலேயே இருந்திருக்கின்றன. அத்தகையச் சம்பவங்களைச் சேகரித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்த பிறகு சிறிய கட்டுரையாக வடிவமைத்து பக்தகோடிகளுடன் பகிர்வதே அடியேனின் சங்கல்பம். அடியேனது ஆன்மீக குரு பெங்களூர் கிதாமாமி குடும்பத்தில் ஸ்ரீமஹாபெரியவா நடத்திய ஓரிரண்டு சப்பவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். இன்னும் பல நிகழ்வுகளைத் தங்களுடன் பகிற கீதா மாமி அடியேனைப் பணித்துள்ளார்கள். அதை கட்டுரை வடிவமாக்க சிறிது அவகாசமும் தேவைப்படுகிறது. இதற்கிடையே அடியேனின் நெருங்கிய பள்ளித் தோழன் கே.கே. சுப்ரமணியன் வாழ்வில் பரமாசார்யாள் நடத்திய ஒரு திருவிளையாட்டு....... அவன் அனுமதியுடனே இதோ உங்களுக்காக......

சில நாட்கள் முன்பு நாங்கள் வாட்ஸ்அப் மூலம் உறையாடிக் கொண்டிந்தபோது என் பள்ளித்தோழன் கே.கே.சுப்ரமணியன் (இனி அவனை கே.கே.எஸ். என்றே சுருக்கமாக அழைப்போம்) அவன் வாழ்வில் நடந்த சம்பவத்தை ஆங்கிலத்தில் என்னிடம் பகிர, அதையே தமிழில் மொழி பெயர்த்து உங்களுடன் பகிர்கிறேன்.

1993ல் கே.கே.எஸ்....... அக்கால கட்டத்தில் சராசரி குடும்பஸ்தனைப்போல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலகட்டம்........ தாய், தந்தை ஸ்ரீமஹாபெரியவாளின் பக்தர்கள்.... கே.கே எஸ்ஸுக்கு ஸ்ரீமஹாபெரியவாளின் மகிமை அவ்வளவாகத் தெரியத வயது, சரியான இளம்வயது சம்சாரி, ஸ்ரீமடத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை.........

26-5-1993ல் ஸ்ரீமஹாபெரியவாளின் கனகாபிஷேகம் நடந்த திருநாளிலிருந்து இரண்டொரு நாட்கள் பிறகு அவனது ஒன்றுவிட்ட சகோதரன் ஜம்ஷட்பூரிலிருந்து தந்தைக்கு போன் செய்து..... ஸ்ரீமடத்திலிருந்து அவர்கள் வீட்டிற்கு ஒரு சிறிய பார்சல் வருமென்றும், அதில் ஸ்ரீமஹாபெரியவாளின் கனகாபிஷேகத்தில் அபிஷேகிக்கப்பட்ட வில்வ உருவம் பதித்த தங்கக் காசு ஒன்று இருக்குமென்றும் தான் அடுத்து அவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது வாங்கிக்கொள்வதாகக் கூறினான்.

அதேபோல் பார்சலும் வந்து அதைத் திறந்து பார்த்த கே.கே.எஸ்ஸின் தந்தையார்..... நம்மிடமும் இதைப்போல் வில்வ உருவம் பதித்த ப்ரசாத தங்கக் காசு இருந்தால் பூஜை அறையில் வைக்கலாமே என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். கே.கே.எஸ் ஒன்றும் பேசாமல் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். அலுவலகம் போய்ச் சேர்ந்த சிறிது நேரத்தில் அலுவலகத் தொடர்புடைய மனோகரன் ஜொஷுவா என்ற கிரிஸ்துவ நண்பன் "என்ன ஐயரே உங்கள் மடத்து சாமிக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாடி தங்கக் காசால் அபிஷேகம் செய்தார்களாமே.... அதில் ஒன்று உனக்கு வேணுமா ?" என்று கேட்க கே.கே.எஸ்ஸுக்கோ ஏக அதிர்ச்சி. சிறிது நேரத்திற்கு முன்பு தத்தையார் விரும்ப..... இப்பொழுது இவன் முன்னால் வில்வ உருவம் பதித்த ப்ரசாத தங்கக் காசு...... இவனும் "சரி குடுங்கள்" என்று கேட்டுப் பெற்றிருக்கிறான்.

திரு ஜோஷுவாவின் பார்டனர் திரு மூர்த்தி ஸ்ரீமடத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். அவரிடம் வந்து சேர்ந்த 10 அபிஷேகக் காசுகளை ஜோஷுவாவிடம் கொடுத்து நண்பர்கள் மத்தியில் வினியோகிக்கும்படி கேட்டுள்ளார். பிறகென்ன..... இன்றும் கே.கே.எஸ்ஸின் இல்லத்தில் வில்வம் உருவம் பதித்த தங்கக் காசின் மூலம் ஸ்ரீமஹாபெரியவா தன் அருளாசிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்றளவும் கே.கே.எஸ்ஸிற்கு, ஏன்.... நமக்கும் புரியாத புதிர்..... ஸ்ரீமஹாபெரியவாளின் பக்தரான தன் தந்தை அபிஷேகக் காசு ஒன்று தங்கள் பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்பியது ஸ்ரீமஹாபெரியவாளுக்கு எப்படித் தெரியும்........ அதுவும் அவன் தந்தை விரும்பிய சிறிது நேரத்திலேயே தங்கக் காசு எப்படி வந்து சேர்ந்தது...... தன் பக்தர்கள் ஆத்மார்தமாக தன்னிடம் வேண்டுவதை அருள்வதுதானே ப்ரத்யக்ஷ சர்வேச்வரனனான ஸ்ரீமஹாபெரியவாளின் வழக்கம்.......

ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர.
🙏🙏🙏🙏🙏
ravi said…
சங்கராம்ருதம் - 178

ஒரு முறை பக்தர் ஒருவர் பெரியவா விடம், "சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே.... காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி புரியத் தொடங்கும்.. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும்..
அது வரை பொறுமையுடன் இருக்கத் தானே வேண்டும்? வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்..
சுவாமிகள் கனிவுடன், "உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?" என்று கேட்டார்.
பக்தர், " தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே..." என்றார்..
"எந்த வேளையில் கடைவார்கள்... காலையிலா, மத்தியானமா?"
"அதிகாலையில் தான் சுவாமி"
" மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்..
" அதிகாலை சுபமான வேளை. அந் நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.. அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும்.. உருகாமல் கெட்டியாகவும் இருக்கும்.. சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு.. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும்... " என்று கூறி நிறுத்திய பெரியவா
மேலும் தொடர்ந்தார், " அது போல, வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலை மோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது.. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது.. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி எனும் வெண்ணெய் சுலபமாகத் திரளும்.. "
" இதனால், பெற்றோர் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.. இந்தப் பழக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்.. துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும்..
அதனால் பக்திக்கு ஏற்ற வயது இளமைப் பருவம் தான்.. புரிகிறதா? " என்று கனிவாகக் கூறினார் பெரியவா..
பக்தரும் இதயம் கனிந்து, கண்ணீர் மல்க பெரியவா பாதம் பணிந்து நமஸ்கரித்தார்..
Oldest Older 201 – 209 of 209

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை